மிதுனம் – அனைத்திலும் தனித்துவமாக திகழும் AB | Mithunam… — Transcript

மிதுன ராசி மற்றும் பிளட் குரூப்புகளின் தனித்துவ குணாதிசயங்கள், வாழ்க்கை பாதைகள் மற்றும் கல்யாணம் பற்றிய ஆழ்ந்த விவாதம்.

Key Takeaways

  • மிதுன ராசி உள்ளோரின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் சமூக வாழ்க்கை பண்புகள்.
  • பிளட் குரூப்புகள் வாழ்க்கை மற்றும் கல்யாணத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன.
  • ஓ, ஏ, பி பிளட் குரூப்புகளின் தனித்துவமான பண்புகள் மற்றும் அவற்றின் சமூக தாக்கங்கள்.
  • ராசி, லக்னம், நட்சத்திரம் ஆகியவை நமது வாழ்க்கை பாதையை நிர்ணயிக்கின்றன.
  • ஆஸ்திராலஜி மற்றும் ரத்தக் குழுக்களின் தொடர்பு வாழ்க்கை அமைப்பில் முக்கியம்.

Summary

  • மிதுன ராசி மற்றும் அதில் உள்ள பிளட் குரூப்புகளின் தனித்துவமான குணாதிசயங்கள் பற்றி விரிவாக விளக்கம்.
  • ஓ பிளட் குரூப்பின் சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பண்புகள் மற்றும் அதில் உள்ள ஆளுமை விவரிப்பு.
  • ஏ பிளட் குரூப்பின் லாஜிக்கல் மற்றும் டிசிப்ளின் சார்ந்த பண்புகள் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு.
  • பி பிளட் குரூப்பின் அதிக கிரியேட்டிவிட்டி மற்றும் சுயநலம் பற்றிய விவாதம்.
  • மிதுன ராசி மற்றும் பிளட் குரூப்புகளின் கல்யாணம் மற்றும் வாழ்க்கை இணக்கங்கள் பற்றிய ஆலோசனைகள்.
  • ராசி, லக்னம், நட்சத்திரம் ஆகியவை வாழ்க்கை பாதையை எப்படி பாதிக்கின்றன என்பதற்கான விளக்கம்.
  • பிளட் குரூப்புகளின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவற்றின் சமூக மற்றும் தனிப்பட்ட தாக்கங்கள்.
  • ஆஸ்திராலஜி மற்றும் ரத்தக் குழுக்களின் தொடர்பு மற்றும் அதன் வாழ்க்கை அமைப்பில் பங்கு.
  • மிதுன ராசி உள்ளோரின் சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் பற்றிய விவாதம்.
  • வீடியோவில் ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள் வழங்கும் ஆழ்ந்த ஜோதிட அறிவுரைகள்.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
இப்ப மிதுனத்துல ஓ எடுத்துக்குறோம்னு வச்சுக்கோங்க. தன்னை பயங்கரமா வெளிக்காட்டி எக்ஸ்பிரசிவா இருப்பாங்க இல்லையா? அந்த மாதிரி ஒரு ஸ்டார்னே இவங்கள சொல்லலாம். அந்த அளவுக்கு ஜாலியா இருக்கக்கூடிய ஒரு அமைப்பு.
00:10
Speaker A
ஏபி மிதுனத்துல இருக்கவங்கதான் வந்து அந்த ஒரு அட்மினிஸ்ட்ரேஷன் ஸ்கில்லும், கம்யூனிகேஷன் ஸ்கில்லும் அப்படி இருக்கும். அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங் அப்படிங்கிற ஒரு விஷயம்லாம் இருக்கு இல்லையா? அதெல்லாம் வந்து மிதுனத்துல இருக்கிற பி செய்வாங்க. மத்தவங்க அக்செப்ட் பண்றாங்க, பண்ணிக்க மாட்டேங்குறாங்க. எதுவுமே வந்து இந்த பி கண்டுகவே மாட்டாங்க.
00:27
Speaker A
இந்த ஏவும், இந்த ஏபியும் ஒரு ஆளுன்னு வச்சுக்கோங்களேன், இந்த மிதுனத்துடைய வாழ்க்கையில இன்கம் மல்டிபிளா இருக்கும். முக்கியமா ஏபி மிதுனத்தை கல்யாணம் பண்றாங்க அப்படின்னா, லக் செம்மையா ஆக்டிவேட் ஆகும்.
00:38
Speaker B
ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பவர் அஸ்ட்ராலஜர், ரைட்டர் திருமதி ஜீவிதா சுரேஷ் அவர்கள்.
00:45
Speaker A
வணக்கம்.
00:46
Speaker A
எப்படி இருக்கீங்க?
00:47
Speaker B
நல்லா இருக்கேன்.
00:47
Speaker A
நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?
00:48
Speaker B
ரொம்ப நல்லா இருக்கேன். இப்போ ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்குல்ல. அதே மாதிரி ஒவ்வொரு பிளட் குரூப்புக்கும் ஒரு குணாதிசயம் இருக்கு அப்படிங்கிற ஒரு விஷயத்தை நீங்க சொல்லிருந்தீங்கல்ல. சோ அது மாதிரி அவங்கனா இப்ப ஒரு ஓ பாசிட்டிவ் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம்னா அவங்களுடைய குணாதிசயம் எப்படி இருக்கும்? அவங்களுடைய கேரக்டர் எப்படிப்பட்டது அப்படிங்கிற மாதிரி எல்லா பிளட் குரூப்புக்கும் நீங்க கொஞ்சம் டீடைலா சொல்லுங்க. அதுக்கப்புறம் நம்ம ராசிக்குள்ள போலாம்.
01:46
Speaker A
பொதுவா நம்ம வந்து ராசி, லக்னம், நட்சத்திரம் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்ம பார்ப்போம். லக்னம் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம் அப்படின்னா நம்மளுடைய வாழ்க்கையோட திசையை லக்னம் சொல்லும்.
02:04
Speaker A
ராசி அப்படிங்கிறது அந்த திசைக்குள்ள நம்முடைய மனநிலைமை என்ன அப்படிங்கறத சொல்லும். நட்சத்திரம் என்ன அப்படிங்கிறது நம்ம வாழ்க்கையோட சூட்சுமங்களை அப்படிங்கிற ஒரு விஷயத்தை சொல்லும். இது எல்லாமே ஒன்னோட ஒன்னு கனெக்டட் அப்படிங்கிறப்போ நம்முடைய ரத்தமும் இதுல சம்பந்தப்பட்டது.
02:18
Speaker A
எந்த டிஎன்ஏக்குள்ள நம்ம பிறந்து வரோம். இந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பிளட் குரூப் நம்ம கேரி ஆன் பண்ணிட்டு வந்துட்டு இருக்கணும்னு ஒரு விஷயம் இருக்கு. அப்போ இந்த பிளட்ங்கிற விஷயம் என்ன பண்ணும் அப்படின்னா இந்த ராசிகளுக்குன்னு சில தத்துவங்கள் அப்படிங்கிறது ஒன்னு உண்டு இல்லையா? இந்த வாழ்க்கை அமைப்புன்னு ஒன்னு இருக்கு. அப்போ ஒரு பர்டிகுலர் பிளட் குரூப் இந்த ஒரு ராசி அமைப்பினருக்கு வரப்போ இது எப்படி ரியாக்ட் பண்ணப்போகுது, ரெஸ்பான்ட் பண்ணப்போகுது, இது எப்படி ரியாக்ட் பண்ணப்போகுது அப்படிங்கறதுதான் நம்ம பார்க்கப்போறோம்.
02:32
Speaker A
இப்ப ஓ அப்படின்னு எடுத்துக்குறோம் அப்படின்னா, ஓக்கு வந்து ஒரு வாரியர் குணம் அப்படிங்கிறது ஒன்னு உண்டு. என்ன எதுன்னே கேட்காம எந்த எக்ஸ்பெக்டேஷனுமே இல்லாம ஹெல்ப் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கிறது ஓக்கு இருக்கும். எப்படி இருந்தாலும் அதை முடிச்சிருவாங்க அப்படிங்கிறது ஒன்னு ஒரு ஓக்கு அந்த கேரக்டர் உண்டு.
03:28
Speaker A
இப்ப ஏ எடுத்துக்குறோம் அப்படின்னு வச்சுக்கோங்களேன், ஏ கிட்ட வந்து ஒரு டிசிப்ளின் அப்படிங்கிற ஒரு விஷயத்தை வந்து ஏ ஃபாலோ பண்ணும். ஒரு ரெஸ்பான்சிபிலிட்டினு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாங்க ஏ அப்படின்னா முடிக்காம விடமாட்டாங்க அப்படிங்கறதுனால அந்த ஏவ வந்து கொஞ்சம் ஃபர்ஸ்ட் ஆபீசர் லெவல் அப்படிங்கிற மாதிரி வச்சாங்க.
03:45
Speaker A
நெக்ஸ்ட் பார்க்குறப்போ பி. பிக்கு ஒரு குணாதிசயம் என்னன்னா கிரியேட்டிவிட்டி அதிகம், சுயநலமும் அதிகம். ஃபர்ஸ்ட் தனக்கு என்ன அப்படிங்கிற ஒரு விஷயத்தை இந்த பி பார்க்கும்.
03:53
Speaker A
இந்த ஏ பி தான் வந்து உள்ளதுலயே வந்து ஸ்மார்ட்டான ஒரு பிளட் குரூப் அப்படின்னு சொல்லலாம். ஏன் அப்படின்னா இவங்க பயங்கரமான ஒரு ஸ்ட்ராட்டஜிஸ்ட். செம்மையா பிளான் போடக்கூடியவங்க. ஈஸியா போரும் இவங்களுக்கு அடிச்சிரும். அந்த ஏவோட கேரக்டரும், பியோட கேரக்டரும் சேர்ந்ததுதான் இந்த ஏபி அப்படிங்கிறது. ஏபி எல்லாம் எப்படி இருந்தாங்கன்னா ரொம்ப இந்த ஹை லெவல் இந்த கிட்டத்தட்ட நம்ம சகுனி ரேஞ்சுக்கு சொல்லலாம். அந்த அளவுக்கு பிளான் போடக்கூடியவங்க. பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் ரெண்டு விஷயத்துக்குமே வந்து இந்த ஏபி அப்படிங்கிறவங்க யூஸ் ஆனாங்க.
05:02
Speaker A
அந்த டைம்ல எல்லாம் வந்து ஃபர்ஸ்ட் ஜாப்பனீஸ் தான் கண்டுபிடிச்சாங்க அப்படின்னுலாம் சொன்னது உண்டு. ஆனா கண்டுபிடிச்சது யாருன்னா நம்மளுடைய சித்தர்கள். போகர் வந்து நிறைய உலகம் சுற்றினார். ஜப்பான் போனார், சைனா போனார் இப்படி எல்லாம் போனப்போ அவருடைய ஓலைச்சுவடுகள்ல இருந்த ஒரு விஷயம்தான் இது. ரத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம். வாதம், பித்தம் இதெல்லாம் சேர்த்து வச்சு இந்த இந்த ரத்த அமைப்புல இருக்கவங்க இப்படித்தான் இருப்பாங்க அப்படின்ன உடனே அந்த டைம்ல வாருக்கு சூஸ் பண்ணாங்க இல்லையா? வாருக்கு சூஸ் பண்ணப்போ இந்த கேட்டகிரி பேசிஸ்லதான் சூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. இந்த ராசி எல்லா அமைப்பையும் தாண்டி ஒரு பிளட் குரூப்பை வச்சே ஒரு மனிதருடைய கேரக்டர் இதுதான் ரொம்ப ஈஸியா வந்து நம்மளால கண்டுபிடிக்க முடியும்.
05:37
Speaker B
இப்ப நான் அதே மாதிரி இப்ப ஒவ்வொரு பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் இதுதான் இப்படித்தான் இருக்கப்போகுது அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டீங்க. இப்ப இந்த ராசியில ஒவ்வொரு ராசிக்கும் அதுல இருக்கிற பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் எப்படி இருக்கும்? இந்த ராசியில இருக்கிற பிளட் குரூப்போட வேற எந்த ராசியோட ராசியில இருக்கிற பிளட் குரூப் வந்து சேர்ந்துச்சுன்னா அவங்களுக்கு நல்லா இருக்கும் வாழ்க்கை. அந்த திருமணம் வந்து நடக்குறதுக்கு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த பிளட் குரூப்புக்கு நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லுங்க.
05:58
Speaker B
மிதுனத்துல இருக்க பிளட் குரூப்போட குணாதிசயங்கள் பத்தி சொல்லணும்.
06:41
Speaker A
இப்ப மிதுனத்துல ஓ எடுத்துக்குறோம்னு வச்சுக்கோங்க. இவங்கதான் வந்து மீடியா துறையாகட்டும், அவங்க என்ன ப்ரொபஷன்ல இருந்தாலும் சரி,
06:50
Speaker A
தன்னை பயங்கரமா வெளிக்காட்டி எக்ஸ்பிரசிவா இருப்பாங்க இல்லையா? அந்த மாதிரி ஒரு ஸ்டார்னே இவங்கள சொல்லலாம். அந்த அளவுக்கு ஜாலியா இருக்கக்கூடிய ஒரு அமைப்பு. இவங்க எந்த குரூப்ஸ்ல இருந்தாலுமே ரொம்ப ரொம்ப ஹாப்பியாவே இருப்பாங்க அப்படிங்கிறதுதான் இந்த ஓ. ஒரு குரூப்பையே வழிநடத்தக்கூடியவங்க அப்படின்னு சொல்லலாம். இந்த சோசியல் ஸ்டார்னு சொல்றாங்கல்ல. சோசியல் வைஸ் பழகுறதுக்கு மிதுனம் ஓ ஓகே. இதே இது பர்சனல் லைஃப்னு வரப்போ ஓ கொஞ்சம் பேக் அடிக்கும். ஆனா சோசியல் லைஃப் இவங்கள மாதிரி ஒரு எனர்ஜெட்டிக்கா இருக்கவே முடியாது அப்படிங்கிறதுதான்.
07:16
Speaker A
ஏ அப்படின்னு போயிட்டோம் அப்படின்னா, இந்த ஏ கிட்டத்தட்ட எல்லாமே கொஞ்சம் லாஜிக்கலாவே யோசிச்சுட்டு இருக்கக்கூடிய ஒரு அமைப்பு. இவங்க வந்து திங்கிங்கே ரொம்ப கிளியரா இருக்கும்.
07:31
Speaker A
இந்த கிளியர் திங்கிங் சம்டைம்ஸ் எப்படி இருக்கும்னா எந்த விஷயத்தை நம்பிட்டாங்களோ, முழுசா நம்பிடுவாங்க. வேற எதை நீங்க உண்மையா கொண்டு வந்து கொடுத்தாலுமே அவங்க அதை ஏத்துக்கவே ஃபர்ஸ்ட் மாட்டாங்க. ஏன்னா இவங்க ஒரு விஷயத்தை கிளியரா திங்க் பண்ணிட்டா, அவங்க திங்கிங் மேல அவங்களுக்கு அவ்வளவு ஒரு நம்பிக்கை அப்படிங்கிறது ஒன்னு இருக்கும். ஆக்சுவலா எதை நம்புறாங்களோ அது உண்மையான ஒரு நம்பிக்கைதான். ஆனா இன்னொரு விஷயமும் ஒரு நம்பிக்கைன்னு ஒன்னு இருக்குல்ல அதுக்குள்ள போகமாட்டாங்க.
08:34
Speaker A
ஏத்துக்க மாட்டாங்க. இப்ப இந்த டீச்சிங் ப்ரொபஷன்ல எல்லாம் வந்து இந்த கேட்டகிரில இருக்கவங்க இருப்பாங்க. ஏல இருக்கவங்க அவங்க ஒரு ஒரு டீச்சிங் ஸ்டைல் வச்சிருக்காங்கன்னா அது அதுதான் மெத்தட்.
08:46
Speaker A
இன்னொரு விஷயம் அப்படிங்கறத அவங்க அக்செப்ட் பண்ண மாட்டாங்க. இவங்க சூசி. பிரண்ட்ஸ் சூஸ் பண்றதாகட்டும். இவங்களுக்கு தகுந்த மாதிரியான ஒரு குரூப் செட் பண்றது. ஹெல்ப்பிங் டெண்டன்சி எல்லாம் இவங்களுக்கு உண்டு.
09:07
Speaker A
ஆனா இவங்களுடைய அந்த நாம்ஸ், இவங்கன்னு சில ஒரு ரூல் செட் பண்றாங்க இல்லையா? இந்த ரூல்ஸ் இவங்களுக்கே இருக்கிற மாதிரிதான் இருக்கும். ஏன்னா ஒரு விஷயத்தை அவங்க நம்பி அலசி ஆராய்ந்து புரிஞ்சு அந்த நம்பிக்கைக்குள்ள போறதுங்கிறது அவங்களுக்கு டீப் இன் தி சென்ஸ் இது மனசார நடக்கக்கூடிய ஒரு விஷயமாவே அந்த ஏல இருக்கவங்களுக்கு இருக்கும். இதே இது பில இருக்காங்க அப்படின்னா, இவங்களுக்கு வந்து யார் சொல்றதையுமே கேட்காத ஒரு இவங்க வந்து ஒரு கற்பனை உலகத்திலேயே இருக்கக்கூடியவங்கன்னு வச்சுக்கலாம். கிரியேட்டிவிட்டிங்கிறது அளவுக்கு அதிகமா இருக்கும்.
10:04
Speaker A
அழகு அழகான ஒரு விஷயங்கள் பண்றது. டிரஸ்ஸிங்கே பார்த்தீங்கன்னா இவங்களால மட்டும்தான் அப்படி டிரஸ் பண்ண முடியும். அந்த டிசைன்ஸ் இவங்களுக்கு மட்டுமே அந்த யூனிக்கா செட் ஆகும். ஆனா அவங்களுக்கு அது செட் ஆகும்.
10:17
Speaker A
இந்த ஃபேஷன் டிசைனிங்லாம் இருக்காங்க இல்லையா? அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங் அப்படிங்கிற ஒரு விஷயம்லாம் இருக்கு இல்லையா? அதெல்லாம் வந்து மிதுனத்துல இருக்கிற பி செய்வாங்க. மத்தவங்க அக்செப்ட் பண்றாங்க, பண்ணிக்க மாட்டேங்குறாங்க. எதுவுமே வந்து இந்த பி கண்டுகவே மாட்டாங்க. எனக்கு பிடிச்சிருக்கு உனக்கு பிடிச்சா இருக்கட்டும், பிடிக்கலைன்னா போ அப்படிங்கிற மாதிரி கிட்டத்தட்ட டோன்ட் கேர் அமைப்பு அப்படின்னே வந்து இந்த பி சொல்லலாம்.
10:40
Speaker A
இந்த ஏபி இருக்கு இல்லையா? ஏபி மிதுனத்துல இருக்கவங்கதான் வந்து அந்த ஒரு அட்மினிஸ்ட்ரேஷன் ஸ்கில்லும், கம்யூனிகேஷன் ஸ்கில்லும் அப்படி இருக்கும். இவங்க பேசினாங்க அப்படின்னா உட்கார வச்சிருவாங்க. இந்த ஹியூமரஸா பேசுறது, இந்த டாக் ஷோஸ்லாம் போறாங்க இல்லையா? அந்த அளவுக்கு ஒரு விவரமா, ரொம்ப அழகா பேசியே ஒரு மயக்கக்கூடிய ஒரு அமைப்பு இது வந்து ஏபிக்கு உண்டு.
11:42
Speaker A
இவங்க இந்த மூணு பிளட் குரூப்புக்குமே சம்பந்தமே இல்லாதவங்க அப்படிங்கிறதுதான் இந்த மிதுனத்துல இருக்கவங்க. ஏன்னா மிதுனத்துல இருக்கவங்க வந்து கொஞ்சம் அதிகமா பேசுவாங்க, கொஞ்சம் டாக்கட்டிவ் அப்படிங்கிற விஷயம்லாம் இருக்குல்ல. இந்த ஏபி பிளட் குரூப் வந்து டோட்டலி டிஃபரண்ட். சைலன்ட்டா இருக்கிறது, அப்சர்வ் பண்றது, தன்னை ரொம்ப பார்த்து கேரி ஆன் பண்ணிக்கிறது, டிக்னிட்டியோட இருக்கிறது அந்த மாதிரி வந்து இந்த ஏபில இருக்கவங்க வந்து மிதுனத்துல இருக்கவங்க இருப்பாங்க.
12:09
Speaker A
இவங்களுக்கு வந்து கல்யாணம்னு ஒன்னு வருது அப்படின்னா, ஏபியும் ஏவும் பெஸ்ட். ஏன்னா இவங்களுக்கு இப்படிதான் ஒரு ஆள் தேவை. ஏன்னா இது மிதுனம், புதன் சம்பந்தப்பட்டது. இது காற்றையும் சம்பந்தப்பட்டது அப்படிங்கிறப்போ இவங்க எமோஷனலி கனெக்ட் ஆக மாட்டாங்க. இவங்களுக்கு எல்லாமே வந்து ஒரு லாஜிக்கல் ஐடியாஸ் அப்படிங்கிறது இவங்களுக்கு தேவைப்படுது. ஒரு இன்ஸ்ட்ரக்ஷன்லயே இருந்துட்டாங்கன்னா கரெக்டா இருக்கும். எதையும் அந்த வெஞ்சன்ஸை மனசுல வச்சுட்டு அந்த எமோஷன்ல கனெக்ட் ஆகிட்டு அதெல்லாம் அது எல்லாமே இவங்களுக்கு பிளான் பண்ணி பண்றது பிடிக்கும். இப்ப ஒரு கேண்டில் லைட் டின்னர் போறோம் அப்படின்னா, அந்த கேண்டில் லைட் டின்னர் பிளான்டாதான் இருக்கும். சர்ப்ரைஸ்ங்கிறதுக்கெல்லாம் இவங்க அவங்க அதெல்லாம் பெருசா எக்சைட்லாம் ஆக மாட்டாங்க. சர்ப்ரைஸ் எனக்கு இப்படிதான் வேணும்னே கேப்பாங்க.
13:31
Speaker B
ஓ சர்ப்ரைஸ இவங்க கேப்பாங்க.
13:33
Speaker A
ஆமா. இப்ப இந்த ஏபியும் ஏவும் இதை கரெக்டா பண்ணும். உனக்கு இந்த மாதிரி எல்லாம் நான் சர்ப்ரைஸ் கொடுக்கப்போறேன். இதை பிளான் பண்ணி அந்த சர்ப்ரைஸை என்ஜாய் பண்ணக்கூடியவங்களா இருப்பாங்க. எங்கேயும் சொதப்பிடக்கூடாது.
13:42
Speaker A
இந்த ஏவும் அப்படித்தான். இந்த மிதுனத்துக்கு வந்து கொஞ்சம் செட் ஆகும். ஏன்னா மிதுனம் கொஞ்சம் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுக்கக்கூடிய ஒரு இடத்திலேயேதான் இருப்பாங்க. அப்போ இந்த ஏவும் வந்து இன்ஸ்ட்ரக்ஷன்ஸை ஃபாலோ பண்ணக்கூடியவங்களா இருப்பாங்க. அதை அந்த 9 டு 5 ஜாப்லாம் பண்ணிட்டு கடமைக்குன்னு பண்ணிட்டு வராங்களே. இந்த மாதிரி ஆட்கள்லாம் வந்து மிதுனத்துக்கு வந்து செட் ஆவாங்க. ஏன்னா கடமை தவறுறாங்க அவங்களுடைய லைஃப் பார்ட்னர் அப்படின்னா மிதுனத்துக்கு வந்து செட் ஆகாது.
14:05
Speaker A
சீக்கிரம் மிதுனம் வந்து டிஸ்டர்ப் ஆயிடுவாங்க. சோ இந்த ஏபி, ஏவும் வந்துச்சுன்னா கரெக்டா ஒரு ஒரு லைன் போட்டு வாழ்ற மாதிரி இருக்கப்போ கரெக்டா இருக்கும். இந்த மிதுனத்து கூட இந்த ஏபி ஆகட்டும், ஏ ஆகட்டும் ஒரு நெர்வஸ்னஸ், ஒரு ஸ்ட்ரெஸ்ங்கிறது இருந்துகிட்டே இருக்கும். ஏன் அப்படின்னா கரெக்டா பண்ணனும், இவங்களுக்கு இம்ப்ரஸ் பண்ணனும், கரெக்டா பண்ணனும். ஏன்னா பட்டுன்னு பேசிடுவாங்க மிதுனம்.
15:04
Speaker B
பார்ட்னர் வந்து பதட்டத்துலயே வச்சிருப்பாங்க.
15:07
Speaker A
பார்ட்னர் பதட்டமாவேதான் இருப்பாங்க.
15:10
Speaker A
இந்த ஏ ஏபி ஆகட்டும், ஏ ஆகட்டும் இது ரெண்டுமே அந்த பெர்ஃபெக்ஷனுக்காக ஒரு போராடு போராடும் இந்த லைஃப் பார்ட்னரை சாட்டிஸ்ஃபை பண்றதுக்கு. சோ அந்த அவசர அவசரமா பண்றது, பெர்ஃபெக்ஷன் அந்த ஸ்ட்ரெஸ்ஸோடயே இருக்கிற மாதிரியேதான் இருக்கும்.
15:20
Speaker A
இந்த ஏவும் இந்த ஏபியும் ஒரு ஆளுன்னு வச்சுக்கோங்களேன், இந்த மிதுனத்துடைய வாழ்க்கையில இன்கம் மல்டிபிளா இருக்கும். அந்த அமைப்பு எல்லாம் இவங்களுக்கு இருக்கும். முக்கியமா ஏபி ஏபில இருக்கவங்கள மிதுனம் கல்யாணம் பண்ணுனாங்க அப்படின்னா, இதுதான் சூட்சுமமான ஒரு விஷயமே. பிசினஸ் டெவலப் பண்ணி கொடுக்கிறது, சேர்ந்து பிசினஸ் பண்றது, அந்த குடும்பத்தையே குரோ பண்ணி கொண்டு போறது இது எல்லாமே வந்து ஏபில இருக்கவங்க பண்ணுவாங்க.
15:49
Speaker A
ஓ ஆகவே ஆகாது.
15:50
Speaker B
ஓ ஆகாது அதே மாதிரி பியும் ஆகாது அப்படித்தானே?
15:52
Speaker A
ஓ மட்டும் ஆகாது.
15:54
Speaker B
ஓ மட்டும் ஆகாது.
15:54
Speaker A
பி வந்து கன்சிடரேஷனே கிடையாது. இவங்களுக்கு பி வர்றதுனால பெருசா ஒன்னும் கிடையாது. பாதிப்புன்னு கிடையாது. ஆமா. ஆகவே ஆகாதுங்கிறது ஓ. செம்ம ஈகோ கிளாஷ் ஆகி இவங்கதான் டிவோர்ஸே பண்ணுவாங்க.
16:41
Speaker A
இந்த டிவோர்ஸ்ல போய் ஒரு மிதுனத்துகிட்ட போய் ஒருத்தங்க நிக்கிறாங்க அப்படின்னா அது கூட கண்டிப்பா ஓ இருக்கும். அந்த மிதுனம் பண்றது இந்த ஓவால தாங்கவே முடியாது அப்படிங்கிறப்போ ஏன்னா ஓ வந்து கொஞ்சம் எமோஷனல். எமோஷன்ஸ் எதிர்பார்க்கிறப்போ மிதுனத்தினால அந்த எமோஷன்ஸை கொடுக்க முடியாது அப்படிங்கிறப்போ இந்த இடத்துல ஈகோ கிளாஷ்ங்கிறது வந்துரும்.
17:02
Speaker A
ஏன்னா ஜெனரலாவே மிதுனம் வந்து கொஞ்சம் டியூவல் மைண்ட் இருக்கக்கூடிய ஒரு அமைப்பு. இதை வந்து ஓவால தாங்கிக்க முடியாது. மிதுனத்துல இருக்கவங்க வந்து பேச்சிலேயே அந்த கம்யூனிகேஷன்லயே மாஸ்டர் அப்படிங்கிற மாதிரி இருப்பாங்க. ஓ வந்து ஆல்ரெடி வந்து போராளினு நான் சொல்லியாச்சு. ஒரு வாரியர் மைண்ட்செட் இருக்கக்கூடியவங்க. அப்படி இருக்கிற அந்த வாரியர் மைண்ட்செட் தனக்கு யாராவது இப்படி ஒரு கமெண்ட் கொடுத்தா அது ஒத்துக்காது.
17:25
Speaker A
ஏன்னா இப்ப நான் அந்த சிப்பாயினே இருந்தா கூட அவன் அந்த ஓல இருக்கவன் அவன் அத்தாரிட்டில இருந்தாதான் அவன் அப்படி இருப்பான். அவன் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கிற இடத்துல இருப்பான். சோ இந்த இன்ஸ்ட்ரக்ஷனை இந்த ஓவால தாங்கிக்க முடியாது மிதுனத்துகிட்ட இருக்கப்போ.
17:37
Speaker A
சோ இவங்களுக்கு வந்து ஏபி த பெஸ்ட் மிதுனத்துக்கு.
18:21
Speaker B
ஏபி பெஸ்ட் வந்து ஓ வந்து நியூட்ரலா போகும்.
18:24
Speaker A
ஓ நியூட்ரலா போகும்.
18:25
Speaker B
சாரி பி வந்து நியூட்ரலா போகும்.
18:27
Speaker A
பி சும்மா இருக்கும் நியூட்ரல். இருந்துக்கலாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. பாதிப்பு எல்லாம் ஒன்னும் கிடையாது அப்படிங்கிறதுதான்.
18:31
Speaker B
இதுல வந்து பிளஸ்ஸா இருந்தாலும் மைனஸா இருந்தாலும் சேம் கேரக்டர்ஸ் தான்.
18:34
Speaker A
ஆமா. ஏன்னா பிக்கு வந்து ஒரு கிரியேட்டிவிட்டி உண்டு. அதோட உலகத்துல அது இருந்துக்கும். பெருசா போய் இங்க நோண்டாது இந்த பி. அது வந்து ஒரு இன்ஸ்ட்ரக்ஷன் மிதுனத்துல இருக்கவங்க ஒரு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்துட்டு இருப்பாங்க. ஆல்ரெடி இந்த பி வந்து ஒரு கற்பனை உலகத்துலதான் இருக்கும். சோ அவங்க குத்திட்டதோ எதுவுமே வந்து இந்த பியை பாதிக்கப்போறது கிடையாது. அவங்க ஸ்பேஸ்க்குள்ள இந்த பியும் போகாது அப்படிங்கிறதுதான்.
18:54
Speaker B
கண்டிப்பா. அதே மாதிரி இப்ப மேரேஜ்க்கு இது செட் ஆகாது ஓகே. இப்ப வந்து ஒரு பிரெண்ட்ஷிப் மெயின்டெயின் பண்றாங்க இல்ல ஒரு பிசினஸ் பார்ட்னரா இருக்காங்க. அவங்களுக்கும் இந்த பிளட் குரூப் வந்து செட் ஆகும்.
19:02
Speaker A
ஏபி பெஸ்ட்டா இருக்கும். ஒரு பிசினஸ் ஒரு மிதுனம் ஒரு ஏபில இருக்கவங்கள வந்து பிசினஸ் பார்ட்னரா எடுத்துக்குறாங்க அப்படின்னா இந்த ஏபி பயங்கரமா பிளானிங் போடும். பெஸ்ட்டா கொண்டு போயிருவாங்க.
19:13
Speaker A
அதாவது ஆப்ஷன்ஸ் அவ்வளவு வச்சிருப்பாங்க. அது எல்லாமே வந்து ரியலிஸ்டிக்கான ஆப்ஷன்ஸா இருக்கும். மல்டிபிள் பிசினஸ், மல்டிவர்ஸ் பிசினஸ் பண்ணக்கூடிய அமைப்பு மிதுனம் ஏபிக்குள்ள போயிட்டாங்கன்னா நல்லா இருக்கும்.
20:03
Speaker B
மிதுனத்துக்கு வந்து எந்த பிளட் குரூப் வந்து செட் ஆகும். அவங்களோட குணாதிசயங்கள் எப்படி இருக்கும் அப்படிங்கறதெல்லாம் சொல்லிருக்கீங்க. சோ இந்த மிதுன ராசியை பார்க்கிறவங்க அவங்களோட பிளட் குரூப் என்னங்கறத வந்து நம்ம கமெண்ட்ஸ்ல சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்.
20:15
Speaker B
நன்றி.
20:16
Speaker A
நன்றி.
Topics:மிதுனம்பிளட் குரூப்புகள்ஆஸ்திராலஜிராசிலக்னம்நட்சத்திரம்கல்யாணம்ஜோதிடம்சமூக பண்புகள்மனநிலை

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →