**Kumbam 👉நல்ல எனர்ஜி கிடைக்க இவரை பிடிச்சுக்கோங்க | Astrologer Jeevitha Sureshkumar — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/kumbam-good-energy-astrologer-jeevitha/

2026-ல் கும்பம் ராசிக்கான ஜோதிடப் பரிந்துரைகள், பணம், குடும்பம் மற்றும் ஆரோக்கியம் குறித்து ஜீவிதா சுரேஷ்குமார் விளக்கம்.

## Key Takeaways

- 2026-ல் கும்பம் ராசிக்காரர்கள் பணம் மற்றும் குடும்பத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
- வார்த்தை கர்மா மற்றும் பழைய கர்மாக்களை சுத்திகரிக்க வழிபாடுகள் அவசியம்.
- பண வரவுகளை கூட்டுறவு மூலம் மேம்படுத்தலாம், தனிப்பட்ட செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
- மார்ச் முதல் மே மாதம் நிதி குழப்பம் அதிகரிக்கும், செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
- சரபேஸ்வரர் மற்றும் காலபைரவர் வழிபாடுகள் மூலம் எதிர்கால சவால்களை சமாளிக்கலாம்.

## What the video covers

- 2026-ல் கும்பம் ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் குரு கிரகங்களின் பாதிப்பு முக்கியம்.
- பண வரவு மற்றும் செலவுகளை கவனமாக நிர்வகிக்க வேண்டும், தேவையில்லாத செலவுகளை தவிர்க்க வேண்டும்.
- குடும்ப உறவுகள் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குறிப்பாக வார்த்தை கர்மா மற்றும் குடும்ப உறவுகளின் பாதிப்பு.
- புதிய சொத்து வாங்குதல், வண்டி வாங்குதல் போன்ற சுப செலவுகள் நடக்க வாய்ப்பு உள்ளது.
- அம்மா மற்றும் குலதெய்வ வழிபாடுகள் முக்கியம், இதனால் கர்மா சுத்திகரிக்கும்.
- ராகு மற்றும் சனியின் தாக்கம் காரணமாக மன அமைதி மற்றும் வார்த்தைகளில் கவனம் தேவை.
- பண விவகாரங்களில் கூட்டுறவு மற்றும் ஜாயிண்ட் வென்சர் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.
- மார்ச் முதல் மே மாதம் வரை நிதி குழப்பம் மற்றும் செலவுகள் அதிகரிக்கும், கவனமாக இருக்க வேண்டும்.
- டெக்னாலஜி பொருட்களில் வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும்.
- சரபேஸ்வரர் மற்றும் காலபைரவர் வழிபாடுகள் கும்ப ராசிக்காரர்களுக்கு அவசியம்.

Answers

## Questions about this video

2026 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை எப்படி இருக்கும்?

2026 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு பண வரவு சற்று மெதுவாக இருந்தாலும், நிலையாக இருக்கும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்த்து, பணத்தை சேமிப்பது நல்லது. சனி பகவான் பணத்தை எப்படி கையாள்கிறீர்கள் என்பதை கவனிப்பார்.

2026 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கை மற்றும் சொத்து சம்பந்தமான விஷயங்கள் எப்படி இருக்கும்?

2026 ஆம் ஆண்டில் குரு பகவான் நான்காம் வீட்டில் இருப்பதால், வீட்டில் மகிழ்ச்சி நிலவும். புதிய வீடு வாங்குவது அல்லது வாகனம் வாங்குவது போன்ற சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்து சம்பந்தமான யோகங்களும் உண்டாகும்.

2026 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும்?

