**மேஷம் - 11 ராசிகளுக்கும் ராஜபார்வை நீங்கள்  | Mesham | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/mesham-11-rashis-raajaparvai/

மேஷம் ராசிக்கான கால புருஷ தத்துவம், வாழ்க்கை பாடங்கள் மற்றும் முக்கிய வழிகாட்டுதல்கள் பற்றிய விளக்கம்.

## Key Takeaways

- மேஷம் ராசி பிறந்தவர்கள் வாழ்க்கையில் தொடக்கம் மற்றும் முன்னேற்றத்தின் சின்னமாக இருக்கிறார்கள்.
- கால புருஷ தத்துவம் மூலம் வாழ்க்கை பாடங்களை புரிந்து, விதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- ஆளுமைத்திறன் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்காக தியானம் மற்றும் பக்தி அவசியம்.
- புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் பழக்கம் வாழ்க்கையை சீரமைக்க உதவும்.
- வெகளித்தனம் மற்றும் பொறுமை குறைவு போன்ற சவால்களை சமாளிக்க வேண்டும்.

## What the video covers

- கால புருஷ தத்துவம் மூலம் 12 ராசிகளுக்கும் பிறப்பின் காரணம் மற்றும் வாழ்க்கை பாடங்கள் விளக்கப்படுகின்றன.
- மேஷம் ராசியில் பிறந்தவர்கள் அதிக ஆற்றல், வெகளித்தனம் மற்றும் பொறுமை குறைவு போன்ற தன்மைகள் கொண்டவர்கள்.
- மேஷம் ராசியின் பயணம் தொடக்கம் என்பதால், இவர்கள் பல கட்டங்களை கடந்து முன்னேற வேண்டும்.
- மேஷம் ராசிக்கான டிராப் என்பது முந்திரிக்கொட்டை போன்ற மூளைப்பகுதி தொடர்புடைய சிக்கல்கள் மற்றும் தலைவலி ஆகும்.
- இவர்கள் ஆளுமைத்திறன் கொண்டவர்கள், ஆனாலும் அதனை வளர்க்க ஹாஃப் நாலேட்ஜா மற்றும் தியானம் அவசியம்.
- சிவன் மற்றும் முருகர் வழிபாடு மேஷம் ராசிக்கான முக்கிய ஆன்மீக ஆதரவு ஆகும்.
- மேஷம் ராசி பிறந்தவர்கள் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று புண்ணியம் சேர்க்க வேண்டும்.
- இவர்கள் வாழ்க்கையில் பல தடைகள் மற்றும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள், ஆனால் அதனை சமாளித்து முன்னேற வேண்டும்.
- மேஷம் ராசி பிறந்தவர்கள் பாசிட்டிவ் வைப் கொண்டவர்கள், பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுச்சி அடைவார்கள்.
- கால புருஷ தத்துவம் மூலம் வாழ்க்கையின் விதியை ஏற்று, புலம்பாமல் வாழ வேண்டும்.

Answers

## Questions about this video

கால புருஷ தத்துவம் என்றால் என்ன?

கால புருஷ தத்துவம் என்பது நாம் ஏன் பிறந்தோம் என்பதற்கான காரணம், அதாவது கர்மா. இது காஸ்மிக் எனர்ஜியைக் குறிக்கிறது, மேலும் மனிதன் காரண காரியத்துடன் பிறக்கிறான் என்பதை விளக்குகிறது.

கால புருஷ தத்துவம் 12 ராசிகளுடன் எவ்வாறு தொடர்புடையது?

கால புருஷ தத்துவம் 12 ராசிகளுடன் தொடர்புடையது, ஏனெனில் 24 மணி நேரம் 12 மணி நேரமாகப் பிரிக்கப்பட்டது போல, 12 ராசிகளும் கால புருஷ தத்துவத்தின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு ராசியிலும் பிறந்தவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது 'டிராப்' இருக்கும்.

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கால புருஷ தத்துவம் என்ன மாற்றங்களை ஏற்படுத்தும்?

மேஷம் என்பது தொடக்கத்தைக் குறிக்கிறது, ஜுவாலையிலிருந்து எல்லாமே தொடங்குவது போல, மேஷ ராசியினர் வெளிச்சமானவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட 'டிராப்' இருக்கும், அதை அவர்கள் புரிந்துகொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:15

Speaker A

வணக்கம்மா.

00:16

Speaker B

வணக்கம்.

