**ரிஷபம் -  வெள்ளியால் கிடைக்க போகும் ராஜயோகம்  | Rishabam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/rishabam-rajayogam-retro-aanmeegam/

ரிஷப ராசிக்காரர்களுக்கு கடன், சேமிப்பு, வெள்ளி வழிபாடு மற்றும் வாழ்வில் ராஜயோகம் பெறும் வழிகள் குறித்து விளக்கம்.

## Key Takeaways

- ரிஷப ராசிக்காரர்கள் கடன் பிரச்சனைகளை வெள்ளி வழிபாடு மூலம் சமாளிக்க வேண்டும்.
- தங்கம் வாங்க கடன் எடுப்பதை தவிர்த்து, வெள்ளி சேமிப்பை முன்னிறுத்த வேண்டும்.
- வாஸ்து மற்றும் குடும்ப உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் வாழ்க்கை நிலைமைகள் சிறப்பாகும்.
- வழிபாடு மற்றும் ஸ்வாஹா மூலம் நன்மைகள் பெற முடியும்.
- ஆண் மற்றும் பெண் ரிஷப ராசிக்காரர்களின் தனித்துவ மனநிலைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

## What the video covers

- ரிஷப ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கம் வாங்க கடன் எடுப்பார்கள், அதனை திருப்பி கொடுக்க கஷ்டம் ஏற்படும்.
- சேமிப்பு ரீதியில் வெள்ளி சேமிப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறந்த வழி என கூறப்படுகிறது.
- வெள்ளிக்கிழமை லட்சுமி நாராயண பூஜை மற்றும் வழிபாடுகள் கடன் பிரச்சனைகளை தீர்க்க உதவும்.
- வீட்டில் வெள்ளி பொருட்களை வைத்திருப்பது செல்வம் மற்றும் கடன் தீர்வுக்கு உதவும்.
- ஆண் மற்றும் பெண் ரிஷப ராசிக்காரர்களின் மனநிலைகள் மற்றும் கடன் வாங்கும் சூழ்நிலைகள் வேறுபடுகின்றன.
- வாஸ்து படி வீட்டின் ஈசானிய மூலை சுத்தம் செய்தல் மற்றும் மணி பிளான்ட் வைப்பது நல்லது.
- குடும்ப உறவுகள் மற்றும் தொடர்புகளை மேம்படுத்தும் வழிமுறைகள் கடன் பிரச்சனைகளை குறைக்கும்.
- பிராணிகள் வளர்ப்பதும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல விளைவுகளை தரும்.
- வழிபாடு மற்றும் ஸ்வாஹா மூலம் கடன் தோஷங்களை நீக்க முடியும்.
- ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தி, திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.

Answers

## Questions about this video

ரிஷப ராசிக்காரர்கள் தங்கம் வாங்குவது ஏன் நல்லதல்ல?

ரிஷப ராசிக்காரர்களிடம் தங்கம் அவ்வளவு சீக்கிரம் தங்காது. மேலும், தங்கம் வாங்க கடன் வாங்கினால், அதை அடைப்பது மிகவும் கடினமாகிவிடும்.

ரிஷப ராசிக்காரர்கள் கடனில் இருந்து மீள என்ன செய்ய வேண்டும்?

ரிஷப ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி நாராயண பூஜை செய்ய வேண்டும். தங்கம் சேர்ப்பதை விட வெள்ளி சேர்ப்பது நல்லது.

ரிஷப ராசிக்காரர்களின் சேமிப்பு பழக்கம் எப்படி இருக்கும்?

ரிஷப ராசிக்காரர்களுக்கு சேமிப்பு என்ற எண்ணமே இருக்காது. ஆடம்பர செலவுகள் அதிகம் செய்வார்கள், திட்டமிடல் சரியாக இருக்காது.

## Full Transcript — Download SRT & Markdown

00:02

Speaker A

சந்திராஷ்டமம் அன்னைக்கு கடனை அடைக்கவும் வேணாம்.

00:06

Speaker A

கடனை கொடுக்கவும் வேணாம்.

00:07

Speaker A

வாங்க போகவும் வேண்டாம்.

00:09

Speaker A

தங்கம் அப்படிங்கறது அவ்வளவு சீக்கிரம் ரிஷப ராசிக்காரங்க கிட்ட வந்து தங்கவே தங்காது.

00:13

Speaker A

நீங்க பெரும்பாலும் தங்கம் வாங்குறதுக்கு ஒரு கடன் வாங்குறீங்க அப்படின்னா அதை அடைக்கிறதும் உங்களுக்கு ரொம்ப கஷ்டமாயிடும்.

00:20

Speaker A

கடன் காரங்களுக்கு பதில் சொல்லிட்டே இருக்கிறது.

00:23

Speaker A

கடனை திருப்பி கொடுக்க முடியல மேலும் மேலும் கடன் வாங்கக்கூடிய ஒரு அமைப்பு.

00:26

Speaker A

சேமிப்பு அப்படிங்கிற அந்த தாட்டே ரிஷபத்துக்கு அப்படிங்கறது இருக்காது.

00:31

Speaker A

உங்களுடைய சேமிப்பு வெள்ளில போடுங்க.

00:34

Speaker A

ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.

00:38

Speaker A

இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்ன அப்படின்னா வாழ்க்கையில யாருக்கு தான் கடன் இல்லை.

00:43

Speaker A

இல்லையா எல்லாத்துக்கும் பணம் சம்பாதிக்கணும்.

00:45

Speaker A

அட் தி சேம் டைம் எப்படி சம்பாதிக்கிறது இப்ப இருக்க காலகட்டங்கள்ல கடன் வாங்காம எதுவுமே எங்களால பண்ண முடியலையே அப்படிங்கிற கேள்வி அம்பானிக்கு கூட உண்டு எல்லாத்துக்குமே உண்டு இந்த கேள்வி.

00:54

Speaker A

அப்படி இருக்கும்போது இந்த 12 ராசிகளுக்கும் அவங்க கடந்து வரக்கூடிய அந்த வாழ்க்கை பாதைன்னு வரப்போ அட் எனி காஸ்ட் ஏதோ ஒரு சிச்சுவேஷன்ல கடன் வாங்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது வந்துரும்.

01:05

Speaker A

அப்படி பார்க்கிறப்போ நான் ஜோதிடம் பார்த்ததுல இருந்து என்னுடைய அனுபவத்துல.

01:10

Speaker A

ஒவ்வொரு ராசிக்காரங்க என்னென்ன மாதிரியான ஒரு விஷயத்துக்கு காரணமா அவங்க வந்து கடன் வாங்கினாங்க எப்படி அவங்க அதிலிருந்து மீண்டாங்க அப்படிங்கறத வச்சு நான் இந்த 12 ராசிகளுக்கு எப்படி அப்படிங்கறத உங்களுக்கு சொல்றேன் என்ன தெய்வத்தை வழிபாடு பண்ணனும் எப்படி அந்த கடன் கடன்ங்கிற விஷயத்திலிருந்து எப்படி வெளிய வரணும் அப்படிங்கறத பத்தி நம்ம இங்க பார்ப்போம்.

02:09

Speaker A

ரிஷப ராசி ஜெனரலாவே ஆடம்பரத்துக்கு ரொம்ப மயங்கக்கூடியவங்க.

02:14

Speaker A

ஆடம்பர செலவு அதாவது சேமிப்பு அப்படிங்கிற அந்த தாட் ப்ராசஸ் வந்து அவங்களுக்கு ரொம்ப கம்மி.

02:20

Speaker A

இப்ப கையில எவ்வளவு காசு இருக்கோ இப்ப யாராவது ஒரு கஷ்டத்துக்கு வந்து இந்தாங்க ஒரு 5000 ரூபாய் வச்சுக்கோங்க நீங்க ரொம்ப கஷ்டப்படுறீங்க அப்படின்னு சொல்லி அந்த கஷ்டத்துக்கு கொடுத்துட்டு போறாங்கன்னா இந்த 5000 எப்படிடா செலவு பண்றது அப்படின்னு சொல்லிட்டு ஒரு லட்சுமி காயின் வாங்கிட்டு வந்து வச்சிருவாங்க.

02:35

Speaker A

வாங்கிட்டு வந்து வச்சிட்டு திரும்பவும் கஷ்டம் கஷ்டம்னு சொல்லிட்டு இருக்க ஒரு அமைப்பு.

02:39

Speaker A

பிளானிங் அப்படிங்கறது சரியாவே இருக்காது.

02:42

Speaker A

ரிஷப ராசி அப்படின்னு பார்க்கிறப்போ.

02:45

Speaker A

சோ இவங்க எல்லாம் வந்து ஆக்சுவலா ரிஷபம் அப்படினாலே சுக்கிரன் இல்லையா.

02:50

Speaker A

இவங்க எல்லாம் வெள்ளிக்கிழமை லட்சுமி நாராயண பூஜை அப்படிங்கறத வந்து.

02:55

Speaker A

வாரா வாரம் கரெக்டா பண்ணனும் அதாவது கடன் அடைக்கணும் அப்படின்னு சொல்லி கரெக்டா பண்ணனும்.

03:00

Speaker A

தங்கம் சேர்க்கிறதை விட வெள்ளி சேர்க்கணும்.

03:03

Speaker A

இப்ப சப்போஸ் நீங்க வந்து கடன் வாங்கிட்டீங்க அந்த கடனை வந்து அடைக்கணும் அப்படிங்கிறப்போ.

03:10

Speaker A

வீட்ல ஏதாவது ஒரு சின்னதா ஒரு வெள்ளி பொருள் வாங்கிட்டு வந்து நீங்க வைங்க.

03:14

Speaker A

தங்கம் அப்படிங்கறது அவ்வளவு சீக்கிரம் ரிஷப ராசிக்காரங்க கிட்ட வந்து தங்கவே தங்காது.

03:18

Speaker A

நீங்க பெரும்பாலும் தங்கம் வாங்குறதுக்கு ஒரு கடன் வாங்குறீங்க அப்படின்னா அதை அடைக்கிறதும் உங்களுக்கு ரொம்ப கஷ்டமாயிடும்.

03:24

Speaker A

தங்கம் வாங்குற அளவுக்கு கிட்டத்தட்ட ஈக்குவலா வெள்ளி வாங்கணும்.

03:30

Speaker A

வெள்ளி வர வர உங்கள்ட்ட வந்து செல்வம் அப்படிங்கறது தங்க ஆரம்பிக்கும்.

03:34

Speaker A

அப்போ நீங்க எல்லாம் வந்து வெள்ளிக்கிழமை லட்சுமி நாராயண பூஜை பண்றது வெள்ளிக்கிழமை.

03:41

Speaker A

லட்சுமி நாராயணர் சமேதமா இருக்கக்கூடிய அதாவது கணவன் மனைவி சேர்ந்து இருக்கக்கூடிய ஸ்தலங்களுக்கு போய் வழிபாடு பண்றது.

03:51

Speaker A

பெருமாள் வழிபாடு பெருமாளும் கூட லட்சுமி.

03:54

Speaker A

சிங்கப்பெருமாள் வழிபாடு சிங்கப்பெருமாள் லட்சுமி இருக்கக்கூடிய வழிபாடு.

04:00

Speaker A

இந்த மாதிரி வழிபாட்டு ஸ்தலங்கள்ல போய் நீங்க வழிபாடு பண்ண பண்ண ஒரு செவ்வாய்க்கிழமையா பார்த்து.

04:07

Speaker A

கொஞ்சம் கொஞ்சம் அமௌன்ட் நீங்க வந்து திருப்பி கொடுக்கிற மாதிரி ஒரு ஹாபிட் அப்படிங்கறது வச்சுக்கணும்.

04:13

Speaker A

அதே மாதிரி.

04:15

Speaker A

ஆர்டிஸ்டிக் ரிலேட்டடான விஷயங்கள் அதாவது டெக்ஸ்டைல்ஸ் இந்த துணி இந்த ஜுவல்லரிஸ் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கு இல்லையா.

04:20

Speaker A

இந்த மாதிரி தொழில் இதெல்லாம் வந்து உங்களுக்கு ரொம்ப நல்லாவே வரும்.

04:23

Speaker A

அதாவது பேசி.

04:25

Speaker A

வரக்கூடிய ஒரு அமைப்பு ஏன்னா ரிஷபம் அப்படிங்கறதே வந்து ஒரு வாக்குஸ்தானம் இருக்கக்கூடிய ஒரு இடம்.

04:30

Speaker A

அப்போ உங்களுடைய வாக்குல நீங்க ரொம்ப தெளிவா இருக்கணும்.

04:34

Speaker A

உங்களுடைய வாக்குல நீங்க தெளிவா இல்லை அப்படின்னா.

04:38

Speaker A

அந்த வாக்கே உங்களுக்கு எதிரியா மாறிடும்.

04:40

Speaker A

உங்களுடைய சொல் உங்களுடைய சொல்லுக்கு மத்தவங்க மயங்குவாங்க.

04:44

Speaker A

உங்களுடைய வார்த்தைக்காக தான் அவங்க வந்து உங்களுக்கு அந்த கடனையே கொடுப்பாங்க.

04:49

Speaker A

ஆனா இந்த ரிஷப ராசியில பெரும்பாலும் நான் பார்க்கிறது எப்படின்னா.

04:54

Speaker A

கடன் காரங்களுக்கு பதில் சொல்லிட்டே இருக்கிறது.

04:57

Speaker A

கடனை திருப்பி கொடுக்க முடியல மேலும் மேலும் கடன் வாங்கக்கூடிய ஒரு அமைப்பு.

05:02

Speaker A

ஏன்னு நல்லா கவனிச்சு பார்த்தா தெரியும்.

05:04

Speaker A

சேமிப்பு அப்படிங்கிற அந்த தாட்டே ரிஷபத்துக்கு அப்படிங்கறது இருக்காது.

05:09

Speaker A

உங்களுடைய சேமிப்பு வெள்ளில போடுங்க.

05:11

Speaker A

வெள்ளியை சேர்த்து சேர்த்து முடிஞ்ச அளவுக்கு அந்த வெள்ளியவே கொடுத்து வாங்கக்கூடிய ஒரு அமைப்புல இருந்தா கூட.

05:16

Speaker A

அதாவது இந்த வெள்ளியை நீங்க விக்கலாம்.

05:18

Speaker A

திரும்பி மறுபடியும் ஒரு வெள்ளி வாங்கி வச்சுக்கணும்.

05:21

Speaker A

இப்படி பண்ண பண்ண அது தோஷத்தை கிளியர் பண்ற மாதிரியும் ஒரு ஆகும்.

05:26

Speaker A

அதே மாதிரி சின்னதா முடிஞ்சா.

05:31

Speaker A

இந்த லட்சுமி நரசிம்மர் சேர்ந்து இருக்கக்கூடிய இந்த வெள்ளில எல்லாம் வந்து ஒரு தகடு மாதிரிலாம் சின்னதாலாம் இருக்கும்.

05:37

Speaker A

அதாவது வேண்டுதலுக்காக அந்த மாதிரிலாம் வாங்கி நீங்க வீட்ல வச்சிட்டு.

05:40

Speaker A

அவங்களுக்கு ஸ்வாஹா அப்படின்னு சொல்லி ஒரு பூஜை பண்ண பண்ண எதுவா இருந்தாலும்.

05:46

Speaker A

இந்த லட்சுமி வழிபாடு எல்லாம் பண்றப்போ கொடுத்து வழிபாடு பண்ணனும் அப்படிங்கறது அதனுடைய அமைப்பு.

05:50

Speaker A

குங்குமம் போட்டு குங்குமப்பூ போட்டு ஸ்வாஹா ஸ்வாஹா ஸ்வாஹா.

05:56

Speaker A

அதாவது என்ன தெய்வமோ.

05:58

Speaker A

அதாவது ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லட்சுமி நரசிம்மரே ஸ்வாஹா அந்த மாதிரிலாம் நீங்க வந்து குங்குமம் போட்டு வழிபாடு பண்ண பண்ண.

06:06

Speaker A

திரும்ப உங்களுக்கு லட்சுமி பன்மடங்கு அப்படிங்கறத கொடுப்பாங்க.

06:10

Speaker A

இப்போ ரிஷப ராசிக்காரங்க அப்படின்னு பார்க்கிறப்போ இதுலயும் ஆண் பெண் அப்படிங்கறவங்க வேறுபடுறாங்க இல்லையா.

06:14

Speaker A

இந்த ஆணுக்கு ஒரு மனநிலைமை பெண்ணுக்கு ஒரு மனநிலைமை அப்படிங்கறது உண்டு.

06:18

Speaker A

இவங்க என்ன மாதிரி ஒரு கேட்டகிரில கடன் வாங்குவாங்க அப்படின்னா.

06:22

Speaker A

இப்ப ஆண் ரிஷப ராசியில இருக்காங்கன்னு வச்சுக்கோங்களேன் அவ்வளவு சீக்கிரம் அவங்களுடைய பாடி மூவ்மென்ட்ங்கறது இருக்காது.

06:27

Speaker A

கிட்டத்தட்ட சோம்பேறித்தனம் அப்படிங்கறது பெரும்பாலான ரிஷப ராசியில இருக்கவங்களுக்கு இருக்கும்.

06:32

Speaker A

இது மூணு நட்சத்திரங்கள் வித்தியாசப்படும்.

06:35

Speaker A

இந்த மூணு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு ஒரு கேரக்டரைசேஷன் வருது அப்படிங்கிறப்போ.

06:41

Speaker A

அது எப்படி இருக்கும்னா பார்த்துக்கலாம் அப்படிங்கிற ஒரு இது.

06:44

Speaker A

என்ன பெருசா அந்த கமிட்மென்ட் அப்படிங்கிற ஒரு விஷயத்துக்குள்ள போகாதப்போ என்ன ஆகும்னா.

06:50

Speaker A

அந்த ஃபேமிலி மெம்பர்ஸ் அந்த குடும்பத்தை நடத்தணும் அப்படிங்கறதுக்காக.

06:57

Speaker A

கடன் வாங்கக்கூடிய ஒரு சூழ்நிலை அப்படின்னு போகும்.

07:00

Speaker A

மருத்துவ செலவு அப்படிங்கறது அதிகரிக்கும்.

07:03

Speaker A

அந்த டைம்ல.

07:05

Speaker A

இந்த ஆண்கள்.

07:07

Speaker A

எப்படி இருக்கணும் அப்படின்னா.

07:11

Speaker A

வாஸ்து அப்படிங்கறதும் சரியா இருக்கணும்.

07:14

Speaker A

அதாவது நீங்க உட்காரக்கூடிய ஒரு இடம் நார்த் ஈஸ்ட் அந்த ஈசானிய மூலை.

07:20

Speaker A

எப்படி இருக்கு.

07:22

Speaker A

அந்த ஈசானிய மூலையில வந்து செழிப்பா இருக்கக்கூடிய.

07:26

Speaker A

அதாவது ஒரு மணி பிளான்ட்டாவது நீங்க அந்த இடத்துல வைக்கிறீங்க அப்படின்னா.

07:30

Speaker A

அது வந்து ஒரு பாசிட்டிவ் எனர்ஜி அப்படிங்கறது உண்டாக்கும்.

07:33

Speaker A

இந்த மாதிரிதான் வந்து ஒரு ரிஷப ராசியில இருக்கக்கூடிய ஒரு ஆண் கடன் வாங்கி கடன் வாங்கி.

07:39

Speaker A

அந்த ஃபேமிலில இருக்க அந்த ஃபீமேல் இருக்காங்க இல்லையா.

07:45

Speaker A

அப்ப அதாவது அவங்களுடைய வைஃப் இருக்கிற எல்லா நகையும் எடுத்துக் கொடுத்துட்டு நான் என்னதான் பண்றது அப்படிங்கிறப்போ.

07:52

Speaker A

அவங்களுக்கு நான் சொன்ன பரிகாரம் தான் அது.

07:55

Speaker A

உங்களுடைய அந்த நார்த் ஈஸ்ட் மூலையில வந்து நிறைய அழுக்குகள் சேர்ந்து இருக்கிற மாதிரி இருக்குது.

08:00

Speaker A

அவ்வளவு அழுக்கா இருக்கு உங்களுடைய இடம்.

08:02

Speaker A

அதனாலதான் உங்களுக்கு இந்த இஸ்யூ வந்துச்சு.

08:05

Speaker A

அப்போ அந்த இடத்தை முதல்ல சுத்தம் பண்ணுங்க.

08:07

Speaker A

அந்த ஈசானிய மூலையில சுத்தம் பண்ணுங்க.

08:10

Speaker A

முடிஞ்ச அளவுக்கு ஈசானிய மூலையில எதுவும் வைக்காம இருந்துக்கிறது நல்லது.

08:13

Speaker A

அப்படியே.

08:15

Speaker A

வைக்கிற மாதிரி இருந்தாலும் இந்த மாதிரி செழிப்பா இருக்கக்கூடிய மணி பிளான்ட்.

08:20

Speaker A

இந்த மாதிரி விஷயங்கள் குபேரர்.

08:22

Speaker A

பச்சை கலர்ல ஏதாவது அந்த இடத்துல வைக்கிறது.

08:24

Speaker A

பச்சை கலர்ல சின்னதா ஒரு ஸ்டாச்சு வைக்கிறது அந்த செவுத்து கார்னர்ல வந்து.

08:29

Speaker A

லட்சுமி ஈர்க்கும்படியா உள்நோக்கி வைக்கணும்.

08:33

Speaker A

அந்த வழிபாடு எப்படி இருக்கணும்னா வீட்டுக்குள்ளார லட்சுமி பார்த்திருக்கணும்.

08:36

Speaker A

வீட்டுக்குள்ளார குபேரர் பார்த்திருக்கணும்.

08:40

Speaker A

இந்த அமைப்புல நீங்க நான் சொல்லும்படி அது என்ன தெய்வத்தை வைக்கிறீங்களோ அந்த ஸ்வாஹா அப்படின்னு சொல்லி வழிபாடு பண்ணுங்க.

08:46

Speaker A

நிச்சயமா அவர் மாறுவாரு அப்படின்னு சொன்னப்போ.

08:50

Speaker A

கொஞ்சம் கொஞ்சமா அவங்க ஹஸ்பண்டும் கொஞ்சம் மாற ஆரம்பிச்சாரு.

08:53

Speaker A

அவரும் வந்து இந்த கம்யூனிகேஷன் ரிலேட்டடான ஒரு ஜாப்க்கு போக ஆரம்பிச்சு.

08:59

Speaker A

கொஞ்சம் கொஞ்சமா குடும்பம் அப்படிங்கறதும் ஸ்டெபிலைஸ் ஆக ஆரம்பிச்சுச்சு.

09:02

Speaker A

அதேபோல அவங்க வீட்ல வந்து.

09:06

Speaker A

பிராணிகளும் வளர்த்தாங்க.

09:08

Speaker A

இந்த பிராணிகள் வளர்க்கிறதுலயும் ஒரு சூட்சமம் உண்டு.

09:11

Speaker A

ஏன்னா ஜெனரலாவே ரிஷப ராசிக்காரங்க கிட்ட வந்து அவங்களுக்கு பிராணிகள் மேல ஈர்ப்பு அதிகம்.

09:16

Speaker A

ஆனா அந்த பிராணிகளுடைய மனநிலைமையும் நமக்கு ரொம்ப முக்கியம்.

09:20

Speaker A

அந்த பிராணி அதாவது ஒரு நாய் வளர்த்தாங்கன்னு வச்சுக்கோங்களேன்.

09:23

Speaker A

அந்த நாய் ஜெனரலாவே இப்ப இப்ப நான் சொல்றேன் அப்படின்னா.

09:29

Speaker A

அந்த கருத்தை தப்பா எடுத்துக்க கூடாது.

09:32

Speaker A

அதாவது ஒவ்வொன்னுக்கும் ஒவ்வொரு எனர்ஜி லெவல் அப்படிங்கறது ஒன்னு உண்டு.

09:37

Speaker A

இப்போ இந்த நாய் ஒரு பூஜை ரூம்க்குள்ள வருதுன்னா.

09:41

Speaker A

அந்த பூஜை ரூம் முதல்ல சுத்தபத்தமா இருக்கணும்.

09:43

Speaker A

அது எப்படி இருந்ததுன்னா.

09:44

Speaker A

அவங்க அந்த நாயும் சரியா பார்த்துக்கல.

09:46

Speaker A

அவங்களும் அதை கிளீன் பண்ணி அதை பார்த்துக்கல.

09:48

Speaker A

அந்த கிளீன் பண்ணி பார்த்துக்காதப்போ என்ன ஆகும்னா ஒரு நெகட்டிவ் எனர்ஜி அப்படிங்கறது அந்த வீட்ல சுத்திக்கிட்டே இருக்கும்.

09:53

Speaker A

கிளீன் பண்ணாம இருக்கிறது அந்த அந்த நாய் வந்து வெளியில போய் கழிக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் வீட்டிலேயே எல்லாம் கழிச்சு வச்சிரும்.

10:00

Speaker A

இப்படி இருக்கும்போது அந்த வீட்ல வந்து பீடைகள் சூழ்ந்துரும் இல்லையா.

10:04

Speaker A

ரிஷப ராசிக்காரங்களை பொறுத்தவரைக்கும் நீங்க இருக்கக்கூடிய வீடு.

10:08

Speaker A

ரொம்பவும் சுத்தபத்தமாவே இருக்கணும்.

10:10

Speaker A

அப்படி சுத்தபத்தமா இருக்கு அப்படின்னா.

10:12

Speaker A

முடிஞ்ச அளவுக்கு கடன் சேராம அப்படி இருக்கும்.

10:14

Speaker A

இதே மாதிரிதான் ஒரு பெண் ஒரு ரிஷப ராசி என்ன பண்ணாங்க அப்படின்னா.

10:19

Speaker A

அவங்க வந்து பியூட்டிசியன்.

10:21

Speaker A

அவங்க வந்து துணி வாங்கி விக்கிறது இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் பண்ணிட்டு இருந்தாங்க.

10:26

Speaker A

இதுலயும் ஒரு சூட்சமமான விஷயம் என்ன அப்படின்னா.

10:30

Speaker A

அவங்களுக்கு அவங்களும் கடன்பட்டாங்க.

10:32

Speaker A

நான் வந்து துணி பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன்.

10:35

Speaker A

ஆனா என்னால கடனை அடைக்கவே முடியல.

10:37

Speaker A

எனக்கு கடன் மேல கடன் ஆயிட்டே இருக்கு.

10:39

Speaker A

சரி எப்படி நீங்க அந்த துணி பிசினஸ் பண்றீங்க அப்படின்னு கேட்கிறப்போ.

10:42

Speaker A

தன்னுடைய பணத்தை போட்டு அவங்க அந்த துணி பிசினஸ் பண்ணுனாங்க.

10:46

Speaker A

ரிஷப ராசிக்காரங்களுக்கு சூட்சமமான விஷயம் என்ன அப்படின்னா.

10:51

Speaker A

உங்களுக்கு வாக்குஸ்தானம்.

10:52

Speaker A

நீங்க ஒரு ரீடைலரா போனீங்க அப்படின்னா கூட.

10:57

Speaker A

பை பண்ணி அதாவது ஒருத்தங்க கிட்ட செல் பண்ண முடியாம இருக்கு இல்லையா அவங்க கிட்ட இருந்து.

11:04

Speaker A

துணியை வாங்கிட்டு வந்து அதாவது பேச்சால வாங்கிட்டு வந்து உங்களுக்கு நான் இத்தனை காஸ்ட்க்கு நான் வித்து தரேன்.

11:10

Speaker A

அதுக்கு மேல நான் எனக்கு என்னவோ அதை நான் வச்சுக்கிறேன் அந்த மாதிரி பேசணும்.

11:13

Speaker A

ஏன்னா ரிஷப ராசிக்காரங்களால ஒரு பிளேஸ்ல இருந்து இன்னொரு பிளேஸ்க்கு டிராவல் பண்ணி பெண்களால டிராவல் பண்ணி டிராவல் பண்ணி போக முடியும்.

11:19

Speaker A

எவ்வளவு தூரம் இந்த உங்களுடைய குரல் டிராவல் பண்ணி போகுதோ.

11:24

Speaker A

எந்த அளவுக்கு மக்களை சந்திக்கிறாங்களோ எந்த அளவுக்கு பேசுறாங்களோ.

11:28

Speaker A

தொழில் அப்படிங்கறது முன்னேற்றம் அப்படிங்கறது அடையும்.

11:30

Speaker A

சோ அந்த பேட்டர்னை வந்து அவங்க ஃபாலோ பண்ணாங்க.

11:33

Speaker A

சரி அப்படின்னு சொல்லிட்டு.

11:36

Speaker A

பல்கா ப்ராடக்ட்ஸ் வச்சிருப்பாங்க ஆனா விக்க முடியாது.

11:40

Speaker A

அவங்க கிட்ட இருந்து வாங்கி கொஞ்சம் கொஞ்சமா.

11:43

Speaker A

அதாவது முதல்ல அவங்களுடைய நம்பிக்கை முதல்ல அவங்க வாங்கணும் இல்லையா.

11:46

Speaker A

முதல்ல ஒரு 10 துணி 20 துணி அந்த மாதிரி வாங்கி வாங்கி சேல் பண்ண சேல் பண்ண.

11:50

Speaker A

இப்ப அவங்க ஒரு ஷாப்பாவே அவங்க ஆக்கிட்டாங்க.

11:52

Speaker A

இன்னுமே அந்த ஷாப் ஆக்குனாங்களே இன்னுமே அதே பேட்டர்ன் தான் ஃபாலோ பண்றாங்க.

11:57

Speaker A

இன்னும் எந்த துணிக்கும் அவங்க இன்வெஸ்ட் பண்ணல யாரெல்லாம் துணி விக்க முடியாம இருக்காங்களோ.

12:03

Speaker A

அவங்க எல்லாம் அவங்க பிளேஸ்ல கொண்டு வந்து வச்சிருவாங்க.

12:05

Speaker A

இவங்க வித்துக்குவாங்க.

12:07

Speaker A

அப்போ இங்க அவங்களுடைய இன்வெஸ்ட்மென்ட் என்னன்னு கவனிச்சீங்களா அவங்களுடைய பேச்சும் அவங்களுடைய நாவன்மையும் தான் அவங்களுடைய இன்வெஸ்ட்மென்ட்டா இருந்தது.

12:12

Speaker A

சோ சமயோஜிதமா நம்ம திங்க் பண்ணனும்.

12:14

Speaker A

அதே மாதிரி லட்சுமி நரசிம்மர் வழிபாடு அதே மாதிரிதான் அவங்களுக்கும் நான் வந்து.

12:18

Speaker A

லட்சுமி வழிபாடு அந்த லட்சுமி பூஜைகள் எப்படி பண்ணனும் எப்படி அந்த ஸ்வாஹான்னு சொல்லணும்.

12:23

Speaker A

எப்படி தக்க வச்சுக்கணும்.

12:25

Speaker A

எப்பவுமே கையில ஒரு சில்வர் காயின் வச்சுக்கோங்க.

12:28

Speaker A

அந்த சில்வர் காயினுக்கு பவர் ஏத்திக்கிட்டே இருக்கணும் ஏன்னா சுக்கிரன்ங்கிறது வெள்ளி.

12:33

Speaker A

அந்த வெள்ளியை ஒரு பெண் கிட்ட இருக்க இருக்க கையில ஒரு வெள்ளி காப்புன்னு ஒன்னு போட்டுக்க சொன்னேன்.

12:39

Speaker A

இந்த வெள்ளி காப்பு அவங்க போடுறப்போ அவங்களுக்கு வந்து.

12:44

Speaker A

தொழில் நல்லபடியா போச்சு அப்படின்னாங்க.

12:47

Speaker A

ஆனா ஏதோ ஒரு வகையில உடம்புல ஒரு டயர்ட்னஸ்ங்கிறது வருது அப்படின்னா.

12:50

Speaker A

ஒரு செம்பு மோதிரத்தையும் போட்டுக்கோங்க.

12:54

Speaker A

இந்த செம்பு மோதிரமும் அந்த வெள்ளி காப்பும் போடுறப்போ பேலன்ஸ்ட்டாகி.

13:03

Speaker A

நீங்களும் அதை பிராக்டிஸ் பண்ணி முயற்சி பண்ணி பாருங்க.

13:05

Speaker A

செவ்வாய்க்கிழமைல கடன்களை அடைக்கிறதுக்கு முயற்சி பண்ணுங்க.

13:09

Speaker A

நிச்சயமா கடன் தீரும்.

13:10

Speaker A

பொதுவாவே எல்லா ராசிக்காரங்களுக்கும் சொல்ற விஷயம் என்ன அப்படின்னா.

13:15

Speaker A

யார் கடன் வாங்கி இருந்தாலும் சரி என்ன ராசிக்காரங்க கடன் வாங்கி இருந்தாலும் சரி.

13:18

Speaker A

விநாயகரை போய் பிடிச்சுக்கணும்.

13:19

Speaker A

ஏன்னா அவர்தான் ஆதி கடவுள் இல்லையா.

13:21

Speaker A

விநாயகரை வழிபாடு பண்ணி அவரையே சொல்யூஷன் கொடுக்க வைக்கணும்.

13:24

Speaker A

நீங்க தான் எனக்கு சரணாகதி அப்படின்னுட்டு விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சு வழிபாடு பண்றது.

13:29

Speaker A

இந்த மாதிரி வழிபாடு முறைகள் எல்லாம் பண்ணி விநாயகரை வழிபட்டா மட்டும் இங்க கடன் அடைஞ்சிருமா அப்படிங்கறது இல்லை.

13:32

Speaker A

அவருடைய அந்த பிளஸ்ஸிங்ஸ் அப்படிங்கறது நீங்க எடுத்துக்கணும்.

13:35

Speaker A

அதுபோக முக்கியமா.

13:37

Speaker A

சந்திராஷ்டமம் வரக்கூடிய நாட்கள்ல.

13:40

Speaker A

உங்களுக்கு என்னைக்கு சந்திராஷ்டமம்.

13:43

Speaker A

எல்லா ராசிக்காரங்க எல்லா நட்சத்திரக்காரங்களுக்குமே வந்து.

13:48

Speaker A

ஒரு இரண்டரை நாள் சந்திராஷ்டமம் அப்படிங்கறது இருக்கும்.

13:50

Speaker A

உங்களுடைய சந்திராஷ்டம காலங்கள்ல எதுவுமே பண்ணாம.

13:54

Speaker A

அதாவது எதுவும் பண்ணாமங்கிறது முடிவுகள் எடுக்காம.

13:57

Speaker A

கடன் வாங்கணும்ங்கிற எண்ணம் இல்லாம.

14:00

Speaker A

சந்திராஷ்டமம் அன்னைக்கு கடனை அடைக்கவும் வேணாம்.

14:04

Speaker A

கடனை கொடுக்கவும் வேணாம்.

14:05

Speaker A

வாங்க போகவும் வேண்டாம்.

14:07

Speaker A

அந்த நேரத்துல முடிவும் எடுக்க வேண்டாம்.

14:08

Speaker A

சந்திராஷ்டம காலங்கள்ல கடன் வாங்கினாலோ கடன் கொடுத்தாலோ.

14:13

Speaker A

கடன் அடைப்பது மிகவும் கடினம் ரொம்ப கஷ்டத்துல போயிடுவீங்க.

14:16

Speaker A

சந்திராஷ்டமம்.

14:17

Speaker A

தெரியாம நாங்க சந்திராஷ்டமத்துல கடன் வாங்கிட்டோம்.

14:20

Speaker A

எங்களுக்கு தெரியலையே.

14:21

Speaker A

அன்னைக்கு எங்க நட்சத்திரம் விதி அப்படிதான் பண்ணும்.

14:23

Speaker A

அன்னைக்கு நீங்க கடன் வாங்க போற நேரத்துல சப்போஸ் ஒரு லோன் அப்ளை பண்ணி இருக்கீங்க.

14:29

Speaker A

எனக்கு அன்னைக்கு போய் நான் பேங்குக்கு போகணும்.

14:31

Speaker A

அன்னைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம்.

14:32

Speaker A

போகாதீங்க.

14:34

Speaker A

அலைச்சல் ஜாஸ்தியா இருக்கும்.

14:35

Speaker A

அந்த கடனை அடைக்கவே முடியாது.

14:37

Speaker A

சரி இன்னைக்கு நான் லோன் அடைக்க போற நாள் இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம்.

14:40

Speaker A

போகாதீங்க.

14:41

Speaker A

திரும்பவும் அங்கேயே ஏதாவது ஒரு அலைச்சலோ இல்ல ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டோ இல்ல கட்ட முடியாம போற சூழ்நிலையோ.

14:47

Speaker A

இல்ல மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையோ ஏதோ ஒன்னு சந்திராஷ்டமம் நம்மளுக்கு பண்ணி விட்டுரும்.

14:50

Speaker A

அதனால முடிஞ்ச அளவுக்கு சந்திராஷ்டம காலங்கள்ல அமைதியா இருந்துக்கிறது நல்லது.

14:54

Speaker A

தெய்வ வழிபாடோட இருந்துக்கிறது நல்லது.

14:56

Speaker A

எதற்காக கடன் வாங்குறோம் வீண் ஆடம்பரத்துக்கு வாங்குறோமா.

15:00

Speaker A

கால்குலேட்டிவா இருந்து சிக்கனமா இருக்க பழகிக்கிட்டீங்க அப்படினாலே.

15:04

Speaker A

யாருமே கடன் படணும் அப்படிங்கறது கிடையாது.

15:06

Speaker A

கடவுள் நம்மளுக்கு எல்லாத்துக்குமே யார் யாருக்கு எப்படி எப்படி படி அளந்து கொடுக்கணுமோ அப்படி கொடுத்துக்கிட்டே தான் இருப்பார்.

15:11

Speaker A

ஆசைப்பட பட தான் கடனுக்குள்ள போய் நம்ம விடுவோம்.

15:15

Speaker A

ஆசை ஆபத்து அப்படின்னு சொல்லி நான் இந்த வீடியோவை முடிச்சுக்கிறேன்.

Topics: ரிஷபம் கடன் வெள்ளி தங்கம் வழிபாடு லட்சுமி நாராயணர் வாஸ்து ராஜயோகம் ஆன்மீகம் ஜோதிடம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11355)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11355)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/rishabam-rajayogam-retro-aanmeegam/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