2026 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது கவனம் தேவை. உடல்நலம் மற்றும் நாவடக்கம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவது நல்லது.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

கும்ப ராசி 2026 எப்படி இருக்கும் அப்படிங்கறப்போ

00:07

Speaker A

அதே மாதிரி ரிஷபத்துல குரு இருக்கிறார் அப்படிங்கறப்போ உங்களுக்கு நாலாம் வீட்டுல குரு இருக்கிறார் அப்படிங்கறப்போ

00:14

Speaker A

அம்மா சம்பந்தப்பட்ட அதாவது உங்களுக்கு குலதெய்வங்கள் இருக்கலாம் தாய் சம்பந்தப்பட்ட குலதெய்வங்கள் தெரிஞ்சிருக்கு அப்படின்னா

00:23

Speaker A

இப்ப வந்து உக்ரதெய்வ வழிபாடுகள் எல்லாமே பண்ணிருப்பீங்க அப்படின்னா

00:29

Speaker A

வார்த்தை கர்மாவை கிரியேட் பண்ணிக்கிட்டே இருக்கும் பேசுறது

00:36

Speaker A

இதுல டிஸ்அட்வான்டேஜஸ் என்ன அப்படின்னு பார்க்கிறோம் அப்படின்னா

00:42

Speaker A

மொத்தத்துல 2026 கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்னா

01:43

Speaker A

கும்ப ராசி

01:47

Speaker A

2026 எப்படி இருக்கும் அப்படிங்கறப்போ மீனத்துல சனி இருக்கிறார் அப்படின்னா உங்களுடைய இரண்டாம் ஸ்தானம் வாக்கு ஸ்தானம் தன ஸ்தானத்துல சனி போய் உட்கார்ந்துறார் அப்படிங்கறதுதான் அப்போ சனி கொஞ்சம் முடக்குவார் டிசிப்ளின் அப்படிங்கறத எதிர்பார்ப்பார் அப்படிங்கறதுதான்

02:01

Speaker A

வார்த்தைகள்ல ரொம்ப ரொம்ப கவனம் குடும்ப மெம்பர்ஸ்ட்ட வார்த்தைகள்ல கவனம் குடும்ப மெம்பர்ல குடும்பத்துல இருக்கவங்களுடைய ஹெல்த்ல கொஞ்சம் கவனம் உங்களுடைய நாவடக்கம் அப்படிங்கறதுல கவனம்

02:16

Speaker A

உங்க ஹெல்த்ல கவனம் இப்படி நிறைய பல விஷயங்கள்ல வந்து கும்பம் கொஞ்சம் கவனமா இருந்துகிறது நல்லது

02:26

Speaker A

இன்கம் அப்படிங்கறது எப்படின்னா வரக்கூடிய இன்கம்ம எப்படி சரியான முறையில ஹேண்டில் பண்றோம் அப்படிங்கறதும்

02:36

Speaker A

டிசிப்ளினா ஹேண்டில் பண்றோம் அப்படிங்கறதும் வந்து சனி கவனிப்பார் இந்த தடவை

02:42

Speaker A

பண ஓட்டம் கொஞ்சம் ஸ்லோவாதான் இருக்கும் ஆனா ஸ்டேபிளா இருக்கும்

02:50

Speaker A

உங்களுக்கு தேவையான பண இன்கம்கிறது கும்பத்துக்கு இருக்கும்

02:56

Speaker A

அபரிதமான ஒரு இன்கம் அப்படின்னுலாம் சொல்ல முடியாது

03:00

Speaker A

தேவையில்லாத எக்ஸ்பென்சஸ் ஆட்டோமேட்டிக்காவே வர மாதிரிலாம் சிச்சுவேஷன் சனி பகவான் கொடுத்து எப்படி ஹேண்டில் பண்றீங்கன்னு பார்ப்பாரு தேவையில்லாத எக்ஸ்பென்சஸ்க்கு நான் இதை வாங்குறேன் அதை வாங்குறேன் கையிலதான் காசு இருக்கு அப்புறம் வந்துரும்னு செய்யக்கூடாது

03:32

Speaker A

முடிஞ்ச அளவுக்கு அதை சேவிங் மோட்லயே வச்சுக்கிறது உத்தமம் கும்ப ராசிக்காரங்களுக்கு

