**ரிஷபம் 👉 உங்கள் கதவை தட்டும் கோடீஸ்வர யோகம் | Rishabham | New Year Rasi Palan 2026 | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/rishabham-kodisevara-yogam-2026/

2026-ல் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானம், குடும்ப வாழ்வு மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய மாற்றங்கள் மற்றும் ராஜயோகம்.

## Key Takeaways

- 2026-ல் ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வருமானத்தில் முன்னேற்றம்.
- குரு கிரகத்தின் ஆதரவால் நியாய தர்மம் மற்றும் ராஜயோகம் உருவாகும்.
- ஆரோக்கியம் மற்றும் குடும்ப உறவுகளில் கவனம் தேவை.
- முதலீடுகளில் சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
- வழிபாட்டு முறைகள் வீட்டு அமைதிக்கு உதவும்.

## What the video covers

- 2026-ல் ரிஷப ராசிக்காரர்களுக்கு இடமாற்றம், தொழில் மாற்றம் மற்றும் வருமான உயர்வு ஏற்படும்.
- குரு கிரகத்தின் இரண்டாம் வீட்டில் இருப்பதால் நியாய தர்மம் மற்றும் ராஜயோகம் பலனளிக்கும்.
- பிரச்சனைகள் குறைந்து, வேலை மற்றும் பிசினஸ் துறையில் முன்னேற்றம் காணப்படும்.
- வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களில் வேலை வாய்ப்புகள் மற்றும் இடமாற்றம் சாத்தியமாகும்.
- ஆரோக்கியத்தில் கவனம் தேவை, மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும்.
- சின்னத்திரை மற்றும் பெரிய திரை நடிகர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் உருவாகும்.
- மெட்டல் மற்றும் ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் அவசியம்.
- ரிஷப ஆண்களுக்கு உறவுகளில் கவனம், பெண்கள் மன அழுத்தம் மற்றும் தொழில் வளர்ச்சி முக்கியம்.
- வீட்டில் குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளை மதிப்பது நல்லது.
- வழிபாட்டு முறைகள் மற்றும் குடும்ப தெய்வங்களை வழிபடும் போது வீடு அமைதியாக இருக்கும்.

Answers

## Questions about this video

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் இடமாற்றம், தொழில் மாற்றம், மற்றும் வருமான மாற்றம் போன்ற நல்ல மாற்றங்கள் நிகழப்போகின்றன. இது அவர்களுக்கு ஒரு ராஜயோக காலமாக அமையும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலைவாய்ப்பில் இந்த ஆண்டு எப்படி இருக்கும்?

ராகுவின் நல்ல நிலை காரணமாக, இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை வேலைவாய்ப்பில் எந்த பிரச்சனையும் இருக்காது. எந்த எதிரியையும் துவம்சம் செய்யும் சக்தி அவர்களுக்கு இருக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள் வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்குச் சென்று தொழில் செய்யலாமா?

ஆம், ரிஷப ராசிக்காரர்கள் வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களுக்குச் சென்று தொழில் செய்யலாம். இந்த காலகட்டத்தில் குருவின் ஸ்தான பலமும் பார்வை பலமும் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:06

Speaker A

இரண்டாம் வீட்டில் உங்களுக்கு குரு இருக்கிறார்.

00:10

Speaker A

அவங்க எதிர்பார்த்தாங்க இல்லைங்களா இடமாற்றம், தொழில் மாற்றம், வருமான மாற்றம் இதெல்லாம் நிகழப்போகுது.

00:15

Speaker B

ரிஷபத்துக்கு கொஞ்சம் டைம் நல்லா இருக்கு, கொஞ்சம் உங்களுடைய கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து கொஞ்சம் நெக்ஸ்ட் லெவலுக்கு வந்து உங்களை கிரிட்டிசைஸ் பண்றாங்களா இல்ல உங்களை திருத்துறாங்களா அடுத்த லெவலுக்கு கூட்டிட்டு போறாங்களா நியாய தர்மம் என்ன அப்படின்னு சொல்லிட்டு ரிஷபம் கொஞ்சம் பார்க்கணும்.

00:28

Speaker C

ஃபென்டாஸ்டிக்கா இருக்கு டைம் பீரியட் அத்துனை ரிஷப ராசிக்காரர்களுக்கும் மிகச்சரியான ராஜயோகம் இனிதே ஆரம்பம்.

00:32

Speaker D

ராகு பிளேஸ்மென்ட் உங்களுக்கு தொழில் ஸ்தானம் சொல்லக்கூடிய பத்தாம் இடத்துல நல்லா இருக்கறதுனால பொதுவாகவே இந்த வருஷம் டிசம்பர் மாசம் வரைக்கும் பிரச்சனையே கிடையாது வேலைல எப்பேர்பட்ட ஆள் உங்களுக்கு எதிரியா இருந்தாலும் சரி அவனை துவம்சம் பண்ணுவீங்க.

00:43

Speaker E

ரெட்ரோ ஆன்மீகம் வழங்கும் புத்தாண்டு பலன்கள் 2026 வாழ்க்கையில ரொம்ப கஷ்டமா இருக்கு வருஷம் போகுது மாசம் போகுது நாளும் போகுது ஆனா கஷ்டம் மட்டும் போகவே இல்லை அப்படின்னு சொல்லிட்டு தொடர்ந்து பல ராசிக்காரர்கள் பேசிக்கிட்டே இருக்காங்க.

00:58

Speaker E

நீங்களும் இதெல்லாம் பண்ணுங்க இதெல்லாம் சொன்னீங்கன்னா உங்களோட வாழ்க்கை சரியாயிடும் அப்படின்னு 2025ல நிறைய சொல்லி இருந்தீங்க அதை கேட்டு நிறைய பேரோட வாழ்க்கையில நிறைய மாற்றங்களும் இருந்துச்சு அதேபோல இந்த 2026லயும் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கப்போகுது.

01:56

Speaker E

ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி எல்லாம் இருக்கப்போகுது என்னவெல்லாம் கொடுக்கப்போகுது.

02:01

Speaker A

அவங்களுக்கு என்னங்க ராஜயோகம் பிரமாதமா இருக்கும்.

02:04

Speaker A

அவங்க எதிர்பார்த்தாங்க இல்லைங்களா இடமாற்றம், தொழில் மாற்றம், வருமான மாற்றம் இதெல்லாம் நிகழப்போகுது பக்கத்துல காலடி நோட்டோ உட்கார்ந்தான் சார் அவனுக்கெல்லாம் கொடுத்தாங்க எனக்கு கொடுக்க மாட்டேங்குறான் சார் ப்ரமோஷனும் இல்ல எனக்கு பணம் கூட தேவையில்லை சார் ஒரு ரிகக்னிஷன் வேண்டாமா அது எவ்வளவு நாளா நானும் பார்த்துட்டு இருக்கேன் கொடுக்கவே மாட்டேன்றானுங்க இந்த இடத்துல இருக்கலாமா நான் இடம் மாறலாமா.

02:25

Speaker A

மாறிடுங்க.

02:27

Speaker A

நல்ல ஆப்பர்சுனிட்டி வரும் கடல் கடந்து போகலாம் பெங்களூர் போலாம் மைசூர் போலாம் ஹைதராபாத் போலாம்.

02:34

Speaker A

உங்களுக்கு ரிகக்னிஷன் கிடைக்கும்.

02:37

Speaker A

வீடு வாங்கலாம்.

02:41

Speaker A

திருமணம் நடக்கும்.

02:44

Speaker A

ஏன்னா குடும்பம் வாக்கு தனஸ்தானத்துல வந்து.

02:50

Speaker A

இரண்டாம் வீட்டில் உங்களுக்கு குரு இருக்கார் குரு வரப்போறார்.

02:55

Speaker A

அந்த குரு வரும்போது உங்களுக்கு.

02:59

Speaker A

அருமையா இருக்கும்.

03:00

Speaker A

அப்போ ஆறு மாசம் தானே சார் சொன்னீங்க ஒன்னு ஆறு மாறிடுறாரே.

03:05

Speaker A

அப்ப எப்படி இருக்கும்.

03:07

Speaker A

குரு பார்வை உங்களுக்கு உதவியாக இருக்கும்.

03:11

Speaker A

ஆக குரு ஸ்தான பலமும் உண்டு பார்வை பலமும் உண்டு.

03:17

Speaker A

இந்த காலகட்டத்துல தொழில் பண்றவங்களுக்கு எப்படி சார் இருக்கும்.

03:20

Speaker A

நான் வெளிநாடோ வெளி மாநிலமோ நான் கொஞ்சம் கடன்லாம் வாங்கி கொஞ்சம் செய்யலாமா அப்படின்னா.

03:27

Speaker A

தெளிவா செய்யுங்க.

03:28

Speaker A

ஆனா இந்த நிகழ்ச்சி பார்க்கும்போது தெளிவா தான் கேக்குறீங்க.

03:33

Speaker A

எல்லாம் தான் பண்றீங்க.

03:36

Speaker A

நான் வந்து சர்வஜனா சுகினோ பவந்துன்னு சொன்ன உடனே என்னவோ சொன்னீங்க சார் அப்படின்னு சொல்லிட்டு தூக்கி போட்டு போயிருவீங்க.

03:43

Speaker A

அந்த அவநம்பிக்கையை விட்டுருங்க.

03:46

Speaker A

இதுதான் என் வாழ்க்கை இதுதான் என் பயணம் அப்படின்னு தெளிவா முடிவு பண்ணீங்கன்னா.

03:52

Speaker A

ரொம்ப நல்லா இருக்கும்.

03:54

Speaker A

தாயினுடைய உடல் ஆரோக்கியத்துல கண்டிப்பா கவனம் இருக்கணும்.

04:00

Speaker A

இல்லனா மருத்துவ செலவுகள் இருக்கும்.

04:03

Speaker A

சின்னத்திரை பெரிய திரையில இருக்கிறவங்களுக்கு அற்புதமான படங்கள் வந்து சேரும்.

04:10

Speaker A

ஷேர் மார்க்கெட்ல இருக்கிறவங்களுக்கு இடன் ட்ரெஷர் மாதிரி சில நேரங்கள்ல சில தெளிவான முடிவு எடுத்து உங்களுக்கு வருமானங்கள் வரும்.

04:19

Speaker A

ஆனா மெட்டல்ல இன்வெஸ்ட்மென்ட் பண்ணும்போது.

04:24

Speaker A

கொஞ்சம் பார்த்து செய்யுங்க.

04:27

Speaker A

வெள்ளி உங்களுக்கு லாபத்தை தரும்.

04:32

Speaker A

ஆனா அதே நேரத்துல நான் தான் சொன்னேன்னு சொல்லிட்டு நீங்க பாட்டுக்கு எக்கச்சக்கமா வாங்கி வச்சிட்டு அது டவுன் ஆயிடுச்சுன்னு வச்சுக்கோங்க.

04:41

Speaker A

அப்புறம் பாலகிருஷ்ணா ரெட்டியார் தான் சொன்னார்ன்னு சொல்லக்கூடாது.

04:43

Speaker A

அந்த ஃபிளக்சுவேஷன்.

04:46

Speaker A

பிசினஸ் மார்க்கெட் ஷேர் மார்க்கெட் வந்து ஃபிளக்சுவேஷனை பார்த்து பண்ணனும்.

04:51

Speaker A

அவசரப்படாதீங்க.

04:53

Speaker A

அதே நேரத்துல வேர்ல்ட் டிரேட் வார் அப்படிங்கறது அடுத்த வருடம்.

05:00

Speaker A

2026ல உங்களுக்கு நிறைய பிரச்சனைகளை கொடுக்கும்.

05:04

Speaker A

இன்வெஸ்ட்மென்ட் நிதானமா பண்ணுங்க.

05:07

Speaker A

இதை எல்லாத்தோட நான் இந்த பொதுப்பலன்ல சொல்லி இருக்கேன்.

05:10

Speaker A

இந்த முறை சின்னத்திரையில இருக்கிறவங்க தான் நீங்க தான் இதை தேர்ந்தெடுக்க போறீங்க முதல்வரை அப்படின்னு சொல்லிட்டு.

05:17

Speaker A

அந்த பொறுப்போட ரிஷப ராசிக்காரர்கள் நீங்க இருந்தீங்கன்னா நல்ல முதல்வரும் கிடைக்கும் நல்ல நாடும் வளம் பெறும்.

05:25

Speaker A

அற்புதமான காலம் உங்களுக்கும் கிடைக்கும் எங்களுக்கும் கிடைக்கும்.

05:29

Speaker A

வாழ்க வளமுடன்.

05:30

Speaker A

ஆல் தி பெஸ்ட்.

05:31

Speaker E

ஜீவிதா மேம் 2026 ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் மேம்.

05:37

Speaker B

ரிஷப ராசி அப்படின்னு பார்க்கிறப்போ.

05:40

Speaker B

ஆண் பெண் அப்படின்னு ரெண்டா நம்ம பிரிச்சிடலாம்.

05:42

Speaker B

ஆண் அப்படிங்கறப்ப யார் கூட பழகுறீங்க அப்படிங்கற ஒரு விஷயம் முக்கியம்.

05:50

Speaker B

ஏன்னா ரிஷப ராசியில இருக்க ஆண்களுக்கு எப்படின்னா யார் தனக்கு ரொம்ப கம்ஃபர்டபிளா இருக்காங்களோ அவங்களை பக்கத்துலயே வச்சுக்கிட்டே இருக்கிறது.

05:59

Speaker B

யாராவது ஒரு குறை சொல்றாங்க அப்படின்னா இந்த ரிஷபத்துக்கு பிடிக்காது.

06:04

Speaker B

ரிஷபம் ஆணுக்கு பிடிக்காது.

06:06

Speaker B

ஒதுக்கிடுவாங்க.

06:08

Speaker B

இதை செய்ய வேண்டாம்.

06:10

Speaker B

ஏன்னா இதை செய்யறதுனாலதான் சில விஷயங்கள் பேக் அடிச்சு இருக்கு அப்படிங்கற மாதிரி இருக்கு.

06:16

Speaker B

ரிஷபத்துக்கு கொஞ்சம் டைம் நல்லா இருக்கு.

06:20

Speaker B

கொஞ்சம் உங்களுடைய கம்ஃபர்ட் ஜோன்ல இருந்து கொஞ்சம் நெக்ஸ்ட் லெவலுக்கு வந்து உங்களை கிரிட்டிசைஸ் பண்றாங்களா இல்ல உங்களை திருத்துறாங்களா அடுத்த லெவலுக்கு கூட்டிட்டு போறாங்களா நியாய தர்மம் என்ன அப்படின்னு சொல்லிட்டு ரிஷபம் கொஞ்சம் பார்க்கணும்.

06:33

Speaker B

ஏன் அப்படின்னா.

06:35

Speaker B

ரிஷபத்துக்கு மறைமுகமாகவே பெண் சாபம் அப்படிங்கற ஒரு விஷயமும் இருக்கு.

06:40

Speaker B

அதனால அந்த விஷயத்துலயும் ஆண்கள் இந்த தடவை கொஞ்சம் கவனமா இருந்துக்கணும் ஏன்னா உங்களுக்கு பொறுத்த செய்யக்கூடிய ஒரு அமைப்பு இருக்கு.

06:48

Speaker B

எப்பவுமே ஒரு நல்ல விஷயம் வரதுக்கு முன்னாடி ஏதோ ஒன்னு கெட்டது லைட்டா எட்டிப்பார்க்கும் அப்படிங்கறப்போ ஆண்கள் இந்த விஷயத்துல கொஞ்சம் கவனமா இருந்துட்டீங்க அப்படின்னா.

06:57

Speaker B

லைஃப் கொஞ்சம் அப்ரேடேஷனா போகும்.

06:59

Speaker B

வீட்ல இருக்கவங்களுடைய பேச்சை கேட்கிறது ரொம்ப நல்லது.

07:02

Speaker B

முக்கியமா வீட்ல பெண்கள் இருக்காங்க அப்படின்னா உங்களுக்கு சில விஷயங்கள் அவங்களை ஞானமாவே உங்களுக்கு சொல்லுவாங்க.

07:11

Speaker B

இதை செய்யுங்க இதை வேண்டாம் இவங்களை நம்புங்க வேண்டாம் கொஞ்சம் தள்ளிப்போட்டு சில வேலைகளை செய்யுங்க அப்படின்னா.

07:20

Speaker B

கொஞ்சம் லிசன் பண்ணி சுத்தி இருக்க மனிதர்கள் உங்களை எந்த மாதிரி ஒரு பெர்ஸ்பெக்டிவ்ல பார்க்குறாங்கங்கறத தெரிஞ்சுகிட்டு நீங்க அடுத்த லெவல்.

07:28

Speaker B

ஏன்னா ரிஷபத்துக்கு ரியல் எஸ்டேட் கன்ஸ்ட்ரக்ஷன்.

07:33

Speaker B

தொழில் அமையக்கூடிய அமைப்பு அப்படி கூட இருக்கு.

07:37

Speaker B

ஏன்னா சில பேர் வந்து ரியல் எஸ்டேட்டே ஆரம்பிக்கிற ஒரு அமைப்பும் இருக்கு.

07:41

Speaker B

பொருளாதார ரீதியா ரிஷபத்துக்கு ஒரு குரோத்ங்கறது இருக்கு.

07:44

Speaker B

அப்போ இதெல்லாம் கெடுக்கறதுக்குனே சில பேர் வருவாங்க அப்படிங்கறப்போ ஜால்ரா அடிக்கிறவங்க ஆண்களுக்கு வேண்டாம்.

07:50

Speaker B

இதே இது பெண்கள் அப்படின்னு வரப்போ.

07:53

Speaker B

உங்களுக்கு லைஃப் பார்ட்னர் கிட்ட அதீதமான ஒரு எக்ஸ்பெக்டேஷன் அந்த ஃபேண்டசி அப்படிங்கற ஒரு விஷயத்துக்குள்ள போறப்போ.

08:00

Speaker B

மன அழுத்தத்துக்குள்ள ரிஷப பெண்கள் போவீங்க.

08:04

Speaker B

ஏன்னா ரிஷப பெண்களுக்கு இப்போ குரோத் பிசினஸ் நோக்கி போகக்கூடிய அமைப்பும் உங்களுடைய பிசினஸ்ல போக்கஸ்.

08:12

Speaker B

அந்த எக்ஸ்டர்னல் வேலிடேஷன் இவங்க சொல்ற வரைக்கும் நான் காத்திருக்கேன் அப்படிங்கறது எல்லாம் இல்லாம உங்களை மட்டுமே நம்பி எஃபர்ட் ரிஷப பெண்களுக்குமே நான் எப்படி சொல்றேன்னா நீங்க என்ன பிசினஸ் ஆரம்பிச்சாலும் சரி.

08:24

Speaker B

அதுல ஒரு பியூட்டி இருக்கணும் ஒரு கிரியேட்டிவிட்டி இருக்கணும்.

08:28

Speaker B

ஒரு இடத்துல இருந்து நீங்க ஒரு வேலை பார்க்கிறப்போ அது ஸ்டாக்னன்ட்டா தான் இருக்கும் ரிஷபத்துக்கு.

08:33

Speaker B

ஒரு எக்ஸிபிஷன்ஸ்லாம் வைக்கிறாங்க இல்லையா.

08:36

Speaker B

டூர் போங்க.

08:37

Speaker B

டிராவல் பண்ணுங்க.

08:38

Speaker B

ரிஷப பெண்கள் டிராவல் பண்ண டிராவல் பண்ண உங்களுக்கு குரோத் அப்படிங்கறது ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்.

08:44

Speaker B

ஏன் அப்படின்னா.

08:46

Speaker B

ரிஷபம்ங்கறது சுக்கிரன் லட்சுமி ஒரு இடத்துல தங்காது.

08:50

Speaker B

அப்படியே மூவ் ஆகி போயிட்டே இருக்கணும்.

08:54

Speaker B

அப்படி மூவ் ஆகி போக போக உங்களுடைய குரோத் லெவலும் ரொம்ப அதீத லெவல்ல அதிகமாவே போயிட்டு இருக்கும் அப்படிங்கறதுதான்.

09:01

Speaker B

இந்த தடவை ரிஷபத்துக்கான 2026 பலன் அதோட நீங்க வந்து.

09:06

Speaker B

வழிபாட்டு முறைகள் கூட.

09:10

Speaker B

ஒரு சிவன் பார்வதி யாரா இருந்தாலும் சேர்ந்து இருக்கக்கூடிய தனித்த தெய்வத்தை வழிபடுவதை விட.

09:17

Speaker B

குடும்பமாக இருக்கக்கூடிய தெய்வங்களை வழிபடும் பொழுது வீட்ல ஒரு அமைதி நிலை அப்படிங்கறது உங்களுக்கு இருக்கும்.

09:23

Speaker E

கண்டிப்பா மேம்.

09:25

Speaker E

வித்யா கார்த்திக் மேம் நீங்க சொல்லுங்க ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கும் மேம்.

09:30

Speaker C

2026 எப்படி இருக்கப்போகுது.

09:33

Speaker C

அடிதூளா இருக்கப்போகுது.

09:35

Speaker C

அட்டகாசமா இருக்கும் என்னடா நடக்குது என் வாழ்க்கையில அப்படின்ற மாதிரியே இந்த 2026 ஆரம்பிச்சதுல இருந்து முடியற வரைக்கும் இருக்கும்.

09:43

Speaker C

நான் கரெக்டா பேசலனா நான் கரெக்டா பேசுறேன்.

09:46

Speaker C

நாட்டாம கேக்குற மாதிரி நம்மளே நம்மள நைட் எல்லாம் உட்கார்ந்து நான் கரெக்டா தானே இன்னைக்கு பண்ணேன் அப்புறம் ஏன் எனக்கு இப்படி நடந்துச்சு அப்படின்ற மாதிரியான சில விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும்.

09:56

Speaker C

சுகர் கோட்லாம் கொடுக்காம உண்மையா நீங்க நம்பி பலன் கேக்குறதுனால நான் நம்பி சொல்றேன்.

10:01

Speaker C

ரெண்டு விதமா பிரிச்சுக்கோங்க ஜூன் மாசத்துக்கு முன்னாடியான ஒரு பலன் ரிஷப ராசிக்காரர்களுக்கு இருக்கப்போகுது.

10:06

Speaker C

ஜூன் மாசத்துக்கு அப்புறம் ஒரு பலன் இருக்கப்போகுது.

10:09

Speaker C

அதுக்கப்புறம் கடைசி மாசமான டிசம்பர் மாசம் ஒரு பலன் இருக்கப்போகுது.

10:13

Speaker C

ஜூன் மாசத்துக்கு முன்னாடியுமே பிப்ரவரி வரைக்கும் கொஞ்சம் குரு வக்ர கதியில தான் இருப்பார் அப்படின்றபோது இரண்டாம் இடத்துல இருக்கக்கூடிய தனக்காரகன் வக்ரமா இருக்கார்.

10:22

Speaker C

அதுவும் 11 ஆம் வீட்டு அதிபதி இப்படி எல்லாம் பார்த்தோம்னா கொஞ்சம் லாபத்துக்காக நிறைய போராட வேண்டியிருக்கும்.

10:26

Speaker C

நம்ம எதிர்பார்த்த லாபம் வராம நம்ம அந்த இடத்துல கொஞ்சம் ஸ்ட்ரகிள் ஆகும்.

10:32

Speaker C

நம்ம கஷ்டப்பட்டு உழைச்ச உழைப்புக்கான லாபத்தை நம்மளால கையகப்படுத்த முடியாது.

10:38

Speaker C

யாரோ யாருக்காகவோ நம்முடைய லாபம் விலை மாற மாதிரியான அமைப்புகள் வரும்.

10:44

Speaker C

குடும்பத்துல எல்லாமே நல்லாதான் இருக்கு ஆனா ஏதோ பத்தலையே அப்படின்ற மாதிரியான ஒரு தாட் ப்ராசஸ் ஒரு ஆரம்பிச்ச ஒரு ரெண்டு மாசத்துல இருக்கும்.

10:51

Speaker C

ஆனா அதுக்கப்புறம் பார்த்தீங்கன்னா அடுத்த மூணு மாசம் சூப்பரா இருக்கும்.

10:55

Speaker C

ஃபென்டாஸ்டிக்கா இருக்கும்.

10:57

Speaker C

நிறைய பேருக்கு இதுவரைக்கும் இல்லாம மேலதிகாரியை எதிர்த்து பேசி.

11:00

Speaker C

உங்களுடைய வலுவை சொல்வீர்கள்.

11:03

Speaker C

இரண்டாம் இடத்துல குரு வக்ரமா ஆகும்போது என்ன ஆகும்னா வாக்கு ஸ்தானத்துல வந்து இதுவரைக்கும் வைக்காத வார்த்தை எல்லாம் வரும்.

11:11

Speaker C

இதுவரைக்கும் அடங்கி அடங்கி போயிட்டு இருந்த நீங்க அப்படியே ஒரு மாதிரி இல்ல இல்ல நான் கரெக்டா தான் பேசுறேன்ற மாதிரி உங்க விஷயத்தை பாயிண்ட் பாயிண்ட்டா வைப்பீங்க.

11:19

Speaker C

நிறைய பேர் உங்களை மேனிபுலேட் பண்ண வருவாங்க ரொம்ப கவனமா இருக்கணும்.

11:23

Speaker C

இந்த ரெண்டு மூன்று மாதங்கள்.

11:26

Speaker C

அடுத்த மூன்று மாதங்கள் ஃபென்டாஸ்டிக்கா இருக்கு டைம் பீரியட்.

11:30

Speaker C

நீங்க எதெல்லாம் பண்ணனும்னு நினைக்கிறீங்களோ அதெல்லாம் பண்ணுங்க.

11:32

Speaker C

ஜாப் சேஞ்ச் ஓவர் கண்டிப்பா இருக்கு.

11:34

Speaker C

யாரெல்லாம் ஃபுட் இண்டஸ்ட்ரில இருக்கீங்களோ யாரெல்லாம் ஐடி ஃபீல்ட்ல இருக்கீங்களோ யாரெல்லாம் ரியல் எஸ்டேட் பண்ணிட்டு இருக்கீங்களோ யாரெல்லாம் கேமரா ஃபீல்ட்ல இருக்கீங்களோ வாயால் பிழைக்கக்கூடிய தொழில் செய்றீங்களோ.

11:43

Speaker C

பால் வியாபாரம் செய்றீங்களோ அத்துனை ரிஷப ராசிக்காரர்களுக்கும் மிகச்சரியான ராஜயோகம் இனிதே ஆரம்பம்.

11:49

Speaker C

ஆனா ஆஃப்டர் ஜூனுக்கு அப்புறம்.

11:53

Speaker C

உங்களை மாதிரி ஒருத்தவங்க உள்ள நீங்க நம்புறீங்களோ இல்லையோ நாங்க நம்புறோம் நீங்க கடன் கட்டி தீருவீங்கன்ற மாதிரி.

12:00

Speaker C

இருக்கிற எல்லா கடன்காரங்களும் உங்க வீட்ல வந்து நின்னு வாங்கிக்கோங்க வாங்கிக்கோங்கன்னு கொடுப்பாங்க.

12:07

Speaker C

நீங்களும் ஐ காசு வருது பணம் வருதுன்னு நம்பி வாங்குனீங்கன்னா பணம் கட்ட முடியாத லெவலுக்கு போயிடும்.

12:13

Speaker C

அதனால ரொம்ப கவனம்.

12:15

Speaker C

ஏன்னா ரொம்ப நுணுக்கமா ஜோதிடத்துல ஒரு விஷயம் எடுத்தோம் அப்படின்னா.

12:22

Speaker C

கிட்டத்தட்ட ரிஷப ராசிக்காரருக்கு இந்த நான்காம் இடமான குரு அமர்ந்திருக்கக்கூடிய இந்த கடகம் சரியான வீடு கிடையாது.

12:29

Speaker C

மூன்றாம் இடம் சரியான குரு அமையறது சரியான இடம் கிடையாது.

12:32

Speaker C

அப்ப நிறைய கடன் வாங்க வைக்கும் நிறைய டிராவல் பண்ண வைக்கும்.

12:36

Speaker C

நிறைய அலைச்சல் மூலமான ஒரு அனுகூலம் கண்டிப்பா உண்டு அலைச்சலை கொடுக்கும்.

12:41

Speaker C

எஸ்பெஷலி இந்த பேங்கே சொல்லிட்டுறேனே அதனால கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க.

12:45

Speaker C

இந்த பஜாஜ் பைனான்ஸ் ஐடிஎஃப்சி பேங்க் ஹச்டிஎஃப்சி பேங்க்ல எல்லாம் கொஞ்சம் கவனமா இருங்க.

12:50

Speaker C

போன் பண்ணி உங்களுக்கு வீட்ல லோன் கொடுக்கிறேன்னு வந்து நிப்பாங்க.

12:55

Speaker C

உங்களுக்கு தேவைனா மட்டும் வாங்குங்க இல்லாட்டி லோனை வாங்கிட்டு கட்ட முடியாம போவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும்.

13:02

Speaker C

கடனில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாக தான் ரிஷப ராசிக்காரர்களுக்கு.

13:08

Speaker C

மத்தபடி ஹெல்த் வைஸ் கொஞ்சம் பார்த்துக்கோங்க.

13:11

Speaker C

பிரீத் பண்றதுல கொஞ்சம் லைட்டா சிரமம் வரலாம்.

13:14

Speaker C

பேக்ல எல்1 எல்2 சின்ன பிரச்சனை வரும்.

13:18

Speaker C

அதை மட்டும் பார்த்துக்கோங்க.

13:19

Speaker C

எதுக்குன்னா ஜோதிடம் என்பது எப்ப பார்த்தாலும் நீங்க சூப்பர் சூப்பர்.

13:21

Speaker C

நான் எப்பவுமே சூப்பர்னு தான் சொல்லுவேன்.

13:23

Speaker C

இந்த தடவை கொஞ்சம் ஏன்னா எல்லாரும் சூப்பர்னு சொல்லிட்டாங்க.

13:28

Speaker C

சின்ன சின்ன விஷயத்துல கவனமாக இருங்கன்னு சொல்றதுக்கு மட்டும் தான் இந்த பதிவு.

13:32

Speaker C

ரிஷப ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் துலங்க போகுது.

13:36

Speaker C

கிட்டத்தட்ட மூன்றாம் இடத்துல முயற்சி ஸ்தானத்துல உச்ச குரு வந்து அமர்ந்து எல்லா முயற்சியும் சக்சஸ் பண்ண போறாரு.

13:42

Speaker C

ஆனா இந்த இந்த சின்ன சின்ன விஷயத்துல கவனமா இருந்தீங்கன்னா.

13:46

Speaker C

2026 உங்களுக்கான நியூ இயரா தான் இருக்கப்போகுது.

13:50

Speaker C

என்ன தெய்வத்தை வழிபாடு பண்ணலாம் அப்படின்னு சொல்லி பார்த்தீங்கன்னா.

13:53

Speaker C

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த தடவை குருவாயூர் போயிட்டு வாங்க.

13:56

Speaker C

குருவாயூர் அப்பனை போய் வழிபாடு பண்ணிட்டு வர்றது உங்களுக்கு மிகச்சரியான ராஜயோகத்தை முதல்ல கொடுக்கும்.

14:01

Speaker C

அதை தாண்டியும் முடிஞ்சா நெய் விட்டு உங்க வீட்ல டெய்லி விளக்கு ஏத்துங்க.

14:05

Speaker C

அதுவே ஒரு நல்ல ஒரு என்ன சொல்றது ஒரு பாசிட்டிவ் உங்களுக்கு கொடுத்துக்கிட்டே இருக்கும்.

14:10

Speaker C

தேவையில்லாத குருவால் வரக்கூடிய சின்ன சின்ன அந்த பிரச்சனைகள் கூட சரியா போயிடும்.

14:14

Speaker C

சூப்பரா இருக்கு ரிஷப ராசிக்கு.

14:15

Speaker E

ஹரிஷ் ராமன் சார் நீங்க சொல்லுங்க ரிஷப ராசிக்காரர்களுக்கு 2026 எப்படி இருக்கு.

14:20

Speaker D

2026 ரிஷப ராசி நண்பர்களுக்கு பொதுவாகவே சொல்லணும்னா அர்த்த திரிகோணத்துடைய பாக்கியத்துல போய் ராகு உட்கார்ந்திருக்கறதுனால.

14:26

Speaker D

கண்டிப்பா எல்லாருமே பாக்கிய நகரம் போவீங்க.

14:29

Speaker D

பாக்கிய நகரம்னா பேசிக்கலா ஹைதராபாத்.

14:31

Speaker D

மும்பை.

14:33

Speaker D

அதே மாதிரி அந்த சைடு கிராஸ் பண்ணோம்னு வைங்க கட்டார்.

14:39

Speaker D

அதே மாதிரி துபாய்.

14:41

Speaker D

இந்த மாதிரி இடங்களுக்கு போகக்கூடிய வாய்ப்புகள்.

14:45

Speaker D

அங்க அருமையான வீடு அமையும்.

14:47

Speaker D

நிறைய பேருக்கு வேலை அமையும்.

14:50

Speaker D

இது எல்லாமே நெக்ஸ்ட் த்ரீ ஃபோர் மந்த்ஸ்குள்ள நடக்கிறது கண்கூடா பார்ப்பீங்க.

14:56

Speaker D

அதே மாதிரி ரொம்ப முக்கியமா தனித்த குரு அது உச்சம் பெறக்கூடிய குரு ஜூனுக்கு அப்புறம்.

15:01

Speaker D

திரிகோணத்துல சனி உட்கார்ந்திருக்கு.

15:04

Speaker D

அற்புதமான டைமிங் நல்ல பேர் வாங்கக்கூடிய பிராப்தம்.

15:08

Speaker D

நிறைய பேருக்கு அண்ணா ஆக்சுவலா நிறைய இந்த மாதிரி சொல்லுவாரு.

15:12

Speaker D

பிராண்ட் இருந்தா தான் லோன் கிடைக்கும்.

15:15

Speaker D

உண்மையா இப்பதான் உங்களுக்கு லோன் கிடைக்கும்.

15:18

Speaker D

உங்களுக்கு பிராண்ட் வந்து பொதுவா ரொம்ப சூப்பரா செட் ஆகும்.

15:22

Speaker D

உங்க பேரு நல்ல பேரா மாறப்போறது.

15:24

Speaker D

நிறைய பேருக்கு சிவில் ஸ்கோர்லாம் அடுத்தனா பெர்ஃபெக்ட்லி ஓகே.

15:28

Speaker D

650 பிளஸ் அதனால லோன் சாங்ஷன் அப்படின்னு வரும்.

15:32

Speaker D

அதனால கண்டிப்பா நிறைய பேர் தொழில் ஆரம்பிக்கக்கூடிய பிராப்தம்.

15:35

Speaker D

எந்த மாதிரி தொழில்.

15:36

Speaker D

ஐடி பேஸ்ட் ஏதாவது தொழில்.

15:39

Speaker D

ஒர்க் ஃப்ரம் ஹோம்ங்கற மாதிரி வீட்ல உட்கார்ந்துட்டே ஒரு வெப்சைட் ஆரம்பிச்சு அங்க இருந்து வந்து டிஸ்ட்ரிபியூஷன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஆரம்பிக்கக்கூடிய பிராப்தம்.

15:45

Speaker D

ஆன்லைன்ல டீச் பண்ணக்கூடிய பிராப்தம்.

15:48

Speaker D

நிறைய பேர் வந்து ரிஷபத்துல பிறந்தவங்க முக்காவாசி ஜனங்கள் கண்டிப்பா ஏதோ ஒரு கலை கண்டிப்பா தெரியும்.

15:55

Speaker D

அதுல சில பேர் பாட்டு கிளாஸ் மாதிரி ஆன்லைன்ல சொல்லிக் கொடுக்கலாம்.

15:59

Speaker D

இல்லனா யோகாசனம் மாதிரி விஷயங்கள் சொல்லிக் கொடுக்கிறது.

16:03

Speaker D

குக்கிங் சம்பந்தப்பட்ட சேனல்ஸ் நிறைய பேர் ஓபன் பண்றதுங்கற மாதிரி ரிஷபத்துக்கு அற்புதமான டைமிங்.

16:09

Speaker D

இதுல மிக முக்கியமா சொன்னா இளைய சகோதரன் சகோதரியுடைய கண்டிப்பா ஒத்துழைப்பு அதிகமா இருக்கும்.

16:14

Speaker D

அவங்க கூட சேர்ந்து தான் இந்த விஷயத்தையே பண்ண போறீங்க.

16:18

Speaker D

அட் தி சேம் டைம் ராகு பிளேஸ்மென்ட் உங்களுக்கு தொழில் ஸ்தானம் சொல்லக்கூடிய பத்தாம் இடத்துல நல்லா இருக்கறதுனால பொதுவாகவே இந்த வருஷம் டிசம்பர் மாசம் வரைக்கும் பிரச்சனையே கிடையாது.

16:25

Speaker D

வேலை உங்களுக்கு அருமையா இருக்கும்.

16:28

Speaker D

வேலைல எப்பேர்பட்ட ஆள் உங்களுக்கு எதிரியா இருந்தாலும் சரி அவனை துவம்சம் பண்ணுவீங்க.

16:33

Speaker D

ஏன்னா ராகு குரு கன்ஜங்ஷன் அமேசிங்.

16:37

Speaker D

ஏன்னா எவனுமே உங்களை வந்து பக்கத்துல நிக்க முடியாது.

16:42

Speaker D

எந்த ஒரு விஷயத்தையுமே பாயிண்ட் பாயிண்ட்டா ஈஸியா அவங்களை வந்து சேலஞ்ச் பண்ணக்கூடிய ஸ்தானம் ஏற்படும்.

16:47

Speaker D

100% எல்லாருக்குமே இன்கிரிமென்ட் வரும்.

16:50

Speaker D

சில பேருக்கு லெவலுக்கு மீறி பாஸ் உடைய ப்ரமோஷன் வரும்.

16:54

Speaker D

பாஸ் கிளம்பி போயிடுவாரு.

16:57

Speaker D

அதனால நீங்க ப்ரமோஷன் வரக்கூடிய வாய்ப்புகள்.

17:01

Speaker D

சோ ஓவர் ஆலா பார்க்கும்போது ரிஷபத்துக்கு மோர் ஆர் லெஸ் ஒரு நல்ல ஒரு பொருளாதாரத்துல அமேசிங்கான ஒரு மாற்றங்கள் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் தான் ரிஷபத்துக்கு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லலாம்.

17:08

Speaker D

இதுல ரொம்ப முக்கியமானது சொல்லக்கூடியது.

17:10

Speaker D

உங்க வீட்ல திருமணம் ஆகும்.

17:12

Speaker D

உங்க சகோதர சகோதரிகளுக்கு திருமணம் ஆகும்.

17:14

Speaker D

இதுல பார்க்க வேண்டியது ஸ்பாண்டிலைட்டிஸ்.

17:18

Speaker D

அதாவது பெண்களா இருந்தாலும் சரி ஆண்களா இருந்தாலும் சரி கழுத்துக்கு பின்புறம்.

17:22

Speaker D

அந்த இடத்துல போச்சுனா வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கு.

17:26

Speaker D

அதை மட்டும் பார்த்துட்டு தான் போறோம்.

17:28

Speaker D

என்ன சொல்யூஷன்.

17:29

Speaker D

குருவாயூர் கிருஷ்ணனை போய் பார்த்துட்டு வரது.

17:32

Speaker D

குருவாயூர் கிருஷ்ணனை போய் பார்த்துட்டு வரது.

17:35

Speaker D

அதே மாதிரி முடிஞ்ச அளவுக்கு நெய் விளக்கை நம்ம போடுறது.

17:38

Speaker D

இல்லனா நெய் தானம் பண்றது.

17:40

Speaker D

பெரிய மாற்றத்தை கண்டிப்பா கொடுக்கும்.

17:42

Speaker D

தைரியமா இருங்க.

17:44

Speaker D

சந்தோஷத்தின் அடிப்படையிலும் பொருளாதாரத்தின் அடிப்படையிலும் ஓவர் 80% கண்டிப்பா உங்களுக்கு உண்டு.

17:50

Speaker E

2026 ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி எல்லாம் இருக்கப்போகுது என்னவெல்லாம் பண்ணனும் அப்படிங்கறது ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.

17:58

Speaker E

ரெட்ரோ ஆன்மீகம் வழியா இந்த வீடியோவை பார்த்துக்கிட்டு இருக்க எல்லா நேயர்களும் அதை கேட்டு பயன்படுவாங்க அப்படின்னு நினைக்கிறேன்.

Topics: ரிஷபம் ராசிபலன் 2026 ராஜயோகம் தொழில் மாற்றம் வருமான உயர்வு ஆரோக்கியம் குரு கிரகம் வழிபாடு குடும்பம் முதலீடு

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11455)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11455)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/rishabham-kodisevara-yogam-2026/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
