**மேஷ ராசிக்கு தசா புத்தி சொல்லும் ரகசியம் | Mesham | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/mesham-rasi-dasa-puthi-secret/

மேஷ ராசிக்கான செல்வ செழிப்புக்கான தசாபுத்தி ரகசியங்கள் மற்றும் பரிகார வழிகள், முக்கிய கோயில்கள் மற்றும் வழிபாட்டு முறைகள்.

## Key Takeaways

- மேஷ ராசிக்கான பொருளாதார முன்னேற்றம் இந்த ஆண்டு மிகுந்த வாய்ப்பு உள்ளது.
- பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள் தடைகள் அகற்ற உதவும்.
- புதிய தொழில்களை ஆரம்பிக்க முன் திட்டமிடல் மற்றும் ஆய்வு அவசியம்.
- ஒரே திறமையில் முழு கவனம் செலுத்துவது வளர்ச்சிக்கு முக்கியம்.
- மகாலட்சுமி வழிபாடு செல்வ செழிப்புக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

## What the video covers

- மேஷ ராசிக்கான இந்த ஆண்டு செல்வ செழிப்புக்கு நேரம் அருமையாக இருக்கும்.
- சனி மற்றும் குரு பெயர்ச்சி பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும்.
- பண செலவுகள் அதிகரிக்கும் ஆனால் சமாளிக்க முடியும்.
- புதிய தொழில் தொடங்கும் முன் முழுமையான ஆய்வு மற்றும் திட்டமிடல் அவசியம்.
- திருச்செந்தூர் முருகர் கோயிலில் வழிபாடு மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு பரிகாரமாக முக்கியம்.
- ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதி பெருமாள் கோயில்கள் செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் அதிகரிக்க உதவும்.
- மகாலட்சுமி வழிபாடு செல்வ செழிப்புக்கு அவசியம்.
- ஒரே ஒரு திறமையில் முழு கவனம் செலுத்தி தொழில் வளர்ச்சி அடைய வேண்டும்.
- பரிகாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் மூலம் தடைகள் அகற்றப்படலாம்.
- வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் மனஅழுத்தம் குறைக்க வழிகாட்டல்.

Answers

## Questions about this video

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நிதி நிலைமை எப்படி இருக்கும்?

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் செல்வ செழிப்புக்கான நேரம் அருமையாக இருக்கும். சனி மற்றும் குரு பெயர்ச்சிகள் பொருளாதார ரீதியாக நல்ல பலன்களைத் தரும். வராத பணங்கள் கூட இந்த வருடம் வந்து சேரும் வாய்ப்புகள் வலுவாக உள்ளன.

மேஷ ராசிக்காரர்கள் செல்வ செழிப்பு பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

மேஷ ராசிக்காரர்கள் செல்வ செழிப்பு பெற, நிறைய சிகப்பு மலர்களும் சந்தனமும் கொண்டு முருகப்பெருமானை வழிபடுவது நல்லது. இது வராத பணங்கள் கூட வந்து சேர உதவும்.

மேஷ ராசிக்காரர்கள் இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் நிதி ரீதியாக எப்படி செயல்பட வேண்டும்?

இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில், மேஷ ராசிக்காரர்கள் புதிய வருமான வழிகளைத் தொடங்கலாம். புதிய வேலை அல்லது தொழில் தொடங்கும் முன், அதன் பின்விளைவுகளை ஆராய்ந்து செயல்படுவது நல்லது.

## Full Transcript — Download SRT & Markdown

00:02

Speaker A

மேஷ ராசிக்கு நேரம் அப்படிங்கறது அருமையா இருக்கும் அதாவது செல்வ செழிப்புக்கான நேரம்ங்கறது அருமையா இருக்கு.

00:08

Speaker A

இந்த சனி பெயர்ச்சி ஆகட்டும் அதோட வரக்கூடிய குரு பெயர்ச்சி ஆகட்டும் இது எல்லாமே வந்து உங்களுக்கு பொருளாதார ரீதியா நல்ல விஷயங்கள் செய்யறதுக்கு அப்படிங்கற மாதிரிதான் இருக்கு.

00:17

Speaker A

நிறைய சிகப்பு மலர்களும் அதோட சந்தனமும் வந்து நீங்க முருகருக்கு கொடுத்து வழிபாடு பண்ணும் பொழுது மேஷ ராசிக்காரங்களுக்கு வராத பணங்கள் கூட வரக்கூடிய அமைப்பு அப்படிங்கறது வந்து இந்த வருஷம் ரொம்ப ஸ்ட்ராங்காவே இருக்கு.

00:32

Speaker A

வணக்கம்.

00:34

Speaker A

எல்லாரும் எதிர்பார்க்கிற ஒரு விஷயம் வாழ்க்கையில என்னன்னா எல்லா ராசிரினருமே எதிர்பார்க்கிறது என்னன்னா நாங்க செல்வ செழிப்போட வாழ்றதுக்கு என்ன வழி பண்ணனும்.

00:44

Speaker A

நாங்க என்ன செஞ்சா நாங்க செல்வ செழிப்போட இருப்போம் எப்படி செல்வம் மேலும் மேலும் அதிகரிச்சிட்டே போகும் ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கும் ஒவ்வொரு வகையான பரிகார ஸ்தலங்கள் புண்ணிய ஸ்தலங்கள் தெய்வ வழிபாட்டு முறைகள் அவங்களுடைய லைஃப் ஸ்டைல்.

00:58

Speaker A

அவங்களுடைய தாட் ப்ராசஸ் எப்படி இருக்கும்.

01:00

Speaker A

இப்படி ஒவ்வொருத்தங்களுக்குமே.

01:01

Speaker A

சிச்சுவேஷன்ஸ் அப்படிங்கறதும் மாறிக்கிட்டே இருக்கும்.

01:03

Speaker A

அதாவது தசாபுத்தி அப்படிலாம் இருக்கு இல்லையா.

01:05

Speaker A

உங்களுடைய ஜாதக ரீதியாகவும் உங்களுடைய தசாபுத்தி அதோட கோச்சாரங்கள் எப்படி இருக்கு அதெல்லாம் பொறுத்துதான் நம்முடைய செல்வ செழிப்புமே நிரந்தரமா தங்குமா.

01:16

Speaker A

இல்ல வந்துட்டு போகுமா.

02:01

Speaker A

ஜெனரலா மேஷ ராசிக்குலாம் இப்ப எப்படி இருக்கும்னா செலவுகள் கண்டிப்பா உங்களுக்கு வந்து ஃபர்ஸ்ட் ஆஃப் அப்படின்னு பார்க்கிறப்போ செலவுகள் அதிகரிக்கிற மாதிரிதான் இருக்கும்.

02:10

Speaker A

பேலன்ஸ் பண்ண முடியாத மாதிரி சில பேர்த்தால மேனேஜ் பண்ண முடியாது ஒரு ஸ்டெபிலிட்டி இல்லை அப்படிங்கிற ஒரு பயமும் வரும் திடீர்னு பார்த்தா உங்களுடைய பேங்க் பேலன்ஸ் எல்லாம் குறையற மாதிரி கூட தெரியும்.

02:24

Speaker A

இல்ல எங்கயாவது போய் லோன் வாங்கலாமா அப்படிங்கிற மாதிரி எல்லாம் இருக்கும்.

02:27

Speaker A

அப்போ ஒரு கைண்ட் ஆஃப் ஒரு பயம் வரும் ஒரு மன அழுத்தம் வரும் அப்படிங்கிற மாதிரி இருக்கும்.

02:30

Speaker A

அட் தி சேம் டைம்.

02:32

Speaker A

மேஷ ராசிக்காரங்களுக்கு வராத பணங்கள் கூட வரக்கூடிய அமைப்பு அப்படிங்கறது வந்து இந்த வருஷம் ரொம்ப ஸ்ட்ராங்காவே இருக்கு.

02:41

Speaker A

அதனால நீங்க வந்து பணம் விஷயம் அப்படின்னு பொறுத்தவரைக்கும் நீங்க வந்து ரொம்ப ஸ்ட்ராங்காவே இருக்கலாம் அப்படிங்கறதுதான் இந்த வருஷம் சொல்லப்படுது.

02:48

Speaker A

சோ.

02:50

Speaker A

அந்த செகண்ட் ஹாப் அப்படிங்கறது எப்படி நீங்க செயல்படணும் அப்படின்னா.

02:56

Speaker A

புதுசா ஏதாவது ஒரு இப்ப நீங்க என்ன வேலை பார்த்துட்டு இருக்கீங்களோ.

03:00

Speaker A

புதுசா இன்னொரு ஸ்ட்ரீம் ஒன்னு ஆரம்பிக்கலாம்.

03:03

Speaker A

புதுசா நீங்க வந்து ஏதாவது வொர்க் பண்ணனும்னு நினைச்சிட்டு இருக்கீங்க ஜெனரலாவே மேஷ ராசிக்காரங்களுக்கு ஐடியாஸ் நிறைய இருக்கும்.

03:10

Speaker A

இப்ப நான் ஏதாவது வொர்க் ஸ்டார்ட் பண்ணுங்கன்னு சொன்ன உடனே யோசிக்காம பண்ணக்கூடாது.

03:14

Speaker A

அதனுடைய பின்விளைவுகளும் என்னன்னு தெரிஞ்சிட்டு நீங்க இறங்குறீங்க அப்படின்னா.

03:20

Speaker A

கண்டிப்பா அது வந்து கிராஜுவலா ஒரு குரோத் நோக்கி கூட்டிட்டு போற மாதிரிதான் உங்களுக்கு இருக்கும்.

03:26

Speaker A

அதோட.

03:27

Speaker A

நீங்க பார்ட்னர்ஷிப் அப்படிங்கறது மேஷம் போயிடக்கூடாது.

03:31

Speaker A

எதுவா இருந்தாலும் தனிச்சு நீங்களே எல்லாத்தையுமே செயல்படுத்த முடியும்.

03:37

Speaker A

அதாவது இன்டிபென்டன்ட்டான ப்ராஜெக்ட்ஸ் எடுத்து நீங்க பண்றீங்க அப்படின்னா.

03:43

Speaker A

உங்களுக்கு தொழிலுக்கான ஒரு குரோத் அப்படிங்கறது ரொம்ப நல்லா இருக்கும்.

03:48

Speaker A

சின்னதாவே ஸ்டார்ட் பண்ணலாம் நீங்க.

03:50

Speaker A

அதோட.

03:51

Speaker A

இந்த வருஷம் மிட் அப்படின்னு பார்க்கிறப்போ இப்ப இந்த ஜூன் மாசம்லாம் வருதுன்னு வச்சுக்கோங்களேன்.

03:57

Speaker A

பணம் வர மாதிரி ஒன்னு தெரியும்.

03:59

Speaker A

ஆல்ரெடி இப்படி ஒரு செலவு ஒன்னு நடந்திருக்கும்.

04:03

Speaker A

இன்வெஸ்ட்மென்ட்ஸ் உடனே போய் பண்ணிடக்கூடாது.

04:05

Speaker A

முதல் நீங்க வந்து மார்க்கெட் அனலைசேஷன் அப்படிங்கறதெல்லாம் பண்ணனும்.

04:08

Speaker A

ஒரு ஸ்கில்ல தான் போக்கஸ் பண்ணனும்.

04:10

Speaker A

ஒரு ஸ்கில்ல இருந்துதான் இன்கம் வரும் அப்படிங்கறத வந்து மேஷம் புரிஞ்சுக்கணும்.

04:15

Speaker A

மேஷத்துக்கு எப்படி இருக்கும்னா இதையும் செய்வேன் அதையும் செய்வேன் எல்லாத்தையும் செய்வேன் அப்படின்னா.

04:20

Speaker A

குரோத் அப்படிங்கறது உங்களுக்கு வராது.

04:22

Speaker A

சோ ஒரு பொருள்னாலும் ஒரு பொருள் அதுலயே உங்களுடைய முழு போக்கஸ் பண்ணி நீங்க ஒரு விஷயத்தை தொடங்குறீங்க அப்படின்னா.

04:31

Speaker A

கண்டிப்பா குரோத் அப்படிங்கறது இன்னொரு ஒன்றரை வருஷம் கழிச்சு பார்க்கிறப்போ அது உங்களுக்கு ஒரு சொத்தாவே மாறி இருக்கும் அப்படிங்கறதுதான்.

04:39

Speaker A

இந்த வருஷம் வந்து மேஷ ராசிக்கு.

04:41

Speaker A

மேஷ ராசிக்கு நேரம் அப்படிங்கறது அருமையா இருக்கும்.

04:46

Speaker A

அதாவது செல்வ செழிப்புக்கான நேரம்ங்கறது அருமையா இருக்கு.

04:51

Speaker A

அதோட செலவுகளும் கூடயே இருக்கும்.

04:55

Speaker A

உங்களால செலவுகளை சமாளிக்க முடியும் அப்படிங்கறதுதான் அதுல உண்மை.

04:59

Speaker A

ஏன்னா இந்த சனி பெயர்ச்சி ஆகட்டும் அதோட வரக்கூடிய குரு பெயர்ச்சி ஆகட்டும் இது எல்லாமே வந்து உங்களுக்கு பொருளாதார ரீதியா.

05:06

Speaker A

நல்ல விஷயங்கள் செய்யறதுக்கு அப்படிங்கற மாதிரிதான் இருக்கு.

05:10

Speaker A

அதுக்கு வந்து முக்கியமா நீங்க வந்து பரிகாரத்துக்கு முதல் போயிடணும்.

05:14

Speaker A

திருச்செந்தூருக்கு போகணும் நீங்க.

05:16

Speaker A

திருச்செந்தூர் முருகர் கோயிலுக்கு போயிட்டு அங்க.

05:20

Speaker A

தட்டு நிறைய சிகப்பு மலர்களும் அதோட சந்தனமும் வந்து நீங்க முருகருக்கு கொடுத்து வழிபாடு பண்ணும் பொழுது.

05:29

Speaker A

ஏதாவது தடைகள் இருக்கு அப்படின்னா முதல் தடை ஃபர்ஸ்ட் உங்களுக்கு ரிலீஸ் ஆகும்.

05:34

Speaker A

ஏன்னா நீங்க ஜெனரலாவே வந்து.

05:37

Speaker A

செவ்வாய் வந்து மேஷத்துக்கு ரொம்ப ஃபேவரபிலாதான் இருப்பாங்க.

05:40

Speaker A

அட் தி சேம் டைம் சனி சில விஷயங்கள் உங்களுக்கு உடல் உபாதைகள் கொடுத்திருக்கும் இல்ல குடும்பத்துல சில மன அழுத்தங்கள் அப்படின்னு கொடுக்கிறப்போ.

05:48

Speaker A

சின்ன ஒரு பிரேக் போட்டு செயல்படுற மாதிரி இருக்கும்.

05:51

Speaker A

இல்ல நீங்களே தனியாவே எல்லா பாரங்களையும் சுமக்கிற மாதிரி இருக்கும் அப்படிங்கிறப்போ.

05:57

Speaker A

இங்க திருச்செந்தூருக்கு போயிட்டு அங்க இருக்கக்கூடிய தட்சிணாமூர்த்தியும் நீங்க வழிபாடு பண்ணனும்.

06:02

Speaker A

இப்ப யாராவது புதுசா தொழில் தொடங்க போறீங்க மேஷத்துல அப்படின்னா.

06:05

Speaker A

அங்க போயிட்டு ஒரு நோட் ஒரு கணக்கு நோட் மாதிரி ஒன்னு வச்சிட்டு அங்க இருக்க தட்சிணாமூர்த்தி கிட்ட வந்து நீங்க எழுதணும்.

06:10

Speaker A

முந்தின நாளே திங்கட்கிழமையே நீங்க போய் திருச்செந்தூர்ல தங்கிடணும்.

06:14

Speaker A

முடிஞ்ச அளவுக்கு காலையிலேயே அதிகாலையிலேயே முதல் தரிசனத்தை பார்க்கிற மாதிரி நீங்க பிளான் பண்ணிக்கலாம்.

06:20

Speaker A

இல்லனாலும்.

06:21

Speaker A

அந்த நாள்ல செவ்வாய்க்கிழமையில எந்த நாள்ல எந்த நேரத்துல வேணாலும் நீங்க வந்து முருகரை போய் வழிபாடு பண்ணிட்டு.

06:29

Speaker A

முக்கியமா முருகரை வழிபாடு பண்ணிட்டு தட்சிணாமூர்த்தியை வழிபடாம வரக்கூடாது.

06:35

Speaker A

இங்க பார்த்து இங்க குரு கிட்ட நீங்க வந்து ஆசீர்வாதம் வாங்கிட்டு வரணும் அப்படிங்கறதுதான் மேஷ ராசிக்காரங்களுக்கு.

06:41

Speaker A

இப்ப மேஷ ராசி உங்களுக்கு வந்து நான் வந்து முருகர் ஸ்தலங்களுக்கு போங்க.

06:46

Speaker A

எதுக்கு வந்து முதல் திருச்செந்தூர் போங்க அப்படின்னு சொன்னேன்னா.

06:50

Speaker A

தடைகள் அகற்றுவதற்காக நீங்க திருச்செந்தூர் போறப்ப.

06:55

Speaker A

செவ்வாய் எப்பவுமே திருச்செந்தூர்ல நீங்க முருகர் அப்படிங்கிற ஒரு வழிபாட்டு முறைக்கு போயிட்டீங்க அப்படின்னாலே.

07:01

Speaker A

உங்களுக்கு தைரியம் ஆட்டோமேட்டிக்காவே வந்துரும்.

07:04

Speaker A

அதுக்கப்புறம் நீங்க புண்ணிய ஸ்தலங்கள் அப்படிங்கிறதுல முதல் போக்கஸ் பண்ணனும்.

07:07

Speaker A

அதாவது பெருமாள் வழிபாடு.

07:08

Speaker A

இல்லையா வீட்ல கூட ஓம் நமோ நாராயணா.

07:11

Speaker A

அப்படின்னுட்டு நீங்க வழிபாடு பண்றது.

07:14

Speaker A

அந்த மந்திரங்கள் உச்சரிச்சிட்டே இருக்கிறது.

07:17

Speaker A

அதோட வந்து நீங்க ஸ்ரீரங்கத்தில் இருக்கக்கூடிய அந்த தேவிமார்கள் இருக்காங்க இல்லையா.

07:24

Speaker A

அந்த மூன்று தெய்வங்கள் உட்கார்ந்திருப்பாங்க இல்லையா அந்த மூன்று பேத்தையும் முடிஞ்ச அளவுக்கு அங்க போயிட்டு.

07:30

Speaker A

அந்த தேவிமார்களை முக்கியமா அங்க அங்க இருக்க ஸ்ரீதேவியை நீங்க எட்டி பார்த்து வழிபாடு பண்ணும் பொழுது.

07:36

Speaker A

கண்டிப்பா உங்களுக்கு செழிப்பு அப்படிங்கறது அபிரதமா இருக்கும்.

07:40

Speaker A

சோ முதலில் திருச்செந்தூர் முருகன் அதுக்கப்புறம் வந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு மேஷ ராசிக்காரங்க போகணும்.

07:45

Speaker A

சோ பொதுவாவே செழிப்பை கொடுக்கக்கூடிய ஸ்தலங்கள் அப்படின்னே இருக்கு.

07:50

Speaker A

அப்போ ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு ஸ்தலங்களுக்கு போகும் பொழுது பிளாக்கேஜஸ் கிளியர் ஆகும் அப்படிங்கறதுனாலதான்.

07:57

Speaker A

இன்னார் இந்த கோயிலுக்கு போங்க இந்த அதே மாதிரி அந்த ஆர்டர்ல நம்ம சொல்றோம் இல்லையா.

08:01

Speaker A

இந்த இந்த கோயிலுக்கு போங்க அப்படின்னு.

08:03

Speaker A

சோ பொதுவாவே வந்து.

08:05

Speaker A

ஒரு நல்ல ஒரு செழிப்பு வரணும் எனக்கு ஒரு லக் நல்லா ஆக்டிவேட் ஆகணும் அப்படின்னா.

08:11

Speaker A

திருப்பதிதான்.

08:12

Speaker A

பெருமாள்தான்.

08:13

Speaker A

ஆனா அந்த திருப்பதி பெருமாளுக்குமே யாருக்கெல்லாம் வந்து சந்திரன்.

08:18

Speaker A

சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லபடியா இருக்கோ அவங்க போகலாம்.

08:23

Speaker A

ரொம்ப நெருப்பு ஆதிக்கம் இருக்கக்கூடிய நெருப்பு ராசிக்காரங்க போறீங்க அப்படின்னா.

08:30

Speaker A

மேஷம் போகலாம்.

08:32

Speaker A

அதே மாதிரி சிம்மம் போகலாம்.

08:33

Speaker A

ஆனா தனுசுக்கு அங்க இருக்கக்கூடிய திருப்பதி வந்து சம்டைம்ஸ் செட் ஆகாதுங்கிற மாதிரி இருக்கும்.

08:38

Speaker A

அப்ப அவங்க ஸ்ரீரங்கம் போறது.

08:39

Speaker A

சோ இந்த மாதிரி ஒரு ஆல்டர்நேட்டிவா வந்து ஒரு வழிபாட்டு முறைகளை வந்து ஒவ்வொரு ராசிக்காரங்களும் கரெக்டா மெயின்டைன் பண்ணிக்கிறாங்க அப்படின்னா.

08:45

Speaker A

அவங்களுக்கான லக் ஆக்டிவேஷன் ஆகக்கூடிய இடங்கள் தான் வந்து நம்ம சொல்ற திருப்பதி பெருமாள் ஸ்தலங்களுக்குலாம் போறது.

08:51

Speaker A

அடுத்தது பார்க்கிறப்போ.

08:53

Speaker A

செழிப்பு வரணும் முதல் லக் வரணும் அப்புறம் செழிப்பு வரணும் அப்படின்னாலே அது லட்சுமிதான்.

08:58

Speaker A

மகாலட்சுமி வழிபாடு அப்படிங்கறது ரொம்ப அவசியம்.

09:00

Speaker A

மகாலட்சுமி வழிபாட்டுக்கு வந்து இந்த ஸ்ரீபுரம் கோல்டன் டெம்பிள் அப்படின்னு ஒரு கோயில் இருக்கு இல்லையா.

09:06

Speaker A

அங்க போய் நீங்க வழிபாடு பண்றீங்க அப்படின்னா.

09:11

Speaker A

கண்டிப்பா நல்ல வெல்த் நல்ல ஒரு ப்ராஸ்பெரிட்டி நல்ல செழிப்பாதான் போகணும்.

09:16

Speaker A

எப்பவுமே லட்சுமி ஸ்தலங்களுக்குலாம் போகும் பொழுது.

09:18

Speaker A

நம்ம வந்து ஒரு மனநிலை எல்லாம் சரியா வச்சிட்டுதான் போகணும்.

09:22

Speaker A

சிலர்லாம் சொல்லுவாங்க நான் என் பெருமாள் கோயிலுக்கு போனேன்.

09:25

Speaker A

லட்சுமி கோயிலுக்கு போனேன்.

09:27

Speaker A

ஆனா என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கு.

09:29

Speaker A

நீங்க எப்படி போனீங்கன்னு ஒன்னு இருக்குது.

09:31

Speaker A

சிவன் கோயிலுக்கு போறப்போ ரொம்ப சாந்தமாவும்.

09:35

Speaker A

பெருமாள் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு போறப்போ ரொம்ப செழிப்பாவும் நல்லா அட்ராக்டிவான கலர்ஸ்ல.

09:40

Speaker A

நம்மகிட்ட இருக்க ஜுவல்ஸ்ல.

09:42

Speaker A

அதனாலதான் வந்து பெருமாள் வந்து செழிப்பாவே இருப்பார்.

09:44

Speaker A

இந்த லட்சுமி சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு போகும் பொழுது சந்தோஷமா போறோம்னா சந்தோஷம் பன்மடங்கு திரும்பி வரும்.

09:51

Speaker A

வருத்தப்பட்டுட்டே போறீங்க அப்படின்னா திரும்பி அதவே பன்மடங்கு கொடுத்துரும் அப்படிங்கறதுதான்.

09:56

Speaker A

லட்சுமியை வழிபாடு பண்ணக்கூடிய சூட்சுமம்.

09:59

Speaker A

லட்சுமி வரவே மாட்டாங்கன்னு ஒன்னு இருக்குது.

10:00

Speaker A

லட்சுமி எங்க வந்து ஒரு சந்தோஷம் மகிழ்ச்சியான தருணங்கள் பாசிட்டிவ் திங்கிங் எங்க இருக்கோதோ அங்கதான் லட்சுமி இருப்பாங்க.

10:05

Speaker A

சோ அதுல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்.

10:08

Speaker A

அப்பதான் உங்களுக்கு வெல்த் அப்படிங்கிற ஒரு விஷயம் வந்து நல்லபடியாவே வரும்.

10:12

Speaker A

அடுத்தது வந்து.

10:14

Speaker A

யாரு கொடுக்க போறா அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா.

10:16

Speaker A

குருதான் கொடுக்கணும்.

10:18

Speaker A

அப்போ குருவோட அனுகிரகம் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும் அப்படிங்கறதும் முக்கியம்.

10:22

Speaker A

அப்போ குரு ஸ்தலங்கள் குரு வழிபாடு தட்சிணாமூர்த்தி வழிபாடு.

10:26

Speaker A

ஆலங்குடி போயிட்டு வந்துரணும்.

10:27

Speaker A

யாருக்காவது இல்லைங்க எனக்கு பணம் வர வேண்டிய இடத்துல வரவே இல்லை எனக்கு ஒரு கைடன்ஸ் கரெக்டாவே இல்லை.

10:32

Speaker A

இல்லை என்கிட்ட பணம் இருக்கு ஆனா ஏதோ ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்குன்னா உடனே ஆலங்குடி கிளம்பி போயிடணும்.

10:37

Speaker A

ஆலங்குடி போயிட்டு அங்க வழிபாடு பண்றீங்கன்னா குரு முதல் ஸ்ட்ராங் ஆவார்.

10:40

Speaker A

அப்ப ஆலங்குடி போயிட்டு நாங்க அங்க என்ன பரிகாரங்கள் பண்ணலாம்னா.

10:42

Speaker A

படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதாவது எஜுகேஷன் ரிலேட்டடா ஏதாவது கஷ்டப்படுற ஒரு குழந்தைகளுக்கு.

10:46

Speaker A

ஒரு பெண்ணோ ஒரு பென்சிலோ ஒரு பேகோ ஒரு நோட்டோ ஏதோ ஒன்னு நீங்க வாங்கி கொடுக்கிறீங்கன்னா.

10:51

Speaker A

படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு காசா கொடுத்துட்டு வரக்கூடாது.

10:54

Speaker A

காசு கொடுத்து இந்த இந்த பொருள் வாங்கிக்கோன்னு கொடுக்கக்கூடாது.

10:56

Speaker A

நீங்களே அந்த பொருள் வாங்கி கொடுக்கும் பொழுதுதான் அதுக்கான பிராயச்சித்தமே அதுதான்.

11:01

Speaker A

சோ அதனால இந்த மாதிரி தானங்கள் நீங்க பண்ணுங்க.

11:04

Speaker A

உங்களுக்கு குரோத் ரொம்ப நல்லா இருக்கும்.

11:06

Speaker A

சில பேத்துக்கு வந்து எல்லாமே இருக்கும்.

11:09

Speaker A

ஆனா கர்மா ஒரு வேலை பார்த்துட்டே இருக்கும்னு ஒன்னுலாம் இருக்குது இல்லையா.

11:12

Speaker A

சோ கர்மா வேலை பார்த்துட்டு இருக்கவங்களுக்கு சனிதான்.

11:15

Speaker A

முதல் போயிட்டு பரிகார ஸ்தலங்களுக்கு போயிட்டுதான் புண்ணிய ஸ்தலங்களுக்கே போகணும்னுலாம் இருக்கு.

11:19

Speaker A

இப்ப நான் சொன்ன திருப்பதி எல்லாமே புண்ணிய ஸ்தலங்கள்.

11:24

Speaker A

இப்போ சிலருக்கு வந்து கர்மா கழிச்சு ஆகணும்.

11:26

Speaker A

இப்ப வந்து மகரத்துல எல்லாம் இருக்காங்க அவங்களுக்கெல்லாம் முழுசா இப்ப சனி விலகுதுன்னா.

11:30

Speaker A

நன்றி சொல்லிட்டு வந்துரணும்.

11:32

Speaker A

திருநள்ளாறு போயிட்டு கர்மத்தை கழிச்சிட்டு.

11:34

Speaker A

அந்த கர்மத்தை கழிச்சிட்டு திருப்பி அங்க இருந்து நான் வந்து புண்ணிய ஸ்தலங்களுக்கு போறேன்னு.

11:40

Speaker A

பரிகார ஸ்தலம் போயிட்டு கையோட புண்ணிய ஸ்தலம் டிராவல் பண்ணிடவே கூடாது.

11:44

Speaker A

நிறைய பேர் இது நிறைய பேர் செய்யக்கூடிய தப்புதான்.

11:46

Speaker A

ஒரு ட்ரிப் ஒன்னு போடுவீங்க.

11:47

Speaker A

இந்த கோயில் ஒன்னு போறோம் ஃபார் எக்ஸாம்பிள் காளகஸ்தி போவீங்க.

11:51

Speaker A

காளகஸ்தியில இருந்து அப்படியே திருப்பதி போறேன்னு போறது.

11:54

Speaker A

இல்ல திருப்பதியில இருந்து அப்படியே காளகஸ்தி வரேன்னு போறது.

11:57

Speaker A

காளகஸ்திங்கறது என்னது பரிகார ஸ்தலம்.

12:00

Speaker A

திருப்பதிங்கறது என்னது புண்ணிய ஸ்தலம்.

12:01

Speaker A

புண்ணியத்தை வாங்கிட்டு வந்து பரிகாரம் பண்ணி இங்க கரைக்க போறீங்களா.

12:04

Speaker A

இல்ல இங்க கரைச்சிட்டு திருப்பி அங்க இந்த கரைச்சதை எடுத்துட்டு போயிட்டு அங்க போய் புண்ணியம் சேர்க்க போறீங்களா.

12:09

Speaker A

ரெண்டுமே வந்து இம்பேலன்ஸ் ஆயிடும்.

12:11

Speaker A

அது பிளஸ் அண்ட் மைனஸ்ங்கிற மாதிரி ஒரு விஷயம் ஆயிடும்.

12:13

Speaker A

சோ அதனால ஒரு தடவை பரிகார ஸ்தலத்துக்கு போனீங்கன்னா திரும்பி வீட்டுக்குதான் வரணும்.

12:19

Speaker A

புண்ணிய ஸ்தலத்துக்கு போனாலும் திரும்ப வீட்டுக்குதான் வரணும்.

12:21

Speaker A

இப்படி வேணா நீங்க வந்து பிரிச்சு வச்சுக்கலாம்.

12:23

Speaker A

பரிகார ஸ்தலம்னா பரிகார ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரணும்.

12:27

Speaker A

புண்ணிய ஸ்தலம்னா புண்ணிய ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரணும்.

12:29

Speaker A

சோ இதுலயும் ரொம்ப கவனம்.

12:31

Speaker A

இத்தனை கோயிலுக்கு போய் எங்களுக்கு ஒண்ணுமே நடக்கலைன்னா.

12:35

Speaker A

கோயில் ஆகம விதிகள்னு ஒன்னு இருக்கு இல்லையா.

12:38

Speaker A

அதனாலதான் வந்து இந்த இந்த தெய்வங்களை இப்படி இப்படி வழிபாடு பண்ணுங்கன்னு நேரம் கால முறைகள் எல்லாமே இருக்கு.

12:42

Speaker A

அதையும் வந்து நீங்க புரிஞ்சுக்கணும்.

12:45

Speaker A

யாராவது வந்து பரிகாரங்கள் விட்டகுறை தொட்டகுறை வச்சிட்டு.

12:49

Speaker A

நான் புண்ணிய ஸ்தலத்துக்கு போறேன் போனேன் அப்படின்னா.

12:52

Speaker A

அதெல்லாம் புண்ணியம் தராது.

12:54

Speaker A

சோ பரிகாரம் என்னவோ முழுசா பரிகாரத்தை முடிச்சிட்டு புண்ணிய ஸ்தலங்களுக்கு போறீங்க அப்படின்னாலே.

13:00

Speaker A

உங்களுக்கு குரோத் அப்படிங்கறது அக்குமுலேட் ஆக ஆரம்பிச்சிரும் அப்படிங்கறதுதான்.

13:04

Speaker A

சில பேர் சொல்லுவாங்க என்னென்னமோ கோயில் நினைக்கிறேங்க.

13:07

Speaker A

ஆனா எந்த கோயிலுக்குமே என்னால போக முடியல.

13:10

Speaker A

நாங்க எப்படி குரோ ஆகுறதுன்னா வீட்ல வச்சு முருகரை வழிபாடு பண்ணுங்க.

13:13

Speaker A

ஸ்கந்த சஷ்டி கவசம் கேளுங்க.

13:14

Speaker A

வேல் மாறல் கேளுங்க.

13:15

Speaker A

பிளாக்கேஜஸ் முதல் வீட்ல இருந்துதான் கிளியர் ஆகணும் அப்படிங்கறது ஒன்னு இருக்குது.

13:19

Speaker A

சோ இந்த வீட்ல விளக்கேத்திட்டே இருக்கணும் வீட்ல நெய் விளக்கு ஏத்திட்டே இருக்கணும் முருகரை வழிபாடு பண்ண பண்ண என்னென்ன தடைகள்லாம் இருக்கோ எல்லாமே கிளியர் ஆகி.

13:26

Speaker A

நீங்க போகக்கூடிய ஸ்தலங்களுக்கு எந்த தடையும் இல்லாம எந்த பிரச்சனையும் இல்லாம உங்களால போயிட்டு வர முடியும் அப்படிங்கறதுதான்.

13:33

Speaker A

சோ இந்த ஸ்தல வழிபாட்டு முறைகளையும் நீங்க வந்து நிறைய தெரிஞ்சு வச்சுக்கணும்.

Topics: மேஷ ராசி தசாபுத்தி செல்வ செழிப்பு திருச்செந்தூர் முருகர் மகாலட்சுமி வழிபாடு திருப்பதி பெருமாள் பரிகாரம் ஜாதகம் Astrology Tamil Retro Aanmeegam

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11170)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11170)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/mesham-rasi-dasa-puthi-secret/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