03:37

Speaker A

அதே மாதிரி ரிஷபத்துல குரு இருக்கிறார் அப்படிங்கறப்போ உங்களுக்கு நாலாம் வீட்டுல குரு இருக்கிறார் அப்படிங்கறப்போ

03:41

Speaker A

வீட்ல கொஞ்சம் சந்தோஷம் அப்படிங்கறது இருக்கும்

03:45

Speaker A

ப்ராப்பர்ட்டி ரிலேட்டடான சில யோகங்கள் அப்படிங்கறது குரு வந்து உங்களுக்கு கொடுத்துருவார் புதுசா வீடு வாங்குறதோ

03:56

Speaker A

இல்ல வண்டி வாங்குறதோ இந்த மாதிரி சுப செலவுகள் நடக்குறதுக்கும் வாய்ப்புகள் அப்படிங்கறது வந்து பெரும்பாலும்

04:04

Speaker A

கும்ப ராசிக்காரங்களுக்கு இருக்கு

04:07

Speaker A

மைண்ட் கொஞ்சம் ஒரு அமைதி நிலைமை கொஞ்சம் குரு கொடுப்பார்னு வச்சுக்கோங்களேன்

04:11

Speaker A

ஆனா அம்மா சம்பந்தப்பட்ட அதாவது உங்களுக்கு குலதெய்வங்கள் இருக்கலாம் தாய் சம்பந்தப்பட்ட குலதெய்வங்கள் தெரிஞ்சிருக்கு அப்படின்னா

04:20

Speaker A

போய் வழிபாடு பண்ணிட்டு வாங்க

04:23

Speaker A

அம்மாவை கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கிறது அம்மா மூலமா அம்மா அம்மாவுடைய அம்மா அம்மாவுடைய அப்பா

04:33

Speaker A

இவங்க செஞ்ச தர்மங்கள் உங்களுக்கு வந்து தலை காக்கும் அப்படின்னே சொல்லலாம் இந்த 2026ல

04:42

Speaker A

சோ அவங்க என்ன தர்மங்கள் எல்லாம் செஞ்சு கடைபிடிச்சாங்களோ இல்ல அவங்க பேர்ல ஏதாவது ஒரு அன்னதானம் பண்றது

04:52

Speaker A

ஏதாவது ஒரு சாரிட்டி பேஸ்ல சின்ன சின்ன விஷயங்கள் பண்ணா கூட உங்களுக்கு கர்மா அப்படிங்கறது கொஞ்சம் கிளியர் ஆகும்

05:00

Speaker A

இப்போ உங்களுக்கு ராகு வந்து கன்னில இருக்கிறார்னா உங்களுக்கு அது எட்டாவது

05:08

Speaker A

இந்த எட்டுல போய் ராகு உட்கார்ந்துருச்சு அப்படினாலும் என்ன வேணாலும் பண்ணும்

05:15

Speaker A

நல்லது பண்ணுமோ கெட்டது பண்ணுமோலாம் தெரியாது

05:17

Speaker A

திடீர்னு ஒரு லக் அப்படிங்கறது ஆக்டிவேட் பண்ணி விட்டுரும்

05:21

Speaker A

ஏதாவது ஒரு சோர்ஸ்ல இருந்து ஒரு பணத்தை கொடுக்கும்

05:24

Speaker A

திடீர்னு ஒரு ஜாயிண்ட் வென்சர்ஸ் மாதிரிலாம் போறீங்க அப்படின்னா ஜாயிண்ட் மணி அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா

05:31

Speaker A

ரெண்டு பேர் சேர்ந்து ஒரு குரூப்பா சேர்ந்து எங்கயாவது ஒரு பணம் போட்டுருப்பீங்க

05:33

Speaker A

அதுல இருந்து ஒரு கெயின் கிடைக்கிறது

05:35

Speaker A

இல்லனா இப்ப வந்து உக்ரதெய்வ வழிபாடுகள் எல்லாமே பண்ணிருப்பீங்க அப்படின்னா

05:40

Speaker A

அது ரீதியான தேடல்கள் சில பேர் அஸ்ட்ராலஜி கொலைலாம் போவீங்க

05:46

Speaker A

சில பேர் இந்த ஹீலிங் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அந்த அக்கல்ட் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் தேடல்கள் எல்லாம் இந்த எட்டுல இருக்க ராகு கொடுக்கும்

05:58

Speaker A

அப்போ இதெல்லாம் தேடி போறப்போ அதுல ஏதாவது ஒரு தெளிவு நிலை இல்ல ஒரு அவேக்கனிங் அப்படின்னு சொல்றோம்ல

06:06

Speaker A

ஸ்பிரிச்சுவல் கனெக்ட் அப்படிங்கற ஒரு விஷயம்லாம் வந்து உங்களுக்கு வரும்

06:12

Speaker A

முன்னோர்கள் வழிநடத்தியும் உங்களுக்கு கூட்டிட்டு போற மாதிரிலாம் இருக்கும்

06:18

Speaker A

திடீர்னு உங்களுடைய எனர்ஜி ரொம்ப சென்சிடிவான மாதிரிலாம் இருக்கும்

06:23

Speaker A

ஏதோ ஒன்னு நம்மள்ட்ட பேசிச்சு திடீர்னு எனக்கு ஒரு இன்ஸ்டிங்க்ட் வந்துச்சு

06:28

Speaker A

இது எல்லாமே ராகு செய்யும்

06:30

Speaker A

அப்போ துர்கை வழிபாடு ரொம்ப அவசியம் அந்த நேரத்துல

06:34

Speaker A

ஏன்னா சம்டைம்ஸ் மாயைக்குள்ள கூட்டிட்டு போயிரும் அது மாயை இல்ல

06:40

Speaker A

இதை கரெக்டாதான் கூட்டிட்டு போகுதுங்கறப்போ துர்கைக்கு ராகு காலத்துல ஒரு விளக்கு போட்டு

06:46

Speaker A

வேண்டிக்கிறது அப்படிங்கறது ஓம் ராகுவே நமக அப்படின்னு சொல்லி வேண்டுதல் பண்ணிக்கிறதுங்கறது

06:52

Speaker A

மிக உத்தமம் கும்ப ராசிக்காரங்களுக்கு

06:56

Speaker A

அதேபோல இந்த மீனம்ல சனி இருக்குது இல்லையா

07:03

Speaker A

பேச்சு பிரிவினையே உண்டாக்கிடும்

07:10

Speaker A

வார்த்தை கர்மாவை கிரியேட் பண்ணிக்கிட்டே இருக்கும்

07:15

Speaker A

பேசுறது நல்ல வார்த்தையாவே இருந்துகிறது உத்தமம்

07:18

Speaker A

யாரையும் சாபம் விட்டுறாதீங்க

07:20

Speaker A

யாரையும் திட்டிராதீங்க

07:21

Speaker A

உங்களுடைய சொந்த பிள்ளைகளை எல்லாம் கரிச்சு கொட்டிட வேண்டாம் வார்த்தைகள் என்ன சொன்னாலும்

07:26

Speaker A

ஒரு கோபத்துல சொல்றீங்க நீ இப்படி போ அப்படின்னா அது அப்படி நடந்துரும்

07:29

Speaker A

நல்லபடியாவே சொல்லுங்க நீ நல்லபடியாவே வா

07:32

Speaker A

நீ நல்லா இருக்கணும் அப்படிங்கற மாதிரியே நீங்க பேசிக்கிறது நல்லது

07:35

Speaker A

அதே மாதிரி பழைய அந்த குடும்பத்துல வந்து பழைய கர்மாக்கள் அப்படின்னுலாம் சொல்லுவோம்

07:40

Speaker A

இந்த பழைய கர்மாக்கள் எல்லாமே வந்து கொஞ்சம் கிளியர் ஆகக்கூடிய ஒரு அமைப்பும் வந்து

07:48

Speaker A

வரும் கரெக்டான வார்த்தைகள் யூஸ் பண்ணா சனி அந்த கர்மாவையும் கொஞ்சம் கிளியர் பண்ணும்

07:53

Speaker A

இல்லனா பழைய கர்மாவோட சேர்ந்து வார்த்தை கர்மாவும் சேர்ந்து தன ஸ்தானத்துல போய் உட்கார்ந்துருச்சுன்னா கர்மா பயங்கரமா ஆக்டிவேட் ஆயிரும்

08:03

Speaker A

கும்ப ராசிக்காரங்களுக்கு மிக மிக கவனமாகவே கும்ப ராசி இந்த 2026ல

08:07

Speaker A

கண்டிப்பா இருக்கணும்

08:09

Speaker A

அதே மாதிரி இந்த 2026ல நம்பர் டூ பிசினஸ்ல இருந்துலாம் கொஞ்சம் இன்கம்லாம் வந்து

08:16

Speaker A

சில கும்ப ராசியில இருக்கவங்களுக்கு வரும்

08:20

Speaker A

எங்கயாவது ஒரு இன்வெஸ்ட்மென்ட் பண்ணிருப்பீங்க

08:23

Speaker A

திடீர்னு ஒரு நல்ல ஒரு ரிட்டர்ன்ஸ் வரது

08:26

Speaker A

ஒரு ப்ராப்பர்ட்டி மூலமா ஏதாவது ஒரு ஆக்டிவேஷன் வருது

08:32

Speaker A

திடீர்னு ஒரு வருஷமா அந்த ப்ராப்பர்ட்டி விக்கவே இல்லை இல்ல ஒரு பூர்வீக சொத்து

08:39

Speaker A

இல்ல இந்த ப்ராப்பர்ட்டில ஒரு பிரச்சனை

08:41

Speaker A

அது திடீர்னு ஒரு லக்க ஆக்டிவேட் ஆகும்

08:44

Speaker A

திடீர்னு ஒரு இன்கம் ஜெனரேட் பண்ற மாதிரி இருக்கும்

08:46

Speaker A

அப்போ ப்ராப்பர்ட்டி ரிலேட்டடா ஏதாவது சேல்ஸ் பண்ணனும்னு நினைக்கிறீங்கன்னா கும்ப ராசிக்காரங்க

08:52

Speaker A

2026ல அதெல்லாம் நீங்க செயல்படுத்தலாம்

08:55

Speaker A

அதெல்லாம் லக் ஆக்டிவேட் ஆயிடும் உங்களுக்கு

08:57

Speaker A

அதெல்லாம் வந்து யார் கூடயாவது சேர்ந்து ஒரு காம்பினேஷன்ல போய் கும்ப ராசிக்காரங்க ஒரு பிசினஸ் பண்றீங்கன்னா

09:05

Speaker A

அதுல வந்து உங்களுக்கு இன்கம் ஜெனரேட் ஆகும்

09:08

Speaker A

தனிச்சு செயல்படுறதை விட கூட யாராவது இருக்காங்கன்னா உங்களுக்கு நல்லா இருக்கும்

09:12

Speaker A

இந்த டைம்ல வந்து அந்த அஸ்ட்ராலஜி ரிலேட்டடா இல்ல ஏதாவது ஒரு அனலைஸ் பண்ணி ரிசர்ச் பண்ணி படிக்கணும்னு நினைக்கிறவங்க

09:20

Speaker A

இவங்க எல்லாத்துக்குமே இல்ல இது ஒரு தொழிலா பண்ணனும்னு நினைக்கிறவங்க எல்லாத்துக்குமே

09:24

Speaker A

அது ப்ராபிட்டபிலா கொடுக்கும்

09:26

Speaker A

ஏன்னா அது கிட்டத்தட்ட இன்னொருத்தவங்களுடைய கர்மாவை வாங்குற மாதிரிதான்

09:30

Speaker A

ஆல்ரெடி அந்த ரெண்டுல போய் சனி இருக்கிறப்போ

09:34

Speaker A

கர்மாவை கழிக்கணும்ங்கற மாதிரி இருக்கு

09:37

Speaker A

அப்போ ஒருத்தவங்களுடைய கர்மாவை வாங்கி நீங்க கழிப்பீங்க அப்படிங்கறதும்

09:40

Speaker A

இந்த கணக்குல வரும்

09:42

Speaker A

இதுல டிஸ்அட்வான்டேஜஸ் என்ன அப்படின்னு பார்க்கிறோம் அப்படின்னா கும்ப ராசிக்காரங்களுக்கு

09:48

Speaker A

இந்த மார்ச் டூ மே மாசம் வரைக்கும் பினான்சியல் வைஸ் ஒரு கன்பியூஷன் இருந்துகிட்டேதான் இருக்கும்

09:54

Speaker A

பணம் இருக்குமா இருக்காதா

09:56

Speaker A

செலவுக்கு பத்தமா பத்தாதா இப்படி பல கன்பியூஷன்ஸ் இருக்கும்

09:59

Speaker A

யாருக்கும் போயிட்டு வாக்குலாம் கொடுத்துறக்கூடாது

10:02

Speaker A

ஏன்னா ரெண்டுல சனி உட்கார்ந்துருச்சுனாலே முதல் வாக்கை நிறைவேற்றவே விடாது

10:05

Speaker A

அது கிட்டத்தட்ட வந்து ஃபேக் ப்ராமிஸாவே மாறிடும்

10:09

Speaker A

வாக்கு கொடுக்கிறது சத்தியம் பண்ணிட்டு வரது லாஸ் கொடுத்துரும்

10:12

Speaker A

பாரு நான் செஞ்சு காட்டுறேன் சொல்லவே கூடாது அந்த மாதிரிலாம்

10:15

Speaker A

பார்த்துக்கலாம்ங்கற மாதிரி பேசாம வந்துறது நல்லது

10:18

Speaker A

அதே மாதிரி ரிலேட்டிவ்ஸ்க்கு எல்லாம் கொஞ்சம் கடன் கொடுக்காம இருந்துகிறது நல்லது

10:22

Speaker A

பினான்சியல் வைஸ் ரொம்ப ட்ரெயின் ஆகக்கூடிய ஒரு அமைப்பும் வந்து

10:26

Speaker A

கும்ப ராசிக்காரங்களுக்கு இருக்கு ஓவர் ஸ்பெண்டிங் எதுல தெரியுமா ஸ்பெண்டிங் பண்ணுவீங்க

10:30

Speaker A

எதுல தெரியுமா கும்ப ராசிக்காரங்க போய் செலவு பண்ணுவீங்க எதுல தெரியுமா சனி செலவு பண்ண வைக்கும்

10:36

Speaker A

தேவையில்லாம கெட்ஜெட்ஸ் வாங்குறது

10:40

Speaker A

போன் வாங்குறேன் ஐபேட் வாங்குறேன் லேப்டாப் வாங்குறேன் ஏர்பாட் வாங்குறேன் எதையோ ஒன்னு வாங்குறேன்னு எலக்ட்ரானிக் ஐட்டம்ஸ் கெட்ஜெட்ஸ்ல போய் செலவு பண்றீங்கன்னா

10:48

Speaker A

இந்த டெக்னாலஜி ரிலேட்டடா வீண் செலவுகள் பண்ற மாதிரி சிச்சுவேஷன்ஸ் வரும்

10:52

Speaker A

ஒரு போன் ஆல்ரெடி இருக்கும் இன்னும் ரெண்டு போன் வாங்குறது மூணு போன் வாங்குறது இந்த மாதிரி வேலைகள் எல்லாம் செய்ய வேண்டாம்

