**மகர ராசி 2026 சனிப்பெயர்ச்சி பலன்கள் | Magaram 2026 Sani Peyarchi | Jeevitha Sureshkumar Interview — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/magaram-2026-sani-peyarchi-benefits/

மகர ராசி 2026 சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் ஜோதிட வகுப்புகள் குறித்து ஜீவிதா சுரேஷ்குமார் விரிவாக விளக்குகிறார்.

## Key Takeaways

- மகர ராசிக்கு 2026 சனி பெயர்ச்சி நேர்மறையான பலன்களை தரும்.
- ஜோதிட வகுப்புகள் மூன்று மாத காலத்திற்கு நடைபெறும் மற்றும் விரிவான கற்றல் வழங்கப்படும்.
- சனி பெயர்ச்சி காரணமாக வாழ்க்கையில் தைரியம் மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
- கிரகங்களின் இயக்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கம் வாழ்க்கை மாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
- மகர ராசி மக்களுக்கு எதிர்காலம் சீராகவும் முன்னேற்றமாகவும் இருக்கும்.

## What the video covers

- சனி பெயர்ச்சி 2026 மார்ச் 5-6 அன்று தொடங்கி மகர ராசிக்கு எப்படி பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதைக் கூறுகிறார்.
- ஜோதிட வகுப்புகள் பற்றிய விவரங்கள் மற்றும் மார்ச் 20-ஆம் தேதி தொடங்கும் புதிய பேட்ச் குறித்த விளக்கம்.
- வகுப்புகள் மூன்று மாத காலம் நடைபெறும் மற்றும் வாரத்தில் ஒரு நாள் இரண்டு மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்.
- சனி பெயர்ச்சி மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்.
- மகர ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி தைரியம் மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தும், பிரச்சனைகள் குறையும்.
- ஜோதிடத்தில் கிராவிடேஷனல் புல்னு மற்றும் கிரகங்களின் இயக்கம் பற்றிய விளக்கம்.
- மகர ராசி மக்களுக்கு இந்த காலத்தில் எந்தவொரு பெரிய பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை முன்னேறும்.
- சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சி பற்றிய சமீபத்திய மற்றும் எதிர்கால நிகழ்வுகள்.
- ஜோதிடத்தில் லக்னம் மற்றும் சந்திரனின் பங்கு மற்றும் அவற்றின் தாக்கம் பற்றிய விளக்கம்.
- நேர் தொடர்புக்கு மின்னஞ்சல் மூலம் வகுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Answers

## Questions about this video

மகர ராசி 2026 சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றிய இந்த வீடியோவில் பேசும் ஜோதிடர் யார்?

இந்த வீடியோவில் மகர ராசி 2026 சனிப்பெயர்ச்சி பலன்கள் பற்றி பேசும் ஜோதிடர் மற்றும் ஆராய்ச்சியாளர் திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள் ஆவார். அவர் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி மார்ச் 5, 6-ல் துவங்கியுள்ளதாகக் கூறுகிறார்.

ஜோதிட வகுப்புகள் பற்றி ஜீவிதா சுரேஷ்குமார் என்ன தகவல் அளிக்கிறார்?

ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள் ஜோதிட வகுப்புகள் நடத்துகிறார். முதல் பேட்ச் முடிந்துவிட்டது என்றும், இரண்டாவது பேட்ச் மார்ச் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என்றும் கூறுகிறார். இது மூன்று மாத கால அடிப்படைப் பாடத்திட்டம், அதன் பிறகு உயர்நிலை வகுப்புகள் தொடரும்.

ஜோதிட வகுப்புகளில் சேர விரும்புபவர்களுக்கு அவர் என்ன அறிவுரை வழங்குகிறார்?

ஜோதிட வகுப்புகளில் சேர விரும்புபவர்கள் திறந்த மனதுடன் அறிவைப் பெற வர வேண்டும் என்று ஜீவிதா சுரேஷ்குமார் அறிவுறுத்துகிறார். ஜோதிடம் ஒரு கடல் போன்றது என்றும், அனைத்து அமைப்புகளையும் விவாதிப்போம் என்றும் அவர் கூறுகிறார்.

## Full Transcript — Download SRT & Markdown

00:05

Speaker A

நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை. இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருத்துவமனை. கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரை. தொடர்புக்கு 8807666117 மற்றும் 8807666118.

00:25

Speaker B

நிம்மதி ப்ராப்பர்ட்டி மேனேஜ்மென்ட். காண்டாக்ட் 7667008999.

00:35

Speaker C

ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழி வருமனின் அன்பார்ந்த வணக்கங்கள். இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் சிறப்பு நேர்காணல் பகுதி.

00:41

Speaker C

தொடர்ச்சியா வந்து பார்த்தீங்கன்னா எல்லாருக்குமே தெரியும் எல்லா விதமான துறைகளிலும் ஒரு ஆர்வம் இருப்பதை போல இந்த ஆஸ்ட்ராலஜி இந்த கணிதம் துறையும் வந்து பார்த்தீங்கன்னா கணிப்பு துறையும் ரொம்ப ஒரு ஆர்வமான ஒரு துறைதான் எல்லாருக்குமே பொதுவாக வெகுஜன மக்களுக்குமே கூட. சோ இந்த நேரம் அப்படிங்கறது வந்து இந்த வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில சனி பெயர்ச்சி அப்படிங்கறது துவங்கி இருக்கிறது மார்ச் 5, 6-ல துவங்கி இருக்கிறது அப்படிங்கறத நம்ம பார்க்கிறோம்.

01:00

Speaker C

அதைப்பற்றிய விரிவான ஒரு அலசல்களை நம்மோடு பேசுவதற்காக இணைந்திருக்கிறார் மீண்டும் ஆஸ்ட்ராலஜர் கம் ரிசர்ச்சர் மரியாதைக்குரிய திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள். வணக்கம்.

01:51

Speaker D

வணக்கம்.

01:53

Speaker C

எப்படி இருக்கீங்க மேம்?

01:54

Speaker D

நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?

01:55

Speaker C

நலமா இருக்கேன் மிக்க மகிழ்ச்சி உங்களை மீண்டும் சந்திக்கிறதுல. நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நீங்க தொடர்ச்சியா வகுப்புகள் எடுத்துக்கிட்டு இருக்கீங்க. அந்த வகுப்புகள் அப்கமிங் கிளாசஸ் என்ன அப்படிங்கறத டீடைல்ஸ கொஞ்சம் மக்களுக்கு சொல்லிட்டு நம்ம நிகழ்ச்சிக்குள்ள துவங்குவோம்.

02:07

Speaker D

ஆக்சுவலா வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சாச்சு. பேசிக் கோர்ஸ் ஆஸ்ட்ராலஜி கோர்சஸ் ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சு இப்ப செகண்ட் பேட்ச் வந்து மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து தொடங்குறோம்.

02:20

Speaker D

சோ இது எப்படி நான் ஸ்டூடென்ட்ஸ் சூஸ் பண்றோம் அப்படின்னா வர்றவங்க வந்து நான் எடுத்த உடனே ஆஸ்ட்ராலஜர் ஆயிடுவேனா? நான் இப்படி இதை கெயின் பண்ணிடுவேனா?

02:40

Speaker D

நீங்க பர்டிகுலரா இந்த பேட்டர்ன் இந்த சிஸ்டம் தான் நீங்க ஃபாலோ பண்ணி சொல்லிக் கொடுப்பீங்களா அதெல்லாம் கிடையாது.

02:50

Speaker D

இது வந்து எப்படின்னா உங்களுக்கு எல்லா சிஸ்டமுமே நம்ம டிஸ்கஸ் பண்ணுவோம்.

02:56

Speaker D

மைண்ட் ஓபன் மைண்டடா வச்சிட்டு நாலேட்ஜ் கெயின் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் வரணும்.

03:04

Speaker D

ஏன்னா ஆஸ்ட்ராலஜி பொறுத்தவரைக்கும் இது ஒரு கடல்.

03:08

Speaker D

சோ இது ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸ் கோர்ஸா இருக்கும். இந்த த்ரீ மந்த்ஸ் கோர்ஸ் முடிச்சவங்களுக்கு தான் நான் அடுத்தது நெக்ஸ்ட் லெவல் ஹையர் லெவல் கோர்சஸ் வந்து அவங்கதான் கண்டினியூ பண்ண முடியும்.

03:25

Speaker D

சோ இந்த மூணு மாசம் கழிச்சு நெக்ஸ்ட் லெவல் கோர்சஸ் அப்படியே கண்டினியூ ஆயிடும் ஆல்ரெடி இருக்க ஃபர்ஸ்ட் பேட்ச் ஸ்டூடென்ட்ஸும் செகண்ட் பேட்ச் ஸ்டூடென்ட்ஸும் சேர்ந்து பண்ற மாதிரி இருக்கும்.

03:35

Speaker D

இடையில இடையில வொர்க்ஷாப்ஸும் அப்பப்ப பண்றோம். இப்பதான் நட்சத்திர கிளாசஸ் முடிச்சோம்.

03:42

Speaker D

சோ இந்த கிளாசஸ் போயிட்டு இருக்கப்போ இடையில மறுபடியும் ஒரு வொர்க்ஷாப் பண்ற மாதிரி இருக்கும்.

03:48

Speaker C

பண்ணிக்கலாம்.

03:49

Speaker D

நம்ம ஸ்டூடென்ட்டா இருக்கிறப்போ.

03:52

Speaker D

சோ சேரணும்னு நினைக்கிறவங்க வந்து கம் வித் ஓபன் மைண்ட் ஏன்னா இதுவரைக்கும் ஒரு 2000 பேத்துக்கு மேல எங்களுக்கு அப்ளிகேஷன்ஸ் வந்தாலுமே.

04:00

Speaker C

ஓகே ஓகே.

04:01

Speaker D

நான் இன்னும் ஒரு 15 பேத்துக்கு கூட இவங்கதான் வேணும்னு நான் இன்னும் ஃபில்டர் பண்ணல. சோ அவ்வளவு ஃபில்டர் பண்ணிதான் எடுக்கிறோம்.

04:11

Speaker D

ஏன்னா குவாலிட்டி ரொம்ப முக்கியம் அப்படிங்கறதோட எத்தனை பேர் வராங்கங்கறது இல்லை.

04:17

Speaker D

ஸ்பெசிஃபிக்கா இருக்கணும் கொஞ்ச பேர் இருந்தாலும் நாலேட்ஜபிலா இருக்கணும் அப்படிங்கறது.

04:24

Speaker C

20-ல ஆரம்பிச்சு எப்போ முடியுது மேம் வகுப்புகள்?

04:26

Speaker C

மூன்று மாத வகுப்புகள்.

04:27

Speaker D

மூன்று மாத வகுப்புகள்தான் இது.

04:30

Speaker D

மார்ச், ஏப்ரல், மே அதாவது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கிளாசஸ் வாரத்துல ஒரு நாள் கிளாசஸ் வைக்கிற மாதிரி.

04:40

Speaker D

ஃபர்ஸ்ட் வந்து ஃபிரைடே, சாட்டர்டேன்னு வச்சோம் பட் நிறைய பேர் கேட்டாங்க ரெண்டு நாள் முடியாதுங்கிறப்போ சரி சாட்டர்டே அதை அப்படியே ரெண்டு கிளாஸா ஒரே கிளாஸா மாத்திரலாம் அப்படிங்கிற மாதிரி.

04:48

Speaker C

ரைட்.

05:09

Speaker C

இந்த வகுப்புகள் தொடர்பாக நீங்க மேலதிக விவரங்களை தெரிஞ்சுக்கணும் அப்படின்னா இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விவரங்களை அனுப்புங்க.

05:20

Speaker C

அந்த மின்னஞ்சல் முகவரியிலிருந்து உங்களுக்கு ரிப்ளை பண்ணி உங்களை கம்யூனிகேட் பண்ணுவாங்க.

05:21

Speaker C

நன்றி.

05:22

Speaker C

மேம் இப்போ நம்ம முக்கியமான ஒரு இடத்துக்கு வந்திருக்கிறோம். சோ வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் அப்படிங்கறது குறித்து ஏற்கனவே நீங்க பல முறை பேசி இருக்கிறீங்க. நம்ம ஃபோர்த் எஸ்டேட் தமிழ்ல கூட நீங்க பேசி இருக்கிறீங்க.

05:37

Speaker C

இந்த முறை வந்திருக்கிறது என்ன சனி பெயர்ச்சி?

05:40

Speaker C

என்ன மாறுபாடு இருக்கு?

05:42

Speaker C

அதுல இருந்து நம்ம துவங்கிட்டு நம்ம அடுத்த ராசிகளுக்குள்ள போகலாம்.

05:47

Speaker D

சோ வந்து மார்ச் ஆறாம் தேதி சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அப்படிங்கறதுதான்.

05:53

Speaker D

அதாவது திருநள்ளாறுல இதை வந்து ஃபாலோ பண்ணுவாங்க அப்படிங்கறதுதான்.

06:00

Speaker D

கோயில் ஆகம விதிகளை வச்சு ஃபாலோ பண்ணது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடியே வந்து ரிஷிகளால இது கணிக்கப்பட்ட ஒரு விஷயம்.

06:12

Speaker D

அதுல அந்த காலத்துல வந்து ராஜாக்களுக்காகவும் கோயிலுடைய அமைப்புகளுக்காகவும் கட்டமைப்பாகவும் அதுக்காக வந்தது.

06:21

Speaker D

தனி மனிதனுக்காக ஜோதிடம் வரல அந்த நேரத்துல.

06:24

Speaker D

சோ இது வந்து கூட்டாதான் வந்தது ராஜாக்களுக்காக வந்தது அரசு எப்படி இருக்கும்ங்கிறதுக்காக வந்தது.

06:30

Speaker D

சோ அதுக்கு அப்புறமா நம்ம வந்து தனி மனித தனி மனிதனுடைய ஜோதிடம் அப்படின்னு பார்க்கிறப்போ சில விஷயங்கள் புரிய வந்தது என்ன அப்படின்னா இதைத்தான் ஒரு 200 வருடங்களா போய்க்கொண்டிருக்கிற ஒரு டிபேட்டே இதுதான்.

06:43

Speaker D

அது என்னன்னா அக்யூரஸினு ஒரு விஷயம் இருக்குது.

06:45

Speaker D

நம்மளுடைய கிராவிடேஷனல் புல்னு ஒன்னு இருக்குது. கிரகங்கள் வந்து அப்ப கணிச்ச மாதிரி அதே பேட்டர்ன்ல எல்லாம் மூவ் ஆகலங்கிறது ஒன்னு இருக்கு.

06:54

Speaker D

லைட்டா நம்மளுடைய குளோபல் டில்ட் ஆயிடுச்சுங்கிறது எல்லாம் ஒன்னு இருக்கு.

06:58

Speaker D

சோ இதெல்லாம் பார்க்கிறப்போ சரியான முறைப்படி வந்து பிளானட்ஸ் மூவ் ஆகுறது இல்லை.

07:07

Speaker D

அதனாலதான் நம்ம வந்து வக்ரம் அடையுது.

07:10

Speaker D

இப்ப கூட நம்ம ரீசன்ட்டா என்ன சொல்லி இருப்போம் குரு பெயர்ச்சியில கூட குரு வந்துட்டு திரும்பி பின்னாடி போறாருன்னு ஒன்னு இருக்குது.

07:20

Speaker C

ஓகே ஓகே.

07:21

Speaker C

ஜூன் மாசம் குரு பெயர்ச்சி வருதுன்னு நினைக்கிறேன்.

07:23

Speaker D

அப்ப வந்து குரு குரு வரப்போ வந்து சனி கொஞ்சம் சைலன்ட் ஆகுறதுதான்.

07:30

Speaker D

குரு பார்த்தாலே கொஞ்சம் சனி சைலன்ட் ஆகுறதுனாலதான்.

07:34

Speaker D

இதை யாரும் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேணாம்.

