ரிஷப ராசிக்கு தசா புத்தி சொல்லும் ரகசியம் | Rishabam | … — Transcript

ரிஷப ராசிக்காரர்களுக்கான செழிப்பு மற்றும் தசா புத்தி வழிபாட்டு ரகசியங்கள், பணியியல் மற்றும் வாழ்வியல் ஆலோசனைகள்.

Key Takeaways

  • செழிப்பு மற்றும் பணியியல் வளர்ச்சிக்கான திட்டமிடல் அவசியம்.
  • மீன் மற்றும் செடி வளர்ப்பு மூலம் நேர்மறை சக்திகள் பெறலாம்.
  • சுக்ரன் மற்றும் சனி கிரகங்களின் தாக்கம் வாழ்க்கையில் முக்கியம்.
  • அஷ்டலட்சுமி வழிபாடு செல்வ செழிப்பை மேம்படுத்தும்.
  • தசா புத்தி மற்றும் ஜாதக பரிகாரங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவும்.

Summary

  • ரிஷப ராசிக்காரர்கள் பணம் செலவிடும் முறையில் கவனம் தேவைப்படுகிறது.
  • மீன் வளர்ப்பு மற்றும் செடி வளர்ப்பு மூலம் செழிப்பு அதிகரிக்கும்.
  • சுக்ரன் கிரகத்தின் தாக்கம் மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதற்கான விளக்கம்.
  • பணியியல் திட்டமிடல் மற்றும் பட்ஜெட் பிளானிங் முக்கியத்துவம்.
  • அஷ்டலட்சுமி வழிபாடு மற்றும் புண்ணிய ஸ்தலங்களில் வழிபாடு செழிப்பை மேம்படுத்தும்.
  • ரிஷப ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் சுய முயற்சி முக்கியம்.
  • பணியியல் வளர்ச்சிக்கான பயணம் மற்றும் மூவ்மென்ட் அவசியம்.
  • சனி பெயர்ச்சி மற்றும் அதன் தாக்கம் பற்றிய விளக்கம்.
  • தசா புத்தி மற்றும் ஜாதக ரீதியான பரிகாரங்கள் செழிப்பை நிரந்தரமாக்கும்.
  • பணம் கடன் அடைவதற்கு முன் திட்டமிடல் மற்றும் சிறிய அளவில் தொடங்குதல் பரிந்துரை.

Full Transcript — Download SRT & Markdown

00:02
Speaker A
அதிகமா நிறைய கலர் கலரா மீன் வளர்க்குறது கூட ஒரு செழிப்பு அப்படிங்கறது கொடுக்கும்.
00:07
Speaker A
ரிஷப ராசியில பெண்கள் இருக்கிறீங்க அப்படின்னா, உங்களுக்கு ஏதாவது உடல் உபாதைகள் வருதுன்னு வச்சுக்கோங்களேன், அதை அந்த மீன் தான் வாங்கிக்கும்.
00:14
Speaker A
ரிஷப ராசிக்காரங்க கிட்ட கையில பணம் வந்துருச்சுன்னா, உடனே எப்படி செலவு பண்ணனும்னு தான் உங்களுக்கு என்ன வரும் மத்தவத்து, அதை எப்படி பத்திரப்படுத்தி வைக்கணும்ங்கறது உங்களுக்கு தெரியாது.
00:21
Speaker A
ஒரு ரூபாய் நோட்டு இருந்தாலும் சரி, ஒரு 50 ரூபாய் நோட்டு இருந்தாலும் சரி, அதை வந்து நீங்க அங்க இருக்கிற தாயார் கிட்ட, அங்க இருக்கிற பெருமாள் கிட்ட வச்சிட்டு, யாருக்காவது நம்ம போய் கடன் அடைக்கணும்னா, ஒரு செவ்வாய்க்கிழமையா பார்த்து நீங்க ஏதாவது ஒரு சின்ன அமௌன்ட் கொடுத்து நீங்க அடைக்கிறீங்க அப்படின்னா, சீக்கிரம் கடன் அடைக்க முடியும்.
00:40
Speaker A
வணக்கம்.
00:42
Speaker A
எல்லாரும் எதிர்பார்க்கிற ஒரு விஷயம் வாழ்க்கையில என்னன்னா, எல்லா ராசிரமே எதிர்பார்க்கிறது என்னன்னா, நாங்க செல்வ செழிப்போட வாழ்றதுக்கு என்ன வழி பண்ணனும், நாங்க என்ன செஞ்சா நாங்க செல்வ செழிப்போட இருப்போம்.
00:55
Speaker A
எப்படி செல்வம் மேலும் மேலும் அதிகரிச்சிட்டே போகும், ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கும் ஒவ்வொரு வகையான பரிகார ஸ்தலங்கள், புண்ணிய ஸ்தலங்கள், தெய்வ வழிபாட்டு முறைகள்,
01:06
Speaker A
இப்படி ஒவ்வொருத்தங்களுக்குமே சிச்சுவேஷன்ஸ் அப்படிங்கறதும் மாறிக்கிட்டே இருக்கும்.
01:10
Speaker A
அதாவது தசா புத்தி அப்படிலாம் இருக்கு இல்லையா?
01:12
Speaker A
உங்களுடைய ஜாதக ரீதியாகவும், உங்களுடைய தசா புத்தி அதோட கோச்சாரங்கள் எப்படி இருக்கு அதெல்லாம் பொறுத்து தான் நம்முடைய செல்வ செழிப்புமே நிரந்தரமா தங்குமா?
01:20
Speaker A
இல்ல வந்துட்டு போகுமா?
01:22
Speaker A
அதுக்கு என்ன நாங்க வந்து தெய்வ வழிபாட்டு முறைகள் பண்ணனும் அப்படிங்கறத பத்தி நம்ம பார்க்கலாம்.
02:09
Speaker A
ரிஷப ராசிக்காரங்க அப்படின்னு பார்க்கிறப்போ, ரிஷப ராசிக்காரங்களுக்கு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ் அப்படிங்கறது இருக்கும்.
02:15
Speaker A
எங்கெங்க நீங்க ரிஷபத்துக்கு எல்லாம் டைம் ரொம்ப நல்லா இருக்குங்கிறீங்க, ஆனா எங்களுக்கு ஒன்னும் குரோத் வந்த மாதிரி தெரியலையே அப்படின்னா, நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா,
02:22
Speaker A
உங்களுடைய கேரக்டரிசேஷன் மாறி இருந்திருக்கும், உங்களுடைய பெர்ஸ்பெக்டிவ்ங்கறது மாறி இருக்கும், உங்களுடைய பார்வைகள் மாறி இருந்திருக்கும்.
02:28
Speaker A
நான் வந்து இன்னும் எந்த அளவுக்கு ஸ்மார்ட்டா ஒர்க் பண்ணலாம், நான் இந்த மாதிரி தேவையில்லாம இந்த இடத்துல போய் இப்படி உழைப்பை போட்டுட்டேனே, இனிமேல் நான் வந்து எப்படி என்னுடைய புத்திசாலித்தனத்தை யூஸ் பண்ணி நான் எப்படி இந்த ஒர்க் பண்ண போறேன், இருந்த இடத்துல இருந்து நான் எப்படி ஒர்க் பண்ண போறேன்.
02:39
Speaker A
அதோட சில பேர் வந்து நிறைய இடத்துக்கு டிராவல் பண்ணி போய் ஒர்க் பண்றப்போ எப்படி நல்லா இருக்கும்.
02:45
Speaker A
இப்ப பெண்கள் எல்லாம் இருக்கீங்கன்னு வச்சுக்கோங்களேன், ரிஷப ராசியில, உங்களுக்கு எப்பவுமே ஒரு தயக்கம் இருக்கும்.
02:50
Speaker A
எல்லா ஐடியாஸ்மே உங்கள்ட்ட இருக்கும்.
02:53
Speaker A
உங்களுக்கு அந்த கலை நயம் ஏன்னா நீங்க தான் சுக்ரன்.
02:57
Speaker A
ரிஷபத்துல இருக்க பெண்கள் வந்து சுக்ரன், ரிஷபத்துல ஆண்கள் இருக்கிறீங்கன்னா கூட, உங்க வீட்டு பெண்களை நீங்க வந்து நிம்மதியா சந்தோஷமா வச்சுக்கிறீங்க அப்படின்னாலே உங்களுக்கு சுக்ரன் நல்லபடியாவே ஆக்டிவேட் ஆக ஆரம்பிச்சிருவாங்க.
03:05
Speaker A
சோ அங்க வந்து பெண்கள் அப்படின்னா சோகத்துல இருக்கக்கூடாது அப்படிங்கறது தான் அதோட விஷயமே.
03:10
Speaker A
சோ பெண்கள் என்ன பண்ணனும் அப்படின்னா, வீட்ல நல்லா வந்து செடி வளர்க்கணும் நீங்க.
03:14
Speaker A
செடி அந்த பூ எல்லாம் வளர்த்து, அது நீங்க உங்க வீட்ல இருக்க சாமிக்கு எடுத்து வைக்கிறப்போ, செழிப்பு அப்படிங்கறது உங்களுக்கு அதிகரிக்கும்.
03:22
Speaker A
நீங்க எந்த அளவுக்கு எர்த் எனர்ஜியோட அதாவது இந்த பூமியோட எந்த அளவுக்கு நீங்க வந்து கனெக்ட் ஆயிட்டே இருக்கீங்களோ,
03:28
Speaker A
ரிஷபத்துக்கு செழிப்பு அதிகமாயிட்டே போகும்.
03:31
Speaker A
ரிஷப ராசிக்காரங்க மாதிரி வேலையும் பார்க்க முடியாது, ரிஷப ராசிக்காரங்க மாதிரி சோம்பேறியும் கிடையாது அப்படிங்கறது தான்.
03:36
Speaker A
என்ன அப்படின்னா,
03:37
Speaker A
இவங்க மத்தவங்களுக்காக செயல்படக்கூடியவங்க அப்படி அதனாலதான் அவங்க வந்து சம்டைம்ஸ் எந்த வேலையுமே பார்க்காமயே இருப்பாங்க.
03:41
Speaker A
இப்ப ரிஷப ராசிக்காரங்களை வீட்ல வச்சிருக்கவங்க கூட என்ன சொல்லுவாங்கன்னா, எந்த வேலையும் பார்க்காத மாதிரியே இருக்குது, ஒரே இடத்திலேயே உட்கார்ந்துகிட்டே இருக்காங்க அப்படின்னா,
03:48
Speaker A
அவங்களுக்கு திங்கிங் சம்டைம்ஸ் ஸ்டாக்னட் ஆகும் அப்படிங்கறப்போ நீங்க வீட்ல செடி வளர்க்கணும்.
03:53
Speaker A
அவங்க கையால தண்ணி ஊத்த வைக்கணும் செடிக்கு அப்படிங்கறப்போ.
03:56
Speaker A
அது என்ன செடியா வேணாலும் இருக்கலாம்.
03:58
Speaker A
சோ, இந்த செடி தானா, அந்த செடி தானா, எந்த செடியை நாங்க வளர்க்கணும்னு சொல்லுங்கன்னுலாம் கேட்கக்கூடாது.
04:04
Speaker A
வீட்டுக்குள்ள வளர்க்குற செடிகள் இருக்கும், வெளிய இருக்கும், முடிஞ்ச அளவுக்கு துளசியா இருந்துச்சுன்னா ஓகே.
04:08
Speaker A
இப்ப பெண்களா இருக்கீங்க அப்படின்னா, துளசி செடி அப்படிங்கறது வந்து நீங்க வளர்க்கலாம்.
04:11
Speaker A
சோ, இந்த மாதிரி இது இதுல வச்சு தான் உங்களுக்கு செழிப்பே தெரியும்.
04:16
Speaker A
சிலர் வந்து மீன் வளர்க்கலாம்.
04:20
Speaker A
மீன் வளர்க்கும் பொழுது என்ன ஆகும் அப்படின்னா,
04:22
Speaker A
அதுவும் இயற்கையோட கனெக்டட்.
04:25
Speaker A
இந்த மீனோட எனர்ஜி எப்படின்னா, நம்ம எப்படி சுத்தபத்தமா பார்த்துக்கிட்டாலும்,
04:31
Speaker A
அந்த மீன் நமக்கு வரக்கூடிய நெகட்டிவ் எனர்ஜிஸ அவங்க வாங்கிக்குவாங்க அப்படிங்கறது தான்.
04:36
Speaker A
ஏன்னா இப்ப ரிஷப ராசியில பெண்கள் இருக்கிறீங்க அப்படின்னா,
04:38
Speaker A
உங்களுக்கு ஏதாவது உடல் உபாதைகள் வருதுன்னு வச்சுக்கோங்களேன், அதை அந்த மீன் தான் வாங்கிக்கும்.
04:43
Speaker A
அப்ப அதுக்காக நீங்க வருத்தப்படுறதுலாம் இல்ல.
04:45
Speaker A
அதிகமா நிறைய கலர் கலரா மீன் வளர்க்குறது கூட ஒரு செழிப்பு அப்படிங்கறது கொடுக்கும்.
04:51
Speaker A
சோ, இந்த ஃபர்ஸ்ட் ஹாப்னு பார்க்கிறப்போ உங்களுக்கு பிரஷர் இருக்கும்.
04:54
Speaker A
இந்த பிரஷர் இருந்தாதான் உங்களுக்கு அந்த புஷ் இருக்கும்.
05:00
Speaker A
நான் வந்து அடுத்தது எதையாவது ஒரு வேலையை நான் பார்த்தே ஆகணுமே அப்படிங்கறது.
05:05
Speaker A
சோ, பிளானிங் கரெக்டா இருக்கும்.
05:07
Speaker A
பிளானிங் கரெக்டா இருந்து ஒரு ஸ்டெப்பாவது ஒரு பேபி ஸ்டெப்பாவது நீங்க எடுத்து வச்சா மட்டுமே உங்களுக்கு தொழில் ஏதாவது ஒரு தொழில் தொடங்கலாம்.
05:14
Speaker A
நீங்க மத்தவங்க கிட்ட போய் ஒர்க் பண்றதை விட, நீங்க தன்னிச்சையாவே ஒரு தொழில் பண்ண முடியும்.
05:21
Speaker A
சுக்ரன் சம்பந்தப்பட்ட எது வேணாலும் நீங்க ஆரம்பிக்கலாம்.
05:24
Speaker A
சுக்ரன் அப்படிங்கறது ஒரு கடல் மாதிரி.
05:27
Speaker A
அதாவது சுக்ரன் எடுத்துக்கிட்டா மீடியா இண்டஸ்ட்ரி, உங்களுடைய காஸ்டியூம், ஜுவல்லரிஸ், மேக்கப், இந்த மாதிரி பல விஷயங்கள் இருக்கு.
05:34
Speaker A
சோ, இதுல எது வேணாலும் நீங்க தொடங்கலாம்.
05:37
Speaker A
இதுல இன்னொரு சூட்சமம் அப்படின்னா, ரிஷபம் ஒரு இடத்துல இருந்து செயல்படுறதை விட,
05:43
Speaker A
ஒவ்வொரு இடமா நீங்க டிராவல் பண்ணி டிராவல் பண்ணி போய் நீங்க உங்களுடைய பிசினஸை டெவலப் பண்றீங்க அப்படின்னா,
05:52
Speaker A
கண்டிப்பா அதுக்கான செழிப்பு அப்படிங்கறது ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்காவே இருக்கும்.
05:57
Speaker A
நீங்க ஸ்டாக்னட் ஆயிடக்கூடாது, உங்களுக்கு மூவ்மென்ட் இருக்கணும் அப்படிங்கறது தான் ரிஷபத்துக்கு சொல்றது.
06:01
Speaker A
சோ, பட்ஜெட் ரொம்ப அவசியம்.
06:03
Speaker A
இப்ப நான் வந்து உங்களை பிசினஸ் பண்ணுங்கன்னு சொல்லிட்டேன்.
06:05
Speaker A
உடனே நீங்க வந்து நான் இந்த லோன் வாங்கி நான் இவ்வளவு பிரம்மாண்டமா நான் பண்றேன் அப்படின்னுலாம் ரிஷபம் போயிறக்கூடாது.
06:12
Speaker A
முதல் வந்து அகலக்காலே ஃபர்ஸ்ட் நீங்க வைக்கக்கூடாது.
06:14
Speaker A
சின்னதாவே ஆரம்பிங்க.
06:16
Speaker A
முடிஞ்ச அளவுக்கு வீட்லயே கூட நீங்க ஏதாவது ஒன்னு ஸ்டார்ட் பண்ணுங்க, அதுக்கப்புறமா அதை வந்து பெருசு பண்றதுக்கு நீங்க பிளான் பண்ணலாம்.
06:21
Speaker A
சோ, அப்படி பிளான் பண்ணீங்கன்னா பட்ஜெட் ரொம்ப அவசியம்.
06:24
Speaker A
ரிஷப ராசிக்காரங்க கிட்ட கையில பணம் வந்துருச்சுன்னா, உடனே எப்படி செலவு பண்ணனும்னு தான் உங்களுக்கு என்ன வரும் மத்தவத்து, அதை எப்படி பத்திரப்படுத்தி வைக்கணும்ங்கறது உங்களுக்கு தெரியாது.
06:32
Speaker A
சோ, பட்ஜெட் பிளானிங் அண்ட் சேவிங்ஸ் அப்படிங்கறது உங்களுக்கு ரொம்ப அவசியம்.
06:35
Speaker A
லட்சுமி வழிபாடு வீட்ல கண்டிப்பா இருக்கணும்.
06:38
Speaker A
அஷ்டலட்சுமி வழிபாடு பண்ணுங்க.
06:40
Speaker A
அஷ்டலட்சுமி கோயிலுக்கு போயிட்டு வாங்க.
06:42
Speaker A
இப்ப வந்து சென்னையில எல்லாம் இருக்கீங்க அப்படின்னா, இந்த பெசன்ட் நகர்ல இருக்கக்கூடிய அஷ்டலட்சுமி கோயிலுக்கு போய் நீங்க வழிபாடு பண்ணும் பொழுது, அங்க நீங்க வந்து ஒரே ஒரு ரூபாய் நோட்டு, அது 10 ரூபாய் நோட்டா கூட இருக்கட்டும்.
06:54
Speaker A
அங்க இருக்கிற ஐயர் சொல்லலாம் 500 ரூபாய் கொடுங்க, பெரிய நோட்டா கொடுங்க அப்படின்னுலாம் சொன்னா கூட உங்க கையில ஒரு 10 ரூபாய் நோட்டு இருந்தாலும் சரி,
07:00
Speaker A
ஒரு 50 ரூபாய் நோட்டு இருந்தாலும் சரி, அதை வந்து நீங்க அங்க இருக்கிற தாயார் கிட்ட,
07:04
Speaker A
அங்க இருக்கிற பெருமாள் கிட்ட வச்சிட்டு, அங்க வந்து அஷ்டலட்சுமிகளும் இருப்பாங்க இல்லையா ஒன்னா, அங்க போய் நீங்க ஒரே ஒரு நோட்டை வச்சிட்டு அதை எடுத்துட்டு வரப்போ,
07:12
Speaker A
செழிப்பு அப்படிங்கறது உங்களுக்கு அதிகமாகிறது வந்து நீங்க பார்க்க ஆரம்பிப்பீங்க.
07:16
Speaker A
முக்கியமா ரிஷப ராசிக்காரங்களுக்கு இதை ஆணா இருக்கட்டும், பெண்ணா இருக்கட்டும்,
07:20
Speaker A
இருவருக்குமே வந்து இது மிகுந்த ஒரு செழிப்பை கொடுக்கும் அப்படிங்கறது தான் ரிஷப ராசிக்கு.
07:24
Speaker A
இப்ப ரிஷப ராசிக்காரங்க எல்லாம் கேட்கலாம்.
07:27
Speaker A
எங்களுக்கு எங்களுக்கு சனி பெயர்ச்சி வந்து 11 ஆம் இடத்துல வந்து சனி உட்கார்ந்திருக்கிறாரே, அப்ப எங்களுக்கு நல்லது தானே பண்ணுவாருன்னா, கண்டிப்பா நல்லது தான் பண்ணுவாரு.
07:34
Speaker A
ஆனா உழைப்பும் அதுக்கு தகுந்த மாதிரி நீங்க போடணும்.
07:37
Speaker A
சில பேர் ப்ராப்பர்ட்டி வாங்கலாம் அப்படின்னுலாம் பிளான்ல வச்சிட்டு இருக்கீங்கன்னா,
07:40
Speaker A
தாராளமா ஜூன் மாசத்துக்கு அப்புறமா நீங்க செயல்படுத்த ஆரம்பிக்கலாம்.
07:45
Speaker A
சோ, அதுக்கான அமைப்புகளும் உங்களுக்கு வர ஆரம்பிக்கும்.
07:48
Speaker A
வராத இருக்கக்கூடிய பணமும் வர ஆரம்பிக்கும்.
07:52
Speaker A
ஒரு சிலர் கடன்பட்டலாம் இருப்பீங்க ரிஷபத்துல இருக்கவங்கலாம்.
07:54
Speaker A
அப்ப இந்த ரிஷபத்துல இருக்கவங்க கடன்பட்டு இருக்கப்போ, நான் சொன்ன மாதிரி இந்த லட்சுமி வழிபாடு, செழிப்பான வழிபாடு,
08:01
Speaker A
புலம்பவே கூடாது அப்படிங்கறது தான் ரிஷபத்துக்கு நான் சொல்றதே.
08:04
Speaker A
நீங்க அப்படியே கோ வித் தி ஃப்ளோல போயிட்டே இருந்தீங்க அப்படின்னா,
08:11
Speaker A
கொஞ்சம் கொஞ்சமா உங்களால கடன் அப்படிங்கற ஒரு விஷயத்தை அடைக்க முடியும்.
08:15
Speaker A
ஜெனரலாவே என்ன சொல்லப்படுதுன்னா, யாருக்காவது நம்ம போய் கடன் அடைக்கணும்னா, ஒரு செவ்வாய்க்கிழமையா பார்த்து நீங்க முதல் தவணையை நீங்க வந்து,
08:20
Speaker A
ஏதோ ஒரு சின்ன அமௌன்ட் உங்க கையில என்ன இருக்கோ, ஏதோ ஒரு சின்ன அமௌன்ட் கொடுத்து நீங்க அடைக்கிறீங்க அப்படின்னா, சீக்கிரம் கடன் அடைக்க முடியும்.
08:25
Speaker A
இந்த நாட்களை தவிர்த்து வேற ஏதாவது ஒரு நாட்கள்ல நாங்க கடன் அடைச்சா என்ன ஆகும் அப்படின்னா,
08:30
Speaker A
ஒருவேளை நீங்க சனிக்கிழமை எல்லாம் போய் ஏதாவது ஒன்னு பண்றீங்கன்னா,
08:35
Speaker A
ஒரு கடனை அடைக்கிறீங்கன்னா, அதுவும் ஒரு வகையில உங்களுக்கு சனி வந்து கொஞ்சம் ஹெல்ப் பண்ணக்கூடியவர் தான்.
08:40
Speaker A
சோ, வேகமாவே கடன் அடைக்கக்கூடிய அமைப்பு இருக்கும்.
08:42
Speaker A
ஆனா கடன் வாங்க போறீங்க, கடன் சம்பந்தமா பேச போறீங்கன்னா, உங்களுக்கு சனிக்கிழமை,
08:47
Speaker A
அதே மாதிரி வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் உகந்த கிழமைகளா இருக்கும்.
08:50
Speaker A
அடைக்க போறது செவ்வாய்க்கிழமையாவே இருக்கட்டும் அப்படிங்கறது தான் ரிஷபத்துக்கு நான் சொல்றது.
08:54
Speaker A
சோ, பொதுவாவே செழிப்பை கொடுக்கக்கூடிய ஸ்தலங்கள் அப்படின்னு இருக்கு.
08:58
Speaker A
அப்ப ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு ஸ்தலங்களுக்கு போகும் பொழுது பிளாக்கேஜஸ் கிளியர் ஆகும் அப்படிங்கறதுனால தான் இன்னார் இந்த கோயிலுக்கு போங்க.
09:05
Speaker A
இந்த அதே மாதிரி அந்த ஆர்டர்ல நம்ம சொல்றோம் இல்லையா இந்த இந்த கோயிலுக்கு போங்க அப்படின்னு.
09:08
Speaker A
சோ, பொதுவாவே வந்து ஒரு நல்ல ஒரு செழிப்பு வரணும், எனக்கு ஒரு லக் நல்லா ஆக்டிவேட் ஆகணும் அப்படின்னா,
09:14
Speaker A
திருப்பதி தான், பெருமாள் தான்.
09:16
Speaker A
ஆனா அந்த திருப்பதி பெருமாளுக்குமே யாருக்கெல்லாம் வந்து சந்திரன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லபடியா இருக்கோ அவங்க போகலாம்.
09:24
Speaker A
ரொம்ப நெருப்பு ஆதிக்கம் இருக்கக்கூடிய நெருப்பு ராசிக்காரங்க போறீங்க அப்படின்னா,
09:30
Speaker A
மேஷம் போகலாம்.
09:33
Speaker A
அதே மாதிரி சிம்மம் போகலாம்.
09:35
Speaker A
ஆனா தனுசுக்கு அங்க இருக்கக்கூடிய திருப்பதி வந்து சம்டைம்ஸ் செட் ஆகாதுங்கற மாதிரி இருக்கும்.
09:42
Speaker A
அப்ப அவங்க ஸ்ரீரங்கம் போறது.
09:44
Speaker A
சோ, இந்த மாதிரி ஒரு ஆல்டர்நேட்டிவா வந்து ஒரு வழிபாட்டு முறைகளை வந்து ஒவ்வொரு ராசிக்காரங்களும் கரெக்டா மெயின்டைன் பண்ணிக்கிறாங்க அப்படின்னா,
09:50
Speaker A
அவங்களுக்கான லக் ஆக்டிவேஷன் ஆகக்கூடிய இடங்கள் தான் வந்து நம்ம சொல்ற திருப்பதி பெருமாள் ஸ்தலங்களுக்கு எல்லாம் போறது.
09:55
Speaker A
அடுத்தது பார்க்கிறப்போ,
09:58
Speaker A
செழிப்பு வரணும்.
10:00
Speaker A
முதல் லக் வரணும், அப்புறம் செழிப்பு வரணும் அப்படின்னாலே அது லட்சுமி தான்.
10:03
Speaker A
மகாலட்சுமி வழிபாடு அப்படிங்கறது ரொம்ப அவசியம்.
10:06
Speaker A
மகாலட்சுமி வழிபாட்டுக்கு வந்து இந்த ஸ்ரீபுரம் கோல்டன் டெம்பிள் அப்படின்னு ஒரு கோயில் இருக்கு இல்லையா?
10:13
Speaker A
அங்க போய் நீங்க வழிபாடு பண்றீங்க அப்படின்னா,
10:17
Speaker A
கண்டிப்பா நல்ல வெல்த், நல்ல ஒரு ப்ராஸ்பரிட்டி, நல்ல செழிப்பா தான் போகணும்.
10:23
Speaker A
லட்சுமி எப்பவுமே லட்சுமி ஸ்தலங்களுக்கு எல்லாம் போகும் பொழுது,
10:25
Speaker A
நம்ம வந்து ஒரு மனநிலைமையும் சரியா வச்சிட்டு தான் போகணும்.
10:32
Speaker A
சிலர்லாம் சொல்லுவாங்க நான் என் பெருமாள் கோயிலுக்கு போனேன்.
10:34
Speaker A
லட்சுமி கோயிலுக்கு போனேன் ஆனா என் வாழ்க்கை இப்படி தான் இருக்கு.
10:36
Speaker A
நீங்க எப்படி போனீங்கன்னு ஒன்னு இருக்குது.
10:39
Speaker A
சிவன் கோயிலுக்கு போறப்போ ரொம்ப சாந்தமாவும், பெருமாள் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு போறப்போ ரொம்ப செழிப்பாவும்,
10:44
Speaker A
நல்ல அட்ராக்டிவான கலர்ஸ்ல நம்மகிட்ட இருக்க ஜுவல்ஸ்ல.
10:47
Speaker A
அதனாலதான் வந்து பெருமாள் வந்து செழிப்பாவே இருப்பார்.
10:50
Speaker A
இந்த லட்சுமி சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு போகும் பொழுது, சந்தோஷமா போறோம்னா சந்தோஷம் பன்மடங்கு திரும்பி வரும்.
10:57
Speaker A
வருத்தப்பட்டுட்டே போறீங்க அப்படின்னா, திரும்பி அதவே பன்மடங்கு கொடுத்துரும் அப்படிங்கறது தான் லட்சுமியை வழிபாடு பண்ணக்கூடிய சூட்சமம்.
11:03
Speaker A
லட்சுமி வரவே மாட்டாங்கன்னு ஒன்னு இருக்கு.
11:05
Speaker A
லட்சுமி எங்க வந்து ஒரு சந்தோஷம், மகிழ்ச்சியான தருணங்கள், பாசிட்டிவ் திங்கிங் எங்க இருக்கோ அங்க தான் லட்சுமி இருப்பாங்க.
11:12
Speaker A
சோ, அதுல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும், அப்பதான் உங்களுக்கு வெல்த் அப்படிங்கற ஒரு விஷயம் வந்து நல்லபடியாவே வரும்.
11:17
Speaker A
அடுத்தது வந்து யாரு கொடுக்க போறா அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா?
11:20
Speaker A
குரு தான் கொடுக்கணும்.
11:22
Speaker A
அப்போ குருவோட அனுகிரகம் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும் அப்படிங்கறதும் முக்கியம்.
11:26
Speaker A
அப்ப குரு ஸ்தலங்கள், குரு வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு,
11:30
Speaker A
ஆலங்குடி போயிட்டு வந்துரும்.
11:32
Speaker A
யாருக்காவது இல்லைங்க எனக்கு பணம் வர வேண்டிய இடத்துல வரலையே, எனக்கு ஒரு கைடன்ஸ் கரெக்டாவே இல்லை.
11:37
Speaker A
இல்லை என்கிட்ட பணம் இருக்கு, ஆனா ஏதோ ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்குன்னா, உடனே ஆலங்குடி கிளம்பி போயிறணும்.
11:41
Speaker A
ஆலங்குடி போயிட்டு அங்க வழிபாடு பண்றீங்கன்னா, குரு முதல் ஸ்ட்ராங் ஆவார்.
11:46
Speaker A
அப்ப ஆலங்குடி போயிட்டு நாங்க அங்க என்ன பரிகாரங்கள் பண்ணலாம்னா, படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள்.
11:50
Speaker A
அதாவது எஜுகேஷன் ரிலேட்டடா ஏதாவது கஷ்டப்படுற ஒரு குழந்தைகளுக்கு ஒரு பெண்ணோ, ஒரு பென்சிலோ, ஒரு பேகோ, ஒரு நோட்டோ ஏதோ ஒன்னு நீங்க வாங்கி கொடுக்கிறீங்கன்னா,
11:58
Speaker A
படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு காசா கொடுத்துட்டு வரக்கூடாது.
12:01
Speaker A
காசு கொடுத்து இந்த இந்த பொருள் வாங்கிக்கோன்னு கொடுக்கக்கூடாது.
12:03
Speaker A
நீங்களே அந்த பொருள் வாங்கி கொடுக்கும் பொழுது தான், அதற்கான பிராயச்சித்தமே அதுதான்.
12:08
Speaker A
சோ, அதனால இந்த மாதிரி தானங்கள் நீங்க பண்ணுங்க, உங்களுக்கு குரோத் ரொம்ப நல்லா இருக்கும்.
12:12
Speaker A
சில பேத்துக்கு வந்து எல்லாமே இருக்கும்.
12:15
Speaker A
ஆனா கர்மா ஒரு வேலை பார்த்துட்டே இருக்கும்னு ஒன்னுலாம் இருக்குது இல்லையா?
12:19
Speaker A
சோ, கர்மா வேலை பார்த்துட்டு இருக்கவங்களுக்கு சனி தான்.
12:22
Speaker A
முதல் போயிட்டு பரிகார ஸ்தலங்களுக்கு போயிட்டு தான் புண்ணிய ஸ்தலங்களுக்கே போகணும்னுலாம் இருக்கு.
12:27
Speaker A
இப்ப நான் சொன்ன திருப்பதி எல்லாமே புண்ணிய ஸ்தலங்கள்.
12:31
Speaker A
இப்போ சிலருக்கு வந்து கர்மா கழிச்சு ஆகணும்.
12:34
Speaker A
இப்ப வந்து மகரத்துல எல்லாம் இருக்காங்க, அவங்களுக்கெல்லாம் முழுசா இப்ப சனி விலகுதுன்னா நன்றி சொல்லிட்டு வந்துரும்.
12:39
Speaker A
திருநள்ளாறு போயிட்டு கர்மத்தை கழிச்சிட்டு,
12:42
Speaker A
அந்த கர்மத்தை கழிச்சிட்டு திருப்பி அங்க இருந்து நான் வந்து புண்ணிய ஸ்தலங்களுக்கு போறேன்னு பரிகார ஸ்தலம் போயிட்டு கையோட புண்ணிய ஸ்தலம் டிராவல் பண்ணிடவே கூடாது.
12:51
Speaker A
நிறைய பேர் இது நிறைய பேர் செய்யக்கூடிய தப்பு தான்.
12:53
Speaker A
ஒரு ட்ரிப் ஒன்னு போடுவீங்க.
12:55
Speaker A
இந்த கோயில் ஒன்னு போறோம் ஃபார் எக்ஸாம்பிள் காளகஸ்தி போவீங்க.
13:00
Speaker A
காளகஸ்தியில இருந்து அப்படியே திருப்பதி போறேன்னு போறது, இல்ல திருப்பதியில இருந்து அப்படியே காளகஸ்தி வரேன்னு போறது.
13:05
Speaker A
காளகஸ்திங்கறது என்னது?
13:07
Speaker A
பரிகார ஸ்தலம்.
13:09
Speaker A
திருப்பதிங்கறது என்னது?
13:10
Speaker A
புண்ணிய ஸ்தலம்.
13:11
Speaker A
புண்ணியத்தை வாங்கிட்டு வந்து இங்க பரிகாரம் பண்ணி இங்க கரைக்க போறீங்களா, இல்ல இங்க கரைச்சிட்டு திருப்பி அங்க இந்த கரைச்சதை எடுத்துட்டு போயிட்டு அங்க போய் புண்ணியம் சேர்க்க போறீங்களா?
13:16
Speaker A
ரெண்டுமே வந்து இம்பேலன்ஸ் ஆயிடும்.
13:19
Speaker A
அது பிளஸ் அண்ட் டூ மைனஸ்ங்கற மாதிரி ஒரு விஷயம் ஆயிடும்.
13:22
Speaker A
சோ, அதனால ஒரு தடவை பரிகார ஸ்தலத்துக்கு போனீங்கன்னா,
13:27
Speaker A
திரும்பி வீட்டுக்கு தான் வரணும்.
13:30
Speaker A
புண்ணிய ஸ்தலத்துக்கு போனாலும் திரும்ப வீட்டுக்கு தான் வரணும்.
13:33
Speaker A
இப்படி வேணா நீங்க வந்து பிரிச்சு வச்சுக்கலாம்.
13:35
Speaker A
பரிகார ஸ்தலம்னா பரிகார ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரும்.
13:38
Speaker A
புண்ணிய ஸ்தலம்னா புண்ணிய ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரும்.
13:41
Speaker A
சோ, இதுலயும் ரொம்ப கவனம்.
13:42
Speaker A
இத்தனை கோயிலுக்கு போய் எங்களுக்கு ஒண்ணுமே நடக்கலைன்னா, கோயில் ஆகம விதிகள்னு ஒன்னு இருக்கு இல்லையா?
13:48
Speaker A
அதனாலதான் வந்து இந்த இந்த தெய்வங்களை இப்படி இப்படி வழிபாடு பண்ணுங்கன்னு நேரம் கால முறைகள் எல்லாமே இருக்கு.
13:52
Speaker A
அதையும் வந்து நீங்க புரிஞ்சுக்கணும்.
13:55
Speaker A
யாராவது வந்து பரிகாரங்கள் விட்ட குறை தொட்ட குறை வச்சிட்டு நான் புண்ணிய ஸ்தலத்துக்கு போறேன் போனேன் அப்படின்னா அதெல்லாம் புண்ணியம் தராது.
14:01
Speaker A
சோ, பரிகாரம் என்னவோ முழுசா பரிகாரத்தை முடிச்சிட்டு புண்ணிய ஸ்தலங்களுக்கு போறீங்க அப்படின்னாலே உங்களுக்கு குரோத் அப்படிங்கறது அக்குமுலேட் ஆக ஆரம்பிச்சிரும் அப்படிங்கறதுதான்.
14:10
Speaker A
சில பேர் சொல்லுவாங்க என்னென்னமோ கோயில் நினைக்கிறேங்க, ஆனா எந்த கோயிலுக்குமே என்னால போக முடியல.
14:14
Speaker A
நாங்க எப்படி குரோ ஆகுறதுன்னா வீட்ல வச்சு முருகரை வழிபாடு பண்ணுங்க.
14:18
Speaker A
ஸ்கந்த சஷ்டி கவசம் கேளுங்க.
14:20
Speaker A
வேல் மாறல் கேளுங்க.
14:21
Speaker A
பிளாக்கேஜஸ் முதல் வீட்ல இருந்து தான் கிளியர் ஆகணும் அப்படிங்கறது ஒன்னு இருக்குது.
14:25
Speaker A
சோ, இந்த வீட்ல விளக்கேத்திட்டே இருக்கணும், வீட்ல நெய் விளக்கு ஏத்திட்டே இருக்கணும், முருகரை வழிபாடு பண்ண பண்ண என்னென்ன தடைகள்லாம் இருக்கோ எல்லாமே கிளியர் ஆகி நீங்க போகக்கூடிய ஸ்தலங்களுக்கு எந்த தடையும் இல்லாம,
14:33
Speaker A
எந்த பிரச்சனையும் இல்லாம உங்களால போயிட்டு வர முடியும் அப்படிங்கறதுதான்.
14:38
Speaker A
சோ, இந்த ஸ்தல வழிபாட்டு முறைகளையும் நீங்க வந்து நிறைய தெரிஞ்சு வச்சுக்கணும்.
Topics:ரிஷப ராசிதசா புத்திசெழிப்புசுக்ரன் கிரகம்அஷ்டலட்சுமி வழிபாடுமீன் வளர்ப்புபணியியல் திட்டமிடல்ஜாதக பரிகாரம்சனி பெயர்ச்சிதெய்வ வழிபாடு

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →