கடகம் – உலகை ஆள பிறந்தவர்கள் நீங்கள் | Kadagam | Jeevit… — Transcript

கடக ராசிக்காரர்களுக்கான கால புருஷ தத்துவம் மற்றும் பிறப்பின் காரணங்கள், குடும்ப உறவுகள், ஆன்மா தொடர்ச்சி பற்றிய விளக்கம்.

Key Takeaways

  • கால புருஷ தத்துவம் மனிதன் பிறப்பின் காரணம் மற்றும் கர்மாவை விளக்குகிறது.
  • கடக ராசிக்காரர்கள் குடும்ப உறவுகளுடன் ஆழ்ந்த தொடர்பு கொண்டவர்கள்.
  • ஆன்மா தொடர்ச்சி மற்றும் முந்தைய பிறப்புகளின் தாக்கம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பிரதிபலிக்கிறது.
  • கன்னி வழிபாடு மற்றும் மகாளய பக்ஷம் ஆன்மா சுத்திகரிப்புக்கு முக்கியம்.
  • குடும்ப செழிப்புக்கான தீர்வுகள் கால புருஷ தத்துவத்தில் உள்ளன.

Summary

  • கால புருஷ தத்துவம் என்பது மனிதன் பிறப்பின் காரணம் மற்றும் கர்மா பற்றிய கோஸ்மிக் எனர்ஜி ஆகும்.
  • ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான டிராப்கள் மற்றும் வாழ்க்கை பாடங்கள் உள்ளன.
  • கடக ராசிக்காரர்கள் மூதாதையர்களின் பிறப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் குடும்ப உறவுகள் முக்கியம்.
  • கடக ராசிக்காரர்களுக்கு உள்ள மனசு அமைப்பு இளகினமும் கல் மனசாகவும் மாறக்கூடியது.
  • கன்னி தெய்வ வழிபாடு மற்றும் மகாளய பக்ஷம் போன்ற வழிபாடுகள் ஆன்மா சுத்திகரிப்புக்கு உதவும்.
  • முந்தைய பிறப்புகளின் தாக்கம் குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் வெளிப்படுகிறது.
  • கடக ராசிக்காரர்கள் குடும்பத்தில் உள்ள நோய்கள் மற்றும் ஆன்மீக சிக்கல்களை கவனிக்க வேண்டும்.
  • கால புருஷ தத்துவம் மூலம் குடும்ப செழிப்புக்கும் ஆன்மீக தீர்வுகளுக்கும் வழிகாட்டல் கிடைக்கிறது.
  • கடக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் துணிச்சலுடன் செயல்படுவார்கள் மற்றும் சிக்கல்களை சமாளிப்பார்கள்.
  • இந்த வீடியோ கால புருஷ தத்துவத்தின் ரகசியங்களை தெளிவாக விளக்குகிறது.

Full Transcript — Download SRT & Markdown

00:06
Speaker A
வணக்கம்மா
00:07
Speaker B
வணக்கம்
00:08
Speaker A
எப்படி இருக்கீங்க?
00:09
Speaker B
நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?
00:10
Speaker A
நல்லா இருக்கேன். சோ ஒவ்வொரு ஒவ்வொரு வாரமும் நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா ஒவ்வொரு ராசிகளுக்கும் எது முக்கியம் என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது அப்படிங்கறத ரொம்ப தெளிவா சொல்லிட்டு இருக்கோம். அதுல ரொம்ப முக்கியமா கால புருஷ தத்துவம் அப்படிங்கறது இருக்கு. அதுதான் ரொம்ப முக்கியம் அப்படிங்கறதும் எல்லாருமே எல்லாராலும் சொல்லப்படுது.
00:25
Speaker B
கால புருஷ தத்துவம் அப்படிங்கறது வந்து இந்த காஸ்மிக் எனர்ஜி. நம்ம ஏன் பிறந்தோம் அப்படிங்கறதுக்கான காரணம் அதாவது கர்மா. நம்ம வந்து காரண காரியத்தோட தான் பிறக்கிறோம் அப்படிங்கறது இருக்கு. அதாவது தலை முதல் பாதம் வரை அப்படின்னு சொல்றது. அதுதான் வந்து மேஷம் முதல் மீனம் வரை. ஒரு மனுஷன் ஏன் மேஷத்துல பிறக்கிறாங்க? அப்போ அவங்க என்ன ட்ராப்ல சிக்க போறாங்க? எப்படி அவங்க வாழ்க்கையிலிருந்து ரிலீவ் ஆகணும்? ஏன்னா மனிதன் மீண்டும் மீண்டும் பிறக்கிறாங்க அப்படின்னாலே நம்ம ஏதோ ஒரு செய்யாத ஒரு கடமையை திரும்பவும் முடிக்கிறதுக்காக பிறந்த ஒரு பிறப்பு.
00:56
Speaker B
இல்ல லைஃப் எக்ஸ்பீரியன்ஸ்க்காக வரோம். எல்லாருமே வந்து கடமையை முடிக்கிறதுக்கு தான் பிறந்தாங்களா அப்படிங்கறது கிடையாது. அதுதான் கால புருஷ தத்துவம். அதாவது இன்னும் ஜர்னி இருக்கு அப்படிங்கற ராசிகளும் இருக்காங்க.
01:42
Speaker B
இல்ல உங்களுக்கு ஜர்னி முடிய போகுது. அதனால இந்த ஜென்மத்திலேயே இதை முடிச்சுக்கோங்க. இதுக்கான விடையை நீங்க கண்டுபிடிச்சிருங்க அப்படிங்கற ஒரு விஷயம் தான் இது.
01:53
Speaker B
சோ இந்த கால புருஷ தத்துவம் அப்படின்னு பாக்குறப்போ இது வந்து வைட் ரேஞ்ச் ஆஃப் நாலேட்ஜ். அதுதான் அந்த கால புருஷ தத்துவம்.
02:00
Speaker B
மனிதன் பிறப்பிலிருந்தே கொஞ்ச நாள்ல தேட ஆரம்பிச்சிருவாங்க நான் ஏன் பிறந்தேன் நான் யாரு என்னோட ஐடென்டிஃபிகேஷன் என்ன மாறிக்கிட்டே இருக்கும். ஒரு குழந்தை பருவத்திலிருந்து ஒவ்வொரு விஷயமும் மாறிக்கிட்டே இருக்கிறப்போ நமக்கு ஆசாபாசங்கள்னு ஒன்னு இருக்கும். ஆனா விதி வேறு ஒரு வழியில கூட்டிட்டு போகும்.
02:15
Speaker B
கால புருஷன் அப்படிங்கறது காலம் அப்படிங்கறது நேரம். புருஷன் அப்படிங்கறது பர்சன் மனிதனை சொல்லக்கூடியது. அதுதான் கால புருஷன். இந்த காலத்துல இந்த மனிதன் பிறக்கிறார் அப்படிங்கறதுதான். எப்படி வந்து 24 மணி நேரத்தை வந்து 12 மணி நேரமா பிரிக்கப்பட்டதோ அதுதான் வந்து இந்த 12 ராசிகள்.
02:31
Speaker A
சோ அந்த கால புருஷ தத்துவம் 12 ராசிகளுக்கும் இப்போ ஒவ்வொரு ராசியும் பிறக்கிறவங்களுக்கு வந்துட்டு ஒவ்வொரு ட்ராப் இருக்கும். இந்த விஷயம் பண்ணலாம் இந்த விஷயம் பண்ணக்கூடாது. இவங்க இதுக்காக தான் பிறந்திருக்காங்க அப்படிங்கிற நிறைய விஷயங்கள் சொன்னீங்க. சோ அப்படிங்கறத நம்ம ஒவ்வொரு ராசிக்கும் பார்க்கலாம்.
03:27
Speaker A
கடக ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ரொம்ப முக்கியம் கால புருஷ தத்துவம் அப்படின்னு சொல்லிருக்கீங்க. கடக ராசி கடகம் சொன்னாலே வந்துட்டு இவங்க எல்லாத்துலயுமே வந்து ரொம்ப பிரேவா இருப்பாங்க. எதுலயுமே வந்து ரொம்ப துணிச்சலா செயல்படுவாங்க. சோ எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை தாண்டி ஈஸியா ஃபேஸ் பண்ணி தாண்டி வந்துருவாங்க அப்படின்னு சொல்லுவாங்க. கால புருஷ தத்துவம் அந்த ராசிக்கு என்ன சொல்லுது?
03:46
Speaker B
கால புருஷ தத்துவம் இவங்களுக்கு சொல்லக்கூடிய விஷயம் என்னன்னா இதயப் பகுதியை சொல்லுது. இளகின மனசு அப்படிங்கிற விஷயத்தை சொல்லுது. அப்படியே அந்த இளகின மனசு கல் மனசாவும் மாறக்கூடிய அமைப்பு. இது ரெண்டுமே வந்து கடகத்துக்கு உண்டு. இவங்க வந்து ஒன்னு அம்மாட்ட பயங்கர கனெக்டடா இருப்பாங்க. இல்ல அப்படின்னா அம்மாவுடைய அன்புக்கு ரொம்ப ஏங்கக்கூடிய ஒரு அமைப்பு. ஏதோ ஒரு வகையில அம்மாவால ஒரு இம்பாக்ட் அப்படிங்கறதுதான் கால புருஷ தத்துவத்துப்படி இவங்களுக்கு சொல்லக்கூடிய விஷயம். அது இன்னொரு ரகசியம் என்ன இவங்களுடைய பிறப்புக்கு அப்படின்னா இவங்க எல்லாம் வந்து மூதாதையர்களோட பிறப்பு.
04:15
Speaker A
கடக ராசிக்காரர்கள் மூதாதையர்களோட பிறப்பு.
04:18
Speaker B
மூதாதையர்களோட பிறப்பு. அந்த மூதாதையர் யாருன்னு பாக்குறப்போ ஒன்னு அம்மாவுடைய லைன்ல இருந்து இருப்பாங்க. இல்லன்னா அப்பாவுடைய அப்பா இருப்பாங்க இல்லையா தாத்தா. தாத்தாக்கு ஒரு தங்கையோ இல்ல ஒரு இப்போ வந்து இவங்க பெண் குழந்தையா பிறக்கிறாங்கன்னா அது தாத்தாவுடைய தங்கையா இருக்கும். ஆண் குழந்தையா பிறக்கிறாங்கன்னா அம்மாவுடைய தம்பி யாராவது சிறு வயசுல இறந்தவங்களா இருப்பாங்க. சோ அப்படித்தான் இங்க வந்து கனெக்ட் ஆகி வந்து பிறப்பாங்க. திருப்பி அதாவது வாழ முடியாத ஒரு வாழ்க்கையை திரும்பவும் வந்து வாழக்கூடிய அமைப்புதான் வந்து கால புருஷ தத்துவம் இவங்களுக்கு சொல்லக்கூடிய ஒரு விஷயம். அப்போ இவங்க எல்லாம் வந்து இப்போ வந்து வீட்ல கன்னி தெய்வ வழிபாடு எல்லாம் பண்ணிட்டு இருப்பாங்க. சில பேர் பண்ணவே மாட்டாங்க. அதை ஞாபகப்படுத்திருக்கனே பிறக்கக்கூடிய குழந்தைகள் தான் இவங்க.
05:37
Speaker B
அம்மாவுடைய அம்மா அதாவது அம்மாக்கு பாட்டி இருப்பாங்க அவங்களுக்கு ஏதாவது ஒரு குழந்தை பிறந்து இறந்திருக்கும். ஆண் குழந்தையா இருக்குது அப்படின்னு வச்சுக்கோங்க மறந்து போயிருப்பாங்க அந்த காலத்துல எல்லாம் மறந்து போயிருப்பாங்க. இது நினைவுபடுத்த வரும். அதே மாதிரிதான் அப்பாவுடைய அப்பா அவருக்கு தங்கை குட்டி குழந்தையில அந்த மாதிரி இல்லன்னா ஒரு பதின் பருவத்துல அந்த மாதிரி இறந்திருப்பாங்க. திருப்பி இங்க மீண்டும் பிறந்து வந்து ரிமைண்ட் பண்ணும். ஏன் அப்படின்னா லைஃப்ல சில ஸ்ட்ரகிள்ஸ் கொடுக்கும்.
06:40
Speaker A
எப்படி இருப்பாங்க அவங்க அவங்கள மாதிரியே இருப்பாங்களா இல்ல என்ன மாதிரி இருக்கும்?
06:43
Speaker B
அதாவது அந்த ஆன்மா. அந்த ஆன்மாவுடைய கண்டினியூட்டி லைஃப். எந்த ஞாபகமும் அந்த குழந்தைக்கு இருக்காது. அது என்ன அப்படின்னா குலதெய்வத்தை ரிமைண்ட் பண்றதுக்கும் நீங்க வந்து இந்த கன்னி வழிபாட்டை சரியா பண்ணல இதை சரியா பண்ணுங்க. இவங்க எல்லாம் வந்து அந்த மகாளய பக்ஷம் அமாவாசை எல்லாம் வருது இல்லையா பித்ருக்களுக்கானது. அந்த டைம்லயும் இப்போ பெண் குழந்தையா இருக்காங்கன்னா ஆடி அமாவாசையிலயும் இல்ல அவங்க எல்லாம் எப்போ இறந்தாங்கன்னு எனக்கு தெரியலைன்னா பெஸ்ட் மகாளய பக்ஷம் தான். அந்த அமாவாசையில இவங்களுக்கு வச்சு சில பூஜைகள் எல்லாம் வீட்டுக்கு வெளியே தான் வச்சு பண்ணனும். இது வீட்டுக்குள்ள வச்சு பண்ணக்கூடியது இல்லை. நம்ம போய் இல்ல நாங்க கயாக்கு போனோம் நாங்க ராமேஸ்வரம் அதெல்லாம் கிடையாது. இது வந்து எப்படின்னா வீட்டுக்கு வெளியே வச்சு சில ஒரு இனிப்பு உப்பு சேர்க்காம செய்யணும் அதை. உப்பு சேர்க்காம இனிப்பு வச்சு ஒரு படையல் பண்ணிட்டு இவங்களுக்கு ஏதாவது ஒரு டிரஸ் எடுத்து கொடுத்துட்டு சவுத் ஃபேசிங்ல ஒரு விளக்கு வச்சிட்டு நல்லபடியா கிளம்புங்க அப்படின்னு அந்த ஆன்மாக்களை அனுப்பி விடணும். ஏன் அப்படின்னா அந்த அந்த டைம்ல எல்லாம் வந்து ஒரு சரியான முறைப்படி யாரும் ஒரு சென்ட் ஆஃப் கிளியரன்ஸ் எல்லாம் கொடுத்திருக்க மாட்டாங்க. வழிபாடும் பண்ணிருக்க மாட்டாங்க. அதெல்லாம் வந்து சிக்குன ஆன்மாக்கள்.
08:24
Speaker A
ஓகே
08:25
Speaker B
அந்த எனர்ஜி இவங்களை அஃபெக்ட் பண்ணிட்டே இருக்கும். நல்லா கவனிச்சு பார்த்தா தெரியும். சின்ன வயசுல இவங்க துருதுருன்னு இருக்கிறதும் ஸ்கின் இன்ஃபெக்ஷன்ஸ் வர்றதும் உடம்புல ஏதாவது ஒரு உபாதைகள் வந்துட்டே இருக்கும். ஆனா இவங்களுக்கு இந்த குழந்தைகளுக்கு தெரியவே தெரியாது. அவங்க பாட்டுக்கு விளையாடிட்டே தான் இருப்பாங்க. நெருப்பு காயம் ஏற்படுறது அடிபடுறது ரத்தம் வர்றது ஆனா வலி தெரியாது. அந்த மாதிரி நிறைய கடகத்துக்கு இருக்கும். ஸ்கின் பார்த்தீங்கன்னா நிறைய பிம்பிள்ஸ் வர்றது. ஏதோ ஒரு ஒரு ரியாக்ஷன்ஸ் பாடிலங்கறது அவங்களுக்கு இருந்துகிட்டே இருக்கும். சுத்தி இருக்கிறவங்களுக்கு பெரியவங்களுக்கு தான் அந்த விஷயத்தை காட்டி கொடுத்துட்டே இருக்கும். அந்த குழந்தை அது சஃபர் பண்ணாது. அதுக்கு வந்து அதோடைய பெயின் தெரியாது. ஏன்னா அது முன்னோர். அது வந்து மத்தவங்களுக்கு உணர்த்த தான் அது வந்திருக்கு அப்படிங்கறப்போ இந்த குழந்தை கஷ்டப்படுற மாதிரியே நமக்கு தெரியும். ஹாஸ்பிடல்ஸ் நிறைய கூட்டிட்டு போற மாதிரியே இருக்கும். சளி பிடிக்கிறது ஃபீவர் வர்றதுங்கறதெல்லாம் கண்டினியூஸா இருந்துகிட்டே இருக்கிற மாதிரி இருக்கும். இது ஏன் இது ஏன்னு இவங்களை யோசிக்க வைக்காது. கடக ராசிக்காரங்களை யோசிக்க வைக்காது. குடும்பத்துல இருக்கிறவங்களை யோசிக்க வைக்கும். இந்த குழந்தைக்கு ஏன் இப்படி போயிட்டு ஒவ்வொன்னா ஒவ்வொருத்தங்க கிட்டயும் கேள்வி கேட்க ஆரம்பிக்கிறப்போ யாரோ ஒருத்தங்க இதுக்கான பதிலை கண்டுபிடிப்பாங்க. இந்த வீட்ல அப்போ வந்து இந்த கன்னி வழிபாட்டை நம்ம விட்டுட்டோம். அப்ப இது நம்ம சரி பண்ணிட்டா ஏதோ ஒரு ஜோதிடர் மூலமா தெரியறதோ எப்படியோ அவங்களுக்கு தெரிய வரும். அதுக்கான சொல்யூஷன் அங்க கொடுத்தாதான் இந்த குடும்பமே இங்க செழிப்பா மாறும். இதுதான் கால புருஷ தத்துவத்துடைய ரகசியமே அதுதான்.
10:20
Speaker A
கடக ராசிக்காரர்களுக்கு இப்படி ஒரு இப்படி ஒரு விஷயம் இருக்கு.
10:24
Speaker B
இப்படி ஒரு ரகசியம் இருக்கு அவங்களுக்கு. சோ இவங்களை வந்து முன்னோர்களுடைய எனர்ஜிங்கறது ப்ரொடெக்ட் பண்ணிட்டே தான் இருக்கும். ஏதோ ஒன்னு இவங்களை ப்ரொடெக்ட் பண்ணிட்டே இருக்கும். ஹெல்த் மட்டும் இவங்க பார்த்துக்கணும். அதாவது பரம்பரையில் சில நோய்கள் இருக்குன்னு வச்சுக்கோங்க. கேன்சர் ரிலேட்டடான விஷயங்கள் அதெல்லாம் வந்து இவங்களை டச் பண்ணும். சோ அதெல்லாம் வந்து பார்த்துக்கணும். அதெல்லாம் வந்து சின்ன வயசுல இருந்தே வந்து பேரண்ட்ஸ் வந்து அதை டேக் கேர் பண்ண ஆரம்பிக்கணும். ஏன்னா தாம் தூன்றித்தனமா வளரக்கூடிய அமைப்புங்கறது கடகத்துக்கு உண்டு. அதே மாதிரி நிறைய விஷயங்களை கண்டுபிடிக்கிறதுக்கும் பிறந்தவங்க கடகம்.
10:52
Speaker A
சோ பிரேவா தெளிவா இருக்கும்.
10:53
Speaker B
டிஸ்கவர் பண்ணுவாங்க. இன்வென்ட் பண்ணக்கூடிய அமைப்பும் வந்து கடகத்துக்கு உண்டு. இப்போ எலான் மஸ்க் எல்லாம் வந்து கடக ராசி.
11:40
Speaker B
சோ அவர் எல்லாம் வந்து இந்த உலகத்தையே திருப்பி போடக்கூடிய ஒரு அமைப்பு அவருக்கு இருக்கு.
11:45
Speaker B
அப்படிங்கறப்போ இந்த ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் பெருசா அவரோட கையில இருக்கு அப்படிங்கறப்போ ஒரு விஷயத்தை மாத்துறதுக்காக ஒரு பிறந்த ஒரு பிறப்பு. அதே மாதிரி நம்மளுடைய ஆக்டர் விஜயும் கடகம் தான். சோ இந்த கடகத்துல பிறந்தவங்க மோஸ்ட்லி வந்து பப்ளிக்ல ஒரு ஒரு டர்னிங் பாயிண்ட்ட கொடுக்கக்கூடியவங்களாவோ மத்தவங்களை வந்து அட்ராக்ட் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு. ஜெனரலாவே கடக ராசியில் இருக்கிறவங்க பிரண்ட்ஸ் கிட்ட இவங்க தான் வந்து ஒரு தனித்துவமா தெரியறது. இவங்க இருந்தா அங்க ஒரு என்டர்டைன்மென்ட்டா இருக்குறது. ஏன்னா இவங்க எல்லாம் ஒரு கைண்ட் ஆஃப் இந்த குழந்தையா இருந்து இறந்த ஒரு சோல்ஸ். எப்பவுமே குழந்தைத்தனம்ங்கறது இவங்க கிட்ட இருந்துட்டே இருக்கும். சோ ட்ராப்னு பார்த்தீங்கன்னா ஹைலி பொசசிவ். ரொம்ப பொசசிவ் எடுத்தெறிஞ்சு பேசக்கூடிய ஒரு அமைப்பு. இந்த விஷயத்துல இருந்து இவங்க வெளிய வந்து டோட்டல் சர்வீஸ் ஓரியண்டடான விஷயங்களை இவங்க டச் பண்ணனும். ஏன்னா இவங்க எல்லாம் ஹீலர்ஸ். இவங்க எல்லாம் டாக்டர்ஸ் ஆகக்கூடிய அமைப்பு ரொம்ப அதிகம் கடகத்தில் இருக்கிறவங்க. மெடிசின் ரிலேட்டடான விஷயங்கள் ஹாஸ்பிடாலிட்டி அப்படிங்கறதெல்லாம் கடகம் தொட்டுட்டாங்க அப்படின்னா விமோசனம் அதுலயே அவங்களுக்கு கிடைச்சிரும். ஏன்னா இவங்க ஒரு விஷயத்தை எடுத்து ஒரு ஒரு பெர்ஃபெக்ஷனா செய்யக்கூடிய ஒரு அமைப்பு. மத்தவங்களுக்கு வேலை செய்யக்கூடிய அமைப்பு. வீட்டுக்குள்ள ஒரு சோம்பேறி. ஆனா வெளியே இருக்கிறப்போ இழுத்து போட்டு செய்றாங்கன்னா அந்த ஆர்கனைசேஷன் ஸ்கில் அப்படிங்கறது இவங்களுக்கு உண்டு. ஏன்னா அது ஒரு குழந்தையாவே இருந்து வந்த ஆன்மா அப்படிங்கறதுனால அந்த குழந்தை எப்படி துருதுருன்னு எல்லா வேலையும் இழுத்து போட்டுட்டு டயர்ட் ஆகாம இருக்குமோ அந்த மாதிரி ஒரு அமைப்பு.
13:44
Speaker B
அப்படி இருந்துட்டாங்கன்னா ஓகே. ஆனா ட்ராப் எங்க கடகத்தை கொண்டு போகும்னா எல்லா தீய பழக்கங்களிலும் விழ வைக்கும். சிறு வயதிலிருந்தே அவங்களுக்கு அந்த அந்த ஒரு ஆப்பர்சுனிட்டியை கிரியேட் பண்ணி கொடுக்கும். எல்லாத்தையுமே ட்ரை பண்ணி பாரு. களவும் கற்றுமறங்கறது கடகம் தான். அதிலிருந்து அவங்க மீண்டு வந்தாங்களோ அந்த லைஃப் லெசன்ஸ் இப்படி ஒவ்வொன்னா அதாவது லவ்டு ஒன்ஸ முதல்ல பிரிக்கும். பிரிச்சு ஃபீல் பண்ண வைக்கும். ஏன் இவங்க என்னை விட்டு போனாங்க? அப்படி யோசிக்க மாட்டாங்க. நான் என்ன பண்ணுனேன் அப்படிங்கறதையும் யோசிக்க தெரியாது. வேற யாரையோ சுத்தி இருக்கிறவங்களை திட்டிட்டு இருப்பாங்க. அவங்கனால போயிட்டாங்க இவங்கனால போயிட்டாங்க. அது கரெக்டா இருந்தா இவங்க கிட்ட இருந்திருப்பாங்க. இந்த ரெண்டு பக்கமும் கண்டுயே பிடிக்க தெரியாது. அந்த அன்புக்காக ஏங்கிட்டே இருக்கிறது. ஆனா இயற்கை இவங்களுக்கு வேற ஒரு லைஃப் பார்ட்னரை உருவாக்கி கொடுக்கும். அதை வச்சு வாழ்றதுக்கு முதல்ல சொல்லிக் கொடுக்கும். அக்செப்ட் பண்ண சரண்டர் ஆகு அப்படிங்கற விஷயத்தை முதல்ல இவங்களுக்கு சொல்லிக் கொடுத்து அந்த அக்செப்டன்ஸ் குள்ள கொண்டு போக வச்சுக்கிட்டே இருக்கும் கடகத்தை.
15:18
Speaker A
இப்ப கடகம் சொல்லும்போது என்ன சொல்லுவாங்கன்னா வீட்டுக்கு ஒரு கடக ராசிக்காரர்கள் இருந்தா போதும். சோ எல்லாரும் வந்து பிளஸ்ஸிங்கா இருப்பாங்க அப்படின்னு. சோ கடக ராசிக்காரர்கள் குழந்தைகளுக்கு நான் கேட்கிறேன். அவங்களுக்கு படிப்பு எல்லாம் எப்படி இருக்கும்? இந்த கால புருஷ தத்துவம் என்ன சொல்லுது?
15:30
Speaker B
கால புருஷ தத்துவம் வந்து கடகத்துக்கு படிப்புக்கு எப்படி சொல்லுதுன்னா எனிதிங் ரிலேட்டட் டு சயின்ஸ் டிஸ்கவர் பண்ணக்கூடிய ஒரு விஷயம். லாங்குவேஜஸ் இதெல்லாம் வந்து அவங்களுக்கு நல்லா வரும். கணக்கு வராது. கணக்கு வராது அவ்வளவு சீக்கிரம் கடகத்துக்கு கணக்கு வராது. அந்த கணக்கு கிட்ட போறப்போ அது அதுல புரிஞ்சுக்க முடியாது. அந்த கால்குலேஷன்குள்ள போக மாட்டாங்க. ரொம்ப டைம் எடுக்கும் அவங்களுக்கு மேக்ஸ் புரியறதுக்கு நம்பர்ஸ் புரியறதுக்கு. இதே இது வந்து நீங்க எவ்வளவு காம்ப்ளிகேட்டடான சயின்ஸ் ரிலேட்டடா அந்த பயாலஜி இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நீங்க காட்டுறீங்கன்னா புரியும். ஏன்னா இவங்களுடைய பிறப்பின் தேடலே அதுதான். ஒரு நோய்க்கு உண்டான மருந்தை கண்டுபிடிக்கக்கூடிய அமைப்பு. ஒரு மனித உடல் பாகங்கள் என்னங்கறது நோண்டி தெரிஞ்சுக்கக்கூடிய அமைப்பு. ஒரு பயாலஜி பேசினீங்கன்னா நல்லா பேசுவாங்க. கரெக்டா அந்த குழந்தை அதுல மட்டும் நல்ல மார்க் வாங்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கும். லாங்குவேஜ்ல நல்ல மார்க் வாங்கிட்டு இருக்கிற மாதிரி இருக்கும். ஆனா இந்த கணக்குன்னு வரப்போ நீங்க எப்பேர்ப்பட்ட எப்படி சொல்லிக் கொடுத்தாலும் சரி தான் அது எங்கேயாவது சயின்ஸ் ரிலேட்டடா மைண்ட்ட கனெக்ட் பண்ணுனா வந்துரும்.
17:09
Speaker A
ஓகே
17:10
Speaker B
ஆனா அது நம்பர்ஸா பாக்குறப்போ அவங்களால அதை ஞாபகத்துல வச்சுக்க முடியாது. இதுதான் சூட்சுமம் அவங்களுடைய சூட்சுமமே. சோ அதனால இப்போ வந்து அவங்க கெமிஸ்ட்டா போறாங்க அப்படின்னா அதுலயும் அந்த நம்பர் கால்குலேஷன்ஸ் அப்படின்னு எல்லாம் வரப்போ கெமிஸ்ட்ரி கொஞ்சம் தட்டுப்படும் அவங்களுக்கு. பிசிக்ஸ் லைட்டா கொஞ்சம் நல்லா இருக்கிற மாதிரி இருக்கும். பட் பாட்டனி, ஜுவாலஜி, பயாலஜி இவங்க வந்து வெட்னரி டாக்டர்ஸா போகக்கூடிய அமைப்பு. கைனகாலஜிஸ்ட், பீடியாட்ரிஷியன்ஸ் குழந்தைகளுக்கு குழந்தைங்க டாக்டர்ஸா இவங்க எல்லாம் இருக்காங்க பீடியாட்ரிக்ஸா இருக்காங்கன்னா தே ஆர் பெஸ்ட் டாக்டர்ஸ். கைனகாலஜிஸ்ட்டும் அப்படித்தான். ஏன்னா இந்த உடல்ல இருக்கக்கூடிய விஷயங்களை கண்டுபிடிக்கக்கூடியவங்க இவங்க. சோ இவங்க வந்து மைக்ரோபயாலஜி எடுக்குறாங்க இல்ல பார்மசிஸ்ட் எடுக்குறாங்க அப்படின்னா கொஞ்சம் தடுமாறக்கூடிய அமைப்புங்கறது இவங்களுக்கு இருந்து ஹீலிங் ரிலேட்டடா உள்ள போயிட்டாங்க. ஹாஸ்பிடாலிட்டி டச் பண்ணிட்டாங்கன்னா தப்பிச்சிருவாங்க.
18:35
Speaker A
சோ நீங்க கடகம் அப்படின்னு சொல்லும்போது வந்துட்டு முக்காவாசி பார்த்தா கெமிஸ்ட்ரி, பயாலஜி, ஜுவாலஜி அப்படின்னு சயின்ஸ் சயின்ஸ்ல தான் போயிட்டு இருக்கும். சயின்ஸ் இல்லாம எந்த துறையில அவங்க வருவாங்க?
18:44
Speaker B
இப்போ சயின்ஸ் இல்ல அப்படின்னு வச்சுக்கோங்களேன் இவங்க கலை சம்பந்தப்பட்ட விஷயங்களை கை வச்சிருவாங்க. எப்படி இருந்தாலும் வெளியே தெரியக்கூடிய அமைப்புல வந்துருவாங்க. ஏன்னா இவங்களுக்கு சில கடகத்துக்கு வந்து சிறு வயசுலயே படிப்பை பாதியில கட் பண்ணக்கூடிய அமைப்பு எல்லாம் இருக்கும். இன்ட்ரஸ்ட் இல்லாம எனக்கு இது போதும் எனக்கு இவ்வளவுதான் வரும் எனக்கு படிக்கலாம் வராது ஒரு டிகிரின்னு ஒரு பேருக்கு ஒன்னு வாங்கி வச்சுக்கிறது. படிச்ச படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது. அலைச்சல் இருந்துகிட்டே இருக்கும். சுத்தி சுத்தி தேடிட்டே இருப்பாங்க. எனக்கு என்ன வரும் எனக்கு என்ன வரும்னு. ஸ்டாண்டர்டைஸ் ஆகாம ஸ்டெபிலைஸ் ஆகாம இருக்கக்கூடிய கடகம் ரொம்ப அதிகம். அப்போ பிசினஸ் பண்ணனும்ங்கற மைண்ட்செட் வரப்ப இவங்க எல்லாம் வந்து மில்க் ப்ராடக்ட்ஸ் மாதிரி போய்க்கணும். எனிதிங் ரிலேட்டட் டு ஒயிட் கலர் ஒரு பிசினஸ் அந்த மாதிரி பால் வெண்ணெய் இந்த மாதிரி விஷயங்களுக்குள்ள அவங்க போறப்ப சேஃப். ஏன்னா அகைன் அதுவும் சர்வீஸ் ரிலேட்டடாவும் ஃபுட் ரிலேட்டடா விஷயத்துல அவங்க போகலாம். ஆனா ஹைஜீனா கரெக்டா நியாய தர்மத்தோட இருந்தாங்க அப்படின்னா இவங்க சமைச்சு கொடுக்கிற உணவு அப்படிங்கறது அவ்வளவு டேஸ்டா இருக்கும்.
20:32
Speaker A
கடக ராசிக்காரர்கள் இந்த கால புருஷ தத்துவத்தின்படி இவங்க இந்த தெய்வத்தை கும்பிட்டா சிறப்பா இருக்கும். இந்த நிறைய பேர் நிறைய சொல்லுவாங்க. இந்த ராசிக்காரர்கள் இந்த முருகனை தான் வழிபடணும். இந்த ராசிக்காரர்கள் சிவனை தான் போய் வழிபடணும் அப்படின்னு சொல்லி சொல்லுவாங்க. சோ கடக ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வழிபட்டா சிறப்பா இருக்கும்?
20:48
Speaker B
கடக ராசிக்காரர்கள் வந்து நாகம் சம்பந்தப்பட்ட தெய்வங்கள். இப்போ அவங்க போகக்கூடிய கோயில்கள் அப்படின்னா அங்க நாகம் நாகத்தோடைய ஆதிக்கம் இருக்கணும். இப்போ சிவன் கோயிலுக்கு போறாங்க சங்கரன் கோயிலுக்கு போய் வழிபாடு பண்றது. அங்கெல்லாம் வந்து ராகு கேது ஸ்தலம் அது. அந்த மாதிரி ஒரு ஸ்தலத்துக்கு போய் வழிபாடு பண்றப்போ ஏன்னா இவங்க எல்லாம் வந்து முன்னோர்கள். அதே மாதிரி நாக சாபம் நாக தோஷம் இருக்கக்கூடிய அமைப்பும் கடகத்துக்கு எல்லாம் உண்டு. சோ அவங்க வந்து செவ்வாய் தோஷம் இருக்கக்கூடிய அமைப்பும் கடகத்துக்கு உண்டு. அதனால இவங்க வந்து அந்த நாகம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு போய் வழிபாடு பண்றாங்க அப்படின்னா கொஞ்சம் கிளியரன்ஸ் அப்படிங்கறது அவங்களுக்கு கிடைச்சிட்டு இருக்கும்.
21:59
Speaker A
தொடர்ந்து கால புருஷ தத்துவப்படி என்னென்ன ட்ராப்ஸ் இந்த 12 ராசிகளும் இருக்கும். ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தெந்த விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கணும். எந்த கடவுளை வணங்கணும். சில ராசிகளுக்கு குரு சொல்றதை கேட்கணும். தனக்குன்னு ஒரு குரு வச்சுக்கணும். அந்த குரு சொல்றதை கேட்கணும். லைஃப் பார்ட்னரை வந்து சிறப்பா தேர்ந்தெடுக்கணும் அப்படின்னு நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க.
22:20
Speaker A
இதுல நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கும். சோ எல்லாரும் ஒரே மாதிரி ஒரே ஆங்கிள்ல சொல்ல மாட்டாங்க. நிறைய அஸ்ட்ராலஜர் இருக்காங்க. நிறைய ஆங்கிள்ஸ்ல நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க. இதுல டவுட்ஸ் இருந்து ரொம்ப தெளிவா இதை பத்தி தெரிஞ்சுக்கணும்னா எப்படிமா அணுகுறது?
22:33
Speaker B
அதாவது நான் இப்பதான் அஸ்ட்ராலஜி கிளாஸ் ஸ்டார்ட் பண்றேன். நம்மளுடைய வாழ்க்கை என்ன அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படின்னா நம்மளுடைய ஹாரோஸ்கோப் சார்ட் நம்ம தெரிஞ்சுக்கணும். இந்த கலியுகத்தை பத்தியும் நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுனால அஸ்ட்ராலஜி யார்லாம் இன்ட்ரஸ்டடா இருக்காங்களோ கத்துக்கணும் அப்படின்னு இன்ட்ரஸ்டடா இருக்காங்களோ அவங்க எல்லாம் வந்து செப்டம்பர் ஆறாம் தேதியிலிருந்து நான் வந்து அஸ்ட்ராலஜி கிளாஸ் அப்படிங்கறது ஸ்டார்ட் பண்றேன். இதுதான் வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் அப்படின்னு ஸ்டார்ட் பண்றேன். சோ கீழ தெரியிற நம்பருக்கு அவங்க வந்து வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்க கால் இல்ல வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்கன்னா அவங்களுக்கான டீடைல்ஸ் வரும்.
23:44
Speaker A
ஜோதிடம் பத்தின உங்களுக்கு எந்த டவுட்ஸா இருந்தாலும் இல்ல ஜோதிடம் படிக்கணும் அப்படின்னு ஆர்வம் இருந்தா செப்டம்பர் ஆறிலிருந்து கிளாஸ் ஸ்டார்ட் ஆகுது. கீழ இருக்க வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி நீங்க கிளாஸ் ஜாயின் பண்ணிக்கலாம். தொடர்ந்து இன்னும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு சொல்லிக்கிட்டே இருப்போம். தொடர்ந்து பேசுவோம் நன்றி.
Topics:கடகம்கால புருஷ தத்துவம்ராசி பலன்ஆன்மா தொடர்ச்சிமூதாதையர் பிறப்புகன்னி தெய்வ வழிபாடுமகாளய பக்ஷம்கர்மாதமிழ் ஜோதிடம்குடும்ப உறவுகள்

Frequently Asked Questions

கால புருஷ தத்துவம் என்றால் என்ன?

கால புருஷ தத்துவம் என்பது காஸ்மிக் எனர்ஜி மற்றும் நாம் ஏன் பிறந்தோம் என்பதற்கான காரணம், அதாவது கர்மா. இது தலை முதல் பாதம் வரை, மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளைப் பற்றியது.

கால புருஷ தத்துவம் மனிதனின் பிறப்புடன் எவ்வாறு தொடர்புடையது?

கால புருஷ தத்துவம் என்பது மனிதன் ஏன் பிறந்தான், என்ன கடமைகளை முடிக்க வேண்டும், அல்லது புதிய அனுபவங்களுக்காக வந்தானா என்பதை விளக்குகிறது. இது ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட பயணத்தையும், சில ராசிகளுக்கு இந்த ஜென்மத்திலேயே கடமைகளை முடிக்க வேண்டிய அவசியத்தையும் குறிக்கிறது.

கடக ராசிக்காரர்களின் முக்கிய குணம் என்ன?

கடக ராசிக்காரர்கள் எல்லா விஷயங்களிலும் மிகவும் தைரியமாக இருப்பார்கள் என்று இந்த உரையாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →