**Mesham👉 பணம் வரும் வழி திறந்தாச்சு.! | Astrologer Jeevitha | Guru Athisara Peyarchi Palangal 2025 — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/mesham-money-path-astrologer-jeevitha-2025/

மேஷ ராசிக்காரர்களுக்கு 2025 குரு அத்திசார பெயர்ச்சி மூலம் பணம், வளர்ச்சி, குடும்ப நலன் மற்றும் ஆன்மீக பரிகாரங்கள் பற்றிய விளக்கம்.

## Key Takeaways

- மேஷ ராசிக்காரர்களுக்கு 2025ல் குரு பெயர்ச்சி மூலம் பணம் மற்றும் செழிப்பு வரும்.
- குடும்பத்தில் அமைதியும் மதிப்பும் முக்கியம், நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
- குரு பெயர்ச்சி என்பது வானியல் அதிசயம், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
- ஆன்மீக பயணங்கள் மற்றும் பரிகாரங்கள் மூலம் புண்ணியம் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
- தர்மம் பின்பற்றுதல் மூலம் குருவின் அருளைப் பெற முடியும்.

## What the video covers

- மேஷ ராசிக்காரர்களுக்கு பணம் வருவதில் தற்காலிக தட்டுப்பாடு இருக்கும், ஆனால் விரைவில் பணம் மற்றும் செழிப்பு வரும்.
- குடும்பத்தில் மதிப்பும் அமைதியும் முக்கியம், சில கோபங்கள் ஏற்படலாம், அதனால் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும்.
- 2025ல் அக்டோபர் 18 முதல் குரு மிதுனத்திலிருந்து கடகத்துக்கு பெயர்ச்சி ஆகும், பின்னர் நவம்பரில் திரும்பி மிதுனத்துக்கு வருவார்.
- குரு பெயர்ச்சி என்பது கிரகத்தின் வானியல் இயக்கத்தில் ஒரு அதிசயமான நிகழ்வாகும், இது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
- குரு அதிசார பயிற்சி என்பது குரு பெயர்ச்சியின் விளைவுகளை நிதானமாக அணுகும் முறையாகும், வளர்ச்சி மற்றும் செழிப்பை தரும்.
- புண்ணிய ஸ்தலங்களுக்கு (திருவண்ணாமலை போன்ற) பயணம் செய்து ஆன்மீக புண்ணியம் சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
- குரு தர்மத்தின் கடவுள், அவர் தர்மம் மற்றும் ஞானத்தின் வழியில் நமக்கு உதவுவார்; அதனால் தர்மத்தை பின்பற்ற வேண்டும்.
- குரு பெயர்ச்சி மற்றும் அதிசார பயிற்சி மூலம் தொழில், திருமணம், செல்வம் போன்ற வாழ்க்கை அம்சங்களில் முன்னேற்றம் காணப்படும்.
- சனி கிரகத்தின் தாக்கத்திலிருந்து குரு கிரகம் நம்மை காப்பாற்றும், ஆனால் அதற்கு நமது தர்மம் முக்கியம்.
- குரு பெயர்ச்சி மற்றும் அதிசார பயிற்சி பற்றிய விளக்கங்கள் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கின்றன.

Answers

## Questions about this video

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு அதிசார பயிற்சி காலத்தில் என்னென்ன நல்ல விஷயங்கள் நடக்கப்போகின்றன?

மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி ஏற்படும். தட்டுப்பட்டிருந்த பணம் வந்து சேரும். மேலும், நிறைய பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது, குறிப்பாக திவ்ய தேசங்கள் மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்லலாம்.

மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் எதில் கவனமாக இருக்க வேண்டும்?

மேஷ ராசிக்காரர்கள் குடும்பத்தில் நிதானமாக இருக்க வேண்டும். மேலும், தங்கள் உடல்நலத்திலும் கவனமாக இருக்க வேண்டும், பாதுகாப்பாக இருப்பது நல்லது.

மேஷ ராசிக்காரர்கள் புண்ணியங்களைச் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?

மேஷ ராசிக்காரர்கள் புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்ல வேண்டும். குறிப்பாக, திருவண்ணாமலைக்குச் சென்று சிவனை தட்சிணாமூர்த்தியாக வழிபடுவது நல்லது, ஏனெனில் குரு புண்ணியங்களைச் சேர்க்கக்கூடியவர்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

யாரோனாலும் எனக்கு பணம் தட்டுப்பட்டு இருக்கு அப்படிங்கிற ஒரு விஷயம்லாம் இருக்கு இல்லையா

00:09

Speaker A

அந்த மாதிரி தட்டுப்பட்டு இருக்கக்கூடிய பணம் எல்லாம் உங்களுக்கு வந்து சேரப்போகுது.

00:15

Speaker A

ஆனா

00:16

Speaker A

உங்களை சுத்தி எல்லாமே நல்ல விஷயங்கள் நடக்கிறப்போ மேஷத்துக்கு என்ன ஆகும்னா

00:23

Speaker A

இந்த குடும்பத்துல எல்லாரும் என்ன மதிக்கணும் அப்படிங்கிற ஒரு தாட் வரும்ல இந்த குடும்பத்துக்கு நான் தான் எல்லாமே உடைச்சு போற மதிக்க மாட்டாங்களா

00:30

Speaker A

நிறைய டிராவல் பண்ணி போகக்கூடிய ஒரு அமைப்பு

00:33

Speaker A

திவ்ய தேசம் போகணும்னு நினைக்கிறவங்க திவ்ய தேசம் போறது

00:36

Speaker A

அதாவது

00:37

Speaker A

ஜெனரலாவே மேஷ ராசிக்காரங்களுக்கு வந்து எப்படின்னா எல்லாத்துலயுமே ஒரு துடுக்கு குணம் இருக்கு அப்படிங்கறது நமக்கு தெரியும்.

00:44

Speaker A

எல்லாத்துலயுமே அவசரப்படுறது.

00:46

Speaker A

இப்போ அவங்களுக்கு என்னென்ன குரு நல்ல விஷயங்கள் செய்யப்போறார்னா

00:50

Speaker A

மேஷ ராசிக்காரங்க கொஞ்சம் பத்திரமா பாதுகாப்பா இருந்துக்கிறது நல்லது.

00:56

Speaker A

ஏன் அப்படின்னா

00:57

Speaker A

யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும்

00:59

Speaker A

இந்த குரு அதிசார பயிற்சி அப்படின்னு பார்க்கிறப்போ

02:00

Speaker A

மேஷ ராசி அப்படின்னு பார்க்கிறப்ப

02:02

Speaker A

ஜெனரலாவே மேஷ ராசிக்காரங்களுக்கு வந்து எப்படின்னா எல்லாத்துலயுமே ஒரு துடுக்கு குணம் இருக்கு அப்படிங்கறது நமக்கு தெரியும்.

02:07

Speaker A

எல்லாத்துலயுமே அவசரப்படுறது.

02:09

Speaker A

இப்போ அவங்களுக்கு என்னென்ன குரு நல்ல விஷயங்கள் செய்யப்போறார்னா

02:13

Speaker A

தொழில் ரீதியா நல்ல ஒரு வளர்ச்சியை கொடுக்கக்கூடிய அமைப்பு.

02:16

Speaker A

பணம் இத்தனை நாளா எனக்கு வரவே இல்லை.

02:22

Speaker A

பணம் எங்கேயோ தங்கி இருக்குது.

02:25

Speaker A

ஆனா வரக்கூடிய வழி மட்டும் எனக்கு தெரியல எங்கேயோ யாரோ யாரோனாலும் எனக்கு பணம் தட்டுப்பட்டு இருக்கு அப்படிங்கிற ஒரு விஷயம்லாம் இருக்கு இல்லையா

02:31

Speaker A

அந்த மாதிரி தட்டுப்பட்டு இருக்கக்கூடிய பணம் எல்லாம் உங்களுக்கு வந்து சேரப்போகுது.

02:37

Speaker A

ஆனா குடும்பத்துல கொஞ்சம் நிதானமா இருந்துக்கிறதும்

02:40

Speaker A

அதேபோல உங்களுடைய சுகாதாரத்திலயும் மேஷ ராசிக்காரங்க கொஞ்சம் பத்திரமா பாதுகாப்பா இருந்துக்கிறது நல்லது.

02:46

Speaker A

ஏன் அப்படின்னா

02:47

Speaker A

உங்களுக்கு டிராவலிங் அப்படிங்கறதும் இருக்கப்போகுது.

02:49

Speaker A

நிறைய டிராவல் பண்ணி போகக்கூடிய ஒரு அமைப்பு.

02:52

Speaker A

திவ்ய தேசம் போகணும்னு நினைக்கிறவங்க திவ்ய தேசம் போறது.

02:57

Speaker A

அதாவது புண்ணிய ஸ்தலங்கள் நோக்கி போக ஆரம்பிங்க.

03:00

Speaker A

குரு அப்படிங்கிறவரு புண்ணியம் சேர்க்கக்கூடியவர் இல்லையா?

03:03

Speaker A

உங்களுடைய பூர்வ புண்ணியத்தை குறிக்கக்கூடியவர் குருதான்.

03:06

Speaker A

அப்போ புண்ணியங்களை சேர்க்க போங்க.

03:08

Speaker A

இப்ப இந்த புண்ணியங்கள் நாங்க எங்க போய் முதல்ல சேர்க்கணும் அப்படின்னா

03:13

Speaker A

சில விஷயங்களை கழிச்சிட்டு தான் நம்ம புண்ணியங்கள் சேர்க்க போகணும் அப்படின்னு சொல்லுவாங்க.

03:18

Speaker A

அப்போ திருவண்ணாமலைக்கு போங்க முதல்.

03:20

Speaker A

திருவண்ணாமலைக்கு போயிட்டு

03:22

Speaker A

ஏன்னா அங்கதான் சிவன் தனது தட்சிணாமூர்த்தியா காட்டுறாரு ரொம்ப அதிகமாவே காட்டுறாரு.

03:28

Speaker A

அதாவது மேஷம் ராசி அப்படிங்கிறப்போ கொஞ்சம் தலை தாழ்ந்து

03:33

Speaker A

தெய்வத்தை வந்து நீங்க வழிபாடு பண்ணனும்.

03:36

Speaker A

ஏன்னா உங்களை சுத்தி எல்லாமே நல்ல விஷயங்கள் நடக்கிறப்போ மேஷத்துக்கு என்ன ஆகும்னா

03:43

Speaker A

நானே எல்லாமே இழுத்து போட்டு பண்ணிட்டே இருக்கேனே அப்படிங்கிறப்போ அந்த குடும்பத்துல இருக்கிறவங்க மேல சில கோபங்கள் வரக்கூடிய ஒரு அமைப்பு.

03:50

Speaker A

இந்த மாதிரி எல்லாம் இருக்கிறப்போ

03:52

Speaker A

அவங்களுடைய நிலைமையில போய் அவங்களுடைய வழிகள் வேதனைகள் என்னன்னு உங்களுக்கு தெரியாம போறப்போ

04:00

Speaker A

தவறா பேசக்கூடிய ஒரு அமைப்பு அந்த மாதிரி எல்லாம் இருக்கும்.

04:04

Speaker A

அந்த நிதானம் தவறக்கூடிய

04:07

Speaker A

சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அந்த மாதிரி அமைஞ்சிரும்.

04:11

Speaker A

அதனால எல்லாத்தையும் ஒரு ஈக்குவலா நான் பார்ப்பேன்.

04:16

Speaker A

எல்லாத்தையும் ஈக்குவலா நான் ட்ரீட் பண்ணுவேன்.

04:20

Speaker A

என்னையும் அப்படி ஈக்குவலா பார்க்கணும்னா

04:24

Speaker A

நான் வார்த்தைகள்ல கொஞ்சம் கவனமா இருக்கணும்.

04:27

Speaker A

ஏன்னா உங்களுக்கு பணம் பொருள் வந்து சேரப்போகுது.

04:30

Speaker A

அதோட வராதுன்னு நினைச்ச கடன்கள் எங்காவது இருந்தா கூட வரப்போகுது அப்படிங்கறதுதான் இதனுடைய கணக்கே.

04:37

Speaker A

அப்போ இந்த குடும்பத்துல எல்லாரும் என்ன மதிக்கணும் அப்படிங்கிற ஒரு தாட் வரும்ல.

04:43

Speaker A

இந்த குடும்பத்துக்கு நான் தான் எல்லாமே உடைச்சு போற மதிக்க மாட்டாங்களா?

04:46

Speaker A

அந்த மாதிரி இல்லாம அவங்களுடைய நிலைமையில நிஜமாலுமே உங்களோட பிள்ளைகள் வீட்ல இருக்காங்கன்னா

04:54

Speaker A

என்ன மாதிரியான ஒரு மனக்கவலைகள்ல அவங்க இருக்காங்க?

05:00

Speaker A

அவங்களுக்கு போய் எப்படி நம்ம உதவி பண்ணலாம்?

05:04

Speaker A

அவங்க கூட எப்படி டைம் ஸ்பென்ட் பண்ணலாம் அப்படிங்கறதுலயும்

05:07

Speaker A

குடும்பத்தை ஒரு இந்த மாதிரி சுப செலவுகள் செஞ்சு தெய்வ காரியங்களுக்கு

05:14

Speaker A

சுப விரைய செலவாவே புண்ணிய ஸ்தலங்களுக்கு கூட்டிட்டு போயிட்டு வரதே உங்களுக்கு ஒரு சிறந்த பரிகாரமா இருக்கும்.

05:20

Speaker A

அக்டோபர் 18, 2025 மிதுனத்திலிருந்து கடகத்துக்கு

05:26

Speaker A

குரு வந்து பெயர்ச்சியாகி போறார்.

05:29

Speaker A

அதே இது

05:31

Speaker A

நவம்பர் மாசம்

05:36

Speaker A

திரும்பி கடகத்திலிருந்து மிதுனத்துக்கே போறார்.

05:41

Speaker A

அதுதான் அதிசார பயிற்சி.

05:43

Speaker A

அதாவது ரிவர்ஸ்ல போறது அப்படின்னு சொல்றது.

05:45

Speaker A

குருனா யாரு?

05:46

Speaker A

குரு வந்து அவர் தேவ குரு இல்லையா?

05:50

Speaker A

அவரை வந்து பிரகஸ்பதி அப்படின்னு சொல்றது.

05:52

Speaker A

தேவர்களுக்கெல்லாம் அவர் குரு.

05:54

Speaker A

அப்ப குரு இருக்கிறப்ப என்னென்ன நல்ல விஷயங்கள் நம்ம வாழ்க்கையில நடக்கும்?

05:59

Speaker A

குரு வந்து பிள்ளைப்பேறாகட்டும், திருமணம், செல்வம், செழிப்பு அனைத்து நல்ல விஷயங்களுக்கும்

06:06

Speaker A

குரு ரொம்ப மங்களமா பார்க்கப்படக்கூடிய ஒரு கிரகம் இல்லையா?

06:10

Speaker A

சனி கிட்ட இருந்து தப்பிக்க ஒரே வழி குரு அப்படின்னு இருந்தாலும்

06:14

Speaker A

பெரும்பாலும் எல்லாரும் பயப்படுறது யாருக்கு பயந்துக்குவாங்க?

06:18

Speaker A

சனிக்கு பயந்துக்குவாங்க.

06:19

Speaker A

நிஜமாலுமே யாரு பயப்படணும் தெரியுமா?

06:21

Speaker A

குருவுக்கு தான் பயப்படணும்.

06:22

Speaker A

ஏன் அப்படின்னா

06:23

Speaker A

குரு ஞானக்காரகன்.

06:26

Speaker A

அதாவது

06:27

Speaker A

தர்மம்.

06:28

Speaker A

தர்மமா இருந்தா மட்டுமே குரு உதவி பண்ணுவார்.

06:32

Speaker A

இல்லை அப்படின்னா

06:33

Speaker A

தர்மம் தலைகாக்கும்.

06:35

Speaker A

கிருஷ்ணர் எப்படி வந்து லேட்டா வந்தாலும் பாண்டவர்களுக்கு வந்து

06:41

Speaker A

தர்மப்படி எப்படி யுத்தம் பண்ணனுமோ அதை சொல்லிக் கொடுத்து வெற்றி அடைய வச்சார் இல்லையா?

06:46

Speaker A

தர்மத்தின் பக்கமே கிருஷ்ணர் நிற்பார்.

06:48

Speaker A

தெய்வம் தர்மத்தின் பக்கமே நிற்கும் அப்படிங்கறதுதான் வந்து

06:53

Speaker A

குருவோட கொள்கையே.

06:56

Speaker A

அதனால ஜஸ்ட் லைக் தட் குரு வந்துட்டாரு எங்களை எல்லாம் காப்பாத்திடுவாரு அப்படிங்கறத விட

07:01

Speaker A

நம்ம எந்த அளவுக்கு ஞான தர்மத்தோட இருக்கிறோம் அப்படிங்கறதுதான் வந்து குரு நம்மளுக்கு சொல்லக்கூடிய விஷயமா இருக்கும்.

07:06

Speaker A

சரி இந்த குரு அதிசார பயிற்சினா என்ன?

07:08

Speaker A

இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லுங்க புரியற மாதிரி சொல்லுங்க எங்களுக்கு அது புரியல.

07:13

Speaker A

பெயர்ச்சினா என்ன அதிசார பயிற்சினா என்ன அப்படின்னா

07:15

Speaker A

நம்ம வந்து ஒரு வண்டியில போறோம்னு வச்சுக்கோங்க ஒரு பஸ்னு வச்சுக்கோங்க எல்லாரும் பஸ்ல போயிருப்போம்.

07:20

Speaker A

இப்போ நம்ம பஸ்ல போயிட்டு அந்த பஸ் நிக்குது பக்கத்துல ஒரு ட்ரெயின் ஃபாஸ்ட்டா போறப்போ நம்ம எப்படி ஃபீல் பண்ணுவோம்?

07:26

Speaker A

பஸ் ரிவர்ஸ்ல போற மாதிரி ஃபீல் பண்ணுவோம்.

07:29

Speaker A

ஆனா பஸ் அங்கேயே தான் நிக்குது.

07:30

Speaker A

நம்ம பஸ் ரிவர்ஸ்ல போகல.

07:32

Speaker A

அந்த மாதிரி

07:34

Speaker A

குரு என்ன ஆகுறாருன்னா குரு ஜெனரலாவே

07:37

Speaker A

ஒரு வருடம் ஒரு ஒரு ராசி கட்டத்துல இருப்பாரு.

07:43

Speaker A

மொத்த ராசி கட்டங்களையும் சுத்தி வரதுக்கு 12 வருடம் ஆகும் அப்படின்னு சொல்லுவாங்க.

07:46

Speaker A

அதாவது கிட்டத்தட்ட 13 மாதங்கள் ஒரு ராசியில இருப்பாரு அப்படின்னு சொல்லப்படுது.

07:50

Speaker A

அதுதான் வந்து குரு பெயர்ச்சியா நம்ம பார்க்கிறோம்.

07:53

Speaker A

இங்க என்ன ஆகுது அப்படின்னா

07:55

Speaker A

குரு மிதுனத்திலிருந்து கடகத்துக்கு போயிட்டு இதே மாதிரி நான் எப்படி உங்களுக்கு ரிவர்ஸ் சொன்னேன்.

08:01

Speaker A

அந்த மாதிரி இப்படி ரிவர்ஸ் போறாரு இப்ப.

08:03

Speaker A

அப்படியே அதாவது நம்மளுடைய பூமி சுழற்சி எப்படி காட்டுது அப்படின்னா

08:09

Speaker A

இது வந்து வானில் நடக்கக்கூடிய ஒரு அதிசயமாவே பார்க்கப்படுது.

08:13

Speaker A

அதாவது ஜெனரலா குரு பாட்டுக்கு முன்னோக்கி தான் போகணும்.

08:18

Speaker A

வக்ரம் அடையறாரு.

08:20

Speaker A

வக்ரம்ங்கிறது ஒரு குடிகாரரை போல பிஹேவ் பண்ற மாதிரி ஒரு விஷயம்.

08:24

Speaker A

நிதானத்தை இழந்து.

08:26

Speaker A

அந்த அதாவது இந்த இடத்துல என்ன ஆகுறாருன்னா

08:30

Speaker A

குரு கொஞ்சம் லேட் பண்ண போறார்.

08:32

Speaker A

என்னென்ன செழிப்புகள் எல்லாம் கொடுத்துட்டு இருந்தாரோ

08:37

Speaker A

டக்குன்னு அப்படியே ஸ்டாப் ஆகுறார் அந்த இடத்துல.

08:40

Speaker A

அப்ப என்ன பண்ணுவார்?

08:41

Speaker A

குரு ஏன் ஸ்டாப் ஆகுறாரு?

08:42

Speaker A

குரு உங்களுக்கு கொஞ்சம் நேரம் யோசிக்க வைப்பார்.

08:44

Speaker A

இப்ப நம்ம வந்து தெய்வ தரிசனங்களுக்கு போறோம் காத்திருந்து தரிசனம் பண்ணிட்டு வரோம் இல்லையா?

08:50

Speaker A

கொஞ்ச நேரம் நம்மளுக்கு அப்படியே டயர்ட் ஆகும் எப்படா கடவுளை பார்ப்போம்.

08:54

Speaker A

ஆனா பார்த்துருவோம்.

08:55

Speaker A

அதேதான் வந்து இந்த ரிவர்ஸ் போயிட்டு

08:58

Speaker A

ரெட்ரோகேட் அப்படின்னு சொல்லுவாங்க.

09:00

Speaker A

குரு வந்து பின்னோக்கி போன மாதிரி தெரியும்.

09:03

Speaker A

திரும்பவும் அதே பழைய நிலைமைக்கு அவர் மறுபடியும் இந்த வருட கடைசியில திரும்பவும் வந்துருவார்.

09:08

Speaker A

கொஞ்ச நாளைக்கு தற்காலிகமா அந்த மாதிரி இருக்கக்கூடிய

09:11

Speaker A

அந்த வானில அந்த வானியல் சாஸ்திரப்படி அந்த வானத்துல நடக்கக்கூடிய சில விஷயங்கள்னால

09:17

Speaker A

அப்படி நம்மளுக்கு அந்த பூமியோட சுழற்சியால அப்படி தெரியுது.

09:20

Speaker A

அதாவது

09:22

Speaker A

குரு வந்து கொஞ்சம் கிராஜுவலா அதாவது

09:27

Speaker A

சாதாரணமாக எடுத்த உடனே ஒரு பெரிய வளர்ச்சி அப்படிங்கறது எல்லாம் குரு கொடுக்க மாட்டார்.

09:32

Speaker A

நிதானமா தான் கொடுப்பார்.

09:34

Speaker A

சனி வந்து லேட் பண்ணி லேட் பண்ணி புல் பேக் பண்ணி கொடுப்பார்.

09:38

Speaker A

ஆனா குரு வந்து

09:40

Speaker A

குரோத்தை கொடுப்பார் உங்களுக்கு கண்ணுக்கு நேரா தெரியும் ஆனா உங்களுக்கு தெரியும் அந்த உழைப்பை போடணும்.

09:46

Speaker A

எனக்கு கண்ணு முன்னாடி ஒரு செல்வம் வரப்போகுதுங்கறது எல்லாம் தெரியும் இல்லையா?

09:50

Speaker A

அது இன்னும் நிதானிச்சு கொடுக்கப்போறார் அப்படிங்கறதுதான் வந்து

09:53

Speaker A

அதிசார பயிற்சி அப்படிங்கறது அர்த்தம்.

09:56

Speaker A

இப்போ என்னென்ன ராசிகளுக்கு இந்த அதிசார பயிற்சி

10:00

Speaker A

என்னென்ன மாதிரியான நல்லதை எப்படி கொடுக்கப்போறாரு?

10:05

Speaker A

என்ன பாடத்தை கற்பிக்க வராரு அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும்.

10:09

Speaker A

ஏன்னா குரு குரு அப்படினாலே பாடம் கற்பிக்க தானே வராரு.

10:12

Speaker A

அது இந்த அதிசார பயிற்சி எப்படி தெரியுமா?

10:16

Speaker A

இன் ஒரு கிளாஸ்ல இருந்து புதுசா இன்னொரு கிளாஸ்க்கு ஒரு வாதியார் போறப்ப

10:22

Speaker A

அந்த வாதியார் எப்படி நம்மகிட்ட பிஹேவ் பண்ண போறாருன்னே நம்மளுக்கு தெரியாது.

10:26

Speaker A

அந்த மாதிரிதான் இப்போ இந்த அதிசார பயிற்சியும் நம்மளுக்கு உணர்த்தப்போகக்கூடிய விஷயமா இருக்கும்.

10:30

Speaker A

சரி இந்த குரு அதிசார பயிற்சி யாருக்கெல்லாம் நல்லது பண்ணப்போறார் அப்படின்னா

10:33

Speaker A

கடகம், ரிஷபம், மீனம்.

10:38

Speaker A

இந்த மூணு ராசிகளுக்குமே வந்து குரு அதிசார பயிற்சி நிச்சயமா நல்ல விஷயங்கள் தான் கொடுக்கும்.

10:44

Speaker A

நான் சொன்ன சில விஷயங்கள் இருக்கு இல்லையா கொஞ்சம் கவனமா இருந்துக்கணும்னா.

10:49

Speaker A

அதுல கவனமா இருந்துட்டீங்கன்னா உங்களுக்கு ஜாக்பாட்டே அடிக்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது இருக்கு.

10:52

Speaker A

யாரெல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் இந்த குரு அதிசார பயிற்சி அப்படின்னு பார்க்கிறப்போ

10:57

Speaker A

மிதுனம், தனுசு, மகரம்.

11:02

Speaker A

கொஞ்சம் கவனமா இருந்துக்கிறது நல்லது.

11:05

Speaker A

இந்த அதிசார பயிற்சியில.

11:07

Speaker A

ஏன்னா குரு கொஞ்சம் பின்தங்கி இருக்கிறதுனால எங்கேயாவது ஒரு இடத்துல அவமானங்கள் சந்திக்கக்கூடிய

11:12

Speaker A

ஒரு தருணத்தை அப்படிங்கறது உருவாகிவிடும்.

11:18

Speaker A

குரு உருவாக்க மாட்டார்.

11:20

Speaker A

குரு பின்தங்கி இருக்கிறதுனால அப்படி அமையக்கூடிய ஒரு தருணம் இருக்கிறதுனால

11:26

Speaker A

கவனம் மிக கவனம் அப்படின்னே நான் இந்த மூணு ராசிகளுக்கும் சொல்லுவேன்.

11:30

Speaker A

யாருக்கெல்லாம் ஓகே

11:32

Speaker A

அதாவது ஒரு மத்தியமமா இருக்குது.

11:34

Speaker A

ஒன்னும் இல்ல நீங்க எல்லாம் பிரச்சனை இல்ல உங்களை எல்லாம் குரு அதிசார பயிற்சி பெருசா ஒன்னும் தாக்கப் போறது இல்ல அப்படிங்கறவங்க எல்லாம் யாருன்னு பார்த்தீங்க அப்படின்னா

11:40

Speaker A

மேஷம், கன்னி, துலாம், விருச்சகம், கும்பம்.

11:45

Speaker A

உங்களுக்கெல்லாம் வந்து ஒரு மத்தியமான ஒரு பலன் அப்படிங்கறதுதான் வந்து இந்த குரு அதிசார பயிற்சி அப்படிங்கறது சொல்லுது.

11:51

Speaker A

பொதுவாவே குரு அப்படிங்கிறவர் எதுக்கு வராரு அப்படினாலே

11:55

Speaker A

நம்ம செஞ்ச தவறுகளிலிருந்து சுட்டிக்காட்டி அதை சரி செய்யறதுக்கு தான்.

11:59

Speaker A

அப்ப இந்த குரு அதிசார பயிற்சியை பார்த்து நம்ம எதுக்கு பயந்துக்கணும்னா தர்மத்துக்கு தான் பயந்துக்கணும்.

12:03

Speaker A

சில பரிகார முறைகள் எல்லாம் சரியான முறையில பண்ணி

12:07

Speaker A

பயபக்தியோட பண்ணி இனிமேல் அந்த தவறை நான் செய்ய மாட்டேன்.

12:10

Speaker A

திரும்பி திரும்பி அதே பேட்டர்ன் ரிப்பீட் அந்த ரெபெட்டிஷன்குள்ள நான் போக மாட்டேன் அப்படிங்கிற

12:15

Speaker A

குருக்கெல்லாம் வந்து வாக்கு கொடுத்துரணும் நம்ம.

12:18

Speaker A

குரு வழிபாடு பண்றோம் அப்படினாலே

12:21

Speaker A

அவர் வந்து நம்மளுக்கு டீச்சர் தானே.

12:23

Speaker A

அந்த டீச்சர் என்ன சொல்லுவாங்க ஓகே இனிமேல் நீ இந்த தவறு பண்ணக்கூடாது.

12:26

Speaker A

இனிமேல் அந்த தவறு பண்ண மாட்டேன்னு சொல்லிட்டு திரும்பவும் நம்ம அந்த தவறு பண்றோம்னா

12:31

Speaker A

கர்மத்தின் பாதையில போயிருவோம்.

12:32

Speaker A

இது எப்படின்னா

12:34

Speaker A

கர்மத்திலிருந்து தான் தர்மத்துக்கு போகணும்ங்கிறதுதான் விதி.

12:37

Speaker A

அப்ப இந்த கர்மத்திலிருந்து தர்மத்துக்கு போகணும் அப்படின்னா என்ன பண்ணனும்?

12:41

Speaker A

செஞ்ச தவறுகளை திரும்பவும் செய்யாம இருக்கணும்.

12:43

Speaker A

அதேபோல அந்த கம்ஃபர்ட் ஜோன்லயே இருக்கிறோம் அப்படின்னா ஒரு முயற்சி பண்ணாம இருக்கிறோம் அப்படின்னா

12:48

Speaker A

தர்மத்தின் பாதையில நம்மளால போக முடியாது.

12:50

Speaker A

குருங்கிறவரு ஒரு முயற்சி பாதையை காட்டக்கூடியவர்.

12:53

Speaker A

என்னங்கறதும் ரிஸ்க் எடுத்து பார்க்கிறதுல தப்பு இல்லை.

12:56

Speaker A

ஆனா ரொம்ப நிதானமா அந்த ஞானத்தோட நம்ம அந்த தெய்வத்தை நம்பி

13:02

Speaker A

இந்த யூனிவர்ஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்பி நம்ம செய்யறப்போ

13:05

Speaker A

குரு காட்டுற வழி அப்படிங்கறது சிறந்த வழியா இருக்கும்.

13:10

Speaker A

எல்லாருடைய ஜாதகத்திலயுமே வந்து குரு நல்லா இருக்கிறதுங்கிறது ரொம்ப நல்லது.

13:14

Speaker A

சனிக்கு பயப்படுறதை விட குருவுக்கு தான் பயந்துக்கணும்.

13:17

Speaker A

ஏன்னா சனியாவது தண்டனைகள் கொடுத்துக்கிட்டே இருந்து இருந்து திரும்பி திரும்பி சரி பண்ணுங்க சரி பண்ணுங்கங்கற மாதிரி இருக்கும்.

13:23

Speaker A

ஆனா குரு ஒருத்தங்களுக்கு கெட்டுருச்சு அப்படின்னா மீள்றதுங்கிறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை.

13:28

Speaker A

அப்போ இந்த குரு தட்சணை அப்படிங்கிற ஒரு விஷயம் எல்லாம் இருக்கு இல்லையா?

13:32

Speaker A

குரு தட்சணை எல்லாம் செழிப்பான்னா அது குருவுக்கு வந்து கொடுத்து வழிபாடு பண்ணிட்டு வரது.

13:35

Speaker A

அந்த குரு தட்சணையில பேரம் பேசுறதோ அந்த குரு தட்சணையில வந்து இது பண்ணனா போதுமா அப்படிங்கிற மாதிரி

13:43

Speaker A

அந்த வாக்குவாதங்கள் இருக்கிறதோ சந்தேகமோ குருனாலே சந்தேகமே படவே கூடாது.

13:47

Speaker A

குருவை நம்ம சந்தேகப்பட்டுட்டோம் அப்படினாலே ஏதோ ஒரு வகையில நம்மளுக்கு குரு தோஷமோ குரு பலம் கம்மியா இருக்குங்கிறது அர்த்தம்.

13:53

Speaker A

அது குரு தோஷமாவே பார்க்கப்படுது.

13:55

Speaker A

அதாவது குருமார்களுடைய வழிப்படி போங்கன்னு சொல்றது இல்லை.

14:00

Speaker A

குருமார்கள் சொல்றதை கேட்டு அந்த பாதையை நம்ம பின்பற்றனும் அப்படினாலே

14:06

Speaker A

குருவோட அருள் செழிப்பாவே நமக்கு இருக்கும் அப்படின்னு சொல்லி நான் முடிச்சுக்கிறேன்.

Topics: மேஷ ராசி குரு பெயர்ச்சி 2025 அதிசார பயிற்சி தமிழ் ஜோதிடம் பணம் வர வழி திருவண்ணாமலை புண்ணிய ஸ்தலம் தர்மம் சனி கிரகம் ஆன்மீக பரிகாரம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11915)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11915)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/mesham-money-path-astrologer-jeevitha-2025/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
