கன்னி – உங்களுக்கு அள்ளி கொடுக்கும் ராகு பகவான் | Kanni… — Transcript

கன்னி ராசிக்கான காலபுருஷ தத்துவம், ராகு பகவானின் தாக்கம் மற்றும் வாழ்க்கை ட்ராப்கள் பற்றிய விரிவான விளக்கம்.

Key Takeaways

  • காலபுருஷ தத்துவம் மனிதன் பிறப்பின் காரணம் மற்றும் கர்மாவை விளக்குகிறது.
  • கன்னி ராசிக்காரர்கள் குடல் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்த வேண்டும்.
  • ராகு பகவானின் தாக்கம் செழிப்பையும் சவால்களையும் ஏற்படுத்தும்.
  • சமூக உறவுகளில் கவனம் மற்றும் மனப்பக்குவம் முக்கியம்.
  • விஷ்ணு மற்றும் சிவன் வழிபாடு மூலம் பிரச்சனைகள் சமாளிக்கப்படலாம்.

Summary

  • காலபுருஷ தத்துவம் மூலம் மனிதன் பிறப்பின் காரணம் மற்றும் கர்மா விளக்கம்.
  • 12 ராசிகளுக்கும் தனித்துவமான ட்ராப்கள் மற்றும் வாழ்க்கை சவால்கள் உள்ளன.
  • கன்னி ராசிக்காரர்களுக்கு வயிற்று மற்றும் குடல் பிரச்சனைகள் முக்கியமான ட்ராப்கள்.
  • கன்னி ராசி ஆள்களின் தூய்மை, ஒழுக்கம் மற்றும் வேலைப்பாடு பற்றிய விவரணம்.
  • கன்னி ராசி மனப்பக்குவம் மற்றும் சமூக உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள்.
  • ராகு பகவானின் கன்னி ராசியில் வரும் தாக்கம் மற்றும் அதனால் ஏற்படும் செழிப்பு.
  • ராகு காலத்தில் புதன் கிரகத்தின் செயல்பாடு குறையும் மற்றும் பணம் ஈர்க்கும் சவால்கள்.
  • விஷ்ணு மற்றும் சிவன் வழிபாடு மூலம் பிரச்சனைகளை சமாளிக்கும் வழிகள்.
  • கன்னி ராசி ஆள்களின் எண்ணிக்கை மற்றும் கணக்கீடு திறன் முக்கியத்துவம்.
  • கர்மா மற்றும் ஜென்மத்தின் பாதிப்புகளை புரிந்து கொண்டு வாழ்க்கையை முன்னெடுப்பது.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
வணக்கம்
00:02
Speaker B
வணக்கம்
00:03
Speaker A
எப்படி இருக்கீங்க?
00:04
Speaker B
நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?
00:05
Speaker A
நல்லா இருக்கேன். சோ, ஒவ்வொரு ஒவ்வொரு வாரமும் நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா ஒவ்வொரு ராசிகளுக்கும் எது முக்கியம், என்ன பண்ணனும், என்ன பண்ணக்கூடாது அப்படிங்கறத ரொம்ப தெளிவா சொல்லிட்டு இருக்கோம். அதுல ரொம்ப முக்கியமா காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது இருக்கு. அதுதான் ரொம்ப முக்கியம் அப்படிங்கறதும் எல்லாருமே எல்லாராலயும் சொல்லப்படுது.
00:21
Speaker B
காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது வந்து இந்த காஸ்மிக் எனர்ஜி. நம்ம ஏன் பிறந்தோம் அப்படிங்கறதுக்கான காரணம் அதாவது கர்மா. நம்ம வந்து காரண காரியத்தோடதான் பிறக்கிறோம் அப்படிங்கறது இருக்கு. அதாவது தலை முதல் பாதம் வரை அப்படின்னு சொல்றது. அதுதான் வந்து மேஷம் முதல் மீனம் வரை. ஒரு மனுஷன் ஏன் மேஷத்துல பிறக்கிறாங்க? அப்போ அவங்க என்ன ட்ராப்ல சிக்க போறாங்க? எப்படி அவங்க வாழ்க்கையிலிருந்து ரிலீவ் ஆகணும்? ஏன்னா மனிதன் மீண்டும் மீண்டும் பிறக்கிறாங்க அப்படின்னாலே நம்ம ஏதோ ஒரு செய்யாத ஒரு கடமையை திரும்பவும் முடிக்கிறதுக்காக பிறந்த ஒரு பிறப்பு. இல்லை லைஃப் எக்ஸ்பீரியன்ஸ்க்காக வரோம். எல்லாருமே வந்து கடமையை முடிக்கிறதுக்குதான் பிறந்தாங்களா அப்படிங்கறது கிடையாது.
00:58
Speaker B
அதுதான் காலபுருஷ தத்துவம்.
01:00
Speaker B
அதாவது இன்னும் ஜெர்னி இருக்கு அப்படிங்கிற ராசிகளும் இருக்காங்க.
01:05
Speaker B
இல்லை உங்களுக்கு ஜெர்னி முடிய போகுது.
01:09
Speaker B
அதனால இந்த ஜென்மத்திலேயே இதை முடிச்சுக்கோங்க.
01:14
Speaker B
இதுக்கான விடையை நீங்க கண்டுபிடிச்சிருங்க அப்படிங்கிற ஒரு விஷயம் தான் இது.
01:18
Speaker B
சோ, இந்த காலபுருஷ தத்துவம் அப்படின்னு பார்க்கிறப்போ,
01:24
Speaker B
இது வந்து வைட் ரேஞ்ச் ஆஃப் நாலேட்ஜ்.
01:26
Speaker B
அதுதான் அந்த காலபுருஷ தத்துவம்.
01:28
Speaker B
மனிதன் பிறப்பிலிருந்தே கொஞ்ச நாள்ல தேட ஆரம்பிச்சிருவாங்க நான் ஏன் பிறந்தேன், நான் யாரு, என்னோட ஐடென்டிஃபிகேஷன் என்ன மாறிக்கிட்டே இருக்கும்.
01:39
Speaker B
ஒரு குழந்தை பருவத்திலிருந்து ஒவ்வொரு விஷயமும் மாறிக்கிட்டே இருக்கிறப்போ நமக்கு ஆசாபாசங்கள்னு ஒன்னு இருக்கும்.
01:45
Speaker B
ஆனா விதி வேற ஒரு வழியில கூட்டிட்டு போகும்.
01:47
Speaker B
காலபுருஷன் அப்படிங்கறது காலம் அப்படிங்கறது நேரம்.
01:50
Speaker B
புருஷன் அப்படிங்கறது பர்சன்.
01:53
Speaker B
மனிதனை சொல்லக்கூடியது.
01:54
Speaker B
அதுதான் காலபுருஷன்.
01:56
Speaker B
இந்த காலத்துல இந்த மனிதன் பிறக்கிறார் அப்படிங்கறதுதான்.
01:59
Speaker B
எப்படி வந்து 24 மணி நேரத்தை வந்து 12 மணி நேரமா பிரிக்கப்பட்டதோ அதுதான் வந்து இந்த 12 ராசிகள்.
02:05
Speaker A
சோ, அந்த காலபுருஷ தத்துவம் 12 ராசிகளுக்கும் இப்போ ஒவ்வொரு ராசியும் பிறக்கிறவங்களுக்கு வந்துட்டு ஒவ்வொரு ட்ராப் இருக்கும்.
02:10
Speaker A
இந்த விஷயம் பண்ணலாம், இந்த விஷயம் பண்ணக்கூடாது.
02:13
Speaker A
இவங்க இதுக்காகதான் பிறந்திருக்காங்க அப்படிங்கிற நிறைய விஷயங்கள் சொன்னீங்க.
02:17
Speaker A
சோ, அப்படிங்கறது நம்ம ஒவ்வொரு ராசிக்கும் பார்க்கலாம்.
02:24
Speaker A
சோ, தொடர்ந்து நிறைய விஷயங்கள் சொல்லிட்டு இருக்கோம்.
02:26
Speaker A
அடுத்ததாக கன்னி ராசி.
02:28
Speaker A
கன்னி ராசிக்காரர்களுக்கு காலபுருஷ தத்துவம் என்ன மாதிரியான ட்ராப் எல்லாம் வச்சிருக்கு?
02:32
Speaker A
கன்னி ராசி அப்படின்னு சொன்னாலே,
02:34
Speaker A
லீடர்ஷிப்ல வந்து பெஸ்ட்டா இருப்பாங்க, ரொம்ப ஷார்ப்பா இருப்பாங்க, அழகா இருப்பாங்க அப்படிங்கறதுமே சொல்லுவாங்க.
02:40
Speaker A
எங்க போனாலுமே ஒரு 10 பேர் இருந்தாங்கன்னா அவங்க மட்டும் தனித்துவமா தெரிவாங்க அப்படின்னு சொல்லுவாங்க.
02:48
Speaker A
ஆனா நிறைய விஷயத்துல வந்துட்டு அவங்களுக்கு எதுவுமே தெரியலைனாலும் அவங்க வந்துட்டு எல்லாமே தெரிஞ்ச மாதிரி கிளவரா.
02:55
Speaker A
இவங்களை இவங்களை பார்த்த உடனே இவங்களுக்கு எல்லாமே தெரியும்ப்பா அப்படிங்கிற மாதிரி இருக்கும்.
02:59
Speaker A
சோ, அந்த மாதிரி கன்னி ராசிக்காரர்களுக்கு காலபுருஷ தத்துவம் என்னென்ன ட்ராப் எல்லாம் வச்சிருக்கு?
03:04
Speaker B
காலபுருஷ தத்துவம் வந்து வயிற்றினுடைய குடல் பகுதியை சொல்லுது.
03:08
Speaker B
கன்னி ராசி அப்படிங்கறது.
03:10
Speaker B
சோ, இவங்களுக்கும் வந்து குடல் செரிமானம் அப்படிங்கறது ரொம்ப ஜாக்கிரதையா பார்த்துக்கணும்.
03:14
Speaker B
ஏன்னா அவங்களுக்கு வைக்கிற ட்ராப்புமே அந்த டைஜெஷன் பார்ட்லதான் அது கையே வைக்கும்.
03:20
Speaker B
அங்க இருந்துதான் எல்லாமே ஸ்டார்ட் ஆகும்.
03:22
Speaker B
உணவு பிரியர்கள் அப்படின்னு சொல்லலாம்.
03:24
Speaker B
அந்த குடலை காயவும் போடக்கூடாது, அந்த குடல்ல இஷ்டத்துக்கும் குப்பைகளையும் போடக்கூடாது அப்படிங்கறதுதான் அவங்களுக்கு அவங்களுக்கு காலபுருஷன் சொல்லி இருக்கிற விஷயமே.
03:30
Speaker B
அது வந்து சூட்சமமான விஷயமும் என்ன அப்படின்னா,
03:33
Speaker B
அந்த குப்பைகள் அப்படின்னு நான் சொன்னேன் இல்லையா?
03:35
Speaker B
மற்றவரிடத்தில் குறை காண்பதும் கன்னி ராசிக்கு உண்டு.
03:38
Speaker B
நான் பெர்ஃபெக்ட்டா இருக்கேன் அப்படின்னா நீ ஏன் இப்படி இருக்க, அப்படி இருக்க, இப்படி இருக்கன்னு சொல்ல சொல்ல கர்மா சேர்ந்துகிட்டே இருக்கும்.
03:43
Speaker A
ஓகே.
03:43
Speaker B
ஏன்னா அந்த நிம்மதிங்கறது அவ்வளவு சீக்கிரம் கன்னிக்கு கிடைக்காது.
03:46
Speaker B
குறை பேச ஆரம்பிக்கிறப்போ.
03:47
Speaker B
ஆனா இவங்க வேலை செஞ்சுகிட்டே இருக்காங்க, கிளீன் பண்ணிக்கிட்டே இருக்காங்க அப்படின்னா,
03:51
Speaker B
இந்த ஓசிடி இஸ்யூஸும் வந்து கன்னி ராசிக்கு அதிகமாவே உண்டு.
03:55
Speaker B
அது ஆணாகட்டும், பெண்ணாகட்டும்.
03:56
Speaker B
நீங்க ஒரு வீட்டுக்கு போனால்கூட கன்னி ராசி ஆண்கள் பார்த்தீங்கன்னா தூசியை துடைச்சிட்டே இருப்பாங்க.
04:01
Speaker B
அவங்களால அந்த டஸ்ட் பார்த்துட்டே இருக்கவே முடியாது.
04:04
Speaker B
எல்லா இடத்துலயும் கிளீன் பண்ணிட்டே இருக்கக்கூடிய ஒரு மனப்பக்குவத்தை, அந்த மனப்பாங்கை வந்து அவங்களுக்கு வந்து கொடுத்துக்கிட்டே இருக்கும்.
04:09
Speaker B
சோ, இது வந்து மத்தவங்களுக்கு அப்படின்னு பார்க்கிறப்போ,
04:12
Speaker B
கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.
04:13
Speaker B
ஆனா கன்னி ராசி இருக்கக்கூடிய இடம் வந்து அந்த பிரண்ட்ஸ் கேங் ஆகட்டும், சிரிக்க வச்சிட்டே.
04:18
Speaker B
ஏன்னா அது வந்து புதன்.
04:19
Speaker B
அந்த ஹியூமர் சென்ஸ் அப்படிங்கறது ரொம்ப நல்லா இருக்கும் கன்னி.
04:22
Speaker B
பேசுறப்பவே எவ்வளவு பெரிய கஷ்டமா இருந்தாலும் கன்னி வெளியே சொல்லாதுங்கறதுதான் காலபுருஷ தத்துவம் சொல்றது.
04:26
Speaker B
ஏன் அப்படின்னா,
04:28
Speaker B
தன்னாலயே தனக்கு வரக்கூடிய கஷ்டத்தை ஏத்துக்கிட்டு வாயை திறந்து சொல்லாத ஒரு இது.
04:35
Speaker B
அதை வேற மாதிரி புலம்பல்ல சொல்றது.
04:37
Speaker B
சொல்யூஷன்ஸ் அப்படிங்கறது கன்னி ராசி வந்து தானேதான் தேடிக்கும்.
04:40
Speaker B
ஆல்ரெடி கன்னி ராசி வந்து அவங்களுடைய ப்ராப்ளம்ஸ்க்கான சொல்யூஷன் வந்து மைண்ட்ல பிக்ஸ் பண்ணிட்டு,
04:45
Speaker B
10 பேத்துட்ட கேட்டு கேட்டு குழம்பறதே கன்னி ராசியோட வேலையா இருக்கும்.
04:50
Speaker A
பேசிட்டே இருப்பாங்க.
04:50
Speaker B
பேசிட்டே இதை பண்ணா எப்படி இருக்கும்?
04:52
Speaker B
அப்படி பண்ணா எப்படி இருக்கும்?
04:53
Speaker B
முடிவெடுக்கிறதுல சிரமப்படுறது கன்னி ராசி.
04:55
Speaker B
அதுதான் வந்து கன்னி ராசிக்கு அங்க வச்சிருக்க ட்ராப்பே.
04:58
Speaker B
அந்த சமயங்கள் என்ன ஆகும்னா நல்லவர்களை இழக்கவும் கூடும் கன்னி ராசியால.
05:03
Speaker B
நல்ல பிரெண்ட்ஷிப், நல்ல ஒரு ஃபேமிலி சர்க்கிளை ஒரு மாதிரி அவங்களே திடீர்னு விட்டு டிட்டாச்மென்ட் ஆகி வரக்கூடிய ஒரு அமைப்பு அந்த மாதிரி இருக்கும்.
05:10
Speaker B
சோ, இவங்களுக்கு வந்து இந்த கணக்கு வழக்கு, நம்பர்ஸ் இதெல்லாம் ரொம்ப நல்லா வரும்.
05:13
Speaker A
ஓகே.
05:14
Speaker B
இந்த நம்பர்ஸ் அப்படிங்கிற விஷயத்தை வந்து கன்னி பிடிச்சுக்கணும்.
05:17
Speaker B
எனிதிங் ரிலேட்டட் டு நம்பர்.
05:20
Speaker B
லக்கே வந்து அவங்களுக்கு நம்பரை எப்படி யூஸ் பண்றாங்க அப்படிங்கறதுதான் இருக்கு.
05:22
Speaker B
அதுதான் வந்து காலபுருஷன் வச்சிருக்க சூட்சமமே அவங்களுக்கு அதுலதான்.
05:24
Speaker B
ஏன்னா இவங்களுக்கு வந்து,
05:26
Speaker B
எல்லாமே கணக்கு, கணக்கு போட்டு கணக்கு போட்டு அந்த பவுண்டரி செட் பண்ணி இருக்கக்கூடிய ஒரு அமைப்புதான் கன்னி.
05:30
Speaker B
சோ, அந்த கால்குலேஷன் உங்களுக்கு கரெக்டா தெரியணும்.
05:32
Speaker B
அது தப்பு கணக்கா போயிறக்கூடாது.
05:33
Speaker B
ட்ராப்பே அங்கதான்.
05:33
Speaker B
நான் தப்பு கணக்கு போட்டு இவங்கள்ட்ட போய் பழகிட்டேனே.
05:36
Speaker B
இங்க போகாம நான் இங்க போயிருந்திருக்கலாமே.
05:38
Speaker B
அந்த லெசனைதான் வந்து காலபுருஷ தத்துவப்படி அது சொல்லிக்கிட்டே இருக்கும்.
05:42
Speaker B
இதுதான் ட்ராப்.
05:43
Speaker B
அவ்வளவு சீக்கிரம் கன்னி ராசியால அது உணரவே முடியாது.
05:45
Speaker B
அவங்களுக்கும் எப்ப கேது திசை நடக்குதோ, ஏன்னா ராகு பயங்கரமா சூப்பரா பண்ணும் கன்னிக்கு.
05:50
Speaker A
சூப்பர்.
05:50
Speaker B
அள்ளி கொடுக்கும்.
05:51
Speaker B
அந்த டைம்லதான் செழிப்பே ஆவாங்க.
05:52
Speaker A
சூப்பர்.
05:52
Speaker B
கன்னி எல்லாமே வந்து சேரும் கன்னி ராசி.
05:54
Speaker B
ராகு, ராகு திசை, ராகு புத்தியில எல்லாம்.
05:56
Speaker B
ஏன்னா ஜெனரலாவே கன்னி வந்து எல்லாமே கணக்கு போட்டுதான் பண்ணும்.
06:00
Speaker B
பயம் அறியாது கன்னி.
06:01
Speaker B
இப்ப ராகு வந்துருச்சு அப்படின்னா சுத்தமாவே பயந்துக்காது.
06:03
Speaker A
சோ, கான்பிடென்ட்டா பண்ணுவாங்க.
06:04
Speaker B
கான்பிடென்ட்டா பண்ணுவாங்க.
06:06
Speaker B
எங்க பேசணுமோ கரெக்டா பேச தெரியும்.
