**துலாம் ராசி 2026 சனிப்பெயர்ச்சி பலன்கள் | Thulam Sanipeyarchi 2026 | Jeevitha Sureshkumar Interview — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/thulam-rasi-2026-sanipeyarchi-benefits/

2026 ஆம் ஆண்டின் துலாம் ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் அஸ்ட்ராலஜி வகுப்புகள் குறித்து விரிவான பேட்டி.

## Key Takeaways

- 2026 சனிப்பெயர்ச்சி வாக்கியம் துலா ராசி மக்களுக்கு வெற்றி மற்றும் போராட்டம் இரண்டையும் தரும்.
- அஸ்ட்ராலஜி வகுப்புகள் மூன்று மாத காலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பல்வேறு சிஸ்டம்கள் கற்றுக்கொள்ளப்படும்.
- சனி கிரகத்தின் இயக்கம் மற்றும் அதன் தாக்கங்கள் மிக முக்கியமானவை, அதனை திருக்கணித பஞ்சாங்கம் அடிப்படையாகக் கொண்டுள்ளது.
- துலா ராசி மக்களுக்கு சனி மற்றும் சுக்ரன் கிரகங்கள் நியாயம் மற்றும் தர்மத்தில் ஆதரவு தருகின்றன.
- அஸ்ட்ராலஜி என்பது ஒரு விரிவான அறிவு துறை; திறந்த மனதுடன் கற்றுக்கொள்ள வேண்டும்.

## What the video covers

- ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் சிறப்பு நேர்காணல் பகுதி.
- அஸ்ட்ராலஜர் ஜீவிதா சுரேஷ்குமார் 2026 சனிப்பெயர்ச்சி மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தை விளக்குகிறார்.
- மார்ச் 5-6 ஆம் தேதி தொடங்கிய சனிப்பெயர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவம்.
- அஸ்ட்ராலஜி வகுப்புகள்: மூன்று மாத கால அளவில், மார்ச் 20 முதல் புதிய பேட்ச் தொடக்கம்.
- வகுப்புகளில் பல்வேறு சிஸ்டம்கள் மற்றும் ஜோதிடக் கணிப்புகள் விரிவாக கற்றுக்கொள்ளப்படும்.
- சனிப்பெயர்ச்சி காலத்தில் கிரகங்களின் இயக்கம் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றி விளக்கம்.
- துலாம் ராசி மக்களுக்கு சனிப்பெயர்ச்சி வெற்றி மற்றும் போராட்டம் இரண்டும் இருப்பதாக கூறப்படுகிறது.
- சனி மற்றும் சுக்ரன் கிரகங்களின் துலா ராசி மீது உள்ள தாக்கம் மற்றும் நியாயம் பற்றிய கருத்துக்கள்.
- ஆளுமை, நியாயம் மற்றும் தர்மம் ஆகியவற்றில் துலா ராசி மக்களின் நிலைமை பற்றிய விவாதம்.
- வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் பற்றிய தகவல்.

Answers

## Questions about this video

சனிப்பெயர்ச்சி எப்போது தொடங்கியது?

வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி மார்ச் 5 அல்லது 6 ஆம் தேதி தொடங்கி உள்ளது.

அஸ்ட்ராலஜி வகுப்புகள் எப்போது தொடங்குகின்றன?

முதல் பேட்ச் முடிந்துவிட்டது. இரண்டாவது பேட்ச் மார்ச் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

அஸ்ட்ராலஜி வகுப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?

அஸ்ட்ராலஜி வகுப்புகள் முதல் மூன்று மாதங்கள் அடிப்படைப் பாடமாக இருக்கும். இதை முடித்தவர்கள் அடுத்த உயர்நிலை வகுப்புகளைத் தொடரலாம்.

## Full Transcript — Download SRT & Markdown

00:34

Speaker A

ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழி வருமனின் அன்பார்ந்த வணக்கங்கள். இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் சிறப்பு நேர்காணல் பகுதி.

00:41

Speaker A

தொடர்ச்சியா வந்து பார்த்தீங்கன்னா எல்லாருக்குமே தெரியும் எல்லா விதமான துறைகளிலேயும் ஒரு ஆர்வம் இருப்பதை போல இந்த அஸ்ட்ராலஜி இந்த கணிதம் துறையும் வந்து பார்த்தீங்கன்னா கணிப்பு துறையும் ரொம்ப ஒரு ஆர்வமான ஒரு துறைதான் எல்லாருக்குமே பொதுவாக வெகுஜன மக்களுக்குமே கூட.

00:55

Speaker A

சோ இந்த நேரம் அப்படிங்கறது வந்து இந்த வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில சனிப்பெயர்ச்சி அப்படிங்கறது துவங்கி இருக்கிறது மார்ச் 5, 6-ல துவங்கி இருக்குது அப்படிங்கறதை நம்ம பார்க்கிறோம்.

01:08

Speaker A

அதைப்பற்றிய விரிவான ஒரு அலசல்களை நம்மோடு பேசுவதற்காக இணைந்திருக்கிறார் மீண்டும் அஸ்ட்ராலஜர் கம் ரிசர்ச்சர் மரியாதைக்குரிய திரு.மிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள். வணக்கம்.

01:51

Speaker B

வணக்கம்.

01:52

Speaker A

எப்படி இருக்கீங்க மேம்?

01:54

Speaker B

நல்லா இருக்கேன்.

01:54

Speaker A

நலமா இருக்கேன். மிக்க மகிழ்ச்சி உங்களை மீண்டும் சந்திக்கிறதுல. நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நீங்க தொடர்ச்சியா வகுப்புகள் எடுத்துக்கிட்டு இருக்கீங்க.

02:06

Speaker A

அந்த வகுப்புகள் அப்கமிங் கிளாசஸ் என்ன அப்படிங்கறதை டீடைல்ஸ கொஞ்சம் மக்களுக்கு சொல்லிட்டு நம்ம நிகழ்ச்சிக்குள்ள துவங்குவோம்.

02:07

Speaker B

ஆக்சுவலா வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சாச்சு. பேசிக் கோர்ஸ் அஸ்ட்ராலஜி கோர்சஸ் ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சு இப்போ செகண்ட் பேட்ச் வந்து மார்ச் 20-ஆம் தேதியிலிருந்து தொடங்குறோம்.

02:15

Speaker B

சோ இது எப்படி நான் ஸ்டூடண்ட்ஸ் சூஸ் பண்றோம் அப்படின்னா வரவங்க வந்து நான் எடுத்த உடனே அஸ்ட்ராலஜர் ஆயிடுவேனா? நான் இப்படி இதை கெயின் பண்ணிடுவேனா? நீங்க பர்டிகுலரா இந்த பேட்டர்ன் இந்த சிஸ்டம் தான் நீங்க ஃபாலோ பண்ணி சொல்லிக் கொடுப்பீங்களா? அதெல்லாம் கிடையாது.

02:39

Speaker B

இது வந்து எப்படின்னா உங்களுக்கு எல்லா சிஸ்டமுமே நம்ம டிஸ்கஸ் பண்ணுவோம். மைண்ட ஓபன் மைண்டடா வச்சிட்டு நாலேட்ஜ் கெயின் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் வரணும்.

02:50

Speaker B

ஏன்னா அஸ்ட்ராலஜி பொறுத்தவரைக்கும் இது ஒரு கடல்.

02:54

Speaker B

சோ இது ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸ் கோர்ஸா இருக்கும். இந்த த்ரீ மந்த்ஸ் கோர்ஸ் முடிச்சவங்களுக்கு தான் நான் அடுத்தது நெக்ஸ்ட் லெவல் ஹையர் லெவல் கோர்சஸ் வந்து அவங்கதான் கண்டினியூ பண்ண முடியும். சோ இந்த மூணு மாசம் கழிச்சு நெக்ஸ்ட் லெவல் கோர்சஸ் அப்படியே கண்டினியூ ஆயிடும்.

03:32

Speaker B

ஆல்ரெடி இருக்க ஃபர்ஸ்ட் பேட்ச் ஸ்டூடண்ட்ஸும் செகண்ட் பேட்ச் ஸ்டூடண்ட்ஸும் சேர்ந்து பண்ற மாதிரி இருக்கும். இடையில இடையில வொர்க்ஷாப்ஸும் அப்பப்போ பண்றோம். இப்பதான் நட்சத்திர கிளாசஸ் முடிச்சோம்.

03:48

Speaker B

சோ இப்ப வர ஸ்டூடண்ட்ஸ் வந்து வொர்க்ஷாப்ஸ்க்கு வராங்க அப்படிங்கறப்போ அவங்களுக்கு இதுல அவங்களுக்கு டிஸ்கவுண்ட்ஸ் அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கும்.

03:52

Speaker A

பண்ணிக்கலாம்.

03:52

Speaker B

நம்ம ஸ்டூடண்ட்டா இருக்கிறப்போ.

03:53

Speaker B

சோ சேரணும்னு நினைக்கிறவங்க வந்து கம் வித் ஓபன் மைண்ட் ஏன்னா இதுவரைக்கும் ஒரு 2000 பேத்துக்கு மேல எங்களுக்கு அப்ளிகேஷன்ஸ் வந்தாலுமே.

04:00

Speaker A

ஓகே ஓகே.

04:00

Speaker B

நான் இன்னும் ஒரு 15 பேத்துக்கு கூட இவங்கதான் வேணும்னு நான் இன்னும் ஃபில்டர் பண்ணல. சோ அவ்வளவு ஃபில்டர் பண்ணிதான் எடுக்கிறோம். ஏன்னா குவாலிட்டி ரொம்ப முக்கியம் அப்படிங்கறதோட எத்தனை பேர் வராங்கங்கறது இல்லை.

04:11

Speaker B

ஸ்பெசிஃபிக்கா இருக்கணும் கொஞ்ச பேர் இருந்தாலும் நாலேட்ஜபிளா இருக்கணும்.

04:14

Speaker A

20-ல ஆரம்பிச்சு எப்போ முடியுது மேம் வகுப்புகள்?

04:16

Speaker A

மூன்று மாத வகுப்புகள்.

04:17

Speaker B

மூன்று மாத வகுப்புகள்தான் இது மார்ச், ஏப்ரல், மே.

04:20

Speaker B

அதாவது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கிளாசஸ்.

04:24

Speaker B

வாரத்துல ஒரு நாள் கிளாசஸ் வைக்கிற மாதிரி ஃபர்ஸ்ட் வந்து ஃபிரைடே, சாட்டர்டேன்னு வச்சோம்.

04:30

Speaker B

பட் நிறைய பேர் கேட்டாங்க இரண்டு நாள் முடியாதுங்கிறப்போ சரி சாட்டர்டே அதை அப்படியே இரண்டு கிளாஸா ஒரே கிளாஸா மாத்திடலாம் அப்படிங்கிற மாதிரி.

04:38

Speaker A

ஓகே.

04:38

Speaker A

இந்த வகுப்புகள் தொடர்பாக நீங்க மேலதிக விவரங்களை தெரிஞ்சுக்கணும் அப்படின்னா.

04:40

Speaker A

இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விவரங்களை அனுப்புங்க. அந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து உங்களுக்கு ரிப்ளை பண்ணி உங்களை கம்யூனிகேட் பண்ணுவாங்க.

04:49

Speaker A

நன்றி.

04:50

Speaker A

மேம் இப்போ நம்ம முக்கியமான ஒரு இடத்துக்கு வந்திருக்கிறோம்.

04:54

Speaker A

சோ வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் அப்படிங்கறது குறித்து ஏற்கனவே நீங்க பலமுறை பேசி இருக்கிறீங்க.

05:00

Speaker A

நம்ம ஃபோர்த் எஸ்டேட் தமிழ்ல கூட நீங்க பேசி இருக்கிறீங்க.

05:02

Speaker A

இந்த முறை வந்திருக்கிறது என்ன சனிப்பெயர்ச்சி? என்ன மாறுபாடு இருக்கு?

05:08

Speaker A

அதுல இருந்து நம்ம துவங்கிட்டு நம்ம அடுத்த ராசிகளுக்குள்ள போகலாம்.

05:11

Speaker B

சோ வந்து மார்ச் ஆறாம் தேதி சனிப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அப்படிங்கறதுதான்.

05:19

Speaker B

அதாவது திருநள்ளாறுல இதை வந்து ஃபாலோ பண்ணுவாங்க அப்படிங்கறது.

05:22

Speaker B

கோயில் ஆகம விதிகளை வச்சு ஃபாலோ பண்ணது பலாயிரம் வருடங்களுக்கு முன்னாடியே வந்து ரிஷிகளால இது கணிக்கப்பட்ட ஒரு விஷயம்.

05:30

Speaker B

அதுல அந்த காலத்துல வந்து ராஜாக்களுக்காகவும் கோயிலுடைய அமைப்புகளுக்காகவும் கட்டமைப்பாகவும் அதுக்காக வந்தது.

05:36

Speaker B

தனிமனிதனுக்காக ஜோதிடம் வரல அந்த நேரத்துல.

05:40

Speaker B

சோ இது வந்து கூட்டாதான் வந்தது. ராஜாக்களுக்காக வந்தது. அரசு எப்படி இருக்கும்ங்கறதுக்காக வந்தது.

05:44

Speaker B

சோ அதுக்கு அப்புறமா நம்ம வந்து தனிமனித தனிமனிதனுடைய ஜோதிடம் அப்படின்னு பார்க்கிறப்போ சில விஷயங்கள் புரிய வந்தது என்ன அப்படின்னா இதைத்தான் ஒரு 200 வருடங்களா போய்க்கொண்டிருக்கிற ஒரு டிபேட்டே இதுதான்.

05:54

Speaker B

அது என்னன்னா அக்யூரஸினு ஒரு விஷயம் இருக்குது.

05:56

Speaker B

நம்மளுடைய கிராவிடேஷனல் புல்னு ஒன்னு இருக்குது. கிரகங்கள் வந்து அப்ப கணிச்ச மாதிரி அதே பேட்டர்ன்ல எல்லாம் மூவ் ஆகலங்கறது ஒன்னு இருக்கு.

06:03

Speaker B

லைட்டா நம்மளுடைய குளோபல் டில்ட் ஆயிடுச்சுங்கறது எல்லாம் ஒன்னு இருக்கு.

06:05

Speaker B

சோ இதெல்லாம் பார்க்கிறப்போ சரியான முறைப்படி வந்து பிளானட்ஸ் மூவ் ஆகுறது இல்லை.

06:12

Speaker B

அதனாலதான் நம்ம வந்து வக்ரம் அடையுது.

06:14

Speaker B

இப்ப கூட நம்ம ரீசண்டா என்ன சொல்லி இருப்போம் குருப்பெயர்ச்சியில கூட குரு வந்துட்டு முன்னாடி வந்துட்டு திரும்பி பின்னாடி போறாருன்னு ஒன்னு இருக்குது.

06:21

Speaker A

ஓகே.

06:21

Speaker B

ஓகே.

06:22

Speaker B

சோ இதெல்லாம் என்னன்னா அதான் குரு அங்கேயேதான் இருக்குது.

06:27

Speaker B

நம்ம நின்னுட்டு இருப்போம் இந்த பக்கம் ஒரு பஸ் பாஸ் ஆகி போகுறப்போ நம்ம மூவ் ஆகுற மாதிரி தெரியும்ங்கற ஒரு விஷயம் தான்.

06:32

Speaker B

சோ இந்த மாதிரி பிளானட்ஸ்ல சில விஷயங்கள் நடக்குறப்போ இதெல்லாம் அக்யூரசி.

06:36

Speaker B

ஒரு நிமிஷம் மிஸ் பண்ணா கூட எல்லாமே மாறும்.

06:40

Speaker B

லக்னம் எல்லாமே மாறிடும்.

06:41

Speaker B

சோ ஒரு சனி அப்படிங்கறப்போ ஒரு ராசியில இரண்டரை வருஷம் இருக்கும் மெதுவாகத்தான் மூவ் ஆகும் அப்படிங்கறது.

06:46

Speaker B

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஆல்ரெடி சனி வந்துட்டார் அப்படிங்கறதுதான்.

06:50

Speaker B

இப்ப வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இப்பதான் வராரு அப்படிங்கறது அந்த காலத்துல கணிக்கப்பட்ட ஒரு விஷயம்.

06:55

Speaker B

இதை வந்து நம்ம ரெஸ்பெக்ட் பண்ணிக்கலாம்.

06:57

Speaker B

சோ இது வந்து இது மரியாதையாக இதை நம்ம எடுத்துக்கிறது அப்படிங்கறதுதான்.

07:01

Speaker B

அப்ப இந்த வாக்கிய பஞ்சாங்கத்தை நம்ம எப்படி பார்க்கணும்னா குளோபல் வைஸ் எப்படி இருக்குங்கற ஒரு விஷயத்தைதான் நம்ம பார்க்கணும்.

07:05

Speaker A

உலக லெவல்ல.

07:06

Speaker B

அப்படிங்கறதுதான் பார்க்கணும். என்ன பொதுவான மாற்றங்கள் எப்படின்னு பார்க்கணும்.

07:11

Speaker B

தவிர்த்து தனிமனிதனுக்கு என்ன ஆகும்?

07:13

Speaker B

அப்படிங்கற விஷயத்தை வந்து நம்ம இப்ப பார்க்கிற மாதிரி பெருசா கிடையாது.

07:18

Speaker B

ஏன்னா அடுத்தது குருப்பெயர்ச்சி.

07:19

Speaker B

சோ இந்த சனி ஒரு விஷயம் பண்றப்போ குரு வந்து காப்பாத்துவாருன்னு ஒன்னு இருக்குது.

07:24

Speaker A

ஓகே ஓகே.

07:25

Speaker A

ஜூன் மாசம் குருப்பெயர்ச்சி வருதுன்னு நினைக்கிறேன் திங்க் சோ இல்லையா?

07:27

Speaker B

அப்ப வந்து குரு குரு வரப்போ வந்து சனி கொஞ்சம் சைலண்ட்டா வாருதான்.

07:33

Speaker B

குரு பார்த்தாலே கொஞ்சம் சனி சைலண்ட்டா வாருங்கறதுனாலதான் இதை யாரும் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம்.

07:39

Speaker B

ஆனா ஒரு சிலர் ஆல்ரெடி அவங்களுக்கு சனிப்பெயர்ச்சிங்கற ஒரு விஷயம் எல்லாம் நடந்துட்டு இருக்கறதுனால அவங்க எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.

07:43

Speaker A

பட் இது வந்து ஒரு கூடுதல் விவரத்துக்காக நம்ம எடுத்துக்கலாம் இல்லையா?

07:46

Speaker A

அந்த மாதிரி பார்க்கலாம்.

07:47

Speaker A

நெக்ஸ்ட் ராசியா வந்து பார்க்கும்போது துலா ராசி நேயர்கள்.

07:52

Speaker A

துலா ராசி நேயர்களுக்கு இந்த 2026 சனிப்பெயர்ச்சி வாக்கியம் எப்படி இருக்குது?

07:57

Speaker B

அதாவது வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஆறாவது ஸ்தானம் அப்படின்னு பார்க்கிறப்போ.

08:02

Speaker B

சனி ஒருத்தங்களுக்கு ஆறுல இருக்கு அப்படின்னாலே வெற்றி இவங்களுக்குதான்.

08:06

Speaker A

துலாத்துக்கு வெற்றி.

08:07

Speaker B

துலாத்துக்கு வெற்றி ஆனா அந்த வெற்றி சாதாரண வெற்றியா இருக்காது.

08:10

Speaker B

போராடணும்.

08:10

Speaker A

ஓ.

08:11

Speaker B

சண்டை எல்லாம் போடுவாங்க.

08:12

Speaker B

ஆல்ரெடி திருக்கணிதத்துல நடந்தப்பவே இவங்க வந்து எதிர்த்து நின்னு வாயை திறந்து முதல் பேச ஆரம்பிச்சு வந்திருப்பாங்க.

08:20

Speaker B

அதாவது அநியாயத்தை தட்டி கேட்கிற ஒரு விஷயம்னு ஒன்னு இருக்குல்ல விடாம போய் போய் ஒரு பிரச்சனை பண்ணிட்டே இருப்பாங்கல்ல.

08:27

Speaker B

பிரச்சனை பண்ணி வின் பண்ணுவாங்க அப்படிங்கறதுதான்.

08:30

Speaker B

சோ இவங்களுக்கு வந்து சனி ஃபேவர் தான் பண்ணும்.

08:32

Speaker A

ஓகே.

08:32

Speaker B

ஏன்னா துலாத்துக்கு எப்பவுமே சனி நல்ல ஒரு ஃபிரண்ட்.

08:35

Speaker B

ஏன்னா வந்து சுக்ரன் சனி அப்படிங்கறப்போ இதோட துலாங்கறது தராசு இல்லையா?

08:41

Speaker B

நியாயம் நியாயவான் அப்படிங்கற ஒரு விஷயம் இருக்கிறப்போ.

08:42

Speaker B

சனி சப்போர்ட் பண்ணும்.

08:43

Speaker B

சோ ஏன்னா இவங்க வந்து ஒரு விஷயத்துல ஃபிக்ஸடா இருந்துப்பாங்க. அவங்களுடைய நாம்ஸ் படி எது நியாயமோ எது தர்மமோ அதுல இருந்து இவங்க அவ்வளவு சீக்கிரம் மாறவே மாட்டாங்கன்னு ஒன்னு இருக்கு.

08:50

Speaker B

சோ அப்ப வெற்றி இவங்களுக்குதான் அப்படிங்கறதுதான். போராடினாலும் வெற்றி உங்களுக்கே.

08:54

Speaker B

அப்ப எஃபர்ட் கரெக்டா போடணும்.

08:55

Speaker B

இப்ப ஸ்டூடண்ட்ஸ் படிக்கிறாங்களா நல்ல எஃபர்ட் போடுங்க.

08:59

Speaker B

நீங்கதான் ஜெயிப்பீங்கன்னு ஒன்னு இருக்குது.

09:01

Speaker B

அநியாயமா தாராளமா தட்டி கேளுங்க.

09:03

Speaker B

அப்படிங்கற ஒரு விஷயம் தான்.

09:04

Speaker B

இவங்களுக்கு எதிராவே சில அநியாயங்கள் எல்லாம் நடக்கும்.

09:07

Speaker B

எதிரிகளும் உருவாகுவாங்க.

09:08

Speaker A

துலாத்துக்கு.

09:09

Speaker B

துலாத்துக்கு வந்து எதிரிகள் உருவாகுவாங்க. ஆனா வந்து வார்த்தைகளாலயே அதை நீங்க சரி பண்ணிட முடியும் அப்படிங்கறது.

09:17

Speaker A

சமாளிச்சிருவாங்கன்றீங்க.

09:18

Speaker B

சமாளிச்சிருவாங்க. இன்னும் சொல்லப்போனா இவங்களுடைய குருமார்களையே இவங்க கேள்வி கேட்பாங்க.

09:24

Speaker B

நீங்க செஞ்சது தவறுன்னா இதை மாத்துங்கன்னா இதை மாத்துங்க அப்படின்னு அவங்க சொல்லுவாங்க.

09:29

Speaker B

பட் ஸ்டில் இவங்களுக்கு டைம் நல்லா இருக்கு அப்படிங்கறதுதான்.

09:32

Speaker A

ஓகே இவங்க வழிபட வேண்டிய தெய்வம்னு யாரை நீங்க சொல்ல விரும்புறீங்க?

09:35

Speaker B

இவங்க வந்து ஹனுமனைத்தான் வழிப்பாடு பண்ணனும்.

09:37

Speaker B

ஏன்னா ஆல்ரெடி வந்து இவங்களுக்கு சனி கொஞ்சம் ஃபேவரபிளா இருக்கறதுனால ஒரு சனிக்கிழமை போல ஹனுமன் கிட்ட நின்னு ஓம் சனீஸ்வராய நமஹ அப்படின்னு சொல்லிட்டு வழிப்பாடு பண்ணிட்டு வரப்போ.

09:45

Speaker B

இவங்களுக்கு வந்து அந்த ஒரு தைரியம் அப்படிங்கற விஷயங்கள் வந்து இவங்களுக்கு அமையும்.

09:50

Speaker B

சோ பொதுவாக இந்த சனிப்பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ பெருசா பயந்துக்கணுங்கற ஒரு அவசியம் கிடையாது.

09:55

Speaker B

சனிநாளே ஒரு கரெக்ஷன் பண்ண வரவர் தான்.

09:57

Speaker B

என்ன தவறுகள் செஞ்சோமோ அதுக்கான வினை அனுபவிக்கிறதுக்கு தான் இப்ப வரோங்கறப்போ உடனே அதை நீங்க சரி பார்த்துட்டீங்கன்னா லைஃப் சேஞ்ச் ஓவர் அப்படிங்கறதுதான்.

10:04

Speaker B

அந்த லைஃபை மாத்தாம சனி கிளம்பவே மாட்டார். இல்லைன்னா நம்ம லூப்க்குள்ளயே சுத்திட்டே இருக்கிற மாதிரிதான் அந்த விஷயம் இருக்கும்.

10:08

Speaker B

சோ அதனால தவறுகளை திருத்திக்க கூடியதுக்கு தான் திருத்துறதுதான் வந்து சனிப்பெயர்ச்சியே.

10:12

Speaker A

சோ யாரும் பயப்பட வேண்டாம் பொதுவா.

10:13

Speaker B

பயப்பட வேண்டாம் மாற்றம் தான். மாற்றத்தை கொடுக்கக்கூடியதுதான் கொஞ்சம் ஸ்லோவா கொடுக்கும்.

10:19

Speaker B

அதை வந்து பொறுமையா ஏத்துக்கணும் அப்படிங்கறப்போ.

10:22

Speaker B

ஏன்னா சனி லேட்டா கொடுத்தாலும் திரும்ப வாங்க மாட்டார்னு ஒன்னு இருக்குது.

10:26

Speaker A

ஓ.

10:27

Speaker B

சனி வந்து ஒருத்தங்களுடைய வாழ்க்கையில 30 வயசு ஆகுறதுக்குள்ள எல்லாத்துக்குமே சனி வந்தே தீரும் அப்படிங்கறதுதான் ஒன்னு இருக்குது.

10:34

Speaker B

சோ ஒவ்வொரு ஏஜ் கேட்டகிரிக்குமே லைஃப் ஸ்டைல் மாறிட்டேதான் இருக்கும்ங்கறப்போ அப்கிரடேஷன் தான்.

10:38

Speaker B

சனி கொடுத்துட்டு போறப்போ உங்கள்ட்ட நல்லபடியாவே கொடுத்துட்டு போவாருங்கறப்போ அதை பத்திரமா வச்சுக்கோங்க.

10:43

Speaker B

இப்ப உங்களுக்கு இன்கம் வருதுன்னா சனிதான் கொடுக்கிறாருங்கறதை நீங்க தெரிஞ்சுக்கணும்.

10:46

Speaker A

நிச்சயமா.

10:46

Speaker A

உங்கள் வகுப்புகளைப் பற்றியும் மேலும் ஒரு செய்தி மக்களுக்கு நேரடியாக கொடுத்துட்டீங்கன்னா.

10:50

Speaker A

அவங்க நெக்ஸ்ட் உங்களை தொடர்பு கொள்வாங்க.

10:51

Speaker B

மார்ச் 20-ஆம் தேதியிலிருந்து நாங்க வந்து கிளாசஸ் ஸ்டார்ட் பண்றோம்.

10:57

Speaker B

சோ இன்னும் யாராவது இன்னும் ரெஜிஸ்டர் பண்ணாம இருக்கீங்க அப்படின்னா ரெஜிஸ்ட்ரேஷன் கீழே தெரியுற மெயில் ஐடிக்கு ஏன்னா எங்களால இப்ப கால்ஸ் அட்டென்ட் பண்ண முடியல.

11:07

Speaker B

ஒன்ஸ் நீங்க வந்து ஸ்டூடண்ட் ஆனதுக்கு அப்புறம் உங்களுக்கு வந்து வாட்ஸ்அப் குரூப்ல நான் உங்களை வந்து வச்சிருவோம்.

11:10

Speaker B

அட் தி சேம் டைம் மைண்ட் பிராட் மைண்டடா வச்சிட்டுதான் என்கிட்ட கிளாசஸ் நீங்க படிக்க வரணும்.

11:16

Speaker B

ஹைலி சிஸ்டமேட்டிக்காலாம் இருக்காது. இது வேர்ல்ட் அஸ்ட்ராலஜியா நீங்க படிக்கிற மாதிரிதான் இருக்கும்.

11:20

Speaker A

சரி ஃபைன் பலவிதமான கருத்துக்களை பொறுமையா பகிர்ந்துக்கிட்டீங்க.

11:24

Speaker A

பொறுத்திருந்து பார்க்க போற நிகழ்வுகள் என்ன அப்படின்னு.

11:27

Speaker A

மிக்க நன்றி.

11:28

Speaker B

நன்றி.

11:28

Speaker A

நன்றி மீண்டும் சந்திக்கலாம் வணக்கம்.

Topics: துலாம் ராசி சனிப்பெயர்ச்சி 2026 அஸ்ட்ராலஜி வகுப்புகள் வாக்கிய பஞ்சாங்கம் ஜோதிடம் சனி கிரகம் சுக்ரன் கிரகம் திருக்கணித பஞ்சாங்கம் ஜீவிதா சுரேஷ்குமார் ஃபோர்த் எஸ்டேட் தமிழ்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11530)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11530)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/thulam-rasi-2026-sanipeyarchi-benefits/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
