**Mesham | குருவால் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும் யோகம் இருக்காம்! | Astrologer Jeevitha — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/mesham-jackpot-yogam-astrologer-jeevitha/

மேஷ ராசிக்குரிய குருவின் நன்மைகள், வழிபாடு மற்றும் பரிகாரங்கள் பற்றி ஜீவிதா ஜோதிடர் விளக்கம்.

## Key Takeaways

- மேஷ ராசிக்காரர்களுக்கு குரு வருவது வாழ்க்கையில் பல நன்மைகள் தரும்.
- குரு வழிபாடு மற்றும் பரிகாரங்கள் மூலம் கஷ்டங்களை குறைக்க முடியும்.
- குரு நீசம் அடைந்தால் கவனமாக இருக்க வேண்டும், இல்லையெனில் பிரச்சினைகள் ஏற்படும்.
- குருவின் ஞானம் மற்றும் ஆதரவு மேஷ ராசிக்காரர்களின் முன்னேற்றத்திற்கு முக்கியம்.
- வீட்டிலிருந்தே தட்சிணாமூர்த்தி மற்றும் கிருஷ்ணர் வழிபாடு பரிகாரமாக சிறந்தது.

## What the video covers

- மேஷ ராசிக்காரர்களுக்கு குரு வருவதால் அதிக மரியாதை, ஞானம் மற்றும் தெய்வ அனுகிரகம் கிடைக்கும்.
- குரு இருப்பது மேஷ ராசிக்காரர்களை கீழ விழுந்து பெருசா அடிபடாம காப்பாற்றும்.
- குருவின் ஆதரவுடன் மேஷ ராசிக்காரர்கள் தொழில், கல்வி மற்றும் வாழ்க்கை சவால்களை சமாளிக்க முடியும்.
- தட்சிணாமூர்த்தி வழிபாடு மற்றும் ஆளங்குடி ஸ்தலங்களில் வழிபாடு பரிகாரமாக சிறந்தது.
- வீட்டிலிருந்தே தட்சிணாமூர்த்தி மற்றும் குழந்தை கிருஷ்ணர் புகைப்படங்களை வைத்து வழிபாடு செய்யலாம்.
- குரு பலம் ஜாதகத்தில் இருப்பது முக்கியம்; அது வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
- குரு நீசம் அடைந்தால் குடும்பத்தில் பிரச்சினைகள், நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
- மேஷ ராசிக்காரர்கள் தங்கள் லீடர்ஷிப் திறன்களை வளர்க்க குருவின் ஞானத்தை பயன்படுத்த வேண்டும்.
- குருவின் பாதிப்பு ராசி, நாலு, ஏழு, பத்து, ஒன்பது போன்ற கேந்திர ஸ்தானங்களில் சிறந்தது.
- சனி மற்றும் புதன் போன்ற கிரகங்களின் தாக்கம் மற்றும் குருவின் இடம் ஜாதகத்தில் முக்கியமானது.

Answers

## Questions about this video

மேஷ ராசிக்காரர்களுக்கு குருவால் ஏற்படும் நன்மைகள் என்ன?

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு ஞானத்தை வழங்குவார். குறிப்பாக, 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் குரு இருக்கும்போது மிகவும் நல்லது. 9-ல் இருந்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.

மேஷ ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலைகளில் கவனமாக இருக்க வேண்டும்?

மேஷ ராசிக்காரர்கள் 6, 8, 12 ஆகிய இடங்களில் குரு இருக்கும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டங்களில் சில போராட்டங்களை சந்திக்க நேரிடலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு குருவின் பங்கு என்ன?

மேஷ ராசிக்காரர்கள் ஆரம்பத்தில் அவசரப்பட்டு தவறான குருக்களை நம்பி விடுவார்கள். குருவானவர் இவர்களுக்கு ஞானத் தெளிவை அளித்து, தவறான பாதையில் செல்வதிலிருந்து காப்பாற்றி, சரியான மரியாதையைப் பெற உதவுவார்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

பொதுவாகவே மேஷ ராசிக்கு வந்து அந்த லீடர்ஷிப் ஸ்கில் அப்படிங்கறது உண்டு.

00:03

Speaker A

அப்படி இருக்கிற பட்சத்துல இவங்களுக்கு சில காலங்கள் ஆகும்.

00:05

Speaker A

அந்த மரியாதை என்ன அப்படிங்கறது புரியறதுக்கு வார்த்தைகளால சரி பண்றதுக்காக குரு அப்படிங்கறவங்க வருவாங்க.

00:13

Speaker A

இயற்கையாவே ஹெல்ப்பிங் டெண்டன்சி அப்படிங்கறது மேஷ ராசிக்கு இருந்தாலுமே தவறான குருட்ட போய் முதல் போய் விழுவாங்க.

00:21

Speaker A

இந்த வெகளித்தனம் இருக்கிற வரைக்கும் குரு ஏதோ ஒரு வகையில இவங்களை காப்பாத்திக்கிட்டே இருப்பாங்க.

00:25

Speaker A

இந்த கீழ விழுந்து பெருசா அடிபடாம காப்பாத்துறது குருவா தான் இருப்பாங்க.

00:31

Speaker A

இவங்க கிட்ட இருக்கிற ஞானத்தை வந்து இவங்க ஏதோ ஒரு வகையில சேவைகளா பண்ணிட்டு இருக்காங்க அப்படின்னு வச்சுக்கோங்க.

00:36

Speaker A

நாலேட்ஜ் ஷேரிங் அப்படிங்கறப்போ குரு வந்து இவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க.

00:45

Speaker B

முதல்ல இருக்கக்கூடிய ராசிக்காரர்கள் அப்படின்னு பார்த்தீங்கன்னா மேஷ ராசிதான்.

00:48

Speaker B

சோ இவங்களுக்கு வந்து இந்த குரு என்னென்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் பண்ணுவாங்க மேம்.

00:52

Speaker A

இப்ப மேஷ ராசி அப்படின்னு பார்க்கிறப்போ ஒன்னு, நாலு, ஏழு, பத்து அந்த கேந்திர ஸ்தானத்தில் இருக்கிறப்போ ரொம்ப நல்லா இருக்கும்.

00:59

Speaker A

ஒன்பதுல இருந்தாலும் நல்லா இருக்கும் இதேதான் நான் சொன்ன மாதிரி ஆறு, எட்டு, பன்னண்டு அப்படின்னு வரப்போ இவங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் மேஷ ராசிக்காரங்க அப்படினாலே ஜெனரலாவே வந்து அவங்க துடுக்கான ஆட்களா நம்ம பார்க்கப்படுது.

01:48

Speaker B

ஆமா.

01:49

Speaker A

இப்ப குரு என்ன பண்ணுவாங்க அப்படின்னா ஞானத்தை கொடுக்கறதுக்காக சில போராட்டங்களை போராடுவார்னே சொல்லலாம் மேஷத்துக்கு.

01:55

Speaker B

ஓகே.

01:57

Speaker A

ஏன்னா மேஷத்துக்கு அந்த சிந்திக்கக்கூடிய விஷயம் அப்படிங்கறது அவசரப்பட்டு ஆரம்ப கால நிலைகள்ல அந்த மாதிரி இருப்பாங்க அவசரப்பட்டு தானா போய் முன்னாடி நின்னு உதவி பண்றது இந்த மாதிரிலாம் உள்ளுக்குள்ளேயே அசிங்கப்பட்டுட்டு வர மாதிரி சில விஷயங்கள் ஏன்னா குருங்கிறது குரு நல்லா இருந்தாதான் நம்ம வந்து ஒரு மரியாதையான ஒரு இடங்களிலேயே இருக்க முடியும்.

02:16

Speaker B

ஆமா.

02:17

Speaker A

பொதுவாகவே மேஷ ராசிக்கு வந்து அந்த லீடர்ஷிப் ஸ்கில் அப்படிங்கறது உண்டு.

02:21

Speaker A

இவங்க ஆளுமையானவங்க தன்னை மதிக்கணும், மரியாதை கொடுக்கணும், ரெகக்னிஷன், அந்த வேலிடேஷன் அப்படிங்கற எக்ஸ்பெக்டேஷன்லாம் வந்து மேஷ ராசிக்காரங்களுக்கு உண்டு.

02:30

Speaker A

அப்படி இருக்கிற பட்சத்துல இவங்களுக்கு சில காலங்கள் ஆகும் மேஷத்துல இருக்கவங்களுக்கு வந்து.

02:34

Speaker A

அந்த மரியாதை என்ன அப்படிங்கறது புரியறதுக்கு வார்த்தைகளால சரி பண்றதுக்காக குரு அப்படிங்கறவங்க வருவாங்க.

02:40

Speaker A

அதாவது இவங்க ஆளங்குடிக்கு போய் வழிபாடு பண்றது.

02:42

Speaker B

ஓகே.

02:43

Speaker A

ஆளங்குடி ஸ்தலங்களுக்கு போறது.

02:46

Speaker A

அதே மாதிரி இவங்களுக்கு வந்து இயற்கையாவே ஹெல்ப்பிங் டெண்டன்சி அப்படிங்கறது மேஷ ராசிக்கு இருந்தாலுமே.

02:51

Speaker A

தவறான குருட்ட போய் முதல் போய் விழுவாங்க.

02:55

Speaker A

தவறா அதாவது தவறான குருனா அவசரப்பட்டு நம்பிடுறது.

03:00

Speaker A

இவங்கதான் அப்படின்னு நம்பி அதுக்கப்புறம் குரு ஒரு ஞான தெளிவை கொடுத்து தெய்வ அனுகிரகம் அப்படிங்கறது ஒன்னு கிடைச்சு அதுக்கு அப்புறம்தான் வந்து மேஷ ராசிக்காரங்க வந்து ஒரு பாயிண்ட் ஆஃப் லைஃப்ங்கறது எப்படின்னா ஒரு 35 வயசுன்னு வச்சுக்கோங்க.

03:10

Speaker A

அந்த டைம்லதான் வந்து அந்த குரு ஸ்தானத்துக்கான விஷயங்களை வந்து அனுபவிக்கக்கூடிய தன்மை அப்படிங்கறதே அவங்களுக்கு வரும்.

03:16

Speaker A

அதுவரைக்குமே இந்த வெகளித்தனம் இருக்கிற வரைக்கும் குரு ஏதோ ஒரு வகையில ஆனா இவங்களை காப்பாத்திக்கிட்டே இருப்பாங்க.

03:21

Speaker A

இந்த மேஷத்துல இருக்கவங்களுக்கு வந்து கீழ விழுந்து பெருசா அடிபடாம காப்பாத்துறது குருவாதான் இருப்பாங்க மேஷத்துக்கு.

03:26

Speaker A

தொழில்.

03:28

Speaker A

இவங்க வந்து தொழில் சூஸ் பண்றது சனி சம்பந்தப்பட்டவங்களுக்கு வேலை கொடுக்கிறது.

03:33

Speaker A

இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் பண்றப்ப குரு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவாரு.

03:37

Speaker A

படிப்புக்கு நிறைய மேஷ ராசிக்காரங்க எல்லாம் வந்து சொல்லாம உதவி பண்ணனும்.

03:41

Speaker B

ஓகே.

03:41

Speaker A

அப்படி சொல்லாம உதவி பண்றப்போ மேஷ ராசிக்காரங்களுக்கு அந்த லீடர்ஷிப் ஸ்கில் இருக்குன்னு சொன்னேன் இல்லையா.

03:46

Speaker A

இவங்க கிட்ட இருக்கிற ஞானத்தை வந்து இவங்க ஏதோ ஒரு வகையில சேவைகளா பண்ணிட்டு இருக்காங்க அப்படின்னு வச்சுக்கோங்க.

03:53

Speaker A

நாலேட்ஜ் ஷேரிங் அப்படிங்கறப்போ குரு வந்து இவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க.

03:57

Speaker A

இவங்க வந்து வருஷத்துக்கு ஒரு தடவை ஆளங்குடி போய் வழிபாடு பண்ணிட்டு வர்றது.

04:01

Speaker A

அதேபோல தெற்கு நோக்கி இருக்கக்கூடிய கோயில்களுக்கு போய் அங்கிருந்து தட்சிணாமூர்த்தியை வழிபாடு பண்றதுமே வந்து இவங்களுக்கு ரொம்ப உகந்த ஒரு பரிகாரம் அப்படின்னு சொல்லலாம்.

04:10

Speaker B

ஓகே மேம் இப்ப வந்து ஸ்தலங்களுக்கு அவங்களால போக முடியல அப்படின்னா வீட்ல இருந்து பரிகாரங்களோ இல்ல ஏதாவது வழிபாடோ பண்ண முடியுமா மேம்?

04:15

Speaker A

வீட்ல வந்து இவங்க தட்சிணாமூர்த்தி போட்டோ வச்சு வழிபாடு பண்றது.

04:19

Speaker A

அதே மாதிரி பக்கத்துல ஏதாவது குழந்தை கிருஷ்ணரையும் வச்சிட்டு இவங்க வழிபாடு பண்றப்போ கிட்டத்தட்ட மேஷ ராசிக்காரங்களுக்கு வந்து.

04:25

Speaker A

நான் சொன்னேன் இல்லையா அந்த ஒரு குழந்தைத்தனமான சில விஷயங்கள் அப்படிங்கறதெல்லாம் அவங்களுக்கு இருக்கும்.

04:30

Speaker A

இதை வந்து ஒரு தெளிவு நிலைக்கு கொடுக்கக்கூடிய ஒரு அமைப்புக்குதான் நான் வந்து இந்த மாதிரி ஒரு கிருஷ்ணர் ஒரு குழந்தை வடிவத்தில் இருந்து வழிபாடு பண்றப்போ.

04:37

Speaker A

இந்த மேஷத்துக்கு ஒரு வகையில கிருஷ்ணர்ங்கிறவர் காப்பாத்திக்கிட்டே இருக்கிற மாதிரி ஒரு அமைப்பு.

04:43

Speaker A

இந்த விஷ்ணு, இந்த விஷ்ணு வழிபாடு இதெல்லாம் பண்ணிட்டு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகள்ல வழிபாடு பண்றது.

04:47

Speaker A

முடிஞ்சா வீட்ல இருந்து வழிபாடு பண்றாங்கன்னா காலையில ஒரு லைட்டான ஒரு ஃபுட்டா சாப்பிட்டுட்டு வீட்ல ஒரு சுண்டல் வச்சிட்டு வழிபாடு பண்றது.

04:52

Speaker A

முடிஞ்சா இவங்க யங்ஸ்டரா இருக்காங்கன்னா காலையில இவங்க விரதம் இருக்கலாம்.

04:56

Speaker A

இப்போ வயாதிகத்துல இருக்காங்கன்னா அவங்க எல்லாம் வந்து விரதம் இருக்கணும்ங்கிறது அவசியம் கிடையாது.

05:02

Speaker A

ஒரு லைட் ஃபுட்டா சாப்பிட்டுட்டு பண்ணிட்டாங்க ஒரு விரதம் இருந்து ஒரு பரிகாரம் பண்றாங்க அப்படின்னா அவங்களுக்கு குரு நல்லா ஹெல்ப் பண்ணுவாங்க.

05:07

Speaker B

சூப்பர் சூப்பர் அதாவது மேஷ ராசிக்காரங்களுக்கு வந்து என்னென்ன மாதிரியான விஷயங்கள் நடக்கும் அப்படின்னு சொல்லிட்டு ரொம்ப அழகா சொன்னீங்க.

05:12

Speaker B

தேங்க்யூ மேம்.

05:13

Speaker A

தேங்க்யூ.

05:14

Speaker B

பொதுவாவே எல்லார்கிட்டயும் ஒரு பார்வை இருக்கும் மேம்.

05:17

Speaker B

என்ன அப்படின்னா சனி அப்படின்னு சொல்லிட்டாலே அத்தி சனியா அப்படின்னு சொல்லிட்டு ஒரு பயம் இருக்கும்.

05:21

Speaker B

அதே வந்து குரு உங்க ராசியில இருக்காருப்பா அப்படின்னு சொன்னா அவங்களுக்குள்ள ஒரு அவ்வளவு அளவுகடந்த மகிழ்ச்சி இருக்கும்னே சொல்லலாம்.

05:26

Speaker B

ஏன்னா குரு வந்துட்டாலே நமக்கு எல்லாமே நன்மையா நடக்கும் அப்படின்னு சொல்றது.

05:29

Speaker B

சோ இந்த குரு நம்முடைய ஜாதகத்துல எங்கெங்க இருந்தா என்னென்ன மாதிரியான நன்மைகள் கொடுப்பார்னு முதல்ல சொல்லிருங்க.

05:33

Speaker A

அதாவது ஒரு ஜாதக கட்டம் அப்படின்னு எடுத்துக்கிறோம்னு வச்சுக்கோங்களேன்.

05:36

Speaker A

அவங்களுக்கு வந்து குரு பலமா இருக்கணும் அப்படின்னு சொல்லப்படுது.

05:39

Speaker A

இப்போ வந்து கடகத்துல உச்சம் அப்படின்னு பார்க்கிறப்போ புதன் அப்படின்னு வரப்போ.

05:43

Speaker A

புதனுக்கு பகை, சுக்கிரனுக்கு பகை அப்படின்னு சொல்லப்படுது.

05:46

Speaker A

அதே மாதிரி மகரத்துல அது நீசம் அடையுது அப்படின்னு சொல்லப்படுது.

05:50

Speaker A

எல்லாத்துக்குமே ஒரு புராண கதைகள் அப்படி இருந்தாலுமே.

05:55

Speaker A

ஜெனரலா நம்ம பார்க்கிறோம் அப்படின்னா.

05:58

Speaker A

குரு அப்படிங்கிறவர் வந்து தேவர் தேவர்களுக்கு அவர்தான் குரு அப்படின்னு சொல்லப்படுது.

06:01

Speaker A

சுக்கிரன் அப்படின்னு பார்க்கிறப்போ அசுர குரு அப்படின்னு சொல்றப்போ.

06:04

Speaker A

இவங்க ரெண்டு பேரும் பகையாளிகள் ஆயிடுறாங்க.

06:07

Speaker A

புதன் அப்படிங்கிறது எல்லாமே லாஜிக்கலா திங்க் பண்ணிட்டு போகக்கூடிய ஒரு அமைப்புல இருக்கிறப்போ.

06:12

Speaker A

குரு வந்து ஞான ஞானத்தை குறிக்கக்கூடிய ஒரு விஷயமா இருக்கிறப்போ.

06:17

Speaker A

இவர் எல்லாமே வந்து பிலாசபிக்கலா பார்க்கக்கூடியவர் குரு.

06:22

Speaker A

ஆனா வந்து புதனால பிலாசபிக்கலாலாம் பார்க்க முடியாது.

06:25

Speaker A

என்ன லாஜிக்கோ என்ன விஷயமோ அதை ஷார்ப்பா போறப்போ குருவால புதனுக்கு எக்ஸ்பிளைன் பண்ண முடியாம போறப்ப.

06:31

Speaker A

புதன் அமைப்பு இருக்கவங்க அதாவது மிதுனம், கன்னி அப்படிங்கிறவங்க எல்லாம் வந்து புதன்தான் வந்து அதுக்கான லேண்ட் லார்ட் அப்படிங்கிறதே வந்து புதன்.

06:38

Speaker A

இந்த மிதுனத்துக்கும் கன்னிக்கும் அப்படின்னு பார்க்கிறப்ப.

06:41

Speaker A

இவங்க ஏதோ ஒரு வகையில அவமானப்படுற மாதிரியோ இல்ல குரு பலம் இல்லாத மாதிரியோ அப்படிங்கிற மாதிரி சிச்சுவேஷன்ஸ் இருக்கும்.

06:48

Speaker A

மொத்தத்திலேயே ஜாதகம்னு பார்க்கிறப்போ.

06:51

Speaker A

ஆறு, எட்டு, பன்னண்டு இதுல குரு இருக்கு அப்படினாலே அவங்க அவங்க ஜாதக கட்டத்துல குரு இருக்கு அப்படினாலே.

06:57

Speaker A

கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.

07:00

Speaker A

அதுபோக.

07:02

Speaker A

ஒன்னு, அஞ்சு, ஏழு, ஒன்பது, பதினொன்னு இந்த ஸ்தானங்கள்ல ரெண்டுலயும் குரு இந்த ஸ்தானங்கள்ல குரு இருக்கிறாங்க அப்படின்னா.

07:10

Speaker A

நல்லது செய்வார்.

07:11

Speaker A

அவங்களுக்கு குரு திசை போறப்போ நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லப்படுது.

07:14

Speaker A

சில பேத்துக்கு வந்து லக்னத்துல குரு இருக்கும்.

07:16

Speaker A

ஆனா அங்க நீசம் அடைஞ்சிருக்கும்.

07:18

Speaker A

அப்படின்னுலாம் ஒன்னு இருக்கு அப்படி நீசமே அடைஞ்சாலும் குருவை ஸ்ட்ரென்தன் பண்ணிட்டாங்க அப்படின்னா குரு ஹெல்ப் பண்ணும்.

07:22

Speaker A

ஒரு சில சில பேத்துக்கு குரு பலமே இருக்காது.

07:26

Speaker A

அதாவது குரு நீசம் அடைஞ்சுக்கூடிய ஒரு அமைப்பு மறைவு ஸ்தானத்தில் இருக்கக்கூடிய அமைப்புலாம் இருக்கிறப்ப.

07:32

Speaker A

அங்கதான் வந்து துர்மரணங்கள் நடக்கக்கூடிய அமைப்பும், நோய்வாய்ப்பட்டு இறக்கக்கூடிய அமைப்பும்.

07:38

Speaker A

அதாவது எல்லாரும் சனிக்கு பயந்துக்கிறாங்கன்னு வச்சுக்கோங்க.

07:42

Speaker A

பயந்துக்க வேண்டியது குருவுக்குதான் பயந்துக்கணும்.

07:44

Speaker A

குரு நல்லா இருக்கணும்.

07:45

Speaker A

குருவுடைய பலம் இல்லை அப்படின்னா மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கிடும்.

07:50

Speaker A

அதாவது அந்த குடும்பம் அந்த குடும்பத்துக்கு விமோசனம் அப்படிங்கறது கிடைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும்.

07:55

Speaker A

இப்போ ஒரு சில ராசி அமைப்புகள் எல்லாம் எப்படி இருக்கும்னா அந்த குடும்பத்துக்கே குரு பலம் கம்மியா இருக்கு அப்படிங்கிற மாதிரிலாம் அமைப்புள்ள ஜாதகங்கள் எல்லாம் இருக்கும்.

08:02

Speaker A

அவங்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்னா அவங்க ஃபேமிலில அந்த டீனேஜர்ஸால ஒரு முன்னுக்கு வராம போறது.

08:08

Speaker A

திருமணம் அமையாம போகக்கூடிய அமைப்பு எத்தனை வயதானாலும் திருமணத்துக்காக ஏங்கிட்டே இருக்கக்கூடிய ஒரு அமைப்பு.

08:12

Speaker A

குரு அப்படிங்கறதே வந்து குரு இருக்கக்கூடிய இடம் அப்படிங்கறது செழிப்பாக்கக்கூடிய ஒரு இடம் அப்படின்னு சொல்லப்படுது.

08:17

Speaker A

குரு ஆரோக்கியத்தையும் குறிக்கும் நல்லபடியான ஒரு ஆரோக்கியம் நல்ல ஒரு பேச்சுத்திறன் அந்த அறிவாற்றல் அந்த மாதிரி எல்லா விஷயங்களும் குறிக்கக்கூடியது குரு.

08:23

Speaker A

அப்படி பார்க்கிறப்ப இப்ப இந்த குரு வந்து கெட்டுட்டாரு அப்படின்னா.

08:26

Speaker A

யாரு என்ன சொன்னாலும் திரும்பத் திரும்ப கேள்வி கேட்டுட்டே இருக்க வச்சுக்கிட்டே இருக்கும் அவங்களை.

08:31

Speaker A

ஒரு விஷயத்தை சொல்லி அவங்களுக்கு நம்ம புரிய வைக்கவே முடியாது.

08:35

Speaker A

திரும்பத் திரும்ப கேள்வி கேட்க வச்சுக்கிட்டே இருக்கும்.

08:38

Speaker A

இப்போ மீன ராசி எடுத்துக்கிறோம்னு வச்சுக்கோங்க.

08:41

Speaker A

அது குருவுடைய வீடாகவே இருந்தாலும் அங்க சந்திரன் ஒரு பிளே பண்ணும்.

08:46

Speaker A

அங்க சந்திரன் சரியா இருக்கணும் சந்திரன் சரியா இல்லை அப்படின்னா அங்க குருவால ஹெல்ப் பண்ணவே முடியாது.

08:51

Speaker A

அவங்க அவங்களுக்கு குரு நல்லா இருந்தா மட்டும்தான் லைஃப் ஒரு குரோத் அப்படிங்கறது அவங்களுக்கு வரும்.

08:56

Speaker A

இல்லைன்னா வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படக்கூடிய ஒரு அமைப்பு இந்த மாதிரிலாம் வந்துரும்.

09:00

Speaker A

இப்போ தனுசுக்கும் குரு வீடா இருந்தாலும் அவருக்கும் குரு நல்லா இருக்கணும்.

09:05

Speaker A

இல்லை அப்படின்னா தொழில் ரீதியா அவமானங்கள் அப்படிங்கறது கொடுத்துரும்.

09:08

Speaker A

அதனால இந்த உச்சம், நீச்சம், பகையாகவே இருந்தாலும் நம்ம சொல்றோம்ல திக்பலம் பெற்றிருக்கணும் அப்படின்னு நம்ம சொல்லுவோம்.

09:13

Speaker A

அந்த திக்பலம் அந்த திக்பலம்ங்கிறது ஆறு வகையான பலன்கள் அந்த ஆறு வகையான பலன்கள்ல ஏதோ ஒரு பலன் அடைஞ்சா கூட தப்பிச்சுக்குவாங்க.

09:20

Speaker A

இல்லை அப்படின்னா நீசம் அடையுதுங்கிறப்போ குரு திசை போறப்போ மிக மிக கவனம் அப்படிங்கறதுதான் எல்லாத்துக்கும் குரு திசை போதா வாவ் சூப்பர்னு நம்ம வாழ்த்திட முடியாது.

09:26

Speaker A

குரு இருக்கக்கூடிய இடத்தை பொறுத்தும் அது அமையும்.

Topics: மேஷ ராசி குரு நன்மைகள் தட்சிணாமூர்த்தி வழிபாடு ஜோதிடம் பரிகாரம் வழிபாடு ஜாதக பலன் கிரக நிலைகள் லீடர்ஷிப் ஜோதிடர் ஜீவிதா


---
This is the markdown twin of https://sozai.app/transcript/mesham-jackpot-yogam-astrologer-jeevitha/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
