**மகரம் - தலைகீழாக மாறப்போகும் தலைவிதி | Magaram | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/magaram-head-reversal-jeevitha-sureshkumar-retro-aanmeegam/

மகர ராசிக்காரர்களின் கடன் வாங்கும் மனப்பான்மை, சனி, கேது, ராகு கிரகங்களின் தாக்கம் மற்றும் கடன் தீர்க்கும் வழிபாடுகள் பற்றி விளக்கம்.

## Key Takeaways

- மகர ராசிக்காரர்கள் கடன் வாங்குவதில் கவனம் வேண்டும், குடும்பத்தாரிடமிருந்து கடன் வாங்க வேண்டாம்.
- சனி மற்றும் உக்கிர தெய்வ வழிபாடுகள் கடன் சுமைகளை குறைக்க உதவும்.
- கடன் வாங்கும் போது பொருளுக்கு மட்டும் கடன் வாங்கி, திருப்பி கொடுக்க திட்டமிட வேண்டும்.
- ஹனுமன் வழிபாடு மற்றும் சனீஸ்வரர் கோயில் வழிபாடு கடன் பிரச்சனைகளை தீர்க்க உதவும்.
- ராகு, கேது போன்ற கிரகங்களின் தாக்கம் கடன் பிரச்சனைகளை அதிகரிக்கலாம்.

## What the video covers

- மகர ராசிக்காரர்கள் கடன் வாங்குவதற்கு பயப்படுவார்கள், ஆனால் கடன் வாங்கினால் திருப்பி கொடுக்க சிரமம்.
- ராகு, கேது போன்ற கிரகங்கள் கடன் சம்பந்தமான பிரச்சனைகளை உருவாக்கும்.
- மகர ராசிக்காரர்கள் கடன் வாங்கும் போது குடும்ப உறுப்பினர்களிடமிருந்து கடன் வாங்க கூடாது என்று அறிவுரை.
- கடன் வாங்கும் போது பொருளுக்கு மட்டும் கடன் வாங்க வேண்டும், அப்போதுதான் கடன் திருப்பி கொடுக்க சாத்தியம்.
- மகர ராசிக்காரர்கள் கடன் வாங்கியால் பெரும்பாலும் அவமானம், அசிங்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
- சனி கிரக வழிபாடு, உக்கிர தெய்வ வழிபாடு, ஹனுமன் வழிபாடு மூலம் கடன் சுமைகளை குறைக்க முடியும்.
- ஹனுமன் படத்தை வீட்டில் உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும், இது கடன் தீர்வுக்கு உதவும்.
- வருடம் ஒரு தடவை சனீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது நல்லது.
- மகர ராசிக்காரர்கள் வணிகத்தில் ரொட்டேஷன் பிசினஸ் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்.
- கடன் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளுக்கு ஜோதிட அறிவுரைகள் மற்றும் ஆன்மீக வழிபாடுகள் முக்கியம்.

Answers

## Questions about this video

மகர ராசிக்காரர்கள் கடன் வாங்க பயப்படுவார்களா?

ஆம், மகர ராசிக்காரர்கள் கடன் வாங்க பயப்படுவார்கள். ஆனால் ஒருமுறை கடன் வாங்கிவிட்டால், அதை எப்படி திருப்பிச் செலுத்துவது என்று அவர்களுக்குத் தெரியாது, இதுவே முக்கிய பிரச்சனை.

மகர ராசிக்காரர்கள் கடனை அடைக்க முடியாததற்கு என்ன காரணம்?

மகர ராசிக்காரர்கள் உழைப்பை நம்பாமல், யாரோ ஒருவரைச் சார்ந்து (குடும்பத்தினர், லாட்டரி, அதிர்ஷ்டம்) பணம் வரும் என்று நம்பினால், அவர்களால் கடனை அடைக்க முடியாது. உழைப்பு இல்லாமல் சம்பாதிக்க முடியாது என்பதே அவர்களுக்கு முக்கியம்.

மகர ராசிக்காரர்கள் யாரிடம் கடன் வாங்கக்கூடாது?

மகர ராசிக்காரர்கள் தங்கள் சொந்தக்காரர்களிடம் கடன் வாங்கவே கூடாது. ஏனெனில் விதி அங்குதான் வேலை செய்யும், மேலும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து சற்று விலகி இருக்கும் அமைப்பு அதிகமாகவே உண்டு.

## Full Transcript — Download SRT & Markdown

00:02

Speaker A

கடன் வாங்குறதுக்கு மகர ராசிக்கு பயம்.

00:05

Speaker A

ஆனா கடன் வாங்கிட்டா ராகு வந்து அதீத ஆடம்பரத்துக்கும்,

00:10

Speaker A

கற்பனை, இமேஜினேஷன், இல்லூஷன் பாத்துக்கலாம் அப்படிங்கிற தருணத்துல ராகு கடன் வாங்க வச்சிரும்.

00:17

Speaker A

கேது வந்து வச்சு செஞ்சிரும்.

00:19

Speaker A

முக்கியமா மகர ராசிக்காரங்க யார்கிட்ட கடன் வாங்கவே கூடாதுன்னா,

00:24

Speaker A

ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.

00:29

Speaker A

இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்ன அப்படின்னா,

00:33

Speaker A

வாழ்க்கையில யாருக்கு தான் கடன் இல்லை?

00:34

Speaker A

இல்லையா?

00:35

Speaker A

எல்லாத்துக்கும் பணம் சம்பாதிக்கணும் அட் தி சேம் டைம் எப்படி சம்பாதிக்கிறது?

00:40

Speaker A

இப்ப இருக்க காலகட்டங்கள்ல கடன் வாங்காம எதுவுமே எங்களால பண்ண முடியலையே அப்படிங்கிற கேள்வி அம்பானிக்கு கூட உண்டு.

00:45

Speaker A

எல்லாத்துக்குமே உண்டு இந்த கேள்வி.

00:46

Speaker A

அப்படி இருக்கப்போ இந்த 12 ராசிகளுக்கும் அவங்க கடந்து வரக்கூடிய அந்த வாழ்க்கை பாதைன்னு வரப்போ அட் எனி காஸ்ட் ஏதோ ஒரு சிச்சுவேஷன்ல கடன் வாங்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது வந்துரும்.

00:55

Speaker A

அப்படி பார்க்கிறப்போ நான் ஜோதிடம் பார்த்ததுல இருந்து என்னுடைய அனுபவத்துல ஒவ்வொரு ராசிக்காரங்க என்னென்ன மாதிரியான ஒரு விஷயத்துக்கு காரணமா அவங்க வந்து கடன் வாங்கினாங்க?

01:06

Speaker A

எப்படி அவங்க அதிலிருந்து மீண்டாங்க அப்படிங்கறத வச்சு நான் இந்த 12 ராசிகளுக்கு எப்படி அப்படிங்கறத உங்களுக்கு சொல்றேன்.

01:11

Speaker A

என்ன தெய்வத்தை வழிபாடு பண்ணனும் எப்படி அந்த கடன் கடன்ங்கிற விஷயத்திலிருந்து எப்படி வெளிய வரணும் அப்படிங்கறத பத்தி நம்ம இங்க பார்ப்போம்.

01:59

Speaker A

மகர ராசிக்காரங்க எப்படி கடன் படுவாங்க அப்படின்னா,

02:04

Speaker A

இவங்க வந்து எல்லா கேட்டகிரிஸ்லயுமே மைண்ட்செட் இருக்கக்கூடியவங்க மகர ராசி அதாவது வெகிலி அப்படின்னு நான் பெரும்பாலும் சொல்லி இருப்பேன்.

02:12

Speaker A

இவங்களுக்கு வந்து கடன் வாங்குறதுக்கு மகர ராசிக்கு பயம்.

02:16

Speaker A

ஆனா கடன் வாங்கிட்டா திருப்பி கொடுக்க அவ்வளவு சீக்கிரம் மகர ராசிக்கு தெரியாது.

02:21

Speaker A

அதுதான் பிரச்சனையே.

02:22

Speaker A

இந்த கொடுத்த பணத்தை எப்படி திருப்பி ஏன் திருப்பி கொடுக்க தெரியாது அப்படின்னா,

02:26

Speaker A

மகர ராசிக்காரங்க வந்து உழைப்பை போடணும்.

02:32

Speaker A

உழைப்பை போடாம உங்களால சம்பாதிக்கவே முடியாது.

02:34

Speaker A

யாரோ ஒருத்தங்களை டிபென்ட் பண்ணி இருக்கீங்க மகர ராசி.

02:40

Speaker A

ஓகே என்னோட ஃபேமிலி மெம்பர்ஸ் டிபென்ட் பண்ணி இருக்கேன் இல்ல அங்கிருந்து பணம் வந்துரும் இங்கிருந்து பணம் வந்துரும்.

02:45

Speaker A

இல்ல ஒரு லாட்டரில பணம் விழுந்துரும் ஒரு லக் மூலமா எனக்கு பணம் வந்துரும்.

02:50

Speaker A

இந்த மாதிரி மைண்ட்செட்ல மகர ராசிக்காரங்க இருக்கீங்கன்னா என்னைக்குமே உங்களால கடன் அடைக்கவே முடியாது.

02:56

Speaker A

முக்கியமா மகர ராசிக்காரங்க யார்கிட்ட கடன் வாங்கவே கூடாதுன்னா,

03:01

Speaker A

சொந்தக்காரங்க கிட்ட மகர ராசிக்காரங்க கடன் வாங்கவே கூடாது.

03:05

Speaker A

ஏன்னா விதியே அங்கதான் வேலை பார்க்கும்.

03:07

Speaker A

மகர ராசிக்காரங்க அந்த குடும்பத்துக்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கக்கூடிய அமைப்பு அப்படிங்கறது அதிகமாவே உண்டு.

03:14

Speaker A

அப்படி இருக்கிற பட்சத்துல நீங்க போய் உங்க குடும்ப உறுப்பினர்கிட்ட,

03:20

Speaker A

அது ஃபேமிலில அதாவது அம்மா வழி சொந்தம் அப்பா வழி சொந்தம் அது யாரா இருந்தாலும் சரி.

03:26

Speaker A

அந்த சொந்த முறைகள்ல போய் நீங்க பணம் வாங்குறீங்க அப்படின்னாலே சனி,

03:31

Speaker A

கர்மா வேலை பார்க்க ஆரம்பிச்சிருச்சுன்னு அர்த்தம்.

03:34

Speaker A

வச்சு செய்யப்போகுது அப்படிங்கறதுதான் அர்த்தம்.

03:37

Speaker A

நீங்க எதுக்கெல்லாம் கடன் வாங்குவீங்க அப்படின்னா ஃபேமிலி.

03:41

Speaker A

அந்த ஃபேமிலி ரன் பண்றதுக்குன்னு போய் ஒரு கடன் வாங்குறது.

03:45

Speaker A

பூமி.

03:46

Speaker A

பூமியை தொட்டீங்கன்னா கடன் படுவீங்க.

03:48

Speaker A

அந்த பூமியை தொட்டுட்டு கடன் படுறப்போ அந்த அந்த கட்டுற வீட்ல போய் வாழ முடியாத ஒரு சூழல்.

03:54

Speaker A

திருப்பி அந்த கடனை கட்டுறதுக்கு ஒரு டெனன்ட்ட கொண்டு வந்து வைக்கிறீங்க அப்படின்னா,

04:00

Speaker A

திருப்பி அதை வாங்கி திருப்பி கடன் கட்டுற மாதிரிதான் இருக்கும்.

04:03

Speaker A

ஆனா கடன் அடைந்த பாடு அப்படிங்கறது வந்து மகர ராசிக்காரங்களுக்கு பெரும்பாலும் இல்லை அப்படின்னு சொல்லலாம்.

04:09

Speaker A

ஒரு கடனை மகர ராசிக்காரங்க அடைக்கிறாங்க அப்படின்னா,

04:14

Speaker A

மொத்த வாழ்க்கை அனுபவத்தையும் அனுபவிச்சிருப்பாங்க அப்படின்னுதான் சொல்லணும்.

04:20

Speaker A

அதாவது என்னெல்லாம் செய்யக்கூடாதோ நான் தெரியாம இப்படி பண்ணிட்டேனே எவ்வளவு அவமானம் அசிங்கங்கள் பட முடியுமோ மகர ராசி படுவாங்க.

04:28

Speaker A

கூனிக்குறியை போகக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது மகர ராசிக்கு வந்துரும்.

04:32

Speaker A

நீங்க எல்லாம் வந்து வணிகம் பண்றீங்க.

04:35

Speaker A

மகர ராசியில இருக்காங்க வணிகம் பண்றீங்க அப்படின்னா உங்களுக்கு ரொட்டேஷன் பிசினஸ் அப்படிங்கறது இருந்துகிட்டே இருக்கும்.

04:39

Speaker A

ஆனா அவ்வளவு சீக்கிரம் கடன் அடைக்க முடியாத ஒரு சூழல்ங்கறதே இருக்கும்.

04:43

Speaker A

ஏன் அப்படின்னா நீங்க வந்து மகர ராசி சனி இல்லையா?

04:46

Speaker A

செவ்வாய் பகை.

04:47

Speaker A

இந்த செவ்வாய் என்ன பண்ணும் இந்த பூமி அப்படிங்கிற விஷயத்துல எல்லாம் கை வைக்கிறப்போ உங்களுக்கு அவமானத்தையும் அசிங்கத்தையும் கொடுக்கறதுக்கு ரொம்ப காத்துக்கிட்டே இருக்கும்.

04:54

Speaker A

முடிஞ்ச அளவுக்கு செவ்வாய்க்கிழமைகள்ல கடனை கொஞ்சமாவது திருப்பி கொடுக்க பார்க்கணும்.

04:59

Speaker A

கடன் நான் வாங்கிட்டேன்.

05:01

Speaker A

இல்ல கடனை நான் கொடுத்துட்டேன்.

05:03

Speaker A

மகர ராசிக்காரங்களே நீங்க கடன் யார்கிட்ட கொடுத்தாலும் திரும்ப வரவே வராது.

05:08

Speaker A

சுத்தமா வராது.

05:10

Speaker A

தனுசு ராசிக்காரங்களாவது ஒரு போராட்டம் பண்ணி கொஞ்ச கொஞ்சமாவது வாங்க முடியும்.

05:15

Speaker A

மகர ராசிக்காரங்களால ஒரு ரூபாய் கூட திரும்பி வாங்க முடியாத ஒரு சூழல் தான் மகர ராசிக்கு இருக்கும்.

05:20

Speaker A

பகையாளியா மாறிடுவீங்க.

05:22

Speaker A

யாருக்கு கடன் கொடுக்கிறீங்களோ அவங்களுக்கு நீங்க பகையாளி.

05:24

Speaker A

அதனால யாருக்காவது நீங்க கடன் கொடுக்கிறீங்கன்னு வச்சுக்கோங்க.

05:29

Speaker A

இதை தானம் தர்மம்னு நினைச்சு நீங்க கொடுத்துட்டு போயிடணும்.

05:33

Speaker A

ஏன்னா நீங்க எல்லாம் வந்து சனி.

05:36

Speaker A

சனிங்கிறது கடமை கர்மாவை செய்யக்கூடிய வந்தவங்க.

05:40

Speaker A

அப்போ உங்கள்ட்ட யாராவது கடன் வாங்க வராங்கன்னா ஏதோ ஒரு ஜென்மத்துல அவங்களுக்கு நீங்க கடன் பட்டு இருக்கீங்க.

05:47

Speaker A

அதனால அவங்களுக்கு நீங்க கொடுக்கிறீங்கங்கிறதுதான்.

05:50

Speaker A

அப்படிதான் அர்த்தமா எடுத்துக்கப்படும்.

05:51

Speaker A

அவங்க உங்கள்ட்ட கடன் வாங்கினாங்க பார்த்தீங்களா அவங்க எவ்வளவு நல்லா இருந்தாலும் உங்களுக்கு திருப்பி கொடுக்கணும்ங்கிற மனசுங்கிறது அவங்களுக்கு வராது.

05:58

Speaker A

இது வந்து அமைப்பு.

05:59

Speaker A

அதனால மகர ராசிக்காரங்க கடன் கொடுக்கிறது முதல்ல அவாய்ட் பண்ணுங்க.

06:03

Speaker A

சொந்தக்காரங்க கிட்ட கடன் வாங்கவே வாங்கிராதீங்க.

06:08

Speaker A

இந்த லோன் பேசிஸ் இந்த மந்த்லி லோன் இப்படி எல்லாம் நீங்க போறீங்கன்னா,

06:12

Speaker A

எதற்காக லோன் வாங்கணுமோ இப்ப ஒரு பொருள் ஒரு பொருள் வாங்குறீங்க.

06:16

Speaker A

அந்த பொருளுக்கு நான் லோன் வாங்குறேன் அப்படின்னு வச்சுக்கோங்க.

06:20

Speaker A

அந்த பொருளே நாளைக்கு உங்கள்ட்ட இருக்காது.

06:23

Speaker A

தங்கவே தங்காது.

06:24

Speaker A

அதனால முடிஞ்ச அளவுக்கு மகர ராசிக்காரங்க வந்து ஒரு ரொட்டேஷன் பேசிஸ்ல இருந்திருக்கலாம்.

06:30

Speaker A

ஒரு இன்னைக்கு இன்னைக்கு இருந்து ஒரு ரொட்டேஷன் காலையில நான் கொடுக்கிறேன் எனக்கு சாயங்காலம் இந்த பணம் வந்துரும்னா,

06:35

Speaker A

அந்த ரொட்டேஷனுக்கு அது ஓகே.

06:37

Speaker A

தொழில் ரீதியா இப்ப நீங்க ஒரு வட்டி தொழில் பண்ணிட்டு இருக்கக்கூடிய ஒரு இடத்துல இருக்கீங்கன்னா கூட,

06:42

Speaker A

அதுல கூட நீங்க ரொம்ப ஜாக்கிரதையா டாக்குமெண்டேஷன்லாம் கரெக்டா இருக்கும்.

06:47

Speaker A

ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல பணம் வரது அப்படிங்கறது மகர ராசிக்கு நின்னுரும்.

06:51

Speaker A

அதனால ரொம்ப கவனம் நீங்க எல்லாம் வந்து சனி.

06:55

Speaker A

சனிக்கு எப்பவுமே மகர ராசிக்காரங்க வந்து எள் தீபம் போட்டு சனிக்கு வழிபாடு பண்றது.

07:00

Speaker A

உக்கிர தெய்வ வழிபாடு.

07:01

Speaker A

உக்கிர தெய்வங்கள் இருக்கக்கூடிய ஆலயங்களுக்கு வழிபாடு பண்றது.

07:05

Speaker A

அங்க போய் சனீஸ்வரருக்கு விளக்கு போட்டுட்டு,

07:08

Speaker A

அங்க இருக்க உக்கிர தெய்வங்களை வழிபாடு பண்றது.

07:11

Speaker A

நீங்க கூட இந்த அங்காளம்மன் கோயிலுக்கு எல்லாம் போய் இந்த பேய் மேடையில போய் உட்கார்ந்து வழிபாடு பண்றது.

07:16

Speaker A

அங்காள பரமேஸ்வரிட்ட போய் உட்கார்ந்து வழிபாடு பண்றது.

07:20

Speaker A

ஏன்னா உங்கள உங்களக்கெல்லாம் இருக்கக்கூடிய அந்த துக்கம் துயரம்ங்கறது எல்லாம் இருக்குது இல்லையா?

07:25

Speaker A

அதெல்லாம் வந்து உக்கிர தெய்வத்தினாலதான் சரியே பண்ண முடியும்.

07:29

Speaker A

அதனால உக்கிர தெய்வ வழிபாடு பத்ரகாளி வழிபாடு.

07:32

Speaker A

ஹனுமன் வழிபாடு கூட,

07:34

Speaker A

நல்ல அந்த உக்கிரமா இருக்கக்கூடிய ஹனுமன்லாம் இருக்காரு பார்த்தீங்களா அந்த மலையை தூக்கிட்டு போகக்கூடிய அமைப்புல இருக்கக்கூடிய ஹனுமன்லாம் இருப்பாரு.

07:39

Speaker A

அந்த மாதிரி ஒரு வழிபாடு பண்றது.

07:41

Speaker A

ரொம்ப கடன் பட்டுட்டீங்க அப்படின்னா,

07:43

Speaker A

வீட்ல கூட நீங்க ஹனுமன் படத்தை வந்து வைக்கலாம்.

07:47

Speaker A

அதாவது சாமி போட்டோலாம் வைக்கிறீங்கன்னா எல்லாத்துக்கும் மேலதான் இருக்கணும் ஹனுமார்.

07:52

Speaker A

ஹனுமனை வீட்டுக்கு சப்போஸ் நீங்க கடன் வாங்கினவங்களா இருக்கீங்க.

07:57

Speaker A

ஏதோ ஒரு காரணத்தினால உங்க வீட்ல ஒரு ஹனுமன் படம் இருக்கு.

08:01

Speaker A

அந்த ஹனுமன் படம் வீட்ல எந்த இடத்துல வச்சிருக்கீங்க அப்படிங்கறத பாருங்க.

08:06

Speaker A

ஏன் அப்படின்னா ஹனுமன் உயரத்தில் இருக்கணும்.

08:10

Speaker A

அப்படி உயரத்தில் இருந்தா சீக்கிரம் உங்களுடைய கடன்கள் அடையும் அப்படிங்கறது,

08:14

Speaker A

ஒரு அமைப்பு எப்படியோ ஒரு விதத்துல அடைஞ்சிரும்.

08:16

Speaker A

ஹனுமனை ஏதாவது ஒரு சாமி போட்டோக்கு கீழயோ இல்ல ஒரு லேயருக்கு கீழயோ வச்சிருக்கீங்க அப்படின்னா,

08:21

Speaker A

ஏதோ ஒரு வகையில கீழ் நோக்கி போயிட்டே இருக்கக்கூடிய ஒரு அமைப்பு.

08:25

Speaker A

ஏன் அப்படின்னா உங்களுக்கு சனிதான்,

08:28

Speaker A

எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்கும்.

08:30

Speaker A

உங்களை சனீஸ்வரர்கிட்ட இருந்து காப்பாத்துறதே ஹனுமார் தான்.

08:32

Speaker A

அப்போ அந்த ஹனுமரைதான் உயர்ந்த ஸ்தானத்துல வச்சு நீங்க வழிபாடு பண்ணனும்.

08:36

Speaker A

ஓம் ஹனுமந்தே நமஹ.

08:37

Speaker A

சனிக்கு விளக்கு போடுறப்போ ஓம் சனீஸ்வராய நமஹ.

08:40

Speaker A

அப்படின்னு சொல்லி வழிபாடு பண்ணிட்டு நீங்க வருஷத்துல ஒரு தடவையாவது,

08:47

Speaker A

சனீஸ்வரரை போயிட்டு ஒரு விளக்கு எல்லாம் போட்டுட்டு அங்க சனி ஸ்தலங்களுக்கு போயிட்டு வரது கூட உங்களுக்கு வந்து ஒரு விமோசனம் அப்படிங்கறது கொடுக்கும்.

08:52

Speaker A

முடிஞ்சா வருடத்துக்கு ஒரு தடவை பட்டீஸ்வரர் கோயிலுக்கு போயிட்டு வாங்க.

08:57

Speaker A

உங்களுடைய கடன் சுமைகள் எல்லாமே வந்து மாறும்.

09:00

Speaker A

சோ கடன் அப்படிங்கறது முக்கியமா இந்த சனி,

09:04

Speaker A

கேது சில டைம் ராகு கடன் வாங்க நம்மளுக்கு வைக்கும்.

09:07

Speaker A

ராகு இப்ப ஒவ்வொரு கிரகங்கள் இருக்கு இல்லையா?

09:10

Speaker A

ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு காரணத்துக்காக நம்மள கடன் வாங்க வைக்கிறப்போ ராகு வந்து,

09:16

Speaker A

அதீத ஆடம்பரத்துக்கும் கற்பனை, இமேஜினேஷன், இல்லூஷன்,

09:20

Speaker A

பாத்துக்கலாம் அப்படிங்கிற தருணத்துல ராகு கடன் வாங்க வச்சிரும்.

09:24

Speaker A

கேது வந்து வச்சு செஞ்சிரும்.

09:26

Speaker A

கேது காலங்கள்ல எப்படி கடன் வாங்க வைக்கும் அப்படின்னா எல்லாமே என்கிட்ட இருந்து போய்கிட்டே இருக்கு.

09:30

Speaker A

எப்படியாவது நான் தக்க வச்சுக்கணும் அப்படின்னா,

09:34

Speaker A

அது எப்படின்னா ஒரு ஓட்ட வழியா எல்லாமே ஒழுகி போயிட்டே இருக்க மாதிரிதான்.

09:38

Speaker A

கேது காலங்கள்ல கடன் படுறதும் கேது காலங்கள்ல கடன் அடைக்க முடியாம சிரமப்படுறதும்,

09:42

Speaker A

நம்ம யார்ட்டயாவது போய் கடன் அடைக்கிறதுக்கு இன்னொருத்தங்கள்ட்ட போய் கடன் கேட்க போற நேரத்துல கூட ஒரு அவமானம் அசிங்கமோ,

09:49

Speaker A

இல்ல கடன் கிடைக்க முடியாத ஒரு சூழலோ கேது இந்த மாதிரி உருவாக்கிடும்.

09:53

Speaker A

அதனாலதான் நான் வந்து விநாயகர் வழிபாடு பண்ணுங்க.

09:55

Speaker A

ஏன்னா இந்த கடன் அப்படின்னாலே,

09:58

Speaker A

இந்த சனி, ராகு, கேது பெரிய ரோல் பிளே பண்ணுவாங்க.

10:02

Speaker A

புதன் கெட்டு போயிருச்சு.

10:05

Speaker A

அந்த நேரத்துல உங்களால டிசிஷன் எடுக்க முடியல அப்படின்னா,

10:10

Speaker A

புதன் ஸ்தலங்களுக்கு போயிட்டு வரது உங்களுடைய புத்தியை ஷார்ப் ஆக்கிக்கிறது.

10:16

Speaker A

புத்தி மூலமா எப்படி சம்பாதிக்கணும் அப்படிங்கறதுதான் நீங்க வந்து ஃபாலோ பண்ணனும்.

10:21

Speaker A

இப்ப குரு வழிபாடு அப்படின்னுலாம் பண்றப்போ,

10:24

Speaker A

குரு வழிபாடு பண்ண பண்ண இந்த கடன் தொல்லைகளால அவமானப்படாம அசிங்கப்படாம தப்பிக்க முடியும்.

10:30

Speaker A

செவ்வாய் வழிபாடு அப்படின்னு பண்றப்போ செவ்வாய்ங்கிறது முருகர்.

10:34

Speaker A

முருகர் வழிபாடுன்னு பண்றப்போ பெரும் பிரச்சனையில போய் விடாது.

10:38

Speaker A

அதாவது சில பேத்துக்கெல்லாம் வந்து இப்ப பேங்கே வந்து எல்லாமே ஜப்தி பண்ணிட்டு போறாங்க.

10:45

Speaker A

இல்ல ஒரு அடிதடி மாதிரி ஆயிருது இல்ல ஒரு பஞ்சாயத்து மாதிரி ஆயிருது.

10:50

Speaker A

அந்த மாதிரி ஒரு சிச்சுவேஷன்லாம் வந்து இந்த செவ்வாய் ஹோரையில கடன் வாங்கக்கூடிய சிச்சுவேஷன் வரப்போ இந்த மாதிரி எல்லாம் அமைஞ்சிரும்.

10:55

Speaker A

அதனால எந்த ஹோரை.

10:58

Speaker A

ஹோரைங்கிறது முக்கியம் கடன் கொடுக்கிறதும் கடன் வாங்குறதும்.

11:01

Speaker A

அந்த ஹோரை பார்த்து செய்றது நல்லது.

11:03

Speaker A

சப்போஸ் சனிக்கிழமை நீங்க கடன் வாங்குறீங்கன்னு வச்சுக்கோங்க.

11:06

Speaker A

சனி பெருக்கிட்டே தான் போகும்.

11:08

Speaker A

சனிக்கிழமை கடன் வாங்குறீங்கன்னா,

11:10

Speaker A

அது நோய்க்கா இருக்கட்டும்.

11:13

Speaker A

நோய்க்கு கடன் வாங்குறீங்க அப்படின்னா,

11:16

Speaker A

அது ஓரளவுக்கு நம்மளால அடைச்சிட முடியும்.

11:19

Speaker A

ஏன்னா சனியே வந்து அன்னைக்கு மருத்துவத்துக்கு நீங்க செலவு பண்ணலாம்.

11:23

Speaker A

அது வந்து எதுவும் பண்ணாது.

11:24

Speaker A

சுப காரியங்களுக்கு சனிக்கிழமைல வந்து கடன் வாங்குற வேலை வேண்டவே வேண்டாம்.

11:29

Speaker A

அது வந்து இன்னும் கஷ்டத்திலேயே போய் விட்டும்.

11:32

Speaker A

அதனால கடன் வாங்குறதுக்கும் வெள்ளிக்கிழமை யாரும் கடன் கொடுக்கவும் மாட்டாங்க.

11:37

Speaker A

வாங்கவும் மாட்டாங்க.

11:38

Speaker A

ஆனா செவ்வாய்க்கிழமை நீங்க கடன் அடைக்கலாம்.

11:40

Speaker A

புதன்கிழமை கடன் கேட்கிறதுக்கு டிஸ்கஷன்ஸ் வச்சுக்கலாம்.

11:44

Speaker A

ஒரு வியாழக்கிழமையா கடன் யாருக்காவது நீங்க கொடுக்கணும்னு நினைச்சீங்கன்னா குரு வழிபாடு பண்ணிட்டு வியாழக்கிழமை கடன் கொடுங்க.

11:49

Speaker A

அடைக்கிறவங்க செவ்வாய்க்கிழமை அடைங்க.

11:51

Speaker A

இந்த மாதிரி நேரம், காலம், நாள், கிழமை உங்களுக்கு சந்திராஷ்டமமா இல்லையா இந்த மாதிரி எல்லாம் பார்த்துட்டு,

11:56

Speaker A

என்னங்க ஆத்திர அவசரம் எங்களுக்கு ஒரு ஹாஸ்பிடல் எக்ஸ்பென்ஸ்.

11:59

Speaker A

இந்த டைம்ல போய் நாங்க நேரம் காலம் பார்த்துட்டு இருக்க முடியுமா அப்படின்னா,

12:02

Speaker A

ஆத்திர அவசரத்துக்கு நம்ம நேரம் காலம் பார்க்க முடியாது.

12:04

Speaker A

அது வந்து உதவி.

12:05

Speaker A

அது வந்து நம்ம உதவி கேட்கிறோம்.

12:07

Speaker A

அதை எமர்ஜென்சிக்கு உதவி கேட்கிறோம்.

12:09

Speaker A

முறையா கடன் கேட்கிற ஒரு அமைப்புன்னு இருக்கு இல்லையா?

12:12

Speaker A

இப்ப நீங்க வந்து பினான்சியல் கிட்ட எல்லாம் போய் பணம் கேட்கிறீங்கன்னா,

12:15

Speaker A

அதுக்கெல்லாம் ஒரு நேரம் காலம்.

12:18

Speaker A

ஒரு பேங்க்ல போய் நகையை அடமானம் வைக்க போறீங்க.

12:22

Speaker A

இல்ல அடைக்க போறீங்க.

12:24

Speaker A

இதுக்கெல்லாம் நீங்க நேரம் காலம் பார்த்து செய்றப்போ,

12:29

Speaker A

உங்களுக்கு இழந்த செல்வம் திருப்பி கிடைக்கணும் அப்படிங்கறதுதான் வந்து கடன் அடைத்தல் அப்படிங்கறதே பேரு.

12:35

Speaker A

ஒரு கடன் எதுக்கு நம்ம வாங்குறோம்?

12:37

Speaker A

ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா தெளிவா இருக்கணும்.

12:40

Speaker A

அந்த கடன் எப்படி உபயோகப்பட்டுச்சு அப்படின்னு ஒன்னு இருக்கு.

12:44

Speaker A

ஊதாரித்தனமா செலவு பண்ணிட்டு காத்துல போன மாதிரி இருந்திடக்கூடாது கடன்.

12:49

Speaker A

ஒரு பொருள் உள்ள வரணும்.

12:52

Speaker A

ஒரு கடன் நம்ம வாங்குறோம்னா அந்த பொருளுக்கான ஒரு அடையாளம் அப்படிங்கறது வீட்ல இருந்து,

12:58

Speaker A

அது ஒரு செழிப்பை கொடுக்கிற மாதிரி இருக்கணும்.

13:01

Speaker A

இல்லைன்னா நிறைய கடன் வாங்கினவங்க வீட்டை போய் பாருங்க.

13:04

Speaker A

வீட்டுக்குள்ள ஒண்ணுமே இருக்காது.

13:05

Speaker A

அப்ப எதுக்கு கடன் வாங்கினீங்க அப்படின்னா எதுக்கு வாங்கணும்னே தெரியாது.

13:08

Speaker A

எதையோ வித்து வித்து இந்த கடனுக்காகவே சம்பாதிக்கிறேன் இந்த கடன் அடைக்கிறதுக்காகவே நான் வாழ்றேன் அப்படிங்கிற மாதிரி போயிரும்.

13:14

Speaker A

அதனால பிளானிங் அப்படிங்கறது ரொம்ப முக்கியம்.

13:16

Speaker A

அகலக்கால் எப்பவுமே ஆபத்தானது.

13:20

Speaker A

சிறு சேமிப்பு கூட உங்களுக்கு ஹெல்ப் பண்ணும்.

13:23

Speaker A

அந்த சேமிப்புக்கெல்லாம் வந்து சாமிகிட்டயே வந்து நீங்க வந்து பணம் சேமிச்சு வைக்கிறது.

13:28

Speaker A

அந்த சேமிச்சு வச்ச பணத்துல வந்து ஆலய தரிசனங்களுக்கு செலவு பண்றது.

13:33

Speaker A

ஆலய வழிபாடு பண்றது.

13:35

Speaker A

இந்த மாதிரி பில்கிரிமேஜ் ட்ரிப் போறது இந்த மாதிரி தெய்வ வழிபாட்டுக்கான ட்ரிப் எல்லாம் வந்து நீங்க சேர்த்து வச்ச பணத்துல போயிட்டு வர வர,

13:40

Speaker A

செழிப்புங்கிறது அதிகரிக்கும்.

13:42

Speaker A

பொதுவாவே எல்லா ராசிக்காரங்களுக்கும் சொல்ற விஷயம் என்ன அப்படின்னா,

13:47

Speaker A

யார் கடன் வாங்கிருந்தாலும் சரி என்ன ராசிக்காரங்க கடன் வாங்கிருந்தாலும் சரி,

13:50

Speaker A

விநாயகரை போய் பிடிச்சுக்கணும்.

13:52

Speaker A

ஏன்னா அவர்தான் ஆதி கடவுள் இல்லையா?

13:54

Speaker A

விநாயகரை வழிபாடு பண்ணி அவரையே சொல்யூஷன் கொடுக்க வைக்கணும்.

14:00

Speaker A

நீங்கதான் எனக்கு சரணாகதி அப்படின்னுட்டு விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சு வழிபாடு பண்றது.

14:05

Speaker A

இந்த மாதிரி வழிபாடு முறைகள் எல்லாம் பண்ணி விநாயகரை வழிபட்டா மட்டும் இங்க கடன் அடைஞ்சிருமா அப்படிங்கறது இல்லை.

14:09

Speaker A

அவருடைய அந்த பிளஸ்ஸிங்ஸ் அப்படிங்கறது நீங்க எடுத்துக்கணும்.

14:12

Speaker A

அதுபோக முக்கியமா சந்திராஷ்டமம்,

14:16

Speaker A

வரக்கூடிய நாட்கள்ல உங்களுக்கு என்னைக்கு சந்திராஷ்டமம்?

14:18

Speaker A

எல்லா ராசிக்கார எல்லா நட்சத்திரக்காரங்களுக்குமே வந்து ஒரு இரண்டரை நாள் சந்திராஷ்டமம் அப்படிங்கறது இருக்கும்.

14:22

Speaker A

உங்களுடைய சந்திராஷ்டம காலங்கள்ல எதுவுமே பண்ணாம அதாவது எதுவும் பண்ணாமங்கிறது,

14:28

Speaker A

முடிவுகள் எடுக்காம கடன் வாங்கணும்ங்கிற எண்ணம் இல்லாம,

14:30

Speaker A

சந்திராஷ்டமம் அன்னைக்கு கடனை அடைக்கவும் வேணாம் கடனை கொடுக்கவும் வேணாம்.

14:35

Speaker A

வாங்க போகவும் வேணாம்.

14:36

Speaker A

அந்த நேரத்துல முடிவும் எடுக்க வேணாம்.

14:37

Speaker A

சந்திராஷ்டம காலங்கள்ல கடன் வாங்கினாலோ கடன் கொடுத்தாலோ கடன் அடைப்பது மிகவும் கடினம்.

14:43

Speaker A

ரொம்ப கஷ்டத்துல போயிடுவீங்க சந்திராஷ்டமம்.

14:45

Speaker A

தெரியாம நாங்க சந்திராஷ்டமத்துல கடன் வாங்கிட்டோம் எங்களுக்கு தெரியலையே.

14:50

Speaker A

அன்னைக்கு எங்க நட்சத்திரம்.

14:51

Speaker A

விதி அப்படிதான் பண்ணும்.

14:52

Speaker A

அன்னைக்கு நீங்க கடன் வாங்க போற நேரத்துல சப்போஸ்,

14:55

Speaker A

ஒரு லோன் அப்ளை பண்ணி இருக்கீங்க.

14:58

Speaker A

எனக்கு அன்னைக்கு போய் நான் பேங்குக்கு போகணும்.

15:00

Speaker A

அன்னைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம்.

15:01

Speaker A

போகாதீங்க.

15:03

Speaker A

அலைச்சல் ஜாஸ்தியா இருக்கும்.

15:04

Speaker A

அந்த கடனை அடைக்கவே முடியாது.

15:06

Speaker A

சரி இன்னைக்கு நான் லோன் அடைக்க போற நாள்.

15:08

Speaker A

இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம்.

15:09

Speaker A

போகாதீங்க.

15:10

Speaker A

திரும்பவும் அங்கேயும் ஏதாவது ஒரு அலைச்சலோ இல்ல ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டோ இல்ல கட்ட முடியாம போற சூழலோ இல்ல மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழலோ ஏதோ ஒன்னு சந்திராஷ்டமம் நம்மளுக்கு பண்ணி விட்டுரும்.

15:16

Speaker A

அதனால முடிஞ்ச அளவுக்கு சந்திராஷ்டம காலங்கள்ல அமைதியா இருந்திருக்கிறது நல்லது.

15:20

Speaker A

தெய்வ வழிபாட்டோடு இருந்திருக்கிறது நல்லது.

15:22

Speaker A

எதற்காக கடன் வாங்குறோம் வீண் ஆடம்பரத்துக்கு வாங்குறோமா?

15:25

Speaker A

கால்குலேட்டிவா இருந்து சிக்கனமா இருக்க பழகிக்கிட்டீங்க அப்படின்னாலே யாருமே கடன் படணும் அப்படிங்கறது கிடையாது.

15:31

Speaker A

கடவுள் நம்மளுக்கு எல்லாத்துக்குமே யார் யாருக்கு எப்படி எப்படி படி அளந்து கொடுக்கணுமோ அப்படி கொடுத்துக்கிட்டே தான் இருப்பார்.

15:36

Speaker A

ஆசைப்பட படதான் கடனுக்குள்ள போய் நம்ம விழுவோம்.

15:39

Speaker A

ஆசை ஆபத்து அப்படின்னு சொல்லி நான் இந்த வீடியோவை முடிச்சுக்கிறேன்.

Topics: மகர ராசி கடன் சனி வழிபாடு ராகு கேது ஜோதிடம் ஆன்மீகம் ஹனுமன் வழிபாடு கடன் தீர்வு சனீஸ்வரர் கோயில் வணிகம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11368)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11368)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/magaram-head-reversal-jeevitha-sureshkumar-retro-aanmeegam/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
