விருச்சிகம் – AB திருமணம் செய்தால் நீங்கள் கோடீஸ்வரர் |… — Transcript

விருச்சிக ராசி மற்றும் பிளட் குரூப்புகளின் குணாதிசயங்கள், ஏ பி திருமணம் மற்றும் வாழ்க்கை பாதைகள் பற்றிய ஆழமான விளக்கம்.

Key Takeaways

  • விருச்சிக ராசி உள்ள ஓ பிளட் குரூப் பயங்கரமான பவர்ஃபுல் மற்றும் போராளி குணம் கொண்டது.
  • ஏ மற்றும் பி பிளட் குரூப்புகளின் கலவையால் வாழ்க்கையில் சிறந்த ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி ஏற்படும்.
  • ஏ பி திருமணம் செய்தால் வாழ்க்கையில் நம்பகமான மற்றும் உயர்ந்த நிலை ஏற்படும்.
  • விருச்சிக ராசி உள்ளவர்கள் எமோஷன்களை கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் சிக்கல்கள் ஏற்படும்.
  • ஆஸ்ட்ராலஜி மற்றும் பிளட் குரூப்புகள் மனித குணாதிசயங்களை புரிந்துகொள்ள உதவும்.

Summary

  • விருச்சிக ராசி உள்ள ஓ பிளட் குரூப்பின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை பாதைகள்.
  • ஏ மற்றும் பி பிளட் குரூப்புகளின் குணாதிசயங்கள் மற்றும் அவற்றின் வாழ்க்கை தாக்கங்கள்.
  • ஏ பி திருமணம் செய்தால் வாழ்க்கையில் அதிக வருமானம் மற்றும் நல்ல ஒத்துழைப்பு ஏற்படும்.
  • விருச்சிக ராசி உள்ளவர்கள் மிகுந்த பவர்ஃபுல், இன்டென்ஸா மற்றும் போராளி தன்மையுடையவர்கள்.
  • பிளட் குரூப்புகளின் ராசி அமைப்புடன் தொடர்பு மற்றும் அதன் மூலம் மனித குணாதிசயங்கள் புரிதல்.
  • விருச்சிக ராசி உள்ளவர்களின் எமோஷன்களை கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவம்.
  • பிளட் குரூப்புகளின் வாழ்க்கை பாதையில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்.
  • ஆஸ்ட்ராலஜி மற்றும் ரத்தக் குரூப்புகளின் தொடர்பு மற்றும் அதன் விளைவுகள்.
  • விருச்சிக ராசி உள்ளவர்களுக்கு ஏ பி கல்யாணம் சிறந்த தேர்வு.
  • விருச்சிக ராசி உள்ளவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்பான கவலைகள்.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
இப்ப விருச்சகத்துல ஓ இருக்காங்க அப்படின்னா அவங்க பயங்கர பவர்ஃபுல். ரொம்ப இன்டென்ஸா எல்லாமே யோசிக்க கூடியவங்க. சரியான போராளி.
00:10
Speaker A
இந்த ஏ பி விருச்சகத்துடைய வாழ்க்கைக்குள்ள போயிடுச்சுன்னா, இன்கம்லாம் பாத்தீங்கன்னா நம்பர் டூ இன்கம் ஜாஸ்தி ஆயிடும். குறுக்கு வழியான இன்கம் டக்கு டக்குன்னு சேரக்கூடிய அமைப்பு.
00:18
Speaker A
இவங்க வந்து ஏ பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னா கரெக்டா இருக்கும். இன்னும் சொல்லப்போனா பெஸ்ட்டாவே இருக்கும்.
00:25
Speaker A
ஏவும் பியும் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. கூடவே கூடாது அப்படின்னா ஓ.
00:30
Speaker B
ஓ செட்டே ஆகாது.
00:31
Speaker A
ஓ செட்டே ஆகாது இவங்களுக்கு.
00:33
Speaker B
ரெட்ரோ ஆன்மீகம் நேயர்களுக்கு வணக்கம்.
00:35
Speaker B
இன்றைய நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பவர் அஸ்ட்ராலஜர், ரைட்டர் திருமதி ஜீவிதா சுரேஷ் அவர்கள்.
00:40
Speaker A
வணக்கம்.
00:40
Speaker B
எப்படி இருக்கீங்க?
00:41
Speaker A
நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?
00:42
Speaker B
ரொம்ப நல்லா இருக்கேன்.
00:44
Speaker B
இப்போ ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்குல்ல. அதே மாதிரி ஒவ்வொரு பிளட் குரூப்புக்கும் ஒரு குணாதிசயம் இருக்கு அப்படிங்கிற ஒரு விஷயத்தை நீங்க சொல்லிருந்தீங்கல்ல.
00:52
Speaker B
சோ அது மாதிரி அவங்கனா இப்ப ஒரு ஓ பாசிட்டிவ் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம்னா அவங்களோட குணாதிசயம் எப்படி இருக்கும்? அவங்களோட கேரக்டர் எப்படிப்பட்டது அப்படிங்கிற மாதிரி எல்லா பிளட் குரூப்புக்கும் நீங்க கொஞ்சம் டீடைலா சொல்லுங்க. அதுக்கப்புறம் நம்ம ராசிக்குள்ள போலாம்.
01:01
Speaker A
பொதுவா நம்ம வந்து ராசி, லக்னம், நட்சத்திரம் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்ம பார்ப்போம். லக்னம் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம் அப்படின்னா நம்மளுடைய வாழ்க்கையோட திசையை லக்னம் சொல்லும்.
01:10
Speaker A
ராசி அப்படிங்கறது அந்த திசைக்குள்ள நம்மளுடைய மனநிலைமை என்ன அப்படிங்கறது சொல்லும்.
01:14
Speaker A
நட்சத்திரம் என்ன அப்படிங்கறது நம்ம வாழ்க்கையோட சூட்சுமங்களை அப்படிங்கிற ஒரு விஷயத்தை சொல்லும்.
01:18
Speaker A
இது எல்லாமே ஒன்னோடு ஒன்னு கனெக்டட் அப்படிங்கிறப்போ நம்மளுடைய ரத்தமும் இதுல சம்பந்தப்பட்டது.
01:25
Speaker A
எந்த டிஎன்ஏக்குள்ள நம்ம பிறந்து வரோம் இந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பிளட் குரூப் நம்ம கேரி ஆன் பண்ணிட்டு வந்துட்டு இருக்கணும் ஒரு விஷயம் இருக்கு.
01:31
Speaker A
அப்போ இந்த பிளட்ங்கிற விஷயம் என்ன பண்ணும் அப்படின்னா இந்த ராசிகளுக்குன்னு சில தத்துவங்கள் அப்படிங்கறது ஒன்னு உண்டு இல்லையா.
01:40
Speaker A
இந்த வாழ்க்கை அமைப்புன்னு ஒன்னு இருக்கு. அப்போ ஒரு பர்டிகுலர் பிளட் குரூப் இந்த ஒரு ராசி அமைப்பினருக்கு வரப்போ.
01:46
Speaker A
இது எப்படி ரியாக்ட் பண்ண போகுது, ரெஸ்பான்ட் பண்ண போகுது.
01:50
Speaker A
இது எப்படி ரியாக்ட் பண்ண போகுது.
01:53
Speaker A
அப்படிங்கறதுதான் நம்ம பார்க்க போறோம்.
01:55
Speaker A
இப்ப ஓ அப்படின்னு எடுத்துக்குறோம் அப்படின்னா.
01:58
Speaker A
ஓக்கு வந்து ஒரு வாரியர் குணம் அப்படிங்கறது ஒன்னு உண்டு.
02:01
Speaker A
என்ன ஏதுன்னே கேட்காம எந்த எக்ஸ்பெக்டேஷனுமே இல்லாம ஹெல்ப் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது ஓக்கு இருக்கும்.
02:08
Speaker A
எப்படி இருந்தாலும் அதை முடிச்சிருவாங்க அப்படிங்கறது ஒன்னு ஒரு ஓக்கு அந்த கேரக்டர் உண்டு.
02:12
Speaker A
இப்ப ஏ எடுத்துக்குறோம் அப்படின்னு வச்சுக்கோங்களேன்.
02:14
Speaker A
ஏ கிட்ட வந்து ஒரு டிசிப்ளின் அப்படிங்கிற ஒரு விஷயத்தை வந்து ஏ ஃபாலோ பண்ணும்.
02:19
Speaker A
ஒரு ரெஸ்பான்சிபிலிட்டினு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாங்க ஏ அப்படின்னா முடிக்காம விடமாட்டாங்க அப்படிங்கறதுனால.
02:25
Speaker A
அந்த ஏவ வந்து கொஞ்சம் ஃபர்ஸ்ட் ஆபீசர் லெவல் அப்படிங்கிற மாதிரி வச்சாங்க.
02:29
Speaker A
நெக்ஸ்ட் பாக்குறப்போ பி.
02:31
Speaker A
பிக்கு ஒரு குணாதிசயம் என்னன்னா கிரியேட்டிவிட்டி அதிகம்.
02:34
Speaker A
சுயநலமும் அதிகம்.
02:37
Speaker A
ஃபர்ஸ்ட் தனக்கு என்ன அப்படிங்கிற ஒரு விஷயத்தை இந்த பி பார்க்கும்.
02:40
Speaker A
இந்த ஏ பி தான் வந்து உள்ளேயே ஸ்மார்ட்டான ஒரு பிளட் குரூப் அப்படின்னு சொல்லலாம்.
02:45
Speaker A
ஏன் அப்படின்னா இவங்க பயங்கரமான ஒரு ஸ்ட்ராட்டஜிஸ்ட்.
02:47
Speaker A
செம்மையா பிளான் போடக்கூடியவங்க.
02:50
Speaker A
ஈஸியா போரும் இவங்களுக்கு அடிச்சிரும்.
02:52
Speaker A
அந்த ஏவுடைய கேரக்டரும் பியுடைய கேரக்டரும் சேர்ந்ததுதான் இந்த ஏபி அப்படிங்கறது.
02:58
Speaker A
ஏபி எல்லாம் எப்படி இருந்தாங்கன்னா ரொம்ப இந்த ஹை லெவல் இந்த கிட்டத்தட்ட நம்ம சகுனி ரேஞ்சுக்கே சொல்லலாம்.
03:04
Speaker A
அந்த அளவுக்கு பிளான் போடக்கூடியவங்க.
03:06
Speaker A
பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் ரெண்டு விஷயத்துக்குமே வந்து இந்த ஏபி அப்படிங்கறவங்க யூஸ் ஆனாங்க.
03:11
Speaker A
அந்த டைம்ல எல்லாம் வந்து ஃபர்ஸ்ட் ஜாப்பனீஸ் தான் கண்டுபிடிச்சாங்க.
03:14
Speaker A
அப்படின்னுலாம் சொன்னது உண்டு.
03:15
Speaker A
ஆனா கண்டுபிடிச்சது யாருன்னா நம்மளோட சித்தர்கள்.
03:17
Speaker A
போகர் வந்து நிறைய உலகம் சுத்துனார், ஜப்பான் போனார், சைனா போனார் இப்படி எல்லாம் போனப்போ அவருடைய ஓலைச்சுவடுகள்ல இருந்த ஒரு விஷயம் தான் இது.
03:24
Speaker A
ரத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்.
03:26
Speaker A
வாத, பித்தம் இதெல்லாம் சேர்த்து வச்சு இந்த இந்த ரத்த அமைப்புல இருக்கவங்க இப்படித்தான் இருப்பாங்க அப்படின்ன உடனே.
03:34
Speaker A
அந்த டைம்ல வாருக்கு சூஸ் பண்ணாங்க இல்லையா வாருக்கு சூஸ் பண்ணப்போ இந்த கேட்டகிரி பேசிஸ்ல தான் சூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க.
03:40
Speaker A
இந்த ராசி எல்லாம் அமைப்பையும் தாண்டி ஒரு பிளட் குரூப்ப வச்சே ஒரு மனிதருடைய கேரக்டர் இதுதான் ரொம்ப ஈஸியா வந்து நம்மளால கண்டுபிடிக்க முடியும்.
03:47
Speaker B
இப்ப நான் அதே மாதிரி இப்ப ஒவ்வொரு பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் இதுதான் அப்படிதான் இருக்க போகுது அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டீங்க.
03:54
Speaker B
இப்ப இந்த ராசியில ஒவ்வொரு ராசிக்கும் அதுல இருக்கிற பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் எப்படி இருக்கும்? இந்த ராசியில இருக்க பிளட் குரூப்போட வேற எந்த ராசியோட ராசியில இருக்க பிளட் குரூப் வந்து சேர்ந்துச்சுன்னா அவங்களுக்கு நல்லா இருக்கும் வாழ்க்கை.
04:03
Speaker B
அந்த திருமணம் வந்து நடக்குறதுக்கு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த பிளட் குரூப்புக்கு நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லுங்க.
04:13
Speaker B
இந்த விருச்சிக ராசியில இருக்கிற பிளட் குரூப் அவங்களோட குணாதிசயங்கள் எப்படி இருக்கும்?
04:17
Speaker A
இப்ப விருச்சகத்துல ஓ இருக்காங்க அப்படின்னா அவங்க பயங்கர பவர்ஃபுல்.
04:23
Speaker A
ரொம்ப இன்டென்ஸா எல்லாமே யோசிக்க கூடியவங்க. சரியான போராளி.
04:28
Speaker A
ஏன்னா விருச்சகம் வந்து நிறைய ட்ராப்க்குள்ள சிக்கக்கூடியவங்க.
04:32
Speaker A
அப்போ இந்த விருச்சகத்துல ஒன்னு ஓ அப்படின்னு ஒன்னு வருதுன்னா வாழ்க்கையோட தேடல் அப்படிங்கறது அதிகமா போக ஆரம்பிச்சிருவாங்க அப்படிங்கறதுதான்.
04:39
Speaker A
எவ்வளவு இன்டென்ஸா போக முடியுமோ அவங்க பவரை எப்படி வேணாலும் யூஸ் பண்ணுவாங்க அப்படிங்கறதுதான்.
04:45
Speaker A
சப்போஸ் இந்த ஓல கேட்டை நட்சத்திரம்லாம் இருக்காங்க விருச்சகத்துல அப்படின்னா இவங்க கண்டிப்பா அந்த வேலையை பார்ப்பாங்க.
04:50
Speaker A
அந்த பவர்ங்கிற ஒரு விஷயத்தை இவங்க கையில எடுத்துருவாங்க அப்படிங்கறதுதான்.
04:54
Speaker A
இது ஏ அப்படின்னா கொஞ்சம் எமோஷனல்.
04:56
Speaker A
இந்த எமோஷன்ஸ இவங்க கண்ட்ரோல் பண்ணனும்ங்கறதுதான் இவங்களுடைய விதியே.
05:00
Speaker A
இவங்க எமோஷன்ஸ வந்து கண்ட்ரோல் பண்ணாம பட்டு பட்டுன்னு முடிவெடுப்பாங்க இல்லையா.
05:05
Speaker A
அந்த கேட்டகிரில தான் வந்து இந்த ஏல இருக்கிற விருச்சகம் இருப்பாங்க.
05:09
Speaker A
இதே இது பி அப்படின்னா இவங்கதான் வந்து.
05:11
Speaker A
மீடியா ஃபீல்ட்ல இருக்கிறது, கிரியேட்டிவா ரொம்ப யோசிக்கிறது, இந்த செட் எல்லாம் போடுவாங்கல்ல.
05:19
Speaker A
ரொம்ப டெப்தா யோசிச்சு கலைநயமா பெர்ஃபெக்ட்டா அத ரியலிஸ்டிக்கா பார்த்த மாதிரி.
05:27
Speaker A
அந்தலாம் வந்து இந்த பில இருக்கிறவங்க அந்த என்ன டெப்துக்கு போக முடியுமோ உயிரை கொடுத்து செய்யக்கூடிய அமைப்புலாம் வந்து இதுல இருக்கிறவங்க இருப்பாங்க.
05:33
Speaker A
இதே இது ஏபி இருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன்.
05:36
Speaker A
இவங்க வந்து முஜ்ஜன்மம் எல்லா விஷயத்தையும் கனெக்ட் பண்ணி வரக்கூடியவங்களாவே இருப்பாங்க.
05:41
Speaker A
இவங்களுடைய தேடலே வந்து வேற மாதிரிதான். அந்த ஒரு விஸ்டம் என்ன நான் ஏன் பிறந்தேன் இது என்ன விஷயம் என் வாழ்க்கையிலயும் இதெல்லாம் நடந்துச்சு.
05:49
Speaker A
இந்த ஆஸ்ட்ராலஜி எல்லாம் பார்ப்பாங்க இந்த அக்கல்ட் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் போவாங்க.
05:55
Speaker A
தேடல்கள் ரொம்ப அதிகமாவே இருந்து.
05:57
Speaker A
எதையாவது ஒன்னு படிச்சுக்கிட்டே இருக்கிறது.
06:01
Speaker A
அந்த மாதிரி ஒரு அமைப்புதான் வந்து இந்த ஏபிக்கு இருக்கும்.
06:03
Speaker A
தெய்வங்களுடைய அனுக்கிரகம் இந்த அக்கல்ட்டோட இந்த வேற வேற எனர்ஜிஸ்ோட எல்லாம் கனெக்ட் ஆவாங்கல்ல.
06:10
Speaker A
அவங்க எல்லாம் வந்து விருச்சக ஏபில இருப்பாங்க.
06:12
Speaker A
இவங்களுக்கெல்லாம் ஈஸியாவே அந்த விஷயங்கள் எல்லாம் அட்ராக்ட் ஆகும்.
06:15
Speaker A
இவங்க வந்து ஏ பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னா கரெக்டா இருக்கும்.
06:21
Speaker A
இன்னும் சொல்லப்போனா பெஸ்ட்டாவே இருக்கும்.
06:23
Speaker A
ஏவும் பியும் கல்யாணம் பண்ணிக்கிறாங்க அப்படின்னா.
06:25
Speaker A
ஏன்னா ஏ வந்து இவங்க வந்து கொஞ்சம் எமோஷனலா இருக்கிறவங்கதான் வந்து இந்த ஏல இருக்கிறவங்க.
06:33
Speaker A
ஆனா வரக்கூடிய வேற ஏலாம் எமோஷன்ஸ் கிடையாது.
06:37
Speaker A
அவங்க எல்லாம் வந்து எப்படியாவது கரெக்டா வழிநடத்தி கொண்டு போறவங்களாதான் இருப்பாங்க.
06:42
Speaker A
சோ அப்ப அந்த ஏ இவங்களுக்கு சரியாகும்.
06:45
Speaker A
இந்த பி இவங்க லைஃப்ல இவங்களுக்கு ஒரு பி வராங்கன்னா.
06:50
Speaker A
விருச்சகத்துக்கு வந்து தனக்கு யாராவது ஏதாவது செஞ்சுகிட்டே இருக்கணும்.
06:54
Speaker A
வர லைஃப் பார்ட்னர் வந்து செய்யணும்ங்கறத எதிர்பார்ப்பாங்க.
06:57
Speaker A
அப்போ பி செய்யும்.
06:57
Speaker A
பி வந்து கொஞ்சம் கிரியேட்டிவா இருக்கும் எல்லாமே கொஞ்சம் ஆக்கப்பூர்வமா செய்யக்கூடியவங்களாவே இருப்பாங்க.
07:04
Speaker A
அந்த வேலையை வந்து இந்த விருச்சகம் வாங்கும்.
07:07
Speaker A
அதனால இவங்களுக்கு ஏவும் பியும் செட் ஆகும்.
07:10
Speaker A
இவங்க கூட யார் லைஃப் பார்ட்னரா இருக்காங்களோ கண்டிப்பா ரீப்ரோடக்டிவ் சிஸ்டம்ல இஸ்யூ இருக்கும்.
07:15
Speaker A
ஹார்மோன்ஸ்னு சொல்ல முடியாது அந்த ஸ்ட்ரெஸ்ஸ ஃபுல்லாவே அந்த ரீப்ரோடக்டிவ் ஆர்கன்ஸ்லதான் வரக்கூடிய லைஃப் பார்ட்னருக்கு இருக்கும்.
07:22
Speaker A
அது வந்து கண்டுபிடிக்க முடியாத ஒரு நோயா இருக்கும் இல்ல இவங்க கிட்ட இருந்து ஏதாவது ட்ரான்ஸ்மிட் ஆனதா இருக்கும்.
07:30
Speaker A
ஏன் வந்துச்சு எதுக்கு வந்துச்சுன்னு தெரியாது எப்ப வந்துச்சு எப்ப போகுதுன்னு தெரியாது ஆனா அந்த உடம்புல அந்த ஒரு விஷயம் வந்து இவங்களுடைய லைஃப் பார்ட்னருக்கு எங்கயோ ஒரு இடத்துல சுழன்றுகிட்டே இருக்கும்.
07:36
Speaker A
எங்கயோ ஒரு இடத்துல அந்த ஸ்ட்ரெஸ் அந்த அழுத்தத்தை அந்த ரீப்ரோடக்டிவ் ஆர்கன்ஸ் வாங்கிக்கிட்டேதான் இருக்கும் இவங்களுடைய லைஃப் பார்ட்னருக்கு.
07:43
Speaker A
அது எந்த ஏவா இருக்கட்டும் பியா இருக்கட்டும் யாரா இருக்கட்டும் அவங்களுக்கு இது இருக்கும்.
07:48
Speaker A
அதே மாதிரி இவங்க இந்த ஏவும் பியும் கல்யாணம் பண்ணிட்டாங்கன்னு வச்சுக்கோங்களேன்.
07:50
Speaker A
இந்த ஏ பி விருச்சகத்துடைய வாழ்க்கைக்குள்ள போயிடுச்சுன்னா இன்கம்லாம் பாத்தீங்கன்னா நம்பர் டூ இன்கம் ஜாஸ்தி ஆயிடும்.
07:57
Speaker B
இன்கம்.
07:57
Speaker A
குறுக்கு வழியான இன்கம் டக்கு டக்குன்னு சேரக்கூடிய அமைப்பு.
08:02
Speaker A
இன்னும் சொல்லப்போனா இந்த ரிசர்ச் ஃபீல்ட்ல எல்லாம் இருப்பாங்க இவங்களுடைய லைஃப் பார்ட்னர்ஸ்.
08:06
Speaker A
என்ன ஏதுன்னு நோண்டி நோண்டி கண்டுபிடிக்கிறது.
08:10
Speaker A
சில விருச்சகத்துக்குலாம் வந்து டாக்டர்ஸ் அது மாதிரி வருவாங்க.
08:14
Speaker A
இல்ல கெமிஸ்ட்.
08:15
Speaker A
அந்த மாதிரிலாம் வருவாங்க எதையாவது ஒன்னு இந்த மூலிகைகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இந்த மாதிரி இருக்கிற லைஃப் பார்ட்னர்ஸ்லாம் வருவாங்க.
08:21
Speaker A
பணம்ங்கிறது இந்த லைஃப் பார்ட்னர்ஸ் இவங்க வாழ்க்கையில வரப்போ.
08:27
Speaker A
எப்படி இருந்தாலும் ஒரு பணம் வரும்னு ஒன்னு சொல்லுவோம்ல எப்படியாவது ஒரு பணம் வந்துரும்.
08:32
Speaker A
யாராவது வந்தாவது கொடுத்துருவாங்க அந்த மாதிரி ஒரு அமைப்பு.
08:34
Speaker A
முக்கியமா இவங்க கூட.
08:36
Speaker B
பணம் கஷ்டம்ங்கிற ஒரு விஷயத்தை வந்து விருச்சகம் ஃபேஸ் பண்ணாம இருக்கணும்.
08:39
Speaker B
ஏபி.
08:39
Speaker A
பி.
08:40
Speaker B
பி.
08:40
Speaker A
ஏவோட பி கூட இருந்துச்சுன்னா லக் ஆக்டிவேட் ஆயிட்டே இருக்கும்.
08:44
Speaker A
அப்போ ஒரு விருச்சகத்து கூட ஒரு பி இருக்காங்க ஃப்ரெண்டா இருக்காங்க பிசினஸ் பார்ட்னரா இருக்காங்க.
08:50
Speaker A
சும்மா வந்து வேலைக்கே இருக்காங்க பக்கத்துல அப்படின்னா இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் வந்து விருச்சகத்துக்கு ஆக்டிவேட் ஆக ஆரம்பிச்சிரும்.
08:55
Speaker A
இவங்க வர அந்த விஷயம் நடக்க அப்படிங்கிற மாதிரி கரெக்டா இருக்கும்.
08:58
Speaker A
கூடவே கூடாது அப்படின்னா ஓ.
09:02
Speaker B
ஓ செட்டே ஆகாது.
09:02
Speaker A
ஓ செட்டே ஆகாது இவங்களுக்கு.
09:03
Speaker A
ஏன்னா இவங்க ஓல இருக்காங்கன்னா அவங்க பவர் வேற பயங்கர வாய்ஸ் எல்லாம் த்ரோ பயங்கரமா இருக்கும்.
09:10
Speaker A
இவங்களுக்கு ஒரு ஓ வருதுன்னா ஓ முதல் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தான் கொடுக்கும்.
09:13
Speaker A
விருச்சகத்துக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் ஆகவே ஆகாது.
09:14
Speaker A
கடுப்பாயிரும்.
09:15
Speaker A
பிரச்சனையாகும்.
09:16
Speaker A
ரொம்ப ஒரு ஓ விருச்சகத்து கிட்ட வருதுன்னா வேற வழியே கிடையாது இந்த ஓ அவங்கள டாமினேட் பண்ணிதான் ஆகணும்.
09:22
Speaker A
ஏன்னா விருச்சகத்துக்கு பொறுமை ரொம்ப கம்மி.
09:23
Speaker B
டாமினேட் பண்றது விருச்சகமா இருக்கும்ன்றீங்க.
09:25
Speaker A
ஓ தான் டாமினேட் பண்ணும்.
09:25
Speaker A
ஓ வந்து இவங்கள டாமினேட் பண்ண ஆரம்பிச்சிரும் இப்படி பண்ணு அப்படி பண்ணு இதை சரி பண்ணு அதை சரி பண்ணு இப்படி இருக்காத அப்படி இருக்காதன்னு எல்லாம் சொல்ல ஆரம்பிச்ச உடனே.
09:32
Speaker A
இது விருச்சகம் கொஞ்சம் சென்சிடிவ் ஆயிட்டே இருப்பாங்க.
09:35
Speaker A
ஓவும் சென்சிடிவ் ஆயிட்டே இருப்பாங்க.
09:36
Speaker A
இப்படி வரவங்களுக்குதான் விருச்சகம் இன்னொரு கல்யாணத்துக்கு போவாங்க.
09:40
Speaker A
இது நம்மளுக்கு செட் ஆகாது நம்மளுக்கு ஒத்து வரல.
09:43
Speaker A
ஏன்னா விருச்சகம் பொறுமை இழந்துரும்.
09:45
Speaker A
இந்த ஓ விடாம பிடிச்சுக்கிட்டே இருக்கிறப்போ செட் ஆகாதுன்னு ஒரு பெரிய வாக்குவாதம் சண்டை எல்லாம் ஆகி பிரிஞ்சு போயிடுவாங்க அப்படிங்கறதுதான்.
09:51
Speaker A
ஏன்னா விருச்சகத்துடைய அமைப்பே வந்து ரொம்ப சீக்ரெட்டிவான ஒரு நேச்சர்.
09:55
Speaker A
எதுவா இருந்தாலும் ரொம்ப டீப் திங்கிங் பண்ணக்கூடியவங்க.
09:58
Speaker A
ஒரு காந்த சக்தியுமே விருச்சகத்துக்கு உண்டு.
10:02
Speaker A
எதுவா இருந்தாலும் அவங்க அட்ராக்ட் பண்ணிடுவாங்க.
10:04
Speaker A
இந்த அமைப்புல இருக்கவங்க இது என்ன பிளட் குரூப்பா இருந்தாலும் சரி.
10:06
Speaker A
இது அட்ராக்ட் ஆவாங்க அப்படின்னா இவங்களுக்கு ஏவும் பியும் ஒரு கிரியேட்டிவிட்டில இருக்குன்னா.
10:10
Speaker A
இந்த விஷயத்துல மயங்கி ஓகேன்னு கரெக்டா வந்துருவாங்க.
10:13
Speaker A
ஆனா இந்த ஓ வந்து அட்ராக்ட்லாம் ஆகாது.
10:15
Speaker A
அந்த நொடிக்கு வேணா அட்ராக்ட் ஆகலாம் ஆனா அதுக்கப்புறம் திங்க் பண்ண ஆரம்பிச்சிரும்.
10:18
Speaker A
அந்த அட்ராக்ஷன் வேலைக்கு ஆகாது பிராக்டிகல் லைஃப்க்குள்ளதான் ஓ போக பார்க்கும் அப்படிங்கறப்போ இது அவங்களுக்கு செட் ஆகாது அப்படிங்கறதுதான்.
10:23
Speaker B
கண்டிப்பா.
10:23
Speaker B
ஏபி.
10:24
Speaker A
ஏ ஏ செட் ஆகும்.
10:25
Speaker A
பியும் செட் ஆகும்.
10:25
Speaker A
ஏ பி எல்லாம் இவங்கள ஏ பி வருது அப்படின்னா இவங்க தனி அவங்க தனி.
10:30
Speaker A
அதாவது ஏபி வந்து ஒரு ஸ்ட்ராட்டஜிக் மைண்ட் போட்டு இருக்கக்கூடியவங்க அவங்களால ஒரு யூஸும் கிடையாது.
10:38
Speaker A
வர லைஃப் பார்ட்னர் வராங்கன்னா வைஃப் பாட்டுக்கு வீட்ல இருப்பாங்க.
10:43
Speaker A
ஹஸ்பண்ட் பாட்டுக்கு அவர் வேலையை பார்த்துட்டு இருப்பாரு.
10:46
Speaker A
அவரும் அவர் அவரும் அவர் குரோத்ல இருப்பாரு இவங்க ரெண்டு பேத்துக்குள்ள அந்த எமோஷனல் கனெக்ட்.
10:51
Speaker A
இவங்கனால அவங்க டெவலப் ஆனாங்க.
10:53
Speaker A
அந்த மாதிரிலாம் இருக்காது.
10:54
Speaker B
பாக்குறவங்களுக்கு இவங்க ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் வைஃபா அப்படிங்கற மாதிரி.
10:57
Speaker A
ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்.
10:57
Speaker A
அவ்வளவுதான்.
10:58
Speaker A
மத்தபடி வந்து ஒருத்தர் ஒருத்தர் டெவலப் பண்ணி விட்டுட்டாங்களா.
11:02
Speaker A
இவங்க மேட் ஃபார் ஈச் அதரா அப்படின்னா அப்படிலாம் இருக்க மாட்டாங்க.
11:05
Speaker B
கண்டிப்பா.
11:05
Speaker B
இப்ப இவங்களுக்கு பிசினஸ் பார்ட்னரா ஒருத்தங்க வரணும் அப்படின்னா எந்த பிளட் குரூப்போட சேர்ந்தவங்க வரணும்.
11:10
Speaker A
இவங்களுக்கு பி தான் பெஸ்ட்.
11:11
Speaker A
ஒரு பிய பிசினஸ் பார்ட்னரா வந்து விருச்சகம் வச்சுக்கலாம்.
11:14
Speaker B
கண்டிப்பா.
11:14
Speaker B
அதே மாதிரி பிரெண்ட்ஷிப் மெயின்டெயின் பண்றதா இருந்தா.
11:16
Speaker A
பி.
11:16
Speaker B
பி தான்.
11:16
Speaker A
ஓ வந்து சண்டை போட்டுருவாங்க பிரிஞ்சிருவாங்க.
11:20
Speaker A
என்னதான் ஃப்ரெண்டுன்னு சொல்லிட்டு வந்தாலும் ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல பர்ஸ்ட் அவுட் ஆயிடுவாங்க.
11:24
Speaker B
எல்லா விதத்திலயும் உங்களுக்கு பெஸ்ட் அப்படின்னா பி மட்டும்.
11:26
Speaker A
பி பெஸ்ட்.
11:26
Speaker B
பி மட்டும்தான்.
11:27
Speaker B
சோ.
11:27
Speaker A
இல்ல ஏ.
11:28
Speaker A
ஏ அண்ட் பி பெஸ்ட் அதுல தி பெஸ்ட் எதுன்னா பி பெஸ்ட்.
11:31
Speaker B
இப்ப வந்து உங்க கூட சேராத பிளட் குரூப் வந்துச்சு அப்படின்னா அவங்களுக்கு செகண்ட் மேரேஜ்க்கான அந்த ஆப்ஷன் வரது அப்படிங்கிற மாதிரிலாம் நிறைய சொல்றாங்க.
11:40
Speaker B
சோ அது என்ன காரணம் ஏன்?
11:41
Speaker A
இப்ப ஒரு விருச்சகம் மேல் இருக்கிறாரு அப்படின்னா அவர் ரொம்ப இன்டென்ஸா ஃபர்ஸ்ட் யோசிக்க மாட்டார்.
11:45
Speaker A
அவருக்கு வந்து அந்த அவுட்டர் பியூட்டிங்கிற ஒரு விஷயம்னா அவருக்கு அந்த மேக்னெட்டிக் எனர்ஜின்னு நான் ஒன்னு சொன்னேன் இல்லையா அந்த ஈர்ப்பு ஜாஸ்தி.
11:50
Speaker A
ஈர்ப்புல போய் ஃபர்ஸ்ட் விழுந்துருவாங்க.
11:51
Speaker A
அப்போ இந்த விருச்சகம் வந்து தன்னுடைய எமோஷன்ஸ வந்து எப்படி வேணாலும் வெளிக்காட்டிட்டே இருக்கக்கூடியவங்கதான்.
11:56
Speaker A
மனசுல வச்சுக்க மாட்டாங்க விருச்சகம் எதுவுமே.
11:58
Speaker A
அவங்க எவ்வளவு பெரிய கோவமா இருந்தாலும் சரி வார்த்தைகள் எல்லாம் வந்து கண்ணா பின்னான்னு சிதற அடிச்சுட்டு நான் தான் பேசுனேனானு தெரியாம அடுத்த வேலையை பார்க்க போயிடுவாங்க.
12:05
Speaker A
ஆனா இந்த வார்த்தைகளை வாங்கினாங்க இல்லையா அவங்களால அதை தாங்கிக்க முடியாது.
12:09
Speaker A
அப்போ இவங்கள இன்டென்ஸா புரிஞ்சுகிட்டவங்க அப்படிங்கறது ஒன்னு இருக்கு.
12:13
Speaker A
இவங்கள அட்ஜஸ்ட் பண்ணி போகணும்னு ஒன்னு இருக்கு.
12:14
Speaker A
இப்ப ஏ இருக்காங்க பி இருக்காங்க அப்படின்னா ஏவால தன்னுடைய எமோஷன்ஸ கண்ட்ரோல் பண்ண முடியும்.
12:18
Speaker A
இப்ப பி இருக்குன்னா அடுத்த வேலையை பார்க்க போயிரும்.
12:22
Speaker A
எனக்கு இத்தனை வேலை இருக்கு இவரு இப்படித்தான் அப்படிங்கிற மாதிரி போயிடுவாங்க.
12:25
Speaker B
இக்னோர் பண்ணிட்டு போயிடுவாங்க கண்டிக்க மாட்டாங்க.
12:27
Speaker A
கண்டிக்க மாட்டாங்கன்னா புரிஞ்சுக்குவாங்க ஓகே அவர் அந்த கோவத்துல அப்படி இருப்பாரு.
12:31
Speaker A
ஏன்னா பி கொஞ்சம் பிஸியாவே இருக்கிறவங்களாதான் இருப்பாங்க.
12:34
Speaker A
அவங்களுக்கு என்ன ஒரு வீட்டு வேலையா இருக்கட்டும் எதுவா இருந்தாலும் பி கொஞ்சம் தான் வேலையை பார்த்துட்டு இருக்கும்னு வச்சுக்கோங்களேன்.
12:40
Speaker A
மனசுல எல்லாம் வச்சுக்குவாங்க ஆனா அது பெருசா வந்து வெடிக்காது.
12:44
Speaker A
இதே இது ஓ வருது அப்படின்னா ஓ போராளி.
12:47
Speaker A
தனக்கு ஒரு நியாயம் தர்மம்னு ஒன்னு நின்னுரும்.
12:50
Speaker A
இதை வந்து விருச்சகத்தால ஹேண்டிலே பண்ணவே முடியாது.
12:53
Speaker A
சண்டை வந்து வாக்குவாதம் வரப்போ விருச்சகத்துல வந்து சந்திரன் வந்து நீசம்.
12:57
Speaker A
சந்திரன் நீசம் அப்படினாலே அடியாள் மனசுல பயந்தவங்கதான் விருச்சகம்.
13:01
Speaker A
ஆனா விருச்சகம் அதை ஒத்துக்க மாட்டாங்க.
13:02
Speaker B
வெளியில காட்டிக்க மாட்டாங்க.
13:03
Speaker A
வெளியில காட்டிக்க மாட்டாங்க நாங்க பயந்தவங்கங்கறத அவங்க அக்செப்ட் பண்ணிக்க மாட்டாங்க.
13:06
Speaker A
ஏன்னா வாய்ஸ் த்ரோ பயங்கரமா இருக்கும்.
13:07
Speaker A
சண்டைக்கு போய் நிக்கிறவங்களா இருப்பாங்க.
13:09
Speaker A
இவங்களை எங்க அந்த விஷயத்துல கண்டுபிடிக்கலாம் அப்படின்னா ஓவராலா ஒரு ப்ராப்ளம் வரப்போ.
13:14
Speaker A
நான் மத்தவங்களை ப்ரொடெக்ட் பண்றேன்னு ஒரு விஷயம் இருக்குல்ல.
13:18
Speaker A
அந்த ப்ரொடெக்ஷன்குள்ள விருச்சகம் போகாது.
13:20
Speaker A
அந்த இடத்துல தன்னை பாதுகாக்க பார்க்கும்.
13:22
Speaker B
எஸ்கேப் ஆகுறதுக்கு பிளான் பண்ணுவாங்க.
13:23
Speaker A
நழுவி போயிடுவாங்க.
13:24
Speaker A
அப்பா நம்மளுக்கு இது வேண்டாம்ப்பா எனக்கு இது வேண்டவே வேண்டாம்.
13:27
Speaker A
அதுதான் பயம்.
13:28
Speaker A
அதுதான் ஆழ்மனசு பயம்.
13:29
Speaker A
தன் இனத்தை வந்து சம்டைம்ஸ் விட்டுரும்.
13:31
Speaker A
அதுதான் அந்த சந்திரன் நீசம் எடுக்கக்கூடிய முடிவுகள் எடுக்க தெரியாது.
13:36
Speaker A
இப்ப ஓ வராங்க அப்படின்னா முடிவெடுத்துருவாங்க.
13:38
Speaker A
உன்னை நான் டிவோர்ஸ் பண்றேன்னா டிவோர்ஸ் பண்றேன்னு.
13:41
Speaker A
அது கூட விருச்சகத்துக்கு எடுக்க தெரியாது போ பாத்துக்கோ செய் ஆனா அதை போய் எப்படி ஹேண்டில் பண்ணனும்னு தெரியாது.
13:45
Speaker A
இப்ப அந்த ஓல இருக்கிறவங்க டிவோர்ஸ்லாம் அப்ளை பண்ணி எல்லா விஷயங்களும் நடக்குதுன்னா விருச்சகம் பேசாமதான் இருப்பாங்க.
13:50
Speaker A
ஒன்னு கெஞ்சுவாங்க இல்லன்னா வந்து திரும்பவும் இருந்துக்கலாமா அந்த ஒரு சேஃப் ஜோன் செக்யூர் ஜோன் அப்படிங்கறத வந்து விருச்சகம் யோசிக்கும்.
13:55
Speaker A
கொஞ்ச நேரம் கழிச்சு விருச்சகம் என்ன நினைக்கும் அப்படி என்ன பேசிட்டோம்னு இப்படி பண்றாங்க.
13:58
Speaker A
ஏன்னா எல்லா காயங்களும் விருச்சகம் பட்டிருப்பாங்க இல்லன்னுலாம் சொல்ல முடியாது அவ்வளவு காயங்கள் வாங்கி இருப்பாங்க.
14:03
Speaker A
பட் ஸ்டில் பரவாயில்லை மறுபடியும் அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்கலாம்னு விருச்சகம் நினைக்கும்.
14:07
Speaker A
ஏன்னா கிரட்ஜஸ் வந்து ரொம்ப வச்சுக்க மாட்டாங்க.
14:08
Speaker A
இருக்கும் ஒரு ஓரமா இருக்கும் அதை ஆக்டிவேட் அவ்வளவு சீக்கிரம் பண்ண மாட்டாங்க.
14:12
Speaker A
எப்ப ஆக்டிவேட் பண்ணுமோ அப்பதான் ஆக்டிவேட் பண்ணுவாங்க.
14:13
Speaker A
வா உன்னை பழி வாங்குறேன் வார்த்தைகளா இருக்கலாம்.
14:16
Speaker A
பட் எக்ஸிகியூஷனா வந்து அப்படி செய்ய மாட்டாங்க.
14:18
Speaker A
ஆனா ஓ செய்யும்.
14:19
Speaker A
ஓ வந்து விருச்சகத்தை செய்வாங்க.
14:21
Speaker A
சோ இப்படித்தான் போய் விருச்சகம் மாட்டிக்கிறது.
14:23
Speaker B
அதே மாதிரி விருச்சக ராசிக்காரங்க அதுல அவங்களோட பிளட் குரூப் என்னென்னங்கறத வந்து அவங்க ஐடென்டிஃபை பண்ணிடுவாங்க பண்ணிருப்பாங்க.
14:30
Speaker B
சோ அவங்களோட கேரக்டரை அவங்களே புரிஞ்சுகிட்டு இருப்பாங்கன்னு நம்புறேன்.
14:35
Speaker B
சோ அது மாதிரி அவங்களுக்கு யாரு செட் ஆவாங்க அப்படிங்கிற ஒரு விஷயத்தையுமே ஐடென்டிஃபை பண்ணிட்டு அதுக்கு தகுந்த மாதிரியான விஷயங்களை ஃபாலோ பண்ணுவாங்க.
14:40
Speaker B
அவங்களோட பிளட் குரூப் என்னங்கறத கமெண்ட்ஸ்ல பதிவு பண்ணுவாங்க.
14:43
Speaker B
நன்றி.
14:44
Speaker A
நன்றி.
Topics:விருச்சிகம்பிளட் குரூப்ஏ பி திருமணம்ஆஸ்ட்ராலஜிகுணாதிசயம்விருச்சிக ராசிமனநிலைஎமோஷன்கள்வாழ்க்கை பாதைரத்தக் குரூப்

Frequently Asked Questions

விருச்சிக ராசிக்காரர்கள் எந்த ரத்த வகையை திருமணம் செய்தால் கோடீஸ்வரர் ஆவார்கள்?

விருச்சிக ராசிக்காரர்கள் ஏபி ரத்த வகையை திருமணம் செய்தால், அவர்களின் வருமானம் அதிகரிக்கும். குறுக்கு வழியில் பணம் சேரும் வாய்ப்புகள் அதிகம்.

விருச்சிக ராசிக்காரர்கள் எந்த ரத்த வகையை திருமணம் செய்யக்கூடாது?

விருச்சிக ராசிக்காரர்கள் ஓ ரத்த வகையை திருமணம் செய்யக்கூடாது. ஓ ரத்த வகையினர் இவர்களுக்கு செட் ஆக மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓ ரத்த வகையின் குணாதிசயங்கள் என்ன?

ஓ ரத்த வகையினர் ஒரு போர்வீரர் குணம் கொண்டவர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள். எந்த ஒரு செயலையும் எப்படியாவது முடிக்கும் குணம் இவர்களுக்கு உண்டு.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →