**Rishabam 👉செல்வ செழிப்புக்கு பஞ்சம் இருக்காது |Astrologer Jeevitha |Guru Athisara Peyarchi Palangal — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/rishabam-wealth-no-obstacle-astrologer-jeevitha/

ரிஷப ராசிக்கு குரு அதிசார பெயர்ச்சி மூலம் செல்வம், செழிப்பு மற்றும் தர்ம வழிகாட்டல் பற்றிய விளக்கம்.

## Key Takeaways

- ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி செல்வம் மற்றும் செழிப்பை தரும், ஆனால் ஒழுக்கம் முக்கியம்.
- குரு கிரகத்தின் பெயர்ச்சி 13 மாத காலம் ஒரு ராசியில் இருக்கும் மற்றும் இது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வரும்.
- தர்மம் மற்றும் நியாயம் குருவின் உதவிக்கான அடிப்படையாகும்.
- ஸ்ரீரங்கம் கோவில் வழிபாடு மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு விளக்கு போடுதல் பரிகாரமாக பரிந்துரைக்கப்படுகிறது.
- கர்மத்திலிருந்து தர்மத்துக்கு செல்ல பரிகாரங்கள் மற்றும் நம்பிக்கை முக்கியம்.

## What the video covers

- ரிஷப ராசிக்கு குரு செல்வம் மற்றும் செழிப்பை வழங்குகிறார், ஆனால் நிதானமாக இருக்க வேண்டும்.
- சுக்கிரனின் வீடு என்பதால் ஒழுக்கம் மற்றும் பழக்க வழக்கங்களில் கவனம் அவசியம்.
- குரு மற்றும் சுக்கிரன் இடையேயான யுத்தம் மற்றும் அதன் தாக்கங்கள் பற்றி விளக்கம்.
- ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு விளக்கு போடுதல் பரிகாரமாக பரிந்துரைக்கப்படுகிறது.
- குரு அதிசார பெயர்ச்சி என்பது குரு கிரகத்தின் ரிவர்ஸ் (வக்ர) இயக்கம் மற்றும் அதன் விளைவுகள்.
- குரு கிரகத்தின் பெயர்ச்சி 13 மாதங்கள் ஒரு ராசியில் இருப்பதை அடிப்படையாகக் கொண்டது.
- குரு தர்மத்தின் பிரதிநிதி என்பதால் நியாயம் மற்றும் தர்மம் முக்கியம்.
- சனி கிரகத்தின் பயம் மற்றும் குருவின் காப்பாற்றும் சக்தி பற்றிய விளக்கம்.
- கர்மத்திலிருந்து தர்மத்துக்கு செல்ல பரிகார முறைகள் மற்றும் நம்பிக்கை.
- குரு அதிசார பயிற்சி மூலம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

Answers

## Questions about this video

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் என்ன நன்மைகளைச் செய்யப் போகிறார்?

ரிஷப ராசிக்காரர்களுக்கு குரு பகவான் செல்வ செழிப்பை அள்ளித் தரப் போகிறார். வசதிக்கு மிஞ்சிய பணம் புழங்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும், செல்வ செழிப்புக்கு குறை இருக்காது.

ரிஷப ராசிக்காரர்கள் செல்வ செழிப்புடன் இருக்கும்போது என்ன விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்?

ரிஷப ராசிக்காரர்கள் செல்வ செழிப்புடன் இருக்கும்போது ஒழுக்கத்தில் தவறாமல் இருக்க வேண்டும். மண், பொன், மாது போன்ற விஷயங்களில் சிக்கிக்கொள்ளாமல், குரு உபதேசங்களைக் கேட்டு நிதானமாக செயல்படுவது நல்லது.

ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் செல்வத்தை எப்படி கையாள வேண்டும்?

ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது, நடுநிலையாக இருப்பது நல்லது. 'என்னிடம் இவ்வளவு இருக்கிறது' என்று டாம்பீகமாக பேசாமல், அடக்கி வாசிப்பது ரிஷபத்திற்கு மிகவும் நல்லது.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker 1

உங்களுக்கு செல்வம் செழிப்பு அப்படிங்கறது அள்ளி கொடுக்க போறார்.

00:04

Speaker 1

ஆனா ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கணும்.

00:09

Speaker 1

கையில உங்களுடைய வசதிக்கு மிஞ்சின பணம் புழங்கக்கூடிய அமைப்பு எல்லாமே வரும்.

00:15

Speaker 1

செல்வ செழிப்புக்கு குறை கிடையாது.

00:17

Speaker 1

அது குரு கொடுக்க போறார்.

00:18

Speaker 1

ஆனா எங்க கை வைப்பாரு அப்படின்னா,

00:22

Speaker 1

குரு உபதேசங்களை கேட்டு கொஞ்சம் நிதானமா இருந்துக்கிறது ரிஷபத்துக்கு நல்லது.

00:53

Speaker 1

ரிஷப ராசி நேயர்களுக்கு குரு என்ன செய்ய போறாருன்னா,

00:59

Speaker 1

உங்களுக்கு செல்வம் செழிப்பு அப்படிங்கறது அள்ளி கொடுக்க போறார்.

01:04

Speaker 1

ஆனா ஒரு விஷயம் ஞாபகம் வச்சுக்கணும்.

01:07

Speaker 1

ரிஷபம் அப்படிங்கறது சுக்கிரனுடைய வீடு.

01:10

Speaker 1

எப்பொழுதுமே குருவுக்கும் சுக்கிரனுக்கும் ஆகாது.

01:15

Speaker 1

குரு தேவ குரு.

01:18

Speaker 1

சுக்கிரன் அசுரர்களின் குரு.

01:20

Speaker 1

ஏதோ ஒரு வகையில யுத்தத்தை சந்திச்சவங்க.

01:23

Speaker 1

இல்லையா?

01:24

Speaker 1

அப்போ எந்த இடத்துல குரு உங்களுக்கு பாடம் கற்பிக்க போறார் அப்படிங்கற விஷயத்தையும் நீங்க தெரிஞ்சுக்கணும்.

01:30

Speaker 1

நீங்க வந்து ஒரு பூமி வாங்கலாம்.

01:33

Speaker 1

இல்ல எங்கயாவது பிரயாணம் பண்ணி போகலாம்.

01:36

Speaker 1

கையில உங்களுடைய வசதிக்கு மிஞ்சின பணம் புழங்கக்கூடிய அமைப்பு எல்லாமே வரும்.

01:42

Speaker 1

செல்வ செழிப்புக்கு குறை கிடையாது.

01:45

Speaker 1

அது குரு கொடுக்க போறார்.

01:46

Speaker 1

ஆனா எங்க கை வைப்பாரு அப்படின்னா ஒழுக்கத்துல சுக்கிரன் எப்படி இருக்கிறார் அப்படிங்கறத குரு பார்ப்பார்.

01:52

Speaker 1

இங்க ஒழுக்கம் தவறவே கூடாது.

01:55

Speaker 1

அதாவது நம்ம கேள்விப்பட்டிருப்போம் இல்லையா?

02:01

Speaker 1

மண், பொன், மாது அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கு இல்லையா?

02:05

Speaker 1

இந்த மாதிரி விஷயங்கள்ல ரிஷபம் சிக்கிக்காம இருக்கணும்.

02:10

Speaker 1

ஏன்னா அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் குரு அமைச்சு கொடுக்க மாட்டார்.

02:15

Speaker 1

சுக்கிரன் அந்த செழிப்பை பார்க்கிறப்போ அதை மிஸ்யூஸ் பண்றதுக்கான சிச்சுவேஷனுக்கு சுக்கிரன் அழைச்சிட்டு போறப்போ,

02:22

Speaker 1

குரு உபதேசங்களை கேட்டு கொஞ்சம் நிதானமா இருந்துக்கிறது ரிஷபத்துக்கு நல்லது.

02:28

Speaker 1

ஏன்னா இதை நான் வந்து,

02:31

Speaker 1

நீங்க என்ன எங்களுக்கு அட்வைஸ் பண்றீங்களா?

02:34

Speaker 1

நீங்க என்ன எங்களுக்கு வார்னிங் பண்றீங்களா?

02:36

Speaker 1

அப்படின்னா,

02:38

Speaker 1

நம்மளுக்கு திடீர்னு அளவுக்கு அதிகமான ஒரு வாழ்க்கையில எல்லாமே நல்ல விஷயங்கள் நடக்கிறப்போ,

02:46

Speaker 1

நம்ம மீறி சிச்சுவேஷன்ஸ்ல தவறுகள் செய்யறதுக்கு நம்மளுக்கு தூண்டும்.

02:50

Speaker 1

இல்லையா?

02:51

Speaker 1

நம்ம இந்த மாதிரி எத்தனை நியூஸ் எல்லாம் நம்ம பார்க்கிறோம் நல்ல செழிப்பா இருப்பாங்க திடீர்னு ஏதோ ஒரு தவறு பண்ணி மாட்டிக்கிற மாதிரியான ஒரு சிச்சுவேஷன்.

02:59

Speaker 1

சுக்கிரன் கொடுக்க வாய்ப்பு இருக்கு அப்படிங்கறதுதான் நான் சொல்றேன்.

03:03

Speaker 1

குரு கொடுக்க வாய்ப்பு இல்லை.

03:05

Speaker 1

ஆனா குரு அவமானத்தை கொடுத்துருவார்.

03:07

Speaker 1

குரு குருதான் வந்து எல்லாத்துக்குமே மதிப்பு மரியாதையோடு இருந்து வாழ வைக்கக்கூடிய ஆற்றலை கொடுக்கிறவர் குருதான்.

03:14

Speaker 1

அப்போ ரிஷபத்துல இருக்கக்கூடியவங்க உங்ககிட்ட இருக்க நாலேட்ஜஸ மத்தவங்களுக்கு ஷேர் பண்றது,

03:21

Speaker 1

ஒரு நடுநிலையா இருந்துக்கிறது.

03:24

Speaker 1

என்கிட்ட இவ்வளவு இருக்குது அது இருக்குது இந்த பொருள் எல்லாம் என்கிட்ட இருக்கு அப்படின்னு டாம்பீகமா பேசாம கொஞ்சம் அடக்கி வாசிச்சுக்கிறது அப்படிங்கறதையும் ரிஷபத்துக்கு ரொம்ப நல்லது.

03:33

Speaker 1

ஏன்னா இது திஷ்டியா கூட மாறறதுக்கு வாய்ப்பு இருக்கு.

03:35

Speaker 1

ஏன்னா உங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியாது.

03:38

Speaker 1

உங்களுடைய சூழல்ல இருந்து ஒரு டெவலப்மென்ட்க்கு போறப்போ நம்மளுக்கு எப்படி இருக்கும்?

03:44

Speaker 1

எல்லாத்துக்கிட்டயும் நம்மளுக்கு சொல்லணும்னுதான் இருக்கும்.

03:46

Speaker 1

யார் முன்னாடி எல்லாம் வாழ்ந்து காட்டணும்னு நினைச்சோமோ அவங்க முன்னாடி எல்லாம் சொல்லிக்காட்டணும் அப்படிங்கறது தோன்றினாலும்,

03:54

Speaker 1

வார்த்தைகள்ல கொஞ்சம் கவனமா இருந்து கொஞ்சம் நிதானமா சொல்ற விதத்துல சந்தோஷமா சொல்லிட்டு போயிட்டு,

04:02

Speaker 1

ஒரு ஆரோக்கியமான ஒரு சூழல்கள்ல இருந்துட்டீங்க அப்படின்னா,

04:08

Speaker 1

இந்த குரு அதிசார பயிற்சி உங்களுக்கும் நல்லதே பண்ணும்.

04:14

Speaker 1

நீங்க எல்லாம் வந்து ஸ்ரீரங்கம் போயிடணும்.

04:17

Speaker 1

ஸ்ரீரங்கம் போயிட்டு அங்க இருக்கிற ரங்கநாதரை வழிபாடு பண்ணி அங்க போயிட்டு சக்கரத்தாழ்வாருக்கு விளக்கு போட்டுட்டு வந்துட்டீங்க அப்படின்னா,

04:28

Speaker 1

சக்கரத்தாழ்வாருக்கு இத்தனை விளக்குகள் அப்படின்னு எல்லாம் கணக்கு இருக்கு.

04:35

Speaker 1

நீங்க அந்த கோவில்ல போய் கேட்கிறப்போ சொல்லுவாங்க.

