**ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள் | Sani Peyarchi 2026 | Rishabam | Jeevitha Sureshkumar Interview — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/rishabam-sani-peyarchi-2026-interview/

2026 சனிப்பெயர்ச்சி ரிஷபம் ராசிக்கான பலன்கள் மற்றும் ஜீவிதா சுரேஷ்குமார் அவர்களின் விரிவான ஆலோசனைகள்.

## Key Takeaways

- சனிப்பெயர்ச்சி 2026 ரிஷபம் ராசிக்கான பலன்கள் பெரும்பாலும் நேர்மறையாக இருக்கும்.
- அஸ்ட்ராலஜி வகுப்புகள் மூன்று மாத காலம் நடைபெறும் மற்றும் விரிவான பயிற்சிகளை வழங்கும்.
- கிரகங்களின் இயக்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனியின் தாக்கம் மாற்றம் அடைகிறது.
- தரமான மாணவர்களை தேர்வு செய்து, திறந்த மனதுடன் கற்றுக்கொள்ள வேண்டும்.
- சனிப்பெயர்ச்சி தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

## What the video covers

- சனிப்பெயர்ச்சி 2026 மார்ச் 5-6 அன்று தொடங்கி, வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் விளக்கப்படுகிறது.
- ஜீவிதா சுரேஷ்குமார் அஸ்ட்ராலஜி மற்றும் கணித பஞ்சாங்கம் குறித்து விரிவாக பேசுகிறார்.
- அஸ்ட்ராலஜி வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் மார்ச் 20 முதல் தொடங்கும், மூன்று மாத காலம் நடைபெறும்.
- வகுப்புகளில் பல்வேறு சிஸ்டம்கள் மற்றும் ஜோதிடக் கணிப்புகள் விவாதிக்கப்படுகின்றன.
- சனிப்பெயர்ச்சி மற்றும் கிரகங்களின் இயக்கம் பற்றிய விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.
- ரிஷபம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்: 11-ஆம் இடத்தில் சனி இருப்பதால் தொழில் முன்னேற்றம் மற்றும் மனநிலை மேம்பாடு.
- சனியின் நடத்தை மற்றும் குரு கிரகத்தின் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
- அஸ்ட்ராலஜி ஆர்வலர்களுக்கு திறந்த மனதுடன் கற்றுக்கொள்ளும் அழைப்பு.
- வகுப்புகளுக்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன, ஆனால் தரமான மாணவர்களை தேர்வு செய்யும் நடைமுறை உள்ளது.
- சனிப்பெயர்ச்சியின் சமூக மற்றும் தனிப்பட்ட தாக்கங்கள் குறித்து விளக்கம்.

Answers

## Questions about this video

இந்த வீடியோவில் சனிப்பெயர்ச்சி எப்போது தொடங்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது?

இந்த வீடியோவில், வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி மார்ச் 5 அல்லது 6 ஆம் தேதிகளில் தொடங்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சனிப்பெயர்ச்சி பலன்களைப் பற்றி பேச வந்தவர் யார்?

இந்த நிகழ்ச்சியில் சனிப்பெயர்ச்சி பலன்களைப் பற்றி விரிவாகப் பேசுவதற்காக அஸ்ட்ராலஜர் மற்றும் ஆராய்ச்சியாளர் திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள் இணைந்திருக்கிறார்.

ஜீவிதா சுரேஷ்குமார் நடத்தும் அஸ்ட்ராலஜி வகுப்புகளின் அடுத்த பேட்ச் எப்போது தொடங்குகிறது?

ஜீவிதா சுரேஷ்குமார் நடத்தும் அஸ்ட்ராலஜி வகுப்புகளின் இரண்டாவது பேட்ச் மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறது. இது ஒரு மூன்று மாத கால அடிப்படைப் பாடத்திட்டமாகும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

பொறுப்புத் துறப்பு '4th Estate தமிழ்' ஊடகத்தில் ஒலியுறும் அனைத்து கருத்துக்களும் விருந்தினர்களுடைய சொந்த கருத்து.

00:05

Speaker A

'4th Estate தமிழ்' ஊடகத்துக்கும் அதற்கும் தொடர்பு இல்லை.

00:09

Speaker A

DISCLAIMER

00:10

Speaker A

ALL OPINIONS EXPRESSED BY THE PROGRAM PARTICIPANTS ARE SOLELY THEIR OPINIONS AND DO NOT REFLECT THE OPINIONS OF 4TH ESTATE TAMIL

00:15

Speaker A

நிம்மதி ப்ராப்பர்ட்டி மேனேஜ்மென்ட் காண்டாக்ட் 7667008999.

00:20

Speaker A

நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை, இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருத்துவமனை.

00:29

Speaker A

கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரை தொடர்புக்கு 8807666117 மற்றும் 8807666118.

00:33

Speaker B

போர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழி வர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள்.

00:37

Speaker B

இது உங்கள் போர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் சிறப்பு நேர்காணல் பகுதி.

00:40

Speaker B

தொடர்ச்சியா வந்து பார்த்தீங்கன்னா எல்லாருக்குமே தெரியும் எல்லா விதமான துறைகளிலும் ஒரு ஆர்வம் இருப்பதை போல இந்த அஸ்ட்ராலஜி இந்த கணிதம் துறையும் வந்து பார்த்தீங்கன்னா கணிப்பு துறையும் ரொம்ப ஒரு ஆர்வமான ஒரு துறைதான் எல்லாருக்குமே பொதுவாக வெகுஜன மக்களுக்குமே கூட.

00:56

Speaker B

சோ இந்த நேரம் அப்படிங்கறது வந்து இந்த வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில சனிப்பெயர்ச்சி அப்படிங்கறது துவங்கி இருக்கிறது மார்ச் 5, 6-ல துவங்கி இருக்குது அப்படிங்கறத நம்ம பார்க்கிறோம்.

01:03

Speaker B

அதைப்பற்றிய விரிவான ஒரு அலசல்களை நம்மோடு பேசுவதற்காக இணைந்திருக்கிறார் மீண்டும் அஸ்ட்ராலஜர் கம் ரிசர்ச்சர் மரியாதைக்குரிய திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.

01:09

Speaker C

வணக்கம்.

01:10

Speaker B

வணக்கம்.

01:11

Speaker C

எப்படி இருக்கீங்க மேம்?

01:12

Speaker C

நல்லா இருக்கேன்.

01:13

Speaker C

நீங்க எப்படி இருக்கீங்க?

01:14

Speaker B

நலமா இருக்கேன் மிக்க மகிழ்ச்சி உங்களை மீண்டும் சந்திக்கிறதுல.

01:16

Speaker B

நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நீங்க தொடர்ச்சியா வகுப்புகள் எடுத்துக்கிட்டு இருக்கீங்க.

01:23

Speaker B

அந்த வகுப்புகள் அப்கமிங் கிளாசஸ் என்ன அப்படிங்கறத டீடைல்ஸ கொஞ்சம் மக்களுக்கு சொல்லிட்டு நம்ம நிகழ்ச்சிக்குள்ள துவங்கலாம்.

01:29

Speaker C

ஆக்சுவலா வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சாச்சு பேசிக் கோர்ஸ் அஸ்ட்ராலஜி கோர்சஸ் ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சு.

01:34

Speaker C

இப்ப செகண்ட் பேட்ச் வந்து மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து தொடங்குறோம்.

01:38

Speaker C

சோ இது எப்படி நான் ஸ்டுடென்ட்ஸ சூஸ் பண்றோம் அப்படின்னா வர்றவங்க வந்து நான் எடுத்த உடனே அஸ்ட்ராலஜர் ஆயிருவேனா நான் இப்படி இதை கெயின் பண்ணிருவேனா.

01:49

Speaker C

நீங்க பர்டிகுலரா இந்த பேட்டர்ன் இந்த சிஸ்டம் தான் நீங்க ஃபாலோ பண்ணி சொல்லிக் கொடுப்பீங்களா அதெல்லாம் கிடையாது.

01:53

Speaker C

இது வந்து எப்படின்னா உங்களுக்கு எல்லா சிஸ்டமுமே நம்ம டிஸ்கஸ் பண்ணுவோம்.

01:56

Speaker C

மைண்ட் ஓபன் மைண்டடா வச்சிட்டு நாலேட்ஜ் கெயின் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் வரணும் ஏன்னா அஸ்ட்ராலஜி பொறுத்தவரைக்கும் இது ஒரு கடல்.

02:03

Speaker C

சோ இது ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸ் கோர்ஸா இருக்கும் இந்த த்ரீ மந்த்ஸ் கோர்ஸ் முடிச்சவங்களுக்கு தான் நான் அடுத்தது நெக்ஸ்ட் லெவல் ஹையர் லெவல் கோர்சஸ் வந்து அவங்கதான் கண்டினியூ பண்ண முடியும்.

02:10

Speaker C

சோ இந்த மூணு மாசம் கழிச்சு நெக்ஸ்ட் லெவல் கோர்சஸ் அப்படியே கண்டினியூ ஆயிரும் ஆல்ரெடி இருக்க ஃபர்ஸ்ட் பேட்ச் ஸ்டுடென்ட்ஸும் செகண்ட் பேட்ச் ஸ்டுடென்ட்ஸும் சேர்ந்து பண்ற மாதிரி இருக்கும்.

02:15

Speaker C

இடையில இடையில வொர்க்ஷாப்ஸும் அப்பப்ப பண்றோம்.

02:17

Speaker C

இப்பதான் நட்சத்திர கிளாசஸ் முடிச்சோம்.

02:18

Speaker C

சோ இந்த கிளாசஸ் போயிட்டு இருக்கப்போ இடையில மறுபடியும் ஒரு வொர்க்ஷாப் பண்ற மாதிரி இருக்கும்.

02:22

Speaker B

ஓகே ஓகே.

02:22

Speaker C

சோ இப்ப வர ஸ்டுடென்ட்ஸ் வந்து வொர்க்ஷாப்ஸ்க்கு வராங்க அப்படிங்கறப்போ அவங்களுக்கு இதுல அவங்களுக்கு டிஸ்கவுண்ட்ஸ் அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கும்.

02:26

Speaker B

பண்ணி கொடுப்பீங்க.

02:27

Speaker C

நம்ம ஸ்டுடென்ட்டா இருக்கிறப்போ.

02:28

Speaker B

ஓகே ஓகே.

02:28

Speaker C

சோ சேரணும்னு நினைக்கிறவங்க வந்து கம் வித் ஓபன் மைண்ட் ஏன்னா இதுவரைக்கும் 2000 பேத்துக்கு மேல எங்களுக்கு அப்ளிகேஷன்ஸ் வந்தாலுமே.

02:36

Speaker B

ஓகே.

02:36

Speaker C

ஓகே.

02:37

Speaker C

நான் இன்னும் ஒரு 15 பேத்தை கூட இவங்கதான் வேணும்னு நான் இன்னும் ஃபில்டர் பண்ணல.

02:40

Speaker B

ரைட்.

02:40

Speaker C

சோ அவ்வளவு ஃபில்டர் பண்ணிதான் எடுக்கிறோம் ஏன்னா குவாலிட்டி ரொம்ப முக்கியம் அப்படிங்கறதோட எத்தனை பேர் வராங்கங்கறது இல்லை.

02:46

Speaker C

ஸ்பெசிஃபிக்கா இருக்கணும் கொஞ்ச பேர் இருந்தாலும் நாலேட்ஜபிலா இருக்கணும் அப்படிங்கறதுதான்.

02:50

Speaker B

20-த்ல ஆரம்பிச்சு எப்ப முடியுது மேம் வகுப்புகள்?

02:52

Speaker B

மூன்று மாதம்.

02:52

Speaker C

மூன்று மாத வகுப்புகள் தான் இது.

02:53

Speaker C

இது மார்ச், ஏப்ரல், மே அதாவது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கிளாசஸ் வாரத்துல ஒரு நாள் கிளாசஸ் வைக்கிற மாதிரி.

02:58

Speaker C

ஃபர்ஸ்ட் வந்து ஃபிரைடே, சாட்டர்டேன்னு வச்சோம் பட் நிறைய பேர் கேட்டாங்க ரெண்டு நாள் முடியாதுங்கறப்போ.

03:04

Speaker C

சரி சாட்டர்டே அதை அப்படியே ரெண்டு கிளாஸா ஒரே கிளாஸா மாத்திரலாம் அப்படிங்கற மாதிரி.

03:07

Speaker B

இந்த வகுப்புகள் தொடர்பாக நீங்க மேலதிக விவரங்களை தெரிஞ்சுக்கணும் அப்படின்னா இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விவரங்களை அனுப்புங்க.

03:12

Speaker B

அந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து உங்களுக்கு ரிப்ளை பண்ணி உங்களுக்கு கம்யூனிகேட் பண்ணுவாங்க.

03:16

Speaker B

நன்றி.

03:17

Speaker B

மேம் இப்போ நம்ம முக்கியமான ஒரு இடத்துக்கு வந்திருக்கிறோம்.

03:21

Speaker B

சோ வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் அப்படிங்கறது குறித்து ஏற்கனவே நீங்க பல முறை பேசி இருக்கிறீங்க.

03:25

Speaker B

நம்ம போர்த் எஸ்டேட் தமிழ்ல நீங்க பேசி இருக்கிறீங்க.

03:27

Speaker B

இந்த முறை வந்திருக்கிறது என்ன சனிப்பெயர்ச்சி என்ன மாறுபாடு இருக்கு அதுல இருந்து நம்ம துவங்கிட்டு நம்ம அடுத்த ராசிகளுக்குள்ள போகலாம்.

03:32

Speaker C

சோ வந்து மார்ச் ஆறாம் தேதி சனிப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அப்படிங்கறதுதான்.

03:36

Speaker C

அதாவது திருநள்ளாறுல இதை வந்து ஃபாலோ பண்ணுவாங்க அப்படிங்கறது.

03:40

Speaker C

கோயில் ஆகம விதிகளை வச்சு ஃபாலோ பண்ணது பலாயிரம் வருடங்களுக்கு முன்னாடியே வந்து ரிஷிகளால இது கணிக்கப்பட்ட ஒரு விஷயம்.

03:46

Speaker C

அதெல்லாம் அந்த காலத்துல வந்து ராஜாக்களுக்காகவும் கோயிலுடைய அமைப்புகளுக்காகவும் கட்டமைப்பாகவும் அதுக்காக வந்தது.

03:50

Speaker C

தனிமனிதனுக்காக ஜோதிடம் வரல அந்த நேரத்துல.

03:52

Speaker B

ம் ம்.

03:53

Speaker C

சோ இது வந்து கூட்டாதான் வந்தது ராஜாக்களுக்காக வந்தது.

03:56

Speaker C

அரசு எப்படி இருக்கும்ங்கறதுக்காக வந்தது.

03:57

Speaker C

சோ அதுக்கப்புறமா நம்ம வந்து தனிமனித தனிமனிதனுடைய ஜோதிடம் அப்படின்னு பார்க்கிறப்போ சில விஷயங்கள் புரிய வந்தது என்ன அப்படின்னா.

04:03

Speaker C

இதுதான் ஒரு 200 வருடங்களா போய்க்கொண்டிருக்கிற ஒரு டிபேட்டே இதுதான்.

04:07

Speaker C

அது என்னன்னா அக்யூரஸினு ஒரு விஷயம் இருக்குது.

04:08

Speaker C

நம்மளுடைய கிராவிடேஷனல் புல்லுன்னு ஒன்னு இருக்குது.

04:11

Speaker C

கிரகங்கள் வந்து அப்ப கணிச்ச மாதிரி அதே பேட்டர்ன்ல எல்லாம் மூவ் ஆகலங்கறது ஒன்னு இருக்குது.

04:17

Speaker C

லைட்டா நம்மளுடைய குளோபும் டில்ட் ஆயிடுச்சுங்கறது எல்லாம் ஒன்னு இருக்குது.

04:19

Speaker C

சோ இதெல்லாம் பார்க்கிறப்போ சரியான முறைப்படி வந்து பிளானட்ஸ் மூவ் ஆகுறது இல்லை.

04:24

Speaker C

அதனாலதான் நம்ம வந்து வக்ரம் அடையுது.

04:27

Speaker C

இப்ப கூட நம்ம ரீசன்ட்டா என்ன சொல்லி இருப்போம் குருப்பெயர்ச்சில கூட குரு வந்துட்டு முன்னாடி வந்துட்டு திரும்பி பின்னாடி போறாருன்னு ஒன்னு இருக்குது.

04:32

Speaker C

சோ இதெல்லாம் என்னன்னா அதான்.

04:33

Speaker C

குரு அங்கேயே தான் இருக்குது.

04:34

Speaker C

நம்ம நின்னுட்டு இருப்போம் இந்த பக்கம் ஒரு பஸ் பாஸ் ஆகி போறப்போ நம்ம மூவ் ஆகுற மாதிரி தெரியும்ங்கற ஒரு விஷயம் தான்.

04:39

Speaker C

சோ இந்த மாதிரி பிளானட்ஸ்ல சில விஷயங்கள் நடக்குறப்போ இதெல்லாம் அக்யூரசி.

04:43

Speaker C

ஒரு நிமிஷம் மிஸ் பண்ணா கூட எல்லாமே மாறும் லக்னம் எல்லாமே மாறிடும்.

04:47

Speaker C

சோ ஒரு சனி அப்படிங்கறப்போ ஒரு ராசியில இரண்டரை வருஷம் இருக்கும்.

04:51

Speaker C

மெதுவாதான் மூவ் ஆகும் அப்படிங்கறது.

04:52

Speaker C

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஆல்ரெடி சனி வந்துட்டார் அப்படிங்கறதுதான்.

04:55

Speaker C

இப்ப வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இப்பதான் வராரு அப்படிங்கறது அந்த காலத்துல கணிக்கப்பட்ட ஒரு விஷயம் இருக்கும்.

05:02

Speaker C

இதை வந்து நம்ம ரெஸ்பெக்ட் பண்ணிக்கலாம்.

05:04

Speaker C

சோ இது வந்து இது மரியாதையாக இதை நம்ம எடுத்துக்கிறது அப்படிங்கறதுதான்.

05:07

Speaker C

அப்ப இந்த வாக்கிய பஞ்சாங்கத்தை நம்ம எப்படி பார்க்கணும்னா குளோபல் வைஸ் எப்படி இருக்குங்கற ஒரு விஷயத்தைதான் நம்ம பார்க்கணும்.

05:10

Speaker B

உலக அளவுல.

05:11

Speaker C

அப்படிங்கறதுதான் பார்க்கணும்.

05:13

Speaker C

என்ன பொதுவான மாற்றங்கள் எப்படின்னு பார்க்கணும் நம்ம தவிர்த்து தனிமனிதனுக்கு என்ன ஆகும் அப்படிங்கற விஷயத்தை வந்து நம்ம இப்ப பார்க்கிற மாதிரி.

05:18

Speaker C

பெருசா கிடையாது.

05:19

Speaker C

ஏன்னா அடுத்தது குருப்பெயர்ச்சி.

05:20

Speaker C

சோ இந்த சனி ஒரு விஷயம் பண்றப்போ குரு வந்து காப்பாத்துவார்னு எல்லாம் ஒன்னு இருக்குது.

05:24

Speaker B

ஓகே ஓகே.

05:25

Speaker B

ஜூன் மாசம் குருப்பெயர்ச்சி வருதுன்னு நினைக்கிறேன்.

05:27

Speaker B

திங்க் சோ இல்லையா?

05:27

Speaker C

அப்ப வந்து குரு குரு வரப்போ வந்து சனி கொஞ்சம் சைலன்ட் ஆவாருதான்.

05:31

Speaker C

குரு பார்த்தாலே கொஞ்சம் சனி சைலன்ட் ஆவாருங்கறதுனாலதான்.

05:33

Speaker C

இதை யாரும் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம் ஆனா ஒரு சிலர் ஆல்ரெடி அவங்களுக்கு சனிப்பெயர்ச்சிங்கற ஒரு விஷயம் எல்லாம் நடந்துட்டு இருக்கனால.

05:38

Speaker C

அவங்க எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.

05:40

Speaker B

ரைட் ரிஷப ராசிக்கு இந்த முறை எப்படி இருக்குது?

05:42

Speaker B

ஏன்னா நிறைய பேர் வந்து ரிஷபத்துக்கு பாசிட்டிவ் சொல்றாங்க நெகட்டிவ் சொல்றாங்க.

05:45

Speaker B

அவங்களுக்கு இந்த முறை எப்படி இருக்குது?

05:50

Speaker C

இப்ப ரிஷப ராசியோட இடம்னு பார்க்கிறப்போ அவருக்கு 11-த் பிளேஸா வராரு.

05:54

Speaker C

11-ஆம் இடம்ங்கறப்போ 11 எப்பவுமே வந்து உங்களுக்கு ஃபேவரபிலாதான் இருக்கும்.

05:59

Speaker C

எல்லாமே அள்ளிக் கொடுக்கிற ஒரு விஷயமாதான் இருக்கும்.

06:01

Speaker C

கொஞ்சம் பவர்ஃபுல்லா இருக்கிற மாதிரிதான் இருக்கும்.

06:02

Speaker C

அதனாலதான் வந்து சனி வந்து ஃபிரண்ட்.

06:04

Speaker B

ரிஷபத்துக்கு சனி ஃபிரண்ட்.

06:05

Speaker C

ஒரு ஃபிரண்ட்தான்.

06:06

Speaker C

கொஞ்சம் ஹெல்ப் எல்லாம் பண்ணுவார்.

06:07

Speaker C

அதனால வந்து அவங்களுக்கு ப்ரொபஷனல் வைஸ் கொஞ்சம் ஸ்ட்ராங் ஆகும்.

06:10

Speaker C

ஒரு கான்பிடன்ஸ் கொடுக்கும்.

06:11

Speaker C

கான்பிடன்ட்டா போய் பேச வைக்கும் அவங்கள.

06:13

Speaker C

தொழில்ங்கறது ஒரு முன்னேற்றப் பாதைக்குள்ள போவாங்க.

06:15

Speaker C

குழப்பத்திலிருந்து கொஞ்சம் வெளிய வர்றது.

06:17

Speaker C

ஆல்ரெடி திருக்கணிதப்படி அவங்க இந்த விஷயத்துக்குள்ள போயாச்சு.

06:20

Speaker C

சோ இது வாக்கிய பஞ்சாங்கப்படி இது ஒரு கன்ஃபர்மேஷன்.

06:23

Speaker C

சோ நீங்க வந்து பயந்துக்க தேவையே இல்லை.

06:25

Speaker C

நீங்க அடுத்த லெவல்.

06:26

Speaker C

ஏன்னா வந்து ரிஷபத்துக்கு வந்து குரு அவ்வளவு ஃபேவர் பண்ணாது.

06:30

Speaker C

ஏன்னா இது சுக்ரன் அப்படிங்கறதுனால.

06:31

Speaker C

சுக்ரன் கொஞ்சம் சனியோட பேச்சைக் கேட்கும்.

06:33

Speaker C

அப்ப சனி எப்படி சொல்லணும்னா என்ன மாதிரியான நீ வொர்க் பண்ணனும்.

06:37

Speaker C

நீங்க எங்க வொர்க் போட்டு எங்க எஃபர்ட் போடணும் எங்க டிராவல் பண்ணனும்ங்கற உழைப்பை போட போட போட.

06:42

Speaker C

இந்த சுக்ரன் அப்படியே டெவலப் ஆயிட்டே இருக்கும் அப்படிங்கறதுதான்.

06:44

Speaker C

சோ இவங்க வந்து ஒரு கரெக்டான ஒரு பொசிஷன்ல போய் உட்காருவாங்க அப்படிங்கறதுதான்.

06:47

Speaker C

இவங்களுடைய உழைப்பு என்னவோ.

06:48

Speaker C

100% வந்து சனி ஃபேவரபில் பண்ணுவோம் அவங்களுக்கு.

06:51

Speaker C

சோ அந்த அந்த உழைப்புங்கறது என்னது?

06:53

Speaker C

எல்லாத்து கூடயும் சரிசமமா பழகக்கூடிய ஒரு அமைப்பு.

06:58

Speaker C

இறங்கி வேர்வை சிந்தி ஒரு வேலை பார்க்கிற ஒரு விஷயம்.

07:00

Speaker C

அந்த உடல்நிலை அப்படிங்கற ஒரு விஷயம் இருக்குல்ல அவங்களுக்கு கெட எல்லாம் செய்யாது என்னன்னா பாடி கொஞ்சம் டயர்ட் ஆகலாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாம்.

07:06

Speaker C

ஆனா உடல் உழைப்பு புத்திசாலித்தனத்தை விட உடல் உழைப்பு போட வேண்டிய ஒரு இடத்துல இப்ப அவங்க இருக்காங்க.

07:11

Speaker C

இப்ப இருக்காங்க.

07:12

Speaker C

தானாவே நடக்கும்.

07:13

Speaker C

சனி தானாவே பண்ணி தானாவே அதை மூவ் பண்ணி கொண்டு போகும்.

07:14

Speaker C

டயர்ட்னஸ்ங்கறது பெருசா முதல்ல உங்களுக்கு.

07:16

Speaker C

உணர வைக்காது.

07:17

Speaker B

ஓகே.

07:17

Speaker B

இதுல பர்சனல் லைஃப் அண்ட் எக்கனாமி வைஸ் எப்படி அவங்க நகருவாங்க அடுத்த கட்டத்துக்கு நகருவாங்களா?

07:20

Speaker C

பர்சனல் லைஃப் வந்து அவங்களுக்கு கொஞ்சம் அப்கிரடேஷன் போகும்.

07:22

Speaker C

இந்த பர்சனல் லைஃப் எப்படி போகும்னா இனிமேல் நானே எல்லாம் மேனேஜ் பண்ணிக்கிறேன்.

07:26

Speaker C

அந்த டிபென்டன்சி இல்லாம கொஞ்சம் மாறும்.

07:27

Speaker C

இப்ப ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாம் டிபென்ட் பண்ணிட்டு இருப்பாங்க.

07:31

Speaker C

இந்த ஃபேமிலில இருக்கவங்களையும் இவங்களே சேர்த்து பார்த்துக்கிற மாதிரி அந்த மாதிரிதான் இருக்கும்.

07:34

Speaker C

சோ எக்கனாமி வைஸ்னு பார்க்கிறப்போ கொஞ்சம் நெக்ஸ்ட் லெவல் இவங்க போவாங்க.

07:37

Speaker C

ஒரு அஸ்திவாரம் போடக்கூடிய ஒரு டைம் பீரியட் தான் இது.

07:39

Speaker B

இடத்துக்கு இருப்பாங்க.

07:40

Speaker B

இவங்க ஏதாவது வழிபட வேண்டிய தெய்வங்கள் இருக்கா?

07:42

Speaker B

அது மாதிரி நோக்கி நகரலாமா இவங்க?

07:43

Speaker C

இவங்க வந்து சுக்ரன் சம்பந்தப்பட்ட தெய்வ வழிபாடே அவங்களுக்கு இருந்தாலே போதும்.

07:47

Speaker C

அங்க இருக்கிற நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனீஸ்வரருக்கு வழிபாடு பண்ணிட்டு.

07:51

Speaker C

ஆஞ்சநேயருக்கு ஒரு விளக்கு போட்டுட்டு வந்தாலே இவங்களுக்கு போதுமானது.

07:53

Speaker B

பட் இது வந்து ஒரு கூடுதல் விவரத்துக்காக நம்ம எடுத்துக்கலாம் இல்லையா?

07:56

Speaker C

ஆமா.

07:56

Speaker B

அந்த மாதிரி பார்க்கலாம்.

07:57

Speaker C

நன்றி.

07:57

Speaker C

சோ பொதுவா இந்த சனிப்பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ.

08:00

Speaker C

பெருசா பயந்துக்கணுங்கற ஒரு அவசியம் கிடையாது.

08:03

Speaker C

சனி நாளே ஒரு கரெக்ஷன் பண்ண வர்றவர் தான்.

08:04

Speaker C

என்ன தவறுகள் செஞ்சோமோ அதற்கான வினை அனுபவிக்கிறதுக்கு தான் இப்ப வர்றோம்ங்கறப்போ.

08:08

Speaker C

உடனே அதை நீங்க சரி பார்த்துட்டீங்கன்னா லைஃப் சேஞ்ச் ஓவர் அப்படிங்கறதுதான்.

08:11

Speaker C

அந்த லைஃபை மாத்தாம சனி கிளம்பவே மாட்டார்.

08:14

Speaker C

இல்லைன்னா நம்ம லூப்க்குள்ளேயே சுத்திட்டே இருக்கிற மாதிரிதான் அந்த விஷயம் இருக்கும்.

08:16

Speaker C

சோ அதனால தவறுகளை திருத்திக்கிறதுக்கு தான் திருத்துறதுதான் வந்து சனிப்பெயர்ச்சியே.

08:20

Speaker B

சோ யாரும் பயப்பட வேண்டாம் பொதுவா.

08:21

Speaker C

பயப்பட வேண்டாம்.

08:22

Speaker C

மாற்றம் தான் மாற்றத்தை கொடுக்கக்கூடியதுதான் கொஞ்சம் ஸ்லோவா கொடுக்கும்.

08:25

Speaker C

அதை வந்து பொறுமையா ஏத்துக்கணும் அப்படிங்கறப்போ.

08:27

Speaker C

ஏன்னா சனி லேட்டா கொடுத்தாலும் திரும்ப வாங்க மாட்டார்னு ஒன்னு இருக்குது.

08:31

Speaker B

ஓ.

08:31

Speaker C

சனி வந்து ஒருத்தவங்களுடைய வாழ்க்கையில 30 வயசு ஆகுறதுக்குள்ள எல்லாத்துக்குமே சனி வந்தே தீரும் அப்படிங்கறதுதான் ஒன்னு இருக்குது.

08:36

Speaker C

சோ ஒவ்வொரு ஏஜ் கேட்டகிரிக்குமே லைஃப் ஸ்டைல் மாறிட்டேதான் இருக்கும்ங்கறப்போ அப்கிரடேஷன் தான்.

08:40

Speaker C

சனி கொடுத்துட்டு போறப்போ உங்கள்ட்ட நல்லபடியாவே கொடுத்துட்டு போவார்ங்கறப்போ அதை பத்திரமா வச்சுக்கோங்க.

08:43

Speaker C

இப்ப உங்களுக்கு இன்கம் வருதுன்னா சனிதான் கொடுக்கிறார் அப்படிங்கறத நீங்க தெரிஞ்சுக்கணும்.

08:46

Speaker B

அந்த மாதிரி பார்க்கலாம்.

08:47

Speaker C

நன்றி.

08:47

Speaker B

நன்றி மீண்டும் சந்திக்கலாம் வணக்கம்.

Topics: சனிப்பெயர்ச்சி ரிஷபம் ஜோதிடம் அஸ்ட்ராலஜி வகுப்புகள் வாக்கிய பஞ்சாங்கம் சனி கிரக பலன்கள் ஜீவிதா சுரேஷ்குமார் 2026 சனிப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கம் தமிழ் ஜோதிடம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11518)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11518)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/rishabam-sani-peyarchi-2026-interview/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
