**கும்ப ராசிக்கு தசா புத்தி சொல்லும் ரகசியம் | Kumbam | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/kumbam-dasa-puthi-secret/

கும்ப ராசிக்கான செல்வ செழிப்பு மற்றும் தசா புத்தி ரகசியங்கள், பரிகாரங்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றிய விரிவான விளக்கம்.

## Key Takeaways

- தசா புத்தி மற்றும் ஜாதக கோச்சாரங்கள் செல்வ செழிப்பை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்கள்.
- கும்ப ராசிக்கான பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை கொண்டு வரும்.
- தொழில்நுட்பம் மற்றும் சமூக நெட்வொர்க்குகள் வாயிலாக புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
- மாற்றங்களை ஏற்றுக்கொண்டு திறமைகளை மேம்படுத்துவது வெற்றிக்கான முக்கிய வழி.
- அனுமன், திருப்பதி பெருமாள் மற்றும் மகாலட்சுமி வழிபாடு செல்வ செழிப்பை அதிகரிக்கும்.

## What the video covers

- வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரிக்க தசா புத்தி மற்றும் ஜாதக கோச்சாரங்கள் முக்கியம்.
- கும்ப ராசிக்கான தனிப்பட்ட பரிகார ஸ்தலங்கள் மற்றும் தெய்வ வழிபாட்டு முறைகள் பற்றி விளக்கம்.
- சனியும் ராகுவும் கும்ப ராசியில் இருப்பதால் வாழ்க்கையில் மாற்றங்கள் மற்றும் சவால்கள் ஏற்படும்.
- தொழில்நுட்பம் மற்றும் சமூக தொடர்புகள் கும்ப ராசிக்காரர்களுக்கு முக்கியமான வாய்ப்புகளை உருவாக்கும்.
- திறமைகள் மற்றும் நெட்வொர்க்கை மேம்படுத்தி நிதி வாய்ப்புகளை பெற வேண்டும்.
- மாற்றங்களை ஏற்றுக்கொண்டு புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
- அனுமன் வழிபாடு மற்றும் அனுமன் கோயிலுக்கு செல்லும் பரிகாரங்கள் செல்வத்தை மேம்படுத்தும்.
- திருப்பதி பெருமாள் மற்றும் மகாலட்சுமி வழிபாடு செழிப்புக்கு உதவும் முக்கிய வழிகள்.
- வழிபாட்டிற்கு செல்லும் முன் மனநிலை சரியாக இருக்க வேண்டும்.
- செல்வ செழிப்பை நிலைத்திருக்க பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள் அவசியம்.

Answers

## Questions about this video

கும்ப ராசிக்காரர்கள் செல்வ செழிப்புடன் வாழ என்ன செய்ய வேண்டும்?

கும்ப ராசிக்காரர்கள் செல்வ செழிப்புடன் வாழ, தசா புத்தி மற்றும் கோச்சாரங்களை பொறுத்து தெய்வ வழிபாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், வாக்கு மற்றும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

கும்ப ராசிக்காரர்களுக்கு தற்போது என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது?

கும்ப ராசிக்காரர்களுக்கு தற்போது வேலை மாற்றங்கள், தொழில் மாற்றம் அல்லது நீண்ட நாள் வேலை செய்த இடத்திலிருந்து மாறும் எண்ணங்கள் போன்ற மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இது அனைத்தும் மாற்றங்களை நோக்கிய ஒரு அமைப்பாகும்.

கும்ப ராசிக்காரர்கள் எந்த துறைகளில் சிறந்து விளங்க முடியும்?

கும்ப ராசிக்காரர்கள் சமூகத்துடன் தொடர்புடைய திட்டங்கள், தொழில்நுட்பம் மற்றும் புதுமையான விஷயங்களில் சிறந்து விளங்க முடியும். ராகுவின் இருப்பு காரணமாக டெக்னாலஜி துறையில் உள்ளவர்கள் வெளிநாடு செல்ல முயற்சி செய்தால், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வெற்றி கிடைக்கும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:23

Speaker A

வணக்கம்.

00:26

Speaker A

எல்லாரும் எதிர்பார்க்கிற ஒரு விஷயம் வாழ்க்கையில என்னன்னா எல்லா ராசி நேயருமே எதிர்பார்க்கிறது என்னன்னா நாங்க செல்வ செழிப்போட வாழறதுக்கு என்ன வழி பண்ணனும்.

00:35

Speaker A

நாங்க என்ன செஞ்சா நாங்க செல்வ செழிப்போட இருப்போம்.

00:40

Speaker A

எப்படி செல்வம் மேலும் மேலும் அதிகரிச்சிட்டே போகும் ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கும் ஒவ்வொரு வகையான பரிகார ஸ்தலங்கள், புண்ணிய ஸ்தலங்கள், தெய்வ வழிபாட்டு முறைகள்,

00:51

Speaker A

அவங்களுடைய லைஃப் ஸ்டைல் அவங்களுடைய தாட் ப்ராசஸ் எப்படி இருக்கும்னு இப்படி ஒவ்வொருத்தங்களுக்குமே சிச்சுவேஷன்ஸ் அப்படிங்கறதும் மாறிக்கிட்டே இருக்கும்.

01:02

Speaker A

அதாவது தசா புத்தி அப்படிலாம் இருக்கு இல்லையா உங்களுடைய ஜாதக ரீதியாகவும் உங்களுடைய தசா புத்தி அதோட கோச்சாரங்கள் எப்படி இருக்கு?

01:10

Speaker A

அதெல்லாம் பொறுத்துதான் நம்முடைய செல்வ செழிப்பமே நிரந்தரமா தங்குமா இல்ல வந்துட்டு போகுமா?

01:19

Speaker A

அதுக்கு என்ன நாங்க வந்து தெய்வ வழிபாட்டு முறைகள் பண்ணனும் அப்படிங்கறத பத்தி நம்ம பார்க்கலாம்.

01:51

Speaker A

கும்பம்.

01:53

Speaker A

இப்ப கும்ப ராசின்னு எடுத்துக்குறோம்னு வச்சுக்கோங்களேன் உங்களுக்கு வந்து சனி வந்து ரெண்டுல இருக்கிறார் அப்படின்னு ஒன்னு இருக்கு.

02:05

Speaker A

அதாவது மீனத்துல இருக்கிறார் இல்லையா அப்ப மீனத்துல இருக்கிறார்ங்கறப்போ என்னன்னா வாக்குல வார்த்தைகள்ல கொஞ்சம் கவனமா இருக்கணும்.

02:10

Speaker A

எல்லாமே கொஞ்சம் ஸ்லோவாதான் ப்ரோக்ரஸ் ஆகுற மாதிரிதான் உங்களுக்கு இருக்கும் ஆனா அது மூவ்மென்ட்லயே தான் இருந்துகிட்டு இருக்கும்.

02:20

Speaker A

ஒரு இன்கம் அப்படின்னு பார்க்கிறப்போ ஒரு ஸ்டெபிலைஸ்டா உங்களுக்கு இருக்காது திடீர்னு பார்த்தா வேலை மாற்றங்கள் கேரியரையே டோட்டலா சேஞ்ச் ஆகுறது.

02:28

Speaker A

இல்ல ரொம்ப நாளா ஒருத்தங்க கிட்ட ஒர்க் பண்ணிட்டு இருந்திருப்பீங்க அங்க இருந்து மாறலாமான்னு யோசிக்கிறது.

02:35

Speaker A

சோ இந்த மாதிரி எல்லாமே மாற்றங்களை நோக்கி பார்க்கிற மாதிரியான ஒரு அமைப்பு அப்படிங்கறதுதான் வந்து இப்ப கும்பத்துக்கு இருக்கு.

02:41

Speaker A

சோ நீங்க எப்படி எஃபர்ட் போட போறீங்கன்னு ஒன்னு இருக்கு.

02:46

Speaker A

இந்த சோசியல் வைஸ் இம்பாக்ட் ஆகக்கூடிய ப்ராஜெக்ட்ஸ்லாம் இருக்கும்.

02:51

Speaker A

ஏன்னா கும்பம் வந்து நிறைய இந்த சொசைட்டியோட கனெக்ட் ஆகக்கூடியவங்க அப்படிங்கறதுதான்.

02:58

Speaker A

சோ இந்த டெக்னாலஜி இந்த இன்னோவேட்டிவான விஷயங்கள்.

03:04

Speaker A

எனிதிங் ரிலேட்டட் டு டெக்னாலஜி நீங்க தொடுறீங்க.

03:10

Speaker A

ஏன்னா உங்களுடைய கும்ப ராசியிலதான் வந்து ராகு இருக்கிறார்.

03:14

Speaker A

நட்சத்திர ராகு நட்சத்திரம் இருக்கிறார் இல்லையா?

03:16

Speaker A

சோ இந்த ராகு வந்து மறைமுகமாவே டெக்னாலஜிஸ்க்கு சப்போர்ட் பண்ணக்கூடியவங்க.

03:22

Speaker A

இப்ப ஐடி செக்டார்ல எல்லாம் இருக்கீங்க.

03:25

Speaker A

வெளிநாடு போலாம்னு நினைச்சிட்டு இருப்பீங்க திடீர்னு லாஸ்ட் டைம்ல ஏதோ ஒரு விஷயத்தினால ஒரு டிராபேக் அடைஞ்சிரலாம்.

03:30

Speaker A

மீண்டும் முயற்சி பண்ணுங்க.

03:32

Speaker A

கண்டிப்பா கிடைக்கும்.

03:34

Speaker A

ஆனா இந்த இயர் செகண்ட் ஹாப்ல இருந்துதான் உங்களுக்கு கிடைக்கும்னு இருக்கு.

03:40

Speaker A

ஆனா வந்து நீங்க போடக்கூடிய எஃபர்ட் வந்து இருந்துகிட்டே இருக்கட்டும்.

03:45

Speaker A

கொஞ்சம் கொஞ்சமா எஃபர்ட் இருந்துகிட்டே இருக்கணும்.

03:48

Speaker A

ஸ்கில்ஸ் கரெக்டா நீங்க டெவலப் பண்ணிக்கணும்.

03:50

Speaker A

அதோட நெட்வொர்க்கை வந்து உங்களை சுத்தி இருக்கக்கூடிய அந்த நெட்வொர்க் இருக்கு இல்லையா.

03:57

Speaker A

இவங்கதான் உங்களுக்கு பினான்சியல் ஆப்பர்சுனிட்டிஸே அவங்கதான் கொண்டு வருவாங்க.

04:01

Speaker A

சோ அதுல நீங்க கவனம் செலுத்திக்கிட்டே இருக்கணும்.

04:04

Speaker A

நெட்வொர்க் அமைக்கிறதுதான் இப்ப உங்களுடைய சொத்தே என்னன்னா உங்களை சுத்தி இருக்கக்கூடிய நெட்வொர்க் தான்.

04:10

Speaker A

ஒவ்வொரு காண்டாக்ட்டுமே மேட்டர்ஸ் அப்படிங்கிற ஒரு விஷயத்தை வந்து நீங்க புரிஞ்சுக்கணும்.

04:14

Speaker A

இன்னொன்னு என்னன்னா.

04:16

Speaker A

உங்களுக்கு வந்து தாட்லாம் நல்லா இருக்கும்.

04:20

Speaker A

அதாவது இந்த கிரியேட்டிவ் திங்கிங் அப்படின்னுலாம் சொல்றோம் இல்லையா.

04:22

Speaker A

அந்த நாலேட்ஜை வந்து நீங்க கரெக்டா யூஸ் பண்ணிக்கணும்.

04:25

Speaker A

அடாப்ட் பண்ணிக்கணும்.

04:27

Speaker A

மாற்றத்துக்கு மாற்றம் வரப்போகுது அந்த மாற்றத்துக்கு அந்த அடாப்ட் ஆகி அதை கத்துக்கணும் நீங்க.

04:34

Speaker A

அதை வந்து அக்செப்ட் பண்ணிக்கணும் அந்த எபிலிட்டி வந்து உங்களுக்கு இருக்கு.

04:40

Speaker A

அந்த லேர்னிங் எபிலிட்டி உங்ககிட்ட இருக்கு அப்படிங்கறப்போ.

04:43

Speaker A

ஒரு மாற்றம் வரப்போகுதுன்னா கண்டிப்பா நெக்ஸ்ட் ஒரு குரோத்ங்கறப்போ.

04:47

Speaker A

சில பெரும்பாலும் கும்பத்துக்கு எப்படி இருக்கும்னா என்ன பண்ணிட்டு நான் இப்படியே இருந்துகிறேன் இன்னைக்கு இதுதான் நல்லா இருக்கு.

04:54

Speaker A

அப்படின்னு உங்களை நீங்களே வந்து செல்ப் சபோடேஜ் பண்ணிப்பீங்க.

04:59

Speaker A

சோ அது பண்ணாம கண்டிப்பா உங்களால செய்ய முடியும்னு நினைச்சு நீங்க இறங்குங்க.

05:04

Speaker A

சோ உங்களால இதை செய்ய முடியும் அப்படிங்கறதுனாலதான் உங்களுக்கு அந்த ஆப்பர்சுனிட்டியே கிடைக்குதுங்கறத முதல்ல நீங்க நம்பணும்.

05:10

Speaker A

ஏன்னா உங்களை சுத்தி இருக்கவங்களுக்கு தெரியும் உங்களுடைய டேலன்ட் என்ன அப்படிங்கறது.

05:14

Speaker A

நீங்கதான் அதை அக்செப்ட் பண்ணிக்க மாட்டேங்கிறீங்க.

05:17

Speaker A

இந்த ஒரு சர்க்கிள் போட்டு நின்னுட்டு இந்த இந்த சர்க்கிள்குள்ள விழுகிறது எனக்கு வெளியில விழுகிறது எல்லாம் மத்தவங்களுக்கு அப்படிங்கிற மாதிரி இல்லாம.

05:28

Speaker A

வெளியில விழுகிறதுதான் எனக்கு உள்ள விழுகிறது மத்தவங்களுக்குங்கிற மாதிரி நீங்க பிளான் பண்ணனும்.

05:32

Speaker A

புரியுதா அதுதான் வந்து நெட்வொர்க்குக்கு உங்களை சுத்தி இருக்கவங்களுக்கு.

05:35

Speaker A

உங்களுடைய டேலன்ட்ஸ் தெரியுதுங்கறப்போ நிறைய கத்துக்கோங்க.

05:38

Speaker A

நிறைய லேர்ன் பண்ணுங்க.

05:40

Speaker A

ஸ்கில்ஸ் நிறைய டெவலப் பண்ணுங்க.

05:42

Speaker A

நாலேட்ஜ் டெவலப் பண்ணி நெக்ஸ்ட் லெவல் போங்க.

05:45

Speaker A

தாராளமா நீங்க வந்து ஒரு ஒரு ரிஸ்கே நீங்க எடுக்கலாம்.

05:50

Speaker A

இன்னும் சொல்லப்போனா.

05:52

Speaker A

நீங்க ரிஸ்க் எடுத்தீங்க அப்படின்னா எஃபர்ட் தான்.

05:57

Speaker A

அந்த ரிஸ்க் தான் அந்த எஃபர்ட்.

06:00

Speaker A

அந்த எஃபர்ட் எடுக்குறீங்கன்னா கண்டிப்பா உங்களுக்கான வெல்த் அப்படிங்கறது உங்களுக்கு அமையும்.

06:06

Speaker A

உங்களுக்கான செல்வ செழிப்பு அப்படிங்கறது உங்களுக்கு நிச்சயமாவே உங்களுக்கு அமையும்.

06:10

Speaker A

ஃபிளெக்சிபிலா இருக்கணும்.

06:12

Speaker A

கேரியர்ல ஏதாவது ஒரு டெசிஷன் எடுக்கணும் அப்படின்னா.

06:17

Speaker A

ஓகே நான் இதை அக்செப்ட் பண்ணிக்கிறேன்.

06:20

Speaker A

இது இல்லையா என்னோடது.

06:22

Speaker A

நான் யார் தெரியுமா?

06:23

Speaker A

அப்படிங்கறது இல்லாம ஐயோ எனக்கு போய் இப்படியா நான் எப்படி இதை ஹேண்டில் பண்ணுவேங்கறது இல்லாம.

06:30

Speaker A

கண்டிப்பா நீங்க வரக்கூடிய அந்த ஆப்பர்சுனிட்டிஸை நீங்க கரெக்டா எடுத்துக்குறீங்க அப்படின்னா அது குரோத் தான்.

06:35

Speaker A

அதே மாதிரி ஆன்ட்ரபிரனர்ஸ்லாம் இருக்கீங்க அப்படின்னா.

06:37

Speaker A

புதுசா வென்சர்ஸ்லாம் தாராளமா நீங்க ட்ரை பண்ணலாம்.

06:40

Speaker A

ஜஸ்ட் ஒரு ட்ரை பண்ணி பார்க்கிறீங்கன்னா நாளைக்கு அது ஹிட் ஆகுறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு.

06:44

Speaker A

அந்த தடுமாற்றம் தயக்கம் அப்படிங்கறது எப்பவுமே கும்பத்துக்கு இருந்துகிட்டே இருக்கும்.

06:50

Speaker A

செய்யலாமா வேணாமா?

06:52

Speaker A

யாராவது ஒருத்தங்க சொல்லிக்கிட்டே இருக்கணும் தாராளமா செய்யலாம் பண்ணுங்க அப்படின்னு.

06:56

Speaker A

சோ தாராளமா நீங்க அதை செய்யலாம்.

07:00

Speaker A

இதுக்கான அவுட்புட் வந்து அடுத்த வருஷம் தான் உங்களுக்கு தெரியும்.

07:04

Speaker A

சோ பேஸ் இப்ப நீங்க ஸ்ட்ராங் பண்ணிக்கிறீங்க அப்படின்னா குரோத் நெக்ஸ்ட் இயர் உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு அப்படிங்கறதுதான் விஷயமே.

07:09

Speaker A

அனுமன் வழிபாடு ரொம்ப ஸ்ட்ராங்கா பண்ணுங்க.

07:13

Speaker A

அனுமன் கோயிலுக்கு போயிட்டு ஹனுமனுக்கு வந்து நல்ல அந்த வெத்தலை மாலை, வடமாலை எல்லாம் போட்டு சாத்தி வழிபாடு பண்ணிட்டு வரீங்க அப்படின்னா.

07:21

Speaker A

அங்க போயிட்டு அங்க ஹனுமன் கோயில்ல கொடுக்கக்கூடிய அன்னதானத்தை எல்லாம் நீங்க வாங்கி சாப்பிட்டு வரும்பொழுது.

07:29

Speaker A

சனியோட ஒரு பிரஷர்ல இருந்து கொஞ்சம் ரிலீவ் ஆவீங்க அப்படிங்கறதுதான்.

07:33

Speaker A

ஆஞ்சநேயரை இறுக்கி பிடிச்சுக்கணும் கும்ப ராசிக்காரங்க.

07:37

Speaker A

சோ பொதுவாவே செல்வத்தை கொடுக்கக்கூடிய ஸ்தலங்கள் அப்படின்னு இருக்கு.

07:42

Speaker A

அப்ப ஒவ்வொருத்தங்களுக்கும் ஒவ்வொரு ஸ்தலங்களுக்கு போகும்பொழுது பிளாக்கேஜஸ் கிளியர் ஆகும் அப்படிங்கறதுனாலதான்.

07:50

Speaker A

இன்னார் இந்த கோயிலுக்கு போங்க இந்த அதே மாதிரி அந்த ஆர்டர்ல நம்ம சொல்றோம் இல்லையா.

07:54

Speaker A

இந்த இந்த கோயிலுக்கு போங்க அப்படின்னு.

07:56

Speaker A

சோ பொதுவாவே வந்து ஒரு நல்ல ஒரு செழிப்பு வரணும்.

08:01

Speaker A

எனக்கு ஒரு லக் நல்லா ஆக்டிவேட் ஆகணும் அப்படின்னா.

08:04

Speaker A

திருப்பதிதான் பெருமாள்தான்.

08:06

Speaker A

ஆனா அந்த திருப்பதி பெருமாளுக்குமே யாருக்கெல்லாம் வந்து சந்திரன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லபடியா இருக்கும்.

08:13

Speaker A

அவங்க போலாம்.

08:15

Speaker A

ரொம்ப நெருப்பு ஆதிக்கம் இருக்கக்கூடிய நெருப்பு ராசிக்காரங்க போறீங்க அப்படின்னா.

08:21

Speaker A

மேஷம் போலாம்.

08:23

Speaker A

அதே மாதிரி சிம்மம் போலாம்.

08:24

Speaker A

ஆனா தனுசுக்கு அங்க இருக்கக்கூடிய திருப்பதி வந்து சம்டைம்ஸ் செட் ஆகாதுங்கிற மாதிரி இருக்கும்.

08:30

Speaker A

அப்ப அவங்க ஸ்ரீரங்கம் போறது.

08:31

Speaker A

சோ இந்த மாதிரி ஒரு ஆல்டர்நேட்டிவா வந்து ஒரு வழிபாட்டு முறைகளை வந்து ஒவ்வொரு ராசிக்காரங்களும் கரெக்டா மெயின்டெயின் பண்ணிக்கிறாங்க அப்படின்னா.

08:39

Speaker A

அவங்களுக்கான லக் ஆக்டிவேஷன் ஆகக்கூடிய இடங்கள்தான் வந்து நம்ம சொல்ற திருப்பதி பெருமாள் ஸ்தலங்களுக்கு எல்லாம் போறது.

08:45

Speaker A

அடுத்தது பார்க்கிறப்போ.

08:47

Speaker A

செழிப்பு வரணும்.

08:50

Speaker A

முதல் லக் வரணும்.

08:51

Speaker A

அப்புறம் செழிப்பு வரணும் அப்படினாலே அது லட்சுமிதான்.

08:53

Speaker A

மகாலட்சுமி வழிபாடு அப்படிங்கறது ரொம்ப அவசியம்.

08:57

Speaker A

மகாலட்சுமி வழிபாட்டுக்கு வந்து இந்த ஸ்ரீபுரம் கோல்டன் டெம்பிள் அப்படின்னு ஒரு கோயில் இருக்கு இல்லையா.

09:04

Speaker A

அங்க போய் நீங்க வழிபாடு பண்றீங்க அப்படின்னா கண்டிப்பா நல்ல வெல்த்.

09:10

Speaker A

நல்ல ஒரு ப்ராஸ்பெரிட்டி.

09:12

Speaker A

நல்ல செழிப்பா தான் போகணும்.

09:13

Speaker A

எப்பவுமே லட்சுமி ஸ்தலங்களுக்கு எல்லாம் போகும்பொழுது நம்ம வந்து ஒரு மனநிலைமை எல்லாம் சரியா வச்சிட்டு தான் போகணும்.

09:18

Speaker A

சிலர் எல்லாம் சொல்லுவாங்க நான் என் பெருமாள் கோயிலுக்கு போனேன் லட்சுமி கோயிலுக்கு போனேன்.

09:22

Speaker A

ஆனா என் வாழ்க்கை இப்படிதான்.

09:24

Speaker A

நீங்க எப்படி போனீங்கன்னு ஒன்னு இருக்குது.

09:26

Speaker A

சிவன் கோயிலுக்கு போறப்போ ரொம்ப சாந்தமாவும்.

09:30

Speaker A

பெருமாள் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு போறப்போ ரொம்ப செழிப்பாவும் நல்ல அட்ராக்டிவான கலர்ஸ்ல.

09:36

Speaker A

நம்மகிட்ட இருக்க ஜுவல்ஸ்லாம் அதனாலதான் வந்து பெருமாள் வந்து செழிப்பாவே இருப்பார்.

09:40

Speaker A

இந்த லட்சுமி சம்பந்தப்பட்ட ஸ்தலங்களுக்கு போகும்பொழுது சந்தோஷமா போறோம்னா சந்தோஷம் பன்மடங்கு திரும்பி வரும்.

09:47

Speaker A

வருத்தப்பட்டுட்டே போறீங்க அப்படின்னா திரும்பி அதையே பன்மடங்கு கொடுத்துரும் அப்படிங்கறதுதான்.

09:52

Speaker A

லட்சுமியை வழிபாடு பண்ணக்கூடிய சூட்சுமம்.

09:56

Speaker A

லட்சுமி வரவே மாட்டாங்கன்னு ஒன்னு இருக்கு.

09:57

Speaker A

லட்சுமி எங்க வந்து ஒரு சந்தோஷம் மகிழ்ச்சியான தருணங்கள் பாசிட்டிவ் திங்கிங் எங்க இருக்கோதோ அங்கதான் லட்சுமி இருப்பாங்க.

10:03

Speaker A

சோ அதுல ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும் அப்பதான் உங்களுக்கு வெல்த் அப்படிங்கற ஒரு விஷயம் வந்து நல்லபடியாவே வரும்.

10:08

Speaker A

அடுத்தது வந்து.

10:11

Speaker A

யார் கொடுக்கப்போறா?

10:13

Speaker A

அப்படின்னு ஒன்னு இருக்கு இல்லையா.

10:14

Speaker A

குருதான் கொடுக்கணும்.

10:16

Speaker A

அப்போ குருவோட அனுகிரகம் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும் அப்படிங்கறதும் முக்கியம்.

10:21

Speaker A

அப்போ குரு ஸ்தலங்கள் குரு வழிபாடு.

10:23

Speaker A

தட்சிணாமூர்த்தி வழிபாடு.

10:26

Speaker A

ஆலங்குடி போயிட்டு வந்துரணும் யாருக்காவது இல்லைங்க எனக்கு பணம் வர வேண்டிய இடத்துல வரவே இல்லை.

10:30

Speaker A

எனக்கு ஒரு கைடன்ஸ் கரெக்டாவே இல்லை.

10:33

Speaker A

இல்லை என்கிட்ட பணம் இருக்கு ஆனா ஏதோ ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்கும்.

10:36

Speaker A

உடனே ஆலங்குடி கிளம்பி போயிடணும்.

10:39

Speaker A

ஆலங்குடி போயிட்டு அங்க வழிபாடு பண்றீங்கன்னா குரு முதல் ஸ்ட்ராங் ஆவார்.

