**மேஷம் - மிகப்பெரிய உச்சத்தை தொட போறீங்க  | Mesham | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/mesham-reaching-greatest-peak-jeevitha-sureshkumar/

மேஷம் ராசிக்காரர்களின் கடன் பிரச்சனைகள் மற்றும் அதிலிருந்து மீள வழிகள், தெய்வ வழிபாடு மற்றும் வாழ்க்கை ஆலோசனைகள்.

## Key Takeaways

- மேஷம் ராசிக்காரர்கள் கடன் பிரச்சனைகளுக்கு ஆழமான மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
- ஆன்மீக வழிபாடு மற்றும் தியானம் கடன் பிரச்சனைகளில் உதவும்.
- சமூக தொடர்புகள் மற்றும் பேச்சுத்திறன் மேஷ ராசிக்காரர்களுக்கு முக்கியம்.
- நிதானமான திட்டமிடல் மற்றும் மன அமைதி கடன் பிரச்சனைகளை சமாளிக்க உதவும்.
- கடன் வாங்கும் பழக்கத்தை மாற்றி, புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

## What the video covers

- மேஷம் ராசிக்காரர்களின் கடன் வாங்கும் பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள்.
- விஷ்ணு மற்றும் பெருமாள் வழிபாடு மூலம் கடன் பிரச்சனைகளில் இருந்து மீள வழிகள்.
- மேஷ ராசிக்காரர்களின் துணிச்சல் மற்றும் தொழில் தொடங்கும் திறன்.
- ஒரு மேஷ ராசி ஆண் கிளையன்ட் வாழ்க்கை மற்றும் கடன் பிரச்சனை அனுபவம்.
- கடன் வாங்கும் போது ஏற்படும் மன அழுத்தம் மற்றும் குடும்ப உறவுகளில் பாதிப்பு.
- சிவன் கோயில்கள் மற்றும் ஆன்மீக வழிபாடுகள் மூலம் மன அமைதி பெறுதல்.
- மேஷ ராசிக்காரர்களின் பேச்சுத்திறன் மற்றும் சமூக தொடர்புகளின் முக்கியத்துவம்.
- கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நிதானம் மற்றும் திட்டமிடல் அவசியம்.
- புத்திசாலித்தனமான செயல்கள் மற்றும் கடன் மேலாண்மை முறைகள்.
- கடன் பிரச்சனைகளில் இருந்து மீள வாழ்க்கை மாற்றம் மற்றும் ஆன்மீக வளர்ச்சி.

## Full Transcript — Download SRT & Markdown

00:02

Speaker A

சனிக்கிழமை நீங்க கடன் வாங்கிடுறீங்கன்னு வச்சுக்கோங்க.

00:05

Speaker A

சனி பெருக்கிட்டே தான் போகும்.

00:08

Speaker A

அப்போ மேஷ ராசிக்காரங்களுடைய பிரச்சனை என்ன அப்படிங்கறது தெரியுதா? ரொம்ப அகலக்கால் வைக்கக்கூடிய ஒரு தாட் ப்ராசஸ்.

00:16

Speaker A

விஷ்ணு வழிபாடு, பெருமாள் வழிபாடு அப்படிங்கறத வந்து இவங்க ஹைலி போக்கஸ் பண்ணுவாங்க.

00:22

Speaker A

ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.

00:27

Speaker A

இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்ன அப்படின்னா வாழ்க்கையில யாருக்கு தான் கடன் இல்லை.

00:32

Speaker A

இல்லையா எல்லாத்துக்கும் பணம் சம்பாதிக்கணும் அட் தி சேம் டைம் எப்படி சம்பாதிக்கிறது?

00:36

Speaker A

இப்ப இருக்க காலகட்டங்கள்ல கடன் வாங்காம எதுவுமே எங்களால பண்ண முடியலையே அப்படிங்கிற கேள்வி அம்பானிக்கு கூட உண்டு எல்லாத்துக்குமே உண்டு இந்த கேள்வி.

00:43

Speaker A

அப்படி இருக்கப்போ இந்த 12 ராசிகளுக்கும் அவங்க கடந்து வரக்கூடிய அந்த வாழ்க்கை பாதைன்னு வரப்போ அட் எனி காஸ்ட் ஏதோ ஒரு சிச்சுவேஷன்ல கடன் வாங்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது வந்துரும்.

00:54

Speaker A

அப்படி பார்க்கிறப்போ நான் ஜோதிடம் பார்த்ததுல இருந்து என்னுடைய அனுபவத்துல ஒவ்வொரு ராசிக்காரங்க என்னென்ன மாதிரியான ஒரு விஷயத்துக்கு காரணமா அவங்க வந்து கடன் வாங்கினாங்க.

01:02

Speaker A

எப்படி அவங்க அதிலிருந்து மீண்டாங்க அப்படிங்கறத வச்சு நான் இந்த 12 ராசிகளுக்கு எப்படி அப்படிங்கறத உங்களுக்கு சொல்றேன்.

01:08

Speaker A

என்ன தெய்வத்தை வழிபாடு பண்ணனும் எப்படி அந்த கடன் கடன்ங்கிற விஷயத்திலிருந்து எப்படி வெளிய வரணும் அப்படிங்கறத பத்தி நம்ம இங்க பார்ப்போம்.

01:58

Speaker A

மேஷ ராசிக்காரங்களுக்கு ஜெனரலாவே எல்லாமே பிரம்மாண்டமா பண்ணி பார்க்கணும் அப்படிங்கிற ஆசை ஆர்வம் ரொம்ப அதிகம்.

02:06

Speaker A

அப்போ இவங்களுக்கு வந்து அந்த இளங்கன்று பயமறியாது அப்படிங்கறதுதான் மேஷ ராசி.

02:11

Speaker A

அந்த துணிச்சல் அப்படிங்கறது வந்து கையில எதுவுமே இல்லாம வித் ஜீரோ வேல்யூவோட ஒரு பிசினஸ் ஸ்டார்ட் பண்ணுங்க அப்படின்னா மேஷ ராசியால அதை செய்ய முடியும்.

02:21

Speaker A

போகப்போக பார்த்துக்கலாம் அப்படின்னு அந்த டெஸ்டினேஷன் என்னங்கறது அவங்க தாட் ப்ராசஸ்ல இருந்தாலும்.

02:27

Speaker A

அது எப்படி நடக்கப்போகுது அப்படிங்கறதையும் அவங்களுக்கு தெரியாது.

02:30

Speaker A

இப்போ எனக்கு ஒரு மேஷ ராசியில ஒரு கிளைன்ட் இருந்தாங்க இவங்க இவங்களுக்கு நான் என்ன சொல்யூஷன் கொடுத்தேன்.

02:36

Speaker A

அது உங்களுக்கும் எப்படி பொருந்தும் அப்படிங்கறத பார்க்கலாம் ஏன்னா பொதுவாவே ஒரு மேஷ ராசி ஆண் ஒரு மேஷ ராசி பெண் அப்படின்னு நம்ம எடுத்துக்கிறோம் அப்படின்னா.

02:42

Speaker A

இவங்க ரெண்டு பேத்தோடைய ஒரு லைஃப் ஸ்டைல் பேட்டர்ன் அப்படிங்கறதே கொஞ்சம் டிஃபர் ஆகும்.

02:46

Speaker A

இப்போ ஒரு ஆண் ஒரு மேஷ ராசியிலிருந்து வந்தார்.

02:50

Speaker A

அவர் பார்த்தீங்கன்னா ரொம்ப ஹைலி ஃபேமிலி ஓரியன்டடான ஒரு ஆள்.

02:55

Speaker A

ஆனா பயங்கரமான ஒரு வெகிலி.

02:57

Speaker A

அவர் வந்து அவருடைய ஃபேமிலி மெம்பர்ஸையே நம்பி இருக்கக்கூடிய ஒரு அமைப்பு.

03:04

Speaker A

அதாவது அவங்க அக்காவை ரொம்ப நம்புவாரு எங்க அவங்க ஃபேமிலில யார் எல்லாம் வெல் டு டூவா இருக்காங்களோ.

03:12

Speaker A

தன்னை அப்படி கம்பேர் பண்ணிக்குவாரு.

03:14

Speaker A

ஆனா இவருடைய லெவல் அப்படின்னு பார்க்கிறீங்கன்னு வச்சுக்கோங்களேன் அவர் ஸ்கூல் கூட கம்ப்ளீட் பண்ணல.

03:20

Speaker A

ஓகே படிப்பு ஒரு பக்கமா இருந்தாலும் தொழில்ல அவர் எப்படி இருந்தாரு அப்படின்னு பார்க்கிறப்ப.

03:24

Speaker A

தொழில்லையும் பார்த்தீங்கன்னா அவங்க அப்பாவுடைய பிசினஸ் வந்து கொஞ்சம் ஃபாலோ பண்ணிட்டு இருந்தார்.

03:30

Speaker A

அவங்க அப்பா வந்து மெஷினரி சம்பந்தப்பட்ட சில பிசினஸ் அப்படிங்கிற மாதிரி அந்த ஃபேமிலில பார்த்துட்டு இருந்தாங்க.

03:35

Speaker A

இந்த மெஷினரி பிசினஸ் நான் பண்றேன் அப்படின்னு சொல்லிட்டு அவர் என்ன பண்ணாரு அப்படின்னா முழுசா தொழில் கத்துக்கிட்டாரா அப்படின்னா அது அவருக்கே வெளிச்சம்.

03:42

Speaker A

அவர் என்ன பண்ணுவாரு எல்லா மெஷினரிஸும் பார்த்து வச்சிட்டு பெரிய பெரிய கம்பெனிஸ்ட்ட போயிட்டு டீல் பேசுற வேலை எல்லாம் அவருக்கு இருக்கும்.

03:50

Speaker A

இந்த மெஷினுடைய காஸ்ட் இந்த மாதிரி அப்படின்னு.

03:53

Speaker A

ஆனா அவருடைய பாக்கெட்ல பார்த்தீங்கன்னா ₹10 தான் இருக்கும்.

03:57

Speaker A

அந்த ₹10 வச்சிட்டு அவர் பேசுறதெல்லாம் கோடியிலேயே தான் இருக்கும்.

04:00

Speaker A

இந்த டைம்ல எப்படி இருக்கும்னா இவர் ஒவ்வொருத்தங்களையும் கம்பேர் பண்ணிட்டே இருக்கிறாரு இல்லையா.

04:05

Speaker A

அதாவது கம்பேர் இன் தி சென்ஸ் லாபியிங் மாதிரி பண்ணுவாரு பெரிய ஆட்களை கூட்டிட்டு வந்து இந்த மெஷினரி வாங்க வைக்கிறதுக்கு அப்படிங்கிற.

04:13

Speaker A

இந்த ஆட்களை எல்லாம் காட்டுறப்ப இவர் என்ன பண்ணுவாரு அப்படின்னா கடன் வாங்க ஆரம்பிச்சார்.

04:20

Speaker A

பெரிய பெரிய கடன் சாதாரண கடன் எல்லாம் இல்லை.

04:23

Speaker A

கேட்கிறவங்களுக்கு இவர்கிட்ட அந்த பிசினஸ் பண்ண வரவங்களுக்கு எப்படி இருக்கும்னா ஏதோ பயங்கரமா நாலேட்ஜ் நாலேட்ஜான ஒரு ஆளா இருப்பாரு போல அப்படின்னு நம்பி வருவாங்க.

04:31

Speaker A

இவர் என்ன பண்ணுவாரு அந்த மெஷினரியை சேல் பண்ணனும் அப்படிங்கறதுக்காக இன்னொரு இடத்திலிருந்து கடன் வாங்குவாரு.

04:40

Speaker A

எப்படின்னா அந்த மெஷினை கம்மி விலைக்கு வாங்கி இந்த பக்கம் பெரிய விலைக்கு வித்துரலாம் அப்படிங்கிற ஒரு மைண்ட்செட்ல இவர் என்ன பண்ணுவாரு.

04:48

Speaker A

அதோடைய விளைவுகள் என்னன்னு அவர் யோசிக்கவே இல்லை.

04:52

Speaker A

அவர் என்ன பண்ணுவாரு ஒரு ₹4 லட்சம் ₹5 லட்சம் சாயங்காலம் கொடுத்துறேன் காலையில கொடுத்துறேன் இப்படி எல்லாம் சொல்லி அவர் வந்து வாங்கி வாங்கி வாங்கி.

05:01

Speaker A

ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல அந்த பிசினஸே நடக்கவே இல்லை.

05:05

Speaker A

ஏன் அப்படின்னா மைண்ட் வந்து மல்டி டாஸ்கிங் இருக்கக்கூடிய ஒரு மைண்ட்.

05:08

Speaker A

அப்போ மேஷ ராசிக்காரங்களுடைய பிரச்சனை என்ன அப்படிங்கறது தெரியுதா?

05:14

Speaker A

ரொம்ப அகலக்கால் வைக்கக்கூடிய ஒரு தாட் ப்ராசஸ் முக்கியமா பெரும்பாலான ஆண்களுக்கு இது வந்துருது.

05:20

Speaker A

அதாவது பிசினஸ் பண்ணனும் அப்படிங்கறப்போ அந்த ஒரு தெளிவு இல்லாம அந்த ஒரு மெச்சூரிட்டி லெவல் இல்லாம வரப்போ.

05:27

Speaker A

இன்னுமே கிட்டத்தட்ட ஒரு 15 வருஷமா அவர் அதே பேட்டர்னையே ஃபாலோ பண்ணிட்டே இருந்திருக்கிறார்.

05:34

Speaker A

பேட்டர்னை இதே பேட்டர்ன் ஃபாலோ பண்ணி ஃபாலோ பண்ணி பயங்கரமா கடன் பட்டு.

05:40

Speaker A

ஃபேமிலி எல்லாம் கிட்டத்தட்ட அவரை மதிக்காமயே போயிட்டாங்க.

05:45

Speaker A

ஆனா அந்த ஹெல்ப்பிங் டென்டன்சி மட்டும் அவர்கிட்ட போகவே இல்லை.

05:48

Speaker A

இந்த தருணத்துலதான் அவர் வந்து என்கிட்ட ஜோதிடம் பார்க்க வந்தார்.

05:51

Speaker A

இந்த மாதிரி இவ்வளவு கஷ்டமா நான் இருக்கேன் இந்த மாதிரி ஒரு கடன் பிரச்சனையிலிருந்து நான் எப்படி வெளிய வரது அப்படின்னு கேட்கிறப்போ.

05:57

Speaker A

திரும்பவும் அவர் எப்படி கேட்கிறார்ன்னா இன்னும் வேற என்னெல்லாம் நான் மெஷினரிஸ் வாங்கலாம்.

06:03

Speaker A

இன்னும் நான் வேற எங்கெல்லாம் நான் கடன் வாங்கலாம் அப்படின்னு கேட்கிறாரே தவிர்த்து இந்த கடன் எல்லாம் நான் எப்படி அடைக்கிறதுன்னு அவருக்கு கேட்க தெரியல.

06:10

Speaker A

அப்படி இருக்கப்போ அப்ப அவருக்கு நான் என்ன சொல்றேன் அப்படின்னா.

06:14

Speaker A

உங்களுக்கு வந்து நல்ல ஒரு பேச்சுத்திறமை இருக்கு.

06:17

Speaker A

அதேபோல முதல்ல சிவன் ஸ்தலங்களுக்கு முதல் போங்க.

06:23

Speaker A

சிவன் ஸ்தலங்கள்ல போய் முதல் அமைதியா உட்கார்ந்து தியான முறைப்படி முதல் தியானம் பண்ற மாதிரி நீங்க உட்காருங்க.

06:30

Speaker A

பழைய சிவன் கோயிலுக்கு எல்லாம் போய் நந்தீஸ்வரர் கிட்ட போய் உட்கார்ந்துருங்க அப்படின்னு சொன்னேன்.

06:34

Speaker A

திருவண்ணாமலைக்கு போயிட்டு வாங்க திருவண்ணாமலையில போய் உட்கார்ந்து அமைதியா சிந்திங்க.

06:40

Speaker A

உங்களை சுத்தி என்ன நடக்குது அப்படிங்கறத நீங்க பாருங்க அப்படிங்கறப்போ.

06:42

Speaker A

அவருக்கு அந்த நிதானம் ஃபர்ஸ்ட் வரல.

06:44

Speaker A

அவர் என்ன சொல்றாரு நான் இவ்வளவு பணம் இதுல இருக்கேன்.

06:49

Speaker A

யார் எனக்கு கடன் கொடுப்பாங்க யார்கிட்ட போனா எனக்கு கடன் கிடைக்கும் மட்டும் சொல்லுங்க.

06:54

Speaker A

யாரையாவது அவர் நம்பிக்கிட்டே இருக்கிறார்.

06:58

Speaker A

நம்பறாரே தவிர்த்து தன்னை நம்ப மாட்டேங்கிறார்.

07:01

Speaker A

இப்ப நான் என்ன சொல்றேன் முதல் நீங்க நிதானத்துக்கு வரணும்.

07:03

Speaker A

உங்களால அட் எ டைம்ல எத்தனையோ லட்சங்கள் கடன் ஆயிருச்சு அவருக்கு.

07:08

Speaker A

இன்னும் சொல்லப்போனால் ஸ்டில் அவர் பாக்கெட்ல பணமே இல்லை.

07:11

Speaker A

அப்படிங்கிறப்போ எப்படி அவரால கடனை அடைக்க முடியும்?

07:15

Speaker A

இன்னும் கடன் வாங்குறதுதான் மெத்தட் தான் அவர் யோசிக்கிறார்.

07:18

Speaker A

அப்ப நான் என்ன சொல்றேன் அவருக்கு எவ்வளவு காண்டாக்ட்ஸ் நீங்க கெயின் பண்ணிருந்தீங்க.

07:21

Speaker A

இத்தனை காண்டாக்ட்ஸ வச்சு எவ்வளவு பெரிய ஒரு லாபியிங் பிசினஸ் வாயிலேயே பேசி உங்களால செய்ய முடியும்.

07:27

Speaker A

மேஷ ராசிக்காரங்களுக்கு வந்து பேச்சுத்திறமை ரொம்ப அதிகம்.

07:30

Speaker A

இவங்களுக்கு வந்து கவர்மெண்ட்டோட காண்டாக்ட்ஸ் ஈஸியா எல்லா கேட்டகிரி ஆட்கள கூடியும் பழகுற காண்டாக்ட்ஸ்.

07:38

Speaker A

அதாவது பெரிய ஆளு சின்ன ஆளுன்னு இல்லாம எல்லாத்துக்கிட்டயும் ஈக்குவலா ஒரு பழகக்கூடிய ஒரு ஒரு பழக்க வழக்கத்திலேயே இவங்க இருப்பாங்க.

07:43

Speaker A

அந்த அளவுக்கு ஒரு க்ளோஸ்னஸ் டக்குன்னு பேசிற ஒரு அமைப்பு.

07:46

Speaker A

அவர்கிட்ட இருந்தது ஒரு கம்யூனிகேஷன் ஸ்கில் அப்படின்னு இருந்தப்போ.

07:50

Speaker A

அவர்கிட்ட நான் என்ன சொல்றேன் அப்படின்னா.

07:54

Speaker A

இந்த மாதிரி சிவன் கோயில்ல போய் வேண்டுங்க.

07:56

Speaker A

அதே மாதிரி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு போயிட்டு மதுரைக்கு போங்க மதுரைக்கு போய் மீனாட்சி அம்மன் கோயில்ல இருந்து.

08:03

Speaker A

நல்ல புத்தி வரணும் அப்படிங்கறத முதல் நீங்க வந்து வேண்டுதல் பண்ணனும்.

08:07

Speaker A

எனக்கு புத்திக்கு என்னங்க குறைச்சல் எனக்கு வந்து இவ்வளவு பிளான்ஸ் இருக்கு.

08:10

Speaker A

பிளானிங் யார் வேணாலும் பண்ணலாம் டெசிஷன் எப்படி எடுக்கிறோம்.

08:14

Speaker A

அது எப்படி நம்ம விவரமா கொண்டு போறோம்னு ஒன்னு இருக்கு இல்லையா.

08:17

Speaker A

புதன் அப்படிங்கறது சரியா இருக்கணும்.

08:20

Speaker A

நிதானம் அப்படிங்கறது சரியா இருக்கணும் மேஷத்துக்கு.

08:22

Speaker A

இப்ப அவர் என்ன பண்ணிட்டு இருக்கிறாரு அப்படின்னா இத்தனை காண்டாக்ட்ஸ் எல்லாம் இருந்தது இல்லையா.

08:27

Speaker A

இப்ப இவங்க ரெண்டு பேரையுமே வெறும் பேச்சிலேயே கனெக்ட் பண்ணி கனெக்ட் பண்ணி.

08:33

Speaker A

அவங்க பெரிய பெரிய ஆட்கள் அவங்க பிசினஸ் பண்ணிக்குவாங்க.

08:37

Speaker A

நீங்க கமிஷன் பிசினஸ்குள்ள போய் கொஞ்ச கொஞ்சமா அதாவது கடன் உங்களால அடைக்க முடியாது.

08:43

Speaker A

ஆனா கொஞ்ச கொஞ்சமா செட்டில் ஆக முடியும்.

08:47

Speaker A

பாக்கெட்ல பணம் அப்படிங்கிற ஒரு விஷயத்தை வந்து உங்களால பார்க்க முடியும்.

08:50

Speaker A

அப்படின்னு இவர் ஒரு கேட்டகிரி இவர் வந்து மேஷத்தில் இருக்க ஒரு மேல்.

08:53

Speaker A

இதே இது ஒரு ஃபீமேல்.

08:57

Speaker A

ஒரு ஃபீமேல் ஒருத்தங்க இருக்காங்க.

09:00

Speaker A

அவங்க வந்து பார்த்தீங்கன்னா அவங்களும் மேஷ ராசி.

09:04

Speaker A

பரணி நட்சத்திரம் அவங்க.

09:06

Speaker A

அவங்களுடைய வாழ்க்கை அப்படின்னு பார்க்கிறப்போ சின்ன வயதிலேயே அதாவது ஒரு 16 17 வயதிலேயே அவங்க வந்து பிசினஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்துக்குள்ள வந்துட்டாங்க.

09:13

Speaker A

தானே சொந்தமா தனக்கு தெரிஞ்ச ஒரு ஆயில் எப்படி பண்ணனும் அப்படிங்கிற ஒரு ஆயில் பிசினஸ்ல ஒன்னு ஸ்டார்ட் பண்ணாங்க.

09:20

Speaker A

இப்போ அவங்களுடைய ப்ராப்பர்ட்டி மதிப்பு அப்படின்னு பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்களேன் ₹200 கோடி ரூபாய்.

09:26

Speaker A

அதாவது ஒரு 25 வருஷமா ஒரு உழைப்பு.

09:30

Speaker A

ஆனா அவங்களும் கடன் வாங்கினாங்க.

09:34

Speaker A

கடன் வாங்காம எந்த வேலையுமே அவங்களுக்கு நடக்கல.

09:37

Speaker A

எப்படி அவங்க ஆரம்பிச்சாங்கன்னா ஒரு ₹900.

09:41

Speaker A

அதாவது 1990ன்னு வச்சுக்குவோமே அந்த டைம்ல ₹900ங்கிறது பெரிய அமௌன்ட் இல்லையா.

09:48

Speaker A

₹900 900 வாங்கிட்டு அதாவது ஒரு ஆள்கிட்ட ₹900 வாங்க முடியல.

09:55

Speaker A

அங்கங்க அங்கங்க எல்லாத்துக்கிட்டயும் ஒரு ₹900 வாங்கிட்டு வந்து அந்த எண்ணெய் காய்ச்சறதுக்கான மூலிகைகள் அந்த பாத்திரம்.

10:02

Speaker A

இது எல்லாம் வாங்கிட்டு வந்து அவங்களும் அவங்களுடைய ஏழு ஏழு வயசு எட்டு வயசு பையனும்.

10:06

Speaker A

இவங்க ரெண்டு பேர் மட்டும்தான் அந்த வேலையை ஆரம்பிக்கிறாங்க.

10:10

Speaker A

இவங்க ரெண்டு பேர் இந்த வேலையை கை காய்ச்சற அளவுக்கு அதாவது கை காப்பு காய்ச்சுன்னு சொல்லுவாங்கல்ல.

10:16

Speaker A

அந்த அளவுக்கு காப்பு காய்ச்சி அவங்க அந்த வேலையை பண்றாங்க.

10:20

Speaker A

ரொம்ப சிரமப்பட்டுதான் அவங்க அந்த ஆயில் பாட்டிலை வந்து விக்க போறாங்க.

10:25

Speaker A

அப்ப அவங்களுடைய கணவர் வந்து அவங்களை ரொம்ப இல்ட்ரீட் பண்றாரு ரொம்ப மட்டப்படுத்துறாரு.

10:29

Speaker A

இந்த எண்ணெய் எல்லாம் யார் இந்த காலத்துல வாங்குவா அப்படின்னு கேட்கிறாங்க.

10:33

Speaker A

அதாவது 90கள்ல நான் சொல்றேன்.

10:35

Speaker A

அந்த டைம்ல இவங்க ஒவ்வொரு வீட்டு கதவா தட்டி தட்டி தட்டி அந்த எண்ணெயை மார்க்கெட்டிங் பண்ண ஆரம்பிக்கிறாங்க.

10:42

Speaker A

எப்படியோ ஒரு மாசம் கூட ஆகல அந்த ₹900யை அவங்க சேர்த்துட்டாங்க.

10:48

Speaker A

அந்த அளவுக்கு அவங்க ஹார்ட் ஒர்க்.

10:50

Speaker A

இம்மீடியட்டா என்ன பண்றாங்கன்னா ₹900யும் போய் கொடுத்து அவங்க கடன் அடைக்கல.

10:55

Speaker A

அவங்க என்ன பண்றாங்க பிச்சி பிச்சி எல்லாத்துக்கும் கொஞ்சம் வட்டியோட சேர்த்து அவங்க கொடுக்குறாங்க யார் எல்லாம் அவங்களுக்கு பணம் கொடுத்தாங்களோ.

11:03

Speaker A

பாதியா பிரிச்சு கொடுத்து அவங்கள்ட்ட போய் என்ன சொல்றாங்கன்னா இந்த ஆயிலை நான் பிசினஸ் பண்ணிட்டு இருக்கேன்.

11:10

Speaker A

நீங்களும் இந்த ஆயிலை வித்துருங்க உங்களுக்கும் இதுல லாபம் வரும்.

11:16

Speaker A

அதிலிருந்து நான் கொடுக்க வேண்டிய கடனை நீங்க கழிச்சுக்கோங்க.

11:20

Speaker A

அப்படின்னு அவங்க சொல்லி கடன் கொடுத்தவங்களையே பிசினஸ் பர்சனாவே அவங்க ஆக்கிறாங்க.

11:25

Speaker A

இது ஒரு மேஷ ராசி பெண் இந்த வேலையை அவங்க பார்க்கிறாங்க.

11:28

Speaker A

சோ இப்படியே இப்படியே அவங்களுடைய லைஃப் ஜெர்னி போகுது.

11:31

Speaker A

பியூட்டி பார்லர் வைக்கிறாங்க.

11:33

Speaker A

பியூட்டி பார்லரும் நல்லாதான் போயிட்டு இருக்கு ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல ஃபேமிலில சில இஸ்யூஸ் வருது பண பிரச்சனைகள் வருது.

11:40

Speaker A

அவங்க ஹஸ்பண்டே அவங்க ஹஸ்பண்ட்டால ஒரு பெரிய ஒரு கடன் பிரச்சனை அவங்க ஹஸ்பண்ட் வாங்கின கடன் வாங்கின இடத்துல இவங்க ஒரு பெரிய கடன் பிரச்சனையில போய் இவங்க மாட்டுறாங்க.

11:47

Speaker A

அதாவது பல லட்சங்களுக்கு போய் மாட்டுறாங்க.

11:50

Speaker A

சம்பாதிச்ச எல்லா விஷயத்தையும் ஒரு நொடியில இழக்கக்கூடிய ஒரு தருணத்துல போய் அவங்க சிக்கிறாங்க.

11:55

Speaker A

சோ ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல திருப்பி அதே மாதிரி ஒரு கடன் பிரச்சனையில அவங்க மாட்டி.

12:01

Speaker A

அவங்க என்ன பண்றாங்கன்னா அவங்களுக்கு இருந்த ஒரு காண்டாக்ட்ஸ் இருந்ததுல்ல.

12:06

Speaker A

இதுலதான் நீங்க கம்பேர் பண்ணி பார்க்கணும் அந்த மேலுக்கும் அந்த ஃபீமேலுக்கும் இருந்த டிஃபரன்ஸ்.

12:10

Speaker A

இந்த ஃபீமேல் மேஷ ராசி என்ன பண்றாங்க அந்த காண்டாக்ட்ஸ்ல வச்சு ஒரு ஒரு அந்த வட்டிக்கு விடுவாங்க இல்லையா ஒரு நார்த் இந்தியன்ஸ்.

12:17

Speaker A

அந்த குஜராத்தி மாதிரி அவங்களுக்கு போன் அடிக்கிறாங்க.

12:21

Speaker A

போன் அடிச்சு எனக்கு ₹50 லட்சம் வேணும் அப்படின்னு சொல்லி அவங்க கேட்கிறாங்க.

12:24

Speaker A

கேட்கிறப்போ அவங்க கையில ஒரு நயா பைசா கிடையாது.

12:27

Speaker A

அந்த ₹50 லட்சம் ரூபாயை வாங்கி அவங்க வந்து அந்த கடன் அடைக்கல.

12:34

Speaker A

திருப்புவும் அந்த பிசினஸை செட் பண்ணி இப்படியே அவங்க லைஃப் பேட்டர்ன் போகுது.

12:37

Speaker A

அப்போ இவங்களுடைய சூட்சமம் என்ன அப்படின்னு பார்க்கிறப்போ ஸ்ட்ராங்கா தெய்வத்தை அப்படிங்கறது பிடிச்சுக்கிட்டாங்க.

12:41

Speaker A

அதாவது விஷ்ணு வழிபாடு.

12:44

Speaker A

பெருமாள் வழிபாடு அப்படிங்கறத வந்து இவங்க ஹைலி போக்கஸ் பண்ணுவாங்க.

12:50

Speaker A

இவங்களுக்கும் வந்து பயம் அப்படிங்கறது எல்லாம் கிடையாது.

12:53

Speaker A

எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.

12:55

Speaker A

ஏன் அப்படின்னா.

12:57

Speaker A

இவங்க வந்து என்கிட்ட எப்பவுமே ஹாரோஸ்கோப்ங்கறது கொஞ்சம் வருஷமாவே என்கிட்ட கேட்டுக்கிட்டே தான் இருப்பாங்க.

13:03

Speaker A

இப்ப இந்த ஒரு சிச்சுவேஷனா இருக்கு என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம் அப்படிங்கறப்போ.

13:06

Speaker A

ரெமெடிஸ் மட்டுமே கேட்டுக்கிட்டே இருப்பாங்க.

13:09

Speaker A

அப்ப நான் சொல்லுவேன் இந்த கோயிலுக்கு போங்க அந்த கோயிலுக்கு போங்க.

13:11

Speaker A

எந்த கோயிலுக்கு போங்க அப்படின்னாலும் போயிடுவாங்க.

13:16

Speaker A

அதாவது ஒவ்வொரு சிச்சுவேஷனுக்கும் ஒவ்வொரு கோயில்கள் அப்படிங்கிற மாதிரி இருந்தது.

13:20

Speaker A

அவங்களுக்கு வந்து விசா இஸ்யூ வந்தப்போ நான் வந்து விசா கணபதிக்கு போயிட்டு வாங்க அப்படின்னு சொன்னப்போ.

13:25

Speaker A

ஹைதராபாத் போயிட்டு வந்தாங்க.

13:27

Speaker A

அப்புறம் ரொம்ப பால்பிடேஷனா இருக்கு அப்படிங்கறப்போ.

13:30

Speaker A

திருவண்ணாமலைக்கு போயிட்டு வரது.

13:32

Speaker A

அதாவது தெய்வத்துக்கிட்ட நம்ம போயிட்டு மட்டும் வரது பத்தாது.

13:37

Speaker A

அதோடைய எக்ஸிகியூஷன் என்ன அப்படிங்கறது பார்க்கணும்.

13:39

Speaker A

இப்போ இவங்ககிட்ட எப்படி பணம் தங்குச்சு அவர்கிட்ட எப்படி பணம் தங்காம போச்சு அப்படிங்கறப்போ.

13:45

Speaker A

தெய்வ வழிபாட்டை கடமைகள் அப்படிங்கிற மாதிரி இருக்கக்கூடாது.

13:49

Speaker A

போக்கஸ் ஒரு விஷயம்னா ஒரு விஷயம் போக்கஸ்.

13:51

Speaker A

அந்த மேஷ ராசியில இருக்க ஆண் எப்படி இருந்தார் அவருடைய போக்கஸ் ஷேட்டர்டா இருந்தது சிதறி கிடந்தது.

13:58

Speaker A

இந்த ஃபீமேலுடைய மேஷ ராசி இவங்களுடைய போக்கஸ் எப்படி இருந்ததுன்னா ஒன்னுன்னா ஒன்னு பொருள் உற்பத்தி.

14:05

Speaker A

பல பொருட்கள் உற்பத்தி பண்ணிட்டாங்க இப்ப அவங்களுடைய உற்பத்தி விகிதம் எத்தனை அப்படின்னு பார்த்தா.

14:11

Speaker A

கிட்டத்தட்ட ஒரு 300 பொருட்களுக்கு மேல உற்பத்தியாளராகி அவங்க ஸ்டாண்டர்டைஸா இருக்காங்க.

14:17

Speaker A

இன்னும் கடன் வாங்கி தான் பண்ணிட்டு இருக்காங்க.

14:20

Speaker A

ஆனா அந்த கடனை அடிச்சுக்கிட்டும் இருக்காங்க ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா விஷ்ணு வழிபாடு.

14:26

Speaker A

கிருஷ்ணர் வழிபாடு அப்படிங்கறதுல ரொம்ப ஸ்ட்ராங்கா போக்கஸ் பண்ணி அவங்க பண்ணிட்டு இருக்காங்க.

14:31

Speaker A

அவங்க வீட்ல தெய்வம் வாழ்றதாகவே அவங்க நினைக்கிறாங்க.

14:33

Speaker A

அவங்களுக்கு நான் சொன்ன பரிகாரம் என்ன அப்படின்னா.

14:39

Speaker A

திருப்பதிக்கு யாரையாவது கூட்டிட்டு போகணும் அவங்க.

14:41

Speaker A

இவங்களுடைய சொந்த செலவுல இந்த மேஷ ராசிக்காரங்க உங்களுடைய சொந்த செலவுல அதாவது இப்போ சனி ராசி சம்பந்தப்பட்டவங்க எல்லாம் இருக்காங்க இல்லையா.

14:50

Speaker A

இவங்களை அதாவது பூமி நில ராசி சம்பந்தப்பட்டவங்க.

14:54

Speaker A

இவங்களை எல்லாம் வந்து சொந்த செலவுல திருப்பதிக்கு கூட்டிட்டு போகணும் அதாவது அவங்க டிராவலிங்ல இருந்து முடிச்சு வர வரைக்கும்.

15:02

Speaker A

நீங்க கொடுக்கிற காணிக்கை கூட அவங்க வாங்கி போடணும்.

15:06

Speaker A

அப்படி போடுறப்போ உங்களுக்கு புண்ணியம் பன்மடங்கா வந்து சேரும்.

15:10

Speaker A

அவங்களுக்கு உங்க மூலமா புண்ணியம் வந்து சேரும்.

15:13

Speaker A

இதுதான் வந்து அவங்களுக்கு நான் சொன்ன பிராக்ஷத்தம்.

15:15

Speaker A

பொதுவாவே எல்லா ராசிக்காரங்களுக்கும் சொல்ற விஷயம் என்ன அப்படின்னா.

15:22

Speaker A

யார் கடன் வாங்கிருந்தாலும் சரி என்ன ராசிக்காரங்க கடன் வாங்கிருந்தாலும் சரி விநாயகரை போய் பிடிச்சுக்கணும்.

15:27

Speaker A

ஏன்னா அவர்தான் ஆதி கடவுள் இல்லையா.

15:29

Speaker A

விநாயகரை வழிபாடு பண்ணி அவரையே சொல்யூஷன் கொடுக்க வைக்கணும் நீங்கதான் எனக்கு சரணாகதி அப்படின்னுட்டு விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சு வழிபாடு பண்றது.

15:37

Speaker A

இந்த மாதிரி வழிபாடு முறைகள் எல்லாம் பண்ணி விநாயகரை வழிபட்டா மட்டும் இங்க கடன் அடைஞ்சிருமா அப்படிங்கறது இல்லை.

15:40

Speaker A

அவருடைய அந்த பிளஸ்ஸிங்ஸ் அப்படிங்கறது நீங்க எடுத்துக்கணும்.

15:43

Speaker A

அதுபோக முக்கியமா.

15:46

Speaker A

சந்திராஷ்டமம் வரக்கூடிய நாட்கள்ல.

15:50

Speaker A

உங்களுக்கு என்னைக்கு சந்திராஷ்டமம் எல்லா ராசி எல்லா நட்சத்திரக்காரங்களுக்குமே வந்து.

15:55

Speaker A

ஒரு இரண்டரை நாள் சந்திராஷ்டமம் அப்படிங்கறது இருக்கும்.

15:58

Speaker A

உங்களுடைய சந்திராஷ்ட காலங்கள்ல எதுவுமே பண்ணாம.

16:03

Speaker A

அதாவது எதுவும் பண்ணாமங்கிறது முடிவுகள் எடுக்காம.

16:06

Speaker A

கடன் வாங்கணும்ங்கிற எண்ணம் இல்லாம.

16:10

Speaker A

சந்திராஷ்டம் அன்னைக்கு கடனை அடைக்கவும் வேணாம் கடனை கொடுக்கவும் வேணாம் வாங்கப்போகவும் வேண்டாம்.

16:15

Speaker A

அந்த நேரத்துல முடிவும் எடுக்க வேண்டாம்.

16:17

Speaker A

சந்திராஷ்டம காலங்கள்ல கடன் வாங்கினாலோ.

16:21

Speaker A

கடன் கொடுத்தாலோ கடன் அடைப்பது மிகவும் கடினம் ரொம்ப கஷ்டத்துல போயிடுவீங்க சந்திராஷ்டம்.

16:26

Speaker A

தெரியாம நாங்க சந்திராஷ்டமத்துல கடன் வாங்கிட்டோம் எங்களுக்கு தெரியலையே.

16:30

Speaker A

அன்னைக்கு எங்க நட்சத்திரம்.

16:31

Speaker A

விதி அப்படிதான் பண்ணும்.

16:32

Speaker A

அன்னைக்கு நீங்க கடன் வாங்க போற நேரத்துல சப்போஸ் ஒரு லோன் அப்ளை பண்ணிருக்கீங்க.

16:37

Speaker A

எனக்கு அன்னைக்கு போய் நான் பேங்குக்கு போகணும் அன்னைக்கு உங்களுக்கு சந்திராஷ்டம் போகாதீங்க.

16:40

Speaker A

அலைச்சல் ஜாஸ்தியா இருக்கும்.

16:42

Speaker A

அந்த கடனை அடைக்கவே முடியாது.

16:44

Speaker A

சரி இன்னைக்கு நான் லோன் அடைக்க போற நாள் இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டம் போகாதீங்க.

16:47

Speaker A

திரும்பவும் அங்கேயும் ஏதாவது ஒரு அலைச்சலோ இல்ல ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டோ இல்ல கட்ட முடியாம போற சூழ்நிலையோ இல்ல மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையோ.

16:53

Speaker A

ஏதோ ஒன்னு சந்திராஷ்டமம் நம்மளுக்கு பண்ணி விட்டுரும்.

16:55

Speaker A

அதனால முடிஞ்ச அளவுக்கு சந்திராஷ்டம காலங்கள்ல அமைதியா இருந்துக்கிறது நல்லது.

16:59

Speaker A

தெய்வ வழிபாடோட இருந்துக்கிறது நல்லது.

17:01

Speaker A

எதற்காக கடன் வாங்குறோம் வீண ஆடம்பரத்துக்கு வாங்குறோமா.

17:04

Speaker A

கால்குலேட்டிவா இருந்து சிக்கனமா இருக்க பழகிக்கிட்டீங்க அப்படின்னாலே யாருமே கடன் படணும் அப்படிங்கறது கிடையாது.

17:10

Speaker A

கடவுள் நம்மளுக்கு எல்லாத்துக்குமே யார் யாருக்கு எப்படி எப்படி படி அளந்து கொடுக்கணுமோ அப்படி கொடுத்துக்கிட்டே தான் இருப்பார்.

17:15

Speaker A

ஆசைப்படப்பட தான் கடனுக்குள்ள போய் நம்ம விடுவோம்.

17:19

Speaker A

ஆசை ஆபத்து அப்படின்னு சொல்லி நான் இந்த வீடியோவை முடிச்சுக்கிறேன்.

Topics: மேஷம் கடன் பிரச்சனை ஆன்மீகம் விஷ்ணு வழிபாடு பெருமாள் வழிபாடு சிவன் கோயில் ஜோதிடம் பேச்சுத்திறன் நிதானம் தியானம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11354)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11354)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/mesham-reaching-greatest-peak-jeevitha-sureshkumar/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
