**விருச்சிகம் 👉 15 வருடத்திற்கு பிறகு அடிக்கும் யோகம் | Viruchigam |  New Year Rasi Palan 2026 — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/viruchigam-yoga-15-years-new-year-2026/

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2026ல் தொழில், வருமான மாற்றங்கள், நிம்மதி, ஆரோக்கியம் மற்றும் புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

## Key Takeaways

- 2026ல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முக்கிய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி ஏற்படும்.
- குரு கிரகத்தின் ஆதரவு மூலம் வெற்றி மற்றும் நிம்மதி கிடைக்கும்.
- ஆரோக்கியம் மற்றும் மனநிலை மேம்பாட்டுக்கு கவனம் தேவை.
- பரம்பரை வழிபாடுகள் மற்றும் குலதெய்வ ஆசீர்வாதம் முக்கியம்.
- தனித்துவ திறமைகளை பயன்படுத்தி சமூக மற்றும் தொழில்துறையில் முன்னேற்றம் பெறலாம்.

## What the video covers

- 2026ல் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், தொழில் மற்றும் வருமானத்தில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும்.
- 15 வருட கஷ்ட காலத்திற்கு பிறகு நிம்மதி மற்றும் பெருமூச்சு விடும் காலம் வரும்.
- புதிய பிசினஸ் வாய்ப்புகள் மற்றும் வெளி மாநில பயணங்கள் அதிகரிக்கும்.
- குரு கிரகத்தின் பார்வை மூலம் நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும் யோகம் உள்ளது.
- திருமண வாழ்க்கை மேம்படும், உடல் ஆரோக்கியம் மற்றும் மன சாந்தி பெறும்.
- சனி மற்றும் செவ்வாய் காலங்களில் கவனம் தேவை, குறிப்பாக உடல் மற்றும் பரம்பரை நோய்கள் தொடர்பாக.
- குலதெய்வ கோவிலில் பாலாபிஷேகம் மற்றும் இலுப்பெண்ணெய் வழிபாடு மூலம் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
- விருச்சிக ராசிக்காரர்கள் தனித்துவமான திறமைகளை கண்டுபிடித்து வளர்ச்சி பெறுவார்கள்.
- 2026ல் பெயர், புகழ், மற்றும் சமூக அங்கீகாரம் அதிகரிக்கும்.
- மீடியா மற்றும் கூட்டாண்மைகளில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

Answers

## Questions about this video

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும்?

2026 ஆம் ஆண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், தொழில் மாற்றம், வருமான மாற்றம் போன்ற சுப பலன்கள் உண்டாகும். உச்சம் பெற்ற குருவின் ஐந்தாம் பார்வை காரணமாக நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்.

விருச்சிக ராசிக்காரர்கள் நினைத்ததை அடைய என்ன பரிகாரங்கள் செய்யலாம்?

விருச்சிக ராசிக்காரர்கள் திங்களூர் கோவிலுக்கு சென்று திங்கட்கிழமைகளில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யலாம். அல்லது பிறை சூடிய சிவபெருமான் கோவிலில் திங்கட்கிழமைகளில் வளம்புரி சங்கு கொண்டு அபிஷேகம் செய்தால் அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் உடல்நலம் மற்றும் பயணத்தில் என்ன சவால்கள் இருக்கும்?

விருச்சிக ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நெஞ்சு சளி சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. பயணத்தின் போது சனி செவ்வாய் காலத்தில் நீர், நெருப்பு மற்றும் இயற்கை அழிவுகளால் பிரச்சனைகள் வரக்கூடும், எனவே நிதானமாக இருக்க வேண்டும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:06

Speaker A

இடமாற்றம், தொழில் மாற்றம், வருமான மாற்றம், நினைத்தது நடக்கும், கேட்டது கிடைக்கும்.

00:10

Speaker B

என்னுடைய எஃபர்ட் மத்தவங்களுக்கே போயிட்டு இருக்கே, என்னுடைய எஃபர்ட்டுக்கான கெயின் எனக்கு கிடைக்கலையே, எனக்கான ரெகக்னிஷன் வரலையே அப்படிங்கிற இருக்கிறவங்களுக்கு எல்லாம் இனிமேல் ரெகக்னிஷன் அப்படிங்கிறது வரும்.

00:20

Speaker C

15 வருஷத்துக்கு அப்புறம் அப்பாடா நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய ராசி விருச்சிக ராசிதான் இந்த தடவை அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு விருச்சிக ராசிக்காரர்கள் எல்லாம் இனிமேல் காலரை தூக்கிவிட்டு நடப்பீங்க.

00:27

Speaker D

அவனுக்கு என்ன அவனுக்கு லக் டக்குன்னு வந்து அவனுக்கு நடந்துருச்சு, டக்குன்னு வீடு வாங்கிட்டான், அந்த டக்குன்னுங்கிற சமாச்சாரம் ஃபுல்லாவே விருச்சிகத்துக்கு நடக்கும் இதுவரைக்கும் லக் இருந்திருக்காது ஆனா இப்ப நடக்கும் நிறைய பேரு ஃபாரின் போகக்கூடிய பிராப்தம்.

00:38

Speaker E

ரெட்ரோ ஆன்மீகம் வழங்கும் புத்தாண்டு பலன்கள் 2026 வாழ்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு வருஷம் போகுது மாசம் போகுது நாளும் போகுது ஆனா கஷ்டம் மட்டும் போகவே இல்லை அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து பல ராசிக்காரர்கள் பேசிக்கிட்டே இருக்காங்க.

00:53

Speaker E

நீங்களும் இதெல்லாம் பண்ணுங்க இதெல்லாம் சொன்னீங்கன்னா உங்களுடைய வாழ்க்கை சரியாயிடும் அப்படின்னு 2025ல நிறைய சொல்லி இருந்தீங்க அதை கேட்டு நிறைய பேரோட வாழ்க்கையில நிறைய மாற்றங்களும் இருந்துச்சு அதேபோல இந்த 2026லயும் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கப்போகுது.

01:50

Speaker E

சார் அடுத்ததா விருச்சிக ராசி நேயர்களுக்கு 2026 எப்படி இருக்கப்போகுது சார்.

01:54

Speaker A

அருமையா இருக்கும் இடமாற்றம், தொழில் மாற்றம், வருமான மாற்றம், ஊர் விட்டு ஊர் போறது, வெளி மாநிலமோ வெளி ஊரோ போறது அப்படின்னு சுப பலனா நடக்கும்.

02:02

Speaker A

அதுவும் உச்சம் பெற்ற குரு உங்களுக்கு உங்க ராசியை பார்க்க போறார் அந்த ஐந்தாம் பார்வையை உங்களுக்கு பார்க்கிறதுனால நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும்.

02:13

Speaker A

திங்களூர் அப்படிங்கிற கோவிலுக்கு போயிட்டு திங்கட்கிழமையில சுவாமிக்கு பாலாபிஷேகம் செஞ்சாலும் நீங்க நினைச்சது கிடைக்கும்.

02:21

Speaker A

இது எல்லாத்தை விட என்னால போக முடியல சார் அப்படின்னா பிறை சூடிய பெருமான் எங்கே இருக்கிறார் பிறை சூடிய சிவபெருமான் எங்கே எந்த கோவில்ல இருக்கார்னு பார்த்தீங்கன்னா அந்த கோவில்ல திங்கட்கிழமையில வளம்புரி சங்கு கொண்டு அபிஷேகம் செஞ்சா உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

02:39

Speaker A

திருமண வாழ்க்கையில மேன்மையும் பார்ட்னர்ஷிப்ல உதவியும் மேலதிகாரிகள் இதுவரைக்கும் இருந்து வந்த தொந்தரவுகளும் போகும்.

03:27

Speaker A

உடல் ஆரோக்கியத்துல செஸ்ட் சளி சம்பந்தமான பிரச்சனைகள் போகும் தாயினுடைய உடல்நிலையில கண்டிப்பா அக்கறை வேணும்.

03:35

Speaker A

பயணத்துல உங்களுக்கு சனி செவ்வாய் காலத்துல நீரினாலும் நெருப்பினாலும் இயற்கை அழிவுகளாலும் பிரச்சனைகள் வரத்தான் செய்யும் நான் போட்டிங் போறேன் ஸ்விம்மிங் போறேன் நான் பீச்ல போயிட்டு விளையாடிட்டு இருக்கேன் அப்படிங்கறதெல்லாம் இல்லாம கொஞ்சம் நிதானமா தெரிஞ்சு நிதானம் அறிந்து அந்த இட புரிஞ்சு நீங்க நடந்துகிட்டீங்கன்னா இது ஒரு அற்புதமான காலமாக இருக்கும்.

03:59

Speaker A

ஆக திங்களூர் இல்லனா பிறை சூடிய பெருமானுக்கு பாலாபிஷேகம் நான் சொல்றதை சொல்லிட்டேன் நீங்க செய்ய வேண்டியதை செஞ்சு சுப பலனை எடுத்துக்கங்க வாழ்க வளமுடன் ஆல் தி பெஸ்ட்.

04:10

Speaker E

கண்டிப்பா சார் நீங்க சொன்ன மாதிரி நீங்க சொல்லக்கூடிய விஷயங்கள் அனைத்தையும் சொல்லிட்டீங்க.

04:16

Speaker E

நேயர்கள் இதை கண்டிப்பா பார்த்து பயனடைவாங்க அப்படின்னு நினைக்கிறேன்.

04:20

Speaker E

மேம் நீங்க சொல்லுங்க விருச்சிக ராசிக்கு 2026 எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகுது.

05:01

Speaker B

விருச்சிக ராசிக்காரங்க வந்து நிறைய ஆப்பர்சுனிட்டிஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருப்பீங்க ஏன் அப்படின்னா உங்களுக்கு கான்பிடன்ஸ் இருக்கு ஆனா உங்களுடைய வர்த் என்ன அப்படிங்கறது அப்பப்போ உங்களுக்கு வந்து ஒரு கன்பியூஷன் அப்படிங்கறது வந்துகிட்டு இருந்திருக்கும் இப்ப உங்களுடைய வர்த் என்ன அப்படிங்கறது உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நிறைய விருச்சிக ராசிக்காரங்களுக்கு வந்து என்னுடைய எஃபர்ட் மத்தவங்களுக்கே போயிட்டு இருக்கே என்னுடைய எஃபர்ட்டுக்கான கெயின் எனக்கு கிடைக்கலையே எனக்கான ரெகக்னிஷன் வரலையே அப்படிங்கற இருக்கிறவங்களுக்கு எல்லாம் இனிமேல் ரெகக்னிஷன் அப்படிங்கிறது வரும்.

05:28

Speaker B

ஏன் அப்படின்னா நீங்க உங்களை மூலதனமா அங்க வைக்க போறீங்க அப்படிங்கறதுதான் உங்களுக்கு ஆக்சுவலா இந்த டைம் பீரியட இந்த 2025 உங்களை மோல்ட் பண்ணிட்டே இருந்திருக்கு.

05:42

Speaker B

அப்போ அந்த மோல்டுக்கான அந்த அவுட்புட் அப்படிங்கறது 2026ல இருந்து என்னென்ன அதாவது இப்ப மீடியா துறையில நிறைய பேர் இருப்பாங்க.

05:53

Speaker B

ஏன்னா விருச்சிகம் அப்படிங்கறதுனாலே விருச்சிகத்துக்கு வந்து ஃப்ளக்சுவேஷன்ஸ் மைண்ட் ஜாஸ்தி சீக்கிரம் போர் அடிச்சிரும்.

06:02

Speaker B

சோ மீடியா ஃபீல்ட்ல நிறைய விருச்சிகம் அப்படிங்கறவங்க இருப்பீங்க ஆப்பர்சுனிட்டிஸ்க்காக தேடிட்டே இருக்கிறது உங்களுடைய திறமைகளை காட்டிட்டே இருக்கிறது விருச்சிகத்துக்குன்னு தனி திறமை எனக்குள்ள என்ன திறமை யாரையும் பார்த்து காப்பி அடிக்காம உங்களுக்குள்ள ஒரு யூனிக்னஸ் அப்படிங்கற ஒரு விஷயம் இருக்கும் அந்த யூனிக்னஸ் நீங்க டிஸ்கவர் பண்ணிருப்பீங்க அதுவே உங்களுடைய மூலதனம் அதுவே உங்களுடைய குரோத் அப்படிங்கறது அதை பிடிச்சுக்கிட்டே போயிட்டீங்க அப்படின்னா ரொம்ப நல்லா இருக்கும் கொலாபரேஷன்ஸ்லாம் வரும் விருச்சிகத்துக்கு.

06:54

Speaker B

கொலாபரேஷன்ஸ்லாம் வரப்போ அது என்னன்னு வேர்ட் ஆஃப் மவுத்தா இல்லாம ஒரு டாக்குமெண்ட் பண்ணி பேசிட்டு ஏன்னா விருச்சிகத்துக்கு ஆன் தி ஸ்பாட் வித் டிரா பண்ணிட்டு போகக்கூடிய ஒரு மனநிலைமை உண்டு ஏன்னா அப்பப்போ ரொம்ப எமோஷன் ஆயிடுவீங்க.

07:14

Speaker B

விருச்சிகம் லாஜிக்கலா யோசிக்க மாட்டீங்க.

07:15

Speaker B

லாஜிக் அண்ட் எமோஷன்ஸ் ரெண்டும் பேலன்ஸ்டா இருந்துச்சு அப்படின்னா உங்களுக்கு 2026 அப்படிங்கறது குரோத் நல்லா இருக்கும்.

07:19

Speaker E

கண்டிப்பா மேம் லாஜிக்கும் எமோஷனும் மிக்ஸ் பண்ணி கரெக்டா கரெக்டா யோசிங்கன்னு சொல்லிருக்கீங்க.

07:24

Speaker E

மேம் அடுத்ததா வித்யா கார்த்திக் மேம் நீங்க சொல்லுங்க.

07:24

Speaker E

விருச்சிக ராசி 2026ல எப்படி இருக்க போறாங்க.

07:24

Speaker C

இருக்கிற 12 ராசிகளில ஃபென்டாஸ்டிக்கா இருக்க போற ராசி விருச்சிக ராசிதான் ஆரம்பத்துல சொன்ன மாதிரி படு பயங்கரமா ஒரு 12 13 வருஷத்துக்கு.

07:36

Speaker C

15 வருஷத்துக்கு அப்புறம் அப்பாடா நிம்மதி பெருமூச்சு விடக்கூடிய ராசி விருச்சிக ராசிதான் இந்த தடவை அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ஒரு மாதிரி கஷ்டப்பட்டு விருச்சிக ராசிக்காரர்கள் எல்லாம் இனிமேல் காலரை தூக்கிவிட்டு நடப்பீங்க.

08:23

Speaker C

நிறைய பேருக்கு புதுசா பிசினஸ் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கு முதல் ஒரு அஞ்சு மாசம் ஒரு மாதிரியும் அடுத்த ஒரு ஏழு மாசம் ஒரு மாதிரி விருச்சிக ராசிக்காரர்களுக்கு டிராவல் ஆகப்போகுது இந்த நியூ இயர்.

08:32

Speaker C

முதல் ஒரு அஞ்சு மாசம் கொஞ்சம் சனி வேற வக்ர நிவர்த்தி அடைஞ்சிட்டாரு அதனால கொஞ்சம் பிள்ளைகள் மூலமாக சில சில கஷ்டங்கள் மன சஞ்சலங்கள் பிள்ளைகளை ஹாஸ்டல்ல விடுறது இல்ல நம்ம ஒரு இடத்துல இருக்கிற மாதிரி ஒரு மாதிரி போகும்.

08:44

Speaker C

ஏன்னா அஞ்சாம் இடத்துல இருக்கக்கூடிய சனியினால அதுக்கப்புறம் வரக்கூடிய அந்த குரு பார்வை இருக்கு அப்படின்றது சூப்பர் எப்பவுமே ராசியில குரு இருக்கிறது ஒரு மாதிரி யோகம்னா ராசியை குரு பார்க்கிறது அதைவிட சிறப்பான யோகம்.

08:59

Speaker C

சோ ஒரு லைட் உங்க மேல அடிக்க போகுது.

09:01

Speaker C

இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு பெயர் புகழ் அந்தஸ்து எல்லாம் கிடைக்க போகுது ஜீவனஸ்தானம் சூப்பரா இருக்க போகுது.

09:11

Speaker C

உங்களுடைய மூன்றாம் இடம் செம்மையா இருக்கு.

09:15

Speaker C

நிறைய முயற்சி போடுவீங்க நீங்க போடுற முயற்சி எல்லாம் இதுவரைக்கும் பலிக்கலையே பலிக்கலையேன்னு இருக்கும் இல்ல கண்ணுக்கு தெரியும் கைக்கு வராது இப்படியே போயிட்டு இருந்த காலம் எல்லாம் தாண்டி நீங்க போடுற முயற்சி எல்லாம் சக்சஸ் ஆக போகுது.

09:51

Speaker C

நீங்க நினைச்ச எல்லாமே சக்சஸ் ஆக போகுது.

09:56

Speaker C

போட கூட வேணாம் நீங்க பண்ணனும்னு நினைச்ச விஷயத்துக்கு யாராவது ஒருத்தவங்க வந்து உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க அதே மாதிரி அந்த பக்கம் அஞ்சாம் இடம் சூப்பரா இருக்கு குலதெய்வத்துடைய ஆசியின் மூலமாக விருச்சிக ராசிக்காரர்கள் இந்த தடவை வெற்றி மேல் வெற்றி சூட போறீங்க.

10:17

Speaker C

இந்த அஞ்சாம் இடம்ன்றது இஷ்ட தெய்வம் குலதெய்வத்துடைய அனுக்கிரகத்தை சொல்றது.

10:22

Speaker C

காதல் திருமணம் நடக்கிறது குழந்தை பேரு நிறைய புகழ் கிடைக்கிறது நிறைய அரசு அரசாங்கத்தோட ஒரு சம்பந்தம் கிடைக்கிறது இந்த மாதிரி இருக்கும்போது இந்த இடத்தை கொஞ்சம் வலு செய்ய போறார் குருன்றபோது சூப்பரா இருக்க போகுது முதல் ஒரு அஞ்சு ஆறு மாசம் மட்டும் கொஞ்சம் ஹெல்த்ல ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.

10:39

Speaker C

முட்டி கால் பெயின் அதே மாதிரி கொஞ்சம் வயிறு சம்பந்தப்பட்ட விஷயத்துல கவனமா இருந்துட்டாலே போதும் விருச்சிக ராசி பெருசா வேணாம் அதே மாதிரி பரம்பரை நோய்னு சொல்லக்கூடிய அந்த சுகர் பிபி இதெல்லாமே தான் சனி தான் அதெல்லாம் இண்டிகேட் பண்ணுவாரு அப்ப இந்த பரம்பரை நோய்னு சொல்லக்கூடிய சுகர் கொஞ்சம் பார்த்துக்கணும் விருச்சிக ராசிக்காரங்க சுகர் எடுத்துட்டு இருந்தீங்க ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருந்தீங்கன்னா கொஞ்சம் கவனமா மாத்திரையை சாப்பிடணும்.

10:56

Speaker C

நீங்க பண்ண வேண்டிய ஒரே ஒரு விஷயம் எல்லாமே நல்லா இருக்குங்க பெருசா கவலையே படாதீங்க.

11:02

Speaker C

நான் ஒரே ஒரு வழிபாடு மட்டும் சொல்றேன் இதை மட்டும் பண்ணிட்டு வாங்க விருச்சிக ராசிக்காரங்க ஆயுசுக்கும் இனிமே இந்த நேரத்துல இருந்து இனிமே உங்களுக்கு ஜெயம் தான்.

11:10

Speaker C

போற உங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு இலுப்பெண்ணெய் வாங்கி ஒரே ஒரு தடவை விளக்குக்கு கொடுத்துட்டு வாங்க சூப்பரா இருக்கும் உங்க பரம்பரையே சூப்பரா இருக்க போகுது இனிமே இந்த காலத்துல இருந்து நான் சொல்றேன் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஒரு 30 வருஷம் டைம் பீரியட் ஃபென்டாஸ்டிக்கா இருக்கு எதை பத்தியும் கவலைப்பட வேண்டாம்.

11:42

Speaker E

கண்டிப்பா மேம் 30 வருஷத்துக்கு நினைச்சதெல்லாம் நடக்க போகுதுன்னு சொல்லிருக்கீங்க.

11:48

Speaker E

சார் நீங்க சொல்லுங்க விருச்சிக ராசிக்கு 2026 எப்படி இருக்கு.

11:48

Speaker D

அதாவது நிறைய ராசிகள் நன்னா இருக்குன்னு சொல்லக்கூடிய லிஸ்ட்ல வந்து விருச்சிக ராசி நம்பர் ஒன் அப்படிங்கறது நம்ம புரிஞ்சுக்கணும் ஏன்னா முதல் விஷயம் பாக்கியத்துல வரக்கூடிய குரு.

11:59

Speaker D

பாக்கிய ஸ்தானத்துல குரு வரான் அப்படின்னா உங்க அப்பாவுடைய மூதாதையர்கள் செய்திருக்கக்கூடிய நிறைய புண்ணியங்கள் வந்து உங்களுக்கு சேரும்.

12:06

Speaker D

உங்க பசங்களுக்கு வந்து சேரும்.

12:10

Speaker D

இந்த லக் ஃபேக்டர் அப்படின்னு சொல்லுவோம் ஒரு சின்ன விஷயம் எடுத்தாலே 10 தடவை நமக்கு ஒண்ணுமே முயற்சி பண்ண முடியல ட்ரை பண்ணாலும் நிறைய தடை கொடுக்குது யாரோ ஒருத்தருக்கு வந்து நமக்கு டிஸ்டர்ப் பண்றாங்க அப்படிங்கற நிலைமைகள்ல சில விஷயங்கள் அவனுக்கு என்ன அவனுக்கு லக் டக்குன்னு வந்து அவனுக்கு நடந்துருச்சு டக்குன்னு வீடு வாங்கிட்டான் அந்த டக்குன்னுங்கற சமாச்சாரம் ஃபுல்லாவே விருச்சிகத்துக்கு நடக்கும்.

12:23

Speaker D

இனிமேல் நடக்கும் இதுவரைக்கும் லக் இருந்திருக்காது.

12:26

Speaker D

ஆனா இப்ப நடக்கும்.

12:28

Speaker D

நிறைய பேரு ஃபாரின் போகக்கூடிய பிராப்தம்.

12:30

Speaker D

எந்த இடத்துக்கு போவீங்க நியூசிலாந்து, ஹாலண்ட், பின்லாந்து அதே மாதிரி ஸ்காட்லாந்து அதுக்கப்புறம் சவுத் ஆப்பிரிக்கா.

12:38

Speaker D

இந்த மாதிரி இடங்களுக்கு போய் செட்டில் ஆகக்கூடிய வாய்ப்புகள் விருச்சிகத்துக்கு சூப்பரா இருக்கு.

12:43

Speaker D

அது பாக்கியத்திலே குரு வரும்போது ஒருவேளை மூதாதையர்கள் சொத்துல ஏதாவது பிரச்சனை இருந்தாலும்.

12:48

Speaker D

அண்ணன் தம்பிக்குள்ள ஏதாவது சொத்து பிரச்சனை இருந்தாலும் அதெல்லாம் கிளியர் ஆகும்.

12:52

Speaker D

என்ன விஷயம் மெயினா பார்த்துக்கணும் அப்படின்னா மூலம் பௌத்திரம் அப்படின்னு சொல்லுவோம்.

12:58

Speaker D

அந்த ரெண்டுத்தையும் கொஞ்சம் கவனமா பார்த்துக்க வேண்டிய நிலைமை.

13:03

Speaker D

அதாவது ஒரு சில விஷயங்கள் வந்து சந்திரன் கனெக்ட் ஆச்சுன்னா அது பேர் நீரழிவு நோய் அப்படின்னு சொல்லுவோம்.

13:10

Speaker D

அப்பாவுக்கு இருக்கு தாத்தாவுக்கு இருக்குதுன்னா அது கண்டிப்பா நமக்கு டிஸ்டர்ப் பண்ண வாய்ப்பு இருக்கு.

13:17

Speaker D

அதனால ரெகுலர் டெஸ்ட் எடுத்துக்கிறது நல்லது.

13:20

Speaker D

இதெல்லாம் எப்போ ஜூனுக்கு அப்புறம்.

13:21

Speaker D

ஜூனுக்கு முன்னாடி ரொம்ப கவனமா இருக்கணும் அஷ்டமத்துல குரு அதுவும் வந்து ஒரு சில இடங்கள்ல ராகுவோட கன்ஜங்ஷன்.

13:28

Speaker D

ராகு குரு கன்ஜங்ஷன் இதெல்லாம் இருக்கும்போது சில விஷயங்கள் விபரீதமான விஷயங்கள்லாம்.

13:33

Speaker D

இது பெரிய சமாச்சாரமே கிடையாதுன்னு நினைச்சுப்போம்.

13:37

Speaker D

அதுலதான் கொண்டு போய் மாட்டிவிடும்.

13:40

Speaker D

ஏன்னா அக்கவுண்ட்ஸ் ஆடிட்டிங் ஐடி கட்டாதவங்க எல்லாம் தயவு செய்து அட்வான்ஸ் டாக்ஸ் எல்லாம் கரெக்டா கட்டுங்க.

13:44

Speaker D

ஐடி ரைடே ஒரு சில பேருக்கு வீட்டுக்கு வரலாம்.

13:48

Speaker D

ஒரு சில பேர் மிக முக்கியமா கோர்ட் ஜட்ஜ்மென்ட்ஸ் எல்லாம் வந்து கரெக்டா ஃபாலோ பண்ணாம விட்டீங்கன்னா கண்டென்ட் ஆஃப் தி கோர்ட் போட்டு உங்களை உள்ள தள்ளுவாங்க அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நடக்கும்.

13:58

Speaker D

ரெண்டாவது நிறைய பேருக்கு இந்த டைம்ல வந்து தேவையே இல்லாத கோர்ட் கேஸ் வம்பு தும்பு வழக்கு இதெல்லாம் வரும்.

14:01

Speaker D

டீசன்ட்டா உட்கார்ந்து பேசி முடிச்சுக்கிறது நல்லது.

14:05

Speaker D

குழந்தைகளுடைய ஆரோக்கியம் குழந்தைகளுடைய நடவடிக்கை இது ரெண்டுமே கொஞ்சம் கவனமா இருந்தா போதும்.

14:11

Speaker D

விருச்சிக ராசிக்கு 2026 அமேசிங் ஏப்ரலுக்கு அப்புறம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லலாம்.

14:15

Speaker D

இதுல வழிபாட்டுக்கூடிய ஸ்தானம் அப்படின்னு சொன்னா நான் சொல்லக்கூடியது கோதானம்.

14:20

Speaker D

எந்த அளவுக்கு பசுமாட்டுக்கு அகத்தீரை கொடுக்கிறீங்களோ பசுமாட்டுடைய வால் பகுதியை தொட்டு நமஸ்காரம் பண்றீங்களோ நல்ல மாற்றங்கள் கண்டிப்பா உண்டு.

14:28

Speaker D

2026 விருச்சிகத்துக்கு சூப்பரா இருக்கு.

14:30

Speaker E

சூப்பரா இருக்கு விருச்சிகத்துக்கு அப்படின்னு சொல்லி சொல்லிருக்கீங்க.

14:32

Speaker E

ரெட்ரோ ஆன்மீகம் வழியா பார்த்துக்கிட்டு இருக்க விருச்சிக ராசி நேயர்கள்.

14:37

Speaker E

நீங்க எல்லாரும் சொன்னதை கேட்டு பயனடைவாங்க அப்படின்னு நினைக்கிறேன்.

Topics: விருச்சிகம் 2026 ராசி பலன் புத்தாண்டு ராசிபலன் தொழில் மாற்றம் வருமான மாற்றம் ஆரோக்கியம் குலதெய்வ ஆசீர்வாதம் பாலாபிஷேகம் புதிய வாய்ப்புகள் தமிழ் ஜோதிடம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11457)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11457)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/viruchigam-yoga-15-years-new-year-2026/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
