**Magaram 👉"நிதானமாக இருப்பது நல்லது, "👧  | Astrologer Jeevitha Sureshkumar — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/magaram-nidhanam-astrologer-jeevitha-sureshkumar/

மகர ராசி பெண்களின் வாழ்க்கை, திருமணம், தொழில் மற்றும் பரிகாரங்கள் குறித்து ஜீவிதா சுரேஷ்குமார் விளக்கம்.

## Key Takeaways

- மகர ராசி பெண்கள் வாழ்க்கையில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.
- திருமண வாழ்க்கை அவர்களுக்கான முக்கிய மாற்றக் கட்டமாகும், ஏழு வருடங்கள் முக்கியம்.
- குரு மற்றும் சனி கிரக பரிகாரங்கள் வாழ்க்கையை ஸ்திரப்படுத்த உதவும்.
- மகர ராசி பெண்களுக்கு கலை மற்றும் மீடியா துறைகள் பொருத்தமானவை.
- சூடான இடங்களில் செல்ல வேண்டாம், உடல் நலம் கவனிக்க வேண்டும்.

## What the video covers

- மகர ராசி பெண்கள் வாழ்க்கையில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும்.
- மகர ராசி பெண்களின் திருமண வாழ்க்கை வாழ்க்கை மாற்றும் கட்டமாகும், அதில் ஏழு வருடங்கள் முக்கியம்.
- மகர ராசி பெண்களுக்கு வாழ்க்கை அனுபவம் மற்றும் மெச்சூரிட்டி லேட்டா வரும், 32-35 வயதில் அதிகமாக வளர்ச்சி.
- அவர்களின் குணாதிசயங்கள் மற்றும் நட்சத்திரங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
- மகர ராசி பெண்களுக்கு குரு மற்றும் சனி கிரகங்களின் தாக்கம் முக்கியம், திருமணத்திற்கு முன்-பின் பரிகாரங்கள் அவசியம்.
- அவர்களின் உடல் நிலை மற்றும் சூடான இடங்களில் செல்ல வேண்டாமென அறிவுரை வழங்கப்படுகிறது.
- மகர ராசிக்கார பெண்களுக்கு மீடியா, கலை மற்றும் கதை சொல்லல் துறைகள் பொருத்தமானவை.
- மகர ராசி பெண்களுக்கு கடகம், கன்னி, மீன், கும்பம் மற்றும் மகரம் ராசிகளுடன் திருமணம் நல்லது.
- மகர ராசி பெண்கள் வாழ்க்கையில் அதிக தேடல்கள் மற்றும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியவர்கள்.
- மகர ராசி பெண்கள் தன்னம்பிக்கை மற்றும் சரியான திட்டமிடலுடன் செயல்பட வேண்டும்.

Answers

## Questions about this video

மகர ராசி பெண்களின் வாழ்க்கையில் திருப்புமுனை எது?

மகர ராசி பெண்களின் வாழ்க்கையில் திருப்புமுனை அவர்களின் திருமண வாழ்க்கைதான். திருமண வாழ்க்கையிலிருந்துதான் அவர்களுக்கு குரு பலமும் முன்னேற்றமும் வரும்.

மகர ராசி பெண்கள் எதை கண்டறிய சிரமப்படுவார்கள்?

மகர ராசி பெண்கள் தங்கள் அருமை என்ன என்பதை அவ்வளவு சீக்கிரம் கண்டறிய முடியாது. அவர்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை அனுபவிப்பதற்காகவே பிறந்தவர்கள் போல இருப்பார்கள்.

மகர ராசி பெண்களுக்கு என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன?

மகர ராசி பெண்களுக்கு தெய்வ அனுகிரகமும், முன்னோர்களின் ஆசீர்வாதமும், குலதெய்வங்களின் பாதுகாப்பும் அதிகமாக இருக்கும். இவை அவர்களை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

தன்னுடைய அருமை என்ன அப்படிங்கறத அவ்வளவு சீக்கிரம் மகர ராசி பெண்களால கண்டே பிடிக்கவே முடியாது.

00:05

Speaker A

வாழ்க்கையில ஏதாவது கஷ்டங்களை அனுபவிக்கணும் அப்படிங்கறதுக்காகவே பிறந்தவங்களா இருப்பாங்க.

00:10

Speaker A

மகர ராசி பெண்களோட லைஃப் சேஞ்சிங் பார்ட்டே எதுன்னு பார்த்தீங்கன்னா அவசரப்பட்டு சில முடிவுகள் எடுப்பீங்க பார்த்தீங்களா?

00:18

Speaker A

அது வந்து உங்களை எங்க வேணாலும் இழுத்துட்டு போய் விட்டுரும் கொஞ்சம் நிதானமாவும் முடிவெடுக்கணும்.

00:25

Speaker A

நீங்க போய் ரொம்ப அந்த இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கிறது நீ இதைத்தான் செய்யணும் அதைத்தான் செய்யணும் அந்த டார்ச்சர் பண்ணாம இருந்துக்கிறது நல்லது ஏன்னா மகர ராசி பெண்கள் ரெண்டு வகைப்படும்.

00:52

Speaker A

குமுதம் நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.

00:56

Speaker A

இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்னன்னா ஸ்பெஷலா பெண்களுக்காகவே.

01:02

Speaker A

12 ராசியில் இருக்கக்கூடிய பெண்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படின்னு.

01:10

Speaker A

இதை முழுக்க முழுக்க பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கான.

01:16

Speaker A

ஒரு கணிப்பு அப்படின்னே சொல்லலாம்.

01:20

Speaker A

இது வந்து ஆண்களுக்கு அப்படிங்கறது ஸ்பெசிபிக்கா இங்க சொல்ல முடியாது.

01:26

Speaker A

அதனால ஃபுல்லாவே இது பெண்களுக்காக நம்ம வந்து 12 ராசிகள் இருக்கக்கூடிய பெண்களுக்கு என்னென்ன நடக்கும்.

01:34

Speaker A

அவங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் அப்படிங்கறத பத்தி நம்ம இதுல பார்க்கலாம்.

02:04

Speaker A

மகர ராசி பெண்கள்.

02:07

Speaker A

மகர ராசி பெண்கள் அப்படின்னு பார்க்கிறப்ப.

02:12

Speaker A

இதுலயும் மூணு நட்சத்திரங்கள் வருது இல்லையா.

02:17

Speaker A

மூணு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு.

02:23

Speaker A

லைஃப்ல ஒவ்வொரு ஸ்டேஜ்ல தான் அவங்களுக்கு மெச்சூரிட்டி வரும் அப்படிங்கறதே இருக்கு.

02:28

Speaker A

இப்ப வந்து உத்திராடம் திருவோணம் அவிட்டம் அப்படின்னு எடுத்துக்கிறோம்னு வச்சுக்கோங்களேன்.

02:33

Speaker A

இவங்களுக்கு லைஃப் ஒவ்வொரு பாடத்தை கத்துக்கொடுத்துட்டே இருக்கும்.

02:38

Speaker A

எல்லாமே ஸ்லோவாவே தான் இருக்கும்.

02:40

Speaker A

தன்னுடைய அருமை என்ன அப்படிங்கறத அவ்வளவு சீக்கிரம் மகர ராசி பெண்களால கண்டே பிடிக்கவே முடியாது.

02:47

Speaker A

தாழ்ந்து பணிஞ்சு பயந்து இப்படியே ஒரு சைல்ட்ஹுட் வாழ்ந்திருப்பாங்க.

02:55

Speaker A

ஆனா ஒரு செல்ல பிள்ளையாவே ஒரு செல்ல பெண்ணாவே ஒரு செழிப்பாவே வாழக்கூடிய ஒரு அமைப்பும் பெரும்பாலான மகர ராசி பெண்களுக்கு அமைஞ்சிரும்.

03:03

Speaker A

மிகுந்த வெகிலி மகர ராசி பெண்கள்.

03:06

Speaker A

தன்னை சுத்தி என்ன ஆபத்து இருக்குது அப்படிங்கறதெல்லாம் தெரியாது.

03:11

Speaker A

தெய்வ அனுகிரகமே அவங்களை காப்பாத்தக்கூடியதா இருக்கும்.

03:15

Speaker A

முன்னோர்கள் அதிகமா காப்பாத்துவாங்க.

03:20

Speaker A

குலதெய்வங்கள் இருக்கிறாங்கன்னா குலதெய்வங்கள் ரொம்ப பாதுகாப்பாங்க மகர ராசிக்காரங்களை.

03:26

Speaker A

ஏன்னா ஒரு கர்மாவை வாங்கிட்டு பிறக்கக்கூடியவங்க தான் மகர ராசி பெண்கள்.

03:30

Speaker A

வாழ்க்கையில ஏதாவது கஷ்டங்களை அனுபவிக்கணும் அப்படிங்கறதுக்காகவே பிறந்தவங்களா இருப்பாங்க.

03:36

Speaker A

மகர ராசி பெண்களோட லைஃப் சேஞ்சிங் பார்ட்டே எதுன்னு பார்த்தீங்கன்னா அவங்களுடைய திருமண வாழ்க்கை தான்.

03:42

Speaker A

அந்த திருமண வாழ்க்கையிலிருந்து தான் குரு குரு பலமே அவங்களுக்கு வரும்.

03:47

Speaker A

அது அங்கிருந்து தான் அவங்களுக்கு முன்னேற்றம் அப்படிங்கறதே வரும்.

03:51

Speaker A

அதுவும் சாமான்யத்துல வராது.

03:54

Speaker A

முதல்ல அந்த திருமண வாழ்க்கை பயங்கர கஷ்டங்களை கொடுத்து.

04:00

Speaker A

ஏறுமுகமா போறது இறங்குமுகமா எல்லாம் பார்த்து அதுக்கப்புறம்.

04:06

Speaker A

ஒரு ஏழு வருஷம் ஆயிடும்.

04:10

Speaker A

ஒரு மகர ராசி பெண்ணுக்கு ஒரு திருமண வாழ்க்கை நல்லபடியா அமையறதுக்கும் வாழ்க்கை என்னன்னு புரியறதுக்கு ஃபர்ஸ்ட் ஸ்டேஜ் ஏழு வருஷம்.

04:18

Speaker A

அந்த ஏழு வருஷத்துக்கு அப்புறம் தான் ஓகே இந்த ஃபேமிலி இப்படித்தான் ரன் பண்ணனுமா.

04:23

Speaker A

என்னை சுத்தி இவ்வளவு விஷயங்கள் நடக்குதா.

04:26

Speaker A

மெச்சூரிட்டி லெவல்ங்கறது ரொம்ப லேட்டா வரும்.

04:31

Speaker A

32 வயசு 35 வயசு ஆகணும்.

04:37

Speaker A

ஒரு மகர ராசி பொண்ணு ஒரு ஒரு விமன்.

04:43

Speaker A

ஒரு லைஃப்ல ஒரு ஸ்டேஜ்க்கு நீங்க வரீங்க.

04:47

Speaker A

உங்களுக்கு என்ன வேணும்னே உங்களுக்கு தெரியவே தெரியாது.

04:51

Speaker A

கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரியே இருக்கும்.

04:55

Speaker A

நீங்க உங்களை சுயமாக நம்பணும் உங்களை உங்களுக்கு மதிப்பீடு போட தெரியணும்.

05:00

Speaker A

அதுதான் மகர ராசி பெண்களுக்கு நான் சொல்றதே.

05:04

Speaker A

ஓவர் கான்பிடன்ஸும் வேண்டாம்.

05:07

Speaker A

லோ கான்பிடன்ஸும் வேண்டாம்.

05:10

Speaker A

ஒரு மத்திமமா எக்ஸிகியூஷன்ல இருந்துரணும்.

05:14

Speaker A

பிளானிங்லயே இருக்கிறது.

05:16

Speaker A

ஒரு ஸ்டெப் எடுத்து வைக்கிறதுக்கு அவ்வளவு யோசிக்கிறது.

05:20

Speaker A

இது தப்பாயிடுச்சுன்னா என்ன பண்றதுன்னு.

05:22

Speaker A

அவசரப்பட்டு சில முடிவுகள் எடுப்பீங்க பார்த்தீங்களா?

05:27

Speaker A

அது வந்து உங்களை எங்க வேணாலும் இழுத்துட்டு போய் விட்டுரும்.

05:31

Speaker A

கொஞ்சம் நிதானமாவும் முடிவெடுக்கணும்.

05:34

Speaker A

ஆனா சரியா முடிவெடுக்கணும்.

05:37

Speaker A

யாராவது ஒருத்தங்க சொல்லிக் கொடுக்கிறதை கேட்டுக்கிட்டே இருக்கணும்.

05:40

Speaker A

ஃபாலோ பண்ணனும்.

05:41

Speaker A

ஏன்னா அவங்களுக்கு வாழ்க்கையே வாழ்க்கை அனுபவம் தான் உங்களுடைய தொழிலாவே மாறும்.

05:48

Speaker A

வாழ்க்கை அனுபவம் தான் உங்களுக்கு படிப்பாவே மாறும்.

05:52

Speaker A

மகர ராசி பெண்களுக்கு ஆர்ட் ரிலேட்டடான.

05:57

Speaker A

சப்ஜெக்ட் சூஸ் பண்றீங்க.

06:01

Speaker A

அதாவது இப்ப ஸ்கூல் டேஸ்ல இருந்து நீங்க படிக்கிறீங்கன்னா உங்களுக்கு இந்த இங்கிலீஷ் இந்த ஹிஸ்டரி.

06:07

Speaker A

இந்த மாதிரி சப்ஜெக்ட்ஸ் எல்லாம் நல்லா வரும்.

06:10

Speaker A

ஒரு கோர்ஸ் சூஸ் பண்றீங்க அப்படின்னா.

06:14

Speaker A

உங்களுக்கு இந்த காமர்ஸ் ரிலேட்டடா வரும்.

06:17

Speaker A

இல்ல நாங்க டாக்டர் துறையில இருக்கிறோம் அப்படின்னா கூட.

06:22

Speaker A

அந்த டாக்டர் துறையில மகர ராசி இருக்கீங்கன்னா கூட ஒரு ஸ்டோரி ரிலேட்டடா படிக்கிறதுக்கு.

06:28

Speaker A

அந்த மாதிரிதான் உங்களுக்கு வரும்.

06:30

Speaker A

கதை கேட்டல் அப்படிங்கறது மகர ராசி பெண்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

06:34

Speaker A

கதை சொல்லுதலும் ரொம்ப பிடிக்கும்.

06:37

Speaker A

அப்போ இந்த மாதிரி ஒரு துறைகள் சூஸ் பண்றது மீடியா துறை ரொம்ப நல்லா செட் ஆகும்.

06:42

Speaker A

மகர ராசி பெண்களுக்கு நல்ல ஒரு குரோத் கொடுக்கும்.

06:44

Speaker A

ஏன்னா தேடல்கள் அதிகம் மகர ராசி பெண்களுக்கு.

06:48

Speaker A

லைஃப்ல எக்ஸ்பீரியன்ஸ் வர வர தான் உங்களுக்கு அடுத்தடுத்து குரோத் அப்படிங்கறது இருக்கும்.

06:52

Speaker A

அப்போ மீடியா துறையும் நீங்க சூஸ் பண்ணலாம்.

06:56

Speaker A

லைஃப் பார்ட்னரை சூஸ் பண்றப்ப மட்டும் சில பரிகாரங்கள் செஞ்சுட்டு.

07:01

Speaker A

நீங்க திருமண வாழ்க்கைக்குள்ள போறீங்க அதாவது குரு ஸ்தலங்களுக்கு போய் குரு பரிகாரம் அப்படிங்கறது நீங்க பண்ணிக்கிட்டீங்க அப்படின்னா.

07:09

Speaker A

உங்களுடைய திருமண வாழ்க்கைங்கறது நல்லா ஸ்டெபிலைஸா குரோத்துக்கு கொண்டு போகக்கூடிய ஒரு அமைப்பு.

07:15

Speaker A

திருமணத்துக்கு முன் திருமணத்துக்கு பின் யாருக்கு லைஃப் அப்படியே ஒரு டோட்டல் ட்விஸ்டா மாறுது.

07:20

Speaker A

ஒரு டர்னிங் பாயிண்ட் யாருக்குன்னா அது மகர ராசி பெண்களுக்கு தான் இருக்கும்.

07:23

Speaker A

அதாவது உங்களுடைய வாழ்ந்த வாழ்க்கை பிறந்த பிறப்பு ஒரு ஒரு மிடில் கிளாஸ் ரேஞ்சுல இருந்தாலும் ஒரு அப்பர் மிடில் கிளாஸ் ரேஞ்சுக்கு போகக்கூடிய ஒரு அமைப்பு திருமணத்துக்கு அப்புறமே உங்களுக்கு அமையும்.

07:32

Speaker A

திருமணத்துக்கு அப்புறம் தான் படிப்பு அமையறது தொழில் அமையறது.

07:37

Speaker A

இது எல்லாமே லைஃப்ல ஸ்டேஜ் பை ஸ்டேஜ் உங்களுக்கு குழந்தைகள் வளர வளர வளர தான்.

07:43

Speaker A

உங்களுக்கு வாழ்க்கையில குரோத்ங்கறது ஏன்னா குரு இப்படித்தான் உங்களுக்கு.

07:47

Speaker A

ஸ்லோ அண்ட் கிராஜுவல் ஸ்டடியா தான் உங்களுக்கு கொடுக்கும்.

07:51

Speaker A

சனியும் அதே மாதிரிதான் வாழ்க்கை பாடங்கள் எல்லாம் கத்துக்கொடுத்ததுக்கு அப்புறம் தான்.

07:54

Speaker A

உங்களுக்கு வாழ்க்கையில குரோத் ஏன்னா நீங்க ஈஸியா ஏமாறக்கூடியவங்க.

07:59

Speaker A

அதனால ஒரு 30 வயசுக்குள்ளேயே எவ்வளவு ஏமாற முடியுமோ அவ்வளவு ஏமாத்தி.

08:05

Speaker A

வாழ்க்கை பாடங்கள் என்னன்னு கத்துக்கொடுத்துரும்.

08:08

Speaker A

அதுக்கப்புறம் தான் உங்களுக்கு குரோத்தே அதுவரைக்கும்.

08:11

Speaker A

தேடல்கள் உங்களுக்கு ரொம்ப அதிகம் நிறைய கத்துக்குவீங்க வாழ்க்கையில.

08:15

Speaker A

உங்களுக்கான ஸ்தலம் அப்படின்னு பார்க்கிறப்போ.

08:20

Speaker A

உங்களுக்கு திருப்பதி உகந்த ஸ்தலம்.

08:23

Speaker A

திருவண்ணாமலை ஆரம்ப கால நிலைகள்ல உங்களுக்கு வேண்டாம்.

08:27

Speaker A

ஒரு 45 வயசுக்கு அப்புறம் திருவண்ணாமலைங்கறது உங்களுக்கு ஓகே.

08:31

Speaker A

ஏன் அப்படின்னா.

08:34

Speaker A

மகர ராசி பெண்களுடைய உடல் நிலைமை எப்படின்னு பார்த்தீங்கன்னா.

08:41

Speaker A

சூடு ரொம்ப ஆகாது.

08:44

Speaker A

அந்த சீதோஷ நிலைங்கறது உங்களுக்கு செட் ஆகாது அப்படிங்கறப்போ.

08:48

Speaker A

திருவண்ணாமலைங்கறது ரொம்ப ஒரு நெருப்பு சம்பந்தப்பட்ட ஒரு இடம் ரொம்ப சூடான ஒரு இடம்.

08:54

Speaker A

ஒரே ஒரு தடவை விதி அழைச்சிட்டு போகும்.

08:58

Speaker A

அதுக்கப்புறம் போகணுமா வேணாமான்னு நீங்க தான் முடிவு பண்ணிக்கணும்.

09:02

Speaker A

ஏன் அங்க போனா உங்களுக்கு எனர்ஜி ட்ரைன் ஆகுறதும்.

09:07

Speaker A

சில விஷயங்கள் ஸ்டாக்னட் ஆகுறதும் திருவண்ணாமலை அப்படிங்கறது உங்களுக்கு கொடுத்துரும்.

09:12

Speaker A

அதனால கொஞ்சம் லேட்டர் ஆன் ஸ்டேஜ் அப்படிங்கறது ஒரு பாதயாத்திரையா போறது.

09:16

Speaker A

அதுக்கப்புறம் நீங்க பார்த்துக்கலாம்.

09:18

Speaker A

அதுவரைக்கும் இந்த கூலா இருக்கக்கூடிய அந்த நார்த் நார்த் சைடுல இருக்கக்கூடிய கோயில்கள் போறது.

09:24

Speaker A

இந்த காசி போறது.

09:27

Speaker A

இந்த கேதர்நாத் போறது.

09:30

Speaker A

இந்த மாதிரி ஸ்தலங்கள் எல்லாமே வந்து அங்க இருக்க அந்த சிவன் ஸ்தலங்கள் இதெல்லாமே வந்து உங்களுக்கு உகந்ததா இருக்கும்.

09:37

Speaker A

முருகர் வழிபாடு சிவன் முடிச்சது சிவன் முடிச்சதுக்கு அப்புறமா.

09:42

Speaker A

முருகர் வழிபாடு அப்படின்னு போறப்போ உங்களுக்கு உகந்ததா இருக்கும்.

09:47

Speaker A

இப்ப மகர ராசிக்கு யாரெல்லாம் செட் ஆவாங்க அப்படின்னா.

09:52

Speaker A

மகர ராசி போய் ஃபர்ஸ்ட் கடக ராசிக்கு இம்ப்ரஸ் ஆகுறது.

09:57

Speaker A

அதுக்கப்புறம் லவ் எல்லாம் பண்ணிடுவாங்க.

10:01

Speaker A

ஆனா வந்து சேர்ந்து வாழ்றப்பதான் அந்த கஷ்டம் தெரியும் எந்த அளவுக்கு கடகம் இறுக்கிட்டே இருக்கிறாங்க அப்படின்னு.

10:07

Speaker A

அப்போ ஒரு கடக ராசிக்காரங்களை நீங்க திருமணம் பண்ணிக்கிறீங்கன்னா.

10:11

Speaker A

கொஞ்சம் சிந்திச்சு செயல்பட்டு திருமணம் பண்ணிக்கணும்.

10:15

Speaker A

அதே மாதிரி உங்களுக்கு கன்னி ராசிக்காரங்க நல்லா செட் ஆவாங்க.

10:18

Speaker A

மீன ராசிக்காரங்க ரொம்ப நல்லா செட் ஆவாங்க.

10:21

Speaker A

கும்ப ராசியிலும் செட் ஆவாங்க.

10:24

Speaker A

மகரம் மகரமே திருமணம் பண்ணிக்கலாம்.

10:28

Speaker A

மகரம் மகரம் திருமணம் பண்ணிக்கிட்டா கூட நல்லாதான் இருக்கும்.

10:32

Speaker A

உங்களுடைய லைஃப்.

10:34

Speaker A

சோ மகர ராசிக்காரங்க அப்படிங்கறவங்க கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணிக்கிட்டீங்கன்னா நல்லா இருக்கும்.

10:38

Speaker A

ஆனா உங்களுக்கு சீக்கிரம் ஏர்லி மேரேஜ் நடக்குது அப்படின்னா.

10:43

Speaker A

அது குரு சம்பந்தப்பட்ட ராசிகள்ல தான் போய் உங்களுக்கு அமையற மாதிரி இருக்கும்.

10:48

Speaker A

அதாவது தனுசு ராசியோ மீன ராசியோ.

10:50

Speaker A

கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி லைஃப் வாழ்ற மாதிரி இருக்கும்.

10:54

Speaker A

யாரை திருமணமே நாங்க பண்ணிக்கவே கூடாது அப்படின்னா.

10:57

Speaker A

மிதுனம் திருமணம் பண்ணிக்க வேண்டாம்.

11:00

Speaker A

மிதுனம் உங்களுக்கு செட் ஆகாது.

11:02

Speaker A

விருச்சிக ராசி ஆண்கள் அவ்வளக்கா உங்களுக்கு செட் ஆக மாட்டாங்க.

11:06

Speaker A

மேஷம் ராசியும் வந்து உங்களுக்கு செட் ஆக மாட்டாங்க.

11:10

Speaker A

ஏன்னா மேஷம் ராசி ஆண்கள் எல்லாமே அவசரமா செஞ்சிட்டே போறவங்களா இருப்பாங்க.

11:15

Speaker A

நீங்க கொஞ்சம் நிதானமா செய்யணும் அப்படின்னு நினைக்கிறப்போ.

11:19

Speaker A

அது வந்து அவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு செட் ஆகாது.

11:21

Speaker A

அது ஆண்கள் அப்படின்னு பார்க்கிறப்போ செட் ஆகாது.

11:24

Speaker A

இப்ப மகர ராசி பெண்கள் அப்படின்னு பார்க்கிறப்போ உங்களுக்கு குழந்தை பாக்கியம் அப்படின்னா.

11:28

Speaker A

அந்த அனுகிரகம் எல்லாம் உங்களுக்கு அதிகமாவே உண்டு.

11:32

Speaker A

இந்த குழந்தை தான் வேணும் அப்படின்னா விருப்பப்படி குரு வந்து அந்த ஆசீர்வாதம் எல்லாம் உங்களுக்கு செழிப்பாவே இருக்கு.

11:36

Speaker A

குழந்தைகள் உங்க சொல் பேச்சு கேட்டு வளரக்கூடிய ஒரு அமைப்பு.

11:40

Speaker A

குழந்தைகளை கொஞ்சம் பாசமா வச்சுக்கிறது நல்லது.

11:43

Speaker A

ஏன்னா மகர ராசி பெண்களுக்கு பெண்களோட குழந்தைகள் எப்படின்னா.

11:48

Speaker A

அந்த தாய் பாசத்துக்காக ஏங்கிட்டே இருக்கிற மாதிரி ஒரு அமைப்பு இருக்கும்.

11:52

Speaker A

நீங்க போய் ரொம்ப அந்த இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கிறது நீ இதைத்தான் செய்யணும் அதைத்தான் செய்யணும்.

11:57

Speaker A

அந்த டார்ச்சர் பண்ணாம இருந்துக்கிறது நல்லது ஏன்னா மகர ராசி பெண்கள் ரெண்டு வகைப்படும்.

12:02

Speaker A

ஒன்னு உங்களோட குழந்தைகள் முழுக்க முழுக்க அதாவது உங்களுக்கு பிரெண்ட்லியா இருக்கக்கூடிய ஒரு அமைப்பு.

12:09

Speaker A

நீங்க எப்படி பிஹேவ் பண்றீங்கன்னு ஒன்னு இருக்கு.

12:12

Speaker A

இன்னொரு கட்டத்தான மகர ராசி பெண்கள் எப்படி இருப்பாங்கன்னா கிட்டத்தட்ட சைக்கோபாத் மாதிரி இருக்கிறது.

12:20

Speaker A

என் வாழ்க்கையில நான் இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு வந்தேன்.

12:24

Speaker A

அப்போ நீயும் தான் கஷ்டப்படணும் நான் உன்னை கஷ்டப்படுத்தி தான் நான் உன்னை வளர்ப்பேன்.

12:30

Speaker A

நீயே கஷ்டப்படு நீங்களா கஷ்டங்களை உருவாக்கி கொடுத்து.

12:33

Speaker A

போய் கஷ்டப்படுன்னு சொல்லக்கூடாது.

12:36

Speaker A

அவங்களுடைய வாழ்க்கையை அவங்களை நீங்க வாழ விடணும்.

12:40

Speaker A

ரொம்ப அந்த மானிட்டர் அந்த மானிடைஸ் பண்றது இந்த குழந்தைகளை போய் மானிட்டர் பண்ணிட்டே இருக்கிறது.

12:47

Speaker A

அது வந்து மகர ராசி பெண்கள் தாய்மார்கள் அது உங்க குழந்தைகள்ட்ட செய்ய வேண்டாம்.

12:51

Speaker A

அந்த குழந்தைகள் தானாவே வளர்த்துக்குவாங்க.

12:54

Speaker A

அப்படிங்கிற ஒரு அதாவது தெய்வம் பார்த்துக்கும் அப்படிங்கிற மாதிரி நீங்க இருந்துக்கிறது நல்லது.

12:59

Speaker A

அதாவது அக்கறை இருக்க வேண்டியதுதான்.

13:01

Speaker A

ரொம்ப ஹோல்ட் பண்றீங்கன்னா அந்த குழந்தைகள் உங்களை விட்டு பிரிஞ்சு போய் நாளைக்கு.

13:06

Speaker A

மகர ராசி பெண்கள் அந்த தனி மரமா இருக்கக்கூடிய ஒரு அமைப்புங்கறது வந்துரும்.

13:11

Speaker A

கணவன் என்னை விட்டு பிரிஞ்சு போயிட்டாரு.

13:13

Speaker A

குழந்தை என்னை விட்டு பிரிஞ்சு போயிருச்சு.

13:15

Speaker A

என்னுடைய குழந்தை என்னை என்னை வந்து நான் நான் செஞ்ச பணிவிடைகள் எதுவுமே நம்பல.

13:19

Speaker A

நான் எவ்வளவு செஞ்சேன்.

13:22

Speaker A

கடமைக்கு செய்றதுன்னு ஒன்னு இருக்கு பாசமா செய்றதுன்னு ஒன்னு இருக்கு.

13:26

Speaker A

இந்த மகர ராசி பெண்கள் பெரும்பாலும் ரொம்ப அந்த பவுண்டரிஸ தாண்டி போயிடுறது.

13:33

Speaker A

அந்த கணவனுக்குன்னு ஒரு ஸ்பேஸ் கொடுக்கிறது அந்த குழந்தைக்குன்னு ஒரு ஸ்பேஸ் கொடுக்கிறதுங்கற மாதிரி இருந்துட்டீங்க அப்படின்னா.

13:39

Speaker A

லைஃப் ரொம்ப நல்லா இருக்கும் உங்களுக்கு.

Topics: மகர ராசி மகர ராசி பெண்கள் திருமண வாழ்க்கை குரு பரிகாரம் சனி கிரகம் தமிழ் ஜோதிடம் வாழ்க்கை பாடங்கள் மெச்சூரிட்டி மீடியா துறை குடும்பம்


---
This is the markdown twin of https://sozai.app/transcript/magaram-nidhanam-astrologer-jeevitha-sureshkumar/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
