**கன்னி - காத்திருக்கும் மிகப்பெரிய முன்னேற்றம் | Kanni | Jeevitha Sureshkumar | Retro Aanmeegam — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/kanni-biggest-progress-jeevitha-sureshkumar-retro-aanmeegam/

கன்னி ராசிக்காரர்களின் கடன் பிரச்சனைகள் மற்றும் அதிலிருந்து மீள வழிகள், பெருமாள் வழிபாடு மற்றும் நாராயண பூஜையின் முக்கியத்துவம்.

## Key Takeaways

- கன்னி ராசிக்காரர்கள் கடன் பிரச்சனைகளில் அதிகம் சிக்குவர், அதற்கான காரணம் ஓவர் கான்பிடன்ஸ் மற்றும் பேராசை.
- பெருமாள் வழிபாடு மற்றும் நாராயண பூஜை கடன் சுமையை குறைக்க உதவும் ஆன்மீக வழிகள்.
- ஸ்டாக் மார்க்கெட் முதலீட்டில் கவனம் செலுத்தாமல் கடன் வாங்குவது சூதாட்ட மனப்பான்மையை ஏற்படுத்தும்.
- திட்டமிட்டு கோவிலுக்கு சென்று வழிபாடு மற்றும் ஆன்மீக கதைகள் கேட்கும் பழக்கம் கடன் பிரச்சனைகளை சமாளிக்க உதவும்.
- சரியான ஆலோசனைகள் மற்றும் மனநிலை மாற்றம் கடன் சுமையை குறைக்க முக்கியம்.

## What the video covers

- கன்னி ராசிக்காரர்கள் கடனில் அதிகமாக விழும் காரணங்கள் மற்றும் சூதாட்ட மனப்பான்மையை விளக்கம்.
- கன்னி ராசிக்காரர்களின் ஓவர் கான்பிடன்ஸ் மற்றும் பேராசை கடன் பிரச்சனைகளை உருவாக்குகிறது.
- ஸ்டாக் மார்க்கெட்டில் கடன் வாங்கி முதலீடு செய்வது மற்றும் அதன் விளைவுகள்.
- கடன் சுமையை குறைக்க பெருமாள் வழிபாடு மற்றும் திருப்பதி தரிசனத்தின் முக்கியத்துவம்.
- நாராயண பூஜை மற்றும் நாராயண சம்பந்தப்பட்ட கதைகள் கேட்கும் வழி கடன் பிரச்சனைகளை குறைக்க உதவும்.
- கன்னி ராசிக்காரர்களுக்கு மனநிலை மாற்றம் மற்றும் தவறான ஆலோசனைகள் கடன் சுமையை அதிகரிக்கிறது.
- திட்டமிட்டு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது கடன் பிரச்சனைகளை சமாளிக்க உதவும்.
- திருச்செந்தூரில் தட்சிணாமூர்த்தி வழிபாடு கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
- கடன் பிரச்சனைகளுக்கு ஜோதிடம் மற்றும் ஆன்மீக வழிகாட்டல் முக்கியம்.
- கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கை பாதையில் கடன் பிரச்சனைகளை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

Answers

## Questions about this video

கன்னி ராசிக்காரர்கள் கடன் வாங்க முக்கிய காரணம் என்ன?

கன்னி ராசிக்காரர்கள் தங்கள் மீதுள்ள அதிக நம்பிக்கையாலும் (ஓவர் கான்பிடன்ஸ்) மற்றும் பேராசையாலும் அகலக்கால் வைத்து கடன் வாங்குகின்றனர். மேலும், மற்றவர்கள் ஒரு துறையில் சிறப்பாக செயல்படுவதைப் பார்த்து, தானும் அதில் முதலீடு செய்ய நினைப்பதும் ஒரு காரணம்.

கன்னி ராசிக்காரர்கள் பொதுவாக எப்படிப்பட்டவர்கள்?

கன்னி ராசிக்காரர்கள் பொதுவாக கூர்மையானவர்களாகவும், கவனம் செலுத்துபவர்களாகவும், தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவானவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், சில சமயங்களில் பேராசையும் அதிக நம்பிக்கையும் அவர்களை தவறான முடிவுகளை எடுக்கத் தூண்டும்.

கடன் வாங்கிய கன்னி ராசிக்காரர்கள் எப்படி மீண்டார்கள் என்று ஜோதிடர் எதை வைத்து சொல்கிறார்?

ஜோதிடர் தனது அனுபவத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த காரணத்திற்காக கடன் வாங்கினார்கள், அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதை வைத்து கன்னி ராசிக்காரர்களின் கடன் பிரச்சனைகள் பற்றி விளக்குகிறார்.

## Full Transcript — Download SRT & Markdown

00:02

Speaker A

ஓவர் கான்பிடன்ஸ்ல என்ன பண்ணுவீங்க பாத்துக்கலாம் அப்படின்னுட்டு அகலக்கால் போய் வச்சறது.

00:08

Speaker A

நிறைய கடன் வாங்குனாங்க வீட்டுக்கு போய் பாருங்க வீட்டுக்குள்ள ஒண்ணுமே இருக்காது அப்ப எதுக்கு கடன் வாங்குனீங்க அப்படின்னா எதுக்கு வாங்கணும்னே தெரியாது.

00:15

Speaker A

கன்னி ராசிக்காரங்களுக்கு வந்து அந்த சூதாட்ட மைண்ட்செட்ங்கிறது அப்பப்போ எட்டிப்பாக்கும் சுயத்தன்மையை இழக்க இழக்க கன்னி ராசிக்காரங்க வந்து கடன்ல அதிகமா விழுவாங்க.

00:25

Speaker A

ரெட்ரோ ஆன்மீக நேயர்களுக்கு எனது வணக்கங்கள்.

00:29

Speaker A

இன்னைக்கு நம்ம பார்க்க போற விஷயம் என்ன அப்படின்னா வாழ்க்கையில யாருக்கு தான் கடன் இல்லை.

00:35

Speaker A

இல்லையா எல்லாத்துக்கும் பணம் சம்பாதிக்கணும் அட் தி சேம் டைம் எப்படி சம்பாதிக்கிறது இப்ப இருக்க காலகட்டங்கள்ல கடன் வாங்காம எதுவுமே எங்களால பண்ண முடியலையே அப்படிங்கிற கேள்வி அம்பானிக்கு கூட உண்டு எல்லாத்துக்குமே உண்டு இந்த கேள்வி.

00:46

Speaker A

அப்படி இருக்கப்போ இந்த 12 ராசிகளுக்கும் அவங்க கடந்து வரக்கூடிய அந்த வாழ்க்கை பாதைன்னு வரப்போ அட் எனி காஸ்ட் ஏதோ ஒரு சிச்சுவேஷன்ல கடன் வாங்கக்கூடிய ஒரு அமைப்பு அப்படிங்கறது வந்துரும்.

00:57

Speaker A

அப்படி பார்க்கிறப்போ நான் ஜோதிடம் பார்த்ததுல இருந்து என்னுடைய அனுபவத்துல.

01:02

Speaker A

ஒவ்வொரு ராசிக்காரங்க என்னென்ன மாதிரியான ஒரு விஷயத்துக்கு காரணமா அவங்க வந்து கடன் வாங்கினாங்க.

01:10

Speaker A

எப்படி அவங்க அதிலிருந்து மீண்டாங்க அப்படிங்கறத வச்சு நான் இந்த 12 ராசிகளுக்கு எப்படி அப்படிங்கறத உங்களுக்கு சொல்றேன்.

01:16

Speaker A

என்ன தெய்வத்தை வழிபாடு பண்ணனும் எப்படி அந்த கடன் கடன்ங்கிற விஷயத்திலிருந்து எப்படி வெளிய வரணும் அப்படிங்கறத பத்தி நம்ம இங்க பார்ப்போம்.

02:01

Speaker A

கன்னி ராசிக்காரங்க எப்படி கடன்ல போய் சிக்குவாங்க அப்படின்னா.

02:06

Speaker A

கன்னி ராசிக்காரங்களுக்கு வந்து நான் ஜெனரலாவே சொல்லிருக்கேன் ஷார்ப்பா இருப்பாங்க ஃபோக்கஸ்டா இருப்பாங்க தனக்கு என்ன வேணும் அப்படிங்கிற விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கக்கூடியவங்க தான் இவங்க.

02:17

Speaker A

ஆனா பேராசையும் கன்னி ராசிக்கு அப்பப்போ எட்டிப்பாக்கும்.

02:24

Speaker A

நீங்க வந்து இல்லை எனக்கு பேராசை எல்லாம் இல்லை நீங்க சொல்றது தவறு அப்படின்னு சொன்னா கூட.

02:30

Speaker A

ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல கன்னி ராசிக்காரங்களுக்கு இயற்கையாவே இந்த சுபாவம் அப்படிங்கறது ஏதோ ஒரு வகையில ஏதோ ஒரு தருணத்துல.

