மேஷம் – உங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் O+ve | Mesham |… — Transcript

மேஷம் ராசிக்கும் O+ve ரத்தக் குழுவினரின் தனித்துவ குணாதிசயங்களும் வாழ்க்கை வழிகாட்டுதலும்.

Key Takeaways

  • O+ve ரத்தக் குழுவினர்கள் உதவிக்கு எப்போதும் தயாராக இருப்பர்.
  • A மற்றும் B பிளட் குழுக்களின் தனித்துவ குணாதிசயங்கள் வாழ்க்கை முறையை பாதிக்கின்றன.
  • ராசி மற்றும் ரத்தக் குழு இணைப்புகள் மனித குணாதிசயங்களை புரிந்துகொள்ள உதவும்.
  • மேஷம் ராசிக்கான ரத்தக் குழு பொருத்தங்கள் திருமண வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • இந்த ஆன்மீக விளக்கங்கள் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கு உதவும்.

Summary

  • மேஷம் ராசி நெருப்பு தத்துவத்தை அடிப்படையாக கொண்டது.
  • O+ve ரத்தக் குழுவினருக்கு வாரியர் குணம், உதவிக்கு எப்போதும் தயாராக இருப்பது தனிச்சிறப்பு.
  • A பிளட் குழுவினருக்கு ஒழுங்கு, பொறுப்பு மற்றும் டிசிப்ளின் குணங்கள் உண்டு.
  • B பிளட் குழுவினருக்கு அதிக கிரியேட்டிவிட்டி, சுயநலம் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு காணப்படுகிறது.
  • AB பிளட் குழுவினர்கள் ஸ்மார்ட், திட்டமிடக்கூடிய மற்றும் பல்துறை திறன்கள் கொண்டவர்கள்.
  • ராசி, லக்னம் மற்றும் நட்சத்திரம் வாழ்க்கை வழிகாட்டுதலுக்கு முக்கியமான அம்சங்கள்.
  • ரத்தக் குழுக்கள் மற்றும் ராசி அமைப்புகளுக்கு இடையேயான தொடர்பு மனித குணாதிசயங்களை விளக்குகிறது.
  • மேஷம் ராசிக்கான ரத்தக் குழு பொருத்தங்கள் திருமணம் மற்றும் வாழ்க்கை உறவுகளுக்கு வழிகாட்டும்.
  • O+ve ரத்தக் குழுவினர்கள் எதையும் கேட்காமல் உதவ முனைந்தவர்கள், ஆனால் முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும்.
  • இந்த நிகழ்ச்சியில் ஜீவிதா சுரேஷ்குமார் ரத்தக் குழுக்களின் குணாதிசயங்கள் மற்றும் ராசி தொடர்பான ஆன்மீக விளக்கங்களை வழங்குகிறார்.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
O அண்ட் A வந்து இவங்களுக்கு பெஸ்ட் இவங்களுக்கு லக் கொடுக்கணும் அப்படின்னா O பக்கத்துல இருந்தாலே இவங்களுக்கு லக் தான்.
00:07
Speaker A
O பிளட் குரூப்ல இருக்கிறவங்க ஒரு மேஷத்துல இருக்காங்க அப்படின்னா இவங்கதான் ஓடி ஓடி போய் ஹெல்ப் பண்றவங்களா இருப்பாங்க.
00:17
Speaker A
இந்த A, B இது ரெண்டும் சேர்ந்து இப்போ மேஷத்துக்கு இருக்கு அப்படின்னா இவங்க கல்யாணம் பண்ணிக்கிறாங்கன்னா O-வை கல்யாணம் பண்ணிக்கலாம், A-வை கல்யாணம் பண்ணிக்கலாம்.
00:23
Speaker B
ரெட்ரோ ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்.
00:25
Speaker B
இன்றைய நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பவர் அஸ்ட்ராலஜர், ரைட்டர் திருமதி ஜீவிதா சுரேஷ் அவர்கள்.
00:30
Speaker A
வணக்கம்.
00:31
Speaker B
எப்படி இருக்கீங்க?
00:32
Speaker A
நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?
00:33
Speaker B
ரொம்ப நல்லா இருக்கேன்.
00:34
Speaker B
இப்போ ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்குல்ல, அதே மாதிரி ஒவ்வொரு பிளட் குரூப்புக்கும் ஒரு குணாதிசயம் இருக்கு அப்படிங்கிற ஒரு விஷயத்தை நீங்க சொல்லிருந்தீங்கல்ல, சோ அது மாதிரி அவங்கலாம் இப்ப ஒரு O பாசிட்டிவ் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம்னா அவங்களோட குணாதிசயம் எப்படி இருக்கும், அவங்களோட கேரக்டர் எப்படிப்பட்டது அப்படிங்கிற மாதிரி எல்லா பிளட் குரூப்புக்கும் நீங்க கொஞ்சம் டீடைலா சொல்லுங்க அதுக்கப்புறம் நம்ம ராசிக்குள்ள போலாம்.
00:51
Speaker A
பொதுவா நம்ம வந்து ராசி, லக்னம், நட்சத்திரம் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்ம பார்ப்போம்.
00:56
Speaker A
லக்னம் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம் அப்படின்னா நம்மளுடைய வாழ்க்கையோட திசையை லக்னம் சொல்லும்.
01:01
Speaker A
ராசி அப்படிங்கிறது அந்த திசைக்குள்ள நம்முடைய மனநிலைமை என்ன அப்படிங்கறத சொல்லும்.
01:06
Speaker A
நட்சத்திரம் என்ன அப்படிங்கறது நம்ம வாழ்க்கையோட சூட்சமங்களை அப்படிங்கிற ஒரு விஷயத்தை சொல்லும்.
01:10
Speaker A
இது எல்லாமே ஒன்னோடு ஒன்னு கனெக்டட் அப்படிங்கறப்போ நம்மளுடைய ரத்தமும் இதுல சம்பந்தப்பட்டது.
01:16
Speaker A
எந்த DNA-க்குள்ள நம்ம பிறந்து வரோம்.
01:20
Speaker A
இந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பிளட் குரூப் நம்ம கேரி ஆன் பண்ணிட்டு வந்துட்டு இருக்கணும்னு ஒரு விஷயம் இருக்கு.
01:26
Speaker A
அப்போ இந்த பிளட்ங்கிற விஷயம் என்ன பண்ணும் அப்படின்னா இந்த ராசிகளுக்குன்னு சில தத்துவங்கள் அப்படிங்கிறது ஒன்னு உண்டு இல்லையா?
01:32
Speaker A
இந்த வாழ்க்கை அமைப்புன்னு ஒன்னு இருக்கு.
01:35
Speaker A
அப்போ ஒரு பர்டிகுலர் பிளட் குரூப் இந்த ஒரு ராசி அமைப்பினருக்கு வரப்போ இது எப்படி ரியாக்ட் பண்ண போகுது, ரெஸ்பான்ட் பண்ண போகுது?
01:40
Speaker A
இது எப்படி ரியாக்ட் பண்ண போகுது அப்படிங்கறதுதான் நம்ம பார்க்க போறோம்.
01:43
Speaker A
இப்போ O அப்படின்னு எடுத்துக்குறோம் அப்படின்னா O-க்கு வந்து ஒரு வாரியர் குணம் அப்படிங்கிறது ஒன்னு உண்டு.
01:47
Speaker A
என்ன எதுனே கேட்காம எந்த எக்ஸ்பெக்டேஷனுமே இல்லாம ஹெல்ப் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கிறது O-க்கு இருக்கும்.
01:59
Speaker A
எப்படி இருந்தாலும் அதை முடிச்சிருவாங்க அப்படிங்கிறது ஒன்னு ஒரு O-க்கு அந்த கேரக்டர் உண்டு.
02:05
Speaker A
இப்போ A எடுத்துக்குறோம் அப்படின்னு வச்சுக்கோங்களேன், A கிட்ட வந்து ஒரு டிசிப்ளின் அப்படிங்கிற ஒரு விஷயத்தை வந்து A ஃபாலோ பண்ணும்.
02:10
Speaker A
ஒரு ரெஸ்பான்சிபிலிட்டின்னு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாங்க A அப்படின்னா முடிக்காம விட மாட்டாங்க அப்படிங்கறதுனால அந்த A-வை வந்து கொஞ்சம் ஃபர்ஸ்ட் ஆபீசர் லெவல் அப்படிங்கிற மாதிரி வச்சாங்க.
02:18
Speaker A
நெக்ஸ்ட் பார்க்குறப்போ B.
02:20
Speaker A
B-க்கு ஒரு குணாதிசயம் என்னன்னா கிரியேட்டிவிட்டி அதிகம், சுயநலமும் அதிகம்.
02:25
Speaker A
ஃபர்ஸ்ட் தனக்கு என்ன அப்படிங்கிற ஒரு விஷயத்தை இந்த B பார்க்கும்.
02:29
Speaker A
இந்த A, B தான் வந்து உள்ளதிலேயே வந்து ஸ்மார்ட்டான ஒரு பிளட் குரூப் அப்படின்னு சொல்லலாம்.
02:33
Speaker A
ஏன் அப்படின்னா?
02:34
Speaker A
இவங்க பயங்கரமான ஒரு ஸ்ட்ராட்டஜிஸ்ட், செம்மையா பிளான் போடக்கூடியவங்க.
02:40
Speaker A
ஈஸியா போரும் இவங்களுக்கு அடிச்சிரும்.
02:42
Speaker A
இந்த A-வுடைய கேரக்டரும் B-யுடைய கேரக்டரும் சேர்ந்ததுதான் இந்த AB அப்படிங்கிறது.
02:50
Speaker A
AB எல்லாம் எப்படி இருந்தாங்கன்னா ரொம்ப இந்த ஹை லெவல், இந்த கிட்டத்தட்ட நம்ம சகுனி ரேஞ்சுக்கு சொல்லலாம்.
02:58
Speaker A
அந்த அளவுக்கு பிளான் போடக்கூடியவங்க, பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் ரெண்டு விஷயத்துக்குமே வந்து இந்த AB அப்படிங்கிறவங்க யூஸ் ஆனாங்க.
03:03
Speaker A
அந்த டைம்ல எல்லாம் வந்து ஃபர்ஸ்ட் ஜாப்பனீஸ் தான் கண்டுபிடிச்சாங்க அப்படின்னுலாம் சொன்னது உண்டு, ஆனா கண்டுபிடிச்சது யாருன்னா நம்மளுடைய சித்தர்கள்.
03:12
Speaker A
போகர் வந்து நிறைய உலகம் சுத்தினாரு, ஜப்பான் போனாரு, சைனா போனாரு இப்படி எல்லாம் போனப்போ அவருடைய ஓலைச்சுவடையில இருந்த ஒரு விஷயம் தான் இது.
03:20
Speaker A
ரத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம், வாதம், பித்தம் இதெல்லாம் சேர்ந்து வச்சு இந்த இந்த ரத்த அமைப்புல இருக்கிறவங்க இப்படித்தான் இருப்பாங்க அப்படின்னவுடனே.
03:25
Speaker A
அந்த டைம்ல வார்க்கு சூஸ் பண்ணாங்க இல்லையா, வார்க்கு சூஸ் பண்ணப்போ இந்த கேட்டகிரி பேசிஸ்லதான் சூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க.
03:32
Speaker A
இந்த ராசி எல்லாம் அமைப்பையும் தாண்டி ஒரு பிளட் குரூப்பை வச்சே ஒரு மனிதருடைய கேரக்டர் இதுதான்னு ரொம்ப ஈஸியா வந்து நம்மளால கண்டுபிடிக்க முடியும்.
03:40
Speaker B
இப்ப அதே மாதிரி இப்ப ஒவ்வொரு பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் இதுதான் அப்படிதான் இருக்கப்போகுது அப்படிங்கிற மாதிரி சொல்லிட்டீங்க.
03:48
Speaker B
இப்ப இந்த ராசியில ஒவ்வொரு ராசிக்கும் அதுல இருக்கிற பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் எப்படி இருக்கும், இந்த ராசியில இருக்கிற பிளட் குரூப்போட வேற எந்த ராசியோட ராசியில இருக்கிற பிளட் குரூப் வந்து சேர்ந்துச்சுன்னா அவங்களுக்கு நல்லா இருக்கும் வாழ்க்கை.
03:59
Speaker B
திருமணம் வந்து நடக்குறதுக்கு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த பிளட் குரூப்புக்கு நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லுங்க.
04:03
Speaker B
முதலாவதா நம்ம மேஷ ராசிக்கு போலாம்.
04:06
Speaker B
மேஷ ராசியை பத்தி சொல்லுங்க.
04:07
Speaker A
இப்ப மேஷ ராசின்னு பார்க்குறப்போ அது நெருப்பு தத்துவத்தை கொண்டு வந்தது.
04:11
Speaker A
அப்ப ஆல்ரெடி அந்த நெருப்பு தத்துவம் எப்படி இருக்கும்னா ஒரு ஃபயர் இன்பர்ன் ஆயிட்டேதான் இருக்கும்.
04:15
Speaker A
இப்ப அதுல ஒரு O பிளட் குரூப்ல இருக்கிறவங்க ஒரு மேஷத்துல இருக்காங்க அப்படின்னா இவங்கதான் ஓடி ஓடி போய் ஹெல்ப் பண்றவங்களா இருப்பாங்க.
04:22
Speaker A
பின்விளைவுகள் என்னனே தெரியாம ஹெல்ப் பண்றவங்களா இருப்பாங்க, எந்த விதமான எதிர்பார்ப்பும் இவங்களுடைய லைஃப்ல வந்து இருக்காது.
04:30
Speaker A
ஆனா எந்த விஷயத்தை முடிக்கணும்னு நினைக்கிறாங்களோ அந்த கோல் ஃபோக்கஸ்டா இருக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கிறது இவங்களுக்கு இருக்கும்.
04:35
Speaker A
ஜெனரலாவே மேஷ ராசிக்கு என்ன சொல்லுவோம் அவசரப்படாதீங்க, கேட்காம எதையும் செய்யாதீங்க.
04:42
Speaker A
ஆனா இந்த O-ல இருக்கிறவங்க கேட்காமயே எல்லாமே செய்யக்கூடியவங்களாவே இருப்பாங்க.
04:49
Speaker A
மேக்ஸிமம் லைஃப்ல ஃபர்ஸ்ட் ஹாப் ஏமாந்து அதுக்கப்புறம் லேட்டர் ஆன் ரியலைசேஷன் பீரியட் அப்படிங்கிறது இந்த O கேட்டகிரில இருக்கிறவங்க வருவாங்க.
04:56
Speaker A
இன்னொன்னு வந்து A அப்படின்னு எடுத்துக்குறோம்னு வச்சுக்கோங்களேன்.
04:59
Speaker A
A வந்து இவங்க எப்படின்னா இந்த குழந்தைகள் இந்த A-ல இருக்காங்கன்னா இவங்களை வந்து ஒரு டிசிப்ளின்ட் குழந்தையா கொண்டு வர முடியும்.
05:05
Speaker A
இவங்களை வந்து சில விஷயங்களை ஃபோக்கஸ் பண்ணி கொண்டு வர முடியும்.
05:10
Speaker A
ஆனா இதுல என்ன பிரச்சனைன்னா?
05:11
Speaker A
இவங்க எதை நினைக்கிறாங்களோ, எதை நம்புறாங்களோ அது மட்டும்தான் இருக்கணும்னு நினைக்கக்கூடிய ஒரு மைண்ட் செட்ல இருக்கக்கூடியவங்களா இருப்பாங்க.
05:18
Speaker A
இதை தாண்டி வேற ஒரு விஷயம் இல்லை, இது நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுங்கிற மாதிரிலாம் சில விஷயங்கள் இருக்கும் தெரியுமா?
05:25
Speaker A
அதுக்குள்ளயே அதையே படிச்சுக்கிட்டே இருக்கிறது, அதை மட்டுமே டெவலப் பண்ணி கொண்டு போறது.
05:32
Speaker A
மத்த விஷயங்கள்ல வந்து ஃபோக்கஸ் ரொம்ப லேட்டராதான் வரும், ஆனா எதை செய்யணும்னு நினைக்கிறாங்களோ அதை கரெக்டா செஞ்சிடுவாங்க.
05:39
Speaker A
இவங்களால மத்தவங்களை வேலை வாங்க முடியும்.
05:41
Speaker B
ஒரு கமெண்டிங் பவர் வந்து மேஷ ராசியில இருக்க A பிளட் குரூப்புக்கு இருக்குன்றீங்க.
05:45
Speaker A
ஆமா, ஒரு ரெஸ்பான்சிபிலிட்டின்னு சொல்லலாம்.
05:47
Speaker A
ஒரு பொறுப்போட இருக்கக்கூடிய ஒரு அமைப்பு வந்து A-க்கு இருக்கும்.
05:50
Speaker A
இதே இது B இருக்காங்க அப்படின்னா.
05:52
Speaker A
இவங்களை மல்டி டாஸ்கிங் பண்ணக்கூடியவங்களா இருப்பாங்க.
05:56
Speaker A
பல விஷயங்கள் மைண்ட்ல ஓடிக்கிட்டே இருக்கும், இதை பண்ணலாமா, அதை பண்ணலாமா.
06:02
Speaker A
கை கால் சும்மாவே இருக்காதுன்னு சொல்லுவாங்களே, துருதுருன்னு எதையோ ஒன்னு பண்ணிக்கிட்டே இருக்கும்.
06:07
Speaker A
ஹேண்டிகிராஃப்ட் ஐட்டம்ஸ் பண்றது, அழகான ஆர்ட்டிஸ்டிக் ரிலேட்டடான விஷயங்கள் எல்லாம் பண்றது.
06:12
Speaker A
இதெல்லாம் வந்து B-ல இருக்கக்கூடியவங்க பண்ணுவாங்க.
06:14
Speaker A
அதோட இவங்க இந்த B-ல இருக்கக்கூடியவங்க எப்படின்னா பயங்கரமா சண்டை போடக்கூடிய ஆற்றலும் வந்து இவங்களுக்கு உண்டு.
06:20
Speaker A
கிரியேட்டிவிட்டி ரொம்ப அதிகம்.
06:21
Speaker A
இவங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது.
06:23
Speaker A
வாக்குவாதம் பண்றாங்க அப்படின்னா அப்படியே நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி பேசுவாங்கன்னு வச்சுக்கோங்களேன்.
06:30
Speaker A
திருப்பி இருக்கிறவங்க யாரும் பேச முடியாது, ஏன்னா அவங்களுக்கு அந்த அளவுக்கு மைண்ட் கிரியேட்டிவா வேலை பார்த்துக்கிட்டே இருக்கும்.
06:35
Speaker A
இப்போ ஒரு மேஷத்துல ஒரு B, B பிளட் குரூப்ல இருக்காங்க அப்படின்னா இந்த B பிளட் குரூப் யாராவது ஒருத்தங்க ஃப்ரெண்டா வச்சிருக்காங்க அப்படின்னா சண்டைக்குலாம் போனா கூட்டிட்டு போயிடலாம்.
06:44
Speaker A
ஏன்னா ஃப்ரெண்டுக்காக துணிஞ்சு சண்டை போட்டு நியாயமா என்ன விஷயம் வேணுமோ அதை வாங்கி கொண்டு வரக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கிறது B-ல இருக்கிறவங்களுக்கு வந்து உண்டு.
06:52
Speaker A
நிறைய எக்ஸ்பிரஸ் பண்ணி எக்ஸ்பிரஸ் பண்ணி பேசுவாங்க.
06:55
Speaker A
இவங்க எமோஷனலும் கூட.
06:56
Speaker A
ஹைலி எமோஷனல், பட்டுன்னு அழுதுறது, திடீர்னு கோவப்பட்டுறது, ஆனா மனசுல எதுவும் வச்சுக்க மாட்டாங்க அப்படிங்கிறதுதான் B.
07:02
Speaker A
இதே இது இந்த A, B இது ரெண்டும் சேர்ந்து இப்போ மேஷத்துக்கு இருக்கு அப்படின்னா இவங்க எப்படின்னா எதுவுமே பிளான் பண்ணாம செய்ய மாட்டாங்க.
07:10
Speaker A
இன்டெலிஜென்ஸ் பயங்கரமா இருக்கும், பாலிடிக்ஸ்லலாம் இருக்காங்கல்ல.
07:14
Speaker A
அவங்கலாம் இந்த AB-ல இருப்பாங்க.
07:16
Speaker A
ஸ்ட்ராட்டஜி போடாம இவங்க ஒரு கால்குலேஷன் ஒன்னு போடுறாங்கன்னா அது லாங் டேர்ம், லாங் ரன்னா இருக்கும்.
07:24
Speaker A
இவங்க ஏன் அதை யோசிக்கிறாங்கன்னு இவங்களுக்கு மட்டுமே தெரியும், அந்த அளவுக்கு எல்லா ஆங்கிளையும் யோசிக்கக்கூடிய தன்மை.
07:31
Speaker A
ஏன்னா ஆல்ரெடி நான் B-க்கு கிரியேட்டிவிட்டி இருக்குன்னுட்டேன்.
07:33
Speaker A
ஃபைட் பண்ணனும்னு சொல்லியாச்சு.
07:34
Speaker A
A-ங்கிறது டிசிப்ளினாவும் இருக்கும், அப்ப இது ரெண்டும் சேர்ந்து இந்த AB கிட்ட இருக்கிறப்போ இவங்கதான் வந்து.
07:40
Speaker A
இவங்களால வந்து ஆன்ட்ரபிரனர்ஸாவும், லீடர்ஸாவும் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு அமைப்புதான் இவங்க.
07:47
Speaker A
இவங்களால யாருக்கு கீழயும் போக முடியாது, அப்படி யாருக்கு கீழ வேலை பண்ற மாதிரி இருந்தாலும்.
07:52
Speaker A
இவங்க அந்த டாமினேட்டிங் இடத்துலதான் இருப்பாங்க, ஐடியாஸ் கொடுக்கிற இடத்துல இவங்க இருப்பாங்க.
07:59
Speaker A
கொடுக்கிற ஐடியாஸ் கண்டிப்பா கரெக்டா இருக்கும் அப்படிங்கிறதுதான் இந்த A, B அந்த காம்பினேஷன்.
08:03
Speaker A
இப்ப இவங்களை யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க அப்படின்னு ஒன்னு இருக்கு.
08:07
Speaker B
மேஷ ராசியில இருக்க O பாசிட்டிவ் அப்படின்னா.
08:10
Speaker A
இல்ல மேஷ ராசிக்கு AB செட் ஆகாது.
08:12
Speaker B
எந்த குரூப்புக்கும் செட் ஆகாது.
08:13
Speaker A
இல்ல மேஷ ராசிக்கு AB செட் ஆகாது.
08:15
Speaker A
ஏன் அப்படின்னா ஆல்ரெடி இந்த O கேரக்டர் என்ன கேரக்டர், போய் போய் ஹெல்ப் பண்ணக்கூடிய ஒரு கேரக்டர்.
08:20
Speaker A
அப்போ இதை கிரிட்டிசைஸ் பண்ணாம இருக்கிறது இன்னொரு O தான் கிரிட்டிசைஸ் பண்ணாம இருக்கும்.
08:26
Speaker A
ஏன்னா அந்த O-வும் கிட்டத்தட்ட இதை வந்து ரசிக்கும்.
08:28
Speaker A
ஜெனரலாவே நம்ம என்ன சொல்லுவோம் ஒரு O குரூப்ல இருக்கிறவங்க O-க்கு வந்து பிளட் கொடுக்கலாம்.
08:33
Speaker A
சோ அதே காம்பினேஷன் தான் இதுவும்.
08:35
Speaker A
அதே மாதிரி இவங்களுக்கு A-வும் செட் ஆகும்.
08:37
Speaker A
ஏன் அப்படின்னா A கொஞ்சம் டிசிப்ளினடா இருக்கக்கூடிய ஒரு அமைப்பு.
08:42
Speaker A
அப்போ இந்த மேஷத்துல இருக்கிறவங்க வந்து கொஞ்சம் அடங்காம இருக்காங்க அப்படின்னா கொஞ்சம் இவங்களை டிசிப்ளின்ட்ல கொண்டு வர அமைப்பு எல்லாம் வந்து இந்த A-க்கு இருக்கும்.
