**காஃபி வித் நெதன் — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/transcript-117/

Answers

## Questions about this video

நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் ஏன் எழுந்தது?

நெதன்யாகு உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் கடந்த ஆறு ஏழு நாட்களாகவே இருந்து வருகிறது. அவர் இறந்துவிட்டதாகக் கூறப்படும் ஏஐ வீடியோக்கள் வெளிவந்ததால் இந்த சந்தேகம் வலுத்தது.

நெதன்யாகு தனது உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்த என்ன செய்தார்?

நெதன்யாகு ஒரு காபி ஷாப்பில் காபி குடித்துக் கொண்டே ஐந்து நிமிடங்கள் பேசும் வீடியோவை வெளியிட்டார். இதன் மூலம் தான் உயிருடன் இருப்பதாகவும், வதந்திகள் உண்மை இல்லை என்றும் அவர் காட்டியுள்ளார்.

நெதன்யாகுவின் புதிய வீடியோவும் ஏஐ வீடியோவாக இருக்கலாம் என்று சிலர் ஏன் சந்தேகிக்கிறார்கள்?

புதிய வீடியோவில் காபி கிளாஸில் உள்ள காபி சிறிதும் ஆடாமல் இருந்தது, அது இயல்பாகத் தெரியவில்லை என்று சிலர் கருதுகின்றனர். இதனால் இந்த வீடியோவும் ஏஐயாக இருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

தொடர்ந்து நம்ம ஈரான் மற்றும் இஸ்ரேல் நிலவரங்களை பார்த்துட்டு இருக்கோம்.

00:05

Speaker A

இன்னைக்கு வந்திருக்கக்கூடிய நிறைய தகவல்கள் இருக்குது, ஃபர்ஸ்ட் நம்ம வந்து பாத்தீங்கன்னா நெதன்யாகுல இருந்தே ஆரம்பிச்சிரலாம்.

00:12

Speaker A

ஏன்னா நெதன்யாகு இருக்கிறாரா இல்லையா அப்படிங்கக்கூடிய சர்ச்சை வந்து ரொம்ப நாளாகவே இருந்துட்டு இருக்கு ஒரு ஆறு ஏழு நாளாக.

00:20

Speaker A

அதே சமயத்துல பாத்தீங்கன்னா வெளிவந்த வீடியோக்கள் கூட ஏஐ வீடியோக்கள்னு சொல்லிட்டு அவர் இறந்துட்டாரு அப்படிங்கக்கூடிய ஒரு முடிவுக்கு தான் எல்லாருமே வந்திருந்தாங்க.

00:41

Speaker A

அவர் காபி ஷாப்ல தான் இது வந்து எடுத்துருக்காங்க அங்க ஒரு பொண்ணு வந்து காபி எல்லாம் கொடுக்குறாங்க அந்த பொண்ணு வேற இன்னைக்கு கொஞ்சம் வைரல் ஆயிடுச்சு அதுக்கப்புறம் வந்து பாத்தீங்கன்னா இந்த காபிய வச்சு குடிச்சிட்டே இவர் பேசிட்டே இருக்காரு அந்த மாதிரி ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு வீடியோ வெளிய வந்துருக்கு.

00:51

Speaker A

ரொம்ப ஒன்னும் முக்கியமானது எல்லாம் பேசல சும்மா வந்து பாத்தீங்கன்னா அந்த ரூமர்ஸ் தான் அப்படிங்கிற மாதிரி வந்து என்ன பண்ணிருக்காரு நான் உயிரோட தான் இருக்கிறேன் அப்படிங்கிற மாதிரி காமிச்சிருக்காரு.

00:58

Speaker A

இதுவரைக்கும் எல்லாருக்குமே வந்து இவர் ஒன்னா ஹாஸ்பிட்டல்ல இருக்கணும் இல்லாட்டினா இறந்திருக்கணும் அப்படிங்கிற மாதிரி டவுட் இருந்துட்டு இருந்துச்சு.

01:05

Speaker A

இந்த நிலைமையில இந்த வீடியோ வந்திருக்கு இத கூட வந்து பாத்தீங்கன்னா சிலர் வந்து ஏஐயா இருக்கலாம் அப்படின்னு சொல்லி சொல்றாங்க.

01:10

Speaker A

அந்த காபி கிளாஸ்ல இருக்கக்கூடிய காபி கொஞ்சம் கூட வந்து பாத்தீங்கன்னா ஆடவே இல்லை அது ததிர்முமாவே தெரியல அப்படின்னுலாம் சொல்லிட்டு இருந்தாங்க.

01:17

Speaker A

இருந்தாலும் நம்மளை பொறுத்தளவுக்கு கேட்டீங்கன்னா ஒரு ஏஐ வீடியோ விட்டு கூட மாட்டுவாங்க.

01:23

Speaker A

இரண்டாவது தடவையும் ஏஐ வீடியோ விட்டு வந்து மாட்ட மாட்டாங்க யாரும்.

01:30

Speaker A

அப்ப வந்து பார்க்கும்போது இரண்டாவது தடவை வீடியோ வெளியிட்டு இருக்கிறத வச்சு பார்க்கும்போது கிட்டத்தட்ட வந்து உயிரோட தான் இருக்கிற மாதிரி தெரியுது.

01:36

Speaker A

ஆனாலும் ஏன் வந்து செக்யூரிட்டி கவுன்சில் மீட்டிங்கு வரல அதுக்கப்புறம் ஏன் வெளிப்படையாக எல்லா இடத்திலுமே நாலஞ்சு நாளைக்கு முன்னாடி வரைக்கும் வந்து அந்த ஏழு நாளைக்கு முன்னாடி வரைக்கும் வந்து பாத்தீங்கன்னா நேர்ல போய் எல்லாம் வந்து கள ஆய்வு எல்லாம் செஞ்சிட்டு இருந்தாரு.

01:45

Speaker A

இந்த மாதிரி பல தடவை செஞ்சிட்டு இருக்காரு இவர் வந்து என்ன பண்ணுவாருன்னா பங்கர்ல இருந்து வருவாரு கள ஆய்வை வந்து மேற்கொண்டு விட்டு மறுபடியும் வந்து பங்கர்க்குள்ள போயிருவாரு.

01:53

Speaker A

இவர் பயந்து பயந்து ஒழிஞ்சிருந்தாலுமே அப்பப்ப கெத்தா இருக்கிற மாதிரி காமிச்சுக்கணும்னு சொல்லிட்டு என்ன பண்ணுவாரு பில்டிங் ஸ்ட்ராங்கா இருக்கிற மாதிரி காமிச்சுப்பாரு.

02:02

Speaker A

அப்பப்ப வந்து பார்த்தா வெளிய வருவாரு எங்கேயாவது தோன்றுவாரு போட்டோ எடுப்பாரு வீடியோ எடுப்பாரு லைவ் வீடியோவா போடுவாங்க அதுதான் முக்கியம்.

02:10

Speaker A

அதுக்கப்புறம் பாத்தீங்கன்னா எங்க போவாருன்னே தெரியாது பக்கத்து நாட்டுக்கு கூட போய் என்ன பண்ணுவாரு பங்கர்ல ஒழிஞ்சுப்பாரு தாக்குதல் நடக்கும்போது.

02:17

Speaker A

தாக்குதல் நடக்குறதுக்கு முன்னாடி தான் வெளிய வருவாரு தாக்குதல் நடந்ததுக்கு பிறகு வந்து பாத்தீங்கன்னா எல்லாம் முடிச்சதுக்கு பிறகு மறுபடியும் வந்து நான் தைரியமா தான் இருக்கேன் உள்ளூர்ல தான் இருக்கேன்னு சொல்லிட்டு காமிச்சுப்பாரு.

02:26

Speaker A

ஆனா இப்ப ஏன் வந்து இந்த காபி ஷாப்ல வந்து போட்டோ எடுத்துருக்காரு அங்க இருந்து ஏன் வீடியோ வெளியிட்டு இருக்காருங்கறது கூட வந்து பாத்தீங்கன்னா ஒரு பெரும் கேள்வியா போயிருக்கு.

02:32

Speaker A

நம்ம அதெல்லாம் பொறுத்திருந்து தான் பாக்கணும் ஆனா இப்ப வந்து பாத்தீங்கன்னா ஏதோ ஒரு வந்து சிக்.

02:38

Speaker A

அடிபட்ட மாதிரிலாம் இல்ல ட்ரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கிற மாதிரிலாம் தெரியல அவங்க ஃபுல்லாவே கவர் பண்ணி தான் இருக்குறாங்க.

02:45

Speaker A

இருந்தாலும் நின்னுட்டு பேசிட்டு இருக்காரு அதனால வந்து பாத்தீங்கன்னா வெளிப்படையா பார்க்கும்போது அடிபட்ட மாதிரிலாம் வந்து எதுவும் தோணல.

02:51

Speaker A

அது இல்லாம வந்து பார்க்கும்போது அந்த காபி ஆடல அந்த கப் வந்து சிந்த கூட இல்லை அப்படியே கொஞ்சம் கூட வந்து அசையாம அந்த காபி நிக்குது பாரு அப்படின்னுலாம் வந்து சிலர் சொல்றது வந்து எப்படி இருக்குன்னா அது வந்து கேப்பச்சினோ.

03:00

Speaker A

அது வந்து பாத்தீங்கன்னா நுரை மாதிரி இருக்கும் அது நம்மளுடைய காபி மாதிரி இருக்காது.

03:05

Speaker A

நம்ம வந்து பாத்தீங்கன்னா தண்ணிய தான் பாலுன்னு நினைச்சு குடிச்சிட்டு இருக்கோம்.

03:11

Speaker A

அதுதான் வந்து பாத்தீங்கன்னா நடந்தா சிந்தும் சிரிச்சா கூட சிந்திரும்.

03:16

Speaker A

ஆனா அது அப்படி இருக்காது அதனால கூட வந்து அது என்ன ஆயிருக்கலாம்.

03:20

Speaker A

அது நுரவாம அப்படியே வந்து ஸ்டேபிளா இருந்திருக்கலாம்.

03:23

Speaker A

இப்பத்தைக்கு பார்க்கும்போது நெதன்யாகு உயிரோட இருக்கிற மாதிரி தான் தெரியுது.

03:28

Speaker A

இருந்தாலும் பலரும் வந்து பலவிதமான கேள்விகளை எழுப்பி இருக்காங்க காபி ஷாப்ல இருந்து வீடியோ போட்டதற்கான காரணம் என்ன அப்படிங்கறதும்.

03:35

Speaker A

இன்னைக்கு ஒரு சச்சரவா மாறி இருக்குது.

03:39

Speaker A

இதை பத்தி ஏதாவது மேலதிகமான தகவல் வந்தா நம்ம அதை பத்தி அப்புறமா தெரிவிப்போம்.

03:48

Speaker A

அடுத்தது இன்னைக்கு துபாயை என்ன பண்ணிருக்காங்க வெச்சு செஞ்சிருக்காங்க.

03:52

Speaker A

துபாய் முழுவதும் வந்து அங்கங்க வந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுட்டே இருந்திருக்கு.

03:58

Speaker A

அது இல்லாம பாத்தீங்கன்னா யுஏஇ உடைய புஜைரா போர்ட்ட வந்து மறுபடியும் அடிச்சிருக்காங்க.

04:04

Speaker A

ஒரு மூணு இடத்தை குறி வச்சாங்க யுஏஇல ஈரான்.

04:10

Speaker A

அது வந்து அனௌன்ஸ் பண்ணிட்டாங்க இங்கதான் அடிக்க போறோம்னுட்டு.

04:14

Speaker A

அதுல வந்து பாத்தீங்கன்னா புஜைரா போர்ட்ட ஃபர்ஸ்ட் அடிச்சிட்டாங்க.

04:20

Speaker A

அடிச்சிட்டாங்கன்னா அதை விட்டுருவாங்க அடுத்த ரெண்டு தான் அடிப்பாங்கன்னு பார்த்தா.

04:25

Speaker A

மறுபடியும் இன்னைக்கு என்ன பண்ணிருக்காங்க புஜைரா போர்ட்டுக்கே வந்து ஒரு தாக்குதலை போட்டுருக்காங்க.

04:30

Speaker A

ஐடியாவை மாத்தி டெக்னிக்க மாத்திட்டு அரபு நாடுகளை வெச்சு செஞ்சிட்டு இருக்காங்க.

04:35

Speaker A

யுஏஇயுமே வந்து பாத்தீங்கன்னா என்ன செய்றதுன்னு தெரியாம தான் வந்து விழி பிதுங்கி கிடக்கிறாங்க.

04:40

Speaker A

இதுல வேற தடுத்துட்டேன்னு சொல்லிட்டு சொல்றாங்க ஆனா வந்து பாத்தீங்கன்னா அங்கங்க என்ன ஆயிட்டு இருக்கு எரிஞ்சிட்டு தான் இருக்குது.

04:46

Speaker A

எங்க பார்த்தாலும் தீ புகை எல்லாம் வந்துட்டு இருக்குது ஒரு கார்ல இருக்கிறவர் வந்து போட்டோ எடுத்து காட்டுறாரு.

04:52

Speaker A

அந்த காரே வந்து மறைஞ்சிருச்சு அந்த தாக்குதல்ல அப்படியே ஃபுல்லா மண்ணால.

04:58

Speaker A

அந்த அளவுக்குலாம் வந்து பாத்தீங்கன்னா அங்கயும் வந்து மக்கள் வந்து தாக்குதல்களை நேரடியாக தான் பார்த்துட்டு இருக்காங்க.

05:05

Speaker A

நம்ம கமெண்ட்ல கூட வந்து பாத்தீங்கன்னா மூன்றரை மணிக்கு வந்து பாத்தீங்கன்னா சைரன் வந்துச்சு.

05:12

Speaker A

இங்க தாக்குதல் வர ஆரம்பிச்சிருச்சு அப்படிங்கக்கூடிய ஒரு சில விஷயத்தை எல்லாம் சொல்லிட்டு தான் இருக்காங்க.

05:18

Speaker A

இதுக்கு காரணமே இந்த யுஏஇ தான்.

05:21

Speaker A

சும்மா இல்லாம என்ன பண்ணாங்க ஈரானுடைய அந்த நன்னீராக்கக்கூடிய அந்த மிஷினரிய தாக்குறதுக்கு வந்து ஹெல்ப் பண்ணாங்க.

05:28

Speaker A

பத்தாவதுக்கு வந்து பாத்தீங்கன்னா இந்த காருக்கு தீயை தாக்குறதுக்கான ஹெல்ப்ப வந்து என்ன பண்ணிருக்காங்க யுஏஇ பண்ணிருக்காங்க.

05:38

Speaker A

இந்த மாதிரிலாம் ஹெல்ப் பண்ணனால தான் அவங்க என்ன பண்றாங்க பதிலுக்கு வந்து பாசமா கிப்ட் கொடுத்துட்டு இருக்காங்க ஈரான்.

05:43

Speaker A

அதையும் வந்து யுஏஇயும் வாங்கி தான் ஆகணும்.

05:48

Speaker A

அடுத்தது வந்து பாத்தீங்கன்னா செங்கடலும் மூடப்படும்னு சொல்லிட்டு இப்ப ஈரான் வந்து அறிவிப்பு கொடுத்திருக்காங்க.

05:53

Speaker A

ஆரம்பத்திலிருந்தே செங்கடல் மூடி இருக்கா மூடி இருக்கான்னு கேட்டீங்கன்னா அப்படிலாம் கிடையாது.

06:00

Speaker A

அதாவது வந்து காசாவுடைய விஷயம் முடிஞ்சதுல இருந்தே வந்து செங்கடல் வந்து ஓரளவுக்கு திறந்து விடப்பட்டிருக்கும்ங்கிறது தான் உண்மை.

06:06

Speaker A

அந்த ஸ்ட்ரைட் ஆப் ஹார்மஸ் இருக்கு பாருங்க இந்த போட்டோல பாத்தீங்கன்னா தெரியும்.

06:12

Speaker A

இந்த பக்கம் இருக்கிறது பாபல் மந்தப் இது வந்து பாத்தீங்கன்னா ஏமனுடையது.

06:17

Speaker A

அந்த பக்கம் இருக்கிறது வந்து பாத்தீங்கன்னா ஸ்ட்ரைட் ஆப் ஹார்மஸ் இது வந்து பாத்தீங்கன்னா ஈரானுடையது.

06:22

Speaker A

ரெண்டுமே மூடிட்டாங்கன்னா அந்த இடத்துல என்ன ஆயிரும் ரொம்ப சிக்கல் ஆயிரும்.

06:26

Speaker A

ரொம்ப முக்கியமா இந்தியாவுக்கு சிக்கல் ஜாஸ்தி ஆயிரும்.

06:29

Speaker A

ஏதாவது ஒன்னாவது வந்து திறந்து இருந்தா தான் நம்மளால வந்து சமாளிக்க முடியற மாதிரி இருக்கும்.

06:34

Speaker A

இன்னைக்கு கூட வந்து பாத்தீங்கன்னா ஸ்ட்ரைட் ஆப் ஹார்மஸ்ல இருந்து ஈரான் என்ன பண்ணிருக்காங்க இந்தியாவுடைய கப்பலை ஒன்னு விட்டுருக்காங்க.

06:40

Speaker A

மொத்தமா வந்து இந்தியாவுக்கு வர வேண்டிய கப்பல் 22 அங்க நின்னுட்டு இருக்கு.

06:45

Speaker A

அதுல வந்து பாத்தீங்கன்னா ரெண்டு வந்துருச்சு இன்னைக்கு வந்தது மூணுன்னு நினைக்கிறேன்.

06:52

Speaker A

நாலாவதுல இருந்து வந்து பாத்தீங்கன்னா இனிமேல் தான் விடுவாங்க அப்ப மூணு தான் வந்து விட்டுருக்காங்க.

06:57

Speaker A

ஏன் வந்து 22க்கும் தானே பேசி இருப்பாங்கன்னு கேட்டா 22க்கும் தான் பேசி இருப்பாங்க.

07:02

Speaker A

ஆனா ஒரே நேரத்துல விட மாட்டாங்க இப்ப 22க்கும் பேசின நேரத்திலேயே ஒரே நேரத்துல 22யும் வெளிய விட்டுருந்தாங்கன்னா ஈரான்.

07:10

Speaker A

அவங்க வந்து என்ன பண்ண முடியாது ஆயில் பிரைஸ் வந்து ரைஸ் பண்ண முடியாது.

07:15

Speaker A

ஈரான் என்ன சொல்றாங்கன்னா 200 டாலருக்கு நாங்க ஆயில் பிரைஸ் வந்து உயர்த்துவோம்னு சொல்லிட்டு இருக்காங்க.

07:20

Speaker A

அந்த சமயத்துல வந்து பாத்தீங்கன்னா நம்முடைய 22 கப்பலையும் ஒரே நேரத்துல விடாம இதுவரைக்கும் மூணு விட்டு இனிமேல் தான் வந்து எப்ப வரப்போகுதுன்னு தெரியல.

07:29

Speaker A

இதுல வேற வந்து பாத்தீங்கன்னா செங்கடல் மூடுறது அப்படிங்கறது வந்து எந்த விதத்திலுமே வந்து நமக்கு நல்லதே கிடையாது.

07:36

Speaker A

செங்கடல் எப்பயுமே கொஞ்சம் ஒரு அச்சுறுத்தலா தான் இருக்கு ஆனாலும் வந்து பாத்தீங்கன்னா பெரிய தாக்குதல் எல்லாம் அவங்க ஒன்னும் பண்றது கிடையாது.

07:42

Speaker A

ஏன்னா பண்ண முடியாத அளவுக்கு என்ன ஆயிட்டாங்கன்னா சவுதி வந்து ஏமன்குள்ள பல இடத்தை வந்து கைப்பற்றி வச்சிருக்காங்க.

07:50

Speaker A

நம்ம வந்து சொல்லிட்டே இருக்கோம் வெளிப்படையாக இருக்கக்கூடிய பல போர்களை பார்த்துட்டு இருக்கோம்.

07:55

Speaker A

ஆனா சவுதி ஏமனுக்கும் இருக்கக்கூடிய போர் வந்து வேற விதமானது அது வந்து பாத்தீங்கன்னா எப்பயுமே இருந்துகிட்டே இருக்கும்.

08:03

Speaker A

அப்படியே நாசுக்கா செஞ்சிப்பாங்க அது போர் செய்றாங்கன்னே தெரியாது.

08:08

Speaker A

அந்த மாதிரி அதாவது சண்டை போட்டுக்க மாட்டாங்க என்ன பண்ணுவாங்கன்னா போய் போய் கண்ட்ரோல் பண்ணிருவாங்க.

08:13

Speaker A

போவாங்க அங்க இருக்கிறவங்களை பேசி வச்சிப்பாங்க நீங்க வந்து எங்க பேச்சை கேட்காட்டினா நாங்க தாக்கிடுவோம் அப்படி பண்ணிருவோம் இப்படி பண்ணிருவோம்னு சொன்னா ஏமன் என்ன பண்ணிருவாங்க அடங்கிருவாங்க.

08:23

Speaker A

ஏன்னா அங்க ஹவுதிஸ் வேற அது இல்லாம ஆட்சியாளர்கள் வேற அந்த ஆட்சியாளர்கள் இருக்கக்கூடிய பகுதி ஃபுல்லா யார்கிட்ட இருக்குன்னு பாத்தீங்கன்னா இப்ப சவுதி கிட்ட வந்துருச்சு.

08:30

Speaker A

அதனால வந்து போருன்னு செய்யாமலே என்ன பண்ணிட்டாங்க ஏமனுடைய பல பகுதிகளை சவுதி வந்து கண்ட்ரோல்ல வச்சிருக்காங்க.

08:40

Speaker A

அந்த சமயத்துல ஹவுதிஸ் வந்து இப்ப ஏதாவது வந்து முயற்சி பண்ணாங்கன்னா என்ன பண்றதுக்கு சான்ஸ் இருக்குன்னா அமெரிக்கா சவுதிய வச்சு அங்க ஏமன்குள்ள இருக்கக்கூடிய ஹவுதிஸை அட்டாக் பண்றதுக்கும்.

08:50

Speaker A

அவர்களை வந்து என்ன பண்றது அவங்களுடைய போர்ட்ட எல்லாம் கைப்பற்றுறதுக்கும் வாய்ப்பு இருக்குன்னு சொல்லிட்டு தான் கொஞ்ச நாளா வந்து பாத்தீங்கன்னா அமைதியா இருக்காங்கன்னு வந்து நம்ம சொல்லிட்டு இருந்தோம்.

08:57

Speaker A

அது இல்லாம வந்து ஹவுதிஸும் சொல்லி இருக்காங்க அதாவது ஈரான்ல இருந்து எங்களுக்கு வந்து என்ன ஆகணும் பர்மிஷன் வந்தா எங்களுடைய விரல்கள் வந்து எதிரிகளை நோக்கி தாக்குறதுக்கு வந்து தயாரா இருக்குன்னுலாம் வந்து சொல்லி இருந்தாங்க.

09:04

Speaker A

இந்த நிலைமையில வந்து பாத்தீங்கன்னா ஈரான் வந்து அடுத்த செங்கடலையும் நாங்க மூடுவோம் அப்படிங்கிற மாதிரி என்ன பண்ணிருக்காங்க சொல்லி இருக்காங்க.

09:12

Speaker A

இதை பார்த்தா சமாதானம் வர மாதிரியா இருக்குது.

09:16

Speaker A

ஃபர்ஸ்ட் என்ன சொல்லிட்டு இருந்தாங்கன்னா ரெண்டு நாள்ல போர் நிக்கும்னாங்க.

09:22

Speaker A

அப்புறம் ஒரு வாரம் தொடரும்னாங்க.

09:25

Speaker A

இன்னைக்கு வரைக்கும் வந்து பார்த்தா ட்ரம்ப் வந்து இந்த மாச கடைசி வரைக்கும் ஒரு ரெண்டு வாரத்துக்கு நாங்க போர் செய்வோம்.

09:33

Speaker A

ஏதோ இந்த மாச கடைசி வரைக்கும் வந்து பிக்னிக் போற மாதிரி அவர் சொல்லிட்டு இருக்காரு.

09:38

Speaker A

திருப்பி வந்து ஈரான்ட்ட கேட்டா நாங்க வந்து ஒரு வருஷத்துக்கு போர் செய்யறதுக்கு கூட தயாரா இருக்கோம்ங்கறாங்க.

09:45

Speaker A

அவங்க செஞ்ச போர் குற்றத்துக்கு அவங்கட்ட நாங்க சமாதானத்துக்கே போக மாட்டோம்ங்கறாங்க.

09:51

Speaker A

இது எங்கேயோ வந்து காசா போர் மாதிரி என்ன ஆயிடுச்சு வருஷக்கணக்கா போற மாதிரி நிலைமை வந்திருக்கு.

09:57

Speaker A

அதே சமயத்துல ஈரான்ல நிலைவரம் வந்து கரெக்டா இருக்கான்னு கேட்டீங்கன்னா நிலைமை வந்து கொஞ்சம் மோசமா இருக்கு.

10:02

Speaker A

ஏன் நிலைமை ரொம்ப மோசமா இருக்குன்னு பார்க்கும்போது தாக்குனாங்க பாருங்க எண்ணெய் வயலாக தாக்குனதுல ஃபுல்லா வந்து அட்மாஸ்பியர் ஃபுல்லாவே என்ன ஆயிடுச்சு பொல்யூட் ஆயிடுச்சு.

10:09

Speaker A

அங்க அங்க பார்த்தா வானமே என்ன ஆயிடுச்சாம் அங்க வந்து அந்த சுவாசிக்கக்கூடிய காத்து அதுக்கப்புறம் அவங்களுடைய அட்மாஸ்பியரே வந்து ஃபுல்லா வந்து இது ஆயிடுச்சு.

10:17

Speaker A

இதெல்லாம் நீங்க யாரும் கேட்க மாட்டீங்களான்னு சொல்லிட்டு இன்னைக்கு ஈரான்ல இருந்து கேட்டுருக்காங்க.

10:22

Speaker A

எதுக்காக கேட்டுருக்காங்கன்னா ஏதாவது வந்து உயிரினங்களுக்கு வந்து சேதப்படுத்தினா உடனே வந்து ஒரு அமைப்பு வந்துருவாங்க.

10:29

Speaker A

அப்புறம் அட்மாஸ்பியரை கெடுத்தோம்னா ஒரு அமைப்பு வந்துருவாங்க.

10:34

Speaker A

இந்த மாதிரி வந்து மக்களுக்கு கெடுதல் செஞ்சா ஒரு அமைப்பு வந்துருவாங்க பெண்களை நாங்க ஹிஜாப் போட சொன்னா நீங்க என்ன பண்றீங்க ஒரு அமைப்பு வந்துறீங்க.

10:42

Speaker A

அப்ப எங்க அட்மாஸ்பியரே பொல்யூட் ஆயிடுச்சு எல்லாருமே இப்ப வந்து நோய்வாய்ப்படுற அளவுக்கு நிலைமை வந்துருச்சு எதுவுமே நார்மலா இல்லையே.

10:50

Speaker A

மழை பெய்ஞ்சா கூட வந்து பாத்தீங்கன்னா அந்த தண்ணியே வெசமாயிருச்சே அப்படின்னு சொல்லிட்டு இதெல்லாம் சொல்லி வந்து என்ன பண்ணிருக்காங்க ஈரான் கேட்டுருக்காங்க.

10:56

Speaker A

ஒரு விஷயத்தை கவனிச்சு பார்த்தா தெரியும் பிரிக்ஸ் நாட்டுல முக்கியமான நாடாக இருந்த ஈரானை.

11:02

Speaker A

பிரிக்ஸ் நாடுகள் மாநாடு கூட கூட்டாம தான் இன்னும் வச்சிருக்காங்க.

11:08

Speaker A

அதே மாதிரி வந்து பாத்தீங்கன்னா இன்னொரு பக்கம் வந்து இந்த மாதிரி எவ்வளவு அநியாயங்கள் நடந்தாலும் குரல் கூட கொடுக்கறதுக்கு ஆள் இல்லை.

11:14

Speaker A

காசா விஷயத்திலயும் யாரும் நல்லது எல்லாம் செய்யல இருந்தாலும் ஏதோ அங்கங்க குரல் கொடுத்த மாதிரி இருந்துச்சு.

11:20

Speaker A

ஆனா ஈரான் விஷயத்துல குரல் கொடுக்கறதுக்கு கூட ஆள் இல்லாம இருந்துட்டு இருக்குது.

11:25

Speaker A

ஈரான் இதை பொறுத்தளவுக்கு வந்து பாத்தீங்கன்னா தனித்து நின்று தான் வந்து சண்டை போட்டுட்டு இருக்காங்க.

11:30

Speaker A

இதுல வந்து பாத்தீங்கன்னா ஒரு பக்கம் ரஷ்யாவும் வந்து சைனாவும் சப்போர்ட் பண்ணிட்டு இருக்காங்க.

11:36

Speaker A

இதுல வந்து பாத்தீங்கன்னா ரஷ்யாவுக்கு பெரிய லாபம் இருக்கு இந்த போர்ல.

11:41

Speaker A

ஏன்னா இவங்க எல்லாத்தையும் மூடி வச்சதுனால ரஷ்யாட்ட எல்லாருமே எண்ணெய் வாங்கக்கூடிய நிலைமை வந்திருக்கு.

11:47

Speaker A

அதனால வந்து பார்த்தா ரஷ்யாவுக்கு ஒரு பெரிய லாபம் இருக்கறதுனால ரஷ்யா வந்து இந்த போர் நடந்தா பரவாயில்லை அப்படிங்கிற மாதிரி தான் வந்து நினைக்கிறதுக்கு வாய்ப்புகள் இருக்கு.

11:55

Speaker A

பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்தடுத்து என்ன தகவல் வருதுன்னு.

11:58

Speaker A

மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க.

12:00

Speaker A

நம்ம சேனல்ல மெம்பர்ஷிப் இருக்கு ஒரு சப்போர்ட்டா ஜாயின் பண்ணிக்கோங்க.

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=10795)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=10795)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=10795)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/transcript-117/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
