தனுசு – இந்த மூன்று விஷயங்கள் நடந்தே தீரும் | Dhanusu| … — Transcript

தனுசு ராசிக்காரர்களுக்கு கடன் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றி விவரிக்கும் வீடியோ.

Key Takeaways

  • தனுசு ராசிக்காரர்கள் கடன் கொடுக்க வேண்டாம் மற்றும் கடன் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை.
  • தட்சிணாமூர்த்தி வழிபாடு கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
  • தங்கத்தை அடமானம் வைக்காமல் வெள்ளியை அடமானம் வைக்க வேண்டும்.
  • மஞ்சள் நிற பொருட்கள் வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • தனுசு ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டவர்கள்.

Summary

  • தனுசு ராசிக்காரர்கள் கடன் கொடுக்க வேண்டாம் மற்றும் கடன் வாங்கும் போது கவனம் செலுத்த வேண்டும்.
  • கடன் வாங்கிய பணத்தை திருப்பி அடைக்க சிரமம் இருக்கும் என்பதையும் விளக்குகிறது.
  • தனுசு ராசிக்காரர்கள் பிசினஸ் மற்றும் பணம் சம்பாதிப்பதில் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் திறன் கொண்டவர்கள்.
  • தனுசு ராசி பெண்கள் கடன் வாங்குவதில் பயம் மற்றும் கவனம் காட்ட வேண்டும்.
  • தட்சிணாமூர்த்தி தெய்வத்தை வழிபாடு செய்வது கடன் பிரச்சனைகளில் உதவும்.
  • தங்கத்தை அடமானம் வைக்க வேண்டாம், அதற்கு பதிலாக வெள்ளியை அடமானம் வைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • மஞ்சள் நிற பொருட்களை பயன்படுத்தி வழிபாடு செய்வது கடன் பிரச்சனைகளை தீர்க்க உதவும்.
  • தனுசு ராசிக்காரர்கள் கடன் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க தாழ்மையுடன் பணியாற்ற வேண்டும்.
  • கடன் வாங்கி செலவு செய்தால் கடன் திருப்பி கொடுக்க கடுமையான முயற்சிகள் தேவைப்படும்.
  • தனுசு ராசிக்காரர்கள் கர்மாவை தவிர்க்கும் வகையில் தர்மம் நோக்கி செல்ல வேண்டும்.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker 1
தனுசு ராசிக்காரங்களுக்கு எடுத்த உடனே நான் சொல்லக்கூடிய ஒரே அட்வைஸ் என்ன அப்படின்னா
00:09
Speaker 1
தனுசு ராசிக்காரங்க யாரா இருந்தாலும் சரி கடன் மட்டும் கொடுத்திடவே கொடுத்துடாதீங்க.
00:17
Speaker 1
வாங்கின கடனை அடைக்கிறதும் உங்களுக்கு கொஞ்சம் சிரமம் தான் கொடுத்த கடன் என்னைக்குமே வாரா கடன்.
00:25
Speaker 1
ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.
00:29
Speaker 1
இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்ன அப்படின்னா
00:33
Speaker 1
வாழ்க்கையில யாருக்கு தான் கடன் இல்லை.
00:35
Speaker 1
இல்லையா எல்லாத்துக்கும் பணம் சம்பாதிக்கணும் அட் தி சேம் டைம்
00:45
Speaker 1
அம்பானிக்கு கூட உண்டு எல்லாத்துக்குமே உண்டு இந்த கேள்வி.
00:47
Speaker 1
அப்படி இருக்கும்போது இந்த 12 ராசிகளுக்கும் அவங்க கடந்து வரக்கூடிய அந்த வாழ்க்கை பாதைன்னு வரப்போ அட் எனி காஸ்ட் ஏதோ ஒரு சிச்சுவேஷன்ல கடன் வாங்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது வந்துரும்.
00:56
Speaker 1
அப்படி பார்க்கிறப்போ நான் ஜோதிடம் பார்த்ததுல இருந்து என்னுடைய அனுபவத்துல
01:02
Speaker 1
ஒவ்வொரு ராசிக்காரங்களும் என்னென்ன மாதிரியான ஒரு விஷயத்துக்கு காரணமா அவங்க வந்து கடன் வாங்கினாங்க.
01:10
Speaker 1
எப்படி அவங்க அதிலிருந்து மீண்டாங்க அப்படிங்கறத வச்சு நான் இந்த 12 ராசிகளுக்கு எப்படி அப்படிங்கறத உங்களுக்கு சொல்றேன்.
01:16
Speaker 1
என்ன தெய்வத்தை வழிபாடு பண்ணனும் எப்படி அந்த கடன் கடன்ங்கிற விஷயத்திலிருந்து எப்படி வெளிய வரணும் அப்படிங்கறத பத்தி நம்ம இங்க பார்ப்போம்.
02:00
Speaker 1
தனுசு ராசிக்காரங்க எப்படி கடன் படுவாங்க அப்படின்னு பார்க்கிறப்போ
02:04
Speaker 1
இவங்க வந்து அவ்வளவு சீக்கிரம் தனுசு ராசிக்காரங்களுக்கு வந்து கடன் வாங்குறது பிடிக்காது.
02:12
Speaker 1
ஆனா கொடுக்கிறதுனா ரொம்ப பிடிக்கும் தனுசு ராசிக்காரங்களுக்கு.
02:14
Speaker 1
தனுசு ராசிக்காரங்களுக்கு எடுத்த உடனே நான் சொல்லக்கூடிய ஒரே அட்வைஸ் என்ன அப்படின்னா
02:21
Speaker 1
தனுசு ராசிக்காரங்க யாரா இருந்தாலும் சரி கடன் மட்டும் கொடுத்திடவே கொடுத்துடாதீங்க.
02:25
Speaker 1
வாங்கின கடனை அடைக்கிறதும் உங்களுக்கு கொஞ்சம் சிரமம் தான் கொடுத்த கடன் என்னைக்குமே வாரா கடன்.
02:32
Speaker 1
அப்படி வந்து அந்த கடன் உங்களுக்கு கொடுத்த கடன் திரும்பி வந்துருச்சு அப்படின்னா
02:40
Speaker 1
நீங்க ரொம்ப அவமானப்பட்டு அசிங்கப்பட்டு அவங்கள்ட்ட சண்டை எல்லாம் போட்டு கொஞ்சம் கொஞ்சமா பிச்சி பிச்சி வாங்கின பணமா தான் இருக்குமே தவிர.
02:49
Speaker 1
யாருமே தனுசு ராசிக்கிட்ட கடனை வாங்கிட்டு இந்தாங்க அப்படின்னு வந்து கொடுத்திருக்காங்க அப்படின்னா ரொம்ப ரேரஸ்ட் ஆஃப் தி ரேர் கேசஸ்.
02:58
Speaker 1
மே பி உங்களுடைய ஃபேமிலில வேற யாருக்காவது ராசி அமைப்பு கரெக்டா இருக்கும் பட்சத்துல அந்த கடன் திரும்பி வரலாமே ஒழிய.
03:05
Speaker 1
உங்களுடைய ராசியினால அந்த கடன் திரும்ப வந்ததா சரித்திரம் கிடையவே கிடையாது.
03:12
Speaker 1
ஏன்னா தனுசு ராசிக்காரங்களுக்கு வந்து
03:15
Speaker 1
கொடுக்கணும்ங்கிற எண்ணம் ரொம்ப அதிகம்.
03:18
Speaker 1
சீக்கிரம் நம்பிடுறது எல்லாத்தையுமே.
03:20
Speaker 1
இவங்களையுமே வந்து இந்த ஸ்டாக் மார்க்கெட்ஸ்ல எல்லாம் போய் பணத்தை விடுறது.
03:25
Speaker 1
என்ன பிசினஸ்னே தெரியாம அகலக்கால் வைக்கிறது ஏன்னா மல்டி டாஸ்கிங் மைண்ட் இருக்கக்கூடியவங்க இல்லையா தனுசு ராசிக்காரங்க.
03:32
Speaker 1
ஒரு வேலை பத்தாது இன்னொரு வேலை பண்ணலாம் அந்த வேலை பண்ணலாம் இந்த வேலை பண்ணலாம் இப்படியே 9 டு 5 ஜாப் போயிட்டு இருந்தா கூட பிசினஸ் மைண்ட்னு ஒரு பக்கம் வேலை பார்த்துட்டே இருக்கும்.
03:40
Speaker 1
அந்த பிசினஸை எப்படி நம்ம ரன் பண்ண போறோம் அந்த லாங் ரன்னா எப்படி இருக்க போகுது அப்படிங்கிற எண்ணமே இல்லாம.
03:48
Speaker 1
பட்டுன்னு போய் அவசர அவசரமா வீட்ல இருக்கக்கூடிய பொருட்கள் எல்லாம் அடமானம் வச்சு வித்தோ ஏதோ ஒன்னு பண்ணி அங்க இங்க கடனை வாங்கி ஒரு பிசினஸ் அப்படிங்கறத ஆரம்பிச்சிருவாங்க.
03:56
Speaker 1
ஆனா அதை ரன் பண்றாங்களா அப்படின்னா
04:00
Speaker 1
அது ஒரு பெரிய கொஸ்டின் மார்க் தான்.
04:02
Speaker 1
சோ ஆடம்பரமான விஷயங்களுக்கும் இவங்க வந்து தனுசு ராசிக்காரங்க வந்து கடன் வாங்குவாங்க.
04:07
Speaker 1
அது முக்கியமா ஆண்கள் அந்த கடன் வாங்குவாங்க.
04:09
Speaker 1
பெண்கள் அப்படி கடன் வாங்குவாங்களா அப்படின்னா
04:12
Speaker 1
பெண்களுக்கு அந்த கடன் வாங்குறது தனுசு ராசி பெண்களுக்கு வந்து பயம்.
04:17
Speaker 1
கடன் வாங்குறதுனாலே பயம்.
04:19
Speaker 1
முடிஞ்ச அளவுக்கு தனுசு ராசி பெண்கள் யாருக்கும் கடன் கொடுக்காம இருந்துருங்க.
04:24
Speaker 1
ஏன்னா உங்கள்ட்ட வந்து ஒரு ஆளுமை தனுசு ராசி பெண்கள்ட்ட ஒரு ஆளுமை அப்படிங்கறது இருக்கும்.
04:29
Speaker 1
நீங்க யாருக்காவது கடன் கொடுக்கிற மாதிரி இருந்தது அப்படின்னா
04:34
Speaker 1
சப்போஸ் பெண்களுக்கு நான் சொல்றேன் ஒரு கான்ட்ராக்ட் பேசிஸ்லயோ ஒரு ப்ரூஃபோட.
04:40
Speaker 1
நீங்க கடன் கொடுக்கிறீங்க அப்படின்னா ஏதோ கொஞ்சம் சதவீதம் இருக்கு.
04:45
Speaker 1
அந்த கடன் திரும்ப வரதுக்கு.
04:47
Speaker 1
இருந்தாலும் தனுசு ராசி பெண்களுக்குமே வந்து
04:51
Speaker 1
ரொம்ப இலகுன மனசு.
04:53
Speaker 1
நீங்களே என்ன பண்ணிடுவீங்க சரி கொடுத்த கடன் எனக்கு வேணாம் அப்படின்னு சொல்லிடுவீங்க.
04:57
Speaker 1
அதனால கடன் கொடுக்கவும் வேணாம் வாங்கவும் வேணாம் அப்படிங்கறதுதான் வந்து நான் தனுசு ராசிக்கு சொல்றதே.
05:02
Speaker 1
ஏன்னா நீங்க எல்லாம் வந்து குரு இல்லையா.
05:04
Speaker 1
தட்சிணாமூர்த்தி நீங்க வழிபாடு பண்ண வேண்டியதே தட்சிணாமூர்த்தியை தான்.
05:06
Speaker 1
தட்சிணாமூர்த்திக்கு வந்து தூரப்பார்வை தான்.
05:10
Speaker 1
அதாவது அவருக்கு கருணை கிடையாது.
05:12
Speaker 1
தட்சிணாமூர்த்திட்ட போய் நீங்க வந்து உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் சொல்லி எல்லாம் வழிபாடு பண்ண முடியாது.
05:17
Speaker 1
ஆனா தட்சிணாமூர்த்தி தான் தனுசுக்கான உகந்த தெய்வமே அவர்தான்.
05:20
Speaker 1
கணக்கு வழக்குல தனுசு ராசி மிக மிக கவனமா இருக்கணும்.
05:24
Speaker 1
கணக்கு வழக்கு சரியா இல்லை அப்படின்னா நிராயுதபாணி பெரும்பாலான தனுசு ராசிக்காரங்க ஆயிடுவாங்க.
05:29
Speaker 1
தனுசு ராசிக்காரங்க எனக்கு நிறைய கிளைன்ட்ஸ் தனுசு ராசி தான்.
05:31
Speaker 1
அதிக லெவல்ல செல்வ செழிப்பா இருந்து அவ்வளவு நாலேட்ஜபிலா இருந்து அவ்வளவு பிசினஸ் எல்லாம் பண்ணி இப்படி ஒரு தாட் ப்ராசஸ்ல இப்படி எல்லாம் பிசினஸ் பண்ணீங்களா.
05:40
Speaker 1
சரி என்னதான் நீங்க சேர்த்து வச்சீங்க அப்படின்னா
05:43
Speaker 1
எத்தனை நான் இழந்தேன்னு கேளுங்க எவ்வளவு நான் கடன் பட்டு இருக்கேன்னு கேளுங்க.
05:46
Speaker 1
இப்ப இந்த கடனை கட்டுறதுக்காக நான் என்னென்னலாம் விற்க போறேங்கிறதை கேளுங்க அப்படிம்பாங்க.
05:51
Speaker 1
விற்று விற்று கடன் வாங்கிட்டீங்க அப்படின்னா உங்க வீட்டுக்குள்ள இருக்க செழிப்புங்கிறது போக ஆரம்பிச்சிரும்.
05:56
Speaker 1
அதே மாதிரி ஒரு முக்கியமான அட்வைஸ் இன்னொன்னு தனுசு ராசிக்கு என்ன சொல்லணும்னா நீங்க குரு இல்லையா.
06:00
Speaker 1
தங்கம் எக்காரணத்தை கொண்டும்.
06:02
Speaker 1
தனுசு ராசிக்காரங்க தங்கத்தை அடமானமே வச்சிடவே கூடாது.
06:06
Speaker 1
ஆனா விதி என்ன பண்ணும் அப்படின்னா தனுசு ராசியை தங்கத்தை தான் அடமானம் வைக்க வைக்கும்.
06:12
Speaker 1
அப்படி தங்கத்தை வேற வழியே இல்லை நான் அடமானம் வச்சிட்டேன் அப்படின்னா.
06:17
Speaker 1
அந்த அடமானம் வச்ச காசுல உடனே ஒரு வெள்ளியை வாங்கி நீங்க வீட்ல வைக்கணும்.
06:22
Speaker 1
முடிஞ்ச அளவுக்கு எவ்வளவு ஹெவியா வாங்கி வைக்க முடியுமோ அந்த வெள்ளியை வாங்கி வீட்ல கொண்டு வந்து வச்சு.
06:28
Speaker 1
இழந்த செல்வத்தை நான் திரும்ப பெறணும்னு வேண்டுதலே அந்த வெள்ளிக்கிட்ட தான் நீங்க வைக்கணும்.
06:33
Speaker 1
அந்த வெள்ளி ஸ்ட்ராங்கா இருக்கணும்.
06:36
Speaker 1
வெள்ளியும் போய் அடமானம் வச்சிடக்கூடாது.
06:38
Speaker 1
இந்த தங்கம் வெள்ளி அடமானம் வைக்கிறீங்க தங்கம் வெள்ளியை உங்ககிட்ட இருந்து நீங்க விக்கிறீங்க அப்படின்னாலே.
06:43
Speaker 1
உங்ககிட்ட இருந்து செழிப்புங்கிறது போக ஆரம்பிச்சிருச்சுன்னு அர்த்தம்.
06:46
Speaker 1
சரி நாங்க கடன் பட்டுட்டோம்.
06:49
Speaker 1
என்ன பண்றது அப்படின்னா.
06:50
Speaker 1
மஞ்சள் எதுவா இருந்தாலும் மஞ்சள் நிறங்கள்ல கொடுத்து கொடுத்து வழிபாடு பண்ணனும்.
06:54
Speaker 1
குரு ஸ்தலங்களுக்கு போறது.
06:56
Speaker 1
உங்களுடைய உங்களுக்குன்னு சில குருமார்கள் இருப்பாங்க இல்லையா.
06:58
Speaker 1
ஃபார் எக்ஸாம்பிள் சாய்பாபா இருக்கிறாரு அப்படின்னு வச்சுக்கோங்களேன்.
07:02
Speaker 1
எதுவா இருந்தாலும் மஞ்சள் கலர்ல கொடுத்து வழிபாடு பண்றது.
07:05
Speaker 1
தட்சிணாமூர்த்திக்கு போறீங்களா.
07:07
Speaker 1
சந்தனம் கொடுத்து வழிபாடு பண்றது வாராகியை பார்க்க போறீங்களா.
07:11
Speaker 1
வாராகிக்கு சந்தனா அந்த ஈர சந்தன கட்டை எல்லாம் இருக்கும்.
07:15
Speaker 1
அதெல்லாம் கொடுத்து வழிபாடு பண்ணுவாங்க.
07:16
Speaker 1
அதெல்லாம் கொடுத்து வழிபாடு பண்ணி திரும்பவும் நான் சந்தனத்தையும் மஞ்சளையும் திருப்பி கொடுக்கிறேன்னு தான் வேண்டுதல் வச்சிட்டு வரணும்.
07:24
Speaker 1
எனக்கு இந்த வேண்டுதல் எல்லாம் நிறைவேறிடுச்சுன்னா நான் பெருசா அதை பண்றேன் இதை பண்றேன்னு ஏன்னா இந்த தாட் ப்ராசஸ் தனுசுக்கு உண்டு.
07:29
Speaker 1
கையில வந்த உடனே தாம் தூம்னு செலவு பண்ணக்கூடிய.
07:31
Speaker 1
அப்படி கிடையாது.
07:32
Speaker 1
தனுசுக்கு சொல்லக்கூடிய விஷயம் என்ன அப்படின்னா தாழ்ந்து பணிஞ்சு என்ன இருக்கோ அதை செழிப்பாக்கக்கூடிய அமைப்புதான் தனுசுக்கு.
07:38
Speaker 1
அப்போ உங்களுடைய வழிபாட்டு முறையை எப்படி இருக்கணும்னா மஞ்சள்ல ஆரம்பிச்சு மஞ்சள்ல முடியணும்.
07:42
Speaker 1
இப்போ தனுசு ராசியில இருக்கவங்க எல்லாம் வந்து
07:47
Speaker 1
பணம் என்கிட்ட இருக்கு என்கிட்ட இவ்வளவு இருக்கு அவ்வளவு இருக்கு அப்படின்னு யார்கிட்டயும் சொல்லாம இருந்துக்கிறது நல்லது.
07:52
Speaker 1
ஆனா தனுசு ராசியால சொல்லாம இருக்கவே முடியாது.
07:53
Speaker 1
வாலன்டியரா போய் பிரண்ட்ஸ்க்கு ஹெல்ப் பண்றது ரிலேட்டிவ்ஸ்க்கு பணத்தை தூக்கி கொடுக்கிறது.
07:58
Speaker 1
இதெல்லாம் கொடுத்துட்டு கொடுக்க கொடுக்க என்ன ஆகும் தெரியுமா தனுசு ராசிக்கு.
08:03
Speaker 1
யாருமே உதவிக்கு வரவே மாட்டாங்க.
08:06
Speaker 1
தனுசு ராசிக்கு ஹெல்ப் பண்றதுக்கு.
08:07
Speaker 1
அதாவது கடவுள் ஏதோ ஒரு வகையில லாஸ்ட் மினிட்ல தனுசு ராசிக்கு பணம் ஏதோ ஒரு வகையில வந்து சேர்ந்துரும்னு வச்சுக்கோங்க.
08:13
Speaker 1
ஆனா பல இழப்புகள் நடந்துதான் அந்த பணம் வந்து சேரும்.
08:17
Speaker 1
அந்த பணம் வந்து சேர்றதுக்கு ஒரு பெரிய ஒரு தொகையவே அவங்க செலவு பண்ணி இருந்திருப்பாங்க.
08:24
Speaker 1
ஏதாவது ஒரு நல்ல ஒரு வேல்யூபிலான ஒரு பொருளை விக்கிறது.
08:27
Speaker 1
அந்த மாதிரி.
08:28
Speaker 1
சோ யாரா இருந்தாலும் சரி.
08:30
Speaker 1
என்னுடைய ரொம்ப க்ளோஸா இருக்காங்க.
08:33
Speaker 1
என்கிட்ட கடன் கேட்டுட்டாங்க.
08:35
Speaker 1
எனக்கு பாவமா இருந்துச்சு.
08:37
Speaker 1
தாட்சண்யம் பார்க்கவே கூடாது.
08:40
Speaker 1
ஏன்னா நீங்க குரு.
08:41
Speaker 1
குரு தயவு தாட்சண்யம் பார்க்கவே கூடாது.
08:45
Speaker 1
குரு தயவு தாட்சண்யம் பார்த்துட்டீங்க அப்படின்னாலே.
08:49
Speaker 1
உங்களுக்கு கர்மா சேர ஆரம்பிச்சிருச்சுன்னு அர்த்தம்.
08:52
Speaker 1
ஏன்னா தனுசு ராசிக்காரங்க எல்லாம் தர்மத்தை நோக்கி போகக்கூடியவங்க.
08:55
Speaker 1
கர்மமே உங்களுக்கு வேண்டாம்.
08:57
Speaker 1
தனுசு ராசிக்காரங்களுக்கு கர்மா வந்துருச்சு அப்படின்னா.
09:00
Speaker 1
அது விடவே விடாது.
09:01
Speaker 1
வச்சு செஞ்சிரும்.
09:02
Speaker 1
அதுவும் நீங்க எப்ப எந்த தருணங்கள்ல கடன் வாங்குவீங்கன்னா உங்களுக்கு
09:07
Speaker 1
ராகு புத்தி ராகு தசை நடக்கிறப்ப தான் அதீதமா கடன் வாங்க தூண்டும்.
09:12
Speaker 1
அதேதமா கடன் வாங்கி இந்த சனி கேது காலங்கள்ல.
09:16
Speaker 1
ஏண்டா கொடுத்தோம் ஏண்டா இப்படி எல்லாம் இழந்தோம் அப்படின்னு ஃபீல் பண்ண வச்சிரும்.
09:20
Speaker 1
அப்போ உங்களுக்கான மந்திரம் அப்படின்னு பார்க்கிறப்ப.
09:23
Speaker 1
ஓம் பிரம்மனே நம அப்படின்னு தான் நீங்க வேண்டணும்.
09:26
Speaker 1
தட்சிணாமூர்த்திட்ட தான் அதை வேண்டணும்.
09:27
Speaker 1
ஏன்னா தட்சிணாமூர்த்தி தான் உங்களோட படைச்ச பிரம்மனே.
09:30
Speaker 1
ஓம் பிரம்மனே நம ஓம் பிரம்மனே நம ஓம் பிரம்மனே நம ஒரு தட்சிணாமூர்த்தி போட்டோவை கூட வீட்ல வச்சிட்டு எப்ப கோயிலுக்கு எப்பவுமே போக முடியாட்டாலும்.
09:37
Speaker 1
வீட்ல ஒரு தட்சிணாமூர்த்தியை வச்சு செழிப்பா ஒரு வழிபாடு பண்ணுங்க.
09:42
Speaker 1
அவரையே வந்து பிரம்மதேவரா எடுத்து நீங்க வழிபாடு பண்ண பண்ண.
09:46
Speaker 1
உங்களுடைய லைஃப் அப்படிங்கறது ஸ்டெபிலைஸ் ஆக ஆரம்பிக்கும்.
09:50
Speaker 1
முடிஞ்ச அளவுக்கு கடன் அப்படிங்கறது அடைக்கக்கூடிய தருணங்களுக்கு போவீங்க.
09:54
Speaker 1
கடன் கொடுக்கிறதை நிறுத்துங்கன்னு தான் நான் தனுசு ராசிக்கு சொல்லக்கூடிய விஷயமே.
09:58
Speaker 1
சோ கடன் அப்படிங்கறது முக்கியமா இந்த சனி.
10:01
Speaker 1
கேது சில டைம் ராகு.
10:03
Speaker 1
கடன் வாங்க நம்மளுக்கு வைக்கும்.
10:04
Speaker 1
ராகு இப்ப ஒவ்வொரு கிரகங்கள் இருக்கு இல்லையா.
10:07
Speaker 1
ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு காரணத்துக்காக நம்மள கடன் வாங்க வைக்கிறப்போ ராகு வந்து.
10:13
Speaker 1
அதித ஆடம்பரத்துக்கும் கற்பனை இமேஜினேஷன் இல்லயூஷன் பார்த்துக்கலாம் அப்படிங்கறது.
10:19
Speaker 1
தருணத்துல ராகு கடன் வாங்க வச்சிரும்.
10:21
Speaker 1
கேது வந்து வச்சு செஞ்சிரும்.
10:22
Speaker 1
கேது காலங்கள்ல எப்படி கடன் வாங்க வைக்கும் அப்படின்னா எல்லாமே என்கிட்ட இருந்து போய்கிட்டே இருக்கு.
10:29
Speaker 1
எப்படியாவது நான் தக்க வச்சுக்கணும் அப்படின்னா அது எப்படின்னா ஒரு ஓட்டை வழியா எல்லாமே ஒழுகி போயிட்டே இருக்க மாதிரிதான்.
10:35
Speaker 1
கேது காலங்கள்ல கடன் படுறதும் கேது காலங்கள்ல கடன் அடைக்க முடியாம சிரமப்படுறதும்.
10:40
Speaker 1
நம்ம யார்ட்டயாவது போய் கடன் அடைக்கிறதுக்கு இன்னொருத்தங்க கிட்ட போய் கடன் கேட்க போற நேரத்துல கூட ஒரு அவமானம் அசிங்கமோ.
10:47
Speaker 1
இல்ல கடன் கிடைக்க முடியாத ஒரு சூழ்நிலையோ கேது இந்த மாதிரி உருவாக்கிடும்.
10:51
Speaker 1
அதனாலதான் நான் வந்து விநாயகர் வழிபாடு பண்ணுங்க.
10:54
Speaker 1
ஏன்னா இந்த கடன் அப்படினாலே இந்த சனி.
10:57
Speaker 1
ராகு கேது பெரிய ரோல் பிளே பண்ணுவாங்க.
10:59
Speaker 1
புதன் கெட்டு போயிருச்சு அந்த நேரத்துல உங்களால டிசிஷன் எடுக்க முடியல அப்படின்னா.
11:04
Speaker 1
புதன் ஸ்தலங்களுக்கு போயிட்டு வரது உங்களுடைய புத்தியை ஷார்ப்பாக்கிக்கிறது.
11:09
Speaker 1
புத்தி மூலமா எப்படி சம்பாதிக்கணும் அப்படிங்கறதுதான்.
11:12
Speaker 1
நீங்க வந்து ஃபாலோ பண்ணனும்.
11:14
Speaker 1
இப்ப குரு வழிபாடு அப்படின்னு எல்லாம் பண்றப்போ.
11:16
Speaker 1
குரு வழிபாடு பண்ண பண்ண இந்த கடன் தொல்லைகளால அவமானப்படாம அசிங்கப்படாம தப்பிக்க முடியும்.
11:21
Speaker 1
செவ்வாய் வழிபாடு அப்படின்னு பண்றப்போ செவ்வாய்ங்கிறது முருகன்.
11:25
Speaker 1
முருகர் வழிபாடுன்னு பண்றப்போ பெரும் பிரச்சனையில போய் விடாது.
11:28
Speaker 1
அதாவது சில பேத்துக்கெல்லாம் வந்து இப்ப பேங்கே வந்து எல்லாமே ஜப்தி பண்ணிட்டு போறாங்க.
11:34
Speaker 1
இல்ல ஒரு அடிதடி மாதிரி ஆயிருது இல்ல ஒரு பஞ்சாயத்து மாதிரி ஆயிருது அந்த மாதிரி சிச்சுவேஷன்லாம் வந்து.
11:41
Speaker 1
இந்த செவ்வாய் ஹோரையில கடன் வாங்கக்கூடிய சிச்சுவேஷன் வரப்போ இந்த மாதிரி எல்லாம் அமைஞ்சிரும்.
11:46
Speaker 1
அதனால எந்த ஹோரை ஹோரைங்கிறது முக்கியம் கடன் கொடுக்கிறதும் கடன் வாங்குறதும்.
11:51
Speaker 1
அந்த ஹோரை பார்த்து செய்றது நல்லது சப்போஸ் சனிக்கிழமை நீங்க கடன் வாங்கிடுறீங்கன்னு வச்சுக்கோங்க.
11:55
Speaker 1
சனி பெருக்கிட்டே தான் போகும்.
11:58
Speaker 1
சனிக்கிழமை கடன் வாங்குறீங்கன்னா அது நோய்க்கா இருக்கட்டும்.
12:02
Speaker 1
நோய்க்கு கடன் வாங்குறீங்க அப்படின்னா அது ஓரளவுக்கு நம்மளால அடைச்சிட முடியும்.
12:05
Speaker 1
ஏன்னா சனியே வந்து அன்னைக்கு மருத்துவத்துக்கு நீங்க செலவு பண்ணலாம்.
12:08
Speaker 1
அது வந்து எதுவும் பண்ணாது.
12:10
Speaker 1
சுப காரியங்களுக்கு சனிக்கிழமைல வந்து கடன் வாங்குற வேலை வேண்டவே வேண்டாம்.
12:14
Speaker 1
அது வந்து இன்னும் கஷ்டத்திலயே போய் விட்ரும்.
12:18
Speaker 1
அதனால கடன் வாங்குறதுக்கும் வெள்ளிக்கிழமை யாரும் கடன் கொடுக்கவும் மாட்டாங்க வாங்கவும் மாட்டாங்க.
12:23
Speaker 1
ஆனா செவ்வாய்க்கிழமை நீங்க கடன் அடைக்கலாம்.
12:25
Speaker 1
புதன்கிழமை கடன் கேட்கிறதுக்கு டிஸ்கஷன்ஸ் வச்சுக்கலாம்.
12:28
Speaker 1
ஒரு வியாழக்கிழமையா கடன் யாருக்காவது நீங்க கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா குரு வழிபாடு பண்ணிட்டு வியாழக்கிழமை கடன் கொடுங்க.
12:34
Speaker 1
அடைக்கிறவங்க செவ்வாய்க்கிழமை அடைங்க.
12:36
Speaker 1
இந்த மாதிரி நேரம் காலம் நாள் கிழமை உங்களுக்கு சந்திராஷ்டமமா இல்லையா இந்த மாதிரி எல்லாம் பார்த்துட்டு ஏன்னா ஆத்திர அவசரம் எங்களுக்கு ஒரு ஹாஸ்பிடல் எக்ஸ்பென்ஸ்.
12:43
Speaker 1
இந்த டைம்ல போய் நாங்க நேரம் காலம் பார்த்துட்டு இருக்க முடியுமா அப்படின்னா.
12:46
Speaker 1
ஆத்திர அவசரத்துக்கு நம்ம நேரம் காலம் பார்க்க முடியாது.
12:48
Speaker 1
அது வந்து உதவி.
12:49
Speaker 1
அது வந்து நம்ம உதவி கேட்கிறோம் அது எமர்ஜென்சிக்கு உதவி கேட்கிறோம்.
12:53
Speaker 1
முறையா கடன் கேட்கிற ஒரு அமைப்புன்னு இருக்கு இல்லையா.
12:56
Speaker 1
இப்ப நீங்க வந்து பினான்சியல் கிட்ட எல்லாம் போய் பணம் கேட்கிறீங்கன்னா.
13:00
Speaker 1
அதுக்கெல்லாம் ஒரு நேரம் காலம் ஒரு பேங்க்ல போய் நகையை அடமானம் வைக்க போறீங்க.
13:05
Speaker 1
இல்ல அடைக்க போறீங்க.
13:06
Speaker 1
இதுக்கெல்லாம் நீங்க நேரம் காலம் பார்த்து செய்றப்போ.
13:11
Speaker 1
உங்களுக்கு இழந்த செல்வம் திருப்பி கிடைக்கணும் அப்படிங்கறதுதான் வந்து கடன் அடைத்தல் அப்படிங்கறதே பேரு.
13:15
Speaker 1
ஒரு கடன் எதுக்கு நம்ம வாங்குறோம்.
13:17
Speaker 1
ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா தெளிவா இருக்கணும்.
13:22
Speaker 1
அந்த கடன் எப்படி உபயோகப்பட்டுச்சு அப்படின்னு ஒன்னு இருக்கு.
13:25
Speaker 1
ஊதாரித்தனமா செலவு பண்ணிட்டு காத்துல போன மாதிரி இருந்திடக்கூடாது கடன்.
13:30
Speaker 1
ஒரு பொருள் உள்ள வரணும் ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா அந்த பொருளுக்கான.
13:34
Speaker 1
ஒரு அடையாளம் அப்படிங்கறது வீட்ல இருந்து அது ஒரு செழிப்பை கொடுக்கிற மாதிரி இருக்கணும்.
13:38
Speaker 1
இல்லைன்னா நிறைய கடன் வாங்கினவங்க வீட்டை போய் பாருங்க.
13:41
Speaker 1
வீட்டுக்குள்ள ஒண்ணுமே இருக்காது.
13:42
Speaker 1
அப்ப எதுக்கு கடன் வாங்கினீங்க அப்படின்னா.
13:44
Speaker 1
எதுக்கும் வாங்கினே தெரியாது.
13:45
Speaker 1
எதையோ வித்து வித்து இந்த கடனுக்காகவே சம்பாதிக்கிறேன்.
13:50
Speaker 1
இந்த கடன் அடைக்கிறதுக்காகவே நான் வாழ்றேன் அப்படிங்கிற மாதிரி போயிரும்.
13:53
Speaker 1
அதனால பிளானிங் அப்படிங்கறது ரொம்ப முக்கியம்.
13:55
Speaker 1
அகலக்கால் எப்பவுமே ஆபத்தானது.
13:58
Speaker 1
சிறு சேமிப்பு கூட உங்களுக்கு ஹெல்ப் பண்ணும்.
14:01
Speaker 1
அந்த சேமிப்புக்கெல்லாம் வந்து சாமிகிட்டயே வந்து நீங்க வந்து பணம் சேமிச்சு வைக்கிறது.
14:05
Speaker 1
அந்த சேமிச்சு வச்ச பணத்துல வந்து ஆலய தரிசனங்களுக்கு செலவு பண்றது ஆலய வழிபாடு பண்றது.
14:11
Speaker 1
இந்த மாதிரி பில்கிரிமேஜ் ட்ரிப் போறது இந்த மாதிரி தெய்வ வழிபாட்டுக்கான ட்ரிப் எல்லாம் வந்து.
14:16
Speaker 1
நீங்க சேர்த்து வச்ச பணத்துல போயிட்டு வர வர செழிப்புங்கிறது அதிகரிக்கும்.
14:20
Speaker 1
பொதுவாவே எல்லா ராசிக்காரங்களுக்கும் சொல்ற விஷயம் என்ன அப்படின்னா.
14:25
Speaker 1
யார் கடன் வாங்கிருந்தாலும் சரி என்ன ராசிக்காரங்க கடன் வாங்கிருந்தாலும் சரி.
14:29
Speaker 1
விநாயகரை போய் பிடிச்சுக்கணும்.
14:31
Speaker 1
ஏன்னா அவர்தான் ஆதி கடவுள் இல்லையா.
14:33
Speaker 1
விநாயகரை வழிபாடு பண்ணி அவரையே சொல்யூஷன் கொடுக்க வைக்கணும்.
14:39
Speaker 1
நீங்க தான் எனக்கு சரணாகதி அப்படின்னுட்டு விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சு வழிபாடு பண்றது.
14:42
Speaker 1
இந்த மாதிரி வழிபாட்டு முறைகள் எல்லாம் பண்ணி விநாயகரை வழிபட்டா மட்டும் இங்க கடன் அடைஞ்சிருமா அப்படிங்கறது இல்லை.
14:47
Speaker 1
அவருடைய அந்த பிளஸ்ஸிங்ஸ் அப்படிங்கறது நீங்க எடுத்துக்கணும்.
14:50
Speaker 1
அதுபோக முக்கியமா.
14:53
Speaker 1
சந்திராஷ்டமம் வரக்கூடிய நாட்கள்ல.
14:56
Speaker 1
உங்களுக்கு என்னைக்கு சந்திராஷ்டமம் எல்லா ராசி எல்லா நட்சத்திரக்காரங்களுக்குமே வந்து.
15:00
Speaker 1
ஒரு இரண்டரை நாள் சந்திராஷ்டமம் அப்படிங்கறது இருக்கும்.
15:03
Speaker 1
உங்களுடைய சந்திராஷ்ட காலங்கள்ல எதுவுமே பண்ணாம அதாவது எதுவும் பண்ணாமங்கிறது.
15:09
Speaker 1
முடிவுகள் எடுக்காம கடன் வாங்கணும்ங்கிற எண்ணம் இல்லாம சந்திராஷ்டம் அன்னைக்கு கடனை அடைக்கவும் வேணாம்.
15:15
Speaker 1
கடனை கொடுக்கவும் வேணாம்.
15:17
Speaker 1
வாங்க போகவும் வேணாம்.
15:18
Speaker 1
அந்த நேரத்துல முடிவும் எடுக்க வேண்டாம்.
15:20
Speaker 1
சந்திராஷ்டம காலங்கள்ல கடன் வாங்கினாலோ.
15:24
Speaker 1
கடன் கொடுத்தாலோ கடன் அடைப்பது மிகவும் கடினம் ரொம்ப கஷ்டத்துல போய் விடுவீங்க.
15:29
Speaker 1
சந்திராஷ்டம் தெரியாம நாங்க சந்திராஷ்டமத்துல கடன் வாங்கிட்டோம்.
15:32
Speaker 1
எங்களுக்கு தெரியலையே.
15:33
Speaker 1
அன்னைக்கு எங்க நட்சத்திரம்.
15:34
Speaker 1
விதி அப்படிதான் பண்ணும்.
15:35
Speaker 1
அன்னைக்கு நீங்க கடன் வாங்க போற நேரத்துல சப்போஸ் ஒரு லோன் அப்ளை பண்ணி இருக்கீங்க.
15:40
Speaker 1
என்னக்கு அன்னைக்கு போய் நான் பேங்குக்கு போகணும்.
15:43
Speaker 1
அன்னைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம்.
15:44
Speaker 1
போகாதீங்க.
15:45
Speaker 1
அலைச்சல் ஜாஸ்தியா இருக்கும்.
15:46
Speaker 1
அந்த கடனை அடைக்கவே முடியாது.
15:48
Speaker 1
சரி இன்னைக்கு நான் லோன் அடைக்க போற நாள்.
15:50
Speaker 1
இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம்.
15:51
Speaker 1
போகாதீங்க.
15:52
Speaker 1
திரும்பவும் அங்கேயும் ஏதாவது ஒரு அலைச்சலோ இல்ல ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டோ இல்ல கட்ட முடியாம போற சூழ்நிலையோ இல்ல மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையோ ஏதோ ஒன்னு சந்திராஷ்டமம் நம்மளுக்கு பண்ணி விட்ரும்.
15:59
Speaker 1
அதனால முடிஞ்ச அளவுக்கு சந்திராஷ்டம காலங்கள்ல அமைதியா இருந்துக்கிறது நல்லது.
16:03
Speaker 1
தெய்வ வழிபாட்டோடு இருந்துக்கிறது நல்லது.
16:05
Speaker 1
எதற்காக கடன் வாங்குறோம்.
16:07
Speaker 1
வீண ஆடம்பரத்துக்கு வாங்குறோமா கால்குலேட்டிவா இருந்து சிக்கனமா இருக்க பழகிக்கிட்டீங்க அப்படின்னாலே.
16:12
Speaker 1
யாருமே கடன் படணும் அப்படிங்கறது கிடையாது.
16:15
Speaker 1
கடவுள் நம்மளுக்கு எல்லாத்துக்குமே யார் யாருக்கு எப்படி எப்படி படியளந்து கொடுக்கணுமோ.
16:20
Speaker 1
அப்படி கொடுத்துக்கிட்டே தான் இருப்பார்.
16:21
Speaker 1
ஆசைப்பட பட தான் கடனுக்குள்ள போய் நம்ம விடுவோம்.
16:24
Speaker 1
ஆசை ஆபத்து அப்படின்னு சொல்லி நான் இந்த வீடியோவை முடிச்சுக்கிறேன்.
Topics:தனுசு ராசிகடன் ஆலோசனைதட்சிணாமூர்த்தி வழிபாடுதங்கம் அடமானம்வெள்ளி அடமானம்மஞ்சள் வழிபாடுஜோதிடம்பிசினஸ்கர்மாதர்மம்

Frequently Asked Questions

தனுசு ராசிக்காரர்கள் கடன் கொடுக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்ன?

தனுசு ராசிக்காரர்கள் யாருக்கும் கடன் கொடுக்கவே கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில், கொடுத்த கடன் திரும்ப வருவது மிகவும் அரிது, அப்படியே வந்தாலும் அது பல சிரமங்களுக்குப் பிறகுதான் கிடைக்கும்.

தனுசு ராசிக்காரர்கள் கடன் வாங்குவதற்கும், கடன் கொடுப்பதற்கும் உள்ள மனப்பான்மை என்ன?

தனுசு ராசிக்காரர்களுக்கு கடன் வாங்குவது பிடிக்காது. ஆனால், மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதில் அவர்களுக்கு அதிக விருப்பம் உண்டு, மேலும் அவர்கள் எளிதில் மற்றவர்களை நம்பிவிடுவார்கள்.

தனுசு ராசிக்காரர்கள் கடன் படுவதற்கு என்னென்ன காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன?

தனுசு ராசிக்காரர்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்வது, என்ன பிசினஸ் என்று தெரியாமல் அகலக்கால் வைப்பது போன்ற காரணங்களால் கடன் படுவார்கள். ஏனெனில், அவர்களுக்கு பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் எண்ணம் அதிகம்.

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →