**Meenam - இதுவரை இல்லாத உச்சத்தை அடைய போறீங்க! Astrologer Jeevitha Suresh | New Year Palan 2026 — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/meenam-astrologer-jeevitha-suresh-new-year-palan-2026/

2026ல் மீன ராசிக்கு தொழில் வளர்ச்சி, பொறுமை முக்கியம்; மன அழுத்தம் குறைக்க கவனம் தேவை, பொருளாதாரம் நல்ல நிலை.

## Key Takeaways

- 2026ல் மீன ராசிக்கு தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி உள்ளது.
- பொறுமை மற்றும் மனநிலை கட்டுப்பாடு முக்கியம், சனி கிரகத்தின் பாடங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- மன அழுத்தங்கள் மற்றும் உடல் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டும்.
- தனிப்பட்ட திறன்களை மேம்படுத்தி பயம் இல்லாமல் புதிய முயற்சிகளை செய்ய வேண்டும்.
- குடும்ப உறவுகளில் சிக்கல்கள் இருந்தாலும் சமநிலை மற்றும் பொறுமையுடன் சமாளிக்க வேண்டும்.

## What the video covers

- 2026ல் மீன ராசி உள்ளவர்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி காண்பார்கள்.
- சனி கிரகத்தின் தாக்கத்தால் மீன ராசிக்கு பொறுமை மற்றும் ஒழுக்கம் முக்கிய பாடமாக இருக்கும்.
- மன அழுத்தங்கள் மற்றும் குழப்பங்கள் 2025ல் இருந்தாலும், 2026இல் மனநிம்மதி பெற முயற்சி செய்ய வேண்டும்.
- மீன ராசி உள்ளவர்கள் உணர்ச்சிப்பூர்வமாக மற்றவர்களுடன் கனெக்ட் ஆக முடியாது என்பதும், தனிமைப்படுத்தல் இருக்கும்.
- உடல் மற்றும் மன ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டும், குறிப்பாக முதலில்.
- பொருளாதார நிலை 2026ல் சிறந்ததாக இருக்கும், நிதி பிரச்சனைகள் குறைவாக இருக்கும்.
- மீன ராசி உள்ளவர்கள் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்தி தொழில் தொடங்குவதற்கு முன் பயம் குறைக்க வேண்டும்.
- சுக்ரன் மற்றும் குரு கிரகங்கள் தர்மம் மற்றும் செழிப்பை ஊக்குவிப்பதால் சமநிலை முக்கியம்.
- மீன ராசி உள்ளவர்கள் குடும்ப உறவுகளில் சில பிரச்சனைகள் மற்றும் ஜெலஸி நிலைகள் எதிர்கொள்ளலாம்.
- பொறுமை மற்றும் மனநிலை கட்டுப்பாடு மூலம் 2026ல் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

Answers

## Questions about this video

2026 ஆம் ஆண்டில் மீன ராசியினருக்கு தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும்?

2026 ஆம் ஆண்டில் மீன ராசியினரின் தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த வளர்ச்சி அல்லது பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு இந்த ஆண்டு நல்ல வாய்ப்புகள் அமையும்.

மீன ராசியினர் யாருக்காவது கீழ் வேலை பார்த்தால் என்ன பிரச்சனை ஏற்படும்?

மீன ராசியினர் யாருக்காவது கீழ் வேலை பார்த்தால், அவர்களுக்கு பொதுவாகவே பிரச்சனைகள் ஏற்படும். அவர்கள் ஒரு சுப்பீரியராக இருந்தால் பிரச்சனை இல்லை, ஆனால் ரிப்போர்ட்டிங் நிலையில் இருந்தால் குழப்பங்கள் ஏற்படும்.

மீன ராசியினருக்கு சனி என்ன கற்றுக்கொடுக்கிறது?

சனி மீன ராசியினருக்கு ஏகப்பட்ட ஒழுக்கங்களை கற்றுக்கொடுக்கிறது. குறிப்பாக, பொறுமை என்ற விஷயத்தை சனி அவர்களுக்கு திரும்பத் திரும்ப கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

இப்போ 2026 எப்படி இருக்குன்னா ப்ரொபஷனல் லைஃப் ரொம்ப நல்லா இருக்கு.

00:03

Speaker A

ப்ரொபஷனல் லைஃப்ல இருந்தவங்களுக்கு வந்து சில பேத்துக்கு நான் எதிர்பார்த்த மாதிரி ஒரு குரோத் வரல, எனக்கு ப்ரொமோஷன் வரல.

00:08

Speaker A

இவங்களுக்கெல்லாம் பொதுவாவே மீன ராசிக்கு வந்து யாருக்கு கீழ வேலை பார்த்தாலும் அவங்களுக்கு இந்த ப்ராப்ளம் உண்டு.

00:14

Speaker A

இந்த மீனுக்கு எப்படி உடம்புல தண்ணி பட்டா தெரியவே தெரியாதோ, அதேதான் மீனம் இவங்க வந்து என்னதான் பழகினாலும் யார்கிட்டயும் போய் எமோஷனலா கனெக்ட்லாம் ஆக மாட்டாங்க.

00:21

Speaker A

வராது.

00:22

Speaker A

இப்ப சனி உட்கார்ந்து ஏகப்பட்ட டிசிப்ளின்ஸ் சொல்லிக் கொடுக்கும் மீனம்க்கு அந்த டிசிப்ளின என்னன்னா பொறுமைங்கிற விஷயத்தை தான் மீனத்துக்கு திரும்ப திரும்ப திரும்ப திரும்ப கிளாஸ் எடுத்துக்கிட்டே இருக்குது சனி.

00:41

Speaker B

2026 மீன ராசி நேயர்களுக்கு என்ன மாதிரியான சேஞ்சஸ் நடக்கும் அவங்க முக்கியமா எடுத்துக்க கூடிய ரெசல்யூஷன் என்ன?

00:51

Speaker A

மீன ராசி வந்து ஏகப்பட்ட குழப்பங்கள் 2025ல.

00:55

Speaker A

ஒருத்தர் ஒரு சிலருக்கு வந்து ப்ரொபஷனல் லைஃப் பயங்கர கன்பியூஷனா இருக்கும், ஒரு சிலருக்கு வந்து பர்சனல் லைஃப் கன்பியூஷனா கன்பியூஷனா இருந்திருக்கும்.

01:02

Speaker A

இப்போ 2026 எப்படி இருக்குன்னா ப்ரொபஷனல் லைஃப் ரொம்ப நல்லா இருக்கு.

01:05

Speaker A

ஏன்னா ப்ரொபஷனல் லைஃப்ல இருந்தவங்களுக்கு வந்து சில பேத்துக்கு நான் எதிர்பார்த்த மாதிரி ஒரு குரோத் வரல, எனக்கு ப்ரொமோஷன் வரல.

01:10

Speaker A

இவங்களுக்கெல்லாம் பொதுவாவே மீன ராசிக்கு வந்து யாருக்கு கீழ வேலை பார்த்தாலும் அவங்களுக்கு இந்த ப்ராப்ளம் உண்டு.

01:17

Speaker A

மீனத்துக்கு.

01:18

Speaker A

இவங்க சுப்பீரியரா இருந்துட்டாங்கன்னா பிரச்சனை இல்லை இவங்க யாருக்காவது ரிப்போர்ட்டிங் இடத்துல இருக்காங்க அப்படின்னா குழப்பங்கள் எப்பவுமே மீனத்துக்கு உண்டு.

01:25

Speaker A

நான் இந்த இடத்துல இருக்கணுமா நான் கிளம்பிடட்டுமா நான் ஐ டிசர்வ்.

01:30

Speaker A

நான் வேற ஏதோ ஒரு விஷயத்துக்கு நான் ரொம்ப ஐ டிசர்வ் தி பெஸ்ட்ங்கிற மாதிரியே மைண்ட் அவங்களுக்கு போயிட்டே இருக்கும்.

01:35

Speaker A

மீனம் வந்து யூ டிசர்வ் தி பெஸ்ட் தான்.

01:38

Speaker A

ஆனா என்னன்னா மீன ராசி.

01:41

Speaker A

மாயையிலிருந்து கொஞ்சம் வெளிய வந்து இமேஜினேஷன் இருந்து வெளிய வந்து எல்லாத்தோடையும் கொஞ்சம் பழகணும்.

01:48

Speaker A

பழகிற மாதிரி தெரியும்.

01:49

Speaker B

ஓகே.

01:51

Speaker A

இந்த வந்து இந்த மீனுக்கு எப்படி உடம்புல தண்ணி பட்டா தெரியவே தெரியாதோ.

01:57

Speaker A

அதேதான் மீனம்.

01:58

Speaker A

இவங்க வந்து என்னதான் பழகினாலும் யார்கிட்டயும் போய் எமோஷனலா கனெக்ட்லாம் ஆக மாட்டாங்க.

02:03

Speaker A

வராது.

02:04

Speaker A

ஏன்னா இவங்களுக்கு வந்து இவங்களுடைய உலகம் வேற மத்தவங்களுடைய உலகம் வேற அப்படிங்கிற மாதிரியே இருக்கும்.

02:10

Speaker A

இப்ப அவங்களுக்கு வந்து உங்களுக்கு லைஃப் ரொம்ப நல்லா இருக்கு மீனம் அப்படின்னா.

02:13

Speaker A

எப்ப நல்லா இருக்கு எப்ப நல்லா இருக்கு எப்ப நல்லா இருக்கு.

02:16

Speaker A

டிவைன் டைம்னு ஒன்னு சொல்றோம்ல அந்த டிவைன் டைம் மீனத்துக்கு வரும்.

02:20

Speaker B

ஓகே.

02:21

Speaker A

வழிபாட்டு முறைகள் ஏன்னா மீனம்ங்கிறது மோட்ச பாதையை நோக்கி போறது.

02:26

Speaker A

இப்ப சனி உட்கார்ந்து ஏகப்பட்ட டிசிப்ளின்ஸ் சொல்லிக் கொடுக்கும் மீனம்க்கு.

02:32

Speaker A

அந்த டிசிப்ளின என்னன்னா பொறுமைங்கிற விஷயத்தை தான் மீனத்துக்கு திரும்ப திரும்ப திரும்ப திரும்ப கிளாஸ் எடுத்துக்கிட்டே இருக்குது சனி.

02:40

Speaker A

பொறுமையா இருங்க.

02:41

Speaker A

பொறுமையா இருங்க.

02:42

Speaker A

பொறுமையா இருங்க.

02:44

Speaker A

நான் தான் பொறுமையா இருந்துட்டேன் இப்ப அப்படிம்பாங்க.

02:46

Speaker B

ஓகே.

02:47

Speaker A

அந்த கேள்வியே தவறு.

02:50

Speaker A

உங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்குது இந்த டேட்ல நடக்குதுன்னா இந்த டேட் எப்ப வரும்.

02:55

Speaker B

ம்.

02:57

Speaker A

அந்த டேட் வரப்ப தான் வரும்.

02:59

Speaker A

அந்த டைம் வரப்ப தான் வரும்.

03:00

Speaker A

காத்திருப்பு.

03:02

Speaker A

ரொம்ப ரொம்ப அவசியம் மீனம்க்கு.

03:05

Speaker A

சோ காத்திருக்கிறாங்க அப்படின்னா அவங்களுக்கான டிவைன் டைம் அந்த அருபடை நாள் டைம் அப்படிங்கறதெல்லாம் வந்து 2026 செகண்ட் ஹாப்ல இருந்து கொஞ்சம் நல்லா இருக்கும்.

03:13

Speaker A

இந்த ஃபர்ஸ்ட் ஹாப்லாம் எப்படி இருக்கும்னா ஹெல்த் கொஞ்சம் பாத்துக்கணும்.

03:16

Speaker A

மனரீதியா நிறைய விஷயங்கள் மீனம் தன்னை பாத்துக்கணும்.

03:20

Speaker A

மனரீதியான குழப்பங்கள் மிக அதிகம் மீனம்க்கு.

03:23

Speaker A

வெளியிலிருந்து பார்க்க ஆள் தெளிவாவே இருக்கிற மாதிரியே இருக்கும்.

03:27

Speaker A

ஆனா மைண்ட் ஒரு கால்குலேஷன் போட்டுக்கிட்டே இருக்கும்.

03:30

Speaker A

இந்த கால்குலேஷன் உங்களை மனநிம்மதி படுத்துச்சாங்கிறதுதான் மீனம் தெரிஞ்சுக்கணும்.

03:35

Speaker B

ஓகே.

03:36

Speaker A

ஏன்னா கூட இருக்கிற சொந்த பந்தங்களே ஏமாத்துற சூழல்கள்.

03:41

Speaker A

கூட இருந்த சொந்த பந்தங்க கிட்டயே ஏமாந்த சூழல் இல்லை என் ஃபேமிலில இருக்கவங்க நான் சொல்றத கேட்கவே இல்லை.

03:46

Speaker A

புரிஞ்சுக்கவே மாட்டேங்குறாங்கன்னா.

03:48

Speaker A

நான் நல்லதுதான் சொல்ல முயற்சி பண்றேன்.

03:50

Speaker A

நான் யாருக்கும் கெடுதல் பண்ணல.

03:51

Speaker A

மீனம் யாருக்குமே கெடுதல் பண்ண மாட்டாங்க.

03:54

Speaker A

ஏன்னா அவங்களுக்கு யாருக்கும் துரோகம் பண்ணனும் கெடுதல் பண்ணனும்னு எண்ணம் இருக்காது.

04:00

Speaker A

ஆனா லைட்டா அங்கங்க ஒரு ஜெலஸி இருக்கும் மீனம்க்கு.

04:04

Speaker A

அந்த ஜெலஸி உங்களை வந்து லைஃப்ல நிறைய பனிஷ்மென்ட் கொடுத்துரும்.

04:08

Speaker A

ஏன்னா அங்க சுக்ரன் வந்து பயங்கரமான ஒரு வேலை பார்க்கும் மீனம்க்கு.

04:13

Speaker A

அப்ப அந்த சுக்ரன் தான் வந்து இந்த ஜெலஸியை கொடுக்கும்.

04:17

Speaker A

அதேபோல குரு வந்து தர்மத்தை சொல்லிக் கொடுத்துட்டு இருக்கும் மீனம்க்கு.

04:20

Speaker A

சனி ஒரு டிசிப்ளின சொல்லிக் கொடுத்துட்டு இருக்கும் மீனம்க்கு.

04:23

Speaker A

சோ இது எல்லாத்துலயுமே சம அளவுல இருந்துக்கணும் மீனம்க்கு.

04:28

Speaker A

அப்ப செழிப்பு கரெக்டா வரும்.

04:31

Speaker A

பாடங்கள் உங்களுக்கு கத்து கொடுத்துட்டு இருக்குன்னா அந்த பாடத்தை கரெக்டா தெரிஞ்சுக்கணும்.

04:35

Speaker A

மீனம் மோட்ச பாதை அப்படினாலே கஷ்டப்பட்டு தான் மோட்ச பாதை.

04:41

Speaker A

அதனால இந்த கஷ்டத்தை மீனம் தெரிஞ்சுக்கணும்.

04:45

Speaker A

இந்த கஷ்டம் வந்து இஷ்டமா இவங்க எடுத்துக்கணும் ஃபீல் பண்ணக்கூடாது.

04:50

Speaker A

ஏன்னா மீனம் வந்து தான் என்ன நினைக்கிறோம்கிறது மட்டுமே மீனம் ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி கொடுப்பாங்க.

04:56

Speaker B

ஓகே.

04:57

Speaker A

தன்னால இவங்க எல்லாம் எவ்வளவு பாதிப்படைஞ்சாங்க.

05:01

Speaker A

தன் என்னால இவங்களுக்கு நல்லது நடந்ததா கெட்டது நடந்ததா.

05:05

Speaker A

மீனம் என்ன நினைப்பாங்கன்னா சில விஷயங்கள் போய் கூட இருக்கவங்களுக்கு செய்வாங்க.

05:11

Speaker A

செஞ்சுட்டு அவங்க சந்தோஷமா இருக்காங்கன்னு மீனமே தன்னை ஏமாத்திக்கும்.

05:15

Speaker B

ஓகே.

05:16

Speaker A

அது அவங்களுக்கு ஆத்மார்த்தமான சந்தோஷம் கொடுத்துச்சா இல்லையா.

05:21

Speaker A

நான் சரி பண்ணிட்டேன்.

05:22

Speaker A

இதுதான் அங்க பொறுமையை இழக்கிறதுங்கிறது.

05:24

Speaker A

எல்லாத்துக்கும் ஒரு ஹீலிங் டைம்னு ஒன்னு இருக்குது.

05:26

Speaker A

ஏன்னா மீனமே வந்து ஏன் நான் மீனம்க்கு இவ்வளவு தூரம் சொல்றேன்னா.

05:30

Speaker A

மீனம்க்கு நிறைய மன அழுத்தங்கள் அவங்க பார்த்துட்டாங்க.

05:34

Speaker A

மன அழுத்தங்கள் பார்த்துட்டு இந்த மன அழுத்தங்கள் இருந்து எப்படி வெளிய வருதுன்னே அவங்களுக்கு தெரியாது.

05:39

Speaker A

திரும்ப திரும்ப திரும்ப திரும்ப நம்ம ஏதாவது ஒரு சொல்யூஷன் சொல்றோம்னா மீனம் எல்லா சொல்யூஷனையும் பண்ணி பார்த்துட்டு.

05:46

Speaker A

என்ன ஆன்சரே வரல.

05:49

Speaker A

அதுக்கு வர டைம் பீரியட் இருக்கு இல்லையா.

05:51

Speaker A

அப்போ அவங்க சுத்தி இருக்கவங்க அவங்க கூட இருக்கவங்களே சில மன அழுத்தங்கள் தான் இருப்பாங்க.

05:55

Speaker A

மீனம் ரொம்ப ஃபேண்டஸில இருந்து முதல் வெளிய வரணும்.

05:59

Speaker A

இப்ப லைஃப் பார்ட்னர் ஆகட்டும் கூட இருக்க ஃபேமிலி மெம்பர் எல்லாம் போட்டு நச நச நசன்னே பண்ணிட்டு இருப்பாங்க மீனம்.

06:05

Speaker A

அந்த நச நச பண்றத முதல் ஸ்டாப் பண்ணனும்.

06:09

Speaker A

சில சில மீனம்லாம் சத்தமே இல்லாம சைலன்ஸ்லயே ஒரு வேலை பார்த்துட்டுலாம் இருப்பாங்க.

06:13

Speaker A

சோ இந்த கேட்டகிரி ஏன்னா இந்த மீன் எப்படி கடல்ல பல வகையான மீன் இருக்குதோ.

06:18

Speaker A

அந்த மாதிரி ஒவ்வொரு மீனம்க்கும் ஒவ்வொரு தனிப்பட்ட குணம் இருக்கு.

06:21

Speaker A

அந்த குணத்துக்குள்ளார காமனான ஒரு விஷயம் இந்த ஒரு விஷயம் இருக்குது.

06:26

Speaker B

ஓகே.

06:27

Speaker A

ஏதோ ஒரு வகையில கூட இருக்கவங்களை வந்து கொஞ்சம் சீண்டி பார்க்கிற வேலை.

06:31

Speaker A

இந்த சீண்டாம இருந்துக்கங்க அப்படிங்கறதுதான்.

06:35

Speaker A

பொறுமையா ஹேண்டில் பண்ணனும்.

06:37

Speaker A

பொறுமையா பதில் சொல்லணும்.

06:39

Speaker A

ரியாலிட்டி.

06:41

Speaker A

மீனம் ரியாலிட்டிக்குள்ள வாங்கங்கிறதுதான் 2026ல நான் சொல்றதே.

06:45

Speaker B

ஓகே இப்ப மீனம் வந்து அவாய்ட் பண்ணக்கூடிய விஷயம் இல்ல மாத்திக்க கூடிய விஷயம்னா என்ன சொல்லுவீங்க.

06:49

Speaker A

மீனம் வந்து அவாய்ட் பண்ணனும் அப்படின்னா பதட்டத்தை அவாய்ட் பண்ணனும்.

06:53

Speaker A

பதட்டம் ரொம்ப அதிகம்.

06:55

Speaker A

நிதானத்தை கடைபிடிச்சிருங்க.

06:58

Speaker A

உங்களுக்கு ஃபேவரபிலாதான் இருக்கு 2026.

07:01

Speaker A

ஏன்னா என்னன்னா மன அழுத்தங்களே உடம்புல பிரச்சனையை கொடுத்துரும்.

07:04

Speaker B

ஓகே.

07:05

Speaker A

ஹெல்த் இஸ்யூஸ கொடுத்துரும்.

07:07

Speaker A

திடீர்னு கழுத்து வலிக்கும் திடீர்னு பேக் பெயின் வரும் திடீர்னு அடிபடும்.

07:12

Speaker A

இதுக்கு அர்த்தங்கள் தேடிக்கிட்டே இருக்கும் மீனம்.

07:15

Speaker A

ஆனா மீனம் வந்து பினான்சியல் வைஸ் ரொம்ப நல்லா இருக்கு மீனம்க்கு.

07:20

Speaker A

நல்ல ஒரு டெவலப்மென்ட் இருக்குது.

07:22

Speaker A

ஒரு மார்ச் மாசத்துக்கு அப்புறம்லாம் பார்த்தீங்கன்னா நிறைய பொன் ஆபரணங்கள் சேர்க்கக்கூடிய ஒரு அமைப்புலாம் மீனத்துக்கு நல்லா இருக்கு.

07:27

Speaker A

அதெல்லாம் நல்லா இருக்கு.

07:29

Speaker A

சோ எது பொருளாதார ரீதியா பிரச்சனை கிடையாது மீனம்க்கு.

07:32

Speaker A

இப்ப வந்து இல்லைங்க என்னோட லைஃப் பார்ட்னர் கஷ்டப்பட்டுட்டு இருக்கிறாரு எப்படி நாங்க பொருளாதார ரீதியா நல்லா இருக்குன்னு சொல்றீங்கன்னா.

07:37

Speaker A

மீனம் சுய தொழில் பண்ணா நல்லா இருப்பாங்க.

07:41

Speaker B

ஓகே.

07:42

Speaker A

ஏன்னா இவங்களுக்கு வந்து பெர்ஃபெக்சன்கிறது ரொம்ப கரெக்டா வரும்.

07:46

Speaker A

எல்லாத்தையுமே கரெக்டா பண்ணுவாங்க.

07:47

Speaker A

ஒர்கஹாலிக் மீனம்.

07:49

Speaker A

அதனால உங்க உழைப்பு மத்தவங்களுக்கு நீங்க போட்டுட்டு இருக்கிறது ஒருவேளை என் உழைப்பு எங்கேயோ ஒரு இடத்துல வீணாயிட்டு இருக்குன்னு நினைக்கிறீங்க அப்படின்னா.

07:55

Speaker A

மீனம் வந்து தனியா ஸ்கில்ஸ் நீங்க டெவலப் பண்ணிட்டு 2026 இது ஒரு ரெசல்யூஷன் எடுங்க எனக்கான ஸ்கில்ஸ் நான் டெவலப் பண்றேன்.

08:02

Speaker A

பயமே இல்லாம தொழில் தொடங்கணும்.

08:06

Speaker A

மீனம்க்கு வந்து பட்டுன்னு எங்கிருந்துதான் அந்த பயம் வரும்னே தெரியாது.

08:10

Speaker A

திடீர்னு ஒரு பயம் வரும்.

08:11

Speaker A

மத்தவங்களுக்கு செய்யறப்போ நல்ல செய்வாங்க வேலை.

08:15

Speaker A

டெடிகேட்டடான ஒரு ஆள்னா மீனம் மத்தவங்களுக்கு வொர்க் பண்றதுல.

08:18

Speaker B

ஓகே.

08:20

Speaker A

தனக்குன்னு வரப்போ பயம் திடீர்னு வந்து அப்படியே ஸ்டக் ஆகி உட்கார்ந்துருவாங்க.

08:25

Speaker A

சரியா தான் பண்ணிட்டு இருக்கீங்க.

08:26

Speaker A

கரெக்டா தான் பண்ணிட்டு இருக்கீங்க பிரேக் எடுத்து பிரேக் எடுத்து கொஞ்சம் இயற்கையோட நிறைய மிங்கில் ஆகணும் மீனம்.

08:32

Speaker A

இயற்கையான இடங்களுக்கு அதிகமா போயிட்டு வரணும்.

08:35

Speaker A

இயற்கையை ரசிங்க.

08:37

Speaker A

ரசிக்க ரசிக்க பொறுமை வரும்.

08:40

Speaker B

சூப்பர் மேம் இப்ப மீனம்க்கு வந்து ஒரு சூப்பரான விஷயம் நடக்க போகுது அப்படின்னா என்ன சொல்லுவீங்க.

08:44

Speaker A

மீனம் லைஃப் வந்து அழகா தான் உங்களுக்கு போகுது கரெக்டா தான் போயிட்டு இருக்கு.

08:49

Speaker A

உங்களால நிறைய விஷயங்களை சரி பண்ண முடியும் அப்படிங்கறதுதான் மீனம்க்கு சொல்றது.

08:52

Speaker A

மீனம்க்கு வந்து யாராவது ஒருத்தங்க கான்பிடன்ஸ் கொடுத்துக்கிட்டே இருக்கணும்.

08:57

Speaker A

என்னை இவங்க நேசிக்கிறாங்களா இல்லையா அப்படிங்கிற டவுட் எப்பவுமே ஏன்னா மீனம் வந்து எமோஷனல்.

09:02

Speaker A

எங்க வந்து எமோஷனல் அவைலபிலிட்டி இல்லையோ அங்கேயே போய் எமோஷன்ஸ கூட்டிட்டு கூட்டிட்டு நிக்கிறது.

09:07

Speaker A

சோ சில பேர் லாஜிக்கலா பிராக்டிகலா தான் இருக்காங்க உங்களுடைய ஃபேமிலி மெம்பர்ஸ் உங்களுடைய லைஃப் பார்ட்னர் ஆகட்டும்.

09:13

Speaker A

என்னன்னா மீனம் வந்து ரியாலிட்டிய அக்செப்ட் பண்ணிட்டு இருந்துக்கணும் அப்படிங்கறதுதான்.

09:17

Speaker A

எல்லாமே ஃபேண்டஸியா பார்க்காதீங்க மீனம்.

09:20

Speaker A

மீனம் ரொம்ப ஃபேண்டஸி பார்ப்பாங்க.

09:22

Speaker B

ஓகே மேம் சூப்பர் மேம் சூப்பர்.

09:23

Speaker B

இப்ப கிட்டத்தட்ட வந்து 12 ராசி நேயர்களுக்குமே வந்து என்ன மாதிரியான ரெசல்யூஷன் எடுக்கணும் அப்படின்னு சொல்லிட்டு இந்த புத்தாண்டு வந்து ரொம்ப அழகா அவங்களுக்கு மாத்தணும் அப்படின்னு சொல்லிட்டு நிறைய விஷயங்கள் வந்து நம்ம நேயர்களுக்காக கொடுத்திருக்கீங்க.

09:29

Speaker B

தேங்க்யூ சோ மச்.

09:30

Speaker A

நன்றி.

Topics: மீன ராசி 2026 ஜோதிடம் ப்ரொமோஷன் தொழில் வளர்ச்சி பொறுமை மன அழுத்தம் பொருளாதாரம் சனி கிரகம் சுக்ரன் மனநிலை


---
This is the markdown twin of https://sozai.app/transcript/meenam-astrologer-jeevitha-suresh-new-year-palan-2026/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
