**கும்ப ராசி 2026 - சனிப்பெயர்ச்சி பலன்கள் | Kumbam Rasi 2026 Sani Peyarchi | Jeevitha Sureshkumar — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/kumbam-rasi-2026-sani-peyarchi-benefits/

கும்ப ராசி 2026 சனிப்பெயர்ச்சி பலன்கள், அஸ்ட்ராலஜி வகுப்புகள் மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின் விளக்கம்.

## Key Takeaways

- சனிப்பெயர்ச்சி என்பது அரசாங்க மற்றும் சமூக கட்டமைப்புக்கான முக்கிய மாற்றம்.
- அஸ்ட்ராலஜி ஒரு விரிவான துறை, அதில் பல்வேறு சிஸ்டம்கள் மற்றும் கணிப்புகள் உள்ளன.
- கும்ப ராசிக்கான 2026 சனிப்பெயர்ச்சி 50-50 நிலைமையில் பலன்களை தரும்.
- அஸ்ட்ராலஜி வகுப்புகள் மூன்று மாத காலம் நடைபெறும் மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கின்றன.
- சனிப்பெயர்ச்சி காலத்தில் தனிமனிதர்கள் சற்று ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.

## What the video covers

- சனிப்பெயர்ச்சி மார்ச் 5-6 ஆம் தேதி துவங்கி 2026 வரை தொடரும்.
- ஜீவிதா சுரேஷ்குமார் அஸ்ட்ராலஜி மற்றும் கணித பஞ்சாங்கத்தை விரிவாக விளக்குகிறார்.
- அஸ்ட்ராலஜி வகுப்புகள் மூன்று மாதங்கள் நடைபெறும், புதிய பேட்ச் மார்ச் 20 முதல் தொடங்கும்.
- வகுப்புகளில் பல்வேறு அஸ்ட்ராலஜி சிஸ்டம்கள் மற்றும் கணிப்பு முறைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
- வாக்கிய பஞ்சாங்கம் மற்றும் திருக்கணித பஞ்சாங்கத்தின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு பற்றி விவாதிக்கப்படுகிறது.
- சனிப்பெயர்ச்சி தனிமனிதர்களுக்கு அல்ல, அரசாங்க மற்றும் கோயிலுக்கான கட்டமைப்பாக உருவாக்கப்பட்டது.
- கும்ப ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் சனியின் வாக்கு ஸ்தானத்தில் இருப்பது பற்றிய விளக்கம்.
- சனி மற்றும் குரு கிரகங்களின் இயக்கம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி பேசப்படுகிறது.
- வகுப்புகளுக்கு 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன, ஆனால் தரமான மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.
- சனிப்பெயர்ச்சி காலத்தில் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டிய அவசியம் மற்றும் அதற்கான ஆலோசனைகள்.

Answers

## Questions about this video

சனிப்பெயர்ச்சி எப்போது துவங்கியது?

வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி மார்ச் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் துவங்கியுள்ளது. இது ஒரு ஆர்வமான கணிப்புத் துறையாகும்.

அஸ்ட்ராலஜி வகுப்புகள் எப்போது தொடங்குகின்றன?

அஸ்ட்ராலஜி வகுப்புகளின் இரண்டாம் பேட்ச் மார்ச் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இது மூன்று மாத கால அடிப்படைப் பாடத்திட்டமாகும், அதன் பிறகு உயர்நிலை வகுப்புகள் தொடரும்.

நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை எந்தெந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறது?

நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரகப் பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டுப் பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கிறது. கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரையில் தொடர்புக்கு 8807666117 மற்றும் 8807666118.

## Full Transcript — Download SRT & Markdown

00:05

Speaker A

நலம் தரும் நல்லார் சித்த மருத்துவமனை, இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம், சிறுநீரக பிரச்சனை, தண்டுவடம் மற்றும் மூட்டு பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த மருத்துவமனை.

00:24

Speaker A

கிருஷ்ணகிரி, சென்னை மற்றும் மதுரை தொடர்புக்கு 8807666117 மற்றும் 8807666118.

00:35

Speaker A

ஃபோர்த் எஸ்டேட் தமிழ் நேயர்களுக்கு அருள்மொழி வருமனின் அன்பார்ந்த வணக்கங்கள், இது உங்கள் ஃபோர்த் எஸ்டேட் தமிழ் வழங்கும் சிறப்பு நேர்காணல் பகுதி.

00:41

Speaker A

தொடர்ச்சியா வந்து பார்த்தீங்கன்னா எல்லாருக்குமே தெரியும், எல்லா விதமான துறைகளிலும் ஒரு ஆர்வம் இருப்பதை போல இந்த அஸ்ட்ராலஜி இந்த கணிதம் துறையும் வந்து பார்த்தீங்கன்னா கணிப்பு துறையும் ரொம்ப ஒரு ஆர்வமான ஒரு துறைதான் எல்லாருக்குமே பொதுவாக வெகுஜன மக்களுக்குமே கூட.

00:56

Speaker A

சோ இந்த நேரம் அப்படிங்கறது வந்து இந்த வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில சனிப்பெயர்ச்சி அப்படிங்கறது துவங்கி இருக்கிறது.

01:00

Speaker A

மார்ச் 5, 6-ல் துவங்கி இருக்கிறது அப்படிங்கறதை நம்ம பார்க்கிறோம்.

01:01

Speaker A

அதைப்பற்றிய விரிவான ஒரு அலசல்களை நம்மோடு பேசுவதற்காக இணைந்திருக்கிறார் மீண்டும் அஸ்ட்ராலஜர் கம் ரிசர்ச்சர் மரியாதைக்குரிய திருமிகு ஜீவிதா சுரேஷ்குமார் அவர்கள்.

01:10

Speaker A

வணக்கம்.

01:11

Speaker B

வணக்கம்.

01:11

Speaker A

எப்படி இருக்கீங்க மேம்?

01:12

Speaker B

நல்லா இருக்கேன்.

01:13

Speaker B

நீங்க எப்படி இருக்கீங்க?

01:13

Speaker A

நலமா இருக்கேன் மிக்க மகிழ்ச்சி உங்களை மீண்டும் சந்திக்கிறதுல.

01:15

Speaker A

நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நீங்க தொடர்ச்சியா வகுப்புகள் எடுத்துக்கிட்டு இருக்கீங்க.

01:22

Speaker A

அந்த வகுப்புகள் அப்கமிங் கிளாஸஸ் என்ன அப்படிங்கறதை டீடைல்ஸ கொஞ்சம் மக்களுக்கு சொல்லிட்டு நம்ம நிகழ்ச்சிக்குள்ள துவங்குவோம்.

01:29

Speaker B

ஆக்சுவலா வந்து ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சாச்சு.

01:31

Speaker B

பேசிக் கோர்ஸ் அஸ்ட்ராலஜி கோர்சஸ் ஃபர்ஸ்ட் பேட்ச் முடிச்சு.

01:34

Speaker B

இப்ப செகண்ட் பேட்ச் வந்து மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து தொடங்குறோம்.

01:38

Speaker B

சோ இது எப்படி நான் ஸ்டூடண்ட்ஸ் சூஸ் பண்றோம் அப்படின்னா வரவங்க வந்து நான் எடுத்த உடனே அஸ்ட்ராலஜர் ஆயிடுவேனா?

01:45

Speaker B

நான் இப்படி இதை கெயின் பண்ணிடுவேனா, நீங்க பர்டிகுலரா இந்த பேட்டர்ன் இந்த சிஸ்டம் தான் நீங்க ஃபாலோ பண்ணி சொல்லிக் கொடுப்பீங்களா?

01:50

Speaker B

அதெல்லாம் கிடையாது.

01:51

Speaker B

இது வந்து எப்படின்னா உங்களுக்கு எல்லா சிஸ்டமுமே நம்ம டிஸ்கஸ் பண்ணுவோம்.

01:55

Speaker B

மைண்ட ஓபன் மைண்டடா வச்சிட்டு நாலேட்ஜ் கெயின் பண்றதுக்கு ஃபர்ஸ்ட் வரணும்.

02:01

Speaker B

ஏன்னா அஸ்ட்ராலஜி பொறுத்தவரைக்கும்.

02:02

Speaker B

இது ஒரு கடல்.

02:03

Speaker B

சோ இது ஃபர்ஸ்ட் த்ரீ மந்த்ஸ் கோர்ஸா இருக்கும்.

02:05

Speaker B

இந்த த்ரீ மந்த்ஸ் கோர்ஸ் முடிச்சவங்களுக்கு தான் நான் அடுத்தது நெக்ஸ்ட் லெவல் ஹையர் லெவல் கோர்சஸ் வந்து அவங்கதான் கண்டினியூ பண்ண முடியும்.

02:10

Speaker B

சோ இந்த மூணு மாசம் கழிச்சு நெக்ஸ்ட் லெவல் கோர்சஸ் அப்படியே கண்டினியூ ஆயிடும்.

02:13

Speaker B

ஆல்ரெடி இருக்க ஃபர்ஸ்ட் பேட்ச் ஸ்டூடண்ட்ஸும் செகண்ட் பேட்ச் ஸ்டூடண்ட்ஸும் சேர்ந்து பண்ற மாதிரி இருக்கும்.

02:15

Speaker B

இடையில இடையில வொர்க்ஷாப்ஸும் அப்பப்ப பண்றோம்.

02:17

Speaker B

இப்பதான் நட்சத்திர கிளாஸஸ் முடிச்சோம்.

02:18

Speaker B

சோ இந்த கிளாஸஸ் போயிட்டு இருக்கப்போ இடையில மறுபடியும் ஒரு வொர்க்ஷாப் பண்ற மாதிரி இருக்கும்.

02:21

Speaker B

சோ இப்ப வர ஸ்டூடண்ட்ஸ் வந்து வொர்க்ஷாப்ஸ்க்கு வராங்க அப்படிங்கறப்போ அவங்களுக்கு இதுல அவங்களுக்கு டிஸ்கவுண்ட்ஸ்.

02:25

Speaker B

அந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் இருக்கும்.

02:27

Speaker A

பண்ணி கொடுப்பீங்க.

02:27

Speaker B

நம்ம ஸ்டூடண்ட்டா இருக்கிறப்போ.

02:28

Speaker A

ஓகே ஓகே.

02:29

Speaker B

சோ சேரணும்னு நினைக்கிறவங்க வந்து கம் வித் ஓபன் மைண்ட்.

02:33

Speaker B

ஏன்னா இதுவரைக்கும் 2000 பேத்துக்கு மேல எங்களுக்கு அப்ளிகேஷன்ஸ் வந்தாலுமே.

02:36

Speaker A

ஓகே ஓகே.

02:37

Speaker B

நான் இன்னும் ஒரு 15 பேத்துக்கு கூட இவங்கதான் வேணும்னு நான் இன்னும் ஃபில்டர் பண்ணல.

02:40

Speaker A

ரைட் ரைட்.

02:40

Speaker B

சோ அவ்வளவு ஃபில்டர் பண்ணிதான் எடுக்கிறோம்.

02:42

Speaker B

ஏன்னா குவாலிட்டி ரொம்ப முக்கியம் அப்படிங்கறதுடைய எத்தனை பேர் வராங்கங்கறது இல்லை.

02:46

Speaker B

ஸ்பெசிஃபிக்கா இருக்கணும் கொஞ்ச பேர் இருந்தாலும் நாலேட்ஜபிலா இருக்கணும்.

02:49

Speaker A

20-ல ஆரம்பிச்சு எப்போ முடியுது மேம் வகுப்புகள்?

02:51

Speaker A

மூன்று மாதம்.

02:51

Speaker B

மூன்று மாத வகுப்புகள் தான்.

02:52

Speaker B

இது மார்ச், ஏப்ரல், மே.

02:54

Speaker B

அதாவது ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கிளாஸஸ்.

02:57

Speaker B

வாரத்துல ஒரு நாள் கிளாஸஸ் வைக்கிற மாதிரி.

02:58

Speaker B

ஃபர்ஸ்ட் வந்து ஃபிரைடே, சாட்டர்டேன்னு வச்சோம் பட் நிறைய பேர் கேட்டாங்க ரெண்டு நாள் முடியாதுங்கறப்போ.

03:03

Speaker B

சரி சாட்டர்டே அதை அப்படியே ரெண்டு கிளாஸ ஒரே கிளாஸா மாத்திரலாம் அப்படிங்கற மாதிரி.

03:06

Speaker A

இந்த வகுப்புகள் தொடர்பாக நீங்க மேலதிக விவரங்களை தெரிஞ்சுக்கணும் அப்படின்னா.

03:10

Speaker A

இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய விவரங்களை அனுப்புங்க.

03:15

Speaker A

அந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து உங்களுக்கு ரிப்ளை பண்ணி உங்களை கம்யூனிகேட் பண்ணுவாங்க.

03:19

Speaker A

நன்றி.

03:20

Speaker A

மேம் இப்போ நம்ம முக்கியமான ஒரு இடத்துக்கு வந்திருக்கிறோம்.

03:22

Speaker A

சோ வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் அப்படிங்கறது குறித்து ஏற்கனவே நீங்க பலமுறை பேசி இருக்கிறீங்க.

03:27

Speaker A

நம்ம ஃபோர்த் எஸ்டேட் தமிழ்ல கூட நீங்க பேசி இருக்கிறீங்க.

03:28

Speaker A

இந்த முறை வந்திருக்கிறது என்ன சனிப்பெயர்ச்சி, என்ன மாறுபாடு இருக்கு?

03:33

Speaker A

அதுல இருந்து நம்ம துவங்கிட்டு நம்ம அடுத்த ராசிகளுக்குள்ள போகலாம்.

03:36

Speaker B

சோ வந்து மார்ச் ஆறாம் தேதி சனிப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி அப்படிங்கறதுதான்.

03:40

Speaker B

அதாவது திருநள்ளாறுல இதை வந்து ஃபாலோ பண்ணுவாங்க அப்படிங்கறது.

03:42

Speaker B

கோயில் ஆகம விதிகளை வச்சு ஃபாலோ பண்ணது பலாயிரம் வருடங்களுக்கு முன்னாடியே வந்து ரிஷிகளால இது கணிக்கப்பட்ட ஒரு விஷயம்.

03:49

Speaker B

அதுல அந்த காலத்துல வந்து ராஜாக்களுக்காகவும் கோயிலுடைய அமைப்புகளுக்காகவும் கட்டமைப்பாகவும் அதுக்காக வந்தது.

03:53

Speaker B

தனிமனிதனுக்காக ஜோதிடம் வரல அந்த நேரத்துல.

03:56

Speaker B

சோ இது வந்து கூட்டாதான் வந்தது.

03:57

Speaker B

ராஜாக்களுக்காக வந்தது.

03:59

Speaker B

அரசு எப்படி இருக்கும்ங்கறதுக்காக வந்தது.

04:01

Speaker B

சோ அதுக்கு அப்புறமா நம்ம வந்து தனிமனித தனிமனிதனுடைய ஜோதிடம் அப்படின்னு பார்க்கிறப்போ சில விஷயங்கள் புரிய வந்தது என்ன அப்படின்னா.

04:06

Speaker B

இதைத்தான் ஒரு 200 வருடங்களா போய்க்கொண்டிருக்கிற ஒரு டிபேட்டே இதுதான்.

04:10

Speaker B

அது என்னன்னா அக்யூரஸினு ஒரு விஷயம் இருக்குது.

04:11

Speaker B

நம்மளுடைய கிராவிடேஷனல் புல்னு ஒன்னு இருக்குது.

04:16

Speaker B

கிரகங்கள் வந்து அப்ப கணிச்ச மாதிரி அதே பேட்டர்ன்ல எல்லாம் மூவ் ஆகலங்கறது ஒன்னு இருக்கு.

04:20

Speaker B

லைட்டா நம்மளுடைய குளோபல் டில்ட் ஆயிடுச்சுங்கறதெல்லாம் ஒன்னு இருக்கு.

04:22

Speaker B

சோ இதெல்லாம் பார்க்கிறப்போ சரியான முறைப்படி வந்து.

04:26

Speaker B

பிளானட்ஸ் மூவ் ஆகுறது இல்லை.

04:28

Speaker B

அதனாலதான் நம்ம வந்து வக்ரம் அடையுது.

04:30

Speaker B

இப்ப கூட நம்ம ரீசன்ட்டா என்ன சொல்லி இருப்போம் குருப்பெயர்ச்சில கூட குரு வந்துட்டு.

04:34

Speaker B

முன்னாடி வந்துட்டு திரும்பி பின்னாடி போறாருன்னு ஒன்னு இருக்குது.

04:36

Speaker A

ஓகே ஓகே.

04:36

Speaker B

சோ இதெல்லாம் என்னன்னா குரு அங்கேயேதான் இருக்குது.

04:40

Speaker B

நம்ம நின்னுட்டு இருப்போம் இந்த பக்கம் ஒரு பஸ் பாஸ் ஆகி போறப்போ நம்ம மூவ் ஆகுற மாதிரி தெரியும்ங்கற ஒரு விஷயம் தான்.

04:43

Speaker B

சோ இந்த மாதிரி பிளானட்ஸ்ல சில விஷயங்கள் நடக்கிறப்போ இதெல்லாம் அக்யூரசி.

04:46

Speaker B

ஒரு நிமிஷம் மிஸ் பண்ணனா கூட எல்லாமே மாறும்.

04:49

Speaker B

லக்னம் எல்லாமே மாறிடும்.

04:51

Speaker B

சோ ஒரு சனி அப்படிங்கறப்போ ஒரு ராசியில இரண்டரை வருஷம் இருக்கும்.

04:54

Speaker B

மெதுவாதான் மூவ் ஆகும் அப்படிங்கறது.

04:56

Speaker B

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஆல்ரெடி சனி வந்துட்டார் அப்படிங்கறதுதான்.

04:58

Speaker B

இப்ப வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இப்பதான் வராரு அப்படிங்கறது அந்த காலத்துல கணிக்கப்பட்ட ஒரு விஷயம் இருக்கும்.

05:01

Speaker B

இதை வந்து நம்ம ரெஸ்பெக்ட் பண்ணிக்கலாம்.

05:04

Speaker B

சோ இது வந்து இது மரியாதையாக இதை நம்ம எடுத்துக்கிறது அப்படிங்கறதுதான்.

05:07

Speaker B

அப்ப இந்த வாக்கிய பஞ்சாங்கத்தை நம்ம எப்படி பார்க்கணும்னா.

05:11

Speaker B

குளோபல் வைஸ் எப்படி இருக்குங்கற ஒரு விஷயத்தைதான் நம்ம பார்க்கணும்.

05:13

Speaker A

உலக அளவுல.

05:15

Speaker B

அப்படிங்கறதுதான் பார்க்கணும்.

05:16

Speaker B

என்ன பொதுவான மாற்றங்கள் எப்படி பார்க்கணும்ங்கறதை தவிர்த்து.

05:19

Speaker B

தனிமனிதனுக்கு என்ன ஆகும்?

05:21

Speaker B

அப்படிங்கற விஷயத்தை வந்து நம்ம இப்ப பார்க்கிற மாதிரி பெருசா கிடையாது.

05:24

Speaker B

ஏன்னா அடுத்தது குருப்பெயர்ச்சி.

05:26

Speaker B

சோ இந்த சனி ஒரு விஷயம் பண்றப்போ குரு வந்து காப்பாத்துவார்லாம் ஒன்னு இருக்குது.

05:29

Speaker A

ஓகே ஓகே.

