சிம்மம் – நீங்கள் எதிர்ப்பாராத திருப்பம் நடக்கும் | Sim… — Transcript

சிம்ம ராசிக்காரர்களுக்கான கடன் பிரச்சனைகள் மற்றும் சரபேஸ்வரர் வழிபாடு மூலம் தீர்வு பெறும் வழிகள்.

Key Takeaways

  • ஆடம்பர வாழ்க்கை காரணமாக சிம்ம ராசிக்காரர்கள் கடனில் சிக்குவர்.
  • சூரியன் வழிபாடு மற்றும் சூரிய நமஸ்காரம் கடன் தீர்வுக்கு உதவும்.
  • சரபேஸ்வரர் வழிபாடு கடன் பிரச்சனைகளுக்கு ஆன்மீக தீர்வாகும்.
  • கடன் பிரச்சனைகளை சமாளிக்க மனநிலை மற்றும் ஆன்மீக வழிகள் அவசியம்.
  • ராகு காலத்தில் சரியான வழிபாடு கடன் தீர்வுக்கு முக்கியம்.

Summary

  • சிம்ம ராசிக்காரர்கள் பெரும்பாலும் ஆடம்பர வாழ்க்கை காரணமாக கடனில் சிக்குவர்.
  • கடன் வாங்கும் சூழ்நிலைகள் மற்றும் அதிலிருந்து மீளும் வழிகள் பற்றி விளக்கம்.
  • சூரியன் வழிபாடு மற்றும் சூரிய நமஸ்காரம் கடன் தீர்வுக்கு முக்கியம்.
  • சரபேஸ்வரர் வழிபாடு மற்றும் ராகு காலத்தில் செய்ய வேண்டிய பூஜைகள் பற்றி விவரிப்பு.
  • பொட்டிக் போடுதல் மற்றும் அதனால் ஏற்படும் கடன் சிக்கல்கள்.
  • வாழ்க்கையில் கடன் பிரச்சனைகளை சமாளிக்க தேவையான ஆன்மீக வழிகள்.
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் தாக்கம் மற்றும் அதனை சமாளிப்பது.
  • கடன் தீர்க்கும் போது மனநிலை மற்றும் ஆன்மீக வழிபாடுகளின் முக்கியத்துவம்.
  • சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கை பாதையில் கடன் மற்றும் செழிப்பின் தொடர்பு.
  • சரபேஸ்வரர் வழிபாடு மூலம் கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
மீளவே முடியாத ஒரு கடன் அப்படின்னு சிம்ம ராசிக்காரங்க போயிட்டீங்க அப்படின்னா
00:09
Speaker A
கேது காலங்கள்ல எப்படி கடன் வாங்க வைக்கும் அப்படின்னா எல்லாமே என்கிட்ட இருந்து போய்கிட்டே இருக்கு. எப்படியாவது நான் தக்க வச்சுக்கணும் அப்படின்னா
00:15
Speaker A
ஒரு ஓட்டை வழியா எல்லாமே ஒழுகி போயிட்டே இருக்க மாதிரிதான்.
00:20
Speaker A
ஆடம்பர வாழ்க்கை அப்படிங்கறப்போ பெரும் கடன்ல போய் விழுந்துருவாங்க.
00:25
Speaker A
ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு எனது வணக்கங்கள். இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்ன அப்படின்னா
00:31
Speaker A
வாழ்க்கையில யாருக்கு தான் கடன் இல்ல இல்லையா
00:34
Speaker A
எல்லாத்துக்கும் பணம் சம்பாதிக்கணும் அட் தி சேம் டைம் எப்படி சம்பாதிக்கிறது இப்ப இருக்க காலகட்டங்கள்ல கடன் வாங்காம எதுவுமே எங்களால பண்ண முடியலையே அப்படிங்கிற கேள்வி அம்பானிக்கு கூட உண்டு எல்லாத்துக்குமே உண்டு இந்த கேள்வி.
00:46
Speaker A
அப்படி இருக்கப்போ இந்த 12 ராசிகளுக்கும் அவங்க கடந்து வரக்கூடிய அந்த வாழ்க்கை பாதைன்னு வரப்போ அட் எனி காஸ்ட் ஏதோ ஒரு சிச்சுவேஷன்ல கடன் வாங்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது வந்துரும்.
00:57
Speaker A
அப்படி பார்க்கிறப்போ நான் ஜோதிடம் பார்த்ததுல இருந்து என்னுடைய அனுபவத்துல ஒவ்வொரு ராசிக்காரங்க என்னென்ன மாதிரியான ஒரு விஷயத்துக்கு காரணமா அவங்க வந்து கடன் வாங்கினாங்க எப்படி அவங்க அதுல இருந்து மீண்டாங்க அப்படிங்கறத வச்சு நான் இந்த 12 ராசிகளுக்கு எப்படி அப்படிங்கறத உங்களுக்கு சொல்றேன் என்ன தெய்வத்தை வழிபாடு பண்ணனும் எப்படி அந்த கடன் கடன்ங்கிற விஷயத்துல இருந்து எப்படி வெளிய வரணும் அப்படிங்கறத பத்தி நம்ம இங்க பார்ப்போம்.
02:01
Speaker A
சிம்ம ராசிக்காரங்க சிம்ம ராசிக்காரங்க எல்லாம் எப்படி கடன் படுவாங்கன்னா பெரும்பாலும் லைஃப் ஸ்டேட்டஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்துக்காகவும்
02:07
Speaker A
முக்கியமா குடும்பம் அப்படிங்கிற ஒரு விஷயத்துக்காகவும் இவங்க வந்து கடன் படுவாங்க அதாவது ஆடம்பர வாழ்க்கை அப்படிங்கறப்போ பெரும் கடன்ல போய் விழுந்துருவாங்க.
02:16
Speaker A
நல்ல செழிப்பா இருக்கக்கூடிய ஒரு அமைப்புதான் இருக்கும் எனக்கு இந்த மாதிரி ஒரு கிளைன்ட் இருந்தாங்க சிம்ம ராசியில பயங்கரமான ஒரு செழிப்பு செழிப்போ செழிப்பு வருமானம் அப்படிங்கறது பன்மடங்கு வந்துட்டு இருந்தக்கூடிய ஒரு டைம் பீரியட்ல அவங்க என்ன பண்ணுனாங்கன்னா லாட்ஜ் எல்லாம் வாங்கி கட்டுனாங்க லாட்ஜஸ் அதாவது ஹோட்டல் எல்லாம் இருக்கு இல்லையா ஹோட்டல் எல்லாம் வாங்கி கட்டுனாங்க அந்த ஒரு பட்ஜெட் போடுவாங்கல்ல அந்த வீடு கட்டுறப்போ அந்த ஹோட்டல் கட்டுறப்போ ஒரு பட்ஜெட் போடுறாங்க இந்த பட்ஜெட்ல இருந்து என்ன பண்றாங்க அப்படின்னா திடீர்னு மைண்ட் ஒரு ஆடம்பரத்தை நோக்கி போகுறப்ப ஓகே இதுக்கு மேல நான் ஒரு பொட்டிக் போட்டா என்ன அப்படின்னுட்டு அவங்க பிளான் பண்றாங்க அந்த பொட்டிக்ங்கறது அவங்களுடைய பட்ஜெட் பிளான்லயே இல்ல.
03:34
Speaker A
பொட்டிக் போட்டா என்னன்னு யோசிக்கிற விஷயம் என்ன அப்படின்னா மேல இன்னும் அதாவது ஒரு மொட்டை மாடி இருக்கு அந்த மொட்டை மாடி ஸ்தலத்தை ஓகே இவ்வளவு ஸ்பேஸ் இருக்கு இந்த ஸ்தலத்தை நானு வந்து இழுத்து நான் வந்து ஒரு பொட்டிக் போட்டுறேன் இங்க நல்லா கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா இவங்களுடைய பிளான் எதுவா இருந்தது நான் வந்து ஒரு லாட்ஜ் மாதிரி ஒன்னு ஸ்டார்ட் பண்ணனும் இங்க ஃப்ரீக்வென்ட்டா கஸ்டமர்ஸ் வந்துட்டு இருக்க தான் போறாங்க எனக்கு இது மூலமா இந்த பூமி மூலமா ஒரு வருமானம் வரப்போகுது இன்வெஸ்ட் பண்ணனும்னு நினைச்சது எங்க பூமியில திடீர்னு ஐடியா வந்தது எங்க நான் வந்து பொட்டிக் ஆரம்பிக்கிறேன் அப்படின்னா அவங்க என்ன பண்றாங்க மேல் தளத்துல வந்து பொட்டிக் போடுறாங்க பொட்டிக் போடணும்னா என்ன பண்ணனும் திருப்பி நீங்க வந்து துணிகளுக்கு இன்வெஸ்ட் பண்ணனும் இல்லையா அந்த பட்ஜெட் எங்கிருந்து வரும்.
04:15
Speaker A
இருக்கிறதை விட்டுட்டு பறக்க ஆசைப்படுற விஷயம் அது பெரும் தொகையை இன்வெஸ்ட் பண்றாங்க ஏன் இன்வெஸ்ட் பண்றாங்க அவ்வளவு பெரிய தொகைனா ஸ்பேஸ் அவ்வளவு பெருசு இருக்கு வரவங்களுக்கு இந்த இடம் எல்லாம் எம்டியா இருந்திடக்கூடாது அப்படிங்கறதுக்காக அந்த பிசினஸ் நாலேட்ஜ் இல்லாம என்ன பண்றாங்க பெருசா இடத்தை இழுத்துறாங்க இடத்தை இழுத்து பெரும் கடன் படுறாங்க அவங்க.
05:17
Speaker A
இவங்க என்ன பண்றாங்க ஏகப்பட்டது வாங்கி போட்டுறாங்க அதாவது கன்ஸ்ட்ரக்ஷனுக்குன்னு ஒரு பட்ஜெட் வச்சிருந்தாங்க இல்லையா அந்த கன்ஸ்ட்ரக்ஷனுக்கு வச்சிருந்த பட்ஜெட் எல்லாமே அவங்க வந்து அவங்களுடைய மேல இருக்க பொட்டிக்குக்கு போட ஆரம்பிச்சிட்டாங்க இப்ப அந்த பொட்டிக்கை யார் பாத்துக்க போறாங்க அப்படிங்கறது யாருக்குமே தெரியாது அவங்க என்ன நினைக்கிறாங்க நான் வீட்ல நான் வந்து வேலையாட்கள் எல்லாம் வச்சு நான் அந்த பொட்டிக்கை நான் பாத்துக்குவேன் கீழ ரிசப்ஷன்ல வந்து இந்த மாதிரி லாட்ஜ் நடந்துரும் இந்த ஹோட்டல் பிசினஸ் நல்லா போயிடும் அப்படிங்கிற ஒரு மம்மதைனே நம்ம அதை சொல்லலாம்.
05:46
Speaker A
கடன் ஊர் பட்ட கடன் வாங்கிட்டாங்க பில்டிங் கட்டுறதுக்குனே ஒரு கடன் அதுக்கு மேல அந்த ஸ்தலத்தை இழுக்குறதுக்குன்னு அந்த ஆடம்பரத்துக்குன்னு ஒரு கடன் இந்த கடனை அடைக்கிறதுக்கு பன்மடங்கு இவங்க சம்பாதிச்சு ஆகணும் அப்போ இந்த தாட் அப்படிங்கறதுதான் விஷயம்.
06:42
Speaker A
சூரியன் அப்படிங்கறது இவங்களுக்கு ரொம்ப முக்கியம் அதாவது சூரியனார் வழிபாடு அப்படிங்கறது சிம்ம ராசிக்கு எப்பவுமே ரொம்ப முக்கியம் ஞாயிற்றுக்கிழமைகள்ல சூரியன் வழிபாடு.
06:52
Speaker A
இப்ப இவங்க வந்து இவ்வளவு கடன் பட்டு என்கிட்ட வரப்போ அவங்க சொன்ன விஷயம் என்ன அப்படின்னா எனக்கு பிசினஸ் சரியாவே நடக்கவே இல்லை என்னோட பிசினஸ் சரி பண்றதுக்கு என்ன பண்றது நான் ரொம்ப கடன் பட்டுட்டேன் இந்த கடன் எப்படி எனக்கு அடைக்கிறதுன்னு தெரியல அப்படிங்கறப்போ மேலும் கடன் வாங்குறதுக்கு தான் மைண்ட் அவங்களுக்கு தோணுது.
07:07
Speaker A
ஏன்னா அந்த கடன் அடைக்கணும்னா உழைக்கிறதை விட இன்னொரு இடத்துல கடன் வாங்கி தான் இப்படி அடைக்கணும்ங்கிற மாதிரி ஒரு சிச்சுவேஷன் இல்லைன்னா டோட்டலாவே தீவாலா இழுத்து மூடிட்டு போகக்கூடிய ஒரு அமைப்பு அவங்களுக்கு இருக்குங்கிறப்போ அவங்க ஜெனரலாவே சிம்மம் அப்படினாலே நெருப்பு இல்லையா உங்களுக்கு அந்த சூரியன் அப்படிங்கறது பிரகாசமா இருக்கணும் அப்பதான் உங்களுக்கு தாட் ப்ராசஸும் கரெக்டா இருக்கும் எடுக்கக்கூடிய முடிவும் தெளிவா எடுக்க முடியும் அந்த கட்டுப்பாட்டுக்குள்ள நீங்க எடுக்க முடியும்.
07:35
Speaker A
சிம்ம ராசியில் இருக்கவங்க பெரும்பாலும் சூரிய நமஸ்காரம் அப்படிங்கறத வந்து ரெகுலரா பண்ணிக்கணும் காலையில எந்திரிச்சு சூரிய நமஸ்காரம்ங்கறது காலையில ஒரு ஆறு டு ஏழுக்குள்ளார போயி சூரியனுக்கு தண்ணி வச்சிட்டு சூரிய நமஸ்காரமே அந்த அந்த ஆசனத்தையே நீங்க முழுசா பண்ணனும் அந்த ஆசனத்தை முழுசா பண்ண பண்ண அது எதுக்கு அப்படின்னா தாழ்ந்து பணியறது சூரிய நமஸ்காரம் பண்ணி டோட்டலா தாழ்ந்து பணிந்து என்னுடைய தன்நிலை நான் தெரிஞ்சுக்கணும் எனக்கு கடன் சீக்கிரம் அடைய வேணும்னு நீங்க சூரியனார் கிட்ட தான் வழிபாடே பண்ணனும் சூரியனார் ஸ்தலங்களுக்கு நீங்க போயிட்டு வர வர போயிட்டு வர வர சீக்கிரம் கடன் அமையக்கூடிய அமைப்பும் திரும்பவும் செல்வ செழிப்பு உங்களுக்கு வரக்கூடிய அமைப்பும் வந்து உங்களுக்கு மிக அதிகமாகவே இருக்குது.
08:56
Speaker A
மீளவே முடியாத ஒரு கடன் அப்படின்னு சிம்ம ராசிக்காரங்க போயிட்டீங்க அப்படின்னா உங்களுக்கு எல்லாம் ஒரே வழி யாருன்னு பார்த்தா சரபேஸ்வரர்.
09:04
Speaker A
சரபேஸ்வரர்ட்ட போயிட்டு அதாவது ஞாயிற்றுக்கிழமைகள்ல ஞாயிற்றுக்கிழமையில நான் சொன்ன மாதிரி சூரிய நமஸ்காரம் பண்ணிட்டு சூரியனுக்கு உண்டான மந்திரத்தையும் நீங்க வந்து உச்சரிக்கணும் சூரியனுக்கு உண்டான மந்திரம் அப்படின்னு பார்க்கிறப்ப ஓம் ஹராம் ஹரீம் சூர்யாய நமஹ அப்படின்னு சொன்னாலே போதும் ஏன்னா இது முழுசா நீட்டமா வரக்கூடிய ஒரு பீஜ மந்திரம் அந்த பீஜ மந்திரத்துக்கு அந்த தீட்சை வாங்கினா தான் முழுசா சூரியனுக்கான மந்திரம் சொல்லணும் அதனாலதான் நான் வந்து உங்களை சூரிய நமஸ்காரம் அப்படின்னு பண்ண சொன்னேன்.
10:12
Speaker A
இந்த சரபேஸ்வரர் வழிபாடு எப்ப பண்ணனும் அப்படின்னா ராகு காலத்துல ஞாயிற்றுக்கிழமைகள்ல சாயங்காலம் நாலரை டு ஆறு மணி வரைக்கும் ராகு காலம் அப்படிங்கறது இருக்கும் அது என்ன கணக்கு அப்படின்னா அந்த நேரத்துல மொத்த தெய்வங்களும் சரபேஸ்வரர் கிட்ட வந்து ஐக்கியமாகக்கூடிய ஒரு அமைப்பு தூணா தான் இருப்பாரு சரபேஸ்வரர் இந்த சரபேஸ்வரருக்கு வந்து வழிபாடு முறைகள் அபிஷேக முறைகள் எல்லாம் எப்படி இருக்கும்னா அத்தனை தெய்வங்களும் எத்தனை தெய்வங்கள் இருக்கோ அத்தனை தெய்வங்களையும் வச்சுதான் பூஜைகள் புனஸ்காரங்கள் அதுல நீங்க கேட்கக்கூடிய அந்த மந்திரங்கள் இருக்கு இல்லையா அவ்வளவு பவர்ஃபுல்லான மந்திரங்கள் அப்படியே ஸ்தம்பிச்சு உட்காரக்கூடிய ஒரு அமைப்பு அந்த மந்திரங்கள் நீங்க கேட்கிறப்போ அந்த மந்திரங்கள் கேட்க கேட்க கேட்க உங்களுடைய கடன் ஏன்னா நீங்க சிம்ம ராசி அப்படிங்கறப்போ சூரியன் நீங்கலாம் அப்போ மொத்த தெய்வங்களும் வந்து உங்களுக்கு ஆசீர்வாதம் பண்ணி உங்களுக்கு தெய்வத்தோடைய ஆசீர்வாதம் எப்படி வரும்னா சித்தர்கள் மூலமாதான் உங்களுக்கு அந்த ஆசீர்வாதம் அப்படிங்கறதே வரும் பெரும்பாலும் சிம்ம ராசிக்காரங்களுக்கு அப்ப நீங்க எல்லாம் மொத்தமா இந்த தெய்வத்துக்கிட்ட போய் இந்த சரபேஸ்வரர் கிட்ட போய் டோட்டல் சரணாகதி ஏன்னா கடன் கொடுத்தவங்களும் உங்க கழுத்தை நெறிக்கிற மாதிரியான சிச்சுவேஷன்ஸ் எல்லாம் வரும் ரொம்ப பிரச்சனைகள்ல போய் மாட்டக்கூடிய அமைப்பு எல்லாம் வந்து சிம்ம ராசிக்காரங்களுக்கு வந்து இருக்கும் அந்த கடன் கொடுக்க முடியலங்கிறதுலயே மைண்ட் ஒரு மாதிரி டிப்ரஷனுக்கு எல்லாம் போயிடுவாங்க.
12:10
Speaker A
இந்த சரபேஸ்வரரோட வழிபாடு அந்த முழுக்க முழுக்க அந்த நாலரை டு ஆறு மணி எங்க அந்த சரபேஸ்வரர் வழிபாடு நடக்குதுங்கறத பார்த்துட்டு நீங்க போகணும் இங்க சென்னையிலன்னு பார்க்கிறப்போ மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில்ல வந்து சாயங்காலம் நாலரை டு ஆறு சரபேஸ்வரருக்கு வந்து வாரா வாரம் செழிப்பான பூஜைகள் அப்படிங்கறது நடைபெறும் முடிஞ்ச அளவுக்கு மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்து அந்த சரபேஸ்வரர் பூஜையில அந்த சாயங்காலமா நீங்க கலந்துக்கிறப்போ துர்கைக்கு போய் அதாவது ராகு காலம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே நீங்க அந்த ஸ்தலத்துக்கு வந்துரணும் வந்துட்டு அங்க இருக்க எல்லா தெய்வங்களையும் வழிபாடு பண்ணிட்டு துர்கைக்கு ராகு காலத்துல ஒரு விளக்கு போட்டுட்டு வந்து இந்த சரபேஸ்வரர் வழிபாட்டுல நீங்க உட்காரப்போ நீங்க என்ன வேண்றீங்களோ அது எப்படி சரியா நடக்குணுமோ மொத்த தெய்வங்களும் ஒரு சேர அங்க வந்து காட்சி தரக்கூடிய ஒரு இடம் அப்படின்னா அந்த சரபேஸ்வரர் வழிபாடு நீங்க பண்றப்போ சிம்ம ராசி செழிச்சிருப்பீங்க.
13:45
Speaker A
சோ கடன் அப்படிங்கறது முக்கியமா இந்த சனி கேது சில டைம் ராகு கடன் வாங்க நம்மளுக்கு வைக்கும் ராகு இப்போ ஒவ்வொரு கிரகங்கள் இருக்கு இல்லையா ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு காரணத்துக்காக நம்மள கடன் வாங்க வைக்கிறப்போ ராகு வந்து அதீத ஆடம்பரத்துக்கும் கற்பனை இமேஜினேஷன் இல்லயூஷன் பார்த்துக்கலாம் அப்படிங்கற தருணத்துல ராகு கடன் வாங்க வச்சிரும் கேது வந்து வச்சு செஞ்சிரும் கேது காலங்கள்ல எப்படி கடன் வாங்க வைக்கும் அப்படின்னா எல்லாமே என்கிட்ட இருந்து போய்கிட்டே இருக்கு எப்படியாவது நான் தக்க வச்சுக்கணும் அப்படின்னா
14:15
Speaker A
அது எப்படின்னா ஒரு ஓட்டை வழியா எல்லாமே ஒழுகி போயிட்டே இருக்க மாதிரிதான் கேது காலங்கள்ல கடன் படுறதும் கேது காலங்கள்ல கடன் அடைக்க முடியாம சிரமப்படுறதும் நம்ம யார்ட்டயாவது போய் கடன் அடைக்கிறதுக்கு இன்னொருத்தங்கள்ட்ட போய் கடன் கேட்க போற நேரத்துல கூட ஒரு அவமானம் அசிங்கமோ இல்ல கடன் கிடைக்க முடியாத ஒரு சூழ்நிலையோ கேது இந்த மாதிரி உருவாக்கிடும் அதனாலதான் நான் வந்து விநாயகர் வழிபாடு பண்ணுங்க ஏன்னா
15:14
Speaker A
இந்த கடன் அப்படினாலே இந்த சனி ராகு கேது பெரிய ரோல் பிளே பண்ணுவாங்க புதன் கெட்டுப்போயிருச்சு அந்த நேரத்துல உங்களால டிசிஷன் எடுக்க முடியல அப்படின்னா புதன் ஸ்தலங்களுக்கு போயிட்டு வர்றது உங்களுடைய புத்தியை ஷார்ப் ஆக்கிக்கிறது புத்தி மூலமா எப்படி சம்பாதிக்கணும் அப்படிங்கறதுதான் நீங்க வந்து ஃபாலோ பண்ணனும் இப்போ குரு வழிபாடு அப்படின்னு எல்லாம் பண்றப்போ குரு வழிபாடு பண்ண பண்ண இந்த கடன் தொல்லைகளால அவமானப்படாம அசிங்கப்படாம தப்பிக்க முடியும் செவ்வாய் வழிபாடு அப்படின்னு பண்றப்போ செவ்வாய்ங்கிறது முருகர் முருகர் வழிபாடுன்னு பண்றப்போ பெரும் பிரச்சனையில போய் விடாது அதாவது சில பேத்துக்கு எல்லாம் வந்து இப்போ பேங்கே வந்து எல்லாமே ஜப்தி பண்ணிட்டு போறாங்க இல்ல ஒரு அடிதடி மாதிரி ஆயிருது இல்ல ஒரு பஞ்சாயத்து மாதிரி ஆயிருது அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்லாம் வந்து இந்த செவ்வாய் ஹோரையில கடன் வாங்கக்கூடிய சிச்சுவேஷன் வரப்போ இந்த மாதிரி எல்லாம் அமைஞ்சிரும்.
16:40
Speaker A
அதனால எந்த ஹோரை ஹோரைங்கிறது முக்கியம் கடன் கொடுக்கிறதும் கடன் வாங்குறதும் அந்த ஹோரை பார்த்து செய்றது நல்லது சப்போஸ் சனிக்கிழமை நீங்க கடன் வாங்கிடுறீங்கன்னு வச்சுக்கோங்க சனி பெருக்கிட்டே தான் போகும் சனிக்கிழமை கடன் வாங்குறீங்கன்னா அது நோய்க்கா இருக்கட்டும் நோய்க்கு கடன் வாங்குறீங்க அப்படின்னா அது ஓரளவுக்கு நம்மளால அடைச்சிட முடியும் ஏன்னா சனியே வந்து அன்னைக்கு மருத்துவத்துக்கு நீங்க செலவு பண்ணலாம் அது வந்து எதுவும் பண்ணாது சுபகாரியங்களுக்கு சனிக்கிழமைல வந்து கடன் வாங்குற வேலை வேண்டவே வேண்டாம்.
17:10
Speaker A
அது வந்து இன்னும் கஷ்டத்திலேயே போய் விட்ரும் அதனால கடன் வாங்குறதுக்கும் வெள்ளிக்கிழமை யாரும் கடன் கொடுக்கவும் மாட்டாங்க வாங்கவும் மாட்டாங்க ஆனா செவ்வாய்க்கிழமை நீங்க கடன் அடைக்கலாம் புதன்கிழமை கடன் கேட்கிறதுக்கு டிஸ்கஷன்ஸ் வச்சுக்கலாம் ஒரு வியாழக்கிழமையா கடன் யாருக்காவது நீங்க கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா குரு வழிபாடு பண்ணிட்டு வியாழக்கிழமை கடன் கொடுங்க அடைக்கிறவங்க செவ்வாய்க்கிழமை அடைங்க இந்த மாதிரி நேரம் காலம் நாள் கிழமை உங்களுக்கு சந்திராஷ்டமமா இல்லையா இந்த மாதிரி எல்லாம் பார்த்துட்டு என்னங்க ஆத்திர அவசரம் எங்களுக்கு ஒரு ஹாஸ்பிடல் எக்ஸ்பென்ஸ் இந்த டைம்ல போய் நாங்க நேரம் காலம் பார்த்துட்டு இருக்க முடியுமா அப்படின்னா ஆத்திர அவசரத்துக்கு நம்ம நேரம் காலம் பார்க்க முடியாது அது வந்து உதவி அது வந்து நம்ம உதவி கேட்கிறோம் அதை எமர்ஜென்சிக்கு உதவி கேட்கிறோம்.
18:20
Speaker A
முறையா கடன் கேட்கிற ஒரு அமைப்புன்னு இருக்கு இல்லையா இப்ப நீங்க வந்து பினான்சியல் கிட்ட எல்லாம் போய் பணம் கேக்குறீங்கன்னா அதுக்கெல்லாம் ஒரு நேரம் காலம் ஒரு பேங்க்ல போய் நகையை அடமானம் வைக்க போறீங்க இல்ல அடைக்க போறீங்க இதுக்கெல்லாம் நீங்க நேரம் காலம் பார்த்து செய்யறப்போ உங்களுக்கு இழந்த செல்வம் திருப்பி கிடைக்கணும் அப்படிங்கறதுதான் வந்து கடன் அடைத்தல் அப்படிங்கறதே பேரு ஒரு கடன் எதுக்கு நம்ம வாங்குறோம் ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா தெளிவா இருக்கணும்.
18:52
Speaker A
அந்த கடன் எப்படி உபயோகப்பட்டுச்சு அப்படின்னு ஒன்னு இருக்கு ஊதாரித்தனமா செலவு பண்ணிட்டு காத்துல போன மாதிரி இருந்திடக்கூடாது கடன் ஒரு பொருள் உள்ள வரணும் ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா அந்த பொருளுக்கான ஒரு அடையாளம் அப்படிங்கறது வீட்ல இருந்து அது ஒரு செழிப்பை கொடுக்கிற மாதிரி இருக்கணும் இல்லைன்னா நிறைய கடன் வாங்குனாங்க வீட்டை போய் பாருங்க வீட்டுக்குள்ள ஒண்ணுமே இருக்காது அப்ப எதுக்கு கடன் வாங்கினீங்க அப்படின்னா எதுக்கு வாங்கணும்னே தெரியாது எதையோ வித்து வித்து இந்த கடனுக்காகவே சம்பாதிக்கிறேன் இந்த கடன் அடைக்கிறதுக்காகவே நான் வாழ்றேன் அப்படிங்கற மாதிரி போயிரும் அதனால பிளானிங் அப்படிங்கறது ரொம்ப முக்கியம் அகலக்கால் எப்பவுமே ஆபத்தானது சிறு சேமிப்பு கூட உங்களுக்கு ஹெல்ப் பண்ணும் அந்த சேமிப்புக்கெல்லாம் வந்து சாமிகிட்டயே வந்து நீங்க வந்து பணம் சேமிச்சு வைக்கிறது அந்த சேமிச்சு வச்ச பணத்துல வந்து ஆலய தரிசனங்களுக்கு செலவு பண்றது ஆலய வழிபாடு பண்றது இந்த மாதிரி பில்கிரிமேஜ் ட்ரிப் போறது இந்த மாதிரி தெய்வ வழிபாட்டுக்கான ட்ரிப் எல்லாம் வந்து நீங்க சேர்த்து வச்ச பணத்துல போயிட்டு வர வர செழிப்புங்கிறது அதிகரிக்கும்.
20:31
Speaker A
பொதுவாவே எல்லா ராசிக்காரங்களுக்கும் சொல்ற விஷயம் என்ன அப்படின்னா யார் கடன் வாங்கிருந்தாலும் சரி என்ன ராசிக்காரங்க கடன் வாங்கிருந்தாலும் சரி விநாயகரை போய் பிடிச்சுக்கணும் ஏன்னா அவர்தான் ஆதி கடவுள் இல்லையா விநாயகரை வழிபாடு பண்ணி அவரையே சொல்யூஷன் கொடுக்க வைக்கணும் நீங்கதான் எனக்கு சரணாகதி அப்படின்னுட்டு விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சு வழிபாடு பண்றது இந்த மாதிரி வழிபாடு முறைகள் எல்லாம் பண்ணி விநாயகரை வழிபட்டா மட்டும் இங்க கடன் அடைஞ்சிருமா அப்படிங்கறது இல்ல அவருடைய அந்த பிளஸ்சிங்ஸ் அப்படிங்கறது நீங்க எடுத்துக்கணும் அதுபோக முக்கியமா சந்திராஷ்டமம் வரக்கூடிய நாட்கள்ல உங்களுக்கு என்னைக்கு சந்திராஷ்டமம் எல்லா ராசி எல்லா நட்சத்திரக்காரங்களுக்குமே வந்து ஒரு இரண்டரை நாள் சந்திராஷ்டமம் அப்படிங்கறது இருக்கும் உங்களுடைய சந்திராஷ்டம காலங்கள்ல எதுவுமே பண்ணாம அதாவது எதுவும் பண்ணாமங்கிறது முடிவுகள் எடுக்காம கடன் வாங்கணும்ங்கிற எண்ணம் இல்லாம சந்திராஷ்டமம் அன்னைக்கு கடனை அடைக்கவும் வேணாம் கடனை கொடுக்கவும் வேணாம் வாங்க போக்கவும் வேணாம் அந்த நேரத்துல முடிவும் எடுக்க வேண்டாம் சந்திராஷ்டம காலங்கள்ல கடன் வாங்கினாலோ கடன் கொடுத்தாலோ கடன் அடைப்பது மிகவும் கடினம் ரொம்ப கஷ்டத்துல போயிடுவீங்க சந்திராஷ்டமம் தெரியாம நாங்க சந்திராஷ்டமத்துல கடன் வாங்கிட்டோம் எங்களுக்கு தெரியலையே அன்னைக்கு எங்க நட்சத்திரம் விதி அப்படித்தான் பண்ணும் அன்னைக்கு நீங்க கடன் வாங்க போற நேரத்துல சப்போஸ் ஒரு லோன் அப்ளை பண்ணிருக்கீங்க எனக்கு அன்னைக்கு போய் நான் பேங்குக்கு போகணும் அன்னைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம் போகாதீங்க அலைச்சல் ஜாஸ்தியா இருக்கும் அந்த கடனை அடைக்கவே முடியாது சரி இன்னைக்கு நான் லோன் அடைக்க போற நாள் இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம் போகாதீங்க திரும்பவும் அங்கேயே ஏதாவது ஒரு அலைச்சலோ இல்ல ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டோ இல்ல கட்ட முடியாம போற சூழ்நிலையோ இல்ல மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையோ ஏதோ ஒன்னு சந்திராஷ்டமம் நம்மளுக்கு பண்ணி விட்ரும் அதனால முடிஞ்ச அளவுக்கு சந்திராஷ்டம காலங்கள்ல அமைதியா இருந்துக்கிறது நல்லது தெய்வ வழிபாடோட இருந்துக்கிறது நல்லது எதற்காக கடன் வாங்குறோம் வீண் ஆடம்பரத்துக்கு வாங்குறோமா கால்குலேட்டிவா இருந்து சிக்கனமா இருக்க பழகிக்கிட்டீங்க அப்படினாலே யாருமே கடன் படணும் அப்படிங்கறது கிடையாது கடவுள் நம்மளுக்கு எல்லாத்துக்குமே யார் யாருக்கு எப்படி எப்படி படி அளந்து கொடுக்கணுமோ அப்படி கொடுத்துக்கிட்டே தான் இருப்பார் ஆசைப்படப்பட தான் கடனுக்குள்ள போய் நம்ம விடுவோம் ஆசை ஆபத்து அப்படின்னு சொல்லி நான் இந்த வீடியோவை முடிச்சுக்கிறேன்.
Topics:சிம்ம ராசிகடன் பிரச்சனைசூரியன் வழிபாடுசூரிய நமஸ்காரம்சரபேஸ்வரர்ஆன்மீக வழிபாடுராகு காலம்ஆடம்பர வாழ்க்கைகடன் தீர்வுஜோதிடம்

Frequently Asked Questions

சிம்ம ராசிக்காரர்கள் பொதுவாக எந்த காரணங்களுக்காக கடன் வாங்குகிறார்கள்?

சிம்ம ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் வாழ்க்கை நிலை (லைஃப் ஸ்டேட்டஸ்) மற்றும் குடும்பத்திற்காக கடன் வாங்குகிறார்கள். ஆடம்பர வாழ்க்கை வாழும் ஆசையால் பெரும் கடனில் சிக்கிக் கொள்வார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் கடனில் இருந்து எப்படி மீள்வது?

இந்த வீடியோவில் சிம்ம ராசிக்காரர்கள் கடனில் இருந்து எப்படி மீள்வது மற்றும் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வழிபாடுகள் மற்றும் நடைமுறைகள் மூலம் கடனில் இருந்து வெளிவரலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கைக்காக கடன் வாங்கியதற்கு ஒரு உதாரணம் உள்ளதா?

ஆம், ஒரு சிம்ம ராசி வாடிக்கையாளர் செழிப்பான வருமானம் இருந்தபோதிலும், லாட்ஜ்கள் கட்டி, பின்னர் பட்ஜெட்டில் இல்லாத ஒரு பொட்டிக் (boutique) கட்ட திட்டமிட்டு ஆடம்பர வாழ்க்கைக்காக கடனில் சிக்கினார்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →