**நோன்பு திறப்பதற்குள் பதில் கிடைக்கும்  — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/transcript-79/

Answers

## Questions about this video

நோன்பு திறப்பதற்குள் பதில் கிடைக்க என்ன திக்ர் ஓத வேண்டும்?

நோன்பு திறப்பதற்குள் பதில் கிடைக்க, நோன்பாளிகள் 'சுபஹானல்லாஹி வபிஹம்திஹி ஹஸ்பி அல்லாஹு லா இலாஹ இல்லாஹு' என்பதை 101 முறையும், 'சுபஹானல்லாஹில் அலீமி ஹஸ்புனல்லாஹு வநிஅமல் வக்கீல்' என்பதை 101 முறையும் ஓத வேண்டும்.

இந்த திக்ரை ஓதுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

இந்த திக்ரை ஓதுவதன் மூலம் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். பிரச்சனைகள், கவலைகள், கடன்கள் நீக்கப்பட்டு, அல்லாஹ் செல்வத்தை பரக்கத்தாக வழங்குவான். சோதனைகளிலிருந்து விரைவாக வெளியே வரலாம்.

வறுமையில் இருப்பவர்கள் எந்த திக்ரை ஓத வேண்டும்?

வறுமையில் இருப்பவர்கள் ஃபஜ்ருக்குப் பிறகு 'சுபஹானல்லாஹி வபிஹம்திஹி சுபஹானல்லாஹில் அலீம்' என்பதை 100 முறை ஓத வேண்டும். இதனால் உலகத்தில் உள்ள அனைத்து செல்வங்களும் அவர்களின் காலடியில் வந்து சேரும் என்று ரசூலுல்லாஹ் கூறியுள்ளார்கள்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

00:04

Speaker A

இன்றைக்கான பதிவுல 5 மணி நேரத்தில் நமக்கு பதில் கிடைக்கக்கூடிய ஒரு மிகச்சிறந்த வாழ்வை மாற்றி அமைக்கக்கூடிய ஒரு திக்ரை தான் நம்ம பார்க்க போறோம்.

00:19

Speaker A

இன்ஷா அல்லாஹ் நோன்பாளிகள் நோன்பு வச்சுக்கிட்டு இதை 202 முறை நீங்க சொன்னீங்க அப்படின்னா இன்ஷா அல்லாஹ் நோன்பு திறக்குறதுக்கு முன்னாடி உங்களுக்கு இதற்கான பதில் கிடைச்சிரும்.

00:29

Speaker A

அப்படிப்பட்ட வாழ்வை மாற்றக்கூடிய ஒரு திக்ரை தான் நம்ம இன்றைக்கு பார்க்க போறோம்.

00:36

Speaker A

மேலும் இந்த திக்ரு நம்ம ஓதுறதின் காரணமாக நம்முடைய வாழ்க்கையில நிறைய மாற்றங்கள் ஏற்படும்.

00:45

Speaker A

நம்முடைய பிரச்சனைகள், கவலைகள், கடன்கள் இது எல்லாமே நீக்கப்படுது முற்றிலுமாக.

00:51

Speaker A

இன்னும் இந்த திக்ரை ஓதுறதின் காரணமாக அல்லாஹுத்தஆலா நமக்கு செல்வத்தை பரக்கத்தா கொடுக்கிறான்.

01:00

Speaker A

நம்ம ஒரு தீராத ஒரு சோதனையில மாட்டிட்டு இருக்கோம் அப்படின்னா கண்டிப்பா இந்த திக்ரை ஒரே ஒரு நாள் நீங்க ஓதி பாருங்க.

01:10

Speaker A

அல்ஹம்துலில்லாஹ் சோதனையிலிருந்து அல்லாஹ் உங்களை வெகு சீக்கிரமா வெளியே கொண்டு வந்துருவான்.

01:20

Speaker A

அன்றைக்கு இரவிலேயே நீங்க இதற்கான பதிலை நீங்க பெற்றுக்கொள்ளலாம்.

01:26

Speaker A

இதற்கான நிம்மதியோட தான் நீங்க தூங்குவீங்க.

01:30

Speaker A

மேலும் இந்த திக்ருக்கு ஏராளமான வஜீபாக்கள் இருக்கு, சிறப்புகள் இருக்கு.

01:37

Speaker A

ஆனா இன்றைக்கு நம்ம பார்க்க போறது வாழ்வை மாற்றக்கூடிய ஒரு வஜீபா தான்.

01:42

Speaker A

இப்போ அந்த திக்ர் என்ன அப்படிங்கறத நம்ம பார்க்கலாம்.

01:45

Speaker A

முதல் திக்ரு.

01:47

Speaker A

சுபஹானல்லாஹி வபிஹம்திஹி.

01:50

Speaker A

ஹஸ்பி அல்லாஹு லா இலாஹ இல்லாஹு.

01:53

Speaker A

அப்படிங்கறத நீங்க 101 முறை திக்ர் செஞ்சு முடிச்சுக்கணும்.

01:58

Speaker A

அதற்குப் பிறகு சுபஹானல்லாஹில் அலீமி ஹஸ்புனல்லாஹு வநிஅமல் வக்கீல்.

02:04

Speaker A

அப்படிங்கறத நீங்க ஓதி இரண்டாவது முறையாக நீங்க இந்த திக்ரை ஓதி முடிச்சுக்கணும்.

02:12

Speaker A

அதாவது முதல் திக்ர் 101 முறை.

02:14

Speaker A

இரண்டாவது திக்ர் நீங்க 101 முறை.

02:16

Speaker A

உங்க எல்லோருக்கும்மே புரியும் அப்படின்னு நான் நம்புறேன்.

02:19

Speaker A

மேலும் நம்ம எல்லோருக்கும்மே தெரியும் சுபஹானல்லாஹி வபிஹம்திஹி சுபஹானல்லாஹில் அலீம்.

02:25

Speaker A

அப்படின்னு சொன்னோம் அப்படின்னா கடலின் நுரை அளவு பாவங்கள் இருந்தாலும் நமக்கு மன்னிக்கப்பட்டுவிடும்.

02:31

Speaker A

இன்னும் ஒரு சஹாபி அவங்க நபி அவங்க கிட்ட கேட்கும்போது யா ரசூலுல்லாஹ் நான் வறுமையில இருக்கேன்.

02:39

Speaker A

உலகமே என்னை விருண்டு ஓடுது.

02:42

Speaker A

அப்படின்னு சொல்லும்போது ரசூலுல்லாஹ் இந்த திக்ரை நீங்க ஃபஜ்ருக்கு 100 முறை ஓதிட்டு வாங்க.

02:50

Speaker A

உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து செல்வங்களும் உங்களோட காலடியில தாழ்மையா வந்து விழும்.

02:57

Speaker A

அப்படின்னு சொன்ன ஒரு அற்புதமான திக்ரு.

03:00

Speaker A

இந்த திக்ரே நமக்கு போதுமானது.

03:03

Speaker A

செல்வத்தை வாரி வழங்கக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம் அப்படின்னு தான் நான் சொல்லுவேன்.

03:10

Speaker A

இன்ஷா அல்லாஹ் இந்த திக்ரை ஓதக்கூடியவங்களுக்கு வாழ்க்கையில வறுமை வராது.

03:16

Speaker A

ஒரு காலம் அவங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்படாது.

03:20

Speaker A

எனவே இதை நீங்க தொடர்ந்து ஓதுங்க.

03:22

Speaker A

அடுத்த திக்ரு.

03:24

Speaker A

ஹஸ்பி அல்லாஹு லா இலாஹ இல்லாஹு அப்படின்னு சொல்றதுக்கும் ஏராளமான சிறப்பு இருக்கு.

03:30

Speaker A

இதை நம்ம காலையிலும் மாலையிலும் சொன்னோம் அப்படின்னா.

03:34

Speaker A

நமக்கு இடைப்பட்ட நேரங்கள்ல இருக்கக்கூடிய தேவைகளுக்கு போதுமானது.

03:40

Speaker A

அப்படின்னு ரசூலுல்லாஹ் சொல்லிருக்காங்க.

03:42

Speaker A

அடுத்தது ஹஸ்புனல்லாஹு வநிஅமல் வக்கீல்.

03:44

Speaker A

இது நம்முடைய கவலைகளை காணாமல் ஆக்கக்கூடிய ஒரு அற்புதமான மந்திரம்.

03:51

Speaker A

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவங்களை நெருப்பு குண்டத்துல போடப்படும்போது அவங்க ஓதியது.

03:57

Speaker A

இதை யார் ஓதினாலும் அவங்களுடைய கஷ்டங்கள் லேசாக்கப்படும்.

04:01

Speaker A

எனவே இது ஒரு அற்புதமான திக்ரு தான்.

04:05

Speaker A

இதற்கு ஏராளமான வஜீபா சொல்லப்படுது.

04:08

Speaker A

இது வாழ்வை மாற்றும்.

04:11

Speaker A

இதை வந்து யாராவது தொடர்ந்து செஞ்சுட்டு வந்தாங்க அப்படின்னா.

04:17

Speaker A

அவங்களோட லைஃபை வந்து அல்லாஹுத்தஆலா ஒட்டுமொத்தமா மாத்துறானாம்.

04:22

Speaker A

அவங்க இதுவரைக்கும் பார்க்காத ஒரு வாழ்க்கையை அல்லாஹுத்தஆலா ஏற்படுத்துவான்.

04:28

Speaker A

பார்க்காத ஒரு உயர்வை பார்ப்பாங்க.

04:31

Speaker A

அவங்க பார்க்காத ஒரு அந்தஸ்தை பார்ப்பாங்க அப்படின்னு சொல்லப்படுது.

04:36

Speaker A

எனவே இன்ஷா அல்லாஹ் நோன்பு வச்சுக்கிட்டு இதை ஃபஜ்ருடைய வேளையில அல்லது காலை நேரத்துல இதை நீங்க ஓதுனீங்க அப்படின்னா இன்ஷா அல்லாஹ்.

04:43

Speaker A

இரவுக்குள்ள இன்னும்.

04:46

Speaker A

சாயங்காலத்துக்குள்ள இதனுடைய ரிசல்ட் உங்களுக்கு தெரிஞ்சிரும்.

04:50

Speaker A

அல்ஹம்துலில்லாஹ்.

04:52

Speaker A

இந்த ஒரு குட்டி திக்ரை நம்ம எல்லோருமே ஓதி இதனுடைய சிறப்பையும் பலனையும் அடைந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக.

05:01

Speaker A

ஆமீன் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

05:04

Speaker A

இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு பிடிச்சிருந்தது அப்படின்னா இந்த சேனலை லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

05:09

Speaker A

கண்டிப்பா சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

05:12

Speaker A

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=8801)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=8801)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=8801)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/transcript-79/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
