**மீன ராசி 2026 சனிப்பெயர்ச்சி பலன்கள் | Meenam Rasi Sani Peyarchi 2026 | Jeevitha Sureshkumar — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/meenam-rasi-2026-sani-peyarchi-benefits/

மீன ராசி 2026 சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் ஆஸ்ட்ராலஜி வகுப்புகள் பற்றிய விரிவான அலசல்.

## Key Takeaways

- சனி பெயர்ச்சி 2026ல் மீன ராசிக்கு ஆன்மீக வளர்ச்சி மற்றும் குடும்ப மாற்றங்களை கொண்டுவரும்.
- ஆஸ்ட்ராலஜி வகுப்புகள் மூன்று மாத காலம், மாணவர்களுக்கு திறந்தவையாக உள்ளன.
- பயப்பட தேவையில்லை; சனி பெயர்ச்சி ஒரு மாற்றம் மற்றும் உணர்ச்சி வளர்ச்சி காலம்.
- தெய்வ வழிபாடு மற்றும் பெருமாள் ஸ்தலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- சனி பெயர்ச்சி மற்றும் ஜோதிட கணிப்புகள் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தும்.

## What the video covers

- நலம் தரும் சித்த மருத்துவமனை மற்றும் தொடர்பு விவரங்கள்.
- ஆஸ்ட்ராலஜி மற்றும் கணிதம் துறையில் ஆர்வம் மற்றும் வகுப்புகள் பற்றிய விவரங்கள்.
- மார்ச் 5, 6-ல் தொடங்கிய சனி பெயர்ச்சி மற்றும் அதன் முக்கியத்துவம்.
- ஆஸ்ட்ராலஜி மூன்று மாத வகுப்புகள் மற்றும் அதன் கட்டமைப்பு.
- வகுப்புகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் தேர்வு முறைகள்.
- சனி பெயர்ச்சி காரணமாக மீன ராசிக்கு ஏற்படும் ஆன்மீக மற்றும் குடும்ப மாற்றங்கள்.
- தெய்வ வழிபாடு மற்றும் பெருமாள் ஸ்தலங்கள் பற்றிய விளக்கம்.
- சனி பெயர்ச்சி காலத்தில் பயப்பட வேண்டியதில்லை, இது ஒரு உணர்ச்சி மாற்ற காலம்.
- பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனி பெயர்ச்சி மற்றும் அதன் விளைவுகள்.
- ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் வழங்கும் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள்.

Answers

## Questions about this video

சனிப்பெயர்ச்சி எப்போது தொடங்கியது?

இந்த வீடியோவின்படி, சனிப்பெயர்ச்சி மார்ச் 5 அல்லது 6 ஆம் தேதிகளில் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தொடங்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு முக்கியமான ஜோதிட நிகழ்வாகக் கருதப்படுகிறது.

ஜோதிட வகுப்புகள் பற்றிய தகவல்கள் என்ன?

திருமதி. ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள் ஜோதிட வகுப்புகளை நடத்தி வருகிறார். முதல் தொகுதி முடிவடைந்து, இரண்டாவது தொகுதி மார்ச் 20 ஆம் தேதி தொடங்குகிறது. இது மூன்று மாத கால அடிப்படைப் பாடத்திட்டமாகும், அதன் பிறகு உயர்நிலை வகுப்புகள் தொடரும்.

நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை எதற்காக அறியப்படுகிறது?

நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரகப் பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டுப் பிரச்சனைகளுக்கு சிறந்த சிகிச்சையை வழங்குகிறது. இந்த மருத்துவமனை கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரையில் கிளைகளைக் கொண்டுள்ளது.

## Full Transcript — Download SRT & Markdown

00:05

Speaker A

நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை, இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருத்துவமனை.

00:24

Speaker A

கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரை தொடர்புக்கு 8807666117 மற்றும் 8807666118.

00:35

Speaker B

ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழி வர்மனின் அன்பார்ந்த வணக்கங்கள்.

00:41

Speaker B

இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் சிறப்பு நேர்காணல் பகுதி தொடர்ச்சியா வந்து பார்த்தீங்கன்னா எல்லாருக்குமே தெரியும் எல்லா விதமான துறைகளிலும் ஒரு ஆர்வம் இருப்பதை போல இந்த ஆஸ்ட்ராலஜி இந்த கணிதம் துறையும் வந்து பார்த்தீங்கன்னா கணிப்பு துறையும் ரொம்ப ஒரு ஆர்வமான ஒரு துறைதான் எல்லாருக்குமே பொதுவாக வெகுஜன மக்களுக்குமே கூட.

01:00

Speaker B

சோ இந்த நேரம் அப்படிங்கறது வந்து இந்த வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில சனி பெயர்ச்சி அப்படிங்கறது துவங்கி இருக்கிறது.

01:09

Speaker B

மார்ச் 5, 6-ல துவங்கி இருக்குது அப்படிங்கறத நம்ம பார்க்கிறோம்.

01:15

Speaker B

அதைப்பற்றிய விரிவான ஒரு அலசல்களை நம்மோடு பேசுவதற்காக இணைந்திருக்கிறார் மீண்டும் ஆஸ்ட்ராலஜர் கம் ரிசர்ச்சர் மரியாதைக்குரிய திரு. ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள் வணக்கம்.

01:51

Speaker C

வணக்கம்.

01:52

Speaker B

எப்படி இருக்கீங்க மேம்?

01:54

Speaker C

நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?

01:55

Speaker B

நலமா இருக்கேன் மிக்க மகிழ்ச்சி உங்களை மீண்டும் சந்திக்கிறதுல நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நீங்க தொடர்ச்சியா வகுப்புகள் எடுத்துக்கிட்டு இருக்கீங்க.

02:06

Speaker B

அந்த வகுப்புகள் அப்கமிங் கிளாஸஸ் என்ன அப்படிங்கறத டீடைல்ஸ கொஞ்சம் மக்களுக்கு சொல்லிட்டு நம்ம நிகழ்ச்சிக்குள்ள துவங்கலாம்.

02:07

Speaker C

ஆக்சுவலா வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சாச்சு பேசிக் கோர்ஸ் ஆஸ்ட்ராலஜி கோர்சஸ் ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சு இப்ப செகண்ட் பேட்ச் வந்து மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து தொடங்குறோம்.

02:20

Speaker C

சோ இது எப்படி நான் ஸ்டுடென்ட்ஸ் சூஸ் பண்றோம் அப்படின்னா வரவங்க வந்து நான் எடுத்த உடனே ஆஸ்ட்ராலஜர் ஆயிடுவேனா?

02:30

Speaker C

நான் இப்படி இதை கெயின் பண்ணிடுவேனா? நீங்க பர்டிகுலரா இந்த பேட்டர்ன் இந்த சிஸ்டம் தான் நீங்க ஃபாலோ பண்ணி சொல்லிக் கொடுப்பீங்களா அதெல்லாம் கிடையாது.

02:40

Speaker C

இது வந்து எப்படின்னா உங்களுக்கு எல்லா சிஸ்டமுமே நம்ம டிஸ்கஸ் பண்ணுவோம் மைண்ட் ஓபன் மைண்டடா வச்சிட்டு நாலேட்ஜ் கெயின் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் வரணும்.

02:52

Speaker C

ஏன்னா ஆஸ்ட்ராலஜி பொறுத்தவரைக்கும் இது ஒரு கடல்.

02:56

Speaker C

சோ இது ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸ் கோர்ஸா இருக்கும் இந்த த்ரீ மந்த்ஸ் கோர்ஸ் முடிச்சவங்களுக்கு தான் நான் அடுத்தது நெக்ஸ்ட் லெவல் ஹையர் லெவல் கோர்சஸ் வந்து அவங்கதான் கண்டினியூ பண்ண முடியும்.

03:20

Speaker C

சோ இந்த மூணு மாசம் கழிச்சா நெக்ஸ்ட் லெவல் கோர்சஸ் அப்படியே கண்டினியூ ஆயிடும் ஆல்ரெடி இருக்க ஃபர்ஸ்ட் பேட்ச் ஸ்டுடென்ட்ஸும் செகண்ட் பேட்ச் ஸ்டுடென்ட்ஸும் சேர்ந்து பண்ற மாதிரி இருக்கும்.

03:32

Speaker C

இடையில இடையில வொர்க்ஷாப்ஸும் அப்பப்போ பண்றோம் இப்பதான் நட்சத்திர கிளாஸஸ் முடிச்சோம்.

03:40

Speaker C

சோ இந்த கிளாஸஸ் போயிட்டு இருக்கப்போ இடையில மறுபடியும் ஒரு வொர்க்ஷாப் பண்ற மாதிரி இருக்கும்.

03:47

Speaker B

பண்ணி கொடுப்பீங்க.

03:48

Speaker C

நம்ம ஸ்டுடென்ட்டா இருக்கிறப்போ.

03:50

Speaker C

சோ சேரணும்னு நினைக்கிறவங்க வந்து கம் வித் ஓபன் மைண்ட் ஏன்னா இதுவரைக்கும் 2000 பேத்துக்கு மேல எங்களுக்கு அப்ளிகேஷன்ஸ் வந்தாலுமே.

04:00

Speaker B

ஓகே ஓகே.

04:01

Speaker C

நான் இன்னும் ஒரு 15 பேத்துக்கு கூட இவங்கதான் வேணும்னு நான் இன்னும் ஃபில்டர் பண்ணல ரைட் சோ அவ்வளவு ஃபில்டர் பண்ணிதான் எடுக்கிறோம்.

04:11

Speaker C

ஏன்னா குவாலிட்டி ரொம்ப முக்கியம் அப்படிங்கறதோட எத்தனை பேர் வராங்கங்கறது இல்லை.

04:16

Speaker C

ஸ்பெசிஃபிக்கா இருக்கணும் கொஞ்ச பேர் இருந்தாலும் நாலேட்ஜபிலா இருக்கணும்.

04:20

Speaker B

ஓகே 20-ல ஆரம்பிச்சு எப்போ முடியுது மேம் வகுப்புகள்?

04:24

Speaker B

மூன்று மாதம்.

04:25

Speaker C

மூன்று மாத வகுப்புகள் தான் இது மார்ச், ஏப்ரல், மே அதாவது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கிளாஸஸ்.

04:32

Speaker C

வாரத்துல ஒரு நாள் கிளாஸஸ் வைக்கிற மாதிரி ஃபர்ஸ்ட் வந்து ஃபிரைடே, சாட்டர்டேன்னு வச்சோம்.

04:40

Speaker C

பட் நிறைய பேர் கேட்டாங்க ரெண்டு நாள் முடியாதுங்கறப்போ சரி சாட்டர்டே அதை அப்படியே ரெண்டு கிளாஸ ஒரே கிளாஸா மாத்திடலாம்.

04:47

Speaker B

அப்படிங்கற மாதிரி.

04:49

Speaker B

இந்த வகுப்புகள் தொடர்பாக நீங்க மேலதிக விவரங்களை தெரிஞ்சுக்கணும் அப்படின்னா இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விவரங்களை அனுப்புங்க.

05:00

Speaker B

அந்த மின்னஞ்சல் முகவரில இருந்து உங்களுக்கு ரிப்ளை பண்ணி உங்களுக்கு கம்யூனிகேட் பண்ணுவாங்க.

05:06

Speaker B

நன்றி.

05:08

Speaker B

மேம் இப்போ நம்ம முக்கியமான ஒரு இடத்துக்கு வந்திருக்கிறோம்.

05:12

Speaker B

சோ வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் அப்படிங்கறது குறித்து ஏற்கனவே நீங்க பல முறை பேசி இருக்கிறீங்க.

05:20

Speaker B

நம்ம ஃபோர்த் எஸ்டேட் தமிழ்ல நீங்க பேசி இருக்கிறீங்க.

05:21

Speaker B

இந்த முறை வந்திருக்கிறது என்ன சனி பெயர்ச்சி என்ன மாறுபாடு இருக்கு?

05:28

Speaker B

அதுல இருந்து நம்ம துவங்கிட்டு நம்ம அடுத்த ராசிகளுக்குள்ள போகலாம்.

05:37

Speaker C

சோ வந்து மார்ச் ஆறாம் தேதி சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அப்படிங்கறதுதான்.

05:43

Speaker C

அதாவது திருநள்ளாறுல இதை வந்து ஃபாலோ பண்ணுவாங்க அப்படிங்கறதுதான்.

05:50

Speaker C

கோயில் ஆகம விதிகளை வச்சு ஃபாலோ பண்ணது பலாயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே வந்து ரிஷிகளால இது கணிக்கப்பட்ட ஒரு விஷயம்.

06:01

Speaker C

அதுல அந்த காலத்துல வந்து ராஜாக்களுக்காகவும் கோயிலுடைய அமைப்புகளுக்காகவும் கட்டமைப்பாகவும் அதுக்காக வந்தது.

06:10

Speaker C

தனிமனிதனுக்காக ஜோதிடம் வரல அந்த நேரத்துல.

06:14

Speaker C

சோ இது வந்து கூட்டாதான் வந்தது ராஜாக்களுக்காக வந்தது.

06:20

Speaker C

அரசு எப்படி இருக்கும்ங்கறதுக்காக வந்தது.

06:22

Speaker C

சோ அதுக்கு அப்புறமா நம்ம வந்து தனிமனித தனிமனிதனுடைய ஜோதிடம் அப்படின்னு பார்க்கிறப்போ சில விஷயங்கள் புரிய வந்தது என்ன அப்படின்னா.

06:33

Speaker C

இதைத்தான் ஒரு 200 வருடங்களா போய்க்கொண்டிருக்கிற ஒரு டிபேட்டே இதுதான்.

06:40

Speaker C

அது என்னன்னா அக்யூரஸினு ஒரு விஷயம் இருக்குது.

06:42

Speaker C

நம்மளுடைய கிராவிடேஷனல் புல்லுன்னு ஒன்னு இருக்குது கிரகங்கள் வந்து அப்ப கணிச்ச மாதிரி அதே பேட்டர்ன்ல எல்லாம் மூவ் ஆகலங்கறது ஒன்னு இருக்குது.

06:50

Speaker C

லைட்டா நம்மளுடைய குளோபும் டில்ட் ஆயிடுச்சுங்கறதெல்லாம் ஒன்னு இருக்குது.

06:52

Speaker C

சோ இதெல்லாம் பார்க்கிறப்போ சரியான முறைப்படி வந்து பிளானட்ஸ் மூவ் ஆகுறது இல்லை.

07:00

Speaker C

அதனாலதான் நம்ம வந்து வக்ரம் அடையுது.

07:02

Speaker C

இப்ப கூட நம்ம ரீசன்ட்டா என்ன சொல்லி இருப்போம் குரு பெயர்ச்சில கூட குரு வந்துட்டு முன்னாடி வந்துட்டு திரும்பி பின்னாடி போறாருன்னு ஒன்னு இருக்குது.

07:10

Speaker B

ஓகே ஓகே.

07:11

Speaker B

ஜூன் மாசம் குரு பெயர்ச்சி வருதுன்னு நினைக்கிறேன்.

07:13

Speaker C

இல்லையா.

07:14

Speaker C

அப்ப வந்து குரு குரு வரப்போ வந்து சனி கொஞ்சம் சைலன்ட் ஆவாருதான்.

07:20

Speaker C

குரு பார்த்தாலே கொஞ்சம் சனி சைலன்ட் ஆவாருங்கறதுனாலதான்.

07:23

Speaker C

இதை யாரும் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம் ஆனா ஒரு சிலர் ஆல்ரெடி அவங்களுக்கு சனி பெயர்ச்சிங்கற ஒரு விஷயம் எல்லாம் நடந்துகிட்டு இருக்கறதுனால.

07:30

Speaker C

அவங்க எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.

07:33

Speaker B

பட் இது வந்து ஒரு கூடுதல் விவரத்துக்காக நம்ம எடுத்துக்கலாம் இல்லையா?

07:37

Speaker B

அந்த மாதிரி பார்க்கலாம்.

07:38

Speaker B

அண்ட் இறுதியான ராசியாக மீன ராசி சோ மீன ராசி நேயர்களுக்கு இந்த 2026 வாக்கிய பஞ்சாங்க பலன்கள் எப்படி இருக்கு?

10:14

Speaker C

அதாவது இது எப்படின்னா.

10:17

Speaker C

தண்ட்டையா வந்துருச்சு சனி.

10:20

Speaker C

ஆல்ரெடி வந்துருச்சு.

10:21

Speaker C

மீனத்துக்கிட்ட.

10:22

Speaker C

சோ இவங்களுடைய தூக்கத்தை ஆல்ரெடி வந்து கெடுத்தாச்சு அப்படிங்கறப்போ ஒரு நல்ல விஷயம் என்னன்னா ஆன்மீகம் தூண்டப்படும்.

10:29

Speaker C

அப்படிங்கறதுதான் இவங்களுக்கு வந்து வர்றது.

10:30

Speaker C

நிறைய ஸ்பிரிச்சுவல் பிளேசஸ் போக ஆரம்பிப்பாங்க.

10:33

Speaker C

தெய்வமே கதி அப்படிங்கற மாதிரி ஆகும்.

10:35

Speaker C

லைஃபே பார்த்தீங்கன்னா வேற ஒரு டிரான்ஸ்பர்மேஷன் ஜோன்க்குள்ள தான் இவங்களை கூட்டிட்டு போகும்.

10:40

Speaker C

சோ இவங்க வந்து யுத்தம் செய்யக்கூடிய தெய்வ வழிபாடே அதிகமா பண்ண போயிட்டு இருப்பாங்க.

10:46

Speaker C

இந்த யுத்தம்னா எப்படின்னா காட்டுக்கோயில்.

10:50

Speaker C

அதே மாதிரி முருகன்.

10:53

Speaker C

காளி சம்பந்தப்பட்ட தெய்வங்கள் வழிபாடு பண்றது.

10:56

Speaker C

இன்னும் சொல்லப்போனா இன்னும் லாங் டிஸ்டன்ஸ் டிராவல் பண்ணி போயிட்டு.

11:02

Speaker C

தெய்வங்களை தேடி தேடி போகக்கூடிய அமைப்பு.

11:05

Speaker C

ஃபேமிலியிலேயே சில டிரான்ஸ்பர்மேஷன்ஸ் நடந்திருக்கும்.

11:09

Speaker C

கண்டிப்பா நடந்திருக்கும்.

11:10

Speaker C

சோ இதெல்லாமே இன்னும் ஒரு கன்ஃபர்மேஷன் என்ன அப்படின்னா.

11:16

Speaker C

யாரெல்லாம் குடும்பமாகவே இருந்தாலும் யாரெல்லாம் உங்களுக்கு கெடுதல் பண்ணி இருந்திருப்பாங்களோ அவங்களை எல்லாம் ஒரு பிரச்சனை பண்ணியாவது கண்ணுல காட்டி இருந்திருக்கும்.

11:26

Speaker C

சோ இவங்க எல்லாம் உங்களுக்கு இப்படி பண்ணுனாங்க இவங்க எல்லாம் இப்ப உங்களை விட்டு ஒதுங்கி போக போறாங்கங்கறப்போ.

11:32

Speaker C

கொஞ்சம் தனிமை தனிச்சு விடப்பட்ட மாதிரியான ஒரு சிச்சுவேஷன்க்குள்ள போய்.

11:37

Speaker C

இனிமேல் நீங்க தனியா இயங்கணும்.

11:40

Speaker C

அப்படிங்கற ஒரு விஷயம் ரியாலிட்டிக்குள்ள வாங்க.

11:44

Speaker C

அப்படிங்கறதுதான் வந்து இப்ப மீனத்துக்கு சொல்லக்கூடிய ஒரு விஷயம்.

11:48

Speaker C

சோ இவங்க எல்லாம் வந்து முழுக்க முழுக்க ராமேஸ்வரம்.

11:53

Speaker C

காசி.

11:55

Speaker C

இந்த மாதிரிதான் போய் இவங்க எல்லாம் வழிபாடு பண்ணனும்.

11:59

Speaker C

ராமேஸ்வரத்துல இருக்க ராமேஸ்வரத்துல இருக்க ராமநாத சுவாமி வழிபாடு பண்றது.

12:03

Speaker C

திருப்புலானை போய் வழிபாடு பண்ணிட்டு வர்றது.

12:06

Speaker C

திருப்புலானையில போய் அது பெருமாள் ஸ்தலம் அது.

12:10

Speaker B

இது எங்க இருக்கு ஆக்சுவலி?

12:11

Speaker B

திருப்புலானை.

12:12

Speaker C

அது வந்து திருப்புலானை வந்து ராமேஸ்வரத்துக்கும் ராமநாதபுரத்துக்கும் நடுவுல இருக்கும்.

12:17

Speaker B

ஓகே ஓகே.

12:18

Speaker C

போற வழியிலதான் அது இருக்கும்.

12:19

Speaker C

சோ அங்க போயிட்டு திருப்புலானையில போய் இவங்க வழிபாடு பண்றாங்கன்னா அதெல்லாம் 3000 வருடம் பழமையான பெருமாள் ஸ்தலம் அது.

12:27

Speaker C

சயன பெருமாள் ஸ்தலம் அது.

12:30

Speaker C

அங்க போய் அவங்க அங்க ஏகப்பட்ட பரிகாரங்களும் இருக்கு.

12:35

Speaker C

சோ அங்க போய் இவங்களுக்கு வந்து பயம் ஜாஸ்தியாகவே இருக்கும்.

12:38

Speaker C

சோ இந்த பயம் எல்லாம் முதல்ல இவங்களுக்கு நீங்கணும் எல்லாமே சரியாதான் நடக்குது அப்படிங்கறப்போ.

12:43

Speaker B

பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

12:44

Speaker C

ரியலைசேஷன் டைம் பீரியட் தான் அவங்களுக்கு.

12:45

Speaker C

சோ பயப்பட தேவை இல்லை அவங்க ஏன்னா குரு ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல இவங்களுக்கு சப்போர்ட்டிவாதான் வரப்போறாங்கங்கறப்போ.

12:50

Speaker C

இன்னும் கொஞ்சம் காலகட்டத்துக்கு அப்புறம் இவங்களுக்கு லைஃப்ல நிறைய டிரான்ஸ்பர்மேஷன்ஸ் வருது.

12:55

Speaker C

இன்னும் சொல்லப்போனா இன்னும் ஒரு ரெண்டு வருஷம் கணக்கு வச்சுக்கணும் இவங்க.

12:58

Speaker B

ஓகே 28 வரைக்கும்.

12:59

Speaker C

28 வரைக்கும் இவங்களுக்கு ஒரு ஜர்னி வேற மாதிரி இருக்கும் லைஃப்.

13:03

Speaker C

ஆனா அது கரெக்டாதான் இருக்கும்.

13:06

Speaker C

சோ பொதுவா இந்த சனி பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ.

13:10

Speaker C

பெருசா பயப்படணும்ங்கற ஒரு அவசியம் கிடையாது.

13:13

Speaker C

சனி நாளே ஒரு கரெக்ஷன் பண்ண போறவர் தான்.

13:15

Speaker C

என்ன தவறுகள் செஞ்சோமோ அதுக்கான வினை அனுபவிக்கிறதுக்கு தான் இப்ப வராங்கறப்போ.

13:21

Speaker C

உடனே அதை நீங்க சரி பார்த்துட்டீங்கன்னா லைஃப் சேஞ்ச் ஓவர் அப்படிங்கறதுதான்.

13:25

Speaker C

அந்த லைஃப மாத்தாம சனி கிளம்பவே மாட்டார்.

13:28

Speaker C

இல்லைன்னா நம்ம லூப்க்குள்ளயே சுத்திட்டே இருக்கிற மாதிரிதான்.

13:30

Speaker C

அந்த விஷயம் இருக்கும்.

13:31

Speaker C

சோ அதனால தவறுகளை திருத்திக்க கூடியதுக்கு தான் திருத்துறதுதான் வந்து சனி பெயர்ச்சியே.

13:35

Speaker B

சோ யாரும் பயப்பட வேண்டாம் பொதுவா.

13:36

Speaker C

பயப்பட வேண்டாம் மாற்றம் தான் மாற்றத்தை கொடுக்கக்கூடியதுதான் கொஞ்சம் ஸ்லோவா கொடுக்கும்.

13:40

Speaker C

அதை வந்து பொறுமையா ஏத்துக்கணும் அப்படிங்கறப்போ.

13:43

Speaker C

ஏன்னா சனி லேட்டா கொடுத்தாலும் திரும்ப வாங்க மாட்டார்ன்னு ஒன்னு இருக்குது.

13:47

Speaker B

ஓ.

13:48

Speaker C

சனி வந்து ஒருத்தவங்களுடைய வாழ்க்கையில 30 வயசு ஆகுறதுக்குள்ள எல்லாத்துக்குமே சனி வந்தே தீரும் அப்படிங்கறதுதான் ஒன்னு இருக்குது.

13:54

Speaker C

சோ ஒவ்வொரு ஏஜ் கேட்டகிரிக்குமே லைஃப் ஸ்டைல் மாறிட்டேதான் இருக்கும்ங்கறப்போ அப்கிரேடேஷன் தான்.

13:58

Speaker C

சனி கொடுத்துட்டு போறப்போ உங்கள்ட்ட நல்லபடியாவே கொடுத்துட்டு போவாருங்கறப்போ அதை பத்திரமா வச்சுக்கோங்க.

14:04

Speaker C

இப்ப உங்களுக்கு இன்கம் வருதுன்னா சனிதான் கொடுக்கிறார்.

14:06

Speaker C

அப்படிங்கறத நீங்க தெரிஞ்சுக்கணும்.

14:07

Speaker B

நிச்சயமா.

14:08

Speaker B

உங்கள் வகுப்புகளைப் பற்றியும் மேலும் ஒரு செய்தி மக்களுக்கு நேரடியாக கொடுத்துட்டீங்கன்னா அவங்க நெக்ஸ்ட் உங்களை தொடர்பு கொள்வாங்க.

14:15

Speaker C

மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து நாங்க வந்து கிளாஸஸ் ஸ்டார்ட் பண்றோம்.

14:20

Speaker C

சோ இன்னும் யாராவது இன்னும் ரெஜிஸ்டர் பண்ணாம இருக்கீங்க அப்படின்னா ரெஜிஸ்ட்ரேஷன் கீழ தெரியுற மெயில் ஐடிக்கு.

14:30

Speaker C

ஏன்னா எங்களால இப்ப கால்ஸ் அட்டென்ட் பண்ண முடியல.

14:32

Speaker C

ஒன்ஸ் நீங்க வந்து ஸ்டுடென்ட் ஆனதுக்கு அப்புறம் உங்களுக்கு வந்து வாட்ஸ்அப் குரூப்ல நான் உங்களை வந்து வச்சிருவோம்.

14:38

Speaker C

அட் தி சேம் டைம் மைண்ட் பிராட் மைண்டடா வச்சுட்டுதான் என்கிட்ட கிளாஸஸ் நீங்க படிக்க வரணும்.

14:45

Speaker C

ஹைலி சிஸ்டமேட்டிக்கா எல்லாம் இருக்காது இது வேர்ல்ட் ஆஸ்ட்ராலஜியா நீங்க படிக்கிற மாதிரிதான் இருக்கும்.

14:51

Speaker B

சரி ஃபைன் பலவிதமான கருத்துக்களை பொறுமையா பகிர்ந்துக்கிட்டீங்க.

14:54

Speaker B

பொறுத்திருந்துதான் பார்க்கணும் நடக்கப்போற நிகழ்வுகள் என்ன அப்படின்னு.

14:57

Speaker B

மிக்க நன்றி.

14:58

Speaker C

நன்றி.

15:00

Speaker B

நன்றி மீண்டும் சந்திக்கலாம்.

15:01

Speaker B

வணக்கம்.

Topics: மீன ராசி சனி பெயர்ச்சி ஆஸ்ட்ராலஜி வகுப்புகள் ஜோதிடம் வாக்கிய பஞ்சாங்கம் ஆன்மீகம் தெய்வ வழிபாடு பெருமாள் ஸ்தலம் ஜீவிதா சுரேஷ்குமார் 2026 பலன்கள்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11537)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11537)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/meenam-rasi-2026-sani-peyarchi-benefits/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
