**கன்னி ராசிக்கு ராஜயோகம் தரும் முருகன் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/kanni-raajayogam-murugan-retro-aanmeegam/

கன்னி ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தரும் முருகன் வழிபாடு, செவ்வாய், புதன், வியாழன் நாட்களில் செய்ய வேண்டிய பரிகாரங்கள்.

## Key Takeaways

- கன்னி ராசிக்காரர்கள் முருகனை செவ்வாய், புதன், வியாழன் நாட்களில் வழிபாடு செய்ய வேண்டும்.
- செவ்வாய் தோஷம் வாழ்க்கை மற்றும் வீடு பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம், பரிகாரம் அவசியம்.
- முருகனை வீட்டிலும் வழிபாடு செய்யலாம், கோயிலுக்கு செல்ல முடியாவிட்டாலும் மனதில் நினைத்து வழிபாடு போதும்.
- கன்னி ராசிக்காரர்களுக்கு குழந்தை அமைப்பில் சிரமங்கள் இருக்கலாம், அதற்கான பரிகாரம் முக்கியம்.
- முருகர் வழிபாடு மூலம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் மற்றும் மனஅழுத்தம் குறைப்பு ஏற்படும்.

## What the video covers

- கன்னி ராசிக்காரர்கள் பணத்தை பிடித்துக் கொள்ளும் திறன் கொண்டவர்கள் மற்றும் ஸ்ட்ராட்டஜிக் மைண்ட் கொண்டவர்கள்.
- கன்னி ராசிக்காரர்களுக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியை வழிபாடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
- செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் முருகனை வழிபாடு செய்வது சிறந்தது.
- கன்னி ராசிக்காரர்களுக்கு குரு நீசம் காரணமாக சில மனஅழுத்தங்கள் மற்றும் இடப்பொருள் ஏவல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
- முருகனை வீட்டிலும் சிவப்பு மலர்களால் வழிபாடு செய்யலாம், கோயிலுக்கு செல்ல முடியாவிட்டாலும் மனதில் நினைத்து வழிபாடு செய்யலாம்.
- செவ்வாய் தோஷம் கன்னி ராசிக்காரர்களுக்கு முக்கியமானது, இது வாழ்க்கை மற்றும் வீடு பிரச்சனைகள் ஏற்படுத்தும்.
- செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியம், குறிப்பாக எட்டில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள்.
- கன்னி ராசிக்காரர்கள் குழந்தை அமைப்பில் சிரமங்கள் எதிர்கொள்ளலாம், அதற்கான பரிகாரமும் தேவையானது.
- முருகர் வழிபாடு மூலம் மனஅழுத்தம் குறையும் மற்றும் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
- ஜோதிடர் ஜீவிதா சுரேஷ்குமார் மூலம் கன்னி ராசிக்காரர்களுக்கான சிறந்த வழிகாட்டல் வழங்கப்படுகிறது.

Answers

## Questions about this video

கன்னி ராசிக்காரர்கள் எந்த முருகனை வணங்க வேண்டும்?

கன்னி ராசிக்காரர்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியை வழிபட வேண்டும். இந்த வழிபாடு அவர்களின் மூளைக்கு 360 டிகிரி கோணத்தில் சிந்திக்க உதவும்.

கன்னி ராசிக்காரர்களின் முக்கிய குணாதிசயங்கள் என்ன?

கன்னி ராசிக்காரர்கள் கணக்கிடும் மனது கொண்டவர்கள் மற்றும் வியூகவாதிகள். அவர்களுக்கு எது பிடிக்குமோ அதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள், மேலும் அவர்களுக்கு ஆர்வம் இல்லாத விஷயங்களில் தூங்கிவிடுவார்கள்.

கன்னி ராசிக்காரர்கள் ஏன் அவமானங்களை சந்திக்கிறார்கள்?

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு நீசம் என்பதால் அவமானங்களை சந்திக்க நேரிடும். இது அவர்களுக்கு தெரியாமலேயே தவறான இடங்களில் தவறாக பேசுவது அல்லது நடந்து கொள்வதால் ஏற்படுகிறது.

## Full Transcript — Download SRT & Markdown

00:01

Speaker A

கன்னி ராசி பணத்தை பிடிச்சுக்கும், பணத்தை பிடிச்சுச்சுன்னா பணம் தான்.

00:07

Speaker A

எல்லாமே பணம் தான், குழந்தை அமைப்புங்கறதே வந்து தெய்வ கடாட்சத்துல தான் நடக்கும்.

00:10

Speaker A

இந்த ஸ்ட்ராட்டஜிக் மைண்ட் எல்லாத்துலயும் அவங்களுக்கு யூஸ் ஆகணும் அப்படின்னா.

00:19

Speaker B

ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு வணக்கம், தொடர்ந்து ஆன்மீக ரீதியா நிறைய விஷயங்கள் பார்த்துட்டு இருக்கோம்.

00:23

Speaker B

அதுல இன்னைக்கு நம்ம என்ன பார்க்க போறோம்னா, எந்த ராசிக்காரர்கள் எந்த முருகனை வணங்கினா நல்லது அப்படிங்கறத ஜோதிடர்.

00:32

Speaker B

ஜீவிதா சுரேஷ்குமார் அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

00:33

Speaker A

வணக்கம் மேம்.

00:33

Speaker B

வணக்கம்.

00:34

Speaker B

கன்னி ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய முருகன் யாரு, கன்னி ராசிக்காரர்கள் இந்த முருகனை வணங்கினா போதும் உங்க வாழ்க்கை சிறப்பா இருக்கும் அப்படின்னா எந்த கோவில் போய் எந்த முருகனை வணங்கணும்?

00:43

Speaker A

கன்னி ராசிக்காரங்க வந்து கால்குலேட்டிவ் மைண்ட் இருக்கவங்க.

00:47

Speaker A

ஸ்ட்ராட்டஜிஸ்ட் கன்னி ராசிக்காரங்க, அது ஆணா இருக்கட்டும், பெண்ணா இருக்கட்டும், உங்கள்ட்ட ஒரு வேலை நடக்கணும்னா மட்டும் தான் உங்கள்ட்ட கரெக்டா இருப்பாங்க அவங்க.

00:54

Speaker A

அவங்களுக்கு எது பிடிக்குதோ அங்க மட்டும் தான் கான்சென்ட்ரேஷன் பண்ணுவாங்க, படிப்பே அப்படித்தான் அவங்களுக்கு, புடிச்ச சப்ஜெக்ட்ல நல்ல மார்க்ஸ் வாங்குவாங்க.

01:05

Speaker A

மத்த சப்ஜெக்ட் அவங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னா தூங்கிடுவாங்க.

01:10

Speaker A

பாக்குறவங்களுக்கு சோம்பேறி மாதிரி கூட சம்டைம்ஸ் தெரியும்.

01:13

Speaker A

அவங்களால பத்தே நாள்ல லாங்குவேஜஸ் கூட கத்துக்க முடியும்.

01:22

Speaker A

திடீர்னு அதாவது எனக்கு தெரிஞ்ச ஒரு கிளைன்ட் வந்து 10th ஸ்டாண்டர்ட்ல போய் தமிழ்.

01:30

Speaker A

தமிழ் எக்ஸாம் எழுதுனாங்க அதாவது அவங்க ஏதோ வேற லாங்குவேஜ்ல இருந்து வந்துட்டு.

01:36

Speaker A

தமிழுக்கு போனப்ப 10 நாள்ல தமிழ் படிச்சாங்க.

01:42

Speaker A

ஃபோக்கஸ் அந்த அளவுக்கு அவங்க கால்குலேட்டிவா.

01:46

Speaker A

என்ன படிச்சா என்ன நடக்கும்ங்கறது கன்னிக்கு தெரியும்.

01:50

Speaker A

ஆனா அதை தாண்டி தெரியாது.

01:51

Speaker A

யார்கிட்ட எப்படி பழகணும்.

01:54

Speaker A

ஏன்னா கன்னிக்கு வந்து குரு நீசம்.

02:00

Speaker A

குரு நீசம் அப்படினாலே அவமானங்களை சந்திக்கக்கூடிய அமைப்பு.

02:05

Speaker A

அவமானங்கள் எப்படின்னா தனக்கே தெரியாது அவமானத்தை சந்திக்கிறாங்கன்னு.

02:10

Speaker A

இடப்பொருள் ஏவல் தெரியாம பேசுறது, நடந்துக்கிறது, திட்டிட்டு வந்துறது, எங்க நல்லா பேசணுமோ அங்க மாத்தி பேசிட்டு வந்துறது.

02:19

Speaker A

பட் ப்ரொபஷனல் வைஸ் பார்த்தா கரெக்ட்.

02:21

Speaker A

வீட்டை கரெக்டா நடத்துறாங்களா கன்னி கரெக்டா வழிநடத்தும்.

02:25

Speaker A

மரியாதை கொடுக்க தெரியாது, மரியாதையை அரைகுறையுமா கொடுத்துட்டு வந்துறது, எங்க கொடுக்க கூடாதோ அங்க நல்லா கொடுத்துட்டு வந்துறது.

02:32

Speaker A

சோ இந்த இந்த ஸ்ட்ராட்டஜிக் மைண்ட் எல்லாத்துலயும் அவங்களுக்கு யூஸ் ஆகணும் அப்படின்னா.

02:39

Speaker A

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியை அவங்க வழிபாடு பண்ணனும்.

02:44

Speaker A

அப்படி பண்றப்ப இவங்களுக்கு என்னன்னா 360 டிகிரிஸ்லயும் ஃபர்ஸ்ட் மைண்ட் பார்க்கணும்.

02:50

Speaker A

அவங்களுக்கு.

02:51

Speaker A

இந்த குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரி தான் கன்னி ராசி.

02:55

Speaker A

அப்படியே ஃபோக்கஸ்டாவே போயிட்டு இருக்கும்.

