**சனிப்பெயர்ச்சியில் உச்சத்தை தொடப் போகும் ராசிகள் - Astrologer Jeevitha Suresh Kumar | Sani Peyarchi — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/sani-peyarchi-astrology-forecast/

சனி பெயர்ச்சியின் தாக்கங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான விளக்கங்கள், மனநிலை, தொழில் மற்றும் குடும்ப வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி ஜீவிதா சுரேஷ்குமார் பகிர்ந்துரைக்கிறார்.

## Key Takeaways

- சனி பெயர்ச்சி வாழ்க்கையில் தவறுகளை திருத்தும் ஒரு முக்கிய காலம்.
- ஒவ்வொரு ராசிக்கும் சனி பெயர்ச்சி தனித்துவமான விளைவுகளை ஏற்படுத்தும்.
- பொறுமை மற்றும் நல்ல தொடர்பு இந்த காலத்தில் மிகவும் அவசியம்.
- தொழில், பணம் மற்றும் குடும்ப வாழ்வில் சனி பெயர்ச்சி முக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.
- ஆஸ்ட்ராலஜர் ஜீவிதா சுரேஷ்குமார் சனி பெயர்ச்சியின் விளைவுகளை தெளிவாக விளக்குகிறார்.

## What the video covers

- சனி பெயர்ச்சி என்பது இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் முக்கிய ஜோதிட நிகழ்வு.
- சனி ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீசர் போல செயல்பட்டு, நம்ம தவறுகளை திருத்தும் நோக்கில் செயல்படுவார்.
- மேஷ ராசிக்கு 12 ஆம் ஸ்தானத்தில் சனி பெயர்ச்சி வரும் போது தூக்கம் குறைவு, மனநிலை மாறுதல் மற்றும் குடும்பத்தில் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் ஏற்படும்.
- ரிஷப ராசிக்கு 11 ஆம் ஸ்தானத்தில் சனி பெயர்ச்சி பணம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு உதவும், ஆனால் நண்பர்களுடன் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- மிதுன ராசிக்கு 10 ஆம் ஸ்தானத்தில் சனி பெயர்ச்சி வரும் போது வேலை அழுத்தம் அதிகரித்து, குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமை ஏற்படும்.
- சனி பெயர்ச்சி மூலம் தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
- இந்த காலத்தில் பொறுமை மற்றும் நல்ல தொடர்பு முக்கியம்.
- சனி பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமாக இருக்கும்.
- ஆஸ்ட்ராலஜர் ஜீவிதா சுரேஷ்குமார் சனி பெயர்ச்சியின் விளைவுகளை எளிமையாக விளக்குகிறார்.
- சனி பெயர்ச்சி மூலம் வாழ்க்கையில் ஒழுங்கு மற்றும் டிசிப்ளின் கொண்டு வர முயற்சி செய்யப்படுகிறது.

Answers

## Questions about this video

சனிப்பெயர்ச்சி என்றால் என்ன?

சனிப்பெயர்ச்சி என்பது இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் ஒரு நிகழ்வு. ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சனி பகவான் ஒரு மதிப்பெண் போடுவார்.

சனிப்பெயர்ச்சி காலத்தில் சனி பகவான் என்ன செய்வார்?

சனி பகவான் தோல்விகளை காட்டுவதை விட, ஒழுக்கத்தை கொண்டு வருவார். தூக்கத்தை கெடுத்து, மனநிலையை பாதிக்கலாம், நல்ல நட்புகளை இழக்க நேரிடலாம்.

சனிப்பெயர்ச்சியில் குழப்பங்கள் அதிகமாகுமா?

ஆம், சனிப்பெயர்ச்சியில் குழப்பங்கள் அதிகமாகும். ஆனால், இந்த குழப்பங்களை தெளிவுபடுத்திக் கொள்ள சனி பகவான் உதவுவார்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

அன்னை பர்னிச்சர்ஸ் அன்னை திருமண சீர்வரிசை பொருட்கள் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கிய திருமண சீர்வரிசை ரூபாய் 99,000 மட்டுமே. தமிழகம் முழுவதும் இலவச டோர் டெலிவரி. தொடர்புக்கு 7550014440 / 9345044404.

00:18

Speaker B

நிம்மதி ப்ராப்பர்ட்டி மேனேஜ்மென்ட். காண்டாக்ட் 7667008999.

00:24

Speaker C

ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர் கிட்டத்தட்ட ஒரு மேக்ஸ் மாஸ்டர் தான் அவரு. அவரை சனியை வந்து ஒரு கணக்கு. கணக்கு தப்புனா கணக்கு தப்பு.

00:32

Speaker C

சனி வந்து நம்மளுக்கு அந்த ஃபெயிலியரை காட்ட போறாரு அப்படிங்கறதை விட டிசிப்ளின் கொண்டு வர போறாரு அப்படிங்கறதுதான்.

00:40

Speaker C

தூக்கம் ரொம்ப முக்கியம். 12 ஆம் ஸ்தானத்துக்கு அந்த தூக்கத்தை கெடுப்பார். மனநிலையை கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவார்.

00:49

Speaker C

நல்ல நல்ல பிரெண்ட்ஷிப்பை இழக்க கூடும். அந்த பிரெண்ட்ஷிப்ல கை வைப்பார். இப்போ பார்ட்னர்ஸ், பிசினஸ் பார்ட்னர்ஸ்னு யாராவது வராங்க.

00:59

Speaker C

என்ன தொழில் செய்யறது, நான் என்ன படிக்கணும், என்னோட ஃபீல்ட் என்ன அப்படின்னு எல்லா குழப்பத்திலுமே அவங்க இருந்துட்டு இருப்பாங்க.

01:45

Speaker D

சனி பெயர்ச்சியில குழப்பம் அதிகமாகும்ன்றீங்களா?

01:47

Speaker C

குழப்பம் அதிகமாகி கிளியர் பண்ணிக்கங்கன்னு தான் நான் சொல்றேன். இது போக போக சனி புரிய வைப்பார்.

02:04

Speaker D

ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழி வர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள். இன்று நம்முடைய சிறப்பு நேர்காணலுக்காக நம்மோடு இணைந்து இருக்கிறார் ரிசர்ச்சர் ஆஸ்ட்ராலஜர் மரியாதைக்குரிய ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.

02:13

Speaker C

வணக்கம்.

02:14

Speaker D

வணக்கம்.

02:15

Speaker C

எப்படி இருக்கீங்க?

02:16

Speaker D

நல்லா இருக்கீங்களா?

02:16

Speaker C

நல்லா இருக்கேன்.

02:17

Speaker C

நீங்க எப்படி இருக்கீங்க?

02:17

Speaker D

நான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன். உங்களை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.

02:20

Speaker D

சோ மீண்டும் வருகை தந்ததற்கு ரொம்ப நன்றி முதல்ல.

02:22

Speaker C

ரொம்ப நன்றி என்னை பிஸியாக்கினதே நீங்கதான்.

02:25

Speaker C

அதுக்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்.

02:25

Speaker D

அதெல்லாம் ஒன்னும் கிடையாது.

02:26

Speaker C

நம்ம எதையோ பேச போயி என்னை வந்து ஆஸ்ட்ராலஜர்னு வெளிய தெரிய வச்சதுக்கு நீங்கதான் ஃபர்ஸ்ட்.

02:31

Speaker D

நீங்க பேசினீங்க அதன் மூலமா உங்களுக்கு வந்து பிரபலம் கிடைக்குது. மக்களும் உங்களை சந்திக்கிறாங்க. சோ மற்றற்ற மகிழ்ச்சிதான்.

02:37

Speaker D

அந்த அடிப்படையில சனி பெயர்ச்சி பலன்கள் அப்படிங்கறது பத்தி இப்ப ரீசன்ட்டா பேச ஆரம்பிச்சிருக்காங்க.

02:40

Speaker D

எல்லாமே ஒரு கியூரியாசிட்டி அப்படிங்கறதுனால நானும் அதை வந்து.

02:43

Speaker D

என்னதான் இருக்கு அப்படிங்கறத பார்க்கலாம்ன்றதுக்காக கேட்கணும்னு உங்களை கூப்பிட்டேன்.

02:46

Speaker D

சனி பெயர்ச்சி பலன்கள் அப்படின்னா மக்களுக்கு புரியற மாதிரி எளிமையா ஒரு இன்ட்ரோடக்ஷன் கொடுத்துருங்க.

02:51

Speaker D

அப்புறம் 12 ராசிகளுக்கும் நம்ம என்ன அப்படிங்கறத நம்ம பேசிடலாம்.

02:53

Speaker C

சனி பெயர்ச்சி பலன்கள் அப்படிங்கறது வந்து சனி பெயர்ச்சிங்கறது ஒரு இரண்டரை வருஷத்துக்கு ஒருக்கா இப்படி நடந்துகிட்டே இருக்கிற ஒரு விஷயம் தான்.

02:58

Speaker C

சோ அப்படி பார்க்கிறப்ப வந்து இரண்டரை வருஷத்துக்கு ஒரு தடவை வந்து நம்மளுக்கு வந்து மார்க் போட வராரு சனி.

03:02

Speaker C

ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கும் யார் யார் என்னென்ன பண்ணுனீங்க.

03:05

Speaker C

ஒவ்வொரு ஸ்தானத்துல போய் உட்காருறார் இல்லையா சனி அப்போ அந்த ஸ்தானத்துக்கு உண்டான பாதிப்பை வந்து கொடுப்பார்.

03:10

Speaker C

பாதிப்பையும் கொடுப்பார் அதுக்கான ரிசல்ட் என்னவோ அதை சொல்லவும் செய்வார்.

03:12

Speaker C

ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபீசர்.

03:14

Speaker C

கிட்டத்தட்ட ஒரு மேக்ஸ் மாஸ்டர் தான் அவரு.

03:16

Speaker C

அவரை சனியை வந்து ஒரு கணக்கு.

03:18

Speaker C

கணக்கு தப்புனா கணக்கு தப்பு.

03:20

Speaker C

எல்லா ஸ்டெப்ஸும் கரெக்டா இருந்தாலும் ஆன்சர் தப்புனா தப்பு அந்த மாதிரிதான் அவரு.

03:24

Speaker C

சோ அப்படி பார்க்கிறப்ப ஒரு சிலருக்கு ஃபெயிலியர்னு சொல்ல முடியாது.

03:27

Speaker C

சனி வந்து நம்மளுக்கு அந்த ஃபெயிலியரை காட்ட போறாரு அப்படிங்கறதை விட டிசிப்ளின் கொண்டு வர போறாரு அப்படிங்கறதுதான்.

03:32

Speaker D

ஓகே ஓகே.

03:33

Speaker C

நம்ம தவறு செஞ்சா அதை சரிப்படுத்த வராரு.

03:34

Speaker D

திருத்த போறாரு.

03:35

Speaker C

திருத்த போறாரு.

03:36

Speaker C

அதனால வந்து அக்செப்டன்ஸ்.

03:38

Speaker C

சனி பெயர்ச்சிங்கறது டோட்டல் அக்செப்டன்ஸ்.

03:40

Speaker C

அதை பார்த்து பயந்து ஓடுறதோ ஏன்னா நம்ம தவறுகள் வந்து.

03:42

Speaker C

யாராவது சுட்டி காட்டி தான் ஆகணும்.

03:45

Speaker C

யாரோ ஒருத்தங்க நம்மள பார்த்துட்டு இருக்காங்கன்னு ஒரு ஃபியர் இருக்கு இல்லையா.

03:48

Speaker C

அவர்தான் சனீஸ்வரர்.

03:49

Speaker D

ம்ம்ம்.

03:50

Speaker C

சோ அதுக்கான ஒரு ரிசல்ட் தான் இது.

03:52

Speaker C

சோ நல்லது செஞ்சவங்களுக்கு நல்லதும்.

03:55

Speaker C

தனக்கே தெரியாமல் தவறு செஞ்சவங்களுக்கு அதை ரியலைஸ் பண்ண வச்சு ஞாபகப்படுத்துறதுக்கு வரதுதான் சனி பெயர்ச்சி.

04:00

Speaker D

சனி பெயர்ச்சி.

04:01

Speaker D

ஓகே இந்த சனி பெயர்ச்சில வந்து பார்த்தீங்கன்னா 12 ராசிகளில முதல் ராசியாக மேஷ ராசி இருக்கிறாங்க.

04:04

Speaker D

சோ மேஷ ராசி சனி பெயர்ச்சியில எப்படிப்பட்ட பலன்கள் வந்து கிடைக்க போகுது மேம்.

04:08

Speaker C

இப்போ வந்து கும்பத்துல இருந்து மீனத்துக்கு வந்து இடம் பெயர்கிறார் மார்ச் 29 ஆம் தேதி.

04:12

Speaker D

ஓகே.

04:13

Speaker C

சோ இரண்டரை வருஷத்துக்கு பயணம் பண்ண போறாரு அப்படின்னா.

04:16

Speaker C

மேஷத்துக்குன்னு பார்க்கிறப்ப அது 12 ஆம் ஸ்தானம்.

04:19

Speaker C

12 ஆம் ஸ்தானம்ங்கறது மீனத்துல போய் உட்காருறதுனால மேஷத்துக்கு இது 12 ஆம் ஸ்தானம்.

04:23

Speaker C

அப்ப 12 ஆம் ஸ்தானம் அப்படிங்கறது என்ன அப்படின்னா வந்து.

04:27

Speaker C

கிட்டத்தட்ட அது ஒரு மறைவு ஸ்தானமாவே அது பார்க்கப்படுது.

04:29

Speaker D

ம்ம்ம்.

04:30

Speaker C

சோ அதுக்கு வந்து தூக்கம் ரொம்ப முக்கியம் 12 ஆம் ஸ்தானத்துக்கு.

04:33

Speaker C

அந்த தூக்கத்தை கெடுப்பார்.

04:34

Speaker D

ஓகே.

04:35

Speaker C

மனநிலையை கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவார் மேஷ ராசிக்கு.

04:38

Speaker C

எப்படின்னா ப்ரொபஷனல் வைஸ் அவங்களுக்கு நல்லா இருக்கும்.

04:41

Speaker C

இப்ப படிக்கிறாங்க, பிசினஸ் பண்றாங்க, வொர்க் பண்றாங்கன்னா அதுல எல்லாம் எந்த பிரச்சனையும் இருக்காது.

04:45

Speaker C

ஆனா எந்த விஷயத்தை நோண்ட போறாருன்னா குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்கள்ல வந்து கொஞ்சம் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ஸ் கொடுப்பார் மேஷ ராசியில இருக்கிறவங்களுக்கு.

04:50

Speaker C

கரெக்டா கம்யூனிகேட் பண்ண முடியாம போறது.

04:52

Speaker C

ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் வந்துரும்.

04:53

Speaker D

ஓகே ஓகே.

04:54

Speaker C

சோ அந்த மிஸ்அண்டர்ஸ்டாண்டிங் வரப்போ இவங்களால ஹேண்டில் பண்ண முடியாது.

04:57

Speaker C

அப்ப சனி இங்க சொல்ல வரது என்னன்னா இந்த இடத்துல பொறுமை காக்கணும்.

05:01

Speaker C

குடும்பம்னு வரப்போ ரொம்ப பொறுமை காக்கணும்.

05:03

Speaker C

எடுத்தோம் கவுத்தோம்னு எந்த டிசிஷன் எடுக்கிறதோ எனக்கு ஏன் இப்படி நடந்துச்சுன்னு ஃபீல் பண்றதோ அது வேணாம்.

05:07

Speaker C

இது வந்து தற்காலிகமே.

05:08

Speaker C

இது எல்லாமே சரி செய்யப்படும் பொறுமையா இருந்தால்.

05:10

Speaker C

எங்கேயோ இந்த விஷயத்துல குடும்பம்ங்கிற விஷயத்துல நீங்க தவறு பண்ணி இருக்கீங்க.

05:15

Speaker C

அதனாலதான் இந்த ஸ்தானத்துல நான் வந்து உட்கார்ந்தேன்.

05:17

Speaker D

அது அவங்களுக்கே தெரிய தெரியற மாதிரி உணர்த்த உணர்த்த போறாங்கன்னு சொல்றீங்க.

05:20

Speaker C

உணர்த்தி ஆமா இது என் மேலேயும் இந்த தவறு இருந்திருக்கு நானும் இப்படி செஞ்சிருக்க கூடாது அப்படிங்கறத ரியலைஸ் பண்ண வைக்கிறதுக்கு தான் இந்த இரண்டரை காண்ட காலம்.

05:25

Speaker D

ஓகே.

05:26

Speaker D

ரிஷப ராசிக்கு எப்படி இருக்க போகுது சனி பெயர்ச்சி பலன்கள்.

05:37

Speaker C

ரிஷப ராசிக்கு வந்து ஸ்தானம் வந்து 11 வது ஸ்தானம்.

05:41

Speaker C

அப்ப 11 வது ஸ்தானம் அப்படினாலே சுக ஸ்தானம் தான் அது.

05:44

Speaker C

ரிஷபத்துக்கு.

05:45

Speaker C

தொழில் வைஸ் பணம் வரப்போகுது அப்படின்னா அது ரிஷபத்துக்கு அப்படின்னு சொல்லலாம்.

05:48

Speaker C

ஏன்னா எப்படி பணம் நிறைய பேர் இப்ப சொல்லலாம்.

05:51

Speaker C

பணம் வரப்போகுதுன்னா எங்கங்க நான் இப்படி இருக்கேன் அப்படி இருக்கேன் அப்படிம்பாங்க.

05:54

Speaker C

ஏதோ ஒரு வழியில சரியா நடந்து பணம் வரக்கூடிய அமைப்பு அந்த ஆப்பர்சுனிட்டியும் கரெக்டா யூஸ் பண்ணிக்கணும்.

06:01

Speaker C

பட் அங்க ஒரு செக் பாயிண்ட் என்ன வைக்கிறாரு அப்படின்னா நல்ல நல்ல பிரெண்ட்ஷிப்பை இழக்க கூடும்.

06:06

Speaker D

ஓகே.

06:07

Speaker C

அந்த பிரெண்ட்ஷிப்ல கை வைப்பார்.

06:10

Speaker C

இப்ப பார்ட்னர்ஸ், பிசினஸ் பார்ட்னர்ஸ்னு யாராவது வராங்க.

06:13

Speaker C

ஆல்ரெடி நல்லபடியா அவங்களோட டிராவல் பண்ணி இருந்திருப்பாங்க.

06:17

Speaker C

சோ அவங்க பிரிஞ்சு போறது.

06:19

Speaker C

சோ இந்த மாதிரி கஷ்டங்கள் இதுலயும் கொஞ்சம் கை வச்சு.

06:22

Speaker C

அங்க ஏதாவது மிஸ்டேக்னா கொஞ்சம் பேக் அடிச்சு அதுக்கப்புறம் கொடுக்கிற மாதிரி செய்வார்.

06:26

Speaker C

மத்தபடி வந்து பணம் வரவுங்கறது ரிஷபத்துக்கு நல்லா இருக்கும்.

06:28

Speaker D

அதாவது ஏற்றமா தான் இருக்குன்றீங்க.

06:30

Speaker C

ரிஷபத்துக்கு ஒரு ஏற்றமா தான் இருக்கு.

06:33

Speaker C

ஒரு பெருமூச்சு விடலாம்.

06:34

Speaker C

அதாவது என்ன தொழில் செய்யறது நான் என்ன படிக்கணும் என்னோட ஃபீல்ட் என்ன.

06:38

Speaker C

அப்படின்னு எல்லா குழப்பத்திலுமே அவங்க இருந்துட்டு இருப்பாங்க.

06:41

Speaker C

தான் ஆழ்மனசுல ஒரு விஷயம் இருக்கும் அதை நோக்கி அவங்க போயிருந்திருப்பாங்க.

06:45

Speaker C

ஆனா குடும்பத்துல இருக்கவங்க யாராவது ஒருத்தவங்க வந்து இல்ல இல்ல இது வேணாம் இதை பண்ணுங்க அப்படிங்கறப்போ.

06:50

Speaker C

எல்லாரும் சொல்றாங்க அப்படின்னு ஒரு விஷயத்தை சூஸ் பண்ணுனாங்கன்னா அது அவங்களுக்கு செட் ஆகாது.

06:53

Speaker D

ஓகே.

06:54

Speaker C

தன்னோட இன்ஸ்டிங்க்ட் என்ன சொல்லுதுங்கறத கரெக்டா கேட்டு போனாங்க அப்படின்னா கரெக்டா இருக்கும் அவங்களுக்கு.

06:58

Speaker D

மனசாட்சி சொல்றத கேட்டு நடந்துக்கங்கன்றீங்க.

07:00

Speaker C

ஆமா.

07:01

Speaker D

மிதுன ராசிக்கு எப்படி மேம் இருக்கு?

07:02

Speaker C

மிதுன ராசிக்கு வந்து பத்தாம் ஸ்தானத்துக்கு போறாரு சனி.

07:07

Speaker C

அப்ப வந்து கம்யூனிகேஷன்லயும் கொஞ்சம் கம்யூனிகேஷன்கறது வொர்க் ரீதியா பிசினஸ் ரீதியா.

07:12

Speaker C

அங்க எல்லாம் கொஞ்சம் கரெக்டா பேசி கொஞ்சம் நடந்துக்கணும்.

07:14

Speaker C

அதேபோல வொர்க்ல ஓவர் ஸ்ட்ரெஸ் வரும்.

07:16

Speaker C

இன்னும் ரெஸ்பான்சிபிலிட்டிஸ் இன்னும் பயங்கர ஜாஸ்தி ஆகும் அவங்களுக்கு.

07:19

Speaker C

ஏன்னா இந்த பாயிண்ட் ஆஃப் டைம்லயே இப்போ அதாவது இந்த சனி மாறப்போகுது அப்படிங்கறப்ப இப்பயே அவங்களுக்கு சில சில வேலைகள் நடக்க ஆரம்பிச்சிருக்கும்.

07:24

Speaker C

பணம் வரவுங்கறது இன்கிரீஸ் ஆகத்தான் போகுது.

07:26

Speaker C

அட் தி சேம் டைம் அவங்களுடைய அந்த மனநிலைமை தொழில் ரீதியா ரொம்ப அழுத்தமாகி.

07:31

Speaker C

குடும்பத்துல இருக்கவங்களோட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாம போகக்கூடிய ஒரு அமைப்பு வரும்.

07:35

Speaker C

ரெண்டையும் பேலன்ஸ் பண்றது ஒரு பெரிய போராட்டமாவே இருக்கும்.

07:37

Speaker C

ஏன்னா பண தேவைகள் அவங்களுக்கு அதிகமாகக்கூடிய சிச்சுவேஷன்.

07:39

Speaker D

ஓகே.

07:40

Speaker C

இது.

07:41

Speaker C

தனக்காக இனிமேல் நான் எனக்காக வாழ்றேன் நான் எனக்காக செலவு பண்ண போறேன்.

07:45

Speaker C

எனக்காக நான் சம்பாதிக்க போறேன் அப்படிங்கறது இருக்காங்க இல்லையா.

07:49

Speaker C

சோ அந்த மாதிரி போறப்ப இந்த வொர்க் லைஃப் பேலன்ஸ் அவங்களுக்கு தெரியணும்.

07:52

Speaker D

ஓகே மிதுனத்துக்கு.

07:53

Speaker C

சனி வந்து என்ன செய்வார்னா வொர்க்கஹாலிக் ஆக்குவார் மிதுனத்தை.

07:56

Speaker C

டோட்டல் வொர்க்கஹாலிக் ஆகி இங்க ஹெல்த் டச் ஆக நிறைய வாய்ப்பு இருக்கு.

08:00

Speaker D

ம்ம்ம்.

08:01

Speaker C

சோ அதை பேலன்ஸ் பண்ணிக்கணும் அவங்க.

08:03

Speaker D

ஹெல்த்த ரொம்ப கான்சியஸா கவனிக்கணும் அப்படிங்கறீங்க.

08:06

Speaker D

அடுத்த கட்டமா கடக ராசிக்கு எப்படி இந்த சனி பெயர்ச்சி பலன்கள் இருக்கு?

08:15

Speaker C

கடக ராசி அப்படின்னு பார்க்கிறப்போ வந்து பாக்கிய ஸ்தானத்துக்கு போறாங்க அப்படின்னு சொல்லலாம்.

08:19

Speaker C

அப்போ இதுக்கு முன்னாடி வந்து அஷ்டமத்துல இருந்தது கடகத்துக்கு.

08:22

Speaker C

சோ அஷ்டமத்துல இருந்தப்போ வச்சு செய்றதுதான் வந்து என்னென்ன தவறுகள் செஞ்சாங்களோ.

08:26

Speaker C

எல்லாத்துலயும் மாட்டி ஒரு டிப்ரஷனுக்கு போய் தன்னுடைய லெவலை கொஞ்சம் கிரவுண்ட் பண்ணி.

08:30

Speaker C

இப்ப ஒரு ரியலைசேஷன் ஸ்டேஜ்க்கு அவங்க வந்திருப்பாங்க.

08:34

Speaker C

சோ இதுல இருந்து இப்ப அவங்க பாக்கிய ஸ்தானத்துக்கு போறாங்க அப்படிங்கறப்போ.

08:38

Speaker C

அவங்களுக்கு வாழ்க்கையில சில நல்ல விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கிறப்போ அதை கரெக்டா ஹேண்டில் பண்ணுவாங்க.

08:42

Speaker C

கரெக்டா அவங்களுக்கு யூஸ் பண்ண தெரியும்.

08:44

Speaker C

இப்போ ஸ்டூடண்ட்ஸ் இருக்காங்க.

08:46

Speaker C

போன டைம் மார்க் கம்மியா வாங்கி இருந்திருப்பாங்க.

08:49

Speaker C

ஏன் மார்க் கம்மியா வாங்கணும் ஏன் நம்ம எங்க எங்கெல்லாம் நம்ம மிஸ் பண்ணனும் அப்படிங்கற விஷயம் எல்லாம் இப்ப அவங்களுக்கு புரியும்.

08:55

Speaker C

அதே மாதிரி தொழில் ரீதியாகவும் வேலை ரீதியாகவும் ஏன் எனக்கு ப்ரமோஷன் வரல.

09:00

Speaker C

ஹை அத்தாரிட்டிஸ் வந்து ஏதாவது டிஸ்டர்பன்ஸ் பண்ணிட்டு இருந்திருப்பாங்க.

09:03

Speaker C

சோ இது எல்லாமே கிளியர் ஆகக்கூடிய ஒரு அமைப்பு.

09:05

Speaker D

ஓகே.

09:06

Speaker C

புலம்பல்கள்ல இருந்து ஹப்பார்டான ஒரு மூச்சு விடக்கூடிய ஒரு அமைப்பு வந்து கடகத்துக்கு இப்ப வரும்.

09:10

Speaker D

கடகத்துக்கு இப்ப வருது.

09:11

Speaker D

சிம்ம ராசிக்கு எப்படி மேம் இருக்கு இந்த சனி பெயர்ச்சி?

09:19

Speaker C

சோ சிம்ம ராசின்னு பார்க்கிறப்போ இது அஷ்டமத்துல வருது.

09:21

Speaker C

இப்ப நான் சொன்னேன் இல்லையா கடகத்துக்கு.

09:23

Speaker C

அந்த மாதிரி கடகம் வந்து இவ்வளவு தொல்லைகள் அனுபவிச்சு இப்ப நல்லா வராங்க அப்படின்னா.

09:29

Speaker C

இவங்க வந்து இப்ப அஷ்டமத்துல வராங்க அப்படின்னா.

09:34

Speaker C

நான் ஆரம்பத்துல சொன்னேன் பார்த்தீங்களா ஒரு சிலருக்கு பெரிய பனிஷ்மென்ட்ஸ் இருக்க போகுது அப்படின்னு.

09:37

Speaker D

ஓகே.

09:38

Speaker C

சோ அந்த மாதிரி சிம்மம்.

09:39

Speaker D

ஓகே.

09:40

Speaker C

சிம்மம் வந்து உடனே சிம்ம ராசிக்காரங்க எல்லாருமே எனக்கு ஏதாவது இப்படி ஆயிடுமோ அப்படி ஆயிடுமோன்னு பயந்துக்க தேவையில்லை.

09:45

Speaker C

எதையெல்லாம் நீங்க கவனிக்காம விட்டு இருந்தீங்களோ எதையெல்லாம் அலட்சியப்படுத்தி இருந்தீங்களோ.

09:50

Speaker C

அதை எல்லாம் இப்ப வந்து கரெக்டா பாயிண்ட் பண்ணி ஃபோக்கஸ் பண்ணி காட்டுவார்.

09:53

Speaker D

ஓகே ஓகே.

09:54

Speaker C

இவங்கதானே அப்படின்னு அலட்சியப்படுத்தி அவங்களை ஒதுக்கி வச்சிருந்திருப்பாங்க மிஸ்அண்டர்ஸ்டாண்ட் பண்ணி இருக்கலாம் ஒரு சிலரை.

10:00

Speaker C

நல்லவங்களை கூட விலக்கி வைக்கிற அமைப்பு கூட நல்லா இருந்த டைம்ல அவங்களுக்கு அப்படி இருந்திருக்கும்.

10:05

Speaker C

ஒரு கோபத்தின் காரணமாக அவங்க வந்து இவங்க எனக்கு தேவையில்லைன்னு ஒரு மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்ல விட்டுட்டுலாம் போயிருப்பாங்க தெரியுமா.

10:12

Speaker C

ஒரு செகண்ட் தாட் இல்லாம நான் நினைச்சது கரெக்ட்ங்கற மாதிரி எல்லாம் சில விஷயங்கள் செஞ்சிருப்பாங்க.

10:18

Speaker C

இப்ப அதுக்கான ரியலைசேஷன் பீரியட்.

10:20

Speaker C

ஏன்னா ராங் பீப்பிள்ட்ட போய் சேர்ந்திருப்பாங்க இப்ப.

10:22

Speaker D

ஓகே.

10:23

Speaker C

அதே மாதிரி சில விஷயங்கள் கண்ணை மறைச்சிருக்கும்.

10:26

Speaker C

இப்ப அதன் மூலமா என்னென்ன நஷ்டங்கள் வரப்போகுது என்னென்ன ஃபேஸ் பண்ண போறாங்க அப்படிங்கறது எல்லாமே வந்து.

10:31

Speaker C

இப்ப சனி வெளிச்சம் போட்டு காட்டும்.

10:32

Speaker D

ஓகே ஓகே.

10:33

Speaker C

அதே மாதிரி ஃபேமிலி வைஸ்லயும் கொஞ்சம் கை வைக்கும்.

10:35

Speaker C

அஷ்டமத்துல சனி அப்படினாலே எல்லா பார்ட்டியுமே கை வைப்பார்.

10:39

Speaker C

முக்கியமா குடும்பத்துல ஏதாவது தெரிஞ்சோ தெரியாமையோ சில விஷயங்கள் நம்ம செஞ்சிருப்போம்.

10:44

Speaker C

அது எல்லாமே வெளிச்சத்துக்கு வரக்கூடிய அமைப்பு.

10:47

Speaker C

தவறுகள் செஞ்சிருந்தா வெளிச்சம் போட்டு காட்டுவார் சனி.

10:50

Speaker D

ஓகே ஓகே.

10:52

Speaker C

சோ அதுதான் இப்ப அவங்களுக்கு அஷ்டமத்துல சனி.

10:53

Speaker C

இதுக்கு முன்னாடி உழைப்பெல்லாம் நல்லா போட்டவங்க எல்லாம் இருப்பாங்க அவங்களை எல்லாம் எதுவும் பெருசா பண்ண மாட்டாங்கங்கறதே அவங்க தெரிஞ்சுக்கணும்.

10:57

Speaker C

இனிமேலும் அந்த உழைப்பை கண்டினியூ பண்ணுங்க.

10:59

Speaker C

ஜெனரலாவே சனீஸ்வரருக்கு வந்து நேர்மையா உழைப்பை போட்டுட்டா அவருக்கு எந்த பிரச்சனையுமே இல்லை.

11:03

Speaker C

நீங்க பாட்டுக்கு உங்க வேலையை பார்த்துட்டு இருந்தா பிரச்சனை இல்லை.

11:05

Speaker C

அலட்சியங்கள் அவர் தாங்க மாட்டார்.

11:07

Speaker D

உழைக்கணும்ன்றீங்க.

11:08

Speaker C

ஆமா.

11:09

Speaker D

சோ கன்னி ராசிக்கு எப்படி மேம் இருக்கு இந்த முறை சனி பெயர்ச்சி?

11:17

Speaker C

கன்னி ராசிக்கு வந்து களத்திர ஸ்தானம் ஏழாம் அதிபதி.

11:21

Speaker C

ஏழாம் இடத்துக்கு போறப்போ எல்லாம் நல்லா இருக்கும்.

11:24

Speaker C

பட் லைஃப் பார்ட்னர் இல்ல லவ் பண்றாங்க இல்ல பிசினஸ் பார்ட்னர்ஸ் இந்த மாதிரி எல்லா விஷயத்திலுமே வந்து கம்யூனிகேஷன் ப்ராப்ளம் வரும்.

11:30

Speaker C

புரிதல் சரியா வராது.

11:32

Speaker C

பொறுமை வராது.

11:33

Speaker C

இதுக்கு முன்னாடி ஏதாவது கொஞ்சம் சிக்கா போயிட்டு இருந்த மாதிரி ஒரு ரிலேஷன்ஷிப் இருந்திருக்கலாம்.

11:38

Speaker C

அதாவது சிக்கின் தி சென்ஸ் ஒரு மாதிரி ஏதோ போயிட்டு இருக்க மாதிரி.

11:40

Speaker D

பரவாயில்லை அப்படிங்கற மாதிரி.

11:42

Speaker C

இப்ப அது என்ன ஆகும்னா வெடிக்க ஆரம்பிக்கும்.

11:44

Speaker C

பொறுமைங்கறது இழக்கக்கூடியது கரெக்டா இந்த பார்ட்னர்ஸ் அப்படிங்கறது வரப்ப பொறுமை இழக்கிற ஒரு சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவங்களுக்கு வரப்ப.

11:49

Speaker C

இந்த இடத்துல அவங்களுக்கு ஒரு அட்வைஸா சொல்ற விஷயம் என்ன அப்படின்னா.

11:54

Speaker C

இந்த இடத்துல உங்க லைஃப் பார்ட்னரோ பிசினஸ் பார்ட்னரோ பார்ட்னர்னு ஒருத்தங்க வந்தாங்கனாலே ட்ரிகர் ஆயிடாதீங்க.

11:59

Speaker D

ஓகே.

12:01

Speaker C

நீங்க ட்ரிகர் பண்ணப்படுவீங்க.

12:03

Speaker C

வார்த்தைகளை விட்டுறாதீங்க நீங்க விடுற ஒவ்வொரு வார்த்தையும் ஒரு சிலருக்கு டிவோர்ஸ் ஆக வாய்ப்பு இருக்கு.

12:08

Speaker D

ஓ.

12:09

Speaker C

அந்த அளவுக்கு வந்து களத்திர ஸ்தானத்துல சனி போய் உட்காருறப்ப அது நடக்கும்.

12:13

Speaker C

அதெல்லாம் நடக்காம நம் வார்த்தைகள்ல எங்கேயோ ஒரு தவறு நடக்க போகுது அதுக்காக சில பேர் நான் சைலண்டா இருக்கேன்னு சொல்லிட்டு டோட்டல் சைலன்ஸ்ல போனா அழுத்தம்னு நினைச்சிருவாங்க.

12:19

Speaker C

அதனால அந்த சிச்சுவேஷன்ஸ ஹேண்டில் பண்ணனும் எஸ்கேப் ஆயிடக்கூடாது.

12:22

Speaker C

ஸ்மூத்தா எந்த அளவுக்கு சாஃப்டா பேசி போறாங்களோ அந்த அளவுக்கு வந்து அவங்களுக்கு நல்லா இருக்கும்.

12:26

Speaker D

கன்னிக்கு நல்லது.

12:27

Speaker D

சோ துலா ராசி எப்படி மேம் இருக்க போகுது?

12:35

Speaker C

துலாம்க்கு வந்து இப்போ ஆறுல போறார்.

12:38

Speaker C

ஆறு அப்படின்னு போனாலே அது வந்து எதிரிகள் ஸ்தானம் அந்த மாதிரி சொல்லலாம்.

12:42

Speaker C

இவங்களுக்கு எப்படின்னா ஹெல்த் கொஞ்சம் பார்த்துக்கணும்.

12:43

Speaker D

ஓகே.

12:44

Speaker C

துலாம்.

12:46

Speaker C

எல்லாமே அவங்களுக்கு வந்து கடவுள் கொடுத்திருக்கிற விஷயம் என்னன்னா துலாம் வந்து நல்ல ஆரோக்கியத்தோட பிறக்கக்கூடியவங்க தான் அவங்க.

12:51

Speaker C

ஆனா அது எல்லாத்தையுமே அலட்சியப்படுத்திடுவாங்க.

12:54

Speaker C

எனக்கு எல்லாம் இருக்கு அப்படிங்கிற ஒரு இது வரப்போ.

12:58

Speaker C

ஒவ்வொரு ஆர்கன்ஸையும் வந்து அவர் வந்து இப்ப கான்சென்ட்ரேட் பண்ண வைப்பார்.

13:03

Speaker D

துலாத்துக்கு.

13:04

Speaker C

துலாத்துக்கு அந்த ஸ்கின் எல்லாத்துலயுமே ஒரு இஸ்யூஸ் கொடுக்க வருவார் இப்ப.

13:08

Speaker C

நோய் ஸ்தானம் மாதிரி அது கிட்டத்தட்ட.

13:10

Speaker C

பட் அதுக்காக பயந்திட வேணாம்.

13:11

Speaker C

அது என்னன்னா நீங்க அதுக்கு ப்ரொடெக்ட் கொஞ்சம் கேர் பண்ணி உங்களை நீங்க செல்ஃப் கேர்.

13:15

Speaker D

ஓகே.

13:16

Speaker C

சோ துலாம்ங்கறவங்க மத்தவங்க செல்ஃப் கேர் அப்படிங்கறது என்ன சொல்றேன் அப்படின்னா.

13:21

Speaker C

மத்தவங்களுக்கு பனிஷ்மென்ட் கொடுக்கிறதா நினைச்சு தன்னைத்தானே வந்து அழுத்தத்தை ஏற்படுத்திக்குவாங்க.

13:26

Speaker C

மென்டல் பிரஷர்ஸ் தனக்குத்தானே வர வச்சுக்கிறது.

13:28

Speaker C

சோ அங்கே ஸ்டாக்னன்ட் ஆகி அவங்க நிப்பாங்க.

13:30

Speaker C

அந்த டைம்ல பாடில ஒவ்வொரு ஆர்கன் பிரச்சனை கொடுக்கும்.

13:33

Speaker C

இப்ப யார்ட்டயாவது கோவிச்சிட்டு சாப்பிடாம இருக்காங்க அப்படின்னா.

13:37

Speaker C

அவங்களுக்கு டைஜெஷன்ல ப்ராப்ளம் கொடுக்கும்.

13:39

Speaker C

இந்த ஃபுட் கிரேவிங்ஸ்லாம் சில பேத்துக்கு இருக்கும்.

13:42

Speaker C

அது ஸ்வீட் தான் ரொம்ப பிடிக்கும் துலாம்க்கு.

13:45

Speaker C

சோ அந்த மாதிரி இருக்கப்போ இப்ப பல்லுல பிரச்சனை கொடுத்து அது இன்னும் கொஞ்சம் அட்வான்ஸ் பண்ற மாதிரிலாம் சில வேலைகள் பண்றப்போ.

13:50

Speaker C

ஜாக்கிரதையா இருந்துக்கங்க பொறுமையா இருந்துக்கோங்க.

13:52

Speaker C

உடனே அவசரப்பட்டு எதுவா இருந்தாலும் அவசரப்பட்டு உங்களுக்கு.

13:54

Speaker C

இந்த மாதிரி ஒரு விஷயங்கள்ல போறப்போ இப்ப சில பேர் வந்து.

13:58

Speaker C

காஸ்மெடிக் சர்ஜரி பண்ணனும் ஏதாவது ஒன்னு பண்ணனும்னுலாம் நினைச்சிட்டு இருக்காங்கன்னா.

14:02

Speaker C

சரியான இடத்துக்கு போய் அதை பண்றது.

14:04

Speaker D

கரெக்டா பிக்ஸ் ஆகும்ன்றீங்க.

14:05

Speaker C

அந்த அதாவது மைண்ட் வந்து என்ன பண்ணும்னா உடனே அவசரப்பட்டு ஏதாவது பண்ணுதுனா பின்விளைவுகள் சந்திச்சிருவாங்க.

14:09

Speaker D

ஓகே ஓகே.

14:10

Speaker C

சோ நிறுத்தி நிதானமா அப்புறம் சொல்றேன் அப்புறம் டிசைட் பண்றேன்னு இருந்தாங்கன்னா கரெக்டா இருக்கும்.

14:13

Speaker D

கரெக்டா இருக்கும்.

14:14

Speaker D

சோ விருச்சிகம் விருச்சிக ராசிக்கு எப்படி இருக்குது இந்த சனி பெயர்ச்சி?

14:23

Speaker C

விருச்சகத்துக்கு வந்து இப்போ ஐந்தாம் ஸ்தானத்துக்கு போகுதுனாலே அது புத்திர ஸ்தானம் அந்த மாதிரி அது சொல்லப்படுது.

14:28

Speaker C

சோ அவங்களுக்கு வந்து அந்த குழந்தைகளை பார்த்துக்கிறதுல கொஞ்சம் இஸ்யூஸ் வரும்.

14:31

Speaker C

அதாவது குழந்தைகள் இப்ப குழந்தைகள் இருக்காங்க அப்படின்னா.

14:34

Speaker C

இப்ப பேரண்ட்ஸ் இருக்காங்க அப்படின்னா அவங்களுக்கு வந்து கொஞ்சம் மனக்கவலைகள் என்னால என் பையனை பார்த்துக்க முடியல என் பொண்ணை பார்த்துக்க முடியலையோ.

14:40

Speaker C

நான் எதுவும் கரெக்டா பண்ணலையோ.

14:42

Speaker C

பட் அவங்களால எதுவும் பண்ண முடியாதுங்கறது அவங்க புரிஞ்சுக்கணும்.

14:45

Speaker C

இதை நினைச்சே அவங்க ஃபீல் பண்ணிட்டு இருக்கிற மாதிரியே இருக்கும்.

14:48

Speaker C

அதே மாதிரி கொஞ்சம் திங்கிங் கெப்பாசிட்டி கன்பியூஷன்ஸ் கொஞ்சம் ஜாஸ்தி ஆகும் அவங்களுக்கு.

14:51

Speaker C

நான் என்ன சொல்றேன்னா.

14:53

Speaker C

ஒரே விஷயத்துல குழப்பத்துல அந்த குட்டையில ஊறிட்டே இருக்க வேணாம்.

14:57

Speaker C

மூவ் ஆன் பண்ணாதான் தெரியும்.

14:59

Speaker C

நம்பணும்.

15:00

Speaker C

பொறுமைங்கறது விருச்சகத்துக்கு வந்து ரொம்ப கம்மி.

15:04

Speaker C

சோ அதுவும் முக்கியமா இந்த குழந்தை இந்த மாதிரி ஒரு விஷயங்கள் இந்த மாதிரி திங்கிங்.

15:08

Speaker C

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் வரப்போ பட்டு பட்டுன்னு முடிவெடுக்கிறது.

15:10

Speaker D

ஓகே ஓகே.

15:11

Speaker C

அவங்க இவங்க இப்படி நினைச்சிட்டாங்களா உடனே இதை பண்ற இல்யூஷன்ஸ்ல பாதி இல்யூஷன்ல இருக்கறது பயம்.

15:16

Speaker C

இப்ப அவங்களுக்கு நிறைய பயம் இருக்கும்.

15:17

Speaker C

குடும்பத்தை சுத்தின நிறைய ஒரு பயம் வந்து இல்யூஷனாவே அவங்களுக்கு உருவாகும்.

15:22

Speaker D

ஓகே.

15:23

Speaker C

இதோட முடிஞ்சு போகல.

15:25

Speaker C

இது வந்து உங்களுக்கு லேர்னிங் பீரியட்.

15:28

Speaker C

இதை கரெக்டா ஹேண்டில் பண்ணி கொண்டு போயிட முடியும்.

15:30

Speaker C

ஒரு சில விருச்சக ராசிக்காரங்க வந்து குழந்தைகளை பார்த்துக்கணும் அப்படிங்கறதுக்காக கணவரோட சேர்ந்து வாழ்றவங்களும் இருப்பாங்க.

15:35

Speaker C

குழந்தைகளுக்காக நான் பிரிஞ்சு போயிடுறேன் இல்ல மாமனார் மாமியார் நாத்தனார் இவங்ககிட்ட எல்லாம் கொஞ்சம் இஸ்யூஸ் போயிட்டு இருப்பாங்க.

15:40

Speaker C

விருச்சகத்துல நிறைய இருப்பாங்க.

15:41

Speaker D

ஓகே.

15:42

Speaker C

ஹேண்டில் பண்ண முடியாம இருக்கும்.

15:43

Speaker C

ஈஸியா ஹேண்டில் பண்ண முடியும்னு நம்பணும்.

15:46

Speaker C

அவங்க டக்கு டக்குன்னு ஒரு மாதிரி டிப்ரஷன் ஆகுறாங்க இல்லையா.

15:50

Speaker C

இது எந்த விஷயத்துக்கு வேணாலும் அவங்க மனநிலைமையை தூண்டிரும்.

15:53

Speaker C

மொத்தத்துல டோட்டல் குழப்பத்துல இருப்பாங்க இந்த விஷயத்துல.

15:55

Speaker D

சனி பெயர்ச்சில குழப்பம் அதிகமாகும்ன்றீங்களா?

15:56

Speaker C

குழப்பம் அதிகமாகி கிளியர் பண்ணிக்கங்கன்னு தான் நான் சொல்றேன்.

15:59

Speaker C

இது போக போக சனி புரிய வைப்பார்.

16:01

Speaker D

ஓகே.

16:02

Speaker C

அதுக்கு பொறுமையா இருந்தாலே அது நடந்துரும்.

16:04

Speaker D

ஓகே.

16:05

Speaker D

அடுத்த கட்டமாக தனுசு ராசிக்கு எப்படி இருக்குது இந்த சனி பெயர்ச்சி?

16:14

Speaker C

தனுசு ராசிக்கு வந்து இது வந்து சுக ஸ்தானம் அப்படின்னு சொல்லலாம்.

16:18

Speaker C

இது தாயாரையும் குறிக்கும் சுக ஸ்தானத்துக்கு போறாங்க அப்படிங்கறதுதான்.

16:21

Speaker C

இதுக்கு முன்னாடி எல்லாம் பார்த்தீங்கன்னா தனுசு ராசியோட நிலைமை எப்படி இருந்துச்சுன்னா.

16:25

Speaker C

நல்லா கம்யூனிகேட் பண்ணுவாங்க நல்லா பேசுவாங்க வேலை இருந்திருக்காது.

16:29

Speaker C

இதுதான் என்னுடைய வேலை நீங்க என்ன வேலை பார்க்கிறீங்கன்னா சொல்லவே முடிஞ்சிருக்காது பாதி தனுசு ராசியால.

16:33

Speaker C

மல்டி டாஸ்கிங் பண்ணிட்டு இருந்திருப்பாங்க.

16:35

Speaker C

அதனால எந்த ப்ரொபஷனை ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி பண்ணி சொல்லணும்னு தெரியாது.

16:38

Speaker C

ஆனா இனிமேல் சொல்லுவாங்க.

16:40

Speaker D

ஓகே.

16:41

Speaker C

இனிமேல் அவங்களுக்கான ஒரு விசிட்டிங் கார்டு ஒரு ஐடென்டிஃபிகேஷன்.

16:45

Speaker C

அந்த மாதிரி மல்டி டேலன்டடா இவங்க இவங்க ஒரு மல்டி டாஸ்கர் அப்படிங்கிற ஒரு ஐடென்டிஃபிகேஷன் அவங்களுக்கு வரும்.

16:50

Speaker C

பட் வேற எங்க அடி விழுகும் அப்படின்னா.

16:53

Speaker C

குடும்பத்தை டோட்டலா டைம் ஸ்பென்ட் பண்ண முடியாம போகக்கூடிய ஒரு சிச்சுவேஷனும்.

16:58

Speaker C

குடும்பத்தை சுத்தமா அலட்சியப்படுத்தக்கூடிய ஒரு நிலைமையோ அந்த மாதிரி வரும்.

17:02

Speaker C

குடும்பத்தை டோட்டலா குடும்பத்தை விட்டே டோட்டலா விலகி போகக்கூடிய நிலைமையும் தனுசுக்கு வரலாம்.

17:06

Speaker C

அதாவது ஜென்ட்ஸ்க்கு நான் சொல்றேன்.

17:08

Speaker C

இப்ப லேடீஸ்னு வரப்போ எப்படி இருக்கும்னா.

17:11

Speaker C

ஃபேமிலில டைம் அதாவது அவங்க விரும்புனவங்க வந்து ஃபேமிலில டைம் ஸ்பென்ட் பண்ண முடியாம போறாங்களோ.

17:17

Speaker C

அந்த மாதிரி அந்த மாதிரி லேடீஸ்க்கு வரலாம்.

17:18

Speaker C

மத்தபடி வந்து பணம் வர விஷயங்கள் இது எல்லாமே தனுசுக்கு நல்லா இருக்கு.

17:21

Speaker C

பட் இந்த ஃபேமிலின்னு வரப்போ குவாலிட்டி டைம் அப்படிங்கறது மிஸ் ஆகுறதுக்கு வாய்ப்புகள் இருக்கு.

17:26

Speaker C

அங்கேயும் பொறுமை தேவைப்படணும்.

17:28

Speaker C

ஏன் அப்படின்னா குடும்பத்தாரும் இந்த தனுசை வந்து கொஞ்சம் புரிஞ்சுக்கணும் அப்படின்னுலாம் நான் சொல்லுவேன்.

17:32

Speaker C

ஏன்னா தனுசு வந்து உங்களுக்காக தான் உழைக்க போறாங்க.

17:34

Speaker C

அதனால அவங்களுக்கும் ஏக்கங்கள் இருக்கும் உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு.

17:38

Speaker C

அதை குடும்பத்தார் நம்பி சப்போர்ட்டிவா இருந்துட்டாங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் தனுசுக்கு.

17:41

Speaker D

சூப்பரா சொன்னீங்க.

17:42

Speaker D

சோ மகர ராசிக்கு எப்படி இருக்குது மேம் சனி பெயர்ச்சி?

17:50

Speaker C

மகர ராசிக்கு வந்து முயற்சி ஸ்தானம் மூன்றாவது இடத்துக்கு போறாங்க.

17:54

Speaker C

சோ மகர ராசிக்கு தான் வந்து இப்ப விமோசனமே ஏன்னா ஏழரை விலகிடுச்சு இப்ப அவங்களுக்கு.

17:58

Speaker C

அதனால வந்து மகரம் வாங்காத அடி இல்லை வடிவேல் மாதிரிதான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே இடம்ங்கறதுதான் மகரம்.

18:04

Speaker C

அவ்வளவு அடி அவங்க தாங்கியாச்சு.

18:06

Speaker C

எந்த மகரத்தை கேட்டீங்கனாலும் என்ன சொல்லுவாங்கன்னா உடம்புல உயிர் மட்டும்தான் எனக்கு இருக்கு.

18:11

Speaker C

அந்த அளவுக்கு அடி பின்னி இருப்பார் ஏன்னா அது தன் வீடு.

18:16

Speaker C

தன் வீடுனா அவர் வந்து நியாயஸ்தர் சனீஸ்வரர்.

18:21

Speaker C

என்ன மகரத்துக்கு மட்டும் இப்படி சொல்றாங்க அப்படின்னா அது நியாயஸ்தர் அப்படிங்கறப்போ.

18:24

Speaker C

என் வீடா இருந்தாலும் அடி பலமாதான் விழுகும்னு தான் மத்த கட்டங்கள் மத்த ராசி வந்து கொஞ்சம் பயந்தாவது இருப்பாங்க.

18:29

Speaker C

ஓ அவங்களுக்கே இப்படி அடின்னா அப்ப நம்மள எல்லாம் சொந்த பிள்ளைக்கே இத்தனை அடியான்னு.

18:32

Speaker C

துவச்சு தொங்க விட்டுருப்பார் மகரத்தை.

18:35

Speaker C

இப்ப வந்து அவங்களுக்கு தெரியும் மகரத்துக்கு இப்ப நிறைய ஆப்பர்சுனிட்டிஸ் வரும் மகரத்துக்கு.

18:39

Speaker C

நியூ ஐடென்டிஃபிகேஷன் நான் யாருன்னு தொலைச்சு தொலைச்சு தன்னை தேடுனவங்க தான் மகரம்.

18:43

Speaker C

டோட்டலா ஐடென்டிஃபிகேஷனே ஏதாவது நல்ல செழிப்பா வாழ்ந்திருந்தா கூட அதெல்லாம் மறைஞ்சு போயி போய்.

18:48

Speaker C

திருப்பி இன்னொரு இன்னொரு வேற ஆள் மறுஜென்மம் மாதிரிதான் நிறைய மகரத்துக்கு.

18:52

Speaker C

சோ இது நிஜமாலுமே மறுஜென்மம் தான்.

18:54

Speaker C

இனி வரக்கூடிய ஆப்பர்சுனிட்டிஸ் வந்து கரெக்டா யூஸ் பண்ணிக்கணும்.

18:57

Speaker C

ஆனா இங்கேயும் இவங்களுக்கு என்ன ப்ராப்ளம் வரும்னா.

19:00

Speaker C

இத்தனை காலங்களா அவங்க வந்து வேலை பார்க்காம வேலை என்னன்னே தெரியாம ஒரு கன்பியூஷன்ல இருந்துட்டாங்கல்ல.

19:04

Speaker C

இனிமேல் நிறைய வருமா.

19:06

Speaker C

டைம் மேனேஜ்மென்ட் பண்ண முடியாது.

19:07

Speaker D

ஓகே.

19:08

Speaker C

அழுத்தங்கள் நிறைய வரும்.

19:10

Speaker C

மென்டல் பிரஷர்ஸ் நிறைய வரும்.

19:12

Speaker C

சோ இந்த மென்டல் பிரஷரையும் கொஞ்சம் பார்த்துக்கணும்.

19:15

Speaker C

அதே மாதிரி ஆங்க்சைட்டி ஜாஸ்தி ஆகும் இனிமேல் மகரத்துக்கு.

19:17

Speaker C

அந்த டைம் மேனேஜ்மென்ட் பண்ண முடியாம போறப்போ ஹெல்த்ங்கறது தூக்கம் கெடும்.

19:22

Speaker D

ஓகே.

19:23

Speaker C

தூக்கம் ரொம்ப முக்கியம்.

19:25

Speaker C

சோ வந்து இந்த யோகா பண்ணிக்கிறது ஒரு மெடிடேஷன் பண்ணிக்கிறது உங்களுக்கான அந்த மீட் டைம்.

19:30

Speaker C

அப்படிங்கறத வந்து ஸ்பென்ட் பண்ணனும்.

19:32

Speaker C

ஃபேமிலிக்காக ஆகட்டும்.

19:34

Speaker C

எதுக்காக இருந்தாலும் ஒரு டைம் ஒதுக்கி எல்லாமே இப்ப வரும்.

19:38

Speaker C

எதுவுமே இல்லாம இருந்தவங்களுக்கு எல்லாமே வரப்போ என்ன ஆகும்.

19:40

Speaker D

எதை நாம பார்க்கிறதுன்ற மாதிரி இருக்கும்.

19:41

Speaker C

எதை பண்றது எல்லாத்துலயுமே தன்னுடைய டேலன்ட்ட காட்டணும்ங்கற மாதிரி இருக்கும்.

19:45

Speaker C

அதை செக்ரிகேட் பண்ணிக்கணும் அவங்க.

19:47

Speaker C

இதை பண்ணுனாங்கன்னா மகரத்துக்கு நல்லா இருக்கும்.

19:49

Speaker D

நிச்சயமா.

19:50

Speaker D

அடுத்த கட்டமாக கும்ப ராசிக்கு எப்படி இருக்குது இந்த சனி பெயர்ச்சி?

19:58

Speaker C

கும்ப ராசிக்கு வந்து இப்போ இரண்டாம் இடத்துக்கு போகுது.

20:01

Speaker C

அதாவது குடும்ப ஸ்தானத்துக்கு போகுது.

20:03

Speaker C

இவங்க வந்து எப்படி இருக்கணும் அப்படின்னா எல்லாத்துலயுமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.

20:06

Speaker C

ஏன்னா கும்பத்துல இருந்து விலகுறாரு.

20:08

Speaker D

சரி.

20:08

Speaker C

சந்தோஷப்பட வேண்டாம்.

20:10

Speaker C

சந்தோஷப்பட்டுக்கோங்க.

20:11

Speaker C

எப்படி பட்டுக்கலாம் அப்படின்னா.

20:13

Speaker C

ஆல்ரெடி அடிச்சிட்டு தான் போயிருக்கிறார்.

20:15

Speaker D

ஆமா.

20:16

Speaker C

அடி இருக்கு.

20:17

Speaker C

வலி இருக்கு இல்லையா.

20:18

Speaker C

காயங்கள் ஆறணும் இல்லையா.

20:19

Speaker C

அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும்.

20:20

Speaker D

ஓகே.

20:21

Speaker C

சோ அதனால கொஞ்சம் மூச்சு விட்டுக்கோங்க.

20:23

Speaker C

இது வந்து ஹீலிங் பீரியட்.

20:25

Speaker C

சோ எனக்கு எல்லாம் சரி ஆயிடுச்சுன்னுட்டு எந்திரிச்சு நம்ம வந்து ஓவராவும் எதுவும் பண்ணிடக்கூடாது.

20:28

Speaker D

ஓவரா ஆடக்கூடாதுன்றீங்க.

20:29

Speaker C

ஆமா.

20:30

Speaker C

ஓவரா எதுவும் பண்ணிடக்கூடாது.

20:32

Speaker C

கொஞ்சம் கொஞ்சமாதான் மாறும் கும்பத்துக்கு.

20:35

Speaker C

அதாவது கம்யூனிகேஷன் பேச்சுவார்த்தைகள் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.

20:38

Speaker C

அதாவது ஃபேமிலி மெம்பர்ஸ் ஆகட்டும் எல்லாத்துக்குமே சில இஸ்யூஸ் வரலாம்.

20:42

Speaker C

அந்த குடும்பம்ங்கற வரப்ப கொஞ்சம் கை வைப்பார்.

20:44

Speaker C

ஜாக்கிரதையா ஹேண்டில் பண்றது குடும்ப விஷயங்களை வெளிய யார்ட்டயும் சொல்லாம இருக்கிறது.

20:48

Speaker C

நம்முடைய மைனஸை முடிஞ்ச அளவுக்கு பாதுகாத்துக்கணும்னு தான்.

20:51

Speaker C

யாரை நம்பி போய் ஏதாவது ஒன்னு சொல்றாங்க அப்படின்னா அங்கேயே அவங்களுக்கு ஒரு பிரச்சனை வரக்கும் வாய்ப்பு இருக்குது.

20:55

Speaker C

இது முக்கியமா கும்பம் அவிட்டம் நட்சத்திரத்துல இருக்கவங்களுக்கு அது நடக்கும்.

20:57

Speaker D

ஓ.

20:58

Speaker C

அதனால வந்து ரொம்ப ரொம்ப பிரிகாஷனரியா இருந்துக்கிறது ஃபேமிலி மெம்பர்ஸ் யாருக்காவது ஹெல்த் இஸ்யூஸ் வரது.

21:03

Speaker C

சோ இது எல்லாமே மானிட்டர் பண்ணிட்டே அவங்க இருக்கணும்.

21:05

Speaker C

எல்லாத்தையும் கொஞ்சம் பாதுகாக்கிற ஒரு இடத்துல வந்து இப்ப கும்பம் இருக்காங்க.

21:10

Speaker C

அதனால கரெக்டா குடும்பத்தை கொஞ்சம் பேலன்ஸ் பண்ணிட்டு அவங்க போயிடணும்.

21:13

Speaker D

நிச்சயமா.

21:13

Speaker D

மீன ராசிக்கு இறுதியாக 12 வது ராசி மீன ராசி எப்படி?

21:21

Speaker C

மீன ராசிக்கு தன் வீட்டுக்கே வந்திருக்கிறார்.

21:24

Speaker C

மீன ராசி ஜெனரலாவே வந்து அது அது ஒரு மறைவு ஸ்தானம்.

21:28

Speaker C

அப்படின்னு சொன்னாலும் அது வந்து தூக்கம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் தான் நான் மெயினா மீனம் அப்படின்னு பார்க்கிறது.

21:32

Speaker C

தூக்கம் ஞானம் மறைமுகமான அது ஒரு அமானுஷ்யமான ஒரு ராசிதான் அந்த மீனம்.

21:37

Speaker C

சோ அது வீட்டுக்கு போறது சனி போறாரு அப்படின்னா.

21:40

Speaker C

இவங்களுக்கு வந்து டோட்டலா தன்னிலை மறக்கக்கூடிய சிச்சுவேஷன்ஸ் வரலாம்.

21:46

Speaker C

அதாவது தன்னிலைங்கறது தன்னுடைய ஐடென்டிஃபிகேஷன்.

21:49

Speaker C

தன்னோட ஐடென்டிஃபிகேஷனை கொஞ்சம் நிலைநிறுத்திக்கணும்.

21:51

Speaker C

அதுக்கு வந்து இவங்களுக்கு மெடிடேஷன் தான் தேவைப்படும்.

21:55

Speaker C

தூக்கம் ரொம்ப ரொம்ப முக்கியம் மீனத்துக்கு.

21:58

Speaker C

அதனால இது வந்து மீனம்ங்கறது குரு குரு வீட்டுக்கு சனி வராரு.

22:03

Speaker C

சோ அவர் ஒரு கெஸ்ட்டா இருந்தாலும் குருவா இருந்தாலுமே சனிக்கு கொஞ்சம் ரெஸ்பெக்ட் கொடுத்து தான் ஆகணும்.

22:08

Speaker C

சனி யாரா இருந்தாலும் அவங்களோட எனர்ஜி சப் பண்றதுக்கு தான் அவர் வராரு.

22:11

Speaker C

சோ இப்ப உங்களுக்கு வந்து நீங்க எங்க எங்க மிஸ்டேக் பண்ணீங்களோ ஏன்னா மீனம் வந்து ஜெனரலாவே கொஞ்சம் ஆர்டிஃபிஷியல்.

22:16

Speaker C

அதாவது ஆர்டிஃபிஷியல் இன் தி சென்ஸ் எல்லாரும் நம்மள பார்த்து எப்படி ஃபீல் பண்றாங்க அப்படின்னு அந்த மத்தவங்களுக்காகவே.

22:22

Speaker C

மத்தவங்களுக்காகவே.

22:24

Speaker C

இவங்க எல்லாம் நம்மள பார்த்து சந்தோஷப்பட்டுட்டாங்களா.

22:27

Speaker C

இவங்க எல்லாம் நம்மள பார்த்து பொறாமைப்பட்டுட்டாங்களா.

22:30

Speaker C

ஓகே இவங்க முன்னாடி நம்ம நல்லா டிரஸ் பண்ணிட்டோமா வாழ்ந்து காட்டிட்டோமா.

22:32

Speaker C

இன்னும் பையன் தூங்குறேங்கற மாதிரி.

22:34

Speaker C

பட் நிஜமாலுமே இவங்களுக்கு என்ன வேணும் அப்படிங்கறது மீனத்துகிட்ட போய் கேட்டீங்கன்னா தெரியாது.

22:41

Speaker C

நிஜமாலுமே யார் நீங்க சொல்லுங்க அப்படின்னா.

22:44

Speaker C

அவங்க வாழ்ற வாழ்க்கைக்கும் அவங்களுடைய எண்ணங்களுக்கும் டோட்டலா வேற மாதிரி விஷயங்கள் இருக்கும்.

22:48

Speaker D

டிஃபரன்ஸ் இருக்கும்.

22:49

Speaker C

ஏன்னா இப்ப வெளிய இருந்து பார்க்கிறவங்களும் பக்கா மாடர்ன் மாதிரி தெரியறாங்கன்னு வச்சுக்கோங்க.

22:53

Speaker C

உள்ள போய் கேட்டீங்கன்னா அவங்க என்ன சொல்லுவாங்கன்னா எனக்கு கஞ்சி குடிக்கிறதுனா ரொம்ப பிடிக்கும்.

22:59

Speaker C

எனக்கு அந்த சிம்பிளிசிட்டியை நோக்கி மனசை சொன்னாலும்.

23:02

Speaker C

வெளிப்படுத்த மாட்டாங்க அந்த சிம்பிளிசிட்டியை.

23:05

Speaker C

ஒரு ஆடம்பரத்துல இருப்பாங்க.

23:06

Speaker C

இப்ப சனி வந்து என்ன பண்ணுவார்னா உங்களுக்காக உங்களால வாழ முடியும்ங்கிற அந்த சிச்சுவேஷன்ஸ கிரியேட் பண்ணுவார்.

23:10

Speaker D

நம்பிக்கை.

23:11

Speaker C

அதாவது எப்படி கிரியேட் பண்ணுவார்.

23:13

Speaker C

கிட்டத்தட்ட அந்த வறுமையை டச் பண்ணி காட்டுவார்.

23:15

Speaker D

ஓகே ஓகே.

23:16

Speaker C

இப்படி இந்த சிம்பிளிசிட்டிக்கு ஒரு ஒரிஜினாலிட்டிக்கு எப்படி வரணுமோ அதுக்கான ஒரு பாடம் வந்து இப்ப மீனத்துல இருக்கப்போ அது நடக்கும்.

23:21

Speaker C

அதையும் நீங்க புன்உருவலோட ஏத்துக்கணும்னு தான் நான் மீனத்துக்கு சொல்றேன்.

23:23

Speaker C

ஏன்னா அவர் கிளம்பி போறப்போ உங்களுக்கு தெரியும் நான் யார் அப்படிங்கறது ரியலைஸ் பண்றதுக்கு தான் அவர் கொண்டு வந்திருக்கிறார்.

23:27

Speaker C

ஏன்னா இப்ப மொத்தத்துல இந்த சனி பெயர்ச்சின்னு பார்க்கிறப்போ இந்த மீனத்துல போய் உட்காருறதுனால ஜெனரலாவே வந்து ஆன்மீகம் வளரும்.

23:34

Speaker D

பொதுவா.

23:35

Speaker C

பொதுவாகவே ஆன்மீகம் வளரும்.

23:37

Speaker C

இதுவே இந்த மீனமே ஒரு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஒரு இடம் தான் அது.

23:40

Speaker C

சோ இந்த மீன ராசிக்காரங்களும் ஆன்மீகத்துக்குள்ள முருகர் வழிபாட்டுக்குள்ள இவங்க நிறைய போவாங்க மீனத்துல இருக்கவங்க.

23:44

Speaker C

திடீர்னு இப்ப ரொம்ப முருகரோட அட்டாச் ஆகுறவங்கனா மீனம் தான்.

23:47

Speaker D

ஓகே.

23:48

Speaker C

ஏன்னா இந்த முருகரால தான் வந்து விதியை மாத்த முடியும்ங்கற ஒரு அமைப்பு இருக்கிற காரணத்தினால இவங்க டோட்டல் சரணாகதி ஆகுறது.

23:54

Speaker C

அங்க போய் தன்னை யாருங்கறது அந்த புரிஞ்சுக்கிற ஒரு நிலைமை.

23:56

Speaker C

அதே மாதிரி இது எல்லாத்துக்குமே ஒரு ஸ்பிரிச்சுவாலிட்டிங்கற ஒரு விஷயம் கனெக்ட் ஆகும்.

23:59

Speaker C

ஸ்பிரிச்சுவாலிட்டிங்கறது கோயில்ல போய் உட்கார்ந்து சாமி கும்பிடுறதுங்கறது இல்லை.

24:03

Speaker C

தன்னிலை அறிதல் தான் அந்த ஸ்பிரிச்சுவாலிட்டி.

24:06

Speaker C

சோ அந்த மெடிடேஷன் அந்த சைலன்ஸ் அப்படிங்கறது இந்த இரண்டரை ஆண்டு காலம் வந்து நிறைய பரவும்.

24:10

Speaker C

மக்கள் வந்து அந்த இயற்கைக்காக ஏங்கக்கூடிய ஒரு அமைப்பு இயற்கைக்கே திருப்பி போகக்கூடிய ஒரு அமைப்பு எல்லாம் இந்த இரண்டரை வருட காலம் வந்து கொடுக்கும்.

24:16

Speaker D

ஓகே நிச்சயமா.

24:16

Speaker D

இந்த 12 ராசிகளுக்கும் சனி பெயர்ச்சி சொல்லிட்டீங்க.

24:19

Speaker D

அதே சமயம் ஒரு டாப் ஃபோர் மீடியம் அப்படின்னு சொல்லி மக்கள் எதிர்பார்ப்பாங்க.

24:22

Speaker D

டாப் ஃபோர் யாருக்கு கொடுப்பீங்க?

24:23

Speaker D

அந்த மாதிரி சொல்ல முடியுமா?

24:25

Speaker C

இப்ப வந்து ரிஷபத்துக்கு நல்லா இருக்கும்.

24:27

Speaker C

கடகத்துக்கு நல்லா இருக்கும்.

24:30

Speaker C

மகரத்துக்கு நல்லா இருக்கும்.

24:31

Speaker C

தனுசுக்கு நல்லா இருக்கும்.

24:32

Speaker D

இவங்க டாப் ஃபோர்.

24:33

Speaker C

இவங்க வந்து டாப் ஃபோர்.

24:35

Speaker D

மீடியமான பலன்கள அனுபவிக்க போறவங்க யார் யாரு?

24:39

Speaker C

மீடியமான பலன்கள் அப்படின்னு பார்க்கிறப்போ மிதுனம் கொஞ்சம் ஒரு மீடியமான ஒரு பலன் அனுபவிப்பாங்க.

24:43

Speaker C

சோ கன்னிக்கு ஓகே.

24:45

Speaker C

அதுவும் இந்த தனுசுல இருக்கவங்களுக்கு ரியல் எஸ்டேட் டச் பண்ணவங்களுக்கு எல்லாம் பீக்ல போகும்.

24:49

Speaker C

பூமியை தொட்டுருக்காங்க.

24:50

Speaker C

யாரெல்லாம் தனுசு.

24:52

Speaker C

இதுக்கு முன்னாடி எல்லாம் தனுசு பார்த்தீங்கன்னா சில பேர் எல்லாம் ப்ராப்பர்ட்டி ரிலேட்டடா அலைஞ்சிட்டு இருந்தவங்க எல்லாம் இருப்பாங்க.

24:56

Speaker C

அதுக்கான ஒரு அது மூலமா ஒரு இன்கம் ஜெனரேட் ஆகுற அமைப்பு.

25:00

Speaker C

அதனாலதான் தனுசுக்கு நல்லா இருக்கும் அப்படின்னு சொன்னேன்.

25:02

Speaker C

இப்ப கன்னிக்குமே அதே மாதிரிதான்.

25:04

Speaker C

கன்னிக்கும் வந்து கொஞ்சம் ஒரு ரிலீஃப் பீரியட் அப்படின்னு சொல்லலாம் கன்னிக்கு.

25:06

Speaker D

இதெல்லாம் மீடியமா நாலு சொல்லிட்டீங்க.

25:08

Speaker D

இன்னும் கொஞ்சம் வழிபாட்டின் மூலமாக மட்டுமே மேல வர முடியும்.

25:11

Speaker D

அப்படின்ற மாதிரி சில பேர் சொல்லுவாங்க லாஸ்ட்டா ஒரு ஃபோர் சொல்லுவாங்க.

25:13

Speaker D

அது யார் யார் சொல்றீங்க?

25:15

Speaker C

மேஷம், சிம்மம், விருச்சகம், மீனம்.

25:18

Speaker C

இவங்க எல்லாம் வந்து கொஞ்சம் வழிபாட்டுல கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்துக்கணும் அவங்க.

25:22

Speaker C

இப்படி இருந்துட்டாங்க அப்படின்னா கொஞ்சம் தப்பிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு.

25:25

Speaker C

அதாவது டோட்டல் சரணாகதி சரண்டர் அப்படின்னு தான் நான் சொல்றேன்.

25:27

Speaker D

சரண்டர் ஆயிடணும்.

25:28

Speaker C

டோட்டல் சரண்டர்.

25:30

Speaker D

நிச்சயமா இந்த 12 ராசிகளுக்குமான இந்த சனி பெயர்ச்சி பலன்களை கொடுத்திருக்கிறீங்க.

25:33

Speaker D

பொறுத்திருந்து பார்க்கலாம் எப்படி மக்களும் வந்து ரெஸ்பான்ஸ் ரெஸ்பான்ட் பண்றாங்க அப்படின்னு.

25:36

Speaker D

மிக்க நன்றி மேம்.

25:37

Speaker C

நன்றி.

Topics: சனி பெயர்ச்சி ஜோதிடம் ராசி பலன் ஆஸ்ட்ராலஜி சனி கிரக பலன் மனநிலை மாற்றம் தொழில் வளர்ச்சி குடும்ப பிரச்சனை தமிழ் ஜோதிடம் ஜீவிதா சுரேஷ்குமார்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11510)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11510)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/sani-peyarchi-astrology-forecast/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
