**Meenam 👉மீன ராசிக்காரர்கள் தயவு செய்து இத பண்ணாதீங்க.! | Astrologer Jeevitha Sureshkumar — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/meenam-astrology-advice-jeevitha-sureshkumar/

மீன ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டில் சனி கேது காரணமாக வரும் சவால்கள் மற்றும் ஆன்மீக வழிகாட்டுதல்கள்.

## Key Takeaways

- சனி கேது காரணமாக 2026-ல் மீன ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்.
- ஆன்மீக வழிபாடுகள் மற்றும் மெடிடேஷன் மூலம் மனசு சாந்தியடையும்.
- பண விஷயங்களில் மிகுந்த கவனம் மற்றும் நம்பிக்கையற்றவர்களை தவிர்க்க வேண்டும்.
- பழைய குடும்ப பிரச்சனைகள் தீர்ந்து மன்னிப்பு மற்றும் கர்மா தீர்வு ஏற்படும்.
- மே மாதம் குரு கிரகத்தின் ஆதரவு மீன ராசிக்காரர்களுக்கு பலனளிக்கும்.

## What the video covers

- 2026-ல் சனி கேது மீன ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் மற்றும் சவால்களை உருவாக்கும்.
- மார்ச் 2026-ல் பண விஷயங்களில் மிகுந்த கவனம் தேவைப்படும்.
- மெடிடேஷன் மற்றும் ஆன்மீக வழிபாடுகள் மனசு மற்றும் வாழ்க்கையை சமநிலைப்படுத்த உதவும்.
- பழைய குடும்ப பிரச்சனைகள் மற்றும் கர்மா தொடர்பான சிக்கல்கள் தீரும் ஆரம்பம் 2026-ல் காணப்படும்.
- மச்ச நாராயணா கோயில் மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு முக்கியமான ஆன்மீக செயல்கள் ஆகும்.
- பண விஷயங்களில் நம்பிக்கையற்றவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம், பிளான்களை தள்ளி வைக்க பரிந்துரை.
- ஏப்ரல் 2026-ல் குடும்ப உறவுகளில் மன்னிப்பு மற்றும் கர்மா தீர்வு நிகழும்.
- மே மாதம் குரு கிரகத்தின் ஆதரவு மற்றும் பாதுகாப்பு கிடைக்கும்.
- பழைய மன அழுத்தங்கள் மற்றும் குழப்பங்களை டீக்லட்டர் செய்து புதிய வாழ்க்கைக்கு முன்னேற வேண்டும்.
- சிறிய பயணங்கள் மற்றும் ஆன்மீக பயணம் மூலம் மன அழுத்தம் குறையும்.

Answers

## Questions about this video

2026 ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்கள் பண விஷயத்தில் எப்படி இருக்க வேண்டும்?

2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீன ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி மற்றும் கேதுவின் தாக்கம் பண விஷயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.

மீன ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் மன அழுத்தத்தை சமாளிக்க என்ன செய்ய வேண்டும்?

மீன ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் மன அழுத்தத்தை சமாளிக்க தங்களுக்கு என்று நேரம் ஒதுக்கி தியானம் செய்ய வேண்டும். தியானம் அவர்களுக்கு மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும்.

மீன ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் எந்த தெய்வங்களை வழிபடலாம்?

மீன ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் வராக மூர்த்தியை வழிபடலாம், வராக மந்திரங்களை சொல்லலாம். மேலும், மச்ச அவதாரம் எடுத்த கோயில்களுக்கும், சிங்கப்பெருமாள் கோயிலுக்கும் சென்று லட்சுமி நரசிம்மரை வழிபடலாம்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

மீன ராசி 2026 எப்படி இருக்கும் அப்படின்னா

00:07

Speaker A

மைண்ட் எப்படி இருக்கும் தெரியுமா தேவையில்லாத

00:12

Speaker A

இந்த சனி கேது எப்படின்னா ஒரே இடத்துல இருந்து தான் பிரச்சனையை கொடுத்துட்டு இருக்கும்.

00:19

Speaker A

மார்ச் 2026 டைம்ல எல்லாம் பண விஷயத்துல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும் மீன ராசியில இருக்கிறவங்க ஏன்னா

00:27

Speaker A

சனி கேது ஒரு பிரஷர் கொடுக்கும் எவ்வளவு ஒரு அழுத்தத்தை கொடுக்கும் பிச்சுக்கிற மாதிரி ஒரு அழுத்தத்தை கொடுக்கும்.

00:34

Speaker A

ஆனா

00:37

Speaker A

மொத்தத்துல மீன ராசிக்காரங்களுக்கு எப்படி இருக்கும் அப்படின்னா

00:57

Speaker A

மீன ராசி

01:42

Speaker A

2026 எப்படி இருக்கும் அப்படின்னா மீன ராசிக்கு வந்து சனி கேது இது எப்படின்னா முன்ஜென்ம கர்மாவையும் சேர்ந்து ஆக்டிவேட் பண்ணும் அப்படிங்கறதுதான் 2026 சொல்லக்கூடியது.

01:56

Speaker A

மனசு கொஞ்சம் சோர்வா இருக்கும் ஆனா இன்டியூஷன் நல்லா ஷார்ப்பா தான் இருக்கும் வேலையில கொஞ்சம் ஸ்லோ ஆகுற மாதிரி இருக்கும் மன அழுத்தம் காரணமா இல்ல ஹெல்த் ரீதியா கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் அப்படிங்கற மாதிரி சிச்சுவேஷன்ஸ் எல்லாம் வந்து மீனத்துக்கு வரும் குழப்பங்கள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் ஃபேமிலில சில டிஸ்டர்பன்சஸ் அப்படிங்கறது மீன ராசியில இருக்கவங்களுக்கு இருக்கும்.

02:13

Speaker A

அப்போ கொஞ்சம் ஒரு நிதானமா இருந்துக்கிறது உங்களுக்கான ஒரு டைம் ஸ்பென்ட் பண்றது அப்படிங்கற மாதிரி கொஞ்சம் நேரம் உங்களுக்குன்னு கொஞ்சம் ஒதுக்கணும் உங்களுக்குன்னு எப்படி ஒதுக்கணும் மெடிடேஷன்க்குள்ளார மீன ராசிக்காரங்க கண்டிப்பா போகணும்.

02:25

Speaker A

மெடிடேஷன் ரொம்ப பவர்ஃபுல்லாவே உங்களுக்கு மாறும் ஏன்னா மீன ராசி ஸ்ட்ராங்கா ஆன்மீகத்துக்குள்ள போகக்கூடிய அமைப்பு இருக்குது இந்த சனி கேது என்ன பண்ணும்னா அழகா ஆன்மீகத்துல போய் உட்கார வைக்கும்.

02:39

Speaker A

தெய்வ பலம்

02:41

Speaker A

தெய்வ சக்தியை கொடுக்கக்கூடிய ஒரு அமைப்பு இருக்கு.

02:47

Speaker A

அப்போ நீங்க வந்து வராகர வழிபாடு பண்றது.

02:53

Speaker A

வராக மூர்த்தி இருக்காங்க இல்லையா வராக மூர்த்தியை வழிபாடு பண்றது.

02:58

Speaker A

வராக மந்திரங்கள் சொல்றது.

03:01

Speaker A

அதாவது மக்ஷியா அவதாரங்கள் இந்த மக்ஷியா அவதாரம் எடுத்த கோயில்களுக்கு போறது சிங்கப்பெருமாள் கோயிலுக்கு போறது.

03:10

Speaker A

லட்சுமி நரசிம்மரை வழிபாடு பண்றது.

03:15

Speaker A

அகோபிலம் போயிட்டு வரது இது எல்லாமே உங்க வாழ்க்கையில சில சேஞ்சஸ் அப்படிங்கறத கொடுக்கும்.

03:20

Speaker A

ஆன்மீக பயணத்தை அதிகப்படியா மேற்கொள்ளனும் அப்படின்னா மீன ராசிக்காரங்க ஆன்மீகத்துல கொஞ்சம் நல்லா இன்வால்வ் ஆகணும் அப்படிங்கறதுதான் இந்த 2026 சொல்லக்கூடியது.

03:27

Speaker A

ஏன்னா இந்த 2026 இப்போ ஜனவரி இப்படித்தான் ஸ்டார்ட் ஆகுது.

03:33

Speaker A

ஆன்மீகமா போகணும்ங்கற மாதிரிதான் ஸ்டார்ட் ஆகுது.

03:36

Speaker A

இப்போ பிப்ரவரி மாசம் 2026 எடுத்துக்கிறோம்னு வச்சுக்கோங்களேன்.

03:42

Speaker A

மைண்ட் எப்படி இருக்கும் தெரியுமா தேவையில்லாத விஷயத்தை எல்லாம் கலெக்ட் பண்ணனும் டீக்லட்டர் பண்ணனும்.

03:50

Speaker A

இப்ப இப்ப எப்படி நம்ம வீட்ல வந்து எல்லாமே கிளீன் பண்றோம்.

03:56

Speaker A

நம்ம வீட்ல தேவையில்லாத பொருட்களை எல்லாம் எப்படி கிளீன் பண்ணி தூக்கி போடுறோமோ அந்த மாதிரி மைண்ட்லயும் நிறைய தேவையில்லாத அழுக்கு குப்பைகள் அதிகமா இருக்குது மீன ராசிக்காரங்களுக்கு.

04:10

Speaker A

இதெல்லாம் டீக்லட்டர் பண்றதுதான் உங்களுடைய வேலையாவே இருக்கும்.

04:14

Speaker A

இந்த பழைய சண்டை எல்லாம் இருக்கும் ஃபேமிலி ஃபைட்ஸ் இது எல்லாமே ஒரு ஒரு முடிவடையக்கூடிய ஒரு ஸ்டேஜ்க்குள்ள போற மாதிரி மீன ராசிக்காரங்களுக்கு இருக்கும்.

04:23

Speaker A

உங்களுக்கு நிறைய தெய்வம் சம்பந்தப்பட்ட கனவுகள் தெய்வங்கள் கனவுல வந்து சில விஷயங்கள் சொல்றது இது எல்லாமே வந்து

04:30

Speaker A

ஒரு ஸ்பிரிச்சுவல் கனெக்டிவிட்டிங்கறது உங்களுக்கு வரும்.

04:35

Speaker A

ஏன்னா நான் சனி கேது காம்பினேஷன் சொன்னேன் இல்லையா.

04:38

Speaker A

அப்போ நீங்க வந்து காஞ்சி தட்சிணாமூர்த்தியை வழிபாடு பண்றது.

04:45

Speaker A

உக்கிர தெய்வங்கள் வழிபாடு பண்றது.

04:49

Speaker A

எந்த தேவ ஸ்தலங்களுக்கு போனாலும் எலுமிச்சம் பழம் எலுமிச்சம் பழம் கொடுத்து வழிபாடு பண்றது.

04:58

Speaker A

எலுமிச்சம் பழத்துல விளக்கு ஏத்துறது முக்கியமா வியாழக்கிழமைகள்ல தட்சிணாமூர்த்திக்கு ஒரு நெய் தீபம் கோயில்ல போய் ஏத்திட்டு வந்துருங்க.

05:05

Speaker A

இது எல்லாமே வந்து ஒரு லக் அப்படிங்கற ஒரு விஷயத்தை உங்களுக்கு ஆக்டிவேட் பண்ணி கொடுக்கும்.

05:10

Speaker A

ரொம்ப இருகுன நிலையில உட்காராம ஒரு சின்ன சின்ன ஒரு டிராவல் போயிட்டு வரீங்க.

05:18

Speaker A

ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு டிராவல் பண்றீங்க.

05:22

Speaker A

இந்த சனி கேது எப்படின்னா ஒரே இடத்துல இருந்து தான் பிரச்சனையை கொடுத்துட்டு இருக்கும்.

05:26

Speaker A

ரொம்ப டிப்ரஷனா இருக்கப்ப இங்க இருந்து கிளம்பிடனும்.

05:31

Speaker A

அட்லீஸ்ட் வெளிய போய் ஒரு வாக்கிங்காவது போயிடனும்.

05:35

Speaker A

ஒரு வண்டி எடுத்துட்டு ஒரு டிரைவிங்காவது போயிடனும்.

05:38

Speaker A

ஒரு ஷார்ட் டிராவல் பண்ணிட்டு வந்தீங்கன்னா லக்குங்கறது உங்களுக்கு ஆக்டிவேட் ஆயிடும்.

05:42

Speaker A

சோ இந்த பழைய விஷயத்துல இருந்து பழைய இருந்து புதியன போகணும் அப்படிங்கறதுதான் மீன ராசிக்கு 2026 சொல்றதே.

05:51

Speaker A

நிறைய இந்த இல்யூஷன்ஸ்குள்ள எல்லாம் இல்லாம கொஞ்சம் வெளிய வரணும் அப்படிங்கறது.

05:57

Speaker A

ஏன்னா ஆல்ரெடி 2025லயே நிறைய குழப்பங்கள் ஸ்ட்ரெஸ் எல்லாமே உங்களுக்கு இருந்திருக்கும்.

06:03

Speaker A

இப்ப கரெக்டா 2025 முடியற டைம்ல எல்லாம் அதிக அழுத்தங்களுக்குள்ள போற மாதிரி எல்லாம் இருக்கும்.

06:10

Speaker A

சோ இதெல்லாம் வந்து முதல் மனசுல இருந்து மைண்ட்ல இருந்து டீக்லட்டர் அப்படிங்கறத வந்து நீங்க பண்ணனும்.

06:17

Speaker A

மார்ச் 2026 டைம்ல எல்லாம் பண விஷயத்துல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும் மீன ராசியில இருக்கிறவங்க.

06:25

Speaker A

ஏன்னா ரொம்ப ஃபிளக்சுவேஷன்ஸ் இருக்கும்.

06:28

Speaker A

யாரை நம்பியும் பணம் கொடுத்துடவே கூடாது.

06:31

Speaker A

யாரையாவது நம்பி நீங்க பணம் கொடுத்திருந்தீங்கன்னா பெரிய லாஸோ இல்ல ஏமாற்றங்களை சந்திக்கிற மாதிரிதான் மீனத்துக்கு ஆகும்.

06:38

Speaker A

அதோட பார்ட்னர்ஷிப் அப்படிங்கறது முடிஞ்ச அளவுக்கு வேண்டாம் மீன ராசிக்காரங்களுக்கு அது ரிஸ்க் தான் உங்களுக்கு.

06:45

Speaker A

கொஞ்சம் அந்த பிளான் எல்லாம் கொஞ்சம் தள்ளி போடுறது கொஞ்சம் உத்தமாவே இருக்கும்.

06:50

Speaker A

பிசினஸ்ல ஏதாவது பிசினஸ் பண்ணனும்னு நினைக்கிறேன்.

06:54

Speaker A

அது முடிவெடுக்கணும்னு நினைக்கிறேன்.

06:56

Speaker A

தயவு செஞ்சு அதை போஸ்ட்பான் பண்ணிடுங்க மீன ராசிக்காரங்க.

07:00

Speaker A

அதுக்கு பதிலா இந்த மச்ச நாராயணா கோயிலுக்கு அடிக்கடி போயிட்டு வாங்க.

07:05

Speaker A

ஒரு தெளிவு நிலை அப்படிங்கறது உங்களுக்கு கிடைக்கும்.

07:08

Speaker A

இந்த மச்ச காயத்ரி மந்திரம் கேட்கிறது.

07:12

Speaker A

இதெல்லாம் வந்து ஒரு கன்ஃபியூஷன் ஸ்டேஜ்ல இருந்து உங்களை கொஞ்சம் ரிலீஸ் பண்ணிடும்.

07:18

Speaker A

ஒரே டைம் பண்ணா போதுமா அப்படிலாம் கிடையாது.

07:20

Speaker A

மீன ராசிக்காரங்களுக்கு எல்லாமே உடனே அப்பவே நடக்கணும் அப்படிங்கிற எதிர்பார்ப்பு ரொம்ப அதிகம்.

07:25

Speaker A

உங்களுக்கு கொஞ்சம் கிராஜுவலா தான் நடக்கும் கொஞ்சம் கொஞ்சமா ஸ்டெப் பை ஸ்டெப்பா தான் உங்களுக்கு ப்ராசஸிங் நடக்கும்ங்கறப்போ.

07:31

Speaker A

கொஞ்சம் ஏன்னா உங்களுக்கு டீக்லட்டரிங் பண்ணனும்னு சொல்லிட்டேன்.

07:33

Speaker A

மனசுல இருந்து நிறைய விஷயங்கள் கழியனும்னு சொல்லிட்டேன்.

07:36

Speaker A

அடிக்கடி பக்கத்துல மச்ச நாராயணா கோயில் இருக்கு இல்ல மாசத்துல ஒரு தடவையாவது மச்ச நாராயணாவை வழிபாடு பண்றது.

07:43

Speaker A

அடிக்கடி மச்ச காயத்ரி மந்திரங்கள் கேட்கிறது.

07:47

Speaker A

இதெல்லாம் வந்து ஒரு கன்ஃபியூஷன் ஸ்டேஜ்ல இருந்து உங்களை கொஞ்சம் ரிலீஸ் பண்ணிடும்.

07:52

Speaker A

யாருக்காவது உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்தை கத்து கொடுங்க.

07:57

Speaker A

அது தர்மமாவே மாறும்.

08:00

Speaker A

உங்களுடைய நாலேட்ஜ் மத்தவங்களுக்கு ஷேர் ஆக ஷேர் ஆக உங்களுடைய கர்மத்துல இருந்து தர்மத்துக்கு போகக்கூடிய வழி.

08:06

Speaker A

ஒரு லூப்ல இருந்து தப்பிக்கக்கூடிய வழியே அதுதான்.

08:10

Speaker A

ஏப்ரல் 2026ல எல்லாம் இந்த ஃபேமிலிக்குன்னு ஒரு கர்மா இருக்கும்.

08:17

Speaker A

இந்த மீன ராசியில இருக்கவங்களுக்கு குடும்ப குடும்பத்துல இருக்கவங்களுடைய பாரத்தை எல்லாம் எல்லா கர்மாவையும் சுமந்துட்டு இருக்கிற மாதிரி எல்லாம் இருக்கும்.

08:24

Speaker A

இதெல்லாம் என்ன ஆகும்னா

08:27

Speaker A

கொஞ்சம் கொஞ்சமா கிளியர் ஆக ஆரம்பிக்கும்.

08:30

Speaker A

முன்னோர்களுடைய ஆசீர்வாதம் அப்படிங்கறது கொஞ்சம் ஸ்ட்ராங் ஆக ஆரம்பிக்கும்.

08:34

Speaker A

சில பேத்துக்கு சித்தர்களுடைய ஆசீர்வாதம் எல்லாமே கிடைக்கும்.

08:37

Speaker A

மீனத்துல இருக்கவங்களுக்கு.

08:39

Speaker A

அந்த பழைய விஷயங்கள் எல்லாம் ஏன்டா இப்படி பண்ணனும் அப்படின்னு ஒரு மன அழுத்தங்கள் எல்லாம் இருந்திருக்கும் இல்லையா ஒரு கில்ட் ஃபீல்ட்ல இருந்திருப்பீங்க.

08:46

Speaker A

ரெக்ரட் பண்ணிட்டு இருந்திருப்பீங்க.

08:48

Speaker A

இதெல்லாமே கொஞ்சம் ரிலீஸ் ஆகும் உங்களுக்கு.

08:51

Speaker A

யாராவது உங்களுக்கு துரோகம் பண்ணவங்க கூட இந்த ஏப்ரல் மாசத்துல வந்து மன்னிப்பு கேட்கறதுக்கும் நிறைய வாய்ப்புகள் அப்படிங்கறது இருக்கு.

08:59

Speaker A

நீங்க வந்து அருப்புக்கோட்டையில் இருக்கக்கூடிய சண்பக விநாயகரை வழிபாடு பண்ணுங்க.

09:05

Speaker A

முக்கியமா ஏப்ரல் மாசத்துல போய் அருப்புக்கோட்டை சண்பக விநாயகரை நீங்க வழிபாடு பண்ணும் பொழுது தேங்காய் கொடுத்து வழிபாடு பண்ணும் பொழுது என்னெல்லாம் பிளாக்கேஜஸ்ல இருந்துச்சோ.

09:13

Speaker A

எதெல்லாம் ஸ்டக்கா இருந்தது.

09:16

Speaker A

அதாவது உங்க கர்மா வந்து கொஞ்சம் பிளாக்ல இருக்கும்.

09:18

Speaker A

இது போய் அங்க தேங்காய் கொடுத்து வழிபாடு பண்ணும் பொழுது அது டோட்டலா கிளியரன்ஸ் ஆகும்.

09:24

Speaker A

ஏன்னா இதெல்லாம் மத்தவங்களுடைய கர்மாவை நீங்க சுமந்துட்டு வந்தது.

09:28

Speaker A

விநாயகர்ங்கறது யாரு கேது.

09:30

Speaker A

அப்போ இந்த கேதுங்கறது இந்த பழைய கர்மாவை வந்து உங்களுக்கு ரிலீஸ் பண்ணி கொடுக்கும் அப்படிங்கறதுதான்.

09:37

Speaker A

மே மாசத்துல எல்லாம் அழகா குரு வந்து உங்களை காப்பாத்திடுவார்.

09:42

Speaker A

இப்ப குரு பலம் வந்து அருமையா இருக்குது மே மாசத்துல இருந்து மீன ராசிக்காரங்களுக்கு.

09:48

Speaker A

இதை நீங்க ப்ராப்பரா யூஸ் பண்ணிக்கணும்.

09:51

Speaker A

முக்கியமா உங்களுடைய கூட பிறந்தவங்க எல்லாம் கொஞ்சம் நல்லா இருப்பாங்க.

09:55

Speaker A

குரு பலம் நல்லா இருக்கிறப்ப உங்களுக்கு முக்கியமா உங்களோட எங்ஸ்டர்ஸ் எல்லாம் இருக்கிறாங்க தங்கச்சி இருக்கிறாங்க தம்பி இருக்கிறாங்கன்னா அவங்களுக்கெல்லாம் லைஃப் கொஞ்சம் ரொம்ப நல்லா இருக்கும்.

10:04

Speaker A

ஒரு குரோத் இருக்கும்.

10:06

Speaker A

அவங்களை நினைச்சுலாம் நீங்க வருத்தப்பட்டுட்டு இருக்கீங்கன்னா அவங்களுக்குமே ஒரு டெவலப்மென்ட் அப்படிங்கறது இருக்கு.

10:10

Speaker A

ஜாப் வைஸ் உங்களுக்கு நல்ல இம்ப்ரூவ்மென்ட்னு இருக்கு.

10:12

Speaker A

குரு ஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க.

10:15

Speaker A

அந்த குரு ஸ்தலம் எங்கயா இருந்தாலும் சரி எங்க போக முடியுதோ.

10:20

Speaker A

தட்சிணாமூர்த்தியை போய் வழிபாடு பண்ணிட்டு வாங்க.

10:24

Speaker A

தட்சிணாமூர்த்தி எங்கேயுமே போக முடியலனாலும் தட்சிணாமூர்த்தியோட மூல மந்திரத்தை வீட்லயாவது சொல்லுங்க.

10:30

Speaker A

ஏன்னா குருவுடைய அனுக்கிரகம்.

10:34

Speaker A

பரிபூரணமா உங்களுக்கு இருக்கு அப்படிங்கறப்போ அது.

10:38

Speaker A

சரியா நன்றி சொல்லணும்.

10:41

Speaker A

எப்பவுமே தட்சிணாமூர்த்திக்கு நன்றி சொல்லி தான் வழிபாடு பண்ணனும்.

10:45

Speaker A

ஜூன் 2026லாம் எப்படி இருக்கும் தெரியுமா.

10:50

Speaker A

உங்களுக்கு வந்து இப்ப சினிமால எல்லாம் நம்ம பார்ப்போம்.

10:56

Speaker A

இங்கதான் வந்து ஹீரோ ஆக்டிவ் ஆக போறாரு.

10:59

Speaker A

அப்படிங்கறப்ப எப்ப ஆக்டிவ் ஆவாரு.

11:01

Speaker A

கரெக்டா ஏதாவது ஒரு பயங்கரமான ஒரு பிரஷர் வரணும் ஒரு பிரச்சனை வரணும்.

11:07

Speaker A

அங்க இருந்துதான் ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன் ஆரம்பிக்கும்ங்கறப்போ.

11:10

Speaker A

ட்ரான்ஸ்பர்மேஷன் பீக்ல போகக்கூடிய ஒரு அமைப்பு அதாவது சனி கேது.

11:16

Speaker A

ஒரு பிரஷர் கொடுக்கும் எவ்வளவு ஒரு அழுத்தத்தை கொடுக்கும்.

11:20

Speaker A

பிச்சுக்கிற மாதிரி ஒரு அழுத்தத்தை கொடுக்கும்.

11:23

Speaker A

ஆனா எமோஷன் வைஸ் பயங்கரமா ஓவர்லோட் பண்ணி விட்டுரும் சனி கேது.

11:28

Speaker A

அப்போ என்னெல்லாம் மனசுல தோணும்னா யாருமே இல்லையோ அப்படிங்கற மாதிரி ஒரு இன்செக்யூர்டான ஒரு மனநிலைமைக்குள்ள எல்லாம் இந்த சனி கேது கொண்டு போகும்.

11:33

Speaker A

இதெல்லாம் பயங்கரமான ஒரு டெஸ்ட்.

11:35

Speaker A

அப்போ அந்த குருவை ஸ்ட்ராங்கா நான் புடிச்சுக்க சொன்னேன் இல்லையா.

11:40

Speaker A

யாரெல்லாம் குரு வழிபாடு பண்ணீங்களோ.

11:44

Speaker A

அவங்க எல்லாம் கொஞ்சம் தப்பிப்பீங்க.

11:47

Speaker A

அந்த மெடிடேஷன் மாதிரி போயிட்டு மைண்ட கொஞ்சம் ஒருநிலைப்படுத்திக்கணும்.

11:51

Speaker A

அந்த நேரங்கள்ல அவசரப்பட்டு எதையும் போய் வாங்கிடக்கூடாது.

11:56

Speaker A

அந்த பர்சேஸ்ங்கற ஒரு விஷயத்துக்குள்ளார ஜூன் 2026ல மீன ராசிக்காரங்க செஞ்சிடவே கூடாது.

12:02

Speaker A

மன அழுத்தத்துல போய் சில பேர் ஷாப்பிங்லாம் பண்றதுக்கு போவீங்க.

12:05

Speaker A

இஷ்டத்துக்கு எங்கயாவது ஒரு செலவு பண்ணிட்டு வரது எல்லாமே வீண் விரய செலவுகள்.

12:10

Speaker A

அது செஞ்சிடவே கூடாது.

12:12

Speaker A

நீங்க எல்லாம் வந்து கிருஷ்ணர் வழிபாடு.

12:16

Speaker A

அந்த நேரங்கள்ல பண்ணிக்கிறது.

12:18

Speaker A

ஏன்னா அது ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன் ஸ்டேஜ் அப்படிங்கறப்போ.

12:23

Speaker A

கேரளால இருக்கக்கூடிய கரோடி அப்படின்னு ஒரு கிருஷ்ணருடைய ஒரு குகை ஒன்னு இருக்குது.

12:30

Speaker A

அங்க போயிட்டு நீங்க வழிபாடு பண்றீங்க அப்படின்னா.

12:32

Speaker A

இது வந்து கரெக்டா இங்கதான் போய் தேடி போகணும்னு இல்ல அங்க போகக்கூடிய ஒரு அமைப்பு வருது அப்படின்னா.

12:40

Speaker A

கேரளால இருக்கக்கூடிய கிருஷ்ணர் ஒரு குகையில இருப்பாரு கரோடின்னு ஒரு குகையில இருப்பாரு.

12:46

Speaker A

அங்க ஒரு வழிபாடு பண்றப்போ பயங்கரமான ஒரு பீக் பிரஷர் தான் அந்த டைம் உங்களுக்கு.

12:50

Speaker A

சனி கேது அப்படி ஒரு பிரஷர் கொடுக்கும் இந்த ரிலீஸ் எனக்கு கண்டிப்பா வேணும்னு நினைக்கிறவங்க.

12:57

Speaker A

இந்த கோயில்ல போய் நீங்க வழிபாடு பண்றீங்க.

13:00

Speaker A

இல்லைனா கூட வீட்ல கிருஷ்ணர் வச்சு வழிபாடு பண்ணுங்க.

13:03

Speaker A

கிருஷ்ணர் வந்து லைஃப்ல ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன் கொடுப்பார் உங்களுக்கு.

13:07

Speaker A

மத்தபடி ஜூலை 2026லாம் வரப்ப.

13:12

Speaker A

லைஃப்ல சில டேர்னிங் பாயிண்ட்ஸ்லாம் உங்களுக்கு வர ஆரம்பிக்கும்.

13:15

Speaker A

கர்மா அப்படிங்கற அந்த பர்டன் வந்து கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிக்கும்.

13:20

Speaker A

ஒரு கிளாரிட்டி ஒரு தெளிவு நிலையை நோக்கி நீங்க போற மாதிரி இருக்கும்.

13:23

Speaker A

புது ஆப்பர்சுனிட்டிஸ் வரது.

13:25

Speaker A

ப்ராப்பரா அதை யூஸ் பண்ணிக்கணும்.

13:27

Speaker A

ஹெல்த்ங்கறது பயங்கர ஸ்ட்ரெஸ்ல இருந்திருக்கும்.

13:30

Speaker A

ஸ்லோவா கொஞ்சம் இம்ப்ரூவ்மென்ட் அப்படிங்கறது போகும்.

13:33

Speaker A

இந்த வராக சுவாமியை வழிபாடு பண்றது.

13:37

Speaker A

சில பேர்லாம் வந்து மா அந்த அரிசில மாவெல்லாம் செஞ்சு மாவிளக்கு எல்லாம் போடுறாங்க இல்லையா.

13:43

Speaker A

அந்த மாதிரி சனிக்கிழமை போய் கோயில்ல போய் போட்டுட்டு வாங்க.

13:48

Speaker A

மாவிளக்கு எல்லாம் போட்டுட்டு வாங்க.

13:50

Speaker A

அரிசி மாவிளக்கு எல்லாம் போட்டுட்டு வருவாங்க இல்ல.

13:52

Speaker A

அந்த அரிசி மாவிளக்கு போட்டு நீங்க வழிபாடு பண்ண பண்ண ஒரு தெளிவு நிலை அப்படிங்கறது உங்களுக்கு கிடைக்க ஆரம்பிக்கும்.

13:57

Speaker A

ஏன்னா ஆல்ரெடி சனி கேது உங்களை வச்சு செஞ்சுட்டு அதுக்கு அப்புறம் தான் ரிலீஸ் கொடுக்குது.

14:00

Speaker A

கர்மா பாரத்துல இருந்து.

14:02

Speaker A

அப்போ அதுக்கு நன்றி சொல்லும் விதமா இந்த மாதிரி ஒரு வழிபாட்டு முறைகள் நீங்க பண்ணனும்.

14:06

Speaker A

ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு மாதம் அப்படின்னா மீன ராசிக்காரங்களுக்கு செப்டம்பர் 2026.

14:12

Speaker A

அந்த டைம்ல தான் வந்து கெரியரை ரொம்ப கான்சென்ட்ரேட் பண்ணனும்.

14:17

Speaker A

ப்ரமோஷன் வரக்கான பாசிபிலிட்டி எல்லாமே உங்களுக்கு இருக்குது.

14:21

Speaker A

ஒரு பெரிய கிளைன்ட்ட மீட் பண்ற மாதிரி இருக்கும்.

14:24

Speaker A

யாராவது பிசினஸ்லாம் பண்றீங்கன்னு வச்சுக்கோங்களேன்.

14:27

Speaker A

ஒரு பெரிய கிளைன்ட் மீட் பண்ற மாதிரி ஏன்னா அவ்வளவு பெரிய அழுத்தங்களை கொடுத்து லைஃப்ல ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன்ங்கறப்போ பெருசா தான் வந்து உங்களுக்கு வந்து இந்த கிரகங்கள் அமைச்சு கொடுக்கும்.

14:37

Speaker A

முக்கியமா குரு அந்த மாதிரி உங்களுக்கு அமைச்சு கொடுப்பார் அப்படிங்கறப்போ.

14:40

Speaker A

லக் அப்படிங்கறது ஆக்டிவேட் ஆகும்.

14:42

Speaker A

முழுக்க முழுக்க இது தட்சிணாமூர்த்தியே உங்களுக்கு செய்வார்.

14:45

Speaker A

ஏன்னா ஆல்ரெடி நான் வந்து உங்களை குரு ஸ்தலங்களுக்கு எல்லாம் போக சொல்லி இருந்தேன் இல்லையா.

14:49

Speaker A

அந்த வேண்டுதல் இப்பதான் உங்களுக்கு நிறைவேறும்.

14:52

Speaker A

அந்த வேண்டுதல் நிறைவேறற மாதிரி உங்களுக்கு தெரியும் பொழுது தட்சிணாமூர்த்திக்கு போயிட்டு ஒரு மஞ்சள் கலர்ல ஒரு வஸ்திர தானம் கோயில்ல போய் கொடுத்துட்டு வந்துருங்க.

14:59

Speaker A

நன்றி சொல்லும் விதமாவே.

15:00

Speaker A

ஏன்னா ஒரு கெரியர் வைஸ் ஒரு மறுபிறப்பே உங்களுக்கு செப்டம்பர் 2026.

15:05

Speaker A

பட்ட துயரங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாத்துக்குமே ஒரு விமோசனம்ங்கறது உங்களுக்கு செப்டம்பர் மாசம் அப்படிங்கறது உங்களுக்கு கிடைக்கும்.

15:11

Speaker A

மொத்தத்துல மீன ராசிக்காரங்களுக்கு எப்படி இருக்கும் அப்படின்னா.

15:16

Speaker A

சனி கொஞ்சம் கொஞ்சமா சரியாக ஆரம்பிச்சு ஒரு லாங் டேர்மா இருந்த ப்ராப்ளம்ஸ் எல்லாமே கொஞ்சம் சரியாகிறது.

15:23

Speaker A

பினான்சியல் வைஸ் ஒரு ஃப்ளோ வர ஆரம்பிக்கும்.

15:26

Speaker A

கொஞ்சம் நிதானமா வர ஆரம்பிக்கும்.

15:28

Speaker A

உங்களுக்கான டேலன்ட்ஸ் என்னன்னு உங்களுக்கே தெரிய ஆரம்பிக்கும்.

15:31

Speaker A

நல்ல ஒரு ஒரு குரோத் அப்படிங்கற ஒரு விஷயத்தை வந்து நீங்க அக்டோபர் மாசத்துல எல்லாம் பார்க்க ஆரம்பிச்சிருவீங்க.

15:37

Speaker A

மைண்ட் முதல் பீஸ்ஃபுல் ஆகும்.

15:40

Speaker A

அதுதான் உங்களுக்கு ரொம்ப முக்கியம்.

15:42

Speaker A

ஏன்னா மெண்டல் பீஸ்ங்கறதுதான் மீன ராசிக்கு அதீதமே.

15:46

Speaker A

அப்போ நரசிம்மர் கோயிலுக்கு போனா ஏன்னா மீன ராசி நிறைய பயந்துக்குவீங்க.

15:50

Speaker A

மன அழுத்தங்கள் ஜாஸ்தி.

15:52

Speaker A

எல்லா எதுக்கு தொட்டாலும் பயம் எதுக்கு பயந்துக்கிறோம்னே தெரியாது.

15:56

Speaker A

மாயைக்கு பயந்துக்கிறது.

15:58

Speaker A

அப்போ நீங்க லட்சுமி நரசிம்மரை வழிபாடு பண்ணும் பொழுது இந்த பயம்ங்கறது உங்களுக்கு நீங்கிடும்.

16:03

Speaker A

அதேபோல பணம் அப்படிங்கறது பணத்துக்கான மாதமே உங்களுக்கு நவம்பர் மாசத்துல நல்ல பணம் சேர்த்து வைக்கணும்.

16:08

Speaker A

யாரையும் நம்பி எல்லாம் கொடுத்துடக்கூடாது.

16:10

Speaker A

என் ஃபேமிலி தான் எனக்கு தெரிஞ்சவங்க தான் என் ரிலேட்டிவ் தான் என் பார்ட்னர் தான் அப்படிலாம் இல்ல நீங்க பத்திரப்படுத்தி வச்சுக்கிற பார்க்கணும்.

16:18

Speaker A

உங்களுக்கு இந்த ரங்கநாதரை போய் வழிபாடு பண்ணிட்டு வாங்க.

16:22

Speaker A

அதாவது நீர்நிலைகள் இருக்கக்கூடிய ரங்கநாத சுவாமிக்கு ரங்கநாத கோயிலுக்கு ரங்கநாத சுவாமி கோயிலுக்கு போய் வழிபாடு பண்ணிட்டு வரீங்க அப்படின்னா.

16:28

Speaker A

உங்களுக்கு பண செழிப்பு ரொம்ப நல்லா இருக்கும்.

16:31

Speaker A

மன நிம்மதியும் உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும்.

16:34

Speaker A

மொத்தத்துல மீன ராசிக்காரங்க 2026 எப்படின்னா உங்களுடைய கர்மாவை டோட்டலா கிளியர் பண்றீங்க.

16:40

Speaker A

ஆன்மீகத்துக்குள்ள ஸ்ட்ராங்கா போறீங்க அப்படிங்கறதுதான் இந்த 2026 உங்களுக்கு சொல்லக்கூடிய ஒரு விஷயமே.

16:44

Speaker A

அன் எக்ஸ்பெக்டடாவே தெய்வத்துடைய அனுக்கிரகம் ஆசீர்வாதம் உதவிகள் கிடைக்கக்கூடியது.

16:49

Speaker A

ஏன்னா மீன ராசிக்காரங்க அந்த விஷயத்தை திரும்பி பார்க்கிறப்பதான் உங்களுக்கு தெரியும்.

16:54

Speaker A

எவ்வளவு பெரிய பிரச்சனையில இருந்து நான் மீண்டு வந்திருக்கேன்னா தெய்வம் என்னை காப்பாத்துச்சா அப்படிங்கறதுதான் மீன ராசிக்காரங்க உணரக்கூடிய ஒரு வருடமாவே இது இருக்கும்.

16:59

Speaker A

மைண்ட் மொத்தத்துல ஒரு டோட்டல் எனக்கு பீஸ்ஃபுல் ஆகுதுங்க.

17:02

Speaker A

பெரும்பாலான மீன ராசிக்காரங்களுக்கு பணம் பிரச்சனை கிடையாது.

17:06

Speaker A

மன அழுத்தங்கள் தான் பிரச்சனை.

17:08

Speaker A

இந்த மன அழுத்தங்களுக்கு நான் சொன்ன தெய்வ தெய்வீக ஸ்தலங்களுக்கு போயிட்டு வரது நீர்நிலைகள் சம்பந்தப்பட்ட கோயில்களுக்கு போயிட்டு வரது அப்படிங்கறப்போ.

17:15

Speaker A

மன பாரங்கள் மன அழுத்தங்கள் எல்லாமே ஒரு முடிவுக்கு அப்படிங்கறது உங்களுக்கு வரும்.

17:19

Speaker A

டிராவல் பண்ணுங்க.

17:20

Speaker A

சின்ன சின்ன டிராவல் பண்ணீங்கனாலே டிராவல் உங்களுக்கு லக்க ஆக்டிவேட் பண்ணி கொடுக்கும்.

17:24

Speaker A

முடிஞ்ச அளவுக்கு பெருமாள் ஸ்தலங்களுக்கு போயிட்டு வாங்க.

17:27

Speaker A

108 திவ்ய தேசங்கள் இருக்குது இல்லையா 108 திவ்ய தேசங்கள் 106 திவ்ய தேசங்கள் நம்முடைய பூமியில இருக்குது.

17:32

Speaker A

இதுல ஏதாவது ஒரு ரெண்டு திவ்ய தேசங்களாவது நீங்க போயிட்டு வரீங்க அப்படின்னா.

17:37

Speaker A

உங்களுக்கு லக் அப்படிங்கறது மீன ராசிக்காரங்களுக்கு ஆக்டிவேட் ஆகும்.

17:39

Speaker A

நன்றி.

Topics: மீன ராசி சனி கேது 2026 ராசிபலன் ஆன்மீக வழிபாடு கர்மா தீர்வு மெடிடேஷன் பண சவால்கள் குடும்ப பிரச்சனைகள் குரு கிரகம் தட்சிணாமூர்த்தி வழிபாடு

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11856)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11856)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/meenam-astrology-advice-jeevitha-sureshkumar/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