02:59

Speaker A

ஃபுட் பிடிக்கும்னா ஃபுட் மட்டும் தான் பிடிச்சிட்டே இருக்கும்.

03:01

Speaker B

சோ இந்த சீசன் மாதிரி.

03:02

Speaker A

சீசன் மாதிரி இல்லை, ஒரு விஷயத்தை அவங்க புடிச்சிட்டாங்க.

03:07

Speaker A

இப்ப கன்னி ராசி பணத்தை பிடிச்சுக்கும்.

03:10

Speaker A

பணத்தை பிடிச்சுச்சுன்னா பணம் தான்.

03:12

Speaker A

எல்லாமே பணம் தான்.

03:14

Speaker A

அதாவது நம்பர்ஸ்லயே பேசுவாங்க.

03:16

Speaker B

ஓகே.

03:17

Speaker A

நம்பரிங்காவே இருக்கும்.

03:20

Speaker A

ஃபுட்டா ஃபுட்டாவே பேசுவாங்க.

03:24

Speaker A

அதாவது இந்த உலகமே இந்த காஸ்டியூமால உருவானதுங்கற மாதிரியே இருக்கும்.

03:30

Speaker B

ஓகே.

03:30

Speaker A

குடும்பம் அப்படின்னா ஒரு ஒரு நார்ம்ஸ புடிச்சிட்டாங்கன்னா அந்த நார்ம்ஸ்லயே இருப்பாங்க.

03:35

Speaker A

மத்த விஷயங்களும் இருக்கு இல்லையா.

03:37

Speaker A

அவங்களுக்கு தாழ்வு மனப்பான்மையும் அதிகம் உண்டு.

03:41

Speaker A

கன்னி ராசிக்காரங்களுக்கு இன்னொரு விஷயம் என்னன்னா அவங்களுக்கும்.

03:46

Speaker A

ரீப்ரோடக்டிவ் சிஸ்டம்ல கொஞ்சம் இஸ்யூஸ் இருக்கும்.

03:50

Speaker A

கன்னி ராசிக்காரங்களுக்கு.

03:51

Speaker A

தனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரியாது.

03:55

Speaker A

அவங்க ரீப்ரோடக்டிவ் சிஸ்டமை கரெக்டா பாத்துக்கணும்.

03:58

Speaker A

புதிதா கல்யாணம் ஆகுறவங்களுக்கும் நான் சொல்ற விஷயம் என்னன்னா குழந்தையை தள்ளி போடுறதோ.

04:04

Speaker A

இல்ல அபார்ட் பண்ணிக்கலாம்னு நினைக்கிறதோ.

04:07

Speaker A

ஏன்னா கன்னி ராசிக்காரங்களுக்கு குழந்தை அமைப்புங்கறதே வந்து தெய்வ கடாட்சத்துல தான் நடக்கும்.

04:14

Speaker A

அது.

04:15

Speaker A

இல்லைன்னா அவங்க வந்து ட்ரீட்மென்ட் எடுக்கிற மாதிரி சிச்சுவேஷன்.

04:19

Speaker A

சப்போஸ் நீங்க கன்சீவ் ஆயிட்டீங்க, பணம் ரீதியா பிளான்ஸ் போடாம.

04:26

Speaker A

பினான்சியல் ரீதியா நான் இன்னும் பெரிய ஆளாயிட்டு நான் குழந்தை பெத்துக்கிறேன்னு நினைச்சீங்கன்னா டிலே ஆயிடும்.

04:30

Speaker A

சோ முதல்ல அதுல ஃபோக்கஸ் பண்ணனும்.

04:32

Speaker B

அவங்க எல்லா முருகன் கோயில்லயும் செவ்வாய்க்கிழமை ஆனால் கூட்டம் கூட்டமா மக்கள் போறாங்க.

04:37

Speaker B

அதுக்கப்புறம் அப்படின்னு பார்த்தா வியாழக்கிழமை முருகனை பார்க்க.

04:43

Speaker B

யாரனாலயும் முருகனை பார்க்கவே முடியல.

04:48

Speaker B

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அப்படின்னு சொல்லிட்டு ரிட்டர்ன் வந்துறாங்க.

04:51

Speaker B

ஏன் அந்த ரெண்டு கிழமைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறாங்க?

04:53

Speaker A

ஏன்னா செவ்வாய் காரகன்.

04:56

Speaker A

அதே மாதிரி முருகரை வந்து குருவாவும் பார்க்கப்படுது.

04:59

Speaker A

அதனாலதான் வந்து வியாழன்.

05:01

Speaker A

அதனாலதான் இந்த ரெண்டு நாள்.

05:02

Speaker A

இப்போ அது எப்படி வழிபடலாம்னா.

05:06

Speaker A

இப்ப நீங்க செவ்வாய்க்கிழமை போயிட்டீங்க.

05:10

Speaker A

தங்கிடுங்க.

05:12

Speaker A

புதன்கிழமையும் வழிபாடு பண்ணுங்க.

05:15

Speaker A

ஏன்னா வந்து புதன் புத்தி.

05:17

Speaker A

அந்த புத்திக்கும் முருகர் வேலை பார்ப்பார்.

05:20

Speaker A

அதனால அந்த புத்திக்கும் சேர்த்து வழிபாடு பண்ணிட்டு.

05:23

Speaker A

நீங்க கிளம்பிக்கலாம்.

05:25

Speaker A

இல்லைன்னா புதன்கிழமை போய் தங்கிட்டு வியாழக்கிழமை வழிபாடு பண்ணிட்டு வாங்க.

05:30

Speaker A

இதுதான் அந்த காம்பினேஷன்.

05:31

Speaker A

செவ்வாய், புதன், வியாழன்.

05:33

Speaker A

இந்த மூணும்.

05:35

Speaker A

இந்த இந்த மூணு நாள் இவங்க வழிபாடு பண்றாங்க.

05:40

Speaker A

இந்த மூணு நாள் கண்டினியூஸா வழிபாடு பண்ணுனாலும் சிறப்போ சிறப்பு.

05:43

Speaker A

ஏன்னா வந்து அந்த புதன் அப்படிங்கறது அங்க இருக்க சித்தர்களையும்.

05:48

Speaker A

குறிக்கும்.

05:50

Speaker A

இந்த பச்சையையும் குறிக்கும்.

05:52

Speaker A

மயிலையும் குறிக்கும்.

05:54

Speaker A

சோ அது வந்து ஹிடன் நாலேட்ஜ்.

05:56

Speaker A

புதன் அப்படிங்கறது.

05:57

Speaker A

முருகர் கிட்ட அந்த ஹிடன் நாலேட்ஜ் உண்டு.

05:59

Speaker A

அதனால இந்த செவ்வாய், புதன், வியாழன் இப்படி வந்து கணக்கு வச்சிட்டு கூட நீங்க வந்து வழிபாடு பண்ணலாம்.

06:03

Speaker A

இந்த கூட்டத்துல தான் போய் கும்பிடணும் அப்படிங்கறது இல்லை.

06:06

Speaker A

முருகரை தனிச்சு நம்ம கும்பிடலாம்.

06:08

Speaker A

ஆனா இந்த இந்த நாட்கள்ல வந்து இவங்களுடைய எனர்ஜி பவர் ஸ்ட்ராங்கா இருக்கிறதா.

06:14

Speaker A

அந்த கிழமைகள்ல அவங்களுடைய எனர்ஜி வந்து.

06:18

Speaker A

நம்மளுடைய எனர்ஜியும் அந்த எனர்ஜியும் கனெக்ட் ஆகுதுங்கறப்ப.

06:22

Speaker A

உங்களுக்கு குருவா நீங்க பாக்குறீங்கன்னா வியாழக்கிழமை.

06:26

Speaker A

நீங்க பக்தரா போறீங்க அப்படின்னா செவ்வாய்க்கிழமை.

06:29

Speaker A

உங்களுக்கு ஞானம் வேணும்னா புதன்கிழமை.

06:31

Speaker B

இப்ப வந்து கோயிலுக்கே போக முடியாதவங்க இருப்பாங்க.

06:36

Speaker B

நீங்க சொல்ற மாதிரி செவ்வாய், புதன், வியாழன் என்னால கோயில்கள் எல்லாம் போய் தங்க முடியாது.

06:40

Speaker B

நான் வந்து வீட்லயே எனக்கு பிடிச்ச முருகன் போட்டோவை வச்சு நான் வழிபடலாமா இந்த மாதிரி.

06:47

Speaker A

தாராளமா அதாவது முருகரை வந்து.

06:50

Speaker A

சிவப்பு மலர்களால் அவரை வந்து வழிபாடு பண்ணனும்.

06:53

Speaker A

வீட்ல வந்து ஒரு ரோஸோ இல்ல செம்பருத்தியோ இதெல்லாம் போட்டு நீங்க முருகரை வழிபாடு பண்றப்ப.

06:59

Speaker A

முருகரை மனசுல நினைச்சிட்டாலே போதும்.

07:01

Speaker A

வேல்மாறல் கேட்கிறதோ.

07:03

Speaker A

ஸ்கந்த சஷ்டி கவசம் கேட்கிறதோ.

07:05

Speaker A

இந்த மாதிரி அவருடைய அந்த மந்திரங்கள்ல கேட்டாலே போதும்.

07:10

Speaker A

முருகர் வந்து வந்து உட்கார்ந்துருவார்.

07:12

Speaker A

நீங்க வந்து கோயிலுக்கு போகணும்னு இல்லை.

07:14

Speaker A

நீங்க வந்து கற்பனையிலேயே அங்க போயிட்டு வந்துரலாம் நீங்க.

07:16

Speaker A

முருகர் அழைக்கணும்னு நினைச்சிட்டாருன்னா அது எப்படியாவது அழைச்சு டக்குன்னு போய் நிக்கிற மாதிரி தான் இருக்கும் முருகர்.

07:20

Speaker B

சோ 12 ராசிக்காரர்களும் எந்தெந்த முருகனை வணங்கினா சிறப்பா இருக்கும்னு ரொம்ப அருமையா சொன்னீங்க மேம்.

07:23

Speaker B

இப்ப முருகன் அப்படின்னு சொன்னாலே.

07:25

Speaker B

செவ்வாய் காரகர் அப்படின்னு சொல்லுவாங்க.

07:27

Speaker B

சிவப்பு கலருக்கு சொந்தக்காரர்.

07:30

Speaker B

ரத்த குருதி கலருக்கு சொந்தக்காரர் அப்படின்னு சொல்லுவாங்க.

07:32

Speaker B

சோ முருகனை வணங்குறவங்க அதிகமா பார்த்தா வந்துட்டு செவ்வாய்க்கிழமை போய் கும்பிடுவாங்க.

07:37

Speaker B

சில பேர் ஜாதகக்காரர் கிட்ட போனா வந்து என்னதான் நட்சத்திரம், தசாபுத்தி எல்லாமே பார்த்தாலுமே.

07:42

Speaker B

செவ்வாய் தோஷம் அப்படின்னு இருந்தா அதுக்கான சில பரிகாரங்கள் சில விஷயங்கள் சொல்லுவாங்க.

07:46

Speaker B

அதுவும் அதிகமா பார்த்தா முருகனை நோக்கியே இருக்கும்.

07:49

Speaker B

சோ செவ்வாய் தோஷத்தை பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லுங்க மேம்.

07:51

Speaker A

அதாவது நம்மளுக்கு வந்து கட்டங்கள்ல எங்கெங்க செவ்வாய் உட்கார்ந்திருக்கு.

07:55

Speaker A

அப்படிங்கறதுதான் அதனுடைய கணக்கு.

07:58

Speaker A

இப்ப நாலுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு.

08:04

Speaker A

12ல செவ்வாய் உட்கார்ந்திருக்கு, ஒன்பதுல செவ்வாய் உட்கார்ந்திருக்கு.

08:08

Speaker A

இப்படி எல்லாம் ஒவ்வொரு இடத்துலயும் செவ்வாய்க்கு வந்து ஒவ்வொரு காரக பலன்கள் இருக்கு.

08:12

Speaker A

இப்ப நாலுல செவ்வாய் உட்கார்ந்திருக்குன்னா பார்ஷியலா செவ்வாய் தோஷம்.

08:16

Speaker A

எட்டுல செவ்வாய் உட்கார்ந்திருக்குன்னா முழுசா செவ்வாய் தோஷம்.

08:19

Speaker A

சோ இந்த செவ்வாய் தோஷம் ஒரு லைஃப் பார்ட்னருக்கு மட்டும் தான் இஸ்யூ கொடுக்குமா அப்படின்னா.

08:24

Speaker A

அவங்க வாழ்க்கையில யாரெல்லாம் பார்ட்னரா வராங்களோ.

08:27

Speaker A

ஏதோ ஒரு இஸ்யூ, ஏதோ ஒரு மனசை உடைச்சிட்டு போகக்கூடிய விஷயங்கள்.

08:30

Speaker A

அவங்களால ஏதாவது ஒரு ப்ராப்ளம் வரது.

08:32

Speaker A

அந்த மாதிரி வந்து இருக்கும்.

08:35

Speaker A

அதாவது இப்ப நாலுல செவ்வாய் இருக்கவங்களுக்கு அவ்வளவு சீக்கிரம் வீடு அமையாது.

08:40

Speaker A

சொந்த வீடு அமையாது.

08:42

Speaker A

அவங்களுக்கு தான் இந்த வீடு பிரச்சனை வருது.

08:45

Speaker A

லைஃப் பார்ட்னர்ட்ட போவாங்க நல்லா இருக்கும்.

08:50

Speaker A

எங்கயாவது ஒரு மனஸ்தாபம் வந்தா மனசு ஒட்டாது.

08:53

Speaker A

இப்ப எட்டுல செவ்வாய் இருக்கவங்களுக்கு கண்டிப்பா நீங்க வந்து செவ்வாய்க்கான பரிகாரம் பண்ணுங்க.

08:58

Speaker A

அப்படிங்கறது அவங்களுக்கு சொல்லிடுவாங்க.

09:00

Speaker A

எப்படின்னா அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணுங்க.

09:03

Speaker A

ஏன்னா நிதானம் இருக்காது.

09:05

Speaker A

ஆக்ரோஷமா இருக்கிறது.

09:08

Speaker A

அதுவும் உங்களுக்கு செவ்வாய் வக்கிரம்லாம் ஆயிடுச்சு அப்படின்னா.

09:10

Speaker A

இன்னும் கஷ்டம்.

09:12

Speaker A

அப்போ இவங்க எப்படி செவ்வாய் எப்படி வழிபாடு பண்ணனும்னா.

09:16

Speaker A

நிறைய பேத்துக்கு செவ்வாய் வழிபாட்டு முறை சொல்லி தான் ஆகணும்.

09:18

Speaker A

கண்டிப்பா.

09:20

Speaker A

செவ்வாய்ங்கிறது நம்மளுடைய விதியில ஏதோ ஒரு பெரிய பங்கம் இருக்கு.

09:24

Speaker A

அப்படின்னுங்கறது சொல்றதுதான் அது.

09:26

Speaker A

அதை சரி பண்ணிக்கணும்.

09:28

Speaker A

இப்ப செவ்வாய் திசை எனக்கு போயிட்டு இருக்கு அப்படின்னா.

09:31

Speaker A

நான் என்னோட அப்பாவை நான் பார்க்கணும்.

09:33

Speaker A

அப்படி அவங்க யோசிக்கணும்.

09:34

Speaker A

என் அப்பாவுக்கு என்ன ஆகப்போகுது?

09:36

Speaker A

ஹெல்த் பார்க்கிறது.

09:38

Speaker A

அதாவது அப்பாவுக்கு ஏதாவது ரத்தக்காயங்கள் நடக்கக்கூடிய அமைப்பு.

09:41

Speaker A

அவங்க அந்த நேரத்துல கொஞ்சம் சரியா இருந்துக்கிறது.

09:44

Speaker A

இப்ப செவ்வாய் ரொம்ப உக்கிரமா இருக்குது.

09:47

Speaker A

ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கு.

09:50

Speaker A

இப்போ அந்த குழந்தை வளர வளர இந்த குழந்தை ஸ்ட்ராங் ஆயிட்டே போகுதுன்னா.

09:54

Speaker A

அப்பாவோடது வீக் ஆயிட்டே போகுதுன்னா.

09:56

Speaker A

கொஞ்சம் ஜாக்கிரதையா கொஞ்சம் பார்க்கிறது.

09:58

Speaker A

ஹெல்த் வைஸ் பண்ணாது.

10:00

Speaker A

டக்குன்னு ஏதாவது ஒரு ஆக்சிடென்ட்ஸ் பண்ணி விட்டுரும்.

10:02

Speaker A

ஏதோ ஒன்னு பண்ணி விட்டுரும்.

10:04

Speaker A

இல்லை இவங்களுடைய நல்ல விஷயங்களை பார்க்க விடாது.

10:07

Speaker A

செவ்வாய்.

10:08

Speaker A

வாழ்க்கையில ஏன்னா.

10:10

Speaker A

ஏன்னா கேது வந்து அந்த இடத்துல வேலை பார்க்கும்.

10:12

Speaker A

செவ்வாய்க்கு.

10:13

Speaker A

ஏன்னா செவ்வாய் வந்து ரொம்ப அவசரம்.

10:16

Speaker A

புத்தி உடையது.

10:17

Speaker A

கேது தான் நிதானத்தை கொடுக்கும்.

10:19

Speaker A

அப்ப கேது எப்படி நிதானத்தை கொடுக்கும்னா.

10:22

Speaker A

யாரை ரொம்ப பிடிக்குமோ அவங்களை தூக்கிடும்.

10:24

Speaker B

ஓகே.

10:25

Speaker A

அதுல நம்மளுக்கு ஒரு அப்செட் கொடுக்கும்.

10:28

Speaker A

கொடுத்து அதுக்கப்புறம் உங்களை வந்து ஒரு அமைதி நிலைக்கு கொண்டு போய்.

10:32

Speaker A

அந்த செவ்வாய்னாலே அந்த உக்கிரமா இருந்து.

10:35

Speaker A

எல்லாமே நான் தான் அப்படிங்கிற ஒரு தாட் ப்ராசஸ் இருக்கும் அவங்களுக்கு.

10:40

Speaker A

இது எல்லாம் உடைக்கிற வேலை கேது பார்த்துட்டு இருக்கும்.

10:42

Speaker A

சனியும் இந்த வேலையை பார்த்துட்டு இருக்கும்.

10:44

Speaker A

சனியும் அவங்களுக்கு சில பிரச்சனைகளை கொடுத்துட்டு இருக்கும்.

10:46

Speaker A

சோ இவங்க மெத்தடே எப்படி பண்ணனும்னா.

10:49

Speaker A

காலபைரவரை வழிபாடு பண்ணனும்.

10:51

Speaker B

ஓகே.

10:52

Speaker A

அஷ்டமி அமாவாசையில காலபைரவரை வழிபாடு பண்ணி.

10:56

Speaker A

காலபைரவருக்கு அஷ்டமியில போய் விளக்கு போடணும்.

11:00

Speaker A

விளக்கு போட்டு முதல் வந்து அதுதான் பிராயச்சித்தம்.

11:02

Speaker A

பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் தேடணும்.

11:05

Speaker A

பிராயச்சித்தம் பண்ணிட்டு.

11:07

Speaker A

அங்க அதாவது அஷ்டதிக் பாலகர்கள் கூட சொல்லுவாங்க.

