**Viruchigam | வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும்! | Jeevitha Suresh | செல்வம் சேர பரிகாரம் — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/viruchigam-life-biggest-progress-jeevitha-suresh-wealth-remedy/

விருச்சிக ராசிக்கான பரிகாரம் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் வழிமுறைகள், தாந்திரிக வழிபாடு மற்றும் கர்மா விளைவுகள் பற்றி விளக்கம்.

## Key Takeaways

- சந்திரன் நீசம் காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் மனஅழுத்தம் மற்றும் பயம் அனுபவிப்பார்கள்.
- பூமி வாங்கும் போது மற்றும் வாழ்க்கைத் துணை தேர்வில் மிகுந்த கவனம் தேவை.
- தாந்திரிக வழிபாடுகள் மற்றும் அத்தி வராகி கோவில் வழிபாடு முக்கியமானது.
- பல கர்மா மற்றும் மறைமுக எதிரிகள் காரணமாக பரிகாரம் அவசியம்.
- விருச்சிக ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை வளர்த்து உதவி கேட்கும் பழக்கம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

## What the video covers

- விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடவுள் அருளும் பலன்கள் இருப்பினும் சந்திரன் நீசம் காரணமாக மனஅழுத்தம் மற்றும் பிரச்சினைகள் ஏற்படும்.
- பல ஜென்ம கர்மா காரணமாக பூமி வாங்கும் போது மிகுந்த கவனம் தேவைப்படுகின்றது.
- விருச்சிக ராசிக்காரர்கள் அதிகாலை சூரியன் உதிக்கும் நேரத்திலும் மறையும் நேரத்திலும் வழிபாடு செய்தால் பிரார்த்தனைகளுக்கு சக்தி கிடைக்கும்.
- விருச்சிக ராசி பெண்கள் குடும்பத்தில் செழிப்பு மற்றும் வாழ்க்கை மாற்றங்கள் ஏற்படும், ஆனால் வாழ்க்கைத் துணை தேர்வில் கவனம் அவசியம்.
- விருச்சிக ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை குறைவாகவும், உதவி கேட்கவோ தயங்குவதாகவும் இருக்கிறார்கள்.
- அத்தி வராகி கோவில் மற்றும் அதன் தாந்திரிக சக்திகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு முக்கியமான வழிபாட்டு இடமாகும்.
- சிகப்பு திரி மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற தாந்திரிக வழிபாடுகள் விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பாதுகாப்பையும் செழிப்பையும் தரும்.
- விருச்சிக ராசிக்காரர்கள் மறைமுக எதிரிகளால் பாதிக்கப்படுவார்கள், அதனால் வழிபாடு மற்றும் பரிகாரம் அவசியம்.
- வராகி தாயின் வழிபாடு வீட்டிலும் செய்யலாம், ஆனால் அது மற்ற தெய்வங்களுடன் தனித்தனியாக இருக்க வேண்டும்.
- விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல திருப்பங்கள் மற்றும் போராட்டங்கள் இருப்பினும் பரிகாரம் மூலம் முன்னேற்றம் அடைய முடியும்.

Answers

## Questions about this video

விருச்சக ராசிக்காரர்கள் நிலம் வாங்கும் போது ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

விருச்சக ராசிக்காரர்கள் நிலம் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இது பல ஜென்மங்களுடன் தொடர்புடையது. ஒரு நிலம் அவர்களை அழைத்தால், அதன் வரலாற்றை அறியாமல் அவர்கள் செல்லக்கூடாது, ஏனெனில் அந்த நிலம் வளர்ச்சி அல்லது முழுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

விருச்சக ராசிக்காரர்களின் மனநிலை மற்றும் பயம் குறித்து இந்த வீடியோ என்ன கூறுகிறது?

சந்திரன் நீசம் அடைந்திருப்பதால், விருச்சக ராசிக்காரர்களின் மனம் சரியாக செயல்படாது, ஆழ்மனதில் ஒரு பயத்தை உருவாக்கும். முடிவுகளை எடுக்கும்போதும், யாரை நம்ப வேண்டும், யாரை நம்பக்கூடாது என்பதிலும் அவர்களுக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும்.

விருச்சக ராசிக்காரர்கள் எப்போது வழிபாடு செய்ய வேண்டும்?

விருச்சக ராசிக்காரர்கள் அதிகாலை சூரியன் உதிக்கும் நேரத்திலோ அல்லது சூரியன் மறையும் நேரத்திலோ வழிபாடு செய்ய வேண்டும். இந்த இரண்டு நேரங்களுக்கும் இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் வழிபாடு செய்தால் மட்டுமே அவர்களின் பிரார்த்தனைகளுக்கு சக்தி கிடைக்கும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

விருச்சக ராசிக்கு வந்து ஜெனரலாவே நான் என்ன சொல்லுவேன்னா கடவுள் எல்லாமே கொடுப்பாரு, ஆனா அந்த டிராப்ல போய் சிக்கி ஒவ்வொன்னா இழப்பாங்க அப்படிங்கறதுதான்.

00:08

Speaker A

ஏன்னா அங்க வந்து சந்திரன் நீசம். சந்திரன் நீசம் அடைஞ்சிருச்சு அப்படின்னாலே மைண்ட் வந்து ஃபர்ஸ்ட் ஒழுங்கா வேலை பார்க்காது.

00:14

Speaker A

இவங்க விருச்சகத்துல இருக்கவங்க எல்லாம் பூமியெல்லாம் வாங்குறாங்க அப்படின்னா ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும். ஏன்னா இது பல ஜென்மம் கனெக்டட்.

00:26

Speaker A

அவங்க வந்து ஒரு ஒரு லேண்ட் ஒன்னு அவங்களை கூப்பிடுது அப்படின்னா, அந்த லேண்டோடைய ஹிஸ்டரி தெரியாம அவங்க போகக்கூடாது.

00:34

Speaker A

பிறக்கிறதெல்லாம் ஒரு சாதாரண ஒரு குடும்பத்துல இருந்து பிறந்து வர மாதிரி எல்லாம் இருப்பாங்க. அதுக்கப்புறம் அவங்களோட உழைப்பால முன்னேறி வர மாதிரி இருக்கும் போராட்டங்கள் ஜாஸ்தி.

00:46

Speaker A

விருச்சகத்துடைய அமைப்பு என்னன்னா ஒன்னு அதிகாலை.

00:49

Speaker A

சூரியன் ஒன்னு உதிக்கிற நேரமா இருக்கணும். இல்ல சூரியன் மறைஞ்ச நேரமா இருக்கணும்.

00:55

Speaker B

இந்த ரெண்டுக்கும் இடைப்பட்ட நேரத்துல இவங்க வழிபாடு பண்ணுனாதான் இவங்களுடைய பிரார்த்தனைகளுக்கு சக்தி.

00:59

Speaker A

விருச்சக ராசி நேயர்கள் இவங்க வந்து பணவரவு விஷயத்துல எப்படி இருப்பாங்க பணம் சேரணும்னா இவங்க என்னலாம் பண்ணலாம்.

01:03

Speaker A

விருச்சக ராசிக்கு வந்து ஜெனரலாவே நான் என்ன சொல்லுவேன்னா கடவுள் எல்லாமே கொடுப்பாரு ஆனா அந்த டிராப்ல போய் சிக்கி ஒவ்வொன்னா இழப்பாங்க அப்படிங்கறதுதான்.

01:11

Speaker A

ஏன்னா அங்க வந்து சந்திரன் நீசம். சந்திரன் நீசம் அடைஞ்சிருச்சு அப்படின்னாலே மைண்ட் வந்து ஃபர்ஸ்ட் ஒழுங்கா வேலை பார்க்காது.

01:17

Speaker A

ஆழ்மனசுல ஒரு பயத்தை கொடுக்கும். வெளிய போய் பட்டு பட்டுன்னுலாம் சண்டை எல்லாம் போடுவாங்க எதிர்த்து பேசிடுவாங்க கத்துவாங்க எல்லாமே நடக்கும்.

01:28

Speaker A

ஆனா ஆழ்மனசுல பயம்ங்கிறது எப்பவுமே விருச்சகத்துக்கு உண்டு எடுக்கக்கூடிய முடிவுகள்.

01:36

Speaker A

லைஃப்ல யாரை நம்பணும் நம்பக்கூடாதுன்னு ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கும்.

01:44

Speaker A

ஏன்னா இவங்களுடைய பிறப்பே வந்து நிறைய பேத்தோடைய கர்மாவை சுமந்து வந்து திருப்பி அந்த டிராப் ஒவ்வொரு கட்டமுமே ஜாதக கட்டத்துல ஒவ்வொரு கட்டமுமே அவங்களுக்கு டிராப் தான்.

01:53

Speaker A

லைஃப்ல யாரை சந்திக்கிறோம் என்ன வாங்குறோம் எந்த பூமிக்கு போறோம்.

02:00

Speaker A

இவங்க விருச்சகத்துல இருக்கவங்க எல்லாம் பூமி எல்லாம் வாங்குறாங்க அப்படின்னா ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.

02:09

Speaker A

ஏன்னா இது பல ஜென்மம் கனெக்டட் அவங்க வந்து ஒரு ஒரு லேண்ட் ஒன்னு அவங்களை கூப்பிடுது அப்படின்னா.

02:17

Speaker A

அந்த லேண்டோடைய ஹிஸ்டரி தெரியாம அவங்க போகக்கூடாது.

02:23

Speaker A

ஏன்னா அந்த லேண்ட் வந்து குரோத்தையும் கொடுத்துரும் முழுசா இழுத்தும் உள்ள போட்டுரும்.

02:30

Speaker A

அப்போ அந்த லேண்ட்ங்கிற விஷயத்துல மிக மிக கவனமா இருக்கணும்.

02:38

Speaker A

ஏன்னா ஒரு அஸ்திவாரம் போட போறாங்க விருச்சகம்னா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் அப்படிங்கறதெல்லாம் இருக்கு.

02:45

Speaker A

முடிஞ்ச அளவுக்கு ஆல்ரெடி யாராவது அஸ்திவாரம் போட்டு வச்சு பாதியா எழுப்புனதை கூட இவங்க பில்ட் பண்ணி வாங்கிக்கலாம்.

02:53

Speaker A

ஆனா இவங்க போய் பூமியில கை வைக்கிறாங்க அப்படின்னா.

02:58

Speaker A

அது ஏதோ ஒரு சுழிச்சு விட்டுரும்.

03:02

Speaker A

அதுவரைக்கும் ஒரு செழிப்பு இருக்கும்.

03:05

Speaker A

விருச்சகம் வந்து பிறக்கிறதெல்லாம் ஒரு சாதாரண ஒரு குடும்பத்துல இருந்து பிறந்து வர மாதிரி எல்லாம் இருப்பாங்க.

03:10

Speaker A

அதுக்கப்புறம் அவங்களோட உழைப்பால முன்னேறி வர மாதிரி இருக்கும் போராட்டங்கள் ஜாஸ்தி.

03:16

Speaker A

விருச்சகத்துல இருக்கவங்களுக்கு.

03:20

Speaker A

ஏன்னா தனக்கு என்ன வரும்னு ஃபர்ஸ்ட் தெரியாது.

03:24

Speaker A

ஆனா நிறைய டேலன்ட்ஸ் இருக்கும்னு மட்டும் தெரியும்.

03:27

Speaker A

ஸ்கில்ஸ் எப்படி டெவலப் பண்ணிக்கணும்னு தெரியாது.

03:30

Speaker A

தன்னை முதல் நம்பறதுக்கே அவங்களுக்கு ரொம்ப ஏன்னா சந்திரன் நீசம் அப்போ தன்னம்பிக்கை கொஞ்சம் குறைச்சலாதான் இருக்கும்.

03:37

Speaker A

ஆசைகள் ஜாஸ்தியா இருக்கும்.

03:40

Speaker A

இதை பண்ணனும் அதை பண்ணனும்.

03:42

Speaker A

ஹெல்ப் கேட்க தெரியாது விருச்சகத்துக்கு.

03:45

Speaker A

அது அவமானமாவே நினைச்சுக்குவாங்க.

03:48

Speaker A

எவ்வளவு பெரிய பெரிய ஆட்கள் தெரிஞ்சிருந்தா கூட இவங்கள்ட்ட நம்ம ஏன் போய் கேட்கணும்னு நினைப்பாங்க.

03:54

Speaker A

விருச்சக ராசி பெண்கள் இருக்காங்க அப்படின்னா.

04:00

Speaker A

அவங்க வீட்ல எல்லாமே ஒரு செழிப்பு கொஞ்சம் இருந்துகிட்டேதான் இருக்கும்.

04:05

Speaker A

அவங்க ஃபேமிலி மெம்பர்ஸ் அவங்களுக்கு யார் கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க யார் லைஃப் பார்ட்னரா வராங்க.

04:14

Speaker A

அதுக்கப்புறம் வாழ்க்கை எப்படி இருக்குங்கறதெல்லாம் விருச்சகத்துக்கு நிறைய வாழ்க்கையில மாறும்.

04:20

Speaker A

பசங்க இருக்காங்க ஜென்ட்ஸ் இருக்காங்க விருச்சகத்துல அப்படின்னா.

04:25

Speaker A

இவங்க லைஃப் பார்ட்னர் சூஸ் பண்றதுதான் ரொம்ப கவனமாவே இருக்கணும்.

04:30

Speaker A

ஏன்னா இவங்க ஃபர்ஸ்ட் போய் அட்ராக்ட் ஆயிடுவாங்க.

04:32

Speaker A

இந்த அட்ராக்ட் ஆகுறது எப்படி இருக்கும்னா வெறும் அந்த அவுட்டர் பியூட்டி பார்த்து அட்ராக்ட் ஆயிட்டு.

04:40

Speaker A

அதுக்கப்புறம் வந்து கொஞ்சம் கஷ்டப்படுவாங்க.

04:44

Speaker A

அதுக்கப்புறம் ஹேண்டில் பண்ண தெரியாது.

04:47

Speaker A

சோ இங்க பணத்தை இழக்குறது.

04:50

Speaker A

அதுக்கப்புறமா திருப்பி லைஃப்ல ஒரு கோல் செட் பண்ணி கொண்டு வரது அதுக்கப்புறமா வாழ்க்கையில குரோ ஆகுறதுன்னு இவங்களுடைய வாழ்க்கையே வந்து பார்த்தீங்கன்னா.

05:00

Speaker A

ஏகப்பட்ட ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் இருக்கிறதுதான் வந்து விருச்சகம் அப்படிங்கறது.

05:05

Speaker A

அப்போ விருச்சகம் வந்து நான் ஜெனரலாவே சொல்லுவேன் விருச்சகம்.

05:10

Speaker A

அந்த குடும்ப கர்மா வாங்கிட்டு வந்ததை விட இந்த ஆன்மா வேற எங்கெங்கேயோ இருந்தெல்லாம் கர்மா வாங்கிட்டு வந்திருப்பாங்க பல கர்மா.

05:19

Speaker A

அதனாலதான் விருச்சகத்துக்கு இந்த இன்ஸ்டிங்க்ட் வரது மிஸ்டிக்கா சில விஷயங்கள் யோசிக்கிறது.

05:26

Speaker A

எதுக்கு இந்த கனவு வந்துச்சுன்னு தெரியாது ஏன் இங்க போய் நின்னோம்னு தெரியாது.

05:30

Speaker A

எல்லாமே இவங்களுக்கு வந்து ஆச்சரியமாவேதான் விருச்சகத்துக்கு வாழ்க்கையில நடந்துகிட்டே இருக்கும்.

05:38

Speaker B

விருச்சக ராசி நேயர்கள் வந்து இந்த கோவிலுக்கு போயிட்டு வந்தாங்க அப்படின்னா பணவரவு சிறப்பாக இருக்கும் போயிட்டு வாங்க அப்படின்னா எந்த கோவில்.

05:45

Speaker A

விருச்சக ராசி வந்து பூண்டி இருக்கு இல்லையா.

05:50

Speaker A

பூண்டி பூண்டிங்கிறது நிறைய இடத்துல பூண்டிங்கிறது வரும்.

05:53

Speaker A

இந்த பூண்டி ரிசர்வ் ஆயர் ஃபாரஸ்ட்ன்னு சொல்லுவாங்க.

05:56

Speaker A

அது வந்து ஒரு காட்டுப்பகுதி.

05:58

Speaker A

இந்த இடத்துல போயிட்டு அத்தி வராகி கோவில்னு ஒரு கோவில் இருக்கு.

06:03

Speaker B

ஓகே.

06:04

Speaker A

இந்த அத்தி வராகி கோவில் பயங்கரமான தாந்திரிக் சக்தி இருக்கிற ஒரு கோவில்.

06:10

Speaker A

விருச்சகத்துக்கு தாந்திரிக் சக்திதான் தேவை.

06:13

Speaker A

ஏன்னா இவங்களுக்கு வந்து உக்ர தேவ வழிபாட்டு முறைகள்தான் இவங்களை காக்கவே செய்யும்.

06:18

Speaker A

இவங்களுக்கு இந்த சாத்வீகமா வழிபாடு பண்றது இதெல்லாம்.

06:23

Speaker A

இதைவிட இப்படித்தான் போயிறணும்.

06:27

Speaker A

ஏன்னா இந்த அங்க கொஞ்சம் வழி கேட்டுதான் இந்த இடத்துக்கு போகணும்.

06:31

Speaker A

இங்க போனா என்ன ஆகும் அப்படின்னா நான் சொன்னேன் இல்லையா இவங்க பல கர்மா வாங்கிட்டு வந்திருக்காங்க.

06:40

Speaker A

பல கர்மாங்கிறது மறைமுகமான எதிரிகள் இருப்பாங்க.

06:44

Speaker A

அவங்களுக்கு நான் யாருன்னு தெரியாது அவங்களுக்கு நம்ம யாருன்னு தெரியாது.

06:48

Speaker A

ஆனா ஏதோ ஒரு சக்தி இயக்கி இவங்களுக்கு வாழ்க்கையில ஏதாவது ஸ்டாப் பண்ணிட்டே இருக்கும்.

06:53

Speaker A

அப்போ இந்த மறைமுகமா எங்கேயாவது இருந்து இவங்களுக்கு ஒரு இன்கம் ஜெனரேட் ஆகணும்ங்கறதெல்லாம் ஒன்னு இருக்கு.

06:57

Speaker A

திடீர்னு ஒரு இன்கம் ஃப்ளோ எங்க இருந்துதான் திடீர்னு ஒரே ஒரே நாள்ல எப்படிடா பெரிய ஆளானாங்கங்கற மாதிரி எல்லாம் இருக்கும் இல்லையா.

07:05

Speaker A

அந்த மாதிரி அமைப்பு எல்லாம் இந்த அத்தி வராகி கோவிலுக்கு போறாங்க அப்படின்னா.

07:11

Speaker B

இங்க.

07:12

Speaker A

இங்க எப்படி வழிபாடு பண்ணுவாங்கன்னா சிகப்பு திரி.

07:15

Speaker A

சிகப்பு திரி ஏத்தி பஞ்சாமிர்தம்.

07:18

Speaker A

பஞ்சாமிர்தத்துல சிகப்பு திரி ஏத்துவாங்க.

07:21

Speaker B

ஓ.

07:22

Speaker A

இது வந்து தாந்திரிக வழிபாடு.

07:25

Speaker B

ஓகே.

07:26

Speaker A

நம்ம போய் எண்ணெய் ஊத்தி வழிபாடு பண்றது எல்லாம் இல்லை.

07:30

Speaker A

ஏன்னா விருச்சகமே ஒரு தாந்திரிக சக்தி இருக்கக்கூடியதுதான் ஈர்ப்பு சக்தி இருக்கக்கூடியதுதான்.

07:35

Speaker A

அவங்களுக்கு இந்த மாதிரி இது வந்து 7:00 மணிக்கு முன்னாடி இந்த கோவிலுக்கு போயிறணும்.

07:40

Speaker B

அதிகாலை.

07:41

Speaker A

சாயங்காலம்.

07:42

Speaker B

ஓகே.

07:43

Speaker A

சாயங்காலம் 7:00 மணி வரைக்கும் தான் இந்த கோவில் அதிகபட்சம் முடிஞ்ச அளவுக்கு ஈவினிங் குள்ள இந்த கோவிலுக்கு போயிட்டு வந்துறதுங்கறது நல்லது.

07:48

Speaker A

ஏன்னா விருச்சகத்துடைய அமைப்பு என்னன்னா ஒன்னு அதிகாலை.

07:52

Speaker B

ஓகே.

07:53

Speaker A

சூரியன் ஒன்னு உதிக்கிற நேரமா இருக்கணும் இல்ல சூரியன் மறைஞ்ச நேரமா இருக்கணும்.

08:01

Speaker A

இந்த ரெண்டுக்கும் இடைப்பட்ட நேரத்துல இவங்க வழிபாடு பண்ணுனாதான் இவங்களுடைய பிரார்த்தனைகளுக்கு சக்தி.

08:08

Speaker B

ஓகே.

08:09

Speaker A

அப்போ இந்த இடத்துல போயிட்டு இவங்க இந்த பஞ்சாமிர்தத்தையும் இந்த சிகப்பு திரியும் வச்சு அவங்க ஏத்தி அதுல வழிபாடு பண்ணுனாங்க அப்படின்னாலே.

08:14

Speaker A

டோட்டல் ஒரு ப்ரொடக்ஷன் ஷீல்ட் மாதிரி வந்துரும் நான் சொன்னேன் இல்லையா அந்த சந்திரன் நீசம்.

08:20

Speaker A

இந்த மாதிரி எல்லா விஷயங்களுமே சரியாயிடும்.

08:22

Speaker B

ஓகே சூப்பர்மா.

08:23

Speaker B

இப்ப வந்து வராகி தாய் வந்து உக்ரமான ஒரு தெய்வம் அப்படின்னு சொல்லிட்டு சொல்றாங்க.

08:28

Speaker B

இந்த வராகி தாய் பொதுவாவே வந்து உக்ரமான தெய்வங்கள் வந்து பூஜை அறையில வச்சு வழிபடக்கூடாதுன்னு சொல்றது வழக்கமா இருக்கு.

08:35

Speaker B

அப்படி இருக்கும்போது இப்ப அவங்களால நேரா போயிட்டு வர முடியல அப்படின்ற பட்சத்துல வராகி தாயை வீட்ல வச்சு வழிபடலாமா.

08:40

Speaker A

அத்தி வராகி.

08:42

Speaker A

அத்தி வராகி வந்து என்ன அப்படின்னா அவங்க எல்லாம் சப்த கன்னிகள்ல ஒருத்தங்க அப்படிங்கறதுதான்.

08:46

Speaker A

பெரும்பாலும் நம்ம சப்த கன்னிகளை என்ன செய்வோம் அப்படின்னா அவங்க ஒரு கோவில்கள்லயே பார்த்தீங்கன்னா சப்த கன்னிகளோட அமைப்பு வந்து ஒன்னு ஒரு சைடுல ஒரு ஓரமா இருக்கிற மாதிரி இருக்கும்.

08:55

Speaker A

எங்கேயோ சில திசைகளை நோக்கி வச்ச மாதிரி வடக்கு திசைகள் நோக்கி வச்ச மாதிரி எல்லாம் வந்துதான் வைப்பாங்க.

09:00

Speaker A

அப்போ நம்ம வீட்ல கூட திசைகள் நோக்கி வைக்கணும்.

09:03

Speaker A

இந்த வராகியை வச்சு வழிபாடு பண்றோம்னா முடிஞ்ச அளவுக்கு மத்த தெய்வங்களோட வைக்காம தனிச்சு வச்சாங்க அப்படின்னா.

09:10

Speaker A

அது பாட்டுக்கு இருக்கும்.

09:12

Speaker A

ஏன்னா இந்த அத்தி வராகி ஆகட்டும் வராகி ஆகட்டும் இவங்களுக்கெல்லாம்.

09:18

Speaker A

இவங்க எல்லாம் வந்து ஒரு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ்ல செயல்படக்கூடிய தெய்வங்கள்.

09:23

Speaker A

கூப்பிட்ட உடனே நொடி அந்த நொடியை வருவாங்க.

09:26

Speaker A

நொடியை காய்ச்சி கொடுப்பாங்க அப்படிங்கறதுதான்.

09:28

Speaker A

அப்போ அவங்களுக்கு இந்த வீட்டோடைய அவங்களோட சக்தி வீட்ல இருக்கவங்களால முதல் தாங்கிக்க முடியாது.

09:33

Speaker A

அது வந்து.

09:35

Speaker A

மாசத்துல ஒரு தடவையோ ரெண்டு தடவையோ வழிபாடு பண்ணாங்கன்னா அவங்களை வந்து உறங்க வச்சிரணும்.

09:40

Speaker B

ஓகே.

09:41

Speaker A

அடிக்கடி.

09:42

Speaker A

சாயங்காலம்.

09:43

Speaker A

ஏன்னா அதனாலதான் இவங்க எல்லாம் வந்து இந்த காட்டுப்பகுதியில.

09:46

Speaker A

நான் சொன்னேன் இல்லையா அதனாலதான் இவங்களுக்கு தீபம் ஏற்றும் முறையே வேறையா இருக்குது.

09:50

Speaker A

இவங்களுக்கு ரொம்ப நேரம் கொழுந்து விட்டு எரிஞ்சுகிட்டு இருக்கணும் அப்படிங்கறதெல்லாம் இல்லை.

09:53

Speaker A

ஏன்னா இந்த தெய்வங்கள் பெரும்பாலும் தீபத்துலதான் வரவே செய்வாங்க.

09:57

Speaker A

அப்படிங்கறதெல்லாம் ஒன்னு உண்டு.

09:58

Speaker A

அப்போ இந்த வீட்ல வச்சு வழிபாடு பண்றாங்க அப்படின்னா ஒரு தேய்பிறை அஷ்டமியோ.

10:03

Speaker A

இல்ல பஞ்சமி தேய்பிறை பஞ்சமியோ இல்ல வளர்பிறை பஞ்சமியோ.

10:09

Speaker A

இந்த டைம்ல வந்து இவங்க வழிபாடு பண்றது.

10:13

Speaker A

இல்ல அப்படின்னா மாசத்துல ஏதோ ஒரு வெள்ளிக்கிழமையும்.

10:17

Speaker A

இல்ல ஒரு செவ்வாய்க்கிழமையும் வழிபாடு பண்ணிட்டு அவங்களை குளிர்விச்சிரணும்.

10:21

Speaker A

சும்மா சும்மா கூப்பிடக்கூடாது வராகியை.

10:23

Speaker A

வராகிட்ட வந்து என்ன இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ன நம்ம கேட்கிறோமோ அது தெளிவா கேட்கணும்.

10:29

Speaker A

ஒன்னோ ரெண்டோ அது முடியற வரைக்கும் அடுத்த வேண்டுதலுக்கு வராகிட்ட போகக்கூடாது.

10:34

Speaker A

அந்த வேண்டுதல் முடிஞ்ச உடனே முதல் அவங்களை சாந்தப்படுத்தணும்.

10:38

Speaker A

இது எனக்கு நல்லபடியா முடிஞ்சிருச்சு.

10:40

Speaker A

திரும்பவும் மறுபடியும் அவங்களுக்கு அந்த மாசத்துல ஒரு தடவை அந்த பூஜையை பண்ணிட்டு திரும்பவும் என்ன வேணுமோ அதை கேட்டுட்டு குளிர்விச்சிரணும்.

10:48

Speaker A

ஏன்னா வராகியோட வழிபாட்டு முறைகளோ காசியில எல்லாம் பார்த்தோம்னா அரை மணி நேரம் தான் வழிபாடு பண்ணுவாங்க.

10:53

Speaker A

மதியான வேலையில திறக்கிறதும் தெரியாது கோவிலை மூடுறதும் தெரியாதுங்கறதுதான்.

10:59

Speaker A

இருட்டுக்குள்ளேயேதான் அவங்களை வச்சிருப்பாங்க.

11:01

Speaker A

ஆன்மாக்களுக்கெல்லாம் ப்ரொடக்ஷன் வந்து வராகி.

11:04

Speaker A

அங்க அவ்வளவு இறந்த ஆன்மாக்கள் கொண்டு போறாங்க இல்லையா அந்த ஆன்மாக்களை ப்ரொடெக்ட் பண்ணுவோம் அந்த வராகி.

11:08

Speaker A

சோ அதனால அந்த இருட்டுல வச்சு வழிபாடு பண்ணிட்டு.

11:12

Speaker A

ஹாஃப் அன் ஹவர் கூட இருக்காது.

11:15

Speaker A

தரிசனத்துக்கெல்லாம் போய் நிக்கிறதுக்கெல்லாம் முதல் விடமாட்டாங்க.

11:18

Speaker A

கிளம்புங்க கிளம்புங்க அப்படின்ருவாங்க.

11:19

Speaker A

டக்குன்னு போய் வேண்டி அதே மாதிரிதான் வீட்லயும் செய்யணும்.

11:21

Speaker A

வீட்லயும் வந்து அவங்களை முடிஞ்ச அளவுக்கு ஒரு ஒரு இருளான ஒரு இடத்துல வச்சுக்கிட்டாலே ஓகே.

11:27

Speaker A

ஏன்னா மத்த தெய்வங்களை எல்லாம் வழிபாடு பண்றப்போ வராகி வழிபாடு பண்ணனும்ங்கறப்போ வராகியோட சக்தி வேற.

11:34

Speaker A

ஏன்னா சாந்த கடவுள்களும் வச்சிருக்கிறப்போ இது இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கேட்கிற ஒரு கடவுள்ங்கறப்போ.

11:40

Speaker A

ரியாக்ஷன்ஸ் வேற மாதிரி இருக்கும் வீட்ல.

11:43

Speaker A

ஏன்னா அங்க இருக்க அங்க இருக்க ஃபீமேலுக்கே கோவம் ஜாஸ்தியா வரும்.

11:46

Speaker A

எதுக்கு கோவம் வருதுன்னே தெரியாது.

11:48

Speaker A

ஏன்னா அது எங்கேயாவது போகணும் அந்த எனர்ஜி எங்கேயாவது ட்ரான்ஸ்மிஷன் ஆகணும்னு ஒன்னு இருக்குது.

11:54

Speaker A

அப்போ அந்த வீட்ல இருக்கவங்கட்ட கொஞ்சம் உக்ரமா நடந்துகிறது ஆக்ரோஷமா நடந்துகிறது எல்லாத்துக்கிட்டயும் கொஞ்சம் டக்குன்னு ஒரு கோவம் வரது எல்லாமே வந்து நடக்கும்.

12:01

Speaker A

அப்போ கவனம்.

12:03

Speaker A

வழிபாடு பண்ணுங்க நான் தவறுன்னுலாம் சொல்லல.

12:08

Speaker A

ஆனா முறைகள் டுரேஷன் டைம்.

12:12

Speaker A

கொஞ்சம் கம்மியா வச்சுக்கிறது நல்லது.

12:15

Speaker B

ஓகே சூப்பர் சூப்பர்.

12:16

Speaker B

அதாவது வந்து வராகிக்கான ஒரு வழிபாட்டு முறையும் இதுல சேர்த்து ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.

12:22

Speaker B

இவங்க வந்து பண விஷயத்துல இந்த தவறு மட்டும் பண்ணிடாதீங்கன்னா என்ன விஷயம்.

12:26

Speaker A

விருச்சகத்துக்கு வந்து தன்கிட்ட இருக்க எல்லா பணத்தையும் செலவு பண்ணக்கூடிய குணம் இருக்கு.

12:31

Speaker A

அப்புறம் பார்த்துக்கலாம்.

12:33

Speaker A

என்ன ஆயிட போகுது வாழ்க்கை வாழ்றதுக்குதானே.

12:37

Speaker A

அப்படின்னு செலவு பண்ணிட்டு.

12:40

Speaker A

நிராயுத பாணியா வந்து உட்காருவாங்க.

12:43

Speaker A

ஆனா இவங்களுக்கு வந்து கடவுள் கொடுக்கிற அமைப்பு எப்படின்னா எப்படியாவது யாராவது.

12:47

Speaker A

கடனாவது கொடுத்துருவாங்க அப்படிங்கறதுதான்.

12:50

Speaker A

விருச்சகத்துக்கு எப்படியும் ஒரு காசு வந்து சேர்ந்துரும்.

12:52

Speaker A

கடன் வந்து கொடுத்தாங்கன்னா என்னைக்குமே வராது.

12:56

Speaker B

ஓகே.

12:57

Speaker A

விருச்சகம் அப்படி வருதுன்னு வச்சுக்கோங்களேன் அது சண்டை போட்டு பெரிய அடிதடியாகி அப்படி புடுங்கிதான் தன் காசை வாங்க முடியுமே தவிர.

13:05

Speaker A

நான் கொடுத்தேனே எனக்கு திருப்பி கொடுன்னுலாம் விருச்சகத்துக்கு வராது.

13:08

Speaker B

ஓகே.

13:09

Speaker A

இவங்க யார்ட்டயாவது கடன் வாங்கிட்டாங்கன்னா கூட இவங்களுக்கு அடைக்கிறப்ப ரொம்ப கஷ்டமாயிடும்.

13:14

Speaker A

ஒரு பெரிய அடைச்சிருவாங்க ரொம்ப டைம் எடுக்கும் அதை அடைச்சு திரும்ப அந்த மீண்டு வர மாதிரி இருக்கும்.

13:19

Speaker A

அப்போ கடன் எதுக்கு வாங்குறோம் எங்க சேமிக்கிறோம் அப்படிங்கறதெல்லாம் இருக்கு.

13:23

Speaker A

அதெல்லாம் கொஞ்சம் கவனமாவே இவங்க இருக்கணும்.

13:25

Speaker B

ஓகே இவங்க வந்து எதுல இன்வெஸ்ட் பண்ணா நல்லா இருக்கும்.

13:27

Speaker A

ஸ்டாக்ஸ் ஒரு சில ஸ்டாக்ஸ் லாங் டெர்ம் இன்வெஸ்ட்மென்ட் ஸ்டாக் ஷேர்ஸ் இவங்களுக்கு செட் ஆகும்.

13:32

Speaker B

ஓகே.

13:33

Speaker A

அதே மாதிரி இவங்க இவங்க போய் வாழ்றதுக்கு பார்க்கக்கூடாது ஒரு வாடகைக்கு விடுறதுக்கு ஒரு பில்டிங்ஸ் பார்க்கிறது.

13:40

Speaker A

இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் இவங்க வந்து இன்வெஸ்ட் பண்ணி அத ஒரு பிசினஸ் அந்த மாதிரி இவங்க பண்ணலாம்.

13:42

Speaker A

எதுவா இருந்தாலும் இவங்களுக்கு டிராவல் பண்ணி டிராவல் பண்ணி செய்றது நல்லா இருக்கும்.

13:46

Speaker B

ஓகே.

13:47

Speaker A

இவங்களுக்கு அந்த கம்யூனிகேஷன் அப்படிங்கிற விஷயம் செட் ஆகும்.

13:49

Speaker A

இவங்களுக்கு இவங்க சொத்தே இவங்கதான்.

13:51

Speaker A

இவங்களுடைய ஓன் ஸ்கில்ஸ் தான் இவங்களுடைய சொத்தே.

13:54

Speaker A

அந்த ஸ்கில்ஸை எப்படி டெவலப் பண்ணி எவ்வளவு வேணாலும் விருச்சகத்தினால சொத்து சேர்க்க முடியும்.

13:59

Speaker B

ஓ.

14:00

Speaker A

அது சொத்து சேர்த்த அளவுக்கு எவ்வளவு வேணாலும் தண்ணியா விடவும் முடியும் விருச்சகத்தினால.

14:05

Speaker A

அது அவங்க அவங்க வந்து பத்திரமா வச்சுக்கிறது அப்படிங்கறதுதான்.

14:08

Speaker A

கருணை அப்பப்ப பயங்கரமா வந்துரும் விருச்சகத்துக்கு.

14:10

Speaker A

டக்கு டக்குன்னு தூக்கி கொடுத்துருவாங்க.

14:11

Speaker A

அப்புறம் பார்த்துக்கலாம் அப்படிங்கற மாதிரி.

14:13

Speaker A

சோ கொடுக்கிறதுங்கிறது யாருக்கு கொடுக்கிறோம்ங்கறதுல பார்த்திருக்கணும்.

14:19

Speaker A

சில விருச்சகம் கொடுக்கவே மாட்டாங்க.

14:21

Speaker A

என்ன ஆனாலும் சரி கொடுக்கவே கொடுக்காத விருச்சகமும்லாம் இருக்காங்க.

14:26

Speaker A

அப்படியும் இருக்க வேணாம்.

14:27

Speaker A

தூக்கி தூக்கி கொடுக்கவும் வேணாம்.

14:28

Speaker A

தான தர்மங்கள் ஒரு லிமிடேஷன்ஸ்குள்ள ஒரு கட்டுப்பாடுக்குள்ள இருந்துட்டா கரெக்டா இருக்கும்.

Topics: விருச்சிக ராசி தாந்திரிக வழிபாடு சந்திரன் நீசம் கர்மா அத்தி வராகி கோவில் பூமி வாங்குதல் வாழ்க்கை முன்னேற்றம் பஞ்சாமிர்தம் வழிபாடு பரிகாரம் தமிழ் ஜோதிடம்


---
This is the markdown twin of https://sozai.app/transcript/viruchigam-life-biggest-progress-jeevitha-suresh-wealth-remedy/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
