**Mithunam 👉மனக்குழப்பம் அதிகரிக்கும் |Astrologer Jeevitha |Guru Athisara Peyarchi Palangal — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/mithunam-mind-confusion-astrologer-jeevitha/

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு அதிசார பெயர்ச்சி மூலம் வரும் மனக்குழப்பம், தொழில் தடைகள் மற்றும் பரிகார வழிகள் பற்றி விளக்கம்.

## Key Takeaways

- மிதுன ராசிக்காரர்கள் குரு அதிசார பெயர்ச்சியை கவனமாக எதிர்கொள்ள வேண்டும்.
- மனஅழுத்தங்கள் மற்றும் தொழில் தடைகள் தற்காலிகம், குரு பெயர்ச்சி மூலம் முன்னேற்றம் வரும்.
- திருப்பதி பெருமாளுக்கு பயணம் மற்றும் வழிபாடு மனநிலையை மேம்படுத்த உதவும்.
- குரு கிரகம் தர்மம் மற்றும் செழிப்பை குறிக்கும், அதனால் நியாயமான வழியில் நடக்க வேண்டும்.
- சனி மற்றும் குரு கிரகங்களின் மாற்றங்கள் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

## What the video covers

- மிதுன ராசிக்காரர்கள் தற்போது மனச்சோர்வு மற்றும் தொழில் தடைகள் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
- சனி கிரகத்தின் பாதிப்பால் மனஅழுத்தங்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் அதிகரித்து உள்ளன.
- குரு கிரகத்தின் அதிசார பெயர்ச்சி மூலம் 2025 அக்டோபர் 18 முதல் 2026 பிப்ரவரி வரை மாற்றங்கள் ஏற்படும்.
- குரு வக்ரம் நிலை காரணமாக மனநிலை குழப்பம் மற்றும் தாமதங்கள் ஏற்படுகின்றன.
- திருப்பதி பெருமாளுக்கு பயணம் செய்து வழிபாடு செய்வது மனநிலையை மேம்படுத்த உதவும்.
- குரு கிரகம் தர்மம் மற்றும் செழிப்பை குறிக்கின்றது, அதனால் நியாயமான செயல்களில் ஈடுபட வேண்டும்.
- குரு பெயர்ச்சி என்பது கிரகத்தின் ரிவர்ஸ் இயக்கம் போன்றது, இது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வரும்.
- குரு கிரகத்தின் பெயர்ச்சி காலத்தில் மனஅழுத்தங்கள் இருந்தாலும், அது நிலையானது அல்ல.
- சனி கிரகத்திலிருந்து குருவுக்கு மாற்றம் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகளை தரும்.
- பரிகார முறைகள் மற்றும் பக்தியுடன் இந்த காலத்தை சமாளிக்க வேண்டும்.

Answers

## Questions about this video

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியால் என்ன நடக்கும்?

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியால் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றங்கள் ஏற்படும். சனியால் தாமதமான விஷயங்கள் முன்னேற்றம் காணத் தொடங்கும்.

மிதுன ராசிக்காரர்கள் தற்போது சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன?

மிதுன ராசிக்காரர்கள் தற்போது தொழில் முடக்கம், மனக்குழப்பம், குடும்பச் சூழலில் பிரச்சனைகள் மற்றும் மனஸ்தாபங்கள் போன்றவற்றை சந்தித்து வருகின்றனர். மன அழுத்தம் மற்றும் வீட்டில் பிரச்சனைகள் தொடர வாய்ப்புள்ளது.

மிதுன ராசிக்காரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

மிதுன ராசிக்காரர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகளை (குருவாகக் கருதி) காது கொடுத்துக் கேட்பது நல்லது, ஏனெனில் அது அவர்களுக்கு நன்மை பயக்கும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

மிதுன ராசிக்காரங்கதான் கொஞ்சம் கவனமாவே இருக்கணும்.

00:07

Speaker A

வக்ரம் அப்படின்னு நான் சொன்னேன் இல்லையா கொஞ்சம் ரிவர்ஸ் ஆகக்கூடிய ஒரு விஷயம்.

00:10

Speaker A

இங்க மிதுனத்துக்குதான் நடக்கும்.

00:12

Speaker A

ஏன் அப்படின்னா,

00:13

Speaker A

ஆல்ரெடி சனி சில வேலைகளை உங்களுக்கு பண்ணிட்டுதான் இருக்கும்.

00:18

Speaker A

அதாவது தொழில் முடக்கம் பண்றது, மைண்ட் கொஞ்ச நேரம் வேலை செய்யாமயே இருக்கிறது.

00:22

Speaker A

ஒரு கன்பியூஷன் அப்படிங்கறது அதிகமாவே இருந்திருக்கும்.

00:25

Speaker A

பெர்மனன்ட்டா நாங்க இப்படியே இருப்போமா அப்படின்னுலாம் கிடையாது.

00:28

Speaker A

டக்குன்னு ஒரு குரோத்துக்கு கொண்டு போற மாதிரி இருக்கும்.

00:31

Speaker A

ஏன்னா,

00:32

Speaker A

குருங்கிறவர் பெருக்கி பெருக்கி கொடுக்கக்கூடியவரா இருப்பார்.

00:35

Speaker A

அதனால இப்போதைக்கு,

00:56

Speaker A

மிதுன ராசி.

00:59

Speaker A

இந்த மிதுன ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சி என்ன செய்யும் அப்படின்னா, மிதுன ராசிக்காரங்கதான் கொஞ்சம் கவனமாவே இருக்கணும்.

01:44

Speaker A

ஏன் அப்படின்னா, வக்ரம் அப்படின்னு நான் சொன்னேன் இல்லையா கொஞ்சம் ரிவர்ஸ் ஆகக்கூடிய ஒரு விஷயம்.

01:48

Speaker A

அது வந்து இங்க மிதுனத்துக்குதான் நடக்கும்.

01:51

Speaker A

ஏன் அப்படின்னா,

01:52

Speaker A

ஆல்ரெடி சனி சில வேலைகளை உங்களுக்கு பண்ணிட்டுதான் இருக்கும்.

01:57

Speaker A

அதாவது தொழில் முடக்கம் பண்றது, மைண்ட் கொஞ்ச நேரம் வேலை செய்யாமயே இருக்கிறது.

02:02

Speaker A

கொஞ்ச காலமாவே உங்களுக்கு வந்து மைண்ட் எதை நோக்கி போகுது அப்படிங்கறதே தெரியாம இருக்கும்.

02:09

Speaker A

ஒரு கன்பியூஷன் அப்படிங்கறது அதிகமாவே இருந்திருக்கும்.

02:11

Speaker A

மிதுன ராசிக்காரங்களுக்கு.

02:13

Speaker A

எனக்கு என்ன வரும் என்ன வராது.

02:16

Speaker A

குடும்ப சூழல்களிலும் கொஞ்சம் பிரச்சனைகள் சந்திச்சிட்டு இருக்க மாதிரி.

02:20

Speaker A

மனஸ்தாபங்கள் சந்திச்சிட்டு இருக்க மாதிரியான சிச்சுவேஷன்ஸ் அப்படிங்கறது கண்டிப்பா மிதுன ராசிக்காரங்க நிறைய பேர் ஃபேஸ் பண்ணிட்டுதான் இருப்பாங்க.

02:26

Speaker A

வெளியில டிராவல் பண்ணி போனா கொஞ்சம் நல்லா இருக்கும்.

02:29

Speaker A

ஆனா திரும்பி வீட்டுக்குள்ள வந்த உடனே எங்கேயோ ஒரு ட்ரைனஸ் அந்த மாதிரி இருக்கக்கூடிய பட்சத்துல,

02:34

Speaker A

இங்க குருவும் உங்களுக்கு வக்ரம் ஆகுறதுனால உங்களுக்கு வெளிநாட்டுப் பயணங்கள்.

02:40

Speaker A

உங்களுடைய தொழில் ரீதியான ஒரு முன்னேற்றம்.

02:43

Speaker A

அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடக்கும்.

02:46

Speaker A

ஏன்னா சனி கொஞ்சம் தாமதப்படுத்தி வச்சிருந்த விஷயங்கள் எல்லாம்.

02:50

Speaker A

இங்க வந்து உங்களுக்கு ப்ரோக்ரஸ் அப்படிங்கறது ஆக ஆரம்பிச்சாலும்.

02:55

Speaker A

இன்னும் மன அழுத்தங்கள், வீட்ல ப்ராப்ளம்ஸ் அப்படிங்கறது வந்து இருக்கத்தான் செய்யப்போகுது.

03:01

Speaker A

அதனால வார்த்தைகள்ல கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது.

03:04

Speaker A

அவங்க என்ன பேசுறாங்க அதாவது உங்க உங்களுடைய குடும்பத்தார்கள் என்ன வார்த்தைகள் பேசுறாங்க.

03:10

Speaker A

உங்களுக்கு அட்வைஸ் பண்ற மாதிரிதான் பேசுவாங்க.

03:12

Speaker A

அந்த அதுதான் அவங்கதான் குரு.

03:14

Speaker A

பெரியவங்கதான் உங்களுக்கு குருவா இருக்க போறாங்க.

03:16

Speaker A

என்ன விஷயம் சொல்றாங்க அப்படின்னு கொஞ்சம் காது கொடுத்து கேட்கணும்.

03:20

Speaker A

ஏன் என்ன சொல்ல போறாங்கன்னா,

03:21

Speaker A

ஏன் நீ இப்படியே இருக்க கொஞ்சம் மாறலாமே இதை செய்யலாமே அதை செய்யலாமே வெளிய வா கொஞ்சம் அடைஞ்சிருந்த டார்க்கிலிருந்து கொஞ்சம் வெளிய வா அப்படின்னுலாம் சொல்றப்போ.

03:29

Speaker A

கொஞ்சம் கேட்டுக்கிறது நல்லது மிதுன ராசிக்காரங்களுக்கு.

03:32

Speaker A

ஏன்னா உங்களுடைய மனநிலைமை எதையுமே நான் கேட்க மாட்டேன் அப்படிங்கிற ஒரு தாட்ல இருக்கும்.

03:36

Speaker A

அதனால அந்த மனநிலைமையிலிருந்து நீங்க கொஞ்சம் வெளிய வரணும்.

03:40

Speaker A

நீங்க எல்லாம் வந்து நேரா திருப்பதிக்கு போயிறணும்.

03:42

Speaker A

திருப்பதி பெருமாள்.

03:43

Speaker A

ஏன்னா அங்க போனாலே உங்களுடைய மனநிலைமை கொஞ்சம் நல்லபடியா மாறுறதும்.

03:48

Speaker A

செழிப்பு செழிப்பு நோக்கி போகக்கூடிய ஒரு அமைப்பா அப்படிங்கறது.

03:52

Speaker A

நீங்க திருப்பதி பெருமாள் ஸ்தலத்துக்கு போயிட்டு வரப்போ ஒரு நாள் தங்கி இருந்து.

03:56

Speaker A

முடிஞ்சா அதாவது ஒரு அங்க ஒரு புதன்கிழமை தங்குங்க.

04:00

Speaker A

வியாழக்கிழமை வழிபாடு பண்ணுங்க.

04:02

Speaker A

வெள்ளிக்கிழமையும் இருந்து தாயாரையும் பார்த்துட்டு சனிக்கிழமை போல கிளம்பி வர மாதிரி.

04:07

Speaker A

அப்படி ஒரு ஒரு ட்ரிப் மாதிரி கொஞ்சம் ரிலாக்ஸ்டு ட்ரிப் மாதிரி இருக்கணும் அப்படிங்கறதுனால நான் அதை சொல்றேன்.

04:11

Speaker A

போயிட்டு வரப்போ நிச்சயம் உங்களுக்கு வாழ்க்கையில திருப்பங்கள் அப்படிங்கறது இருக்கும்.

04:15

Speaker A

இது வந்து குரு வக்ரம் அடைஞ்சிருக்கிறதுனால இந்த மனநிலைமை அப்படிங்கறது உங்களுக்கு இருக்கும்.

04:20

Speaker A

ஆனா இதுவே வந்து,

04:21

Speaker A

பெர்மனன்ட்டா நாங்க இப்படியே இருப்போமா அப்படின்னுலாம் கிடையாது.

04:24

Speaker A

அதாவது கிட்டத்தட்ட ஒரு பிப்ரவரி மாசம் வரைக்கும்னு வச்சுக்கோங்களேன்.

04:28

Speaker A

இந்த குரு இந்த குருவோட அதிசாரத்தோடைய தாக்கமும் சனி இருந்த தாக்கமும் கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா அதாவது இப்படியே ஸ்டாக்னட்டா இருக்காது.

04:37

Speaker A

கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா மாறி பிப்ரவரி 2026 அப்படிங்கிற வர சமயங்கள்ல எல்லாம்.

04:44

Speaker A

நீங்க நல்லா அடுத்த லெவலுக்கு டக்குன்னு ஒரு குரோத்துக்கு கொண்டு போற மாதிரி இருக்கும்.

04:47

Speaker A

ஏன்னா,

04:48

Speaker A

குருங்கிறவர் பெருக்கி பெருக்கி கொடுக்கக்கூடியவரா இருப்பார்.

04:51

Speaker A

அதனால இப்போதைக்கு,

04:53

Speaker A

குரு பின்தங்கி இருக்கிறார் அவ்வளவுதான்.

04:56

Speaker A

ஆனா போறப்போ கொடுத்துட்டுதான் போவார் அப்படிங்கறதை.

04:58

Speaker A

நம்பிக்கையோடு நீங்க இருக்கணும் உங்க வாழ்க்கை பிரகாசமாதான் இருக்கும்.

05:01

Speaker A

மிதுனத்திலிருந்து கடகத்துக்கு குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.

05:06

Speaker A

அதை எத,

05:07

Speaker A

நவம்பர் மாசம்,

05:10

Speaker A

பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க.

05:14

Speaker A

சனிக்கு பயந்துக்குவாங்க.

05:15

Speaker A

நிஜமால்மா யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா?

05:17

Speaker A

ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு.

05:20

Speaker A

எங்களை எல்லாம் காப்பாத்திருவாரு அப்படிங்கறதை விட,

05:23

Speaker A

கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பார்.

05:26

Speaker A

அப்படின்னு சொல்லப்படுது.

05:27

Speaker A

அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.

05:29

Speaker A

இங்க என்ன ஆகுது அப்படின்னா,

05:30

Speaker A

யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ,

05:34

Speaker A

கர்மத்திலிருந்துதான் தர்மத்துக்கு போகணும்ங்கிறதுதான் விதி.

05:38

Speaker A

அப்ப இந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும்?

05:40

Speaker A

சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி பயபக்தியோடு பண்ணி,

05:44

Speaker A

குமுதம் பக்தி நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.

05:48

Speaker A

இன்னைக்கு நம்ம பேசப்போற விஷயம் என்ன அப்படின்னா,

05:52

Speaker A

குரு அதிசாரப் பெயர்ச்சி.

05:55

Speaker A

அது என்ன குரு அதிசாரப் பெயர்ச்சி?

05:57

Speaker A

சனி ஏற்கனவே எங்களை வச்சு செஞ்சுகிட்டு இருக்கு.

06:01

Speaker A

குரு வந்து காப்பாத்த மாட்டாரா அப்படிங்கிற மாதிரி இருக்கும்.

06:03

Speaker A

அது வந்து குரு பெயர்ச்சிக்காக நம்ம காத்திருக்கிறது.

06:05

Speaker A

அக்டோபர் 18, 2025 மிதுனத்திலிருந்து கடகத்துக்கு.

06:10

Speaker A

குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.

06:13

Speaker A

அதை எத,

06:14

Speaker A

நவம்பர் மாசம்,

06:17

Speaker A

திரும்பி கடகத்திலிருந்து மிதுனத்துக்கே போறார்.

06:21

Speaker A

அதுதான் அதிசாரப் பெயர்ச்சி.

06:23

Speaker A

அதாவது ரிவர்ஸ்ல போறது அப்படின்னு சொல்றது.

06:26

Speaker A

குருன்னா யாரு?

06:27

Speaker A

குரு வந்து அவர் தேவ குரு இல்லையா அவரை வந்து பிரகஸ்பதி அப்படின்னு சொல்றது.

06:31

Speaker A

தேவர்களுக்கெல்லாம் அவர் குரு.

06:33

Speaker A

அப்ப குரு இருக்கிறப்ப என்னென்ன நல்ல விஷயங்கள் நம்ம வாழ்க்கையில நடக்கும்.

06:37

Speaker A

குரு வந்து பிள்ளைப்பேறாகட்டும், திருமணம், செல்வம், செழிப்பு.

06:43

Speaker A

அனைத்து நல்ல விஷயங்களுக்கும் குரு ரொம்ப மங்களமா பார்க்கப்படக்கூடிய ஒரு கிரகம் இல்லையா.

06:48

Speaker A

சனி கிட்ட இருந்து தப்பிக்க ஒரே வழி குரு அப்படின்னு இருந்தாலும்.

06:52

Speaker A

பெரும்பாலும் எல்லாரும் பயந்துக்கிறது யாருக்கு பயந்துக்குவாங்க.

06:55

Speaker A

சனிக்கு பயந்துக்குவாங்க.

06:56

Speaker A

நிஜமால்மா யாருக்கு பயந்துக்கணும் தெரியுமா?

06:58

Speaker A

குருவுக்குதான் பயந்துக்கணும்.

06:59

Speaker A

ஏன் அப்படின்னா,

07:00

Speaker A

குரு ஞானக்காரகன் அதாவது தர்மம்.

07:03

Speaker A

தர்மமா இருந்தா மட்டுமே குரு உதவி பண்ணுவார்.

07:06

Speaker A

இல்லை அப்படின்னா,

07:07

Speaker A

தர்மம் தலைகாக்கும்.

07:10

Speaker A

கிருஷ்ணர் எப்படி வந்து லேட்டா வந்தாலும் பாண்டவர்களுக்கு வந்து தர்மப்படி எப்படி யுத்தம் பண்ணனுமோ அதை சொல்லிக் கொடுத்து வெற்றி அடைய வச்சார் இல்லையா.

07:17

Speaker A

தர்மத்தின் பக்கமே கிருஷ்ணர் நிற்பார்.

07:21

Speaker A

தெய்வம் தர்மத்தின் பக்கமே நிற்கும் அப்படிங்கிறதுதான் வந்து குருவோட கொள்கையே.

07:25

Speaker A

அதனால ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு எங்களை எல்லாம் காப்பாத்திருவாரு அப்படிங்கறதை விட.

07:29

Speaker A

நம்ம எந்த அளவுக்கு நியாய தர்மத்தோடு இருக்கிறோம் அப்படிங்கறதுதான் வந்து குரு நம்மளுக்கு சொல்லக்கூடிய விஷயமா இருக்கு.

07:33

Speaker A

சரி இந்த குரு அதிசாரப் பெயர்ச்சின்னா என்ன?

07:37

Speaker A

இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க புரியுற மாதிரி சொல்லுங்க எங்களுக்கு அது புரியல.

07:42

Speaker A

பெயர்ச்சின்னா என்ன அதிசாரப் பெயர்ச்சின்னா என்ன அப்படின்னா,

07:45

Speaker A

நம்ம வந்து ஒரு வண்டியில போறோம்னு வச்சுக்கோங்க.

07:48

Speaker A

ஒரு பஸ்னு வச்சுக்கோங்க எல்லாமே பஸ்ல போயிருப்போம்.

07:50

Speaker A

இப்ப நம்ம பஸ்ல போயிட்டு அந்த பஸ் நிக்குது பக்கத்துல ஒரு ட்ரெயின் ஃபாஸ்ட்டா போறப்போ நம்ம எப்படி ஃபீல் பண்ணுவோம்?

07:56

Speaker A

பஸ் ரிவர்ஸ்ல போற மாதிரி ஃபீல் பண்ணுவோம்.

07:58

Speaker A

ஆனா பஸ் அங்கேயேதான் நிக்குது.

08:00

Speaker A

நம்ம பஸ் ரிவர்ஸ்ல போகல.

08:01

Speaker A

அந்த மாதிரி குரு என்ன ஆகுறாருன்னா குரு ஜெனரலாவே.

08:04

Speaker A

ஒரு வருடம் ஒரு ஒரு ராசி கட்டத்துல இருப்பார்.

08:09

Speaker A

மொத்த ராசி கட்டங்களையும் சுத்தி வரதுக்கு 12 வருடம் ஆகும் அப்படின்னு சொல்லுவாங்க.

08:12

Speaker A

அதாவது கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பார்.

08:15

Speaker A

அப்படின்னு சொல்லப்படுது.

08:16

Speaker A

அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.

08:18

Speaker A

இங்க என்ன ஆகுது அப்படின்னா,

08:19

Speaker A

குரு மிதுனத்திலிருந்து கடகத்துக்கு போயிட்டு இதே மாதிரி நான் எப்படி உங்களுக்கு ரிவர்ஸ் சொன்னேன்.

08:25

Speaker A

அந்த மாதிரி இப்ப ரிவர்ஸ் போறார் இப்ப.

08:26

Speaker A

அப்படியே அதாவது நம்மளுடைய பூமி சுழற்சி எப்படி காட்டுது அப்படின்னா இது வந்து வான்ல நடக்கக்கூடிய ஒரு அதிசயமாவே பார்க்கப்படுது.

08:32

Speaker A

அதாவது ஜெனரலா குரு பாட்டுக்கு முன்னோக்கிதான் போகணும்.

08:35

Speaker A

வக்ரம் அடையறார்.

08:40

Speaker A

வக்ரம்ங்கிறது ஒரு குடிகாரரை போல பிஹேவ் பண்ற மாதிரி ஒரு விஷயம்.

08:43

Speaker A

நிதானத்தை இழந்து.

08:44

Speaker A

அந்த அதாவது இந்த இடத்துல என்ன ஆகுறாருன்னா குரு கொஞ்சம் லேட் பண்ண போறார்.

08:49

Speaker A

என்னென்ன செழிப்புகள் எல்லாம் கொடுத்துட்டு இருந்தாரோ டக்குன்னு அப்படியே ஸ்டாப் ஆகுறார் அந்த இடத்துல.

08:54

Speaker A

அப்ப என்ன பண்ணுவார்?

08:55

Speaker A

குரு ஏன் ஸ்டாப் ஆகுறாரு?

08:56

Speaker A

குரு உங்களுக்கு கொஞ்ச நேரம் யோசிக்க வைப்பார்.

08:58

Speaker A

இப்ப நம்ம வந்து தெய்வ தரிசனங்களுக்கு போறோம்.

09:03

Speaker A

காத்திருந்து தரிசனம் பண்ணிட்டு வரோம் இல்லையா.

09:06

Speaker A

கொஞ்ச நேரம் நம்மளுக்கு அப்படியே டயர்ட் ஆகும் எப்படா கடவுளை பார்ப்போம்.

09:10

Speaker A

ஆனா பார்த்துருவோம்.

09:11

Speaker A

அதேதான் வந்து இந்த ரிவர்ஸ் போயிட்டு ரெட்ரோகேட் அப்படின்னு சொல்லுவாங்க.

09:14

Speaker A

குரு வந்து பின்னோக்கி போன மாதிரி தெரியும்.

09:20

Speaker A

திரும்பவும் அதே பழைய நிலைமைக்கு அவர் மறுபடியும் இந்த வருட கடைசியிலே திரும்பவும் வந்துருவார்.

09:24

Speaker A

கொஞ்ச நாளைக்கு தற்காலிகமா அந்த மாதிரி இருக்கக்கூடிய அந்த வான்ல அந்த வானியல் சாஸ்திரப்படி.

09:30

Speaker A

அந்த வானத்துல நடக்கக்கூடிய சில விஷயங்கள்னால அப்படி நம்மளுக்கு அந்த பூமியோட சுழற்சியால அப்படி தெரியுது.

09:34

Speaker A

அதாவது குரு வந்து கொஞ்சம் கிராஜுவலா அதாவது.

09:39

Speaker A

சாதாரணமாக எடுத்த உடனே ஒரு பெரிய வளர்ச்சி அப்படிங்கறதுலாம் குரு கொடுக்க மாட்டார்.

09:44

Speaker A

நிதானமாதான் கொடுப்பார்.

09:45

Speaker A

சனி வந்து லேட் பண்ணி லேட் பண்ணி புல் பேக் பண்ணி கொடுப்பார்.

09:50

Speaker A

ஆனா குரு வந்து குரோத்தை கொடுப்பார் உங்களுக்கு கண்ணுக்கு நேரா தெரியும்.

09:55

Speaker A

ஆனா உங்களுக்கு தெரியும் அந்த உழைப்பை போடணும் எனக்கு கண்ணு முன்னாடி ஒரு செல்வம் வரப்போகுதுங்கறதெல்லாம் தெரியும் இல்லையா.

10:00

Speaker A

அது இன்னும் நிதானிச்சு கொடுக்கப்போறார் அப்படிங்கறதுதான் வந்து அதிசாரப் பெயர்ச்சி அப்படிங்கறது அர்த்தம்.

10:03

Speaker A

இப்போ என்னென்ன ராசிகளுக்கு இந்த அதிசாரப் பெயர்ச்சி.

10:07

Speaker A

என்னென்ன மாதிரியான நல்லதை எப்படி கொடுக்கப்போறாரு.

10:11

Speaker A

என்ன பாடத்தை கற்பிக்க வராரு அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும்.

10:14

Speaker A

ஏன்னா குரு குரு அப்படினாலே பாடம் கற்பிக்கதானே வராரு.

10:18

Speaker A

அதுவும் இந்த அதிசாரப் பெயர்ச்சி எப்படி தெரியுமா?

10:20

Speaker A

இன் ஒரு கிளாஸ்ல இருந்து புதுசா இன்னொரு கிளாஸ்க்கு ஒரு வாத்தியார் போறப்ப அந்த வாத்தியார் எப்படி நம்மகிட்ட பிஹேவ் பண்ண போறார்னே நம்மளுக்கு தெரியாது.

10:28

Speaker A

அந்த மாதிரிதான் இப்போ இந்த அதிசாரப் பெயர்ச்சியும் நம்மளுக்கு உணர்த்தப்போகக்கூடிய விஷயமா இருக்கும்.

10:32

Speaker A

சரி இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி யாருக்கெல்லாம் நல்லது பண்ண போறார் அப்படின்னா,

10:36

Speaker A

கடகம், ரிஷபம், மீனம்.

10:40

Speaker A

இந்த மூணு ராசிகளுக்குமே வந்து குரு அதிசாரப் பெயர்ச்சி நிச்சயம் நல்ல விஷயங்கள்தான் கொடுக்கும்.

10:44

Speaker A

நான் சொன்ன சில விஷயங்கள் இருக்கு இல்லையா கொஞ்சம் கவனமா இருந்துக்கணும்னா.

10:49

Speaker A

அதுல கவனமா இருந்துட்டீங்கன்னா உங்களுக்கு ஜாக்பாட்டே அடிக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது இருக்கு.

10:53

Speaker A

யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ,

10:57

Speaker A

மிதுனம், தனுசு, மகரம் கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது நல்லது இந்த அதிசாரப் பெயர்ச்சியில.

11:02

Speaker A

ஏன்னா குரு கொஞ்சம் பின்தங்கி இருக்கிறதுனால எங்கேயாவது ஒரு இடத்துல அவமானங்கள் சந்திக்கக்கூடிய.

11:07

Speaker A

ஒரு தருணத்தை அப்படிங்கறது உருவாகிவிடும்.

11:13

Speaker A

குரு உருவாக்க மாட்டார்.

11:14

Speaker A

குரு பின்தங்கி இருக்கிறதுனால அப்படி அமையக்கூடிய ஒரு தருணம் இருக்கிறதுனால கவனம்.

11:20

Speaker A

மிக கவனம் அப்படின்னே நான் இந்த மூணு ராசிகளுக்கும் சொல்லுவேன்.

11:26

Speaker A

ஒன்னும் இல்ல நீங்க எல்லாம் பிரச்சனை இல்லை உங்களை எல்லாம் குரு அதிசாரப் பெயர்ச்சி பெருசா ஒன்னும் தாக்கப் போறது இல்லை.

11:32

Speaker A

அப்படிங்கிறவங்க எல்லாம் யாருன்னு பார்த்தீங்க அப்படின்னா,

11:35

Speaker A

மேஷம், கன்னி, துலாம், விருச்சிகம், கும்பம்.

11:40

Speaker A

உங்களுக்கெல்லாம் வந்து ஒரு மத்தியமமான ஒரு பலன் அப்படிங்கறதுதான் வந்து இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி அப்படிங்கறது சொல்லுது.

11:45

Speaker A

பொதுவாவே குரு அப்படிங்கிறவர் எதுக்கு வராரு அப்படின்னாலே.

11:49

Speaker A

நம்ம செஞ்ச தவறுகளிலிருந்து சுட்டிக்காட்டி அதை சரி செய்யறதுக்குதான்.

11:52

Speaker A

அப்ப இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியை பார்த்து நம்ம எதுக்கு பயந்துக்கணும்னா தர்மத்துக்குதான் பயந்துக்கணும்.

11:56

Speaker A

சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி பயபக்தியோடு பண்ணி.

12:00

Speaker A

இனிமேல் அந்த தவறை நான் செய்ய மாட்டேன்.

12:05

Speaker A

திரும்பி திரும்பி அதே பேட்டர்ன் ரிப்பீட் அந்த ரெபெட்டிஷன்குள்ள நான் போக மாட்டேன் அப்படிங்கிற.

12:09

Speaker A

குருக்கெல்லாம் வந்து வாக்கு கொடுத்துரணும் நம்ம.

12:11

Speaker A

குரு வழிபாடு பண்றோம் அப்படினாலே அவர் வந்து நம்மளுக்கு டீச்சர்தானே.

12:15

Speaker A

அந்த டீச்சர் என்ன சொல்லுவாங்க ஓகே இனிமேல் இந்த தவறு பண்ணக்கூடாது.

12:20

Speaker A

இனிமேல் அந்த தவறு பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு திரும்பவும் நம்ம அந்த தவறு பண்றோம்னா கர்மத்தின் பாதையில போயிருவோம்.

12:25

Speaker A

இது எப்படின்னா கர்மத்திலிருந்துதான் தர்மத்துக்கு போகணும்ங்கிறதுதான் விதி.

12:27

Speaker A

அப்ப இந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும்?

12:30

Speaker A

செஞ்ச தவறுகளை திரும்பவும் செய்யாம இருக்கணும்.

12:33

Speaker A

அதேபோல அந்த கம்ஃபர்ட் ஜோன்லயே இருக்கிறோம் அப்படின்னா ஒரு முயற்சி பண்ணாம இருக்கிறோம் அப்படின்னா.

12:38

Speaker A

தர்மத்தின் பாதையில நம்மளால போக முடியாது.

12:40

Speaker A

குருங்கிறவரு ஒரு முயற்சி பாதையை காட்டக்கூடியவர்.

12:43

Speaker A

என்னங்கிறது ரிஸ்க் எடுத்து பார்க்கிறதுல தப்பு இல்லை.

12:47

Speaker A

ஆனா ரொம்ப நிதானமா அந்த ஞானத்தோடு நம்ம அந்த தெய்வத்தை நம்பி இந்த யூனிவர்ஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்பி நம்ம செய்யறப்போ.

12:54

Speaker A

குரு காட்டுற வழி அப்படிங்கறது சிறந்த வழியா இருக்கும்.

12:58

Speaker A

எல்லாருடைய ஜாதகத்திலுமே வந்து குரு நல்லா இருக்கிறதுங்கிறது ரொம்ப நல்லது.

13:02

Speaker A

சனிக்கு பயந்துக்கிறதை விட குருவுக்குதான் பயந்துக்கணும்.

13:05

Speaker A

ஏன்னா சனியாவது தண்டனைகள் கொடுத்துக்கிட்டே இருந்து இருந்து திரும்ப திரும்ப சரி பண்ணுங்க சரி பண்ணுங்கங்கிற மாதிரி இருக்கும்.

13:11

Speaker A

ஆனா குரு ஒருத்தங்களுக்கு கெட்டுருச்சு அப்படின்னா மீள்றதுங்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை.

13:16

Speaker A

அப்போ இந்த குரு தட்சணை அப்படிங்கிற ஒரு விஷயம் எல்லாம் இருக்கு இல்லையா.

13:20

Speaker A

குரு தட்சணை எல்லாம் செழிப்பா குருவுக்கு வந்து கொடுத்து வழிபாடு பண்ணிட்டு வராது.

13:24

Speaker A

அந்த குரு தட்சணையில பேரம் பேசுறதோ அந்த குரு தட்சணையில வந்து.

13:30

Speaker A

இது பண்ணா போதுமா அப்படிங்கிற மாதிரி அந்த வாக்குவாதங்கள் இருக்கிறதோ சந்தேகமோ.

13:35

Speaker A

குருனாலே சந்தேகமே படவே கூடாது.

13:37

Speaker A

குருவை நம்ம சந்தேகப்பட்டுட்டோம் அப்படினாலே ஏதோ ஒரு வகையில நம்மளுக்கு குரு தோஷமோ.

13:42

Speaker A

குரு பலம் கம்மியா இருக்குங்கிறது அர்த்தம்.

13:44

Speaker A

அது குரு தோஷமாவே பார்க்கப்படுது.

13:45

Speaker A

அதாவது குருமார்களுடைய வழிப்படி போங்கன்னு சொல்றது இல்லை.

13:48

Speaker A

குருமார்கள் சொல்றதை கேட்டு அந்த பாதையை நம்ம பின்பற்றனும் அப்படினாலே.

13:54

Speaker A

குருவோட அருள் செழிப்பாவே நமக்கு இருக்கும் அப்படின்னு சொல்லி நான் முடிச்சுக்கிறேன்.

Topics: மிதுன ராசி குரு அதிசார பெயர்ச்சி சனி கிரகம் மனக்குழப்பம் திருப்பதி பெருமாள் தொழில் தடைகள் பரிகாரம் தமிழ் ஜோதிடம் குரு வக்ரம் ஆஸ்திரோலஜி

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11912)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11912)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/mithunam-mind-confusion-astrologer-jeevitha/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
