**Simmam 👉ஆன்மிக பயணத்தில் எச்சரிக்கை  | Astrologer Jeevitha |Guru Athisara Peyarchi Palangal — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/spiritual-journey-warning-astrologer-jeevitha/

சிம்ம ராசிக்குரிய குரு அதிசார பெயர்ச்சி மற்றும் ஆன்மிக பயணத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்.

## Key Takeaways

- குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
- சுகாதாரத்தில் கவனம் செலுத்துவது அவசியம், குறிப்பாக தொற்று நோய்களுக்கு.
- நிதானமாக முடிவெடுத்து, தர்மபூர்வமான வாழ்க்கையை கடைப்பிடிக்க வேண்டும்.
- குரு தர்மத்தின் வழிகாட்டியாக செயல்படுகிறார், அதனால் பயப்பட வேண்டாம்.
- ஆன்மிக பரிகாரங்கள் மற்றும் பரிகார முறைகள் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.

## What the video covers

- சனி பிடியில் இருந்து குரு பெயர்ச்சி மூலம் புதிய நல்ல பாதைகள் திறக்கப்படுகின்றன.
- சுகாதார பிரச்சனைகள் மற்றும் தொற்று நோய்களுக்கு கவனம் செலுத்த வேண்டும்.
- குரு பெயர்ச்சி ஆன்மிக தேடலுக்கு வழிகாட்டுகிறது மற்றும் வாழ்க்கையில் சுபகாரியங்களை தருகிறது.
- திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பரிகாரம் செய்தால் செழிப்பு மற்றும் நல்லது வரும்.
- மிதுனம் மற்றும் கடகம் ராசிகளில் குரு பெயர்ச்சி மற்றும் அதிசார பெயர்ச்சி நடைபெறுகிறது.
- குரு தர்மத்தின் பிரதிநிதி, நல்ல முடிவுகள் எடுக்க நிதானமாக இருக்க வேண்டும்.
- சனி மற்றும் குரு கிரகங்களின் பாதிப்புகளை புரிந்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
- குரு பெயர்ச்சி என்பது ஒரு ஆண்டு காலம் ஒரு ராசியில் இருப்பதைக் குறிக்கிறது.
- வக்ரம் (வக்ரகாலம்) என்பது குரு தற்காலிகமாக நிதானம் எடுத்துக் கொள்ளும் காலம்.
- குரு பெயர்ச்சி மூலம் திருமணம், செல்வம், செழிப்பு போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும்.

Answers

## Questions about this video

சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி என்ன பலன்களைத் தரும்?

சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் பெயர்ச்சி நல்ல விஷயங்களையே தரும். இத்தனை நாள் சனி பிடியில் இருந்தவர்களுக்கு, குரு ஒரு நல்ல பாதையை காட்ட வருகிறார். இது சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டுமா?

ஆம், சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். சுகாதாரப் பிரச்சனையால் தொற்று வியாதிகள் வரக்கூடிய அமைப்பு இருப்பதால், பயணங்களின்போது சுகாதாரமாக இருப்பது நல்லது.

சிம்ம ராசிக்காரர்கள் தேக்க நிலைகளில் இருந்து வெளிவர என்ன பரிகாரம் செய்யலாம்?

சிம்ம ராசிக்காரர்கள் தேக்க நிலைகளில் இருந்து வெளிவர திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்குச் சென்று பரிகாரம் செய்யலாம். இது சனி பிடியிலிருந்து வெளிவந்து சுபகாரியங்கள் நடக்க உதவும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

இத்தனை நாள் சனி பிடியில கொஞ்சம் இருந்திருப்பீங்க. எப்படா குரு வருவார் அப்படின்னு காத்துட்டு இருந்திருப்பீங்க.

00:06

Speaker A

இப்ப குரு உங்களுக்கு ஒரு நல்ல பாதையை காட்டுறதுக்கு தான் வராரு.

00:11

Speaker A

சுகாதார பிரச்சனைனால ஏதாவது தொற்று வியாதிகள் வரக்கூடிய ஒரு அமைப்போ இந்த மாதிரி இருக்கும்.

00:18

Speaker A

அதுல மட்டும் நீங்க கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்திருக்கிறது அப்படிங்கறது நல்லது.

