**கும்பம் - எதிர்பாராத யோகத்தை பெறப்போகிறீர்கள் | Kumbam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/kumbam-unexpected-yoga-benefits/

கும்பம் ராசியினரின் பிளட் குரூப் குணாதிசயங்கள், வாழ்க்கை, வேலை மற்றும் உறவுகளின் மேல் ஆன்மீக மற்றும் ஜோதிட விளக்கம்.

## Key Takeaways

- பிளட் குரூப்புகள் மனிதர்களின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை பாத்திரங்களை தீர்மானிக்கின்றன.
- கும்பம் ராசியினரின் ஏ மற்றும் பி பிளட் குரூப்புகள் தனித்துவமான பண்புகள் மற்றும் திறன்களை கொண்டுள்ளன.
- ராசி, லக்னம் மற்றும் நட்சத்திரம் ஆகியவை வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை விளக்குகின்றன.
- பிளட் குரூப்புகளின் அடிப்படையில் வாழ்க்கைத் துணை தேர்வு மற்றும் திருமண வாய்ப்புகள் சிறப்பாக பொருந்தும்.
- ஆத்மீக மற்றும் ஜோதிட அறிவியல் மூலம் வாழ்க்கை மற்றும் மனித குணங்கள் பற்றிய ஆழமான புரிதல் பெற முடியும்.

## What the video covers

- கும்பம் ராசியினரின் பிளட் குரூப்புகள் மற்றும் அவற்றின் தனித்துவமான குணாதிசயங்கள் பற்றி விளக்கம்.
- ஒவ்வொரு பிளட் குரூப்புக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் உள்ளன.
- ஏ மற்றும் பி பிளட் குரூப்புகளின் தனிப்பட்ட குணாதிசயங்கள் மற்றும் அவற்றின் வாழ்க்கை பாத்திரங்கள் பற்றி விவாதம்.
- ராசி, லக்னம் மற்றும் நட்சத்திரம் ஆகியவை வாழ்க்கையின் மனநிலையை மற்றும் சூட்சுமங்களை விளக்கும் முக்கிய அம்சங்கள்.
- பிளட் குரூப்புகளின் அடிப்படையில் மனிதர்களின் குணாதிசயங்கள் மற்றும் வாழ்க்கை சூழல்கள் எப்படி மாறுகின்றன என்பதைக் கூறுகிறது.
- கும்பம் ராசியினரின் சமூக மற்றும் குடும்ப வாழ்க்கை, வேலை மற்றும் மனிதாபிமானம் பற்றிய விவரங்கள்.
- பிளட் குரூப்புகளின் அடிப்படையில் வாழ்க்கைத் துணை தேர்வு மற்றும் திருமண வாய்ப்புகள் பற்றிய ஆலோசனைகள்.
- கும்பம் ராசியில் உள்ள ஏ மற்றும் பி பிளட் குரூப்புகளின் தனித்துவமான பண்புகள் மற்றும் வாழ்க்கை முறைகள்.
- பிளட் குரூப்புகள் மற்றும் ஜோதிடத் தத்துவங்கள் இணைந்து மனிதர்களின் குணாதிசயங்களை உருவாக்குகின்றன.
- பழைய மற்றும் புதிய யுகங்களில் பிளட் குரூப்புகளின் தாக்கம் மற்றும் வாழ்க்கை முறைகளின் மாற்றங்கள்.

Answers

## Questions about this video

கும்ப ராசிக்காரர்களுக்கு திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்?

பெரும்பாலும் கும்ப ராசிக்காரர்களுக்கு திருமணத்திற்குப் பிறகுதான் வாழ்க்கையில் வளர்ச்சி இருக்கும். குறிப்பாக 'ஏ' அல்லது 'பி' ரத்த வகை கொண்டவர்கள் வாழ்க்கைத் துணையாக வந்தால், அவர்களின் வாழ்க்கை செழிக்கும்.

லக்னம், ராசி மற்றும் நட்சத்திரம் ஒருவரின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன?

லக்னம் ஒருவரின் வாழ்க்கையின் திசையைச் சொல்லும். ராசி அந்த திசைக்குள் ஒருவரின் மனநிலையை விவரிக்கும். நட்சத்திரம் வாழ்க்கையின் சூட்சுமங்களை வெளிப்படுத்தும்.

ஓ ரத்த வகை கொண்டவர்களின் குணாதிசயங்கள் என்ன?

ஓ ரத்த வகை கொண்டவர்கள் ஒரு போர்வீரர் குணம் கொண்டவர்கள். அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்வார்கள், மேலும் எந்த சூழ்நிலையிலும் ஒரு காரியத்தை முடிக்கும் திறமை கொண்டவர்கள்.

## Full Transcript — Download SRT & Markdown

00:02

Speaker A

இப்ப கும்பத்துல வந்து ஓ இருக்காங்க அப்படின்னா வீட்ல வேற மாதிரி இருப்பாங்க, வெளிய வேற மாதிரி இருப்பாங்க, இவங்களுக்கு வந்து ஏ பியும் பியும் வந்து லைஃப் நல்லா இருக்கும். பெரும்பாலும் கும்பத்துல இருக்கவங்களுக்கு ஆப்டர் மேரேஜ் தான் லைஃப் உடைய குரோத் அப்படிங்கறது ஒன்னு இருக்கு.

00:16

Speaker A

இந்த ஏ பியும் பியும் வந்துட்டாங்கன்னா லைஃப் கொஞ்சம் செட் ஆயிடும். வேற யாரு வந்தாலும் கொஞ்சம் கஷ்டம். ஒரு ஏ பி அமைப்புல இருக்கிறவங்க இவங்களுக்கு லைஃப் பார்ட்னரா வராங்கன்னா லக் ஆக்டிவேட் ஆயிடும். பி வருதுன்னா ஃபீல் குட்டா இருக்கும். ஏ பி வருதுன்னா ஆக்டிவேட் ஆகும்.

00:29

Speaker B

ரெட்ரோ ஆன்மீகம் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நிகழ்ச்சியில் நம்முடன் இருப்பவர் அஸ்ட்ராலஜர் ரைட்டர் திருமிகு ஜீவிதா சுரேஷ் அவர்கள்.

00:36

Speaker A

வணக்கம்.

00:37

Speaker B

எப்படி இருக்கீங்க?

00:38

Speaker A

நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?

00:39

Speaker B

ரொம்ப நல்லா இருக்கேன்.

00:40

Speaker B

இப்போ ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்குல்ல. அதே மாதிரி ஒவ்வொரு பிளட் குரூப்புக்கும் ஒரு குணாதிசயம் இருக்கு அப்படிங்கிற ஒரு விஷயத்தை நீங்க சொல்லி இருந்தீங்கல்ல. சோ அது மாதிரி அவங்கனா இப்ப ஒரு ஓ பாசிட்டிவ் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம்னா அவங்களோட குணாதிசயம் எப்படி இருக்கும்?

00:57

Speaker B

அவங்களுடைய கேரக்டர் எப்படிப்பட்டது?

00:58

Speaker B

அப்படிங்கிற மாதிரி எல்லா பிளட் குரூப்புக்கும் நீங்க கொஞ்சம் டீடைலா சொல்லுங்க.

01:00

Speaker B

அதுக்கப்புறம் நம்ம ராசிக்குள்ள போலாம்.

01:01

Speaker A

பொதுவா நம்ம வந்து ராசி, லக்னம், நட்சத்திரம் அப்படிங்கிற ஒரு விஷயத்தை நம்ம பார்ப்போம்.

01:03

Speaker A

லக்னம் அப்படின்னு நம்ம எடுத்துக்கிட்டோம் அப்படின்னா நம்மளுடைய வாழ்க்கையோட திசையை லக்னம் சொல்லும்.

01:10

Speaker A

ராசி அப்படிங்கறது அந்த திசைக்குள்ள நம்மளுடைய மனநிலைமை என்ன அப்படிங்கறத சொல்லும்.

01:16

Speaker A

நட்சத்திரம் என்ன அப்படிங்கறது நம்ம வாழ்க்கையோட சூட்சுமங்களை அப்படிங்கிற ஒரு விஷயத்தை சொல்லும்.

01:21

Speaker A

இது எல்லாமே ஒன்னோடு ஒன்னு கனெக்டட் அப்படிங்கறப்போ நம்மளுடைய ரத்தமும் இதுல சம்பந்தப்பட்டது எந்த டிஎன்ஏக்குள்ள நம்ம பிறந்து வரோம்.

01:30

Speaker A

இந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு பிளட் குரூப் நம்ம கேரி ஆன் பண்ணிட்டு வந்துட்டு இருக்கணும்.

01:34

Speaker A

ஒரு விஷயம் இருக்கு அப்போ இந்த பிளட்ங்கிற விஷயம் என்ன பண்ணும் அப்படின்னா இந்த ராசிகளுக்குன்னு சில தத்துவங்கள் அப்படிங்கறது ஒன்னு உண்டு இல்லையா?

01:42

Speaker A

இந்த வாழ்க்கை அமைப்புன்னு ஒன்னு இருக்கு.

01:45

Speaker A

அப்போ ஒரு பர்டிகுலர் பிளட் குரூப் இந்த ஒரு ராசி அமைப்பினருக்கு வரப்போ இது எப்படி ரியாக்ட் பண்ண போகுது?

01:51

Speaker A

ரெஸ்பான்ட் பண்ண போகுது?

01:52

Speaker A

இது எப்படி ரியாக்ட் பண்ண போகுது அப்படிங்கறதுதான் நம்ம பார்க்க போறோம்.

01:55

Speaker A

இப்ப ஓ அப்படின்னு எடுத்துக்குறோம் அப்படின்னா ஓக்கு வந்து ஒரு வாரியர் குணம் அப்படிங்கறது ஒன்னு உண்டு.

01:58

Speaker A

என்ன எதுன்னு கேட்காம எந்த எக்ஸ்பெக்டேஷனுமே இல்லாம ஹெல்ப் பண்ணக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது ஓக்கு இருக்கும்.

02:06

Speaker A

எப்படி இருந்தாலும் அதை முடிச்சிருவாங்க அப்படிங்கறது ஒன்னு ஒரு ஓக்கு அந்த கேரக்டர் உண்டு.

02:10

Speaker A

இப்ப ஏ எடுத்துக்குறோம் அப்படின்னு வச்சுக்கோங்களேன்.

02:13

Speaker A

ஏ கிட்ட வந்து ஒரு டிசிப்ளின் அப்படிங்கிற ஒரு விஷயத்தை வந்து ஏ ஃபாலோ பண்ணும்.

02:17

Speaker A

ஒரு ரெஸ்பான்சிபிலிட்டினு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாங்க ஏ அப்படின்னா முடிக்காம விடமாட்டாங்க.

02:22

Speaker A

அப்படிங்கறதுனால அந்த ஏவ வந்து கொஞ்சம் ஃபர்ஸ்ட் ஆபீசர் லெவல் அப்படிங்கற மாதிரி வச்சாங்க.

02:26

Speaker A

நெக்ஸ்ட் பார்க்கிறப்போ பி.

02:27

Speaker A

பிக்கு ஒரு குணாதிசயம் என்னன்னா கிரியேட்டிவிட்டி அதிகம்.

02:31

Speaker A

சுயநலமும் அதிகம்.

02:32

Speaker A

ஃபர்ஸ்ட் தனக்கு என்ன அப்படிங்கிற ஒரு விஷயத்தை இந்த பி பார்க்கும்.

02:35

Speaker A

இந்த ஏ பி தான் வந்து உள்ளதுலயே வந்து ஸ்மார்ட்டான ஒரு பிளட் குரூப் அப்படின்னு சொல்லலாம்.

02:40

Speaker A

ஏன் அப்படின்னா இவங்க பயங்கரமான ஒரு ஸ்ட்ராட்டஜிஸ்ட்.

02:41

Speaker A

செம்மையா பிளான் போடக்கூடியவங்க.

02:42

Speaker A

ஈஸியா போரும் இவங்களுக்கு அடிச்சிரும்.

02:43

Speaker A

அந்த ஏ உடைய கேரக்டரும் பி உடைய கேரக்டரும் சேர்ந்ததுதான் இந்த ஏ பி அப்படிங்கறது.

02:47

Speaker A

ஏ பி எல்லாம் எப்படி இருந்தாங்கன்னா ரொம்ப இந்த ஹை லெவல் இந்த கிட்டத்தட்ட நம்ம சகுனி ரேஞ்சுக்கே சொல்லலாம்.

02:51

Speaker A

அந்த அளவுக்கு பிளான் போடக்கூடியவங்க.

02:54

Speaker A

பாசிட்டிவ் அண்ட் நெகட்டிவ் ரெண்டு விஷயத்துக்குமே வந்து இந்த ஏ பி அப்படிங்கறவங்க யூஸ் பண்ணாங்க.

02:58

Speaker A

அந்த டைம்ல எல்லாம் வந்து ஃபர்ஸ்ட் ஜாப்பனீஸ் தான் கண்டுபிடிச்சாங்க அப்படின்னு எல்லாம் சொன்னது உண்டு.

03:05

Speaker A

ஆனா கண்டுபிடிச்சது யாருன்னா நம்மளுடைய சித்தர்கள்.

03:06

Speaker A

போகர் வந்து நிறைய உலகம் சுத்துனார் ஜப்பான் போனார் சைனா போனார் இப்படி எல்லாம் போனப்போ அவருடைய ஓலைச்சுவடிகளில் இருந்த ஒரு விஷயம் தான் இது.

03:15

Speaker A

ரத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் வாதம் பித்தம் இதெல்லாம் சேர்ந்து வச்சு இந்த இந்த ரத்த அமைப்புல இருக்கிறவங்க இப்படித்தான் இருப்பாங்க.

03:20

Speaker A

அப்படின்ன உடனே அந்த டைம்ல வாருக்கு சூஸ் பண்ணாங்க இல்லையா?

03:22

Speaker A

வாருக்கு சூஸ் பண்ணப்போ இந்த கேட்டகிரி பேசிஸ்ல தான் சூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க.

03:25

Speaker A

இந்த ராசி எல்லாம் அமைப்பையும் தாண்டி ஒரு பிளட் குரூப்ப வச்சே ஒரு மனிதருடைய கேரக்டர் இதுதான் ரொம்ப ஈஸியா வந்து நம்மளால கண்டுபிடிக்க முடியும்.

03:30

Speaker B

இப்ப அதே மாதிரி இப்ப ஒவ்வொரு பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் இதுதான் அப்படிதான் இருக்க போகுது அப்படின்னு சொல்லிட்டிங்க.

03:36

Speaker B

இப்ப இந்த ராசில ஒவ்வொரு ராசிக்கும் அதுல இருக்கிற பிளட் குரூப்போட கேரக்டர்ஸ் எப்படி இருக்கும்?

03:44

Speaker B

இந்த ராசில இருக்க பிளட் குரூப்போட வேற எந்த ராசி ராசில இருக்க பிளட் குரூப் வந்து சேர்ந்துச்சுன்னா அவங்களுக்கு நல்லா இருக்கும் வாழ்க்கை.

03:50

Speaker B

அந்த திருமணம் வந்து நடக்குறதுக்கு எந்தெந்த ராசிக்கு எந்தெந்த பிளட் குரூப்புக்கு நடக்குறதுக்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லுங்க.

03:57

Speaker A

இந்த கும்ப ராசில இருக்கிற பிளட் குரூப் அவங்களோட குணாதிசயம் என்ன அப்படிங்கறத சொல்லுங்க.

04:00

Speaker A

இப்ப கும்பத்துல வந்து ஓ இருக்காங்க அப்படின்னா சோசியல் வைஸ் பழகுறதுல வந்து இவங்க பெஸ்ட்.

04:05

Speaker A

இவங்களுக்கு டியூவல் ஃபேசஸ் இருக்கும்.

04:07

Speaker A

வீட்ல வேற மாதிரி இருப்பாங்க வெளிய வேற மாதிரி இருப்பாங்க.

04:10

Speaker A

கொஞ்சம் பார்ஷியாலிட்டி பார்த்து பழகக்கூடியவங்களாவும் இவங்க இருப்பாங்க.

04:12

Speaker A

கிட்டத்தட்ட இவங்க வந்து சோசியல் அனிமல் அப்படின்னே சொல்லலாம்.

04:16

Speaker A

ஓல இருக்கிற கும்பத்தை.

04:18

Speaker A

ஏன்னா அவங்களுக்கு அந்த அட்மாஸ்பியர் ரொம்ப பிடிக்கும்.

04:23

Speaker A

மத்தவங்களை பார்க்கிறது அப்சர்வ் பண்றது எல்லாம் ரொம்ப பிடிக்கும்.

04:25

Speaker A

திரும்ப இவங்களுடைய வீட்டுக்கு வரப்போ ஒரு விரக்தி நிலைக்கு போறாங்க அப்படின்னா அது ஓ போகும்.

04:30

Speaker A

கும்பத்துல இருக்கக்கூடிய ஓ அந்த மாதிரி போவாங்க.

04:33

Speaker A

இப்ப ஏல இருக்கிறாங்க அப்படின்னா.

04:36

Speaker A

ஏ வந்து மனிதாபிமான மனிதாபிமானம் ஜாஸ்தியாவே இருக்கும் அப்படின்னே சொல்லலாம்.

04:40

Speaker A

கும்பத்துல இருக்கவங்களுக்கு.

04:42

Speaker A

எல்லாத்தையுமே ஒரு மனிதாபிமானமாதான் பார்ப்பாங்க.

04:45

Speaker A

அதுல ஒரு லாஜிக்கும் இருக்கும்.

04:47

Speaker A

அந்த லாஜிக் எப்படி இருக்கும்னா இந்த குருவிக்கும் இடம் இருக்கு இந்த நாய்க்கும் இடம் இருக்கு மனுஷனுக்கும் இடம் இருக்கு அப்படின்னு அந்த லாஜிக் எல்லாம் மைண்ட் யோசிச்சிட்டு இருக்கும்.

04:53

Speaker A

கிட்டத்தட்ட அனிமல்ஸ் பிடிக்கிறது.

04:56

Speaker A

வச்சு வளர்க்குறாங்க இல்லங்கிறது இல்லை.

04:58

Speaker A

ஆனா இவங்க வந்து அந்த ஈக்குவல் இம்பார்ட்டன்ஸ் கொடுக்கிறவங்களா இருப்பாங்க.

05:01

Speaker A

ஆனா அந்த ஓ இருக்காங்கல்ல.

05:02

Speaker A

அவங்களுக்கு அனிமல்ஸ் பிடிக்காது.

05:04

Speaker A

ஏல இருக்கவங்களுக்கு அனிமல் பிடிக்கும்.

05:06

Speaker A

அந்த லாஜிக்கல் திங்கிங் அப்படிங்கிற ஒரு விஷயம் அவங்களுக்கு பிடிக்கும்.

05:10

Speaker A

ஏன்னா அந்த ஹியூமானிட்டி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும் அப்படிங்கறதுதான்.

05:12

Speaker A

இதே இது பி இருக்கிறாங்க அப்படின்னா.

05:14

Speaker A

கும்பத்துல.

05:16

Speaker A

இவங்க வந்து வேலையை மட்டுமே பார்த்துட்டு இருக்கிறவங்க.

05:21

Speaker A

வேலை வேலை வேலை அந்த வேலையில என்ன சரி பண்ணனும்?

05:24

Speaker A

அந்த வேலையில என்ன கிளியர் பண்ணனும்?

05:26

Speaker A

வேலையில அவங்க அவங்களுடைய வொர்க் ஸ்பேஸே பார்த்தா அவ்வளவு அழகா வச்சிருப்பாங்க.

05:31

Speaker A

மைண்ட் அந்த கிரியேட்டிவிட்டி ஃபுல்லாவே அந்த தொழிலுக்கு கொடுக்கிறதா இருக்கும்.

05:34

Speaker A

இதே இது வீடு.

05:36

Speaker A

ஒரு இப்ப வீட்ல இருக்கிறாங்க அப்படின்னா அந்த வீட்ல அவ்வளவு கலைநயமான விஷயங்கள் எல்லாமே வீட்ல இருக்கும்.

05:41

Speaker A

ஒவ்வொரு பொருளும் அவங்க செஞ்சதாதான் இருக்கும்.

05:44

Speaker A

இன்னும் சொல்லப்போனா அவங்க ஸ்டிச் பண்ணி போடுற டிரஸ் கூட அவங்க ஸ்டிச் பண்ணி போடுறதா தான் இருக்கும்.

05:48

Speaker A

அந்த அளவுக்கு வந்து அவங்க அந்த கிரியேட்டிவிட்டி வந்து வெளிப்படைச்சு செய்ற மாதிரி.

05:54

Speaker A

இவங்க சமைக்கிறது எல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்.

05:57

Speaker A

ஒரு மேலாகட்டும் ஃபீமேலாகட்டும்.

06:00

Speaker A

ஒரு பில இருக்காங்கன்னா.

06:03

Speaker A

சமையல் யூனிக் டேஸ்டா இருக்கும்.

06:05

Speaker A

வேற எந்த டேஸ்ட்டோடையும் கம்பேர் பண்ணி முடியாத அளவுக்கு அந்த கிரியேட்டிவிட்டி சமையல்ல அவங்க எல்லாம் வைப்பாங்க அப்படிங்கறது.

06:12

Speaker A

இதே இது ஏ பி இருக்கிறாங்க அப்படின்னா.

06:15

Speaker A

இவங்க ஆக்சுவலா ஜீனியஸ் என்ன மாதிரி ஜீனியஸ்னா.

06:18

Speaker A

இந்த ஃபியூச்சர் ஜீனியஸ்னு ஒன்னு இருக்கு இல்லையா?

06:22

Speaker A

உன்னை எல்லாம் எப்படா யார்டா இந்த மாதிரி யோசிக்க சொல்லி கொடுத்தாங்க அப்படின்னு ஒன்னு இருக்குல்ல.

06:25

Speaker A

அந்த மாதிரி கேட்டகிரி தான் இந்த இதுல இருக்க ஏ பி.

06:27

Speaker A

அட்வான்ஸ்டா.

06:29

Speaker A

பயங்கர அட்வான்ஸ்டா கற்பனை ஜாஸ்தியா இருக்கும்.

06:32

Speaker A

அந்த கற்பனையை எப்படி கரெக்ட் ஆக்குறது?

06:35

Speaker A

இந்த டெக்னாலஜி இந்த ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் சம்பந்தப்பட்ட விஷயம் எல்லாம் இவங்களுக்கு பயங்கரமா கனெக்ட் ஆகும்.

06:41

Speaker A

இது கரெக்டாவும் இருக்கும்.

06:43

Speaker A

இப்ப வந்து அட்வான்ஸ்டா இப்ப வந்து இந்த வண்டி எல்லாம் கண்டுபிடிப்பாங்க இல்லையா இனிமேல் 10 வருஷம் கழிச்சு 15 வருஷம் கழிச்சு இப்படித்தான் வரும்.

06:51

Speaker A

இதெல்லாம் இவங்க ஆல்ரெடி அழகா பிளான் போட்டு வைப்பாங்க.

06:53

Speaker A

அந்த அளவுக்கு அட்வான்ஸ் ஜீனியஸ் தான்.

06:55

Speaker A

இந்த பழைய விஷயத்துக்கு போய் யோசிக்கிறது எல்லாம் கிடையாது.

06:57

Speaker A

ஃபார்வர்ட் திங்கிங் எல்லாமே ஃபார்வர்டா போறது.

07:01

Speaker A

லைஃப் ஸ்டைலே வந்து அவங்க அப்படித்தான் சூஸ் பண்ணுவாங்க.

07:04

Speaker A

பழைய பொருட்கள் வீட்ல வச்சுக்கிறது கூட அவங்களுக்கு பிடிக்காது அது இருந்தா கூட இவங்களுடைய எனர்ஜி டிஸ்டர்ப் பண்ணும் அப்படிங்கறதுதான்.

07:10

Speaker A

இன்னும் ஒரு பழைய பொருள் இருக்குன்னா அது இன்னோவேட்டிவா எப்படி கொஞ்சம் அட்வான்ஸ்டா இப்ப இருக்க மாதிரி ஃபியூச்சரிஸ்டிக்கா காட்டணுமோ.

07:15

Speaker A

அந்த விஷயத்தை வந்து அவங்க ஃபோக்கஸ் பண்ணுவாங்க அப்படிங்கறதுதான்.

07:18

Speaker A

இவங்களுக்கு வந்து ஏ பியும் பியும் வந்து லைஃப் நல்லா இருக்கும்.

07:20

Speaker B

ஏ பி அண்ட் பி.

07:21

Speaker A

ஏ பி அண்ட் பி.

07:22

Speaker A

ஏ பி அண்ட் பி வந்து லைஃப் நல்லா இருக்கும்.

07:23

Speaker A

ஏன்னா இவங்களுக்கு வந்து இவங்கள வாழ்க்கையில யாராவது வந்து முன்னேத்துனா இவங்களுக்கு கரெக்டா செட் ஆகும்.

07:27

Speaker A

ஏன்னா பெரும்பாலும் கும்பத்துல இருக்கவங்களுக்கு ஆப்டர் மேரேஜ் தான் லைஃப் உடைய குரோத் அப்படிங்கறது ஒன்னு இருக்கு.

07:34

Speaker A

அது மேல் அண்ட் ஃபீமேல் ரெண்டு பேத்துக்குமே செட் ஆகும்.

07:36

Speaker A

ஒரு சிலருக்கு வந்து நாங்க அம்மா அப்பா கிட்ட நல்லபடியா இருந்துட்டு வந்துட்டோம் அப்படிங்கறப்போ இந்த ஏ பி இந்த ஏ பியும் பியும் வந்துட்டாங்கன்னா லைஃப் கொஞ்சம் செட் ஆயிடும்.

07:44

Speaker A

வேற யாரு வந்தாலும் கொஞ்சம் கஷ்டம்.

07:47

Speaker A

இவங்களுக்கு டாமினேட் பண்ணி உட்கார வைக்கிற மாதிரி பிரச்சனைகள் சந்திக்கிற மாதிரி இவங்களுக்கு சிச்சுவேஷன் ஆயிடும்.

07:52

Speaker A

இப்ப பி வராங்க அப்படின்னா.

07:55

Speaker A

இவங்களுக்கு அந்த கிரியேட்டிவிட்டிங்கிற ஒரு விஷயம் பிடிக்கும்.

07:56

Speaker A

அந்த கிரியேட்டிவிட்டி எப்படி வச்சுக்குவாங்கன்னா இவங்களே சுத்தி சுத்தி வர மாதிரி வச்சுக்குவாங்க.

08:01

Speaker A

இவங்களுக்காகவே எல்லாம் பண்ற மாதிரி ஃபேமிலி ஓரியன்டடா இருக்கிற மாதிரி பி கும்பத்து கிட்ட வரப்போ அப்படி ஆயிடுவாங்க.

08:06

Speaker A

தன் குடும்பம் நாம அந்த சந்தோஷம் எல்லாமே இந்த ரொமான்டிக்கா கொண்டு போகக்கூடிய விஷயத்தை வந்து அங்க பி கரெக்டா பார்த்துக்கும்.

08:11

Speaker A

கும்பத்து கிட்ட வரப்போ.

08:13

Speaker A

இவங்களுக்கு வந்து பிசினஸ் பார்ட்னர்னு பார்க்கிறப்போ ஏ பி செட் ஆகும்.

08:18

Speaker B

வைஃப் வரப்போ பி செட் ஆகும்.

08:20

Speaker A

இது.

08:21

Speaker A

இது ஒரு லைஃப் பார்ட்னர் கூட சேர்ந்து பிசினஸ் பண்ண போறாங்கன்னா அது ஏ பி செய்யும் பி செய்யாது.

08:27

Speaker A

ஏ பி செய்யும்.

08:28

Speaker A

அப்போ இவங்க ரெண்டு பேரும் சேர்ந்த ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு தொழில் அமைக்கிறது டெவலப் பண்றது குரோத் நல்லா இருக்கும்.

08:33

Speaker A

ஒரு ஏ பி அமைப்புல இருக்கிறவங்க இவங்களுக்கு லைஃப் பார்ட்னரா வராங்கன்னா லக் ஆக்டிவேட் ஆயிடும்.

08:38

Speaker A

பி வருதுன்னா ஃபீல் குட்டா இருக்கும்.

08:40

Speaker A

ஏ பி வருதுன்னா ஆக்டிவேட் ஆகும்.

08:42

Speaker A

எல்லாமே வந்த உடனே ஒரு அதிர்ஷ்டம் புதுசு புதுசா வரக்கூடிய ஒரு அமைப்பு.

08:45

Speaker A

எல்லாமே புதுசா மாறறதுங்கிறது ஏ பி வந்தா இவங்களுக்கு இருக்கும்.

08:48

Speaker A

இவங்களுக்கு வரக்கூடிய லைஃப் பார்ட்னருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட ப்ராப்ளம் இருக்கும்.

08:53

Speaker A

இந்த நரம்பு சம்பந்தப்பட்டது எங்கெல்லாம் டச் ஆகும்னா சம்டைம்ஸ் வார்த்தைகள் பிரண்டு பேசுறவங்களா இருப்பாங்க.

08:59

Speaker A

நரம்பு தளர்ச்சி சம்பந்தப்பட்டது இருப்பாங்க.

09:01

Speaker A

இந்த வெரிகோஸ் வீன்ஸ் இதெல்லாம் வந்து இவங்களோட லைஃப் பார்ட்னருக்கு எல்லாம் வரும்.

09:07

Speaker A

நரம்பு சுருண்டு போறது இந்த நெர்வஸ் டென்ஷன்ஸ் அப்படிங்கறது இவங்க கூட இருக்கிறப்போ அவங்களுக்கு வரும்.

09:12

Speaker A

ஏன்னா இவங்க வந்து ஒரு கைண்ட் ஆஃப் ஒரு பிரஷர் அந்த மாதிரி கொடுப்பாங்க.

09:15

Speaker A

லைஃப் பார்ட்னருக்கு.

09:16

Speaker B

ரொம்ப போய் பாதிக்கிற அளவுக்கு அவங்க பிரச்சனை கொடுப்பாங்க.

09:18

Speaker A

நரம்பு பாதிக்கிற அளவுக்கு ஏன்னா கும்பத்து கிட்ட வந்து செஞ்சுட்டீங்களா இதை முடிச்சிட்டீங்களா நீ எனக்கு தான் அப்படிங்கிற ஒரு புல் இருந்துகிட்டே இருக்கும்.

09:27

Speaker A

போற வரைக்கும் அடிச்சிடுவாங்க அதுக்கப்புறம் புல் பேக் பண்றப்ப.

09:31

Speaker A

லைஃப் பார்ட்னருக்கு எப்படி இருக்கும்னா இவங்களுக்கு போய் செய்யணும் செய்யணும் அவங்க நம்மள மிஸ் பண்ணுவாங்க அப்படிங்கறப்ப நெர்வஸ் டென்ஷனே இவங்களுக்கு வந்துரும்.

09:38

Speaker A

நரம்பு சம்பந்தப்பட்ட நரம்பே சுருண்டுரும்.

09:41

Speaker A

அந்த அளவுக்கு வந்து உள்ளுக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா கொஞ்சம் கொஞ்சமா அந்த விஷயம் வந்து இவங்களுக்கு நடந்துட்டு இருக்கும்.

09:47

Speaker A

அப்போ ஹெல்த்ங்கிறது டோட்டல் நெர்வஸ் சிஸ்டம் வந்து இவங்க லைஃப் பார்ட்னர் வந்து பார்த்துக்கணும்.

09:50

Speaker B

இவங்களுக்கு சுத்தமா செட்டே ஆகாத பிளட் குரூப்னா.

09:53

Speaker A

ஏ.

09:54

Speaker A

ஏ வந்து இவங்களுக்கு செட்டே ஆகாது.

09:56

Speaker A

ஏன்னா.

09:58

Speaker A

இந்த கும்பத்துல இருக்க ஏ லாஜிக் வேற.

10:02

Speaker A

தனிப்பட்ட முறையில இருக்கிறவங்க மத்தவங்களோட லாஜிக்ங்கிறது வேற.

10:06

Speaker A

ஏன்னா மத்தவங்க எப்படின்னா ஒரு கடமையாவே வாழ்க்கையை பார்த்துட்டு இருக்கிறப்போ.

10:11

Speaker A

சலிப்பு தட்டிரும்.

10:13

Speaker A

கும்பத்துல இருக்கவங்களுக்கு வந்து போர் அடிச்சு போயிடும்.

10:16

Speaker A

ஏன்னா இவங்களுக்கு வந்து எக்ஸ்ப்ளோர் பண்ணி சந்தோஷமா இருக்கணும் ஹாப்பியா இருக்கணும் அப்டேட்டடா இருக்கணும்.

10:21

Speaker A

ஷேர் பண்ணனும் அப்படிங்கிற மாதிரிலாம் இருக்கும்.

10:23

Speaker A

இவங்க வந்து இந்த ஜாப் போயிட்டு வந்துட்டு வந்தாங்க சாப்பிட்டாங்க படுத்தாங்க தூங்குனாங்க எல்லாம் கரெக்டா போயிட்டே இருக்குங்கிறப்போ.

10:29

Speaker A

இவங்களால அதை வந்து அடச்சா எனக்கு இது வேண்டவே வேண்டாம்னு ஒரு சண்டை வரும் தெரியுமா?

10:35

Speaker A

ஆனா அந்த லைஃப் பார்ட்னர் நான் தான் என் கடமையை கரெக்டா பண்ணிட்டு இருக்கேனே அப்படிம்பாங்க.

10:39

Speaker A

இதை யாரு உன்கிட்ட கேட்டா?

10:41

Speaker A

லைஃப்ல வந்து ஒரு லைவ்லினஸ்ஸே இல்லை.

10:44

Speaker A

ஏ வந்தா லைவ்லினஸ் இருக்காது கும்பத்துக்கு.

10:47

Speaker A

கும்பத்துல அவங்க ஏவா இருக்கலாம் ஆனா வரவங்க ஏவா இருக்கக்கூடாது.

10:49

Speaker B

வரவங்க ஏவா இருக்கக்கூடாது.

10:50

Speaker B

அந்த ஓன்னு ஒரு கேட்டகிரி இருக்காங்கல்ல அவங்க.

10:53

Speaker A

இந்த ஓ சண்டை போடும்.

10:55

Speaker A

இந்த ஓவால வந்து கும்பத்து கிட்ட ஃபர்ஸ்ட் இருக்க முடியாது.

10:59

Speaker A

ஏன்னா.

11:01

Speaker A

இந்த கும்பம் வந்து கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணக்கூடிய டைப்.

11:04

Speaker A

கண்ட்ரோல்னா எப்படின்னா அன்பால கண்ட்ரோல் பண்றது.

11:07

Speaker A

சில நாம்ஸ் வச்சிருப்பாங்க கும்பம்.

11:09

Speaker A

இந்த நாம்ஸ்குள்ள ஓ வராது.

11:11

Speaker A

வந்தாலும் இவங்க ஒரு இடத்துல இருப்பாங்க அவங்க ஒரு இடத்துல இருப்பாங்க.

11:14

Speaker A

விலகி விலகி இருக்கக்கூடியதா.

11:16

Speaker A

நீ நல்லா இருக்கியா நான் நல்லா இருக்கேன் என்னால உனக்கு ஒரு பிரச்சனை இல்லை உன்னால எனக்கு ஒரு பிரச்சனை இல்லை.

11:20

Speaker A

உன் வேலையை நீ பார்த்துக்க என் வேலையை நீ பார்த்துக்க ஒருத்தர் ஒருத்தர் ஒருத்தரோட தொழில்ல சம்பந்தமே ஆக மாட்டாங்க.

11:25

Speaker A

ஒருத்தர் ஒருத்தரோட தொழிலும் ஒருத்தர் ஒருத்தருக்கு புரியாது.

11:29

Speaker A

பெனிஃபிட்ஸ் அப்படிங்கறது ஒன்னும் கிடையாது.

11:30

Speaker A

தே கேன் எக்ஸிஸ்ட் தே கேன் சர்வைவ் அப்படிங்கறதுதான்.

11:32

Speaker B

இப்ப கும்ப ராசி அப்படின்னு நம்ம எடுத்துட்டோம்னா அதுக்குன்னு ஒரு பொதுவான ஒரு யூனிக்கான ஒரு கேரக்டர்ஸ் இருக்குல்ல.

11:39

Speaker A

கும்பத்துக்கு வந்து கொஞ்சம் இன்டெலெக்சுவல் சென்ஸ் கொஞ்சம் அதிகம்.

11:43

Speaker A

எல்லாமே கொஞ்சம் விவரமாவே யோசிப்பாங்கன்னு தான் சொல்ல முடியும்.

11:46

Speaker A

அந்த அளவுக்கு வெளிய ஷேர் பண்றாங்கன்னு ஒன்னு இருக்கு.

11:49

Speaker A

ஃப்ரீடமாவும் இருக்கணும்னு நினைப்பாங்க.

11:51

Speaker A

ஆனா அந்த ஃப்ரீடமா வாயை திறந்து கேட்கிறதுக்கு எல்லாம் தெரியாது.

11:54

Speaker A

கொஞ்சம் ஃப்ரீயா அந்த அந்த இன்டெலிஜென்ஸ வந்து இப்ப ஒரு குக் பண்றாங்கன்னா.

11:59

Speaker A

அவங்களுக்கு பிடிச்ச மாதிரி சில விஷயங்கள் செய்றாங்கன்னா அந்த அப்ரிசியேஷன்லாம் அவங்க எதிர்பார்க்க மாட்டாங்க.

12:04

Speaker A

ஆனா நீ இவ்வளவுதான் பண்ணனும் அவ்வளவுதான் பண்ணனும்னு அப்செட் ஆகுறது.

12:07

Speaker A

நான் ரொம்ப சின்ன விஷயமா சொல்றேன்.

12:08

Speaker A

இந்த ஃப்ரீடம் கூட அவங்க எதிர்பார்ப்பாங்க அப்படிங்கறதுதான்.

12:11

Speaker A

இந்த கும்பத்துக்கு வந்து ஒரு இயல்பே என்ன அப்படின்னா.

12:16

Speaker A

தன்னை யாரும் கவனிச்சுக்கிட்டே இருக்காங்க.

12:19

Speaker A

தன்னை யாரும் கண்ட்ரோல் பண்ணிட்டே இருக்காங்க.

12:20

Speaker A

இந்த சொசைட்டியை பார்ப்பாங்க தெரியுமா?

12:22

Speaker A

இந்த சொசைட்டி என்ன நாம்ஸோட இருக்காங்கன்னு இவங்களே கட்டு போட்டுக்கிறது.

12:26

Speaker A

ஆனா வெளிய வரணும்னு துடிக்கிறது.

12:27

Speaker A

அந்த ஃப்ரீடம் ஃப்ரீடம் ஃப்ரீடம் வேணும் அப்படின்னு சொல்லிட்டே இருக்கக்கூடிய ஒரு அமைப்பு வந்து.

12:32

Speaker A

கும்பத்துல இருக்கவங்களுக்கு இருக்கும்.

12:35

Speaker B

அதே மாதிரி கும்ப ராசில இருக்கிறவங்க அவங்களோட பிளட் குரூப் என்ன?

12:39

Speaker B

அவங்க அந்த பிளட் குரூப்புக்கான கேரக்டர்ஸ் என்ன?

12:41

Speaker B

அவங்களுக்கு யாரு செட் ஆவாங்க எல்லா விஷயத்தையும் பார்த்திருப்பாங்க.

12:45

Speaker B

அதுக்கு தகுந்த மாதிரி அவங்களோட வாழ்க்கையை வந்து மாத்திப்பாங்கன்னு சொல்லி நம்பலாம்.

12:48

Speaker B

அதே மாதிரி அவங்களோட பிளட் குரூப் எது அப்படிங்கறதையும் கமெண்ட்ஸ்ல சொல்லுவாங்க.

12:52

Speaker B

நன்றி.

Topics: கும்பம் பிளட் குரூப் ஜோதிடம் ஆன்மீகம் ராசி லக்னம் நட்சத்திரம் மனித குணாதிசயங்கள் திருமணம் வாழ்க்கை

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11351)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11351)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/kumbam-unexpected-yoga-benefits/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