04:37

Speaker 1

12 விளக்கா 28 விளக்கா அப்படின்னு எல்லாம் தெரிஞ்சுகிட்டு,

04:41

Speaker 1

உங்களுடைய ஜாதக கட்டத்துக்கு தகுந்த மாதிரி சூழல்கள் தகுந்த மாதிரி.

04:46

Speaker 1

ஏன் அப்படின்னா சக்கரத்தாழ்வாருக்கு விளக்கு போட போட என்ன ஆகும் அப்படின்னா,

04:51

Speaker 1

என்ன பிணி பீடைகள் இருந்தாலும் விலகிடும்.

04:54

Speaker 1

அப்ப குருவுடைய அனுக்கிரகம் இன்னும் அதிகமா நம்மளுக்கு கிடைக்கும்.

04:59

Speaker 1

ஜெனரலாவே குரு தேவர்களுக்கு எல்லாம் குரு அப்படினாலும்,

05:05

Speaker 1

நீங்கள் சுக்கிரனா இருக்கிறதுனால நான் இதை உங்களுக்கு சொல்ல வேண்டியதா இருக்கு.

05:10

Speaker 1

ஏன் அப்படின்னா,

05:12

Speaker 1

அசுரர்கள்.

05:14

Speaker 1

அசுரர்கள் சூழ்ந்திருந்து நீங்க நீங்க பழகக்கூடிய பழக்க வழக்கங்கள் எல்லாம் ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணும்.

05:21

Speaker 1

ஏன்னா சேர்க்கையும் ரொம்ப அவசியம்.

05:23

Speaker 1

ரிஷபத்துக்கு இந்த இடத்துல.

05:25

Speaker 1

அந்த சேர்க்கை தவறாகி கூடாது.

05:27

Speaker 1

அதனாலதான் வந்து உங்களை சக்கரத்தாழ்வாருக்கு போய் ஸ்ரீரங்கத்துல போய் அங்க இருக்கிற பெருமாளை வழிபாடு பண்ணிட்டு,

05:32

Speaker 1

சக்கரத்தாழ்வாருக்கு விளக்கு போட்டுட்டு வாங்க ஒரு காலை நேரமா பார்த்து போய் ஒரு விளக்கு போட்டுட்டு வாங்க.

05:38

Speaker 1

நிச்சயம் இந்த அதிசார குரு பயிற்சி உங்களுக்கும் நல்லதே செய்யும்.

05:46

Speaker 1

மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.

05:53

Speaker 1

அதே இது நவம்பர் மாசம்,

06:00

Speaker 1

பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க?

06:04

Speaker 1

சனிக்கு பயந்துக்குவாங்க.

06:06

Speaker 1

நிஜமால்ம யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா?

06:11

Speaker 1

ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு எங்களை எல்லாம் காப்பாத்திருவாரு அப்படிங்கறதை விட,

06:20

Speaker 1

கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பார்.

06:23

Speaker 1

அப்படின்னு சொல்லப்படுது.

06:26

Speaker 1

அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.

06:28

Speaker 1

இங்க என்ன ஆகுது அப்படின்னா,

06:34

Speaker 1

யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசார பயிற்சி அப்படின்னு பார்க்கிறப்போ,

06:42

Speaker 1

கர்மத்திலிருந்துதான் தர்மத்துக்கு போகணும்ங்கறதுதான் விதி.

06:47

Speaker 1

அப்ப அந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும்?

06:54

Speaker 1

சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி,

06:58

Speaker 1

பயபக்தியோடு பண்ணி,

07:03

Speaker 1

குமுதம் பக்தி நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.

07:07

Speaker 1

இன்னைக்கு நம்ம பேசப்போற விஷயம் என்ன அப்படின்னா,

07:12

Speaker 1

குரு அதிசார பயிற்சி.

07:14

Speaker 1

அது என்ன குரு அதிசார பயிற்சி?

07:16

Speaker 1

சனி ஏற்கனவே எங்களை வச்சு செஞ்சுட்டு இருக்கு.

07:20

Speaker 1

குரு வந்து காப்பாத்த மாட்டாரா அப்படிங்கற மாதிரி இருக்கும்.

07:22

Speaker 1

அது வந்து குரு பெயர்ச்சிக்காக நம்ம காத்திருக்கிறது.

07:26

Speaker 1

அக்டோபர் 18, 2025.

07:32

Speaker 1

மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.

07:37

Speaker 1

அதே இது நவம்பர் மாசம்,

07:42

Speaker 1

திரும்பி கடகத்திலிருந்து மிதுனத்துக்கே போறார்.

07:47

Speaker 1

அதுதான் அதிசார பயிற்சி.

07:49

Speaker 1

அதாவது ரிவர்ஸ்ல போறது அப்படின்னு சொல்றது.

07:52

Speaker 1

குருனா யாரு?

07:54

Speaker 1

குரு வந்து அவர் தேவ குரு இல்லையா?

07:58

Speaker 1

அவரை வந்து பிரகஸ்பதி அப்படின்னு சொல்றது.

08:00

Speaker 1

தேவர்களுக்கெல்லாம் அவர் குரு.

08:02

Speaker 1

அப்ப குரு இருக்கிறப்ப என்னென்ன நல்ல விஷயங்கள் நம்ம வாழ்க்கையில நடக்கும்?

08:06

Speaker 1

குரு வந்து பிள்ளைப்பேறாகட்டும், திருமணம், செல்வம், செழிப்பு அனைத்து நல்ல விஷயங்களுக்கும் குரு ரொம்ப மங்களமா பார்க்கப்படக்கூடிய ஒரு கிரகம் இல்லையா?

08:14

Speaker 1

சனி கிட்ட இருந்து தப்பிக்க ஒரே வழி குரு அப்படின்னு இருந்தாலும்,

08:18

Speaker 1

பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க?

08:21

Speaker 1

சனிக்கு பயந்துக்குவாங்க.

08:23

Speaker 1

நிஜமால்ம யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா?

08:26

Speaker 1

குருவுக்குதான் பயந்துக்கணும்.

08:28

Speaker 1

ஏன் அப்படின்னா,

08:31

Speaker 1

குரு ஞானக்காரகன்.

08:32

Speaker 1

அதாவது தர்மம்.

08:35

Speaker 1

தர்மமா இருந்தா மட்டுமே குரு உதவி பண்ணுவார்.

08:40

Speaker 1

இல்லை அப்படின்னா,

08:43

Speaker 1

தர்மம் தலைகாக்கும்.

08:45

Speaker 1

கிருஷ்ணர் எப்படி வந்து லேட்டா வந்தாலும் பாண்டவர்களுக்கு வந்து,

08:53

Speaker 1

தர்மப்படி எப்படி யுத்தம் பண்ணனுமோ அதை சொல்லிக் கொடுத்து வெற்றி அடைய வச்சார் இல்லையா?

08:58

Speaker 1

தர்மத்தின் பக்கமே கிருஷ்ணர் நிற்பார்.

09:02

Speaker 1

தெய்வம் தர்மத்தின் பக்கமே நிற்கும் அப்படிங்கறதுதான் வந்து,

09:07

Speaker 1

குருவோட கொள்கையே.

09:09

Speaker 1

அதனால ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு எங்களை எல்லாம் காப்பாத்திருவாரு அப்படிங்கறதை விட,

09:14

Speaker 1

நம்ம எந்த அளவுக்கு நியாய தர்மத்தோடு இருக்கிறோம் அப்படிங்கறதுதான் வந்து குரு நம்மளுக்கு சொல்லக்கூடிய விஷயமா இருக்கு.

09:20

Speaker 1

சரி இந்த குரு அதிசார பயிற்சி.

09:22

Speaker 1

அது என்ன அதிசார பயிற்சி?

09:24

Speaker 1

இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.

09:26

Speaker 1

புரியுற மாதிரி சொல்லுங்க.

09:28

Speaker 1

எங்களுக்கு அது புரியல.

09:29

Speaker 1

பெயர்ச்சினா என்ன அதிசார பெயர்ச்சினா என்ன அப்படின்னா,

09:33

Speaker 1

நம்ம வந்து ஒரு வண்டியில போறோம்னு வச்சுக்கோங்க.

09:36

Speaker 1

ஒரு பஸ்னு வச்சுக்கோங்க எல்லாமே பஸ்ல போயிருப்போம்.

09:39

Speaker 1

இப்போ நம்ம பஸ்ல போயிட்டு அந்த பஸ் நிக்குது பக்கத்துல ஒரு ட்ரெயின் ஃபாஸ்ட்டா போறப்போ நம்ம எப்படி ஃபீல் பண்ணுவோம்?

09:45

Speaker 1

பஸ் ரிவர்ஸ்ல போற மாதிரி ஃபீல் பண்ணுவோம்.

09:47

Speaker 1

ஆனா பஸ் அங்கேயேதான் நிக்குது.

09:50

Speaker 1

நம்ம பஸ் ரிவர்ஸ்ல போகல.

09:51

Speaker 1

அந்த மாதிரி குரு என்ன ஆகுறாருன்னா,

09:53

Speaker 1

குரு ஜெனரலாவே ஒரு வருடம்.

09:56

Speaker 1

ஒரு ஒரு ஒரு ராசி கட்டத்துல இருப்பார்.

10:01

Speaker 1

மொத்த ராசி கட்டங்களையும் சுத்தி வரதுக்கு 12 வருடம் ஆகும் அப்படின்னு சொல்லுவாங்க.

10:04

Speaker 1

அதாவது,

10:06

Speaker 1

கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பார் அப்படின்னு சொல்லப்படுது.

10:11

Speaker 1

அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.

10:13

Speaker 1

இங்க என்ன ஆகுது அப்படின்னா,

10:16

Speaker 1

குரு மிதுனத்திலிருந்து கடகத்துக்கு போயிட்டு,

10:21

Speaker 1

இதே மாதிரி நான் எப்படி உங்களுக்கு ரிவர்ஸ் சொன்னேன்.

10:23

Speaker 1

அந்த மாதிரி இப்படி ரிவர்ஸ் போறார் இப்ப.

10:25

Speaker 1

அப்படியே அதாவது நம்மளுடைய பூமி சுழற்சி எப்படி காட்டுது அப்படின்னா,

10:29

Speaker 1

இது வந்து வானில் நடக்கக்கூடிய ஒரு அதிசயமாவே பார்க்கப்படுது.

10:33

Speaker 1

அதாவது ஜெனரலா குரு பாட்டுக்கு முன்னோக்கிதான் போகணும்.

10:37

Speaker 1

வக்ரம் அடையறார் வக்ரம்ங்கறது ஒரு குடிகாரரை போல பிஹேவ் பண்ற மாதிரி ஒரு விஷயம்.

10:42

Speaker 1

நிதானத்தை இழந்து அந்த அதாவது,

10:45

Speaker 1

இந்த இடத்துல என்ன ஆகுறார்ன்னா,

10:47

Speaker 1

குரு கொஞ்சம் லேட் பண்ண போறார்.

10:49

Speaker 1

என்னென்ன செழிப்புகள் எல்லாம் கொடுத்துட்டு இருந்தாரோ,

10:54

Speaker 1

டக்குன்னு அப்படியே ஸ்டாப் ஆகுறார் அந்த இடத்துல.

10:56

Speaker 1

அப்ப என்ன பண்ணுவார்?

10:57

Speaker 1

குரு ஏன் ஸ்டாப் ஆகுறாரு?

10:59

Speaker 1

குரு உங்களுக்கு கொஞ்ச நேரம் யோசிக்க வைப்பார்.

11:01

Speaker 1

இப்ப நம்ம வந்து தெய்வ தரிசனங்களுக்கு போறோம் காத்திருந்து தரிசனம் பண்ணிட்டு வரோம் இல்லையா?

11:06

Speaker 1

கொஞ்ச நேரம் நம்மளுக்கு அப்படியே டயர்ட் ஆகும் எப்படா கடவுளை பார்ப்போம்.

11:10

Speaker 1

ஆனா பார்த்துருவோம்.

11:12

Speaker 1

அதேதான் வந்து இந்த ரிவர்ஸ் போயிட்டு ரெட்ரோகேட் அப்படின்னு சொல்லுவாங்க.

11:18

Speaker 1

குரு வந்து பின்னோக்கி போன மாதிரி தெரியும்.

11:21

Speaker 1

திரும்பவும் அதே பழைய நிலைமைக்கு அவர் மறுபடியும் இந்த வருட கடைசியில திரும்பவும் வந்துருவார்.

11:26

Speaker 1

கொஞ்ச நாளைக்கு தற்காலிகமா அந்த மாதிரி இருக்கக்கூடிய அந்த வானில் அந்த வானியல் சாஸ்திரப்படி.

11:31

Speaker 1

அந்த வானத்துல நடக்கக்கூடிய சில விஷயங்கள்னால,

11:36

Speaker 1

அப்படி நம்மளுக்கு அந்த பூமியோட சுழற்சியால அப்படி தெரியுது.

11:40

Speaker 1

அதாவது குரு வந்து கொஞ்சம் கிராஜுவலா.

11:44

Speaker 1

அதாவது,

11:46

Speaker 1

சாதாரணமாக எடுத்த உடனே ஒரு பெரிய வளர்ச்சி அப்படிங்கறது எல்லாம் குரு கொடுக்க மாட்டார்.

11:50

Speaker 1

நிதானமாதான் கொடுப்பார்.

11:52

Speaker 1

சனி வந்து லேட் பண்ணி லேட் பண்ணி புல் பேக் பண்ணி கொடுப்பார்.

11:56

Speaker 1

ஆனா குரு வந்து,

11:58

Speaker 1

குரோத்தை கொடுப்பார் உங்களுக்கு கண்ணுக்கு நேரா தெரியும் ஆனா உங்களுக்கு தெரியும் அந்த உழைப்பை போடணும்.

12:04

Speaker 1

எனக்கு கண்ணு முன்னாடி ஒரு செல்வம் வரப்போகுதுங்கறது எல்லாம் தெரியும் இல்லையா?

12:08

Speaker 1

அது இன்னும் நிதானிச்சு கொடுக்க போறார் அப்படிங்கறதுதான் வந்து அதிசார பயிற்சி அப்படிங்கறது அர்த்தம்.

12:13

Speaker 1

இப்போ என்னென்ன ராசிகளுக்கு இந்த அதிசார பயிற்சி?

12:16

Speaker 1

என்னென்ன மாதிரியான நல்லதை எப்படி கொடுக்க போறாரு?

12:20

Speaker 1

என்ன பாடத்தை கற்பிக்க வராரு அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும்.

12:23

Speaker 1

ஏன்னா குருவா குரு அப்படினாலே பாடம் கற்பிக்கதான வராரு.

12:25

Speaker 1

அதுவும் இந்த அதிசார பயிற்சி எப்படி தெரியுமா?

12:28

Speaker 1

இன் ஒரு கிளாஸ்ல இருந்து புதுசா இன்னொரு கிளாஸ்க்கு ஒரு வாத்தியார் போறப்ப அந்த வாத்தியார் எப்படி நம்மகிட்ட பிஹேவ் பண்ணக்கூடாதோன்னு நம்மளுக்கு தெரியாது.

12:36

Speaker 1

அந்த மாதிரிதான் இப்போ இந்த அதிசார பயிற்சியும் நம்மளுக்கு உணர்த்த போகக்கூடிய விஷயமா இருக்கும்.

12:41

Speaker 1

சரி இந்த குரு அதிசார பயிற்சி.

12:43

Speaker 1

யாருக்கெல்லாம் நல்லது பண்ண போறார் அப்படின்னா,

12:48

Speaker 1

கடகம், ரிஷபம், மீனம்.

12:52

Speaker 1

இந்த மூணு ராசிகளுக்குமே வந்து குரு அதிசார பயிற்சி நிச்சயம் நல்ல விஷயங்கள்தான் கொடுக்கும்.

12:59

Speaker 1

நான் சொன்ன சில விஷயங்கள் இருக்கு இல்லையா?

13:03

Speaker 1

கொஞ்சம் கவனமா இருந்துக்கணும்.

13:04

Speaker 1

அதுல கவனமா இருந்துட்டீங்கன்னா,

13:07

Speaker 1

உங்களுக்கு ஜாக்பாட்டே அடிக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது இருக்கு.

13:12

Speaker 1

யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசார பயிற்சி அப்படின்னு பார்க்கிறப்போ,

13:18

Speaker 1

மிதுனம், தனுசு, மகரம்.

13:22

Speaker 1

கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது நல்லது இந்த அதிசார பயிற்சியில.

13:25

Speaker 1

ஏன்னா குரு கொஞ்சம் பின்தங்கி இருக்கிறதுனால எங்கயாவது ஒரு இடத்துல அவமானங்கள் சந்திக்கக்கூடிய,

13:32

Speaker 1

ஒரு தருணத்தை அப்படிங்கறது உருவாகிவிடும்.

13:37

Speaker 1

குரு உருவாக்க மாட்டார் குரு பின்தங்கி இருக்கிறதுனால அப்படி அமையக்கூடிய ஒரு தருணம் இருக்கிறதுனால,

13:43

Speaker 1

கவனம் மிக கவனம் அப்படின்னே நான் இந்த மூணு ராசிகளுக்கும் சொல்லுவேன்.

13:48

Speaker 1

யாருக்கெல்லாம் ஓகே.

13:51

Speaker 1

நாலு.

13:53

Speaker 1

அதாவது ஒரு மத்தியமமா இருக்குது ஒன்னும் இல்லை நீங்க எல்லாம் பிரச்சனை இல்லை உங்களை எல்லாம் குரு அதிசார பயிற்சி பெருசா ஒன்னும் தாக்கப் போறது இல்லை.

14:01

Speaker 1

அப்படிங்கறவங்க எல்லாம் யாருன்னு பார்த்தீங்க அப்படின்னா,

14:05

Speaker 1

மேஷம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம்.

14:11

Speaker 1

உங்களுக்கெல்லாம் வந்து ஒரு மத்தியமமான ஒரு பலன் அப்படிங்கறதுதான் வந்து இந்த குரு அதிசார பயிற்சி அப்படிங்கறது சொல்லுது.

14:18

Speaker 1

பொதுவாவே குரு அப்படிங்கறவர் எதுக்கு வராரு அப்படினாலே,

14:23

Speaker 1

நம்ம செஞ்ச தவறுகளிலிருந்து சுட்டிக்காட்டி அதை சரி செய்யறதுக்குதான்.

14:28

Speaker 1

அப்ப இந்த குரு தட்சணை அப்படிங்கற ஒரு விஷயம் எல்லாம் இருக்கு இல்லையா?

14:32

Speaker 1

குரு தட்சணை எல்லாம் செழிப்பா குருவுக்கு வந்து கொடுத்து வழிபாடு பண்ணிட்டு வர்றது.

14:36

Speaker 1

அந்த குரு தட்சணையில பேரம் பேசுறதோ அந்த குரு தட்சணையில வந்து இது பண்ணனா போதுமா?

14:44

Speaker 1

அப்படிங்கற மாதிரி அந்த வாக்குவாதங்கள் இருக்கிறதோ சந்தேகமோ.

14:47

Speaker 1

குருனாலே சந்தேகமே படவே கூடாது.

14:50

Speaker 1

குருவை நம்ம சந்தேகப்பட்டுட்டோம் அப்படினாலே ஏதோ ஒரு வகையில நம்மளுக்கு குரு தோஷமோ.

14:55

Speaker 1

குரு பலம் கம்மியா இருக்குங்கறது அர்த்தம்.

14:57

Speaker 1

அது குரு தோஷமாவே பார்க்கப்படுது.

14:59

Speaker 1

அதாவது குருமார்களுடைய,

15:02

Speaker 1

வழிபட்டு போங்கன்னு சொல்றது இல்லை.

15:04

Speaker 1

குருமார்கள் சொல்றதை கேட்டு அந்த பாதையை நம்ம பின்பற்றனும் அப்படினாலே,

15:12

Speaker 1

குருவோட அருள் செழிப்பாவே நமக்கு இருக்கும் அப்படின்னு சொல்லி நான் முடிச்சுக்கிறேன்.

Topics: ரிஷப ராசி குரு அதிசார பெயர்ச்சி செல்வம் செழிப்பு சுக்கிரன் ஸ்ரீரங்கம் சக்கரத்தாழ்வார் தர்மம் கர்மம் பரிகாரம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11914)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11914)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/rishabam-wealth-no-obstacle-astrologer-jeevitha/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