10:44

Speaker A

அப்ப ஆலங்குடி போயிட்டு நாங்க அங்க என்ன பரிகாரங்கள் பண்ணலாம்னா.

10:47

Speaker A

படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதாவது எஜுகேஷன் ரிலேட்டடா ஏதாவது கஷ்டப்படுற ஒரு குழந்தைகளுக்கு.

10:53

Speaker A

ஒரு பெண்ணோ ஒரு பென்சிலோ ஒரு பேக்கோ ஒரு நோட்டோ ஏதோ ஒன்னு நீங்க வாங்கி கொடுக்கிறீங்கன்னா.

10:58

Speaker A

படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு காசா கொடுத்துட்டு வரக்கூடாது.

11:01

Speaker A

காசு கொடுத்து இந்த இந்த பொருள் வாங்கிக்கோன்னு கொடுக்கக்கூடாது.

11:03

Speaker A

நீங்களே அந்த பொருள் வாங்கி கொடுக்கும் பொழுதுதான் அதுக்கான பிராயச்சித்தமே அதுதான்.

11:09

Speaker A

சோ அதனால இந்த மாதிரி தானங்கள் நீங்க பண்ணுங்க.

11:12

Speaker A

உங்களுக்கு குரோத் ரொம்ப நல்லா இருக்கும்.

11:14

Speaker A

சில பேத்துக்கு வந்து எல்லாமே இருக்கும்.

11:18

Speaker A

ஆனா கர்மா ஒரு வேலை பார்த்துட்டே இருக்கும்னு ஒன்னுலாம் இருக்குது இல்லையா.

11:20

Speaker A

சோ கர்மா வேலை பார்த்துட்டு இருக்கவங்களுக்கு சனிதான்.

11:24

Speaker A

முதல் போயிட்டு பரிகார ஸ்தலங்களுக்கு போயிட்டுதான்.

11:26

Speaker A

புண்ணிய ஸ்தலங்களுக்கே போகணும்னுலாம் இருக்கு.

11:29

Speaker A

இப்ப நான் சொன்ன திருப்பதி எல்லாமே புண்ணிய ஸ்தலங்கள்.

11:35

Speaker A

இப்போ சிலருக்கு வந்து கர்மா கழிச்சு ஆகணும்.

11:40

Speaker A

இப்ப வந்து மகரத்துல எல்லாம் இருக்காங்க.

11:43

Speaker A

அவங்களுக்கு எல்லாம் முழுசா இப்ப சனி விலகுதுன்னா.

11:45

Speaker A

நன்றி சொல்லிட்டு வந்துரணும்.

11:47

Speaker A

திருநள்ளாறு போயிட்டு கர்மத்தை கழிச்சிட்டு.

11:50

Speaker A

அந்த கர்மத்தை கழிச்சிட்டு திருப்பி அங்கிருந்து நான் வந்து புண்ணிய ஸ்தலங்களுக்கு போறேன்னு பரிகார ஸ்தலம் போயிட்டு.

11:58

Speaker A

கையோட புண்ணிய ஸ்தலம் டிராவல் பண்ணிடவே கூடாது.

12:03

Speaker A

நிறைய பேர் இது நிறைய பேர் செய்யக்கூடிய தப்புதான் ஒரு ட்ரிப் ஒன்னு போடுவீங்க.

12:08

Speaker A

இந்த கோயில் ஒன்னு போறோம் ஃபார் எக்ஸாம்பிள் காளகஸ்தி போவீங்க.

12:12

Speaker A

காளகஸ்தியிலிருந்து அப்படியே திருப்பதி போறேன்னு போறது.

12:16

Speaker A

இல்ல திருப்பதியிலிருந்து அப்படியே காளகஸ்தி வரேன்னு போறது.

12:19

Speaker A

காளகஸ்திங்கறது என்னது?

12:21

Speaker A

பரிகார ஸ்தலம்.

12:23

Speaker A

திருப்பதிங்கறது என்னது?

12:24

Speaker A

புண்ணிய ஸ்தலம்.

12:25

Speaker A

புண்ணியத்தை வாங்கிட்டு வந்து இங்க பரிகாரம் பண்ணி இங்க கரைக்க போறீங்களா?

12:30

Speaker A

இல்ல இங்க கரைச்சிட்டு திருப்பி அங்க இந்த கரைச்சதை எடுத்துட்டு போயிட்டு அங்க போய் புண்ணியம் சேர்க்க போறீங்களா?

12:35

Speaker A

ரெண்டுமே வந்து இம்பேலன்ஸ் ஆயிடும்.

12:37

Speaker A

அது பிளஸ் அண்ட் மைனஸ்ங்கற மாதிரி ஒரு விஷயம் ஆயிடும்.

12:40

Speaker A

சோ அதனால ஒரு தடவை பரிகார ஸ்தலத்துக்கு போனீங்கன்னா.

12:45

Speaker A

திரும்பி வீட்டுக்கு தான் வரணும்.

12:48

Speaker A

புண்ணிய ஸ்தலத்துக்கு போனாலும் திரும்ப வீட்டுக்கு தான் வரணும்.

12:51

Speaker A

இப்படி வேணா நீங்க வந்து பிரிச்சு வச்சுக்கலாம்.

12:53

Speaker A

பரிகார ஸ்தலம்னா பரிகார ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரணும்.

12:57

Speaker A

புண்ணிய ஸ்தலம்னா புண்ணிய ஸ்தலமாவே முடிச்சிட்டு வந்துரணும்.

13:00

Speaker A

சோ இதுலயும் ரொம்ப கவனம்.

13:02

Speaker A

இத்தனை கோயிலுக்கு போய் எங்களுக்கு ஒண்ணுமே நடக்கலைன்னா.

13:06

Speaker A

கோயில் ஆகம விதிகள்னு ஒன்னு இருக்கு இல்லையா.

13:10

Speaker A

அதனாலதான் வந்து இந்த இந்த தெய்வங்களை இப்படி இப்படி வழிபாடு பண்ணுங்கன்னு நேரம் கால முறைகள் எல்லாமே இருக்கு.

13:15

Speaker A

அதையும் வந்து நீங்க புரிஞ்சுக்கணும்.

13:18

Speaker A

யாராவது வந்து பரிகாரங்கள் விட்டகுறை தொட்டகுறை வச்சிட்டு நான் புண்ணிய ஸ்தலத்துக்கு போறேன்.

13:23

Speaker A

போனேன் அப்படின்னா அதெல்லாம் புண்ணியம் தராது.

13:26

Speaker A

சோ பரிகாரம் என்னவோ முழுசா பரிகாரத்தை முடிச்சிட்டு புண்ணிய ஸ்தலங்களுக்கு போறீங்க அப்படினாலே.

13:32

Speaker A

உங்களுக்கு குரோத் அப்படிங்கறது அக்குமுலேட் ஆக ஆரம்பிச்சுரும் அப்படிங்கறதுதான்.

13:37

Speaker A

சில பேர் சொல்லுவாங்க.

13:39

Speaker A

என்னென்னமோ கோயில் நினைக்கிறாங்க ஆனா எந்த கோயிலுக்குமே என்னால போக முடியல.

13:43

Speaker A

நாங்க எப்படி குரோ ஆகுறதுன்னா.

13:45

Speaker A

வீட்ல வச்சு முருகரை வழிபாடு பண்ணுங்க.

13:48

Speaker A

ஸ்கந்த சஷ்டி கவசம் கேளுங்க.

13:49

Speaker A

வேல்மாறல் கேளுங்க.

13:50

Speaker A

பிளாக்கேஜஸ் முதல் வீட்டிலிருந்துதான் கிளியர் ஆகணும்.

13:53

Speaker A

அப்படிங்கறது ஒன்னு இருக்குது.

13:54

Speaker A

சோ இந்த வீட்ல விளக்கேத்திட்டே இருக்கணும் வீட்ல நெய் விளக்கு ஏத்திட்டே இருக்கணும்.

14:00

Speaker A

முருகரை வழிபாடு பண்ண பண்ண என்னென்ன தடைகள்லாம் இருக்கோ எல்லாமே கிளியர் ஆகி.

14:06

Speaker A

நீங்க போகக்கூடிய ஸ்தலங்களுக்கு எந்த தடையும் இல்லாம எந்த பிரச்சனையும் இல்லாம உங்களால போயிட்டு வர முடியும் அப்படிங்கறதுதான்.

14:12

Speaker A

சோ இந்த ஸ்தல வழிபாட்டு முறைகளையும் நீங்க வந்து நிறைய தெரிஞ்சு வச்சுக்கணும்.

Topics: கும்ப ராசி தசா புத்தி செல்வ செழிப்பு பரிகாரம் வழிபாடு அனுமன் வழிபாடு திருப்பதி பெருமாள் மகாலட்சுமி வழிபாடு ஜாதகம் நெட்வொர்க்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11198)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11198)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/kumbam-dasa-puthi-secret/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
