மிதுனம் – உங்களை வந்து சேரும் ஒரு அதிர்ஷ்டம் | Mithunam… — Transcript

மிதுன ராசிக்காரர்களுக்கான கடன் பிரச்சனைகள் மற்றும் அதிலிருந்து மீட்கும் வழிகள், தெய்வ வழிபாடு மற்றும் ஜோதிட ஆலோசனைகள்.

Key Takeaways

  • மிதுன ராசிக்காரர்கள் கடன் பிரச்சனைகளை தவிர்க்க தெய்வ வழிபாடு மற்றும் ஜோதிட ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.
  • கடன் கொடுத்தவர்களிடம் கடனை மீட்க முயற்சி செய்வது முக்கியம்.
  • சந்திரன், விநாயகர் மற்றும் சிவன் வழிபாடு கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
  • கடன் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும், தவறான கூட்டாளிகளைத் தேர்வு செய்யக்கூடாது.
  • சித்தர்கள் வழிபாடு மற்றும் சரியான காலங்களில் கடன் கொடுப்பது நல்லது.

Summary

  • மிதுன ராசிக்காரர்கள் கடன் வாங்குவதில் சிக்கல்களை சந்திக்கிறார்கள், தவறான கூட்டாளிகள் மற்றும் சேர்க்கைகள் காரணமாக கடனாளி ஆகிறார்கள்.
  • கடன் வாங்கும் பழக்கம் மற்றும் அதிலிருந்து மீண்டல் பற்றிய அனுபவங்கள் பகிரப்பட்டுள்ளன.
  • விநாயகர், சந்திரன் மற்றும் சிவன் வழிபாடு மூலம் கடன் பிரச்சனைகளை சமாளிப்பது குறித்து விளக்கம்.
  • மிதுன ராசிக்காரர்களின் மனநிலை மற்றும் குணாதிசயங்கள் கடன் பிரச்சனைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • கடன் கொடுக்கும்போது சரியான நேரம் மற்றும் முறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம்.
  • புதன்கிழமை சந்திரனுக்கு பாலாபிஷேகம் மற்றும் பால் சம்பந்தப்பட்ட தானம் கடன் தீர்வுக்கு உதவும்.
  • கால பைரவருக்கு விளக்கு வைத்து வழிபாடு செய்வது விதி திருத்தத்திற்கு உதவும்.
  • கடன் கொடுத்தவர்களிடம் கடனை மீட்க முயற்சிப்பது கடன் தீர்வுக்கு முக்கியம்.
  • மிதுன ராசிக்காரர்கள் சித்தர்களை வழிபாடு செய்வது நல்லது என்று பரிந்துரை.
  • வழிபாடு மற்றும் ஜோதிட ஆலோசனைகள் மூலம் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
கையில காசு பத்திரமா வச்சுக்க தெரியாது மிதுன ராசிக்காரங்களுக்கு மத்தவங்களுக்கு கொடுத்துக் கொடுத்தே கடனாளி ஆயிடுவாங்க.
00:10
Speaker A
சந்திராஷ்டம் அன்னைக்கு கடனை அடைக்கவும் வேணாம் கடனை கொடுக்கவும் வேணாம் வாங்க போகவும் வேண்டாம்.
00:17
Speaker A
தவறான சேர்க்கைகள் தவறான கூட்டாளிகள் தவறான பார்ட்னர்ஷிப் அப்படின்னு போறப்ப மிதுன ராசி மாட்டிக்குவாங்க.
00:24
Speaker A
ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.
00:28
Speaker A
இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்ன அப்படின்னா வாழ்க்கையில யாருக்கு தான் கடன் இல்லை.
00:32
Speaker A
இல்லையா எல்லாத்துக்கும் பணம் சம்பாதிக்கணும் அட் தி சேம் டைம் எப்படி சம்பாதிக்கிறது.
00:38
Speaker A
இப்ப இருக்க காலகட்டங்கள்ல கடன் வாங்காம எதுவுமே எங்களால பண்ண முடியலையே அப்படிங்கிற கேள்வி அம்பானிக்கு கூட உண்டு எல்லாத்துக்குமே உண்டு இந்த கேள்வி.
00:45
Speaker A
அப்படி இருக்கப்போ இந்த 12 ராசிகளுக்கும் அவங்க கடந்து வரக்கூடிய அந்த வாழ்க்கை பாதைன்னு வரப்போ அட் எனி காஸ்ட் ஏதோ ஒரு சிச்சுவேஷன்ல கடன் வாங்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது வந்துரும்.
00:55
Speaker A
அப்படி பார்க்கிறப்போ நான் ஜோதிடம் பார்த்ததுல இருந்து என்னுடைய அனுபவத்துல ஒவ்வொரு ராசிக்காரங்க என்னென்ன மாதிரியான ஒரு விஷயத்துக்கு காரணமா அவங்க வந்து கடன் வாங்கினாங்க.
01:05
Speaker A
எப்படி அவங்க அதிலிருந்து மீண்டாங்க அப்படிங்கறத வச்சு நான் இந்த 12 ராசிகளுக்கு எப்படி அப்படிங்கறத உங்களுக்கு சொல்றேன்.
01:10
Speaker A
என்ன தெய்வத்தை வழிபாடு பண்ணனும் எப்படி அந்த கடன் கடன்ங்கிற விஷயத்திலிருந்து எப்படி வெளிய வரணும் அப்படிங்கறத பத்தி நம்ம இங்க பார்ப்போம்.
01:59
Speaker A
மிதுன ராசிக்காரங்களுக்கு ஜெனரலாவே எப்படின்னா அவ்வளவு சீக்கிரம் யார் சொல்றதையும் மிதுன ராசிக்காரங்க வந்து கேட்கவே மாட்டாங்க அகலக்கால் வைக்கிறது அப்படின்னா மிதுன ராசிக்காரங்களுக்கு வந்து.
02:12
Speaker A
அது ஒரு கைவந்த கலை அப்படின்னே சொல்லலாம் அதாவது அப்புறம் பார்த்துக்கலாம் அதே மாதிரி இவங்க கையால நிறைய பேத்துக்கு கொடுத்துருவாங்க மிதுனத்துக்கு அந்த அமைப்பும் உண்டு கையில காசு பத்திரமா வச்சுக்க தெரியாது மிதுன ராசிக்காரங்களுக்கு மத்தவங்களுக்கு கொடுத்துக் கொடுத்தே கடனாளி ஆயிடுவாங்க பெரும்பாலான மிதுன ராசிக்காரங்க.
02:26
Speaker A
அதோட தவறான சேர்க்கைகள் தவறான கூட்டாளிகள் தவறான பார்ட்னர்ஷிப் அப்படின்னு போறப்ப மிதுன ராசி மாட்டிக்குவாங்க.
02:33
Speaker A
மிதுன ராசி வந்து ஒரு ஒரு பார்ட்னர் அப்படின்னு வரப்போ டோட்டலா நம்பிடுறது.
02:40
Speaker A
அதுக்கப்புறம் அதனுடைய இன்டென்ஸ் என்னன்னு தெரியாம அதாவது ஒரு பிசினஸ் என்னன்னு தெரியாம உள்ள போறப்ப கடன் பற்றுவாங்க.
02:48
Speaker A
அந்த கடனுக்கு ஜவாப் ஆவாங்க.
02:51
Speaker A
இவங்கள்ட்ட ரொம்ப ஈஸியா கடன் வாங்கிட முடியும்.
02:54
Speaker A
மிதுன ராசிக்காரங்க கிட்ட.
02:56
Speaker A
எப்படி கடன் வாங்க முடியும்னா கொஞ்சம் பாவமா பேசுறாங்கன்னு வச்சுக்கோங்களேன் மிதுன ராசிக்காரங்க கிட்ட.
03:02
Speaker A
அது ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும் இவங்க ரெண்டு பேத்துக்குமே இந்த குணம்ங்கிறது உண்டு.
03:05
Speaker A
அதாவது எனக்கு தெரிந்த ஒரு ஆண் ஒரு கிளைன்ட் அவரு அவர் வந்து நல்லா செழிப்பாதான் இருந்தாருன்னு வச்சுக்கோங்களேன் நல்லா செழிப்பு சொந்த வீடு சொந்த தொழில் எல்லாமே இருந்தாலும் கையில பணம் மட்டும் அவர்கிட்ட தங்கவே இல்லை.
03:20
Speaker A
அவர் வந்து என்ன சொல்றாரு பயங்கர கஷ்டத்துல இருக்கிறேன் நான் எப்படி நீங்க இவ்வளவு கஷ்டத்துல இருக்க முடியும் எல்லாமே சரியா தானே இருக்கு உங்களோடதுங்கிறப்போ.
03:25
Speaker A
இல்ல இவன் கேட்டான் அவன் கேட்டான் நான் எல்லாத்துக்கும் எடுத்து கொடுத்துட்டேன்.
03:28
Speaker A
கேட்டுக்கணும் எல்லாத்துக்கும் அவர் எடுத்து கொடுத்துட்டாராம்.
03:31
Speaker A
எப்படி கொடுத்திருக்கிறாரு கடனா கொடுக்கல.
03:33
Speaker A
எப்ப திருப்பி கொடுப்பேன்னு கேட்கல.
03:35
Speaker A
அவங்க எல்லாம் கொடுக்கிறேன் கொடுக்கிறேன்னு சொல்லி எல்லாம் வாங்கிட்டு இப்ப இவருடைய சர்வவைவலுக்கு போய் யார்ட்டயாவது கடன் கேட்கிறார்.
03:40
Speaker A
கொடுத்த கடனை திருப்பி கேட்க முடியல.
03:43
Speaker A
கொடுத்த கடனை தலையில நின்னும் பார்த்துட்டாரு அவருக்கு கடன் கிடைக்க மாட்டேங்குது.
03:46
Speaker A
அவமானமே அவருக்கு மிஞ்சது.
03:49
Speaker A
இவர் போய் வெளியில கடன் கேட்கிறப்போ இவருக்கு கடன் கிடைக்க மாட்டேங்குது.
03:54
Speaker A
எனக்கு நான் எப்படி கடன் வாங்குறது அப்படிங்கறதுதான் அவருடைய கேள்வியா இருக்குது.
03:57
Speaker A
இதே இது ஒரு மிதுன ராசி ஒரு பெண்ணும் இதே இதே வேலையை தான் பார்த்தாங்க.
04:00
Speaker A
அவங்களும் என்னோட கிளைன்ட் தான்.
04:01
Speaker A
அவங்களும் என்ன பண்ணாங்க அப்படின்னா ஹாஸ்பிடல் செலவு இந்த கஷ்டம் அந்த கஷ்டம் என் குழந்தை படிக்கல நீ கொடுத்தா என்னன்ட்டு இவங்க என்ன பண்ணிருக்காங்கன்னா இவங்கள ஜுவல்லரிஸ் முதற்கொண்டு எடுத்து கொடுத்திருக்காங்க.
04:10
Speaker A
கொடுத்துட்டு.
04:11
Speaker A
ரிலேட்டிவ்ஸ் தான் ரிலேட்டிவ்ஸ்க்கும் கொடுத்திருக்காங்க.
04:14
Speaker A
பிரண்ட்ஸ்க்கும் எடுத்து கொடுத்திருக்காங்க.
04:15
Speaker A
இதெல்லாம் மீட்கணும் இல்லையா.
04:16
Speaker A
இந்த மீட்கிறதுக்கு கடன் வாங்குறதுக்கு கேட்கிறாங்க.
04:19
Speaker A
நான் வந்து எப்படி கடன் அடைக்கிறது அதாவது வாங்கி இந்த நகையை நான் மீட்கணும் அப்படின்னு.
04:23
Speaker A
அப்ப இவங்க ரெண்டு பேத்துக்கும் இருக்கக்கூடிய ஒரு விஷயம் என்னன்னு கவனிச்சீங்களா.
04:27
Speaker A
எங்க இவங்க கடன் பட்டாங்க.
04:28
Speaker A
புதன்.
04:29
Speaker A
புதன்ங்கிறது சரியா இருக்கணும் இல்லையா.
04:30
Speaker A
புதன் ஸ்தலங்களுக்கு போகணும்.
04:32
Speaker A
புதன் ஸ்தலங்களுக்கு போயிட்டு நேர்த்தியா இருந்து அதாவது ஒரு நிலையா.
04:37
Speaker A
ஏன்னா மிதுன ராசிக்காரங்கனாலே அந்த டியூவல்.
04:39
Speaker A
இரண்டு மன மனநிலைகள் இருக்கிறவங்க.
04:41
Speaker A
ரொம்ப பிடிச்சவங்கள ரொம்ப நம்பிடுறது.
04:44
Speaker A
கருணைன்னு பார்த்தா ஓவர் கருணையா ஆயிடுறது.
04:46
Speaker A
கருணையே இல்லைன்னா டு தி எக்ஸ்ட்ரீம் கருணை இல்லாம இருக்கிறது.
04:48
Speaker A
இது ரெண்டுலையுமே பேலன்ஸ்டா இருக்கணும் நல்லவங்க யாரு கெட்டவங்க யாரு அப்படிங்கறது.
04:51
Speaker A
மிதுன ராசிக்காரங்களால அவ்வளவு சீக்கிரம் வந்து பிரிச்சு பார்க்க அவங்களுக்கு தெரியாது.
04:55
Speaker A
அந்த நேரத்துல என்னவோ அதன்படி வந்து அவங்க செஞ்சுட்டு போயிடுவாங்க.
04:58
Speaker A
அப்படி பார்க்கிறப்போ.
05:00
Speaker A
விநாயகர் வழிபாடு அப்படிங்கறது வந்து மிதுன ராசி எப்பவுமே ஃபாலோ பண்ணனும்.
05:03
Speaker A
காலையில ஆரம்பிக்கிறதே வந்து வழிபாடே விநாயகர் தான்.
05:05
Speaker A
அதுக்கப்புறம் சந்திரன்.
05:06
Speaker A
சந்திரன் வழிபாடு எப்படி பண்ணனும் அப்படின்னா சிவன்.
05:08
Speaker A
சிவனை வழிபாடு பண்றப்போ சந்திரன் ஏன்னா அவங்களுடைய மனநிலைமை அப்படிங்கறது சரிசமமா இருக்கணும்.
05:12
Speaker A
திங்கட்கிழமைகள்ல முடிஞ்ச அளவுக்கு பிரதோஷ நாள் அன்னைக்கு.
05:16
Speaker A
சிவன் ஸ்தலங்களுக்கு போய் பழைய கால சிவன் ஸ்தலங்கள்ல போய் ஓம் சந்திராய நமஹ.
05:22
Speaker A
ஓம் சந்திராய நமஹ ஓம் நமசிவாய சிவாய நமஹ ஓம் சந்திராய நமஹ அப்படின்னு வேண்டறதும்.
05:26
Speaker A
அதே மாதிரி கன்னி மூலையில இருக்கிற பிள்ளையார் இருக்கிறார் இல்லையா.
05:30
Speaker A
அவர்கிட்ட போய் அவர்தான் கேது.
05:32
Speaker A
சரியா விதியை இயக்கக்கூடியவர் அவர்.
05:33
Speaker A
கன்னி மூலையில இருக்க பிள்ளையார் கிட்ட போயிட்டு ஓம் கன் கணபதியே நமஹ ஓம் கேதுவே நமஹ அப்படின்னு வேண்டறப்போ உங்களுடைய விதி அப்படிங்கறது சரியாகும்.
05:40
Speaker A
இதை வந்து ஒரு ரெகுலர் பிராக்டிஸாவே நீங்க வச்சுக்கிறது அப்படிங்கறது நல்லது.
05:42
Speaker A
மிதுனம் முடிஞ்ச அளவுக்கு திங்கட்கிழமைகள்ல.
05:46
Speaker A
சிவன் ஸ்தலங்களுக்கு போய் இந்த மாதிரி வழிபாடு பண்ண பண்ண அங்க இருக்கிற பிள்ளையாரை வழிபாடு பண்ணிட்டு அங்க இருக்கிற சிவனை கடைசியா.
05:52
Speaker A
அதாவது சிவன் ஸ்தலங்கள்ல எப்படி வழிபாடு பண்ணனும் அப்படின்னா முதல்ல நம்ம பிள்ளையாரை வழிபாடு பண்றோமா.
05:57
Speaker A
அதாவது என்ட்ரன்ஸ் ஆன உடனே ஒரு பிள்ளையார் இருக்கும் அங்க ஓம் கன் கணபதியே நமஹ அப்படின்னு வழிபாடு பண்ணிட்டு.
06:00
Speaker A
எல்லா தெய்வங்களையும் கும்பிட்டதுக்கு அப்புறம் தான் சிவன் கிட்ட போய் நிக்கணும் ஏன்னா சிவன் கிட்ட நம்ம எதுவும் கேட்க முடியாது.
06:06
Speaker A
சிவன் கிட்ட போய் அந்த எனர்ஜியை தான் நம்ம வந்து கேட்க முடியும்.
06:09
Speaker A
அப்ப அங்க போய் ஓம் சந்திராய நமஹ அப்படின்னு வேண்டறப்போ உங்களுடைய வேண்டுதல்கள் அப்படிங்கறது சரியாகும்.
06:15
Speaker A
சீக்கிரம் கடன் அப்படிங்கறது வந்து வாங்காம தடுக்கப்படும் ஒரு விஷயம் ஒரு விஷயம் போகஸ் பண்ணனும்.
06:20
Speaker A
கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா நீங்க யாருக்கெல்லாம் கடன் கொடுத்தீங்களோ முதல் கொடுத்த கடனை வாங்க பார்க்கணும்.
06:25
Speaker A
அப்படி கொடுத்த கடனை வாங்க பார்த்தீங்கன்னா தான் உங்க கடனை உங்களால அடைக்க முடியும்.
06:29
Speaker A
சரி நீங்க சொல்ற மாதிரி நான் வந்து சிவன் ஸ்தலங்களுக்கும் போயிட்டு தான் இருக்கேன்.
06:33
Speaker A
ஆனாலும் எங்களுக்கு கடன் தீர மாட்டேங்குது அப்படிங்கிற கேள்வி இருக்கவங்களுக்கு.
06:37
Speaker A
புதன்கிழமை சந்திரனுக்கு பாலாபிஷேகத்துக்கு பால் வாங்கி கொடுக்கிறது.
06:40
Speaker A
பால் சம்பந்த பொருட்களை வந்து தானம் பண்றது.
06:43
Speaker A
பால் சம்பந்தப்பட்ட அன்னதானம் பண்றது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நீங்க பண்றப்போ கூட உங்களுடைய கடன் அப்படிங்கறது அடையறதுக்கான வழிவகைகள் அப்படிங்கறது வரும்.
06:48
Speaker A
அந்த சந்திரன் முக்கியமா வளர்பிறை சந்திரனா இருந்திருக்கிறது நல்லது.
06:52
Speaker A
தேய்பிறை சந்திர காலங்கள்ல போயிட்டு நீங்க வந்து சந்திரனுக்கு வழிபாடு பண்றது உகந்தது கிடையாது.
06:55
Speaker A
தேய்பிறை அஷ்டமிக்கு நீங்க போகலாம்.
06:57
Speaker A
தேய்பிறை அஷ்டமில போயிட்டு அங்க இருக்க கால பைரவருக்கு ஒரு விளக்கு போட்டுட்டு வர்றது அப்படிங்கறதே வந்து பெரிய விமோசனம் உங்களுக்கெல்லாம்.
07:04
Speaker A
ஏன்னா அது வந்து விதி.
07:05
Speaker A
அந்த கால பைரவர் அதை சரி பண்ணுவார்.
07:07
Speaker A
எனக்கு யாரெல்லாம் கடன் கொடுத்திருக்காங்களோ முதல்ல அந்த கடன் எனக்கு திரும்ப வந்து சேரணும்.
07:12
Speaker A
நல்லா யோசிச்சு பார்த்தீங்கன்னா தெரியும் யாருக்காவது எங்கேயோ நீங்க கொடுத்த ஒரு கடன்.
07:15
Speaker A
உங்களுடைய லக் அப்படிங்கறது உங்களை விட்டு போயிருந்திருக்கும்.
07:18
Speaker A
இந்த கடன் கொடுக்கிறதுல கூட நிறைய விஷயங்கள் இருக்கு எந்த நாள் கிழமையில நம்ம கடன் கொடுக்கிறோம் அப்படிங்கறதெல்லாம் மிதுன ராசிக்காரங்க அதெல்லாம் பெருசா பார்க்கிறதே இல்லை.
07:24
Speaker A
சாயங்காலம் சாயங்காலம் வெள்ளிக்கிழமை கடன் கொடுக்கிறது 6:00 மணிக்கு அப்புறம் கடன் கொடுக்கிறது அந்த ப்ரொசீஜர்ங்கிறது ஃபாலோ பண்ண மாட்டாங்க.
07:30
Speaker A
மை ஓன் ரூல்ஸ் எல்லாமே என்னோட ரூல்ஸ் தான் அப்படிங்கறதுதான் மிதுன ராசிக்காரங்களுடைய.
07:33
Speaker A
குணாதிசயமாவே பெரும்பாலும் இருக்குது சித்தர்களை பிடிச்சுக்கிறது.
07:37
Speaker A
சித்தர்களை பிடிச்சு வழிபாடு பண்றது முக்கியமா பச்சை நிறம் அப்படிங்கறது அதிகமா நீங்க யூஸ் பண்ணனும்.
07:40
Speaker A
மிதுன ராசிக்காரங்க பச்சை நிறத்தை அதிகமா யூஸ் பண்ண யூஸ் பண்ண அதாவது நீங்க கும்பிடக்கூடிய தெய்வங்கள் எல்லாமே ஒரு பச்சை நிற அமைப்போட இருக்கிற பட்சத்துல உங்களுக்கு செழிப்பு அப்படிங்கறது செல்வ செழிப்பு அப்படிங்கறது அதிகரிக்கும்.
07:47
Speaker A
சோ கடன் அப்படிங்கறது முக்கியமா இந்த சனி கேது சில டைம் ராகு கடன் வாங்க நம்மளுக்கு வைக்கும்.
07:52
Speaker A
ராகு இப்ப ஒவ்வொரு கிரகங்கள் இருக்கு இல்லையா ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு காரணத்துக்காக நம்மள கடன் வாங்க வைக்கிறப்போ ராகு வந்து.
07:57
Speaker A
அதீத ஆடம்பரத்துக்கும் கற்பனை இமேஜினேஷன் இல்லயூஷன் பார்த்துக்கலாம் அப்படிங்கிற தருணத்துல ராகு கடன் வாங்க வச்சிரும்.
08:02
Speaker A
கேது வந்து வச்சு செஞ்சிரும்.
08:03
Speaker A
கேது காலங்கள்ல எப்படி கடன் வாங்க வைக்கும் அப்படின்னா எல்லாமே என்கிட்ட இருந்து போய்கிட்டே இருக்கு எப்படியாவது நான் தக்க வச்சுக்கணும் அப்படின்னா.
08:10
Speaker A
அது எப்படின்னா ஒரு ஓட்டை வழியா எல்லாமே ஒழுகி போயிட்டே இருக்கிற மாதிரிதான்.
08:14
Speaker A
கேது காலங்கள்ல கடன் படுறதும் கேது காலங்கள்ல கடன் அடைக்க முடியாம சிரமப்படுறதும் நம்ம யார்ட்டயாவது போய் கடன் அடைக்கிறதுக்கு இன்னொருத்தங்க கிட்ட போய் கடன் கேட்க போற நேரத்துல கூட ஒரு அவமானம் அசிங்கமோ.
08:20
Speaker A
இல்ல கடன் கிடைக்க முடியாத ஒரு சூழ்நிலையோ கேது இந்த மாதிரி உருவாக்கிடும்.
08:23
Speaker A
அதனாலதான் நான் வந்து விநாயகர் வழிபாடு பண்ணுங்க.
08:24
Speaker A
ஏன்னா இந்த கடன் அப்படின்னாலே இந்த சனி ராகு கேது பெரிய ரோல் பிளே பண்ணுவாங்க.
08:26
Speaker A
புதன் கெட்டு போயிருச்சு அந்த நேரத்துல உங்களால டிசிஷன் எடுக்க முடியல அப்படின்னா.
08:30
Speaker A
புதன் ஸ்தலங்களுக்கு போயிட்டு வர்றது உங்களுடைய புத்தியை ஷார்ப் ஆக்கிக்கிறது புத்தி மூலமா எப்படி சம்பாதிக்கணும் அப்படிங்கறதுதான் நீங்க வந்து ஃபாலோ பண்ணனும்.
08:35
Speaker A
இப்ப குரு வழிபாடு அப்படின்னு பண்றப்போ குரு வழிபாடு பண்ண பண்ண இந்த கடன் தொல்லைகளால அவமானப்படாம அசிங்கப்படாம தப்பிக்க முடியும்.
08:40
Speaker A
செவ்வாய் வழிபாடு அப்படின்னு பண்றப்போ செவ்வாய்ங்கிறது முருகர்.
08:43
Speaker A
முருகர் வழிபாடுன்னு பண்றப்போ பெரும் பிரச்சனையில போய் விடாது.
08:46
Speaker A
அதாவது சில பேத்துக்கு எல்லாம் வந்து இப்ப பேங்கே வந்து எல்லாமே ஜப்தி பண்ணிட்டு போறாங்க இல்ல ஒரு அடிதடி மாதிரி ஆயிடுது இல்ல ஒரு பஞ்சாயத்து மாதிரி ஆயிடுது.
08:53
Speaker A
அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்லாம் வந்து இந்த செவ்வாய் ஹோரையில கடன் வாங்கக்கூடிய சிச்சுவேஷன் வரப்போ இந்த மாதிரி எல்லாம் அமைஞ்சிரும்.
08:57
Speaker A
அதனால எந்த ஹோரை ஹோரைங்கிறது முக்கியம் கடன் கொடுக்கிறதும் கடன் வாங்குறதும்.
09:02
Speaker A
அந்த ஹோரை பார்த்து செய்றது நல்லது சப்போஸ் சனிக்கிழமை நீங்க கடன் வாங்கிடுறீங்கன்னு வச்சுக்கோங்க.
09:05
Speaker A
சனி பெருக்கிட்டே தான் போகும்.
09:07
Speaker A
சனிக்கிழமை கடன் வாங்குறீங்கன்னா அது நோய்க்கா இருக்கட்டும்.
09:10
Speaker A
நோய்க்கு கடன் வாங்குறீங்க அப்படின்னா அது ஓரளவுக்கு நம்மளால அடைச்சிட முடியும்.
09:13
Speaker A
ஏன்னா சனியே வந்து அன்னைக்கு மருத்துவத்துக்கு நீங்க செலவு பண்ணலாம்.
09:16
Speaker A
அது வந்து எதுவும் பண்ணாது.
09:17
Speaker A
சுப காரியங்களுக்கு சனிக்கிழமைல வந்து கடன் வாங்குற வேலை வேண்டவே வேண்டாம் அது வந்து இன்னும் கஷ்டத்திலேயே போய் விட்டும்.
09:23
Speaker A
அதனால கடன் வாங்குறதுக்கும் வெள்ளிக்கிழமை யாரும் கடன் கொடுக்கவும் மாட்டாங்க வாங்கவும் மாட்டாங்க.
09:28
Speaker A
ஆனா செவ்வாய்க்கிழமை நீங்க கடன் அடைக்கலாம்.
09:30
Speaker A
புதன்கிழமை கடன் கேட்கிறதுக்கு டிஸ்கஷன்ஸ் வச்சுக்கலாம்.
09:32
Speaker A
ஒரு வியாழக்கிழமையா கடன் யாருக்காவது நீங்க கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா குரு வழிபாடு பண்ணிட்டு வியாழக்கிழமை கடன் கொடுங்க.
09:38
Speaker A
அடைக்கிறவங்க செவ்வாய்க்கிழமை அடைங்க.
09:40
Speaker A
இந்த மாதிரி நேரம் காலம் நாள் கிழமை உங்களுக்கு சந்திராஷ்டமமா இல்லையா இந்த மாதிரி எல்லாம் பார்த்துட்டு என்னங்க ஆத்திர அவசரம் எங்களுக்கு ஒரு ஹாஸ்பிடல் எக்ஸ்பென்ஸ்.
09:45
Speaker A
இந்த டைம்ல போய் நாங்க நேரம் காலம் பார்த்துட்டு இருக்க முடியுமா.
09:48
Speaker A
ஆத்திர அவசரத்துக்கு நம்ம நேரம் காலம் பார்க்க முடியாது.
09:49
Speaker A
அது வந்து உதவி.
09:50
Speaker A
அது வந்து நம்ம உதவி கேட்கிறோம்.
09:52
Speaker A
அது எமர்ஜென்சிக்கு உதவி கேட்கிறோம்.
09:53
Speaker A
முறையா கடன் கேட்கிற ஒரு அமைப்புன்னு இருக்கு இல்லையா இப்ப நீங்க வந்து பினான்சியல் கிட்ட எல்லாம் போய் பணம் கேட்கிறீங்கன்னா.
09:57
Speaker A
அதுக்கெல்லாம் ஒரு நேரம் காலம் ஒரு பேங்க்ல போய் நகையை அடமானம் வைக்க போறீங்க இல்ல அடைக்க போறீங்க.
10:02
Speaker A
இதுக்கெல்லாம் நீங்க நேரம் காலம் பார்த்து செய்றப்போ உங்களுக்கு இழந்த செல்வம் திருப்பி கிடைக்கணும் அப்படிங்கறதுதான் வந்து கடன் அடைத்தல் அப்படிங்கறதே பேரு.
10:06
Speaker A
ஒரு கடன் எதுக்கு நம்ம வாங்குறோம்.
10:08
Speaker A
ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா தெளிவா இருக்கணும் அந்த கடன் எப்படி உபயோகப்பட்டுச்சு அப்படின்னு ஒன்னு இருக்கு.
10:12
Speaker A
ஊதாரித்தனமா செலவு பண்ணிட்டு காத்துல போன மாதிரி இருந்திடக்கூடாது கடன்.
10:16
Speaker A
ஒரு பொருள் உள்ள வரணும் ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா அந்த பொருளுக்கான ஒரு அடையாளம் அப்படிங்கறது வீட்ல இருந்து.
10:20
Speaker A
அது ஒரு செழிப்பை கொடுக்கிற மாதிரி இருக்கணும்.
10:23
Speaker A
இல்லைன்னா நிறைய கடன் வாங்கினவங்க வீட்டை போய் பாருங்க.
10:25
Speaker A
வீட்டுக்குள்ள ஒண்ணுமே இருக்காது.
10:26
Speaker A
அப்ப எதுக்கு கடன் வாங்கினீங்க அப்படின்னா எதுக்கு வாங்கணும்னே தெரியாது எதையோ வித்து வித்து இந்த கடனுக்காகவே சம்பாதிக்கிறேன் இந்த கடன் அடைக்கிறதுக்காகவே நான் வாழ்றேன் அப்படிங்கிற மாதிரி போயிடும்.
10:33
Speaker A
அதனால பிளானிங் அப்படிங்கறது ரொம்ப முக்கியம்.
10:35
Speaker A
அகலக்கால் எப்பவுமே ஆபத்தானது சிறு சேமிப்பு கூட உங்களுக்கு ஹெல்ப் பண்ணும்.
10:38
Speaker A
அந்த சேமிப்புக்கெல்லாம் வந்து சாமிகிட்டயே வந்து நீங்க வந்து பணம் சேமிச்சு வைக்கிறது.
10:44
Speaker A
அந்த சேமிச்சு வச்ச பணத்துல வந்து ஆலய தரிசனங்களுக்கு செலவு பண்றது ஆலய வழிபாடு பண்றது இந்த மாதிரி பில்கிரிமேஜ் ட்ரிப் போறது.
10:51
Speaker A
இந்த மாதிரி தெய்வ வழிபாட்டுக்கான ட்ரிப் எல்லாம் வந்து நீங்க சேர்த்து வச்ச பணத்துல போயிட்டு வர வர செழிப்புங்கிறது அதிகரிக்கும்.
10:55
Speaker A
பொதுவாவே எல்லா ராசிக்காரங்களுக்கும் சொல்ற விஷயம் என்ன அப்படின்னா.
11:00
Speaker A
யார் கடன் வாங்கிருந்தாலும் சரி என்ன ராசிக்காரங்க கடன் வாங்கிருந்தாலும் சரி விநாயகரை போய் பிடிச்சுக்கணும்.
11:04
Speaker A
ஏன்னா அவர்தான் ஆதி கடவுள் இல்லையா.
11:05
Speaker A
விநாயகரை வழிபாடு பண்ணி அவரையே சொல்யூஷன் கொடுக்க வைக்கணும் நீங்கதான் எனக்கு சரணாகதி அப்படின்னுட்டு விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சு வழிபாடு பண்றது.
11:10
Speaker A
இந்த மாதிரி வழிபாடு முறைகள் எல்லாம் பண்ணி விநாயகரை வழிபட்டா மட்டும் இங்க கடன் அடைஞ்சிருமா அப்படிங்கறது இல்லை.
11:14
Speaker A
அவருடைய அந்த பிளஸ்சிங்ஸ் அப்படிங்கறது நீங்க எடுத்துக்கணும்.
11:17
Speaker A
அதுபோக முக்கியமா சந்திராஷ்டமம் வரக்கூடிய நாட்கள்ல.
11:21
Speaker A
உங்களுக்கு என்னைக்கு சந்திராஷ்டமம் எல்லா ராசி எல்லா நட்சத்திரக்காரங்களுக்குமே வந்து ஒரு இரண்டரை நாள் சந்திராஷ்டமம் அப்படிங்கறது இருக்கும்.
11:25
Speaker A
உங்களுடைய சந்திராஷ்ட காலங்கள்ல எதுவுமே பண்ணாம அதாவது எதுவும் பண்ணாமங்கிறது முடிவுகள் எடுக்காம.
11:31
Speaker A
கடன் வாங்கணும்ங்கிற எண்ணம் இல்லாம.
11:33
Speaker A
சந்திராஷ்டம் அன்னைக்கு கடனை அடைக்கவும் வேணாம் கடனை கொடுக்கவும் வேணாம் வாங்க போகவும் வேண்டாம்.
11:38
Speaker A
அந்த நேரத்துல முடிவும் எடுக்க வேண்டாம்.
11:39
Speaker A
சந்திராஷ்டம காலங்கள்ல கடன் வாங்கினாலோ கடன் கொடுத்தாலோ கடன் அடைப்பது மிகவும் கடினம்.
11:45
Speaker A
ரொம்ப கஷ்டத்துல போயிடுவீங்க சந்திராஷ்டமம்.
11:46
Speaker A
தெரியாம நாங்க சந்திராஷ்டமத்துல கடன் வாங்கிட்டோம் எங்களுக்கு தெரியலையே அன்னைக்கு எங்க நட்சத்திரம்.
11:50
Speaker A
விதி அப்படித்தான் பண்ணும்.
11:51
Speaker A
அன்னைக்கு நீங்க கடன் வாங்க போற நேரத்துல சப்போஸ் ஒரு லோன் அப்ளை பண்ணிருக்கீங்க.
11:56
Speaker A
என்னக்கு அன்னைக்கு போய் நான் பேங்குக்கு போகணும்.
11:58
Speaker A
அன்னைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம் போகாதீங்க.
11:59
Speaker A
அலைச்சல் ஜாஸ்தியா இருக்கும்.
12:00
Speaker A
அந்த கடனை அடைக்கவே முடியாது.
12:01
Speaker A
சரி இன்னைக்கு நான் லோன் அடைக்க போற நாள்.
12:03
Speaker A
இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம் போகாதீங்க.
12:04
Speaker A
திரும்பவும் அங்கேயும் ஏதாவது ஒரு அலைச்சலோ இல்ல ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டோ இல்ல கட்ட முடியாம போற சூழ்நிலையோ இல்ல மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையோ ஏதோ ஒன்னு சந்திராஷ்டமம் நம்மளுக்கு பண்ணி விட்டும்.
12:12
Speaker A
அதனால முடிஞ்ச அளவுக்கு சந்திராஷ்டம காலங்கள்ல அமைதியா இருந்திருக்கிறது நல்லது.
12:16
Speaker A
தெய்வ வழிபாடோட இருந்திருக்கிறது நல்லது.
12:17
Speaker A
எதற்காக கடன் வாங்குறோம் வீண ஆடம்பரத்துக்கு வாங்குறோமா.
12:20
Speaker A
கால்குலேட்டிவா இருந்து சிக்கனமா இருக்க பழகிக்கிட்டீங்க அப்படின்னாலே யாருமே கடன் படணும் அப்படிங்கறது கிடையாது.
12:25
Speaker A
கடவுள் நம்மளுக்கு எல்லாத்துக்குமே யார் யாருக்கு எப்படி எப்படி படி அளந்து கொடுக்கணுமோ அப்படி கொடுத்துக்கிட்டே தான் இருப்பார்.
12:30
Speaker A
ஆசைப்பட பட தான் கடனுக்குள்ள போய் நம்ம விடுவோம் ஆசை ஆபத்து அப்படின்னு சொல்லி நான் இந்த வீடியோவை முடிச்சுக்கிறேன்.
Topics:மிதுனம்கடன் பிரச்சனைஜோதிடம்வழிபாடுவிநாயகர்சந்திரன்சிவன்சித்தர் வழிபாடுகடன் தீர்வுதமிழ் ஆன்மீகம்

Frequently Asked Questions

மிதுன ராசிக்காரர்கள் கடன் வாங்குவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?

மிதுன ராசிக்காரர்கள் அகலக்கால் வைப்பது, மற்றவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்தே கடனாளி ஆவது, மற்றும் தவறான சேர்க்கைகள், கூட்டாளிகள் அல்லது பார்ட்னர்ஷிப்களில் ஈடுபடுவது போன்ற காரணங்களால் கடன் வாங்க நேரிடும். இவர்கள் எளிதில் மற்றவர்களை நம்பி, ஒரு பிசினஸின் முழு விவரம் தெரியாமல் அதில் இறங்குவார்கள்.

மிதுன ராசிக்காரர்கள் சந்திராஷ்டம நாளில் என்ன செய்யக்கூடாது?

சந்திராஷ்டம நாளில் மிதுன ராசிக்காரர்கள் கடனை அடைக்கவோ, கடன் கொடுக்கவோ அல்லது கடன் வாங்கவோ கூடாது என்று இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மிதுன ராசிக்காரர்களிடம் கடன் வாங்குவது எப்படி எளிது?

மிதுன ராசிக்காரர்களிடம் கொஞ்சம் பாவமாகப் பேசினால், அவர்களிடம் எளிதாகக் கடன் வாங்கிவிட முடியும். ஆண், பெண் இரு பாலருக்கும் இந்த குணம் உண்டு, அதாவது மற்றவர்களின் பரிதாபமான பேச்சுகளுக்கு இவர்கள் எளிதில் இரையாகி விடுவார்கள்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →