**இதை கொண்டு அழைப்பதை விரும்புகிறான் — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/transcript-30/

Answers

## Questions about this video

இந்த வீடியோவில் குறிப்பிடப்படும் சிறப்புக்குரிய இரண்டு வார்த்தைகள் யாவை?

இந்த வீடியோவில் குறிப்பிடப்படும் சிறப்புக்குரிய இரண்டு வார்த்தைகள் ஒரு திக்ரு மற்றும் ஒரு இஸ்மு ஆகும். இந்த இஸ்மை கொண்டு அல்லாஹ் தன்னை அழைப்பதை மிகவும் நேசிக்கிறான்.

இந்த அமலை செய்வதற்கு முன் எத்தனை முறை அஸ்தஃபிர்ல்லாஹ் ஓத வேண்டும்?

இந்த அமலை செய்வதற்கு முன் 70 முறை அஸ்தஃபிர்ல்லாஹ் ஓத வேண்டும். அஸ்தஃபிர்ல்லாஹ் என்பது 'என்னுடைய பாவத்தை மன்னிப்பாயாக' என்று பொருள்படும்.

பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதன் முக்கியத்துவம் என்ன?

நாம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பது அல்லாஹ் நம் மீது கருணை காட்ட ஒரு காரணமாக இருக்கும். நாம் செய்த பாவங்களை நினைத்து அஸ்தஃபிர்ல்லாஹ் ஓதும்போது, மீண்டும் அந்த பாவங்களை செய்யாமல் இருக்க உதவும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

அன்புமிக்க சகோதர சகோதரிகளே, அல்லாஹ்வின் நல்லடியார்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ. அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் வபாரிக் அஸ்ஸலாம்.

00:10

Speaker A

இன்னைக்கு நம்ம வந்து பார்த்தீங்கன்னா, ரொம்பவே சிறப்புக்குரிய இரண்டு வார்த்தை பார்க்க போறோம். ஒரு திக்ரு, ஒரு இஸ்மு. அல்லாஹ் சுபஹானுத்தாலா இந்த இஸ்மை கொண்டு தன்னை அழைப்பதை மிக மிக நேசிக்கிறான். அல்லாஹ்வுடைய கிருபையை வந்து பறைசாற்றக்கூடியதாக இந்த ஒரு இஸ்மு இருக்கும்.

00:22

Speaker A

இதை ஓதி நீங்க எதை கேட்டாலும் அல்லாஹ் என்ன பண்ணுவான்? மறுக்காமல் கொடுத்துருவான். இன்னும் அல்லாஹ்வை அழைப்பதிலேயே வந்து பார்த்தீங்கன்னா, இது ரொம்ப ஒரு அழகிய பெயர்ன்னு சொல்லலாம்.

00:32

Speaker A

அந்த அமலை தான் நம்ம இன்னைக்கு பார்க்க போறோம். முதல்ல நீங்க இந்த அமலை செய்யணும்னா என்ன ஓதணும்னா, 70 முறை அஸ்தஃபிர்ல்லாஹ் ஃபர்ஸ்ட் ஓதிக்கணும். 70 முறை அஸ்தஃபிர்ல்லாஹ். அஸ்தஃபிர்ல்லாஹ்னா என்ன அர்த்தம்? என்னுடைய பாவத்தை மன்னிப்பாயாகன்னு அர்த்தம்.

00:46

Speaker A

நம்முடைய பாவத்தை வந்து மன்னிப்பு கேட்கிறது எந்த அளவுக்கு வந்து நமக்கு சிறப்பு தரும்னு பார்த்தீங்கன்னா, அல்லாஹ்வும் நம்ம மேல கருணை காட்டுறதுக்கு ஒரு காரணமா இருக்கும்.

00:53

Speaker A

ஏன்னா, நம்ம எவ்வளவோ பாவத்தை செஞ்சு போட்டு தேவையாறதை மட்டும் கேட்டோம்னா, அல்லாஹ் என்ன சொல்லுவான்? பொதுவா ஒரு மனிதனே கூட என்ன சொல்லுவான்? எவ்வளவு என்கிட்ட பாவம் செஞ்சான். இன்னைக்கு வந்து பாரு என்கிட்ட உட்கார்ந்து தேவையை கேட்டுட்டு இருக்கான். என்கிட்ட வந்து அணுபவிச்சிட்டு இருக்கான். இவனுக்கு வேணுங்கறதெல்லாம் நான் கொடுக்கணுமா அப்படின்னு சொல்லிட்டு நமக்கு ஒரு கோவம் வரும்.

01:43

Speaker A

அந்த மாதிரி நம்ம எத்தனையோ பாவங்களை தினமும் செஞ்சுட்டு, அதுக்கப்புறம் அல்லாஹ்விடத்தில எதையுமே உணராம நம்ம என்ன பண்றோம்? தேவையை மட்டும் கேட்டுட்டு இருக்கோம். அதனாலதான் அல்லாஹ் கோவத்துல நமக்கு கொடுக்கிறது இல்லை. அப்ப முதல்ல அவருடைய கோவத்தை தணிக்கணும். நம்ம மேல எதுக்கு அவனுக்கு கோவம் இருக்குதுன்னு நம்ம தெரிஞ்சுக்கணும். நம்ம செய்யக்கூடிய பாவத்தின் காரணமாக தான் நமக்கு கோவம் இருக்கும். அதனால அல்லாஹ்விடத்தில யா அல்லாஹ் நான் செய்த பாவங்களை எல்லாம் மன்னிச்சிருன்னு சொல்லிட்டு அஸ்தஃபிர்ல்லாஹ் 70 முறை ஓதணும்.

02:04

Speaker A

ஓதும்போது நீங்க செய்யக்கூடிய பாவங்களை நினைச்சுக்கோங்க. உங்களுக்கே தெரியும் நீங்க செய்றது பாவமா இல்ல வந்து நன்மையான காரியமான்னு. அப்படி இருக்கக்கூடிய பாவங்களை எல்லாம் நினைச்சு நீங்க வந்து ஓதும்போது என்ன ஆகும்னா, அடுத்த தடவை அந்த பாவத்தை திரும்ப செய்ய மாட்டீங்க.

02:37

Speaker A

எப்பவுமே ஒரு பாவத்துக்கு மன்னிப்பு கேட்கணும்னா, எந்த பாவம்னு சொல்லிட்டு தெரிஞ்சிட்டு தான் நம்ம கேட்கணும். வெறும் பொதுவுல மட்டும் என்ன பண்ணக்கூடாது? அஸ்தஃபிர்ல்லாஹ் அஸ்தஃபிர்ல்லாஹ்ன்னு சொல்லிட்டு சும்மா பாவம் மன்னிப்பு கேட்டுட்டு இருக்காம நம்முடைய பாவங்களை நேத்துமே வந்து மன்னிக்கப்படணும்.

02:50

Speaker A

இன்னும் நான் வந்து பார்த்தா இபாதத்துல குறை வைக்கிறேன். மனிதர்களிடத்தில் வந்து பிரச்சனை பண்றேன். இன்னும் வந்து பார்த்தா நான் வந்து கெட்ட விஷயங்கள்ல ஈடுபடுறேன்னு சொல்லிட்டு நம்ம நினைச்சு மன்னிப்பு கேட்கணும்.

02:59

Speaker A

அப்படி அஸ்தஃபிர்ல்லாஹ் முடிச்சதுக்கு பிறகு அடுத்தது யா ரஹ்மானுல்லாஹ் அப்படின்னு சொல்லிட்டு ஓதிக்கொள்ளுங்க. எனது அல்லாஹ் மிக கிருபையுடையவன் அப்படிங்கறது இதனுடைய அர்த்தம். இப்படி நீங்க ஓதும்போது அல்லாஹ்வுடைய கிருபையின் காரணமாக உங்களுக்கு என்ன பண்ணுவான்?

03:24

Speaker A

உங்களுடைய தேவையை நிறைவேற்றி தருவான். என்னுடைய அல்லாஹ் மிகவும் கிருபையுடையவன் அப்படிங்கறதை 14 முறை ஓதிக்கொள்ளுங்க. யா ரஹ்மானுல்லாஹ், யா ரஹ்மானுல்லாஹ், யா ரஹ்மானுல்லாஹ்ன்னு சொல்லிட்டு 14 முறை ஓதிக்கொள்ளுங்க. ஒவ்வொரு தடவையும் என்னுடைய அல்லாஹ் ரொம்ப கிருபையுடையவன். என்னுடைய அல்லாஹ் ரொம்ப கிருபையுடையவன். எனக்கு கிருபை செய்யக்கூடியவனாக இருக்கிறான்னு சொல்லிட்டு ஓதுங்க.

03:49

Speaker A

நிச்சயமா அவனுடைய கிருபையை கொண்டு உங்க தேவை நிறைவேறும். இன்னும் வந்து பார்த்தீங்கன்னா, இந்த ரமலானுடைய நாட்களே இரண்டு விஷயத்துக்கு ரொம்ப வந்து சிறப்பானது. ஒன்னு என்னதுன்னா நோன்பு. அந்த நோன்பு அப்படிங்கறது நமக்கு தெரியும். அது வந்து இந்த மாசத்துல ஃபர்லான ஒரு அமலா இருக்குதுங்கறதுனால எல்லாருமே பெரும்பாலும் வச்சறாங்க. அதே சமயத்துல இரண்டாவதா என்ன இருக்குன்னு பார்த்தீங்கன்னா இந்த நாள்ல தவ்பா தான் இருக்கு.

04:15

Speaker A

ஏன்னா, இந்த நோன்புடைய மாதத்தில் யார் அடைந்தும் கூட தவ்பா செய்து மீண்டு கொள்ளவில்லையோ, அவர்கள் மீது நாசம் உண்டாகட்டும்னு சொல்லிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே சாபம் கொடுத்திருக்காங்க.

04:30

Speaker A

அதனால வந்து பார்த்தீங்கன்னா, முதல்ல பாவமன்னிப்பு கேட்பதும் அவசியம். ரமலான் மாசத்துல வந்து பாவங்கள் கழிக்கப்பட்டாதான் நமக்கு இந்த ரமலானுடைய பிரயோஜனம் கிடைக்கும்.

04:40

Speaker A

யாருடைய பாவங்கள் ரமலானில் கழிக்கப்படலையோ, அவர்களுக்கு என்ன கிடைக்காது? இந்த ரமலானுடைய பலனே இருக்காது. நீங்க சாப்பிடாம இருக்கறதுனாலயும், தண்ணி குடிக்காம இருக்கறதுனாலயும் அல்லாஹ்விற்கு எந்த தேவையுமே இல்லை.

04:53

Speaker A

நீங்க வந்து அல்லாஹ் சொல்லக்கூடிய சில விஷயங்கள், அந்த தக்வாவோடு இருப்பது, அதே மாதிரி தவ்பா செய்து மீள்வது, இந்த மாதிரியான விஷயங்கள் செய்தால் மட்டும்தான் உங்களுக்கான சிறந்த பிரயோஜனமான வாழ்க்கையை இம்மையிலும் சரி, மறுமையிலும் நீங்க கண்டுகொள்ள முடியும்.

05:08

Speaker A

அதனால இதை வந்து முதல்ல அஸ்தஃபிர்ல்லாஹ் 70 முறை ஓதிட்டு, யா ரஹ்மானுல்லாஹ் 14 முறை ஓதிக்கொள்ளுங்க.

05:12

Speaker A

நம்ம தினமுமே பலன் தரக்கூடிய அமல்களை குறுகிய நேரத்துல போட்டுட்டு இருக்கோம். மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணி நம்ம சேனலை மெம்பர்ஷிப் இருக்கு ஜாயின் பண்ணிக்கோங்க.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=6031)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=6031)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=6031)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/transcript-30/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
