**மீனம் - திடீர் அதிர்ஷ்டம் கிடைக்க போகிறது | Meenam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/meenam-sudden-luck-coming/

மீன ராசிக்காரர்களுக்கான காலபுருஷ தத்துவம் மற்றும் வாழ்க்கை சவால்கள், மோட்ச பாதை மற்றும் ஆன்மீக வழிகள் பற்றி விளக்கம்.

## Key Takeaways

- மீன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் கனவுலகத்திலும் இல்யூஷன்களிலும் அதிகமாக ஈடுபடுவார்கள்.
- காலபுருஷ தத்துவம் மூலம் அவர்களின் பிறப்பு காரணங்கள் மற்றும் வாழ்க்கை ட்ராப்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
- ஆன்மீக வளர்ச்சி மற்றும் மோட்சம் பெற டிட்டாச்மென்ட் மற்றும் அக்செப்டன்ஸ் முக்கியம்.
- தற்கொலை எண்ணங்கள் மற்றும் மன அழுத்தங்களை தவிர்க்க தெளிவான முடிவெடுப்பும், பொறுமையும் அவசியம்.
- சுபிக்ஷமான தெய்வங்களை வழிபாடு மூலம் ஆன்மீக சக்தி பெற முடியும்.

## What the video covers

- காலபுருஷ தத்துவம் மூலம் 12 ராசிகளின் பிறப்பு காரணங்கள் மற்றும் வாழ்க்கை ட்ராப்கள் விளக்கப்படுகின்றன.
- மீன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் இல்யூஷன்கள் மற்றும் கனவுலகத்தில் அதிகமாக ஈடுபடுவார்கள்.
- மீன ராசி பிறப்பில் பொறுப்புகள் மற்றும் குடும்ப பவர் குறைவு காரணமாக சவால்களை எதிர்கொள்வார்கள்.
- மோட்சம் பெறும் பாதை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான முக்கியத்துவம் மீன ராசிக்காரர்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தற்கொலை எண்ணங்கள் மற்றும் மன அழுத்தங்கள் மீன ராசிக்காரர்களுக்கு அதிகம் ஏற்படலாம் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வாழ்க்கையில் உண்மையை ஏற்றுக்கொண்டு, டிட்டாச்மென்ட் மற்றும் அக்செப்டன்ஸ் மூலம் முன்னேற வேண்டும் என்பதற்கான அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
- மீன ராசிக்காரர்கள் சுபிக்ஷமான தெய்வங்களை வழிபட வேண்டும், குறிப்பாக குரு, பெருமாள், முருகர் வழிபாடு முக்கியம்.
- வாழ்க்கை சவால்களை சமாளித்து, மோட்ச பாதையை அடைய பொறுமை மற்றும் தெளிவான முடிவெடுப்பு அவசியம்.
- மீன ராசிக்காரர்களின் வாழ்க்கை மற்றும் கர்மா தொடர்பான விஷயங்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
- ஆன்மீக வளர்ச்சிக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் குடும்ப உறவுகளின் தாக்கம் பற்றிய விளக்கங்கள் உள்ளன.

Answers

## Questions about this video

காலபுருஷ தத்துவம் என்றால் என்ன?

காலபுருஷ தத்துவம் என்பது காஸ்மிக் எனர்ஜி மற்றும் நாம் ஏன் பிறந்தோம் என்பதற்கான காரணம், அதாவது கர்மா. இது மனிதனின் பிறப்பு முதல் பாதம் வரை உள்ள மேஷம் முதல் மீனம் வரையிலான பயணத்தை விளக்குகிறது.

காலபுருஷ தத்துவப்படி மீன ராசிக்காரர்களுக்கு என்னென்ன சவால்கள் (ட்ராப்ஸ்) உள்ளன?

காலபுருஷ தத்துவப்படி, மீனம் 12 ஆம் ஸ்தானம், இது அயன சயன போக ஸ்தானம். இது உறக்கத்தையும், வாழ்க்கையில் உள்ள சௌகரியங்களையும் (comfort zones), கனவுகளையும் குறிக்கிறது.

காலபுருஷன் என்ற வார்த்தையின் பொருள் என்ன?

காலபுருஷன் என்பதில் 'காலம்' என்பது நேரத்தையும், 'புருஷன்' என்பது மனிதனையும் குறிக்கிறது. இந்த காலத்தில் இந்த மனிதன் பிறக்கிறார் என்பதே இதன் பொருள்.

## Full Transcript — Download SRT & Markdown

00:06

Speaker A

வணக்கம்மா.

00:06

Speaker B

வணக்கம்.

00:07

Speaker A

எப்படி இருக்கீங்க?

00:08

Speaker B

நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?

00:09

Speaker A

நல்லா இருக்கேன். சோ ஒவ்வொரு ஒவ்வொரு வாரமும் நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா ஒவ்வொரு ராசிகளுக்கும் எது முக்கியம் என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாது அப்படிங்கறத ரொம்ப தெளிவா சொல்லிட்டு இருக்கோம். அதுல ரொம்ப முக்கியமா காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது இருக்கு. அதுதான் ரொம்ப முக்கியம் அப்படிங்கறதும் எல்லாருமே எல்லாராலும் சொல்லப்படுது.

00:25

Speaker B

காலபுருஷ தத்துவம் அப்படிங்கறது வந்து இந்த காஸ்மிக் எனர்ஜி. நம்ம ஏன் பிறந்தோம் அப்படிங்கறதுக்கான காரணம் அதாவது கர்மா. நம்ம வந்து காரண காரியத்தோட தான் பிறக்கிறோம் அப்படிங்கறது இருக்கு. அதாவது தலை முதல் பாதம் வரை அப்படின்னு சொல்றது. அதுதான் வந்து மேஷம் முதல் மீனம் வரை.

01:02

Speaker B

ஒரு மனுஷன் ஏன் மேஷத்துல பிறக்கிறாங்க? அப்போ அவங்க என்ன ட்ராப்ல சிக்க போறாங்க? எப்படி அவங்க வாழ்க்கையிலிருந்து ரிலீவ் ஆகணும்? ஏன்னா மனிதன் மீண்டும் மீண்டும் பிறக்கிறாங்க அப்படினாலே நம்ம ஏதோ ஒரு செய்யாத ஒரு கடமையை திரும்பவும் முடிக்கிறதுக்காக பிறந்த ஒரு பிறப்பு.

01:42

Speaker B

இல்ல லைஃப் எக்ஸ்பீரியன்ஸ்க்காக வரோம். எல்லாருமே வந்து கடமையை முடிக்கிறதுக்கு தான் பிறந்தாங்களா அப்படிங்கறது கிடையாது.

01:53

Speaker B

அதுதான் காலபுருஷ தத்துவம். அதாவது இன்னும் ஜெர்னி இருக்கு அப்படிங்கற ராசிகளும் இருக்காங்க.

02:00

Speaker B

இல்ல உங்களுக்கு ஜெர்னி முடிய போகுது. அதனால இந்த ஜென்மத்திலேயே இதை முடிச்சுக்கோங்க. இதுக்கான விடையை நீங்க கண்டுபிடிச்சிருங்க அப்படிங்கற ஒரு விஷயம் தான் இது.

02:15

Speaker B

சோ இந்த காலபுருஷ தத்துவம் அப்படின்னு பார்க்கிறப்போ இது வந்து வைட் ரேஞ்ச் ஆஃப் நாலேட்ஜ். அதுதான் அந்த காலபுருஷ தத்துவம்.

02:31

Speaker B

மனிதன் பிறப்பிலிருந்தே கொஞ்ச நாள்ல தேட ஆரம்பிச்சிருவாங்க நான் ஏன் பிறந்தேன்? நான் யாரு? என்னோட ஐடென்டிஃபிகேஷன் என்ன? மாறிக்கிட்டே இருக்கும்.

02:45

Speaker B

ஒரு குழந்தை பருவத்திலிருந்து ஒவ்வொரு விஷயமா மாறிக்கிட்டே இருக்கிறப்போ நமக்கு ஆசாபாசங்கள்னு ஒன்னு இருக்கும்.

02:55

Speaker B

ஆனா விதி வேறு ஒரு வழியில கூட்டிட்டு போகும்.

03:00

Speaker B

காலபுருஷன் அப்படிங்கறது காலம் அப்படிங்கறது நேரம்.

03:10

Speaker B

புருஷன் அப்படிங்கறது பர்சன் மனிதனை சொல்லக்கூடியது.

03:16

Speaker B

அதுதான் காலபுருஷன். இந்த காலத்துல இந்த மனிதன் பிறக்கிறார் அப்படிங்கறதுதான்.

03:25

Speaker B

எப்படி வந்து 24 மணி நேரத்தை வந்து 12 மணி நேரமா பிரிக்கப்பட்டதோ அதுதான் வந்து இந்த 12 ராசிகள்.

03:33

Speaker A

சோ அந்த காலபுருஷ தத்துவம் 12 ராசிகளுக்கும் இப்போ ஒவ்வொரு ராசியும் பிறக்குறவங்களுக்கு வந்துட்டு ஒவ்வொரு ட்ராப் இருக்கும்.

03:44

Speaker A

இந்த விஷயம் பண்ணலாம் இந்த விஷயம் பண்ணக்கூடாது இவங்க இதுக்காக தான் பிறந்திருக்காங்க அப்படிங்கிற நிறைய விஷயங்கள் சொன்னீங்க.

03:52

Speaker A

சோ காலபுருஷ தத்துவப்படி மீன ராசிக்காரர்களுக்கு என்னென்ன ட்ராப்ஸ் எல்லாம் இருக்கு?

03:54

Speaker B

காலபுருஷ தத்துவப்படி 12 ஆம் ஸ்தானம் அயன சயன போக ஸ்தானம்.

04:00

Speaker B

அயன சயன போகம் அப்படினாலே உறக்கத்தை குறிக்கக்கூடியது.

04:10

Speaker B

உங்களுடைய லைஃப்ல இருக்க கம்ஃபர்ட் ஜோன்ஸை குறிக்கக்கூடியது.

04:15

Speaker B

ட்ரீம்ஸ் கனவுகளையும் குறிக்கக்கூடியது அயன சயன போகம்.

04:20

Speaker B

எல்லாமே மறைஞ்சு ரகசியம்.

04:23

Speaker B

மொத்த ரகசியமும் அடங்கின ஒரு இடம் தான் வந்து மீனம்.

04:30

Speaker B

அதாவது ஜென்மம் முடிஞ்சு மோட்சத்துக்கு போகக்கூடிய அமைப்புல இருக்கிறவங்க தான் மீன ராசியில பிறப்பாங்க.

04:40

Speaker B

அப்போ மீன ராசி அதாவது மீனத்துக்கு காலபுருஷ தத்துவம் சொல்றது என்ன அப்படின்னா,

04:50

Speaker B

உன் பிறப்பை மொத்தமா இயற்கையா முடிச்சிட்டு வரதுக்கு தான் உனக்கான பிறப்பே.

05:00

Speaker B

இந்த இல்யூஷன்ஸ்ல இருந்து இல்யூஷன் தான் அவங்களுக்கான ட்ராப்பே.

05:05

Speaker B

எல்லாமே பாதி கனவுலகத்திலேயே ஃபேண்டஸி லைஃப்.

05:10

Speaker B

எல்லாமே ஃபேண்டசைஸ் பண்ணிட்டு இருக்கக்கூடிய ஒரு அமைப்பு.

05:15

Speaker B

மீன ராசி இந்த மீனம் அவங்களுக்கு வந்து பொறுப்புகள் அப்படிங்கறது கொடுக்க ஆரம்பிக்கும்.

05:21

Speaker B

இந்த மீனம் வளர வளர தகப்பனுடைய பவர்ங்கறது குறைஞ்சுகிட்டே வரும்.

05:27

Speaker A

சோ அப்பாவுக்குரிய பவர் குறையும்.

05:28

Speaker A

அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்.

05:29

Speaker B

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் முக்கியமா ஆண்.

05:34

Speaker B

ஒரு மீனத்துல இருக்காங்க காலபுருஷ தத்துவப்படி அப்படின்னா ஏன் அப்படின்னா,

05:43

Speaker B

அவங்களுக்கு வந்து படிப்புங்கறது எல்லாம் நல்லாதான் வரும்.

05:46

Speaker A

ஓகே.

05:47

Speaker B

மீனத்துக்கு.

05:50

Speaker B

ரியாலிட்டிக்குள்ள வரணும் அப்படின்னா பாரங்களை கொடுத்தாகணும்.

05:56

Speaker B

அப்போ இந்த பாரங்களை எப்படி கொடுக்கும் அப்படின்னா யாரு அந்த குடும்பத்துல அந்த பொறுப்பை ஏத்துக்கிட்டு இருக்காங்களோ,

06:05

Speaker B

அந்த அப்பா அப்பாதான் அந்த குடும்பத்தை பார்த்துட்டு இருக்கிறாருன்னா பவர்ஃபுல் பர்சன்னா அந்த பவர்ஃபுல் பர்சனை கொஞ்சம் கொஞ்சமா அப்படியே குறைக்கும்.

06:12

Speaker B

இந்த பொறுப்பு வந்து அப்படியே மீனத்துக்கிட்ட வரும்.

06:19

Speaker B

ரியாலிட்டிக்குள்ள கொண்டு வர ஆரம்பிக்கும்.

06:22

Speaker B

வொர்க்கஹாலிக்.

06:23

Speaker B

அந்த வொர்க்கஹாலிக் குள்ளயும் நீங்க போயிறக்கூடாது.

06:29

Speaker B

அந்த ட்ராப்க்குள்ள போயிறக்கூடாது.

06:31

Speaker B

அந்த இல்யூஷன்ஸ் நான் சொன்னேன் இல்லையா இந்த மொத்த வாழ்க்கையும் நீ முடிச்சுட்டு இயற்கையா தான் வெளிய வரணும்.

06:40

Speaker B

மீன ராசிக்கு தற்கொலை எண்ணம் அதிகம்.

06:42

Speaker A

ஓகே.

06:43

Speaker B

ஃபேஸ் அதாவது மீனம் என்ன பண்ணும்னா காலபுருஷ தத்துவம் என்ன சொல்லுதுன்னா,

06:50

Speaker B

இது அயன சயன போகம் டிட்டாச்மென்ட். நீ எல்லாத்தையும் டிட்டாச் பண்ணி மோட்ச பாதை ஆன்மீக பாதையை நீ புடிச்சு வரணும்.

07:05

Speaker B

ரியாலிட்டிக்குள்ள அந்த அக்செப்டன்ஸ் குள்ள நீ வரணும்ங்கறதுதான் மீனத்துக்கு சொல்றது.

07:10

Speaker B

ஆனா இந்த மீனத்தோடைய ட்ராப் என்னவா இருக்கும் அப்படின்னா பெரும்பாலும்,

07:14

Speaker B

அது முக்கியமா பெண்கள் இருக்காங்க மீனத்துல அப்படின்னா,

07:19

Speaker B

யாரையாவது ஒருத்தவங்களை பற்றிக்கிவாங்க.

07:21

Speaker A

சோ.

07:22

Speaker B

லைஃப் பார்ட்னர்.

07:23

Speaker A

ஓகே.

07:24

Speaker B

லவ் பண்றது சீக்கிரம் போய் அந்த ட்ராப்ல விழுகக்கூடிய அமைப்பு.

07:30

Speaker B

தூக்கத்தை கெடுக்கக்கூடிய அமைப்பு எல்லாம் என்னென்னலாம் இருக்கோ அதுல போய் விழ வைக்கும்.

07:36

Speaker B

இப்ப தூக்கத்தை கெடுக்க போகுது.

07:40

Speaker B

இப்ப உங்களுக்கு இப்ப ஆணாக இருக்கிறாங்க அப்படின்னா பொறுப்பு முன்கூட்டியே கொடுத்துரும்.

07:47

Speaker B

அப்போ வந்து அங்கேயும் உங்களுக்கு தூக்கத்தை கெடுக்கக்கூடிய அமைப்பு.

07:53

Speaker B

அந்த உழைப்பை நோக்கி ஓடக்கூடிய ஒரு அமைப்பு.

07:56

Speaker B

இந்த சேலஞ்சஸ்லாம் நீங்க ஃபேஸ் பண்ணி வெளிய வர தெரியணும்.

08:01

Speaker B

32 வயசு 33 வயசு ஆகும் சில விஷயங்கள் எல்லாம் புரிஞ்சு வெளிய வரதுக்கு.

08:08

Speaker B

பொறுமைங்கறது காலபுருஷ தத்துவப்படி அவ்வளவு சீக்கிரம் மீனத்துக்கு வராது.

08:14

Speaker B

ஏன் அப்படின்னா,

08:15

Speaker B

மோட்சம் அப்படினாலே ரிஷிகள் சித்தர்கள் கனெக்ட் ஆகக்கூடிய அமைப்பு.

08:20

Speaker B

அப்போ இவங்க வந்து இந்த ரிஷிகள் சித்தர்கள் இந்த மலை மேல இருக்கக்கூடிய சித்தர்கள் தவம் செஞ்ச இடத்துக்கெல்லாம் போகணும்.

08:29

Speaker B

வரணும்.

08:31

Speaker B

அந்த மூலிகை வாசத்தை வாங்கணும்.

08:33

Speaker B

ஏன்னா உங்களுடைய காலம் முடிச்சு இயற்கையா இயற்கையாவே உங்களுக்கு வந்து.

08:40

Speaker A

ஒரு மனித பிறவிக்கான ஒரு பிறப்பு.

08:42

Speaker B

மீனத்துக்கு வந்து ஆயுள் கெட்டி.

08:44

Speaker A

ஓகே.

08:45

Speaker B

ஆனா கண்டங்களும் அதிகம் மீனத்துக்கு தான்.

08:47

Speaker B

ஏன்னா இந்த அயன சயன போகம் உங்களுடைய வாழ்க்கை வந்து கர்மா என்ன பண்ணும்னா மீண்டும் பிறக்கறதுக்கு தான் உங்களை தூண்டும்.

08:55

Speaker B

அந்த கர்மாவை முடிக்கவே அந்த கர்மா விடவே விடாது.

08:58

Speaker B

அப்ப அந்த கர்மா ட்ராப்பே என்ன பண்ணும் அப்படின்னா,

09:02

Speaker B

எதுக்கு இந்த வாழ்க்கை?

09:03

Speaker B

யாரு யாரை பற்றிட்டு இருக்கீங்களோ அந்த அன்பு உனக்கு கிடைக்கலையா?

09:08

Speaker B

உன் உயிரை மாத்திக்கோ அப்படிங்கறது எல்லாம் வந்து அந்த தாட்டை கொடுக்கும்.

09:11

Speaker B

முக்கியமா பெண்களுக்கு எல்லாம் அந்த தாட்டை கொடுக்கும்.

09:14

Speaker B

இதை கடந்து நீங்க வந்துட்டீங்க.

09:20

Speaker B

அந்த லைஃப் பார்ட்னர் இல்ல நீங்க லவ் பண்றீங்க.

09:27

Speaker B

அந்த பெயின்ல இருந்து கடந்து வந்துட்டா அதுதான் மிகப்பெரும் வெற்றியே.

09:32

Speaker B

அதுதான் அவங்களுடைய ட்ராப்பே.

09:34

Speaker B

அந்த ட்ராப்ல இருந்து வெளிய வந்துட்டா நீங்க மோட்ச பாதைக்கு போயிட்டீங்கன்னு அர்த்தம்.

09:39

Speaker A

ஓகே மேம்.

09:40

Speaker A

நீங்க சொல்றதை பார்த்தா வந்துட்டு,

09:41

Speaker A

அவங்களோட அந்த மோட்ச பாதையான இதை வந்து முடிக்க விடாது.

09:51

Speaker A

பாதியிலேயே வந்துட்டு நம்மளுக்குள்ள சில விஷயங்களை தூண்டிவிட்டு அவங்களை வந்துட்டு தூக்கு போட்டோ இல்ல வந்துட்டு அவங்களை இறப்பை வந்துட்டு,

10:02

Speaker A

இயற்கையா வராம செயற்கையா பண்ணிக்கிற அளவுக்கு தூண்டும் அப்படிங்கிற பிரபஞ்சமே தூண்டும் அப்படிங்கிற மாதிரி சில விஷயங்கள் சொல்லி இருக்கீங்க.

10:10

Speaker A

சோ இதுல இருந்து அவங்க எல்லாம் தப்பிக்கணும்.

10:12

Speaker A

இந்த மாதிரியான எண்ணங்கள் எல்லாம் வரக்கூடாது.

10:20

Speaker A

ரொம்ப தெளிவா இருக்கணும்.

10:22

Speaker A

ஒரு முடிவெடுக்குறதுல ரொம்ப தெளிவா இருக்கணும் அப்படிங்கறத சொல்லி இருக்கீங்க.

10:26

Speaker A

அப்படி இருக்கிறவங்க என்ன கடவுளை வழிபடணும்?

10:30

Speaker A

நம்மளோட நிறைய குழப்பங்கள் வரும்.

10:33

Speaker A

நீங்க சொன்ன மாதிரி அவங்களுக்கு நிறைய குழப்பங்கள் வரும்.

10:35

Speaker A

கூட இருக்கிறவங்க குழப்புவாங்க.

10:37

Speaker A

இயற்கையே அவங்களை குழப்பும்.

10:40

Speaker A

நிறைய விஷயங்கள் சொன்னீங்க.

10:42

Speaker A

அவங்க வந்து எல்லாத்துலயுமே தெளிவா இருக்கணும்.

10:46

Speaker A

ஓ இந்த முடிவெடுக்கிறேன்னா நான் தெளிவா இருக்கணும்.

10:50

Speaker A

இது வந்து இதைத்தான் நான் பண்ணனும் அப்படின்னு ஒரு முடிவெடுக்கணும்னா,

10:53

Speaker A

அவங்க எந்த கடவுளை நோக்கி போகணும் மேம்?

10:55

Speaker B

இவங்க வந்து சுபிக்ஷமான தெய்வங்களை தான்.

11:00

Speaker B

மேக்ஸிமமே மீனத்துக்கு அதுதான் பிடிக்கும்.

11:02

Speaker B

மீனத்துக்கு வந்து தன்னை அலங்காரம் பண்ணிக்கிறதுங்கறது,

11:06

Speaker B

காலபுருஷ தத்துவப்படி பிடிக்கும்.

11:10

Speaker B

ஆனா ஒரு சில மீனத்தை காலபுருஷ தத்துவம் என்ன சொல்லுது அப்படின்னா,

11:15

Speaker B

ஒரு வெறுமை ஒரு டார்க்லயே வச்சிருக்கும்.

11:20

Speaker B

அவங்களுக்கு எல்லாம் லைஃப் பார்ட்னர் வந்துதான் வாழ்க்கையை மாத்தணும்ங்கற மாதிரியும் ஒரு விஷயத்தை அவங்களுக்கு வச்சிருக்கும்.

11:24

Speaker B

ஏதோ ஒரு இடத்துல ஒரு சலிப்பு அப்படிங்கறது அவங்களுக்கு கொடுக்கும்.

11:27

Speaker B

இவங்க வந்து சுக்கிரனை ஈர்க்கக்கூடிய ஒரு அமைப்பு.

11:30

Speaker B

குரு குரு வழிபாடு அப்படிங்கறது இவங்களுக்கு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும்.

11:35

Speaker B

அது எந்த குருவா இருந்தாலும் சரி.

11:37

Speaker B

பெருமாள் வழிபாடு.

11:38

Speaker B

முருகரை கூட நல்ல சலிப்பா பார்க்கக்கூடிய ஒரு அமைப்பு.

11:43

Speaker B

அந்த சரண்டரிங்.

11:45

Speaker B

ரியாலிட்டி அப்படிங்கறது இவங்களுக்கு புரியணும்.

11:48

Speaker B

மீனம் சீக்கிரமா இல்யூஷன்குள்ள போகும்.

11:52

Speaker B

சீக்கிரமா இமேஜினேஷன் கற்பனைக்குள்ள போயிரும்.

11:55

Speaker B

அந்த கற்பனையை வந்து பாசிட்டிவா யூஸ் பண்ணிக்க தெரியணும்.

12:00

Speaker B

தொழில் ரீதியா அது கிரியேட்டிவிட்டி டெவலப்மென்ட்டா கொண்டு போயிரணும்.

12:02

Speaker B

உங்களோட உழைப்பை அங்க நீங்க கொடுத்துரணும்.

12:04

Speaker B

சப்போஸ் நீங்க வந்து ஒரு மீடியா துறையில இருக்கீங்க.

12:07

Speaker B

கிரியேட்டிவா டெவலப் பண்ணிட்டே போக முடியும்.

12:10

Speaker B

மல்டிபிள் கேரக்டர்ஸ் அப்படிங்கறது ஒரு மீனத்தினால கொடுக்க முடியும்.

12:14

Speaker B

அதாவது,

12:16

Speaker B

நடிப்பு துறையில எல்லாம் இருக்காங்க ஒரு மீனம்னா,

12:21

Speaker B

அந்த ப்ரொபஷன்லயே ஸ்ட்ராங்கா இருப்பாங்க.

12:25

Speaker B

குடும்பத்தை போக்கஸ் பண்ண தெரியாது அவங்களுக்கு.

12:28

Speaker B

ஏதோ ஒரு இடத்துல பற்றற்று போற மாதிரிதான் இருக்கும்.

12:31

Speaker B

தெய்வ தெய்வத்துக்கிட்ட எப்படியாவது மீனத்தை அது ஏதோ ஒரு வகையில கூட்டிட்டு போயிடும்னு வச்சுக்கோங்களேன்.

12:36

Speaker B

இப்ப அவங்க சூஸ் பண்றது இப்ப வந்து ஒரு பியூட்டிஷனா இருக்காங்க.

12:39

Speaker B

தெய்வத்துக்கு அலங்காரம் பண்ணிட்டே இருப்பாங்க.

12:41

Speaker B

அலங்காரம் பண்ணி அலங்காரம் பண்ணி அழகு பார்த்துட்டே இருக்க தோணும்.

12:45

Speaker B

இதே இது இன்னொரு பார்ட் ஆஃப் இப்ப ஆண் மீனத்துல இருக்காங்கன்னா,

12:50

Speaker B

ஏன்னா நாங்க எல்லாம் என்ன தெய்வத்தை அழகுபடுத்திட்டா இருக்கும் அப்படின்னா,

12:53

Speaker B

நீங்க உங்க சுத்தி இருக்கிற இடத்தை வந்து எவ்வளவு கலைநயமா அழகா வச்சுக்கிறீங்களோ,

13:01

Speaker B

உழைப்பு.

13:02

Speaker B

அதாவது வொர்க்கஹாலிக் மீனம்.

13:03

Speaker B

உங்களை சுத்தியும் என்ன அப்படிங்கிற அந்த ரியாலிட்டிக்குள்ள வரணும்.

13:06

Speaker B

ஏன்னா அதுவுமே ஒரு இல்யூஷன் தான்.

13:08

Speaker B

அந்த வேலை வேலை வேலை அதுவே அந்த இல்யூஷன் ட்ராப்க்குள்ள தான் நீங்க இருக்கீங்க.

13:12

Speaker B

பிறப்பின் அர்த்தம் இன்னும் உங்களுக்கு புரியல அப்படின்னா,

13:15

Speaker B

மீனத்துக்கு தெய்வத்தின் மேல நம்பிக்கை அப்படிங்கறது கொஞ்சம் லேட்டா தான் வரும்.

13:21

Speaker B

அவ்வளவு சீக்கிரம் மீனத்துக்கு வராது.

13:22

Speaker B

ஏன் அப்படின்னா,

13:23

Speaker B

இவங்க வந்து மோட்ச பாதை இல்லையா?

13:26

Speaker B

கஷ்டத்தை கொடுத்தா நீங்க தெய்வத்தை திட்டுவீங்க.

13:29

Speaker B

அதுக்கப்புறம் தான் அந்த தெய்வத்தை தேடுவீங்க.

13:33

Speaker B

யார் திட்டுறோமோ அங்க நம்ம தேடுவோம்.

13:35

Speaker B

அங்க தேடி போக போக தான் உண்மை நிலை என்னங்கறது புரிய வரும்.

13:39

Speaker B

அப்பதான் வந்து அந்த மோட்ச பாதை ஒரு 34 வயசு 35 வயசுல எல்லாம் மோட்ச பாதை கிட்ட அவங்க போக ஆரம்பிச்சிருவாங்க.

13:46

Speaker B

தெய்வம்ங்கறது சீக்கிரம் அவங்களை வந்து பற்றிக்க ஆரம்பிக்கும்.

13:48

Speaker B

சோ அந்த வாழ்க்கை என்ன அப்படின்னா நீங்க கடவுளுக்கு சேவை செய்றதுதான் உங்களுடைய வாழ்க்கையே.

13:54

Speaker B

ஏதாவது ஒரு உடற்பயிற்சிங்கறது அவங்க வச்சுக்கிட்டே இருக்கணும்.

13:58

Speaker B

மீனம்.

13:59

Speaker B

உடற்பயிற்சி பெரிய டைவர்ஷன்.

14:02

Speaker B

லைஃப்க்கான குரோத்.

14:04

Speaker B

ஏன்னா ஏதோ ஒரு பற்றை நீங்க ஏதோ ஒன்னு பற்றிட்டு இருப்பீங்க அப்படின்னா,

14:09

Speaker B

உங்க மீது கவனம் செலுத்துங்க.

14:14

Speaker B

உங்களுடைய உடம்பு உங்களுடைய ஆரோக்கியத்துல கவனம் செலுத்தி,

14:18

Speaker B

உங்களை நீங்களே பிடிச்சுக்கிட்டீங்க அப்படின்னா மோட்ச பாதை அப்படிங்கறது உங்களுக்கு உறுதி.

14:22

Speaker A

தொடர்ந்து காலபுருஷ தத்துவப்படி என்னென்ன ட்ராப்ஸ் இந்த 12 ராசிகளும் இருக்கணும்.

14:30

Speaker A

ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தெந்த விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கணும் எந்த கடவுளை வணங்கணும்.

14:40

Speaker A

எந்த தொழில்ல அவங்க வந்து பெஸ்ட்டா இருப்பாங்க.

14:47

Speaker A

சில ராசிகளுக்கு குரு சொல்றதை கேட்கணும்.

14:54

Speaker A

தனக்குன்னு ஒரு குரு வச்சுக்கணும் அந்த குரு சொல்றதை கேட்கணும்.

14:58

Speaker A

லைஃப் பார்ட்னரை வந்து சிறப்பா தேர்ந்தெடுக்கணும் அப்படின்னு நிறைய விஷயங்கள் ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.

15:03

Speaker A

இதுல நிறைய பேருக்கு நிறைய டவுட்ஸ் இருக்கும்.

15:06

Speaker A

சோ எல்லாரும் ஒரே மாதிரி ஒரே ஆங்கிள்லயே சொல்ல மாட்டாங்க நிறைய அஸ்ட்ராலஜர் இருக்காங்க.

15:14

Speaker A

நிறைய ஆங்கிள்ஸ்ல நிறைய விஷயங்கள் சொல்லுவாங்க.

15:20

Speaker A

இதுல டவுட்ஸ் இருந்து ரொம்ப தெளிவா இதைப்பத்தி தெரிஞ்சுக்கணும்னா எப்படி மேம் அணுகுறது?

15:24

Speaker B

அதாவது நான் இப்பதான் அஸ்ட்ராலஜி கிளாஸஸ் அப்படிங்கறது ஸ்டார்ட் பண்றேன்.

15:28

Speaker B

நம்மளுடைய வாழ்க்கை என்ன அப்படிங்கறத நம்ம தெரிஞ்சுக்கணும்னா நம்மளுடைய ஹாரோஸ்கோப் சார்ட் நம்ம தெரிஞ்சுக்கணும்.

15:35

Speaker B

இந்த கலியுகத்தை பத்தியும் நம்ம தெரிஞ்சுக்கணும் அப்படிங்கறதுனால,

15:40

Speaker B

அஸ்ட்ராலஜி யாரெல்லாம் இன்ட்ரஸ்டடா இருக்காங்களோ கத்துக்கணும் அப்படின்னு இன்ட்ரஸ்டடா இருக்காங்களோ அவங்க எல்லாம் வந்து,

15:47

Speaker B

செப்டம்பர் ஆறாம் தேதியிலிருந்து நான் வந்து அஸ்ட்ராலஜி கிளாஸஸ் அப்படிங்கறது ஸ்டார்ட் பண்றேன்.

15:53

Speaker B

இதுதான் வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் அப்படின்னு ஸ்டார்ட் பண்றேன்.

15:56

Speaker B

சோ கீழ தெரியிற நம்பருக்கு அவங்க வந்து வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்க.

16:03

Speaker B

கால் இல்ல வாட்ஸ்அப் மெசேஜ் பண்றாங்கன்னா அவங்களுக்கான டீடைல்ஸ் வரும்.

16:06

Speaker A

ஜோதிடம் பத்தின உங்களுக்கு எந்த டவுட்ஸா இருந்தாலும் இல்ல ஜோதிடம் படிக்கணும் அப்படின்னு ஆர்வம் இருந்தால்,

16:11

Speaker A

செப்டம்பர் ஆறுல இருந்து கிளாஸஸ் ஸ்டார்ட் ஆகுது. கீழ இருக்க வாட்ஸ்அப் நம்பருக்கு மெசேஜ் பண்ணி நீங்க கிளாஸ் ஜாயின் பண்ணிக்கலாம்.

16:20

Speaker A

தொடர்ந்து இன்னும் நிறைய விஷயங்கள் மக்களுக்கு சொல்லிக்கிட்டே இருப்போம்.

16:25

Speaker A

தொடர்ந்து பேசுவோம் நன்றி.

Topics: மீனம் காலபுருஷ தத்துவம் ராசி பலன் ஆன்மீகம் மோட்சம் கர்மா இல்யூஷன் திட்டாச்மென்ட் வாழ்க்கை சவால்கள் தெய்வ வழிபாடு


---
This is the markdown twin of https://sozai.app/transcript/meenam-sudden-luck-coming/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
