**ரிஷபம் - அதிர்ஷ்டம் உங்கள் வீட்டு கதவை தட்டும் | Rishabam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/rishabam-luck-knocks-door/

ரிஷப ராசிக்காரர்களுக்கான காலபுருஷ தத்துவம் மற்றும் அதனால் ஏற்படும் வாழ்க்கை சவால்கள், குடும்பம், பொறுமை மற்றும் தீர்வுகள் பற்றிய விளக்கம்.

## Key Takeaways

- காலபுருஷ தத்துவம் வாழ்க்கையின் காரணம் மற்றும் சவால்களை விளக்குகிறது.
- ரிஷப ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் மற்றும் குடும்ப பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- இயற்கை மற்றும் நந்தீஸ்வரர் வழிபாடு இவர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- வாழ்க்கையில் தடைகள் மற்றும் சிக்கல்கள் இருந்தாலும் பொறுமை மற்றும் சிந்தனை மூலம் அவற்றை சமாளிக்க முடியும்.
- பெண் சாபம் மற்றும் குடும்ப நம்பிக்கை மோசடி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தேட வேண்டும்.

## What the video covers

- காலபுருஷ தத்துவம் மனிதன் பிறப்பின் காரணம் மற்றும் கர்மா அடிப்படையில் வாழ்க்கை பயணத்தை விளக்குகிறது.
- ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான ட்ராப்கள் மற்றும் வாழ்க்கை பாடங்கள் உள்ளன.
- ரிஷப ராசிக்காரர்களுக்கு வாக்கு, குடும்பம் மற்றும் பொறுமை முக்கியமான அம்சங்கள் ஆகும்.
- ரிஷப ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்; வார்த்தைகள் மூலம் காயப்படுத்தும் ஆபத்து உள்ளது.
- இவர்கள் இயற்கையுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறார்கள் மற்றும் கால்நடைகள், பறவைகள் போன்றவற்றுடன் இணைந்துள்ளனர்.
- நந்தீஸ்வரர் வழிபாடு மற்றும் பொறுமை இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- குடும்ப பாரத்தை ஏற்றுக்கொண்டு, அதனைச் சுமக்க வேண்டிய பொறுப்பு ரிஷப ராசிக்காரர்களுக்கு உள்ளது.
- வாழ்க்கையில் படிப்பு, தொழில் மற்றும் வருமானத்தில் தடைகள் ஏற்படலாம்; இதனால் மன அழுத்தம் ஏற்படக்கூடும்.
- பெண் சாபம் மற்றும் குடும்ப நம்பிக்கை மோசடி போன்ற சிக்கல்கள் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
- சுக்கிரன் கிரகத்தின் தாக்கம் காரணமாக கலை, அழகு மற்றும் பொறுமை ஆகியவை ரிஷப ராசிக்காரர்களின் தன்மைகளாகும்.

Answers

## Questions about this video

காலபுருஷ தத்துவம் என்றால் என்ன?

காலபுருஷ தத்துவம் என்பது காஸ்மிக் ஆற்றல் மற்றும் நாம் ஏன் பிறந்தோம் என்பதற்கான காரணம், அதாவது கர்மா. இது மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள பயணத்தையும், ஒவ்வொரு ராசிக்கும் உள்ள தனிப்பட்ட நோக்கத்தையும் விளக்குகிறது.

காலபுருஷ தத்துவம் 12 ராசிகளுடன் எவ்வாறு தொடர்புடையது?

காலபுருஷ தத்துவம் 12 ராசிகளுடன் தொடர்புடையது, ஏனெனில் 24 மணிநேரம் 12 மணிநேரமாகப் பிரிக்கப்பட்டது போல, 12 ராசிகளும் மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் வெவ்வேறு கட்டங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு ராசியிலும் பிறந்தவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது 'ட்ராப்' இருக்கும், அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் ஏன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான்?

மனிதன் மீண்டும் மீண்டும் பிறக்கிறான் என்றால், அவன் செய்யாத ஒரு கடமையை முடிக்க அல்லது புதிய வாழ்க்கை அனுபவங்களைப் பெறவே பிறக்கிறான். இது காலபுருஷ தத்துவத்தின் ஒரு பகுதியாகும், இது சில ராசிகளுக்கு இன்னும் பயணம் இருப்பதாகவும், சில ராசிகளுக்கு இந்த ஜென்மத்திலேயே தங்கள் பயணத்தை முடிக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

## Full Transcript — Download SRT & Markdown

00:02

Speaker A

வணக்கம் மேம்.

00:03

Speaker B

வணக்கம்.

00:03

Speaker A

எப்படி இருக்கீங்க?

00:04

Speaker B

நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?

00:05

Speaker A

நல்லா இருக்கேன். சோ ஒவ்வொரு ஒவ்வொரு வாரமும் நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா ஒவ்வொரு ராசிகளுக்கும் எது முக்கியம் என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது அப்படிங்கறத ரொம்ப தெளிவா சொல்லிட்டு இருக்கோம்.

00:13

Speaker A

அதுல ரொம்ப முக்கியமா காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது இருக்கு. அதுதான் ரொம்ப முக்கியம் அப்படிங்கறதும் எல்லாருமே எல்லாராலயும் சொல்லப்படுது.

00:21

Speaker B

காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது வந்து இந்த காஸ்மிக் எனர்ஜி. நம்ம ஏன் பிறந்தோம் அப்படிங்கறதுக்கான காரணம் அதாவது கர்மா.

00:31

Speaker B

நம்ம வந்து காரண காரியத்தோட தான் பிறக்கிறோம் அப்படிங்கறது இருக்கு.

00:37

Speaker B

அதாவது தலை முதல் பாதம் வரை அப்படின்னு சொல்றது அதுதான் வந்து மேஷம் முதல் மீனம் வரை.

00:46

Speaker B

ஒரு மனுஷன் ஏன் மேஷத்துல பிறக்கிறாங்க? அப்போ அவங்க என்ன ட்ராப்ல சிக்க போறாங்க? எப்படி அவங்க வாழ்க்கையில இருந்து ரிலீவ் ஆகணும்?

00:58

Speaker B

ஏன்னா மனிதன் மீண்டும் மீண்டும் பிறக்கிறாங்க அப்படின்னாலே.

01:00

Speaker B

நம்ம ஏதோ ஒரு செய்யாத ஒரு கடமையை திரும்பவும் முடிக்கிறதுக்காக பிறந்த ஒரு பிறப்பு.

01:06

Speaker B

இல்ல லைஃப் எக்ஸ்பீரியன்ஸ்காக வரோம்.

01:10

Speaker B

எல்லாருமே வந்து கடமையை முடிக்கிறதுக்கு தான் பிறந்தாங்களா அப்படிங்கறது கிடையாது.

01:14

Speaker B

அதுதான் காலபுருஷ தத்துவம்.

01:16

Speaker B

அதாவது இன்னும் ஜர்னி இருக்கு அப்படிங்கற ராசிகளும் இருக்காங்க.

01:23

Speaker B

இல்ல உங்களுக்கு ஜர்னி முடிய போகுது அதனால இந்த ஜென்மத்திலேயே இதை முடிச்சுக்கோங்க.

01:30

Speaker B

இதுக்கான விடையை நீங்க கண்டுபிடிச்சிருங்க அப்படிங்கற ஒரு விஷயம் தான் இது.

01:33

Speaker B

சோ இந்த காலபுருஷ தத்துவம் அப்படின்னு பார்க்கிறப்போ இது வந்து.

01:38

Speaker B

வைட் ரேஞ்ச் ஆஃப் நாலேட்ஜ் அதுதான் அந்த காலபுருஷ தத்துவம்.

01:42

Speaker B

மனிதன் பிறப்பிலிருந்தே கொஞ்ச நாள்ல தேட ஆரம்பிச்சிருவாங்க நான் ஏன் பிறந்தேன்.

01:50

Speaker B

நான் யாரு என்னோட ஐடென்டிஃபிகேஷன் என்ன மாதிரிக்கிட்டே இருக்கும்.

01:53

Speaker B

ஒரு குழந்தை பருவத்திலிருந்து ஒவ்வொரு விஷயமும் மாறிக்கிட்டே இருக்கிறப்போ நமக்கு ஆசை பாசங்கள்னு ஒன்னு இருக்கும்.

02:00

Speaker B

ஆனா விதி வேறு ஒரு வழியில கூட்டிட்டு போகும்.

02:02

Speaker B

கால புருஷன் அப்படிங்கறது காலம் அப்படிங்கறது நேரம்.

02:06

Speaker B

புருஷன் அப்படிங்கறது பர்சன் மனிதனை சொல்லக்கூடியது.

02:10

Speaker B

அதுதான் காலபுருஷன்.

02:13

Speaker B

இந்த காலத்துல இந்த மனிதன் பிறக்கிறார் அப்படிங்கறதுதான்.

02:16

Speaker B

எப்படி வந்து 24 மணி நேரத்தை வந்து 12 மணி நேரமா பிரிக்கப்பட்டதோ.

02:22

Speaker B

அதுதான் வந்து இந்த 12 ராசிகள்.

02:26

Speaker A

சோ அந்த காலபுருஷ தத்துவம் 12 ராசிகளுக்கும் இப்ப ஒவ்வொரு ராசியும் பிறக்கிறவங்களுக்கு வந்துட்டு ஒவ்வொரு ட்ராப் இருக்கும்.

02:39

Speaker A

இந்த விஷயம் பண்ணலாம் இந்த விஷயம் பண்ணக்கூடாது இவங்க இதுக்காக தான் பிறந்திருக்காங்க அப்படிங்கிற நிறைய விஷயங்கள் சொன்னீங்க.

02:45

Speaker A

சோ அப்படிங்கறது நம்ம ஒவ்வொரு ராசிக்கும் பார்க்கலாம்.

02:52

Speaker A

ரிஷப ராசிக்காரர்கள் வந்து.

02:55

Speaker A

அவங்களுக்கு காலபுருஷ தத்துவம் எப்படி இருக்கும் நீங்க நிறைய விஷயங்கள் சொல்றீங்க.

03:05

Speaker A

ஒரு மனிதன் பிறந்ததுல இருந்து அவன் இறந்து போறதுக்கு வரைக்குமே காலபுருஷ தத்துவம் ரொம்ப முக்கியம்.

03:14

Speaker A

அதுதான் அவங்களை வழிநடத்துது என்ன பண்ணாலும் அவங்க நல்லது பண்ணாலும் அதுதான் அவங்களை வழிநடத்தும்.

03:20

Speaker A

கெட்டது பண்ணாலும் அவங்களை அதுதான் வழிநடத்தும் சொல்லுங்க.

03:23

Speaker A

ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

03:24

Speaker B

ரிஷப ராசின்னு பார்க்கிறப்போ இவங்களுக்கு வந்து தொண்டை பகுதி அப்படின்னு நம்ம சொல்றோம்.

03:28

Speaker B

விசுதி வாக்கு.

03:30

Speaker B

வாக்கு சித்தி.

03:31

Speaker B

இவங்க வந்து வாக்கு பயன்படுத்துறப்போ வார்த்தைகள் பேசுறப்போ ரொம்ப கவனமா இருக்கணும்.

03:38

Speaker B

சீக்கிரம் வார்த்தைகளால ஹர்ட் பண்ணக்கூடிய அமைப்பு.

03:42

Speaker B

ஏன்னா இந்த காலபுருஷ தத்துவம் இவங்களுக்கு வச்சிருக்க ட்ராப்பே என்ன அப்படின்னா அந்த வாக்கு ஸ்தானத்துல தான் வச்சிருக்கும்.

03:49

Speaker B

குடும்ப ஸ்தானத்திலயும் வச்சிருக்கும்.

03:51

Speaker B

குடும்பம் அவ்வளவு சீக்கிரம் நல்லபடியா அமைச்சு கொடுக்காது.

03:55

Speaker A

அவங்களுக்கு அமையாதுங்கிறீங்க.

03:56

Speaker B

அமைச்சு குடும்பமா இருப்பாங்க அந்த குடும்பத்துக்குள்ள ஒரு நிம்மதி அப்படிங்கறது அவ்வளவு சீக்கிரம் அமைச்சு கொடுக்காது.

04:02

Speaker B

சிறு வயதிலிருந்தே ஏதோ ஒரு விட்ட குறை தொட்ட குறைங்கிற மாதிரி இல்லன்னா இப்ப சின்ன வயசுல இருந்தே இப்ப ரிஷப ராசி நல்ல செல்ல குழந்தைகளா வளர்றாங்கன்னு வச்சுக்கோங்க.

04:10

Speaker B

அப்படியே வெளிய வரப்போ கொஞ்ச கொஞ்சமா ஸ்ட்ரகிள்ஸ் ஃபேஸ் பண்ற மாதிரி.

04:14

Speaker B

அதே மாதிரி இப்ப ஆண்கள் இருக்காங்க அப்படின்னா அதுலயும் அந்த மூணு நட்சத்திரங்கள் வருது.

04:20

Speaker B

அந்த மூணு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் இருக்கு யார்கிட்ட எப்படி பழகுறோம் வார்த்தைகளை எப்படி த்ரோ பண்ணி பேசுறோம்.

04:27

Speaker B

எப்படி நம்ம வந்து கம்யூனிகேட் பண்ணி எப்படி அந்த காரியத்தை நம்ம சாதிச்சுக்கணும் அப்படிங்கறதெல்லாம் இருக்கு.

04:32

Speaker B

இவங்க வந்து கலை சம்பந்தப்பட்ட ஆர்ட் ரிலேட்டடான விஷயங்கள் டச் பண்றாங்க அப்படின்னா.

04:37

Speaker B

கொஞ்சம் நல்லா இருக்கும்.

04:39

Speaker B

ஏன்னா ரிஷபமே வந்து சுக்கிரன் சம்பந்தப்பட்டது அப்படிங்கறப்போ.

04:43

Speaker B

எனிதிங் ரிலேட்டட் டு பியூட்டி அண்ட் ஆர்ட் என்டர்டைன்மென்ட் இவங்க ஏதோ ஒரு வகையில மத்தவங்களை என்டர்டைன்மென்ட் பண்றதுக்கும் மத்தவங்களை சந்தோஷமா வச்சுக்கறதுக்கும்.

04:52

Speaker B

இவங்களால மத்தவங்களுக்கு ஏதாவது இவங்களுடைய குரல் கேட்கிறதுனாலயோ இவங்களோட முகத்தை பார்க்கிறதுனாலயோ மத்தவங்களுக்கு சந்தோஷம்.

05:00

Speaker B

அப்படிங்கிற ஒரு அமைப்பு வந்து இவங்களுக்கு இருக்கு.

05:02

Speaker B

இவங்களுக்கு இயற்கையாவே கால்நடைகள் ரொம்ப பிடிக்கும் அனிமல்ஸ் வளர்க்கிறது.

05:07

Speaker B

பெட் அனிமல்ஸ் வளர்க்கிறது.

05:10

Speaker B

இவங்க போயிட்டு இருந்தா கூட ரோட்ல இருக்க ஒரு தெருநாய் கூட இவங்கட்ட கொஞ்சம் அன்பா பாசமா வருது.

05:17

Speaker B

எங்கேயோ பறந்துட்டு இருக்க ஒரு கிளி இவங்கட்ட வரது.

05:20

Speaker B

இதெல்லாம் வந்து இவங்களுக்கு சம்டைம்ஸ் ஆச்சரியமாவே இருக்கும்.

05:23

Speaker B

சீக்கிரமா மனிதர்கள்கிட்ட பழகுறதை விட மிருகங்களோட கனெக்ட் ஆயிடுவாங்க இவங்க இயற்கையாவே.

05:30

Speaker B

இவங்க வந்து நந்தீஸ்வரரை வழிபாடு பண்றது நந்தி தேவன் நந்தியை பார்த்து வழிபாடு பண்றது எதுக்கு அப்படின்னா.

05:37

Speaker B

பொறுமை இவங்களுக்கு அவசியம்.

05:40

Speaker B

பொறுமைங்கிறது இருக்காது.

05:41

Speaker B

பொறுமை இவங்களுக்கு எந்த மாதிரி இருக்காதுன்னா லேசினஸ்.

05:48

Speaker B

அது எவ்வளவு நேரம் அதை போய் பண்ணிட்டு.

05:50

Speaker B

அப்புறம் பார்த்துக்கலாம் விடு அப்படின்னு.

05:53

Speaker B

ஒரே இடத்துல யாராவது உட்கார்ந்துட்டே இருப்பாங்க யாராவது இவங்களை புஷ் பண்ணனும்.

06:00

Speaker B

இந்த வேலை பாருங்க அந்த வேலை பாருங்கன்னு யாராவது ஒருத்தங்க சொல்லிட்டே இருக்கணும்.

06:02

Speaker B

இல்ல அப்படின்னா மத்தவங்களுக்காக அதை செய்றது.

06:05

Speaker B

இவங்ககிட்ட இன்னர் டேலன்ட்ஸ்லாம் இருக்கும்.

06:08

Speaker B

இது வந்து அசுபமா இவங்களுக்கு மாறிடக்கூடாது.

06:12

Speaker B

அதாவது அழுக்கு லட்சுமியா மாறிடக்கூடாது.

06:15

Speaker B

ஏன்னா இவங்ககிட்ட லட்சுமி வாசம் பண்ணும்.

06:17

Speaker B

ரிஷபத்துல இவங்க இருக்கிறவங்ககிட்ட.

06:19

Speaker B

இவங்க குளிக்கணுமா அப்படின்னு யோசிக்கிறது.

06:21

Speaker B

இதெல்லாமே.

06:22

Speaker B

இந்த காலபுருஷ தத்துவப்படி இவங்களுக்கு வச்சிருக்க ட்ராப் இந்த குடும்பம் இவங்களால தான் நல்லா இருக்கணும் அப்படிங்கறது விதி அமைப்பு.

06:29

Speaker B

அந்த குடும்ப பாரத்தை இவங்க தூக்கி சுமக்கணும்ங்கறது அமைப்பு.

06:33

Speaker B

அப்ப இந்த குடும்ப பாரத்தை இவங்க தூக்கி சுமக்கணும் அப்படின்னா.

06:37

Speaker B

அவ்வளவு சீக்கிரம் இந்த காலம் வந்து ஒரு கம்ஃபர்ட் ஜோன் அப்படிங்கறது அவங்களுக்கு கொடுக்காது.

06:42

Speaker B

படிப்புல ஒரு தடை பண்ணும்.

06:43

Speaker B

ஒரு விஷயத்தை படிப்பாங்க படிப்புக்கும் தொழிலுக்கும் சம்பந்தம் இல்லாம நிறைய பேத்துக்கு அது அமைஞ்சிரும்.

06:49

Speaker B

இல்ல அப்படின்னா படிப்புக்கும் தொழிலுக்கும் சம்பந்தம் இருக்கு அப்படினாலும் வருமானத்தை குறைச்சு கொடுக்கிறது.

06:54

Speaker B

ஏதோ ஒரு வகையில ஏங்க வச்சுக்கிட்டே இருக்கிறது.

06:58

Speaker B

ஒரு புலம்ப வச்சுக்கிட்டே இருக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது ரிஷபத்துக்கு கொடுக்கும்.

07:01

Speaker B

ரிஷபம் வாக்குல சரியா இல்ல அப்படின்னா.

07:05

Speaker B

விதி வச்சு செய்யும்.

07:07

Speaker B

அதாவது சில ஆண்கள் ரிஷபத்துல இருப்பாங்க.

07:10

Speaker B

ஆசை வார்த்தைகளை பேசுறது கவிதை மயமா பேசுறது.

07:13

Speaker B

இது எல்லாமே அவங்களுக்கு வச்சிருக்கிற ட்ராப்.

07:15

Speaker B

ஏன்னா ரிஷபத்துல பிறந்தவங்களுக்கு வந்து பெண் சாபம் அதிகம்.

07:20

Speaker B

அவங்களுடைய குடும்பத்துல இருக்கவங்களுக்கு இப்ப அவங்களுடைய தாத்தா அந்த மாதிரிலாம் இருப்பாங்க இல்லையா மூதாதரிகள்.

07:27

Speaker B

மூதாதையர்கள்லாம் இருக்காங்க இல்லையா.

07:28

Speaker B

அவங்களுக்குலாம் வந்து பெண் சாபம்ங்கிறது இருக்கும் நிறைய பெண்களுடைய ஒரு பழக்கவழக்கம் அவங்களுக்கு நம்பிக்கை மோசடி பண்ணது.

07:36

Speaker B

ஏதோ ஒரு வகையில துஷ்பிரயோகம் பண்ணது.

07:38

Speaker B

இந்த பெண் சாபம் அப்படிங்கறது அவ்வளவு சீக்கிரம் நீங்காத ஒரு விஷயம்.

07:42

Speaker B

இதே ஒரு ஆண் அந்த ரிஷபத்துல பிறக்கிறார்னா அந்த பெண் சாபத்தை கேரி ஆன் பண்ணிட்டு தான் வருவாங்க.

07:46

Speaker B

அவங்க திருமணமே பண்றாங்கனா கூட அந்த பெண்ணுக்கும் எங்கேயோ அவங்க ஃபேமிலில ஒரு பெண் சாபம் இருக்கும்.

07:52

Speaker B

அப்போ அதுக்கான விமோசனம் என்னவா இருக்கணும்னா.

07:55

Speaker B

வரக்கூடிய பெண் தான் சுக்கிரன்.

07:59

Speaker B

அந்த சுக்கிரனை வந்து நல்லபடியா சந்தோஷமா வச்சுக்கணும்.

08:03

Speaker B

இன்னும் கண்ணீரும் கம்பளையுமா வச்சுக்கிறாங்கன்னா அகைன் அண்ட் அகைன் அந்த ட்ராப்க்குள்ள போயிட்டே இருப்பாங்க.

08:07

Speaker B

என்னுடைய வாழ்க்கை ஏன் இப்படினு யோசிக்க வைக்கிறது தான் காலபுருஷ தத்துவம்.

08:12

Speaker B

அப்போ இவங்களுடைய வாழ்க்கை ஏன் இப்படின்னு அந்த சோம்பேரியா உட்கார்ந்தாங்கல ஏதோ ஒரு விஷயம் புஷ் பண்ணும்.

08:19

Speaker B

இவங்களுக்கு வந்து பெரும்பாலும் ட்ரீட்மென்ட் பேபிஸ் வரக்கூடிய ஒரு அமைப்புலாம் வந்து ரிஷபத்துக்கு உண்டு.

08:23

Speaker B

நல்லா இருக்க ஹெல்த்த வந்து ஸ்பாயில் பண்ணிக்கக்கூடிய சிச்சுவேஷன்ஸும் இருக்கும்.

08:27

Speaker B

இவங்கலாம் எவ்வளவு தூரம் இயற்கையோட கனெக்டடாவே இருக்காங்களோ.

08:30

Speaker B

இந்த காலபுருஷ தத்துவம் சொல்ற விஷயமே அதுதான்.

08:33

Speaker B

குடும்பம் இயற்கை சூழலா இயல்பா நீங்க இருந்துட்டு போயிடுங்க.

08:37

Speaker B

இந்த இயல்பா இல்லாம டாம்பீகமா இருந்து அவங்க பண்றாங்க இவங்க பண்றாங்கன்னு போயிட்டு இந்த இந்த சூப்பர்பிஷியலான விஷயங்களுக்குள்ள இவங்க போக போக.

08:45

Speaker B

அந்த ட்ராப்க்குள்ள விழுந்துகிட்டே இவங்க இருப்பாங்க.

08:49

Speaker B

சோ இந்த குடும்பம் இந்த குடும்பம் நம்மனால சந்தோஷமா இருக்கு வார்த்தைகள் சரியா பேசணும்.

08:55

Speaker B

இவங்க இப்ப லைஃப் பார்ட்னர் இருக்காங்க அப்படின்னா.

08:59

Speaker B

இப்ப ஒரு மேல் இருக்கிறாருன்னா ஹார்ஷா திட்டிட்டே இருப்பாரு.

09:02

Speaker A

ஓகே.

09:02

Speaker B

கூப்பிடுறதே அந்த ஹார்ஷ் வேர்ட்ஸ்ல கூப்பிடுற மாதிரிலாம் சில பேர் செய்வாங்க.

09:05

Speaker A

ஆமா.

09:05

Speaker B

ஏன்னா அதை அவங்களுடைய ஜாதக கட்டத்துல இருக்கக்கூடிய விஷயம்.

09:10

Speaker B

இப்ப நம்ம காலபுருஷ தத்துவம் பேசுறப்போ.

09:12

Speaker B

இதுதான் உங்களுடைய ட்ராப் அப்படிங்கறப்போ.

09:15

Speaker B

வார்த்தைகள் மிக கவனம்.

09:17

Speaker B

ஏன்னா தொழிலே வந்து வார்த்தைகள்ல தான் அவங்களுக்கு நடக்க போகுது.

09:22

Speaker B

கம்யூனிகேஷன் நல்லா டெவலப் பண்ணிக்கணும்.

09:24

Speaker B

பேசி அதாவது ஒரு ப்ரொபஷன் சூஸ் பண்றீங்க ஹெச்ஆர் சூஸ் பண்ணுங்க.

09:30

Speaker B

சேல்ஸ் சூஸ் பண்ணுங்க.

09:32

Speaker B

அந்த சேல்ஸ்லாம் அந்த பியூட்டி ரிலேட்டடா ஆர்ட் ரிலேட்டடா.

09:37

Speaker B

மீடியா இண்டஸ்ட்ரிலயும் வந்து ரிஷபம் இருப்பாங்க.

09:40

Speaker B

இவங்களுக்கு வந்து இயற்கையாவே அந்த கலை உணர்வு பார்த்தாலே கலையா இருக்காங்கன்னு ஒரு அட்ராக்ஷன் அப்படிங்கறதெல்லாம் ரிஷபத்துக்கு உண்டு.

09:46

Speaker B

இதெல்லாம் வந்து பாசிட்டிவா அவங்க யூஸ் பண்றப்போ புன்னகை அதிகமா யூஸ் பண்ணனும்.

09:50

Speaker B

சிடுமூஞ்சியா இருக்கிறது.

09:52

Speaker B

சில ரிஷபம்லாம் அப்படித்தான் இருப்பாங்க.

09:53

Speaker B

இந்த புல் எப்படி இருக்கும்.

09:55

Speaker B

அப்படியே என்ன ஆனாலும் திருந்தாம நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்.

10:00

Speaker B

இதெல்லாமே வந்து இந்த காலபுருஷ தத்துவம் அவங்களுக்கு சொல்ற விஷயம் என்னன்னா.

10:03

Speaker B

இதெல்லாம் உன்னுடைய ட்ராப்.

10:05

Speaker B

நான் புடிச்ச முயலுக்கு மூணு கால்னு இருக்க இருக்க இருக்க.

10:08

Speaker B

நீ சஃபர் பண்ணிட்டே தான் இருப்ப.

10:10

Speaker B

எல்லாருமே உங்க பக்கத்துல இருக்கவங்க உங்களை விட்டு ரிலீஸ் ஆகி போயிட்டே தான் இருப்பாங்க.

10:14

Speaker B

ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல நிராயுத பாணியா நிக்கக்கூடிய ஒரு அமைப்பு.

10:17

Speaker B

அதுக்கப்புறம் அந்த இவங்க வந்து.

10:20

Speaker B

காலபுருஷ தத்துவப்படி அது சந்திரன் அந்த சந்திரனுடைய இடத்துல அவங்க இருக்காங்க.

10:25

Speaker B

அதாவது இரண்டாம் ஸ்தானம்ங்கிறது அந்த சந்திரனை குறிக்கக்கூடிய ஒரு விஷயமா இருக்கும்.

10:29

Speaker B

சுக்கிரனும் அந்த இடத்துல இருக்கு அப்படிங்கறப்போ.

10:31

Speaker B

பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் அம்மா.

10:34

Speaker B

இந்த அம்மாவுடைய அன்பு கிடைக்காம ஒரு ஏங்கக்கூடிய ஒரு அமைப்பு.

10:38

Speaker B

இதெல்லாம் வந்து ரிஷபத்துல இருக்கவங்களுக்கு இருக்கும்.

10:40

Speaker B

என்னதான் பாசமா இருந்தாலுமே.

10:42

Speaker B

எனக்கு தாய் பாசம் இல்லை.

10:44

Speaker B

இன்னும் எங்க அம்மா என்கிட்ட பாசமா இருந்திருக்கலாம்.

10:46

Speaker B

அப்படி அம்மா பாசமா இருக்காங்க அப்படின்னா பக்கத்துல அம்மா இருந்து பார்க்க முடியாத ஒரு சிச்சுவேஷன்.

10:50

Speaker B

அப்படியே அம்மா பக்கத்துல வந்து பார்க்கிற மாதிரி இருந்தாலும் இவங்க நோய்வாய்ப்பட்டு இருப்பாங்க.

10:54

Speaker B

இவங்களுடைய ஹெல்த்துக்காக பார்க்க வந்த மாதிரி இருக்கும்.

10:57

Speaker B

இந்த மாதிரி ஒரு விட்ட குறை தொட்ட குறைன்னு ஒன்னு இந்த காலபுருஷ தத்துவம் இவங்களுக்கு சொல்லிக் கொடுத்துக்கிட்டே இருக்கும்.

11:02

Speaker B

அப்பதான் இவங்க என்ன பண்ணுவாங்க அப்படின்னா.

11:04

Speaker B

இயற்கையை நோக்கி போறதும் தெய்வத்தை நோக்கி போறதும் அப்பதான்.

11:08

Speaker B

அவ்வளவு சீக்கிரம் ரிஷபம் தெய்வத்தை நம்ப மாட்டாங்க.

11:10

Speaker A

ஓகே.

11:10

Speaker B

எதை சொன்னாலும் நம்ப மாட்டாங்க.

11:12

Speaker B

விண்டாவாதம் அதிகமாவே இருக்கும்.

11:15

Speaker B

நான் சொன்னேன் இல்லையா இவங்களுக்கு இவங்களுக்கு வார்த்தைகள்.

11:17

Speaker B

வாக்குல தான் எல்லாமே அப்படின்னு.

11:19

Speaker B

சோ அந்த வார்த்தையாலயே திருப்பி இந்த காலபுருஷ தத்துவம் இவங்களை அடிக்கும்.

11:24

Speaker B

திருப்பி இவங்களுக்கு ஓங்கி ஒரு அடியை கொடுத்து அவங்க லவ்டு ஒன்ஸ் அவங்ககிட்ட இருந்து பிரிக்கிறது.

11:30

Speaker B

ஏன் எனக்கு இப்படி நடந்துச்சு என்னுடைய வாழ்க்கை என்னன்னு ஒரு தேடலுக்கு கொண்டு போறப்போ.

11:35

Speaker B

அப்படியே செட்டில் ஆகி அப்படியே வேற ஒரு டைமென்ஷனா இவங்க மாறி.

11:40

Speaker B

அதுனாலதான் சொன்னேன் இந்த நந்தீஸ்வரர்ட்ட போய் நந்திகிட்ட போய் அந்த பிரதோஷ காலங்கள்ல அமைதியா போய் உட்கார்ந்துட்டாங்க.

11:45

Speaker B

இந்த நந்தி சிம்பல்ஸ் யூஸ் பண்றது.

11:48

Speaker B

சில்வர் ரிலேட்டடான இந்த ஹாஃப் மூன்லாம் இருக்கு இல்லையா இந்த அரை நிலா இந்த மூன்றாம் பிறையான சிம்பல்ஸ்லாம் இவங்க யூஸ் பண்றப்போ.

11:54

Speaker B

ஒரு மைண்ட் கொஞ்சம் கூல் ஆகும்.

11:57

Speaker B

ஏன்னா இவங்களுக்கு வந்து ஹீட் பாடி.

11:59

Speaker B

சீக்கிரம் தலைவலி வரது மைக்ரேன் வரதுலாம் இவங்களுக்கு உண்டு.

12:03

Speaker B

த்ரோட் இன்பெக்ஷன் சீக்கிரம் வந்துரும்.

12:05

Speaker B

எதுவும் கூலாலாம் சாப்பிடலாம் முடியாது.

12:07

Speaker B

இவங்க எனர்ஜியை கொஞ்சம் கூலா வச்சுக்கணும் ஏன்னா இவங்களுக்கு வந்து யூட்ரஸ் ப்ராப்ளமும் வரும்.

12:12

Speaker B

சுகரும் வரும்.

12:13

Speaker B

ஏன் அப்படின்னா இனிப்பு விரும்பிகள் இவங்க ஃபுட் லவர்ஸும் கூட நிறைய பேர் அதுல இருப்பாங்க.

12:18

Speaker B

இது எல்லாமே ரிஷபத்துக்கு வைக்கக்கூடிய ஒரு ட்ராப்.

12:21

Speaker B

சோ இந்த ட்ராப் அவங்க தெரிஞ்சுக்கிட்டாங்க அப்படினாலே.

12:26

Speaker B

இது கொஞ்ச கொஞ்சமா கொஞ்ச கொஞ்சமா என்னுடைய விதி இதுதான் அப்படின்னு அந்த தத்துவம் புரிய புரிய.

12:32

Speaker B

இவங்களுடைய லைஃப் செட்டில் ஆக ஆரம்பிக்கும் ஆனா ரொம்ப லேட் ஆகும்.

12:35

Speaker A

சோ இவங்க எந்த துறையில இருப்பாங்க?

12:37

Speaker A

ஸ்பெஷலைஸ்டா.

12:38

Speaker B

இவங்க வந்து ஆர்ட் ரிலேட்டடான எல்லா துறையிலும்.

12:41

Speaker B

அதாவது டெய்லரிங்ல இருப்பாங்க.

12:44

Speaker B

காஸ்டியூம் டிசைனிங்ல இருப்பாங்க.

12:46

Speaker B

ஃபிலிம்ல இருப்பாங்க.

12:47

Speaker B

கவிதை எழுதுறவங்க நிறைய பேர் இருப்பாங்க.

12:49

Speaker B

ரேடியோ ஜாக்கீஸ்லாம் இருப்பாங்க.

12:51

Speaker B

இந்த அழகா பேசக்கூடிய விஷயங்கள் மத்தவங்களை ஈர்க்கக்கூடிய ஒரு அமைப்பு அட்ராக்ஷன் அந்த மாதிரி விஷயங்கள்லாம் இவங்க இருப்பாங்க.

12:57

Speaker A

தொடர்ந்து காலபுருஷ தத்துவப்படி என்னென்ன ட்ராப்ஸ் இந்த 12 ராசிகளும் இருக்கணும்.

13:02

Speaker A

ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தெந்த விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கணும் எந்த கடவுளை வணங்கணும்.

13:10

Speaker A

எந்த தொழில்ல அவங்க வந்து பெஸ்ட்டா இருப்பாங்க.

13:13

Speaker A

சில ராசிகளுக்கு குரு சொல்றத கேட்கணும் தனக்குன்னு ஒரு குரு வச்சுக்கணும் அந்த குரு சொல்றத கேட்கணும்.

13:21

Speaker A

லைஃப் பார்ட்னரை வந்து சிறப்பா தேர்ந்தெடுக்கணும் அப்படின்னு நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.

13:27

Speaker A

இதுல நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கும் சோ எல்லாரும் ஒரே மாதிரி ஒரே ஆங்கிள்லயே சொல்ல மாட்டாங்க.

13:32

Speaker A

நிறைய அஸ்ட்ராலஜர் இருக்காங்க.

13:34

Speaker A

நிறைய ஆங்கிள்ஸ்ல நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க.

13:37

Speaker A

இதுல டவுட்ஸ் இருந்து ரொம்ப தெளிவா இதை பத்தி தெரிஞ்சுக்கணும்னா எப்படி மேம் அணுகுறது?

13:40

Speaker B

அதாவது நான் இப்பதான் அஸ்ட்ராலஜி கிளாஸஸ் ஸ்டார்ட் பண்றேன்.

13:43

Speaker B

நம்மளுடைய வாழ்க்கை என்ன அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படின்னா நம்மளுடைய ஹாரோஸ்கோப் சார்ட் நம்ம தெரிஞ்சுக்கணும்.

13:48

Speaker B

இந்த கலியுகத்தை பத்தியும் நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுனால.

13:52

Speaker B

அஸ்ட்ராலஜி யார்லாம் இன்ட்ரஸ்டடா இருக்காங்களோ கத்துக்கணும் அப்படின்னு இன்ட்ரஸ்டடா இருக்காங்களோ அவங்கலாம் வந்து செப்டம்பர் ஆறாம் தேதியில இருந்து நான் வந்து அஸ்ட்ராலஜி கிளாஸஸ் அப்படிங்கறது ஸ்டார்ட் பண்றேன்.

14:00

Speaker B

இதுதான் வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் அப்படின்னு ஸ்டார்ட் பண்றேன்.

14:02

Speaker B

சோ கீழ தெரியிற நம்பருக்கு அவங்க வந்து வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்க கால் இல்ல.

14:08

Speaker B

வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்கன்னா அவங்களுக்கான டீடைல்ஸ் வரும்.

14:10

Speaker A

ஜோதிடம் பத்தின உங்களுக்கு எந்த டவுட்ஸா இருந்தாலும் இல்ல ஜோதிடம் படிக்கணும் அப்படின்னு ஆர்வம் இருந்தால்.

14:16

Speaker A

செப்டம்பர் ஆறுல இருந்து கிளாஸஸ் ஸ்டார்ட் ஆகுது கீழ இருக்க வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி நீங்க கிளாஸ் ஜாயின் பண்ணிக்கலாம்.

14:23

Speaker A

தொடர்ந்து இன்னும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு சொல்லிக்கிட்டே இருப்போம் தொடர்ந்து பேசுவோம் நன்றி.

Topics: ரிஷபம் காலபுருஷ தத்துவம் தமிழ் ஜோதிடம் ராசி பலன் கர்மா நந்தீஸ்வரர் வழிபாடு வார்த்தை கவனம் குடும்ப பொறுப்பு சுக்கிரன் பொறுமை


---
This is the markdown twin of https://sozai.app/transcript/rishabam-luck-knocks-door/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
