துலாம் – திடீர் ஆசையால் ஏற்படப்போகும் அதிர்ச்சி | Thula… — Transcript

துலாம் ராசிக்காரர்களின் கடன் பிரச்சனைகள், அதிலிருந்து மீள வழிகள் மற்றும் தெய்வ வழிபாடு முக்கியத்துவம் பற்றி விவரிக்கிறது.

Key Takeaways

  • துலாம் ராசிக்காரர்கள் கடன் வாங்கும் போது மிகுந்த கவனம் மற்றும் திட்டமிடல் அவசியம்.
  • குருவாயூர் மற்றும் மகாலட்சுமி வழிபாடு கடன் பிரச்சனைகளில் இருந்து மீள உதவும்.
  • சனி மற்றும் குரு கிரகங்கள் கடன் பிரச்சனைகளில் முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • கடன் வாங்கும் முன் மனநிலை மற்றும் திட்டமிடல் முக்கியம்; அவமானம் மற்றும் மன அழுத்தம் தவிர்க்கப்பட வேண்டும்.
  • கடன் கொடுத்தவர்களும் அதனை திருப்பி பெறும் முறைகள் பற்றி விழிப்புணர்வு தேவை.

Summary

  • துலாம் ராசிக்காரர்கள் கடனை சீக்கிரம் வாங்க மாட்டார்கள், ஆனால் கடன் வாங்கினால் அவமானம் மற்றும் சிரமங்கள் ஏற்படும்.
  • கேது காலங்களில் கடன் பெறும் சிக்கல்கள் மற்றும் கடன் அடைக்க முடியாமை ஏற்படும் அதிர்ச்சிகள் பற்றி விளக்கம்.
  • சனி மற்றும் குரு கிரகங்களின் பாதிப்பு, கடன் பிரச்சனைகளில் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் அவமானம்.
  • கடன் வாங்கும் முன் திட்டமிடல், கடன் திருப்பி கொடுக்கும் முறைகள் மற்றும் மனப்பான்மையை சரி செய்யும் ஆலோசனைகள்.
  • குருவாயூர் வழிபாடு மற்றும் அம்பாள் வழிபாடு மூலம் கடன் பிரச்சனைகளில் இருந்து மீள வழிகள்.
  • மகாலட்சுமி மற்றும் குபேரர் வழிபாடு மூலம் செல்வ செழிப்பு மற்றும் பண வரவுகளை அதிகரிப்பது.
  • துலாம் ராசிக்காரர்களின் குடும்ப கட்டமைப்பு மற்றும் பணம் சேமிக்கும் குணங்கள்.
  • கடன் கொடுத்தவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அவற்றை சமாளிக்கும் வழிகள்.
  • காதல் மற்றும் உறவு பிரச்சனைகள் காரணமாக கடன் பிரச்சனைகள் ஏற்படுவது மற்றும் அதற்கு தீர்வு.
  • மன அழுத்தம் மற்றும் டிப்ரஷன் போன்ற மனநிலை பாதிப்புகளை சமாளிக்கும் முக்கியத்துவம்.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
துலாம் ராசிக்காரங்க கிட்ட அவ்வளவு சீக்கிரம் கடன் வாங்க முடியாது. துலாம் ராசிக்காரங்களும் அவ்வளவு சீக்கிரம் யார்ட்டையும் கடன்ங்கறது போய் வாங்கிற மாட்டாங்க.
00:10
Speaker A
அப்படி கடன் வாங்கிட்டாங்கன்னு வச்சுக்கோங்களேன், கேது காலங்கள்ல கடன் படுறதும், கேது காலங்கள்ல கடன் அடைக்க முடியாம சிரமப்படுறதும், நம்ம யார்ட்டயாவது போய் கடன் அடைக்கிறதுக்கு இன்னொருத்தங்கள்ட்ட போய் கடன் கேட்க போற நேரத்துல கூட ஒரு அவமானம், அசிங்கமோ, இல்ல கடன் கிடைக்க முடியாத ஒரு சூழ்நிலையோ கேது இந்த மாதிரி உருவாக்கி இருப்பான்.
00:27
Speaker A
இவங்கள்ட்டலாம் வந்து பணத்தை கொடுத்தா ரொம்ப பத்திரப்படுத்தி வச்சுக்குவாங்க, திடீர்னு ஒரு ஆசை வரும் பாருங்களேன், அந்த ஆசையில தான் வந்து
00:36
Speaker A
ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.