06:09
Speaker B
அது சில இடத்துல டோட்டல் சைலன்ட் ஆயிடுவாங்க.
06:11
Speaker B
ஏன்னா இவங்களுக்கு என்ன தெரியுமோ அது மட்டும்தான் பண்ணிட்டு இருப்பாங்களா?
06:14
Speaker B
அங்கேயும் சில ட்ராப் இங்க செட் பண்ணப்படும்.
06:17
Speaker B
இந்த ராகு பீரியட்ல வந்து அந்த புதன் ஒழுங்கா வேலை பார்க்காது.
06:21
Speaker B
பணத்தை ஈர்க்கிறதுலயே இருந்துகிட்டு இருக்கும்.
06:23
Speaker B
இவங்களாம் அந்த விஷ்ணு வழிபாடுலாம் கொஞ்சம் ஸ்ட்ராங்கா பண்ணிக்கணும்.
06:27
Speaker B
அந்த டைம்லலாம் நிறைய பெருமாள் ஸ்தலத்துக்கு போகக்கூடிய ஒரு அமைப்புலாம் இருந்தாலுமே,
06:30
Speaker B
சிவன் ஸ்தலத்துல போய் கொஞ்சம் சரணாகதி ஆகிக்கிறதும் இவங்க நல்லது.
06:33
Speaker B
ஏன் அப்படின்னா,
06:35
Speaker B
எல்லாமே ஜாஸ்தியா கிடைக்கிறப்போ குறைகள் பேசுறதும் ஜாஸ்தி ஆயிடும்.
06:39
Speaker B
மத்தவங்களுடைய கர்மாவையும் வாங்கிட்டே இருப்பாங்க.
06:41
Speaker A
இவங்க பேசுவாங்களா இல்ல மத்தவங்க.
06:42
Speaker B
இவங்க பேச ஆரம்பிச்சிருவாங்க.
06:43
Speaker A
ஓகே ஓகே.
06:43
Speaker B
இவங்க வந்து அந்த பெர்ஃபெக்ஷன் நோக்கி,
06:45
Speaker B
மத்தவங்களை எங்கேயோ ஒரு இடத்துல அந்த குறை தெரியாம பேசுற பேச பேச இன்னொருத்தவங்களுடைய கர்மாவை வாங்கிட்டே இருக்கக்கூடிய அமைப்பு வரப்போ,
06:51
Speaker B
கேது திசையோ, சனியோ வரப்ப எல்லாத்தையும் புடுங்கி உருவிட்டுதான் உட்கார வைக்கும்.
06:55
Speaker B
அப்போ ரியலைசேஷன் பாயிண்ட்டுக்கு கொண்டு வரும்.
06:58
Speaker B
அப்பதான் எனக்கு என்ன வரும்னு சொல்லிட்டு நம்பர்ஸ்ல போய் கை வைப்பாங்க அப்பறம்தான்.
07:02
Speaker B
அது வந்து நம்பர்ஸ் அப்படிங்கறது இப்ப ஸ்டாக் மார்க்கெட்டே பண்ணா கூட பிளான் பண்ணி ஃபுல்லா படிச்சு தெளிவாயிட்டுதான் உள்ள இறங்குறது.
07:07
Speaker B
அப்பறம்தான் அந்த உழைப்பை போடணும்ங்கறதே அவங்களுக்கு தெரியும்.
07:09
Speaker B
சோ, அதுக்கு முன்னாடி இருந்தே அந்த டேலன்ட்ஸ் கரெக்டா தெரிஞ்சு கரெக்டா எல்லாத்துக்கிட்டயும் பழக தெரிஞ்சிருச்சு.
07:13
Speaker B
அந்த ஃபோக்கஸ்.
07:15
Speaker B
ஏன்னா கன்னி ராசிக்காரங்களுக்கு இந்த காலபுருஷ தத்துவம் சொல்ற விஷயம் என்னன்னா,
07:18
Speaker B
எதை தொட்டாலும் அது செம்மையாகவே வரும் அப்படிங்கறதுதான் கன்னிக்கு.
07:21
Speaker B
அழகாவே வரும்.
07:23
Speaker B
பெர்ஃபெக்ட்டா வரும்.
07:26
Speaker B
ஒரு ப்ரொஃபஷனலால கூட அந்த மாதிரி பண்ணவே முடியாது அப்படிங்கறதுதான் கன்னியோட அமைப்பு.
07:30
Speaker B
ஆனா அதை அப்படியே விட்டுருவாங்க.
07:32
Speaker B
திறமை சில டைம் அவங்களுக்கு தெரியவே தெரியாது.
07:34
Speaker B
அந்த திறமையாலயே அவங்களால முன்னேற முடியும்.
07:38
Speaker B
ஆனா அதை விட்டுட்டு திரும்ப இன்னொரு விஷயத்துக்கு தேடி போக சொல்லிட்டே இருக்கும்.
07:41
Speaker B
அந்த புத்தி அலைப்பாஞ்சுகிட்டே இருக்கும்.
07:42
Speaker B
அப்பப்ப ராகு எட்டி எட்டி பார்த்துக்கிட்டே இருக்கும் கன்னிட்ட.
07:45
Speaker B
பேராசை குணம் கன்னிக்கு அப்பப்ப வந்து எட்டி பார்க்கும் அதெல்லாம் இல்லாம கொஞ்சம் சட்டில் ஆயிட்டாங்க.
07:50
Speaker B
எனக்கு இது போதும் அப்படின்னு நினைக்க என்னைக்கு ஆரம்பிக்கிறாங்களோ,
07:53
Speaker B
இந்த காலம் அவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுக்கும்.
07:55
Speaker A
ஓகே.
07:56
Speaker B
அந்த விஷ்ணு கோயிலை போய் அங்க வந்து எதுவா இருந்தாலும் பச்சை கலர்ல கொடுத்து அவங்க வழிபாடு பண்ணிட்டு வராங்க.
08:00
Speaker B
இப்ப ஒரு துளசி கொடுத்து வழிபாடு பண்ணிட்டு வராங்க.
08:03
Speaker B
துளசி தீர்த்தத்தை வாங்கி குடிக்க குடிக்க புத்திங்கறது அவங்களுக்கு சரியாக ஆரம்பிக்கும்.
08:06
Speaker B
காலபுருஷ தத்துவம் என்ன சொல்லுதுன்னா,
08:08
Speaker B
புத்தி நிலையை சரியா வச்சுக்கணும்.
08:10
Speaker A
ஸ்டேபிளா இருக்கணும்.
08:10
Speaker B
ஏன்னா இதுவும் அதுவும்.
08:11
Speaker B
முடிவே எடுக்க தெரியாது.
08:12
Speaker B
டெசிஷனே எடுக்க தெரியாது.
08:13
Speaker B
எல்லாத்தையும் போய் டார்ச்சர் பண்ணிட்டே இருப்பாங்க.
08:15
Speaker B
எனக்கு இது முடிவு எடுக்கணும்.
08:17
Speaker B
இதை எடுக்கட்டுமா வேணாமா?
08:18
Speaker B
அந்த ஆப்பர்சுனிட்டி அவங்களை விட்டு போயிரும்.
08:20
Speaker B
அப்ப இன்னொருத்தன் எடுத்து செஞ்சிட்டு இருக்கப்போ டெவலப் ஆயிடுவாங்க.
08:22
Speaker B
சோ, அந்த டெசிஷன் மேக்கிங் கரெக்டா இருக்கணும் அப்படின்னா துளசி தீர்த்தம்.
08:25
Speaker B
ஏதாவது ஒரு தீர்த்தம், நீர்நிலைகள்.
08:27
Speaker B
நீர்நிலைகள்தான் அவங்களை வந்து ஸ்டடியே பண்ணும்.
08:29
Speaker B
அந்த நீர்நிலைகள்ல வந்து உட்கார்ந்துட்டு அங்க வந்து தீர்த்தத்தை வாங்கி குடிக்கிறதோ,
08:34
Speaker B
தண்ணி குடிக்க குடிக்க.
08:36
Speaker B
கன்னி ராசிக்காரங்களுக்கு சொல்லக்கூடிய ஒரு ரகசியம் என்னன்னா,
08:41
Speaker B
பக்கத்துல தண்ணி வச்சுக்கணும்.
08:43
Speaker B
டெசிஷன் எடுக்கிறோம்.
08:44
Speaker B
ஒருத்தங்கள்ட்ட நம்ம பேசிட்டு இருக்கோம்.
08:46
Speaker B
அங்க என்னால டெசிஷன் எடுக்க முடியல.
08:47
Speaker B
புதுசா ஒரு சின்னதா ஒரு வாட்டர் பாட்டில் வாங்கிட்டு கையில வச்சுக்கோங்க.
08:51
Speaker B
வச்சிட்டு தண்ணி குடிச்சிட்டே பேச பேச பேச அந்த ஆசுவாசப்படப்பட சரி நான் அப்புறம் சொல்றேன்.
08:56
Speaker B
முடிவெடுத்துட்டு நான் சொல்றேங்கிற பக்குவத்தை அது கொடுக்கும்.
08:59
Speaker B
எதுவா இருந்தாலும் நிறுத்தி நிதானமா முடிவெடுத்துட்டாங்க கன்னி அப்படின்னா,
09:02
Speaker B
தே ஆர் சேஃப்.
09:03
Speaker B
இதுதான் அவங்களுக்கான வாழ்க்கை பாடமே அதுதான்.
09:05
Speaker B
அவசரப்பட்டு முடிவுகள் எடுத்திடக்கூடாது.
09:07
Speaker A
பொறுமையா.
09:07
Speaker B
நிறுத்தி நிதானமா பொறுமையா ஆனா பொறுமையா இருக்கேன்னு சொல்லிட்டு டெசிஷன் எடுக்காம இருந்து மத்தவங்களை காத்து இருக்கவும் செஞ்சிடக்கூடாது.
09:12
Speaker B
திரும்பவும் கர்மா வந்துரும்.
09:13
Speaker A
கண்டிப்பா.
09:14
Speaker A
இவங்க எந்த துறையில பெஸ்ட்டா இருப்பாங்க?
09:15
Speaker A
இப்ப கன்னி ராசிக்காரர்கள் அதிகமா பார்த்தா மோஸ்ட் ஆஃப் வந்துட்டு ஃபிலிம்ல இருப்பாங்க.
09:18
Speaker A
சோ, வந்துட்டு பியூட்டிஷியனா இருப்பாங்க.
09:20
Speaker A
சோ, இந்த மாதிரி துறைகள்ல பார்த்தா வந்து நிறைய பேர் சொல்லிருக்காங்க கன்னி ராசிக்காரர்கள் இருப்பாங்க.
09:23
Speaker A
இவங்களுக்கு என்னதான் சுத்தி சுத்தி நீ எத்தனை இடத்துக்கு போனாலும் ஒரு இடத்துல வந்துதான் நிப்பா அப்படின்னு சொல்லுவாங்க.
09:28
Speaker A
இவங்க வந்து நிக்கக்கூடிய ஒரு துறை ஒரு இடமா இருக்கும்.
09:30
Speaker A
அது எதுவா இருக்கும்?
09:31
Speaker B
இவங்க வந்து பணம் எங்க புழங்குதோ.
09:33
Speaker B
சிம்பிளா சொல்லணும்னா அதுதான்.
09:35
Speaker B
பணம் எங்க புழங்குதோ அங்க வந்து கன்னி ராசி இருப்பாங்க.
09:38
Speaker B
அந்த அந்த கால்குலேஷன்.
09:40
Speaker B
இங்க போனா எனக்கு இந்த ஸ்பான்டேனியஸா அதாவது இன்ஸ்டன்ட்.
09:45
Speaker B
எனக்கு இங்க போனா எனக்கு இது நடக்கும்னா எனக்கு உடனே அது நடக்கணும் அப்படிங்கிற அமைப்புல அது எந்த துறையா இருந்தாலும் சரி.
09:50
Speaker B
ஸ்பான்டேனியஸ் பணம்.
09:53
Speaker B
அந்த வெயிட்டிங் பீரியட் அப்படிங்கறது கன்னிக்கு பொறுமை கிடையாது.
09:57
Speaker B
அதனாலதான் வந்து அந்த சினிமா துறையில இருக்கிறது, ஆர்ட் ரிலேட்டடா இருக்கிறது.
10:00
Speaker B
ஏன்னா எல்லாமே அவங்களுக்கு அந்த புகழ் அப்படிங்கறது வந்துரும்.
10:05
Speaker B
அந்த இடத்துல அவங்க பளிச்சுன்னு இருப்பாங்க.
10:07
Speaker B
அப்படி இருக்கிறதும் அவங்களுக்கு நல்லது.
10:08
Speaker B
ஏன்னா இவங்களுக்கு நான் விஷ்ணு, லட்சுமி வழிபாடுதான் சொல்லிருக்கேன்.
10:10
Speaker B
செழிப்பாவே இருக்கணும்.
10:11
Speaker B
கோயில் கூட பரிகார ஸ்தலங்களை விட புண்ணிய ஸ்தலங்கள் ஜாஸ்தியா இவங்க வந்து போக போக செழிப்புங்கறது அதிகமாயிட்டே இருக்கும்.
10:17
Speaker A
ம்.
10:18
Speaker B
இவங்களுக்கு.
10:19
Speaker B
அப்போ அந்த விஷ்ணு கோயில் இதெல்லாம் போறப்போ இவங்க செழிப்பாதான் போவாங்க.
10:22
Speaker B
நல்ல பிரைட் கலர்ஸ் போட்டுட்டு போறது.
10:25
Speaker B
நல்ல பிரைட்டான கலர்ஸ் முடிஞ்ச அளவுக்கு டார்க் கலர்ஸ் அந்த பிளாக் இல்லாம சில்வர், ஒயிட் அப்படிங்கறது இவங்க யூஸ் பண்ண யூஸ் பண்ண இவங்க அங்க செழிப்பாவும் தனித்துவத்தோடையும் தெரிஞ்சுகிட்டே இருப்பாங்க.
10:32
Speaker A
தொடர்ந்து காலபுருஷ தத்துவப்படி என்னென்ன ட்ராப்ஸ் இந்த 12 ராசிகள் இருக்கும்.
10:36
Speaker A
ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்னென்ன விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கணும், எந்த கடவுளை வணங்கணும், எந்த தொழில்ல அவங்க வந்து பெஸ்ட்டா இருப்பாங்க.