00:17

Speaker A

எப்படி இருக்கீங்க?

00:18

Speaker B

நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?

00:19

Speaker A

நல்லா இருக்கேன். சோ ஒவ்வொரு ஒவ்வொரு வாரமும் நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா ஒவ்வொரு ராசிகளுக்கும் எது முக்கியம் என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது அப்படிங்கறத ரொம்ப தெளிவா சொல்லிட்டு இருக்கோம். அதுல ரொம்ப முக்கியமா கால புருஷ தத்துவம் அப்படிங்கறது இருக்கு.

00:33

Speaker B

கால புருஷ தத்துவம் அப்படிங்கறது வந்து இந்த காஸ்மிக் எனர்ஜி. நம்ம ஏன் பிறந்தோம் அப்படிங்கறதுக்கான காரணம் அதாவது கர்மா. நம்ம வந்து காரண காரியத்தோட தான் பிறக்கிறோம் அப்படிங்கறது இருக்கு. அதாவது தலை முதல் பாதம் வரை அப்படின்னு சொல்றது.

00:46

Speaker B

அதுதான் வந்து மேஷம் முதல் மீனம் வரை. ஒரு மனுஷன் ஏன் மேஷத்துல பிறக்கிறாங்க? அப்போ அவங்க என்ன டிராப்ல சிக்க போறாங்க? எப்படி அவங்க வாழ்க்கையிலிருந்து ரிலீவ் ஆகணும்? ஏன்னா மனிதன் மீண்டும் மீண்டும் பிறக்கிறாங்க அப்படினாலே நம்ம ஏதோ ஒரு செய்யாத ஒரு கடமையை

01:01

Speaker B

திரும்பவும் முடிக்கிறதுக்காக பிறந்த ஒரு பிறப்பு இல்ல லைஃப் எக்ஸ்பீரியன்ஸ்க்காக வரோம்.

01:10

Speaker B

எல்லாருமே வந்து கடமையை முடிக்கிறதுக்கு தான் பிறந்தாங்களா அப்படிங்கறது கிடையாது.

01:15

Speaker B

அதுதான் கால புருஷ தத்துவம்.

01:17

Speaker B

அதாவது இன்னும் ஜர்னி இருக்கு அப்படிங்கிற ராசிகளும் இருக்காங்க.

01:22

Speaker B

இல்ல உங்களுக்கு ஜர்னி முடியப்போகுது அதனால இந்த ஜென்மத்திலேயே இதை முடிச்சுக்கோங்க.

01:28

Speaker B

இதுக்கான விடையை நீங்க கண்டுபிடிச்சிருங்க அப்படிங்கிற ஒரு விஷயம் தான் இது.

01:31

Speaker B

சோ இந்த கால புருஷ தத்துவம் அப்படின்னு பார்க்கிறப்போ இது வந்து வைட் ரேஞ்ச் ஆஃப் நாலேட்ஜ்.

01:36

Speaker B

அதுதான் அந்த கால புருஷ தத்துவம்.

01:38

Speaker B

மனிதன் பிறப்பிலிருந்தே கொஞ்ச நாள்ல தேட ஆரம்பிச்சிருவாங்க நான் ஏன் பிறந்தேன் நான் யாரு என்னோட ஐடென்டிஃபிகேஷன் என்னன்னு மாறிக்கிட்டே இருக்கும்.

01:45

Speaker B

ஒரு குழந்தை பருவத்திலிருந்து ஒவ்வொரு விஷயமும் மாறிக்கிட்டே இருக்கிறப்போ நமக்கு ஆசாபாசங்கள்னு ஒன்னு இருக்கும் ஆனா விதி வேறு ஒரு வழியில கூட்டிட்டு போகும்.

01:51

Speaker B

கால புருஷன் அப்படிங்கறது காலம் அப்படிங்கறது நேரம். புருஷன் அப்படிங்கறது பர்சன் மனிதனை சொல்லக்கூடியது அதுதான் கால புருஷன்.

01:59

Speaker B

இந்த காலத்துல இந்த மனிதன் பிறக்கிறார் அப்படிங்கறதுதான்.

02:02

Speaker B

எப்படி வந்து 24 மணி நேரத்தை வந்து 12 மணி நேரமா பிரிக்கப்பட்டதோ அதுதான் வந்து இந்த 12 ராசிகள்.

02:09

Speaker A

சோ அந்த கால புருஷ தத்துவம் 12 ராசிகளுக்கும் இப்போ ஒவ்வொரு ராசியும் பிறக்கிறவங்களுக்கு வந்துட்டு ஒவ்வொரு டிராப் இருக்கும்.

02:13

Speaker A

இந்த விஷயம் பண்ணலாம் இந்த விஷயம் பண்ணக்கூடாது இவங்க இதுக்காக தான் பிறந்திருக்காங்க அப்படிங்கிற நிறைய விஷயங்கள் சொன்னீங்க.

02:20

Speaker A

சோ அப்படிங்கறத நம்ம ஒவ்வொரு ராசிக்கும் பார்க்கலாம்.

02:23

Speaker A

மேஷ ராசியில் பிறந்தவங்களுக்கு கால புருஷ தத்துவம் எப்படி இருக்கும் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் கொடுக்கும்?

02:29

Speaker B

அதாவது மேஷம் அப்படினாலே ஒன்று தொடக்கம். தொடக்கம்ங்கிறப்போ ஜுவாலையிலிருந்துதான் எல்லாமே தொடங்குது வெளிச்சம்.

02:35

Speaker B

இவங்க ரொம்ப வெளிச்சம்.

02:36

Speaker B

அதே சமயத்துல இவங்களுக்கான டிராப் அப்படின்னு பார்த்தாலும் அவசரம் ஜாஸ்தி.

02:41

Speaker B

நம்ம ஒரு பிறப்பு எடுக்கிறோம் அப்படின்னா இதுல இருந்து இந்த இந்த பிரபஞ்சம் எதுக்காக நம்மளுக்கு வந்து இந்த பிறப்பு கொடுத்திருக்கு அப்படின்னு பார்க்கிறப்போ மேஷத்துக்கு வந்து நிறைய பேரை உருவாக்கக்கூடிய

02:50

Speaker B

நிறைய பேரை ஏணி படிக்கட்டுகளா இருந்து ஏத்தி ஏத்தி அடுத்த லெவலுக்கு கொண்டு போகக்கூடிய அமைப்பை வந்து மேஷ ராசிக்கு கொடுத்திருப்பாங்க.

02:59

Speaker B

இவங்க வந்து நிறைய பேத்தோட வாழ்க்கையில ஒரு வெளிச்சமாவே தான் இருந்திருப்பாங்க அறிந்தோ அறியாமலோ ஏதோ ஒரு காரணத்தினால.

03:04

Speaker B

இவங்க கொடுத்த ஒரு ஐடியா எதுவா வேணாலும் இருக்கலாம்.

03:07

Speaker B

ஆனா என்ன இவங்களுக்கு இருக்க டிராப் அப்படின்னா அந்த முந்திரிக்கொட்டைத்தனம்.

03:10

Speaker B

ஏன்னா இது வந்து தலைப்பகுதியை குறிக்கக்கூடியது மூளைப்பகுதியை குறிக்கக்கூடியது.

03:13

Speaker B

தலைவலி எல்லாம் இந்த மாதிரி எல்லாம் இவங்களுக்கு ரொம்ப வரும் அதாவது பொறுமை அப்படிங்கறது ரொம்ப கம்மி.

03:20

Speaker A

இருக்காதுங்கிறீங்களா?

03:21

Speaker B

இல்ல பொறுமை ரொம்ப கம்மியா இருக்கும்.

03:25

Speaker B

இருக்காது அப்படிங்கறதை விட ஏன் அப்படின்னா மல்டிபிள் திங்கிங் இருந்துகிட்டு இருக்கும் படபடன்னு இருக்கும்.

03:30

Speaker B

வெகளித்தனம் ரொம்ப அதிகம் அவங்களுக்கு.

03:32

Speaker B

இந்த வெகளித்தனம் அப்படிங்கறது நான் எதை சொல்றேன் அப்படின்னா எல்லாத்தையுமே நல்லவங்கன்னு நம்புறது.

03:36

Speaker B

ஒரு குழந்தை எப்படி எல்லாத்தையுமே நல்லவங்கன்னு நம்பும்.

03:40

Speaker B

அந்த ஆதி கடவுள் அப்படின்னு நம்ம சொல்றோம் இல்லையா அந்த ஆதி.

03:42

Speaker B

இவங்கதான் அந்த ஆதி.

03:43

Speaker B

சோ அதாவது இந்த ஆதிங்கிறது எதை குறிக்குது அப்படின்னா நம்ம நான்கு யுகத்தை நம்ம சொல்றோம் இல்லையா அந்த நான்கு யுகத்துல முதல் யுகம்னு ஒன்னு இருந்தப்போ எல்லாருமே நல்லவங்களாவே இருந்தாங்க.

03:50

Speaker B

அந்த மாதிரி ஒரு மைண்ட்செட்லயே இவங்க வந்து ஃப்ரெஷ்ஷாவே மறுபடியும் பிறக்கக்கூடியவங்க.

03:56

Speaker B

அதாவது மறுபடியும்ங்கிறதை விட ஃப்ரெஷ்ஷா பிறந்து

03:59

Speaker B

இப்பதான் லைஃப் எக்ஸ்பீரியன்ஸே ஆகப்போகுது மேஷத்துக்கு.

04:02

Speaker B

சோ மேஷத்துல இருக்கவங்க எல்லாம் வந்து இந்த 108 திவ்ய தேசங்கள் போறாங்கன்னு வச்சுக்கோங்களேன் புண்ணியத்தை சேர்த்துக்கணும்.

04:10

Speaker B

இப்படித்தான் இவங்களுடைய பயணத்தை இவங்க சேர்த்துக்கணும்.

04:13

Speaker B

அதே மாதிரி லக்கும் கூட அதுதான்.

04:15

Speaker B

புண்ணிய ஸ்தலங்களுக்கு போக ஆரம்பிச்சு உதவிகள் நிறைய செய்ய ஆரம்பிச்சு ஏமாற மாட்டேங்கிற மைண்ட்செட்டை முதல் வச்சுக்கணும்.

04:21

Speaker B

இந்த டிராப்ல இருந்து ஃபர்ஸ்ட் வெளிய வரணும்.

04:23

Speaker B

இவங்க கூட பிறக்கிறாங்கன்னு வச்சுக்கோங்களேன்.

04:25

Speaker B

சிப்ளிங்ஸ்லாம் இருப்பாங்க.

04:26

Speaker B

ஏதோ ஒரு காரணத்தினால இவங்களைத்தான் யூஸ் பண்ணிட்டே இருக்கிற மாதிரி இருக்கும்.

04:32

Speaker B

இல்ல இவங்களே முந்திரிக்கொட்டைத்தனமா போய் நிறைய சாக்ரிஃபைஸ் பண்ணி எல்லாத்தையும் இழுத்து போட்டு செஞ்சுட்டு அட்டென்ஷன் சீக்கர்ஸ் இவங்க.

04:39

Speaker B

இப்ப வந்து யாருக்காவது ஏதாவது ஒரு செலிப்ரேஷன் பண்றாங்க அப்படின்னா

04:42

Speaker B

தாம் தூம் பண்ணிடுவாங்க.

04:44

Speaker B

இவங்களுக்கும் அதே பண்ணனும்னு எதிர்பார்க்கிறப்போ அது நடக்கவே நடக்காது.

04:46

Speaker B

இவங்களுடைய ஃபாஸ்ட் இவங்களுடைய கியூரியாசிட்டிக்கு எல்லாத்தாலயும் வர முடியாது.

04:50

Speaker B

இவங்க வந்து ஆளுமைத்திறன் இருக்கக்கூடியவங்க.

04:52

Speaker B

அந்த ஆளுமைத்திறனையும் இவங்க எப்படி வளர்த்துக்கணும் அப்படின்னா ஹாஃப் நாலேட்ஜா இருக்கக்கூடாது.

04:57

Speaker B

சம்டைம்ஸ் அந்த ஹாஃப் நாலேட்ஜா இருந்துகிறது முழுசா விஷயங்கள் தெரியாம போறப்ப போய் ஏமாந்துறது.

05:03

Speaker B

பார்த்துக்கலாம் போய் பார்த்துக்கலாம்.

05:05

Speaker B

அந்த அந்த தூரத்துல போய் பார்த்துக்கலாம்ங்கிறப்போ கால புருஷன் அங்கதான் காத்திருக்கும்.

05:10

Speaker B

அந்த வாழ்க்கை பாடத்தை சொல்லிக் கொடுக்கிறதுக்காக காத்திருக்கும்.

05:13

Speaker B

போய் நேரா முட்டி மோதி ஏன்னா அது ஒரு ஆடு இந்த ஆட்டு மந்தைகளோட நீ போயிடக்கூடாது முட்டி மோதிட்டு வா.

05:20

Speaker B

வந்து கொஞ்ச நேரம் சிந்தி அதாவது இவங்க எல்லாம் வந்து

05:23

Speaker B

சிவன் ஸ்தலங்கள்ல போய் அமைதியா பேசாம உட்காருது முருகர் வழிபாடு.

05:27

Speaker B

இவங்களுக்கு முருகர் ஏன்னா முருகர் வந்து விதியை மாத்தி அமைக்கக்கூடிய ஒரு அமைப்பு இருக்கிறதுனால மேஷத்துக்கு முருகர் நல்லா கனெக்ட் ஆவாங்க.

05:34

Speaker B

அங்க போய் அமர்ந்து ஒரு தியான நிலையில பேசாம உட்கார்ந்தாதான் நிதானம்ங்கிறது ரொம்ப ரொம்ப இவங்களுக்கு முக்கியம்.

05:40

Speaker B

நிதானங்கிறது கோயிலுக்கு போனாத்தான் இவங்களுக்கு நடக்கும்.

05:44

Speaker B

இல்ல நாங்களுக்கெல்லாம் எங்களுக்கு கடவுள் பக்தி எல்லாம் இல்ல அப்படின்னா கூட

05:46

Speaker B

நீங்க இருக்கக்கூடிய இடத்திலேயே ஒரு அமைதியா நிதானமா யாரைப்பத்தியும் சிந்திக்காம எதைப்பத்தியும் சிந்திக்காம ஏன்னா பெர்ஃபெக்ஷனிஸ்ட்.

05:54

Speaker B

மத்தவங்க பெர்ஃபெக்ட்டா இருக்கணும் தன்னை சுத்தி இருக்கவங்க பெர்ஃபெக்ட்டா இருக்கணும்னு அவங்க ஏன் இதை செய்யல இவன் ஏன் அதை செய்யலங்கிற தாட் ப்ராசஸ்லயே இருப்பாங்க.

06:01

Speaker B

அப்படி இருக்கப்போ இவங்களுக்கு டிஸ்டர்ப் ஆயிடும்.

06:02

Speaker B

நம்மள பத்தியே நம்ம சிந்திக்கிறதுக்கே நம்மளுக்கு டைம் கிடையாது.

06:05

Speaker B

ஆனா இவங்க இவங்களை பத்தி சிந்திக்க மாட்டாங்க.

06:07

Speaker B

இவங்களை பத்தி சிந்திக்கிறது எப்படி இருக்கும்னா செல்ஃப் ஓரியன்டடா தான் இருக்கும்.

06:10

Speaker B

எனக்கு வலிக்குது அப்படிங்கிற மாதிரிதான் இருக்கும்.

06:12

Speaker B

ஐயோ அவங்களுக்கு வலிக்குமே அப்படிங்கிறது தெரியாது.

06:14

Speaker B

அவங்களுடைய ஷூஸ்ல இருந்து பார்க்க ஆரம்பிச்சு அந்த டிராப்ல இருந்து வெளிய வந்து சிவனேன்னு நான் இருந்துக்கிறேன்.

06:21

Speaker B

என் வழி என்னவோ நான் பார்த்துக்கிறேன்.

06:22

Speaker B

ஓகே இத்தனை பேரை நான் முன்னேத்தி விட்டுருக்கேன் என்னாலதான் இவங்க முன்னேறினாங்க அந்த கர்வத்துக்குள்ள அவங்க போயிறவே கூடாது.

06:29

Speaker B

ஏன்னா இயற்கையாவே மேஷம் படைக்கப்பட்டதே யாரோ ஒருத்தங்களை முன்னேத்தி விடுறதுக்கு தான் படைக்கப்பட்டிருக்கிறது.

06:34

Speaker B

ஃபேமிலி மெம்பர்ஸ் யாரோ ஒருத்தங்க தெரியாதவங்களை எல்லாம் அவங்க முன்னேத்தி விட்டுருப்பாங்க.

06:38

Speaker B

தெரிஞ்சோ தெரியாமலோ அது நடந்திருக்கும்.

06:40

Speaker B

இது இயற்கை.

06:41

Speaker B

சோ இந்த மேஷ ராசி அப்படின்னு பார்க்கிறப்ப தன்னால முன்னேறினாங்க.

06:46

Speaker B

ஆனா இவங்க நம்மகிட்ட நன்றியோடு இல்லைன்னு நினைச்சிட்டாங்கன்னு வச்சுக்கோங்க நிம்மதி போயிரும்.

06:50

Speaker B

இவங்க அப்படியே கடந்து போயிட்டே இருக்கணும் இவங்களுடைய எனர்ஜி இவங்களுடைய வைப் வந்து பாசிட்டிவ் வைப்.

06:54

Speaker B

ஃபீனிக்ஸ் பறவை மாதிரி இவங்க.

06:56

Speaker B

எவ்வளவு உயர பறந்தாலும் சுட்டாலும் திரும்ப கீழ விழுந்தாலும் எந்திரிச்சு எந்திரிச்சு பறக்கக்கூடியவங்க.

07:01

Speaker B

இதுதான் இவங்களுடைய விதி.

07:02

Speaker B

கால புருஷ தத்துவம்ங்கிறது விதி.

07:03

Speaker B

இந்த விதிப்படிதான் நீங்க வாழணும் நீங்க புலம்பறது முதல் நிறுத்தணும்.

07:07

Speaker B

ஏன்னா எல்லாமே இவங்களுக்கு ப்ராப்ளம் தலையிலிருந்துதான் ஸ்டார்ட் ஆகும்.

07:10

Speaker B

அந்த ஹெட்டேக் வர்றது பிரச்சனை வர்றது.

07:13

Speaker B

அது தன்னால வந்துச்சா மத்தவங்களால வந்துச்சா அப்படிங்கிறதுதான் விஷயம்.

07:16

Speaker B

இதுதான் இந்த கால புருஷ தத்துவம் இவங்களுக்கு உணர்த்தும்.

07:18

Speaker B

அப்போ இந்த ஜென்மமே எனக்கு போதுங்க நான் முடிச்சுக்கிறேன் அப்படின்னா

07:23

Speaker B

108 திவ்ய தேசம் சொல்றோம்.

07:24

Speaker B

108வது திவ்ய தேசம் நம்ம பூமியில கிடையாது.

07:26

Speaker B

107 தான் இருக்கு.

07:28

Speaker B

இந்த 107 ஐயும் முடிக்க முடியாட்டாலும் முடிஞ்ச அளவுக்கு திவ்ய தேச பிரயாணங்களா இவங்க பண்ண பண்ண

07:33

Speaker B

பாசிட்டிவ் எனர்ஜிஸ்ங்கிறது இவங்களுக்கு இன்கிரீஸ் ஆக ஆரம்பிக்கும்.

07:36

Speaker B

அதே மாதிரி சில சிம்பல்ஸும் இவங்க யூஸ் பண்றாங்க அப்படின்னா

07:40

Speaker B

அந்த சிம்பல்ஸும் இவங்களை வந்து ப்ரொடெக்ட் பண்ண ஆரம்பிக்கும்.

07:42

Speaker B

ஃபார் எக்ஸாம்பிள் இவங்க வந்து வெள்ளை சம்பந்தப்பட்ட விஷயங்கள்.

07:45

Speaker B

நெருப்பு சம்பந்தப்பட்ட சிம்பல்ஸ்.

07:47

Speaker B

இந்த மாதிரி சிம்பல்ஸ்லாம் இவங்க யூஸ் பண்றப்போ ஒரு ஃபியர்ஸான ஒரு விஷயத்தை கொடுத்தாலும் ஃபோக்கஸை கொடுக்கும்.

07:52

Speaker B

மேஷத்துக்கு வந்து ஃபோக்கஸ் டீவியேட் ஆகும்.

07:54

Speaker B

ஒரு விஷயத்தை நீங்க பேச சொல்றீங்க அப்படின்னா பல விஷயத்தை பேசிட்டுதான் சில விஷயத்தையே அவங்களால வந்து அதுக்குள்ள அந்த பாயிண்ட்ட நம்ம கண்டுபிடிச்சுக்கணும்.

08:01

Speaker B

சோ கிரிஸ்பா பேசணும் ஷார்ப்பா பேசணும் ஃபோக்கஸ் பண்ணனும் அப்படின்னா அந்த ஃபோக்கஸ் சம்பந்தப்பட்ட சிம்பல்ஸ் அவங்க யூஸ் பண்றாங்கன்னா

08:07

Speaker B

அவங்களுக்கு லைஃப் ரொம்ப நல்லா போகும் அவங்களுடைய விதியை வந்து அவங்க புரிஞ்சுக்க முடியும்.

08:11

Speaker A

அவங்களோட அவங்களோட தன்மையை அவங்க புரிஞ்சுக்க முடியும் அப்படின்னு சொல்றீங்க.

08:13

Speaker A

மேஷ ராசியில் இருக்கிறவங்களை பத்தி ரொம்ப தெளிவா சொன்னீங்க.

08:16

Speaker A

அவங்க என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது அப்படிங்கிறதை.

08:20

Speaker A

சோ மேஷ ராசியில் இருக்கிறவங்க முக்காவாசி என்ன துறையில இருப்பாங்க?

08:23

Speaker A

சோ சில பேர் சொல்லுவாங்களே இந்த ராசியில் பிறந்தவங்க கவர்மெண்ட் வேலைக்கு தான் போவாங்க.

08:27

Speaker A

இந்த ராசியில் பிறந்தவங்க டீச்சரா தான் ஆவாங்க அப்படிங்கிற மாதிரி எல்லாம் சொல்லுவாங்க.

08:30

Speaker A

மேஷ ராசியில் பிறந்தவங்க என்ன என்ன துறையில இருப்பாங்க?

08:32

Speaker B

இந்த மேஷத்துல இருக்கக்கூடியவங்களுக்கு வந்து கவர்மெண்ட் ரிலேட்டடான கனெக்ட்ஸ் அப்படிங்கறது இருக்கும்.

08:37

Speaker B

எல்லாருமே கவர்மெண்ட் ஜாப் போயிருவாங்களா அப்படின்னா கிடையாது.

08:40

Speaker B

அந்த ரிலேட்டபிலா அவங்க இருப்பாங்க.

08:42

Speaker B

மருத்துவத்துறையில இருக்கிறது சர்வீஸ் ஓரியன்டடான விஷயங்கள்ல இருக்கிறது.

08:46

Speaker B

ஃபிலிம் இண்டஸ்ட்ரிலயும் இருக்காங்க பாலிடிக்ஸ்லயும் இருக்காங்க.

08:49

Speaker B

ஆனா அது எல்லாமே சர்வீஸ் ஓரியன்டடா இருந்திடணும்.

08:52

Speaker B

இவங்க பணி செய்யற இடத்துல இருக்கணும்.

08:54

Speaker B

இவங்க ஆளுமையிலேயே இருந்தாலும் இறங்கி வேலை செய்யக்கூடியவங்களா.

08:59

Speaker B

தொழிலாளர்களோடு தொழிலாளர்களா இருக்கக்கூடிய அமைப்பு இருந்திருவாங்க.

09:02

Speaker B

இவங்க அப்படித்தான் இருப்பாங்க.

09:03

Speaker B

தொழிலாளர்களோடு தொழிலாளர்களா இருந்துட்டாங்க அப்படின்னா சக்சஸ்ஃபுல் ஆயிடும்.

09:06

Speaker B

இவங்களுக்கு லைஃப்.

09:07

Speaker B

இல்ல அப்படின்னா இவங்களை எல்லாருமே ஏமாத்துவாங்க.

09:10

Speaker B

சோ எனிதிங் ரிலேட்டட் டு சர்வீஸ் மெடிக்கல் ரிலேட்டட்.

09:12

Speaker B

மருந்தை தயாரிக்கிறது.

09:14

Speaker B

இவங்க எல்லாம் மருந்து தயாரிக்கிறாங்கன்னு வச்சுக்கோங்களேன் ஆயுர்வேதா சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் தயாரிக்கிறப்போ குணமாகும்.

09:19

Speaker B

இந்த மேஷ ராசிக்காரங்களுக்கு உண்டான அமைப்பு ஏன்னா நான் சொன்னேன் இல்லையா இவங்க நிறைய பேரை வாழ்க்கையில முன்னேத்தக்கூடியவங்க.

09:25

Speaker B

சோ இவங்களுடைய அமைப்பு தெய்வம் கொடுத்திருக்க அமைப்பு எப்படின்னா எப்பேர்ப்பட்ட நோயா இருந்தாலும்

09:31

Speaker B

இந்த மேஷ ராசிக்காரங்க ஒரு ஒரு மருந்து யாருக்காவது போய் வாங்கி கொடுக்கிறதே ஒரு பரிகாரம் தான் அவங்களுக்கு.

09:37

Speaker B

சோ அந்த மாதிரி இந்த பியூட்டி ரிலேட்டட் காஸ்மெடிக்ஸ் எல்லாத்துலயுமே வந்து ஹெல்த் அப்படிங்கிற விஷயம்

09:43

Speaker B

உள்ள இருக்கணும்.

09:45

Speaker B

இப்போ ஒரு பேங்கிங்லயே இருந்தா கூட ஹெல்த் ரிலேட்டடான ஒரு டிபார்ட்மென்ட்ல அவங்க இருக்காங்க அப்படின்னா

09:50

Speaker B

அவங்களுக்கு குரோத் நல்லா இருக்கும்.

09:52

Speaker B

இயற்கையாவே அவங்க அப்படித்தான் போவாங்க.

09:55

Speaker B

எப்படி இருந்தாலும் ஒரு சோசியல் சர்வீஸ்ங்கிறது அவங்களுக்கு கொஞ்சம் டச் ஆகும்.

09:57

Speaker A

தொடர்ந்து கால புருஷ தத்துவம் படி என்னென்ன டிராப்ஸ் இந்த 12 ராசிகளும் இருக்கணும்.

10:00

Speaker A

ஒவ்வொரு ராசிக்காரர்களும் என்னென்ன விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கணும் எந்த கடவுளை வணங்கணும் எந்த தொழில்ல அவங்க வந்து பெஸ்ட்டா இருப்பாங்க.

10:07

Speaker A

சில ராசிகளுக்கு குரு சொல்றதை கேட்கணும் தனக்குன்னு ஒரு குரு வச்சுக்கணும் அந்த குரு சொல்றதை கேட்கணும் லைஃப் பார்ட்னரை வந்து சிறப்பா தேர்ந்தெடுக்கணும் அப்படின்னு நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.

10:13

Speaker A

இதுல நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கும்.

10:16

Speaker A

சோ எல்லாரும் ஒரே மாதிரி ஒரே ஆங்கிள்லயே சொல்ல மாட்டாங்க நிறைய அஸ்ட்ராலஜர் இருக்காங்க.

10:21

Speaker A

நிறைய ஆங்கிள்ஸ்ல நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க இதுல டவுட்ஸ் இருந்து ரொம்ப தெளிவா இதை பத்தி தெரிஞ்சுக்கணும்னா எப்படிமா அணுகுறது?

10:29

Speaker B

அதாவது நான் இப்பதான் அஸ்ட்ராலஜி கிளாஸ் ஸ்டார்ட் பண்றேன்.

10:33

Speaker B

நம்முடைய வாழ்க்கை என்ன அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படின்னா நம்முடைய ஹாரோஸ்கோப் சார்ட் நம்ம தெரிஞ்சுக்கணும்.

10:37

Speaker B

இந்த கலியுகத்தை பத்தியும் நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுனால அஸ்ட்ராலஜி யார் எல்லாம் இன்ட்ரஸ்ட்டா இருக்காங்களோ கத்துக்கணும் அப்படின்னு இன்ட்ரஸ்ட்டா இருக்காங்களோ

10:43

Speaker B

அவங்க எல்லாம் வந்து செப்டம்பர் ஆறாம் தேதியிலிருந்து நான் வந்து அஸ்ட்ராலஜி கிளாஸ் அப்படிங்கறது ஸ்டார்ட் பண்றேன்.

10:49

Speaker B

இதுதான் அது ஃபர்ஸ்ட் பேட்ச் அப்படின்னு ஸ்டார்ட் பண்றேன்.

10:50

Speaker B

சோ கீழ தெரியிற நம்பருக்கு அவங்க வந்து வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்க கால் இல்ல வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்கன்னா அவங்களுக்கான டீடைல்ஸ் வரும்.

10:57

Speaker A

ஜோதிடம் பத்தின உங்களுக்கு எந்த டவுட்ஸா இருந்தாலும் இல்ல ஜோதிடம் படிக்கணும் அப்படின்னு ஆர்வம் இருந்தா

11:01

Speaker A

செப்டம்பர் ஆறுல இருந்து கிளாஸ் ஸ்டார்ட் ஆகுது கீழ இருக்க வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி நீங்க கிளாஸ் ஜாயின் பண்ணிக்கலாம்.

11:08

Speaker A

தொடர்ந்து இன்னும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு சொல்லிக்கிட்டே இருப்போம் தொடர்ந்து பேசுவோம் நன்றி.

Topics: மேஷம் கால புருஷ தத்துவம் ராசி பலன் ஆன்மீகம் முருகர் வழிபாடு தியானம் புண்ணியம் வாழ்க்கை பாடங்கள் தமிழ் ஜோதிடம் ஜீவிதா சுரேஷ்குமார்


---
This is the markdown twin of https://sozai.app/transcript/mesham-11-rashis-raajaparvai/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