02:40

Speaker A

அதாவது அது பேராசைன்னு சொல்றதை விட.

02:43

Speaker A

தன் மேல இருக்கக்கூடிய ஓவர் கான்பிடன்ஸ்ங்கிற வார்த்தையை கூட நீங்க எடுத்துக்கலாம்.

02:50

Speaker A

அந்த ஓவர் கான்பிடன்ஸ்ல என்ன பண்ணுவீங்க பாத்துக்கலாம் அப்படின்னுட்டு அகலக்கால் போய் வச்சறது.

02:55

Speaker A

அந்த அகலக்கால் வைக்கிறப்போ ஆல்ரெடி நான் சொல்லிருப்பேன் கன்னி ராசிக்காரங்க ஒரு விஷயம்னா ஒரு விஷயத்தை ஃபோக்கஸ்டா கரெக்டா பண்ணிட்டு இருக்கிற வரைக்கும் ரொம்ப நல்லா இருப்பாங்க.

03:02

Speaker A

டக்குன்னு இன்னொரு ஃபீல்டு மாறுறது.

03:04

Speaker A

அந்த இன்னொரு ஃபீல்டு எப்படி மாறுறதுன்னா இன்னொருத்தவங்களை பார்க்கிறப்போ.

03:10

Speaker A

அவங்க அதுல ரொம்ப நல்லா பண்றாங்களே அதை நான் என்னன்னு கத்துக்கிட்டு அதுலயும் போய் நான் இன்வெஸ்ட் பண்றேன் அப்படின்னு சொல்லிட்டு.

03:20

Speaker A

மோஸ்ட் ஆஃப் தி டைம் இந்த கன்னி ராசிக்காரங்க வந்து இந்த ஸ்டாக் மார்க்கெட் அப்படிங்கிற விஷயத்துல போய் இன்வெஸ்ட் பண்ணுவாங்க.

03:26

Speaker A

இவங்களுடைய புத்தி கரெக்டா இன்வெஸ்ட் பண்ற வரைக்கும் எல்லாமே கரெக்டா தான் போயிட்டு இருக்கும்.

03:33

Speaker A

இந்த கன்னி ராசிக்காரங்க என்ன பண்ணுவாங்க.

03:36

Speaker A

அடுத்த லெவல் மோஸ்ட்லி இந்த ஸ்டாக் மார்க்கெட்ல கடன் வாங்குறவங்க தான் கன்னி ராசியில ரொம்ப அதிகம்.

03:42

Speaker A

அதனாலதான் நான் வந்து ஸ்டாக் மார்க்கெட் அப்படிங்கறதை முக்கியமா இங்க மென்ஷன் பண்ண வேண்டியதா இருக்குது.

03:48

Speaker A

சின்ன சின்ன அதாவது டெய்லியும் வட்டி கட்டிட்டு இருக்கவங்களும் இருப்பீங்க.

03:52

Speaker A

டெய்லியும் அந்த டெய்லி கடன் கட்டுறது அப்படிங்கிற விஷயமும் பண்ணிட்டு இருக்கவங்களும் கன்னி ராசியில இருப்பீங்க.

03:58

Speaker A

அதாவது உங்க தொழில் ஏன்னா நீங்க எல்லாம் வந்து வணிகர்கள்.

04:03

Speaker A

கன்னி ராசியை பொறுத்தவரைக்கும் வணிகம்ங்கிறது உங்களுக்கு வந்து.

04:08

Speaker A

அந்த ரொட்டேஷன் அப்படிங்கறது உங்களுக்கு எப்பவுமே இருந்துகிட்டே இருக்கக்கூடிய ஒரு அமைப்புதான்.

04:12

Speaker A

சோ ஏன்னா எனக்கு வந்த ஒரு கிளைன்ட் இந்த மாதிரிதான்.

04:15

Speaker A

அவர் ஸ்டாக் மார்க்கெட்ல போயிட்டு அவர் பண்ணிட்டு இருந்த தொழில் வணிகம் அப்படிங்கறது வேறயா இருந்தது.

04:23

Speaker A

அவர் திடீர்னு போய் ஸ்டாக் மார்க்கெட்டுக்கு போறாரு.

04:26

Speaker A

ஸ்டாக் மார்க்கெட்டுக்கு போய் ரெண்டு பேரை நம்புறாரு.

04:30

Speaker A

கன்னி ராசிக்காரங்க யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பக்கூடாது.

04:34

Speaker A

அப்படி நம்புனா.