11:10

Speaker A

அஷ்டதிக் பாலகர்களை தொட்டுலாம் வழிபாடு பண்ணக்கூடாது.

11:13

Speaker A

அஷ்டதிக் பாலகர்களை வந்து நினைச்சுக்கணும்.

11:15

Speaker A

உன்னை எல்லாம் பார்த்துட்டே இருக்காங்க அப்படின்னு சொல்லுவாங்க.

11:18

Speaker A

அது அஷ்டதிக் பாலகர்கள் தான் பார்த்துட்டே இருப்பாங்க.

11:21

Speaker A

எட்டு திசையில இருந்தும் பார்க்கக்கூடியவங்க அவங்க.

11:24

Speaker A

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரையும் அவங்க வழிபாடு பண்ணனும்.

11:27

Speaker A

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் வந்து எப்படின்னா.

11:31

Speaker A

அவருக்கு கீழ ஆறு சிவன் இருக்கும்.

11:33

Speaker A

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு கீழ ஒரு ஆறு சிவன் இருக்கும்.

11:35

Speaker A

அவங்களும் பார்த்தீங்கன்னா ஆறு திசைகளை பார்த்துட்டு இருப்பாங்க.

11:38

Speaker A

ஈஸ்ட், வெஸ்ட், நார்த், சவுத், அப்வேர்ட், டவுன்வேர்ட் அப்படின்னு பார்த்துட்டு இருப்பாங்க.

11:41

Speaker A

இது எப்படின்னா.

11:43

Speaker A

எல்லா திசைகளிலும் நான் என் சரணாகிறேன்ங்கறதுதான் அது.

11:47

Speaker A

அதுதான் அந்த செவ்வாய் காரகன்.

11:48

Speaker A

இது எல்லாம் அந்த கர்மாவை இறக்கி வைக்கணும் ஃபர்ஸ்ட்.

11:51

Speaker A

கர்மாவை இறக்கி வச்சிட்டு தான் செவ்வாய் ஸ்தலத்துக்கே போகணும்.

11:55

Speaker A

அப்பதான் செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்கும்.

11:58

Speaker A

இல்லைன்னா செவ்வாய்க்கான பரிகாரம் வேலை பார்க்காது.

12:01

Speaker A

பிராயச்சித்தத்தை முடிச்சிட்டு பரிகாரம் பண்ணனும்.

12:03

Speaker B

நீங்க ஒரு விஷயம் தெளிவா சொன்னீங்க மேம்.

12:06

Speaker B

பிராயச்சித்தம் பண்ணிட்டு தான் வந்துட்டு பரிகாரத்தை பார்க்கணும்னு சொல்லிட்டு.

12:10

Speaker B

இப்ப செவ்வாய் தோஷம் அப்படின்னு சொல்லும்போது எல்லாருக்குமே ஒரு மைண்ட்ல வரது வந்துட்டு.

12:15

Speaker B

பெண்களை தான் அதிகமா சொல்லுவாங்க இந்த பொண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு.

12:20

Speaker B

இந்த பொண்ணை கல்யாணம் பண்ண வேணாம்.

12:21

Speaker B

இந்த பொண்ணை கட்டறதுனால வந்துட்டு பையனுக்கு ஏதாவது ஆயிரும், இந்த பொண்ணை கட்டறதுனால வந்துட்டு என் வீட்டு வீடுல நல்லா இருக்காது.

12:27

Speaker B

வீடு நல்லா இல்லைன்னு சொல்லிட்டு முழுக்க முழுக்க குறை சொல்றதை பார்த்தா அந்த பொண்ணோட ஜாதகத்தை மட்டும்.

12:31

Speaker B

அந்த பொண்ணோட ஜாதகத்துல இருக்க கட்டம் அந்த செவ்வாய் கட்டத்தை மட்டும் சொல்றாங்க.

12:35

Speaker B

அது உண்மைதானா மேம்?

12:36

Speaker A

அதாவது அவங்களுக்கு கொஞ்சம் லேட் மேரேஜ் பண்ணிக்கிறது நல்லது.

12:39

Speaker A

பரிகாரங்கள் மூலமா அதை சரி பண்ணிக்க முடியும்.

12:41

Speaker A

ஒரு 28 வயசுக்கு அப்புறம் வந்து அது கொஞ்சம் குறைய ஆரம்பிச்சிரும் அவங்களுக்கு.

12:45

Speaker A

அது என்ன அப்படின்னா ஹஸ்பண்டுக்கு உடம்பு சரியில்லாம போகலாம்.

12:49

Speaker A

அந்த மாதிரி விஷயங்கள் தான்.

12:51

Speaker A

ஆனா அவங்களால குடும்பம் கொலைய போகுது, சீர்கெட போகுது அந்த மாதிரிலாம் கிடையாது.

12:55

Speaker A

அந்த மாதிரிலாம் இஸ்யூஸ் ஆகாது.

12:56

Speaker A

ஏன்னா அவங்க எல்லாம் வந்து காத்திருக்கக்கூடிய அமைப்புல இருக்கவங்க.

13:02

Speaker A

ஏன்னா அவங்க அவங்க அது பண்ணல.

13:04

Speaker A

அவங்களால அது நடக்கல.

13:06

Speaker A

இது வந்து அவங்களுடைய கர்மா.

13:08

Speaker A

அதனாலதான் கர்மாவை இந்த பக்கம் கழிச்சிட்டு இங்க.

13:10

Speaker A

ஏன்னா அந்த கர்மாவை டோட்டலா நம்ம அங்க கழிக்கிறப்ப.

13:12

Speaker A

இங்க இது கிளியர் ஆயிடும்.

13:15

Speaker A

ஒரு 28 வயசுக்கு அப்புறம்லாம் ரொம்ப நார்மல் லைஃப் தான் வாழ்வாங்க.

13:18

Speaker A

செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களுக்கு செவ்வாய் தோஷக்காரங்களே கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்படிங்கறதெல்லாம் வந்து 28 வயசு வரைக்கும் தான்.

13:24

Speaker A

28 வயசு தாண்டிடுச்சு அப்படின்னா உங்களுக்கு லக்னம் வேலை பார்க்க ஆரம்பிச்சிரும்.

13:28

Speaker A

அங்க செவ்வாய் செவ்வாயுடைய பவர் வந்து குறைய ஆரம்பிச்சு.

13:31

Speaker A

குருவை ஸ்ட்ராங் பண்ணனும்.

13:33

Speaker A

அவங்க ஜாதகத்துல குருவை எவ்வளவு ஸ்ட்ராங் பண்றாங்களோ.

13:37

Speaker A

குரு ஸ்ட்ராங் பண்றது வந்து குரு வழிபாடு.

13:38

Speaker A

குரு குருமார்களை மதிக்கிறது.

13:40

Speaker A

ஏன்னா.

13:42

Speaker A

செவ்வாய் குரு காம்பினேஷன் எப்படி அப்படின்னா.

13:45

Speaker A

குருவை விட செவ்வாய்க்கு நிறைய தெரிஞ்சிருந்தாலும் செவ்வாய் குரு கிட்ட கொஞ்சம் அடக்கியே வாசிக்கும்.

13:51

Speaker A

அப்போ அங்க குரு இருக்கப்ப செவ்வாய் கொஞ்சம் அடங்கும்.

13:53

Speaker A

சில ஸ்தலங்கள்ல எல்லாம் பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க.

13:56

Speaker A

விஷ்ணுக்கு நேரா கூட முருகரை வச்சிருப்பாங்க.

14:00

Speaker A

அதுவும் பார்த்தீங்கன்னா அது மாதிரி ஒரு குரு செவ்வாய் காம்பினேஷன் தான் அது.

14:03

Speaker A

அப்படி இருக்கப்ப கொஞ்சம் அடக்கி வாசிக்கும்.

14:07

Speaker A

குருவை ஸ்ட்ராங் பண்ணிட்டா.

14:09

Speaker A

செவ்வாய் தோஷம் எதுவும் ஒன்னும் பண்ணாது.

14:11

Speaker A

குரு குரு தான் மாங்கல்யத்தை கொடுக்கக்கூடியது.

14:13

Speaker A

செவ்வாய் அதை கெடுக்கக்கூடிய மாதிரி இருந்தாலும் குரு பவர்ஃபுல்லா ஜாதகத்துல இருக்குன்னா துணிஞ்சு கல்யாணம் பண்ணலாம்.

14:18

Speaker A

குரு ஸ்ட்ராங்கா இருக்கக்கூடிய ஜாதகக்காரங்க கூட செவ்வாய் தோஷத்துல இருக்கவங்களை கல்யாணம் பண்ணாங்கன்னா.

14:23

Speaker A

அவங்க ஜாதகத்துல குரு ஸ்ட்ராங்.

14:25

Speaker A

அப்ப எதுவும் நடக்காது.

14:26

Speaker B

சோ செவ்வாய் தோஷம்னா என்ன அதுக்கு என்ன பரிகாரங்கள் செய்யணும்.

14:30

Speaker B

பரிகாரத்துக்கு முன்னாடி பிராயச்சித்தம் ரொம்ப முக்கியம் அப்படிங்கறதையும்.

14:34

Speaker B

செவ்வாய் தோஷம் இருக்கவங்க செவ்வாய் தோஷத்தை கல்யாணம் பண்ணலாம்.

14:39

Speaker B

அதுக்கும் இந்த மாதிரியான நிபந்தனைகள் இருக்கு அப்படிங்கறதையும் ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க.

14:43

Speaker B

தொடர்ந்து பேசுவோம் நன்றி மேம்.

Topics: கன்னி ராசி முருகன் வழிபாடு ராஜயோகம் செவ்வாய் தோஷம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் ஆன்மீகம் ஜோதிடம் பரிகாரம் தமிழ் ஆன்மீகம் ஜீவிதா சுரேஷ்குமார்

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11421)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11421)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/kanni-raajayogam-murugan-retro-aanmeegam/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
