**துலாம் - எதிர்பாராத மிகப்பெரும் திருப்பம் நடக்கும் | Thulam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/thulam-unexpected-major-twist/

துலாம் ராசிக்காரர்களுக்கான காலபுருஷ தத்துவம் மற்றும் வாழ்க்கை திருப்பங்கள் பற்றிய விரிவான விளக்கம்.

## Key Takeaways

- காலபுருஷ தத்துவம் மூலம் துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கை சவால்களை புரிந்து கொள்ள வேண்டும்.
- தன்னம்பிக்கை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு முக்கியம்.
- கலை மற்றும் இசை திறன்களை வளர்க்கும் வாய்ப்புகள் துலாம் ராசிக்காரர்களுக்கு உண்டு.
- சமூக உறவுகளில் சமநிலை மற்றும் நியாயம் கடைபிடிக்க வேண்டும்.
- துலாம் ராசிக்காரர்கள் தங்களுடைய கர்மாவை புரிந்து கொண்டு நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

## What the video covers

- காலபுருஷ தத்துவம் மனிதன் பிறப்பின் காரணம் மற்றும் கர்மா பற்றிய விளக்கம்.
- ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான டிராப்கள் மற்றும் வாழ்க்கை சவால்கள் உள்ளன.
- துலாம் ராசிக்காரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அவற்றை சமாளிக்கும் வழிகள்.
- துலாம் ராசிக்காரர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள்.
- துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் கலை மற்றும் இசை போன்ற திறன்கள் முக்கியத்துவம் பெறும்.
- துலாம் ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும் மற்றும் தன்னை நம்ப வேண்டும்.
- துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கை துணையை தேடி, கூட்டுறவு மற்றும் பிசினஸ் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும்.
- சமூகத்தில் துலாம் ராசிக்காரர்கள் எதிர்கொள்ளும் சைல்ட் அப்யூஸ் மற்றும் அதனை சமாளிக்கும் முக்கியத்துவம்.
- துலாம் ராசிக்காரர்கள் கடவுள் நம்பிக்கை மற்றும் தர்மம் மீது வலுவான நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும்.
- துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கான வழிகாட்டல்.

Answers

## Questions about this video

காலபுருஷ தத்துவம் என்றால் என்ன?

காலபுருஷ தத்துவம் என்பது காஸ்மிக் எனர்ஜி மற்றும் நாம் ஏன் பிறந்தோம் என்பதற்கான காரணம், அதாவது கர்மா. இது மனிதனின் பிறப்பு முதல் பாதம் வரை உள்ள மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளை குறிக்கிறது.

காலபுருஷ தத்துவத்தின் முக்கியத்துவம் என்ன?

காலபுருஷ தத்துவம் ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பயணம் அல்லது கடமை உள்ளது என்பதைக் குறிக்கிறது. சில ராசிகளுக்கு பயணம் இன்னும் உள்ளது, சில ராசிகளுக்கு இந்த ஜென்மத்திலேயே கடமையை முடிக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

துலாம் ராசிக்காரர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகள் என்ன?

துலாம் ராசிக்காரர்கள் 'நல்ல நேரமே வராதா?' அல்லது 'எதைச் செய்தாலும் தடங்கலாகவே போகிறது' என்று கூறுவார்கள். காலபுருஷ தத்துவப்படி, துலாம் ராசிக்கு சில குறிப்பிட்ட சவால்கள் உள்ளன.

## Full Transcript — Download SRT & Markdown

00:02

Speaker A

வணக்கம்

00:03

Speaker B

வணக்கம்

00:03

Speaker A

எப்படி இருக்கீங்க?

00:04

Speaker B

நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?

00:05

Speaker A

நல்லா இருக்கேன். சோ ஒவ்வொரு ஒவ்வொரு வாரமும் நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா ஒவ்வொரு ராசிகளுக்கும் எது முக்கியம் என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது அப்படிங்கறத ரொம்ப தெளிவா சொல்லிட்டு இருக்கோம். அதுல ரொம்ப முக்கியமா காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது இருக்கு அதுதான் ரொம்ப முக்கியம் அப்படிங்கறதும் எல்லாருமே எல்லாராலும் சொல்லப்படுது.

00:21

Speaker B

காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது வந்து இந்த காஸ்மிக் எனர்ஜி. நம்ம ஏன் பிறந்தோம் அப்படிங்கறதுக்கான காரணம் அதாவது கர்மா. நம்ம வந்து காரண காரியத்தோட தான் பிறக்கிறோம் அப்படிங்கறது இருக்கு. அதாவது தலை முதல் பாதம் வரை அப்படின்னு சொல்றது. அதுதான் வந்து மேஷம் முதல் மீனம் வரை. ஒரு மனுஷன் ஏன் மேஷத்துல பிறக்கிறாங்க? அப்போ அவங்க என்ன ட்ராப்ல சிக்க போறாங்க? எப்படி அவங்க வாழ்க்கையில இருந்து ரிலீவ் ஆகணும்? ஏன்னா மனிதன் மீண்டும் மீண்டும் பிறக்கிறாங்க அப்படினாலே நம்ம ஏதோ ஒரு செய்யாத ஒரு கடமையை திரும்பவும் முடிக்கிறதுக்காக பிறந்த ஒரு பிறப்பு இல்ல லைஃப் எக்ஸ்பீரியன்ஸ்க்காக வரோம். எல்லாருமே வந்து கடமையை முடிக்கிறதுக்கு தான் பிறந்தாங்களா அப்படிங்கறது கிடையாது.

00:58

Speaker B

அதுதான் காலபுருஷ தத்துவம்.

01:00

Speaker B

அதாவது இன்னும் ஜெர்னி இருக்கு அப்படிங்கிற ராசிகளும் இருக்காங்க.

01:04

Speaker B

இல்ல உங்களுக்கு ஜெர்னி முடிய போகுது அதனால இந்த ஜென்மத்திலேயே இதை முடிச்சுக்கோங்க.

01:10

Speaker B

இதுக்கான விடையை நீங்க கண்டுபிடிச்சிருங்க அப்படிங்கிற ஒரு விஷயம் தான் இது.

01:12

Speaker B

சோ இந்த காலபுருஷ தத்துவம் அப்படின்னு பார்க்கிறப்போ இது வந்து வைட் ரேஞ்ச் ஆஃப் நாலேட்ஜ்.

01:17

Speaker B

அதுதான் அந்த காலபுருஷ தத்துவம்.

01:20

Speaker B

மனிதன் பிறப்பிலிருந்தே கொஞ்ச நாள்ல தேட ஆரம்பிச்சிருவாங்க நான் ஏன் பிறந்தேன் நான் யாரு என்னோட ஐடென்டிஃபிகேஷன் என்ன மாறிக்கிட்டே இருக்கும்.

01:28

Speaker B

ஒரு குழந்தை பருவத்திலிருந்து ஒவ்வொரு விஷயமும் மாறிக்கிட்டே இருக்கிறப்போ நமக்கு ஆசை பாசங்கள்னு ஒன்னு இருக்கும்.

01:35

Speaker B

ஆனா விதி வேறு ஒரு வழியில கூட்டிட்டு போகும்.

01:37

Speaker B

காலபுருஷன் அப்படிங்கிறது காலம் அப்படிங்கிறது நேரம்.

01:42

Speaker B

புருஷன் அப்படிங்கிறது பர்சன்.

01:44

Speaker B

மனிதனை சொல்லக்கூடியது.

01:45

Speaker B

அதுதான் காலபுருஷன்.

01:47

Speaker B

இந்த காலத்துல இந்த மனிதன் பிறக்கிறார் அப்படிங்கிறதுதான்.

01:52

Speaker B

எப்படி வந்து 24 மணி நேரத்தை வந்து 12 மணி நேரமா பிரிக்கப்பட்டதோ அதுதான் வந்து இந்த 12 ராசிகள்.

01:59

Speaker A

சோ அந்த காலபுருஷ தத்துவம் 12 ராசிகளுக்கும்

02:02

Speaker A

இப்ப ஒவ்வொரு ராசியும் பிறக்கிறவங்களுக்கு வந்துட்டு ஒவ்வொரு ட்ராப் இருக்கும் இந்த விஷயம் பண்ணலாம் இந்த விஷயம் பண்ணக்கூடாது இவங்க இதுக்காக தான் பிறந்திருக்காங்க அப்படிங்கிற நிறைய விஷயங்கள் சொன்னீங்க.

02:11

Speaker A

சோ அப்படிங்கறது நம்ம ஒவ்வொரு ராசிக்கும் பார்க்கலாம்.

02:14

Speaker A

அடுத்ததாக துலாம் ராசி.

02:16

Speaker A

என்ன பிரச்சனைனாலும் எதுக்குப்பா எங்களை தேடி வருது அப்படின்னு சொல்லுவாங்க.

02:18

Speaker A

துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நேரமே வராதா?

02:20

Speaker A

எதை செஞ்சாலும் தடங்கலாவே போகுது அப்படின்னு சொல்லுவாங்க.

02:22

Speaker A

காலபுருஷ தத்துவப்படி துலாம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன ட்ராப் இருக்கும்?

02:27

Speaker A

சில பேருக்கு படிக்க மாட்டாங்க படிப்பு பாதியிலேயே போயிருக்கும் அப்படின்னு சொல்லுவாங்க.

02:31

Speaker A

சில பேர் வேலைக்காக நாங்க ட்ரை பண்ணோம் எதிர்பார்த்த வேலை கிடைக்கல அதுவா என்னை தேடி வந்த வேலைதான் பார்த்துட்டு இருக்கோம்னு சொல்லி துலாம் ராசிக்காரர்கள் நிறைய ட்ராப்ல சிக்கி தப்பிச்சிருப்பாங்க.

02:37

Speaker A

சோ காலபுருஷ தத்துவம் என்னென்ன ட்ராப்ஸ் எல்லாம் அவங்களுக்கு வச்சிருக்கோம்?

02:40

Speaker B

காலபுருஷ தத்துவம் இவங்களுக்கு சொல்ற விஷயம் என்னன்னா

02:44

Speaker B

இவங்க எல்லாம் வந்து மகாலட்சுமி விஷ்ணு.

02:46

Speaker A

ஆஹா

02:46

Speaker B

அந்த மாதிரி ஒரு அமைப்புதான் இவங்க.

02:48

Speaker B

இவங்க வந்து இவங்களுடைய பிறப்பே பார்த்தீங்க அப்படின்னா

02:53

Speaker B

எங்கேயோ ஒரு காம்ப்ளிகேஷன்ல பிறக்கக்கூடிய ஒரு குழந்தையா இருப்பாங்க.

02:59

Speaker B

ஆனா நல்லபடியா பிறந்துருவாங்க.

03:02

Speaker B

அவங்க அதாவது இந்த இந்த இந்த குழந்தை கருவுற்றதுல இருந்தே இப்ப இந்த காலபுருஷ தத்துவப்படி எப்படி அப்படின்னா

03:10

Speaker B

அந்த வீட்ல அந்த குடும்பத்துல மூதாதையர் யாராவது இறப்பாங்க.

03:17

Speaker B

தாத்தாவோ பாட்டியோ கொள்ளுப்பாட்டி கொள்ளு தாத்தாலாம் இருக்கிறாங்க அப்படின்னா இறப்பாங்க.

03:25

Speaker B

இறந்த உடனே இந்த குழந்தை உருவாகும்.

03:30

Speaker B

இல்ல இந்த குழந்தை உருவான நேரத்துல அவங்க இறப்பாங்க.

03:33

Speaker A

ஓகே

03:33

Speaker B

ஏன்னா இவங்க எல்லாம் ஓல்ட் சோல்ஸ்.

03:36

Speaker B

இந்த ஓல்ட் சோல்ஸ் தான் வந்து பிறக்கிறதுதான் காலபுருஷ தத்துவம்னு சொல்றது.

03:40

Speaker B

அது ஏன் அந்த ஓல்ட் சோல்ஸ் வந்து மீண்டும் பிறக்கிறாங்க அப்படின்னா

03:46

Speaker B

சில விஷயங்கள்ல வந்து நியாய தர்மமா இல்லாம அந்த சோல்ஸ் செதந்திருப்பாங்க.

03:52

Speaker B

அவங்களுக்கு வந்து விமோசனம் கிடைச்சு அப்படியே கிளம்ப வேண்டிய ஒரு தருணத்துல

03:59

Speaker B

விட்ட குறை தொட்ட குறைன்னு மீண்டும் வந்து ஒரு பிறக்கக்கூடிய ஒரு அமைப்பு.

04:04

Speaker B

அதே மிஸ்டேக்கை திரும்பவும் செய்யக்கூடாதுங்கிறதுக்கு தான் இந்த குழந்தைகள் வந்து பிறப்பாங்க.

04:08

Speaker B

அப்போ இயற்கையாவே துலாம்க்கு என்ன ஒரு அமைப்புன்னா தன்னை எந்த அளவுக்கு அண்டர் எஸ்டிமேட் பண்ணி மத்தவங்களை சந்தோஷமா வச்சுக்க முடியுமோ

04:15

Speaker B

அவ்வளவு வேலையும் துலாம் பார்க்கும்.

04:17

Speaker A

ஐ மீன் டாமினேட் பண்ணிட்டே இருப்பாங்க.

04:18

Speaker B

தன்னை தன்னை தானே டம்ப் பண்ணுவாங்க.

04:20

Speaker A

ஓகே ஓகே.

04:21

Speaker B

யாரை ரொம்ப பிடிச்சிருக்கோ அவங்கள்ட்ட மட்டும்.

04:24

Speaker B

இவங்களை நேசிப்பாங்க இல்லையா?

04:26

Speaker B

அவங்களை எடுத்து எறிஞ்சு பேசக்கூடிய ஒரு அமைப்பிலேயும் துலாம் இருப்பாங்க மேக்ஸிமம்.

04:30

Speaker B

இல்ல அப்படின்னா நிறைய துயரங்களையே

04:32

Speaker B

ஃபேஸ் பண்ணி ஃபேஸ் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணி யாரையும் காட்டியே கொடுக்காம நியாயமா என்ன செஞ்சிருக்கணும் அப்படின்னா காட்டி கொடுக்கணும்.

04:40

Speaker B

எது நியாயமோ எது தர்மமோ அதன்படி இருக்கணும்.

04:43

Speaker B

இப்ப இந்த சைல்ட் அப்யூஸ் ஆகக்கூடிய சம்பவங்கள்ல எல்லாம் வந்து துலாம் குழந்தைகள் மாட்டுறது அதிகம்.

04:49

Speaker B

ஏன் அப்படின்னா ஐயோ அவங்களை நம்ம மாட்டி விட்டுற கூடாதுன்னு சத்தமே இல்லாமலாம் வந்துருவாங்க.

04:55

Speaker B

அங்கேயே வந்து தர்மம் போயிடுச்சு.

04:58

Speaker B

சோ அந்த கர்மாவும் இங்க கண்டினியூ ஆகும்.

05:00

Speaker B

இதெல்லாம் தான் காலபுருஷ தத்துவம் சொல்றது என்ன அப்படின்னா மனிதர்களை இடை போட கத்துக்க.

05:06

Speaker B

அப்படிங்கிற விஷயத்தை தான் வந்து இவங்களுக்கு சொல்லிக் கொடுத்துக்கிட்டே இருக்கும்.

05:09

Speaker B

இவங்களை இவங்களே சப்ரஸ் பண்ணி.

05:11

Speaker B

எதுக்கு ஃபீல் பண்றாங்கன்னே தெரியாம லைஃப்ல ஒரு கோலே வச்சுக்காமயே இருப்பாங்க மேக்ஸிமம் துலாம்.

05:17

Speaker B

ஏன்னா இவங்களுக்கு எல்லாமே கிடைச்சுக்கிட்டே இருக்கும்.

05:19

Speaker B

காலபுருஷ தத்துவம் சொல்ற விஷயம் என்ன அப்படின்னா உனக்காக நீ வாழணும்.

05:25

Speaker B

உன்னை மட்டும் தான் நீ நம்பணும்.

05:27

Speaker B

நீ அதாவது கான்பிடன்ஸ் அப்படிங்கிறது செல்ப் கான்பிடன்ஸ்ங்கிறது துலாம்க்கு அவ்வளவு சீக்கிரம் வரவே வராது.

05:33

Speaker A

ஓகே.

05:34

Speaker B

யாரோ ஒருத்தவங்களை டிபென்ட் பண்ணிட்டே இருக்கிறது.

05:37

Speaker B

இவங்க எல்லாம் வந்து ஒரு பார்ட்னர்ஷிப் பிசினஸ்குள்ள போயிட்டாங்கன்னா நல்லா இருக்கும்.

05:41

Speaker B

ஏன்னா யாரோ ஒருத்தவங்க வந்து இவங்களை மோட்டிவேட் பண்ணி ரெண்டு பேர் சேர்ந்து பண்ணக்கூடிய அமைப்பு.

05:46

Speaker B

ஒரு துணை தேடிக்கிட்டே இருக்கும் துலாம்.

05:49

Speaker B

அந்த துணை இருந்துச்சு அப்படின்னா இவங்களுடைய கெரியர் லைஃப் எல்லாம் கொஞ்சம் சக்சஸ் ஆகி போகக்கூடிய ஒரு அமைப்பு.

05:54

Speaker B

யாரோ ஒருத்தவங்க அட்வைஸ் பண்ணக்கூடிய ஒரு அமைப்புல இருந்தாங்கன்னா டெவலப் ஆயிட்டே போவாங்க.

05:58

Speaker B

இல்லனா எனக்கு இது போதும்னு சொல்லிட்டு இருந்துருவாங்க.

06:01

Speaker B

எது செஞ்சாலும் மகாலட்சுமி.

06:04

Speaker B

இவங்க.

06:05

Speaker B

இவங்க வந்து எது செஞ்சாலும் அழகு.

06:07

Speaker B

ஆனா தன்னை கெடுத்துக்க கூடிய அமைப்பும் காலபுருஷ தத்துவம் இவங்களுக்கு சொல்லுது.

06:12

Speaker B

கடவுள் எல்லாமே கொடுத்திருந்தாலும்

06:15

Speaker B

ஒவ்வொரு பாகமா தன்னைத்தானே கெடுக்கும் துலாம்.

06:20

Speaker B

எப்ப கெடுக்கும் அப்படின்னா எப்ப இவங்க வந்து கலை சம்பந்தப்பட்ட விஷயங்களை தொடாம இருக்காங்களோ

06:27

Speaker B

இவங்க எல்லாம் வந்து மியூசிக் அந்த வீணை.

06:32

Speaker B

இந்த சரஸ்வதி இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் டச் பண்ணனும்.

06:36

Speaker B

அந்த நாலேட்ஜ் அந்த மாதிரி ஹிடன் நாலேட்ஜ் கெயின் பண்றவங்களா துலாம் இருக்கணும்.

06:40

Speaker B

ஏன்னா இவங்களுக்குள்ள அந்த டேலன்ட்.

06:42

Speaker B

ஏன்னா இவங்க அந்த ஓல்ட் சோல்ஸ் அப்படின்னு சொன்னேன் இல்லையா?

06:44

Speaker B

அந்த ஓல்ட் சோல்ஸ்க்கு அந்த மாதிரி ஆர்ட் ரிலேட்டடான ஒரு இயக்கங்கள் கண்டிப்பா இருந்திருக்கும்.

06:48

Speaker B

தொட்டிருப்பாங்க.

06:50

Speaker B

விட்ட குறை தொட்ட குறைன்னு இருந்திருக்கும்.

06:52

Speaker B

ஷைனா இருக்க மாட்டாங்க.

06:54

Speaker B

இப்ப இதெல்லாம் இவங்க தொடுறாங்க அப்படின்னா இவங்களுடைய பாசிட்டிவான தர்மம் அப்படிங்கிறது ஆக்டிவேட் ஆக ஆரம்பிச்சு.

06:59

Speaker B

குரூப்ஸோட பழகணும் துலாம்.

07:02

Speaker B

எல்லாத்துக்கிட்டயும் பழகி நல்லது கெட்டது தெரிஞ்சுக்கணும்.

07:05

Speaker B

அவ்வளவு சீக்கிரம் துலாம் நல்லது கெட்டது தெரிஞ்சுக்க டைம் எடுக்கும்.

07:08

Speaker A

இவங்களுக்கு இறைசக்தி கடவுள் நம்பிக்கை எப்படி மேம் இருக்கிறது?

07:10

Speaker B

இவங்களுக்கு கடவுள் நம்பிக்கை எல்லாம் நல்லா இருக்கும்.

07:12

Speaker A

ஓகே.

07:13

Speaker B

எந்த தெய்வத்தை நம்ம வழிபாடு பண்ண சொல்றோமோ அதெல்லாம் அழகா வழிபாடு பண்ணுவாங்க.

07:17

Speaker B

இப்ப ஒரு பெண் துலாம்ல இருக்காங்க அந்த குடும்பத்துலன்னா அந்த குடும்பமே இவனால ஒரு ஹாப்பினஸ்.

07:22

Speaker B

ஒரு அதாவது கம்ப்ளீட் ஃபேமிலின்னு நம்ம சொல்றோம்ல.

07:25

Speaker B

துலாம் இருக்கப்ப அது இருக்கும்.

07:26

Speaker A

ஓகே.

07:27

Speaker B

ஆனா என்ன ப்ராப்ளம் அப்படின்னா லைஃப் பார்ட்னர் தான் வந்து மாட்டுவார்.

07:32

Speaker B

லைஃப் பார்ட்னர் அப்படின்னு வரப்ப

07:34

Speaker B

எக்ஸ்பெக்டேஷன்ஸ் எப்படி இருக்கும்னா நம்ம எவ்வளவு மீம்ஸ் பார்ப்போம்.

07:48

Speaker B

துலாம் பெண்களுக்கு அது பொருந்தும் அது ஆண்களுக்கும் பொருந்தும்.

07:50

Speaker A

சோ மனசுக்குள்ளேயே வச்சுப்பாங்க.

07:51

Speaker A

வெளிய காமிக்க மாட்டாங்க.

07:51

Speaker B

மனசு ரொம்ப சின்ன சின்ன விஷயங்களையும் எக்ஸ்பிரஸ் பண்ண தெரியாம இந்த காலபுருஷ தத்துவம் என்ன சொல்லும் அப்படின்னா இப்படித்தான் நீங்க உன்னை ஸ்பாயில் பண்ணிக்கிறீங்க.

07:59

Speaker B

நீ உன்னுடைய சந்தோஷத்தை இன்னொருத்தவங்க கிட்ட போய் டிபென்டன்ஸில வச்சுக்கிட்ட அப்படின்னா உன்னுடைய ஒவ்வொரு உறுப்பா ஸ்பாயில் ஆகும்ங்கிறதுதான் காலபுருஷ தத்துவம் சொல்றது.

08:06

Speaker B

சுத்தி இருக்கவங்களும் அபெக்ட் ஆயிட்டே இருப்பாங்க.

08:10

Speaker B

அது ரொம்ப லேட்டர் ஆன் பீரியட்ல தான் புரியும்.

08:14

Speaker B

எப்ப புரியும்னா எல்லாருமே தன்னை விட்டு போனா தான் புரியும்.

08:17

Speaker B

அப்போ இவங்க வந்து அந்த ஹாப்பினஸையும் சில விஷயங்களை சாக்ரிஃபைஸ் பண்ணிட்டே இருக்கிறது.

08:22

Speaker B

அந்த சாக்ரிஃபைசிங் மோடுல ரொம்பவும் போக வேண்டாம்.

08:26

Speaker B

நான் சில இடங்கள்ல சொல்லி இருப்பேன் துலாம் வந்து தெய்வத்தின் குழந்தை சாத்தானின் குழந்தை அப்படின்னு சொல்லி இருப்பேன்.

08:30

Speaker A

ஓகே.

08:31

Speaker B

ஏன் அப்படின்னா

08:32

Speaker B

துலாத்துல பிறக்கக்கூடிய குழந்தைகள் இப்ப அப்பா அம்மா இருக்காங்க அப்படின்னா

08:38

Speaker B

இந்த குழந்தை வளர வளர அப்பா கீழ போயிட்டே இருப்பார்.

08:42

Speaker B

இல்லனா அப்பா போராடிட்டே இருக்கக்கூடிய தன்மை வந்து துலாத்தில் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அவங்க பேரண்ட்ஸ்க்கு இருக்கும்.

08:49

Speaker B

முக்கியமா அப்பாக்கு அப்படி இருக்கும்.

08:51

Speaker B

அப்போ இவங்க எல்லாம் வந்து தத்து கொடுத்துரணும்.

08:54

Speaker B

கோயில்ல தத்து கொடுத்துரணும்.

08:55

Speaker B

இவங்க எல்லாம் தெய்வத்தின் குழந்தைகள்.

08:57

Speaker B

அதனாலதான் வந்து தெய்வத்தின் குழந்தையா

09:00

Speaker B

சாத்தானின் குழந்தையான்னா பேரண்ட்ஸால சம்டைம்ஸ்

09:03

Speaker B

வளர்க்க முடியாம போறதோ

09:05

Speaker B

இல்லனா அப்பா எங்கேயாவது துறவரம் போகக்கூடிய அமைப்பு எல்லாம் வந்து ஒரு சில துலாம்

09:10

Speaker B

இவங்களுக்கு ஜாதக கட்டத்துல பார்த்தா தெரியும்.

09:13

Speaker B

காலபுருஷ தத்துவம் சொல்ற விஷயம் என்னன்னா தெய்வத்துக்கிட்டயே இந்த துலாத்தை சமர்ப்பிச்சிருங்க.

09:17

Speaker B

ஏன்னா இவங்க வந்து நீதி நேர்மை

09:20

Speaker B

அந்த மாதிரி இருந்துட்டு போயிரணும்.

09:22

Speaker B

ஒன்னும் முருகர் கோயில்லயோ

09:23

Speaker B

இல்லனா வந்து விஷ்ணு கோயில்லயோ வந்து

09:26

Speaker B

இவங்களை வந்து தத்து கொடுக்கணும்.

09:28

Speaker A

துலாபாரம்னு மிஸ்டேக் பண்ணிக்க கூடாது.

09:29

Speaker B

துலாபாரம்னு மிஸ்டேக் பண்ணிக்க கூடாது.

09:30

Speaker A

ஏன்னா அந்த ராசிக்கு

09:31

Speaker B

அந்த ராசிக்குன்னா எல்லா துலாபாரம் மைண்ட்செட்டுக்கு போயிடுவாங்க.

09:33

Speaker B

இது அப்படி கிடையாது.

09:34

Speaker B

தெய்வத்துக்கிட்ட கொடுத்து

09:38

Speaker B

இப்ப எப்படி தவுட்டு தானம் வாங்குறோம்?

09:41

Speaker B

அந்த மாதிரி வந்து இது உன்னுடைய குழந்தைன்னு தவுட்டு தானம் மாதிரி கொடுத்துட்டா

09:47

Speaker B

அப்பா அல்லல் படுறது கொஞ்சம் குறையும்.

09:50

Speaker A

இதெல்லாம் வந்து நம்ம ஒரு பேச்சுக்கு தான் உன்னை தவுட்டுக்கு கொடுத்தோம் தவுட்டுக்கு வாங்கணும் அப்படின்னு சொல்றதெல்லாம் ஒரு பேச்சுக்குன்னு நினைச்சோம்.

09:55

Speaker A

அது ஆனா உண்மைக்குமே

09:56

Speaker B

அது வந்து அதெல்லாம் வந்து அவ்வளவு பவர்.

09:58

Speaker B

தானியத்தை கொடுத்து

10:00

Speaker B

அந்த தெய்வத்துக்கிட்ட வந்து இவங்களை சமர்ப்பிக்கிறப்போ இது வந்து அந்த தெய்வத்துடைய குழந்தை அப்படிங்கிற மாதிரி கொடுத்துட்டா

10:07

Speaker B

அந்த குடும்பம் வந்து கொஞ்சம் ஸ்டெபிலைஸ் ஆவாங்க.

10:11

Speaker B

இல்லைனா துலாம்ல இருக்கிற இதுல வந்து

10:14

Speaker B

பேரண்ட்ஸ்ல பேரண்ட்ஸ்க்கு வந்து ஏதாவது ஒரு மறைமுகமா ஏதாவது ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ஸோ ஏதோ ஒன்னு.

10:22

Speaker B

என்னன்னே அவங்களுக்கு தெரியாது.

10:25

Speaker B

அப்பா நல்லா வேலை எல்லாம் பார்த்துட்டு தான் இருப்பாரு ஆனா வேலைப்பளு அதிகமா இருக்கிற மாதிரி சிச்சுவேஷன்ஸ்.

10:31

Speaker B

வேலையை மாத்திட்டே இருக்கலாமாங்கிற தாட் ப்ராசஸ்.

10:33

Speaker B

இந்த மாதிரி ஏதோ ஒரு நிலைப்பாடு இல்லாத ஒரு தன்மையை வந்து அவங்களுக்கு கொடுத்துட்டு இருக்கும்.

10:38

Speaker B

ஆனா அந்த துலாம் ராசி பெண்கள் அப்படின்னு பார்க்கிறப்போ குடும்பத்துல நல்ல ஒரு அன்யோன்யமா அந்த மாதிரிலாம் இருப்பாங்க.

10:44

Speaker B

இந்த லைஃப் பார்ட்னர்னு வரப்ப மட்டும் தான் ஏன்னா அந்த ஏழாம் ஸ்தானம் அப்படிங்கிறது லைஃப் பார்ட்னர் ஸ்தானம்.

10:50

Speaker B

நீங்க லைஃப்ல யாரை வந்து சந்திக்க போறீங்க அந்த பார்ட்னர்ஷிப்ங்கிறது ரொம்ப முக்கியம்.

10:55

Speaker B

அந்த பார்ட்னர்ஷிப் வரக்கூடிய லைஃப் பார்ட்னர் வந்து இவங்களை நல்லா பார்த்துக்குவாங்க.

11:00

Speaker B

இதை புரிஞ்சுக்கணும் துலாம்.

11:02

Speaker B

என்னை இவங்க நல்லா பார்த்துக்குவாங்க.

11:05

Speaker B

நான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி தான் நான் போகணும்.

11:08

Speaker B

அட்ஜஸ்ட்ங்கிறது என்னது?

11:10

Speaker B

வெளிப்படையா பேசி ஓகே எனக்கு இது வேணும் வேண்டாம்.

11:14

Speaker B

ஏன்னா ஓப்பனா சொல்ல தெரியணும்.

11:17

Speaker B

எல்லாமே அதாவது ஒரு சில ராசிக்காரங்களால மட்டும் தான் துலாத்தோடயே வாழ முடியும்.

11:22

Speaker A

ஓகே.

11:23

Speaker B

நிதானமா இருக்கக்கூடிய ராசிக்காரங்களால மட்டும் தான் இருக்க முடியும்.

11:26

Speaker B

எல்லாம் பூமி மாதிரி தாங்கக்கூடிய அமைப்பு.

11:29

Speaker B

ரிஷபம் மகரம் கும்பம்.

11:32

Speaker B

இவங்களால எல்லாம் வந்து இருக்க முடியும்.

11:35

Speaker B

அதுவும் ரிஷபத்துல வந்து

11:38

Speaker B

கார்த்திகையால இருக்கலாம்.

11:40

Speaker B

மத்த ரெண்டு நட்சத்திரத்தினால இவங்ககிட்ட இருக்காது.

11:42

Speaker B

இதுதான் காலபுருஷ தத்துவம் சொல்றது.

11:45

Speaker B

உன்னோட யார் இருப்பாங்கன்னு நீதான் முடிவு பண்ணனும்.

11:48

Speaker B

அவ ஏன்னா துலாம் வந்து சுக்ரன்.

11:51

Speaker B

அமைப்பு.

11:52

Speaker B

காலபுருஷ தத்துவப்படி அது வந்து சுக்ரன்.

11:54

Speaker B

அமைப்பாவும் இருக்கிறதுனால

11:56

Speaker B

காலபுருஷ தத்துவத்திலிருந்து அது ஏழாம் இடத்திலேயும் இருக்கிறதுனால

12:01

Speaker B

அது எப்படின்னா இன்னொரு ஆளை நீ யாரை சந்திக்க போறியோ அவங்களால உனக்கு ஒரு லைஃப்ல ஒரு பெரிய டர்னிங் பாயிண்ட்.

12:07

Speaker B

உன்னாலயும் அவங்களுக்கு லைஃப்ல ஒரு டர்னிங் பாயிண்ட்.

12:10

Speaker B

துலாம் ராசி பெண்களை திருமணம் செஞ்சுட்டு போறாங்கன்னா கூட இந்த குடும்பம் செழிப்பாயிடும்.

12:15

Speaker B

ஏன்னா இவங்க வந்து லட்சுமி.

12:16

Speaker B

இவங்க மகாலட்சுமி இவங்க.

12:18

Speaker B

அப்ப வந்து உணவு தானம் கொடுக்கிறது.

12:21

Speaker B

தன்னைத்தானே செழிப்பா வச்சுக்கிறது.

12:23

Speaker B

அழுகக்கூடாது.

12:25

Speaker B

துலாம் ராசி பெண்கள் நிறைய அழுவாங்க.

12:28

Speaker B

சம்பந்தமே இல்லாம ஃபீல் பண்ணி ஐயோ என் வாழ்க்கை இப்படி அப்படிலாம் கிடையாது.

12:33

Speaker B

சின்ன சின்ன விஷயத்துக்கும் வந்து துலாம் அழுக அழுக குடும்பம் அப்படியே பேக்ல போயிட்டே இருக்கும்.

12:38

Speaker B

சிரிக்கணும் செழிப்பா இருக்கணும்.

12:40

Speaker B

மகாலட்சுமி கடாட்சம்ங்கிறது துலாம் ராசி பெண்களால உள்ள கொண்டு வர முடியும்.

12:45

Speaker B

துலாம் ராசி ஆண்கள் இருக்காங்க அப்படின்னா

12:49

Speaker B

அவங்களும் எப்படின்னா பழகணும் எல்லாத்துக்கிட்டயும்.

12:52

Speaker B

சோசியலைசிங்ங்கிறது ரொம்ப முக்கியம் துலாம் ராசி ஆண்களுக்கு.

12:55

Speaker B

ஐசோலேட் ஆயிட்டாங்க அப்படின்னா

12:59

Speaker B

நான் சொன்னேன் இல்லையா சாத்தானின் குழந்தை.

13:00

Speaker B

அந்த மாதிரி மாறிடுவாங்க.

13:02

Speaker B

இதுதான் காலபுருஷ தத்துவம் சொல்ற விஷயமே அதுதான்.

13:06

Speaker B

உங்களுடைய பார்ட்னர்ஷிப்ங்கிறது ரொம்ப முக்கியம்.

13:09

Speaker B

இவங்க வந்து பார்ட்னர்ஷிப் பிசினஸ்லாம் பண்ணலாம்.

13:11

Speaker B

ஆனா எப்படி சூஸ் பண்றாங்கங்கிறதுதான் காலபுருஷ தத்துவம் வச்சிருக்கிற பெரிய

13:15

Speaker B

இவங்களுக்கு ஒரு ட்ராப்பே அங்கதான் இருக்கு.

13:19

Speaker B

எப்படி சூஸ் பண்றாங்க அப்படிங்கிறது.

13:20

Speaker A

இவங்க எந்த துறையில மேம் பெஸ்ட்டா இருப்பாங்க?

13:21

Speaker A

இப்ப துலாம் அப்படின்னு சொன்னாலே வந்துட்டு கிளவரா இருப்பாங்க.

13:25

Speaker A

என்னதான் கஷ்டம் இருந்தாலும் அந்த படிப்புல கிளவரா இருப்பாங்க.

13:31

Speaker A

ஒரு ஒர்க்ன்னு பார்த்தா வந்துட்டு எல்லாரும் ஒரு பான் வித் சில்வர் ஸ்பூன் அப்படிங்கிற மாதிரி ஒரு ஹைஃபையான ப்ரொஃபைல்ல தான் இருப்பாங்க அப்படின்னு சொல்லுவாங்க.

13:37

Speaker A

இவங்க எந்த துறையில சிறப்பா இருப்பாங்க?

13:40

Speaker B

துலாம் வந்து எங்க கம்ஃபர்ட்டா இருக்கோ அங்கதான் இருப்பாங்க.

13:43

Speaker B

கம்ஃபர்ட் ஜோன்.

13:44

Speaker A

புடிச்ச வேலை.

13:44

Speaker B

பெருசா ரிஸ்க் எல்லாம் எடுக்க மாட்டாங்க.

13:46

Speaker B

இவங்களுக்கு வந்து புடிச்ச துறைன்னு பார்க்கிறப்ப இந்த லா.

13:49

Speaker B

இதெல்லாம் நல்லா வரும்.

13:50

Speaker B

இந்த லா சம்பந்தப்பட்ட.

13:53

Speaker B

இந்த லாயர் ஆகுறது.

13:55

Speaker B

பேச்சு.

13:57

Speaker B

நியாய தர்மம்னு பேசுறது.

14:00

Speaker B

ஏன்னா இவங்க இவங்க சில நாம்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் வச்சிருப்பாங்க.

14:03

Speaker B

இது நியாயம்.

14:04

Speaker B

இப்ப ஒருத்தவங்க கிட்ட கடன் வாங்குறாங்கன்னு வச்சுக்கோங்க கடனை திருப்பி கொடுக்க முடியாட்டாலும் 10 வருஷம் கழிச்சு அதை திருப்பி கொடுத்துருவாங்க.

14:10

Speaker B

ஏன்னா அந்த வந்து

14:12

Speaker B

அந்த அது நியாயத்துக்கு படி கூட்டிட்டு போயிடும்.

14:15

Speaker A

கண்டிப்பா.

14:16

Speaker B

அந்த ரியலைசேஷன் ஏன்னா லைஃப்ல நிறைய ஹர்டில்ஸ்லாம் ஃபேஸ் பண்ணுவாங்க இல்லையா?

14:19

Speaker B

சோ இந்த நியாய தர்மம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல இந்த கணக்கு வழக்கு.

14:24

Speaker B

இந்த மாதிரி விஷயங்கள்.

14:25

Speaker B

இந்த ரிலேட்டடான.

14:27

Speaker B

இவங்களும் வந்து மீடியா துறையில அதிகம் துலாம்.

14:30

Speaker B

ஏன்னா அழகு இவங்க.

14:32

Speaker B

ஈர்க்கக்கூடிய ஒரு அமைப்பு.

14:34

Speaker B

எங்க இருந்தாலும் ஈர்ப்பு அப்படிங்கிறது இவங்களுக்கு அதிகம் உண்டு.

14:38

Speaker B

லட்சுமி கடாட்சம் பெறக்கூடிய ஒரு அமைப்பு.

14:41

Speaker B

அதாவது ஃபேமிலி பிசினஸ் ரன் பண்ணக்கூடிய ஒரு அமைப்பும் வந்து சில துலாம் ராசிக்காரங்களுக்கு அப்படிங்கிறது உண்டு.

14:45

Speaker B

அதாவது தாய் தாய் என்ன வேலை பார்த்தாங்களோ ஏன்னா காலபுருஷ தத்துவம் வச்சிருக்கிற ரகசியமும்

14:51

Speaker B

தாயால ஒன்னு கெடலாம் இல்ல தாயால உயரலாம்.

14:55

Speaker B

தாயுடைய குணம் அப்படிங்கிறது வந்து இவங்கள்ட்ட இருக்கும்.

14:57

Speaker B

அப்போ துலாம் ராசிக்கு எந்த மாதிரியான அம்மா இருக்காங்கங்கிறது இங்க ரொம்ப முக்கியம்.

15:04

Speaker B

ஏன்னா இந்த அம்மாவால தான் இவங்களுக்கு பெரிய குரோத் அண்ட் டெவலப்மென்ட் அப்படிங்கிறது துலாம்க்கு உண்டு.

15:10

Speaker B

சோ இதை வச்சு தான் வந்து அவங்களுடைய லைஃப் லைஃப் பாத் அவங்களுடைய ப்ரொபஷன் அப்படிங்கிறது தீர்மானிக்கப்படுது.

15:14

Speaker A

தொடர்ந்து காலபுருஷ தத்துவப்படி என்னென்ன ட்ராப்ஸ் இந்த 12 ராசிகளும் இருக்கணும்.

15:18

Speaker A

ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்னென்ன விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கணும் எந்த கடவுளை வணங்கணும் எந்த துறையில அவங்க வந்து பெஸ்ட்டா இருப்பாங்க.

15:26

Speaker A

சில ராசிகளுக்கு குரு சொல்றதை கேட்கணும் தனக்குன்னு ஒரு குரு வச்சுக்கணும் அந்த குரு சொல்றதை கேட்கணும்.

15:32

Speaker A

லைஃப் பார்ட்னரை வந்து சிறப்பா தேர்ந்தெடுத்திருக்கணும் அப்படின்னு நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.

15:39

Speaker A

இதுல நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கும்.

15:41

Speaker A

சோ எல்லாரும் ஒரே மாதிரி ஒரே ஆங்கிள்லயே சொல்ல மாட்டாங்க நிறைய அஸ்ட்ராலஜர்ஸ் இருக்காங்க நிறைய ஆங்கிள்ஸ்ல நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க.

15:48

Speaker A

இதுல டவுட்ஸ் இருந்து ரொம்ப தெளிவா இதை பத்தி தெரிஞ்சுக்கணும்னா எப்படி மேம் அணுகுறது?

15:52

Speaker B

அதாவது நான் இப்பதான் அஸ்ட்ராலஜி கிளாஸ் ஸ்டார்ட் பண்றேன்.

15:55

Speaker B

நம்மளுடைய வாழ்க்கை என்ன அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படின்னா நம்மளுடைய ஹாரோஸ்கோப் சார்ட் நம்ம தெரிஞ்சுக்கணும்.

16:04

Speaker B

இந்த கலியுகத்தை பத்தியும் நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுனால

16:08

Speaker B

அஸ்ட்ராலஜி யார்லாம் இன்ட்ரஸ்டடா இருக்காங்களோ கத்துக்கணும் அப்படின்னு இன்ட்ரஸ்டடா இருக்காங்களோ அவங்கலாம் வந்து செப்டம்பர் ஆறாம் தேதியிலிருந்து நான் வந்து அஸ்ட்ராலஜி கிளாஸ் அப்படிங்கறது ஸ்டார்ட் பண்றேன்.

16:15

Speaker B

இதுதான் வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் அப்படின்னு ஸ்டார்ட் பண்றேன்.

16:17

Speaker B

சோ கீழ தெரியுற நம்பருக்கு அவங்க வந்து வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்க கால் இல்ல வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்கன்னா அவங்களுக்கான டீடைல்ஸ் வரும்.

16:24

Speaker A

ஜோதிடம் பத்தின உங்களுக்கு எந்த டவுட்ஸா இருந்தாலும் இல்ல ஜோதிடம் படிக்கணும் அப்படின்னு ஆர்வம் இருந்தால்

16:29

Speaker A

செப்டம்பர் ஆறுல இருந்து கிளாஸஸ் ஸ்டார்ட் ஆகுது கீழ இருக்க வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி நீங்க கிளாஸ் ஜாயின் பண்ணிக்கலாம்.

16:35

Speaker A

தொடர்ந்து இன்னும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு சொல்லிக்கிட்டே இருப்போம்.

16:39

Speaker A

தொடர்ந்து பேசுவோம்.

16:40

Speaker A

நன்றி.

Topics: துலாம் காலபுருஷ தத்துவம் கர்மா ராசி பலன் தமிழ் ஜோதிடம் துலாம் ராசி சவால்கள் தன்னம்பிக்கை கலை மற்றும் இசை சமூக உறவுகள் துலாம் வாழ்க்கை மாற்றங்கள்


---
This is the markdown twin of https://sozai.app/transcript/thulam-unexpected-major-twist/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