05:30

Speaker A

ஜூன் மாசம் குருப்பெயர்ச்சி வருதுன்னு நினைக்கிறேன்.

05:31

Speaker A

அப்படித்தானே.

05:32

Speaker B

அப்ப வந்து குரு குரு வரப்போ வந்து சனி கொஞ்சம் சைலன்ட் ஆவார் தான்.

05:35

Speaker B

குரு பார்த்தாலே கொஞ்சம் சனி சைலன்ட் ஆவார்ங்கறதுனாலதான்.

05:37

Speaker B

இதை யாரும் ரொம்ப சீரியஸா எடுத்துக்க வேண்டாம்.

05:40

Speaker B

ஆனா ஒரு சிலர் ஆல்ரெடி அவங்களுக்கு சனிப்பெயர்ச்சிங்கற ஒரு விஷயம் எல்லாம் நடந்துட்டு இருக்கறதுனால.

05:43

Speaker B

அவங்க எல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.

05:45

Speaker A

பட் இது வந்து ஒரு கூடுதல் விவரத்துக்காக நம்ம எடுத்துக்கலாம் இல்லையா?

05:47

Speaker A

அந்த மாதிரி பார்க்கலாம்.

05:48

Speaker A

அப்படிங்கறதுதான்.

05:49

Speaker A

அடுத்த கட்டமாக கும்ப ராசி சோ கும்ப ராசி நேயர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கப் போகிறது?

05:59

Speaker B

இவங்களுக்கு வந்து கும்பத்துக்குன்னு பார்க்கிறப்போ இவங்களுக்கு இரண்டாவதுல சனி அப்படிங்கற கணக்கு.

06:03

Speaker B

இரண்டாம் இடத்துல அதாவது வாக்கு ஸ்தானம் அது.

06:06

Speaker B

வாக்கு ஸ்தானம் உங்களுடைய.

06:07

Speaker A

நாக்குல சனியா?

06:07

Speaker A

அப்ப.

06:08

Speaker B

ஆமா உங்களுடைய வாக்குலையும் உங்க தனத்திலேயும் சனி வந்து உட்கார்ந்திருக்குன்னு ஒன்னு இருக்குது.

06:11

Speaker B

இது இது வந்து 50 50 மாதிரிதான்.

06:12

Speaker B

இப்ப இந்த ரெண்டு.

06:13

Speaker A

50 50-னா புரியா.

06:13

Speaker B

50 50-னா எப்படின்னா இந்த சனியை வந்து இவங்க எப்படி ப்ராப்பரா யூஸ் பண்றாங்கன்னு ஒன்னு இருக்குது.

06:17

Speaker B

இப்ப ரெண்டுல சனி இருக்கப்போ ஷார்ப்பா இருக்கும் சம்டைம்ஸ் வார்த்தைகள்.

06:20

Speaker B

இவங்க வந்து எப்படி வேணாலும் பேசலாம்னு ஒன்னு இருக்கும்.

06:24

Speaker B

இந்த சனியை வந்து கொடுக்கவும் செய்யும் கெடுக்கவும் செய்யும்னு ஒன்னு இருக்குது.

06:27

Speaker B

உங்களால வந்து இவங்க எப்படி சொல்றாங்கன்னு ஃபுல்லா நம்பலாம் முடியாது.

06:33

Speaker B

உண்மையாதான் சொல்றாங்களா?

06:35

Speaker A

இல்ல தப்பு சொல்றாங்களா?

06:36

Speaker A

ஓகே.

06:37

Speaker B

கணிக்கலாம் முடியாது.

06:38

Speaker B

ஆனா இவங்க பேசுறது பேசிட்டே போவாங்க ஆப்போசிட்ல இருக்கவங்க வந்து இவங்களுடைய வார்த்தைகளை வந்து கவனிப்பாங்க.

06:43

Speaker B

இதை சொல்லிட்டா இது நடக்கும் அப்படிங்கற மாதிரி.

06:45

Speaker B

சோ வாக்குல மிகவும் கவனம் கொஞ்சம் ஸ்லோ ப்ராசஸிங்காதான் இருக்கும்.

06:49

Speaker B

ஒரு டெசிஷன் எடுக்கிறது கூட ஒரு 24 மணி நேரம் கழிச்சோ இன்னும் சொல்லப்போனா 72 மணி நேரம் கழிச்சோ அந்த டெசிஷனை எடுக்குறாங்கன்னா கரெக்டா இருக்கும்.

06:54

Speaker A

உடனே எடுக்கக்கூடாது டெசிஷனை.

06:56

Speaker B

இவங்க டெசிஷன் வந்து கரெக்டா இருக்காது குழம்பிட்டேதான் இருப்பாங்க.

07:00

Speaker B

இவங்களே மாத்தி மாத்தி வச்சிட்டேதான் இருப்பாங்க.

07:03

Speaker B

இங்க இருக்கலாமா?

07:04

Speaker B

இல்ல.

07:05

Speaker B

இந்த இதே கரெக்டா?

07:07

Speaker B

இல்ல இல்ல இன்னொரு விஷயம் பண்ணலாமா?

07:08

Speaker B

இப்ப வந்து சிலருக்கெல்லாம் கடனே இல்லாம கூட இருக்கும்.

07:12

Speaker B

புதுசா மறுபடியும் கடன் வாங்கலாமா?

07:14

Speaker B

ஏன் நம்ம வந்து பாரமே இல்லாம இருக்கிறோம்?

07:16

Speaker B

திருப்பி ஏதோ ஒன்னு ஸ்டார்ட் பண்ணா என்ன?

07:17

Speaker A

வித்தியாசமா இருக்கு.

07:18

Speaker A

ஓகே.

07:19

Speaker B

ஆமா திருப்பி நம்ம ஒரு வெயிட்ட தூக்கி சுமந்தா என்ன?

07:21

Speaker B

அந்த மாதிரிதான் இவங்களுக்கு இருக்கும்.

07:22

Speaker B

இந்த ஃபைனான்சியல் வைஸ் இது எப்படி நான் இந்த குழந்தைகிட்ட பொம்மையை கொடுத்த மாதிரிதான்.

07:25

Speaker B

களச்சு களச்சு விளையாடுன்னு ஒன்னு இருக்குது இல்ல.

07:27

Speaker B

இது ஆல்ரெடி நம்ம எல்லாமே கரெக்ட் பண்ணிதான் கொடுத்திருப்போம்.

07:30

Speaker B

இது இப்படியே போய் நீங்க அங்க வச்சிருந்திருக்கலாம்.

07:32

Speaker B

பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்னு ஒன்னு இருக்குது இல்ல.

07:35

Speaker B

சோ திருப்பி திருப்பி இதை இங்க எடுத்துட்டு வந்து திருப்பி ஆட்டத்தை கலைச்சு போட்டு திரும்ப அடுக்கி அடுக்கி வச்சுக்கிட்டே இருக்கும் தெரியுமா?

07:40

Speaker B

ரீஸ்ட்ரக்சர் பண்ணி ரீஸ்ட்ரக்சர் பண்ணி.

07:42

Speaker B

அப்பப்ப பேங்க் பேலன்ஸ் இருக்கான்னு போய் எட்டி எட்டி பார்க்கிறது.

07:44

Speaker B

அங்கதான் இருக்கும்.

07:46

Speaker B

இருந்தாலும் மனசு என்ன பண்ணும்?

07:47

Speaker B

இது இருக்கே.

07:49

Speaker B

இது என்ன பண்ணலாம்?

07:50

Speaker B

இதுல இன்வெஸ்ட் பண்ணலாமா அதுல இன்வெஸ்ட் பண்ணலாமான்னு எதிலுமே இன்வெஸ்ட் பண்ண வேண்டாம் இந்த வருஷம்.

07:52

Speaker A

அந்த ப்ராசஸ் அந்த திங்கிங் நல்லதுதானே எதுல முதலீடு பண்ணலாம் அப்படிங்கறது.

07:55

Speaker B

திருப்பி திருப்பி அந்த ப்ராசஸ் குள்ள போயிட்டு.

07:57

Speaker B

அதைத்தான் சொன்னேனே.

07:58

Speaker B

அந்த பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் அப்படிங்கறதுதான்.

08:00

Speaker B

நீங்க என்ன பண்ணனாலும் திருப்பி அங்கேயேதான் போகப்போகுது.

08:03

Speaker B

ஃபர்ஸ்ட் என்ன டெசிஷன் எடுத்தாங்களோ.

08:06

Speaker B

அதுகிட்டயேதான் மறுபடியும் போயிடுவாங்க.

08:08

Speaker B

அதுவரைக்கும் இந்த ரொட்டேஷன்ல இருந்துகிட்டுதான் இருப்பாங்க.

08:10

Speaker B

மத்தபடி.

08:11

Speaker A

பட் தொழில், குடும்பம், பொருளாதாரம் எப்படி இருக்கும்?

08:13

Speaker B

தொழில், குடும்பம் எல்லாமே எப்படி இருக்குன்னா வாக்குலதான் இருக்கு.

08:15

Speaker B

இவங்களுடைய வார்த்தைகள்லதான் இருக்கு.

08:16

Speaker A

இல்ல அது வந்து நெகட்டிவா இருக்கா பாசிட்டிவா இருக்கா?

08:17

Speaker B

அதான் 50 50.

08:18

Speaker A

ஓகே ஓகே.

08:19

Speaker B

இந்த சனி வந்து ரெண்டுல வாக்கு வாக்குல போய் உட்காரறப்ப.

08:24

Speaker B

பொய்யும் கலந்தே வரும்.

08:28

Speaker B

சோ உங்களால கண்ட்ரோல் பண்ண முடியாது அப்படிங்கறதுதான் அது.

08:30

Speaker B

அந்த கற்பனைகள் வேண்டாம்.

08:32

Speaker B

லிசனிங் பவர் கொஞ்சம் கம்மி ஆயிடும்.

08:34

Speaker B

இவங்க பேசுறதுலயே சம்டைம்ஸ் ஒரு குழப்பங்கள் இருக்கும்.

08:37

Speaker B

அண்டர்ஸ்டாண்டிங் கெப்பாசிட்டி கொஞ்சம் கம்மியா இருக்கும் இந்த டைம் பீரியட்ல.

08:41

Speaker B

செல்ப் கான்பிடன்ஸ் அப்படிங்கறது என்னன்னா குழப்பத்துல போய் விட்டுட்டு ஒரு சிலருக்கு எல்லாம் எப்படி இருக்கும்னா.

08:47

Speaker B

அம்மா அப்பா கிட்ட இருந்து பிரிவா இல்ல அவங்க பசங்க கிட்ட இருந்து பிரிவோ.

08:50

Speaker B

ஒரு டிஸ்டன்ஸ்ல சம்பந்தமே இல்லாம ஒரு டிஸ்டன்ஸ்ல இருக்கிற மாதிரி எல்லாம் அவங்களுக்கு இருக்கும்.

08:53

Speaker B

தேவையே இல்லாத ஒரு கோவம் இதை எதுக்கு கோவிச்சுக்கிட்டீங்கன்னு கேட்டாலும் பதில் எல்லாம் இருக்காது.

08:57

Speaker B

ஆனா விதியே சம்டைம்ஸ் ஒரு சிலருக்கு எல்லாம் வந்து வேற ஒரு கண்ட்ரில பிரிச்சு வச்சிருக்கும்.

09:00

Speaker B

சோ இந்த ஃபேமிலிங்கற ஒரு விஷயத்துல வந்து சில கவனங்கள்.

09:04

Speaker B

அப்ப இவங்க எல்லாம் என்ன பண்ணலாம்னா முதியோர் இல்லங்களுக்கு போயிட்டு.

09:07

Speaker B

இவங்க தான தர்மங்கள் பண்றது வயசானவங்களுக்கு தான தர்மங்கள் பண்றது அப்படிங்கறப்போ.

09:10

Speaker B

இந்த ஃபேமிலியா இருக்கறவங்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் பண்றது.

09:14

Speaker B

இதெல்லாம் பண்றப்போ கொஞ்சம் இவங்களுக்கு ஃபேவரபிலா இருக்கும்.

09:17

Speaker B

பப்ளிக்ல கொஞ்சம் விசிபிலிட்டி காட்டணும்.

09:20

Speaker B

சர்வீஸ் அப்படிங்கற ஒரு விஷயத்தை வந்து இவங்க கரெக்டா பண்ணிக்கணும் அப்படிங்கறதுதான்.

09:22

Speaker A

இவங்களுக்கு கும்ப ராசிக்கு.

09:23

Speaker A

இவங்கதான் வழிபட்ட தெய்வங்கள் ஏதாவது இருக்குதா?

09:25

Speaker A

இல்ல நீங்க சொன்ன அந்த இதுவே போதும்.

09:26

Speaker B

இல்ல இவங்க வந்து சனீஸ்வரர்ட்ட வந்து கிட்டத்தட்ட ஹெல்ப் கேட்கிற மாதிரிதான் இது.

09:31

Speaker B

நான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கணும்.

09:32

Speaker B

எந்த பக்கத்துல இருக்க சனீஸ்வரரா இருந்தாலும் சரி போய் ஒரு நல்லெண்ணெய் விளக்கை போய் பொதுவா போய் போட்டுட்டு வந்துறது நல்லது.

09:36

Speaker B

மத்தவங்களுக்கு விளக்கேத்துறதுக்கு இவங்க எண்ணெய் வாங்கி கொடுத்துட்டு வர்றது நல்லது இந்தாங்க நீங்களும் சேர்த்து ஊத்துங்க அப்படின்னு சொல்லி கொடுத்துட்டு வரணும்.

09:41

Speaker A

ஓகே.

09:42

Speaker B

சோ இந்த மாதிரி சில ஃபேவர் பண்ணிட்டே இருக்கிறாங்க அப்படின்னா கொஞ்சம் எல்லாமே கரெக்டா போகும்.

09:46

Speaker A

கரெக்டா போயிட்டு இருக்கும்னு நினைக்கிறீங்க.

09:48

Speaker B

சோ பொதுவா இந்த சனிப்பெயர்ச்சி அப்படின்னு பார்க்கிறப்போ பெருசா பயந்துக்கணும்ங்கற ஒரு அவசியம் கிடையாது.

09:51

Speaker B

சனிநாலே ஒரு கரெக்ஷன் பண்ண வரவர்தான் என்ன தவறுகள் செஞ்சோமோ அதுக்கான வினை அனுபவிக்கிறதுக்குதான் இப்ப வரும்ங்கறப்போ.

09:55

Speaker B

உடனே அதை நீங்க சரி பார்த்துட்டீங்கன்னா லைஃப் சேஞ்ச் ஓவர் அப்படிங்கறதுதான்.

09:59

Speaker B

அந்த லைஃபை மாத்தாம சனி கிளம்பவே மாட்டார் இல்லைன்னா நம்ம லூப்க்குள்ளேயே சுத்திட்டே இருக்கிற மாதிரிதான் அந்த விஷயம் இருக்கும்.

10:03

Speaker B

சோ அதனால தவறுகளை திருத்திக்க கூடியதுக்குதான் திருத்துறதுதான் வந்து சனிப்பெயர்ச்சி.

10:06

Speaker A

சோ யாரும் பயப்பட வேண்டாம் பொதுவா.

10:07

Speaker B

பயப்பட வேண்டாம் மாற்றம் தான் மாற்றத்தை கொடுக்கக்கூடியதுதான் கொஞ்சம் ஸ்லோவா கொடுக்கும்.

10:10

Speaker B

அதை வந்து பொறுமையா ஏத்துக்கணும் அப்படிங்கறப்போ.

10:12

Speaker B

ஏன்னா சனி லேட்டா கொடுத்தாலும் திரும்ப வாங்க மாட்டார்னு ஒன்னு இருக்குது.

10:16

Speaker A

ஓ.

10:17

Speaker B

சனி வந்து ஒருத்தவங்களுடைய வாழ்க்கையில 30 வயசு ஆகறதுக்குள்ள எல்லாத்துக்குமே சனி வந்தே தீரும் அப்படிங்கறதுதான் ஒன்னு இருக்குது.

10:22

Speaker B

சோ ஒவ்வொரு ஏஜ் கேட்டகரிக்குமே லைஃப் ஸ்டைல் மாறிட்டேதான் இருக்கும்ங்கறப்போ அப்கிரடேஷன் தான்.

10:25

Speaker B

சனி கொடுத்துட்டு போறப்போ உங்கள்ட்ட நல்லபடியாவே கொடுத்துட்டு போவார்ங்கறப்போ அதை பத்திரமா வச்சுக்கோங்க.

10:29

Speaker B

இப்ப உங்களுக்கு இன்கம் வருதுன்னா சனிதான் கொடுக்கிறார் அப்படிங்கறதை நீங்க தெரிஞ்சுக்கணும்.

10:31

Speaker A

நிச்சயமா.

10:31

Speaker A

உங்கள் வகுப்புகளைப் பற்றியும் மேலும் ஒரு செய்தி மக்களுக்கு நேரடியாக கொடுத்துட்டீங்கன்னா அவங்க நெக்ஸ்ட் உங்க தொடர்பு கொள்வாங்க.

10:37

Speaker B

மார்ச் 20 ஆம் தேதியிலிருந்து நாங்க வந்து கிளாஸஸ் ஸ்டார்ட் பண்றோம்.

10:41

Speaker B

சோ இன்னும் யாராவது இன்னும் ரெஜிஸ்டர் பண்ணாம இருக்கீங்க அப்படின்னா ரெஜிஸ்ட்ரேஷன் கீழ தெரியுற மெயில் ஐடிக்கு.

10:45

Speaker B

ஏன்னா எங்களால இப்ப கால்ஸ் அட்டென்ட் பண்ண முடியல.

10:47

Speaker B

ஒன்ஸ் நீங்க வந்து ஸ்டூடண்ட் ஆனதுக்கு அப்புறம் உங்களுக்கு வந்து வாட்ஸ்அப் குரூப்ல நான் உங்களை வந்து வச்சிருவோம்.

10:50

Speaker B

அட் தி சேம் டைம் மைண்ட் பிராட் மைண்டடா வச்சிட்டுதான் என்கிட்ட கிளாஸஸ் நீங்க படிக்க வரணும்.

10:57

Speaker B

ஹைலி சிஸ்டமேட்டிக்காலாம் இருக்காது இது வேர்ல்ட் அஸ்ட்ராலஜியா நீங்க படிக்கிற மாதிரிதான் இருக்கும்.

11:01

Speaker A

சரி ஃபைன்.

11:01

Speaker A

பலவிதமான கருத்துக்களை பொறுமையா பகிர்ந்துகிட்டீங்க.

11:05

Speaker A

பொறுத்திருந்து பார்க்கலாம் நடக்கப்போற நிகழ்வுகள் என்ன அப்படின்னு.

11:07

Speaker A

மிக்க நன்றி.

11:08

Speaker B

நன்றி.

11:09

Speaker A

நன்றி மீண்டும் சந்திக்கலாம் வணக்கம்.

Topics: கும்ப ராசி சனிப்பெயர்ச்சி அஸ்ட்ராலஜி வாக்கிய பஞ்சாங்கம் திருக்கணித பஞ்சாங்கம் ஜீவிதா சுரேஷ்குமார் அஸ்ட்ராலஜி வகுப்புகள் 2026 ராசி பலன்கள் குரு மற்றும் சனி கிரகங்கள் தமிழ் ஜோதிடம்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11536)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11536)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/kumbam-rasi-2026-sani-peyarchi-benefits/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