00:42
Speaker A
இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்ன அப்படின்னா, வாழ்க்கையில யாருக்கு தான் கடன் இல்ல, இல்லையா, எல்லாத்துக்கும் பணம் சம்பாதிக்கணும், அட் தி சேம் டைம் எப்படி சம்பாதிக்கிறது, இப்ப இருக்க காலகட்டங்கள்ல கடன் வாங்காம எதுவுமே எங்களால பண்ண முடியலையே அப்படிங்கிற கேள்வி அம்பானிக்கு கூட உண்டு, எல்லாத்துக்குமே உண்டு இந்த கேள்வி.
00:57
Speaker A
அப்படி இருக்கப்போ இந்த 12 ராசிகளுக்கும் அவங்க கடந்து வரக்கூடிய அந்த வாழ்க்கை பாதைன்னு வரப்போ, அட் எனி காஸ்ட் ஏதோ ஒரு சிச்சுவேஷன்ல கடன் வாங்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது வந்துரும்.
01:06
Speaker A
அப்படி பார்க்குறப்போ, நான் ஜோதிடம் பார்த்ததுல இருந்து என்னுடைய அனுபவத்துல ஒவ்வொரு ராசிக்காரங்க என்னென்ன மாதிரியான ஒரு விஷயத்துக்கு காரணமா அவங்க வந்து கடன் வாங்கினாங்க.
01:14
Speaker A
எப்படி அவங்க அதுல இருந்து மீண்டாங்க அப்படிங்கறத வச்சு நான் இந்த 12 ராசிகளுக்கு எப்படி அப்படிங்கறத உங்களுக்கு சொல்றேன்.
01:23
Speaker A
என்ன தெய்வத்தை வழிபாடு பண்ணனும், எப்படி அந்த கடன் கடன்ங்கிற விஷயத்துல இருந்து எப்படி வெளிய வரணும் அப்படிங்கறத பத்தி நம்ம இங்க பார்ப்போம்.
01:30
Speaker A
துலாம் ராசிக்காரங்க பெரும்பாலும் எதுக்கு கடன் படுவாங்க அப்படின்னா,
01:34
Speaker A
இவங்களும் குடும்ப கட்டமைப்புக்காக தான் ஃபர்ஸ்ட் கடன் படவே ஆரம்பிப்பாங்க.
01:38
Speaker A
துலாம் ராசிக்காரங்களுக்கு வந்து பணம் சேர்த்து வைக்கக்கூடிய குணம் அதிகம்.
01:43
Speaker A
இவங்கள்ட்டலாம் வந்து பணத்தை கொடுத்தா ரொம்ப பத்திரப்படுத்தி வச்சுக்குவாங்க.
01:49
Speaker A
திடீர்னு ஒரு ஆசை வரும் பாருங்களேன், அந்த ஆசையில தான் வந்து
01:53
Speaker A
அதிதமா செலவு பண்ணிடுறது.
01:55
Speaker A
திடீர்னு தான் அது நடக்கும் துலாமுக்கு.
01:57
Speaker A
அந்த பொருள் ஆசை அப்படிங்கிற மாதிரிலாம் அவங்களுக்கு வரும்.
02:00
Speaker A
இருக்கிற எல்லா பணத்தையும் இழக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது ஒன்னு உண்டு.
02:05
Speaker A
துலாம் ராசிக்காரங்கள்ட்ட அவ்வளவு சீக்கிரம் கடன் வாங்க முடியாது.
02:08
Speaker A
துலாம் ராசிக்காரங்களும் அவ்வளவு சீக்கிரம் யார்ட்டையும் கடன்ங்கறது போய் வாங்கிற மாட்டாங்க.
02:13
Speaker A
அப்படி கடன் வாங்கிட்டாங்கன்னு வச்சுக்கோங்களேன், துலாம் ராசியில் இருக்கவங்க பெரும்பாலும் அவமானப்பட ஆரம்பிச்சிடுவாங்க.
02:17
Speaker A
ஏன்னா, துலாம் எப்ப கடன் வாங்குதோ, துலாம் வந்து தன் நிலையிலிருந்து அவமானப்படக்கூடிய இடத்துக்கு போக ஆரம்பிக்கிறாங்க அப்படிங்கறது தான் அர்த்தம்.
02:24
Speaker A
ஏன்னா, துலாமுக்கு வந்து எப்பவுமே சனி ஃபிரண்ட் அப்படின்னு நம்ம சொல்லுவோம்.
02:30
Speaker A
சனி என்ன சொல்லும்னா, இந்த மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் தான் கொடுக்கும், நிதானமா இருந்து எதுவா இருந்தாலும்
02:37
Speaker A
நிதானமா இருந்து ஹேண்டில் பண்ணுங்க.
02:40
Speaker A
அவசரப்பட்டுட்டாங்க அப்படின்னாலே, அங்க குரு வந்து அவங்களுக்கு வேலை பார்க்க ஆரம்பிச்சிடும்.
02:45
Speaker A
அதாவது அவமானப்படுத்துறதுக்கு என்னென்ன வேலைகள் செய்யணுமோ, அந்த மாதிரி பண்ண ஆரம்பிச்சிடும்.
02:50
Speaker A
யார் முகத்தையும் பார்க்க முடியாத மாதிரி துலாம் ராசிக்காரங்க ஆயிடுவாங்க.
02:54
Speaker A
கரெக்டா கடன் பட்டதுக்கு அப்புறம், கடன் வாங்கினதுக்கு அப்புறம், அந்த சுக்கிரனுடைய அமைப்பு அப்படிங்கறது அப்படியே அசுப சுக்கிரனாவே மாறிடும் துலாம் ராசிக்காரங்களுக்கு.
03:02
Speaker A
ஏமாத்தணும்ங்கிற ஒரு எண்ணம் அப்படிங்கறது வந்து ஆரம்ப நிலையில துலாம் ராசிக்கு வராது.
03:08
Speaker A
எப்படியாவது நான் கடன் அடைச்சிடுவேன்னு இருக்கும், ஆனா கடன் வாங்கினவங்களையே எதிரியா பார்க்கக்கூடிய தாட் ப்ராசஸ்ங்கறது துலாம் ராசிக்காரங்களுக்கு வந்துரும்.
03:14
Speaker A
அதேபோல துலாம் ராசிக்காரங்க யாருக்காவது கடன் கொடுத்துட்டீங்கன்னு வச்சுக்கோங்களேன்,
03:18
Speaker A
உங்களுக்கு தூக்கமே வராது.
03:20
Speaker A
அதனால கொடுத்த கடனை எப்படி வாங்குறது, எப்படி வாங்குறது அப்படிங்கிற அந்த கேள்வியே வந்து உங்கள வந்து ஒரு வழி பண்ணிடும்.
03:26
Speaker A
நீங்கலாம் கடன் கொடுத்துட்டீங்க.
03:29
Speaker A
எனக்கு கடனே வரல.
03:30
Speaker A
நேரா குருவாயூரப்பண்ட்ட போயிடணும்.
03:32
Speaker A
குருவாயூரப்பன் தான் உங்களுடைய கடனை வந்து திருப்பி வாங்கி கொடுக்கக்கூடிய அமைப்பே வந்து குருவாயூரப்பனுக்கும் அம்பாளுக்கும் தான் உண்டு.
03:39
Speaker A
அம்பாள் வழிபாடை ரொம்ப ஸ்ட்ராங்கா பண்ணனும்.
03:42
Speaker A
ஏன் அப்படின்னா, ஜெனரலாவே துலாம் ராசிக்காரங்களை எல்லாம் வந்து
03:48
Speaker A
தானம் கொடுத்து வாங்குங்க அப்படின்னு சொல்லக்கூடிய ஒரு அமைப்புலாம் இருக்கு.
03:51
Speaker A
ஏன் அப்படின்னா,
03:53
Speaker A
துலாம் ராசியில் இருக்கவங்களுடைய பேரண்ட்ஸே கடன் பட்டுருவாங்க.
03:57
Speaker A
முக்கியமா அவங்களுடைய அப்பா.
04:00
Speaker A
துலாம் ராசியோட அப்பா கடன் படுவாங்க, அந்த கடன் பட்டு சில துலாம் ராசிக்காரங்க அந்த கடனை அடைக்கக்கூடிய ஒரு சிச்சுவேஷன்லயும் வருவாங்க, இல்லைன்னா அந்த லைஃப் ஸ்டைலை என்ஹான்ஸ் பண்ணிக்கிறதுக்காக கடன் அடைக்கக்கூடிய அமைப்புலயும் வருவாங்க.
04:12
Speaker A
அப்போ இந்த குருவாயூர் வழிபாடு அப்படிங்கறது குழந்தை இல்லையா, அந்த குழந்தைகிட்ட போய் நீங்க வழிபாடு பண்ண பண்ண,
04:19
Speaker A
கொடுத்த பணம், நீங்க திருப்பி கொடுக்கிற அளவுக்கு உங்களுக்கு பணம் வரவுகள் அப்படிங்கறது உண்டாகும்.
04:26
Speaker A
துலாம் ராசிக்காரங்களுக்கு வரவுங்கறது எப்படி இருந்தாலும் வந்துரும்.
04:30
Speaker A
அது வந்து அது தெய்வ அனுகிரகம்.
04:32
Speaker A
ரெண்டு வருஷம், மூணு வருஷம் கழிச்சாவது துலாம் ராசிக்காரங்க வந்து கடனை வந்து திருப்பி கொடுத்துருவாங்க.
04:38
Speaker A
ஆனா கொஞ்சம் டைம் பீரியட் அப்படிங்கறது எடுத்துக்குவாங்க.
04:41
Speaker A
அப்போ நீங்க அந்த லாங் டெர்ம் ப்ராசஸ் பிளானிங், எதுக்காக கடன் வாங்குறோம், இந்த கடனை எப்படி என்னால திருப்பி கொடுக்க முடியும் அப்படிங்கிற அந்த மைண்ட் செட்ல முதல் டிசைட் பண்ணிட்டு தான் நீங்க வந்து பணம் வாங்குறதாகட்டும், கொடுக்கறதாகட்டும்.
04:50
Speaker A
ஒரு டெட்லைன் அப்படிங்கறது நீங்க பிக்ஸ் பண்ணிக்கணும்.
04:52
Speaker A
அப்புறம் பார்த்துக்கலாம், இல்ல நம்மளுக்கு தெரிஞ்சவங்க தானே அப்படின்னு கடன் வாங்கிட்டீங்க துலாம்னாலே அவமானம் அப்படிங்கறது ஃபர்ஸ்ட் உங்களுக்கு வந்து உறுதி அப்படிங்கறது ஆயிடும்.
05:00
Speaker A
நீங்க வந்து மகாலட்சுமியும் ரொம்ப இறுக்கி பற்றிக்கணும்.
05:03
Speaker A
இந்த மகாலட்சுமிக்கெல்லாம் வந்து நல்ல பீஜ மந்திரங்கள் சொல்லி நீங்க வழிபாடு பண்றது.
05:10
Speaker A
மகாலட்சுமியோட பீஜ மந்திரங்களை கேட்க கேட்க பணம் செழிப்பு அப்படிங்கறது உங்களுக்கு அதிகரிக்க ஆரம்பிக்கும்.
05:16
Speaker A
அதேபோல துலாம் ராசிக்காரங்க இப்ப ஆணா இருக்கீங்க.
05:21
Speaker A
உங்க வீட்ல இருக்க பெண்களை ரொம்ப பத்திரமா பார்த்துக்கணும்.
05:24
Speaker A
அதாவது அவங்க சந்தோஷமா இருக்கணும்.
05:26
Speaker A
அவங்க செழிப்பா இருக்கணும் அந்த வீட்ல.
05:28
Speaker A
அந்த பெண்கள் செழிப்பா சந்தோஷமா இருக்க இருக்க லட்சுமி கடாட்சம் அப்படிங்கறது உங்க வீட்ல தங்கும்.
05:34
Speaker A
இதேது பெண் துலாம் ராசியா இருக்கீங்க அப்படின்னா,
05:38
Speaker A
நீங்க வீட்ல லட்சுமி வழிபாடை உங்க கைப்பட உங்க கையால ஸ்வீட் வச்சு வழிபாடு அப்படிங்கறது நீங்க பண்ணனும்.
05:44
Speaker A
அதாவது துலாம் ராசிக்காரங்கலாம் வந்து இந்த பால திரிபுர சுந்தரியை நீங்க வந்து வழிபாடு பண்ணலாம்.
05:50
Speaker A
சின்னதா அவங்களுக்கு ஒரு போட்டோ வச்சிட்டு அவங்களுக்கு வழிபாடு பண்ண பண்ண,
05:55
Speaker A
கடன் அப்படிங்கறது சரியாகி ஒரு செழிப்பு நிலை அப்படிங்கறது போவீங்க.
05:59
Speaker A
நீங்க என்ன மாதிரியான ஒரு மந்திரங்கள் நீங்க சொல்லலாம் அப்படின்னா,
06:02
Speaker A
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகாலட்சுமியே நம அப்படி சொல்லி அவங்களுக்கு மலர்களாலயும், குங்குமத்தாலயும்,
06:10
Speaker A
அதே மாதிரி இந்த செப்பு காசுகள்லாம் இருக்கு இல்லையா, இந்த செப்பு காசுகள்லாம் போட்டு கொடுத்து நீங்க வந்து சில்லறை காசுகள்லாம் வச்சு நல்ல செழிப்பா அந்த மாதிரி வழிபாடு பண்ணனும்.
06:17
Speaker A
லட்சுமி குபேரர் வழிபாடு பண்றது.
06:20
Speaker A
துலாம் ராசிக்காரங்க வழிபாட்டு முறையை எப்படி இருக்கணும்னா, மிகுந்த செல்வ செழிப்போட நீங்க பண்ணனும்.
06:26
Speaker A
எங்கெங்க நான் இருக்கிற நிலைமைக்கு கடன் இருக்கிற நிலைமைக்கு செல்வ செழிப்பு.
06:30
Speaker A
அதாவது அவ்வளவு ஸ்பென்ட் பண்ணுங்கன்னு நான் சொல்லல.
06:32
Speaker A
சில்லறை காசுகள்லாம் இருக்கும் இல்லையா, அந்த சில்லறை காசுகள்லாம் சத்தம் பண்ணி இந்த லட்சுமி வழிபாடுலாம் பண்ண பண்ண,
06:38
Speaker A
முக்கியமா இந்த லட்சுமி குபேர வழிபாடு.
06:41
Speaker A
அதாவது லட்சுமி குபேரா ஐஸ்வர்ய சம்பத்து கொட்டட்டும் கொட்டட்டும் அப்படின்னுலாம் சொல்லி வழிபாடு பண்ண பண்ண, அந்த சத்தங்கள் லட்சுமி அப்படிங்கறது உங்களை தேடி வருவாங்க.
06:48
Speaker A
ஏன்னா நீங்க சுக்கிரன்.
06:50
Speaker A
அப்படி இருக்கப்போ அந்த லட்சுமி உங்கள்ட்ட தங்கணும்.
06:52
Speaker A
இப்ப துலாம் ராசிக்காரங்கன்னு பார்க்குறப்போ, இவங்கலாம் கிட்டத்தட்ட
06:57
Speaker A
இந்த லவ் அப்படிங்கற ஒரு விஷயம் இருக்கு இல்லையா.
07:00
Speaker A
காதல் மன்னர்கள், இந்த காதல்ல, இந்த காதலுக்காக எதை வேணாலும் பண்ணக்கூடியவங்க அப்படின்னுலாம் துலாம் ராசியில இருப்பாங்க.
07:07
Speaker A
தேவையில்லாம லைஃப் பார்ட்னர்க்கோ இல்ல அவங்க லவ்வர்க்கோ ஏதாவது ஒன்னு பண்றேன், ஏதாவது ஒன்னு வாங்குறேன் அப்படின்னு சொல்லிட்டு தான் மெயினா போய் கடன்லயே போய் இவங்க ஃபர்ஸ்ட் விழுறதே அப்படியாதான் இருக்கும்.
07:15
Speaker A
அதுவரைக்கும் தனக்கு அப்படிங்கறதெல்லாம் அவங்களுக்கு அந்த தாட் ப்ராசஸ்ங்கறது இருக்காது.
07:20
Speaker A
லைஃப் பார்ட்னரை உண்மையா அதாவது துலாம் ராசிக்காரங்களுடைய குணாதிசயம் என்னன்னு பார்த்தீங்கன்னா, முழுசா எதையும் சொல்ல மாட்டாங்க.
07:28
Speaker A
ஏதோ ஒரு விஷயத்தை மென்னு, முழுங்கி, தன்னுடைய குறைகளை வந்து உள்ளுக்குள்ளாரையே வச்சிட்டு, கூட இருக்கவங்க சந்தோஷமா இருக்கணும் அப்படிங்கிற ஒரு பேர்ல,
07:36
Speaker A
எங்கயாவது போய் சிக்கிக்கிறது.
07:38
Speaker A
அதுக்கப்புறம் ரொம்ப டிப்ரஷனுக்கு போறது.
07:40
Speaker A
அதுக்கப்புறம் அதே லைஃப் பார்ட்னர்ட்ட சண்டையும் போடுறவங்க நிறைய பேர் இருக்காங்க.
07:46
Speaker A
எனக்கு இருக்கிற கிளைன்ட்டும் அந்த மாதிரி ஒரு கிளைன்ட் இருந்தாங்க.
07:48
Speaker A
அதாவது மனைவி துலாம் ராசி, கணவன் மேஷ ராசி.
07:53
Speaker A
அவருக்கு ஏதோ அவருக்கு வந்து பர்த்டே சர்ப்ரைசஸ் கொடுக்கிறதுனா ரொம்ப பிடிக்குமாம்.
07:56
Speaker A
அந்த பர்த்டே சர்ப்ரைஸ் கொடுக்கணும் அப்படிங்கறதுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வந்து தெரிஞ்ச வட்டாரத்துலயே அவங்க போய் கடன் வாங்குறாங்க.
08:02
Speaker A
கடன் வாங்கிட்டு அந்த பிறந்தநாளையும் நல்ல செழிப்பா கொண்டாடிட்டாங்க.
08:06
Speaker A
ஆனா சரியான டைம்ல போய் அவங்களால அந்த கடனை வந்து திருப்பி கொடுக்க முடியாம போயிடுச்சு.
08:11
Speaker A
கடன் கொடுத்தவர் என்ன பண்ணிட்டாங்கன்னா,
08:13
Speaker A
அந்த கணவர்கிட்டயே போய் கேட்டுட்டாங்க.
08:15
Speaker A
கணவர்கிட்ட போய் கேட்ட உடனே, நான் உனக்காக தான கடன் வாங்கினேன்.
08:20
Speaker A
நீ எப்படி என்னை கேள்வி கேட்ப?
08:22
Speaker A
ஆனா கடன் வாங்கின விஷயம் கணவருக்கு தெரியவே தெரியாது.
08:25
Speaker A
இது எங்க போய் விட்டுச்சுன்னா, டிவோர்ஸ்ல போய் விட்டுச்சு.
08:27
Speaker A
கணவர் டிவோர்ஸ் கேட்கல.
08:29
Speaker A
இந்த துலாம் ராசி தான் டிவோர்ஸ் கேட்டாங்க.
08:31
Speaker A
எப்படி நீ என்னை தவறா நினைப்ப அப்படின்னு.
08:33
Speaker A
ஏன்னா துலாமுக்கு வந்து அப்பப்போ புதன் ஒழுங்காவே வேலை செய்யாது.
08:36
Speaker A
ஒரு விஷயத்துல அப்படியே ஸ்டக் ஆகி நின்னுட்டாங்கன்னு வச்சுக்கோங்களேன், செஞ்ச தவற அக்செப்ட் பண்ணிக்கணும் அப்படிங்கறது தெரியாது.
08:41
Speaker A
துலாம் ராசிக்காரங்க கடன் வாங்குறீங்கன்னா முதல் நேர்மை ரொம்ப அவசியம்.
08:46
Speaker A
துலாம் ராசிக்காரங்க நேர்மையை விட்டுட்டீங்க அப்படின்னாலே உங்களோட லைஃப் ரொம்ப கீழ போயிடும்.
08:52
Speaker A
என்னதான் தெய்வ வழிபாடு பண்ணனாலும் அந்த நியாய தர்மம் சரியா இல்லன்னா,
08:57
Speaker A
சனியே உங்களுக்கு தண்டனை அப்படிங்கறது கொடுக்க ஆரம்பிச்சிடும்.
09:00
Speaker A
ஏன்னா சனிக்கு சனியே பயந்துக்கும்பாங்க துலாமுக்கு.
09:04
Speaker A
ஏன் அப்படின்னா,
09:06
Speaker A
துலாம் வந்து நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்டது அப்படின்னு ஒன்னு இருக்கு.
09:10
Speaker A
அதே சமயத்துல நீங்க அந்த நியாய தர்மங்களுக்கு கட்டுப்படாம போறப்போ, எங்க நான் தவறு செஞ்சேன்.
09:16
Speaker A
நம்ம எங்கேயோ ஒரு இடத்துல ஒரு விஷயத்தை மறைக்கிறோம்.
09:19
Speaker A
துலாம் ராசி இந்த தவறை செய்வீங்க.
09:22
Speaker A
இந்த தவறை செய்யறப்ப தான் நீங்க கடன்லயே போய் விழுவீங்க.
09:25
Speaker A
ஒன்னும் இல்ல.
09:27
Speaker A
அவங்க இது ரொம்ப சிம்பிளா முடிய வேண்டிய ஒரு விஷயம்.
09:29
Speaker A
அவங்க போய் அவங்க கணவர்கிட்ட, அப்பா இந்த டைம் என்கிட்ட உனக்கு பண்ற அளவுக்கு சரியான பணம் இல்ல, ஆனா என்ட்ட அன்பு இருக்கு அப்படின்னு சொல்லிட்டு ஒரு குவாலிட்டியான ஒரு டைம் ஸ்பென்ட் பண்ணிருந்தாங்கன்னா,
09:37
Speaker A
இந்நேரம் அவங்க டிவோர்ஸ் ஆயிருந்திருக்க மாட்டாங்க.
09:40
Speaker A
அப்படி ஒரு கடன்ல விழுந்திருக்க மாட்டாங்க.
09:41
Speaker A
ஆனா அந்த மனைவி வந்து அந்த கடனை அடைச்சிட்டாங்க.
09:43
Speaker A
அந்த கணவரும் மறுபடியும் போய் என் மனைவி தான கடன் வாங்கினாங்கன்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை போய் கடன் அடைக்க போனப்ப தான் அவங்க மனைவி அந்த பணத்தை திருப்பி கொடுத்துட்டாங்க அப்படிங்கறதே அவருக்கு தெரிய வந்தது.
09:50
Speaker A
கடன் அடைச்சாச்சு.
09:51
Speaker A
வாழ்க்கை.
09:52
Speaker A
துலாம் ராசிக்காரங்க கடன் வாங்க போறதுக்கு முன்னாடி பல்லாயிரம் தடவை யோசிச்சு தான் நீங்க கடன் வாங்கணும்.
09:58
Speaker A
ஏன்னா அதிக ஆடம்பரத்துக்கு விருப்பப்பட்டு ஆசைப்பட்டு நீங்க கடன் வாங்கக்கூடிய சூழல்ங்கறது பெரும்பாலான துலாமுக்கு அமைஞ்சிடும்.
10:04
Speaker A
அதனால செய்யக்கூடிய செலவுகள் நிஜமாலுமே அந்த நேரத்துக்கு உகந்ததா, தேவையானதா அப்படிங்கறத வந்து கருத்தில வச்சிட்டு தான் நீங்க கடன் அப்படிங்கற ஒரு விஷயத்துக்குள்ளேயே போகணும்.
10:13
Speaker A
பொதுவாவே எல்லா ராசிக்காரங்களுக்கும் சொல்ற விஷயம் என்ன அப்படின்னா,
10:18
Speaker A
யார் கடன் வாங்கிருந்தாலும் சரி, என்ன ராசிக்காரங்க கடன் வாங்கிருந்தாலும் சரி,
10:22
Speaker A
விநாயகரை போய் பிடிச்சுக்கணும்.
10:24
Speaker A
ஏன்னா அவர்தான் ஆதி கடவுள் இல்லையா.
10:25
Speaker A
விநாயகரை வழிபாடு பண்ணி, அவரையே சொல்யூஷன் கொடுக்க வைக்கணும்.
10:30
Speaker A
நீங்க தான் எனக்கு சரணாகதி அப்படின்னுட்டு விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சு வழிபாடு பண்றது.
10:33
Speaker A
இந்த மாதிரி வழிபாடு முறைகள்லாம் பண்ணி, விநாயகரை வழிபட்டா மட்டும் இங்க கடன் அடைஞ்சிடுமா அப்படிங்கறது இல்ல.
10:39
Speaker A
அவருடைய அந்த பிளஸ்ஸிங்ஸ் அப்படிங்கறது நீங்க எடுத்துக்கணும்.
10:42
Speaker A
அதுபோக முக்கியமா சந்திராஷ்டமம் வரக்கூடிய நாட்கள்ல,
10:46
Speaker A
உங்களுக்கு என்னைக்கு சந்திராஷ்டமம், எல்லா ராசிக்கார எல்லா நட்சத்திரக்காரங்களுக்குமே வந்து,
10:50
Speaker A
ஒரு ரெண்டரை நாள் சந்திராஷ்டமம் அப்படிங்கறது இருக்கும்.
10:53
Speaker A
உங்களுடைய சந்திராஷ்ட காலங்கள்ல எதுவுமே பண்ணாம.
10:58
Speaker A
அதாவது எதுவும் பண்ணாமங்கறது முடிவுகள் எடுக்காம.
11:01
Speaker A
கடன் வாங்கணும்ங்கற எண்ணம் இல்லாம.
11:03
Speaker A
சந்திராஷ்டம் அன்னைக்கு கடனை அடைக்கவும் வேணாம், கடனை கொடுக்கவும் வேணாம், வாங்க போகவும் வேணாம்.
11:08
Speaker A
அந்த நேரத்துல முடிவும் எடுக்க வேண்டாம்.
11:10
Speaker A
சந்திராஷ்டம காலங்கள்ல கடன் வாங்கினாலோ, கடன் கொடுத்தாலோ,
11:15
Speaker A
கடன் அடைப்பது மிகவும் கடினம்.
11:18
Speaker A
ரொம்ப கஷ்டத்துல போயிடுவீங்க சந்திராஷ்டமம்.
11:20
Speaker A
தெரியாம நாங்க சந்திராஷ்டமத்துல கடன் வாங்கிட்டோம்.
11:23
Speaker A
எங்களுக்கு தெரியலையே.
11:24
Speaker A
அன்னைக்கு எங்க நட்சத்திரம்.
11:25
Speaker A
விதி அப்படிதான் பண்ணும்.
11:26
Speaker A
அன்னைக்கு நீங்க கடன் வாங்க போற நேரத்துல சப்போஸ் ஒரு லோன் அப்ளை பண்ணிருக்கீங்க.
11:32
Speaker A
எனக்கு அன்னைக்கு போய் நான் பேங்குக்கு போகணும்.
11:34
Speaker A
அன்னைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம் போகாதீங்க.
11:35
Speaker A
அலைச்சல் ஜாஸ்தியா இருக்கும்.
11:36
Speaker A
அந்த கடனை அடைக்கவே முடியாது.
11:38
Speaker A
சரி இன்னைக்கு நான் லோன் அடைக்க போற நாள்.
11:41
Speaker A
இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம் போகாதீங்க.
11:42
Speaker A
திரும்பவும் அங்கேயும் ஏதாவது ஒரு அலைச்சலோ இல்ல ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டோ இல்ல கட்ட முடியாம போற சூழ்நிலையோ இல்ல மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையோ.
11:48
Speaker A
ஏதோ ஒன்னு சந்திராஷ்டமம் நம்மளுக்கு பண்ணி விட்டுரும்.
11:50
Speaker A
அதனால முடிஞ்ச அளவுக்கு சந்திராஷ்டம காலங்கள்ல அமைதியா இருந்துக்கிறது நல்லது.
11:55
Speaker A
தெய்வ வழிபாடோட இருந்துக்கிறது நல்லது.
11:57
Speaker A
எதற்காக கடன் வாங்குறோம்.
12:00
Speaker A
வீண் ஆடம்பரத்துக்கு வாங்குறோமா.
12:02
Speaker A
கால்குலேட்டிவா இருந்து சிக்கனமா இருக்க பழகிக்கிட்டீங்க அப்படின்னாலே யாருமே கடன் படணும் அப்படிங்கறது கிடையாது.
12:08
Speaker A
கடவுள் நம்மளுக்கு எல்லாத்துக்குமே யார் யாருக்கு எப்படி எப்படி படி அளந்து கொடுக்கணுமோ அப்படி கொடுத்துக்கிட்டே தான் இருப்பார்.
12:14
Speaker A
ஆசைப்பட பட தான் கடனுக்குள்ள போய் நம்ம விழுவோம்.
12:17
Speaker A
ஆசை ஆபத்து அப்படின்னு சொல்லி நான் இந்த வீடியோவை முடிச்சுக்கிறேன்.
Topics:துலாம் ராசிகடன் பிரச்சனைஜோதிடம்குருவாயூர் வழிபாடுமகாலட்சுமி வழிபாடுசனி கிரகம்குபேரர் வழிபாடுசெல்வ செழிப்புகடன் திருப்பி கொடுக்கும் வழிகள்தமிழ் ஆன்மீகம்

Frequently Asked Questions

துலாம் ராசிக்காரர்கள் எதற்காக கடன் வாங்குவார்கள்?

துலாம் ராசிக்காரர்கள் பெரும்பாலும் குடும்ப கட்டமைப்புக்காகவே கடன் வாங்க ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு பணம் சேமிக்கும் குணம் அதிகம் இருந்தாலும், திடீரென வரும் ஆசையால் அதிக செலவு செய்துவிடுவார்கள்.

துலாம் ராசிக்காரர்கள் கடன் வாங்கினால் என்ன நடக்கும்?

துலாம் ராசிக்காரர்கள் கடன் வாங்கினால், அவர்கள் பெரும்பாலும் அவமானப்பட ஆரம்பிப்பார்கள். கேது காலங்களில் கடன் படுவது, அதை அடைக்க முடியாமல் சிரமப்படுவது, மற்றும் கடன் கேட்கும் போது அவமானம் அல்லது அசிங்கம் ஏற்படுவது போன்ற சூழ்நிலைகள் உருவாகும்.

துலாம் ராசிக்காரர்கள் பணத்தை எப்படி கையாள்வார்கள்?

துலாம் ராசிக்காரர்கள் பணத்தை மிகவும் பத்திரமாக வைத்துக்கொள்வார்கள். ஆனால், திடீரென ஒரு ஆசை வரும்போது, அந்த ஆசையின் காரணமாக அதிகப்படியாக செலவு செய்து, இருக்கும் பணத்தை இழக்கும் சூழ்நிலையும் அவர்களுக்கு ஏற்படும்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →