**காலையில் ஓதினால் மாலைக்குள் நடக்கும் வானவர்கள் இறங்குவார்கள் — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/transcript-56/

Answers

## Questions about this video

காலை நேரத்தில் எந்த வசனங்களை ஓதினால் மாலைக்குள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும்?

காலை நேரத்தில் சூரா ஹஷ்ரின் இறுதி மூன்று வசனங்களை ஓதினால், மாலைக்குள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என்று இந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வசனங்களை ஓதுவதன் மூலம் 70,000 வானவர்கள் நமக்காக துஆ செய்வார்கள்.

சூரா ஹஷ்ரின் இறுதி மூன்று வசனங்களை ஓதுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன?

சூரா ஹஷ்ரின் இறுதி மூன்று வசனங்களை காலை நேரத்தில் ஓதுவதன் மூலம் 70,000 வானவர்கள் நமக்காக துஆ செய்வார்கள். மேலும், அவர்கள் மாலை வரை நமக்காக பிரார்த்தனை செய்வார்கள், நாம் இறந்துவிட்டால் ஷஹீது எனப்படும் தியாகியின் அந்தஸ்து கிடைக்கும்.

வானவர்கள் நமக்காக துஆ செய்வதன் முக்கியத்துவம் என்ன?

வானவர்கள் பாவமே செய்யாதவர்கள் என்பதால், அவர்கள் நமக்காக துஆ செய்யும்போது அல்லாஹ் அதை நிச்சயமாக அங்கீகரிப்பான். இது நமது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், நமது கவலைகள் நீங்குவதற்கும் உதவும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

00:04

Speaker A

இன்றைக்கான பதிவுல காலையில் ஓதினால் மாலைக்குள் நமது துஆக்கள் அங்கீகரித்து கொடுக்கக்கூடிய சிறந்த திருக்குர்ஆனுடைய ஒரு வசனத்தை தான் நம்ம பார்க்க போறோம்.

00:14

Speaker A

இன்னும் நமக்காக வானவர்கள் துஆ செய்யக்கூடிய ஒரு நல்ல அமலை தான் நம்ம இன்றைக்கு பார்க்க போறோம்.

00:22

Speaker A

இன்றைக்கு நம்மல பலருமே என்ன செய்யறோம் அப்படின்னா எனக்காக துஆ செய்யுங்க அப்படின்னு நம்ம பார்க்க கூடியவங்க, கேட்க கூடியவங்க, பழகினவங்க, தெரிஞ்சவங்க, தெரியாதவங்க எல்லார்கிட்டயுமே நம்ம சொல்றோம்.

00:35

Speaker A

ஆனா நமது ரசூலுல்லாஹ் நமக்கு கற்று கொடுத்திருக்காங்க இந்த வசனங்களை நீங்க காலை பொழுது அடைந்த உடனே நீங்க ஓதிக்கிட்டீங்க அப்படின்னா 70,000 வானவர்கள் உங்களுக்காக துஆ செய்யறாங்க, உங்களுடைய பாவ மன்னிப்பிற்காகவும் அல்லாஹ்விடத்தில கேட்கிறாங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க.

00:55

Speaker A

ஆனா நம்மல யாருமே இதை வந்து பயன்படுத்திக்கிறது கிடையாது.

01:02

Speaker A

இது அன்றாடம் நம்ம வழக்கமாக்கிக்கிறதுமே கிடையாது.

01:06

Speaker A

இன்றைக்கு நம்ம எல்லோருமே என்ன செய்யறோம் அப்படின்னா நமது பிரச்சனை நீங்கணும்.

01:14

Speaker A

நமது கவலைகள் எல்லாமே நீங்கணும், கடன்கள் எல்லாமே நீங்கணும்.

01:22

Speaker A

நமது துஆ நினைச்ச உடனே நமக்கு கபூல் ஆகிரணும்.

01:30

Speaker A

அப்படிங்கறதுல நம்ம எல்லோருமே உறுதியா இருக்கோம்.

01:37

Speaker A

ஆனா இது எல்லாத்துக்குமே நமது ரசூலுல்லாஹ் நமக்கு நிறைய அமல்களை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்க.

01:44

Speaker A

ஆனா அதை யாருமே நம்ம பின்பற்றுறது கிடையாது.

01:50

Speaker A

இப்போ நமக்காக ஏராளமான வானவர்கள் துஆ செய்யக்கூடிய அந்த வசனம் என்ன அப்படிங்கறத பார்க்கலாம்.

01:57

Speaker A

எப்படி ஓதணும் அப்படிங்கறதையும் நம்ம பார்க்கலாம்.

02:01

Speaker A

அதாவது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பொழுது விடிந்ததும் ஒருவன் அஊது பில்லாஹிஸ்ஸமீஇல் அலீமி மினஷ்ஷைத்தானிர்ரஜீம் அப்படின்னு மூன்று முறை சொல்லிட்டு.

02:16

Speaker A

இந்த சூரா ஹஷ்ரினுடைய இறுதி மூன்று வசனங்களை யார் ஓதினாலும் அவனுக்காக இறைவன் 70,000 வானவர்களை ஏற்பாடு செய்வான்.

02:34

Speaker A

அவனுக்காக அவர்கள் மாலை வரை பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள் என்று அவன் இறந்துவிட்டால் ஷஹீது எனப்படும் தியாகியின் அந்தஸ்து அவனுக்கு கிடைக்கும்.

02:44

Speaker A

அந்த மூன்று வசனங்கள் வருமாறு.

02:47

Speaker A

எப்படிப்பட்ட ஒரு நல்ல விஷயத்தை நமக்கு ரசூலுல்லாஹ் கற்று கொடுத்திருக்காங்க பாருங்க.

02:55

Speaker A

நமக்காக ஒருத்தர் ரெண்டு பேர் கிடையாது.

03:00

Speaker A

அதுவும் 70,000 வானவர்கள்.

03:05

Speaker A

வானவர்கள் யார் அப்படின்னா பாவமே செய்யாதவங்க.

03:09

Speaker A

அவங்க நமக்காக துஆ செய்யறாங்க அப்படின்னா அல்லாஹ் கண்டிப்பா நமக்கு அந்த துஆவை கபூல் ஆக்கி தருவான்.

03:16

Speaker A

இன்னும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காகவும் அவங்க மன்றாடுறாங்க அப்படின்னா.

03:25

Speaker A

நம்ம எல்லோருமே இந்த வசனங்களை அன்றாடம் ஓதறதை நம்ம வழக்கமாக்கிக்கணும்.

03:32

Speaker A

யாருமே விட்ற கூடாது.

03:34

Speaker A

அந்த கடைசி வசனம் என்ன அப்படின்னா ஹுவல்லாஹுல்லதீ லா இலாஹ இல்லாஹுவ ஆலிமுல் கைபி வஷ்ஷஹாததி ஹுவ ரஹ்மானுர் ரஹீம் ஹுவல்லாஹுல்லதீ லா இலாஹ இல்லாஹுவல் மலிகுல் குத்தூஸுஸ் ஸலாமுல் முஃமினுல் முஹைமினுல் அஜீஸுல் ஜப்பாருல் முதகப்பிரு சுப்ஹானல்லாஹி அம்மா யுஷ்ரிகூன் ஹுவல்லாஹுல் ஹாலிகுல் பாரிஉல் முஸவ்விர் லஹுல் அஸ்மாஉல் ஹுஸ்னா யுஸப்பிஹு லஹு மா ஃபிஸ்ஸமாவாத்தி வல் அர்லி வஹுவல் அஜீஸுல் ஹகீம்.

04:10

Speaker A

இந்த சூரா ஹஷ்ரினுடைய கடைசி மூன்று வசனங்களை தான் ரசூலுல்லாஹ் இவ்வளவு சிறப்புகளை சொல்லி.

04:20

Speaker A

நமக்கு ஓதுங்க அப்படின்னு சொல்லிக் கொடுத்திருக்காங்க.

04:23

Speaker A

எனவே இன்ஷா அல்லாஹ் நம்ம எல்லோருமே இந்த வசனங்களை ஃபஜருக்கு ஓதறதை நம்ம வழக்கமாக்கிக்கணும்.

04:31

Speaker A

அல்லது காலை பொழுதுல ஏதாவது ஒரு நேரத்திலயாவது இதை நம்ம ஒரு முறை நம்ம ஓதிக்கிட்டோம் அப்படின்னா 70,000 வானவர்கள் நமக்காக துஆ செய்யறாங்க.

04:43

Speaker A

ஷஹீதுடைய அந்தஸ்து நமக்கு கொடுக்கப்படுது.

04:47

Speaker A

நம்ம இன்றைக்கு ஓதிட்டு நம்ம மௌத் ஆயிட்டோம் அப்படின்னா.

04:53

Speaker A

நமக்கு சொர்க்கம் உறுதியா கிடைக்குது.

04:56

Speaker A

இதைவிட நமக்கு வேற என்ன வேணும்.

04:58

Speaker A

நமக்காக 70,000 வானவர்கள் துஆ செய்து கொண்டிருக்கக்கூடிய அந்த நாள்ல நமக்கு ஏதாவது சோதனைகள் வருமா?

05:07

Speaker A

ஏதாவது கவலைகள் வருமா?

05:10

Speaker A

அப்படி எதுவுமே நிகழாது.

05:13

Speaker A

அல்லாஹ் நமக்கு அன்றைக்கு ரஹ்மத்தை தான் கொடுப்பான்.

05:20

Speaker A

பரக்கத்தை தான் கொடுப்பான்.

05:22

Speaker A

நமக்கு எல்லாமே நலவா தான் நடக்கும்.

05:24

Speaker A

ஏன்னா நமக்காக வானவர்கள் நாள் முழுக்க துஆ செஞ்சு கொண்டிருக்கும் போது.

05:30

Speaker A

நமக்கு எந்த தீங்குமே ஏற்படாது.

05:33

Speaker A

எனவே நம்ம எல்லோருமே இதை யோசிக்கணும்.

05:38

Speaker A

இன்னும் இந்த வசனத்தை நம்ம ஓதி துஆ கேட்டா நமது துஆ அங்கீகரிக்கப்படும்.

05:44

Speaker A

ஏன்னா இந்த வசனத்துல அல்லாஹ்வினுடைய சிறந்த பெயர்கள்.

05:50

Speaker A

தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் இதுல இடம் பெறுது.

05:52

Speaker A

இதுதான் இஸ்முல் ஆலம் கொண்ட திருக்குர்ஆனுடைய ஒரு வசனம் அப்படின்னு சொல்லப்படுது.

05:59

Speaker A

எனவே இன்ஷா அல்லாஹ் இதுல நமக்கு பல்லவிதமான நன்மையும் பல்லவிதமான பலன்களும் நமக்கு கிடைக்குது.

06:06

Speaker A

எனவே இன்ஷா அல்லாஹ் இந்த சிறந்த திருநாமங்களை கொண்ட இந்த திருக்குர்ஆனுடைய ஒரு வசனத்தை நம்ம எல்லோருமே அன்றாடம் ஓதி இதனுடைய பலன்களையும் சிறப்புகளையும் அடைந்து கொள்ள.

06:16

Speaker A

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கிருபை செய்வானாக.

06:21

Speaker A

ஆமீன் என்று கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

06:24

Speaker A

இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு பிடிச்சிருந்தது அப்படின்னா இந்த சேனலை லைக் பண்ணுங்க.

06:30

Speaker A

ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

06:32

Speaker A

கண்டிப்பா சப்ஸ்கிரைப் பண்ணுங்க.

06:34

Speaker A

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=8182)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=8182)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=8182)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/transcript-56/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