08:48
Speaker A
சோ அது O அண்ட் A வந்து இவங்களுக்கு பெஸ்ட், இவங்களுக்கு லக் கொடுக்கணும் அப்படின்னா O பக்கத்துல இருந்தாலே இவங்களுக்கு லக் தான்.
08:53
Speaker A
இந்த மேஷத்துல இருக்காங்க இல்லையா?
08:56
Speaker A
ஏன்னா இந்த O வந்து கொஞ்சம் லிசன் பண்ணும்.
09:00
Speaker A
கொஞ்சம் அட்மையர் பண்ணும்னு வச்சுக்கோங்களேன் இந்த மேஷத்துல இருக்கிறவங்களை.
09:04
Speaker A
சோ O வந்து செட் ஆகும்.
09:06
Speaker A
அதே மாதிரி இந்த O, A-வை கல்யாணம் பண்றாங்க அப்படின்னா.
09:10
Speaker A
இந்த O-க்கும் A-க்கும் சில ஹெல்த் இஸ்யூஸும் வரும்.
09:14
Speaker A
இவங்களோட சேர்ந்து வாழ்றப்போ பித்தம் அப்படிங்கிற ஒரு விஷயம் வந்து உருவாக ஆரம்பிக்கும்.
09:18
Speaker A
BP சம்பந்தப்பட்ட விஷயமும் வந்து இவங்களுக்கு டச் ஆகும், அப்பப்ப டச் ஆகும்.
09:23
Speaker A
ஏன் அப்படின்னா மேஷத்தை ஹேண்டில் பண்றது கொஞ்சம் கஷ்டம்.
09:25
Speaker A
அந்த டைம்ல வந்து இந்த மாதிரி நோய்களை சுமக்கிற ஒரு அமைப்பும் வந்து இந்த O-க்கும் A-க்கும் இருக்கும்.
09:32
Speaker A
அதையும் தாண்டி O தான் ரொம்ப லக்.
09:34
Speaker A
இவங்களுக்கு ஒரு சில இப்ப நம்மளுக்கு ஜெனரலா ஒவ்வொருத்தங்களை பார்த்தா பிடிக்கும், பிடிக்காது அப்படிங்கறதுலாம் ஒன்னு இருக்கு இல்லையா?
09:42
Speaker A
O பக்கத்துல வந்தாலே இவங்களுக்கு லக் ஆக்டிவேட் ஆகக்கூடிய ஒரு அமைப்புலாம் வந்து இந்த மேஷத்துக்கு உண்டு.
09:48
Speaker A
யார் ஆகவே ஆகாது அப்படின்னு ஒன்னு இருக்கு.
09:51
Speaker A
AB ஆகவே ஆகாது மேஷத்துக்கு.
09:53
Speaker A
ஏன் அப்படின்னா?
09:54
Speaker A
AB வந்து ஆல்ரெடி ஸ்ட்ராட்டஜிஸ்ட், பயங்கரமா திங்க் பண்ணக்கூடியது.
10:00
Speaker A
ஒரு ஒரு அரசன் தான் இருக்க முடியும்.
10:02
Speaker B
ஆல்ரெடி AB-யா இருக்காங்க ஒருத்தங்க இருக்காங்க அப்படின்னா.
10:06
Speaker A
மேஷத்துக்கு ஜெனரலாவே AB செட் ஆகாது.
10:08
Speaker B
எந்த குரூப்புக்கும் செட் ஆகாது.
10:09
Speaker A
இல்ல மேஷ ராசிக்கு AB செட் ஆகாது.
10:11
Speaker A
ஏன் அப்படின்னா?
10:12
Speaker A
மேஷ ராசி கொஞ்சம் எமோஷன்ஸும் கொஞ்சம் எதிர்பார்க்கும்.
10:16
Speaker A
ஆல்ரெடி மேஷம் வந்து துடுதுடுன்னு இருக்கக்கூடியவங்கதான்.
10:19
Speaker A
இந்த கேட்டகிரி அமைப்பு இப்ப அவங்க மேஷத்திலேயே AB ஒருத்தங்க இருந்தா கூட அவங்களுக்கு இன்னொரு AB செட் ஆகாது.
10:27
Speaker A
ஏன் அப்படின்னா?
10:28
Speaker A
அந்த AB சில குறைகளையும் பார்ப்பாங்க, லாஜிக்கலா இருக்கிறது வந்து மேஷத்தினால அக்செப்ட் பண்ணிக்க முடியாதுங்கறதுலாம் ஒன்னு இருக்கு.
10:34
Speaker A
சோ AB-யை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க அப்படின்னா ரொம்ப மேஷம் வந்து எமோஷனலா பாதிக்கப்படுவாங்க.
10:38
Speaker A
மேஷம் கிட்டத்தட்ட மனநிலையே பாதிக்கப்படுவாங்க.
10:42
Speaker A
ட்ரீட்மென்ட் லெவலுக்கு போயிடுவாங்க.
10:43
Speaker A
ஏன் அப்படின்னா?
10:44
Speaker A
மேஷத்தோடைய மனநிலைமையை ஒரு AB-யால புரிஞ்சுக்கவே முடியாது.
10:49
Speaker A
ஒரு மேஷம் தானே AB-யா இருந்தா கூட தன்னையே தன்னால புரிஞ்சுக்க முடியாத ஒரு கேட்டகிரிதான் மேஷம்.
10:54
Speaker A
சோ இந்த AB என்ன ஆகும்னா, AB-ல ஒருத்தங்க வராங்கன்னா அவங்களுடைய பெர்ஸ்பெக்டிவ் டோட்டலி வேற.
11:01
Speaker A
மேஷம் வந்து ரொம்ப சுயநலம் சம்பந்தப்பட்டது, அப்ப இந்த சுயநலமா இருக்கிறவங்க ஒரு AB வந்து பார்க்கிறப்போ.
11:08
Speaker A
AB எல்லாமே லாஜிக்கலாவும், அனலிட்டிக்கலாவமே சொல்யூஷன் சொல்றப்போ மேஷத்தினால ஹேண்டில் பண்ண முடியாம.
11:14
Speaker A
முக்கியமா அது ஃபீமேலா இருக்காங்க அப்படின்னா மெடிக்கல் ட்ரீட்மென்ட்க்கே போயிடுவாங்க.
11:19
Speaker A
சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்ட்க்கே போயிடுவாங்க.
11:21
Speaker A
அதனால இந்த AB அப்படிங்கிறது வந்து இவங்களுக்கு செட் ஆகாது.
11:24
Speaker A
மொத்தத்துல பார்க்கிறப்போ இவங்களுக்கு இயற்கையாவே கமாண்ட் பண்ணக்கூடியவங்கதான் வந்து லைஃப் பார்ட்னராவே வருவாங்க.
11:30
Speaker A
மேஷத்துக்கு.
11:32
Speaker A
ஏன்னா மேஷத்துக்கு டைரக்டா பேசக்கூடிய ஒரு ஆட்டிடியூட் உண்டு.
11:35
Speaker A
ஆட்டோமேட்டிக்கா அந்த ஆட்டிடியூட் வர ஸ்பவுஸ்க்கும் வந்துரும் அப்படிங்கிறதுதான் வந்து இதோடைய அமைப்பு.
11:40
Speaker B
இப்ப மேஷ ராசி அப்படின்னு எடுத்துக்கிட்டோம்னா மேஷ ராசியில இருக்க பிளட் குரூப்ல ஒவ்வொரு பிளட் குரூப்புக்கும் என்ன கேரக்டர்ஸ் இருக்கு, அவங்களோட குணாதசயம் எப்படி இருக்கு, அதே மாதிரி அவங்களுக்கு என்ன பிளட் குரூப் வந்து அவங்களுக்கு சேரும் அப்படிங்கிற மாதிரியான ஒரு விஷயத்தை நம்ம பார்த்தோம்.
Topics:மேஷம்O+veரத்தக் குழுஆஸ்திராலஜிராசிகுணாதிசயம்திருமணம்ஜீவிதா சுரேஷ்குமார்ஆன்மீகம்தமிழ் ஜோதிடம்

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →