**Kanni | அந்த விஷயத்துல கொஞ்சம் கவனம் தேவை, ஆனா… | குரு | Astrologer Jeevitha | Rasipalan 2025 — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/kanni-attention-needed-astrologer-jeevitha-rasipalan-2025/

கன்னி ராசி மக்களுக்கு 2025-ல் குருவின் பலன்கள், தொழில், திருமணம் மற்றும் வாழ்க்கை பாடங்கள் பற்றிய விரிவான ஜோதிட விவரணம்.

## Key Takeaways

- குரு கன்னி ராசி மக்களுக்கு தொழில், திருமணம் மற்றும் செல்வ வளங்களில் முக்கிய பாத்திரம் வகிக்கிறார்.
- பக்தி இருந்தாலும் தாழ்மையுடன் பணியாற்ற வேண்டும், அகங்காரம் பிரச்சினைகளை உருவாக்கும்.
- கன்னி ராசி மக்கள் பெர்ஃபெக்ஷனிஸ்ட் மற்றும் தன்னை மட்டுமே நம்புவோர் ஆவார்கள்.
- குரு வழங்கும் வாய்ப்புகளை அறிவுடன் பயன்படுத்த வேண்டும்.
- கஜபேஸ்வரர் கோயிலில் குருவை வழிபாடு செய்வது நல்லது.

## What the video covers

- கன்னி ராசியில் குரு 2, 5, 7, 9, 11 இடங்களில் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- 6, 8, 12 இடங்களில் குரு இருந்தால் தொழிலில் பாடங்கள் கற்பிக்கும் வாய்ப்பு உள்ளது.
- கன்னி ராசி மக்களுக்கு திருமணத்தில் சில தடைகள் மற்றும் செலக்டிவ் மனப்பான்மைகள் இருக்கும்.
- தெய்வ வழிபாடு மற்றும் பக்தி இருந்தாலும், தாழ்மையுடன் பணியாற்ற வேண்டியது அவசியம்.
- கன்னி ராசி மக்கள் பெர்ஃபெக்ஷனிஸ்ட் மற்றும் தன்னை மட்டுமே நம்புவோர் ஆவார்கள்.
- குரு திடீரென பொருளாதார வளங்கள் மற்றும் வாய்ப்புகளை தரக்கூடும், ஆனால் அதை அனுபவிக்க அறிவு தேவை.
- கன்னி ராசி மக்களுக்கு சுயநலவாதம் மற்றும் அகங்காரம் சில சமயங்களில் பிரச்சினைகள் ஏற்படுத்தும்.
- கஜபேஸ்வரர் கோயிலில் குருவை வழிபாடு செய்வது நல்லது என்று பரிந்துரை.
- குரு வாழ்க்கையில் பாடங்களை கற்பிப்பவர், கெட்டவர்களை பிரித்து காட்டுவார்.
- கன்னி ராசி மக்கள் லாஜிக்கல் மற்றும் அனலிட்டிக்கல் திறன்களுடன் வாழ்க்கையை அணுகுவார்கள்.

Answers

## Questions about this video

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு எந்தெந்த ஸ்தானங்களில் இருந்தால் நல்லது?

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இது அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், நல்ல வாய்ப்புகளையும் உருவாக்கும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு 6, 8, 12 ஸ்தானங்களில் இருந்தால் என்ன நடக்கும்?

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு 6, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் இருந்தால், அவர்களின் தொழில் மூலமாகவே சில பாடங்களை குரு கற்பிப்பார். இது அவர்களுக்கு சவால்களை ஏற்படுத்தி, அதன் மூலம் கற்றுக்கொள்ள வைக்கும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு திருமணத்தில் தடைகள் ஏற்படுமா?

ஆம், கன்னி ராசிக்காரர்களுக்கு திருமணத்தில் சில தடைகள் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அவர்கள் வரன் தேடும்போது மிகவும் தேர்ந்தெடுக்கும் மனப்பான்மையுடன் இருப்பதும், இது குருவை அவமதிப்பது போல இருப்பதும் ஒரு காரணமாகும்.

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

கன்னி ராசியில் இருக்கிறவங்க வந்து ப்ரொபஷன் ரொம்ப ஃபோக்கஸா இருக்கக்கூடிய ஒரு அமைப்புல இருப்பாங்க. இவங்களுக்கு வந்து 2, 5, 7, 9, 11 ஸ்தானத்துல குரு இருந்துட்டாரு அப்படின்னா நல்லா இருக்கும்.

00:13

Speaker A

இதே மாதிரி 6, 8, 12-ல போய் இவங்களுக்கு குரு உட்கார்ந்துட்டாரு அப்படின்னா, இவங்களுடைய தொழில்னாலயே ஏதாவது ஒரு பாடங்கள் கற்பிக்கிற மாதிரி குரு பண்ணிடுவாரு.

00:19

Speaker A

அதே மாதிரி கன்னி ராசியில் இருக்கிறவங்களுக்குமே வந்து திருமணம் அப்படிங்கிறதுல சில தடைகள் வரக்கூடிய அமைப்பு மிக அதிகம்.

00:25

Speaker A

ஆரம்ப காலத்திலிருந்தே அவங்களுக்கு வந்து திருமண வயதிலிருந்தே அவங்களுக்கு வந்து வரன் பார்த்துட்டே இருக்காங்கன்னா, ரொம்ப செலக்டிவா இருப்பாங்க கன்னியில இருக்கிறவங்க இது வேண்டாம் அது வேண்டாம் அப்படிங்கிறப்போ இது குருவை ஏதோ ஒரு வகையில அவமானப்படுத்துற மாதிரிதான்.

00:38

Speaker A

தன்னை மட்டுமே நம்பக்கூடியவங்க தெய்வ வழிபாடுகள் எல்லாம் இருக்கும்.

00:42

Speaker A

ஆனா அது எப்படி இருக்கும்னா அந்த தெய்வத்து மேல அவங்களுக்கு வந்து நல்ல பக்தி இருந்தாலும், அவங்களுக்கு அந்த தெய்வத்துக்கு இருக்கக்கூடிய அந்த ஒரு கம்யூனிகேஷன் ஒரு விஷயம் இருக்கு இல்லையா ஒரு உரிமை எடுத்து வேண்டக்கூடிய ஒரு அமைப்புல இருக்கும் தாழ்ந்து பணிஞ்சு அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்காது.

00:54

Speaker A

நீ என்னோட அம்மா என்னோட அப்பா அதுவரைக்கும் ஓகே நீ எனக்கு இப்படித்தான் செய்யணும் அப்படிதான் செய்யணும் ஏன் உனக்கு ஏன் எனக்கு இதெல்லாம் செய்யல அப்படிங்கிறப்போ ஏதோ ஒரு வகையில தெய்வத்தை மதிக்காம போகக்கூடிய ஒரு சிச்சுவேஷன் இருக்கும்.

01:07

Speaker A

ஒரு அகங்காரத்தை கொடுத்து இந்த குரு என்ன பண்ணும்னா,

01:10

Speaker A

எங்கேயோ ஒரு இடத்துல கெட்ட பேரை கிரியேட் பண்ணிட்டே இருக்கும்.

01:14

Speaker A

இவங்க எவ்வளவு நல்லது பண்ணாலுமே அந்த செல்வ செழிப்பு ஏதோ ஒரு வகையில,

01:20

Speaker A

தன்னை ஒரு சுயநலவாதியாவே அவங்களை காட்ட வச்சுக்கிட்டே இருக்கும்.

02:05

Speaker B

கன்னி ராசி நேயர்களாம் இந்த கன்னி ராசி நேயர்களுக்கு குரு என்னென்ன மாதிரியான பலன்கள் எல்லாம் கொடுக்க காத்துட்டு இருக்காரு.

02:11

Speaker B

என்னென்ன மாதிரியான நன்மைகள் எல்லாம் செய்றாரு?

02:12

Speaker A

அகைன் கன்னி வந்து புதன் புதன் வந்து குரு பேச்சை அவ்வளவு சீக்கிரம் கேட்காது அப்படிங்கிறப்போ குரு சில அவமானங்களை இவங்களுக்கும் கொடுப்பார்.

02:19

Speaker A

அதாவது கன்னி ராசியில் இருக்கிறவங்க வந்து ப்ரொபஷன் ரொம்ப ஃபோக்கஸா இருக்கக்கூடிய ஒரு அமைப்புல இருப்பாங்க இவங்களுக்கு வந்து 2, 5, 7, 9, 11 ஸ்தானத்துல குரு இருந்துட்டாரு அப்படின்னா நல்லா இருக்கும்.

02:32

Speaker A

இதே மாதிரி 6, 8, 12-ல போய் இவங்களுக்கு குரு உட்கார்ந்துட்டாரு அப்படின்னா, இவங்களுடைய தொழில்னாலயே ஏதாவது ஒரு பாடங்கள் கற்பிக்கிற மாதிரி குரு பண்ணிடுவார்.

02:40

Speaker A

அதாவது கன்னியில் இருக்கக்கூடியவங்களுக்கு வந்து பெரும்பாலும் ஸ்டாக் மார்க்கெட்ஸ்குள்ள போகக்கூடிய ஒரு அனுகிரகம் அப்படிங்கறது அவங்களுக்கு இருந்தாலும்,

02:50

Speaker A

கன்னி ராசியில் இருக்கிறவங்களுக்கு வந்து திடீர்னு ஒரு பேராசை அப்படிங்கறது வரும்.

02:54

Speaker A

புதன் அதை செய்யும்.

02:55

Speaker A

ஏதாவது அந்த புதனுடைய மனநிலைமை அப்படிங்கறது சரியா இருக்கணும்.

03:02

Speaker A

அப்படி சரியா இல்லாத பட்சத்துல இந்த குரு என்ன பண்ணுவார்னா கரெக்டா அந்த விஷயத்திலேயே அவமானங்களை கொடுக்கிற மாதிரி பண்ணிடுவார்.

03:09

Speaker A

அதே மாதிரி கன்னி ராசியில் இருக்கிறவங்களுக்குமே வந்து திருமணம் அப்படிங்கிறதுல,

03:15

Speaker A

சில தடைகள் வரக்கூடிய அமைப்பு மிக அதிகம் கன்னியில் இருக்கிறவங்களுக்கு.

03:21

Speaker A

அவங்களுக்கு திருமணம் எப்படி அமையும் அப்படின்னா ஆரம்ப காலத்திலிருந்தே அவங்களுக்கு வந்து திருமண வயதிலிருந்தே அவங்களுக்கு வந்து வரன் பார்த்துட்டே இருக்காங்கன்னா,

03:30

Speaker A

ரொம்ப செலக்டிவா இருப்பாங்க கன்னியில இருக்கிறவங்க.

03:34

Speaker A

இது வேண்டாம் அது வேண்டாம் அப்படிங்கிறப்போ இது குருவை ஏதோ ஒரு வகையில அவமானப்படுத்துற மாதிரிதான்.

03:40

Speaker A

குருதான் வந்து குழந்தைக்கும் திருமணத்துக்கும் ரொம்ப,

03:44

Speaker A

அவர்தான் முக்கியமா பங்கு வகிக்கிறதே அவர்தான்.

03:48

Speaker A

அப்போ அந்த குரு முயற்சி பண்ணிட்டே இருக்கும்.

03:52

Speaker B

இந்த புதனுக்கு புரிய வைக்கிறதுக்காக.

03:54

Speaker A

இந்த கன்னிக்கு புரிய வைக்கிறதுக்கு இல்ல உனக்கு இது நல்லாதான் இருக்கும் வாழ்க்கை நல்லாதான் இருக்கு.

04:02

Speaker A

இதை நீ ஏத்துக்கோ அப்படிங்கிறப்போ இது ரொம்ப சூசியா இருந்திருந்து ஒரு பாயிண்ட் ஆஃப் டைம்ல இவங்களுக்கு லேட் மேரேஜ் சிச்சுவேஷன்ஸ்ல கொண்டு போய் இதை விட்டுரும்.

04:08

Speaker A

அதுவரைக்குமே தன்னை மட்டுமே ஃபோக்கஸ் பண்ணிட்டு இருந்திருப்பாங்க.

04:12

Speaker A

அதாவது தன்னை தன்னை ஃபோக்கஸ் பண்றதுங்கிறது தன்னுடைய படிப்போ தொழிலோ இதை ரொம்ப,

04:20

Speaker A

கடமை கண்ணியமா பண்ணிட்டு இருப்பாங்க.

04:23

Speaker A

கன்னியில் இருக்கிறவங்க எல்லாம் பெர்ஃபெக்ஷனிஸ்ட்.

04:26

Speaker A

ஹைலி பெர்ஃபெக்ஷனிஸ்ட்.

04:28

Speaker A

தன்னை மட்டுமே நம்பக்கூடியவங்க தெய்வ வழிபாடுகள் எல்லாம் இருக்கும்.

04:32

Speaker A

ஆனா அது எப்படி இருக்கும்னா அந்த தெய்வத்து மேல அவங்களுக்கு வந்து நல்ல பக்தி இருந்தாலும்,

04:40

Speaker A

அவங்களுக்கு அவங்களுக்கு அந்த தெய்வத்துக்கு இருக்கக்கூடிய அந்த ஒரு கம்யூனிகேஷன் ஒரு விஷயம் இருக்கு இல்லையா,

04:48

Speaker A

ஒரு உரிமை எடுத்து வேண்டக்கூடிய ஒரு அமைப்புல இருக்கும்.

04:53

Speaker A

தாழ்ந்து பணிஞ்சு அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்காது.

04:56

Speaker A

அதாவது அது ஒரு சர்ட்டைன் எக்ஸ்டென்ட்னு போறப்போ அது மாறி போயிடும்.

05:00

Speaker A

ஒரு உரிமையோட அதாவது ஒரு நீ என்னோட அம்மா என்னோட அப்பா அதுவரைக்கும் ஓகே.

05:08

Speaker A

நீ எனக்கு இப்படித்தான் செய்யணும் அப்படிதான் செய்யணும் ஏன் உனக்கு ஏன் எனக்கு இதெல்லாம் செய்யல அப்படிங்கிறப்போ ஏதோ ஒரு வகையில தெய்வத்தை மதிக்காம போகக்கூடிய ஒரு சிச்சுவேஷன் இருக்கும்.

05:17

Speaker A

அப்போ குரு காத்துக்கிட்டே இருக்கும் பாடம் கற்பிக்கிறதுக்கு அப்படிங்கிறப்போ.

05:21

Speaker A

கரெக்டா இந்த லைஃப் பார்ட்னர்ங்கிற விஷயத்துல வந்து பாடம் கற்பிச்சிரும்.

05:25

Speaker A

இல்ல அப்படின்னா இவங்க செய்யக்கூடிய தொழில்லங்கிறது பாடம் கற்பிச்சிரும்.

05:29

Speaker A

குரு ரொம்ப நல்லா இருக்குன்னா குரு என்ன பண்ணும்னா,

05:32

Speaker A

திடீர்னு ஒரு குரோத்தை கொடுக்கும்.

05:35

Speaker A

திடீர்னு நிறைய பணம் வாய்ப்புகள் அதாவது திடீர்னு பூர்வீக சொத்து வரக்கூடிய அமைப்பு எல்லாம் குரு கொடுக்கும்.

05:42

Speaker A

கன்னியில் இருக்கிறவங்களுக்கு.

05:44

Speaker A

அப்படி கொடுக்கிறப்போ அதை அனுபவிக்க கூட அவங்களுக்கு தெரியாது.

05:48

Speaker A

இவ்வளவு வந்துருச்சா?

05:50

Speaker A

ஒரு அகங்காரத்தை கொடுத்து இந்த குரு என்ன பண்ணும்னா,

05:56

Speaker A

எங்கேயோ ஒரு இடத்துல கெட்ட பேர் கெட்ட பேரை கிரியேட் பண்ணிட்டே இருக்கும்.

06:00

Speaker A

இவங்க எவ்வளவு நல்லது பண்ணாலுமே அந்த செல்வ செழிப்பு ஏதோ ஒரு வகையில,

06:06

Speaker A

தன்னை ஒரு சுயநலவாதியாவே அவங்களை காட்ட வச்சுக்கிட்டே இருக்கும்.

06:11

Speaker A

அப்போ இவங்க எல்லாம் வந்து காஞ்சிபுரத்துல போய் குருவை வழிபாடு பண்ணிடணும்.

06:16

Speaker A

இந்த கஜபேஸ்வரர் கோயில்ல போய் குருவை வழிபாடு பண்றது.

06:20

Speaker A

அங்க போய் நல்ல வஸ்திர தானங்கள் கொடுத்து வழிபாடு பண்றது.

06:25

Speaker A

நான் மதிக்கிறேன்.

06:26

Speaker A

ஏன்னா கன்னி ராசிக்காரங்க சில கேட்டகிரிஸ் எல்லாம் எப்படி இருப்பாங்கன்னா பரவாயில்லைங்க நீங்க என்னோட கூட என்ன சொல்லுங்க.

06:33

Speaker A

நான் நிவர்த்தி பண்ணிக்கிறேன் அப்படின்னு எல்லாம் அவங்க சொல்லுவாங்க.

06:36

Speaker A

அப்படி சொல்றாங்க அப்படின்னா ஓகே அவங்க சேஃபர் சைடு நல்லபடியா இருக்காங்க ஒருத்தங்க சொல் பேச்சு கேட்கிறாங்கன்னு.

06:42

Speaker A

பெரும்பாலான கன்னி ராசிக்காரங்களுக்கு எப்படி இருக்கும்னா தன்னை யாராவது குறை சொல்றாங்கன்னா சேர்த்துக்கவே மாட்டாங்க பக்கத்துல.

06:48

Speaker B

ஓகே.

06:49

Speaker A

அப்போ கன்னி ராசிக்காரங்களை சுத்தி வாழ்க அப்படின்னு சொல்லிட்டே இருக்கக்கூடிய ஒரு போலியான கூட்டம்ங்கிறது இருந்துகிட்டே இருக்கும்.

06:56

Speaker A

இதுவும் குரு கெட்டு இருந்தா அது நடக்கும்.

06:58

Speaker A

ஏன்னா இவங்களுக்கு வந்து சுக்ரன் வந்து ஏதாவது ஒரு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கும்.

07:03

Speaker A

கன்னியில் இருக்கிறவங்களுக்கு.

07:04

Speaker A

அந்த அசுர சுக்ரன் மாதிரி ஹெல்ப் பண்ணிட்டு இருக்கும்.

07:07

Speaker A

எல்லா வளத்தையும் கொடுக்கிற மாதிரி கொடுத்தாலும் எங்கேயோ ஒரு இடத்துல ஒரு கெட்ட பேர் வருதுனாலே அது குரு ஒரு காரணமா இருப்பார்.

07:14

Speaker A

நம்ம என்ன நினைச்சிட்டு இருப்போம் சனி ஏதோ பண்ணுதுன்னு நினைச்சிட்டு இருப்போம்.

07:18

Speaker A

ஆனா செய்யறது குருவா இருக்கும்.

07:20

Speaker A

அதனால குருமார்களை நம்புறது அவங்களை வந்து ஏத்துக்கிறது.

07:25

Speaker A

மரியாதை கொடுக்கிறதுன்னு இருக்கணும்.

07:27

Speaker A

கன்னி ராசிக்காரங்களுக்கு பொதுவாவே ஒரு குணம் எப்படின்னா தனக்கு யாரை ரொம்ப பிடிச்சிருக்கோ,

07:33

Speaker A

தனக்கு எந்த விஷயம் ரொம்ப பிடிச்சிருக்கோ,

07:36

Speaker A

அதுலதான் ஃபோக்கஸ் பண்ணிட்டு இருப்பாங்க.

07:38

Speaker A

இப்ப நல்ல ஒரு நாலெட்ஜபிலா ஒருத்தங்க இருக்காங்க.

07:41

Speaker A

ஆனா அவங்களுடைய வெளித்தோற்றம் வேற மாதிரி இருக்கு அப்படிங்கிறப்போ,

07:45

Speaker A

வெளித்தோற்றத்தை கண்டு நம்பக்கூடியவங்களாவும் இவங்க இருப்பாங்க.

07:50

Speaker A

தோற்றத்தை பார்த்து தப்பா எடை போட்டுறது.

07:53

Speaker A

ஆனா அவங்ககிட்ட போனா தான் அவங்களுக்கு அந்த நாலெட்ஜ் கிடைக்கும்.

07:56

Speaker A

குரு இப்படி எல்லாம் உங்களுக்கு வாழ்க்கையில டெஸ்ட் வைக்கும்.

07:59

Speaker A

நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு கரெக்டா சூஸ் பண்றாங்களா அப்படின்னு எல்லாம் பார்க்கும்.

08:03

Speaker A

கரெக்டா இவங்க என்ன பண்ணுவாங்க கெட்டவங்களை போய் சூஸ் பண்ணிடுவாங்க.

08:06

Speaker A

அந்த தசா காலங்கள் சரியில்லாதப்ப அந்த நேரத்துல குரு பெரிய பாடம் கற்பிக்கும்.

08:11

Speaker A

அது எப்படி கற்பிக்கும்னா தேவை திசை வரக்கூடிய நேரத்துல குரு வந்து,

08:16

Speaker A

வேடிக்கை பார்த்து வந்து பாடம் கற்பிக்கிற மாதிரி இருக்கும்.

08:20

Speaker A

அன்னைக்கு நான் இதை பண்ணி இருந்திருக்கலாமே அப்படின்னு.

08:22

Speaker A

அதனாலதான் வந்து கன்னி ராசிக்காரங்க வந்து இந்த 360 டிகிரிஸ்ல பார்க்கிறது.

08:27

Speaker A

அந்த பிலாசபிக்கல் தாட் அப்படிங்கறது வந்து கன்னிக்கு அவ்வளவு சீக்கிரம் வராது.

08:31

Speaker A

ஏன்னா இவங்க எல்லாம் வந்து லாஜிக்கலா பார்க்கக்கூடியவங்க.

08:35

Speaker A

அனலிட்டிக்கல் ஸ்கில்ஸோட பார்க்கக்கூடியவங்க.

08:38

Speaker A

அந்த கருணை அப்படிங்கறது வந்து வந்தாதான் குரு அனுகிரகம் அப்படிங்கறது கன்னிக்கு உண்டு.

08:43

Speaker B

ஓகே.

08:44

Speaker B

ஓகே அதாவது வந்து நிறைய செல்வ செழிப்புகளே வந்தாலுமே அகங்காரம் இல்லாம எளிமையா இருந்தா இவங்களுக்கு எல்லாமே நல்லதா நடக்கும்னு ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.

08:50

Speaker B

தேங்க்யூ.

08:53

Speaker B

பொதுவாவே எல்லார்கிட்டயும் ஒரு பார்வை இருக்கும் மேம் என்ன அப்படின்னா சனி அப்படின்னு சொல்லிட்டாலே,

08:59

Speaker B

ஆத்தி சனியா அப்படின்னு சொல்லிட்டு ஒரு பயம் இருக்கும்.

09:02

Speaker B

அதே வந்து குரு உங்க ராசியில இருக்காருப்பா அப்படின்னு சொன்னா அவங்களுக்குள்ள அவ்வளவு அளவுகடந்த மகிழ்ச்சி இருக்கும்னே சொல்லலாம்.

09:08

Speaker B

ஏன்னா குரு வந்துட்டாலே நமக்கு எல்லாமே நன்மையா நடக்கும் அப்படின்னு சொல்றது.

09:11

Speaker B

சோ இந்த குரு நம்மளுடைய ஜாதகத்துல எங்கெங்க இருந்தா என்னென்ன மாதிரியான நன்மைகள் கொடுப்பார்னு முதல்ல சொல்லிடுங்க.

09:17

Speaker A

அதாவது ஒரு ஜாதக கட்டம் அப்படின்னு எடுத்துக்கிறோம்னு வச்சுக்கோங்களேன்.

09:22

Speaker A

அவங்களுக்கு வந்து குரு பலமா இருக்கணும் அப்படின்னு சொல்லப்படுது.

09:25

Speaker A

இப்ப வந்து கடகத்துல உச்சம் அப்படின்னு பார்க்கிறப்போ,

09:29

Speaker A

புதன் அப்படின்னு வரப்போ புதனுக்கு பகை.

09:32

Speaker A

சுக்ரனுக்கு பகை அப்படின்னு சொல்லப்படுது.

09:35

Speaker A

அதே மாதிரி மகரத்துல அது நீசம் அடையுது அப்படின்னு சொல்லப்படுது.

09:38

Speaker A

எல்லாத்துக்குமே ஒரு புராண கதைகள் அப்படி இருந்தாலுமே,

09:43

Speaker A

ஜெனரலா நம்ம பார்க்கிறோம் அப்படின்னா குரு அப்படிங்கிறவர் வந்து,

09:47

Speaker A

தேவர் தேவர்களுக்கு அவர்தான் குரு அப்படின்னு சொல்லப்படுது.

09:51

Speaker A

சுக்ரன் அப்படின்னு பார்க்கிறப்போ அசுர குரு அப்படின்னு சொல்றப்போ,

09:55

Speaker A

இவங்க ரெண்டு பேரும் பகையாளிகள் ஆயிடுறாங்க.

09:58

Speaker A

புதன் அப்படிங்கிறது எல்லாமே லாஜிக்கலா திங்க் பண்ணிட்டு போகக்கூடிய ஒரு அமைப்புல இருக்கிறப்போ,

10:02

Speaker A

குரு வந்து ஞான ஞானத்தை குறிக்கக்கூடிய ஒரு விஷயமா இருக்கிறப்போ,

10:08

Speaker A

இவர் எல்லாமே வந்து பிலாசபிக்கலா பார்க்கக்கூடிய ஒரு குரு.

10:12

Speaker A

ஆனா வந்து புதனால பிலாசபிக்கலா பார்க்க முடியாது.

10:16

Speaker A

என்ன லாஜிக்கோ என்ன விஷயமோ அதை ஷார்ப்பா போறப்போ,

10:21

Speaker A

குருவால புதனுக்கு எக்ஸ்பிளைன் பண்ண முடியாம போறப்போ,

10:26

Speaker A

புதன் அமைப்பு இருக்காங்க அதாவது மிதுனம் கன்னி அப்படிங்கிறவங்க எல்லாம் வந்து,

10:31

Speaker A

புதன்தான் வந்து அதுக்கான லேண்ட் லார்ட் அப்படிங்கிறதே வந்து புதன்.

10:36

Speaker A

இந்த மிதுனத்துக்கும் கன்னிக்கும் அப்படின்னு பார்க்கிறப்போ,

10:38

Speaker A

இவங்க ஏதோ ஒரு வகையில அவமானப்படுற மாதிரியோ இல்ல குரு பலம் இல்லாத மாதிரியோ அப்படின்னு மாதிரி சிச்சுவேஷன்ஸ் இருக்கும்.

10:43

Speaker A

மொத்தத்திலேயே ஜாதகம்னு பார்க்கிறப்போ,

10:46

Speaker A

6, 8, 12 இதுல குரு இருக்கு அப்படினாலே அவங்க அவங்க ஜாதக கட்டத்துல குரு இருக்கு அப்படினாலே,

10:52

Speaker A

கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்.

10:54

Speaker A

அதுபோக 1, 5, 7, 9, 11.

10:58

Speaker A

இந்த ஸ்தானங்கள்ல ரெண்டுலயும் குரு.

11:00

Speaker A

இந்த ஸ்தானங்கள்ல குரு இருக்கிறாங்க அப்படின்னா நல்லது செய்வார்.

11:04

Speaker A

அவங்களுக்கு குரு திசை போறப்போ நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லப்படுது.

11:08

Speaker A

சில பேத்துக்கு வந்து லக்னத்துல குரு இருக்கும்.

11:10

Speaker A

ஆனா அங்க நீசம் அடைஞ்சிருக்கும் அப்படின்னு எல்லாம் ஒன்னு இருக்கு.

11:12

Speaker A

அப்படி நீசமே அடைஞ்சாலும் குருவை ஸ்ட்ரென்தன் பண்ணிட்டாங்க அப்படின்னா குரு ஹெல்ப் பண்ணும்.

11:17

Speaker A

ஒரு சில சில பேத்துக்கு குரு பலமே இருக்காது.

11:21

Speaker A

அதாவது குரு வந்து நீசம் அடையக்கூடிய அமைப்பும் மறைவு ஸ்தானத்தில் இருக்கக்கூடிய அமைப்பு எல்லாம் இருக்கிறப்ப,

11:28

Speaker A

அங்கதான் வந்து துர்மரணங்கள் நடக்கக்கூடிய அமைப்பும்,

11:32

Speaker A

நோய்வாய்ப்பட்டு இறக்கக்கூடிய அமைப்பும்.

11:35

Speaker A

அதாவது எல்லாரும் சனிக்கு பயந்துக்கிறாங்கன்னு வச்சுக்கோங்க.

11:40

Speaker A

பயந்துக்க வேண்டியது குருவுக்கு தான் பயந்துக்கணும்.

11:42

Speaker A

குரு நல்லா இருக்கணும்.

11:44

Speaker A

குருவுடைய பலம் இல்லை அப்படின்னா மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கும்.

11:49

Speaker A

அதாவது அந்த குடும்பம் அந்த குடும்பத்துக்கு விமோசனம் அப்படிங்கறது கிடைக்கிறதே ரொம்ப கஷ்டமா இருக்கும்.

11:54

Speaker A

இப்போ ஒரு சில ராசி அமைப்புகள் எல்லாம் எப்படி இருக்கும்னா அந்த குடும்பத்துக்கே குரு பலம் கம்மியா இருக்கு அப்படிங்கிற மாதிரி அமைப்புள்ள ஜாதகங்கள் எல்லாம் இருக்கும்.

12:01

Speaker A

அவங்களுக்கு எல்லாம் எப்படி இருக்கும்னா அவங்க ஃபேமிலில அந்த டீனேஜர்ஸ் எல்லாம் ஒரு முன்னுக்கு வராம போறது.

12:05

Speaker A

திருமணம் அமையாம போகக்கூடிய அமைப்பு எத்தனை வயதானாலும் திருமணத்துக்காக ஏங்கிட்டே இருக்கக்கூடிய ஒரு அமைப்பு.

12:10

Speaker A

குரு அப்படிங்கறதே வந்து குரு இருக்கக்கூடிய இடம் அப்படிங்கறது செழிப்பாக்கக்கூடிய ஒரு இடம் அப்படின்னு சொல்லப்படுது.

12:15

Speaker A

குரு ஆரோக்கியத்தையும் குறிக்கும்.

12:17

Speaker A

நல்லபடியான ஒரு ஆரோக்கியம் நல்ல ஒரு பேச்சுத்திறன் அறிவாற்றல் அந்த மாதிரி எல்லா விஷயங்களும் குறிக்கக்கூடியது குரு.

12:23

Speaker A

அப்படி பார்க்கிறப்ப இப்ப இந்த குரு வந்து கெட்டுட்டாரு அப்படின்னா,

12:27

Speaker A

யாரு என்ன சொன்னாலும் திரும்ப திரும்ப கேள்வி கேட்டுட்டே இருக்க வச்சுக்கிட்டே இருக்கும் அவங்களை.

12:32

Speaker A

ஒரு விஷயத்தை சொல்லி அவங்களுக்கு நம்ம புரிய வைக்கவே முடியாது திரும்ப திரும்ப கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கும்.

12:38

Speaker A

இப்போ மீன ராசி எடுத்துக்கிறோம்னு வச்சுக்கோங்க அது குருவுடைய வீடாகவே இருந்தாலும்,

12:44

Speaker A

அங்க சந்திரன் ஒரு பிளே பண்ணும்.

12:46

Speaker A

அங்க சந்திரன் சரியா இருக்கணும் சந்திரன் சரியா இல்லை அப்படின்னா அங்க குருவால ஹெல்ப் பண்ணவே முடியாது.

12:51

Speaker A

அவங்க அவங்களுக்கு குரு நல்லா இருந்தா மட்டும்தான் லைஃப் ஒரு குரோத் அப்படிங்கறது அவங்களுக்கு வரும்.

12:55

Speaker A

இல்லன்னா வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்படக்கூடிய ஒரு அமைப்பு இந்த மாதிரி எல்லாம் வந்துரும்.

12:58

Speaker A

இப்ப தனுசுக்கும் குரு வீடா இருந்தாலும் அவருக்கும் குரு நல்லா இருக்கணும்.

13:02

Speaker A

இல்ல அப்படின்னா தொழில் ரீதியா அவமானங்கள் அப்படிங்கறது கொடுத்துரும்.

13:05

Speaker A

அதனால இந்த உச்சம் நீச்சம் பகையாகவே இருந்தாலும் நம்ம சொல்றோம்ல திக்பலம் பெற்றிருக்கணும் அப்படின்னு நம்ம சொல்லுவோம்.

13:10

Speaker A

அந்த திக்பலம் அந்த திக்பலம்ங்கிறது ஆறு வகையான பலன்கள் அந்த ஆறு வகையான பலன்கள்ல ஏதோ ஒரு பலன் அடைஞ்சா கூட தப்பிச்சுக்குவாங்க.

13:17

Speaker A

இல்ல அப்படின்னா நீசம் அடையுதுங்கிறப்போ குரு திசை போறப்போ மிக மிக கவனம் அப்படிங்கறதுதான்.

13:23

Speaker A

எல்லாத்துக்கும் குரு திசை போதா வாவ் சூப்பர்னு நம்ம வாழ்த்திட முடியாது.

13:27

Speaker A

குரு இருக்கக்கூடிய இடத்தை பொறுத்தும் அது அமையும்.

Topics: கன்னி ராசி குரு பலன்கள் ஜோதிடம் 2025 தொழில் பலன் திருமணம் தடைகள் தெய்வ வழிபாடு பக்தி செல்வ செழிப்பு கஜபேஸ்வரர் கோயில் பெர்ஃபெக்ஷனிஸ்ட்


---
This is the markdown twin of https://sozai.app/transcript/kanni-attention-needed-astrologer-jeevitha-rasipalan-2025/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
