**மகர ராசிக்கு ராஜயோகம் தரும் முருகன் | Magaram | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/murugan-rajoyogam-makara-rasi/

மகர ராசிக்காரர்களுக்கு சிறந்த முருகன் வழிபாடு மற்றும் ஜோதிட ஆலோசனைகள், செவ்வாய் தோஷ பரிகாரம், ஆன்மீக அறிவுரைகள்.

## Key Takeaways

- மகர ராசிக்காரர்கள் செவ்வாய், புதன், வியாழன் நாட்களில் முருகனை வழிபட வேண்டும்.
- சனி கிரகத்தின் தாக்கம் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மெதுவாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
- செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பரிகாரங்களை செய்து வாழ்க்கை பிரச்சனைகளை குறைக்க வேண்டும்.
- வீட்டிலேயே முருகனை வழிபாடு செய்வது ஆன்மீக ரீதியாக பயனுள்ளதாகும்.
- முருகன் வழிபாடு மற்றும் ஜோதிட அறிவுரைகள் மகர ராசிக்காரர்களுக்கு வாழ்வில் நல்ல மாற்றங்களை தரும்.

## What the video covers

- மகர ராசிக்காரர்கள் எந்த முருகனை வழிபட வேண்டும் என்பது குறித்து ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் விளக்கம்.
- சனி கிரகத்தின் தாக்கம் மற்றும் மகர ராசிக்காரர்களின் தன்மைகள் பற்றி விவரிப்பு.
- மகர ராசிக்காரர்களுக்கு முக்கியமான மூன்று நட்சத்திரங்கள்: உத்திராடம், திருவோணம், அவிட்டம்.
- செவ்வாய், புதன், வியாழன் நாட்களில் முருகன் வழிபாடு செய்வது சிறப்பானது.
- வீட்டிலேயே முருகன் படத்தை வைத்து வழிபாடு செய்வது எப்படி என்பதற்கான வழிகாட்டுதல்.
- செவ்வாய் தோஷம் மற்றும் அதற்கான பரிகாரங்கள் பற்றிய விரிவான விளக்கம்.
- மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் பாதிப்புகள் மற்றும் தீர்வுகள்.
- முருகன் வழிபாட்டின் ஆன்மீக மற்றும் ஜோதிட முக்கியத்துவம்.
- மகர ராசிக்காரர்களுக்கு திருமணம், கல்வி, மற்றும் மனநிலை தொடர்பான ஆலோசனைகள்.
- முருகன் வழிபாட்டில் ஹிட்டன் நாலேட்ஜ் மற்றும் ஆன்மீக அனுபவங்களின் பங்கு.

Answers

## Questions about this video

மகர ராசிக்காரர்கள் எந்த முருகனை வணங்கினால் சிறப்பானது?

மகர ராசிக்காரர்கள் பழமுதிர்ச்சோலையில் உள்ள குகனை வணங்குவது சிறப்பானது. இந்த குகன் மகர ராசிக்காரர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வர உதவும்.

மகர ராசிக்காரர்களின் குணாதிசயங்கள் என்ன?

மகர ராசிக்காரர்கள் எவ்வளவு பெரிய திறமை இருந்தாலும் தன்னடக்கம் கொண்டவர்கள். இவர்களைச் சுற்றி எப்போதும் நேர்மறை ஆற்றல் இருக்கும். இவர்களுக்கு கலைத்திறன் அதிகம் மற்றும் நடைமுறை கற்றலில் சிறந்து விளங்குவார்கள்.

மகர ராசியில் உள்ள நட்சத்திரங்கள் யாவை?

மகர ராசியில் உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. இதில் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் மிகவும் முதிர்ச்சியுடன் இருப்பார்கள்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

DISCLAIMER

00:00

Speaker A

இந்த சேனலில் பகிரப்படும் கருத்துக்கள் அனைத்தும் அவர்களுடைய சொந்த கருத்துக்களே ஆகும்.

00:01

Speaker A

ஆன்மீக அனுபவங்களையும், ஆன்மீக கருத்துக்களையும் ஆரோக்கியமான முறையில் பயனுள்ள நிகழ்ச்சிகளாக ஒளிபரப்புவதே RETRO ஆன்மீகம் சேனலின் நோக்கம்.

00:02

Speaker B

TONI&GUY essensuals

00:03

Speaker B

THIRUVANMIYUR

00:04

Speaker B

TONI&GUY essensuals HAIRDRESSING

00:05

Speaker B

TONI&GUY essensuals Thiruvanmiyur welcomes you with a standing offer.

00:06

Speaker B

All skin services up to 50%.

00:07

Speaker B

All hair services up to 20%.

00:08

Speaker B

Terms and conditions apply.

00:09

Speaker B

Only at Thiruvanmiyur.

00:10

Speaker B

Call 9840677057.

00:14

Speaker C

இவங்களுக்கு எவ்வளவு பெரிய டேலன்ட் இருந்தாலும் தன்னடக்கம் ஜாஸ்தி.

00:17

Speaker C

இவங்களை சுத்தி எனர்ஜிஸ் ரொம்ப பாசிட்டிவாவே இருக்கும்.

00:20

Speaker C

அந்த ஹிட்டனான விஷயத்தை கண்டுபிடிச்சிட்டே இருக்கிறது, அது புடிச்சிரணும், அதை மட்டும் கரெக்டா அவங்க ஃபோகஸ் பண்ணி புடிச்சிட்டாங்க அப்படின்னா, அதை புடிச்சிட்டு மேல ஏறிடணும்.

00:26

Speaker C

பழமுதிர்ச்சோலையில் இருக்கக்கூடிய

00:32

Speaker D

ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு வணக்கம்.

00:34

Speaker D

தொடர்ந்து ஆன்மீக ரீதியா நிறைய விஷயங்கள் பார்த்துட்டு இருக்கோம், அதுல இன்னைக்கு நம்ம என்ன பார்க்க போறோம்னா எந்த ராசிக்காரர்கள் எந்த முருகனை வணங்கினா நல்லது அப்படிங்கறத ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

00:46

Speaker D

வணக்கம் மேம்.

00:46

Speaker C

வணக்கம்.

00:47

Speaker D

மகர ராசிக்காரர்கள் எந்த கோவில்ல இருக்க முருகனை வணங்கினா ரொம்ப சிறப்பா இருக்கும்?

00:51

Speaker C

மகர ராசிக்காரங்க வந்து இவங்க வந்து சனி.

00:54

Speaker C

சனி என்ன பண்ணும்னா எல்லாமே ஸ்லோவா தான் இவங்க வாழ்க்கையில கொடுக்கும்.

00:59

Speaker C

சனி தன் வீட்ல இருந்தாலுமே

01:00

Speaker C

வெரி ஸ்லோ தன்னோட தனக்குள்ள இருக்கிற டேலன்ட்ஸ் அவங்களுக்கு எப்பவுமே தெரியவே தெரியாது.

01:04

Speaker C

இருக்கானு கூட அவங்களுக்கு தெரியாது.

01:07

Speaker C

ரொம்ப இன்னசென்ஸாவே இருப்பாங்க.

01:09

Speaker C

எதுவுமே வராதுன்னே நினைச்சுக்குவாங்க.

01:12

Speaker C

போக போக போக போக தான் என்ன இவங்களுக்கு வந்து ஆர்டிஸ்டிக் டேலன்ட்ஸ் அதிகம்.

01:17

Speaker C

ஒரு படிப்புல ஃபோகஸ் பண்றது அப்படிங்கறதை விட படிப்பே பார்த்தீங்கன்னா அவங்களுக்கு வந்து பிராக்டிகல் லேர்னிங் நல்லா வரும்.

01:23

Speaker C

தியரிட்டிக்கலா நீங்க சொல்றீங்கன்னா அவங்களுக்கு புரியாது.

01:26

Speaker C

ஏன்னா அவங்களுக்கு வந்து ஹிட்டன் நாலேட்ஜ் மகரத்துக்கு.

01:30

Speaker C

டேலன்ட் அண்ட் ஸ்கில்ஸ் அதோட வந்து வெளி உலக நாலேட்ஜ் அப்படிங்கறது.

01:34

Speaker C

இந்த ஹிட்டன் நாலேட்ஜ் அப்படிங்கறதுதான் அவங்களுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் மகரத்துக்கு.

01:38

Speaker C

அப்படி பார்க்கிறப்ப குகன்.

01:40

Speaker C

குகன்கிறது பழமுதிர்ச்சோலையில் இருக்கக்கூடிய குகன் அதுதான் வந்து அந்த ஹிட்டன் நாலேட்ஜ் வெளிய கொண்டு வரக்கூடிய அமைப்பு வந்து.

01:46

Speaker C

பழமுதிர்ச்சோலை குகனுக்கே உண்டு.

01:49

Speaker C

அது அது பழமுதிர்ச்சோலை குகன் எப்படின்னா அந்த ஒரு இன்னசென்ஸ் லுக்லயே இருக்கும்.

01:53

Speaker C

ஆனா அதே மாதிரிதான் இவங்களும்.

01:55

Speaker C

இவங்களுக்கு எவ்வளவு பெரிய டேலன்ட் இருந்தாலும் தன்னடக்கம் ஜாஸ்தி.

01:58

Speaker C

இவங்களை சுத்தி எனர்ஜிஸ் ரொம்ப பாசிட்டிவாவே இருக்கும்.

02:01

Speaker C

மகரத்துல மூணு நட்சத்திரங்கள் இருக்குது.

02:03

Speaker C

உத்திராடம், திருவோணம், அவிட்டம்.

02:05

Speaker C

இதுல அவிட்டம் நல்லா மெச்சூடா இருப்பாங்க.

02:07

Speaker C

திருவோணம், உத்திராடம் வந்து கொஞ்சம் மெச்சூரிட்டில கொஞ்சம் லேக் ஆவாங்க.

02:11

Speaker C

வயசாக வயசாக 41 வயசு 42 வயசு ஆகணும்.

02:14

Speaker C

இந்த திருவோணம், உத்திராடம் இருக்கவங்களுக்கு எல்லாம் சில நாலேட்ஜ் வரதுக்கு.

02:16

Speaker C

அவிட்டம்ல இருக்கவங்களுக்கு ஒரு 28 வயசுக்கு அப்புறம் மே பி அவங்களுக்கு ஒரு திருமணம் ஆனதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா.

02:20

Speaker C

நான் யாரு நான் யாருன்னு ஒரு தேடல் போகும் அவங்களுக்கு.

02:22

Speaker C

அந்த ஹிட்டன் அந்த ஹிட்டனான விஷயத்தை கண்டுபிடிச்சிட்டே இருக்கிறது.

02:25

Speaker C

அது புடிச்சிரணும்.

02:25

Speaker C

அதை மட்டும் கரெக்டா அவங்க ஃபோகஸ் பண்ணி புடிச்சிட்டாங்க அப்படின்னா அதை புடிச்சிட்டு மேல ஏறிடணும்.

02:30

Speaker D

சூப்பர்.

02:30

Speaker C

அதுக்கு குகன் ஸ்தலத்துக்கு போய் பிளாக்கேஜஸ் ரிமூவ் பண்ணிட்டு வரணும்.

02:33

Speaker C

எனக்கு ஒண்ணுமே வராது எனக்கு ஒண்ணுமே தெரியாதும்பாங்க.

02:35

Speaker C

ஆனா போய் குகன் ஸ்தலத்துல போய் உட்கார்ந்தா அந்த ஹிட்டன் நாலேட்ஜ் அவங்களுக்கு ரிவீல் ஆகும்.

02:39

Speaker D

எல்லா முருகன் கோயிலையும் செவ்வாய்க்கிழமை ஆனால் கூட்டம் கூட்டமா மக்கள் போறாங்க.

02:45

Speaker D

அதுக்கப்புறம் அப்படின்னு பார்த்தா வியாழக்கிழமை முருகனை பார்க்க யாராலயும் முருகனை பார்க்கவே முடியல.

02:50

Speaker D

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அப்படின்னு சொல்லிட்டு ரிட்டன் வந்துறாங்க.

02:53

Speaker D

ஏன் அந்த ரெண்டு கிழமைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க?

02:55

Speaker C

ஏன்னா செவ்வாய் காரகன்.

02:57

Speaker C

அதே மாதிரி முருகரை வந்து குருவாவும் பார்க்கப்படுது.

03:00

Speaker C

அதனாலதான் வந்து வியாழன்.

03:01

Speaker C

அதனாலதான் இந்த ரெண்டு நாள்.

03:02

Speaker C

இப்போ அது எப்படி வழிபடலாம்னா.

03:03

Speaker C

இப்ப நீங்க செவ்வாய்க்கிழமை போயிட்டீங்க தங்கிடுங்க புதன்கிழமையும் வழிபாடு பண்ணுங்க.

03:07

Speaker D

ஓகே.

03:08

Speaker C

ஏன்னா வந்து புதன் புத்தி.

03:10

Speaker C

அந்த புத்திக்கும் முருகர் வேலை பார்ப்பார்.

03:12

Speaker C

அதனால அந்த புத்திக்கும் சேர்த்து வழிபாடு பண்ணிட்டு நீங்க கிளம்பிக்கலாம்.

03:15

Speaker C

இல்லைன்னா புதன்கிழமை போய் தங்கிட்டு வியாழக்கிழமை வழிபாடு பண்ணிட்டு வாங்க.

03:20

Speaker C

இந்த இதுதான் அந்த காம்பினேஷன்.

03:21

Speaker C

செவ்வாய், புதன், வியாழன்.

03:23

Speaker C

இந்த மூணும் இந்த இந்த மூணு நாள் இவங்க வழிபாடு பண்றாங்க.

03:26

Speaker C

இந்த மூணு நாள் கண்டினியூஸா வழிபாடு பண்ணுனாலும் சிறப்போ சிறப்பு.

03:28

Speaker C

ஏன்னா வந்து அந்த புதன் அப்படிங்கிறது அங்க இருக்க சித்தர்களையும் குறிக்கும்.

03:32

Speaker C

இந்த பச்சையையும் குறிக்கும்.

03:33

Speaker C

மயிலையும் குறிக்கும்.

03:35

Speaker C

சோ அது வந்து ஹிட்டன் நாலேட்ஜ் புதன் அப்படிங்கிறது.

03:37

Speaker C

முருகர் கிட்ட அந்த ஹிட்டன் நாலேட்ஜ் உண்டு.

03:39

Speaker C

அதனால இந்த செவ்வாய், புதன், வியாழன் இப்படி வந்து கணக்கு வச்சிட்டு கூட நீங்க வந்து வழிபாடு பண்ணலாம்.

03:43

Speaker C

இந்த கூட்டத்துல தான் போய் கும்பிடணும் அப்படிங்கிறது இல்லை.

03:45

Speaker C

முருகரை தனிச்சு நம்ம கும்பிடலாம்.

03:47

Speaker C

ஆனா இந்த இந்த நாட்கள்ல வந்து இவங்களோட எனர்ஜி பவர் ஸ்ட்ராங்கா இருக்கிறதா.

03:51

Speaker C

அந்த கிழமைகள்ல அவங்களோட எனர்ஜி வந்து நம்மளோட எனர்ஜியும் அந்த எனர்ஜியும் கனெக்ட் ஆகுதுங்கிறப்ப.

03:54

Speaker C

உங்களுக்கு குருவா நீங்க பார்க்கிறீங்கன்னா வியாழக்கிழமை.

03:57

Speaker C

நீங்க பக்தரா போறீங்க அப்படின்னா செவ்வாய்க்கிழமை.

03:59

Speaker C

உங்களுக்கு ஞானம் வேணும்னா புதன்கிழமை போங்க.

04:00

Speaker D

இப்ப வந்து கோயிலுக்கே போக முடியாதவங்க இருப்பாங்க.

04:04

Speaker D

நீங்க சொல்ற மாதிரி செவ்வாய், புதன், வியாழன் என்னால கோயில்ல எல்லாம் போய் தங்க முடியாது.

04:08

Speaker D

நான் வந்து வீட்லயே எனக்கு பிடிச்ச முருகன் போட்டோவை வச்சு நான் வழிபடலாமா இந்த மாதிரி?

04:12

Speaker C

தாராளமா.

04:13

Speaker C

அதாவது முருகரை வந்து சிகப்பு மலர்களால் அவரை வந்து வழிபாடு பண்ணனும்.

04:16

Speaker C

வீட்ல வந்து ஒரு ரோஸோ இல்ல சிகப்பு அரளியோ இதெல்லாம் போட்டு முருகரை வழிபாடு பண்றப்போ.

04:20

Speaker C

முருகரை மனசுல நினைச்சிட்டாலே போதும்.

04:22

Speaker C

வேல்மாறல் கேட்கிறதோ.

04:23

Speaker C

ஸ்கந்த சஷ்டி கவசம் கேட்கிறதோ.

04:24

Speaker C

இந்த மாதிரி அவருடைய அந்த மந்திரங்கள்ல கேட்டாலே அந்த அந்த உபதேசங்களை கேட்டாலே போதும்.

04:28

Speaker C

முருகர் வந்து வந்து உட்கார்ந்துருவார்.

04:30

Speaker C

நீங்க வந்து கோயிலுக்கு போகணும்னு இல்லை.

04:31

Speaker C

நீங்க வந்து கற்பனையிலேயே அங்க போயிட்டு வந்தரலாம் நீங்க.

04:33

Speaker C

கண் முருகர் அழைக்கணும்னு நினைச்சிட்டாருன்னா அது எப்படியாவது அழைச்சு டக்குன்னு போய் நிக்கிற மாதிரிதான் இருக்கும் முருகர்.

04:36

Speaker D

சோ 12 ராசிக்காரர்களும் எந்தெந்த முருகனை வணங்கினா சிறப்பா இருக்கும்னு ரொம்ப அருமையா சொன்னீங்க மேம்.

04:41

Speaker D

இப்ப முருகன் அப்படின்னு சொன்னாலே செவ்வாய் காரகர் அப்படின்னு சொல்லுவாங்க.

04:43

Speaker D

சிகப்பு கலருக்கு சொந்தக்காரர் ரத்த குருதி கலருக்கு சொந்தக்காரர் அப்படின்னு சொல்லுவாங்க.

04:47

Speaker D

சோ முருகனை வணங்குறவங்க அதிகமா பார்த்தா வந்துட்டு செவ்வாய்க்கிழமை போய் கும்பிடுவாங்க.

04:51

Speaker D

சில பேர் ஜாதகக்காரர் கிட்ட போனா வந்து என்னதான் நட்சத்திரம், தசா புத்தி எல்லாமே பார்த்தாலுமே செவ்வா தோஷம் அப்படின்னு இருந்தா.

04:57

Speaker D

அதுக்கான சில பரிகாரங்கள் சில விஷயங்கள் சொல்லுவாங்க.

05:00

Speaker D

அதுவும் அதிகமா பார்த்தா முருகனை நோக்கியே இருக்கும்.

05:01

Speaker D

சோ செவ்வாய் தோஷத்தை பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேம்.

05:03

Speaker C

அதாவது நம்மளுக்கு வந்து கட்டங்கள்ல எங்கெங்க செவ்வாய் உட்கார்ந்திருக்கு அப்படிங்கறதுதான் அதனுடைய கணக்கு.

05:07

Speaker C

இப்ப நாலுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, 12ல செவ்வாய் உட்கார்ந்திருக்கு.

05:11

Speaker C

ஒன்பதுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு இப்படிலாம் ஒவ்வொரு இடத்துலயும் செவ்வாய்க்கு வந்து ஒவ்வொரு காரக பலன்கள் இருக்கு.

05:14

Speaker C

இப்ப நாலுல செவ்வாய் இருக்கவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் வீடு அமையாது.

05:17

Speaker C

சொந்த வீடு அமையாது.

05:18

Speaker C

அவங்களுக்கு தான் இந்த வீடு பிரச்சனை வருது.

05:20

Speaker C

லைஃப் பார்ட்னர்ட்ட போவாங்க நல்லா இருக்கும் எங்கயாவது ஒரு மனஸ்தாபம் வந்தா மனசு ஒட்டாது.

05:25

Speaker C

இப்ப எட்டுல செவ்வாய் இருக்கவங்களுக்கு கண்டிப்பா நீங்க வந்து செவ்வாய்க்கான பரிகாரம் பண்ணுங்க அப்படிங்கறது அவங்களுக்கு சொல்லிடுவாங்க.

05:30

Speaker C

எப்படின்னா அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணுங்க.

05:32

Speaker C

ஏன்னா நிதானம் இருக்காது.

05:34

Speaker C

ஆக்ரோஷமா இருக்கிறது.

05:36

Speaker C

அதுவும் உங்களுக்கு செவ்வாய் வக்கிரம்லாம் ஆயிடுச்சு அப்படின்னா இன்னும் கஷ்டம்.

05:38

Speaker C

அப்போ இவங்க எப்படி செவ்வாய் எப்படி வழிபாடு பண்ணனும்னா.

05:41

Speaker C

நிறைய பேத்துக்கு செவ்வாய் வழிபாட்டு முறை சொல்லி தான் ஆகணும்.

05:43

Speaker D

கண்டிப்பா.

05:43

Speaker C

செவ்வாய்ங்கிறது நம்மளுடைய விதியில ஏதோ ஒரு பெரிய பங்கம் இருக்கு அப்படிங்கறது சொல்றதுதான் அது.

05:48

Speaker C

அதை சரி பண்ணிக்கணும்.

05:49

Speaker C

இப்ப செவ்வாய் திசை எனக்கு போயிட்டு இருக்கு அப்படின்னா.

05:51

Speaker C

ஏன் என்னோட அப்பாவை நான் பார்க்கணும்.

05:53

Speaker C

அப்படி அவங்க யோசிக்கணும்.

05:54

Speaker C

என் அப்பாவுக்கு என்ன ஆகப்போகுது?

05:55

Speaker C

ஹெல்த் பார்க்கிறது அதாவது அப்பாவுக்கு ஏதாவது ஒரு ரத்தக்காயங்கள் நடக்கக்கூடிய அமைப்பு.

05:58

Speaker C

அவங்க அந்த நேரத்துல கொஞ்சம் சரியா இருந்துக்கிறது.

06:01

Speaker C

இப்ப செவ்வாய் ரொம்ப உக்கிரமா இருக்குது.

06:03

Speaker C

ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு.

06:04

Speaker C

இப்போ அந்த குழந்தை வளர வளர இந்த குழந்தை ஸ்ட்ராங் ஆயிட்டே போகுதுன்னா அப்போ அது வீக் ஆயிட்டே போகுதுன்னா.

06:08

Speaker C

கொஞ்சம் ஜாக்கிரதையா கொஞ்சம் பார்க்கிறது.

06:10

Speaker C

ஹெல்த் வைஸ் பண்ணாது.

06:12

Speaker C

டக்குன்னு ஏதாவது ஒரு ஆக்சிடென்ட்ஸ் பண்ணி விட்டுரும்.

06:13

Speaker C

ஏதோ ஒன்னு பண்ணி விட்டுரும்.

06:14

Speaker C

இல்லை இவங்களோட நல்ல விஷயங்களை பார்க்க விடாது.

06:17

Speaker C

செவ்வாய்.

06:17

Speaker C

வாழ்க்கையில ஏன்னா.

06:18

Speaker C

ஏன்னா கேது வந்து அந்த இடத்துல வேலை பார்க்கும் செவ்வாய்க்கு.

06:20

Speaker C

ஏன்னா செவ்வாய் வந்து ரொம்ப அவசரம் புத்தி உடையது.

06:22

Speaker C

கேது தான் நிதானத்தை கொடுக்கும்.

06:24

Speaker C

அப்ப கேது எப்படி நிதானத்தை கொடுக்கும்னா.

06:26

Speaker C

யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்களை தூக்கிடும்.

06:28

Speaker D

ஓகே.

06:28

Speaker C

அதுல நம்மளுக்கு ஒரு அப்செட் கொடுக்கும்.

06:30

Speaker C

கொடுத்து அதுக்கப்புறம் உங்களை வந்து ஒரு அமைதி நிலைக்கு கொண்டு போய் அந்த செவ்வாய்னாலே அந்த உக்கிரமா இருந்து எல்லாமே.

06:35

Speaker C

நான் தான் அப்படிங்கிற ஒரு தாட் ப்ராசஸ் இருக்கும் அவங்களுக்கு.

06:39

Speaker C

இதெல்லாம் உடைக்கிற வேலை கேது பார்த்துட்டு இருக்கும்.

06:41

Speaker C

சனியும் இந்த வேலையை பார்த்துட்டு இருக்கும்.

06:42

Speaker C

சனியும் அவங்களுக்கு சில பிரச்சனைகளை கொடுத்துட்டு இருக்கும்.

06:44

Speaker C

சோ இவங்க மெத்தடே எப்படி பண்ணனும்னா.

06:46

Speaker C

காலபைரவரை வழிபாடு பண்ணனும்.

06:47

Speaker D

ஓகே.

06:48

Speaker C

அஷ்டமி அமாவாசையில காலபைரவரை வழிபாடு பண்ணி.

06:51

Speaker C

காலபைரவருக்கு அஷ்டமியில போய் விளக்கு போடணும்.

06:53

Speaker C

விளக்கு போட்டு முதல் வந்து அதுதான் பிராயச்சித்தம்.

06:55

Speaker C

பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் தேடணும்.

06:57

Speaker C

பிராயச்சித்தம் பண்ணிட்டு அங்க அதாவது அஷ்டதிக் பாலகர்கள் கூட சொல்லுவாங்க.

07:02

Speaker C

அஷ்டதிக் பாலகர்களை தொட்டலாம் வழிபாடு பண்ணக்கூடாது.

07:04

Speaker C

அஷ்டதிக் பாலகர்களை வந்து நினைச்சுக்கணும்.

07:06

Speaker C

உன்னை எல்லாம் பார்த்துட்டே இருக்காங்க அப்படின்னு சொல்லுவாங்க.

07:08

Speaker C

அது அஷ்டதிக் பாலகர்கள் தான் பார்த்துட்டே இருப்பாங்க.

07:10

Speaker C

எட்டு திசையில இருந்தும் பார்க்கக்கூடியவங்க அவங்க.

07:13

Speaker C

சொர்ண ஆகாஷ்ன பைரவரையும் அவங்க வழிபாடு பண்ணனும்.

07:16

Speaker C

சொர்ண ஆகாஷ்ன பைரவர் வந்து எப்படின்னா அவருக்கு கீழ.

07:20

Speaker C

ஆறு சிவன் இருக்கும்.

07:22

Speaker C

சொர்ண ஆகாஷ்ன பைரவர் கீழ ஒரு ஆறு சிவன் இருக்கும்.

07:24

Speaker C

அவங்களும் பார்த்தீங்கன்னா ஆறு திசைகளை பார்த்துட்டு இருப்பாங்க.

07:27

Speaker C

ஈஸ்ட், வெஸ்ட், நார்த், சவுத், அப்வேர்ட், டவுன்வேர்ட் அப்படின்னு பார்த்துட்டு இருப்பாங்க.

07:30

Speaker C

இது எப்படின்னா எல்லா திசைகளிலும் நான் என் சரண்டர் ஆகுறேங்கிறதுதான் அது.

07:34

Speaker C

அதுதான் அந்த செவ்வாய் காரகன்.

07:35

Speaker C

இதெல்லாம் அந்த கர்மாவை இறக்கி வைக்கணும் ஃபர்ஸ்ட்.

07:37

Speaker D

ஓகே.

07:37

Speaker C

கர்மாவை இறக்கி வச்சிட்டு தான் செவ்வாய் ஸ்தலத்துக்கே போகணும்.

07:41

Speaker C

அப்பதான் செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்கும்.

07:44

Speaker C

இல்லைன்னா செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்காது.

07:46

Speaker C

பிராயச்சித்தத்தை முடிச்சிட்டு பரிகாரம் பண்ணனும்.

07:47

Speaker D

நீங்க ஒரு விஷயம் தெளிவா சொன்னீங்க மேம்.

07:50

Speaker D

பிராயச்சித்தம் பண்ணிட்டு தான் வந்துட்டு பரிகாரத்தை பார்க்கணும்னு சொல்லிட்டு.

07:53

Speaker D

இப்ப செவ்வாய் தோஷம் அப்படின்னு சொல்லும்போது எல்லாருக்குமே ஒரு மைண்ட்ல வரது வந்துட்டு பெண்களை தான் அதிகமா சொல்லுவாங்க.

08:00

Speaker D

இந்த பொண்ணுக்கு செவ்வா தோஷம் இருக்கு இந்த பொண்ணை கல்யாணம் பண்ண வேணாம் இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு பையனுக்கு ஏதாவது ஆயிரும்.

08:07

Speaker D

இந்த பொண்ணை கட்டுறதுனால வந்துட்டு என் வீட்டு வீடுல நல்லா இருக்காது வீடு நல்லா இல்லைன்னு சொல்லிட்டு முழுக்க முழுக்க குறை சொல்றதை பார்த்தா அந்த பொண்ணோட ஜாதகத்தை மட்டும்.

08:13

Speaker D

அந்த பொண்ணோட ஜாதகத்துல இருக்க கட்டம் அந்த செவ்வாய் கட்டத்தை மட்டும் சொல்றாங்க.

08:16

Speaker D

அது உண்மைதானா மேம்?

08:17

Speaker C

அதாவது அவங்களை கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணிக்கிறது நல்லது.

08:19

Speaker C

பரிகாரங்கள் மூலமா அதை சரி பண்ணிக்க முடியும்.

08:21

Speaker C

ஒரு 28 வயசுக்கு அப்புறம் வந்து அது கொஞ்சம் குறைய ஆரம்பிச்சிரும் அவங்களுக்கு.

08:24

Speaker C

அது என்ன அப்படின்னா ஹஸ்பண்டுக்கு உடம்பு சரியில்லாம போகலாம்.

08:27

Speaker C

அந்த மாதிரி விஷயங்கள் தான்.

08:28

Speaker C

ஆனா அவங்களால குடும்பம் கொலைய போகுது சீர்கெட போகுது அந்த மாதிரிலாம் கிடையாது.

08:32

Speaker C

அந்த மாதிரிலாம் இஸ்யூஸ் ஆகாது.

08:33

Speaker C

ஏன்னா அவங்கலாம் வந்து காத்திருக்கக்கூடிய அமைப்புல இருக்கவங்க.

08:36

Speaker C

அந்த செவ்வாய்.

08:37

Speaker C

ஏன்னா அவங்க அவங்க அது பண்ணல.

08:39

Speaker C

அவங்களால அது நடக்கல.

08:40

Speaker C

இது வந்து அவங்களுடைய கர்மா.

08:42

Speaker C

அதனாலதான் கர்மாவை இந்த பக்கம் கழிச்சிட்டு இங்க.

08:44

Speaker C

ஏன்னா அந்த கர்மாவை டோட்டலா நம்ம அங்க கழிக்கிறப்ப.

08:47

Speaker C

இங்க இது கிளியர் ஆயிடும்.

08:48

Speaker D

ஓகே.

08:48

Speaker C

ஒரு 28 வயசுக்கு அப்புறம்லாம் ரொம்ப நார்மல் லைஃப் தான் வாழ்வாங்க.

08:51

Speaker C

செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களுக்கு செவ்வாய் தோஷக்காரங்களே கல்யாணம் பண்ணி வைக்கணும்.

08:55

Speaker C

அப்படிங்கறதெல்லாம் வந்து 28 வயசு வரைக்கும் தான்.

08:57

Speaker C

28 வயசு தாண்டிடுச்சு அப்படின்னா அவங்களுக்கு லக்னம் வேலை பார்க்க ஆரம்பிச்சிரும்.

09:00

Speaker C

அங்க செவ்வாய் செவ்வாயுடைய பவர் வந்து குறைய ஆரம்பிச்சு குருவை ஸ்ட்ராங் பண்ணனும்.

09:04

Speaker C

அவங்க ஜாதகத்துல குருவை எவ்வளவு ஸ்ட்ராங் பண்றாங்களோ.

09:07

Speaker C

குரு ஸ்ட்ராங் பண்றது வந்து குரு வழிபாடு.

09:09

Speaker C

குரு குருமார்களை மதிக்கிறது.

09:11

Speaker C

ஏன்னா செவ்வாய் குரு காம்பினேஷன் எப்படி அப்படின்னா.

09:14

Speaker C

குருவை விட செவ்வாய்க்கு நிறைய தெரிஞ்சிருந்தாலும் செவ்வாய் குரு கிட்ட கொஞ்சம் அடக்கியே வாசிக்கும்.

09:18

Speaker C

அப்போ அங்க குரு இருக்கப்ப செவ்வாய் கொஞ்சம் அடங்கும்.

09:20

Speaker C

சில ஸ்தலங்கள்ல எல்லாம் பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க.

09:23

Speaker C

விஷ்ணுக்கு நேரா கூட முருகரை வச்சிருப்பாங்க.

09:27

Speaker C

அது அதுவும் பார்த்தீங்கன்னா அது மாதிரி ஒரு குரு செவ்வாய் காம்பினேஷன் தான் அது.

09:30

Speaker C

அப்படி இருக்கப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கும் குருவை ஸ்ட்ராங் பண்ணிட்டா செவ்வாய் தோஷம் எதுவும் ஒன்னும் பண்ணாது.

09:34

Speaker C

குரு குரு தான் மாங்கல்யத்தை கொடுக்கக்கூடியது.

09:36

Speaker C

செவ்வாய் அதை கெடுக்கக்கூடிய மாதிரி இருந்தாலும் குரு பவர்ஃபுல்லா ஜாதகத்துல இருக்குன்னா துணிஞ்சு கல்யாணம் பண்ணலாம்.

09:40

Speaker C

குரு ஸ்ட்ராங்கா இருக்கக்கூடிய ஜாதகக்காரங்க கூட செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களை கல்யாணம் பண்ணாங்கன்னா.

09:44

Speaker C

அவங்க ஜாதகத்துல குரு ஸ்ட்ராங் அப்ப எதுவும் நடக்காது.

09:46

Speaker D

சோ செவ்வாய் தோஷம்னா என்ன அதுக்கு என்ன பரிகாரங்கள் செய்யணும்.

09:50

Speaker D

பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் ரொம்ப முக்கியம் அப்படிங்கறதையும்.

09:54

Speaker D

செவ்வாய் தோஷம் இருக்கவங்க செவ்வாய் தோஷத்தை கல்யாணம் பண்ணலாம்.

09:58

Speaker D

அதுக்கும் இந்த மாதிரியான நிபந்தனைகள் இருக்கு அப்படிங்கறதையும் ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.

10:02

Speaker D

தொடர்ந்து பேசுவோம் நன்றி.

Topics: மகர ராசி முருகன் வழிபாடு ஜோதிடம் செவ்வாய் தோஷம் ஆன்மீகம் Retro Aanmeegam ஜீவிதா சுரேஷ்குமார் மகர ராசி பரிகாரம் முருகன் கோவில் தமிழ் ஆன்மீகம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11435)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11435)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/murugan-rajoyogam-makara-rasi/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
