**Rishabam - இனி கால் வைக்கற இடமெல்லாம் லாபம்! Astrologer Jeevitha Suresh | New Year Palan 2026 — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/video-8hln2fyenoo/

Answers

## Questions about this video

ரிஷப ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் என்ன மாதிரியான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்?

ரிஷப ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் தங்கள் வாழ்க்கையில் ஒரு வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். அவர்கள் சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால், அவர்களின் நிலை உயரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரிஷப ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு தீர்மானமாக எதை மேற்கொள்ள வேண்டும்?

ரிஷப ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு தீர்மானமாக, 'நான் முதல் நகர்ந்து ஒரு வேலையை பார்க்கிறேன்' என்பதை மேற்கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் உட்கார்ந்து யோசிப்பதை விட்டுவிட்டு, செயலில் இறங்குவது அவர்களுக்கு நன்மை பயக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் ரகசியங்களை எவ்வாறு கையாள வேண்டும்?

ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் ரகசியங்களை பாதுகாப்பது நல்லது. யாரிடம் சொல்ல வேண்டும், யாரிடம் சொல்லக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு காரியம் நடப்பதற்கு முன் அனைவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

ரிஷபம் வந்து ஒரே இடத்துல உட்கார்ந்து யோசிச்சுட்டு, நான் என்ன பண்ணனும், நான் என்ன செஞ்சா எனக்கு கரெக்டா வரும், எனக்கு வருமா வராதான்னு இந்த பயம் எல்லாமே அவங்களுக்கு இருந்துட்டே தான் இருக்கும்.

00:10

Speaker A

ரிஷபம் வந்து ரகசியங்களை கொஞ்சம் பாதுகாத்துக்கிறதும் நல்லது.

00:14

Speaker A

யார்கிட்ட சொல்லணும், யார்கிட்ட சொல்லக்கூடாது அப்படிங்கறது ஒன்னு இருக்கு.

00:18

Speaker A

நடக்குறதுக்கு முன்னாடி எல்லார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.

00:20

Speaker A

சேவிங்ஸ் ரொம்ப அவசியம் ரிஷபத்துக்கு, ரிஷபம் எடுக்கக்கூடிய ரெசல்யூஷனே என்ன அப்படின்னா, நான் ஒழுங்கா சேவிங்ஸ் பண்ணனும்.

00:25

Speaker A

பெரும்பாலான ரிஷபம்லாம் கடன் பெற்றிருப்பாங்க, இந்த கடனை எப்படி அடைக்கிறதுன்னு சொல்லிட்டு இன்னொரு இடத்துல கடன் வாங்குறதுக்கு தான் யோசிச்சுட்டு இருப்பாங்க.

00:38

Speaker B

ரிஷப ராசி நேயர்களே, இந்த 2026-ல அவங்க லைஃப்ல என்ன மாதிரியான சேஞ்சஸ் நடக்கப்போகுது?

00:46

Speaker A

ரிஷப ராசி வந்து அவங்க எடுக்கக்கூடிய இந்த நியூ இயர் ரெசல்யூஷன் என்னவா இருக்கணும் அப்படின்னா, நான் முதல் நகர்ந்து ஒரு வேலையை பார்க்கிறேங்கிறதுதான்.

00:57

Speaker A

ரிஷபம் வந்து ஒரே இடத்துல உட்கார்ந்து யோசிச்சுட்டு,

01:00

Speaker A

நான் என்ன பண்ணனும், நான் என்ன செஞ்சா எனக்கு கரெக்டா வரும், எனக்கு வருமா வராதான்னு இந்த பயம் எல்லாமே அவங்களுக்கு இருந்துட்டே தான் இருக்கும்.

01:07

Speaker A

இப்போ 2025-ல அவங்களுக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்கும்.

01:10

Speaker A

இதுதான் நான் பண்ணப்போறேன் அப்படின்னு.

01:12

Speaker A

என்னன்னா டைம் ரொம்ப நல்லா இருக்கு ரிஷப ராசிக்கு அப்படிங்கறப்போ.

01:18

Speaker A

பிளானிங் ப்ராப்பரா இருக்கணும்.

01:20

Speaker A

பிளானிங் ரொம்ப ரொம்ப கரெக்டா இருக்கணும்.

01:22

Speaker A

பிளானிங் கரெக்டா பண்ணிட்டாங்க அப்படின்னா, அவங்களுடைய லெவல் வந்து கொஞ்சம் இன்கிரீஸ் ஆகப்போகுதுங்கிறதுதான் ஒன்னு இருக்கு.

01:29

Speaker A

இன்னியொன்னு என்ன அப்படின்னா,

01:34

Speaker A

ரிஷபம் வந்து ரகசியங்களை கொஞ்சம் பாதுகாத்துக்கிறதும் நல்லது.

01:38

Speaker A

யார்கிட்ட சொல்லணும், யார்கிட்ட சொல்லக்கூடாது அப்படிங்கறது ஒன்னு இருக்கு.

01:43

Speaker A

சோ, நடக்குறதுக்கு முன்னாடி எல்லார்கிட்டயும் சொல்ல வேண்டாம்.

01:46

Speaker B

ஓகே.

01:47

Speaker A

அதுக்காக பயந்துக்கவும் வேணாம்.

01:50

Speaker A

ஏன்னா இவங்க எடுக்கக்கூடிய ஸ்டெப் எப்படி இருக்கப்போகுது அப்படின்னா,

01:57

Speaker A

இப்போ இப்போ ஒரு மாசம் 10,000 ரூபாய் 2025-ல சம்பாதிச்சுட்டு இருந்தாங்க அப்படின்னா,

02:03

Speaker A

ஒரு 25,000 ரூபாய் சம்பாதிப்பாங்க.

02:05

Speaker B

ஓகே.

02:06

Speaker A

அந்த மாதிரி ஒரு குரோத் அப்படிங்கறது அவங்களுக்கு போகும்.

02:10

Speaker A

அந்த மாதிரி உங்களுடைய எஃபர்ட் போடணும்.

02:13

Speaker A

கசாமுசா கசாமுசான்னு பல விஷயங்களை தூக்கி போடாம ஒரு விஷயத்தை ஃபோகஸ் பண்றாங்க அப்படின்னாலே,

02:18

Speaker A

ரிஷபத்துக்கு வந்து கரெக்டா இருக்கும்.

02:20

Speaker A

ஒன்னு பண்ணிட்டே இருக்கணும்.

02:22

Speaker A

கன்சிஸ்டன்ட்டா பண்ணிட்டே இருக்கணும்.

02:23

Speaker A

அதை கண்டினியூஸா பண்ணிட்டே இருக்கணும்.

02:25

Speaker A

அதை எப்படி எக்ஸ்பாண்ட் பண்ணனும்ங்கிறதுதான் அவங்க பார்க்கணும்.

02:28

Speaker A

எக்ஸ்பாண்ட் பண்றதுக்கு பிளான் பண்ணலாம்.

02:30

Speaker B

ஓகே.

02:31

Speaker A

உடனே எக்ஸ்பாண்ட் பண்ணிடக்கூடாது.

02:34

Speaker A

கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா ஒரு பேபி ஸ்டெப்பா எடுத்து வைக்கிற மாதிரி எடுத்து வைக்கிறாங்கன்னா,

02:39

Speaker A

ரிஷபத்துக்கு 2026 கரெக்டா இருக்கும்.

02:41

Speaker A

ஏன்னா ஆல்ரெடி அவங்க நிறைய பிளான்ஸ்ல இருப்பாங்க.

02:44

Speaker A

நான் ஃபர்ஸ்ட் இதை பண்ணுவேன்.

02:46

Speaker A

செகண்ட் இது, தேர்ட் இது.

02:48

Speaker A

அப்புறம் நான் இதை கத்துக்கணும்.

02:50

Speaker A

கத்துக்கணும்.

02:51

Speaker A

ரிஷபம் வந்து ஏதாவது ஸ்கில்ஸ் டெவலப் பண்ணிக்கணும்.

02:53

Speaker A

இப்ப ஏன்னா அவங்களுடைய ஸ்கில்ஸ்னாலதான் அவங்களுக்கு குரோத்தே இப்ப வரப்போகுது.

02:57

Speaker A

அவங்களுக்கு வந்து நல்லபடியான ஒரு தொழில் அமையறதும் சரி.

03:00

Speaker A

ப்ராப்பர்ட்டி வாங்குறதும் சரி.

03:02

Speaker A

ப்ராப்பர்ட்டி வாங்கலாமான்னு நினைக்கிறது சரி.

03:05

Speaker A

போய் போய் இடமாற்றங்களுக்கு எல்லாம் போய் இடம் பார்ப்பாங்க.

03:07

Speaker A

வண்டி வாகனம் வாங்குறது.

03:10

Speaker A

புதுசா வண்டி வாகனங்கள் வீட்டுக்கு வரது இந்த அமைப்பு எல்லாமே வந்து ரிஷபத்துக்கு 2026-லயே இருக்கு.

03:14

Speaker B

ஓகே.

03:15

Speaker A

2026-ல பார்க்கிறப்போ யார் வீட்லயாவது ஒரு சின்ன சைக்கிளாவது ஒன்னு நிக்கணும்.

03:20

Speaker A

அந்த அளவுக்கு அவங்களுக்கு வந்து ஒரு புதுசா வீட்டுக்குள்ள திங்ஸ் வர மாதிரி இருக்கு.

03:26

Speaker A

அமைப்புகள் வந்து நல்லபடியா இருக்கு.

03:27

Speaker A

ஃபேமிலி மெம்பர்ஸே கொஞ்சம் நல்லா சம்பாதிக்கக்கூடிய ஒரு அமைப்பு.

03:31

Speaker A

சேவிங்ஸ் ரொம்ப அவசியம் ரிஷபத்துக்கு.

03:34

Speaker A

ரிஷபம் எடுக்கக்கூடிய ரெசல்யூஷனே என்ன அப்படின்னா,

03:37

Speaker A

நான் ஒழுங்கா சேவிங்ஸ் பண்ணனும்.

03:39

Speaker A

ஏன்னா இவங்களுக்கு வந்து கையில காசு வந்துருச்சு அப்படின்னா, கொஞ்ச நேரம் அதை பார்த்துட்டே இருப்பாங்க.

03:43

Speaker B

நம்ம எப்படி இதை செலவு பண்ணலாம்?

03:44

Speaker A

இதை போய் நம்ம எப்படி என்ன வாங்கலாம் அப்படிங்கறதுதான் யோசிப்பாங்களே தவிர,

03:51

Speaker A

அடடா இந்த காசு இல்லாம நம்ம அன்னைக்கு இப்படி இருந்தோமே, இப்ப நம்ம கையில இந்த பணம் வந்துருச்சே.

03:57

Speaker A

இதை எப்படி நான் சேர்த்து வைக்கணும்?

04:00

Speaker A

ஏன்னா அவங்களுக்கு எப்படி இருக்கும்னா இது சின்ன அமௌன்ட் தானே, இதை உடனே போய் செலவு பண்ணிடலாம்.

04:05

Speaker A

அப்ப காசு வரும்போது பார்த்துக்கலாம்.

04:06

Speaker A

ரிஷபத்தை பொறுத்தவரைக்கும் சிறுக சிறுக சேமிக்கிறதுதான் அவங்களுக்கு நாளைக்கு பெரிய ஒரு குரோத்.

04:13

Speaker A

அதுதான் அவங்களுக்கு பலமே அதுதான்.

04:14

Speaker A

ஏன்னா திருப்பி பேக் டு ஸ்கொயர் ஒன் போற மாதிரி திரும்ப ஃபீல் பண்ணிட்டே உட்கார்ந்துட்டு இருப்பாங்க.

04:20

Speaker A

பணம் இருக்கிறப்ப டாம்பீகமா செலவு பண்ணிட்டு, அதுக்கப்புறம் மறுபடியும் என்கிட்ட இல்லை இல்லைன்னு சொல்ற அமைப்புதான் வந்து அவங்ககிட்ட இருக்கும்.

04:25

Speaker B

இப்ப வந்து நீங்க சொல்லிட்டீங்க என்ன விஷயம் வந்து ரெசல்யூஷனா எடுத்துக்கலாம் அப்படின்னு.

04:30

Speaker B

ஓகே, ரிஷப ராசி நேயர்களே இந்த விஷயத்தை மட்டும் நீங்க தவிர்த்தீங்க அப்படின்னா ரொம்ப நல்லா இருக்கும்.

04:34

Speaker B

இதை மட்டும் பண்ணிடாதீங்க அப்படின்னா என்ன விஷயம் சொல்லுவீங்க?

04:37

Speaker A

ரிஷப ராசி வந்து முதல் ஒரு ஸ்டெப் முன்னாடி எடுத்து வச்சிரணும்.

04:40

Speaker B

ஓகே.

04:41

Speaker A

இவங்க ஒரு படி ஒரு ஒரு கால் முன்னாடி எடுத்து வச்சிருவாங்க செஞ்சிரலாம்னு.

04:45

Speaker A

திருப்பி ரெண்டு கால் பின்னாடி வந்துரும்.

04:48

Speaker A

யோசிச்சுட்டு இது ஒத்துவருமா?

04:50

Speaker A

இது சரிவருமா?

04:51

Speaker A

கடன் வாங்க வேண்டாம் ரிஷபம்.

04:53

Speaker A

ரிஷபத்துக்கு வந்து மைண்ட் டக்கு டக்குன்னு ரொட்டேஷன் மைண்ட்செட்லயே தான் போகும்.

04:58

Speaker A

இங்க வாங்கி இங்க தூக்கி போட்டு, அங்க வாங்கி அங்க தூக்கி போட்டுரலாம் அப்படின்னு.

05:01

Speaker A

சரி ஒரு இடத்துல வாங்கி நீங்க தூக்கி போடுறீங்க பணத்தை அப்படின்னா,

05:07

Speaker A

இந்த பணத்தை முதல் பெருக்கணும்.

05:10

Speaker A

பெருக்கிட்டு அதுல இருந்து ஒரு 30% எடுத்து நீங்க போட்டீங்கன்னா அது புத்திசாலித்தனம்.

05:15

Speaker A

இங்க இருந்து ஒன்னு தூக்கி போட்டுட்டு இங்க ஒரு ப்ராசஸ் நடக்குறப்ப திருப்பி இன்னொரு இடத்துல கைமாத்தா வாங்குறீங்க அப்படின்னா,

05:21

Speaker A

கொஞ்சம் கஷ்டமா போயிடும்.

05:23

Speaker A

இப்ப பெரும்பாலான ரிஷபம்லாம் கடன் பெற்றிருப்பாங்க.

05:26

Speaker A

இந்த கடனை எப்படி அடைக்கிறதுன்னு சொல்லிட்டு இன்னொரு இடத்துல கடன் வாங்குறதுக்கு தான் யோசிச்சுட்டு இருப்பாங்க.

05:30

Speaker A

இவங்களுக்கு டைம் நல்லா இருக்கு அப்படிங்கறப்போ இவங்களுடைய ஸ்கில்ஸ்னு சொன்னேன் இல்லையா.

05:34

Speaker A

இவங்களுடைய ஸ்கில்ஸை அதுக்கு இவங்க எங்கயாவது போய் ஒரு இன்வெஸ்ட் பண்ணி ஒன்னு படிக்கலாம்.

05:39

Speaker A

டெவலப் பண்ணிக்கலாம்.

05:41

Speaker A

அந்த நாலேட்ஜ் அவங்க டெவலப் பண்ணிக்கலாம்.

05:42

Speaker A

இதை டெவலப் பண்ணி டைம் வாங்கணும்.

05:45

Speaker A

அவங்களால கடன் அடைக்க முடியும்.

05:47

Speaker A

ரிஷபத்தினால 2026 ஃபுல்லாவே கொஞ்சம் கொஞ்சமா அவங்களால கடன் அடைக்க முடியும்.

05:52

Speaker A

அந்த அளவுக்கு வந்து அவங்களுக்கு தொழில் முன்னேற்றம் அப்படிங்கறது இருக்கு.

05:56

Speaker A

இவங்ககிட்ட என்ன ஒரு விஷயம் இருக்கும் அப்படின்னா,

06:00

Speaker A

தொழிலே இவங்க பண்ணப்போறாங்க அப்படின்னா,

06:04

Speaker A

ஒரு பிசினஸ் பண்ணப்போறாங்க அப்படின்னா,

06:07

Speaker A

யார் அவங்களுடைய கிளைன்ட்?

06:09

Speaker A

யார்கிட்ட கரெக்டான டைம் ஸ்பென்ட் பண்ணப்போறோம்?

06:12

Speaker A

அதை எல்லாமே இவங்க கவனிக்கணும்.

06:14

Speaker A

ஏன்னா இவங்க வந்து ஒரு லெவல் அதிகமாகப்போறாங்க.

06:17

Speaker A

திருப்பி அதைவிட சின்ன லெவலுக்கு போயிடக்கூடாது.

06:20

Speaker A

அப்போ பெருசாவே யோசிங்க.

06:22

Speaker A

பெருசாவே கேளுங்க.

06:24

Speaker A

பெருசாவே நடக்கும் அப்படிங்கறதுதான்.

06:26

Speaker B

ஓகே எல்லாம் பெருசு பெருசா நடக்கப்போகுதுன்னு.

06:28

Speaker B

ஸ்பெஷலா இந்த ரிஷப ராசி நேயர்களுக்கு 2026-ல என்ன ஒரு விஷயம் சூப்பரா நடக்கப்போகுதுன்னு சொல்லுவீங்க?

06:32

Speaker A

பொருளாதார ரீதியா நல்ல ஒரு டெவலப்மென்ட் அப்படிங்கறது இருக்கு.

06:35

Speaker A

அதே மாதிரி பர்சனல் லைஃப் கொஞ்சம் நல்லா இருக்கு.

06:38

Speaker A

அதாவது ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அப்படின்னு ஒன்னு இருக்கு.

06:41

Speaker A

அந்த அண்டர்ஸ்டாண்டிங் வந்து வார்த்தைகள் அப்படிங்கிற விஷயத்துலதான் இருக்கு.

06:45

Speaker A

வார்த்தைகள் எந்த அளவுக்கு தெளிவா பேசுறாங்க, மனஸ்தாபங்கள் வர மாதிரி தெரியுது அப்படின்னா,

06:51

Speaker A

பேசிக்கிறது நல்லது.

06:53

Speaker A

பேசி முடிவெடுத்துக்கிறது நல்லது அப்படிங்கறதுதான்.

06:55

Speaker A

ஏன்னா எல்லாமே நல்லா போயிட்டு இருக்கப்போ பர்சனல் லைஃப்ல சம்டைம்ஸ் இந்த மாதிரி எதையாவது ஒரு சின்ன சின்ன விஷயங்கள் வந்துட்டு போகும்.

07:02

Speaker A

அப்போ பேசி தீக்காத தீக்க முடியாத விஷயங்கள் எதுவுமே இல்லை.

07:03

Speaker A

ஏன்னா ரிஷபம் ஒரு விஷயத்துல டிராபேக் ஆகுறாங்க அப்படின்னாலே,

07:07

Speaker A

இந்த லைஃப் பார்ட்னர்னு ஒரு விஷயத்துலதான் டிராபேக்கே ஆவாங்க.

07:10

Speaker A

இல்லன்னா ஃபேமிலி மெம்பர்ஸ் யாரோ ஒருத்தங்க தன்னை ஹர்ட் பண்ணிட்டாங்க, என் கூட பிறந்தவங்க ஹர்ட் பண்ணிட்டாங்க, எங்க அம்மா என்னை பார்க்கல, எங்க அப்பா என்னை பார்க்கல அப்படிங்கறப்போ தோன்றுவாங்க.

07:18

Speaker A

அப்ப இவங்களுக்கு இந்த இடத்துல மோட்டிவேஷன் இல்லாம போயிடும்.

07:21

Speaker A

இவங்களுக்கு ரிஷபத்துக்கு சொல்ல வேண்டிய விஷயம் என்னன்னா,

07:26

Speaker A

நீங்க தானாவே எந்திரிச்சு தான் வேலையை பார்த்தாகணும் அப்படிங்கறதுதான்.

07:30

Speaker A

ஏன்னா ரிஷபம் வந்து ஒரு ஒரு புல்லோட ஒரு அமைப்பு அப்படின்னு நம்ம சொல்ல பார்க்கிறப்ப,

07:35

Speaker A

இந்த புல் அப்படிங்கறது வந்து,

07:40

Speaker A

பசு அப்படின்னு நம்ம சொல்லலாம்.

07:42

Speaker A

மாடுன்னு சொல்லலாம்.

07:44

Speaker A

இவங்களை வந்து யாராவது ஒருத்தங்க வந்து வழிநடத்திட்டே இருக்கணும்.

07:47

Speaker B

ஓகே.

07:48

Speaker A

வழிநடத்திட்டே இருந்தா கரெக்டா இருக்கும்.

07:51

Speaker A

இல்ல அப்படின்னா இவங்க வந்து அப்படியே இருந்துருவாங்க.

07:54

Speaker A

அப்படியே ஸ்டாக்னன்ட் ஆகி நின்னுருவாங்க.

07:55

Speaker A

இப்ப என்னன்னா உங்களுக்கான வழிப்பாதைகள் நீங்கதான் அமைச்சு போயிட்டே இருக்கணும் அப்படிங்கறதுதான்.

07:59

Speaker A

கரெக்டா அமைச்சு போயிட்டே இருக்கிறீங்க அப்படின்னா,

08:02

Speaker A

குரோத் ரொம்ப நல்லா இருக்கும் அப்படிங்கறது.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/video-8hln2fyenoo/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