07:40

Speaker D

ஆனா ஒரு சிலர் ஆல்ரெடி அவங்களுக்கு சனி பெயர்ச்சிங்கிற ஒரு விஷயம் எல்லாம் நடந்துட்டு இருக்கறதுனால அவங்க எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.

07:47

Speaker C

பட் இது வந்து ஒரு கூடுதல் விவரத்துக்காக நம்ம எடுத்துக்கலாம் இல்லையா?

07:50

Speaker C

அந்த மாதிரி பார்க்கலாம்.

07:51

Speaker C

அடுத்த கட்ட ராசியாக மகர ராசி மகர ராசிக்கு இந்த முறை வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில எப்படி இருக்கிறது சனி பெயர்ச்சி?

08:00

Speaker D

அதாவது மூணுல மூணாவது ஸ்தானத்துல இருக்கிறார்.

08:04

Speaker C

தனுசுக்கு நாலு இவங்களுக்கு மூணு.

08:05

Speaker D

இவங்களுக்கு மூணுல இருக்கிறார் அப்படிங்கறப்போ.

08:08

Speaker D

மூணுல சனி இருக்கிறது வந்து நல்லது.

08:11

Speaker D

இது என்னன்னா மறைஞ்சிருந்து இவங்களுக்கு வந்து ஹெல்ப் பண்ணும்.

08:15

Speaker C

ஓ.

08:16

Speaker D

சனி.

08:17

Speaker D

நான் என்னென்னலாம் இவங்களுக்கு வந்து பொதுவாகவே மகரத்துக்கு மறைஞ்சு போன விஷயங்கள் எல்லாம் என்ன அப்படின்னா அந்த கரேஜ்ங்கிற ஒரு விஷயம் வந்து அவங்ககிட்ட இருக்காது.

08:26

Speaker C

ஓ தைரியம்.

08:27

Speaker D

தைரியம் அப்படிங்கிற ஒரு விஷயம் வந்து பெருசா வேலை பார்க்காது.

08:31

Speaker D

இவங்க என்ன நினைப்பாங்க அவங்க என்ன நினைப்பாங்கன்னுலாம் இருக்கும்.

08:34

Speaker D

இப்ப துணிஞ்சு என்ன வேணாலும் பண்ணுவாங்க.

08:37

Speaker D

வாழ்க்கை ஆல்ரெடி அவங்களுக்கு இருந்த நிஜமாலுமே அவங்களுக்கு ஏழரை சனி கிளியரான டைம் அப்படிங்கறது வாக்கிய பஞ்சாங்கம் சொல்லுது.

08:50

Speaker D

ஆல்ரெடி திருக்கணிதத்தின்படி அவங்களுக்கு வந்து கிளியர் ஆயிடுச்சு.

08:57

Speaker D

ஏழரை சனி கிளியர் ஆனதுக்கு அப்புறம்தான் அவங்களுக்கு கண்ணு தெரிய ஆரம்பிச்சிருக்கும்ங்கிறது.

09:03

Speaker D

இப்ப என்னன்னா கன்ஃபர்மேஷன் என்னன்னா டோட்டல் கிளியர் ஆயிடுச்சு.

09:10

Speaker D

நீங்க பண்ணிட்டு இருக்க விஷயங்கள் எல்லாமே சரிதான்.

09:13

Speaker D

இன்னும் அதன்படியே போங்க என்ன அப்படின்னா இவங்க நிறைய விஷயங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணியே வாழ்ந்திருந்திருப்பாங்கன்னு வச்சுக்கோங்களேன்.

09:20

Speaker D

சோ இது இதுதான் கரெக்ட்ங்கிறது நினைச்சுட்டு வாழ்ந்திருப்பாங்க.

09:24

Speaker D

அப்போ தவறு யாரையும் சுட்டிக்காட்டி இருந்திருக்க மாட்டாங்க. எல்லா பிளேமும் இவங்க மேலேயே வச்சிருந்திருப்பாங்க.

09:35

Speaker D

இப்ப எப்படி இருக்கும்னா நான் எந்த தவறும் பண்ணல அப்போ என்னை சுத்தி இருக்கவங்க எல்லாம் நானே தவறு செய்ய வச்சுட்டேன்.

09:42

Speaker D

நான் வந்து இந்த நோ சொல்ல தெரியாம இருப்பாங்கல்ல.

09:46

Speaker D

இனிமேல் நோ கரெக்டா சொல்லுவாங்க.

09:48

Speaker C

ஓகே.

09:49

Speaker D

முடியும் முடியாது.

09:51

Speaker D

அப்படிங்கிற விஷயத்தை வந்து கரெக்டா சொல்றப்போ.

09:54

Speaker C

மகரம்.

09:55

Speaker D

குரோத்.

09:56

Speaker D

சரியான குரோத் மகரத்துக்கு.

10:00

Speaker D

அதாவது எந்த பிரஷரும் இனிமேல் கிடையாது.

10:04

Speaker D

அப்படிங்கிறதைதான் ஜீரோல இருந்து ஒருத்தங்க ஸ்டார்ட் பண்ணுவாங்க அப்படின்னா.

10:10

Speaker D

ஆல்ரெடி இவங்க ஜீரோல இருந்து ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.

10:13

Speaker D

இனிமேல் நெக்ஸ்ட் இயர் டைம் பீரியட்லாம் பார்க்கிறப்போ பீக் குரோத் தான்.

10:18

Speaker D

இவங்களே நினைச்சு பார்க்க முடியாது.

10:20

Speaker D

எப்படி அப்படின்னா சில ஒரு சிலர் சொல்லலாம்.

10:25

Speaker D

நானும் மகர ராசிதான்.

10:27

Speaker D

ஆனா வந்து.

10:29

Speaker C

நடக்கல எனக்கு.

10:30

Speaker D

ஒன்னும் நடக்கல அப்படின்னா.

10:33

Speaker D

ராசி லக்னம்னு ஒரு விஷயம் இருக்கும்.

10:37

Speaker D

ஒரு சிலருக்கு லக்னம் தான் பவர்ஃபுல்லா இருக்கும்.

10:41

Speaker D

சோ கணக்குப்படி அவங்களுடையதுல சந்திரன் ஒருவேளை வீக் வீக்கான ஒரு இடத்துல உட்கார்ந்து.

10:49

Speaker D

இல்ல அதனுடைய பவர் கம்மியா இருந்து அந்த லக்னத்தோடைய பவர் மே பி ஜாஸ்தியா இருந்தால் லக்னம் வேலை பார்த்துட்டு இருந்திருக்கும்.

10:55

Speaker C

ஓகே.

10:56

Speaker D

ஃபார் எக்ஸாம்பிள் மகர ராசி சிம்ம லக்னம் அப்படின்னு வச்சுக்கோங்க.

11:01

Speaker D

சிம்ம லக்னத்துக்கு வந்து சனி அஷ்டம சனி அப்படிங்கறப்போ.

11:05

Speaker D

இப்ப அவங்களுக்கு 30 வயசுலாம் தாண்டினவங்களா இருக்காங்கன்னு வச்சுக்கோங்க.

11:12

Speaker D

கண்டிப்பா லக்னம் தான் வேலை பார்க்கும்.

11:13

Speaker C

ஓ அஷ்டம சனி தான் வேலை பார்க்கும்.

11:14

Speaker D

அஷ்டம சனி தான் வேலை பார்க்கும்.

11:15

Speaker D

சோ இப்ப இங்க மகரம் வந்து அதை அனுபவிச்சிட்டு இருக்கிற மாதிரி இருக்கும்.

11:20

Speaker D

அப்போ இங்கதான் வந்து மக்கள் வந்து கன்ஃபியூஸ் ஆயிடுறாங்க.

11:24

Speaker D

நீங்க என்ன கரெக்டா சொல்லல தப்பா சொல்லல.

11:26

Speaker C

அப்பனா அது என்னன்னா அந்த ஜாதக கட்டத்தின் அடிப்படையிலதான் இருக்கு.

11:28

Speaker D

கட்டத்தின் அடிப்படையிலயும்.

11:30

Speaker C

ஆமா.

11:31

Speaker D

இது வந்து நம்ம பொதுவாதான்.

11:32

Speaker C

இது பொதுவாதான் நம்ம சொல்றோம் இல்லையா?

11:33

Speaker D

அப்ப இந்த கட்டத்தின் அடிப்படையில உங்களுடையதுல எது பவர்ஃபுல்லா இருக்குங்கிற ஒரு விஷயமும் ஒன்னு இருக்குது.

11:39

Speaker C

அது அப்ப அவங்க கண்டறிந்து அதுக்கு ஏத்த மாதிரியான பலன்களை வந்து பண்ணனும்னு நினைக்கிறேன்.

11:42

Speaker C

எந்த இவங்க தெய்வத்தை வழிபடலாம் மேம் மகர ராசி?

11:44

Speaker D

இவங்க வந்து இப்போதைக்கு வந்து எந்த பரிகாரமும் இனிமேல் இவங்க பண்ணனும்னு தேவை இல்லை.

11:50

Speaker D

இனிமேல் இவங்க புண்ணிய ஸ்தலங்களாவே போய்க்கலாம் அப்படிங்கறதுதான்.

11:52

Speaker C

எங்கெல்லாம் போலாம்?

11:53

Speaker D

இவங்க வந்து புண்ணிய ஸ்தலங்கள் இந்த 108 திவ்ய தேசம் நம்ம சொல்லுவோம் இல்லையா?

11:59

Speaker C

ஆமா ஆமா.

12:00

Speaker D

சோ பெருமாளை போய் இனிமேல் இவங்க அதிகமா பார்க்கட்டும்.

12:03

Speaker D

செழிப்பான தெய்வங்களையே பார்க்கட்டும்.

12:05

Speaker D

விநாயகர் வழிபாடா இருக்கட்டும்.

12:07

Speaker D

அதே நேரத்துல வந்து இவங்க சனீஸ்வரரையும் வழிபடட்டும். சனீஸ்வரருக்கு ஒரு விளக்கு வச்சுட்டு வந்தா போதும்.

12:15

Speaker D

சனீஸ்வரர்ட்ட போய் இவங்க எதுவும் கேட்கவும் வேண்டாம் எதுவும் செய்யவும் வேண்டாம்.

12:18

Speaker D

ஏன்னா இது எல்லாமே கிளியரன்ஸ் பண்ணி கர்மா கிளியரன்ஸ் தான் இது.

12:22

Speaker D

சோ இனிமேல் புண்ணிய ஸ்தலங்களுக்கு போகணும்.

12:27

Speaker D

சோ பொதுவா இந்த சனி பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ.

12:32

Speaker D

பெருசா பயந்துக்கணும்ங்கிற ஒரு அவசியம் கிடையாது.

12:35

Speaker D

சனி நாளே ஒரு கரெக்ஷன் பண்ணக்கூடியவர் தான்.

12:37

Speaker D

என்ன தவறுகள் செஞ்சோமோ அதுக்கான வினை அனுபவிக்கிறதுக்கு தான் இப்ப வரும்ங்கிறப்போ உடனே அதை நீங்க சரி பார்த்துட்டீங்கன்னா லைஃப் சேஞ்ச் ஓவர் அப்படிங்கறதுதான்.

12:44

Speaker D

அந்த லைஃபை மாத்தாம சனி கிளம்பவே மாட்டார்.

12:48

Speaker D

இல்லைன்னா நம்ம லூப்க்குள்ளேயே சுத்திட்டே இருக்கிற மாதிரிதான்.

12:51

Speaker D

அந்த விஷயம் இருக்கும்.

12:53

Speaker D

சோ அதனால தவறுகளை திருத்திக்க கூடியதுக்கு தான்.

12:57

Speaker D

திருத்துறதுதான் வந்து சனி பெயர்ச்சி.

12:59

Speaker C

சோ யாரும் பயப்பட வேண்டாம் பொதுவா.

13:00

Speaker D

பயப்பட வேண்டாம் மாற்றம் தான் மாற்றத்தை கொடுக்கக்கூடியதுதான் கொஞ்சம் ஸ்லோவா கொடுக்கும்.

13:06

Speaker D

அதை வந்து பொறுமையா ஏத்துக்கணும் அப்படிங்கறப்போ.

13:10

Speaker D

ஏன்னா சனி லேட்டா கொடுத்தாலும் திரும்ப வாங்க மாட்டார்னு ஒன்னு இருக்குது.

13:14

Speaker C

ஓ.

13:15

Speaker D

சனி வந்து ஒருத்தங்களுடைய வாழ்க்கையில 30 வயசு ஆகுறதுக்குள்ள எல்லாத்துக்குமே சனி வந்தே தீரும் அப்படிங்கறதுதான் ஒன்னு இருக்குது.

13:22

Speaker D

சோ ஒவ்வொரு ஏஜ் கேட்டகிரிக்குமே லைஃப் ஸ்டைல் மாறிட்டேதான் இருக்கும்ங்கறப்போ அப்கிரேடேஷன் தான்.

13:27

Speaker D

சனி கொடுத்துட்டு போறப்போ உங்கள்ட்ட நல்லபடியாவே கொடுத்துட்டு போவாருங்கறப்போ அதை பத்திரமா வச்சுக்கோங்க.

13:33

Speaker D

இப்ப உங்களுக்கு இன்கம் வருதுன்னா சனிதான் கொடுக்கிறார் அப்படிங்கறத நீங்க தெரிஞ்சுக்கணும்.

13:37

Speaker C

நிச்சயமா உங்கள் வகுப்புகளைப் பற்றியும் மேலும் ஒரு செய்தி.

13:40

Speaker C

மக்களுக்கு நேரடியா கொடுத்துட்டீங்கன்னா அவங்க நெக்ஸ்ட் உங்களை தொடர்புகொள்வாங்க.

13:44

Speaker D

மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து நாங்க வந்து கிளாசஸ் ஸ்டார்ட் பண்றோம்.

13:50

Speaker D

சோ இன்னும் யாராவது இன்னும் ரெஜிஸ்டர் பண்ணாம இருக்கீங்க அப்படின்னா ரெஜிஸ்ட்ரேஷன் கீழ தெரியுற மெயில் ஐடிக்கு ஏன்னா எங்களால இப்ப கால்ஸ் அட்டென்ட் பண்ண முடியல.

14:01

Speaker D

ஒன்ஸ் நீங்க வந்து ஸ்டூடென்ட் ஆனதுக்கு அப்புறம் உங்களுக்கு வந்து வாட்ஸ்அப் குரூப்ல நான் உங்களை வந்து வச்சிருவோம்.

14:08

Speaker D

அட் தி சேம் டைம் மைண்ட் பிராட் மைண்டடா வச்சுட்டுதான் என்கிட்ட கிளாசஸ் நீங்க படிக்க வரணும்.

14:16

Speaker D

ஹைலி சிஸ்டமேட்டிக்காலாம் இருக்காது இது வேர்ல்ட் ஆஸ்ட்ராலஜியா நீங்க படிக்கிற மாதிரிதான் இருக்கும்.

14:21

Speaker C

சரி ஃபைன்.

14:22

Speaker C

பலவிதமான கருத்துக்களை பொறுமையா பகிர்ந்துகிட்டீங்க.

14:25

Speaker C

பொறுத்திருந்து பார்க்கலாம் நடக்கப்போற நிகழ்வுகள் என்ன அப்படின்னு.

14:28

Speaker C

மிக்க நன்றி.

14:29

Speaker D

நன்றி.

14:30

Speaker C

நன்றி மீண்டும் சந்திக்கலாம் வணக்கம்.

Topics: மகர ராசி சனி பெயர்ச்சி ஜோதிடம் வாக்கிய பஞ்சாங்கம் ஜோதிட வகுப்புகள் ஜீவிதா சுரேஷ்குமார் ஆஸ்ட்ராலஜி 2026 தமிழ் ஜோதிடம் குரு பெயர்ச்சி

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11534)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11534)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/magaram-2026-sani-peyarchi-benefits/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