10:58

Speaker A

முடிஞ்ச அளவுக்கு தவிர்க்கிறது நல்லது

11:02

Speaker A

கும்ப ராசியில இருக்கிறவங்க

11:05

Speaker A

சரபேஸ்வரர் வழிபாடு காலபைரவர் வழிபாடு

11:10

Speaker A

கண்டிப்பா கும்ப ராசிக்காரங்க பண்ணனும்

11:13

Speaker A

ஏன்னா காலபைரவர் எதுக்கு அப்படின்னா

11:17

Speaker A

உங்களுக்கு எட்டுல ராகு இருக்கிறாரு அதோட சனியுடைய ரெண்டுல சனி இருக்குது

11:22

Speaker A

இதெல்லாம் என்ன பண்ணும் அப்படின்னா சில ப்ராப்ளம்ஸ் கிரியேட் பண்ணும்

11:27

Speaker A

வாழ்க்கையில நிறைய பிளாக்கேஜஸ் அப்படிங்கறது கொடுக்கும்

11:30

Speaker A

மறைமுகமான எதிரிகள் எல்லாம் இருப்பாங்க

11:33

Speaker A

எங்கிருந்து எதிரி வராங்கன்னே நம்மளுக்கு தெரியாது

11:35

Speaker A

ஒரு ப்ரொடெக்ஷன் வரணும் அப்படின்னா நீங்க காலபைரவரை வழிபாடு பண்ணனும்

11:39

Speaker A

அதோட சரபேஸ்வரர் வந்து ராகு கேதுக்காகவே நீங்க வழிபாடு பண்ணனும்

11:42

Speaker A

ஏன்னா லைஃப்ல ரொம்ப இம்பேலன்ஸ்டா இருக்க மாதிரியே இருக்கும்

11:46

Speaker A

பிசினஸ் வைஸ் ஒரு ப்ரொடெக்ஷன்

11:48

Speaker A

உங்களை சுத்தி ஒரு நல்ல ஒரு எனர்ஜி நல்ல ஒரு ஆரா இருக்கணும்னா

11:52

Speaker A

சரபேஸ்வரர் மோஸ்ட்லி சில கோயில்கள்ல எல்லாம் தூண்ல இருப்பார்

11:55

Speaker A

இல்ல சரபேஸ்வரர் தனித்த தெய்வமாவும் இருப்பார்

11:57

Speaker A

சரபேஸ்வரரை போய் ராகு காலத்துல வழிபாடு பண்ணனும்

12:00

Speaker A

ராகு காலத்துலதான் சரபேஸ்வரருக்கு பவர் ரொம்ப அதிகமாவே இருக்கும்

12:03

Speaker A

அப்போ ராகு காலத்துல போய் சரபேஸ்வரருக்கு ஒரு விளக்கு வச்சு அந்த நேரங்கள்ல நீங்க வழிபாடு பண்றீங்க அப்படின்னா

12:09

Speaker A

என்ன வேண்டுதல்களா இருந்தாலும் என்ன தடைகளா இருந்தாலும் எவ்வளவு பெரிய சக்தி உங்களை தடுத்து நிறுத்தினாலும் சரபேஸ்வரர் உங்களை காப்பாத்துவார் அப்படிங்கறதுதான்

12:18

Speaker A

அதே மாதிரி உங்களுடைய ப்ராப்பர்ட்டீஸ உங்களுடைய பணம் உங்களுடைய சொத்து பத்த எல்லாம் பத்திரமா வச்சுக்கணும்னா

12:24

Speaker A

கஜலட்சுமியை வீட்ல வச்சு வழிபாடு பண்ணுங்க

12:27

Speaker A

வீட்ல ஒரு கஜலட்சுமி இருந்துகிறது நல்லது

12:31

Speaker A

ஏன்னா உங்களுக்கு ஒரு தைரியத்தை கொடுக்கக்கூடியது

12:33

Speaker A

முக்கியமா கஜலட்சுமி இருக்கணும் கும்ப ராசியில இருக்கிறவங்களுக்கு

12:37

Speaker A

மொத்தத்துல 2026 கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்னா

12:42

Speaker A

கொஞ்சம் சுமாராதான் இருக்கு

12:45

Speaker A

ஏற்றமும் இருக்கு இறக்கமும் இருக்கு

12:48

Speaker A

கொஞ்சம் நிதானமாகவே செயல்பட்டுக்கிறது கும்ப ராசி 2026 கொஞ்சம் கவனமா இருக்க வேண்டிய ராசிகள்ல

12:55

Speaker A

கும்ப ராசி இந்த தடவை 26ல இந்த கணக்குல வராங்க

13:00

Speaker A

அப்போ நீங்க இந்த தேவையில்லாத இந்த கெட்ஜெட்ஸ் வாங்குறது தேவையில்லாத செலவுகள் பண்ணாம இருக்கறது

13:06

Speaker A

ஒரே நேரத்துல பல யோசனைகள் வரும் இதை பண்ணலாம் அதை பண்ணலாம்னு

13:09

Speaker A

ஹெல்த்த முதல் பார்த்துக்கணும்

13:11

Speaker A

ஸ்ட்ரெஸ் ஆகாம இருந்துகணும்

13:12

Speaker A

ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸ்க்கு போவீங்க தேவையே இல்லாம எதை எதையோ நினைச்சு யோசிக்கிறது

13:16

Speaker A

இதெல்லாம் இல்லாம கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கறதுக்கு நீங்க முயற்சி பண்ணனும்

13:21

Speaker A

இன்கம் வரும் ரகசியமான முறைகள்ல எப்படி இருந்தாலும் இன்கம்கிறது வருமானம்கிறது உங்களுக்கு ஜெனரேட் ஆயிட்டுதான் இருக்கும்

13:27

Speaker A

பண உதவி எல்லாம் எப்படி இருந்தாலும் வந்துரும்

13:30

Speaker A

பண கஷ்டத்துக்கு போய் விடாது லாஸ்ட் மினிட்லயாவது யாரோ ஒருத்தவங்க வந்து உங்களுக்கு பணத்தை கொடுத்து உதவி பண்ற மாதிரியான சிச்சுவேஷன்லதான் இருக்குது

13:35

Speaker A

மாற்றம் ஒன்றே மாறாததுங்கற மாதிரி கும்ப ராசி இதை ஏத்துக்கணும்

13:40

Speaker A

ஏன் அப்படின்னா திடீர்னு லைஃப்ல வந்து அப்ஸ் அண்ட் டவுன்ஸ் அப்படிங்கறது கும்ப ராசி இந்த வருடம் ஃபேஸ் பண்ணுவாங்கன்னு இருக்கு

13:48

Speaker A

அப்போ ஃபேமிலி ஹெல்த் சுத்தி என்ன விஷயங்கள் நடக்குது இது எல்லாமே

13:54

Speaker A

கொஞ்சம் கான்ஷியஸா கொஞ்சம் கவனமா இருந்துகிறதுங்கறது நல்லது

13:59

Speaker A

எடுக்கக்கூடிய முடிவுகள் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்

14:02

Speaker A

வாக்கு ரொம்ப கவனமா இருக்கணும்

14:04

Speaker A

அப்படிங்கறதுதான் கும்ப ராசிக்கு 2026ல சொல்ல வேண்டியது

Topics: கும்பம் 2026 ஜோதிடம் சனி பாதிப்பு ராகு காலம் பண வரவு குடும்ப உறவுகள் கர்மா சுத்திகரிப்பு வழிபாடு சரபேஸ்வரர் காலபைரவர்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11857)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11857)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/kumbam-good-energy-astrologer-jeevitha/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
