நிச்சயமாக நீங்க பெற்றுக்கொள்ள முடியும் இரவு முழுவதும் நீங்க தூங்கிக் கொண்டிருந்தாலும் உங்களுக்கு தஹஜ்ஜத் தொழுத நன்மையும் இன்னும் இரவு முழுவதும் விழித்து வணங்கிய நன்மையும் அல்லாஹ் கொடுக்கக்கூடிய அமல் இருக்குது அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து அறிவித்துக் கொடுத்திருக்காங்க
நாம வந்து இரவு நேரத்துல நம்ம தொழுகணும்னு ஆசைப்படுறோம் ஆனா தொழுக முடியாம போகுது இன்னும் வந்து இரவு முழுவதும் நம்ம தொழுகுறவங்களா இருக்கோமான்னு பார்த்தா கண்டிப்பா இருக்காது
இந்த ஒரு அமலை வந்து நீங்க தொடர்ச்சியா செய்றது மூலமாக தஹஜ்ஜத் தொழுத நன்மையும் இரவு முழுவதும் விழித்து வணங்கிய நன்மையும் நமக்கு கிடைக்கும் தூங்கிக் கொண்டிருக்கும்போதே
ஆனா பார்த்தீங்கன்னா எல்லா நேரமுமே வணங்கிக் கொண்டிருக்குமான்னு பார்த்தா கண்டிப்பா கிடையாது நம்ம நம்மளுடைய உலக விஷயத்தை வந்து பார்த்துட்டு இருக்கோம் அதுல வந்து அல்லாஹ் சொல்லியபடி நடக்கிறதே வந்து பார்த்தீங்கன்னா ஒரு வணக்கமாகும்
அதே மாதிரி இரவு முழுவதும் தூங்கிக் கொண்டிருக்கிற நேரத்துல கூட வணக்க வழிபாடு செய்த நன்மைக்கான ஒரு அமலை தெரிவித்துக் கொடுத்திருக்காங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்ப அதை செய்து இரவு நேரத்திலேயும் வணங்கிய நன்மையும் வந்து நம்ம பெற்றுக்கொள்ளலாம்
முதல் வந்து ஆண்களுக்கு சொல்றேன் யார் ஒரு ஒருத்தர் வந்து இஷா தொழுகையை ஜமாத்தோடு பள்ளியில தொழுகுறாங்களோ அவங்களுக்கு இரவுல பாதி நேரம் விழித்து வணங்குன நன்மை கிடைக்குது
அதை தொடர்ந்து யார் பஜர் தொழுகையை ஜமாத்தோடு பள்ளியில தொழுகுறாங்களோ அவங்களுக்கு மீதி பாதி இரவும் வந்து விழித்து வணங்கிய நன்மை கிடைக்கும் அப்ப இஷாவையும் பஜர் தொழுகையும் ஜமாத்தோடு தொழுது வருவதுனால இரவு முழுவதும் வணங்கிய நன்மை கிடைக்குது
இந்த இஷாவுக்கும் பஜருக்கும் நடுவுல தான் நமக்கு தஹஜ்ஜத்துடைய நேரமும் வரும் அதனால தஹஜ்ஜத் தொழுத நன்மையும் இன்னும் இரவு முழுவதும் வணங்கிய நன்மையும் உங்களுக்கு வந்து கிடைக்கும்
ஆனா பெண்கள் வந்து பள்ளிக்கு போவதில்லை ஜமாத்தோடு தொழுவதில்லைனாலும் வீட்ல நேரத்துக்கு நல்ல முறையில உளுவு செஞ்சு நீங்க இஷாவையும் பஜரையும் வந்து கடைபிடித்தீங்கனாவே இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு இரவு முழுவதும் வணங்கிய நற்கூலியை வழங்குவான்
இதனால நீங்க வந்து தஹஜ்ஜத் தொழுகை தேவையில்லை அப்படின்னு அர்த்தம் கிடையாது நிச்சயமாக நீங்க எந்திரிச்சு அமல் செய்யும்போது அதிக நன்மை கிடைக்கும் அந்த நேரத்துக்குன்னு ஒரு சிறப்பு இருக்கு அந்த நன்மையும் இன்னும் துவா அங்கீகரிக்கப்படக்கூடிய நேரம் அது அதனுடைய சிறப்பையும் நீங்க வந்து பெற்றுக்கொள்ளலாம்