**🔴 Mithunam | திடீர் தொழில் வளர்ச்சி ஏற்படும் | Astrologer Jeevitha Sureshkumar | Guru Peyarchi 2026 — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/video-2icfauh0oz4/

Answers

## Questions about this video

மிதுன ராசிக்காரர்களின் கடந்த கால வாழ்க்கை அனுபவங்கள் எப்படி இருந்திருக்கும்?

மிதுன ராசிக்காரர்கள் வெளியிலிருந்து பார்க்கும்போது வாழ்க்கை நன்றாக இருப்பது போல் தோன்றினாலும், சனியாலும், சந்திரனாலும், புதனாலும் பல சிரமங்களை அனுபவித்திருப்பார்கள். வேலை செய்யும் இடத்திலோ, வீட்டிலோ, குடும்பத்திலோ புரிதல் இல்லாமல், நிலைத்தன்மை இல்லாமல் இருந்திருப்பார்கள்.

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு என்ன நன்மைகளை வழங்க காத்திருக்கிறார்?

குரு மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு நல்ல துணையை வழங்க காத்திருக்கிறார். இது அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நிம்மதியை நோக்கிச் செல்லும் அமைப்பாகும். யாரோ ஒருவரின் ஆலோசனை அல்லது வழிகாட்டுதல் மூலம் அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனைகள் என்ன?

மிதுன ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் காரணமாக உடல்நலப் பிரச்சனைகள் வரலாம். அவர்கள் அதிக கற்பனை செய்யும் குணம் கொண்டவர்கள், மேலும் சில சமயங்களில் மனச்சோர்வு காரணமாக வார்த்தைகளை தவறாகப் பயன்படுத்தலாம்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

மிதுனத்தில் இருக்கிறவங்களுக்கெல்லாம் வெளியில இருந்து மிதுனத்தை பார்க்கிறப்போ உனக்கு என்னப்பா உன் லைஃப் ரொம்ப நல்லா இருக்கு அப்படிங்கற மாதிரி இருக்கும்.

00:10

Speaker A

ஆனா அவங்க சனிக்கிட்டயும் அடி வாங்கி இருப்பாங்க அப்பப்ப சந்திரனும் ஒரு அடி கொடுத்திருக்கும் புதனும் ஒரு அடி கொடுத்திருக்கும்.

00:14

Speaker A

தன் வீடே புதனாக இருந்தாலும் புதன் வக்கிரமானவங்களுக்கு எல்லாம் அந்த மாதிரி ஒரு அடி கொடுத்திருக்கும்.

00:15

Speaker A

விசிபிலிட்டியே இல்லாம இருந்திருக்கும் நான் இவ்வளவு எஃபர்ட் போட்டேன் ஆனா யாருக்குமே தெரியல நான் நிறைய எஃபர்ட் போட்டு வேலை செய்யக்கூடிய ஆள்தான் ஆனா என்னுடைய டேலன்ட் வெளியே தெரியல அப்படிங்கற மாதிரி எல்லாம் இருக்கும்.

00:26

Speaker A

ஆசிலேஷன் மைண்டும்ங்கறதும் மிதுனத்துக்கு வந்து உண்டு நிறைய விஷயங்கள் இமேஜின் பண்ணிக்குவாங்க.

00:32

Speaker A

இமேஜினேஷன்ஸ் குள்ளார அவங்க ரொம்ப போயிறக்கூடாது.

00:36

Speaker A

பிரச்சனைகள் தேடி வருதுன்னா ஹெல்த் ரீதியாதான் அவங்களுக்கு ப்ராப்ளம்ஸ் தேடி வரும்னு வச்சுக்கோங்களேன் மன அழுத்தங்கள்னாலதான் அவங்களுக்கு பிரச்சனைகள் தேடி வரும்.

00:42

Speaker A

கொஞ்சம் டிப்ரஷன் ஸ்டேஜ்ல இருக்காங்க அப்படின்னா வார்த்தைகளை விட்டுறது.

00:48

Speaker B

மிதுன ராசியினர் மேம்.

00:49

Speaker B

இந்த மிதுன ராசியினர்களுக்கு குரு என்னென்னலாம் கொடுக்க காத்துட்டு இருக்கார்.

00:52

Speaker A

குரு வந்து ஒரு நல்ல ஒரு கம்பானியன் கொடுக்க காத்துட்டு இருக்கிறார்.

00:56

Speaker A

இப்ப அவங்களுக்கு வந்து லைஃப்ல ஒரு நிம்மதியை நோக்கி போகிற மாதிரியான அமைப்பு.

01:01

Speaker A

ஏன்னா பெரும்பாலும் மிதுனத்தில் இருந்தவங்க எல்லாம் எப்படி இருந்திருப்பாங்கன்னா வொர்க் பிளேஸ்ல ஆகட்டும் வீட்ல ஆகட்டும் ஃபேமிலில ஆகட்டும் எங்கேயுமே ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அப்படிங்கறது ஒன்னு இருந்திருக்காது இன்னொன்னு நிலைத்தன்மை அப்படிங்கிற ஒரு விஷயம் வந்து அவங்ககிட்ட இருந்திருக்காது.

01:54

Speaker A

ஸ்டெபிலிட்டி இல்லாம தன்னுடைய கஷ்டத்தை கூட வெளியே சொல்றதோ ஷேர் பண்றதோ கூட தெரியாம இது எப்படி ஹேண்டில் பண்றதுன்னு அதுலயே சுழண்டு சுழண்டு வந்த மாதிரியே இருந்திருக்கும்.

02:05

Speaker A

இன்னும்மே பார்த்தீங்கன்னா மிதுனத்தில் இருக்கிறவங்களுக்கெல்லாம் வெளியில இருந்து மிதுனத்தை பார்க்கிறப்போ உனக்கு என்னப்பா உன் லைஃப் ரொம்ப நல்லா இருக்கு அப்படிங்கற மாதிரி இருக்கும் ஆனா அவங்க சனிக்கிட்டயும் அடி வாங்கி இருப்பாங்க அப்பப்ப சந்திரனும் ஒரு அடி கொடுத்திருக்கும் புதனும் ஒரு அடி கொடுத்திருக்கும் தன் வீடே புதனாக இருந்தாலும் புதன் வக்கிரமானவங்களுக்கு எல்லாம் அந்த மாதிரி ஒரு அடி கொடுத்திருக்கும்.

02:24

Speaker A

அப்போ இப்ப இந்த குரு என்ன பண்ணுவார்னா யாரோ ஒருத்தங்களுடைய ஒரு ஆலோசனை குருமார்கள் மாதிரி யாராவது ஒருத்தங்க வருவாங்க இவங்களுடைய வாழ்க்கையில.

02:30

Speaker A

அதாவது இந்த வாழ்க்கையில குருமார்கள்ங்கறது யாருன்னா நம்ம லைஃப்ல ஒரு குட்டி குழந்தையா கூட இருக்கலாம்.

02:40

Speaker A

அந்த குழந்தைகிட்ட இருந்து நம்ம ஏதோ ஒரு விஷயத்தை நம்ம கத்துக்குறோம்னு வச்சுக்கோங்களேன் அது நம்மளுக்கு ஒரு ஹாப்பினஸ் கொடுக்குதுன்னா அதுவே நம்மளுக்கு குருதான்.

02:45

Speaker A

அந்த மாதிரி அவங்க லைஃப்ல ஏதோ ஒரு விஷயம் வந்து இப்ப அட்டாச் ஆகுதுன்னு அர்த்தம்.

02:50

Speaker A

அவங்க இவங்களோட லைஃப் ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன் பண்ணுவாங்க.

02:55

Speaker A

இப்போ அவங்களுக்கு எங்கெல்லாம் ஒரு குறைப்பட்டு இருக்காங்கன்னு ஒன்னு இருக்கு.

03:02

Speaker A

இப்ப வேலையில ஒரு குறைப்பட்டு இருக்காங்க ப்ரமோஷன் கிடைக்காம இருக்கு அப்படிங்கறப்போ.

03:06

Speaker A

இப்பதான் அவங்களுடைய வேலை ஒரு அங்கீகாரம் கிடைக்கும் அப்படிங்கறதே அவங்களுக்கு ஒன்னு இருக்கு.

03:11

Speaker A

அதாவது விசிபிலிட்டியே இல்லாம இருந்திருக்கும் நான் இவ்வளவு எஃபர்ட் போட்டேன் ஆனா யாருக்குமே தெரியல நான் நிறைய எஃபர்ட் போட்டு வேலை செய்யக்கூடிய ஆள்தான்.

03:20

Speaker A

ஆனா என்னுடைய டேலன்ட் வெளியே தெரியல அப்படிங்கற மாதிரி எல்லாம் இருக்கும்.

03:24

Speaker A

ஜூன் மாசத்துக்கு அப்புறம் தெரிய ஆரம்பிக்கும்.

03:26

Speaker A

ஒரு சிலருக்கு வந்து இடமாற்றம் அப்படிங்கறது அமையும்.

03:29

Speaker A

வேலை மாற்றம்.

03:31

Speaker A

தொழில் துவங்குறேன்னு மட்டும் மிதுனம் போயிட வேண்டாம்.

03:35

Speaker A

மிதுனத்துக்கு வந்து தொழில் தொடங்கக்கூடிய அமைப்பு வந்து இந்த வருடம் ரொம்ப கம்மியா இருக்கு அப்படிங்கறதுனால.

03:40

Speaker A

இருக்கிற இடத்திலேயே இருந்து ஒரு வேலை பார்த்துட்டு இருக்காங்க அப்படின்னா அதை எப்படி டெவலப் பண்ணிக்கிறதுன்னு பார்க்கலாம்.

03:47

Speaker A

இல்ல அதே மாதிரி இன்னொரு இடத்துக்கு வேலை மாறி போய்க்கலாம் அப்படின்னு ஒன்னு இருக்கு.

03:50

Speaker B

இப்ப அதே மாதிரி வேற ஒரு இடத்துக்கு வேலை மாறி போய்க்கலாம் அப்படிங்கற மாதிரி ஒரு அமைப்பு வந்து அவங்களுக்கு இருக்கு.

03:53

Speaker A

மொத்தத்துல கால்ல அடிபடாம பார்த்துக்கணும்.

03:58

Speaker B

ஓகே.

03:59

Speaker A

மிதுனம் ஏன்னா குரு ஹெல்ப் பண்ண வராரு அப்படிங்கறப்ப எங்கேயாவது ஒரு இடத்துல இருந்து சனி கால்ல தான் அடிப்பாரு.

04:04

Speaker A

அவங்களை ஏன் அப்படின்னா நிதானம் அப்படிங்கிற ஒரு விஷயத்துக்காக கொஞ்சம் நிதானமா எல்லாமே செயல்படணும் அப்படிங்கறதுதான்.

04:10

Speaker A

ஆசிலேஷன் மைண்டும்ங்கறதும் மிதுனத்துக்கு வந்து உண்டு.

04:14

Speaker A

நிறைய விஷயங்கள் இமேஜின் பண்ணிக்குவாங்க.

04:17

Speaker A

இமேஜினேஷன்ஸ் குள்ளார அவங்க ரொம்ப போயிறக்கூடாது.

04:20

Speaker A

ஃபேமிலி லைஃப் அப்படின்னு பார்க்கிறப்போ ஒரு அவங்க லைஃப் பார்ட்னரோட ஒரு ப்ராப்பரான ஒரு அண்டர்ஸ்டாண்டிங்ல இருந்துக்கிறது நல்லது.

04:26

Speaker A

அப்பப்ப மிதுனத்துக்கு வந்து சந்தேகம் அப்படிங்கிற ஒரு விஷயம் வந்துட்டு வந்துட்டு போகும்.

04:31

Speaker A

தானா அஸ்யூம் பண்ணிப்பாங்க நிறைய.

04:34

Speaker A

அது சந்திரன் அந்த வேலையை அவங்ககிட்ட அது பண்ணிக்கிட்டு இருக்கும்.

04:38

Speaker A

அதனால அதுலயும் கொஞ்சம் கவனம் செலுத்தி குடும்பத்துல முடிஞ்ச அளவுக்கு சண்டை சச்சரவுகள் எல்லாம் எதுவும் இல்லாம.

04:45

Speaker A

வார்த்தை அந்த வம்பு வழக்கு எல்லாம் எதுவும் இல்லாம கொஞ்சம் லிசனிங் மோட்ல இருந்துட்டாங்க அப்படின்னா மிதுனத்துக்கு வந்து லைஃப் வந்து ரொம்ப நல்லா இருக்கும்.

04:52

Speaker B

ஓகே இந்த டைம்ல அவங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் தேடி வருமா.

04:55

Speaker A

பிரச்சனைகள் தேடி வருதுன்னா ஹெல்த் ரீதியாதான் அவங்களுக்கு ப்ராப்ளம்ஸ் தேடி வரும்னு வச்சுக்கோங்களேன் மன அழுத்தங்கள்னாலதான் அவங்களுக்கு பிரச்சனைகள் தேடி வரும்.

05:01

Speaker A

கொஞ்சம் டிப்ரஷன் ஸ்டேஜ்ல இருக்காங்க அப்படின்னா வார்த்தைகளை விட்டுறது.

05:05

Speaker A

இல்ல அவசரப்பட்டு வேற ஏதோ ஒரு தொழில் முடங்கி போயிருக்கிறவங்க பினான்சியலா நிறைய ப்ராப்ளம்ல மாட்டி இருக்கிறவங்க.

05:13

Speaker A

அவங்க வந்து இந்த கேம்ப்ளிங் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குள்ள போயிடக்கூடாது.

05:20

Speaker A

ஏன்னா அவங்களுக்கு வந்து அந்த ஷார்ட்கட்ஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை தேடுற ஒரு மனநிலைமைகள் அடிக்கடி அவங்களுக்கு உண்டு.

05:26

Speaker A

அந்த ஷார்ட்கட்ஸ் அவங்க தேடி போறாங்கனாலே அவங்க பிரச்சனைகளை மாட்டிக்குவாங்கன்னு தான் அர்த்தம் மீண்டு வர முடியாது அவங்களால.

05:32

Speaker A

சோ அதுல மட்டும் அவங்க போய் சிக்கிக்கிறக்கூடாது.

05:34

Speaker B

ஓகே சூப்பர் இந்த குரு பெயர்ச்சி டைம்ல யாராவது திருமணத்துக்காக காத்துட்டு இருந்தாங்கன்னா திருமணம் கைகூடுமா.

05:38

Speaker A

கம்பானியன்ஷிப் அப்படிங்கிற ஒரு விஷயம் வரும்னு நான் சொல்லிருக்கேன் இல்லையா.

05:40

Speaker A

சோ அவங்களுக்கு வந்து அந்த கம்பானியன்ஷிப்ப அவங்க கரெக்டா யூஸ் பண்ணிக்கிறாங்க அப்படின்னா வந்து திருமணத்துக்கான அமைப்பு வந்து நல்லா இருக்கு அவங்களுக்கு.

05:47

Speaker B

ஓகே.

05:48

Speaker A

திருமணம் வாழ்வு நல்லா இருக்க போகுது.

05:50

Speaker B

ஓகே சூப்பர் மேம்.

05:51

Speaker A

திருமணம் வாழ்வு நல்லா இருக்க போகுது.

05:52

Speaker B

ஓகே சூப்பர் மேம் இப்ப குழந்தைக்காக காத்துட்டு இருக்காங்கன்னா குழந்தை வரம் கிடைக்குமா.

05:56

Speaker A

அதுக்கான ட்ரீட்மென்ட் குள்ள அவங்க போவாங்க.

05:59

Speaker A

ட்ரீட்மென்ட் முதல்ல அக்செப்ட் பண்ணி பாடி ஒரு அக்செப்டன்ஸ் குள்ள வந்து அவங்களுக்கு போக ஆரம்பிக்கும்.

06:02

Speaker B

ஓகே மேம் பணவரவு அப்படின்றது எப்படி இருக்கும்.

06:05

Speaker A

பணவரவு வந்து அவங்களுக்கு நல்லா இருக்கு.

06:07

Speaker A

அவங்களுக்கு வந்து குரு வந்து பணவரவு கொடுக்கக்கூடிய ஒரு இடத்துல தான் இருக்காங்க.

06:14

Speaker A

அதான் அவங்களுக்கு வந்து இடமாற்றம் வருது தொழில் மாற்றம் வருது.

06:18

Speaker A

ப்ரமோஷன் அப்படிங்கிற ஒரு அமைப்பும் வருது.

06:21

Speaker A

சோ அதனால வந்து பணம் புழங்க ஆரம்பிக்கும் அவங்ககிட்ட.

06:24

Speaker B

ஓகே.

06:25

Speaker B

கடனிலிருந்து வெளியில வருவாங்களா.

06:28

Speaker A

கடனிலிருந்து வெளியே வரக்கு வாய்ப்புகள் ஒரு சிலருக்கு.

06:33

Speaker A

அதாவது அங்க வந்து குரு கொடுக்கிற இடத்துல இருந்தாலும் சம்டைம்ஸ் புதன் வந்து புதனுடைய ஏன்னா புதனுடைய வேலைப்பாடுகளும் அந்த இடத்துல கொஞ்சம் இருக்கனால சொல்றேன் புத்தி.

06:43

Speaker A

சம்டைம்ஸ் வந்து புத்தி வந்து மழுங்கடிக்கிற மாதிரி சிச்சுவேஷன்ஸ் ஆகுதுன்னா திரும்பவும் கடனுக்குள்ள போய் சிக்கிடுவாங்க.

06:49

Speaker A

அப்படிங்கறப்ப குரு குரு கொடுக்கிறப்பயும் அதை கரெக்டா வாங்கி யூஸ் பண்ணிக்க தெரிஞ்சு கொஞ்சம் கொஞ்சமாதான் அவங்களால கடன் அடைக்க முடியும்.

06:55

Speaker B

ஓகே ஏதாவது வம்பு வழக்குல மாட்டி இருக்கிறாங்க அப்படின்னா இந்த டைம்ல வெளியில வர முடியுமா.

07:00

Speaker A

வரக்கு வந்து வாய்ப்புகள் அவங்களுக்கு இருக்கு நிதானமா அதாவது அவசரப்படாம எடுத்தறிஞ்சு பேசாம அவங்க இருந்துட்டாங்க அப்படின்னா.

07:07

Speaker A

அவங்களுக்கு வம்பு வழக்குல இருந்து வெளிய வருவாங்க.

07:10

Speaker A

ஏன்னா குரு வந்து அப்படித்தான் ஹெல்பே பண்ணுவார்.

07:12

Speaker B

ஓவராலா மிதுன ராசியினர்கள் ரொம்ப கவனமா இருக்க வேண்டிய விஷயம் எது மேம்.

07:18

Speaker A

எதுலயுமே படபடப்பு அவசரத்தன்மை வேண்டாம் டக்கு டக்குன்னு முடிவு பண்ணிடுறதும் வேண்டாம்.

07:23

Speaker A

ஏன்னா இவங்க பாதியிலேயே பாதி விஷயங்கள் புரிஞ்சு முழுசா தெரியறதுக்கு முன்னாடியே முடிவுகள் எடுத்துருவாங்க.

07:30

Speaker A

சோ அதனால முழுசா எல்லா பக்கமும் 360 டிகிரிஸ்ல ஆராய்ஞ்சிட்டு நல்லது எது கெட்டது எது முக்கியமா இது கெட்டதா போனா எப்படி இருக்கும்னு இமேஜினேஷன் இல்லாம ரிசல்ட் தெரிஞ்சிட்டு அவங்க ஒரு விஷயத்துக்குள்ள போறாங்கன்னா கரெக்டா இருக்கும்.

07:39

Speaker A

இல்லன்னா இவங்களுக்கே முழுசா ஒரு விஷயம் தெரியாதப்போ இன்னொருத்தங்களையும் அதுக்குள்ள கொண்டு வந்துரக்கூடாதுன்னு ஒன்னு இருக்கு.

07:45

Speaker A

இவங்க எப்பவுமே ஜாக்கிரதையா தான் இருப்பாங்க யார் வம்பு வழக்குக்கும் நம்ம போயிறக்கூடாதுன்னு அதையும் தாண்டி சம்டைம்ஸ் இப்படி ஒரு சிச்சுவேஷன்ஸ் வருதுன்னா.

07:52

Speaker A

இவங்க மத்தவங்களுக்காக போய் உனக்காக நான் இதை பண்றேன்.

07:56

Speaker A

அந்த மாதிரி போய் நின்றாம இருந்துக்கிறது நல்லது.

07:58

Speaker B

ஓகே சூப்பர் மிதுன ராசியினர்கள் இந்த கோவிலுக்கு போய் வழிபட்டுட்டு வந்தா எல்லாமே நல்லதா நடக்கணும் எந்த கோவிலுக்கு போகணும்.

08:03

Speaker A

அவங்க வந்து சூரியனார் கோவிலுக்கு போயிட்டு அங்க இருக்கிற குருவை அவங்க வழிபாடு பண்றாங்க அப்படின்னா தெளிவு நிலை அப்படிங்கறது வந்து அவங்களுக்கு ஸ்ட்ராங்கா வரும்.

08:09

Speaker A

ஏன்னா அவங்களுக்கு தேவை என்னன்னா ஒரு கிளாரிட்டி தான்.

08:12

Speaker A

சோ அப்ப வந்து அந்த சூரியன்கிட்ட போய் அவங்க வழிபாடு பண்ணும் பொழுதுதான் அவங்களுக்கு அந்த தெளிவு நிலை அப்படிங்கறதே வரும்.

08:18

Speaker A

இது எப்படின்னா.

08:21

Speaker A

நவ கிரகங்களும் ஒரே இடத்துல இருக்கக்கூடிய ஒரு அமைப்பு வந்து சூரியனார் கோவில்ல வந்து இருக்கு.

08:28

Speaker A

சோ இவங்களுக்கு வந்து எல்லா தெய்வங்களுடைய அனுக்கிரகமும் இவங்களுக்கு தேவை முக்கியமா கிளாரிட்டிங்கிற ஒரு விஷயம் வந்து இவங்களுக்கு ரொம்ப தேவை.

08:34

Speaker A

அந்த கிளாரிட்டி இருந்துட்டாலே உங்களுக்கு லைஃப் கிளியரா இருக்கும்.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/video-2icfauh0oz4/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