04:35

Speaker A

முழுசா நம்பிடணும்.

04:38

Speaker A

முழுசா நம்பிட்டு அவங்களை சந்தேகப்பட்டுட்டே இருக்கிறதும் கன்னி ராசிக்கு உண்டான ஒரு தனிப்பட்ட குணம்.

04:44

Speaker A

அதாவது ரொம்ப ஓவர் திங்கிங் பண்ணி அதுக்கப்புறம்.

04:50

Speaker A

கடன் கடன் கடன் போய் கடன்ல விழுந்துகிட்டே இருக்கிறது.

04:56

Speaker A

எனக்கு தெரிஞ்ச ஒரு கன்னி ராசிக்காரர் என்ன பண்ணாருன்னா நல்ல செழிப்பா நல்ல ஒரு தொழில் பண்ணிட்டு இருந்தவர்தான்.

05:02

Speaker A

இந்த ஸ்டாக் மார்க்கெட்ல வந்து பணம் வரதை பார்க்க ஆரம்பிச்சாரு.

05:07

Speaker A

நல்ல செழிப்பாவே வந்தது அவர் எதிர்பார்த்ததை விட தொகைகள் ரொம்ப அதிகமாவே வந்தது.

05:12

Speaker A

திரும்ப அந்த மைண்ட்செட் என்ன ஆகுதுன்னா சூதாட்டமா மாறுது.

05:15

Speaker A

கன்னி ராசிக்காரங்களுக்கு வந்து அந்த சூதாட்ட மைண்ட்செட்ங்கிறது அப்பப்போ எட்டிப்பாக்கும்.

05:20

Speaker A

துணி பிசினஸ்ஸே பண்றாங்கன்னு வச்சுக்கோங்க.

05:24

Speaker A

அவங்களும் அந்த பெருசா லாட்ல பெரிய லாட்டா வாங்கி போட்டுறது.

05:28

Speaker A

அதுக்கப்புறம் அதை அந்த கடன் அடைக்கிறதுக்கு மறுபடியும் இன்னொரு கடன் அடைக்கிறது.

05:35

Speaker A

இப்படியே அவங்களுடைய சுயத்தன்மையை இழக்க இழக்க.

05:40

Speaker A

கன்னி ராசிக்காரங்க வந்து கடன்ல அதிகமா விழுவாங்க.

05:45

Speaker A

அப்ப நீங்க எல்லாம் யாரை வழிபாடு பண்ணனும் அப்படின்னா.

05:48

Speaker A

விஷ்ணு சகஸ்ர நாமத்தை முதல் கேட்கணும்.

05:51

Speaker A

நீங்க எல்லாம் வந்து பெருமாளே கதி என்று போய் உட்கார்ந்துடணும்.

05:56

Speaker A

ஏன்னா பெருமாள் பெருமாள் தான் உங்களுக்கு முழு ஆசீர்வாதம் கொடுக்கக்கூடியதே பெருமாள் தான்.

06:00

Speaker A

அடிக்கடி திருப்பதிக்கு போயிட்டு வாங்க.

06:03

Speaker A

திருப்பதிக்கு போயிட்டு வர திருப்பதிக்கு போயிட்டு வர திருப்பதியில போய் ஒரு தொகையை போய் நீங்க காணிக்கையா போட்டுட்டு வரதும்.

06:11

Speaker A

அங்க போயிட்டு அன்னதானம் வாங்கி சாப்பிட்டு வரதும்.

06:16

Speaker A

ஏன்னா கொஞ்சம் கிரவுண்டட் ஆகணும் கன்னி ராசிக்காரங்க.

06:19

Speaker A

திருப்பதிக்கு போயிட்டு வந்தீங்க அப்படின்னாலே உங்களுக்கு கடன் அப்படிங்கறது குறைய ஆரம்பிச்சிரும்.

06:25

Speaker A

அது எப்படியோ ஏதோ ஒரு வகையில தொழில் ஃபோக்கஸ் அப்படிங்கறது வர ஆரம்பிச்சிரும்.

06:29

Speaker A

கன்னி ராசிக்காரங்க ஒன்ஸ் கடன் பட்டுட்டாங்க அப்படின்னா.

06:34

Speaker A

அதுவும் அவங்களுக்கு போகக்கூடிய திசைகள் எல்லாம் மோசமா இருக்குன்னு வச்சுக்கோங்க.

06:38

Speaker A

இப்ப ஒரு கேது திசை எல்லாம் போகுது கன்னி ராசிக்காரங்களுக்கு அப்படின்னா.

06:42

Speaker A

மொத்தத்தையும் உருவிட்டு தான் விடும்.

06:44

Speaker A

டோட்டலா உருவி நிராயுதபாணியாக்கி விட்டுரும் அவங்களால எல்லாம் கடன்ல இருந்து மீளவே முடியாது தகுதிக்கு மீறணும் அதீத கடன்ல போய் விழக்கூடிய ஆபத்துங்கிறது கன்னி ராசிக்கு உண்டு.

06:52

Speaker A

ஏன்னா கன்னி புதன்.

06:54

Speaker A

அந்த புதன் சரியா இல்லை அந்த மனநிலைமை சரியா இல்லை மைண்ட் கொஞ்சம் ட்விஸ்ட் ஆயிடுச்சு பேராசை பட்டுருச்சு.

07:01

Speaker A

நல்லவங்க எல்லாம் நம்மள விட்டு போயிடுவாங்க.

07:04

Speaker A

கெட்டவங்க எல்லாம் பக்கத்துல இருக்கிற மாதிரி இருக்கும்.

07:07

Speaker A

முக்கியமா அந்த கெட்டவங்களோட ஆலோசனையை கேட்டே கடன்ல விழக்கூடிய அமைப்பு அப்படிங்கறது கன்னி ராசிக்கு ரொம்ப அதிகம்.

07:13

Speaker A

அப்போ நீங்க எல்லாம் ரொம்ப கவனமா இருக்கணும் ஒரு விஷயத்துல எதுல ஃபோக்கஸ்டா பண்ணிட்டு இருக்கீங்களோ.

07:18

Speaker A

அதுல ஃபோக்கஸ்டா பண்ணிட்டு இருந்தாலே லைஃப் செழிப்பா தான் இருக்கும்.

07:22

Speaker A

பெருமாள் வழிபாடு பண்ண பண்ண உங்களுடைய கடன் சுமைகள் அப்படிங்கறது கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிக்கும்.

07:27

Speaker A

புதன்கிழமை அப்படிங்கிறப்போ நாராயண பூஜை அப்படிங்கறதையும் நீங்க பாராயணம் பண்ணனும் வீட்ல.

07:32

Speaker A

நாராயண பூஜை கோவில்ல போயும் நீங்க பண்ணலாம் இல்ல தனிப்பட்ட முறையிலயே நாராயண பூஜை அப்படிங்கறது.

07:39

Speaker A

அதாவது குடும்பத்துல இருக்கிறவங்களை எல்லாம் கூப்பிட்டு வச்சு நீங்க நாராயண பூஜை பண்ண பண்ண.

07:45

Speaker A

கடன் சுமை அப்படிங்கறது வந்து குறைய ஆரம்பிக்கும்.

07:49

Speaker A

அதே மாதிரி நாராயணம் சம்பந்தப்பட்ட கதைகள் கேட்கணும்.

07:52

Speaker A

அந்த கதைகள் கேட்க கேட்க நம்ம எங்க தவறு செஞ்சோம்ங்கிற அந்த சூட்சுமமும்.

07:57

Speaker A

ஏன்னா கன்னி ராசிக்காரங்க வந்து.

08:02

Speaker A

சில விஷயங்களை ஃபோக்கஸ் பண்ணனும் மந்திரங்களை கேட்கிறதை விட கதைகள் கேளுங்க.

08:07

Speaker A

கதைகள் கேட்க கேட்க ஞானம் அப்படிங்கறது உங்களுக்கு பிறக்கும்.

08:10

Speaker A

அந்த கதைகள் கேட்டாலே கடன் அப்படிங்கறது உங்களுக்கு குறையும்.

08:14

Speaker A

கேட்டு தான் பாருங்க.

08:16

Speaker A

அந்த கதைகள் கேட்கும் பொழுது ஓம் நமோ நாராயண.

08:21

Speaker A

அப்படின்னு சொல்லிட்டே கேளுங்க.

08:22

Speaker A

ஏன்னா அதுல அவ்வளவு விஷயங்கள் அடங்கி இருக்கு உங்களுக்கு நாராயணர் தான் உங்களை வந்து கடன் அப்படிங்கிற விஷயத்திலிருந்து காப்பாத்தக்கூடியவரே அவர்தான்.

08:29

Speaker A

முடிஞ்ச அளவுக்கு கன்னி ராசிக்காரங்க எல்லாம் இப்போ ஜாதகப்படியே கடன் வாங்கக்கூடிய சூழல் அப்படின்னு எல்லாம் மோஸ்ட்லி வரும்.

08:34

Speaker A

அந்த சமயங்கள்ல எல்லாம்.

08:38

Speaker A

சுப விரைய செலவா நீங்க பண்ணிக்கிறது அப்படிங்கறது நல்லது.

08:41

Speaker A

நான் சொன்னேன் இல்லையா திருப்பதிக்கு போயிட்டு வரக்கூடிய செலவுகள்.

08:45

Speaker A

ஆலய தரிசனங்களுக்கு செலவு பண்றது.

08:48

Speaker A

அன்னதானங்களுக்கு செலவு பண்றது.

08:51

Speaker A

இந்த மாதிரி சில கான்சென்ட்ரேஷன் பண்ணிட்டீங்க அப்படின்னா கச்சிதமான திட்டங்கள் அப்படிங்கறது நீங்க போடணும்.

08:58

Speaker A

திட்டம் கரெக்டா வகிக்கணும்.

09:01

Speaker A

அந்த திட்டம் கோவிலுக்கு போறப்போ கோவில்லயே உட்கார்ந்தே நீங்க பிளான் பண்ணுங்க.

09:06

Speaker A

அதே மாதிரி சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது ரொம்ப கடன் சுமை ஆயிடுச்சு அப்படிங்கிற பட்சத்துல.

09:10

Speaker A

திருச்செந்தூர் போயிட்டு.

09:13

Speaker A

அங்க இருக்கிற தட்சிணாமூர்த்தி இருப்பார் இல்லையா.

09:17

Speaker A

அங்க உட்கார்ந்து அங்க எழுதுவாங்க.

09:20

Speaker A

அங்க வந்து ஒரு நோட் எடுத்து வச்சு எழுதுவாங்க.

09:24

Speaker A

இந்த கணக்கு இப்படின்னு கணக்கு எழுதுவாங்க இல்லையா.

09:28

Speaker A

அந்த கணக்கு எழுதுறதுனால ஒரு புதன்கிழமையா போய்க்கோங்க திருச்செந்தூருக்கு.

09:32

Speaker A

போயிட்டு வழிபாடு புதன்கிழமை வழிபாடு பண்ணிட்டு.

09:36

Speaker A

வியாழக்கிழமையா உட்கார்ந்து அந்த தட்சிணாமூர்த்திக்கு எதிர்த்தாப்புல உட்கார்ந்து.

09:43

Speaker A

யார் யாருக்கு கடன் நான் திருப்பி கொடுக்கணும்.

09:47

Speaker A

என்ன தொழில் நான் பண்ணிட்டு இருக்கேன் அப்படின்ட்டு.

09:51

Speaker A

அந்த தெய்வத்தோடைய பேரை பாராயணம் பண்ணி அவங்களே அந்த கோவில்லயே சில இன்ஸ்ட்ரக்ஷன் சொல்லுவாங்க.

09:58

Speaker A

சில சிம்பல்ஸ் எல்லாம் உங்களுக்கு சொல்லுவாங்க.

10:01

Speaker A

அந்த சிம்பல்ஸ் எல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணி அந்த சிம்பல்ஸ் எல்லாம் நீங்க யூஸ் பண்ண யூஸ் பண்ண.

10:07

Speaker A

உங்களுக்கு செழிப்பு அப்படிங்கறது உங்களுக்கு நல்லபடியாவே வரும்.

10:11

Speaker A

இப்ப கன்னி ராசிக்காரங்க ஒவ்வொருத்தவங்களுக்கும் கடன் கொடுத்து வாங்கக்கூடிய ஒரு ஸ்டைல் அப்படின்னு ஒன்னு இருக்கும்.

10:15

Speaker A

இப்ப கன்னி ராசிக்காரங்க வந்து கடன் கொடுத்துட்டாங்க அப்படின்னா இவங்ககிட்ட வாங்குறவங்க வந்து நல்லா செழிப்பா இருப்பாங்க.

10:21

Speaker A

ஆனா கன்னி ராசிக்காரங்க கடனை திருப்பி கேட்க போறப்போ அப்படியே கன்னி ராசிக்காரங்களை எதிரியாவே பார்ப்பாங்க.

10:27

Speaker A

எப்படி நீ வந்து என்கிட்ட கேப்ப அப்படிங்கிற மாதிரி.

10:30

Speaker A

ஏங்க நான் கொடுத்த கடன் தான நான் கேட்கிறேன் அப்படின்னா.

10:35

Speaker A

வரவே வராது.

10:36

Speaker A

அதனால கன்னி ராசிக்காரங்க எல்லாம் முடிஞ்ச அளவுக்கு தொழில் ரீதியா தொழிலா நீங்க பண்ணிட்டு போயிடலாம்.

10:44

Speaker A

கடன் தான் கொடுக்கணும் அந்த கடன் கொடுத்து வராதுன்னா அட்லீஸ்ட் நான் வட்டிக்கு வாங்கி கொடுத்தேன் இந்த பணம் என்னோடது கிடையாது அது இன்னொருத்தரோடது இந்த வட்டிக்காரர்ட்ட தான் வாங்கி கொடுத்தேன்.

10:51

Speaker A

நீங்களாச்சும் அவராச்சும்ங்கிற மாதிரி நீங்க போயிடணும்.

10:54

Speaker A

நீங்க அதே மாதிரி யார்கிட்டயாவது கடன் வாங்குறீங்கன்னா கூட.

10:59

Speaker A

அவ்வளவு சீக்கிரம் கன்னி ராசிக்காரங்களால கடனை திருப்பி கொடுக்கவும் முடியாது ரொம்ப அடிபாதாளத்துக்கு போகக்கூடிய சிச்சுவேஷனும் கன்னி ராசிக்காரங்களை கொண்டு போய் விட்டுரும்.

11:06

Speaker A

இருந்தாலும் கன்னி ராசிக்காரங்க அரும்பாடுபட்டு எப்படியாவது கடனை கொஞ்சம் கொஞ்சமா அடைக்க ஆரம்பிச்சிருவாங்க.

11:12

Speaker A

ஆனா ஒரு கடன் அடைக்க இன்னொரு இடத்திலிருந்து கடன் வாங்குற மாதிரி சிச்சுவேஷன்ஸ் ஆயிடும்.

11:17

Speaker A

அதனால ஜாக்கிரதையா முடிஞ்ச அளவுக்கு கன்னி ராசிக்காரங்க கடனை குறைக்கிறதுல கவனமா இருந்துக்கணும்.

11:22

Speaker A

முக்கியமா உங்க லைஃப் பார்ட்னர்ஸ்க்கு செலவு பண்ண போறீங்க கன்னி ராசிக்காரங்க அப்படின்னா.

11:29

Speaker A

யோசிச்சு செலவு பண்ணிக்கிறது நல்லது.

11:32

Speaker A

ஏன்னா கடன் படுறதே கரெக்டா லைஃப் பார்ட்னர் லைஃப்ல வரப்போ தான் கடன் படக்கூடிய அமைப்பும் உங்களுக்கு வரும்.

11:37

Speaker A

அதனாலதான் வந்து அந்த நேரத்துல நீங்க ஜாக்கிரதையா இருந்துக்கணும் அப்படின்னு நான் சொல்றேன்.

11:42

Speaker A

பொதுவாவே எல்லா ராசிக்காரங்களுக்கும் சொல்ற விஷயம் என்ன அப்படின்னா.

11:47

Speaker A

யார் கடன் வாங்கி இருந்தாலும் சரி என்ன ராசிக்காரங்க கடன் வாங்கி இருந்தாலும் சரி விநாயகரை போய் பிடிச்சுக்கணும்.

11:51

Speaker A

ஏன்னா அவர்தான் ஆதி கடவுள் இல்லையா.

11:53

Speaker A

விநாயகரை வழிபாடு பண்ணி அவரையே சொல்யூஷன் கொடுக்க வைக்கணும் நீங்க தான் எனக்கு சரணாகதி அப்படின்னுட்டு விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைச்சு வழிபாடு பண்றது.

12:01

Speaker A

இந்த மாதிரி வழிபாடு முறைகள் எல்லாம் பண்ணி விநாயகரை வழிபட்டா மட்டும் இங்க கடன் அடைஞ்சிருமா அப்படிங்கறது இல்லை.

12:05

Speaker A

அவருடைய அந்த பிளஸ்ஸிங்ஸ் அப்படிங்கறது நீங்க எடுத்துக்கணும்.

12:08

Speaker A

அதுபோக முக்கியமா.

12:11

Speaker A

சந்திராஷ்டமம் வரக்கூடிய நாட்கள்ல.

12:15

Speaker A

உங்களுக்கு என்னைக்கு சந்திராஷ்டமம் எல்லா ராசிக்கார எல்லா நட்சத்திரக்காரங்களுக்குமே வந்து.

12:21

Speaker A

ஒரு ரெண்டரை நாள் சந்திராஷ்டமம் அப்படிங்கறது இருக்கும்.

12:25

Speaker A

உங்களுடைய சந்திராஷ்டம காலங்கள்ல எதுவுமே பண்ணாம.

12:30

Speaker A

அதாவது எதுவும் பண்ணாமங்கிறது முடிவுகள் எடுக்காம.

12:34

Speaker A

கடன் வாங்கணும்ங்கிற எண்ணம் இல்லாம.

12:38

Speaker A

சந்திராஷ்டமம் அன்னைக்கு கடனை அடைக்கவும் வேணாம் கடனை கொடுக்கவும் வேணாம் வாங்க போகவும் வேண்டாம்.

12:43

Speaker A

அந்த நேரத்துல முடிவும் எடுக்க வேண்டாம்.

12:45

Speaker A

சந்திராஷ்டம காலங்கள்ல கடன் வாங்கினாலோ.

12:49

Speaker A

கடன் கொடுத்தாலோ கடன் அடைப்பது மிகவும் கடினம்.

12:52

Speaker A

ரொம்ப கஷ்டத்துல போயிடுவீங்க சந்திராஷ்டமம்.

12:55

Speaker A

தெரியாம நாங்க சந்திராஷ்டமத்துல கடன் வாங்கிட்டோம் எங்களுக்கு தெரியலையே.

13:00

Speaker A

அன்னைக்கு எங்க நட்சத்திரம்.

13:01

Speaker A

விதி அப்படிதான் பண்ணும்.

13:03

Speaker A

அன்னைக்கு நீங்க கடன் வாங்க போற நேரத்துல சப்போஸ் ஒரு லோன் அப்ளை பண்ணிருக்கீங்க.

13:09

Speaker A

என்னக்கு அன்னைக்கு போய் நான் பேங்குக்கு போகணும்.

13:12

Speaker A

அன்னைக்கு உங்களுக்கு சந்திராஷ்டமம் போகாதீங்க.

13:15

Speaker A

அலைச்சல் ஜாஸ்தியா இருக்கும்.

13:16

Speaker A

அந்த கடனை அடைக்கவே முடியாது.

13:19

Speaker A

சரி இன்னைக்கு நான் லோன் அடைக்க போற நாள் இன்னைக்கு எனக்கு சந்திராஷ்டமம் போகாதீங்க.

13:23

Speaker A

திரும்பவும் அங்கேயும் ஏதாவது ஒரு அலைச்சலோ இல்ல ஏதாவது ஒரு எக்ஸ்ட்ரா இன்ட்ரஸ்டோ இல்ல கட்ட முடியாம போற சூழ்நிலையோ.

13:29

Speaker A

இல்ல மீண்டும் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையோ ஏதோ ஒன்னு.

13:32

Speaker A

சந்திராஷ்டமம் நமக்கு பண்ணி விட்டுரும்.

13:34

Speaker A

அதனால முடிஞ்ச அளவுக்கு சந்திராஷ்டம காலங்கள்ல அமைதியா இருந்துக்கிறது நல்லது.

13:39

Speaker A

தெய்வ வழிபாட்டோடு இருந்துக்கிறது நல்லது.

13:41

Speaker A

எதற்காக கடன் வாங்குறோம் வீணான ஆடம்பரத்துக்கு வாங்குறோமா.

13:44

Speaker A

கால்குலேட்டிவா இருந்து சிக்கனமா இருக்க பழகிக்கிட்டீங்க அப்படின்னாலே யாருமே கடன் படணும் அப்படிங்கறது கிடையாது.

13:49

Speaker A

கடவுள் நம்மளுக்கு எல்லாத்துக்குமே யார் யாருக்கு எப்படி எப்படி படி அளந்து கொடுக்கணுமோ அப்படி கொடுத்துக்கிட்டே தான் இருப்பார்.

13:56

Speaker A

ஆசைப்பட பட தான் கடனுக்குள்ள போய் நம்ம விழுவோம்.

14:00

Speaker A

ஆசை ஆபத்து அப்படின்னு சொல்லி நான் இந்த வீடியோவை முடிச்சுக்கிறேன்.

Topics: கன்னி ராசி கடன் பிரச்சனை பெருமாள் வழிபாடு நாராயண பூஜை ஸ்டாக் மார்க்கெட் சூதாட்ட மனப்பான்மை ஆன்மீகம் ஜோதிடம் திருப்பதி தரிசனம் தட்சிணாமூர்த்தி

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11362)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11362)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/kanni-biggest-progress-jeevitha-sureshkumar-retro-aanmeegam/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