00:24

Speaker A

சனி வந்து கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்குது சிம்மத்துக்கு பாதி வாழ்க்கை என்ன அப்படிங்கறத இப்ப புரிய ஆரம்பிச்சிருக்கும் உங்களுக்கு.

00:57

Speaker A

சிம்ம ராசியில இருக்கவங்களுக்கு வந்து குரு என்ன செய்ய போறாருன்னா நல்ல விஷயங்கள் தான் பண்ண போறாரு.

01:03

Speaker A

அதாவது இத்தனை நாள் சனி பிடியில கொஞ்சம் இருந்திருப்பீங்க.

01:08

Speaker A

எப்படா குரு வருவார் அப்படின்னு காத்துட்டு இருந்திருப்பீங்க.

01:12

Speaker A

இப்ப குரு உங்களுக்கு ஒரு நல்ல பாதையை காட்டுறதுக்கு தான் வராரு.

01:16

Speaker A

இதை வந்து நீங்க ஒரு நல்ல முறையில உபயோகிக்கணும்.

01:22

Speaker A

அதாவது எப்படின்னா சிம்மத்துல ரெண்டு வகையா இப்ப பார்க்கப்படுது.

01:25

Speaker A

அதாவது ஒருவேளை கணவன் மனைவி பிரிஞ்சிருக்கலாம்.

01:30

Speaker A

இல்ல பிரிஞ்சிருந்து டிவோர்ஸ்க்கு வெயிட் பண்ணிட்டு இருக்கலாம்.

01:35

Speaker A

இல்ல டிவோர்ஸ் ஆகி அடுத்த திருமணத்துக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கலாம்.

01:38

Speaker A

இப்படி எந்த நல்ல விஷயத்துக்காகவும் நீங்க எதிர்பார்த்துட்டு இருக்கீங்க.

01:47

Speaker A

அதாவது ரொம்ப கஷ்டம் துயரப்பட்டுட்டேன் நானு இத்தனை நாள் இதே துயரப்பட்டுட்டே இருந்துட்டேன்.

01:52

Speaker A

இந்த துயரத்துல இருந்து நான் மீளனும்.

01:54

Speaker A

சுபமான சில விஷயங்களை நீங்க யோசிச்சுட்டு இருப்பீங்களா நல்லது நடக்கணும் அப்படின்னு.

01:59

Speaker A

அந்த நல்லது நடக்குறதுக்கான அமைப்பு அப்படிங்கறது உங்களுக்கு கண்டிப்பா அமையும்.

02:04

Speaker A

அதே மாதிரி வெளிநாடு போகணும்னு நினைக்கிறீங்களா?

02:06

Speaker A

வெளிநாடு போகக்கூடிய அமைப்பு அந்த பிராப்தம் ஆன்மீகம் அப்படிங்கிற விஷயம் வந்து ரொம்ப நல்லா இருக்கு.

02:13

Speaker A

இந்த தடவை உங்களுக்கு வந்து அந்த குருவோட அதிசார பெயர்ச்சி வந்து நல்ல ஒரு ஆன்மீக தேடலுக்கான ஒரு விடை.

02:20

Speaker A

அந்த ஒரு திருப்தி நிலைமை அப்படி எல்லாம் கொடுத்தாலுமே.

02:25

Speaker A

உங்களுக்கு டிராவலிங் அப்படின்னு வரப்ப மட்டும் கொஞ்சம் ஹைஜீனிக்கா அதாவது சுகாதாரமா இருந்திருக்கிறது அப்படிங்கறது நல்லது.

02:30

Speaker A

ஏன்னா உங்களுடைய உடம்புல உபாதைகள் அப்படிங்கறது வந்து சுகாதார பிரச்சனைனால ஏதாவது தொற்று வியாதிகள் வரக்கூடிய ஒரு அமைப்போ இந்த மாதிரி இருக்கும்.

02:38

Speaker A

அதனால அதுல மட்டும் நீங்க கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்திருக்கிறது அப்படிங்கறது நல்லது.

02:43

Speaker A

நீங்க வந்து திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு போய் பரிகாரம் பண்ணிட்டு வந்தீங்க அப்படின்னா.

02:50

Speaker A

எல்லாமே செழிப்பாவே இருக்கும் தேக்க நிலைகள் எதுவும் இல்லாம சனி பிடியிலிருந்து கொஞ்சம் வெளிய வந்து சுபகாரியங்கள் அப்படிங்கறது உங்களுக்கு நடக்க ஆரம்பிக்கும்.

02:59

Speaker A

சரி எல்லாமே எனக்கு நல்லாதான் நடக்க போகுதா?

03:03

Speaker A

அப்ப நான் வந்து பட்டு பட்டுன்னு முடிவெடுத்துறேன் அப்படின்னு சொல்லி முடிவெடுத்துற கூடாது.

03:07

Speaker A

ஏன் அப்படின்னா இத்தனை நாள் சில தேக்க நிலைகள் அப்படிங்கறது எல்லாம் சிம்மம் சில பேர் பார்த்திருந்திருப்பீங்க லைஃப்ல.

03:12

Speaker A

இப்ப திடீர்னு எல்லாம் நல்லது நடக்க போகுது அப்படிங்கறப்போ நிதானம் தவறக்கூடிய ஒரு அமைப்பும் அப்படிங்கறது உங்களுக்கு இருக்கு.

03:18

Speaker A

சுத்தி நம்மள சுத்தி என்ன விஷயங்கள் நடக்குது.

03:23

Speaker A

எடுக்கக்கூடிய முடிவு சரியானது தானா?

03:26

Speaker A

கொஞ்சம் டைம் எடுத்து முடிவெடுத்துக்கிறது அப்படிங்கறது நல்லது.

03:33

Speaker A

ஏன் அப்படின்னா உங்களுக்கு குரு வந்து இங்க உபதேசம் பண்ணிட்டு தான் இருக்கிறார்.

03:36

Speaker A

ஒரு பாடம் சொல்லிக் கொடுக்க தான் வந்திருக்கிறார்.

03:38

Speaker A

ஏன்னா ஆல்ரெடி சனி வந்து கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்குது சிம்மத்துக்கு.

03:44

Speaker A

உங்களுக்கு வந்து அஷ்டமத்துல சனி இருக்கனால.

03:49

Speaker A

பாதி வாழ்க்கை என்ன அப்படிங்கறத இப்ப புரிய ஆரம்பிச்சிருக்கும் உங்களுக்கு.

03:54

Speaker A

இந்த தருணத்துல இருந்து இப்ப குரு ஒரு ஜஸ்ட் ஒரு அப்கிரேடேஷன்.

04:00

Speaker A

அப்படியே கொஞ்சம் ஒரு ஒரு விடுவிக்கிற மாதிரி ஒரு நல்ல காரியம் நடக்குறதுக்கு.

04:04

Speaker A

ஒரு நல்ல நிகழ்வுகள் நடக்குறதுக்குங்கறப்போ.

04:08

Speaker A

புலப்படாது சில சமயங்கள்ல.

04:11

Speaker A

அந்த நேரங்கள்ல வந்து அவசரப்பட்டு முடிவெடுத்த எந்த முடிவுகளுமே வந்து உங்களுக்கு சரியான முடிவா இருக்கறதுக்கு வாய்ப்பு ரொம்ப ரொம்ப கம்மி.

04:20

Speaker A

அதனால நிதானமா முடிவெடுத்து எடுத்த முடிவு சரிதானா அப்படின்னு குரு ஸ்தானத்துல இருக்கவங்க யார்கிட்டயாவது கேட்டு.

04:26

Speaker A

நீங்க முடிவுகள் எடுக்கிறீங்க அப்படின்னா அது ஒரு நல்ல முடிவாவே இருக்கும்.

04:30

Speaker A

நீங்களே தாந்தோன்றி தனமா முடிவுகள் எடுக்காம இருந்திருக்கிறது இந்த தருணத்துல நல்லது.

04:35

Speaker A

ஏன்னா ஆல்ரெடி உங்களுக்கு சனி இருக்கிற காரணத்தினால நிதானம்ங்கிற பாடம் அங்க சனி ஆல்ரெடி எடுத்துட்டு இருக்கறதுனால.

04:42

Speaker A

சுப காரியமா இருந்தாலும் சரி சுப செலவுகள் பண்றதா இருந்தாலும் சரி அது சுப விரய செலவாவே இருந்தாலும் சரி நிதானத்தோடு முடிவெடுக்கிறது அப்படிங்கறதுதான் வந்து இங்க சிம்மத்துக்கு.

04:52

Speaker A

நான் சொல்லக்கூடிய ஒரு சின்ன அட்வைஸ் அப்படின்னு கூட நீங்க எடுத்துக்கலாம்.

05:09

Speaker A

மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.

05:18

Speaker A

அதே இது நவம்பர் மாசம்.

05:25

Speaker A

பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க.

05:29

Speaker A

சனிக்கு பயந்துக்குவாங்க.

05:30

Speaker A

நிஜமா யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா?

05:36

Speaker A

ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு.

05:40

Speaker A

எங்களை எல்லாம் காப்பாத்திருவாரு அப்படிங்கறத விட.

05:45

Speaker A

கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பாரு அப்படின்னு சொல்லப்படுது.

05:52

Speaker A

அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.

05:54

Speaker A

இங்க என்ன ஆகுது அப்படின்னா.

06:00

Speaker A

யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசார பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ.

06:08

Speaker A

கர்மத்திலிருந்து தான் தர்மத்துக்கு போகணும்ங்கறதுதான் விதி.

06:13

Speaker A

அப்ப அந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும்?

06:20

Speaker A

சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி.

06:25

Speaker A

பயபக்தியோட பண்ணி.

06:30

Speaker A

குமுதம் பக்தி நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.

06:34

Speaker A

இன்னைக்கு நம்ம பேச போற விஷயம் என்ன அப்படின்னா.

06:39

Speaker A

குரு அதிசார பெயர்ச்சி.

06:41

Speaker A

அது என்ன குரு அதிசார பெயர்ச்சி?

06:43

Speaker A

சனி ஏற்கனவே எங்களை வச்சு செஞ்சுட்டு இருக்கு.

06:48

Speaker A

குரு வந்து காப்பாத்த மாட்டாரா அப்படிங்கற மாதிரி இருக்கும்.

06:51

Speaker A

அது வந்து குரு பெயர்ச்சிக்காக நம்ம காத்திருக்கிறது.

06:56

Speaker A

அக்டோபர் 18, 2025 மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.

07:05

Speaker A

அதே இது நவம்பர் மாசம்.

07:09

Speaker A

திரும்பி கடகத்திலிருந்து மிதுனத்துக்கே போறார்.

07:13

Speaker A

அதுதான் அதிசார பெயர்ச்சி.

07:15

Speaker A

அதாவது ரிவர்ஸ்ல போறது அப்படின்னு சொல்றது.

07:18

Speaker A

குருனா யாரு?

07:20

Speaker A

குரு வந்து அவர் தேவ குரு இல்லையா?

07:22

Speaker A

அவரை வந்து பிரகஸ்பதி அப்படின்னு சொல்றது.

07:24

Speaker A

தேவர்களுக்கெல்லாம் அவர் குரு.

07:26

Speaker A

அப்ப குரு இருக்கிறப்ப என்னென்ன நல்ல விஷயங்கள் நம்ம வாழ்க்கையில நடக்கும்.

07:31

Speaker A

குரு வந்து பிள்ளை பேர் ஆகட்டும்.

07:34

Speaker A

திருமணம், செல்வம், செழிப்பு.

07:36

Speaker A

அனைத்து நல்ல விஷயங்களுக்கும் குரு ரொம்ப மங்களமா பார்க்கப்படக்கூடிய ஒரு கிரகம் இல்லையா?

07:42

Speaker A

சனி கிட்ட இருந்து தப்பிக்க ஒரே வழி குரு அப்படின்னு இருந்தாலும்.

07:46

Speaker A

பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க.

07:50

Speaker A

சனிக்கு பயந்துக்குவாங்க.

07:51

Speaker A

நிஜமா யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா?

07:54

Speaker A

குருவுக்கு தான் பயந்துக்கணும்.

07:57

Speaker A

ஏன் அப்படின்னா.

07:59

Speaker A

குரு ஞானக்காரகன்.

08:01

Speaker A

அதாவது தர்மம்.

08:03

Speaker A

தர்மமா இருந்தா மட்டுமே குரு உதவி பண்ணுவார்.

08:07

Speaker A

இல்ல அப்படின்னா தர்மம் தலை காக்கும்.

08:10

Speaker A

கிருஷ்ணர் எப்படி வந்து லேட்டா வந்தாலும் பாண்டவர்களுக்கு வந்து தர்மப்படி எப்படி யுத்தம் பண்ணனுமோ.

08:16

Speaker A

அதை சொல்லிக் கொடுத்து வெற்றி அடைய வச்சார் இல்லையா?

08:18

Speaker A

தர்மத்தின் பக்கமே கிருஷ்ணர் நிப்பார் தெய்வம் தர்மத்தின் பக்கமே நிக்கும் அப்படிங்கறதுதான் வந்து குருவோட கொள்கையே.

08:24

Speaker A

அதனால ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு எங்களை எல்லாம் காப்பாத்திருவாரு அப்படிங்கறத விட.

08:29

Speaker A

நம்ம எந்த அளவுக்கு நியாய தர்மத்தோடு இருக்கிறோம் அப்படிங்கறதுதான் வந்து குரு நம்மளுக்கு சொல்லக்கூடிய விஷயமா இருக்கு.

08:35

Speaker A

சரி இந்த குரு அதிசார பெயர்ச்சினா என்ன?

08:38

Speaker A

இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.

08:41

Speaker A

புரியுற மாதிரி சொல்லுங்க.

08:43

Speaker A

எங்களுக்கு அது புரியல பெயர்ச்சினா என்ன அதிசார பெயர்ச்சினா என்ன அப்படின்னா.

08:48

Speaker A

நம்ம வந்து ஒரு வண்டியில போறோம்னு வச்சுக்கோங்க.

08:51

Speaker A

ஒரு பஸ்னு வச்சுக்கோங்க.

08:52

Speaker A

எல்லாருமே பஸ்ல போயிருப்போம்.

08:54

Speaker A

இப்ப நம்ம பஸ்ல போயிட்டு அந்த பஸ் நிக்குது.

08:58

Speaker A

பக்கத்துல ஒரு ட்ரெயின் ஃபாஸ்ட்டா போறப்ப நம்ம எப்படி ஃபீல் பண்ணுவோம்?

09:02

Speaker A

பஸ் ரிவர்ஸ்ல போற மாதிரி ஃபீல் பண்ணுவோம்.

09:04

Speaker A

ஆனா பஸ் அங்கேயே தான் நிக்குது.

09:06

Speaker A

நம்ம பஸ் ரிவர்ஸ்ல போகல.

09:07

Speaker A

அந்த மாதிரி குரு என்ன ஆகுறாருன்னா குரு ஜெனரலாவே.

09:13

Speaker A

ஒரு வருடம் ஒரு ஒரு ஒரு ராசி கட்டத்துல இருப்பாரு.

09:19

Speaker A

மொத்த ராசி கட்டங்களையும் சுத்தி வரதுக்கு 12 வருடம் ஆகும் அப்படின்னு சொல்லுவாங்க.

09:23

Speaker A

அதாவது கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பாரு அப்படின்னு சொல்லப்படுது.

09:28

Speaker A

அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.

09:30

Speaker A

இங்க என்ன ஆகுது அப்படின்னா.

09:33

Speaker A

குரு மிதுனத்திலிருந்து கடகத்துக்கு போயிட்டு இதே மாதிரி நான் எப்படி உங்களுக்கு ரிவர்ஸ் சொன்னேன்.

09:39

Speaker A

அந்த மாதிரி ரிவர்ஸ் போறாரு இப்ப.

09:41

Speaker A

அப்படியே அதாவது நம்மளுடைய பூமி சுழற்சி எப்படி காட்டுது அப்படின்னா.

09:45

Speaker A

இது வந்து வானில் நடக்கக்கூடிய ஒரு அதிசயமாவே பார்க்கப்படுது.

09:49

Speaker A

அதாவது ஜெனரலா குரு பாட்டுக்கு முன்னோக்கி தான் போகணும்.

09:53

Speaker A

வக்ரம் அடையறாரு.

09:56

Speaker A

வக்ரம்ங்கிறது ஒரு குடிகாரரை போல பிஹேவ் பண்ற மாதிரி ஒரு விஷயம்.

10:00

Speaker A

நிதானத்தை இழந்து.

10:02

Speaker A

அந்த அதாவது இந்த இடத்துல என்ன ஆகுறாருன்னா குரு கொஞ்சம் லேட் பண்ண போறார்.

10:08

Speaker A

என்னென்ன செழிப்புகள் எல்லாம் கொடுத்துட்டு இருந்தாரோ.

10:13

Speaker A

டக்குன்னு அப்படியே ஸ்டாப் ஆகுறாரு அந்த இடத்துல.

10:15

Speaker A

அப்ப என்ன பண்ணுவேன்?

10:16

Speaker A

குரு ஏன் ஸ்டாப் ஆகுறாரு?

10:17

Speaker A

குரு உங்களுக்கு கொஞ்ச நேரம் யோசிக்க வைப்பார்.

10:20

Speaker A

இப்ப நம்ம வந்து தெய்வ தரிசனங்களுக்கு போறோம்.

10:25

Speaker A

காத்திருந்து தரிசனம் பண்ணிட்டு வரோம் இல்லையா?

10:28

Speaker A

கொஞ்ச நேரம் நம்மளுக்கு அப்படியே டயர்ட் ஆகும்.

10:32

Speaker A

எப்படா கடவுளை பார்ப்போம்.

10:33

Speaker A

ஆனா பாத்துருவோம்.

10:34

Speaker A

அதேதான் வந்து இந்த ரிவர்ஸ் போயிட்டு ரெட்ரோ கிரேட் அப்படின்னு சொல்லுவாங்க.

10:40

Speaker A

குரு வந்து பின்னோக்கி போன மாதிரி தெரியும்.

10:45

Speaker A

திரும்பவும் அதே பழைய நிலைமைக்கு அவர் மறுபடியும் இந்த வருட கடைசியிலே திரும்பவும் வந்துருவார்.

10:50

Speaker A

கொஞ்ச நாளைக்கு தற்காலிகமா அந்த மாதிரி இருக்கக்கூடிய அந்த வான்ல அந்த வானியல் சாஸ்திரப்படி.

10:57

Speaker A

அந்த வானத்துல நடக்கக்கூடிய சில விஷயங்கள்னால அப்படி நம்மளுக்கு அந்த பூமியோட சுழற்சியால அப்படி தெரியுது.

11:02

Speaker A

அதாவது குரு வந்து கொஞ்சம் கிராஜுவலா அதாவது.

11:09

Speaker A

சாதாரணமாக எடுத்த உடனே ஒரு பெரிய வளர்ச்சி அப்படிங்கறது எல்லாம் குரு கொடுக்க மாட்டார்.

11:14

Speaker A

நிதானமா தான் கொடுப்பார்.

11:15

Speaker A

சனி வந்து லேட் பண்ணி லேட் பண்ணி புல் பேக் பண்ணி கொடுப்பார்.

11:20

Speaker A

ஆனா குரு வந்து குரோத்த கொடுப்பாரு உங்களுக்கு கண்ணுக்கு நேரா தெரியும் ஆனா உங்களுக்கு தெரியும் அந்த உழைப்பை போடணும்.

11:27

Speaker A

எனக்கு கண்ணு முன்னாடி ஒரு செல்வம் வரப்போகுதுங்கறது எல்லாம் தெரியும் இல்லையா?

11:33

Speaker A

அது இன்னும் நிதானிச்சு கொடுக்க போறார் அப்படிங்கறதுதான் வந்து அதிசார பெயர்ச்சி.

11:37

Speaker A

அப்படிங்கறது அர்த்தம்.

11:39

Speaker A

இப்போ என்னென்ன ராசிகளுக்கு இந்த அதிசார பெயர்ச்சி என்னென்ன மாதிரியான.

11:44

Speaker A

நல்லதை எப்படி கொடுக்க போறாரு?

11:48

Speaker A

என்ன பாடத்தை கற்றிக்க வராரு அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும்.

11:51

Speaker A

ஏன்னா குரு குரு அப்படினாலே பாடம் கற்பிக்க தான் வராரு.

11:53

Speaker A

அது இந்த அதிசார பெயர்ச்சி எப்படி தெரியுமா ஒரு கிளாஸ்ல இருந்து புதுசா இன்னொரு கிளாஸ்க்கு ஒரு வாதியார் போறப்ப.

11:59

Speaker A

அந்த வாதியார் எப்படி நம்மட்ட பிஹேவ் பண்ண போறார்னே நம்மளுக்கு தெரியாது.

12:04

Speaker A

அந்த மாதிரிதான் இப்போ இந்த அதிசார பெயர்ச்சியும் நம்மளுக்கு உணர்த்த போகக்கூடிய விஷயமா இருக்கும்.

12:10

Speaker A

சரி இந்த குரு அதிசார பெயர்ச்சி யாருக்கெல்லாம் நல்லது பண்ண போறார் அப்படின்னா.

12:16

Speaker A

கடகம், ரிஷபம், மீனம்.

12:20

Speaker A

இந்த மூணு ராசிகளுக்குமே வந்து குரு அதிசார பெயர்ச்சி நிச்சயமா நல்ல விஷயங்கள் தான் கொடுக்கும்.

12:27

Speaker A

நான் சொன்ன சில விஷயங்கள் இருக்கு இல்லையா கொஞ்சம் கவனமா இருந்துக்கணும்.

12:31

Speaker A

அதுல கவனமா இருந்துட்டீங்கன்னா உங்களுக்கு ஜாக்போட்டே அடிக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது இருக்கு.

12:36

Speaker A

யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசார பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ.

12:42

Speaker A

மிதுனம், தனுசு, மகரம்.

12:46

Speaker A

கொஞ்சம் கவனமா இருந்திருக்கிறது நல்லது இந்த அதிசார பெயர்ச்சில.

12:51

Speaker A

ஏன்னா குரு கொஞ்சம் பின்தங்கி இருக்கிறதுனால.

12:53

Speaker A

எங்கேயாவது ஒரு இடத்துல அவமானங்கள் சந்திக்கக்கூடிய ஒரு தருணத்தை அப்படிங்கறது உருவாகிவிடும்.

13:00

Speaker A

குரு உருவாக்க மாட்டார்.

13:01

Speaker A

குரு பின்தங்கி இருக்கிறதுனால அப்படி அமையக்கூடிய ஒரு தருணம் இருக்கிறதுனால.

13:07

Speaker A

கவனம் மிக கவனம் அப்படின்னே நான் இந்த மூணு ராசிகளுக்கும் சொல்லுவேன்.

13:12

Speaker A

யாருக்கெல்லாம் ஓகே அதாவது ஒரு மத்தியமா இருக்குது.

13:16

Speaker A

ஒன்னும் இல்ல நீங்க எல்லாம் பிரச்சனை இல்ல உங்களை எல்லாம் குரு அதிசார பெயர்ச்சி பெருசா ஒன்னும் தாக்க போறது இல்ல அப்படிங்கறவங்க எல்லாம் யாருன்னு பார்த்தீங்க அப்படின்னா.

13:24

Speaker A

மேஷம், கன்னி, துலாம், விருச்சகம், கும்பம்.

13:30

Speaker A

உங்களுக்கெல்லாம் வந்து ஒரு மத்தியமான ஒரு பலன் அப்படிங்கறதுதான் வந்து இந்த குரு அதிசார பெயர்ச்சி அப்படிங்கறது சொல்லுது.

13:37

Speaker A

பொதுவாவே குரு அப்படிங்கறவர் எதுக்கு வராரு அப்படினாலே.

13:43

Speaker A

நம்ம செஞ்ச தவறுகளிலிருந்து சுட்டிக்காட்டி அதை சரி செய்யறதுக்கு தான்.

13:47

Speaker A

அப்ப இந்த குரு அதிசார பெயர்ச்சி பார்த்து நம்ம எதுக்கு பயந்துக்கணும்னா தர்மத்துக்கு தான் பயந்துக்கணும்.

13:52

Speaker A

சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி பயபக்தியோட பண்ணி.

13:57

Speaker A

இனிமேல் அந்த தவறை நான் செய்ய மாட்டேன் திருப்பி திருப்பி அதே பேட்டர்ன் ரிப்பீட் அந்த ரெபெட்டிஷன்க்குள்ள நான் போக மாட்டேன் அப்படிங்கிற.

14:05

Speaker A

குருக்கெல்லாம் வந்து வாக்கு கொடுத்துரணும் நம்ம.

14:08

Speaker A

குரு வழிபாடு பண்றோம் அப்படினாலே.

14:11

Speaker A

அவர் வந்து நம்மளுக்கு டீச்சர் தானே.

14:14

Speaker A

அந்த டீச்சர் என்ன சொல்லுவாங்க.

14:16

Speaker A

ஓகே இனிமேல் நீ இந்த தவறு பண்ணக்கூடாது.

14:17

Speaker A

இனிமேல் அந்த தவறு பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு திரும்பவும் நம்ம அந்த தவறு பண்றோம்னா கர்மத்தின் பாதையில போயிருவோம்.

14:24

Speaker A

இது எப்படின்னா.

14:26

Speaker A

கர்மத்திலிருந்து தான் தர்மத்துக்கு போகணும்ங்கறதுதான் விதி.

14:30

Speaker A

அப்ப அந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும்?

14:34

Speaker A

செஞ்ச தவறுகளை திரும்பவும் செய்யாம இருக்கணும்.

14:38

Speaker A

அதேபோல அந்த கம்ஃபர்ட் ஜோன்லயே இருக்கோம் அப்படின்னா ஒரு முயற்சி பண்ணாம இருக்கிறோம் அப்படின்னா.

14:43

Speaker A

தர்மத்தின் பாதையில நம்மளால போக முடியாது.

14:45

Speaker A

குருங்கறவரு ஒரு முயற்சி பாதையை காட்டக்கூடியவர்.

14:49

Speaker A

என்னங்கறது ரிஸ்க் எடுத்து பார்க்கிறதுல தப்பு இல்லை.

14:52

Speaker A

ஆனா ரொம்ப நிதானமா அந்த ஞானத்தோட நம்ம அந்த தெய்வத்தை நம்பி இந்த யூனிவர்ஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்பி நம்ம செய்யறப்போ.

15:00

Speaker A

குரு காட்டுற வழி அப்படிங்கறது சிறந்த வழியா இருக்கும்.

15:04

Speaker A

எல்லாருடைய ஜாதகத்திலுமே வந்து குரு நல்லா இருக்கிறதுங்கறது ரொம்ப நல்லது.

15:10

Speaker A

சனிக்கு பயந்துக்கிறதை விட குருவுக்கு தான் பயந்துக்கணும்.

15:14

Speaker A

ஏன்னா சனியாவது தண்டனைகள் கொடுத்துக்கிட்டே இருந்து இருந்து திரும்ப திரும்ப சரி பண்ணுங்க சரி பண்ணுங்கங்கற மாதிரி இருக்கும்.

15:20

Speaker A

ஆனா குரு ஒருத்தங்களுக்கு கெட்டுருச்சு அப்படின்னா மீள்றதுங்கறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை.

15:25

Speaker A

அப்போ இந்த குரு தட்சணை அப்படிங்கிற ஒரு விஷயம் எல்லாம் இருக்கு இல்லையா?

15:29

Speaker A

குரு தட்சணை எல்லாம் செழிப்பான்னா அது குருவுக்கு வந்து கொடுத்து வழிபாடு பண்ணிட்டு வர்றது.

15:33

Speaker A

அந்த குரு தட்சணையில பேரம் பேசுறதோ அந்த குரு தட்சணையில வந்து இது பண்ணனா போதுமா அப்படிங்கிற மாதிரி அந்த வாக்குவாதங்கள் இருக்கிறதோ சந்தேகமோ.

15:41

Speaker A

குருனாலே சந்தேகமே படவே கூடாது.

15:43

Speaker A

குருவை நம்ம சந்தேகப்பட்டுட்டோம் அப்படின்னா ஏதோ ஒரு வகையில நம்மளுக்கு குரு தோஷமோ.

15:48

Speaker A

குரு பலம் கம்மியா இருக்குங்கறது அர்த்தம்.

15:50

Speaker A

அது குரு தோஷமாவே பார்க்கப்படுது.

15:52

Speaker A

அதாவது குருமார்களுடைய வழிப்படி போங்கன்னு சொல்றது இல்லை.

15:59

Speaker A

குருமார்கள் சொல்றதை கேட்டு அந்த பாதையை நம்ம பின்பற்றனும் அப்படினாலே.

16:05

Speaker A

குருவோட அருள் செழிப்பாவே நமக்கு இருக்கும் அப்படின்னு சொல்லி நான் முடிச்சுக்கிறேன்.

Topics: குரு பெயர்ச்சி சிம்ம ராசி ஆன்மிக பயணம் சனி பிடி தர்மம் அதிசார பெயர்ச்சி திருக்கடவூர் பரிகாரம் ஆயுர்வேத சுகாதாரம் கிரக பலன் ஜோதிடம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11909)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11909)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/spiritual-journey-warning-astrologer-jeevitha/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