10:42
Speaker A
சில ராசிகளுக்கு குரு சொல்றதை கேட்கணும், தனக்குன்னு ஒரு குரு வச்சுக்கணும், அந்த குரு சொல்றதை கேட்கணும், லைஃப் பார்ட்னரை வந்து சிறப்பா தேர்ந்தெடுக்கணும் அப்படின்னு நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க.
10:48
Speaker A
இதுல நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கும்.
10:51
Speaker A
சோ, எல்லாரும் ஒரே மாதிரி ஒரே ஆங்கிள்லயே சொல்ல மாட்டாங்க நிறைய அஸ்ட்ராலஜர் இருக்காங்க.
10:56
Speaker A
நிறைய ஆங்கிள்ஸ்ல நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க.
11:00
Speaker A
இதுல டவுட்ஸ் இருந்து ரொம்ப தெளிவா இதை பத்தி தெரிஞ்சுக்கணும்னா எப்படி மேம் அணுகுறது?
11:03
Speaker B
அதாவது நான் இப்பதான் அஸ்ட்ராலஜி கிளாஸ் ஸ்டார்ட் பண்றேன்.
11:06
Speaker B
நம்முடைய வாழ்க்கை என்ன அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படின்னா நம்முடைய ஹாரோஸ்கோப் சார்ட் நம்ம தெரிஞ்சுக்கணும்.
11:12
Speaker B
இந்த கலியுகத்தை பத்தியும் நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுனால,
11:15
Speaker B
அஸ்ட்ராலஜி யாரெல்லாம் இன்ட்ரஸ்ட்டா இருக்காங்களோ, கத்துக்கணும் அப்படின்னு இன்ட்ரஸ்ட்டா இருக்காங்களோ அவங்கலாம் வந்து செப்டம்பர் ஆறாம் தேதியிலிருந்து நான் வந்து அஸ்ட்ராலஜி கிளாஸ் அப்படிங்கறது ஸ்டார்ட் பண்றேன்.
11:22
Speaker B
இதுதான் வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் அப்படின்னு ஸ்டார்ட் பண்றேன்.
11:24
Speaker B
சோ, கீழ தெரியுற நம்பருக்கு அவங்க வந்து வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்க கால் இல்ல வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்கன்னா அவங்களுக்கான டீடைல்ஸ் வரும்.
11:30
Speaker A
ஜோதிடம் பத்தின உங்களுக்கு எந்த டவுட்ஸா இருந்தாலும் இல்ல ஜோதிடம் படிக்கணும் அப்படின்னு ஆர்வம் இருந்தால்,
11:35
Speaker A
செப்டம்பர் ஆறிலிருந்து கிளாஸ் ஸ்டார்ட் ஆகுது, கீழ இருக்க வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி நீங்க கிளாஸ் ஜாயின் பண்ணிக்கலாம்.
11:41
Speaker A
தொடர்ந்து இன்னும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு சொல்லிக்கிட்டே இருப்போம்.
11:45
Speaker A
தொடர்ந்து பேசுவோம்.
11:46
Speaker A
நன்றி.
Topics:கன்னி ராசிகாலபுருஷ தத்துவம்ராகு பகவான்கர்மாஜென்மம்தமிழ் ஜோதிடம்ராகு காலம்வயிற்று பிரச்சனைசமூக உறவுகள்விஷ்ணு வழிபாடு

Frequently Asked Questions

காலபுருஷ தத்துவம் என்றால் என்ன?

காலபுருஷ தத்துவம் என்பது காஸ்மிக் எனர்ஜி மற்றும் நாம் ஏன் பிறந்தோம் என்பதற்கான காரணம், அதாவது கர்மா. இது மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பயணத்தையும், ஒவ்வொரு ராசிக்கும் உள்ள தனிப்பட்ட கடமைகளையும் விளக்குகிறது.

காலபுருஷ தத்துவத்தின்படி, மனிதன் ஏன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான்?

மனிதன் மீண்டும் மீண்டும் பிறப்பது, செய்யாத கடமைகளை முடிக்கவோ அல்லது புதிய வாழ்க்கை அனுபவங்களைப் பெறவோ ஆகும். சில ராசிகளுக்கு பயணம் இன்னும் தொடர்கிறது, சில ராசிகளுக்கு இந்த ஜென்மத்திலேயே கடமைகளை முடிக்க வேண்டும்.

காலபுருஷன் என்ற சொல்லின் பொருள் என்ன?

காலபுருஷன் என்பது 'காலம்' (நேரம்) மற்றும் 'புருஷன்' (மனிதன்) ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கை. இது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு மனிதன் பிறப்பதைக் குறிக்கிறது. 24 மணி நேரம் 12 ராசிகளாகப் பிரிக்கப்பட்டதைப் போன்றது இது.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →