**Thulam👉 பெரிய வாய்ப்புகள் கதவை தட்டும் நேரம் வந்தாச்சு.! | Astrologer Jeevitha Sureshkumar — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/thulam-big-opportunities-knocking-astrologer-jeevitha/

துலாம் ராசிக்காரர்களுக்கான 2026 வருடம் வாழ்க்கை, கல்வி, வேலை, திருமணம் மற்றும் ஆன்மீக முன்னேற்றம் பற்றிய முக்கிய ஜோதிட ஆலோசனைகள்.

## Key Takeaways

- 2026 துலாம் ராசிக்காரர்களுக்கு கல்வி மற்றும் வேலை முன்னேற்றம் காணும் வருடம்.
- மார்ச் மாதம் பணம் மற்றும் வேலை தடைகள் ஏற்படலாம், அதனால் கவனமாக இருக்க வேண்டும்.
- மே மாதம் காதல் மற்றும் திருமணத்தில் சிறந்த வாய்ப்புகள் உருவாகும்.
- ஜூன் மாதம் ஆன்மீக சக்தி மற்றும் நீண்டகால ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.
- ஆரோக்கியம் மற்றும் உணவுப் பழக்கங்களில் கவனம் அவசியம்.

## What the video covers

- 2026 துலாம் ராசிக்காரர்களுக்கான வருடம் நிதானமாக ஆரம்பித்து முயற்சிகள் அதிகரிக்கும்.
- புதன் மற்றும் குரு கிரகங்களின் பலன் கல்வி மற்றும் கம்யூனிகேஷனில் முன்னேற்றம் தரும்.
- பிப்ரவரி மாதம் டைஜெஷன் மற்றும் ஸ்ட்ரெஸ் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, விநாயகர் வழிபாடு அவசியம்.
- மார்ச் மாதம் குரு எட்டில் இருப்பதால் பணம் மற்றும் வேலை தொடர்பான தடைகள் ஏற்படலாம், கவனமாக இருக்க வேண்டும்.
- ஏப்ரல் மாதம் சனி மற்றும் ராகு கிரகங்களின் தாக்கம் காரணமாக எதிரிகள் மற்றும் சட்ட பிரச்சனைகள் குறையும்.
- மே மாதம் சுக்கிரன் பலனுடன் காதல், திருமணம் மற்றும் பிசினஸ் பார்ட்னர்ஷிப் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்.
- ஜூன் மாதம் குரு ஒன்பதில் இருப்பதால் ஆன்மீக சக்தி மற்றும் நீண்டகால ஆசீர்வாதங்கள் கிடைக்கும்.
- 2026 முழுவதும் குரு மற்றும் புதன் கிரகங்களின் பாதிப்பு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகளை தரும்.
- பொதுவாக, 2026 துலாம் ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை மற்றும் பணியில் முக்கிய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி ஆண்டாக இருக்கும்.
- ஆரோக்கியம் மற்றும் உணவுப் பழக்கங்களில் கவனம் தேவைப்படும்.

Answers

## Questions about this video

துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் திருமணம் எப்போது நடக்கும்?

துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் சனி வக்ரம் அடையும் போது திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குரு ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் இது ஒரு நல்ல காலகட்டமாக அமையும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஜனவரி மாதத்தில் தொழில் ரீதியாக என்ன சவால்கள் இருக்கும், அதற்கான பரிகாரம் என்ன?

துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஜனவரி மாதத்தில் தொழில் ரீதியாக சற்று மந்தமான நிலை இருக்கும். இந்த காலகட்டத்தில் திருவேற்காடு கருமாரியம்மனை வழிபடுவது அல்லது அருகிலுள்ள அம்மன் கோவிலில் விளக்கு ஏற்றி வழிபடுவது இந்த நிலையை சரிசெய்ய உதவும்.

துலாம் ராசி மாணவர்கள் 2026 ஆம் ஆண்டில் படிப்பில் எவ்வாறு முன்னேறுவார்கள்?

துலாம் ராசி மாணவர்கள் 2026 பிப்ரவரி மாதத்திலிருந்து படிப்பில் நல்ல வளர்ச்சி காண்பார்கள். புதன் பலம் பெறுவதால், படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி தெளிவு கிடைக்கும், மேலும் சத்தமாகப் படிப்பது, எழுதிப் பார்ப்பது போன்ற செயல்கள் மூலம் கம்யூனிகேஷன் மேம்படும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

துலாம் ராசி 2026 எப்படி இருக்கும் அப்படின்னா,

00:06

Speaker A

சத்தம் போட்டு படிக்கிறது ஸ்டுடென்ட்ஸ் நீங்க பேசுறது நீங்களே காது கொடுத்து கேட்கிறது எழுதி பார்த்து படிக்கிறது இதெல்லாம் செய்ய செய்ய உங்களுக்கு கம்யூனிகேஷனும் ஏன்னா புதன் வரப்ப,

00:18

Speaker A

என்ன ஒரு விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கணும்னா,

00:23

Speaker A

அதே மாதிரி மார்ச் மாசம் அப்படின்னு பார்க்கிறப்போ குரு ஒரு பிரஷர் கொடுக்கிறார் உங்களுக்கு.

00:29

Speaker A

சனி வந்து அஞ்சுல இருக்கிற ராகு ஆறுல பலம் பெறறாங்க.

00:34

Speaker A

அப்படி இருக்கும் பொழுது,

00:38

Speaker A

சரி படிப்புக்கெல்லாம் சொல்லிட்டீங்க வேலைக்கெல்லாம் சொல்லிட்டீங்க முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லவே மாட்டேங்கிறீங்களே அப்படின்னா எப்ப திருமணம் நடக்கும்னு நிறைய துலாம் ராசிக்காரங்களுக்கு கேள்விகள் இருக்கும்.

00:46

Speaker A

கரெக்டா உங்களுக்கு வந்து,

00:51

Speaker A

ஒன்பதுல குரு போறது பயங்கரமான.

00:56

Speaker A

ஆகஸ்ட் மாசம் ஆகஸ்ட் 2026 சனி வந்து வக்ரம் அடையுது.

00:59

Speaker A

சனி வக்ரம் அடைதுனா என்னது?

01:59

Speaker A

துலாம் ராசி.

02:03

Speaker A

2026 எப்படி இருக்கும் அப்படின்னா கொஞ்சம் நிதானமாகவே துலாம் ராசிக்காரங்களுக்கு இந்த வருடம் ஆரம்பிக்குது அப்படின்னே சொல்லலாம்.

02:11

Speaker A

துலாம் ராசிக்காரங்கள் வந்து போடக்கூடிய எஃபர்ட்ஸ்னால இன்கிரீஸ் ஆகும் என்னென்னலாம் முயற்சி பண்ணனும்னு நினைக்கிறீங்களோ அதெல்லாம் வந்து நீங்க இந்த ஜனவரி மாசம் முயற்சி பண்ண ஆரம்பிக்கலாம்.

02:25

Speaker A

எங்கேயாவது பயணம் பண்ணனும்னு நினைக்கிறீங்களோ அந்த பயணங்கள் உங்களுக்கு நல்ல விஷயங்கள் தான் செய்யும் அது கொஞ்சம் பெனிபிஷியலா தான் இருக்கும்.

02:32

Speaker A

என்ன அப்படின்னா கெரியர் வைஸ் தொழில் சம்பந்தம் அப்படின்னு பார்க்கிறப்போ கொஞ்சம் ஸ்லோ டவுன் ஆகும் தான் ஜனவரி மாசம் மட்டும்.

02:40

Speaker A

அந்த டைம்ல வந்து திருவேற்காடு கருமாரியம்மனை வழிபாடு பண்றது அம்மன் வழிபாடு பண்ணிக்கிறது.

02:49

Speaker A

உங்க பக்கத்துல என்ன அம்மன் கோயில் இருக்குதோ அங்க போய் ஒரு வழிபாட்டு முறைகள் ஒரு விளக்கு வச்சிட்டு வரது இதெல்லாம் பண்றப்போ இந்த இது கொஞ்சம் பின்தங்கி இருக்கக்கூடியது டெம்பரரி சிச்சுவேஷன் தான்.

02:58

Speaker A

இது வந்து கொஞ்சம் கிளியர் ஆயிடும் உங்களுக்கு.

03:00

Speaker A

அடுத்தது பிப்ரவரி மாசம் அப்படின்னுலாம் வரும்போது பார்க்கிறப்போ படிக்கிற பிள்ளைகள் எல்லாம் இருப்பீங்க இல்லையா.

03:08

Speaker A

அவங்களுக்கெல்லாம் நல்ல குரோத் நல்லா இருக்கு நல்லா ப்ரோக்ரஸ் ஆவீங்க.

03:12

Speaker A

படிப்பு நல்லா இருக்கும் ஏன்னா புதன் நல்லா இருக்கு அந்த இடத்துல புதன் நல்ல பலம் பெறறாரு.

03:20

Speaker A

புதன் பலன் பெறறாரு அப்படினாலே படிப்பு மந்த நிலையிலிருந்து ஒரு தெளிவு நிலைக்கு துலாம் ராசி பெண்கள் குழந்தைகள் பசங்க யாரா இருந்தாலும் சரி.

03:30

Speaker A

நீங்க என்ன கிளாஸ் படிச்சிட்டு இருந்தாலும் சரி ஒரு தெளிவு நிலை ஒரு கிளாரிட்டிங்கிறது வரும்.

03:34

Speaker A

நீங்க நல்லாதான் படிப்பீங்க ஆனா சம்டைம்ஸ் கிளாரிட்டி வராது உங்களுக்கு.

03:38

Speaker A

அந்த கிளாரிட்டிங்கிறது உங்களுக்கு வந்துரும்.

03:40

Speaker A

கம்யூனிகேஷன் நல்லா இம்ப்ரூவ் ஆக ஆரம்பிக்கும்.

03:44

Speaker A

நல்லா சத்தம் போட்டு படிக்கிறது ஸ்டுடென்ட்ஸ் நீங்க பேசுறது நீங்களே காது கொடுத்து கேட்கிறது எழுதி பார்த்து படிக்கிறது.

03:50

Speaker A

இதெல்லாம் செய்ய செய்ய உங்களுக்கு கம்யூனிகேஷனும் ஏன்னா புதன் வரப்ப எழுத்து ரொம்ப அவசியம் எழுத்து வாயில சொல்றது அதை நீங்க காதுல கேட்கிறது அப்படிங்கிறப்போ.

04:00

Speaker A

அது அபரிதமான ஒரு ஞான ஆற்றலையே வந்து உங்களுக்கு கொடுக்கும் சோ இந்த பேட்டர்ன்ல நீங்க படிக்கிறீங்க அப்படின்னா உங்களுக்கு நல்ல ஒரு குரோத் கொடுக்கும்.

04:08

Speaker A

என்ன ஒரு விஷயத்துல ரொம்ப கவனமா இருக்கணும்னா ஃபுட்ல ரொம்ப கவனமா இருக்கணும்.

04:13

Speaker A

ஏன்னா டைஜெஷன் இஸ்யூஸ் கண்டிப்பா வந்து உங்களுக்கு பிப்ரவரி மாசத்துல வரும்.

04:17

Speaker A

ஸ்ட்ரெஸ் வரும்.

04:18

Speaker A

சில பேர்லாம் எக்ஸாம்ஸ்க்கு எல்லாம் படிச்சிட்டு இருப்பீங்க போர்டு எக்ஸாம்ஸ்க்கு எல்லாம் படிச்சிட்டு இருக்கவங்களுக்கு எல்லாம் வந்து வயித்துல தான் ப்ராப்ளம் வரும்.

04:24

Speaker A

சோ அதனால விநாயகர் வழிபாடு அப்படிங்கறது உங்களுக்கு ரொம்ப அவசியம்.

04:28

Speaker A

விநாயகர் வழிபாடு பண்ண பண்ண என்ன ஆகும்னா வாக்கு சக்தி சுத்தம் அப்படிங்கறது உங்களுக்கு கிடைக்கும்.

04:35

Speaker A

வாக்கு சித்தி கிடைக்கும் உங்களுக்கு.

04:37

Speaker A

அதோட வாயும் கொஞ்சம் கட்டுப்பாடு பண்ணிக்கணும் என்ன சாப்பிடுறோம் அப்படிங்கறதுலாம் ரொம்ப கவனமா இருக்கணும்.

04:44

Speaker A

டயட் ஜங்க் ஃபுட் சாப்பிடுறேன் உடனே ஒரு ஸ்வீட்டை சாப்பிட்டுக்கிறேன் அப்படின்னுலாம் நீங்க மாத்தி மாத்தி சாப்பிட்டீங்கன்னா டைஜெஷன் ப்ராப்ளம்ல போய் உங்களுக்கு விட்டுரும்.

04:52

Speaker A

சோ டைஜெஷன்ல நீங்க கவனமா இருக்கணும்.

04:54

Speaker A

அதே மாதிரி மார்ச் மாசம் அப்படின்னு பார்க்கிறப்போ குரு ஒரு பிரஷர் கொடுக்கிறார் உங்களுக்கு.

04:58

Speaker A

ஏன்னா எட்டுல போய் உட்காரறாரு.

05:00

Speaker A

குரு எட்டுல போய் உட்காரறாரு அப்படின்னா.

05:03

Speaker A

திடீர்னு திடீர்னு ஏதாவது ஒரு காரியங்கள் தடைபடும்.

05:09

Speaker A

பணம் வரும் அப்படியே பாதி வழியில ஸ்ட்ரக் ஆயிடும்.

05:13

Speaker A

ஏன் ஸ்ட்ரக் ஆயிருக்குன்னே தெரியாது.

05:15

Speaker A

பணம் முடங்கி போறது அந்த நேரத்துல ஏதாவது ஒரு பயங்கரமான ஒரு ரிஸ்கான ஒரு டிசிஷன் எடுக்கிறேன்லாம் எதுவும் பண்ணிடக்கூடாது.

05:21

Speaker A

ஏன்னா முக்கியமா இந்த மார்ச் மாசத்துல குரு எட்டுல போய் இருக்கிறாரு அப்படினாலே ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.

05:29

Speaker A

மிக கவனமா இருக்கணும்.

05:30

Speaker A

சுப காரியங்கள் எதுவும்மே பிளான் பண்ணாம இருந்துக்கிறது புதுசா எது டாக்குமெண்ட் சைன் பண்ணாம இருந்துக்கிறதுலாம் ரொம்ப கவனம்.

05:36

Speaker A

அந்த டைம்ல நீங்க ஆழங்குடி போயிட்டு வாங்க.

05:40

Speaker A

அந்த டைம்ல ஆழங்குடி போயிட்டு நீங்க குரு வழிபாடு பண்ணிட்டு வரீங்க அப்படின்னா.

05:46

Speaker A

இந்த பாரங்கள் அப்படிங்கறது வந்து உங்களுக்கு சரியாகும்.

05:50

Speaker A

அதே மாதிரி ஏப்ரல் மாசம் அப்படின்னு பார்க்கிறப்போ உங்களுக்கு ஹெல்த்ல கொஞ்சம் கவனம் இருக்கணும்.

05:54

Speaker A

ஹெல்த் ஆனா கொஞ்சம் ஸ்டெபிலைஸ் ஆக ஆரம்பிக்குது ஏன்னா சனி வந்து அஞ்சுல இருக்கிற ராகு ஆறுல பலம் பெறறாங்க.

06:01

Speaker A

அப்படி இருக்கும் பொழுது.

06:04

Speaker A

சில பேர் உங்களுக்கு வந்து எதிரிகளா இருக்கிறாங்க அப்படின்னா அவங்களுடைய பலம் எல்லாம் கொஞ்சம் குறையக்கூடிய டைமாவே உங்களுக்கு இருக்கும்.

06:12

Speaker A

யாராவது கோர்ட் கேஸ்லாம் சில இஸ்யூஸ் பேஸ் பண்ணிட்டு இருக்கீங்கன்னா உங்களுடைய ஆப்போனன்ட் உடைய பவர் வந்து அந்த டைம்ல கொஞ்சம் குறையும் அப்படிங்கறதுதான்.

06:20

Speaker A

வொர்க் வந்து கொஞ்சம் ஸ்மூத் ஆக ஆரம்பிக்கும்.

06:23

Speaker A

உங்களுக்கு கொஞ்சம் ஃபேவரபிலா தான் உங்களுக்கு இருக்கும்.

06:25

Speaker A

நீங்க அப்ப திருப்பாம்பரம் போயிட்டு வரீங்க அப்படின்னா சில பிளாக்கேஜஸ் இருந்துச்சுனா கூட.

06:30

Speaker A

அதை வந்து உங்களுக்கு சரி பண்ணி விட்டுரும்.

06:33

Speaker A

சரி படிப்புக்கெல்லாம் சொல்லிட்டீங்க வேலைக்கெல்லாம் சொல்லிட்டீங்க முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லவே மாட்டேங்கிறீங்களே அப்படின்னா எப்ப திருமணம் நடக்கும்னு நிறைய துலாம் ராசிக்காரங்களுக்கு கேள்விகள் இருக்கும்.

06:40

Speaker A

கரெக்டா உங்களுக்கு வந்து மே மாசம்.

06:44

Speaker A

மே மாசம் வந்து சுக்கிரன் ஏழுல பலம் பெறறாரு அப்படிங்கறப்போ.

06:50

Speaker A

உங்களுக்கு வந்து இந்த லவ் மேரேஜ் பண்றது உங்களை பிடிச்ச ஒரு லைஃப் பார்ட்னரை சந்திக்கிறது அதே மாதிரி பிசினஸ் பிசினஸ்ல கூட சில பார்ட்னர்ஷிப்.

07:00

Speaker A

ஏன்னா துலாம பொறுத்தவரைக்கும்.

07:04

Speaker A

பார்ட்னர்ஷிப் ரொம்ப முக்கியம் துலாமுடைய வாழ்க்கையில யார் பார்ட்னரா வராங்களோ அப்பதான் அவங்களுக்கு வாழ்க்கையில முன்னேற்றமே.

07:10

Speaker A

அப்போ ஒரு பார்ட்னரை சூஸ் பண்றது ரொம்ப ரொம்ப கவனம் துலாமால தனியா எப்பவுமே செயல்பட முடியாது கூட ஒரு ஆள் இருந்தா மட்டும்தான் இன்னொரு சக்தி இருக்கணும் துலாம் கிட்ட.

07:19

Speaker A

அப்போ அந்த பார்ட்னர்ஷிப் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே வந்து துலாம்க்கு ரொம்ப நல்லா இருக்கும் எப்ப மே மாசத்துல.

07:25

Speaker A

சோ அந்த டைம்ல யார்கூடயாவது சேர்ந்து ஒரு பார்ட்னர்ஷிப் பிசினஸ் ஸ்டார்ட் பண்றீங்க ரொம்ப நல்லா இருக்கும்.

07:29

Speaker A

லவ் ப்ரோபோஸ் பண்ண போறீங்க.

07:31

Speaker A

கண்டிப்பா ப்ரோபோஸ் பண்ணுங்க.

07:32

Speaker A

சக்சஸ்ஃபுல்லா இருக்கும்.

07:34

Speaker A

இல்ல ஒரு திருமண தேதி நாங்க பிக்ஸ் பண்ண போறோம்.

07:36

Speaker A

கண்டிப்பா நல்லா இருக்கும்.

07:37

Speaker A

அலையன்ஸ் பார்க்க போறோம்.

07:39

Speaker A

தாராளமா போங்க.

07:40

Speaker A

ஏன்னா இது எல்லாமே உங்களுக்கு சக்சஸ்ஃபுல்லா வரக்கூடிய டைம் ஏன்னா சுக்கிரன் ஏழுல இருக்கும் பொழுது கண்டிப்பா உங்களுக்கு வந்து.

07:47

Speaker A

இந்த லைஃப் பார்ட்னர் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு ஃபேவரபிலா தான் இருக்கும்.

07:52

Speaker A

ஒரு சிலர் சண்டை எல்லாம் போட்டு பிரிஞ்சுலாம் இருப்பீங்க.

07:54

Speaker A

சமாதானம் பேச போறீங்க.

07:57

Speaker A

மே மாசத்துல முயற்சி பண்ணுங்க.

07:59

Speaker A

கண்டிப்பா வந்து உங்களுக்கு சக்சஸ்ஃபுல்லா வரும்.

08:02

Speaker A

ஜூன் மாசம் அப்படின்னு பார்க்கிறப்போ பயங்கரமான ஒரு ஆன்மீக பலம் அப்படிங்கறது துலாம்க்கு பயங்கர ஸ்ட்ராங்கா வருது.

08:07

Speaker A

லக் கண்ணா பின்னான்னு வருதுன்னு சொல்லுவோம்ல அந்த மாதிரி.

08:10

Speaker A

ஏன்னா இந்த ஆசீர்வாதம் எப்படி இருக்க போகுதுன்னா இந்த ஜூன் மாசத்துல உங்களுக்கு குரு கொடுக்கக்கூடிய ஆசீர்வாதம்.

08:17

Speaker A

ஏன்னா குரு ஒன்பதுல வருது.

08:18

Speaker A

குரு ஒன்பதுல வரப்போ ஆன்மீக சக்தி பலம்கிறது அபரிதமா இருக்கும் லாங் டெர்மா இருக்கும்.

08:25

Speaker A

வாழ்க்கை முழுக்க அந்த பிளஸ்ஸிங்ஸ் இருக்கும் அப்படின்னு தான் சொல்லப்படுது அந்த குரு ஒன்பதுல இருக்கப்போ நம்மளுக்கு வரது.

08:30

Speaker A

அதோட சரியான பாதையை வந்து குரு காட்டுவார்.

08:33

Speaker A

அந்த குரு காட்டக்கூடிய பாதையில நீங்க போயிட்டீங்க அப்படின்னா அந்த பாதை தெளிவான பாதையாகவே இருக்கும்.

08:39

Speaker A

சில பேருக்கு வந்து ஃபாரின் போகக்கூடிய அமைப்பு எல்லாம் வரும்.

08:43

Speaker A

இப்ப துலாம் ராசிக்காரங்களுக்கு வந்து.

08:47

Speaker A

ஒன்பதுல குரு போறது பயங்கரமான ஒரு விசேஷம் அப்படின்னே பார்க்கப்படுது.

08:52

Speaker A

அது என்ன அப்படின்னா.

08:54

Speaker A

லக் சம்மயா ஆக்டிவேட் ஆகும் கண்ணா பின்னான்னு ஒரு லக் வருது அப்படின்னா.

08:58

Speaker A

அதை துலாம் ராசிக்கு கரெக்டா ஜூன் மாசத்துல அது நடக்கும்.

09:02

Speaker A

ஏன்னா ஒன்பதுல குரு வந்து யாருக்கா இருந்தாலும் பயங்கரமான ஒரு ஃபேவர் பண்ணுவோம் அப்படிங்கறதுதான்.

09:09

Speaker A

அது எப்படி இருக்கும்னா குருவுடைய அனுகிரகம் ஆசீர்வாதம் தலைமுறையே காக்கும் அப்படிங்கற மாதிரிதான்.

09:14

Speaker A

குரு கொடுக்கிற ஆசீர்வாதம் வந்து டெம்பரரி எல்லாம் கிடையாது.

09:20

Speaker A

ஒன்ஸ் அது கொடுத்துருச்சு அப்படின்னா அது லைஃப் லாங் அதாவது இந்த பேர் புகழ் கொடுக்கிறது அந்த செல்வ குரு ஒரு செல்வ செழிப்பை கொடுக்குதுன்னா.

09:29

Speaker A

அது நிலைச்சிருக்கக்கூடிய செல்வ செழிப்பு தான் வந்து குரு கொடுக்கும்.

09:33

Speaker A

அப்போ இந்த நேரங்களை ஜூன் மாசத்துல துலாம் சரியா பயன்படுத்திக்கணும்.

09:37

Speaker A

இந்த துலாமுடைய கெட்ட பழக்கம் என்னன்னு சொல்லுங்க வெளியில இருந்துலாம் யாருமே சூனியம் வைக்க தேவையே இல்லை.

09:42

Speaker A

தானே தனக்கு சூனியம் வச்சுக்கும்.

09:44

Speaker A

அப்படிங்கறது துலாம் ரொம்ப தெளிவா செய்வாங்க எல்லாம் கரெக்டா நல்லது கூடி வரப்போ இந்த துலாம் என்ன பண்ணுவாங்கன்னா.

09:51

Speaker A

சம்பந்தமே இல்லாம போய் அப்செட் ஆகி உட்காரறது.

09:54

Speaker A

சம்பந்தமே இல்லாம போய் ஒரு டிப்ரஷன் ஆகுறது.

09:56

Speaker A

இல்ல யாராவது ஒருத்தவங்களை பார்ட்னர் எதிர்பார்த்துட்டு இருக்கிறது.

10:01

Speaker A

இவங்க வந்தாதான் செய்வேன் அவங்க வந்தாதான் செய்வேன்.

10:04

Speaker A

ரொம்ப ஓவரா எங்கயாவது இன்வால்வ் ஆகிட்டா.

10:06

Speaker A

ஆனா குரு அதெல்லாம் பண்ண விடமாட்டார்.

10:08

Speaker A

அதையும் தாண்டி ஒரு சிலருக்கு உங்களுடைய கிரக அமைப்புல அந்த தடங்கள் வருது அப்படின்னா அது நீங்களே தான் தடை பண்ணிக்கிறீங்கங்கறதுனாலதான் நான் சொல்றேன்.

10:15

Speaker A

ஏன்னா சில துலாம்லாம் சொல்லுவீங்க இல்லையே எங்களுக்கு ஒன்பதுல குரு வந்துச்சு ஒன்னும் நடக்கல அப்படின்னா.

10:20

Speaker A

அது உங்களுடைய ஆட்டிடியூட் சம்பந்தப்பட்ட ப்ராப்ளமா தான் இருக்கும்.

10:24

Speaker A

அதை நீங்க கவனமா இருந்துக்கணும்.

10:26

Speaker A

அப்போ நீங்க நல்லா பேசிட்டு இருக்க நேரத்துல உங்களுடைய ஃபேமிலி மெம்பர்ஸோ உங்க பிரண்ட்ஸோ உங்க லைஃப் பார்ட்னரோ யார்கிட்டயாவது சொல்லிருங்க.

10:34

Speaker A

எனக்கு கரெக்டா ஜூன் மாசம் டைம் நல்லா இருக்கும் அந்த டைம்ல நான் இந்த மாதிரி ஒரு டிப்ரஷன் போய்.

10:40

Speaker A

நான் ஒரு சப்ப சாகுறேன்னா என்னை கொஞ்சம் தெளிவுபடுத்தி எனக்கு கொஞ்சம் நிதானப்படுத்தி இந்த லக்க அனுபவிக்கிற எனக்கு செய்யுங்க.

10:46

Speaker A

ஏன்னா உங்க கூட.

10:48

Speaker A

துலாம் ராசி கூட யாரெல்லாம் அப்ப சேர்றாங்களோ ஒரு பார்ட்னரோ ஒரு பிரண்டா வரீங்களோ அவங்களுக்கும் குரோத்.

10:57

Speaker A

குரு வந்து கூட வரவங்களுக்கும் செழிப்பை கொடுக்கக்கூடியவரா இருப்பார்.

11:02

Speaker A

ஃபாரின் போகணும்னு விருப்பப்படுறீங்க.

11:04

Speaker A

ஃபாரின் சம்பந்தப்பட்ட பெனிஃபிட்ஸ் எல்லாமே குரு அமோகமா பண்ணி கொடுப்பார்.

11:07

Speaker A

படிக்க போகணும்னு நினைக்கிறீங்களா.

11:09

Speaker A

தாராளமா அப்ராட் ட்ரை பண்ணுங்க.

11:10

Speaker A

வேலைக்கு போகணும்னு நினைக்கிறீங்களா.

11:11

Speaker A

கிளம்புங்க.

11:12

Speaker A

இல்ல எங்கயாவது ஒரு ட்ரிப் போகணும்னு நினைக்கிறீங்களா பிசினஸ் ரீதியா குரோத் பண்ணனும்னு நினைக்கிறீங்களா.

11:17

Speaker A

தாராளமா இந்த ஜூன் மாசத்துல நீங்க பண்றீங்க அப்படின்னா.

11:21

Speaker A

குரு ஒன் நைட்ல பெரிய பணக்காரன் ஆக்கிருவானா இல்ல.

11:27

Speaker A

குரு வந்து ஸ்லோ அண்ட் ஸ்டெடியா உங்களுடைய பாதைகளை கரெக்டா வகுத்து கொடுப்பார்.

11:32

Speaker A

ஜூன் மாசத்திலேயே நான் பெரிய கோடீஸ்வரன் ஆயிருவானா இல்ல கோடீஸ்வரன் ஆகுறதுக்கான.

11:38

Speaker A

வழிவகைகளையும் அந்த பாதையும் குரு உங்களுக்கு ஜூன் மாசம் அமைச்சு கொடுத்துருவார் அதை கரெக்டா லைன் பிடிச்சு நீங்க போயிட்டீங்க அப்படின்னா.

11:45

Speaker A

உங்களுக்கு குரோத் 100% கன்ஃபார்ம் அப்படிங்கறதுதான்.

11:48

Speaker A

நீங்க வந்து.

11:51

Speaker A

சிவன் வழிபாடெல்லாம் கொஞ்சம் பண்ணிக்கணும்.

11:54

Speaker A

இந்த சுசீந்திரன் அப்படிங்கிற ஒரு பேர் இருக்கக்கூடிய ஸ்தலங்களுக்கு போய் வழிபாடு பண்றது.

12:00

Speaker A

ஏன்னா இதெல்லாம் வந்து கிட்டத்தட்ட துலாம் ராசிக்காரங்களுக்கு ரகசிய வழிபாடாவே பார்க்கப்படுது.

12:07

Speaker A

துலாம் ராசிக்காரங்களுக்கு பெருமாளுடைய அனுகிரகமும் அதிகமாகவே உண்டு.

12:10

Speaker A

லட்சுமி நரசிம்மரை வழிபாடு பண்ணிக்கிறது.

12:13

Speaker A

தம்பதி சகதியமா இருக்கக்கூடிய தெய்வங்களை வழிபாடு பண்றது.

12:18

Speaker A

இந்த இந்த மாதிரி தெய்வங்களை எல்லாம் நீங்க வழிபாடு பண்றப்போ குருவுடைய அனுகிரகம் ரொம்ப அபரிதமாவே இருக்கும்.

12:25

Speaker A

ரொம்ப ஃபேவரபிலான ஒரு டைம் பீரியட்.

12:27

Speaker A

டர்னிங் பாயிண்ட் அப்படின்னே சொல்லலாம்.

12:29

Speaker A

துலாம் ராசிக்காரங்களுக்கு.

12:31

Speaker A

அப்படி இந்த ஜூன்ல இருந்து அப்படியே நம்ம ஜூலை வரோம் அப்படின்னா.

12:36

Speaker A

இந்த இடத்துல ராகுவும் உங்களுக்கு ஃபேவர் பண்ற இடத்துல தான் இருக்கிறாரு.

12:40

Speaker A

இவர் என்ன பண்ணுவார்னா.

12:42

Speaker A

யாரெல்லாம் உங்களுக்கு எதிர்முனையில இருந்து உங்களுக்கு வந்து கொஞ்சம் அகைன்ஸ்டா இருந்தாங்க ஒரு எனிமி மாதிரின்னு வச்சுக்கலாமே.

12:50

Speaker A

அவங்க எல்லாம் காணாம போயிடுவாங்க.

12:52

Speaker A

அவங்க எல்லாம் உங்க லைஃப்குள்ள வரவே மாட்டாங்க.

12:53

Speaker A

தெளிவு நிலை அப்படிங்கறது உங்களுக்கு வந்து ஆறுல இருக்கக்கூடிய ராகு உங்களுக்கு கண்டிப்பா கொடுப்பார்.

12:59

Speaker A

தேவையில்லாத அந்த இல்யூஷன்ஸ்ல இருந்துலாம் கொஞ்சம் வெளிய வருவீங்க அப்படின்றது.

13:02

Speaker A

அதே மாதிரி சில ஜாப் பிரஷர்ஸும் இருந்திருக்கும்.

13:05

Speaker A

ஏன்னா உங்களுக்கு டைம் நல்லா இருக்குங்கறப்போ.

13:08

Speaker A

எப்படி நல்லா இருக்கும்.

13:09

Speaker A

வொர்க் பிரஷர்ஸ் இருக்கும்.

13:10

Speaker A

வொர்க் நிறைய கொஞ்சம் டைம் எஃபர்ட் போடுற மாதிரி இருக்கும்.

13:13

Speaker A

சோ அந்த பிரஷர்ல இருந்து ஒரு ரிலீஃப் ஏன்னா பதட்டத்திலேயே இருப்பீங்க துலாம்.

13:17

Speaker A

அந்த பதட்டம் எல்லாம் கொஞ்சம் சரியாகும் அப்படிங்கறதுதான்.

13:21

Speaker A

இந்த ராகு கேது சாந்தி பூஜை எல்லாம் ஒரு சிலர் பண்ணிக்கிறது நல்லது அந்த சமயங்கள்ல.

13:26

Speaker A

ஏன்னா ராகு வந்து உங்களுக்கு நல்லது பண்ற இடத்திலேயே இருந்தாலும் ஒரு சிலருக்கு ஏதோ ஒரு இடத்துல கேது தடை கொடுக்கிற மாதிரி இருக்குது அப்படின்னா.

13:33

Speaker A

ராகு கேது சாந்தி பூஜை நீங்க வந்து பெரிய ராகு கேது ஸ்தலத்துக்கு போய் பண்ணனும்னு இல்ல.

13:38

Speaker A

பக்கத்துல இருக்க கோயில்களிலேயே எங்கயாவது போயிட்டு ராகு சாந்தி பூஜை எல்லாம் பண்ணிக்கிறீங்க அப்படின்னா.

13:44

Speaker A

அந்த இல்யூஷன்ஸ் மாதிரி இருக்க விஷயங்களும் வந்து உங்களுக்கு கொஞ்சம் குறைஞ்சிரும்.

13:49

Speaker A

ஆகஸ்ட் மாசம் ஆகஸ்ட் 2026 சனி வந்து வக்ரம் அடையுது.

13:53

Speaker A

சனி வக்ரம் அடையுதுனா என்னது.

13:54

Speaker A

அஞ்சுல போய் பலம் அடையுது ஆனா வக்ரம் அடையுதுங்கறப்போ சனி அஞ்சுல போயிருச்சுனாலே மிக மிக கவனம் அப்படிங்கறதுதான்.

14:01

Speaker A

இது என்ன பண்ணும்னா.

14:02

Speaker A

பேபிக்கு எல்லாம் ட்ரை பண்ணிட்டு இருக்கீங்கன்னா அந்த மாதத்துல எதுவும் வேணாம்.

14:06

Speaker A

ஏன்னா ரொம்ப மன அழுதத்தை கொடுக்கக்கூடிய ஒரு டைம் பீரியடாவே தான் அது இருக்கும்.

14:11

Speaker A

லவ் லைஃப்ல எல்லாம் ரொம்ப சில ஸ்ட்ரகிள்லாம் காட்டும்.

14:14

Speaker A

கொஞ்சம் பிரிவினைகள்லாம் காட்டுற மாதிரி இருக்கும்.

14:16

Speaker A

குழந்தை சம்பந்தப்பட்ட விஷயங்களிலேயே ப்ராப்ளம்ஸ் அதிகமா கொடுக்கும் எமோஷனல் வைஸ் பயங்கர பிரஷர் இருக்கும்.

14:22

Speaker A

உங்க வீட்டு சூழல்கள் ஆகட்டும் சுத்தி இருக்கவங்களுடைய மனநிலைமையே அழுத்தங்கள் அதிகமாவே இருக்கும்.

14:28

Speaker A

தேவையில்லாத எண்ணங்களுக்கு கொண்டு போக என்னை யாரும் பார்த்துக்கலையா இதை செய்யலையா அதை செய்யலையா.

14:33

Speaker A

எனக்கு எதுவுமே கை கூடல.

14:35

Speaker A

ஏன்னா இதுக்கு முன்னாடி உங்களுக்கு நல்லதெல்லாம் நடந்துருச்சு.

14:37

Speaker A

அது எல்லாமே மறந்துருவீங்க மறந்துட்டு இந்த சனி கொடுக்கிற அழுத்தத்துல வந்து டோட்டலா ஒரு டிப்ரஷன் ஸ்டேஜ்க்குன்னு போயிருவீங்க.

14:43

Speaker A

நீங்க வந்து கர்ப்பரக்ஷாம்பிகை வழிபாடு பண்றது நல்லது அந்த டைம்ல.

14:47

Speaker A

கர்ப்பரக்ஷாம்பிகை ஸ்தலத்துக்கு போறது.

14:51

Speaker A

இப்போ உங்களுக்கு வந்து.

14:53

Speaker A

உள்ளூர பயம் ஜாஸ்தியா இருக்கும்.

14:55

Speaker A

பதட்டம் பால்பிடேஷன்ஸ்லாம் ரொம்ப அதிகமா இருக்கும்.

14:59

Speaker A

தடுமாற்றங்கள் அதிகமா இருக்கும்.

15:00

Speaker A

அப்போ இந்த கர்ப்பரக்ஷாம்பிகை வழிபாடு பண்றதும் இந்த கர்ப்பரக்ஷாம்பிகை வந்து.

15:04

Speaker A

ஏன் பிரக்னன்ட்டா இருக்கவங்க குழந்தை வேணும்னு நினைக்கிறவங்க தான வேண்டணும் அப்படின்னுலாம் கிடையாது.

15:09

Speaker A

நம்ம மனசே ஒரு குழந்தை மாதிரிதான்.

15:11

Speaker A

அப்போ இந்த கர்ப்பரக்ஷாம்பிகை சம்பந்தப்பட்ட மந்திரங்களை உபதேசம் பண்றது கேட்கிறது படிக்கிறது முடிஞ்சா அந்த ஸ்தலங்களுக்கே போயிட்டு வரது.

15:20

Speaker A

இது எல்லாமே வந்து மனபாரங்கள் மன அழுத்தங்கள் நிறைவு பண்ணும்.

15:25

Speaker A

அதேபோல சில பேர் குழந்தை சம்பந்தமான சில இஸ்யூஸ் ஹெல்த் ரீதியா ஏதாவது பேஸ் பண்ற மாதிரி இருக்கும்.

15:30

Speaker A

அதாவது நீங்க பிரக்னன்ட்டா இருக்கீங்கன்னா ஹெல்த் கொஞ்சம் ஜாக்கிரதையா பார்த்துக்கணும்.

15:34

Speaker A

ட்ரீட்மென்ட் பேசிஸ் போறீங்கன்னா அந்த டைம்ல வேணாம்.

15:36

Speaker A

குழந்தை வேணும்னு நினைக்கிற வேண்டுகோள் வச்சுக்கலாம்.

15:38

Speaker A

அந்த டைம்ல கர்ப்பரக்ஷாம்பிகை கிட்ட போய் ஒரு வேண்டுகோள் பண்ணிட்டு வரது வேண்டுகோளுக்கான காலங்கள்.

15:43

Speaker A

இந்த சனி வந்து வக்ரமா இருக்கக்கூடிய காலங்கள்ல தான் சனி அஞ்சுல இருக்கும் பொழுது கொஞ்சம் நிதானமா இருந்துக்கிறது அப்படிங்கறது ரொம்ப நல்லது.

15:48

Speaker A

அந்த ஆகஸ்ட் 2026ல இது வந்து துலாம் ராசிக்காரங்களுக்கு இந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன் வருது.

15:52

Speaker A

கொஞ்சம் கவனமா இருந்துக்கணும்.

15:55

Speaker A

செப்டம்பர் மாசத்துல எல்லாம் செப்டம்பர் 2026ல எல்லாம் வந்து சுக்கிரன் பத்துல போய் நல்லா பலம் அடைஞ்சறாரு.

16:01

Speaker A

அப்போ வந்து சுக்கிரன் பத்துல பலம் அடைஞ்சிட்டாலே கெரியர் வைஸ் வந்து நல்ல ஒரு டாம்பீகமான ஒரு போக்கு.

16:08

Speaker A

ஏன்னா இது கிளாமர் சுக்கிரன்கிறது கிளாமரை குறிக்கக்கூடியது.

16:10

Speaker A

இப்ப எல்லாரும் கிளாமர் இண்டஸ்ட்ரில இருக்கீங்க.

16:12

Speaker A

மீடியா இண்டஸ்ட்ரில இருக்கீங்க.

16:14

Speaker A

ஒரு சோசியல் மீடியால இருக்கீங்க.

16:16

Speaker A

இல்ல உங்களுடைய ஆபீஸ்லயே நீங்க வந்து உங்களுடைய கெரியர் வந்து நல்லா பேசக்கூடியது எக்ஸ்போஸ் பண்ணக்கூடிய வேலைகள் எல்லாம் இருக்கும் இல்லையா.

16:23

Speaker A

நீங்க தான் உங்களுடைய பிரசன்ஸ் காட்ட வேண்டியதா இருக்கும்.

16:25

Speaker A

பிரசென்டேஷன் கொடுக்க வேண்டியதா இருக்கும்.

16:27

Speaker A

அந்த மாதிரிலாம் இருக்கிறப்போ உங்களுடைய கெரியர் பயங்கர சக்சஸ்ஃபுல்லா இருக்கும் ஏன்னா அந்த அட்ராக்ஷன்.

16:32

Speaker A

அந்த அட்ராக்ஷன்கிறது உங்களுக்கு நல்ல செழிப்பா இருக்கும்.

16:35

Speaker A

சுக்கிரன் வந்து ஒரு தேஜஸ் கொடுப்பார்.

16:37

Speaker A

பப்ளிக் வைஸ் நல்ல ஒரு ரெகக்னிஷன் வரக்கூடிய ஒரு அமைப்பு.

16:41

Speaker A

அதோட கிரியேட்டிவான ப்ராஜெக்ட்ஸ் உங்க கிரியேட்டிவிட்டி சுக்கிரன் பத்துல இருக்கப்போ நல்லா கிரியேட்டிவிட்டி வேலை பார்க்கும்.

16:47

Speaker A

ஒரு ப்ராஜெக்ட் நல்ல ஒரு எந்தூசியஸ்டிக்கா வேலை பார்க்கிறது.

16:51

Speaker A

சில மந்திரங்கள்லாம் உங்களுக்கு சில பேர் சில தெய்வங்கள் வழிபாடு பண்ணிட்டு இருப்பீங்க.

16:55

Speaker A

அந்த மந்திரங்களை எல்லாம் உச்சாடனம் பண்ணி நல்லா பவர்ஃபுல்லா வச்சுக்கிறீங்க அப்படின்னா அது எந்த மந்திரமா வேணா இருக்கலாம்.

17:03

Speaker A

அந்த மந்திரங்கள் முக்கியம்.

17:05

Speaker A

அதாவது பெருமாள் சம்பந்தப்பட்ட மந்திரங்கள் சொல்லிக்கலாம்.

17:10

Speaker A

இல்லனா வந்து லட்சுமி நரசிம்மர்.

17:12

Speaker A

அவங்களை வழிபாடு பண்ண சொல்லுங்க.

17:14

Speaker A

இந்த லட்சுமி நரசிம்மருக்கே நிறைய கவச ஸ்லோகங்கள்லாம் இருக்குது.

17:17

Speaker A

அந்த ஸ்லோகங்கள்ல முக்கியமான வரிகள்லாம் எடுத்து நீங்க ஞாபகப்படுத்திட்டு அந்த ஸ்லோகங்கள் சும்மா அந்த ஸ்டார்டிங் சொன்னீங்கன்னா கூட உங்களுக்கு வந்து.

17:25

Speaker A

சுக்கிரன் பயங்கரமா பவர்ஃபுல்லா ஆக்டிவேட் ஆகி ப்ரொபஷனல் லைஃப் ரொம்ப ஸ்ட்ராங் ஆயிடும்.

17:31

Speaker A

மத்தபடி வந்து துலாம் ராசிக்காரங்களுக்கு வந்து குருவுடைய அனுகிரகம் குரு கொடுத்த ஆசீர்வாதம் என்னைக்கு குரு திரும்ப வாங்க மாட்டார் அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா.

17:37

Speaker A

அது வந்து உங்க குடும்பத்துல என்ன மன அழுத்தங்கள் இருந்தாலும் அதை சரி பண்ணக்கூடிய அமைப்புலாம் உங்களுக்கு அக்டோபர் மாசத்துல இருந்தே உங்களுக்கு தெரிய ஆரம்பிச்சிரும்.

17:44

Speaker A

இந்த ஆன்மீக பற்று அப்படிங்கறதெல்லாம் உங்களுக்கு அதிகமா வர ஆரம்பிக்கும்.

17:48

Speaker A

ஏன்னா இந்த ஆன்மீகம் உங்களுடைய வாழ்க்கையை ஒரு டிரான்ஸ்பர்மேஷன் பாத்துக்குள்ளார அக்டோபர் மாசத்துல கண்டிப்பா கொண்டு போயிருவார்.

17:54

Speaker A

அப்போ உங்களுக்கு தெய்வ பலம் தெய்வ அனுகிரகம் என்ன அப்படிங்கறது உணர்தலுக்கு நீங்க போக ஆரம்பிப்பீங்க.

18:00

Speaker A

ஒரு எஜுகேஷன்ல இருக்கீங்க படிச்சிட்டு இருக்கீங்க ஸ்டுடென்ட்ஸ்னா உங்களுக்கு சக்சஸ் பயங்கரம் குரு கொடுப்பார்.

18:05

Speaker A

குரு ஒரு பெரிய சக்சஸ் வந்து உங்க எஜுகேஷன்ல கண்டிப்பா கொடுப்பார்.

18:08

Speaker A

உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும் எப்படிடா இந்த சப்ஜெக்ட்ல நம்ம இப்படி மார்க் வாங்கணும் நான் இதை படிக்கவே இல்லையே அப்படின்னா.

18:13

Speaker A

அது குருவுடைய பரிபூரண அனுகிரகம் அப்படிங்கறது உங்களுக்கு அக்டோபர் மாசத்துல ரொம்ப தெளிவாவே உங்களுக்கு தெரியும்.

18:19

Speaker A

துலாம் ராசிக்காரங்களுக்கு 2026 எப்படி இருக்கும் அப்படின்னா.

18:22

Speaker A

இது ஒரு வலிமையான ஆண்டு அப்படின்னே நான் உங்களுக்கு சொல்லுவேன்.

18:25

Speaker A

கரெக்டான ஆப்பர்சுனிட்டியை கரெக்டா நீங்க யூஸ் பண்ணிக்கணும்.

18:28

Speaker A

அதாவது ஜூன் மாசத்துல இருந்தே உங்களுக்கு வந்து சக்சஸ்க்கான பாத்ங்கிறது கரெக்டா செட் ஆயிடும்.

18:33

Speaker A

அப்போ அதுக்கான போக்கஸ் ஸ்கில்ஸ் எப்படி டெவலப் பண்ணனும் அப்படிங்கறத நீங்க கான்சென்ட்ரேட் பண்ணனும்.

18:37

Speaker A

கெரியர் வைஸ் பார்க்கிறப்போ கெரியர் வந்து செப்டம்பர்ல இருந்து டிசம்பர் வரைக்கும் நல்ல ஒரு பீக்குக்கு போகும்.

18:42

Speaker A

கரெக்டா நீங்க அதை யூஸ் பண்ணிக்கணும்.

18:44

Speaker A

பணம் அப்படிங்கறது நவம்பர் டிசம்பர்ல எல்லாம் நல்ல ஒரு செழிப்பா வந்துருச்சு.

18:48

Speaker A

கையில பணம் இருக்கு அப்படிங்கற விஷயத்தை வந்து நீங்க பார்ப்பீங்க.

18:51

Speaker A

மணி ஃப்ளோ ரொம்ப நல்லா இருக்கும் துலாம்க்கு.

18:52

Speaker A

அதே மாதிரி ஒரு லவ் மேரேஜ்லாம் பண்றீங்க அப்படின்னா.

18:55

Speaker A

மே மாசத்துல இருந்து செப்டம்பர் மாசத்துக்குள்ள பிளான் பண்ணிட்டீங்க அப்படின்னா.

19:00

Speaker A

உங்களுக்கு அந்த லவ் மேரேஜ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஜெனரலாவே மேரேஜ் அப்படிங்கற விஷயம் வந்து நல்லா சக்சஸ்ஃபுல்லாவே உங்களுக்கு போகும்.

19:04

Speaker A

மொத்தத்துல இந்த ஜூன் டு அக்டோபர் அப்படிங்கறது ஆன்மீகத்துக்கு நேரம் ஒதுக்கணும் அப்படிங்கறதுதான் நான் உங்களுக்கு சொல்லுவேன்.

19:10

Speaker A

ஏன்னா நீங்க செய்யக்கூடிய வேண்டுதல்கள் எல்லாமே வந்து பலிக்கும் நிறைவேறும் அப்படிங்கறதுதான்.

19:15

Speaker A

வந்து இந்த 2026ல நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது ஏன்னா டோட்டல் ஸ்பிரிச்சுவல் டிரான்ஸ்பர்மேஷன் அப்படிங்கறது.

19:20

Speaker A

துலாம் ராசிக்கு இந்த 2026 இருக்கு.

Topics: துலாம் ராசி 2026 ஜோதிடம் தமிழ் ஜோதிடம் கல்வி முன்னேற்றம் திருமணம் ஆன்மீக சக்தி குரு கிரகம் புதன் கிரகம் ஆரோக்கியம் பணியியல்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11864)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11864)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/thulam-big-opportunities-knocking-astrologer-jeevitha/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
